எட்டுத்தொகை – கலித்தொகை 1-36 பாலை

கலித்தொகை, Kalithokai

Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

கலித்தொகை உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
கலித்தொகை – புலியூர் கேசிகன்

பாலைக்கலி 1-36

1

கடவுள் வாழ்த்து

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப் போர் மணி மிடற்று எண்கையாய்! கேள் இனி;

படு பறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து நீ  5
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென்தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ?  10

கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை  15
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

1

Prayer Song

O lord with eight arms and a sapphire neck,
who gave to Brahmins of right path the
precious Vēdas, hid the Ganges with clear water
in your hair, and burnt the three cities of the
demons in a battle, without talking about it,
transcending the mind! Listen now!

Will she provide the terminal seer beat, the one
with long, lifted wide loins and vine-like waist,
when you perform kodukatti dance to the roars
of many drums with your many forms?

Will she provide the intermediate beat thooku,
the one with bamboo-like, pretty soft arms and
bee-swarming hair, when you perform
pandarangam dance adorned with ash, after
winning many ferocious battles?

Will she provide the initial beat pāni, the one with
mullai bud smiles, when you perform the kāpālam
dance draped in murderous tiger skin holding a head
on your palm?

And as Umai with exquisite jewels provides the pāni,
thooku and seer beats, you bless the unkindly ones that
we are, as you keep dancing.

Meanings:  ஆறு அறி அந்தணர்க்கு – to the Brahmins who know the right path (ஆறு – பண்புப்பெயர்), அருமறை பல பகர்ந்து – you gave the precious Vēdas, தேறு நீர் சடைக் கரந்து – hid the Ganges river with clear water  in your hair braid, திரிபுரம் தீ மடுத்து – lit fire in Thiripuram – the three cities of gold, silver and iron belonging to the demons, கூறாமல் – not telling, குறித்ததன் மேல் செல்லும் – transcending the mind, கடுங்கூளி மாறாப் போர் – fierce battles with demons and not backing off, மணி மிடற்று – neck like sapphire, எண்கையாய் – O one with eight hands, கேள் இனி – listen now,

படு பறை பல இயம்ப – as many drums roar, பல் உருவம் பெயர்த்து – with many forms within you, நீ கொடுகொட்டி ஆடுங்கால் – when you perform kodukatti dance (ஆடுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), கோடு உயர் அகல் அல்குல் – long lifted wide loins, கொடி புரை நுசுப்பினாள் – she who has a waist like a vine (புரை – உவம உருபு, a comparison word), கொண்ட சீர் தருவாளோ – will she provide the terminal beat (தருவாளோ – ஓகாரம் எதிர்மறை),

மண்டு அமர் பல கடந்து – winning many ferocious battles, மதுகையால் – with strength, நீறு அணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் – when you perform pandarangam dance wearing ash (ஆடுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), பணை – bamboo, எழில் – beautiful, அணை மென்தோள் – soft delicate arms/shoulders, வண்டு அரற்றும் கூந்தலாள் – the one with bee-swarming hair, வளர் தூக்கு தருவாளோ  – will she provide the intermediate beat, the duration of the beat (தருவாளோ – ஓகாரம் எதிர்மறை),

கொலை உழுவைத் தோல் அசைஇ – wearing the skin of a murderous tiger (அசைஇ – சொல்லிசை அளபெடை), கொன்றைத் தார் சுவல் புரள – with kondrai garland swaying on your shoulders, Laburnum flowers, Golden Shower Tree, Cassia sophera, தலை அங்கை கொண்டு – holding a head on your palm, நீ காபாலம் ஆடுங்கால் – when you perform the kāpālam dance (ஆடுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), முலை அணிந்த முறுவலாள் – one who has pretty jasmine bud smiles (முலை – முல்லை, இடைக்குறை), முன் பாணி தருவாளோ – will she give the first beat (தருவாளோ – ஓகாரம் எதிர்மறை),

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), பாணியும் – beginning of a rhythmic beat, தூக்கும் – and the duration of the beat, சீரும் – and the time lapse of the beat, என்று இவை – these, மாண் இழை அரிவை காப்ப – protected by the young woman with splendid jewels, ஆணம் இல் பொருள் – those without kindness, எமக்கு – to us அமர்ந்தனை – you are kind to us, ஆடி – dancing

பாலைக் கலி – Pālai
2-36
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – Separation of Lovers

கலித்தொகை 2
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5
சீறு அருங்கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை,
மறப்பு அருங்காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்று ஐஇய! 10

‘தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ,
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை?

‘இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ எனக், 15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ,
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை?

‘இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ எனக்,
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ, 20
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென்தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை?
என இவள்
புன்கண் கொண்டு இனையவும், பொருள் வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற, அன்புற்றுக் 25
காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத் தாழ்பு, நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி என்
சொல்வரைத் தங்கினர் காதலோரே.

Kalithokai 2
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the heroine
I said to him,
“O lord! My friend with great love that cannot be
forgotten is greatly distressed, and you are leaving
her to go on a difficult path where the harsh, red sun with
bright rays that is like Kootruvan, scorches fiercely,
……….enraged like the face of Sivan with the strength of a
……….lion, the one with a battle axe, who destroyed in
……….battles the three cities of the Asurars
……….with his three eyes at the request of the Thēvars
……….along with Brahman, the god who appeared at the
……….very beginning,
and breaks mountains to pieces on the paths where people
travel, ruining them!

You are bold to leave. Listen! You want to go past mountains
to earn wealth so that you will be able to give to those in need
without being considered lowly. My chaste friend will not
live if you leave.

Embracing the chest of your beloved is wealth. Is it real
wealth, the wealth that you can earn passing mountains so
that you do not have to say ‘I do not have’ to those who come
in need stating that they lost what they had, and not be
considered lowly?

It is wealth not to separate from the delicate chest of your
beloved who united with you, according to faultless, ancient
tradition. Is it real wealth, the one that you can earn passing
forests, that you can give to those in need, so that you will not
be considered lowly?

Is it real wealth, the wealth you desire to earn to give to those
in need to run their households, so that you will not be considered
lowly, separating from the woman with wide, delicate arms,
who is chaste like Arundati?

On hearing my words, he feared that his leaving would ruin
your beauty. He agreed to stay, on hearing my words, like a
bull elephant that could not be controlled by a goad, but is
controlled by a yāzh.

Notes:  கற்பினாள் (21) – நச்சினார்க்கினியர் உரை – விளங்கிய கற்பனையை முன்புடையவள்.  கற்புக் கற்பனையாதல் கற்பியலான் உணர்க.  வடமீன், சிறுமீன், சாலினி – அருந்ததி, the star Alcor, புறநானூறு 122 – வடமீன் புரையும் கற்பின் மட மொழி அரிவை, ஐங்குறுநூறு 442 – அருந்ததி அனைய கற்பின், கலித்தொகை 2 – வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள், பெரும்பாணாற்றுப்படை 303 – சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல், பரிபாடல் 5 – கடவுள் ஒரு மீன் சாலினி.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக – along with Brahman who appeared at the beginning, அடங்காதார் மிடல் சாய – to ruin the strength of the asurars, அமரர் வந்து இரத்தலின் – since the celestials came and pleaded, மடங்கல் போல் சினைஇ – enraged like a lion (சினைஇ – சொல்லிசை அளபெடை), மாயம் செய் அவுணரைக் கடந்து – won over the tricky asurars, அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்  – when he ruined the three fortresses with his three eyes burning them totally with might, உடன்றக்கால் முகம் போல – like his angry face (உடன்றக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), ஒண் கதிர் தெறுதலின் – since the bright rays of the sun burn, சீறு அரும் கணிச்சியோன் சினவலின் – since the one with a battle axe got enraged, அவ்வெயில் – that sun, lovely sun, ஏறு பெற்று – rose up high, உதிர்வன போல் வரை பிளந்து – mountains broke and pieces fell like they dropped, இயங்குநர் ஆறு கெட – ruined the path of those who travel, விலங்கிய அழல் அவிர் – blocking hot and bright sun, ஆர் இடை – on the difficult path, மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய  – leaving her here to suffer with great love that cannot be forgotten,

இறப்பத் துணிந்தனிர் – you have become bold to leave, கேண்மின் – listen to me (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மற்று – அசைநிலை,  besides, ஐஇய –  sir (செய்யுளிசை அளபெடை), தொலைவு ஆகி – going away, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – that is lowly not to give any gifts to those who come in need, மலை இறந்து – passing mountains, செயல் சூழ்ந்த பொருள் – wealth earned after consideration of the task, பொருள் ஆகுமோ நிலைஇய – will it be stable wealth (நிலைஇய – செய்யுளிசை அளபெடை), கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – the chaste woman will not live if you leave,

முலை ஆகம் பிரியாமை – not separating from her, பொருள் ஆயின் – if it is wealth, அல்லதை – other than (அல்லது, ஈறு திரிந்தது), இல் என – to say that you do not have, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – that is lowly to say no to those who come,  கல் இறந்து – passing mountains, செயல் சூழ்ந்த பொருள் – wealth earned after consideration of the task, பொருள் ஆகுமோ – is it really wealth, தொல் இயல் வழாஅமை – according to faultless ancient tradition (வழாஅமை – இசை நிறை அளபெடை), துணை எனப் புணர்ந்தவள் – the woman who united with you as your partner, புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் – if it is wealth not to separate from the one with tender chest, அல்லதை – other than (அல்லது, ஈறு திரிந்தது),  இடன் இன்றி இரந்தோர்க்கு – to those who do not have who come and request, ஒன்று ஈயாமை – not to give anything, இழிவு என – that it is lowly,  கடன் இறந்து – passing forests, செயல் சூழ்ந்த – considering the task, பொருள் – wealth, பொருள் ஆகுமோ- will it be wealth ,

வடமீன் போல் – like the northern star, Arunthathi, தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – the chaste woman who is fit for worship, தட – curved, large, மென்தோள் –  delicate arms, delicate shoulders, பிரியாமை – not separating, பொருள் ஆயின் – if it is wealth,  அல்லதை – other than (அல்லது, ஈறு திரிந்தது), என – because of that, இவள் புன்கண் கொண்டு இனையவும் – her distressed with great misery, பொருள் வயின் அகறல் – leaving to earn wealth, அன்பு அன்று என்று யான் கூற – I say that it is not kindness,

அன்புற்று – with kindness, காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல் – a harsh/fast bull elephant that is not controlled by the goad/rod, யாழ் வரைத் தங்கியாங்கு – like controlled by a yāzh, like staying within the limits of a lute, தாழ்பு – humbly, நின் தொல் கவின் தொலைதல் அஞ்சி – afraid that your prior beauty would be lost, என் சொல்வரைத் தங்கினர் காதலோரே – your lover is staying back listening to my words (காதலோரே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 3
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்,
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்கப்,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்,
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி! 5

‘உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின்’ எனப் பல
இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய் ஆயினை;
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறுஞ்சுனை,
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன;

‘வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள்’ என 10
ஒல்லாங்கு யாம் இரப்பவும் உணர்ந்து ஈயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்று இடைச் சேர்ந்து எழுந்த மரம் வாடப்,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;

‘பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள்’ எனப்
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை; 15
துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை அம்மரத்து
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன;
என ஆங்கு
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி, 20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப செலவு.

Kalithokai 3
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
When my friend thinks about the long, arid path that
you plan to take, without kindness to her, she
struggles in pain with love affliction that she is unable
to bear. She worries about gossip from neighbors and
the bangles on her forearms are slipping down, her eyes
are tired and filled with tears, her forehead has dulled and
she will lose her great beauty.

You who desires to go on your business trip! Listen to me
now!

You do not listen to me even though I plead with you
in many ways, saying that she will not live if you leave her.

You do not change your mind even though I plead with you,
saying she will suffer if you leave rapidly.
The pretty flowers and leaves that are withered in the
waterless, dried ponds on your path will remind you of her,
and block you from leaving.

You are planning to leave soon even though I plead with you,
saying she will die if you leave.
The flowering vines on your path, that have lost their grip on
the trees on which they grow, will remind you of her, and block
you from leaving.

You do not listen to me when tell you that the withered, pretty
sprouts on the beautiful trees on the path you plan to tread
fearlessly, will block you from leaving her.

The forest on your path will reveal to you many elements that
have graces like her, and like relatives who tell the truth with
authority, they will block you from proceeding.

Meanings: அறன் இன்றி – without fairness (அறன் – அறம் என்பதன் போலி), அயல் தூற்றும் அம்பலை நாணியும் – she became embarrassed about the gossip spreading from those nearby (அயல் – ஆகுபெயர் அயலார்க்கு), வறன் நீந்தி – going through dry land, நீ செல்லும் நீள் இடை – the long path that you will take, நினைப்பவும் – when she thinks, இறை – forearms, நில்லா வளை ஓட – her bangles run down not staying in place, இதழ் சோர்பு பனி மல்க – eyelids tired and with tear filling, பொறை நில்லா நோயோடு – with love disease that is unable to bear, புல்லென்ற நுதல் – dull forehead, இவள் விறல் நலன் இழப்பவும் – she will lose her beauty, வினை – business, work, வேட்டாய் – you are desiring, கேஎள் இனி – listen now (கேஎள் – இன்னிசை அளபெடை),

உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் – she will not live if you leave, எனப் பல இடை கொண்டு யாம் இரப்பவும் – thus I pleaded in many ways, எம கொள்ளாய் ஆயினை – you did not listen to my words (எம – என்னுடைய, தன்மைப் பன்மை, first person plural),

கடைஇய ஆற்று இடை – on the path that you will ride on (கடைஇய – செய்யுளிசை அளபெடை), நீர் நீத்த வறுஞ்சுனை – the spring/pond dried without water, அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன – the beautiful flowers that have faded along with the leaves will block you, வல்லை நீ துறப்பாயேல் – if you abandon her soon, வகை வாடும் இவள் என – that she will suffer, ஒல்லாங்கு – in a fitting manner, யாம் இரப்பவும் – when I pleaded, உணர்ந்து ஈயாய் ஆயினை – you understood but did not give in,

செல்லு நீள் ஆற்று இடைச் சேர்ந்து எழுந்த மரம் வாட – trees growing on the long path that you go are parched, புல்லு விட்டு – losing ties (roots losing their hold on the trees), இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன – the flowering vines that have bent down and withered will block you, பிணிபு – being attached, getting attached (பிணித்துக் கொண்டு), நீ விடல் சூழின் – if you consider leaving her, பிறழ்தரும் இவள் என – that she will die, that she will be ruined, பணிபு வந்து இரப்பவும் – even though I pleaded humbly, பல சூழ்வாய் ஆயினை – you are analyzing many matters,

துணிபு – boldly, clearly (துணிந்து), நீ செலக் கண்ட ஆற்று இடை – in the path where you are going, அம்மரத்து அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன – the faded pretty sprouts in the beautiful trees will block you (செல – இடைக்குறை), என ஆங்கு யாம் நின் கூறவும் – when I said that (ஆங்கு – அசைநிலை, an expletive), எம கொள்ளாய் ஆயினை – you did not listen to what I said (எம – என்னுடைய, தன்மைப் பன்மை, first person plural),

ஆனாது – without stopping, இவள் போல் – like her, அருள் வந்தவை – those which cause graces, காட்டி – revealing, மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் – like relatives who tell the truth with authority, நீ செல்லும் கானம் தகைப்ப செலவு – the forest will block your leaving (தகைப்ப – அன் சாரியை பெறாது நின்ற அகர ஈற்று பலவறி சொல்)

கலித்தொகை 4
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வௌவலின், 5
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை ,
வெள் வேல் வலத்திர் பொருள்தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி,

“காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார். என் 10
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர்; மற்று அவர்
சூழ்வதை எவன் கொல்? அறியேன்!” என்னும்,

“முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என்
ஒள்ளிழை திருத்துவர் காதலர்; மற்று அவர் 15
உள்ளுவது எவன் கொல்? அறியேன்!” என்னும்

“நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார், என்
ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்று அவர்
எண்ணுவது எவன் கொல்? அறியேன்!” என்னும் 20
என ஆங்கு,
“கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து” என என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ?
ஒழிக இனிப் பெரும, நின் பொருள் பிணிச் செலவே. 25

Kalithokai 4
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero

My friend is aware that goaded by the desire for wealth,
you are thinking of carrying your bright spear on your
right hand and going on a harsh path, where even birds
do not go, and there are wasteland warriors with great
strength and curly hair, with looks like those of tigers,
carrying fastened bows and stalking and murdering new
people, watching them struggle and enjoying the killing,
even when those who travel do not carry any valuables.

My friend is aware that you are leaving, thirsting to earn
wealth.

She says,

“He used to embrace my tender breasts adorned with
pearl strands, without stopping. Not satisfied with that,
he would decorate my flowing hair. What does he think
now? I do not know.

He said the saliva from my teeth that resemble thorn-like
sprouts, gave him more pleasure than liquor. Not satisfied
with saying that, he would fix my bright jewels that was
disturbed during our union. What does he think now?
I do not know.

His eyes would feast on my pretty breasts with delicate,
pallor spots. Not satisfied with that, he would stroke my
bright forehead. What does he think now? I do not know.”

She is ruined and distressed that there is a reason for you
showering great kindness. Even if you leave for a day,
my friend will not live.  O lord! Please get rid of your
wealth-seeking trip!

Notes:  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  வலி முன்பின் வல்லென்ற யாக்கை – brave bodies with great strength, புலி நோக்கின் – looks like that of tigers, சுற்று அமை வில்லர் – those with bows tightly tied, சுரி வளர் பித்தையர்- those with curly hair, அற்றம் பார்த்து – looking for the perfect time, அல்கும் – they stay, கடுங்கண் மறவர் – the forest warriors with harsh eyes, தாம் கொள்ளும் பொருள் இலர் ஆயினும் – if people don’t have materials that they could steal, வம்பலர் – those who travel, துள்ளுநர்க் காண்மார் – to watch them struggle, தொடர்ந்து உயிர் வௌவலின் – since they continuously seize lives, புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை – even birds don’t fly in that difficult lonely path, வெள் வேல் வலத்திர் – you with a white/bright spear on your right hand, பொருள்தரல் வேட்கையின் உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – my friend is aware that you are going thirsting with the desire to bring back wealth,

காழ் – gem, விரி கவை ஆரம் – wide split strand, மீவரும் – moving on top, இள முலை – tender breasts, போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் – he was not satisfied even when he  embraced me continuously (இடைப்படாஅமல் – இசை நிறை அளபெடை), என் தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் – my lover decorated my flowing hair, மற்று அவர் சூழ்வதை எவன் கொல் அறியேன் என்னும் – but I do not understand what he is thinking about now (சூழ்வதை – ஐ சாரியை),

முள் உறழ் முளை எயிற்று – from the teeth that are like thorn-like sprouts (உறழ் – உவம உருபு, a comparison word), அமிழ்து ஊறும் தீ நீரை – the sweet saliva that is like nectar, கள்ளினும் மகிழ் செயும் என – gives more pleasure than alcohol, உரைத்தும் அமையார் – he was not satisfied with saying, என் ஒள் இழை திருத்துவர் காதலர் – my lover fixes my bright jewels, மற்று அவர் உள்ளுவது எவன் கொல் அறியேன் என்னும் – but I do not know what he is thinking,

நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு – seeing with his eyes my dark pretty chest with beautiful fine pallor spots, தொடுத்து என – like tied together (தொடுத்து – தொடுத்தது நிலை மொழி ஈறு கெட்டது), நோக்கியும் – seeing, அமையார் – he was not satisfied, என் ஒண் நுதல் நீவுவர் காதலர் – my lover would stroke my bright forehead, மற்று அவர் எண்ணுவது எவன் கொல் அறியேன் என்னும் – but I do not know what he is thinking about now,

என ஆங்கு கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என – that there is a reason for your great kindness (ஆங்கு – அசைநிலை, an expletive, கழி – மிகுதி உணர்த்தும் உரிச்சொல்), என் தோழி – my friend, அழிவொடு கலங்கிய எவ்வத்தள் – she is ruined and distressed, ஒரு நாள் நீர் பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – will she live even if you leave for a day, ஒழிக இனிப் பெரும – get rid of it lord, நின் பொருள் பிணிச் செலவே – your trip to earn money (செலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 5
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்
இறந்து நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின், 5
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;

கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், 10
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ?
ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின் வாழ்வாளோ? 15
என ஆங்கு,
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந்நாளோ நெடுந்தகாய்! நீ செல்வது,
அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல் உயிரே.

Kalithokai 5
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero

If you understand that she is better than the
wealth that you are seeking, but still want to go on
the confusing paths created by ruining bushes in the
harsh wasteland, by herds of big rutting elephants
with large ears and huge feet and confused fierce
warriors,
what more can we, who are sad like those whose
ships are attacked by winds in the vast, dark ocean,
whose business plans are ruined,
say to you, O lord? Only the stars and planets can stop
you!

Will my friend feel sad like an empty festival ground
where lovely, uproarious celebrations have ended?

Will she suffer like a country whose ruler creates turmoil?

Will she survive your separation, after being ruined like
a lotus blossom at dawn in a pond where the water has
drained overnight?

You feigned love, O noble lord! On the day you abandon
protecting her, she will lose her precious life!

Notes:  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  பாஅல் – sections (இசை நிறை அளபெடை), அம் செவி – beautiful ears, பணைத் தாள் – huge legs, fat legs, மா நிரை மாஅல் யானையொடு – with huge elephant crowds in rut (மாஅல் – இசைநிறை அளபெடை), மறவர் மயங்கி – confused wasteland warriors, தூறு அதர்பட்ட- bushes are ruined and new paths are created, ஆறு மயங்கு – confusing paths, அருஞ்சுரம் – difficult wasteland, இறந்து – leaving, நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் – if you can understand that we are better than the material that you are going to earn,  நீள் இரு முந்நீர் – long dark/huge ocean, வளி கலன் வௌவலின் – since the ships are seized by the wind, ஆள் வினைக்கு அழிந்தோர் போறல் – like those who went to earn wealth who got ruined, அல்லதைக் கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – what more can I say to you who is a great man who is family to us (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே – only the stars and planets can stop you,

கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் – after the loud lovely celebrations are over (கல்லென – ஒலிக்குறிப்பு), புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு அமைவாளோ – will she be lonely like the grounds that are dull (அமைவாளோ – ஓகாரம் எதிர்மறை), ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல் – like a country that suffers because of the ruler who plunges his country into turmoil, பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – will she live with sorrow with a ruined face (அமைவாளோ – ஓகாரம் எதிர்மறை), ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல – like a lotus flower in the morning in a pond where the water is lost at night (இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), நீ நீப்பின் வாழ்வாளோ – will she live after you leave (வாழ்வாளோ – ஓகாரம் எதிர்மறை),
என ஆங்கு பொய் நல்கல் புரிந்தனை – you pretended to love (ஆங்கு – அசைநிலை, an expletive, அச்சுரத்தை எனினுமாம்), புறந்தரல் கைவிட்டு எந்நாளோ – whatever day it is that you abandon protecting her, நெடுந்தகாய் – O great man, O noble man, நீ செல்வது – you leaving, அந்நாள் கொண்டு இறக்கும் இவள் அரும்பெறல் உயிரே – on that day she will die losing her precious life (உயிரே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 6
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
மரையா மரல் கவர மாரி வறப்ப,
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்,
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்
அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது 10
இன்பமும் உண்டோ எமக்கு?

Kalithokai 6
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to the hero
You tell me that you are going on a fierce path
in the harsh wasteland forest on a tall mountain,
where rains have ceased, the land is parched, wild cows
eat hemp, wasteland warriors attack those who travel
using their arrows with sharp tips, and the wounded
are without water to drink, their mouths dried out,
their painful tears wetting their mouths.

You are saying this like you do not know my situation.
O esteemed one! This does not suit your fine nature.
Do not think about leaving me here.  Please take
me along with kindness, to share struggles with you
on the path.  Is there more joy than that for me?

Notes: நீர் அறியாதீர் (7) – அ. விசுவநாதன் உரை – ஒருவனைப் பன்மையாற் கூறியது. ‘நின் நீர அல்ல’ (8) எனப் பின்னர் அவனை ஒருமையாற் கூறியது – பன்மையும் ஒருமையும் மயங்கி நின்றன. University of Madras Lexicon – மரை மான், Indian elk, sambur, or the Indian bison.

Meanings: மரையா – wild cows, female elk, மரல் – bowstring hemp, Sansevieria trifasciata, கவர – seize, மாரி வறப்ப – rain stops and the land dries, வரை ஓங்கு அரும் சுரத்து – harsh wasteland in the tall mountain, ஆர் இடைச் செல்வோர் – those who go on the fierce paths, சுரை அம்பு மூழ்க – hollow arrows plunging, arrows with tops plunging, சுருங்கி – shrunk, புரையோர் – those with faults, meaning wasteland robbers here, தம் உள் நீர் வறப்ப – the mouths become dry without saliva, புலர் வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்று – they will struggle without water for their dry tongues (பெறாஅ – இசை நிறை அளபெடை), அரும் துயரம் கண்ணீர் நனைக்கும் – gets wet through their tears, கடுமைய காடு – harsh forest, என்றால் – if you say, என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – you are saying this like you don’t know my situation, நின் நீர அல்ல – this does not fit your good nature, நெடுந்தகாய் – O esteemed man, எம்மையும் – me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), அன்பு அற – with kindness, சூழாதே – not thinking, ஆற்று இடை – to the path, நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் – if you consider taking me as a partner to face sorrow along with you, அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு – is there more joy for me than that (எமக்கு – தன்மைப் பன்மை, first person plural)

கலித்தொகை 7
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர் எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ ஐய! சிறிது,

நீயே செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் 5
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே!
இவட்கே செய்வுறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே;

நீயே வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப்,
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; 10
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே,

நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய
வலம்படு திகிரிவாய் நீவுதியே;
இவட்கே அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் 15
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே;
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ, 20
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

Kalithokai 7
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
If she hears that you are leaving with a wish
to earn, to the forest where rains have failed,
and sad and exhausted elephants struggle in
heat and go toward mirages desiring water,
Can I ask you about a matter?

Sir, you are considering going to earn wealth,
stroking the bowstring of your well-made bow.
Pallor will spread on the bright, blemishless face
of my friend, like the clouds covering the lovely
moon.

You are wearing perfect clothing tightly tied, and
checking your fine arrows. Tears are dropping
from the sad kohl-lined eyes of my friend, like rain
water dropping on blue waterlilies in a spring.

You are cleaning the rims of your victorious wheels.
The pretty, bright bangles on her forearms will slip
down like the beautiful kōdal petals that drop when
the flowers are shaken.

She is sad knowing you are leaving, and she will lose her
beauty. She will die if you leave. Will it bring back her
sweet life that is lost, the wealth that you are set out to
earn in another country?

Notes:  வழங்காத் தேர் நீர்க்கு (2) – ஊராத தேராகிய பேய்த்தேரை, ஊராத தேராகிய கானல் நீர், வெளிப்படை.  உசாவுகோ (4) – மா. இராசமாணிக்கனார் உரை – கேட்கட்டுமா.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  வேனில் உழந்த – struggling in the heat, வறிது – poor, உயங்கு ஓய் களிறு – sad tired elephant, வான் நீங்கு வைப்பின் – in the place without rain, வழங்காத் தேர் நீர்க்கு – கானல் நீர்க்கு, for the mirage with unavailable water, அவாஅம் – with desire (இசைநிறை அளபெடை), கானம் – forest, கடத்திர் எனக் கேட்பின் – if she hears you are leaving, யான் ஒன்று உசாவுகோ – can I ask you about a matter, ஐய – sir, சிறிது – a little,

நீயே செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து – because of your manly effort to earn wealth you are considering to go, யாழ – அசைநிலை, an expletive, நின் – your, கை புனை – hand made, வல் வில் ஞாண் உளர்தீயே – you are stroking your strong bow string (ஏகாரம் அசைநிலை, an expletive), இவட்கே – for her, my friend (ஏகாரம் அசைநிலை, an expletive), செய்வுறு – created beautifully, மண்டிலம் – orb, moon, மையாப்பது போல் – like the clouds that spread and cover the moon, like the blemishes spread on the moon, மை இல் வாள் முகம் – bright face without blemish, பசப்பு ஊரும்மே – pallor will spread (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது),

நீயே – you, வினை மாண் காழகம் – very fine clothes, வீங்கக் கட்டி – tied tightly, புனை மாண் மரீஇய – made splendidly (மரீஇய – செய்யுளிசை அளபெடை), அம்பு – arrows, தெரிதியே – you are checking, இவட்கே – as for her, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – tears are in her saddened kohl-rimmed eyes drop unstopping like the rain water dropping on the blue waterlilies in the pond/spring,

நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயின் செலீஇய – you are leaving without sorrow to earn wealth without thinking (செலீஇய – செய்யுளிசை அளபெடை), வலம்படு திகிரிவாய் நீவுதியே – you are cleaning the rims of your victorious wheels (ஏகாரம் அசைநிலை, an expletive), இவட்கே – as for her, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் – like kōdal petals that drop when the flower is shook, white malabar glory lilies, இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – the shiny pretty bright bangles in her forearms will slip (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது),

என நின் செல் நவை அரவத்தும் இனையவள் – if she is sad because of the preparations you are making to leave, நீ நீப்பின் – if you leave, தன் நலம் கடைகொளப்படுதலின் – if her beauty goes away, மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – will it bring back her sweet life, முன்னிய தேஎத்து – to the country that you are going (தேஎத்து – இன்னிசை அளபெடை), முயன்று செய் பொருளே – the wealth that you earn through your effort (பொருளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 8
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர, 5
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன், கேண்மின் மற்று ஐஇய!

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
ஏழும் தம் பயங்கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் 10
யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியுங்கால் பிறர் எள்ளப் பீடு இன்றி புறம் மாறும்
திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை 15
வரைவு இன்றிச் செறும் பொழுதில் கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
என ஆங்கு,
நச்சல் கூடாது பெரும இச்செலவு
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று 20
மன்னவன் புறந்தர வருவிருந்து ஓம்பித்,
தன் நகர் விழையக் கூடின்
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே!

Kalithokai 8
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
You are getting ready to leave without telling
us, to go on the hot wasteland path with no people
movement, on the lovely mountain, where the sun
spreads oppressive heat, harsh like the scepter of a
king who orders without any kindness or fairness
on listening to an evil minister, and a tired elephant,
which had fragrant musth with swarming bees flowing
on the cheeks in the past but has lost its beauty now,
places its tusks on the ground, resembling a plow in
a dry field.

O sir, let me tell you something! Listen!

Will one go for wealth that is more transient than the
desirable music of the yāzh strummed with fingers whose
middle string snaps, rendering all seven strings useless?

Will one desire fleeting wealth that gives joy when one
owns it, but brings woe and disrespect when it leaves,
changing hands without pride?

Will one desire wealth more unstable than the king
who does not consider the loyalty of those who worked for
him, but when enraged beyond limits, kills them without
any pity?

O lord! Do not crave for material wealth! I am requesting
you to please abandon this trip!
O one with a broad chest! If you think about it, stable wealth
is when the king protects without a fault, hospitality is
offered to the guests who come home, and you being together
sweetly and in a desirable manner with your beloved.

Meanings:  நடுவு – fairness, இகந்து – going past limits, ஒரீஇ – leaving (சொல்லிசை அளபெடை), நயன் இல்லான் – one without kindness, வினை வாங்க – ordering tasks, கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – like the scepter of a king who listens to an evil minister, ஞாயிறு – sun, கடுகுபு – rapidly, abundantly, கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின் – since the sun’s rays spread great heat, உறல் – swarming of bees, bees are nearby, ஊறு – dripping, கமழ் கடாத்து – with fragrant musth, ஒல்கிய எழில் வேழம் – tired beautiful elephant, வறன் உழு நாஞ்சில் போல் – like a plow on dry land, மருப்பு ஊன்றி – places his tusks down, நிலம் சேர – reaches the ground, விறல் மலை – lovely/victorious mountains, வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம் – hot difficult wasteland with no people movement, சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு – since you are bold to leave without telling us about it, ஒரு பொருள் சொல்லுவது உடையேன் கேண்மின் – let me tell you something, listen (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மற்று ஐஇய – O Sir (மற்று – அசைநிலை, an expletive, ஐஇய  – செய்யுளிசை அளபெடை),

வீழுநர்க்கு – also for those who desire, இறைச்சியாய் – as pleasure, விரல் கவர்பு இசைக்கும் – strumming with fingers, கோல் ஏழும் – seven strings, தம் பயன் கெட – ruining their usefulness, இடை நின்ற நரம்பு அறூஉம் – if a string in the middle breaks (அறூஉம் – இன்னிசை அளபெடை), யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ – do people desire wealth that is more unstable than the yāzh,

மரீஇத் தாம் கொண்டாரை – those who have it (மரீஇ – சொல்லிசை அளபெடை), கொண்டக்கால் – when they have it, போலாது பிரியுங்கால் – when it leaves without staying (பிரியுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), பிறர் எள்ள – others will put down, others will disrespect, பீடு இன்றி புறம் மாறும் – it will change hands without pride, திருவினும் – more than wealth/Thirumakal, நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ – will they desire wealth that is not stable (நச்சுபவோ – ஓகாரம் எதிர்மறை),

புரை – great, தவப் பயன் நோக்கார் – he does not look at the abundant benefits, he does not consider the abundant benefits, தம் ஆக்கம் முயல்வாரை – those who worked for his interests, வரைவு இன்றிச் செறும் பொழுதில் – when he is enraged beyond limit, கண் ஓடாது – without flinching, without pity, உயிர் வௌவும் அரைசினும் – more than the king who takes lives, நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ – will they like wealth that is not stable (நச்சுபவோ – ஓகாரம் எதிர்மறை),

என ஆங்கு நச்சல் கூடாது – so do not love wealth (ஆங்கு – அசைநிலை, an expletive), பெரும – O lord, இச்செலவு ஒழிதல் வேண்டுவல் – I desire for you to abandon this trip (வேண்டுவல் – முன்னிலை வினைமுற்று), I am requesting you to abandon this trip, சூழின் – if you think about it, பழி இன்று மன்னவன் புறந்தர – king protects without a fault, வருவிருந்து ஓம்பி – taking care of guests who come, தன் நகர் – with her (நகர் – ஆகுபெயர் மனைவிக்கு), விழைய – in a desirable manner, கூடின் இன் உறல் – it will be sweet if you both can be together, வியன் மார்ப – O! one with a wide chest, அது மனும் பொருளே – that is stable wealth (பொருளே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 9
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது
“எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ் இடை, 5
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்,
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?”

“காணேம் அல்லேம்; கண்டனம் கடத்து இடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய, 10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
என ஆங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம்தலை பிரியா ஆறும் மற்று அதுவே”.

Kalithokai 9
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s foster mother and a Vaishnava ascetic said
Foster mother to a Vaishnava ascetic and his disciples:
O Brahmins of righteousness, with hearts that
think not of other than virtue, who hold in servitude
your five senses, holding umbrellas that bear the
hot rays of the scorching sun, bearing pots hanging
on loops, carrying famed three staves on your shoulders
in a perfect manner, and going through the hot
wasteland path! O lord, did you see my daughter
and the son of another woman, who united in secrecy,
their union now known to others?

Vaishnava ascetic:

Not that we did not see them. We did see them on the
forest path. You appear to be the mother of the young
woman wearing pretty jewels, who is on the harsh path
with her handsome man.

Other than to those who wear them, of what use is the
fragrant sandal to the mountain that gave birth to it?
When one thinks about it, your daughter is like that to
you!

Other than to those who wear them, of what use are lovely,
splendid, white pearls to the ocean that bore them?
When one thinks about it, your daughter is like that to you!

Other than to those who hear them, of what use is the sweet
music of seven strings to the yāzh that gave birth to it?
When one thinks about it, your daughter is like that to you!

Grieve not for your daughter of chastity who has left. She
has gone with her fine man on the righteous path. Also,
that is the virtuous path!

Notes: முக்கோல் is the முத்தண்டு (திரிதண்டம்) of Vaishnava ascetics. Three wooden rods are tied together and carried by ascetics. The three rods signify controlling ‘thoughts, words and deeds’. முக்கோல் பகவர் (திரிதண்டி) – ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள். Kalithokai 126 – முக்கோல் கொள் அந்தணர், Mullaippāttu 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன்’ என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் – in the shade of the lifted umbrella that bears the harsh hot rays given by the sun (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), உறித் தாழ்ந்த கரகமும் – and water pots hanging on rope hoops, உரை சான்ற முக்கோலும் – and famed three wooden rods, நெறிப்பட சுவல் அசைஇ – placing on your shoulder in a proper manner (அசைஇ – சொல்லிசை அளபெடை), வேறு ஓரா நெஞ்சத்து – with a heart that does not think about anything else (other than god), குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர் – O Brahmins with the principle of controlling your senses properly, வெவ் இடைச் செலல் – going through the hot wasteland path (செலல் – இடைக்குறை), மாலை ஒழுக்கத்தீர் – O those with perfect behavior, இவ் இடை – in this place, on this path, என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – my daughter and the son of another woman, தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்  – they united secretly without others but others are aware of it now, அன்னார் இருவரை காணிரோ – did you see both of them of that nature, பெரும – O  lord (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள் அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),

காணேம் அல்லேம் – not that we did not see them, கண்டனம் – we saw them, கடத்து இடை – in the forest path, ஆண் எழில் அண்ணலோடு – with the handsome noble man, அரும் சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – you appear to be the mother of the young woman wearing fine jewels and going on the harsh wasteland path மடவரல் அன்மொழித்தொகை,

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை – other than to those who wear (smear, rub, உறு – மிக்க) fragrant sandal with many abundant fragrances (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), மலை உளே பிறப்பினும் – even though they are born in the mountains (உளே – இடைக்குறை), மலைக்கு அவை தாம் என் செய்யும் –  of what use are they to the mountains, நினையுங்கால் – when you think about it (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that to you,

சீர்கெழு வெண்முத்தம் – splendid white pearls, அணிபவர்க்கு அல்லதை – other than to those who wear them (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), நீர் உளே பிறப்பினும் – even though they are born in the ocean, நீர்க்கு அவை தாம் என் செய்யும் – what will they do for the ocean, தேருங்கால் – when analyzed (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that to you,

ஏழ் புணர் இன் இசை – sweet music that rises from seven strings, முரல்பவர்க்கு அல்லதை – other than to those who play/sing (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), யாழ் உளே பிறப்பினும் – even though the music is born in the yāzh, யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – what will it do for the yāzh, சூழுங்கால் – when one thinks about it (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that you,

என ஆங்கு இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் – so please do not grieve for her who went with chastity (ஆங்கு – அசைநிலை, an expletive, படரன்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – she adored a great man and went with him (வழிபடீ- சொல்லிசை அளபெடை), she went following an exalted man, அறம்தலை பிரியா – not swaying from righteousness, ஆறும் மற்று அதுவே – besides that is the right path (அதுவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 10
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
“வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்ச்,
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்,
அலவுற்றுக் குடி கூவ ஆறு இன்றிப் பொருள் வெஃகிக், 5
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெஞ்சுரம்,

இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ,
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ 10
புடை பெயர்வாய் ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?

முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண்படல் ஒல்லா படர்கூர்கிற்பாள் மன்னோ,
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத்
துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? 15

பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற்பாள் மன்னோ,
இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?”
என ஆங்கு, 20
“வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்” எனப்
புனை இழாய்! நின் நிலை யான் கூறப், பையென,
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால், செறிக நின் வளையே.

Kalithokai 10
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her

I said to him,

“You are desiring to go the harsh wasteland path
where tree branches are parched like the poverty
of a young man, shade is meager like the charity of
a wealthy man, lofty trees are parched to their roots
like the last days of a man who ruined his name doing
evil to others, and the land is like that under a cruel
king, who listens to ministers who do not fear killing,
who exhorts wealth with greed from his screaming
subjects.

If she hears that you are leaving to earn wealth, her
heart will be broken and will she not lose her brightness?

Even if you move from her a little bit when you are both
together on your mattress in bed, she falls into despair. If
she hears that you are leaving to earn wealth, will she not
cry and suffer in pain?

The very delicate woman fears and sobs even if you lovingly
tease her by staying away from her. If she hears that you
are leaving to earn wealth, will she not be confused and
distressed? Will she not shed tears and lose sleep?

If your continued graciousness without darkness changes
even for a moment, she will be ruined. If you leave desiring
to earn wealth, she will not live.”

My friend with beautiful jewels! On hearing my words
the noble man with a bright spear has abandoned his trip.
May your bangles become tight!

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  வறியவன் இளமை போல் – like the poverty of a young man, வாடிய சினையவாய் – with branches that are parched, சிறியவன் செல்வம் போல் – like the wealth of a mean man,  சேர்ந்தார்க்கு – to those who come to them, நிழல் இன்றி – without shade, யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – like the last days of a man who did evil deeds to others and ruined his name, வேரொடு மரம் வெம்ப – trees were parched up to their roots, விரி கதிர் தெறுதலின் – since the spreading hot rays of the sun scorch, அலவுற்றுக் குடி கூவ – people scream in agony, ஆறு இன்றி – without justice, பொருள் வெஃகி – greed for wealth, கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் – a harsh king who does not fear resorting to killing due to his advisors, a king with a slanted scepter who does not fear resorting to killing his advisors, நிழல் – shade, உலகு போல் – like the country, உலறிய உயர் மர – dried up tall trees, வெஞ்சுரம் – hot wasteland,

இடை கொண்டு – on the path, பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின் – if she hears that you are leaving to earn wealth (இறத்தி – முன்னிலை வினைமுற்று), உடைபு நெஞ்சு உக – ruined with a broken heart, ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ – won’t she lose her brightness there (ஒளிஓடற்பாள் – முற்று வினைத் திரிசொல், மன்னோ – மன் எதிர்காலங்காட்டும் இடைநிலை, a particle which implies future, ஓகாரம் எதிர்மறை), படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – you do not know when you are both lying together on your perfect bed (படை அமை – மெத்தை அமைந்த, பதமாக மலர் முதலியவற்றால் அமைத்த, அறியாய் – வினையெச்ச முற்று), புடை பெயர்வாய் ஆயினும் – if you move to a side, புலம்பு கொண்டு இனைபவள் – she falls into despair,

முனிவு இன்றி – without hatred, முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின் – if she hears that you are leaving to earth wealth (இறத்தி – முன்னிலை வினைமுற்று), பனிய கண்படல் ஒல்லா படர்கூர்கிற்பாள் மன்னோ – won’t she have tears in her eyes and suffer greatly in pain and be unable to sleep (படர்கூர்கிற்பாள் – முற்று வினைத் திரிசொல், மன்னோ – மன் எதிர்காலங்காட்டும் இடைநிலை, a particle which implies future, ஓகாரம் எதிர்மறை), நனி கொண்ட சாயலாள் – a very delicate woman, நயந்து – lovingly, நீ நகை ஆகத் துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள் – she will fear and cry even if you tease her as a joke and stay away from her for a while,

பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின் – if she hears that you leaving her going toward wealth (போகுதி – முன்னிலை வினைமுற்று), மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற்பாள் மன்னோ – won’t she be confused and distressed greatly (மயல்கூர்கிற்பாள் முற்று வினைத் திரிசொல்,  மன்னோ – மன் எதிர்காலங்காட்டும் இடைநிலை, a particle which implies future, ஓகாரம் எதிர்மறை), இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற – your kindness without a break and without any darkness, நின் அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – she will be ruined even if your gracious attitude changes,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), வினை வெஃகி – desiring work, நீ செலின் விடும் இவள் உயிர் – she will let go of her life it you leave, என – thus, புனை இழாய் – my friend with beautiful jewels, நின் நிலை யான் கூற – when I told him of your situation, பையென – slowly, நிலவு வேல் நெடுந்தகை – the esteemed man with a bright spear, நீள் இடைச் செலவு ஒழிந்தனனால் – since he has abandoned his long trip (ஒழிந்தனனால் – ஆல் அசைநிலை, an expletive), செறிக நின் வளையே  – may your bangles become tight (வளையே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 11
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தோழியிடம் சொன்னது
‘அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ எனப்
பிரிவு எண்ணிப் பொருள்வயின் சென்ற நம் காதலர்
வருவர் கொல் வயங்கிழாஅய்! வலிப்பல் யான், கேஎள் இனி! 5

“அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாஅய் காடு” என்றார்; “அக்காட்டுள்
துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” எனவும் உரைத்தனரே;

“இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் 10
துன்புறூஉம் தகையவே காடு” என்றார்; “அக்காட்டுள்
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவு” எனவும் உரைத்தனரே;

“கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடு” என்றார்; “அக்காட்டுள் 15
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை” எனவும் உரைத்தனரே;
என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் 20
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே.

Kalithokai 11
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to her friend
My lover who went to earn wealth said he wanted
to give to the gracious ones who attain rare virtues,
win over enemies, subdue those arrogant, and
attain union because of love. My friend with bright
jewels! I am strong! Listen to me now!

My friend with heavy ornaments!
He said that the forest is a difficult place where the sun
scorches and the flame-like heat is unbearable to the feet.

He also said that an elephant calf with a tender head
muddied the water in a pond and the male elephant fed
the available little water to his female and quenched his
thirst only after that.

He also said that he was leaving pleasure to face the forest
that is distressing since leaves have dropped from tree
branches in the wind.

He also said that a male pigeon embraces its loving female
who is suffering and comforts her with his delicate wings.

He also said that the bamboo on the mountain had dried up
due to the sun’s harsh rays and the forest is hard to approach.

He also said that a stag gave his shade to his struggling
doe in that forest, where sweet shade is scarce.

He went to the forest which abounds in love and kindness.
He is not one to ruin my decorated beauty. The lizards in
our house that are nearby cluck in agreement. My pretty
left eye adorned with kohl twitches.

Notes: The lizard omen and the left eye twitching bringing luck, continue to this day in Thamizh Nadu. There are also references to lizard omens in Akanānūru 88, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246 and 333.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

Meanings:  அரிது ஆய அறன் எய்தி – to attain rare righteousness (அறன் – அறம் என்பதன் போலி), அருளியோர்க்கு அளித்தலும் பெரிது – to give to those who are gracious, ஆய பகை வென்று – winning over enemies, பேணாரைத் தெறுதலும்  – to ruin those who do not submit, to ruin those who are arrogant, புரிவு – desire, அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – will give union due to love, பிரிவு எண்ணி – thought about separation (that it is good for earning), பொருள்வயின் சென்ற நம் காதலர் – our lover who separated to earn wealth, வருவர் கொல் – will he come back,  வயங்கிழாஅய் – O one with bright jewels (இசைநிறை அளபெடை), வலிப்பல் யான் – I am strong, கேஎள் இனி  – listen now (கேஎள் – இன்னிசை அளபெடை),

அடி தாங்கும் அளவு இன்றி – the heat is not bearable for the feet to bear, அழல் அன்ன வெம்மையால் – due to the heat that is like flame, கடியவே – difficult, கனங்குழாஅய் – O one with heavy ornaments, காடு என்றார் – in the forest he said, அக்காட்டுள் – in that forest, துடி அடிக் கயந்தலை கலக்கிய – elephant (calf) with a tender head muddies the water with his thudi drum like feet (கயந்தலை – அன்மொழித்தொகை), சின் நீரைப் பிடி ஊட்டி – gives the little water to the female elephant, பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – he also said that the male elephant drinks after that (உரைத்தனரே – ஏகாரம் அசை நிலை, an expletive),

இன்பத்தின் இகந்து ஒரீஇ – moving away from pleasure (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), இலை தீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடு என்றார் – he said that the forest is distressing since tree branches have dropped leaves in the wind (துன்புறூஉம் – இன்னிசை அளபெடை), அக்காட்டுள் அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – he also said that in the forest a male pigeon embraces its loving female with its delicate wings and removes its tiring sorrow (அசைஇய – செய்யுளிசை அளபெடை, சிறகர் – அர் ஈற்று போலி, உரைத்தனரே – ஏகாரம் அசை நிலை, an expletive),

கல் மிசை வேய் வாட – bamboo is parched on the mountains, கனை கதிர் தெறுதலான் துன்னரூஉம் தகையவே காடு என்றார் – he said that the forest is unable to approach because of the sun’s intensely hot rays (துன்னரூஉம் – இன்னிசை அளபெடை), அக்காட்டுள் இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – he also said that in that forest with no sweet shade a male deer gave his shade to his sad female (உரைத்தனரே – ஏகாரம் அசைநிலை, an expletive),

என ஆங்கு இனை நலம் உடைய கானம் சென்றோர் – he who went to the forest with all these beautiful things (ஆங்கு – அசைநிலை, an expletive), புனை நலம் வாட்டுநர் அல்லர் – he is not one to ruin my decorated beauty, மனை வயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – the lizards in the house that are nearby also cluck in agreement (பல்லியும் – உம்மை எச்ச உம்மை), நல் எழில் உண்கண்ணும் – very pretty kohl-rimmed eyes ( கண்ணும் – உம்மை எச்ச உம்மை), ஆடுமால் இடனே – the left eye twitches (ஆடுமால் – ஆல் அசை நிலை, an expletive, இடனே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 12
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு, 5
வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம்,
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள் வயின் செல்வோய்!

உரன் உடை உள்ளத்தை செய் பொருள் முற்றிய 10
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா,
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை;

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை, 15
போற்றாய் பெரும! நீ காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு பொருள்வயின் போகுவாய்,
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.

Kalithokai 12
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
You are leaving her, who fears even if you sleep
a little bit longer, for the endless, huge wasteland,
where shallow graves of those who travel, killed
by curved bows of murderous wasteland bandits,
appear like long thorn fences, ponds are dry, and
distressed elephants surround them in search
of water, their footprints all over the place, their
trunks hot looking for water, they run all over the
mountain slopes in fear, ruining the paths and
causing confusion!

You of strong mind say that prosperity comes from
earned wealth. Youth and love will not wait for you.
Make sure that your days are not wasted without
embracing and crushing the garlands that drape
between her breasts.
There is nobody who knows the last day of his life.

Lord, if you go towards wealth with those who forget
death and old age, not caring for love, you will hurt love!

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).   சிறு நனி – அணி மாண் சிறுபுறம் காண்கம், அகநானூறு 261 – சிறு நனி ஏகு, அகநானூறு 301 – பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம், ஐங்குறுநூறு 180 – சிறு நனி வரைந்தனை கொண்மோ, கலித்தொகை 12 – சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், புறநானூறு 247 – சிறு நனி தமியள் ஆயினும் இன்னுயிர் நடுங்கும், புறநானூறு 376 – அந்தி சிறு நனி பிறந்த பின்றை, புறநானூறு 381 – சிறு நனி ஒருவழிப் படர்க என்றோனே.

Meanings:  இடுமுள் நெடுவேலி போல – like the long thorn fence, கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை – shallow graves  covered with leaves of those killed by the curved bows of murderers, நிரைத்த – in rows, கடு நவை ஆர் ஆற்று – on the harsh painful path, அறு சுனை – dried ponds/springs, முற்றி – surrounding, உடங்கு – together, நீர் வேட்ட – thirsting for water, உடம்பு உயங்கு யானை – elephants with distressed bodies, கடும் தாம் பதிபு – their imprint set rapidly, ஆங்கு – there, கை தெறப்பட்டு – their trunks got hot, வெறி நிரை – confused herds, fearing herds, வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி – they run on the mountain slopes, நெறி மயக்குற்ற – the paths are confusing, நிரம்பா நீடு அத்தம் – endless huge wasteland, empty huge wasteland, சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும்  அஞ்சும்  நறுநுதல் – the woman with fragrant forehead fears even if you sleep a little bit longer (நறுநுதல் – அன்மொழித்தொகை), நீத்துப் பொருள்வயின் செல்வோய் – you are leaving her and going for wealth,

உரன் உடை உள்ளத்தை – you are with a strong mind (உள்ளத்தை – ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று), செய் பொருள் முற்றிய வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – you say that prosperity is because of earned wealth, இளமையும் காமமும் நின் பாணி நில்லா – youth and love will not wait at your pace, இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை – embracing her causing the flower garlands that are between her breasts to get crushed, நாள் கழிதல் உறாஅமைக் காண்டை  – see that days spent are not wasted (காண்டை – முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது),

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – there is nobody who knows the last day of their life, போற்றாய் – you do not respect, you do not care, பெரும – O lord, நீ – you, காமம் புகர்பட – love to be ruined, love to be useless, வேற்றுமைக் கொண்டு – differing, பொருள்வயின் போகுவாய் – you who are going toward wealth, கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு – with those who forget death and old age, ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி – it is a totally different wrong path (ஓராஅங்கு – இசை நிறை அளபெடை)

கலித்தொகை 13
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவாய்ப்,
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,
திரிமருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,
மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, 5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது,
சேறு சுவைத்துத் தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய போக்கு அரு வெஞ்சுரம்,

“எல் வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் 10
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக்,
கல் உறின் அவ்வடி கறுக்குந அல்லவோ?

நலம்பெறு சுடர் நுதால்! எம்மொடு நீ வரின்,
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் 15
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய்! மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ?

கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட,
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த 20
வளி உறின் அவ் எழில் வாடுவை அல்லையோ?”
என ஆங்கு,
அனையவை காதலர் கூறலின், வினைவயின்
பிரிகுவர் எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇக்
கடுங்குரை அருமைய காடு எனின் அல்லது, 25
கொடுங்குழாய்! துறக்குநர் அல்லர்,
நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே.

Kalithokai 13
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
The mountain is parched and barren like an enemy
land blazed by a battle-skilled king with great rage.
Not finding food to eat in that burnt place with coal,
a delicate deer with spots that appear like popped
grains, and a stag with twisted antlers, run toward
mirages. Hemp plants are ruined and the place is
scorching. Female monkeys are in anguish.
Elephants with legs like pounding stones are
distressed, and having no water to drink in the dried
springs, they eat mud to save their lives. Rain has not
fallen in the harsh wasteland.

He said to you,

“O one with bright bangles! If you go with me to the
desert and walk on stones,
won’t your small feet that tread on soft ground become
black like the pretty, inner petals of lotus that darken
when dipped in vermilion?

O pretty woman with a shiny forehead! If you go with me,
won’t you, who sleeps on a splendid mattress made with
bright goose down on a bed with feet shaped like lions,
hear the roars of lions and fear?

O one of parrot talk! If you go with me, wouldn’t your
beauty, like that of sprouts after fresh showers, be ruined
by the wind blowing through the roaring flames from
fire caused by dry bushes?”

O friend with curved earrings! Do not be distraught
by what he says about going to the forest. He is not one to
abandon you. He says these as jokes to see you tremble.

Notes:  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  செரு மிகு சின வேந்தன் – king with great battle skills, சிவந்து – in rage, இறுத்த புலம் போல – like the land he occupied, like the land he ruined, எரி மேய்ந்த – burnt by fire, கரி வறல் வாய் புகுவ காணாவாய் – being unable to find food in the dry place with coal, பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான் – delicate deer with spots that appear like popped grains, திரிமருப்பு ஏறொடு – along with its male with twisted antlers (ஏறொடு – ஏற்றொடு என்பது ஏறொடு என விகாரமாயிற்று), தேர் அறற்கு ஓட- it runs toward mirages (தேர் – கானல் நீர்), மரல் சாய – hemp is ruined, Sansevieria trifasciata, மலை வெம்ப – the mountain is hot, மந்தி உயங்க – female monkeys are sad, உரல் போல் அடிய – with legs that are like pounding stones, உடம்பு உயங்கு யானை – the sad elephants with distressed bodies, ஊறு நீர் அடங்கலின் – since the springs do not have water, உண் கயம் காணாது – not finding pond to drink water, சேறு சுவைத்துத் தம் செல் உயிர் தாங்கும் – they eat mud and save their lives, புயல் துளி மாறிய போக்கு – a place where clouds don’t pour rain (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), அரு வெஞ்சுரம் – in the harsh hot wasteland (சுரம் – சுரத்து என்னும் அத்து விகாரமாற் தொக்கது),

எல் வளை – O one with bright bangles (விளி, முன்னிலை, அன்மொழித்தொகை), எம்மொடு நீ வரின் – if you go with me, யாழ – அசைநிலை, an expletive, நின் மெல்லியல் மேவந்த சீறடி – your small feet that walks on the soft ground (மேவந்த – பொருந்திய) , தாமரை அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல – like the pretty inner lotus petals that are dipped in vermilion, கல் உறின் அவ்வடி கறுக்குந – they will become black when they press on stones, அல்லவோ – won’t they,

நலம் பெறு சுடர் நுதால் – O pretty woman with a bright forehead, எம்மொடு நீ வரின்  – if you come with me, இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – in a delicate bed made with splendid bright feathers of goose, துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய் – you climb and accept sleep on a bright bed with lion-shaped feet,  மற்று ஆண்டை விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை – but you will hear the roaring of the lion there and get afraid, அல்லையோ – is it not,

கிளி புரை கிளவியாய் – O one with talk like that of a parrot, எம்மொடு நீ வரின் –  if you come with me, தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி – beautiful body that is like sprouts on which rain has fallen, கவின் வாட – beauty ruined, முளி அரில் பொத்திய – burning under dry bushes, caused by dry bushes, முழங்கு அழல் இடை – between roaring fire,  போழ்ந்த வளி உறின் – hit by the splitting wind, அவ் எழில் வாடுவை – your beauty will fade, அல்லையோ – is it not,

என ஆங்கு அனையவை காதலர் கூறலின் – since your lover said all that (ஆங்கு – அசைநிலை, an expletive), வினை வயின் பிரிகுவர் என – that he was leaving you on business,  பெரிது அழியாதி – do not be distraught, திரிபு உறீஇ – has become ruined (உறீஇ – சொல்லிசை அளபெடை), கடுங்குரை அருமைய காடு எனின் அல்லது – saying he will go through the forest that is difficult to pass (குரை – அசைச்சொல்), கொடுங்குழாய் – O one with curved earrings, துறக்குநர் அல்லர் – he is not one to abandon you, நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே – he wanted to see your trembling as a joke (காண்மார் – காணும்பொருட்டு, குறித்தனரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 14
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
“அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென்தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல்,
மணம் நாறு நறுநுதல் மாரி வீழ் இருங்கூந்தல்,
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல், 5
சில நிரை வால் வளைச் செய்யாயோ!” எனப்
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே;

பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் 10
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ?

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ?

செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ? 15
அதனால்,
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து
அவவுக் கைவிடுதல், அது மனும் பொருளே.

Kalithokai 14
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
You praised her with sweet words, saying, “Your
curved, delicate arms resembling beautiful bamboo
are like pillows that provide sweet sleep, your kohl-lined
eyes are like pretty blue waterlilies placed together, your
perfect teeth are buzzed by bees thinking they are fragrant
mauval buds, your fine forehead is fragrant, your dark
draping hair is like rain clouds, your breasts are big,
your loins are wide, you don few stacks of white bangles,
and your appearance is like Thirumakal.”

Now I understand that you cause her sorrow by leaving her.
You have a naïve outlook that that there is no other wealth
other than material wealth. Did you get confused and forget?
Did you respect the words of strangers who ask you what you
will be doing for those who have no wealth?

Do you not know that wealth not earned by proper means
is an enemy in this birth and the next one? So, respect her as
wealth, abandoning the desire for the wealth that causes you
not to be with her. Being with her is lasting wealth!

Notes: அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 -மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும். கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings: அணை மருள் – like a pillow, like a bed (மருள் – உவம உருபு, a comparison word), இன் துயில் – sweet sleep, அம் பணைத் தட மென்தோள் – curved/large delicate arms like beautiful bamboo, துணை மலர் – flowers together, எழில் நீலத்து – beautiful blue waterlilies, ஏந்து எழில் மலர் – very pretty flowers, உண்கண் – kohl-lined eyes, மண மௌவல் முகை அன்ன – like the fragrant buds of wild jasmine vines, மா – bees, வீழ் – desired, வார் – perfect, நிரை வெண்பல் – rows of white teeth, மணம் நாறு நறுநுதல் – fragrant fine forehead, மாரி வீழ் இருங்கூந்தல் – dark draping hair like clouds, அலர் முலை ஆகத்து – big breasts on the chest, அகன்ற அல்குல் – wide loins, சில நிரை வால் வளை – few rows of white/bright bangles, செய்யாயோ எனப் பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி – praised her in the past with firm words saying that she was Thirumakal, இனிய சொல்லி – spoke sweet words, இன்னாங்கு – in sorrow, பெயர்ப்பது – leaving, இனி அறிந்தேன் – I understand now, அது துனி ஆகுதலே – it causes sorrow,
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் மருளி கொள் மட நோக்கம் – your confusing naive attitude that without material wealth there is no other wealth (யாழ- அசை நிலை, an expletive, மருளி – மருள் மருளி எனப் பகுதிப் பொருள் விகுதியாய் நின்றது), மயக்கப்பட்டு அயர்த்தாயோ – did you get confused and forget,
காதலார் – one who is loved, எவன் செய்ப – what he will do, பொருள் இல்லாதார்க்கு – to those who do not have wealth, என – thus, ஏதிலார் கூறும் சொல் – words uttered by strangers, பொருள் ஆக மதித்தாயோ – did you respect that as a fact,
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு – to those who deviate from proper ways and earn in a unfair manner (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), அப்பொருள் – that wealth, இம்மையும் மறுமையும் பகை ஆவது – it will become an enemy in this birth and in the next one, அறியாயோ – do you not know,
அதனால் – so, எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை – you respect her also as wealth (மதித்தீத்தை – மதி என்னும் முன்னிலை ஏவல் திரிசொல், நம்முள் நாம் கவவுக் கைவிட – causing you and her not to be together, causing you and her to abandon embracing, பெறும் பொருள் திறத்து அவவுக் கைவிடுதல் – abandoning desire for wealth to be obtained, அது மனும் பொருளே – that is lasting wealth (பொருளே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 15
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
அரிமான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறம் காண்டல் அல்லால்,
இணைப் படைத் தானை அரசோடு உறினும்,
கணைத் தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்,
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 5
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடும் சினத்து ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம்,

புரிபு நீ புறம் மாறிப் போக்கு எண்ணிப் புதிது ஈண்டிப் 10
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ,
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந்நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்?

பொய் அற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ, 15
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்?

பின்னிய தொடர் நீவிப் பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ,
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனாத் 20
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்?
என ஆங்கு,
அனையவை போற்ற நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயல் ஆகும், மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த 25
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

Kalithokai 15
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
In the barren path that you plan to take, the
enraged wasteland warriors, with harsh looks and
hanging beards twisted like the antlers of stags with
thick necks, carrying harsh thudi drums, who do not
back off, would be embarrassed of shooting arrows if
they cannot send their enemies running away, even if
they are the king and his army, at the plucking sounds
of their mighty silai tree bows with tightly twisted
strings that sound like the roaring of lions.
They seize things from those who travel and give them
wounds in return.

Can the new wealth that you desire to accumulate,
leaving her,
restore my grieving friend’s beauty like that of pretty,
tender sprouts of asoka trees, that would be ruined by
pallor?

Can the enlightenment that you seek from wise men
with perfect knowledge to perform faultless rituals restore
the beauty of her face, like the moon with sweet rays, that
would go pallid like the moon eclipsed by a serpent?

Can the friends that you acquire in the new lands,
breaking loving ties with her, return the luster in her
kohl-rimmed eyes, fragrant like blue waterlily blossoms,
shedding tears hot, like oil dripping from a wick?

Think about all these!  The wealth that you seek can be
attained here every day.  Can she regain her lovely youth
and beauty, analyzed and prized among her friends with
sprout-like teeth, once it goes away?

Notes: அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.

Meanings:  அரிமான் இடித்தன்ன – like the roars of lions, அம் சிலை – lovely silai tree, Albyzzia stipulate,  வல் வில் – strong bow, புரி நாண் – twisted strings, புடையின் – with sounds from plucking the strings, புறம் காண்டல் அல்லால் – without backing off, without running away for others to see their backs, இணைப் படைத் தானை அரசோடு உறினும் – even if attacked by a king with his matching army, கணைத் தொடை- shoot arrows,  நாணும் – they would be embarrassed, கடும் துடி ஆர்ப்பின் – with the sounds of fierce thudi drums, எருத்து வலிய – strong neck, எறுழ் நோக்கு – harsh looks, இரலை மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – hanging down beards that are like the twisted antlers of stags (மருப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உருத்த – harsh, கடும் சினத்து – with great rage, ஓடா – not running, மறவர் – wasteland warriors, பொருள் கொண்டு – seize their things, புண் செயின் – give them sores, அல்லதை அன்போடு அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் – wasteland with harsh paths with no kindness (அல்லதை – அன்றி அல்லதை என வினைக்குறிப்பு முற்றாய்த் திரிந்தது),

புரிபு – desiring, நீ புறம் மாறிப் போக்கு எண்ணி – you want to go away, புதிது ஈண்டிப் பெருகிய செல்வத்தான் – with the new wealth that you can collect and earn, பெயர்த்தரல் ஒல்வதோ – will she agree to you are leaving, செயலை அம் தளிர் ஏய்க்கும் – resembling the beautiful sprouts of asoka trees, Saraca indica, எழில் – beauty, நலம் – beauty, அந்நலம் – that beauty, பயலையால் உணப்பட்டு – ruined by pallor (பயலை – பசலை என்பதன் போலி, உண உண்ண என்பதன் விகாரம்), பண்டை நீர் ஒழிந்தக்கால் – when prior nature is gone (கால் ஈற்று வினையெச்சம்),

பொய் அற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்து – go to wise men with faultless knowledge, நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – will she agree to you leaving to perform faultless rituals, தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் – beautiful face that resembles the sweet rays of the moon, அம் முகம் பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால் – if that pretty face has spread pallor like the moon that is in the grips of a snake and lost its beauty (கால் ஈற்று வினையெச்சம்),

பின்னிய தொடர் நீவி – removing ties that you have with her, பிறர் நாட்டுப் படர்ந்து – going to other countries, நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – can the stable friendships that you get cause the return of luster, புரி அவிழ் – tightness loosening, opening, நறு நீலம் புரை – resembling fragrant blue waterlilies, உண்கண் – kohl-rimmed eyes, கலுழ்பு ஆனா – cries endlessly, திரி உமிழ் நெய்யே போல் – like oil dropped by the wick, தெண் பனி உறைக்குங்கால் என – when she drops hot tears (உறைக்குங்கால்  – கால் ஈற்று வினையெச்சம்),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), அனையவை போற்ற நினைஇயன – think about all that well – her body, face and eyes (நினைஇ – சொல்லிசை அளபெடை), நாடிக் காண் வளமையோ – the wealth that you seek (வளமையோ – ஓகாரம் இழிவு சிறப்பு), வைகலும் செயல் ஆகும் – can be made here every day, மற்று – but, இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் – among friends with smiling teeth rows that are like sprouts, எடுத்து ஆய்ந்த இளமையும் தருவதோ – is it possible to bring back the analyzed youth of your wife (இளமையும் – உம்மை உயர்வு சிறப்பு, தருவதோ – ஓகாரம் எதிர்மறை), இறந்த பின்னே – after it leaves (பின்னே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 16
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க,
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடுங்கால் நினைப்பது ஒன்று உடையேன் மன்? அதுவும் தான்

தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்பத் துறந்து உள்ளார், 5
துன்னி நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடைக்,
‘கல் மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு’, என
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதுவோ?

புனை இழாய் ஈங்கு நாம் புலம்பு உறப் பொருள் வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடைச், 10
‘சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக’ எனக்
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதுவோ?

ஒளி இழாய் ஈங்கு நாம் துயர் கூரப் பொருள் வயின்
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை,
‘முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக’, என 15
வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதுவோ?
என ஆங்கு,
செய் பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கத் தெருமரல் தேமொழி!
வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் 20
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினை திறத்தே.

Kalithokai 16
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the heroine
My friend! You tell me,
“I have lost sleep and my eyes have pallor.
I am shedding tears with sorrow. My beauty has
been lost. Bangles slip off my wrists. I have a
thought about the man who left not worrying about
my beauty being ruined.

Will it be fitting if I beg the sweet sounding clouds to
come down as heavy rains on the mountain path, for
my lover who left rapidly?

My friend with fine jewels! Will it be fitting to plead
the many-rayed sun to reduce its rage that makes the tree
branches fade, for my lover who has gone to earn wealth
without fearing the dangers on the path?

My friend with gleaming jewels! Will it be fitting to pray
to the wind god to blow cold breezes to cool off the heat
from the burning dry bushes, for my lover who went to
earn wealth?”

Grieve not, my friend of sweet words! You do not have to
pray to the gods for the one who left you for wealth. Not
wanting to see beauty ruined and pallor spread on you,
whose chastity can bring rain to the parched world,
the god of justice is protecting him on his wealth-seeking
trip.

Notes:  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  பாடு இன்றி – without sleep, பசந்த கண் – eyes that acquired pallor, பைதல பனி மல்க – sorrow causes abundant tears, வாடுபு வனப்பு – beauty has been lost, ஓடி வணங்கு இறை வளை ஊர – bangles have slipped down the wrists, ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து – on behalf of the one who left without fear that my victorious beauty will be lost, இனி நாடுங்கால் – when I analyze now (நாடுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நினைப்பது ஒன்று உடையேன் – I have a thought about him, மன் – an expletive, அதுவும் தான் – also,

தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப – here I suffer in pain as my prior beauty is lost, துறந்து – leaving, உள்ளார் – he did not think, துன்னி – near, close (to wealth),  நம் காதலர் – our lover, துறந்து ஏகும் – he abandoned and left, ஆர் இடைக் கல் மிசை- on the path on the mountain, உருப்பு அற – to remove heat, கனை துளி சிதறு என – to scatter abundant raindrops, இன் இசை எழிலியை இரப்பவும் – to plead the sweet sounding clouds, இயைவதுவோ – will it be fitting (ஓகாரம் எதிர்மறை),

புனை இழாய் –  O my friend with fine jewels, ஈங்கு நாம் புலம்பு உற – here as we suffer, பொருள் வெஃகி – desiring wealth, முனை என்னார் காதலர் முன்னிய – on the path that my lover went without fear of enemies, ஆர் இடைச் சினை வாட – causes the branches on the path to become parched, சிறக்கும் நின் சினம் தணிந்தீக என – please reduce your great rage (தணிந்தீக – தணிக என்னும் பொருட்டாய முற்றுவினைத் திரிசொல், வியங்கோள்), கனை கதிர்க் கனலியைக் காமுறல் – pleading lovingly with sun with many rays, இயைவதுவோ – will it be fitting (ஓகாரம் எதிர்மறை),

ஒளி இழாய் – O my friend with bright jewels, ஈங்கு நாம் துயர் கூர – here we are struggling in great pain, பொருள் வயின் – for wealth, அளி ஒரீஇக் காதலர் – lover who has no pity who moved away (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), அகன்று ஏகும் – left rapidly, ஆர் இடை முளி முதல் மூழ்கிய – the fire that surrounded the dry bushes on the path, வெம்மை தீர்ந்து உறுக என – may you end the heat, வளி தரும் செல்வனை வாழ்த்தவும் – praising the god who gives the wind, இயைவதுவோ – will it be fitting (ஓகாரம் எதிர்மறை),

என ஆங்கு செய் பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு – so for the man who went thinking that it was great to earn wealth (ஆங்கு – அசைநிலை, an expletive), இனையன தெய்வத்துத் திறன் நோக்கத் தெருமரல் – do not be distressed thinking about the graces of gods, தேமொழி – O woman of sweet words (விளி, an address, அன்மொழித்தொகை), வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – the chaste woman who can cause rain for the world if it gets parched, நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என – knowing that pallor will spread and spoil your complexion (நிறன் – நிறம் என்பதன் போலி), அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – the god of justice has removed hindrances to protect him on his wealth-seeking effort (அறன் – அறம் என்பதன் போலி, திறத்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 17
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப்
புடை பெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்,
உடையதை எவன் கொல் என்று ஊறு அளந்தவர் வயின்
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு நுதால்!

தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்பத் துறந்து நீ, 5
வல் வினை வயக்குதல் வலித்தி மன், வலிப்பளவை
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது,
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?

ஆற்றல் நோய் அட இவள் அணி வாட, அகன்று நீ,
தோற்றம் சால் தொகு பொருள் முயறி மன்; முயல்வளவை, 10
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக்
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாளும் நிலையுமோ?

வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ,
பகை அறு பய வினை முயறி மன்; முயல்வளவைத்
தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் 15
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?
என ஆங்கு
பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்பப், 20
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே.

Kalithokai 17
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
My friend with a fragrant forehead! Do
not worry and tremble greatly thinking about
what he has on his mind, the one who creates
new weapons, who lies on a bed with greatly
esteemed pillows, sighing when you embrace him
from behind, and worrying about problems!

I said to him,

“If you abandon her and go on your business with
strength to perform valorous duties, she will lose her
beauty and suffer in distress. Won’t her natural
beauty slip away and be lost like the fullness of the
moon with bright rays that is reduced daily?

If you leave her to try and earn famed great wealth,
letting her beauty fade away as she suffers with
incurable affliction, won’t her living days be reduced
by time that comes like death to mature buds that rise
above the leaves in a huge pond?

If you leave her and go on the mountains with strength
to fight with enemies not thinking about her great beauty
being ruined, won’t her youth be lost like a pond, with
cool buds that open into flowers for pretty bees to eat
new pollen, that dries up?”

These words that I thought and uttered to him in a fitting
manner became like medicine given by a physician to an
ailing body to heal it. Making you happy, our lord with
great fame has decided not to leave.

Notesநனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  படை பண்ணிப் புனையவும் – creating fine weapons, பா மாண்ட – greatly esteemed, பல அணை – many pillows, புடை பெயர்ந்து ஒடுங்கவும் – and moving aside and lying with sorrow, புறம் சேர உயிர்ப்பவும் – and breathing hard when embraced from behind, உடையதை எவன் கொல் – what he has in his mind, என்று – thus, ஊறு அளந்தவர் வயின் – for the one who thinks about problems, நடை செல்லாய் – you are distressed, நனி ஏங்கி நடுங்கல் – do not worry and tremble greatly, காண் – look, நறு நுதால் – O one with a bright forehead,

தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப – she will lose her original beauty and suffer in sorrow, துறந்து நீ வல் வினை வயக்குதல் – if you abandon and go on your work to shine in your war duties, வலித்தி மன் – you are strong (வலித்தி – முன்னிலை வினைமுற்று, மன் – அசைநிலை, an expletive), வலிப்பு அளவை – when you undertake (அளவை – அளவு அளவையெனப் பெயர்த் திரிசொல்லாய் நின்றது), நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் – like the moon’s fullness with bright long rays, நிலையாது – it will not last, நாளினும் – daily (இன் அசைநிலை, an expletive), நெகிழ்பு ஓடும் நலன் – her beauty that is slipping away, உடன் நிலையுமோ – will it last (நிலையுமோ – ஓகாரம் எதிர்மறை),

ஆற்றல் நோய் – harsh disease, அட இவள் அணி வாட – her beauty to fade, அகன்று நீ தோற்றம் சால் தொகு பொருள் முயறி மன் – if you leave to try to earn famed great wealth (மன் – அசை நிலை, an expletive), முயல்வு அளவை – to the extent of trying (அளவை – அளவு அளவையெனப் பெயர்த் திரிசொல்லாய் நின்றது), நாற்றம் சால் – great fragrance, நளி பொய்கை – vast pond, dense pond, அடை – leaves, முதிர் முகையிற்கு – to the mature buds, கூற்று ஊழ் போல் – like time that is like Death, குறைபடூஉம் – getting reduced (இன்னிசை அளபெடை), வாழ் நாளும் நிலையுமோ – will living days last (நிலையுமோ – ஓகாரம் எதிர்மறை),

வகை எழில் வனப்பு எஞ்ச – her great beauty to be ruined, வரை போக – go on the mountains, வலித்து – with strength, நீ – you, பகை அறு பய வினை முயறி மன் – if you try to work beneficially against enemies (மன் – அசை நிலை, an expletive), முயல்வு அளவை – to the extent of trying (அளவு அளவையெனப் பெயர்த் திரிசொல்லாய் நின்றது), தகை வண்டு புதிது உண்ணத் தாது – new pollen that pretty bees eat, அவிழ் தண் போதின் முகை வாய்த்த தடம் போலும் – like a pond with cool flower buds that open,  இளமையும் நிலையுமோ – will youth last (உம்மை – உயர்வு சிறப்பு, நிலையுமோ – ஓகாரம் எதிர்மறை),

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல் – the words with meanings that I thought and uttered in a fitting manner there, திருந்திய – perfect, யாக்கையுள் – into the body, மருத்துவன் ஊட்டிய மருந்து போல் – like the medicine that a physician gave, மருந்து ஆகி – became medicine, மனன் உவப்ப – your mind to become happy (மனன் – மனம் என்பதன் போலி), பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – our lord of the pālai land who has great fame has decided not to leave (செலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 18
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்,
பிரிந்து உறை சூழாதி ஐய, விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும்,. நினைத்துக் காண்;

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது, 5
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்,
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்,
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் 10
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிது அரோ
சென்ற இளமை தரற்கு.

Kalithokai 18

Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero, as the voice of the heroine

Lord, do not consider leaving, goaded by your
mind, and thirsting for precious wealth!
Think about the thoyyil designs that you painted
on my arms lovingly, and the pallor spots I got
embracing your mighty chest

Wealth does not lie around for those who go in
search of it. Also, those who do not leave to earn
wealth do not starve.

Will those with youth and love for each other
desire to seek material wealth? Living life is living
with love, embracing each other with one hand and
covering torn clothes with the other hand.
is not possible to bring back youth that would be lost!

Notes:  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் குறுந்தொகை 236 பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 124, நற்றிணை 191, கலித்தொகை 18, குறுந்தொகை 236, ஐங்குறுநூறு 45.  என் தோள் எழுதிய தொய்யிலும் (3) – நச்சினார்க்கினியர் உரை – நீ விரும்பித் தலைவி தோளில் எழுதிய தொய்யில்.  தொல்காப்பியம், பொருளியல் 25 –  தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் அல்லவாயினும் புல்லுவ உளவே.  உ. வே. சாமிநாதையர் உரை, ஐங்குறுநூறு 45 – என் கண் என்றாள் ஒற்றுமைப்பற்றி தோழி தலைவி உறுப்பினைத் தன் உறுப்பென்றல் மரபாதலின்.  ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல். அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  ஒளவை துரைசாமி உரை – தலைவி உறுப்பினைத் தன் உறுப்பாகக் கூறியது, ‘எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்லாவாயினும் புல்லுவ உளவே’ – தொல். பொருள் 221.

Meanings:  அரும் பொருள் வேட்கையின் – with the desire for precious wealth, உள்ளம் துரப்பப் – mind urging, பிரிந்து உறை சூழாதி – do not consider leaving and living, ஐய – sir, விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும் – the thoyyil patterns that you painted on my arms, (the thoyyil patterns that you painted on my arms), யாழ – அசைநிலை, an expletive, நின் மைந்து உடை மார்பில் – your strong chest, சுணங்கும். – pallor spots, நினைத்துக் காண் – think and see the situation, சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது – wealth is not always there for those who go for it, ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் – those who do not go for wealth do not starve, இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ – will those who have both youth and love for each other desire to seek wealth (ஓராங்கு – ஒருசேர, உண்டோ – உம்மை ஐயம்), உள நாள் – days together, ஒரோஒகை தம்முள் தழீஇ – embracing with one hand (ஒரோஒ – இசை நிறை அளபெடை, பிரிவினைப்பொருட்டு வந்தது ஓகாரம், தழீஇ – ஒரோஒ கை – ஒரு கை, பிரிவினைப்பொருட்டு வந்தது ஓகாரம்), ஒரோஒகை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – even if they wear with torn clothes that are held by one hand (ஒரோஒ – பிரிவினைப்பொருட்டு வந்தது ஓகாரம்), ஒன்றினார் வாழ்க்கையே – only the lives of those unite, வாழ்க்கை – is living, அரிது அரோ சென்ற இளமை தரற்கு  – it is difficult to bring back youth (அரோ – அசைநிலை, an expletive)

கலித்தொகை 19
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய,
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்; 5
மகன் அல்லை மன்ற இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அற மாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று, வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின் 10
பகலின் விளங்கு நின் செம்மல் சிதையத்,
தவல் அரு செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.

Kalithokai 19
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to the hero
I did not know then that the perfect sweet words
that you uttered, embracing me gently would all
become lies. Also, sir, I found out that you are
thinking about leaving for the hot wasteland with
the raging sun, causing gossip that even the big town
cannot handle. You are not a fine man, for sure!

Go ahead and leave now! If you want to achieve your
goal through your efforts, do not ask about me, whose
love for you has changed since your abandonment,
to those who come your way.
If you do, your greatness that shines like the sun will be
ruined. The difficult business that you set out to do
will suffer and will not be completed.

Notes: The heroine is indicating that she will die if the hero leaves and her death news will hurt his work.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings: செவ்விய தீவிய சொல்லி – telling perfect sweet words, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று – when he embraced me slowly, அவை எல்லாம் பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ – I did not understand that all that is lies (அறிகோ – அறிகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓகாரம் அசை நிலை, an expletive), மற்று – அசை நிலை, an expletive, ஐய – Sir, அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து – giving gossip that even the big town cannot handle, பகல் – sun, முனி – rage, வெஞ்சுரம் – hot wasteland, உள்ளல் அறிந்தேன் – knew that you are thinking (to leave), மகன் அல்லை மன்ற – you are not a fine man for sure, இனி – now,

செல் – leave, இனி – now, சென்று நீ செய்யும் வினை முற்றி – for your goal to be achieved in your work, அன்பு அற மாறி – love totally changed, யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என் திறம் யாதும் வினவல் – do not ask about me who is thinking of you to those you come your way about how the woman you abandoned is doing, வினவின் – if you ask, பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய – for your greatness that shines like the sun, தவல் அரு செய் வினை – to do difficult to ruin work (தவல் அரு – கெடுத்தற்கு அரிய), முற்றாமல் – not completed, ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு – you will suffer there

கலித்தொகை 20
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்
தணிவு இல் வெம் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங்களிற்று இனம் தாங்கும்
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பகத் 5
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்;

கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ
தளி உறுபு அறியாவே காடு? எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ? 10

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ?

மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் 15
மாண் நிழல் இல ஆண்டை மரம் எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ?

என ஆங்கு,
அணை அரு வெம்மைய காடு எனக் கூறுவீர் 20
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடைப்,
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ அவையே?

Kalithokai 20
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to the hero
The harsh wasteland path is scorching,
the land that yields benefits is parched without
wetness, the moving rays of the hot sun shower
great rage, summer is hot without reduced heat,
distressed huge herds of male elephants that
desire coolness are there, the ground is cracked,
ponds are dry and dusty, and flames sway in the
lovely mountain with sapphire.

You tell me, “O one who utters words like a parrot!
It is not easy for your feet to walk in the forest.
The forest does not know rain drops.”
Living days are unstable like the wind. I live on the
pity of your chest. Will I be ruined by sorrow?

You tell me, “O one with nectar secreting in your teeth!
If you ask me for water, I have to tell you unkindly
that there is no water in the river.” Youth is like the
vanishing river water. I have your heart that is clear
water to me. Will I be ruined here with distress?

You tell me, “O one with arms more beautiful than the
lovely, splendid bamboo! There are no nice shades from
trees there.” I am aware that I will fade like the sprouts
that grow in long shades. Will I think of staying away
from the shade of your feet?

You tell me, “The forest is hot beyond limits!” In the
path with boulders which block arrows that are shot,
have you not seen a thick-necked, handsome stag and
his doe behind him. Do they separate?

Meanings:  பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் – the beneficial land that yields much prosperity (பகர்பு – கொடுத்து, பகர்ந்து), பைது அற – without wetness, செல் கதிர் ஞாயிறு – the moving rays of the sun, செயிர் சினம் சொரிதலின் – since it showered great rage, தணிவு இல் வெம் கோடைக்கு – in this hot summer without reduced heat, தண் நயந்து – desiring cool, அணி கொள்ளும் – comes fitting, பிணி தெறல் – painful heat, உயக்கத்த பெருங்களிற்று இனம் தாங்கும் – nurturing the sad huge bull elephant herds, having the sad huge male elephant herds, மணி – sapphire, திகழ் விறல் மலை – splendid beautiful/victorious mountain, வெம்ப – scorching, மண் பக – the ground is cracked, துணி கயம் துகள் பட்ட – clear ponds have dust, தூங்கு அழல் – swaying flames, வெஞ்சுரம் – harsh wasteland,

கிளி புரை  கிளவியாய் – O one with parrot talk like words (கிளி – ஆகுபெயர்), நின் அடிக்கு எளியவோ – is it easy for your feet, தளி உறுபு அறியாவே காடு எனக் கூறுவீர் – you who tells me that the forest does not know rain drops, வளியினும் வரை நில்லா வாழு நாள் – living days are unstable like the wind, நும் ஆகத்து அளி என உடையேன் யான் – I live on the pity of your chest, அவலம் கொண்டு அழிவலோ – will I ruined by sorrow,

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் – O one with nectar-like secretion from your teeth, நீ உணல் வேட்பின் – if you ask for water, ஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர் – you who tells me that the rivers do not have water (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், அறன் – அறம் என்பதன் போலி), யாறு நீர் கழிந்தன்ன இளமை – youth is running away like the river water, நும் நெஞ்சு என்னும் தேறு நீர் உடையேன் யான் – I have the clear water that is your heart, தெருமந்து ஈங்கு ஒழிவலோ – will I be distressed and ruined here,

மாண் எழில் வேய் வென்ற தோளாய் – O one with arms more beautiful that the lovely pretty bamboo, நீ வரின் – if you come, தாங்கும் மாண் நிழல் இல – there is not protecting fine shade (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), ஆண்டை – there, மரம் – from trees, எனக் கூறுவீர் – you who tells me, நீள் நிழல் தளிர் போல – like the sprouts in long shade, நிறன் ஊழ்த்தல் – color ruined (நிறன் – நிறம் என்பதன் போலி), அறிவேன் – I understand, நும் தாள் நிழல் கைவிட்டு – abandoning the shade of your feet, யான் தவிர்தலைச் சூழ்வலோ – will I think of avoiding you,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), அணை அரு – without limits, வெம்மைய காடு எனக் கூறுவீர் – you who tells me that it is a hot forest, கணை கழிகல்லாத – impossible for arrows to pass, கல் பிறங்கு ஆர் இடை – in the path with boulders,  பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ – did you not see the handsome stag with thick necks and its doe behind it, பிரியுமோ அவையே – do they separate? (அவையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 21
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்
பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே; 5

நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி,
நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே;
அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே!

கிழவர் இன்னோர் என்னாது, பொருள் தான், 10
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயின் பிரிவோய், நின் இன்று
இமைப்பு வரை வாழாள் மடவோள்
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே.

Kalithokai 21
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero

You desire to leave for another country seeking
wealth, uttering words with no grace,
for a path protected by rutting male elephants
separated from their herds, fragrant musth liquid
flowing from their cheeks, their huge feet like
pounding stones and their tusks white like milk!

You uttered good words, caressing her, “O woman
with a fine, fragrant forehead! I will not separate
from you.  Get rid of your!”

What among them are truths? O confused man!
Wealth does not choose somebody thinking that
they have rights. It reaches again and again those
who have done good deeds in their past.  

If you leave her for wealth forgetting her pretty,
bamboo-like shoulders, the naïve woman will not
live even for a blinking moment!

Meanings:  பால் மருள் மருப்பின் – with tusks white like milk (மருள் – உவம உருபு, a comparison word), உரல் புரை பாவடி – huge feet that are like pounding stones (புரை – உவம உருபு, a comparison word), ஈர் நறும் கமழ் கடாஅத்து – with wet fragrant musth (கடாஅத்து – இசை நிறை அளபெடை, அத்து சாரியை), இனம் பிரி ஒருத்தல் – male elephants that have moved away from their herds, ஆறு கடி கொள்ளும் – protects the path, வேறு புலம் படர் பொருள்வயின் – leaving to another country for wealth, பிரிதல் வேண்டும் என்னும் அருள் இல் சொல்லும் – leaving and with words with no grace, நீ சொல்லினையே – you said (ஏகாரம் அசைநிலை, an expletive),

நன்னர் நறுநுதல் – O woman with a fine fragrant forehead (நன்னர் – நல்ல, நறுநுதல் – அன்மொழித்தொகை), நயந்தனை நீவி – you rubbed with love, நின்னின் பிரியலென் – I will not leave you, அஞ்சல் ஓம்பு – remove your sorrow, என்னும் – thus, நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – you uttered good words (நன்னர் – நல்ல, ஏகாரம் அசைநிலை, an expletive), அவற்றுள் யாவோ – what among them, வாயின – are truths,

மாஅல் மகனே – O confused man (மாஅல் – இசைநிறை அளபெடை), கிழவர் இன்னோர் என்னாது – not considering that he is the rightful person, பொருள் தான் பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் அன்ன – wealth reaches again and again those who have done good deeds in the past, பொருள் வயின் பிரிவோய் – you are leaving for wealth (பிரிவோய் – பிரிவாய், முன்னிலை ஏவல் ஒருமை முற்று, ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும் (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 212) என்பதனால் ஓவாய் நின்றது.), நின் இன்று – without you, இமைப்பு வரை – for not even a blinking moment, வாழாள் மடவோள் – the naïve young woman will not live, அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே – forgetting union with her bamboo-like beautiful arms (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 22
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலன் உடை மாந்திர்!

தாய் உயிர் பெய்த பாவை போல, 5
நலன் உடையார் மொழிக் கண் தாவார் தாம் தம் நலம்,
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்குங்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை?

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
செறிமுறை பாராட்டினாய்; மற்று எம் பல்லின் 10
பறிமுறை பாராட்டினையோ ஐய?

நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று எம் கூந்தல்
செய் வினை பாராட்டினையோ ஐய?

குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும் 15
இளமுலை பாராட்டினாய்; மற்று எம் மார்பில்
தளர்முலை பாராட்டினையோ ஐய?
என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ்வரி வாடச்,
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண் 20
படர் கூற நின்றதும் உண்டோ, தொடர் கூறத்
துவ்வாமை வந்தக் கடை?

Kalithokai 22
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero
O intelligent man! When pleading for a loan with
praise words, and later when returning what they,
borrowed their faces appear different. This is not new
today. This is the nature of this world even in ancient
times. The words of the righteous ones are truthful
like an image of a child given life by its mother.

What can others say about your desire for wealth
that is like bees seeking pollen, as you inflict sorrow
on your beloved?

You praised her teeth set when she was young and
they were just fallen and grown. Now they are like
delicate, fragrant mullai buds, and are well set.
Did you praise them now?

You praised her five-part braid, oiled and radiating
brightness like sapphire, done by her mother. Did
you praise her hair on which you have not done
decorations?

You praised her young breasts that were like the
tender buds of lotus blossoms that adorn ponds.
Did you praise the slightly sagging breasts on her
chest now?

Causing her pallor spots that are bright like gold to
fade, you are leaving for the scorching wasteland.
Sir, is there anything I can tell you to stop you from
leaving, as sorrow and anguish follow my friend?

Notes:  அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 -மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும்.  கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  பறிமுறை (11) –  நச்சினார்க்கினியர் உரை – பறிமுறை பாராட்டினாய் செறிமுறை பாராட்டினையோ எனப் பாடத்தை மாறி பொருள் கூறுக.  கூந்தல் செய்வினை (13-14) – நச்சினார்க்கினியர் உரை – அதனிடத்து செய்யுந் தொழில்கள்.  தலைவன் செய்யுந் தொழிலாவன, ஐவகையாக முடியாமல் தான் வேண்டியவாறே கோலங்கள் செய்து முடித்தலும் அக்கூந்தல் அணையிற் துயிலுதல் முதலியனவுமாம்.  தளர்முலை (17) – நச்சினார்க்கினியர் உரை – சிறிது சாய்ந்த முலை.  பறிமுறை – குறுந்தொகை 337 உரை – உ. வே. சாமிநாதையர் உரை – விழுந்து எழுந்தமை முறைமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழுந்தெழும் முறை, பறிதல் – முளைத்தல், தோன்றுதல்.  குறுந்தொகை 337 – செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும் – the face when asking for loan with praise/humble words (கால் ஈற்று வினையெச்சம், முகன் – முகம் என்பதன் போலி), தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆகுதல் – the face being different when returning what they took (கொடுக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம், முகன் – முகம் என்பதன் போலி), பண்டும் இவ் உலகத்து இயற்கை – this is the nature of this world even in ancient times, அஃது இன்றும் புதுவது அன்றே – it is not new today (அன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), புலன் உடை மாந்திர் – O man with intelligence (மாந்திர் – அண்மை விளி),

தாய் உயிர் பெய்த பாவை போல – like a baby given life by a mother, நலன் உடையார் மொழிக் கண் தாவார் –  the good people don’t fail in their words, தாம் தம் நலம் – their beauty, தாது தேர் பறவையின் – like bees that choose pollen (பறவையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அருந்து – eating (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), இறல் – ruining, கொடுக்குங்கால் – when giving (கால் ஈற்று வினையெச்சம்), ஏதிலார் கூறுவது எவனோ – what can others say, நின் பொருள் வேட்கை – your desire for wealth,

நறு முல்லை நேர் முகை ஒப்ப – like the fragrant buds of delicate jasmine flowers, நிரைத்த செறிமுறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் பறிமுறை பாராட்டினையோ – you praised her teeth when they grew (when she was  younger) but did you praise them now that they are in dense rows (மற்று – வினைமாற்று, பாராட்டினையோ – ஓகாரம் எதிர்மறை), ஐய – sir,

நெய் இடை நீவி – applying oil between, மணி ஒளி விட்டன்ன – like sapphires radiating brilliance, ஐவகை பாராட்டினாய் – you praised her five part braid that was done by her mother (ஐவகை – ஆகுபெயர் ஐம்பால் கூந்தலுக்கு, நச்சினார்க்கினியர் உரை – தாயர் ஐந்து வகையாக முடித்த), மற்று எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ – but did you praise it now decorating her hair and sleeping on it (மற்று – வினைமாற்று, பாராட்டினையோ – ஓகாரம் எதிர்மறை), ஐய – sir,

குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும் இளமுலை பாராட்டினாய் – you praised her young breasts that are like the tender lotus buds that decorate the ponds (குளன் – குளம் என்பதன் போலி), மற்று எம் மார்பில் தளர்முலை பாராட்டினையோ – but did you praise her slightly sagging breasts (மற்று – வினைமாற்று, பாராட்டினையோ – ஓகாரம் எதிர்மறை), ஐய – sir,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), அடர் பொன் அவிர் ஏய்க்கும் – like the brightness of gold sheets of the brightness of thick gold, அவ்வரி வாட – pretty pallor spots to fade, சுடர் காய் சுரம் போகும் நும்மை – to you who are going to the wasteland where the sun burns, யாம் எம் கண் படர் கூற நின்றதும் உண்டோ – is there anything that I can tell you about her sorrow, தொடர் – continuous, கூற – stating, துவ்வாமை வந்தக் கடை – when there is anguish that follows her (துவ்வாமை – ஆகுபெயர் தீவினைக்கு, நுகராமைக்கு காரணமாகிய தீவினை)

கலித்தொகை 23
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல்
நகுதக்கன்று இவ் அழுங்கல் ஊர்க்கே; 5
இனி யான்
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்;

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேணீர் உண்ட குடை ஓரன்னர்,

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்,

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்,
என ஆங்கு,
யானும் நின் அகத்து அனையேன்; ஆனாது 15
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.

Kalithokai 23
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to the hero
You are leaving alone on a scorching hot
wasteland path on the blocking mountain where
flowers from tree branches drop when attacked
by the slingshots shot by uproarious field guards
on elephants with shiny, bright tusks.

I, abandoned here, will be ridiculed by this town
that gossips.

I will not eat now! I will not live any more!

Those abandoned after their loved ones showered
their graces and enjoyed their beautiful arms,
are like empty palm frond bowls that are discarded
after drinking water to quench thirst.

Those forsaken after their loved ones enjoyed their
beauty, are like towns deserted by its residents.

Those deserted by their loved ones after uniting with
them, are like flowers tossed away by those who wore
them.

I am not of use to you in this manner.  Protect my heart
that I tried to keep with me, which has come to you, like
a timid deer that was chased and contained by murderous
dogs, only to be seized by the net of hunters!

Notes: குறுந்தொகை 41 – சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென், நற்றிணை – 153 – வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.   யானை தும்பிக்கையுடையது என்பதை ‘கை’ குறிக்கின்றது:  கைம்மா – கலித்தொகை 23-1, கைம்மாவை – பரிபாடல் 11-52, கைமான் – புறநானூற்று 96-8, கைம்மான் – புறநானூறு 320-3, பரிபாடல் 6-33,  கைமதமா – பரிபாடல் 10-49.

Meanings:  இலங்கு ஒளி மருப்பின் கைம்மா – elephants with shiny bright tusks,  உளம்புநர் – those who raise noises  (the field guards), புலம் கடி – protecting the land, கவணையின் – with slings, பூஞ்சினை உதிர்க்கும் – they drop flowers from tree branches, விலங்கு மலை – blocking mountains, வெம்பிய – scorching, போக்கு அரு வெஞ்சுரம் – difficult hot wasteland path, தனியே இறப்ப – going alone, passing it alone, யான் ஒழிந்து இருத்தல் – me abandoned here, நகுதக்கன்று இவ் அழுங்கல் ஊர்க்கே – it is suitable for laughter by this noisy town, இனி யான் உண்ணலும் உண்ணேன் – I will not eat now, வாழலும் வாழேன் – I will not live (உண்ணலும், வாழலும் – எண் உம்மைகள்),

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் – those abandoned after the beauty of their arms are enjoyed, வேணீர் உண்ட குடை ஓரன்னர் – they are like the palm frond bowls that those thirsty drink water from with desire – and throw away,

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் – those whose beauty has been enjoyed with desire by loved ones who used to shower their graces (உணப்பட்டோர் – உண உண்ண என்பதன் விகாரம்), அல்குநர் போகிய ஊர் ஓரன்னர் – they are like towns abandoned by those who live there,

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் – those whose beauty is enjoyed with desire by their lovers in union (குணன் குணம் என்றதன் போலி, ஏகாரம் அசை நிலை, an expletive, உணப்பட்டோர் – உண உண்ண என்பதன் விகாரம்), சூடினர் இட்ட பூ ஓரன்னர் – they are like flowers that are tossed away by those wearing them,

என ஆங்கு யானும் நின் அகத்து அனையேன் – I am not of use to you like this (ஆங்கு – அசைநிலை, an expletive), ஆனாது கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – chased by dogs with endless murderous rage and surrounded by them, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – like a naïve deer caught in the nets of hunters, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – my heart that has come to you (வரூஉம் – இன்னிசை அளபெடை), என் ஆங்கு வாராது – it does not come toward me, ஓம்பினை கொண்மே – you need to accept and protect it (மே – முன்னிலையசை, an expletive of the second person)

கலித்தொகை 24
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தோழியிடம் சொன்னது
நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல்,
இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற; நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்
‘இது ஒன்று உடைத்து’ என எண்ணி, அது தேர 5
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார், “ஆய் கோல்
தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ,
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10
நெடுமலை வெஞ்சுரம் போகி நடு நின்று
செய் பொருள் முற்றும் அளவு?” என்றார்; ஆய் இழாய்!
தாம் இடை கொண்டது அது ஆயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்,
‘தொய்யில் துறந்தார் அவர்’ என தம் வயின் 15
நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு
போயின்று சொல், என் உயிர்.

Kalithokai 24
Pālai Pādiya Perunkadunkō, What the heroine said to her friend
My friend of very sweet words! I heard
and doubted with a trembling heart. The
adage, that what one fears will happen, is true.

Listen to me! He praised me in new ways for
many days. I thought it was for some reason.
It is clear now. When he was sleeping on my arms
in our faultless, fine bed after our union, he in his
dream uttered, “Will the one with pretty, rounded,
stacks of bangles on her wrist become helpless?
Can she protect and take care of matters in our safe
house when I stay away until my quest for wealth is
accomplished in a righteous manner, passing through
hot wasteland paths on the lofty mountains where
elephants with tusks that stab run toward bright
mirages?”

My friend with chosen jewels! If that is what he has
in mind, the man who abandoned me decorated with
thoyyil patterns, and since I do not have the strength
to live without him, tell him that my life went with him.
Let the blame from others stay with him!

Notes:  போயின்று சொல், என் உயிர் (17) – நச்சினார்க்கினியர் உரை – தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் – heard and doubted with a trembling heart, தாம் அஞ்சியது – what I was afraid of, ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – the words that it will become fearful, இன் தீம் கிளவியாய் – O one who utters very sweet words (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), வாய் மன்ற – it will happen for sure, நின் கேள் – you listen, புதுவது பல் நாளும் பாராட்ட – he praised me in many new ways for many days, யானும் இது ஒன்று உடைத்து என எண்ணி – I too thought that it was for a reason, அது தேர – that is clear, மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – when he united with me on our faultless fine bed, பாயல் கொண்டு – lying down, என் தோள் – on my shoulders, கனவுவார் – he who dreamt, ஆய் கோல் தொடி நிரை முன்கையாள் – O one with chosen/beautiful rounded rows of bangles on her wrists, கையாறு கொள்ளாள் – without becoming helpless, கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ – is she capable of protecting and taking care of our protected house, is she strong to protect and take care of our house (கொல்லோ – ஓகாரம் அசை நிலை, an expletive), இடு மருப்பு யானை – elephants with tusks that stab, இலங்கு தேர்க்கு ஓடும் – runs for bright mirages, நெடுமலை வெஞ்சுரம் போகி – to on the hot wasteland path in the tall mountain, நடு நின்று – through fair means, செய் பொருள் முற்றும் அளவு – until accomplishing earning wealth, என்றார் – he said, ஆய் இழாய் – O one with chosen/lovely jewels, தாம் இடை கொண்டது அது ஆயின் –if that is what he has in his mind, தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – since I do not have strength to live without him (இலேம் – தன்மைப் பன்மை, first person plural), தொய்யில் துறந்தார் அவர் என – he abandoned me decorated with thoyyil patterns, தம் வயின் நொய்யார் நுவலும் பழி நிற்ப – as blame from others stays with him, தம்மொடு போயின்று சொல் என் உயிர் – tell him that my life went with him

கலித்தொகை 25
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவனிடம் சொன்னது
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா, 5
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10
குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெஞ்சுரம்
இறத்திரால் ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்!

மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய்ச் சிறிது நீர்
தணக்குங்கால் கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ,
சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி மற்று அவர் 15
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்?

ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து ஒரு நாள் நீர்
நீங்குங்கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ,
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்? 20

ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ,
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்?
என ஆங்கு, 25
யாம் நின் கூறுவது எவன் உண்டு? எம்மினும்
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை! வானம்
துளி மாறு பொழுதின் இவ் உலகம் போலும், நின்
அளி மாறு பொழுதின் இவ் ஆய் இழை கவினே.

Kalithokai 25
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to the hero

Sir! Listen to her situation here, if you are going
on the barren, hot path on the mountain, where,

the path is surrounded with flame and smoke,
male elephants that protect their herds with
trunks as large as the cross bars of fort walls,
are caught in the rapid, roaring flames from dry
bamboo that surrounds them like the wax house
of the five great kings praised by the world on fire,
set by the eldest son of the man whose
name is the bright sun in northern language,
the fierce male elephants with musth escape
together with their herds, stepping through fire
and smoke creating a path, like the wind god
who blew and protected the wax house from fire
saving those inside with their close relatives,

Won’t her eyes that are pretty like fragrant blue
waterlilies when you unite with her, shed tears
when you move away even for a little bit,
like the mean who shower praises when others are
near them, but slander them when they are away?

Does she not have bangles that stay tight on her
wrists when you shower graces, but slip down when
you leave, like those who enjoy the riches of others
when they have wealth, but do not have any pity for
them when they become poor?

Doesn’t her forehead that glows when you shower
graces on her, turn pale when you do not shower
your graces for even a day, like the dishonorable
ones who know secrets of friends while close, who
betray and share them with others while they are away?

What more can I tell you? Lord, you know all this too
well. The beauty of my friend with pretty ornaments
will change if you do not shower your graces, like the
earth which changes when the rains from the sky fail!

Notes:  வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் (1-2) – நச்சினார்க்கினியர் உரை – வடமொழிப் பெயர்பெற்ற வயக்குறுமண்டிலம் போலும் முகத்தவனென்றது, ஆதித்தரிற் பகனென்றும் வடமொழிப் பெயரைப் பெற்ற விளங்குதலுறும் ஆதித்தனைப் போலும் முகத்தை உடையவன் என்பது. அவன் தான் குருடானமையின் பிறரைக் காணாதவாறு போல இவனும் பிறரைக் காணாத முகத்தையுடையவன் என்றவாறு என்றது திருதராட்டிரனை. இனி விளக்கமுற்ற கண்ணாடியின் பெயரை வட சொல்லாகிய பெயரால் பெற்ற முகத்தவன் என்றலுமாம்; அது தர்ப்பணானன என்னும் பெயரை. அது பிறரைத் தான் காணாதவாறு போல இவனும் பிறரைக் காணான் என்பதாம்.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  வயக்குறு மண்டிலம் – bright orb (sun), வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் – the sons of the one who is famed in northern language – Thirutharāttiran who is with a face which is blind like the sun that has no eyes, முதியவன் – eldest son – Thuriyōthanan, புணர்ப்பினால் – due to being together, ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – the five kings who are praised by the world are inside, five Pāndavars (அகத்தரா – அகத்தவாக, ஈறு கெட்டது), கை புனை அரக்கு – hand made wax, இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு – like how rapid fire surrounded the house, களி திகழ் – happy, கடாஅத்த கடும் களிறு அகத்தவா – caught fierce male elephants with musth (இசை நிறை அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – roaring flames in the tall mountains with dry bamboo, ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல – like how the wind god saved the bright wax palace and those who were in it with their close relatives and went, எழு உறழ் – like  the cross bars of fort doors (உறழ் – உவம உருபு, a comparison word), தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம் – beautiful male elephants that protect their herds with large trunks, அழுவம் சூழ் – surrounding the forest, புகை அழல் – smoke and flame, அதர்பட மிதித்து – stepping and creating the path, தம் குழுவொடு புணர்ந்து போம் குன்று – mountain where they join together with their herd, அழல் வெஞ்சுரம் இறத்திரால் – if you want to go through the harsh wasteland with flames (இறத்திரால் – இறத்திர் ஆயில், ஆயில் ஆலென விகாரமாயிற்று), ஐய – sir,  மற்று இவள் நிலைமை கேட்டீமின் – also listen to her situation (கேட்டீமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person),

மணக்குங்கால் – when uniting (மணக்கும்பொழுது, கால் ஈற்று வினையெச்சம்), மலர் அன்ன – like fragrant flowers with stems, தகையவாய் – with beauty, with pride, சிறிது நீர் தணக்குங்கால் – even if you separate a little bit (தணக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ – won’t she not have eyes that will cry without end (கண் எனவும் – உம்மை இழிவு சிறப்பு), சிறப்பு செய்து உழையராப் புகழ்பு ஏத்தி – praising those who give when they are near, மற்று அவர் புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – like the contacts with mean people who blame even those who gave them after they leave (புறக்கொடை – செல்லுதல்),

ஈங்கு – here, நீர் அளிக்குங்கால் – when you offer your graces (அளிக்குங்கால் – அளிக்கும்பொழுது, கால் ஈற்று வினையெச்சம்), இறை சிறந்து – fine on her wrists, ஒரு நாள் – one day, நீர் நீங்குங்கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – doesn’t she have bangles that loosen/slip and run when you leave (நீங்குங்கால் – நீங்கும்பொழுது, கால் ஈற்று வினையெச்சம்), செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு – join those who are rich and enjoy their wealth (வளன் – வளம் என்பதன் போலி), மற்று அவர் ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல் – like the contacts with those who abandon without pity when those people lose suffer in poverty,

ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து – very bright when you offer your graces (அளிக்குங்கால் – அளிக்கும்பொழுது, கால் ஈற்று வினையெச்சம்), ஒரு நாள் நீர் பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – does she not have forehead that becomes pale when you don’t shower your graces (பாராட்டாக்கால் – பாராட்டாதபொழுது), பொருந்திய கேண்மையின் – due to perfect friendship, மறை உணர்ந்து – knowing their secrets, அம் மறை – those secrets, பிரிந்தக்கால் – when they separate, பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – like the contacts with those lowly who reveal (the secrets) to others,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), யாம் நின் கூறுவது எவன் உண்டு – what more is there that I can tell you, எம்மினும் நீ நற்கு அறிந்தனை – you understand all this better than me (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), நெடுந்தகை – O great man, வானம் துளி மாறு பொழுதின் இவ் உலகம் போலும் – like this world when the sky changes and does not rain, நின் அளி மாறு பொழுதின் – when your graces change, இ – this, ஆய் இழை – the woman with pretty jewels, the woman with chosen jewels (அன்மொழித்தொகை), கவினே – beauty (ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 26
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
ஆன் ஏற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்குத், 5
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,
நோதக வந்தன்றால், இளவேனில் மேதக,

பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத்,
தொல் கவின் தொலைந்த என் தட மென்தோள் உள்ளுவார் 10
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்;

திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்,
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கித், தம் 15
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர்;

அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகித்,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்,
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
ஆறு இன்றிப் பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் 20
என நீ,
தெருமரல், வாழி தோழி! நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே. 25

Kalithokai 26
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
You tell me,

“The shore attacked by waves was beautiful with
trees with flowers open like the faultless, five great
gods,
kadampam, resembling Balarāman with a single
earing, bearing clusters of flowers; cherunthi, with
blossoms like the lovely sun; kānji, resembling
Kāman, buzzed by bees; bright gnālal resembling
Sāman, the brother of Kaman; and ilavam that
accepted flowers, lovely like Sivan with a bull flag.

Early summer has come to attack me. Will the one
who has been praised by the world, who lives in another
country protecting those who reached him in sorrow,
think about my curved, delicate arms at this time
when swarms of bees drink new honey?

Will the one whose fame has spread around the world,
who protects those who reach his shadow, shower his
graces on me on Thirumarutham shore where bees
swarm in all directions, knowing that my beauty has
been lost?

Will the one who protects those who come to him for
security without desiring their wealth, residing in a
foreign country, shower his graces on me in this season
when flowing waters are reduced, on seeing my beauty
lost and my pretty forehead changed?”

Do not feel sad, my friend! Your lover was victorious
over his enemies who came to battle with hostility,
with their elephants. He has sent a message that he is
on his way.

Notes:  மராஅமும், செருந்தியும், காஞ்சியும், ஞாழலும் – எண் உம்மைகள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  ஒரு குழை ஒருவன் போல் – like the one with one earring or one with earring without comparison – Balarāman, இணர் சேர்ந்த மராஅமும் – kadampam trees with clusters (of flowers), kadampam oak (மராஅமும் – இசைநிறை அளபெடை), பருதி அம் செல்வன் போல் – like the beautiful sun,  நனை ஊழ்த்த செருந்தியும் – cherunthi with mature/open buds, cherunthi with flowers, Ochna squarrosa, panicled golden blossom tree, மீன் ஏற்றுக் கொடியோன் போல் – like the one with a raised fish flag – Kāman, மிஞிறு ஆர்க்கும் – bees humming, காஞ்சியும் – portia trees, பூவரச மரம், portia Tree, thespesia populnea, ஏனோன் போல் – like the other one – Kāman’s brother Sāman, நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – flourishing gnālal tree with a bright color, புலிநகக்கொன்றை மரம், tigerclaw tree, cassia sophera, ஆன் ஏற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும் – ilavam trees with flowers that are like Sivan with a bull for his raised flag, silk cotton tree, ceiba pentandra (எதிரிய – ஏற்றுக்கொண்ட), ஆங்குத் தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப் போது அவிழ் மரத்தொடு – with trees with buds open like the faultless five great gods, பொரு கரை – shores that are attacked (by waves), கவின் பெற – to attain beauty, நோதக வந்தன்றால் இளவேனில் – early summer has come to hurt (வந்தன்றால் – ஆல் அசைநிலை, an expletive), மேதக – eminent,

பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து – in the season when bee swarms with stripes drink new honey, தொல் கவின் தொலைந்த – lost their prior beauty, என் – my, தட – curved, large, மென்தோள் – delicate arms, delicate shoulders, உள்ளுவார் – will he think, ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு – those who have reached his shade with fear, உலையாது காத்து ஓம்பி – caring for them and protecting them without sorrow, வெல் புகழ் உலகு ஏத்த – his victory fame praised by the world, விருந்து நாட்டு உறைபவர் – the man who lives in a new country,

திசை திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை – the shores of Thirumarutham where bees hum in all directions (தேன் – ஆகுபெயர் வண்டிற்கு, முன்துறை – துறைமுன்), வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் – will he shower his graces knowing that my faultless beauty has been lost, நசை கொண்டு – with desire, தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி – taking care of those who are in his shadow (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), தம் இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – the man whose fame has spread around the world who lives in a strange country,

அறல் சாஅய் பொழுதோடு – when water flow is reduced (சாஅய் – இசை நிறை அளபெடை), எம் அணி நுதல் வேறு ஆகித் திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – will he shower his graces since my beauty has been lost and my pretty forehead has become different, ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – not hurting and caring and protecting those fearing who are in his shadow, ஆறு இன்றிப் பொருள் வெஃகி – without desire for their wealth, அகன்ற நாட்டு உறைபவர்  –  the man who lives in a foreign country,

என – so, நீ தெருமரல் – you do not worry, வாழி தோழி – may you live long O friend, நம் காதலர் – your lover, பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – those who rose up and fought with those who came on elephants with great enmity, செரு மேம்பட்ட – victorious in battles, வென்றியர் வரும் என – that the one who has won will come, வந்தன்று அவர் வாய்மொழித் தூதே – message with words from him has come (தூதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 27
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்தப்,
பேதுறு மட மொழிப் பிணை எழில் மான் நோக்கின்,
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்பக்,
காதலர்ப் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு 5
தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெறப்,
பேதையோன் வினை வாங்கப் பீடு இலா அரசன் நாட்டு
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்,

நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க, 10
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்யப்,
புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல்?

கல் மிசை மயில் ஆலக் கறங்கி, ஊர் அலர் தூற்றத்,
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க,
ஒன்னாதார்க் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற 15
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ளப்,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க,
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல்? 20
என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி!
நாம் இல்லாப் புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என,
ஏமுறு கடுந்திண்தேர் கடவி, 25
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே.

Kalithokai 27
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
My friend! You tell me,
“The sweet shores are teeming with trees like the
wealth of a righteous man who gives without stinting,
fragrant mauval buds have blossomed like the smiles
of women with pretty deer looks who bewilder men,
the cool sands are decorated beautifully with dropped
pollen and sprouts like the hair of women who united
with their lovers, and early summer season has come
causing ruin like the army of a hostile king laying siege
on a country with a ruler with no pride who is misguided
by his advisors.

Perched on trees that enrich the land, cuckoos that
sing happily, ridicule me. Let him forget me, whose bright
beauty he caused to fade! But does he not think about the
pretty women who gave him endless pleasure as their
jewels shined?

On seeing my ruined situation, the peacocks on the
mountains screech and dance, and the town slanders me.
Let him forget me and ruin my natural beauty.
But does he not desire the games played on the mountain
of victorious Murukan who crushed his enemy disguised
in a mango tree form in the huge ocean?

Let him keep me out of his thoughts, he who got me
with his lies, awing me, making me love him,
and causing my flower-like kohl-rimmed eyes to
be happy!
But does he not think about his enjoyment with the
decorated women and their friends on the tall sand
dunes of the Vaiyai river?”

You tell me all this with a distressed heart. Do not
be sad, my friend! Your lover has come back rapidly
in his sturdy chariot that awes enemies, thinking
you will be lonely, you will tremble at this time and
struggle greatly, since this is the season for Kāman
festivities.

Notesநனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.

Meanings:  ஈதலில் குறை காட்டாது – not being stingy when giving, not stinting, without showing inadequacy in giving, அறன் அறிந்து ஒழுகிய தீது இலான் செல்வம் போல் – like the wealth of a faultless man who functions with justice and righteousness (அறன் – அறம் என்பதன் போலி), தீம் கரை மரம் நந்த – the sweet shores teem with trees, பேதுறு மட மொழிப் பிணை எழில் மான் நோக்கின் மாதரார் முறுவல் போல் – like the smile of women with looks of pretty deer whose delicate words bewilder men, மண மௌவல் முகை ஊழ்ப்ப – fragrant mauval buds have blossomed, wild jasmine, காதலர்ப் புணர்ந்தவர் கதுப்பு போல் – like the hair of those who have united with their lovers, கழல்குபு தாதொடும் தளிரொடும் தண் அறல் தகை பெற – cool sand is decorated with dropped pollen and sprouts, பேதையோன் வினை வாங்க – due to a stupid minister’s work, பீடு இலா அரசன் – a king with no pride, நாட்டு ஏதிலான் படை போல – like foreign king’s armies that lay siege, இறுத்தந்தது இளவேனில் – early summer has come and stayed,

நிலம் பூத்த – making the land flourish, மர – trees, மிசை – above, நிமிர்பு – with happiness, with arrogance (மகிழ்ச்சி, இறுமாப்பு), ஆலும் குயில் எள்ள – singing cuckoos tease, நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க – let him forget me causing my bright beauty to be ruined changing color (மறந்தைக்க  – வியங்கோள் திரிசொல்), கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய – pretty women (concubines) with jewels give pleasure causing their jewels to be bright, புலம் பூத்து – with intelligence becoming splendid, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல் – does he think about the endless union with them or does he not think about Koodal/Madurai with endless festivities,

கல் மிசை – on the mountain, மயில் ஆல – peacocks dance, கறங்கி – with uproars, ஊர் அலர் தூற்ற – the town slanders, தொல் நலம் நனி சாய – original/natural beauty to be ruined greatly, நம்மையோ மறந்தைக்க – let him forget me (மறந்தைக்க  – வியங்கோள் திரிசொல்), ஒன்னாதார்க் கடந்து அடூஉம் உரவு நீர் – ruined the enemy in a battle in the mighty ocean and won (அடூஉம் – இன்னிசை அளபெடை), மா கொன்ற – killed Sooran in mango form, வென் வேலான் குன்றின் மேல் – on the mountain of victorious Murukan with a spear, விளையாட்டும் விரும்பார் கொல் – does he does not desire the games,

மை எழில் மலர் உண்கண் – dark kohl-lined eyes that are pretty like flowers, மரு ஊட்டி –  caused for me to be awed, மகிழ் கொள்ள – to be happy, பொய்யினால் – due to his lies, புரிவுண்ட – caused me to desire him, நம்மையோ மறந்தைக்க – let him forget me who he caught with his lies (மறந்தைக்க  – வியங்கோள் திரிசொல்), தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல் – does he not think about his enjoyment with the decorated women playing with friends on the tall sand dunes of Vaiyai river (தைஇய – செய்யுளிசை அளபெடை),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), நோய் மலி நெஞ்சமோடு – and so with a very  sorrowful heart, இனையல் தோழி – do not feel sad my friend (இனையல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), நாம் இல்லாப் புலம்பு ஆயின் – since she is lonely without him, நடுக்கம் செய் பொழுது ஆயின் – since this time causes her to tremble in fear, காமவேள் விழவு ஆயின் – since it is festivities for Kāman, கலங்குவள் பெரிது என – that she will be in distress, ஏமுறு – confusion causing, கடும் திண் தேர் கடவி – he came riding his fast sturdy chariot, நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே – your desirable lover has come back fast to be together with you (விரைந்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 28
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
தோடு உறத் தாழ்ந்து துறை துறை கவின் பெறச்,
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு 5
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான்,

விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின்,
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேதுறூஉம் பொழுது ஆயின்,
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது 10
வருந்த நோய் மிகும் ஆயின், வணங்கு இறை அளி என்னோ?

புதலவை மலர் ஆயின், பொங்கர் இன வண்டு ஆயின்,
அயலதை அலர் ஆயின், அகன்று உள்ளார் அவர் ஆயின்,
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது,
நுதல் ஊரும் பசப்பு ஆயின், நுணங்கு இறை அளி என்னோ? 15

தோயின அறல் ஆயின், சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்,
மாவின தளிர் ஆயின், மறந்து உள்ளார் அவர் ஆயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகும் ஆயின், பைந்தொடி அளி என்னோ?
என ஆங்கு, 20
ஆய் இழாய்! ஆங்கனம் உரையாதி! சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்;
பரிந்து எவன் செய்தி? வருகுவர் விரைந்தே.

Kalithokai 28
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
You tell me,
“Early summer season has arrived. Trees
decorating the shores of the river have
on their low branches lovely blossoms fit for
verses and they appear to tell women wearing
flower garlands, ‘Don’t go to springs to pluck
flowers. We desire to give them to you’.

Red sand on the river banks resemble the head
ornaments on the flowing hair of women.
The Vaiyai flows splitting long stretches of bright,
fine sand, appearing like the pearl strand on the
lovely chest of Thirumakal.

O friend with curved forearms! If flowers have
blossomed, if cuckoos call their mates with songs,
if the one who separated does not think about me,
if I am confused in this season, and if he does not
care about this love distress that hurts me, of what
use is his pity?

O friend with perfect forearms! If bushes are full of
flowers, if swarms of bees buzz on trees in the groves,
if I am attacked by slander from those in town,
if he does not think about me knowing that I have
no strength in my heart to bear separation and pallor
has spread on your forehead, of what use is his pity?

O friend with new bangles! If water is flowing on
fine sand, if bees buzz on tree branches, if sprouts
have appeared on mango trees, if he does not think
about me whose suffering eyes have lost their beauty
like that of flowers, and my love affliction has
increased, of what use is his pity?”

O friend with chosen jewels! Do not utter words
like this. There is no need for us to send a message to
him who is far away. More than you, he is unable to
bear the separation. What is the use of getting
distressed? He will come home in haste!

Notes:  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  பாடல் சால் – fit for verses, fit for fame, சிறப்பின் – with splendor, சினையவும் – in the tree branches, சுனையவும் – in the ponds, நாடினர் – those who seek, கொயல் வேண்டா – they do not have to pluck கொயல் – (கொய்யல் என்பதன் இடைக்குறை விகாரம்), நயந்து தாம் கொடுப்ப போல் – like they give with desire, தோடு அவிழ் – petals opening, கமழ் கண்ணி – fragrant garlands, தையுபு – created, tied, புனைவார் கண் – those who wear them, தோடு உறத் தாழ்ந்து – hanging low with petals touching, துறை துறை கவின் பெற – causing the shores to be beautiful,  செய்யவள் – Thirumakal, அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – pretty chest decorated with pearl strand, தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் – like jewels on hanging hair, துவர் மணல் – red sand, வையை வார் அவிர் அறல் இடை போழும் – the Vaiyai river flows splitting the long stretches of bright, fine sand, பொழுதினான் – at that time,

விரிந்து ஆனா மலர் ஆயின் – if flowers have opened, விளித்து ஆலும் குயில் ஆயின் – if cuckoos call with their songs, பிரிந்து உள்ளார் அவர் ஆயின் – if he who separated does not think about me, பேதுறூஉம் பொழுது ஆயின் – if this season causes me to be confused (பேதுறூஉம் – இன்னிசை அளபெடை),  அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – not considering how she will tolerate this terrible love affliction, வருந்த நோய் மிகும் ஆயின் – if this distress disease will increase, வணங்கு இறை – O one with curved forearms (அன்மொழித்தொகை, விளி, an address), அளி என்னோ – of what use is his pity (ஓகாரம் எதிர்மறை),

புதலவை மலர் ஆயின் –  if flowers bloom on bushes, பொங்கர் இன வண்டு ஆயின் –  if bees swarm in the groves, அயலதை அலர் ஆயின் – if others gossip, if those nearby gossip (அயலதை – ஐ சாரியை), அகன்று உள்ளார் அவர் ஆயின் – if one who left will not think about me,  மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – not considering that she has no support and no strength in her heart, நுதல் ஊரும் பசப்பு ஆயின் – there is pallor spread on my forehead, நுணங்கு இறை – O one with slim forearms, O one with moving forearms (அன்மொழித்தொகை, விளி, an address), அளி என்னோ – of what use is his pity (ஓகாரம் எதிர்மறை),

தோயின அறல் ஆயின் – if water has soaked the sand, if there is water in the fine sand, சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – if bees hum on branches, மாவின தளிர் ஆயின் –  if there are sprouts on the mango trees, மறந்து உள்ளார் அவர் ஆயின் – if he forgets and does not think about me, பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகும் ஆயின் – if the disease has increased and the luster in my painful eyes lose their flower-like beauty, பைந்தொடி – O one with new bangles (அன்மொழித்தொகை, விளி, an address), அளி என்னோ – of what use is his pity (ஓகாரம் எதிர்மறை),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), ஆய் இழாய் ஆங்கனம் உரையாதி – do not utter words like this O friend with pretty/chosen jewels (ஆங்கனம் – முதல் நீண்டது), சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா – there is no need for us to send a message to the man who is far away, நம்மினும் – more than us, தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் – he cannot tolerate the separation and stay away, பரிந்து – getting sad, எவன் செய்தி –  what is the use, வருகுவர் விரைந்தே – he will come fast

கலித்தொகை 29
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
“தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர,
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடுக் கொள, 5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார,
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர,
மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்,

சேயார்கண் சென்ற என் நெஞ்சினைச் சின்மொழி! 10
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென் மன்; நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம்,

போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்
சூழ்பு ஆங்கே சுடர் இழாய்! கரப்பென் மன்; கை நீவி, 15
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந்தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்,

தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென் மன்; வலிப்பவும்,
நெடு நிலாத் திறந்து உண்ண நிரை இதழ் வாய்விட்ட 20
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம்”,
என ஆங்கு,
வருந்தினை வதிந்த நின் வளை நீங்கச் சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது ஏகி, நம்
அருந்துயர் களைஞர் வந்தனர், 25
திருந்து எயிறு இலங்கு நின் தேமொழி படர்ந்தே.

Kalithokai 29
Pālai Pādiya Perunkadunkō, What the herione’s friend said to her
My friend, you tell me,
“Like the renewed loveliness of a woman after
painful delivery who suffered from pregnancy
sickness and lost her beauty, much to the worry of
those concerned,
the vast earth has ended dryness and is yielding many
benefits.

Like the sand dolls of girls wearing bangles, ripples
have formed on the long sandy shore. Water flows
cleaving the sandy ground resembling five-part braids
of young women. The delicate pollen dropped on the
mango tree sprouts by blossoms with pretty petals
resemble the pallor spots of dark women.

In this early summer season, which has given me pain,
my heart went to the one who is far from sight.
My friend of few words! I can control my heart that
went to my lover who lives far away, more than the
bounds of what you suggested, but the cold northern
wind, that blows through various blossomed fragrant
flowers, will come to hurt me with this disease.

My friend with gleaming ornaments! Understanding
the change, I try to hide the pain in my body that
suffers because of the one who went far away.
But evenings torment me when dark colored bees buzz
like yāzh music as they feed on the new honey in the
flowers opened by the rays of the sun.

My friend of faultless words! I desire to hold my precious
life that wants to go to the one who moved away causing
my tight bangles to slip down. But the fragrance of
flowers, with rows of petals that brings swarms of bees to
eat at night when the huge moon spreads its light, harass
me.”

You are sad about all this and about the one who caused
your tight bangles to slip, giving you anguish. However,
the one who left without consideration to a far away land
to earn wealth, is coming back, thinking about your honey
sweet words and perfect, bright teeth!

Notes:  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – since her original beauty was lost beyond limits because she was suffering from pregnancy sickness (வயா என்பது வயவு ஆயிற்று), அல்லாந்தார் அலவுற – those who were concerned were worried, ஈன்றவள் கிடக்கை போல் – like the place of a woman who gave birth, பல் பயம் உதவிய – helped with many benefits, பசுமை – verdant, தீர் – end, அகல் ஞாலம் – wide world, புல்லிய புனிறு ஒரீஇ – painful birth process going away (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), புது நலம் – new beauty, ஏர்தர – to become beautiful, வளையவர் வண்டல் போல் – like the sand houses/dolls of girls with bangles, வார் மணல் வடுக் கொள – ripples have formed on the long sandy stretches, இளையவர் ஐம்பால் போல் – like the five part braid of young women, எக்கர் போழ்ந்து அறல் வார – water flows splitting the sand, மா ஈன்ற தளிர் மிசை – on the sprouts of the mango trees, மாயவள் திதலை போல் – like the pallor spots of a dark woman, ஆய் இதழ்ப் பல் மலர் – many flowers with pretty petals, ஐய கொங்கு உறைத்தர – delicate pollen drops (ஐய – ஐ என்னும் உரிச்சொல் ஐய எனப் பெயரெச்சக் குறிப்பாய் நின்றது), மேதக – eminent, இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – when early summer came and stayed,

சேயார்கண் சென்ற என் நெஞ்சினை – my heart which went to the man who is far from sight, சின்மொழி – O one of few words (அன்மொழித்தொகை, விளி, an address), நீ கூறும் வரைத்து அன்றி – beyond the limits of what you say, நிறுப்பென் – I can control,  மன் – அசை நிலை, நிறை நீவி – touching fully, வாய் விரிபு – opened, blossomed, பனி ஏற்ற – accepted the cold, விரவுப் பல் மலர் தீண்டி – touching many kinds of flowers, நோய் சேர்ந்த – giving affliction, வைகலான் – at this time, வாடை வந்து அலைத்தரூஉம் – the cold northern wind will come and distress me (அலைத்தரூஉம் – இன்னிசை அளபெடை),

போழ்து உள்ளார் துறந்தார்கண் – when the man who left me does not think, புரி – desire, வாடும் கொள்கையைச் சூழ்பு – analyzing the principle of my fading body, ஆங்கே – there, சுடர் இழாய் – O one with bright jewels, கரப்பென் – I will hide, மன் – அசை நிலை, கை நீவி வீழ் கதிர் விடுத்த பூ – flowers put out by the sun’s rays that come down and touch, விருந்து உண்ணும் இருந்தும்பி – black bees that eat new pollen and drink honey, யாழ் கொண்ட இமிழ் இசை இயல் – sweet music like that of the yāzh, மாலை அலைத்தரூஉம் – evening causes distress (அலைத்தரூஉம் – இன்னிசை அளபெடை),

தொடி நிலை நெகிழ்த்தார்கண் – because of the one who caused my bangles to become loose, தோயும் என் ஆர் உயிர் – my precious life gets ruined, வடு நீங்கு கிளவியாய் – O friend with faultless words, வலிப்பென் – I want to control it, மன் – அசைநிலை, an expletive, வலிப்பவும் – even when strong, நெடு நிலா – when the huge moon light appears, திறந்து உண்ண – for bees to open and eat, நிரை இதழ் வாய்விட்ட  கடி மலர் கமழ் நாற்றம் – the fragrance of aromatic flowers that have opened their rows of petals, கங்குல் வந்து அலைத்தரூஉம் – that it will come at night and bother (அலைத்தரூஉம் – இன்னிசை அளபெடை),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), வருந்தினை வதிந்த நின் வளை நீங்க – giving sorrow and causing your fitting bangles to slip (வருந்தினை – முற்றெச்சம்), சேய்  நாட்டுப் பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது ஏகி நம் அரும் துயர் களைஞர் வந்தனர் – the one who went to a distant country to earn wealth without consideration has come back to remove your sorrow, திருந்து எயிறு  இலங்கு நின் தேமொழி படர்ந்தே – he has come thinking about your sweet words from your bright, perfect teeth

கலித்தொகை 30
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, பாணன் தலைவனிடம் சொன்னது
“அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடிப்,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எவ்வாயும்,
இருந்தும்பி இறைகொள எதிரிய வேனிலான்,

துயில் இன்றி யாம் நீந்தத் தொழுவை அம் புனல் ஆடி, 5
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான் மன்னோ,
வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது எனக் கூறுநர் உளர் ஆயின்,

பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென்தோள்
மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ, 10
ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லைத்
தேன் ஆர்க்கும் பொழுது எனத் தெளிக்குநர் உளர் ஆயின்,

உறலி யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ,
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து 15
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின்”,
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகைபெற,
அணி கிளர் நெடுந்திண் தேர் அயர்மதி, பணிபு நின்
காமர் கழல் அடி சேரா, 20
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே.

Kalithokai 30
Pālai Pādiya Perunkadunkō, What the bard said to the hero
She tells me,
“Like the bliss of those who do rare penances,
bees eat all the pollen they desire from the beautiful
flowers on all the tree branches and dance and sing
along with dark thumpi bees, ending their sorrow in
this summer time.

I am suffering without sleep. He will forget me and
play in lovely waters in the pond with women of
peacock nature, enjoying them. There is nobody
to go and tell him that this is the season when cuckoos
sing in groves filled with open blossoms!

I am struggling in the middle of the night without sleep.
He will forget me and stay with women with deer-like
looks and bamboo-like, pretty delicate arms. There is
nobody to go and tell him that this is the season when
Koodal is teeming with fragrant mullai blossoms with
honey, frequented by bees!

I have lost my brightness. The esteemed man will play
with women wearing beautiful jewels in festivals. There
is nobody to go and explain to him that this is the
rare-to-obtain precious time when Vaiyai waters flow,
causing ripples around clusters of bright islets!”

For the woman who suffers endlessly to get back her
fine beauty, ride your lovely, tall, sturdy chariot and
reach her. She trembles like your enemies who fear
you and submit to your warrior anklets.

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் – like the bliss of those who did rare penances, அணி கொள விரிந்து – opened beautifully, ஆனா – endlessly, சினை தொறூஉம் – in all the tree branches (தொறூஉம் – இன்னிசை அளபெடை), வேண்டும் தாது அமர்ந்து ஆடிப் புரிந்து ஆர்க்கும் வண்டொடு – with bees that eat the pollen they desire and dance and sing, புலம்பு தீர்ந்து – ending sorrow, எவ்வாயும் – everywhere, இருந்தும்பி இறைகொள – for dark thumpi bees to stay, எதிரிய – accepted, வேனிலான் – in summer,

துயில் இன்றி யாம் நீந்த – as I suffer without sleep, தொழுவை அம் புனல் ஆடி – plays in the lovely water in the pond, மயில் இயலார் – women of peacock nature, மரு உண்டு – enjoy their fragrances, மறந்து அமைகுவான் – he will forget me and stay with them, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, வெயில் ஒளி அறியாத – not knowing sunlight, விரி மலர்த் தண் காவில் – in the cool grove with open flowers, குயில் ஆலும் பொழுது – when cuckoos sing, எனக் கூறுநர் உளர் ஆயின் – if there is someone who will go and tell,

பானாள் யாம் படர் கூர – as I suffer greatly in the middle of the night, பணை எழில் – bamboo like beauty, அணை மென்தோள் – embracing delicate arms, மான் நோக்கினவரொடு – with those with deer looks, மறந்து அமைகுவான் – he will forget me and stay, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, ஆனாச் சீர் கூடலுள் – in Koodal with endless prosperity, அரும்பு அவிழ் நறு முல்லைத் தேன் ஆர்க்கும் பொழுது என – that is the season for bees to drink from fragrant mullai flowers, jasmine flowers, தெளிக்குநர் உளர் ஆயின் – if there is somebody who can tell clearly,

உறலி யாம் ஒளி வாட – me, the relative (one close) to lose my brightness, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் – the esteemed man will play with women with beautiful jewels in the festival, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, பெறல் அரும் பொழுதோடு – with this precious time that is rare, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து – surrounding the clusters of splendid islands, அறல் வாரும் வையை – water flows in Vaiyai causing ripples, என்று அறையுநர் உளர் ஆயின் – if there are those who announce,

என ஆங்கு தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் – for the fine woman who suffers endlessly with disease (ஆங்கு – அசைநிலை, an expletive), தகை பெற – to attain her beauty, அணி கிளர் நெடுந்திண் தேர் அயர்மதி – you ride your pretty tall sturdy chariot (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பணிபு நின் காமர் கழல் அடி சேரா நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – she trembles like your fearing enemies who fear greatly your feet wearing beautiful warrior anklets and submit to them (நாமம் – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது, தெவ்வரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 31
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
கடும்புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,
நெடுங்கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம்மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உகப்,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக் காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 5
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்;
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது மன்,
பொய்யேம் என்று ஆய் இழாய்! புணர்ந்தவர் உரைத்ததை,

மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர்,
தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ, 10
பயங்கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென வந்த, இவ் அசை வாடை?

தாள் வலம்பட வென்று தகை நல்மா மேல் கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ,
நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, 15
தோள் அதிர்பு அகம் சேரத் துவற்றும், இச் சில் மழை?

பகை வென்று திறை கொண்ட பாய் திண்தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ,
புகை எனப் புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா
முகை வெண்பல் நுதி பொர, முற்றிய கடும் பனி? 20
என ஆங்கு,
வாளாதி வயங்கு இழாய்! வருந்துவள் இவள் என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி
மீளி வேல் தானையர் புகுதந்தார்,
நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே. 25

Kalithokai 31
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
My friend, you tell me,
“Water flows with rage through the canals.
Muddiness has cleared, and the land has attained
beauty. Near the long ponds, decorating the fine
sand ripples, eengai flowers have wilted and dropped.
Peerkai flowers are ruined like the foreheads of
those separated from their lovers.
The pond has put out new blossoms that resemble
the faces of those who have united with their lovers.

My friend wearing pretty jewels! The chill northern
winds that make bodies bend and the season for
helplessness and distress have arrived.
It is the time that my lover promised to return without
fail.

My friend donning bright jewels! Will this northern
wind that has arrived with chillness along with the
beneficial, cool rays of the moon that are like milk, let me
see my lover ride on a splendid elephant after killing his
enemy king in a confusing battle and seizing his land?

Will I be able to enjoy the beauty of the one who will
come riding on a fine horse after winning battles with
his bravery and sword?

Flowers growing on tall sugarcane have faded. The
sprinkling cold rain causes my shoulders to shiver and
for me to go home.

Will I be able to enjoy the beauty of the one who will
come on his fast chariot, after winning tributes from his
enemies? Will I live in this cold season when fog
surrounds bushes like smoke, and tips of teeth that
are like buds of flowers that do not hide honey, clatter?”

My friend with gleaming jewels! Do not utter useless
words. He thought about your worries and was counting
the days to return, not letting his promises become lies.
He has arrived with his warriors, like Kootruvan, causing tall
victory flags to be hoisted in Koodal with tall mansions.

Notes:  அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 -மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும். கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும். மீளி வேல் தானையர் (24) – நச்சினார்க்கினியர் உரை – கூற்றுவனை ஒத்த வேற்படையை உடையவர்.  மந்தி கூர (நெடுநல்வாடை 9) – நச்சினார்க்கினியர் உரை – குரங்கு குளிர்ச்சி மிக.  குரங்கு குன்னாக்க (குனிய) என்பாரும் உளர்.

Meanings:  கடும் புனல் கால் பட்டு – through the  canals from the flooding waters, கலுழ் தேறி – muddiness cleared, கவின் பெற – attained beauty, நெடுங்கயத்து அயல் அயல் – near the long ponds, அயிர் தோன்ற – fine sand appearing, அம்மணல் வடுத்து ஊர – spread exhibiting on the beautiful sand ripples, வரிப்ப போல் – like causing patterns, like decorating, ஈங்கை வாடு உதிர்பு உக – eengai flowers have wilted and dropped, Mimosa Pudica, பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய – peerkai flowers are ruined like the foreheads of those who are separated, ridge gourd, Luffa acutangula, காதலர்ப் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன – the pond has put out new flowers that are like the faces of those who united with lovers,

மெய் கூர்ந்த பனியொடு – with chillness that bends bodies, with abundant chillness, மேல் நின்ற வாடையால் – due to the cold northern winds, கையாறு – helpless, கடைக்கூட்ட – attaining, reaching, கலக்குறூஉம் பொழுது – at this confusing time (கலக்குறூஉம் – இன்னிசை அளபெடை), மன் – அசைநிலை, an expletive, பொய்யேம் என்று – ‘I will not fail to return on time’ he said, ஆய் இழாய் – O one with pretty jewels, O one with chosen jewels, புணர்ந்தவர் உரைத்ததை – what the one who united with me said (உரைத்ததை – உரைத்தது, ஐகாரம் சாரியை),

மயங்கு அமர் மாறு அட்டு – killing the enemy king in a confusing battle, மண் வௌவி வருபவர் – the man who seized land and returned, தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ – will I be able to see him come splendidly on a moving bull elephant, will I be able to see him come beautifully on a splendid male elephant, பயம் கெழு பல் கதிர் பால் போலும் – like the many beneficial rays of the moon that are like the moon, பொழுதொடு – at the time, வயங்கு இழை – one with bright jewels, தண்ணென வந்த இவ் அசை வாடை – this northern wind that came with cold weather,

தாள் வலம்பட வென்று – won with strong effort and bravery, தகை நல் மா மேல் கொண்டு – riding beautifully on a fine horse, வாள் வென்று வருபவர் – the man who comes after winning with his sword, வனப்பு ஆர விடுவதோ – will I be able to enjoy that beauty, நீள் கழை நிவந்த – above on long stalks/sugarcanes, பூ நிறம் வாட – flower colors to fade, தூற்றுபு தோள் அதிர்பு அகம் சேர – falling rain causes my shoulders to tremble and me to go home, துவற்றும் இச் சில் மழை – this rain sprinkles that fall, பகை வென்று திறை கொண்ட – taking tributes from enemies after winning, பாய் திண் தேர் மிசையவர் – the one on a sturdy chariot with leaping horses, வகை கொண்ட செம்மல் – has greatness, நாம் வனப்பு ஆர விடுவதோ – will I be able to enjoy that beauty, புகை எனப் புதல் சூழ்ந்து – fog surrounding bushes like smoke (புகை – கடும்பனிக்கு உவமை), பூ அம் கள் பொதி செய்யா – pretty flowers that do not hide their nectar/honey, முகை வெண்பல் நுதி பொர – bud-like white teeth tips chattering, முற்றிய கடும் பனி – intense harsh cold,

என ஆங்கு வாளாதி – do not utter useless words (ஆங்கு – அசைநிலை, an expletive, வாளாதி – முன்னிலை வினைமுற்று), வயங்கு இழாய் – O one with bright jewels, வருந்துவள் இவள் என – that she will be sad, நாள் – days, வரை – limit, நிறுத்து – considering in his heart (நச்சினார்க்கினியர் உரை – நெஞ்சிலே நிறுத்தி), தாம் சொல்லிய பொய் அன்றி – not letting his words become lies, மீளி – god of Death, Kootruvan, வேல் தானையர் –  warriors with lances, புகுதந்தார் – he has entered, நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே – to cause tall flags in Koodal with tall mansions to be hoisted (எழவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 32
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி இளவேனிலிடமும் தலைவியிடம் சொன்னது
எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்,
மை அற விளங்கிய துவர் மணல் அது; அது
ஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொளத், 5
துணி நீரால் தூ மதி நாளால் அணிபெற,
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், 10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்,
நயந்தார்க்கோ நல்லை மன் இளவேனில்! எம் போல,

பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
இன் உயிர் செய்யும் மருந்து ஆகப் பின்னிய 15
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்,
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு, அயர்ந்தீகம் விருந்தே.

Kalithokai 32
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to early summer and to the heroine
The spotless, bright, parched sand appears like
a beautiful five-part braid created with hair as dark
as rain clouds, trimmed with scissors. On the fine
sand, the fully blossomed, fragrant vēngai flowers
have dropped appearing like gold strands placed
amidst pretty ornaments decorating the gleaming,
long five-part braid.

Early summer is here with clear water. Days attain
beauty from the pure moon. Wet sprouts look
like the pallor spots of a woman who has given birth.
Tree branches that have not flowered yet are like the
wise who keep information without revealing. Bees
hum on bushes like yāzh music of expert musicians.
Pretty tree branches are like dancers. Trees with
clusters of blossoms are like charitable people, and
tangled vines are like the embraces of lovers.

O summer! You are good to those in passion united
in love.

My friend!  Summer treats affliction that causes pain
to lovers as its enemy, and reduces it.  It has come to
deliver the message from your lover, ‘I will come as
medicine to her to save her sweet life.  May she decorate
her hair with abundant fragrant mullai buds, that grow
near the shores of streams, resembling teeth of women!’

Do not be angry! Use sweet words and welcome early
summer time with celebrations!

Notes:  கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.

Meanings:  எஃகு இடை தொட்ட – cut by scissors (எஃகு – ஆகுபெயர்), கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் – like the cloud-like (dark) five-part braid that is beautiful, மை அற விளங்கிய துவர் மணல் – dry sand which is bright and spotless, அது அது ஐது ஆக – it is delicate, நெறித்தன்ன – like tight, it is wavy, அறல் – fine sand, அவிர் நீள் ஐம்பால் – bright and long five part braid, அணி நகை – beautiful jewel, இடையிட்ட – placed between, ஈகை அம் கண்ணி போல் – like a beautiful gold strand (ஈகை – பொன், gold), பிணி நெகிழ் – ties loosened, அலர் வேங்கை விரிந்த பூ – open kino blossoms, pterocarpus marsupium, வெறி கொள – with fragrance, துணி நீரால் – with clear water, தூ மதி நாளால் அணிபெற – attained beauty due to the day with pure moon, ஈன்றவள் திதலை போல் – like the pallor spots of a woman who gave birth, ஈர் பெய்யும் தளிரொடும் – with sprouts on which dew fell, ஆன்றவர் அடக்கம் போல் – like how the wise keep it to themselves without revealing, அலர்ச் செல்லாச் சினையொடும் – with branches that do not flower, வல்லவர் யாழ் போல – like the yāzh of able musicians, வண்டு ஆர்க்கும் புதலொடும் – with bushes on which bees swarm, நல்லவர் நுடக்கம் போல் – like the dances by women, நயம் வந்த கொம்பொடும் – with desirable branches, உணர்ந்தவர் ஈகை போல் – like the charity by those who are wise, இணர் ஊழ்த்த மரத்தொடும் – with trees that put out clusters of flowers, புணர்ந்தவர் முயக்கம் போல் – like the embraces of those who united, புரிவுற்ற கொடியொடும் – with vines that are tangled, நயந்தார்க்கோ நல்லை-  you are good to those who are in love, மன் – அசை நிலை, an expletive, இளவேனில் – early summer, எம் போல – like me,

பசந்தவர் – those who suffer with pallor, பைதல் நோய் பகை எனத் தணித்து – reducing love affliction as an enemy, நம் இன் உயிர் செய்யும் மருந்து ஆக – become as medicine, பின்னிய காதலர் – embracing lover, எயிறு ஏய்க்கும் – like teeth, தண் அருவி நறு முல்லைப் போது – fragrant mullai buds that grow in cool waters, ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் – for her to pluck abundantly and decorate her fragrant hair with them (கொள்ளும் – உம் ஈறு பன்மை உணர்த்தி முன்னிலையாய் நின்றது), தூது வந்தன்றே தோழி – a message has come my friend (வந்தன்றே – ஏகாரம் அசை நிலை, an expletive), துயர் அறு கிளவியோடு – with words without sorrow, with happy words, அயர்ந்தீகம் விருந்தே – let us prepare for celebrations (அயர்ந்தீகம் – வினைத் திரிசொல், விருந்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 33
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
“வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப்,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத்,
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 5
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேயக் ,
காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது ,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார் நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்!

எரி உரு உறழ இலவம் மலரப், 10
பொரி உரு உறழப் புன்கு பூ உதிரப்,
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்பத்,
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது, என் அணி நலம்
போர்ப்பது போலும் பசப்பு , 15

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உகுவது போலும் என் நெஞ்சு; எள்ளித்
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில்; கையில்
உகுவன போலும் வளை; என் கண் போல்
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; 20
மிகுவது போலும் இந்நோய்;

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊதத்
தூது அவர் விடுதரார் துறப்பார் கொல்? நோதக
இருங்குயில் ஆலும் அரோ” 25
என ஆங்கு,
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும் புலவாதி,
நீல் இதழ் உண்கண்ணாய்! நெறி கூந்தல் பிணி விட,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்ற
மாலை தாழ் வியன் மார்பர் துனை தந்தார், 30
கால் உறழ் கடுந்திண்தேர் கடவினர் விரைந்தே.

Kalithokai 33
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
My friend, you tell me,
“It appears like the river has opened its eyes to
see the beauty of the eminent land. It has filled
up ponds making them pretty. Murukkam
flowers have dropped their petals on lovely, clear
ponds decorating them, making them look like coral
thrown into sapphire-like glass containers. Looking
at their images in a pond, bees buzz and create uproar.
Trees that had put out sapphire-hued buds are now
decorated with flowers loaded with pollen.
Those who unite are in the embraces of their lovers.

Summer has come, but he has not come, the man who
went causing my flower-like, kohl-lined eyes to shed
tears.

Summer has come for ilavam tree blossoms to glow
like flame, punku tree blossoms that resemble puffed
rice to drop, and new kōngam flowers to put out pollen
resembling gold dust, as though it has come to tease
those who are alone with uproar causing hatred. Pallor
spreads on me as if to cover my beauty.

Tree branches are teeming with flowers to hurt my heart
and harass me. Peacocks dance as though they despise
me. My bangles loosen like they are slipping down.
He is not back at this time when water trickles like my
tear drops. It appears that this affliction keeps increasing.

Like flute music that keeps in rhythm with that of yāzh
strings, bees buzz along with thumpis. He has not sent
me a message. Will he abandon me?”

O friend with kohl-lined eyes that are pretty like the
blue waterlilies! Differing in mind, do not talk ill of him
and the singing cuckoos that appear to tease. The one with
a broad chest decorated with a garland is hastening home in
his sturdy chariot as fast as the wind, so that your braids can
be loosened. He has kept up his promise, and is returning
on the agreed time.

Notes:  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  வீறு சால் ஞாலத்து – in the eminent world, வியல் அணி – great beauty, காணிய யாறு – the river to see, கண் விழித்த போல் – like it opened its eyes, கயம் – ponds, நந்திக் கவின் பெற – to attain full beauty, மணி புரை வயங்கல் உள் – in glass that is like sapphire, in glass that is like marble, துப்பு எறிந்தவை போல – like coral thrown, பிணி விடு முருக்கு – murukkam flowers that loosened their ties from buds and blossomed, coral tree flowers, கவிர், erithyrina indica, முண்முருக்கு, indian coral tree, இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – petals dropped into the pretty ponds, துணி கய நிழல் நோக்கி – looking at the images in a clear pond, துதைபு – close together, உடன் வண்டு ஆர்ப்ப – all the bees create uproars and buzz, மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் – all the trees that have put out gem like buds, மலர் வேய – decorated with flowers, காதலர்ப் புணர்ந்தவர் – those united with their lovers, கவவு கை நெகிழாது – not loosening their embracing hands, தாது – pollen, அவிழ் – opening, வேனிலோ வந்தன்று வாரார் – summer has come but he has not come (வேனிலோ – ஓகாரம் பிரிநிலை, exclusion), நம் – my, போது எழில் – flower-like pretty, உண்கண் – kohl-rimmed, புலம்ப – to struggle, நீத்தவர் – the man who left,

எரி உரு உறழ இலவம் மலர – ilavam flowers that resemble flame, பொரி உரு உறழப் புன்கு பூ உதிர – punku flowers that are like puffed rice drop, புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப – new kōngam flowers have put out pollen that looks like gold, a gum producing tree, Cochlospermum gossypium, தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து ஆர்ப்பது போலும் – like coming to those who are alone and harassing them with uproar causing hatred, பொழுது  – season, என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு – pallor spreads like covering my beauty,

நொந்து நகுவன போல் – like hurting and laughing, நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும் – tree branches are full (of flowers) as though they are laughing at me and they are causing me ruining sorrow, என் நெஞ்சு எள்ளித் தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் – like peacocks dancing together and harassing my heart,  கையில் உகுவன போலும் வளை – bangles loosen like they are slipping  down my arms, என் கண் போல் – like my eyes,  இகுபு அறல் வாரும் – very little water flows, water trickles, பருவத்தும் – even in the season, வாரார் – he does not come, மிகுவது போலும் இந்நோய் – it appears that this disease increases,

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் – like flute music that keeps in rhythm the music of yāzh by stopping (நரம்பு – ஆகுபெயர் யாழிற்கு), இரங்கு இசை மிஞிறொடு – with bees that hum, தும்பி தாது ஊத – thumpi bees buzz on pollen, தூது அவர் விடுதரார் – he has not sent a message, துறப்பார் கொல் –  will he abandon me, will be stay away from me (கொல் – ஐயப்பொருட்டு, implying doubt), நோதக – hurting, இருங்குயில் ஆலும் – black cuckoos sing, அரோ – அசை நிலை, an expletive,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), புரிந்து – differing, நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – don’t talk ill of the cuckoos that tease and him, நீல் இதழ் உண்கண்ணாய் – O friend with kohl-lined eyes that are pretty like blue waterlilies (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), நெறி கூந்தல் – curly hair, properly braided hair, பிணி விட – to loosen, நாள் – day, வரை – limit, நிறுத்து – considering in his heart (நச்சினார்க்கினியர் உரை – நெஞ்சிலே நிறுத்தி), தாம் சொல்லிய பொய் அன்ற – that he did not lie, மாலை தாழ் வியன் மார்பர் – the man with a garland hanging on his wide chest, துனை தந்தார் – he is coming back fast, கால் உறழ் – like the wind (உறழ் – உவம உருபு, a comparison word), கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – he came fast on his fast sturdy chariot (விரைந்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 34
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தோழி தலைவியிடம் சொன்னது
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல், 5
பல் மலர் சினை உகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்,

விரி காஞ்சித் தாது ஆடி இருங்குயில் விளிப்பவும்.
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென் மன்; மறைப்பவும்
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, 10
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின், எவன் செய்கோ?

பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள,
நிறை தளராதவர் தீமை மறைப்பென் மன்; மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின், எவன் செய்கோ? 15

தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென் மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின், எவன் செய்கோ?
என ஆங்கு, 20
நின் உள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா! நாம்
எண்ணிய நாள் வரை இறவாது காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்,
கண் உறு பூசல் கை களைந்தாங்கே.

Kalithokai 34
Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s friend said to her
My friend, you tell me,
“The river flows through many canals
protecting the wide world and making lives on
earth happy. After the heavy flow ended, some
water flows through the sandy bed making the
wide river beautiful. Like the honorable people
who help in return those who helped them, who
have fallen on hard times, the trees drop many
flowers from their branches. Bees buzz and hum
in this sweet, desirable early summer season that
has brought me sorrow.

Black cuckoos sing and prick pollen of open kānji
blossoms. I try to hide the unkindness of the one not
afraid of separation. Even when I try to hide it, passion
for him scorches my heart like a tree that burns and
withers after sheltering a false witness. What can I do?

Tree branches droop, loaded with flowers and swarming
bees. I try to hide the unkindness of the one firm in his
resolve. Even when I try to hide it, my eyes drop tears
like those shed by the citizens who are under the rule of
an unjust king. What can I do?

Bees hum like yāzh music on tree branches with flowers
that have opened from buds. I try to hide the unkindness
of the one who is determined. Even when I try to hide it,
my bangles become loose and run down my arms like a
person who gains by ruining his relatives. What can I do?”

You told me about this affliction within you. Do not be
sad, my friend! Your lover has come before the agreed
day, riding on a horse, to remove your sorrow, like hands
that relieve the distress of eyes.

Notes:  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  மன் உயிர் ஏமுற – for the stable lives on earth to be happy, மலர் ஞாலம் – wide world, புரவு ஈன்று – give protection, பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி – through many canals water spread and fed, இறந்த பின் – after it ended, சில் நீரால் – with little water, அறல் வார – water flowing on the sand, அகல் யாறு – wide river, கவின் பெற –  attaining beauty, முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – like the honorable people who help in return those who lost their wealth because those people helped them in the past (with a sense of gratitude), பல் மலர் சினை உக – drops many flowers from branches, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – bees buzz and hum, இன் அமர் இளவேனில் – sweet desirable early summer, இறுத்தந்த பொழுதினான் – at the season that has come and stayed,

விரி காஞ்சித் தாது ஆடி – playing in the pollen of open kānji flowers, Portia flowers, பூவரச மரம், portia Tree, thespesia populnea, இருங்குயில் விளிப்பவும் – dark cuckoos sing, பிரிவு அஞ்சாதவர் – the one who is not afraid of separation, தீமை மறைப்பென் – I try to hide his evil act, மன் – அசை நிலை, an expletive, மறைப்பவும் – even when I hide it, கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி – like a tree that loses its beauty offering shelter to a man who is a false witness, எரி பொத்தி –  lit flame (of passion), என் நெஞ்சம் சுடும் ஆயின் – if my heart burns, எவன் செய்கோ – what will I do (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசை நிலை, an expletive),

பொறை தளர் கொம்பின் மேல் – on the tree branches that sag due to the burden (of flowers), சிதர் இனம் இறை கொள – swarms of bees were there, நிறை தளராதவர் தீமை மறைப்பென் – I will hide the evils of the one was firm in his resolve, மன் – அசை நிலை, an expletive, மறைப்பவும் – when I hide it, முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போல – like the citizens under a king who has failed to be righteous, கலங்குபு பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் – I have become a person with tears dripping down slowly from my eyes, எவன் செய்கோ – what will I do (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசை நிலை, an expletive),

தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும் – bees hum like yāzh music on the tree branches with flowers that have blossomed loosening their tightness, கொளை தளராதவர் தீமை மறைப்பென் – I try to hide the evils of the one who does shift from determination, மன் – அசை நிலை, an expletive, மறைப்பவும் – when I hide it, கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் – like the one who gains ruining the lives of his relatives, புல்லென்று வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் – if my bangles become loose and run on my arms that have become dull, எவன் செய்கோ –  what will I do (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசை நிலை, an expletive),

என ஆங்கு நின் உள் நோய் நீ உரைத்து – thus you told me about your inner disease (ஆங்கு – அசைநிலை, an expletive), அலமரல் எல்லா – do not be sad O friend (எல்லா – ஏடீ), நாம் எண்ணிய நாள் – the days we counted, வரை இறவாது – without the limits passing, காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் – your lover has come on a horse, கண் உறு பூசல் கை களைந்தாங்கே – like a hand that removes the distress of the eyes (களைந்தாங்கே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 35
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியும் தோழியும் சொன்னது
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக;
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 5
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்
துறந்து உள்ளார் அவர் எனத் துனி கொள்ளல், எல்லா நீ!

“வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்த்
தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது அன்றோ, 10
கண் நிலா நீர் மல்கக் கவவி நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை?

மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ,
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால் 15
ஒளி இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை?

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ,
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால்
சுடர் இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை?” 20
என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி,
எள் அறு காதலர் இயைதந்தார், புள் இயல்
காமர் கடுந்திண்தேர் பொருப்பன்
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. 25

Kalithokai 35
Pālai Pādiya Perunkadunkō, What the heroine and her friend said
Friend:
My friend! The trees flourish with abundance
like the wealth of those without laziness. Like
those who receive and enjoy the wealth of others,
bees buzz on the many tree branches. Trees have
put out sprouts that are of the color of a dark woman.
The pollen dropped on the sprouts are like the pallor
on a woman’s body. Near the grove with flowers,
there are sapphire-colored ponds. Dropped flowers
decorate the shores with fine sand and water flows
in streams.
Listening to the cuckoos that torment you greatly,
do not hate your lover with a sad and ruined heart,
since he left.

Heroine:

My friend with a bright forehead! Did he not promise
to return on the agreed time when I embraced and
bade him farewell, with continuous tears from my eyes,
when colorful bees hum and eat the pollen of fragrant
mullai flowers on the shores of the endless Vaiyai river
with tall sand dunes?

My friend with bright jewels! When I bade him
goodbye, did he not promise to return on time in early
spring, when it is the time for him to unite with his
beloved and play in the festival of Kāman in the island
of the river in full spate?

My friend with gleaming jewels! When I bade him
goodbye from my heart, did he not promise to return in
this season when those from Koodal with tall mansions,
wise people who are praised by those living in all the
countries, enjoy reciting new verses?

Friend:

My friend wearing bright jewels! The man of blameless
reputation will put an end to your sorrow and affliction.
Like the truthful word of the king with a lovely, sturdy
chariot that rides as fast as a bird, he will arrive at the
agreed time.

Notesநனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  மடி இலான் செல்வம் போல் – like the wealth of a man without reduced enthusiasm, like the wealth of a man without laziness, மரன் நந்த – trees flourish with abundance (மரன் – மரம் என்பதன் போலி), அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் – like the joy of those who receive and enjoy that wealth without working for that (படி – படிபெற்று), பல் சினை மிஞிறு ஆர்ப்ப – bees buzz on many branches, மாயவள் மேனி போல் – like the body of the dark woman, தளிர் ஈன – put out sprouts, அம் மேனித் தாய சுணங்கு போல் – like the pallor spread on the body, தளிர் மிசைத் தாது உக – pollen drop on the sprouts, மலர் தாய பொழில் நண்ணி – near the grove where flowers have spread, மணி நீர கயம் நிற்ப – there are sapphire colored ponds, அலர் தாய துறை நண்ணி – near the shores with spread flowers, அயிர் வரித்து – decorating the fine sand, அறல் வார – water flowing, நனி எள்ளும் குயில் நோக்கி – looking at the cuckoos who torment greatly, இனைபு உகு நெஞ்சத்தால் – with a sad and ruined heart, துறந்து உள்ளார் அவர் எனத் துனி கொள்ளல் – do not have hatred since he has left, எல்லா – ஏடி, hey you, நீ – you,

வண்ண வண்டு இமிர்ந்து – colorful bees humming, ஆனா வையை – endless Vaiyai river, வார் உயர் எக்கர் – long tall sand dunes, தண் அருவி – cool flowing water, நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது – when it ate the pollen of fragrant jasmine flowers, அன்றோ – did he not, கண் நிலா நீர் மல்க – with non-stopping tears in my eyes, கவவி நாம் விடுத்தக்கால் – when we embraced and I bade him goodbye (விடுத்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), ஒள் நுதால் – O one with a bright forehead, நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – what he told us about returning (உரைத்ததை – உரைத்தது, ஐகாரம் சாரியை),

மல்கிய துருத்தியுள் – on the island in the river with abundant water, மகிழ் துணைப் புணர்ந்து – embracing happily the partner, அவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ – isn’t it time for him to play with me in this festival of Kāman (god of love) with a bow, வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால் – when I bade him goodbye and sent him worshipping that his deeds should go victoriously (விடுத்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), ஒளி இழாய் – O one with bright jewels, நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – that he told us that he will return (உரைத்ததை – உரைத்தது, ஐகாரம் சாரியை),

நிலன் நாவில் திரிதரூஉம் – swirling on the stable tongues (நிலன் – நிலம் என்பதன் போலி, திரிதரூஉம் – இன்னிசை அளபெடை), நீள் மாட கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் – words born on the tongues of the wise people in Koodal with tall mansions, புதிது உண்ணும் பொழுது – when enjoying the new ones, அன்றோ – did he not, பல நாடு – many countries, நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால் – when I bade him goodbye from my heart with sadness (விடுத்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), சுடர் இழாய் – O one with glittering jewels, நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை  – that he said that he will return (உரைத்ததை – உரைத்தது, ஐ சாரியை),

என ஆங்கு உள்ளுதொறு – when thinking about it (ஆங்கு – அசைநிலை, an expletive), உடையும் நின் உயவு நோய்க்கு – for your painful affliction, உயிர்ப்பு ஆகி – as relief, எள் அறு காதலர் இயைதந்தார் – your lover without reproach has given his word, your lover without blemish has agreed, புள் இயல் காமர் கடும் திண் தேர் பொருப்பன் – a king with a lovely rapid sturdy chariot that is as fast as a bird, வாய்மை அன்ன – like his truth, வைகலொடு புணர்ந்தே  – on the agreed day (புணர்ந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 36
பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியும் தோழியும் சொன்னது
கொடுமிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்பத்,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
இயன் எழீஇயவை போல எவ்வாய்யும் இம்மெனக், 5
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இருங்குயில் ஆலப் பெருந்துறை கவின் பெறக்
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்,
சீரார் செவ்வியும் வந்தன்று; 10
வாரார் தோழி, நம் காதலோரே!

பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்;
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
பனி அறல் வாரும் என் கண், 15

மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
முலை இடைக் கனலும் என் நெஞ்சு;

காதலின் பிரிந்தார் கொல்லோ? வறிது ஓர்
தூதொடு மறந்தார் கொல்லோ? நோதகக்
காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? 20
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ? யாவது?
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின்,
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து,
கேள்வி அந்தணர் கடவும் 25
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே.

Kalithokai 36

Pālai Pādiya Perunkadunkō, What the heroine and her friend said

Heroine:

Peacocks perched high on a kadampam tree
singing together splendidly, resemble the garland
on the mighty god with a plow. Various bees hum
creating music like those from the tight strings of the
yāl. The buzzing of thumpi bees sound like the music
of female musicians wearing bangles. There are
loud sounds of honeybees buzzing everywhere on
the fragrant flowers in the grove near the pond.
Trees have put out flowers as though they are beckoning
everybody. Black cuckoos sing. The vast shore is
beautiful.

The splendid time has come for early summer festivals.
My lover has not returned, my friend!

Pallor has spread and spread on my forehead. My arms
have become thinner and thinner. My eyes shed hot
tears at this season when water flows. Desiring the one
who left to return, the disease between my breasts
scorches my heart. Did he leave me since he did not
love me? Did he forget to send a message? Will I be able
to feel the love of my lover who caused me pain? Will the
one who abandoned me stay where he went?

Friend:

It is fitting that he went on a long path. My friend with
lovely, trimmed, oiled hair! Your beauty is being
shattered every day. My heart sighs hot breaths like the
smoke from the fire rituals lovingly performed by Vēdic
Brahmins.

Notesநனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கொடு மிடல் – harsh strength, நாஞ்சிலான் – one with a plow – Balarāman, தார் போல் – like a garland, மராத்து – on a kadampam tree, நெடு மிசைச் சூழும் மயில் ஆலும் சீர – peacocks high above singing together splendidly, வடி நரம்பு இசைப்ப போல் – like pulled tight strings creating music, வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – many kinds of bees are humming, தொடி மகள் முரற்சி போல் – like the music of viralis wearing bangles, தும்பி வந்து இமிர்தர –  thumpi bees hum, இயன் எழீஇயவை போல – like the music that rises from many musical instruments (எழீஇயவை – சொல்லிசை அளபெடை), எவ்வாய்யும் இம்மென  – loudly sounding everywhere, கயன் அணி பொதும்பருள் – in the grove near the pond (கயன் – கயம் என்பதன் போலி), கடி மலர்த் தேன் ஊத – honeybees buzz on fragrant flowers, மலர் –flowers, to wear their flowers, ஆய்ந்து – trees are analyzing, வயின் வயின் விளிப்ப போல் – like they are calling them again and again, மரன் ஊழ்ப்ப – trees are filled with flowers (மரன் – மரம் என்பதன் போலி), இருங்குயில் ஆல – black cuckoos are singing, பெரும் துறை கவின் பெற – the huge shores are beautiful, குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று – the splendid time has come for early summer festivals, வாரார் தோழி நம் காதலோரே – my lover has not come our friend,

பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் – pallor has spread on my forehead spreads and spreads, சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் – my arms have become thinner and thinner (சாஅய் – இசை நிறை அளபெடை), நனி அறல் வாரும் பொழுது என – that it is the time for abundant water to flow, வெய்ய பனி அறல் வாரும் என் கண் – my eyes shed hot tears,

மலை இடை போயினர் வரல் நசைஇ – desiring the return of the one who went between mountains (நசைஇ – சொல்லிசை அளபெடை), நோயொடு முலை இடை – with disease between my breasts, கனலும் என் நெஞ்சு – my heart burns, காதல் இன் பிரிந்தார் கொல்லோ – did he abandon me since he does not have love for me, வறிது ஓர் தூதொடு மறந்தார் கொல்லோ – did he forget to send a few words through a message, நோதகக் காதலர் காதலும் காண்பாம் கொல்லோ –  will I be able to see the love of my lover who caused me pain, துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ – will the one who abandoned me live where he went,

யாவது நீள் இடைப்படுதலும் ஒல்லும் – it is fitting that he went on the long path, யாழ – அசை நிலை, an expletive, நின் வாள் இடைப்படுத்த – trimmed by scissors (நச்சினார்க்கினியர் உரை – கத்திரிகை இடையிட்டு), வயங்கு ஈர் ஓதி – O one with bright oiled/wet hair (அன்மொழித்தொகை), நாள் அணி சிதைத்தலும் உண்டு என – that it is shattering your beauty daily, நயவந்து – with desire, கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – my heart sighs with hot breaths like the smoke from the rituals performed by Vedic Brahmins (ஆவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, நெஞ்சே – ஏகாரம் அசை நிலை, an expletive)

%d bloggers like this: