எட்டுத்தொகை – அகநானூறு 1-120

அகநானூறு, 1-120

Translated by Vaidehi Herbert  

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
அகநானூறு – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அகநானூறு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

களிற்றியானை நிரை 1 – 120

அகநானுறு 1, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வண்டு படத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண்,
‘சிறு காரோடன் பயினொடு சேர்த்திய  5
கல் போல் பிரியலம்’ என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி, சிறந்த
வேய் மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,  10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய, யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை 15
நாரில் முருங்கை நவிரல் வான் பூச்
சூரலங்கடு வளி எடுப்ப ஆருற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல, காடு இறந்தோரே? 19

Akanānūru 1, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend, after the hero left to earn wealth
Did he forget his promise that he would
not leave, that he made to me in Pothini
hills, owned by the Vēlir king Āvi who
was victorious in battles like Murukan,
who owns elephants with broken tusks,
and fought good battles against warriors
wearing flower garlands swarmed by bees
and bravery anklets, riding fierce horses?

He said that we would be together like a
whetstone created with stones and glue by
a young worker.  But, causing my thick arms,
like bamboo, to become thin, he went away
to earn gold jewels and wealth, passing
through forests where the sun’s rays are
like flame, the land is cracked, the
temperature is painfully hot, trees are
parched offering very little shade, fresh
springs are dried with no water, boulders
are hot, and even rice could pop in the heat.

Since there are no travelers, wayside
robbers are depressed, the wasteland is
dull, and the wilted white flowers from
the murungai trees are blown off by fierce,
loud, twisting winds, the land looking like
the fine sprays on top of the breaking waves
near the seashore.

Notes:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் சொல்லியது.  அறு கோட்டு யானை (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அறுத்து திருத்திய கோட்டினையுடைய யானை.  உரு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘உரு – அழகு எனினுமாம்.  இது ஒரு தமிழ்ச் சொல்.  உரு – உருவ என்று ஈறு திரிந்தது என்பர் பழைய உரையாசிரியர்’, ஈண்டு ‘அ’ அசை எனவே பொருந்தும்.  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அஞ்சத்தக்க, உரு உருவ என ஈறு திரிந்தது.  பொதினி (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதினி என்பது பழனி, ஆவி என்பவன் நகர் எடுத்ததால் இது திருவாவினங்குடி என்று வழங்கப்படுத்தலும் அறிக.  ஒப்புமை: அகநானுறு 356 – சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேனாகி.  அகநானூறு 61, மாமூலனாரின் பாடல் – நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி.  வரலாறு:  நெடுவேள் ஆவி, பொதினி.

Meanings:   வண்டு பட – bees swarming, ததைந்த கண்ணி – crushed flower garland, dense flower garland, scattered flower garland, ஒண் கழல் – bright bravery anklets, உருவக் குதிரை – fierce horses, beautiful horses (உருவ – அ அசைநிலை, an expletive), மழவர் ஓட்டிய – chased warriors, முருகன் நற்போர் நெடுவேள் ஆவி – a proud Vēlir king Āvi who won victories like Murukan and fought good battles, அறு கோட்டு யானை – elephant with broken tusks, பொதினி யாங்கண் – in the Pothini Mountains, Palani Mountains, சிறு காரோடன் – young whetstone maker, பயினொடு சேர்த்திய கல் போல் – like stone mixed with glue, பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர் கொல்லோ – did he forget his words that he will not separate (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), தோழி – my friend, சிறந்த வேய் மருள் பணைத்தோள் நெகிழ – making fine bamboo-like thick arms to get thin (மருள் – உவம உருபு, a comparison word), சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் – to bring back gold jewels and wealth from a distant country, நிலம் பக – earth cracking, அழல் போல் வெங்கதிர் – hot rays that are like flame (போல் – உவம உருபு), பைது அற – without freshness, தெறுதலின் – because they burn, நிழல் தேய்ந்து உலறிய மரத்த – with trees that have dried out and do not offer any shade (அகரம் பன்மை உருபு), அறை காய்பு – the boulders are hot, அறு நீர்ப் பைஞ்சுனை – dried springs, ஆம் அறப் புலர்தலின் – since they dried without any water, உகு நெல் பொரியும் – rice could pop if dropped, வெம்மைய – it is hot, யாவரும் வழங்குநர் இன்மையின் – since there is nobody to travel, வௌவுநர் – robbers, those who seize, மடிய – depressed, சுரம் புல்லென்ற ஆற்ற – the wasteland paths with dull paths, அலங்கு சினை – swaying branches, நார்  இல் முருங்கை – murungai trees without fiber, Moringa Oleifera, நவிரல் வான் பூ – white flowers that are wilted, சூரல் அம் கடு வளி எடுப்ப – very fierce winds rise (அம் – சாரியை), ஆருற்று – with sounds, உடை திரை – breaking waves, பிதிர்வின் பொங்கி – spreading like the fine spray, முன் கடல் போல் – like the shore, like the front of the ocean (கடல் முன் போல்),  தோன்றல காடு – the forest appears, இறந்தோரே – the man who went, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானுறு 2, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன், அயலது  5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்,
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல் வேறு விலங்கும் எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய  10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத்தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு, நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை, பைம்புதல்  15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடுவெண்திங்களும் ஊர் கொண்டன்றே.  17

Akanānūru 2, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the mountain where a naive
male monkey drinks water from a big
pond on an ancient boulder, not knowing
that it turned to aged liquor with ripe
bananas dropped from trees with thick
leaves and large clusters of fruits, and sweet
jackfruits that cannot be eaten in abundance
because of their excessive sweetness,
and stretches on a fragrant flower bed in
bliss, unable to climb a sandal tree on which
pepper vines grow,
as he experiences unexpected pleasures
which are attained by various animals!

Are expected pleasures rare to you?
The heart of my very beautiful friend with
thick arms runs toward you, unable to be
stopped.  Such is her love.  Her father has
appointed a guard to watch her.  You can
come to her at night when he is tired and
not attentive.  The vēngai trees surrounded by
verdant bushes have put out bright clusters of
flowers and the great white moon reigns full.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அறிவுறுத்தி வரைவு கடாயது.  உள்ளுறை – பழைய உரையாசிரியர் – கடுவனானது தேனை அறியாது நுகர்ந்து பின்பு தன் தொழிலாகிய மரம் ஏறுதல் மாட்டாது, வேறோரிடத்து செல்லவும் மாட்டாது, தனக்கு அயலாகிய சந்தனத்தின் நிழலில் பூமேலே உறங்கினாற் போல, நீயும் இக்களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி இக்களவினை நீங்கி வரையுமாட்டாது, இக்களவொழுக்கமாகிய இன்பத்திலேயே மயங்கா நின்றாய் என்றவாறு.  ஒப்புமை:  குறிஞ்சிப்பாட்டு 187-191 – பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச் சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் தளரும்.

Meanings:  கோழ் இலை  – thick leaves, large leaves, வாழைக் கோள் –  clusters of banana fruits, முதிர் பெருங்குலை – mature large clusters,  ஊழுறு தீங்கனி – ripened sweet fruits,  உண்ணுநர்த் தடுத்த – stopping those who eat, சாரல் பலவின் – of jackfruit trees on the slopes,  Artocarpus heterophyllus, சுளையொடு – with segments, ஊழ்படு பாறை – ancient boulders, நெடுஞ்சுனை – large spring, large pond, விளைந்த தேறல் – aged liquor, அறியாது உண்ட கடுவன் – male monkey that drank not knowing, அயலது – nearby, கறி வளர் – pepper vine growing, சாந்தம் ஏறல் செல்லாது – not climbing on the sandal tree, நறு வீ – fragrant flowers, அடுக்கத்து –  in the adjoining mountain, மகிழ்ந்து கண்படுக்கும் – it sleeps happily, குறியா இன்பம் – unexpected pleasures, pleasures that are not indicated, எளிதின் – easily, நின் மலை – your mountain, பல் வேறு விலங்கும் எய்தும் – various animals attain, நாட – oh man from such country, குறித்த இன்பம் – expected pleasures, நினக்கெவன் அரிய – how it is difficult,  வெறுத்த ஏஎர் – abundant beauty (ஏஎர் – இன்னிசை அளபெடை), வேய் புரை பணைத்தோள் – bamboo-like thick arms (புரை – உவம உருபு, a comparison word), நிறுப்ப – even when stopping, despite stopping, நில்லா நெஞ்சமொடு – with an unstoppable heart, நின் மாட்டு – with you, இவளும் – she, இனையள் ஆயின் – since she has fallen in love, தந்தை அருங்கடிக் காவலர் – the strict guard her father appointed, சோர்பதன் ஒற்றி – knowing when he is tired, கங்குல் வருதலும் உரியை – it will suit you to come at night, பைம்புதல் – verdant bushes, வேங்கையும் – kino trees, Pterocarpus marsupium, ஒள் இணர் – bright clusters, விரிந்தன – have opened, நெடு வெண்திங்களும் – large white moon also, ஊர் கொண்டன்றே – grew to be full (கொண்டன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 3, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பு இன் பெருஞ்சினை
கடியுடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட
கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை  5
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண் செங்குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்,  10
புல் இலை மராஅத்த அகல் சேண் அத்தம்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வமென் களைமா,
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய்,  15
அம் தீம் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே?  18

Akanānūru 3, Eyinanthai Makanār Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
Oh my heart!  How can I get rid of my sorrow,
listening to your words which are lies that sound
like truths?

You goaded me to bring jewels for the woman with
lovely lips red like kavir flower petals, beautiful
sweet words, and chosen jewels.

Her eyes that differ from her curved earrings block
me from leaving for the long and distant wasteland
with kadampam trees with parched leaves, where
a female vulture with a curved beak protects its new
chicks, hidden from view, on a big branch of an
omai tree with dark colored trunk and cracked
bark resembling the rough skin of a crocodile, her
confused mate with red ear flaps rises to bring her
large amounts of food in the sky-touching, splendid
mountains, where a flesh-eating tiger has brought
down a female marai deer on its right side, sucked its
bright red blood with desire and left, its stinking flesh
removed from joints scavenged by the vulture, like
wayside bandits who plunder from those who travel.

Notes:   முன்னொரு காலத்தில் தன்னுடைய நெஞ்சின் தூண்டுதலால் பொருள்வயின் தலைவன் பிரிந்து மீண்டான்.  பின் மீண்டும் செல்லத் தூண்டிய நெஞ்சிடம் சொல்லி செலவு அழுங்கியது.  மேஎம் தோல் (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேவும் என்னும் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்து ஈற்று உயிர் மெய் கெட்டு மேம் என நின்று ‘இன்னிசை நிரைப்ப மேஎம்’ என அளபெடுத்தது.  காண்பு இன் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காணுதல் இல்லாத, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – காண்டற்கினிய.  மரையா, மரை + ஆ (7)  – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆன் என்றமையால் பெண் மரை என்க.  ஈன்று இளைப்பட்ட (3) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – காவற்பட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – காத்தல் தொழிலில் ஈடுபட்ட.   கலவுக் கழிக் கடு முடை (9) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மூட்டுவாய் கழிந்த மிக்க முடை வீசும் புலால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூட்டினின்றும் கழிக்கப்பட்ட மிக்க ஊன்.  மதுரைக்காஞ்சி 633 – இரும்பிடி மேஎந்தோல் அன்ன.  காண்பு இன் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்டற்கு இனிய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – காண்டற்கு இனிய.  There is a convention that when a tiger’s prey falls on its left, the tiger will not eat it.  It will abandon it.  It will eat only if the prey falls on its right side. This is mentioned in Akanānūru 3, 29, 238, 252, 357 and 389, Natrinai 154 and Puranānūru 190.  மரை (7) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384.  கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்த குழையொடு மாறுபட்ட விழிகள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வளைந்த குழையொடு மாறுபட்ட நோக்கம்.

Meanings:   இருங்கழி முதலை – crocodile in the vast/dark backwaters, மேஎம் தோல் அன்ன – like its top skin (முதுகுத் தோல்), கருங்கால் ஓமை – omai tree with dark colored trunk, Dillenia indica, Toothbrush Tree, காண்பு இன் – sweet appearance, unable to see, பெரும் சினை – big branch, கடியுடை – with protection, நனந்தலை – wide space, ஈன்று இளைப்பட்ட – gave birth and protecting the young ones, கொடுவாய்ப் பேடைக்கு – for its female with curved beak, அல்கு இரை தரீஇய – to bring and give food that will last, to bring and give large quantities (தரீஇய – செய்யுளிசை அளபெடை), மான்று – confused, வேட்டு எழுந்த – rose up with desire, செஞ்செவி எருவை – vulture with red ears, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture, வான் தோய் சிமைய – with sky-touching peaks, விறல் வரை – victorious mountains, beautiful mountains, கவாஅன் – side mountains (இசை நிறை அளபெடை), துளங்கு நடை மரை ஆ – female marai deer of swaying walk, வலம்படத் தொலைச்சி – killed it for it to fall on the right side, ஒண் செங்குருதி – bright red blood, உவற்றி உண்டு அருந்துபு – causes it to ooze and then drinks it, புலவுப் புலி துறந்த – killed by the flesh eating tiger, கலவுக் கழி – joints removed, கடு முடை – stinking flesh (முடை – ஆகுபெயர் ஊனுக்கு), கொள்ளை மாந்தரின் – like men who steal, ஆனாது – constantly, கவரும் – it takes, புல் இலை மராஅத்த – with kadampam trees with parched leaves, Anthocephalus cadamba, Kadampam oak (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), அகல் சேண் அத்தம் – wide distant wasteland, கலம் தரல் உள்ளமொடு – with a mind desiring to bring jewels/precious things, கழியக் காட்டி – showed it exceedingly, பின் நின்று – standing behind, துரக்கும் நெஞ்சம் – oh heart which is goading me (நெஞ்சம் – விளி), நின் வாய் – your words, வாய் போல் பொய்ம்மொழி – lies that sound like truth, எவ்வம் என் களைமா – how can I get rid of sorrow (களைமா – களையும் வழி, செய்யுள் விகாரம்), கவிர் இதழ் அன்ன – like the flower petals of the murukkam trees, முருக்க மரம், Indian coral tree, Erythrina indica, காண்பு இன் – appearing sweet, செவ்வாய் – red mouth (செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), அம் தீம் கிளவி – beautiful sweet words, ஆய் இழை மடந்தை – young woman with chosen/beautiful jewels , கொடுங்குழைக்கு – from the curved earrings (கொடுங்குழைக்கு – கொடுங்குழையொடு, வேற்றுமை மயக்கம்), அமர்த்த நோக்கம் – differing, நெடுஞ்சேண் ஆரிடை – on the long and distant wasteland path, விலங்கும் ஞான்றே – when they block (ஞான்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 4, குறுங்குடி மருதனார், முல்லைத் திணை, தோழி தலைவியிடம் சொன்னது
முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்கால் கொன்றை மெல் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,  5
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார் செய்தன்றே கவின் பெறு கானம்,
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள் பரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த  10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண், தோன்றும், குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங்குன்றத்து அமன்ற காந்தள்  15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை, நின் மாண் நலம் படர்ந்தே.  17

Akanānūru 4, Kurungudi Maruthanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
Mullai flowers with pointed tips have appeared,
thetra tree buds and buds of kondrai trees with
green trunks have opened their tight petals
and blossomed, a huge stag with antlers like twisted
iron romps around and plays in the gravel pits,
sorrow of the people in the wide earth has gone away,
and clouds with lightning and thunder roar and pour
down drops of rain.  The forest has grown beautiful!

Look there!  Your man from the country with small
mountains is on his way, to the east of Uranthai town
which celebrates loud festivals.

The reins, on the horses with trimmed, curved manes
on their napes, are loosened so that they can run fast.
Not wanting to confuse the bees that hum like the strings
of lutes, those that live with their mates in the flowering
branches eating pollen, the charioteer who does his work
with esteem has tied the clappers of the bells.

My friend with beautiful bangles!  He is thinking about
your fine beauty that has the fragrance of newly opened
glory lily blossoms that grow densely on the very tall
mountains.  He will arrive soon!

Notes:  தோழி தலைவியை பருவங்காட்டி வற்புறுத்தியது.  கருவி வானம் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கறங்கு இசை விழவின் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இசை கறங்கு விழவின் என மாற்றுக.  வரலாறு:  உறந்தை.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  முல்லை வைந்நுனை தோன்ற – sharp tips of jasmine appear, இல்லமொடு – with illam/thetra tree buds, பைங்கால் கொன்றை – kondrai trees with green trunks, Laburnum (பைங்கால் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), Golden Shower Tree, Cassia fistula, மெல் பிணி அவிழ – opened its delicate buds, இரும்பு திரித்தன்ன – like twisted iron, மா இரு மருப்பின் – with huge dark antlers, பரல் அவல் அடைய – reached the pits with pebbles, இரலை தெறிப்ப – stags romp around, மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – the sorrow of people in the wide earth has gone (ஞாலம் – ஆகுபெயர் மக்கட்கு), கருவி வானம் – clouds with thunder and lightning, கதழுறை – roared and rained (வினைத்தொகை), சிதறி – scattered, கார் செய்தன்றே – created rain (செய்தன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), கவின் பெறு கானம் – forest became beautiful, குரங்கு – curved, உளை பொலிந்த கொய் சுவல் புரவி – horses with splendid trimmed tufts on their napes, நரம்பு ஆர்த்தன்ன – like strings of the lute, வாங்கு வள் பரிய – curved reins loosened so that they can run faster, பூத்த பொங்கர் – flowering grove, துணையொடு வதிந்த – living with mate, தாது உண் பறவை – pollen-eating honeybees, பேதுறல் அஞ்சி – afraid of them being disturbed/confused, மணி நா ஆர்த்த – tied the bell clappers, மாண் வினைத் தேரன் – the charioteer who does his work with esteem, உவக்காண் – look there, தோன்றும் – he will appear, குறும்பொறை நாடன் – the man from a small mountain, கறங்கிசை விழவின் உறந்தை – Uranthai which celebrates loud festivals, குணாது – to the east, நெடும் பெரும் குன்றத்து – on the very tall mountains, அமன்ற காந்தள் – dense glory lily flowers, போது அவிழ் அலரின் நாறும் – like the fragrance of opening buds (அலரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது.  ஐந்தாம் வேற்றுமை உருபு), ஆய் தொடி அரிவை – oh young lady with beautiful/chosen bangles, நின் மாண் நலம் – your fine beauty, படர்ந்தே – thinking, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானுறு 5, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை, தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல
நலமிகு சேவடி நிலம் வடுக்கொளாஅக்,
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள்,  5
கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்,
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப,  10
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்  15
இறப்ப எண்ணுதிர் ஆயின், ‘அறத்தாறு
அன்று’ என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,  20
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூ நீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்  25
கண்டு கடிந்தனம் செலவே, ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே.  28

Akanānūru 5, Cheramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to his heart, when he considered leaving to earn wealth
She was unable to tolerate my excess graces.
Her face upset, she did not listen to me.
She approached me slowly, her pretty red feet
walking softy on the ground leaving marks, she
smiled revealing her sharp teeth, her smile not
genuine, the woman with a gleaming forehead.
Before she realized what I had decided, she
came with the thought that I should not go.

In the ancient forest with parched omai trees,
clusters of gooseberries that are like
marble have dropped on the huge, dark boulders
appearing like dice that are collected by children.
On the mountain slopes with the sun’s rays, in
the forest that does not yield benefits, there are
mounds with stones with split tops and pointed
ends, that appear to have been sharpened and
placed there, which could cut toes.

Her face indicated without words,
“If you consider crossing that forest, words
of ancient tradition are mere words.”
She stood like a painting, the pupils in her eyes
hidden by her tears.
She smelled the flowers adorning the tender
head of our son, woven in a garland with alike
blue waterlilies from pure water, sighed,
and the flowers wilted, losing their sapphire
color, which I saw.
Even when I am near, my wife with bright
bangles is sad.  She will not survive if I leave!

On seeing her appearance, I decided not to go!

Notes:  பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லிச் செலவு அழுங்கியது.  ஒப்புமை:  நற்றிணை 177 – உண்கண் பாவை அழிதரு வெள்ளம், அகநானூறு 5 – பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு, அகநானூறு 229 – பல்லிதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப.  வாய் அல் முறுவலள் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொய்யாகிய நகைப்பினை உடையவள் ஆகி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மெய்ம்மை அல்லாத முறுவல் உடையவளாகி.  முன்னம் காட்டி (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிப்புக் காட்டி.  புறநானூறு 3 – முன்னம் முகத்தின் உணர்ந்து.  உரையா – உரைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கொளாஅ – கொள்ள என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

Meanings:   அளி நிலை பொறாஅது – not tolerating my graces (பொறாஅது – இசைநிறை அளபெடை), அமரிய முகத்தள் – she with a differing/warring/upset face, விளி நிலை கொள்ளாள் – she was not listening to what I said, தமியள் – she who is alone, மென்மெல – very slowly, நலமிகு சேவடி – pretty red feet, pretty perfect feet, நிலம் வடுக்கொளாஅ – leaving marks on the land, குறுக வந்து – she came close, தன் கூர் எயிறு தோன்ற – her sharp teeth appearing, வறிது அகத்து எழுந்த – that rose in her a little bit (வறிது – உரிச்சொல்), வாய் அல் முறுவலள் – she had a smile which was not genuine, கண்ணியது உணரா அளவை – before realizing what I had decided, ஒண்ணுதல் – the young woman with a bright forehead (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), வினை – earning, business, தலைப்படுதல்  செல்லா நினைவுடன் – with thoughts of not agreeing to separation, முளிந்த ஓமை – parched omai trees, Dillenia indica, Toothbrush Tree, முதையல் அம் காட்டு – in the ancient forest (அம் – அம் சாரியை), பளிங்கத்து அன்ன – like marble (அத்து சாரியை), பல் காய் நெல்லி – many gooseberries, gooseberries in clusters, மோட்டு இரும் பாறை – large dark rocks, ஈட்டு – collected, வட்டு ஏய்ப்ப – like dice (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), உதிர்வன படூஉம் – those that drop and lie around (படூஉம் – இன்னிசை அளபெடை), கதிர் தெறு கவாஅன் – mountain slopes where the sun’s rays burn (கவாஅன் – இசை நிறை அளபெடை), மாய்த்த போல – like rasped, like reduced (with tools), மழுகு நுனை – reduced ends, தோற்றி – appearing like created, பாத்தி அன்ன – like separated into sections, குடுமிக் கூர்ங்கல் – sharp-topped stones, விரல் நுதி சிதைக்கும் – cutting toe tips, நிரை நிலை அதர – with paths that have rows of them, பரல் முரம்பு ஆகிய – elevated land with small pebbles, பயம் இல் கானம் – forest without any benefit, இறப்ப எண்ணுதிர் ஆயின் – if you consider crossing it, அறத்தாறு அன்று என மொழிந்த – that uttered that it is not just, தொன்றுபடு கிளவி – ancient words, அன்ன ஆக – are just what they are (words), என்னுநள் போல – like she is stating, முன்னம் காட்டி – indicated, முகத்தின் உரையா – indicated by her face, ஓவச் செய்தியின் – like a painting (செய்தியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), ஒன்று நினைந்து ஒற்றி – thought and analyzed and became agreeable, பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – looking at me with the pupils in her eye hidden in tears (பனி – ஆகுபெயர்), ஆகத்து ஒடுக்கிய புதல்வன் – our son who embraced her chest, புன்தலை – tender head, parched head, head with scanty hair, தூ நீர் பயந்த துணை அமை பிணையல் – garland woven with similar yields from the pure water (waterlilies), மோயினள் – she smelled it (முற்றெச்சம்), உயிர்த்த காலை – when she sighed, மாமலர் மணி உரு இழந்த – those dark flowers (blue waterlilies) lost their sapphire color, Nymphaea caerulea, அணி அழி – beauty ruining, தோற்றம் கண்டு – on seeing her appearance, கடிந்தனம் செலவே – we avoided going, ஒண்தொடி – woman wearing bright bangles (அன்மொழித்தொகை), உழையம் ஆகவும் – even though we are near, இனைவோள் பிழையலள் – the woman who is sad will not survive, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், expletives, பிரிதும் நாம் எனினே – if we separate (எனினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 6, பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண்  தித்தன்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்,  5
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள்ளிழை நீ வெய்யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு,
ஏந்து எழில் ஆகத்து பூந்தார் குழைய  10
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல,  15
சுடர்ப் பூந்தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்  20
இளமை சென்று தவத் தொல்லஃதே,
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி எமக்கே?  22

Akanānūru 6, Paranar, Marutham Thinai – What the heroine said to the hero
Yesterday
you played embracing your lover
……….wearing earrings and bright jewels,
……….with floats made of white reed,
……….as flower garlands were crushed
……….on beautiful lifted chests,
……….your face happy like those of
……….Poozhiyar country elephants
……….that love playing in the ponds,
in the flooded Kāviri where
bamboo poles are unable to help,
in Uranthai city dense with paddy,
the town of the rain-like charitable
king Thithan whose daughter Aiyai
with bamboo-like arms, who
wears jingling anklets, garlands
woven with white waterlilies,
bangles carved with saws on her
pretty forearms, and delicate jewels.

Today,
you come to me and tell me that I have
budding breasts with pallor on my lovely
chest, I am a woman with faultless
virtue, and I am your son’s mother.
You are using confusing words that lie.
Do not tease my maturity.

My youth which was like the many-speared
Mathi’s Kazhār town where an otter living
among thorny, old cane stems eats vālai fish
with his sharp teeth disturbing the vallai
vines with tubular stems, has left me a long
time ago.  How can your lies be sweet to me?

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி கூறியது.  ஆங்கு (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவ்விடத்தே, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை -அசைநிலை.  மூங்கில் நீரில் மறைதல்: கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6, கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341.  பிண்ட நெல்லின் அள்ளூர் – அகநானூறு 46.  வரலாறு:  ஐயை, தித்தன், காவிரி, பூழியர் நாடு, மத்தி, கழாஅர்.  உள்ளுறை:  பழைய உரையாசிரியர் – நீர் நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையின் நிலையை நெகிழ்த்து இழிந்ததாகிய வாளையை நுகர்ந்து பிரம்பாகிய முதிய தூற்றிலே தங்கினாற்போல, நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது நிலைமையை நெகிழ்த்துக் குலமகளிரல்லாத விலைமகளிரை நுகர்ந்து முன்பு நுமக்குண்டாகிய எங்கள் பழமைப் பற்ற ஒருபயன் கருதாது தங்குதல் மாத்திரத்திற்கு எம் இல் வந்தீர் என்றாளாம்.

Meanings:  அரி பெய் சிலம்பின் – with anklet with pebbles, ஆம்பல் அம் தொடலை – garland with white waterlilies, அரம் போழ் – cut with saws (conch shells), அவ் வளைப் பொலிந்த முன் கை – pretty forearms with beautiful bangles, இழை அணி – fine jewels, பணைத்தோள் – thick arms,  bamboo-like arms, ஐயை – a princess with the name Aiyai, தந்தை – father, மழை வளம் தரூஉம் – rain-given prosperity (தரூஉம் – இன்னிசை அளபெடை), மா வண் தித்தன் – greatly charitable Thithan, பிண்ட நெல்லின் உறந்தை – Uranthai with heaps of paddy, ஆங்கண் – there, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – River Kāviri floods that cannot be crossed with bamboo poles (பெறாஅ – இசை நிறை அளபெடை), குழை மாண் ஒள் இழை – earrings and esteemed bright jewels, நீ வெய்யோளொடு – you with your desired lover, வேழ வெண்புணை – white reed float, தழீஇ – embracing (சொல்லிசை அளபெடை), பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து – like the happiness on the faces of the elephants which play in the ponds of the Poozhiyar’s country (யானையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, முகன் – முகம் என்பதன் போலி), ஆங்கு – there,அசைநிலை, an expletive, ஏந்து எழில் ஆகத்து – on the lifted pretty chest, பூந்தார் குழைய – with flower garland crushed, நெருநல் ஆடினை புனலே – you played in the river yesterday, இன்று வந்து – came today, ஆக வன – beautiful chest, முலை அரும்பிய சுணங்கின் – with pallor on my budding breasts, மாசு இல் கற்பின் – with faultless virtue, with faultless fidelity, புதல்வன் தாய் – my son’s mother, என – thus, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி – you are uttering enticing words bowing down, எம் முதுமை எள்ளல் – do not disrespect my maturity, அஃது அமைகும் தில்ல – that fits me fine (தில்ல – தில் ஓர் இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle), சுடர்ப் பூந்தாமரை – flame-like lotus, bright lotus, நீர் முதிர் பழனத்து – in a pond with stagnant water, அம் தூம்பு – beautiful tubular stems, வள்ளை ஆய் கொடி மயக்கி – disturb the beautiful vallai creepers, Creeping bindweed, Ipomaea aquatic, வாளை மேய்ந்த – that ate valai fish, Trichiurus haumela, வள் எயிற்று நீர்நாய் – otter with sharp teeth, முள் அரைப் பிரம்பின் மூது அரில் செறியும் – resides in the thorny old rattan stems, Calamus rotang, பல் வேல் மத்தி – Mathi with spear brigade, கழாஅர் அன்ன – like Kazhār town (கழாஅர் – இசைநிறை அளபெடை), எம் இளமை சென்று தவத் தொல்லஃதே- it has been a long time since my youth left me (தொல்லஃது – ஆய்தம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, an expletive), இனிமை எவன் செய்வது – how are they going to be sweet, பொய்ம்மொழி – your lies, எமக்கே – to me, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானுறு 7, கயமனார், பாலைத் திணை – மகளை தேடிச் சென்ற செவிலித்தாய் பெண் மானிடம் சொன்னது
‘முலை முகம் செய்தன, முள் எயிறு இலங்கின,
தலை முடி சான்று தண் தழை உடையை,
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்,
மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய,
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை,  5
பேதை அல்லை மேதை அம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து’ என
ஒண் சுடர் நல் இல் அருங்கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி, இன் சிலை
ஏறுடை இனத்த நாறு உயிர் நவ்வி!  10
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே, ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15
மெய்த் தலைப்படுதல் செய்யேன் இத்தலை
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த  20
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.  22

Akanānūru 7, Kayamanār, Pālai Thinai – What the foster mother said to a doe, when she went looking for the eloped heroine
I told my daughter,
“Your clothes are made of cool leaves
your breasts are big, your sharp teeth shine,
and the hair on your head has grown
abundantly.
Do not join your friends who wander and go
everywhere.  There are fierce gods who attack,
in this ancient town.  You are under strict
guard.  Do not go near the front gate.
You are not ignorant.  You are an intelligent
young woman who is not naïve any longer.  You
have gone past your childhood years”.

Worried that we were aware about her problem,
she escaped the strict protection of our fine house
with bright lamps and came to the wasteland with
a man with an unfailing bright spear.  And, like
warriors who go after wasteland thieves and fight
to retrieve cattle stolen from their stables, I have
looked, but I am unable to get near my daughter.

Oh doe with odor in your breath, and belonging to
a herd with stags that bellow sweetly!
My daughter ran away from home like a deer that
runs on seeing a hunter’s net.  Let me ask you!
Listen!  Have you seen my daughter?

She wears a gold chain with a tiger-tooth pendant
strung on it, and an asoka leaf garment on her fine
loins, the daughter of a forest dweller from the
small village on the mountains, where male monkeys
drop soft-topped, white seeds after eating the lovely
segments of jackfruits.

Notes:  மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று பெண் மானைக் கண்டு சொல்லியது.  துய்த்தலை (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலா விதையின் தலையில் அமைந்த ஓர் உறுப்பு.  இதனை ‘ஆர்க்கு’ என்பர் பழைய உரையாசிரியர்.  தாலி:  அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்.  முலை வளர்ச்சி:  குறுந்தொகை 337 – முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே கிளைஇய மென் குரல் கிழக்கு வீழ்ந்தனவே செறி முறை வெண்பலும் பறி முறை நிரம்பின சுணங்கும் சில தோன்றினவே.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  முலை – breasts, முகம் செய்தன – they have become big, முள் எயிறு இலங்கின – sharp teeth are gleaming, தலை முடி சான்று – head hair has grown abundantly, தண் தழை உடையை – you wear cool leaf clothes, அலமரல் ஆயமொடு – with friends who roam, யாங்கணும் படாஅல் – do not go anywhere (படாஅல் – இசை நிறை அளபெடை), மூப்புடை – ancient, முது பதி – old town, தாக்கு அணங்கு உடைய – there are attacking and fierce gods/deities, காப்பும் பூண்டிசின் – you are protected (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), கடையும் போகலை – do not go near the front gate, பேதை அல்லை – you are not too young, you are not too naïve, மேதை அம் குறுமகள் – intelligent and beautiful young woman, பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என – you have gone past your early  years (பெதும்பை is 8 to 11 years old), ஒண் சுடர் நல் இல் – fine house with bright lamps, அருங்கடி நீவி – past the strict guard, தன் சிதைவு அறிதல் அஞ்சி – feared that we knew about her fault, இன் சிலை – sweet sounds, ஏறுடை இனத்த – the stags of the herd, நாறு உயிர் நவ்வி – deer with breath with fragrant odor, வலை காண் பிணையின் போகி – like a doe that runs away on seeing a net, ஈங்கு – here, ஓர் – a, தொலைவு இல் – not failing, வெள் வேல் விடலையொடு – with a young man with silvery spear, என் மகள் இச் சுரம் படர்தந்தோளே – my daughter went on this wasteland, ஆயிடை – thereupon, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென – since the wasteland robbers remove cows from stables cutting off ropes, பிற்படு – going behind, பூசலின் – like the battles (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது), வழிவழி ஓடி – running behind following and following (வழிவழி – அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), மெய்த் தலைப்படுதல் செய்யேன் – I am unable to go near her, இத்தலை – here, this place, நின்னொடு வினவல் – let me ask you something, கேளாய் – you listen to me (கேட்பாயாக), பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி – single gold and gem chain strung with a tiger tooth pendant, ஒலிக் குழைச் செயலை – flourishing tender asoka leaves, Saraca Indica, உடை – clothing, மாண் அல்குல் – fine loins, beautiful loins, ஆய் சுளை – lovely jackfruit segments, பலவின் – of jackfruits, மேய் – eating, கலை உதிர்த்த – dropped by male monkeys, துய்த்தலை – soft top, வெண்காழ் பெறூஉம் – white seeds obtaining (பெறூஉம் – இன்னிசை அளபெடை), கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே – the daughter of a forest dweller in a small settlement with mountains (மகளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 8, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக்
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல மன், இகுளை, பெரிய  5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப்
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடுங்களிற்றின் வருத்தம் சொலியப்,  10
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி மென்மெலத்
துளி தலைத்தலைஇய மணி ஏர் ஐம்பால்  15
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ, என்னுநர்ப் பெறினே.  18

Akanānūru 8, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My friend!  It would not be difficult
for us, to go in the middle of the night,
on a path where a male bear uses his
pointed, sharp claws covered by loose
skin to grab the fungus combs that
are on the wet side of a termite mound,
ruining the strength of a snake that
lives there,

if there is someone to ask us, “You with
raindrops on your gem-like, five-part
braid hanging on your back, squeezing
out water!  Do you know your way in
this place with ruined and blocked paths?”
while walking slowly on the sides, and not
getting confused on the deer paths in the
light from lightning flashes,
in his country with mountains,
where a big male tiger kills a boar and
drags its flesh which reeks in the
mountains dense with jackfruit trees
on the slopes with noisy bamboo,
a male elephant is caught in the slippery
mud hole near thriving banana and valai
trees and a female breaks and throws a big
tree to help him step out and end his sorrow,
and the sounds echo in the mountain caves.

Notes:  இறைச்சி:  இரா. செயபால் உரை – கரடிக்குப் பாம்பை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும், அது இரையை அகழ்ந்தெடுக்கும் தன் காரியம் செய்யவே, கூறிய நகம் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு தன வலி அழிந்தாற்போல, தலைவரும் நம்மை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும் தமது காரியமாக களவின்பத்தில் ஒழுகவே, அதனால் ஆறின்னாமை ஊரின்னாமை முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படி நேரிட்டது என்று கூறினாள் என்பதாம்.  குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277-278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have descriptions of bears attacking termite mounds.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:   ஈயல் புற்றத்து – on the termite mound, ஈர்ம் புறத்து இறுத்த – they are on the wet side (இறுத்த – தங்கியிருக்கின்ற), குரும்பி வல்சி – fungus combs of termite mounds as food, பெரும் கை ஏற்றை – a big male with big hands, தூங்கு தோல் – hanging skin, துதிய – with covering, வள் உகிர் கதுவலின் – since it grabbed with sharp claws, பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும் – at midnight in darkness when the strength of snakes are ruined (கங்குல் – இருள்), அரிய அல்ல – it is not difficult, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், a particle suggesting an implied meaning, இகுளை – oh friend (விளி, an address), பெரிய கேழல் – big boar, அட்ட – killed, பேழ் வாய் ஏற்றை – male tiger with a big mouth, பலா அமல் அடுக்கம் – mountain range dense with jackfruit trees (அமல் – செறிந்த), புலாவ ஈர்க்கும் – drags it as it reeks of flesh, கழை நரல் சிலம்பின் – in the slopes with bamboo that makes noise, ஆங்கண் – there, வழையொடு – along with surapunnai trees, Long-leaved two-sepalled gamboge, ochrocarpus longifolius, வாழை – banana trees, ஓங்கிய – flourishing, தாழ் கண் அசும்பில் – in the low slippery land, படு – got caught, got stuck, கடுங்களிற்றின் –  a fierce male elephant’s, வருத்தம் சொலிய – for its sorrow to end, பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் – sounds of female elephant breaking and throwing a large tree to make a step, விண் தோய் விடர் அகத்து இயம்பும் – roars in the caves of the sky-touching mountains, அவர் நாட்டு – his country, எண் அரும் – difficult to be counted, பிறங்கல் – mountains, மான் அதர் மயங்காது – not get confused by the deer path, மின்னு விட – lightning providing light and guiding, சிறிய ஒதுங்கி – walking carefully, மென்மெல – very slowly, துளி தலைத்தலைஇய – with raindrops (தலைஇய – செய்யுளிசை அளபெடை), மணி ஏர் ஐம்பால் – five part braid that is beautiful like sapphire (ஏர் – அழகு, உவம உருபுமாம், a comparison word), சிறுபுறம் புதைய – hiding the nape, hiding the back, வாரி – combing, குரல் பிழியூஉ – squeezing the hair (பிழியூஉ – இன்னிசை அளபெடை), நெறி கெட விலங்கிய – where the paths are ruined and blocked, நீயிர் இச் சுரம் அறிதலும் அறிதிரோ – do you know your way in this place with difficult paths, என்னுநர்ப் பெறினே – if I get someone to ask that (பெறினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 9, கல்லாடனார், பாலைத் திணை – தலைவன் தேர்ப்பாகன் கேட்கும்படி சொன்னது
கொல் வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
செப்பு அடர் அன்ன செங்குழை அகந்தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய்  5
உழுது காண் துளையவாகி ஆர் கழல்பு
ஆலி வானின் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்,  10
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி உரம் துரந்து,
ஞாயிறு படினும், ஊர் சேய்த்து எனாது,  15
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும் விரைந்து வல் எய்திப், பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்,
கன்று புகு மாலை நின்றோள் எய்தி,  20
கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ,
நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்  25
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?  26

Akanānūru 9, Kallādanār, Pālai Thinai, What the hero said as his charioteer listened, on their way home
Our beautiful village is near the
wasteland where winds blow and
white iruppai flowers that bloom on
trees with tender, coppery red sprouts
loosen from their stems, drop like
hail on the path with coral-red mounds,
appearing like fatty meat on blood, their
buds like caps of sharp tips of arrows kept
in bulging quivers by those who carry
bows, their hollow stems like made with
butter and their surfaces fuzzy.

The rhythmic beats of pounding with
lovely, long pestles by women with fine,
wavy hair are heard along with the
intermittent hoots of owls in the lofty,
huge mountain.

Even if the sun goes down behind
the peaks, do not worry that the village
is far away. Ride faster your horses that
are already fast.

In our fine, tall house she stands on
a side and whenever she hears a lizard
cluck,
she awaits my arrival at evening times
when the grazing calves return home.
She is modest and virtuous, her forehead
gleaming.  Her words are lovely and sweet.

More than me,
my heart has already gone to approach
her, with bent hands to cover her eyes,
pull her braid that hangs on her back,
resembling an elephant’s trunk, hold her
arms with bangles and embrace her delicate
shoulders with desire.

Notes:  வினை முற்றி மீண்ட தலைவன் கூறியது.  துய்வாய் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துய்யை உடைய பூக்கள், துய் என்பது மலரில் உள்ள பஞ்சு போன்றதொரு உறுப்பு.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  புதையா (21) – புதைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  கவியா (21) – கவித்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கவியா – நற்றிணை 57 – கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, கலித்தொகை 42 – தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கை கவியா, அகநானூறு 9 – கை கவியாச் சென்று.

Meanings:   கொல் வினை – killing task, பொலிந்த – great, splendid, கூர்ங்குறு புழுகின் – with sharp caps, with sharp lids, வில்லோர் – those carrying bows, தூணி வீங்க – quivers filled, quivers bulging, பெய்த – placed, dropped, அப்பு நுனை ஏய்ப்ப – like the tips of arrows (அப்பு அம்பு என்பதன் வலித்தல் விகாரம், ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), அரும்பிய இருப்பை – blossomed iruppai flowers, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, வஞ்சி, செப்பு அடர் அன்ன – like copper plates (அன்ன – உவம உருபு, a comparison word), செங்குழை அகந்தோறு – inside all the red sprouts, இழுதின் அன்ன – like butter/ghee (இழுதின் – இன் சாரியை, அன்ன – உவம உருபு, a comparison word), தீம் புழல் – sweet tubular part/hollow part, துய்வாய் – with fuzziness (fuzzy flowers), உழுது – digging (by bees), காண் துளையவாகி – able to see the holes, ஆர் கழல்பு – removed from stems, ஆலி வானின் காலொடு பாறி – fell from the skies like hail with winds, துப்பின் அன்ன – like coral (துப்பின் – இன் சாரியை, அன்ன – உவம உருபு, a comparison word), செங்கோட்டு இயவின் – on the path with red mounds, நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் – look like fatty meat on top of blood (நிணத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் – beautiful small village near the wasteland, கொடு நுண் ஓதி மகளிர் – women with curved fine hair, ஓக்கிய – lifted, தொடி மாண் உலக்கை – esteemed long pestles decorated with metal rings, தூண்டு உரல் – hitting on the pounding stone, பாணி – the beats, நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் – will sound with the hoots of owls in the tall huge mountain, குன்று பின் ஒழியப் போகி – hiding behind the peaks, உரம் – strength, துரந்து – goading, chasing, ஞாயிறு படினும் – even if the sun goes down, ஊர் சேய்த்து எனாது – without thinking that the town is far away, துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் – goading the horses that are already going fast without slackening, எம்மினும் – more than me, விரைந்து வல் எய்தி – riding and reaching fast, பல் மாண் ஓங்கிய நல் இல் – tall fine house with much esteem, ஒரு சிறை நிலைஇ – standing on one side (நிலைஇ – சொல்லிசை அளபெடை), பாங்கர்ப் பல்லி படுதொறும் – whenever a lizard/gecko calls from nearby, பரவி – appreciating that, கன்று புகு மாலை நின்றோள் எய்தி – reaching her who expects me in the evening when calves that went to graze return, கை கவியாச் சென்று – with bent hands, கண் புதையாக் குறுகி – to approach her and cover her eyes, பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி – to pull her braided hair which is a female elephant’s trunk (அன்ன – உவம உருபு, a comparison word), தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ – has it gone to hold and embrace her hands with bangles (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), நாணொடு மிடைந்த கற்பின் – with virtue combined with modesty, வாள் நுதல் – bright forehead, அம் தீம் கிளவிக் குறுமகள் – the young lady with beautiful sweet words, மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே – my heart that went with desire to attain her delicate shoulders/arms (நசைஇ – சொல்லிசை அளபெடை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 10, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது  
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை,
புள் இறை கூரும் மெல்லம்புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப்  5
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்
அரிது துற்றனையால் பெரும! உரிதினில்
கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும், கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புது வலைப் பரதவர்  10
மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே.  13

Akanānūru 10, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the delicate shore where birds
reside on old punnai trees whose big,
bent, dark branches are filled with
delicate new buds, resembling stars,
that blossom in the water sprays of the
wide ocean!

She with her waterlily-like, kohl-lined
eyes cries in sorrow
since you are thinking about leaving her.

Lord!  Do a good thing!  Take her along
when you go and make her yours!
Her beauty is lovely like the bright and
flourishing Thondi town
where eastern winds blow and bright
waves attack the sandy shores, and
fishermen with ruined, old boats and
new nets share beached fish with horns
with those in their aroma-filled village.

Notes:  இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தோழி சொன்னது.  உள்ளுறை:  பழைய உரையாசிரியர் – பரதவர் தாம் அழிவு கோர்த்த திமிலானும் பண்ணின வலையானும் தமது தொழிலாகிய வேட்டை மேற்செல்லாது தேடாமல் வந்த இழிந்த சுறாமீனை அகப்படுத்து அதனை அழித்துக் கூறு வைத்து எல்லாரையும் அழைத்தாற்போல், நீயிரும் நுமக்கு உறுதியாக ஆக்கிக் கொள்ளப்பட்ட நன்மைகளான் நுமக்கு ஒழுக்கமான நல்வழியின் ஒழுகாது கண்டோர் இகழ்ந்த களவொழுக்கத்திலே இறங்கி இக் களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணா நின்றீர் என வரும். வரலாறு:  தொண்டி.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  கொண்டி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிடித்து வந்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கொள்ளையினை.  எக்கர்ப்
பழந்திமில் கொன்ற
(11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எக்கர் மணலானது தமது பழைய திமிலை உடைத்தமையால், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மணல் மேட்டில் கிடைக்கும் பழைய படகின் சிதைவு போக்கி.

Meanings:   வான் கடல் பரப்பில் – on the huge ocean, தூவற்கு – for the spray (from the waves), எதிரிய – accepted, ஏற்றுக்கொண்ட, மீன் கண்டன்ன – like stars that are seen, மெல் அரும்பு – delicate buds, ஊழ்த்த – have put out, முடவு – bent, முதிர் புன்னை – old punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தடவு நிலை மா சினை – huge dark branches, bent dark branches, புள் இறை கூரும் – birds live there abundantly, மெல்லம்புலம்ப – oh lord of the delicate shore (விளி, an address, அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), நெய்தல் – kuvalai, blue/white water-lily, உண்கண் – eyes with kohl (மையிட்ட கண்கள்),  பைதல – to be sad, கலுழ – to cry, பிரிதல் எண்ணினை – you thought about leaving here, ஆயின் – yet, நன்றும் – greatly, அரிது துற்றனையால் – since it is a difficult thing that you have undertaken (துற்றனையால் – துற்றனை, ஆல் அசைநிலை, an expletive), பெரும – oh lord (விளி, an address), உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் – make her yours and take her with you, கொண்டலொடு – with the eastern winds, குரூஉத் திரை – waves with color, bright waves (குரூஉ – இன்னிசை அளபெடை), புணரி – ocean, உடைதரும் – breaking, எக்கர் – sand, பழந்திமில் – old boats, கொன்ற – ruined, புது வலைப் பரதவர் – fishermen with new nets, மோட்டு மணல் – sand dunes, அடைகரை – water filled shores, sand filled shores, கோட்டு மீன் கொண்டி – fish with horns (sharks, sword-fish) that was brought (to the shore by the waves), மணம் கமழ் – fragrance filled, பாக்கத்து – in the seaside village, பகுக்கும் – sharing, வளம் கெழு – flourishing bright, தொண்டி அன்ன – like Thondi city (அன்ன – உவம உருபு, a comparison word), இவள் நலனே – her beauty (நலனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 11, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்,
நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,  5
கயந்துகள் ஆகிய பயந்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணல் கான் யாற்றுப்
படுசினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்  10
அவரும் பெறுகுவர் மன்னே, நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவலவாகிப்
பழி தீர் கண்ணும் படுகுவ மன்னே.  15

Akanānūru 11, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
He will get my loving embraces that are
like body entering body, if he takes me
to the hot forest,

……….where the glowing sun crawls in the sky,
……….the bright place is hot like red flames,
……….ilavam trees without leaves and
……….buds are dense with flowers looking like
……….bright rows of lamps lit by uproarious
……….women, ponds have become dusty,
……….forest streams with sand appear like spread
……….fabric, on the shores huge tree branches
……….with clusters of flowers hang low,

my perfect eyes which are like water-dripping,
bright waterlilies, will go to sleep, without
being filled with tears like a dry pond getting
filled up with water from canals.

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தலைவி வருந்தியத்தைக் கண்ட தோழி வருந்தினாள்.  அவளிடம் தலைவி கூறியது.  மலிபு தொகுபு எடுத்த (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்குக் கூடி ஏந்திய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகிழ்ந்து கூடி எடுத்த.  படுசினை தாழ்ந்த பயில் இணர் (9) – the following reading order is given by these scholars – பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பயில் தாழ்ந்த இணர்படு சினை.  கம்மென (7) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விரைவாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கம் என்று நறுமணம் கமழுகின்ற.  துணியைப் போன்ற மணல்; அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல், நற்றிணை 15 – முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள.

Meanings:   வானம் ஊர்ந்த – crawling in the sky, வயங்கு – abundant, splendid, ஒளி மண்டிலம் – the bright sun, நெருப்பெனச் சிவந்த – burning like flames, உருப்பு – heat, அவிர் அம் காட்டு – in the bright forest, இலை இல மலர்ந்த – bloomed without leaves (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), முகை இல் இலவம் – ilavam trees without buds, Aerua javanica, Silk cotton tree, கலி கொள் ஆயம் – happy friends, uproarious friends, மலிபு – abundantly, happily, தொகுபு – together, எடுத்த அம் சுடர் நெடுங்கொடி – raised rows of beautiful lights, பொற்பத் தோன்றி – appearing like that (பொற்ப – உவம உருபு, comparison word, தோன்றி – தோன்ற எனத் திரிக்க), கயம் துகள் ஆகிய – ponds have become dusty, பயம் தபு கானம் – forest removed of its benefits, எம்மொடு கழிந்தனர் ஆயின் – if he spent with me, கம்மென – rapidly (விரைவுக்குறிப்பு), வம்பு விரித்தன்ன – like spread body-wrapping cloth, பொங்கு மணல் கான் யாற்று – of the forest stream with abundant sand, of the forest stream with spread sand, படு சினை தாழ்ந்த பயில் இணர் (பயில் தாழ்ந்த இணர்படு சினை) – low branches with many clusters of flowers, எக்கர் – sand dunes, மெய் புகுவு அன்ன – like entering a body, கை கவர் – hands embracing, முயக்கம் அவரும் பெறுகுவர் – he will get embraces, மன், ஏ -அசைநிலைகள், நயவர – with desire, நீர் வார் நிகர் மலர் கடுப்ப – like the water-dripping bright flowers, waterlilies (கடுப்ப – உவம உருபு, a comparison word), ஓ மறந்து – without ruining, அறு குளம் நிறைக்குந போல – like a dried pond getting filled with water from canals, அல்கலும் அழுதல் மேவலவாகி – not crying every day (அழுதல் மேவலவாகி – அழுதல் பொருந்தாவாகி), பழி தீர் கண்ணும் படுகுவ மன்னே – my eyes without blemish will sleep (மன், ஏ -அசைநிலைகள், expletives)

அகநானூறு 12, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாயே கண்ணினும் கடுங்காதலளே,
எந்தையும் நிலன் உறப் பொறாஅன், “சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி?’ என்னும்,
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே,  5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப் பயங்கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்  10
புலி செத்து  வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்
நல் வரை நாட! நீ வரின்
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.  14

Akanānūru 12, Kapilar, Kurinji Thinai, What the heroine’s friend said to the hero
Mother loves her greatly, more than her own
eyes.  Our father cannot bear to see her small
feet get red when she walks,
“My little daughter, why are you hurting your
small feet by walking?” he asks her gingerly.
Our friendship is sweet and without separation.
We are like one life in a bird with two heads.

Oh man from the fine mountain country
where girls who guard millet make loud noises
without a break, parrots talk back, squirrels play
on big branches of jackfruit trees that have large
fruits, huts that mountain dwellers have
built to benefit from the ripe jackfruits
are covered with honey-filled vēngai flowers,
and an elephant with spots on his face thinks
they are tigers and runs in fear, breaking
bamboo in the cloud covered mountains!

If you come through such danger at night, this
delicate young woman will not live any longer!

Notes:  தோழி இரவுக்குறியை மறுத்து வரைவு கடாயது.  Vēngai flowers are bright yellow in color.  ஒப்புமை:  கலித்தொகை 89-4 – ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலை.  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.   விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:   யாயே – mother, கண்ணினும் – even more than her eyes, கடுங்காதலளே – loves her greatly, எந்தையும் – our father, her father, நிலன் உறப் பொறாஅன் – he is unable to tolerate her walking on the ground (பொறாஅன் – இசை நிறை அளபெடை, நிலன் – நிலம் என்பதன் போலி), சீறடி சிவப்ப – small feet getting red, எவன் இல குறுமகள் இயங்குதி – oh my little daughter! How do you walk (இல – ஏடி, விளி, an address), என்னும் – he says, யாமே பிரிவு இன்று இயைந்த – we are together without separation, துவரா நட்பின் – due to our not-bitter friendship, due to our sweet friendship, இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே – we are like a bird with one life and two heads (உயிரம்மே – உயிரம் + ஏ, ஏகாரம் அசைநிலை, an expletive), ஏனல் – millet, millet field, அம் காவலர் – beautiful guards, ஆனாது – without rest, ஆர்த்தொறும் – whenever they make loud noises, கிளி விளி பயிற்றும் – parrots talk thinking it is the sounds of their flock, வெளில் – squirrels, ஆடு – playing, பெருஞ்சினை – big branches, விழுக்கோட் பலவின் – of the jackfruit trees with large fruits, Artocarpus heterophyllus, பழுப் பயன் கொண்மார் – to take the ripe fruits that give benefits, குறவர் ஊன்றிய குரம்பை – huts that the mountain dwellers built, புதைய – to be covered, வேங்கை தாஅய – vēngai flowers have spread, Pterocarpus marsupium (தாஅய – இசை நிறை அளபெடை), தேம்பாய் – honey flowing, honey filled (flowers) (தேம் தேன் என்றதன் திரிபு), தோற்றம் – appearance, புலி செத்து – thinking that they are tigers, வெரீஇய – getting afraid (செய்யுளிசை அளபெடை), புகர் முக – spotted face,  வேழம் – elephant, மழை படு – with clouds, சிலம்பில் – in the mountains, கழை பட – breaking bamboo trees, பெயரும் – runs away, நல் வரை நாட – oh man from such fine mountain country (விளி, an address), நீ வரின் – if you come at night, மெல்லியல் – the delicate young woman (அன்மொழித்தொகை), ஓரும் –அசைநிலை, an expletive, தான் -அசைநிலை, an expletive, வாழலளே – she will not live (வாழலளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 13, பெருந்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுள் பேணிக்,
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்  5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்,
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்  10
பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும், தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்துச்,
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய் பொருள், வயிற்பட  15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமைக் கழிக, வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்  20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே.  24

Akanānūru 13, Perunthalai Sāthanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Pandiyan king with a chest desired by Thirumakal
is adorned beautifully with two huge garlands,
one with pearls born in his ocean, and one with
sandalwood, from his mountain where he receives
tributes from his enemies after battle victories,
brought to him by mountain dwellers who
worship the god who by tradition does not ruin
devotees who live in his mountain.

Other than the little time that he spends training
elephants that are trapped in ditches, his army
general Panni donates without limits to those who
come to him in need.  He is the lord of Kōdai
Mountains, who owns many arrows with sharp tips.
He performed rituals in battlefields.

May you benefit like him with perfect wealth
even if you stay away from your delicate partner
at this time when clouds rise in the south and come
down as heavy rains!
Let it be that you won’t get the pleasures of being
with her in a faultless, pure bed with spread,
on a cold blistery day which brings sorrow,
when white herons call from sugarcanes with bright
blossoms, and paddy spikes that rise from sheaths
that are like flame tips, growing on split stems,
sway in the huge, prosperous fields with boundaries.

Notes:  பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது.  உடன்பட்டதூஉமாம்.  வரலாறு:  தென்னவன், கோடைப் பொருநன் பண்ணி.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:  தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – strands made from the pearls in his ocean (முத்தின் – இன் சாரியை), முனை திறை கொடுக்கும் துப்பின் – tributes obtained with strength from enemies after battles (முனை – ஆகுபெயர்), தன் மலை – his mountain, தெறல் அரு மரபின் – with the tradition of not ruining his devotees, கடவுள் பேணி – worshipped god, குறவர் தந்த சந்தின் ஆரமும் – wearing sandalwood garland that the mountain dwellers bring (சந்தின் – இன் சாரியை), இரு பேர் ஆரமும் – and two large garlands, எழில் பெற அணியும் – wearing them beautifully, திரு வீழ் மார்பின் தென்னவன் – the Pāndiyan with a chest desired by Thirumakal, மறவன் குழியில் கொண்ட மராஅ யானை – untrained (has not been around with people) elephants that fall into ditches dug by warriors, மொழியின் உணர்த்தும் – training them with words, சிறு வரை அல்லது – other than those early hours, வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – giving to the needy without any limit, வள்வாய் அம்பின் – with sharp-tipped arrows, கோடைப் பொருநன் – the lord of the Kōdai Mountains, பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் – more than the benefits obtained by rituals that Panni does (தைஇய – செய்யுளிசை அளபெடை, இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), விழுமிது நிகழ்வது ஆயினும் – even if such prosperity happens, தெற்கு ஏர்பு – climbing on the south, கழி மழை பொழிந்த பொழுது – when they rained heavily, கொள் – occurs, அமையத்து – at this time, சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – if you stay away from this sweet partner who is delicate, நோய் இன்றாக செய் பொருள்வயிற் பட – may you receive the perfect wealth that you seek when you separate, மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – faultless pure bed covered with bed-spread, கவவு இன்புறாமைக் கழிக – may time pass without you getting her embraces and being joyous, வள வயல் – fertile fields, அழல் நுதி அன்ன தோகை ஈன்ற – rising from the sheaths that are like flame tips, கழனி நெல்லின் – of the field paddy grass spikes, கவை முதல் அலங்கல் – grains growing from split stems, நிரம்பு அகன் செறுவில் – in the filled wide field, வரம்பு அணையா – with the banks as boundaries, துயல்வர – swaying, புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை – the cold winds that bring loneliness, the cold winds that bring sorrow, இலங்கு பூங்கரும்பின் ஏர் கழை இருந்த – from the sugarcane with splendid flowers, வெண்குருகு நரல – white herons/egrets/storks call, வீசும் நுண் பல் துவலைய – with many blowing fine sprays, தண் பனி நாளே – cold dewy day (நாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 14, ஒக்கூர் மாசாத்தனார், முல்லைத் திணை – ஒரு பாணன் இன்னொரு பாணனிடம் சொன்னது
“அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
காயாஞ்செம்மல் தாஅய் பல உடன்
ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇத்  5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற  10
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல் பாண?” என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல் யாழ் இசையினென், பையெனக்  15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்தி,
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே,
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,  20
முனை நல் ஊரன் புனை நெடுந்தேரே.  21

Akanānūru 14, Okkūr Masāthanār, Mullai Thinai – What one bard said to another bard
She asked me, “Oh bard!  What will
happen to me in the morning, if he
does not think about me in the
evenings, when,
on the large path on the red land that
appears like wax, wilted kāyā flowers
are strewn and rows of pattupoochis
crawl, the mountains appear like coral
set with sapphire, a stag embraces its
doe, grazes on grass and romps around
on a beautiful forest path, mullai vines
have spread on the vast land, and near
the hills cattle herders adorn themselves
with fragrant flowers, cows of fine walk
graze on arukam grass and go towards
the town’s common grounds,
their swollen udders secreting sweet
milk, as they call out for their calves?”

I was unable to respond to her words with
my words.  I played music on my lute
in mullai tune, praised god slowly and had
sorrow in my body.
And then I saw the man from the fine town
arrive on his decorated, tall chariot with wheels
with many spokes, his fast horses riding swiftly
avoiding hindrances, hitting the stones on the
path, with sounds like roaring monsoon rains.

Notes:  Pattupoochis (மூதாய் – trombidium grandissimum) are tiny red bugs that look like pieces of velvet.   They surface during the rainy season, on sandy soils.  They are kept in boxes by young kids, and fed tender grass.  They are also known as indirakōpam.  They are not the silk producing worms or caterpillars.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces.  ஆ மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 –  கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப.  விலங்கு பரி முடுக (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – எதிர்ப்படுமவற்றை விலங்கி முன் செல்லும் செலவு மிக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எதிர்ப்படும் தடைகளுக்கு விலகிச் செல்லுஞ்செலவினை மேலும் வலவன் விரையத் தூண்டுதலால்.

Meanings:  அரக்கத்து அன்ன – like wax (அரக்கத்து – அத்து சாரியை), செந்நிலப் பெருவழி – wide path on red land, காயாஞ்செம்மல் தாஅய் – old kāyā flowers have spread, wilted flowers kāyā have dropped, Memecylon edule, ironwood tree (தாஅய் – இசைநிறை அளபெடை), பல உடன் ஈயல் மூதாய் வரிப்ப – many little red insects are in rows, Trombidium grandissimum, பட்டுப்பூச்சி, பவளமொடு மணி மிடைந்தன்ன – like coral set with sapphire, குன்றம் கவைஇய – surrounding peaks (கவைஇய – செய்யுளிசை அளபெடை), அம் காட்டு ஆர் இடை – in the beautiful forest’s harsh path, மடப் பிணை தழீஇ – embracing its naive female (தழீஇ – சொல்லிசை அளபெடை), திரி மருப்பு இரலை – stag with twisted antlers, புல் அருந்து உகள romps around grazing on grass (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது) , முல்லை வியன் புலம் பரப்பி – jasmine has spread on the wide land, கோவலர் – cattle herders, குறும்பொறை மருங்கின் – near the small hills, நறும் பூ அயர – wear fragrant flowers, பதவு மேயல் அருந்து – grazing on arukam/cynodon grass (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு), அருகம்புல் (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), மதவு நடை நல் ஆன் – fine cows with strong strides, வீங்கு மாண் செருத்தல் – udders that are swollen with pride, தீம் பால் பிலிற்ற – sweet milk secreting, கன்று பயிர் குரல – with the sounds of calves calling, மன்று நிறை புகுதரும் – they enter the town’s common grounds filling up the place, மாலையும் உள்ளார் ஆயின் – even in such evenings if he does not think, காலை யாங்கு ஆகுவம் கொல் பாண – what will happen to me tomorrow oh bard (கொல் -அசைநிலை, an expletive), என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – I was unable to reply to her words, செவ்வழி நல் யாழ் இசையினென் – I played in mullai tune on my fine lute, பையெனக் கடவுள் வாழ்த்தி – praised god slowly, praised god softly, பையுள் மெய்ந்நிறுத்தி – with sorrow in my body, அவர் திறம் செல்வேன் – I went towards him, கண்டனென் யானே – I saw, விடு விசைக் குதிரை – rapid horses that are goaded, விலங்கு பரி முடுக – goaded and riding fast avoiding hindrances, கல் பொருது இரங்கும் – hitting the stones and creating noises, hitting the pebbles and creating sounds, பல் ஆர் நேமி – chariot wheels with many spokes, கார் மழை முழக்கு இசை கடுக்கும் – like the roaring sounds of the monsoon rains, முனை நல் ஊரன் புனை நெடுந்தேரே – the decorated tall chariot that man from the fine town rode (நெடுந்தேரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 15, மாமூலனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
எம் வெங்காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்
தோகைக் காவின் துளு நாட்டு அன்ன,  5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல,
தோழிமாரும் யானும் புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்  10
பாழி அன்ன கடி உடை வியன் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி,  15
வன்கை எண்கின் வய நிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே.  19

Akanānūru 15, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s mother said, after her daughter eloped
Causing her friends and me to struggle with agony,
my daughter left with the principle of going with
her sweet partner, despite the strict protection in
our house which is like that of Pāzhi town belonging
to Nannan wearing bright jewels and owning
elephants with ornaments.

She with delicate arms that are rounded like the
bamboo in the mountains, has gone to the wasteland
where fresh iruppai flowers drop off their stems, and
bears eat them and crush kondrai fruits that they pluck
from beautiful branches as dust spreads on the land, and
move away with their strong herds with mighty hands.

If our great love for her will work, may the old towns
with streets that are on her path be filled with people
who take care of those who travel who own nothing,
like the hospitable people in Thulu country of the
ornament-wearing, truthful and noble Kōsars, where
peacocks with drum-like eyes on their plumes, eat
mature, plump, beautiful, fresh bittermelons with tufts.

Notes:  மகட் போக்கிய நற்றாய் வருந்திச் சொல்லியது.  நன்னன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் மலைபடுகடாம் பாடலின் பாட்டுடைத் தலைவன்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  கரடி ஆர்கழல் புதுப் பூவை நுகர்ந்த வாயுடையவாய், அதிலே நிறைந்து, கொன்றைப் பழத்தைக் கோதிப் போனாற்போல அவளும் தலைவனோடு கூடிய இன்பத்திலே நிறைந்த செருக்கினாலே கூடி வளர்ந்த தோழிமாரையும் என்னையும் புறக்கணித்துப் போனாள் என்றவாறு, இதனை பழைய உரையாசிரியர் இறைச்சிப் பொருள் என்பர்.  அஞ்ஞை (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 145 – அன்பு மிகுதிப் பற்றி மகளை அன்னை என்றாள்.  ஒப்புமை:  அகநானூறு 177 – பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.   வரலாறு:  கோசர், துளு நாடு, நன்னன், பாழி.

Meanings:  எம் வெங்காமம் இயைவது ஆயின் – if our great love will work, மெய்ம்மலி – talking truths, பெரும் பூண் – big ornaments, செம்மல் கோசர் – noble Kōsars, கொம்மை அம் பசுங்காய்க் குடுமி – rounded beautiful fresh vegetable with tuft, விளைந்த – mature, பாகல் ஆர்கை – eating bittermelons, பறைக் கண் பீலித் தோகைக் காவின் துளு நாட்டு அன்ன – like Thulu country with groves with peacocks with drum like eyes on their feathers, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் – with the tradition of taking care of strangers who travel who do not have anything, செறிந்த சேரிச் செம்மல் மூதூர் – great town with many settlements, great town with many streets, அறிந்த மாக்கட்டு ஆகுக – let it become populated with intelligent people, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle signifying desire, ஈறு திரிந்தது வந்தது, தோழிமாரும் யானும் புலம்ப – her friends and I to be distressed, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன – like Pāzhi town belonging to king Nannan with bright jewels and elephants wearing ornaments, கடியுடை வியன் நகர் – huge house with protection, செறிந்த காப்பு இகந்து – went past that tight protection, went past that good protection, அவனொடு போகி – went with him, அத்த இருப்பை – iruppai tress in the wasteland, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, ஆர் கழல் – removed from stems, புதுப்பூத் துய்த்த வாய – with mouths eating with new flowers, துகள் நிலம் பரக்க – dust spreading on the land, கொன்றை அம் சினை – beautiful branches of the kondrai tree, Laburnum, Golden Shower Tree, Cassia fistula,  குழல் பழம் கொழுதி – scratching/tearing the tubular laburnum fruits, வன் கை எண்கின் வய நிரை – strong herds of bears with strong hands, பரக்கும் – they spread, இன் துணைப் படர்ந்த கொள்கையொடு – with the principle of going with her sweet partner, ஒராங்கு – to be together, குன்ற வேயின் திரண்ட – rounded like the bamboo in the mountains (வேயின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), என் மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே – the path my daughter with delicate arms went on (ஆறே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 16, சாகலாசனார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை மணி மருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்  5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே,
கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள், பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இளமுலை
“வருக மாள என் உயிர்” எனப் பெரிது உவந்து  10
கொண்டனள், நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்,
“மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு” என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா  15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந, வானத்து
அணங்கு அருங்கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?  19

Akanānūru 16, Sākālasanār, Marutham Thinai – What the heroine said to the hero
On seeing our son who is loved by everybody,
playing alone on the street with his toy chariot,
wearing gold bracelets, his perfect palms bright
like the petals next to the inner petals that are near
the pollen of lotus blossoms flourishing in old ponds
where otters live, his pretty mouth red like coral,
and delightful childish prattle with sweet words that
his tongue does not utter clearly, the young woman
with sharp teeth approached him, and since there
was nobody to see her, she thought about it a little
and took him to her young breasts adorned with
heavy gold jewels and said, “Come my life,” thinking
about his resemblance to you.

I saw her standing there.  I did not move away.
“O faultless woman! Why are you embarrassed?
You are his mother too!” I said, and went toward
her quickly and embraced her.  She stood there
ashamed, and looked down like a thief who accepted
the crime when caught, scratching the ground with
her toe.  It was as if she was aware that I knew about
her love affair with you.
Lord!  How could I not love her, the woman who is like
a mother to your son?  She was like precious Arundathi
in the sky!

Notes:  பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்று கூறிய வேளையில் தலைவி கூறியது.  மாசு இல் குறுமகள் (12) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாசு இல் குறுமகள் என்பது இகழ்ச்சி.  ஒப்புமை: தேர் வழங்கு தெரு: அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.  தொல், பொருளியல் 37 – கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப.  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தாயை – ஐகாரம் சாரியை.   வானத்து அணங்கு அருங்கடவுள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானத்தின்கண் காண்டற்கரிய கடவுட் கற்புடைய அருந்ததி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி.

Meanings:  நாய் உடை – having otters, முதுநீர்- old pond, கலித்த தாமரை – flourishing lotus, தாதின் – with pollen, அல்லி – the inner petals, அவிர் இதழ் – bright petals, புரையும் – like (புரை – உவம உருபு, a comparison word), மாசு இல் – without blemish, அங்கை – palm, மணி மருள் – gem like (மருள் – உவம உருபு, a comparison word), அவ்வாய் – pretty mouth, நாவொடு நவிலா – not uttering with tongue, நகைபடு தீஞ்சொல் – sweet words that cause laughter, sweet words that cause happiness, யாவரும் விழையும் – loved by everybody, பொலந்தொடிப் புதல்வனை – son wearing gold bangles, தேர் வழங்கு தெருவில் – on the street playing with his toy chariot, தமியோன் கண்டே – seeing him alone, கூர் எயிற்று – with sharp teeth, அரிவை – young woman, குறுகினள் – she came close, யாவரும் காணுநர் இன்மையின் – since there was nobody to see, செத்தனள் – she thought about his resemblance to you, பேணி – took care, பொலங்கலம் சுமந்த – gold jewels bearing, பூண் – jewels, தாங்கு – bearing, இளமுலை – young breasts, வருக என் உயிர் – come my life, மாள – முன்னிலை அசை, an expletive of the second person, எனப் பெரிது உவந்து – thus she was very happy, கொண்டனள் நின்றோள் கண்டு – I saw her hold him and standing there, நிலைச் செல்லேன் – I did not turn away, மாசு இல் குறுமகள் – the young lady without blemish, எவன் பேதுற்றனை – why are you confused, why are you embarrassed, நீயும் தாயை இவற்கு – you are also a mother to him (ஐகாரம் சாரியை), என யான் – thus I, தற்கரைய வந்து விரைவனென் – I came there quickly and said to her, கவைஇ – embraced (கவைஇ – சொல்லிசை அளபெடை), களவு உடம்படுநரின் – like those who agree to their cheating (உடம்படுநரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), கவிழ்ந்து – bent her body, நிலம் கிளையா – scratched the ground, நாணி நின்றோள் – she  stood with shyness, she stood with embarrassment, நிலை கண்டு – on seeing that situation, யானும் – I, பேணினென் அல்லனோ – did I not care for her, I cared for her, மகிழ்ந – oh lord (விளி, an address), வானத்து – of the sky, of heaven, அணங்கு அருங்கடவுள் அன்னோள் – she was like the precious Arundathi, she was like a precious goddess, நின் மகன் தாய் ஆதல் – being a mother to your son, புரைவது – being like that (புரை – உவம உருபு, a comparison word), ஆங்கு -அசைநிலை, an expletive, எனவே – thus, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானுறு 17, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
வளங்கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
“உயங்கின்று அன்னை என் மெய்” என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும் மன்னே, இனியே,  5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல கொல் செல்லத் தாமே, கல்லென  10
ஊர் எழுந்தன்ன உருகெழு செலவின்
நீர் இல் அத்தத்து, ஆர் இடை மடுத்த
கொடுங்கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெருங்குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்  15
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி  20
வைகுறு மீனின் தோன்றும்,
மைபடு மாமலை விலங்கிய சுரனே.  22

Akanānūru 17, Kayamanār, Pālai Thinai – What the heroine’s foster mother said, after the heroine eloped
Before,
even when she played a little bit
with her ball,
or played with kazhangu beans with
her young friends, she
would say, “It hurts my body, mother,”
and with her forehead with drops of
sweat she would hug me in a cool manner.

Now
she does not think about her friends
wearing fine bangles, or me.
She escaped the tight protection of
her father of great fame,
winning the heart of a stranger,
my young daughter who is wise.

How can her anklet-wearing,
beautiful feet with short strides walk
in the fierce wasteland with no water,
where clear sounds, of salt merchants
with harsh goads scolding their bulls
echo in the lofty mountains, sounding
like the uproars of those who rise up
and move away from their town?

The mountains dense with bamboo
are scorched by the sun’s harsh rays.
The trunks of yā trees have mud left by
elephants that strip their barks.
Ilavam trees with tall trunks grow near
the forked paths of the harsh wasteland,
their mature flowers dropped by the
attacking winds appearing like flames in
lamps lit with oil in a traditional, ancient
town with celebrations.  The few on the
tree appear like the morning stars.

She is in the wasteland where soaring,
blocking mountains are surrounded by
dark clouds.

Notes:  சிறு முதுக்குறைவி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குல மகளிர்க்குக் கொண்டானிற் சிறந்த கேளிர் இலர் எனும் அறத்தை உணர்ந்து அவனொடு போயினமையிற் தலைவியை சிறு முதுக்குறைவி என்றாள்.  மயங்கு வியர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருந்திய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – செறிந்த.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:   வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் – even when she plays a little bit with her ball in the prosperous beautiful house, even if she throws her ball a little bit in her prosperous house, இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – when playing with molucca beans with her friends, Caesalpinia crista seeds, Molucca beans, உயங்கின்று அன்னை – it hurts me mother, என் மெய் – my body, என்று அசைஇ – and become tired (அசைஇ – சொல்லிசை அளபெடை), மயங்கு வியர் பொறித்த நுதலள் – her forehead becomes filled with sweat, தண்ணென – in a cool manner, முயங்கினள் – she embraced me, வதியும் – and stayed, மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏ -அசைநிலை, இனியே – now(ஏகாரம் அசைநிலை, an expletive), தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் – she does not think about her friends with fine bangles and myself, நெடுமொழித் தந்தை அரும் கடி நீவி – escaping the strict guarding of her father with great fame, நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற – totally getting the heart of a stranger, என் சிறு முதுக்குறைவி – my young daughter with wisdom, சிலம்பு ஆர் சீறடி வல்ல கொல் – is it possible for her beautiful small feet with anklets (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), செல்ல – to go,  தாமே – they (her feet), ஏகாரம் அசைநிலை, an expletive, கல்லென ஊர் எழுந்தன்ன – loud like the people in town rose up (ஒலிக்குறிப்பு மொழி, ஊர் – ஆகுபெயர்), உருகெழு – fierce, செலவின் – with the movement (போக்கினையுடைய, செல்லுதலையுடைய), நீர் இல் அத்தத்து ஆர் இடை – in the harsh wasteland with no water, மடுத்த – goading their bulls, கொடுங்கோல் உமணர் – salt merchants with their harsh goads, பகடு – bulls, தெழி – scolding noises, தெள் விளி – clear sounds, நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – the sounds echo in the lofty mountains, கடுங்கதிர் திருகிய – scorched by the harsh rays of the sun (கடுங்கதிர் – ஞாயிறு, ஆகுபெயர்), வேய் பயில் பிறங்கல் – mountain filled with bamboo, பெருங்களிறு உரிஞ்சிய – huge male elephant peeled, மண் அரை யாஅத்து – with yā trees with trunks with sand (யாஅத்து – அத்து சாரியை – an augment), ஆச்சா மரம், Hardwickia binata, அருஞ்சுரக் கவலைய – forked paths in the difficult wasteland, அதர் படு மருங்கின் – near the paths, நீள் அரை இலவத்து – of ilavam trees with tall trunks, ஊழ் கழி – mature and abundant, பல் மலர் – many flowers, விழவுத் தலைக்கொண்ட – celebrating festivals there, பழ விறல் மூதூர் – victorious ancient town, நெய் உமிழ் சுடரின் – like the flames of lamps that are lit pouring oil, like the flames of lamps that are lit pouring ghee (சுடரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருள் தந்தது), கால் பொர – attacked by the winds, சில்கி – dwindled, வைகுறு மீனின் தோன்றும் – appearing like the morning stars (மீனின்- இன் உருபு ஒப்புப் பொருளது), மைபடு மா மலை விலங்கிய சுரனே – wasteland with huge blocking mountains where clouds touch peaks (சுரனே – சுரன் சுரம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 18, கபிலர், குறிஞ்சித் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூ மலர் கஞலிய கடுவரல் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்,  5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ, ஓங்கல் வெற்ப?
ஒரு நாள் விழுமம் உறினும், வழிநாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி, யாவதும்  10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடு உயர் நெடுவரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்  15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென்தோளே.  18

Akanānūru 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Abundant spent flowers drop down, changing
the color of the fierce forest stream, in which
crocodiles lie, that rushes with swirls and
crashes on tall rocks.  The rapid flood waters
drag a lonely, roaming elephant in rut.

Oh lord of the tall mountains!  You are bold
and unafraid like a fierce boar, and you cross
the difficult shore at night.  If something bad
happens to you one day my friend will not live
the next day.  Even those who come regularly
on that path, which does not have hindrances,
could suffer sometimes.  We will be distressed
and worried thinking about your night visits.

If you come during the day, you can unite with
my friend with curved, delicate arms that are
like bamboo pieces between nodes, protected
by our mother, in the vast mountain range,
in our fruit-filled orchard near the huge mountain
with honeycombs and soaring peaks,
under dense trees near beautiful kānthal bushes.

Notes:  தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது.  ஓங்கல் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழிற்பெயர், தலைவனுடைய குடி உயர்வு கூறுவாள் அதனை அவன் நாட்டு மலைக்கு அடையாக்கினாள்.  இதனால் அறமருவாத இவ்வொழுக்கம் உயர்குடித் தோன்றலாகிய நினக்குப் பொருந்தாது என குறிப்பாக உணர்த்தியவாறு.  இது கருட்பொருட் புறத்தே பிறந்த இறைச்சிப்பொருள்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  நீர் நிறம் கரப்ப – water color hidden, ஊழுறுபு – becoming old, உதிர்ந்து – dropping, பூ மலர் – beautiful flowers, கஞலிய – dense, கடுவரல் கான் யாற்று – of the rapid forest stream, கராஅம் – crocodiles (இசைநிறை அளபெடை), துஞ்சும் – they lie there, கல் உயர் – tall rocks, மறி சுழி – the hitting water swirls, the hitting eddies, மராஅ யானை – elephant that is not with its mate, மதம் – rutting state, தப – to be ruined, ஒற்றி – attacked, உராஅ ஈர்க்கும் – draws with strength (உராஅ – இசை நிறை அளபெடை, உரவு உராஅ என நீண்டது), உட்குவரு – causing fear, நீத்தம் – flood, கடுங்கண் – fierce, fearless, brave, பன்றியின் – like a boar (இன் உருபு ஒப்புப் பொருளது), நடுங்காது – not trembling, without fear, துணிந்து – bold, நாம – fearful (நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), அருந்துறை – harsh shores, difficult shores, பேர்தந்து – passing, யாமத்து – at night, ஈங்கும் வருபவோ – who can come here (ஈங்கும் – உம்மை உயர்வு சிறப்பு), ஓங்கல் வெற்ப – oh lord of the lofty mountains (ஓங்கல் – தொழிற்பெயர்), ஒரு நாள் – one day, விழுமம் – difficulty, உறினும் – if it happens, வழிநாள் – following day, வாழ்குவள் அல்லள் – she will not live, என் தோழி – my friend, யாவதும் – even a little bit, ஊறு இல் – without difficulty, வழிகளும் – paths, பயில – regularly, constantly, வழங்குநர் – those who go, நீடு இன்று – without delay, ஆக இழுக்குவர் – they could fail, they could suffer, அதனால் – hence, உலமரல் –  mental agony, வருத்தம் உறுதும் – we will attain sorrow, எம் படப்பை – our orchard, கொடும் – curved, rounded, தேன் – honeycombs, இழைத்த – placed, created, கோடு உயர் – tall cliffs, நெடு வரை – big mountains, பழம் தூங்கு – fruits hanging, நளிப்பின் – among the dense trees, காந்தள் – kānthal bushes, Malabar glory lilies, அம் பொதும்பில் – near the beautiful bushes, பகல் நீ வரினும் – if you come during the day, புணர்குவை – you can join her, you can unite with her, அகல் மலை – huge mountain, wide mountain, வாங்கு – curved, அமை – bamboo, கண் இடை – between the nodes, கடுப்ப – like (உவம உருபு, a comparison word), similar, யாய் – mother, ஓம்பினள் – she nurtured, she protected, எடுத்த தட மென்தோளே – the raised curved delicate arms (மென்தோளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 19, பொருந்தில் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே, வந்து நனி
வருந்தினை, வாழி என் நெஞ்சே, பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனந்தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரல் குடிஞைய நெடும் பெருங்குன்றம்,  5
எம்மொடு இறத்தலும் செல்லாய், பின் நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது
செல் இனி, சிறக்க நின் உள்ளம், வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
சேயிதழ் அனைய ஆகிக் குவளை  10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇப் பையென
சில் வளை சொரிந்த மெல் இறை முன் கை  15
பூ வீழ் கொடியின் புல்லெனப் போகி,
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே.  19

Akanānūru 19, Porunthil Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
You did not stay back with her.
Now you have come here with
me to be sorry.
May you live long, my heart!

You are not considering going
with me to the soaring, huge
mountains where,
on the wide top of yā trees kites sit
and call pitifully, owls hoot
harshly like thudi drums, sounding like
they know the meanings of their hoots.

You wanted to stand back and return.
Go away quickly without hesitation.
May your mind flourish!

Do not forget me!

Her dark, wet eyelids that used to be
like the petals of blue waterlilies,
have become like the red leaves of
naravam.  Whenever she thinks of me,
her insides burn, she is sad, and tears roll
down her eyes.  She, with a few slipping
bangles on her forearms, is like a lusterless
vine whose flowers have dropped.
She lives in the light of a bright, beautiful
lamp made with metal, depressed and
lonely.  Remove the sorrow of my lover, by
embracing her suffering, slim, small back!

Notes:  நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைவன் தலைவியின் நலன் நயந்து உள்ளிய நெஞ்சிடம் சொன்னது.    பரிபாடல் 8-75 – நயவரு நறவு இதழ், மதர் உண்கண், பெரும்பாணாற்றுப்படை 386 – நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண்.  உயா – உயாவே உயங்கல் (தொல்காப்பியம் உரியியல் 73).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   அன்று – in the past, அவண் – there, ஒழிந்தன்றும் இலையே – you did not stay back (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், ஏகாரம் அசைநிலை, an expletive), வந்து நனி வருந்தினை – you are very sorry coming here, வாழி என் நெஞ்சே – may you live long my heart, பருந்து இருந்து உயா விளி பயிற்றும் – kites sit and screech with sorrow, யா உயர் நனந்தலை – on the wide top of the yā trees, ஆச்சா மரம், Hardwickia binata, உருள் துடி – round thudi drum, உருமி மேளம், மகுளியின் – like the sounds (இன் உருபு ஒப்புப் பொருளது), பொருள் தெரிந்து இசைக்கும் கடுங்குரல் – hoot loudly/harshly like it knows the meanings, குடிஞைய – with owls, நெடும் பெரும் குன்றம் – tall huge mountains, எம்மொடு இறத்தலும் செல்லாய் – you are not considering going with me, பின் நின்று – standing behind, ஒழியச் சூழ்ந்தனை ஆயின் – if you are thinking of going away, தவிராது செல் – go without stopping, இனி சிறக்க நின் உள்ளம் – may your mind flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), வல்லே – quickly, மறவல் ஓம்புமதி எம்மே – do not forget me (மதி – முன்னிலையசை, an expletive of the second person, எம்மே – தன்மைப் பன்மை, first person plural), நறவின் சேய் இதழ் – of the red leaves of naravam, Luvunga scandens, அனைய – like, ஆகி – became, குவளை மா இதழ் புரையும் – like the dark/large leaves of the blue lilies, Nymphaea caerulea (புரை – உவம உருபு, a comparison word), மலிர் கொள் – filled with, ஈர் இமை – wet lids, உள்ளகம் கனல – her mind burning (உள்ளகம் – உள் மனம், உள்ளம்), உள்ளுதொறு – whenever thinking, உலறி – becoming dry, becoming parched, பழங்கண் கொண்ட – with sorrow, கலிழ்ந்து வீழ் – crying with falling tears (கலிழ்ந்து – கலுழ்ந்து என்பதன் திரிபு), அவிர் – bright, அறல் – dripping tears (அறல் – அற்று விழுகின்ற நீர்), வெய்ய – getting hot, உகுதர – dropping, வெரீஇ – fearing (சொல்லிசை அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), பையென – slowly, சில் வளை – few bangles, சொரிந்த – slipping down, மெல் இறை – delicate arms/joints, முன் கை – forearms, பூ வீழ் கொடியின் புல்லெனப் போகி – become dull like a creeper that has lost its flowers (கொடியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அடர் செய் – made with sheet (metal), ஆய் அகல் சுடர் துணை ஆக – beautiful lamp’s light as a partner, இயங்காது – depressed, not functioning, வதிந்த – residing there, நம் காதலி உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – after hugging the thin back of our sad lover (பின்னே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 20, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங்கழித்  5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல் பூங்கானல் அல்கினம் வருதல்  10
கவ்வை நல் அணங்கு உற்ற இவ்வூர்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி, பெருந்துறை
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி  15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே.  16

Akanānūru 20, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Our father gave us fatty fish, that he
had caught in the huge ocean, to dry.
We rested in the sweet shade of a
of a punnai tree growing in the sand,
and chased away the marauding birds.

We hung rope swings,
made from roots of thāzhai trees that grow
near the curved backwaters on tall gnāzhal
trees and swayed, and dug into the deep
holes of red crabs on the shores where the
eastern winds have created sand dunes.

We performed kuravai dances. Hating it
we played on the waves with white tops,
and wore beautiful skirts made from many
flowers and fresh leaves.  We were slandered
by cruel women in town who were affected
by evil spirits, since we came here.

Mother heard their harsh words and has
imposed restrictions, afraid that your lover will
ride his chariot with lovely horses, analyzed and
tied well by his charioteer, on the moon-like,
white beach sand of the big shore at any time
of day or night.  What are we to do now?

Notes:  வரைதல் கருதாமல் களவு ஒழுக்கத்தையே நீட்டிக்கும் தலைவன் கேட்கும்படி தோழி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொண்டு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் நூற்பாவின்கண் ‘தமர் தற்காத்த காரண மருங்கினும்’ என வரும் துறைக்கு எடுத்துக் காட்டுவர்.  நல் அணங்கு (11) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை.  ஈண்டுப் பேய்.  நல் அணங்கு என்றது இகழ்ச்சிக் குறிப்பு.  ஒப்புமை:  நிலவு மணல் – அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  தாழை ஊஞ்சல் –  கலித்தொகை 131 – தண் தாழை வீழ் ஊசல் – நச்சினார்க்கினியர் உரை – தாழையினது விழுதால் திரித்து இட்ட ஊசல்.

Meanings:  பெருநீர் அழுவத்து – from the wide ocean, எந்தை தந்த – given by our father (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), கொழு மீன் – fatty fish, உணங்கல் – dried, வற்றல், படுபுள் ஓப்பி – chasing birds that come to seize the fish, எக்கர்ப் புன்னை – punnai tree in the sandy shore, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இன் நிழல் அசைஇ – stayed in the sweet shade (அசைஇ – சொல்லிசை அளபெடை), செக்கர் ஞெண்டின் – of red crabs (ஞெண்டின் – ஞெண்டு நண்டு என்பதன் போலி), குண்டு அளை கெண்டி – digging up deep holes, ஞாழல் ஓங்கு சினை – on the  gnāzhal tree tall branches, Cassia sophera, Tigerclaw tree, புலிநகக்கொன்றை, தொடுத்த – fastened, கொடுங்கழி – in the salty land with curved brackish water, தாழை வீழ் கயிற்று ஊசல் – swing made from the aerial roots of thāzhai tree, swing made from thāzhai tree fibers, Pandanus odoratissimus, தூங்கி – swayed, கொண்டல் இடு மணல் – sand brought by the eastern winds, குரவை – playing kuravai dances there, முனையின் – since we hated that, வெண்தலைப் புணரி – ocean waves with white tops, ஆயமொடு ஆடி – played with friends, மணி பூம் பைந்தழை தைஇ – wore beautiful flowers with fresh leaves (தைஇ – சொல்லிசை அளபெடை), அணித்தக – beautifully, பல் பூங்கானல் – the grove with many flowers, அல்கினம் வருதல் – to stay and come, கவ்வை – gossip, slander, நல் அணங்கு உற்ற – affected well by evil spirits, effected by strong evil spirts, இவ்வூர் – this town, கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு – listening to women who know to say cruel things, அன்னை கடி கொண்டனளே – mother has put you on guard (ஏகாரம் அசைநிலை, an expletive), தோழி – oh friend, பெருந்துறை – big shore, எல்லையும் இரவும் என்னாது – without considering that it is day or night, கல்லென – with a loud sound (ஒலிக்குறிப்பு மொழி), வலவன் ஆய்ந்த – charioteer analyzed and tied, வண் பரி – with beautiful horses, நிலவு மணல் – white sand that is like the moon, கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – that there is the chariot that roams around (கொட்கும் – சுழன்று திரியும், எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 21, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
“மனை இளநொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன மா வீழ் வெண்பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத்தோள்,
மடந்தை மாண் நலம் புலம்பச், சேய் நாட்டுச்  5
செல்லல்” என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினை நயந்து அமைந்தனை ஆயினை, மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்  10
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை  15
இருங்கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்  20
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார் கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,  25
இருங்களிற்று இன நிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே.  27

Akanānūru 21, Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the hero said to his heart, when he was on his way to earn wealth
Her teeth are like rows of similar white buds,
desired by bees, of the jasmine vine creeping
on the young nochi tree in the house yard, the
young woman with beautiful stomach, wide loins,
decorated, low hanging, soft hair, and curved
delicate bamboo-like arms.

When I told you that I was not leaving for a
far-away country, ruining her esteemed beauty,
you did not agree.  You said that we’ll make
my wife happy by bringing many kinds of wealth.
Now, rise up quick and go with me, my heart.
May you live long!

Without your help, I will not be able to cross
the forest, where the fragrant southern wind
blows and drops slowly opening whorled flowers,
……….as though a strong man is dropping
……….them from a beautiful kadampam
……….tree branch, hitting with a stick,
which fall on the curly hair of the warriors who
go to the wasteland, in a place which is dried
by the sun; kites guard chicks on omai
trees with parched tops; in the mountain cave
a beautiful female wild dog that has just given
birth is hungry, and her green-eyed mate
attacks a wild boar and his sow runs away
hitting a date palm, which drops its red
clusters of fruits in the gravel-filled land;
cattle herders use strong pick axes and dig pits
on raised, hard land, and abandon them
when they dry up, only to be covered by leaves;
and herds of big elephants fill them up in the
blocking forest of the wasteland thinking that
they are dug up by the unkind forest dwellers
who desire their white tusks.

Notes:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் வருந்திய நெஞ்சிடம் கூறியது.  ஒப்புமை:  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 – மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறுமுல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும்.  கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  மனை இள நொச்சி – young nochi tree that is in the house, Vitex leucoxylon, Chaste tree,  மௌவல் – wild jasmine vine, Jasminum angustifolium, வால் முகைத் துணை நிரைத்தன்ன – like similar white buds placed in a row, மா வீழ் – desired by honeybees, வெண்பல் – white teeth, அவ் வயிற்று – with a beautiful stomach, அகன்ற அல்குல் – wide loins, தைஇ – decorated (சொல்லிசை அளபெடை), தாழ் மென் கூந்தல் – low hanging hair, தட – big, curved, மென் – delicate, பணைத்தோள் – thick arms, bamboo-like arms, மடந்தை – young woman, மாண் நலம் புலம்ப – for her esteemed beauty to be ruined, சேய் நாட்டுச் செல்லல் – do not go to a distant country, என்று யான் சொல்லவும் – even when I said that, ஒல்லாய் – you did not agree, வினை நயந்து அமைந்தனை ஆயினை – you desired work, மனை நக – for my wife to be happy, பல் வேறு வெறுக்கை தருகம் – let us bring many kinds of wealth, வல்லே எழு – rise up with fast, இனி – now, வாழி –அசைநிலை, an expletive, may you live long, என் நெஞ்சே – my heart, புரி இணர் – twisted clusters, மெல் அவிழ் – opening slowly, அம் சினை புலம்ப – as beautiful branches suffer, வல்லோன் கோடு அறை – strong man hitting with a stick, கொம்பின் – like the stick (இன் உருபு ஒப்புப் பொருளது), வீ உக – flowers dropping, தீண்டி மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல் – fragrant southern breeze that touches the kadampam trees and shakes it (making it lose its flowers), Anthocephalus or Neolamarckia cadamba, Kadampam oak (மராஅம் – இசைநிறை அளபெடை), சுரம் செல் மள்ளர் – warriors who go to the wasteland, சுரியல் – hair curls, தூற்றும் – it drops, என்றூழ் நின்ற புன்தலை வைப்பில் – in the parched place with towns where the sun is hot, in the place where the sun is hot, பருந்து இளைப்படூஉம் – kites that protect chicks (இளைப்படூஉம் – இன்னிசை அளபெடை), பாறு தலை ஓமை – omai trees with disheveled tops, dry-topped omai trees, Dillenia indica, Toothbrush Tree, இருங்கல் – large mountain, விடர் அகத்து – in the caves, ஈன்று இளைப்பட்ட – gave birth and protecting the young ones, மென் புனிற்று அம் பிணவு பசித்தென – since its beautiful female that give birth recently is hungry, பைங்கண் செந்நாய் ஏற்றை – a male wild dog with green eyes, a male wild dog with fresh eyes, Cuon alpinus dukhunensis (பைங்கண் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), கேழல் தாக்க – attacks a wild pig, இரியல் – running away, பிணவல் – female pig, தீண்டலின் – since it touched, since it hit against, பரீஇச் செங்காய் – cut off red fruits (பரீஇ – சொல்லிசை அளபெடை), உதிர்ந்த பைங்குலை ஈந்தின் – dropped from fresh clusters of dates (பைங்குலை – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), பரல் மண் – sand with gravel, சுவல முரண் நிலம் உடைத்த வல்வாய்க் கணிச்சி – cut the raised hard land with strong pick axes with strong ends, கூழ் ஆர் கோவலர் – cattle herders who eat gruel, ஊறாது இட்ட – since there is no secretion (water), உவலைக் கூவல் – wells covered with leaves, வெண்கோடு – white tusks, நயந்த – desired, அன்பு இல் கானவர் – forest dwellers without kindness, இகழ்ந்து – careless and thinking that nothing is wrong, இயங்கு இயவின் – on the paths they go, அகழ்ந்த – dug, குழி – pit, செத்து – thinking, இருங்களிற்று இன நிரை தூர்க்கும் – herds of huge male elephants fill them up, பெருங்கல் – huge mountains, huge boulders, அத்தம் – wasteland, விலங்கிய காடே – the blocking forest (காடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 22, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்,
“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை  5
நெடுவேள் பேண தணிகுவள் இவள்” என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,  10
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற அரு விடர்த் ததைந்த
சாரல் பல் பூ வண்டுபடச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல  15
நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமை,
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே, எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு  20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?  21

Akanānūru 22, Veri Pādiya Kāmakanniyār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
He’s from the country where gods live
in tall mountains and forests abound
with waterfalls.
I am sad when I don’t hug his fragrant,
wide chest.  Those around me do not
understand this.  The diviner women
with wisdom say, “If we pray to Murukan
of great fame and large arms, who ruins
those who do not submit to him, her
sorrow will vanish”.

A pavilion is well erected, a spear is
garlanded, and our big house reverberates
with loud music.  Ritualistic offerings of
beautiful red millet mixed with blood are
given to Murukan, to appease him, in the
middle of the fierce night,

when my lover comes through the harsh
mountain slopes with sandal fragrance,
wearing a garland with many bee-swarming
clusters of flowers from caves so hard to reach,
slyly dodging the guards of our rich mansion,
like a tiger hiding to take down an elephant.
He comes with a desire in his heart, and that
is also my desire.  Whenever he hugs me, my
affliction goes away and I am very happy.
I laugh whenever I think of the vēlan and the
veriyāttam ritual, and how others believe it!

Notes:  (1) – வரை பொருள் பொருட்டுச் சென்ற தலைவன் வரவு நீட்டித்தான்.  வருந்திய தலைவியிடம் தோழி அவன் இயல்பினைப் பழித்தாள்.  அதை மறுத்துத் தலைவி இவ்வாறு உரைத்தாள்.  (2) – தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி அவன் வரையாது ஒழுகுவதால் அவனைப் பழித்தாள்.  தலைவி அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தமையைத் தலைவன் கேட்குமாறு தோழியிடம் கூறித் தலைவன் விரைவில் வரைந்துக் கொள்வான் என்பதைப் புலப்படுத்தினாள்.  Veriyāttam ritual is performed when the Murukan temple priest vēlan is invited to heal love-sick young girls who appear sickly.  The mother invites him to divine the reason for her daughter’s affliction, not aware of her love affair.  The priest uses molucca beans (kazhangu) on freshly laid sand in the front yard of the house, and tells the mother that Murukan’s anger is the reason for her daughter’s affliction.  He wears garlands, prays to Murukan, kills a goat and performs rituals.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  அகநானூறு 22 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய், அகநானூறு 272 – உருவச் செந்தினை நீரொடு தூஉய், பதிற்றுப்பத்து 19 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  மெய்ம் மலிந்து – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே.(தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

Meanings:  அணங்குடை நெடுவரை – tall mountains with gods, tall mountains that are fierce, உச்சியின் இழிதரும் – cascading down the summits, கணம் கொள் அருவி – many waterfalls, கான் கெழு நாடன் – lord of the land dense with forests, மணம் கமழ் – fragrance spreading, வியன் மார்பு – wide chest, அணங்கிய – distressed, செல்லல் – sorrow, இது என அறியா – not knowing that it is this, மறுவரல் – distressed, பொழுதில் – at that time, படியோர் – those who do not submit, தேய்த்த – ruined, killed, பல் புகழ்த் தடக்கை – fine fame and large hands, நெடுவேள் பேண – if they worship Murukan, தணிகுவள் இவள் என – her sorrow will vanish, முதுவாய்ப் பெண்டிர் –  female diviners, women with ancient wisdom, கட்டுவிச்சிகள், குறி சொல்லும் பெண்கள், அதுவாய் கூற – utter that it is true, களம் நன்கு இழைத்து – grounds well set, created well, கண்ணி சூட்டி – wore garlands, வள நகர் – rich house, சிலம்பப் பாடி – singing loudly, பலி கொடுத்து – giving offerings, உருவச் செந்தினை – pretty red millet, குருதியொடு தூஉய் – throwing with blood (தூஉய் – இன்னிசை அளபெடை), முருகு ஆற்றுப்படுத்த – bringing Murukan, உருகெழு நடுநாள் – fierce midnight, ஆரம் நாற – with sandal fragrance, அருவிடர் – mountain caves that are difficult to access, ததைந்த – dense,  clustered, சாரல் – mountain slopes, பல் பூ – many flowers, வண்டு படச் சூடி – wearing bee-swarming, களிற்று இரை தெரீஇய – like looking for a male elephant as prey (தெரீஇய – செய்யுளிசை அளபெடை), பார்வல் – looks (பார்வை), ஒதுக்கின் – moving, going (செலவுடையதாய்), ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல – like a strong tiger that hides and operates, நல் மனை நெடு நகர் – fine big house, காவலர் அறியாமை – without guards being aware, தன் நசை – his desire, உள்ளத்து – in the mind, of the mind, நம் நசை வாய்ப்ப – according to our desires, இன் உயிர் குழைய – sweet life to be soft, முயங்குதொறும் – when embracing, மெய்ம் மலிந்து – body happy, நக்கனென் அல்லனோ யானே –  did I not laugh?, எய்த்த – body thin, நோய் தணி காதலர் வர – lover who removes disease arriving, ஈண்டு – here, ஏதில் – one who is not suitable for this, a stranger to this matter, வேலற்கு – for the Murukan priest, உலந்தமை கண்டே – on watching them being cheated with his veriyāttam ritual (உலந்தமை – அழிந்தமை, கண்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 23, ஓரோடோகத்து கந்தரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மண்கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி,
புதல் மிசைத் தளவின் இதல் முள் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்
காடே கம்மென்றன்றே, அவல  5
கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர்,
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇத்
தண் அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே,
அனைய கொல் வாழி தோழி, மனைய  10
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
அவ்வளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே.  13

Akanānūru 23, Ōrōdakathu Kantharathanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!  Clouds roared
like drums, cold rain fell on the earth
and removed heat.  On the bushes, red buds
of thalavam bloomed, appearing like claws
of quails and they opened their petals along
with clusters of dense pidavam, making
the forest fragrant.

White glory lilies were strewn in the pits
and they appeared like broken conch shells.
Hating arukam tubers, a noble stag with
arrogant walk embraced its female and
moved away after drinking cool, flowing water.

Before he left, he pointed to the huge branches
of the short nochi tree in our house and
told me that he would return after earning
wealth when the jasmine vine that twines on it
blooms.   Has that time arrived?

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்தபொழுது தோழியிடம் தலைவி உரைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு முல்லைத் திணைக்குரிய முதலும் கருவும் உரிப்பொருள் பிரிதல் நிமித்தமாதலின் பாலைத் திணைக்காயிற்று.  ஒப்புமை:  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.

Meanings:  மண்கண் – on the land, on the soil, குளிர்ப்ப – to cool, வீசி தண் பெயல் பாடு உலந்தன்றே – the cool rain fell with sounds and the sounds of thunder died (உலந்தன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), பறைக் குரல் எழிலி – clouds that sound like drums, புதல் மிசைத் தளவின் – with thalavam flowers on the bushes, golden jasmine, செம்முல்லை, இதல் முள் – sharp claws of quails, காடை, செந்நனை – red buds, நெருங்கு குலைப் பிடவமொடு – with dense clusters of pidavam flowers, Bedaly-nut vine, ஒருங்கு பிணி அவிழ – opened their ties together, காடே கம்மென்றன்றே – the forest was fragrant (காடே – ஏகாரம் அசைநிலை, an expletive), அவல – in the pits, கோடு உடைந்தன்ன – like broken conch shells, கோடல் பைம்பயிர் – fresh white glory lily plants, பதவின் பாவை முனைஇ – hating the arukam tubers, Cynodon grass (முனைஇ – சொல்லிசை அளபெடை), மதவு நடை அண்ணல் இரலை – a noble stag with arrogant walk, அமர் பிணை தழீஇ – embraced its loving mate (தழீஇ – சொல்லிசை அளபெடை), தண் அறல் பருகி – drank the cool flowing water, தாழ்ந்து பட்டனவே – went and stayed in a place ஏகாரம் அசைநிலை, an expletive), அனைய கொல் – is it that time (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), வாழி தோழி – may you live long oh friend, மனைய – in the house, தாழ்வின் நொச்சி – the short nochi trees, Vitex leucoxylon, Chaste tree, சூழ்வன மலரும் மௌவல் – surrounded by blooming jasmine vines, Jasminum angustifolium, மாச்சினை காட்டி – looking at the big branches, அ அளவு – at that time, என்றார் – he said, ஆண்டுச் செய் பொருளே – the wealth that he made there (பொருளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலை பிணி அவிழா சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,  5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை தென்புலம் படரும்
பனி இருங்கங்குலும் தமியள் நீந்தி,
தம் ஊரோளே நன்னுதல், யாமே,  10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து,  15
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறையேமே.  18

Akanānūru 24, Āvūr Moolankizhār, Mullai Thinai – What the hero said
They bloom when the cool rain falls,
the tight pakandrai buds with swirls
that look like the remaining top parts
of conch shells, left over after a
Brahmin who does not perform rituals
cuts with his sharp saw, to make bangles.

In the cold dawn hours, the bright rays
of the sun hide on the last day of rain
in the month of Thai.
Huge, dark rainclouds pour in vast areas
as though the sky is peeled before they
move to the south.  The bright-browed
woman is alone in the cold winter nights.
I am in the battle camp of the brave,
angry king, his strong arms with a sword
that he removed from its sheath and did
not put back.

The sounds are heard, of bright bells
with long clappers tied on a small-eyed
elephant whose white tusks are blunted
and the ends broken,
when it leapt and attacked the well-protected
fortress gates.  Sounds of volleys of arrows
attacking black shields that are tied to rods
are heard along with the roars of drums.

Notes:  தலைவன் பருவங்கண்டு சொல்லியது.  வினைமுற்றும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியதுமாம்.  வேளாப் பார்ப்பான் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறை பயின்று வேள்வி செய்யும் அறிவு மதுகையில்லாத பார்ப்பனர் அக்காலத்தே சங்கு அறுத்து வளையல் செய்தனர் என்பது இதனால் பெற்றாம்.  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).  சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194 – கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை.

Meanings:  வேளாப் பார்ப்பான் – a Brahmin who does not perform rituals, வாள் அரம் துமித்த – cut with a sharp saw, வளை களைந்து – removed for bangles, cut conch shells, ஒழிந்த – remaining, கொழுந்தின் அன்ன தலை – like the top parts of conch shells (கொழுந்தின் – இன் சாரியை), பிணி அவிழா – tightness not opened, சுரி முகப் பகன்றை – pakandrai buds with swirl, Operculina turpethum, Indian jalap, சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – they blossom when there are beautiful raindrops, தைஇ – Thai month (சொல்லிசை அளபெடை), நின்ற – stopped, தண் பெயல் – cool rain, கடை நாள் – the last day, வயங்கு கதிர் கரந்த – the bright rays hid, வாடை – cold, வைகறை – dawn, விசும்பு உரிவது போல் – like the sky is peeling, வியல் இடத்து ஒழுகி – pours in a wide area, மங்குல் மா மழை – dark huge clouds, தென்புலம் படரும் – spread to the south, பனி இருங்கங்குலும் – in the winter’s very cold nights (கங்குலும் – உம்மை சிறப்பு), தமியள் நீந்தி தம் ஊரோளே – she spent alone in her town, நன்னுதல் – the woman with a bright forehead (நன்னுதல் – அன்மொழித்தொகை), யாமே – me (தன்மைப் பன்மை, first person plural), கடி மதில் கதவம் பாய்தலின் – due to leaping and attacking the protected fortress gates, தொடி பிளந்து – the rings on the tusks cracked, நுதி முகம் மழுகிய மண்ணை – their tips blunted and flattened, வெண்கோட்டு – white tusked, சிறுகண் யானை – small-eyed elephant, நெடு நா ஒண் மணி – bright bell with long clappers, கழிப் பிணி – tied with sticks, கறைத் தோல் – stained shields, black shields, பொழி கணை உதைப்பு – raining arrows attack (உதைப்பு – தாக்குதல்), தழங்கு குரல் முரசமொடு முழங்கும் – along with the roars with throbbing drums, யாமத்து – at night, கழித்து உறை செறியா – removed from the cover and not put back, வாளுடை எறுழ்த் தோள் – strong arms with sword, இரவு துயில் மடிந்த தானை – warriors are sleeping at night, உரவுச் சின வேந்தன் பாசறையேமே – I am in the battle camp of the greatly angry king (பாசறையேமே – தன்மைப் பன்மை, first person plural, ஏகாரம் அசைநிலை, an expletive)   

அகநானூறு 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல,  5
மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்,
சினைப் பூங்கோங்கின் நுண் தாது பகர்நர்  10
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,  15
“நோவல் குறுமகள், நோயியர் என் உயிர்” என
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர், வாழி தோழி, பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன்  20
இன்னிசை இயத்தின் கறங்கும்,
கல் மிசை அருவிய காடு இறந்தோரே. 22

Akanānūru 25, Ollaiyūr Thantha Poothappandiyan, Pālai Thinai – What the heroine’s friend said to her
The forest stream with long shores
and flood waters is dry.
Bright, fine sand is mixed with many
other kinds of sand in the wide port.
In the groves near the cool pond,
Kānji tree flowers have dropped fresh
pollen on the sand dunes.  New fragrance
of weddings has spread abundantly.

A sapphire-colored dark kuyil pricks
large mango buds and sings according
to tradition.  Swarms of bees drop ilavam
pollen.  The fine pollen of kōngam flowers
is like the gold
in the coral boxes of gold merchants.
Even those who disrespect love are unable
to be separated in this desirable season.

Do not be sad with hatred that
he has not come at the agreed time.
Your kohl-rimmed eyes shed tears
since he is not back.  May you live long,
my friend!

He will come quickly saying gently and
sweetly, “Oh young woman!  May my life
that hurt you suffer!”  He went past the
forest to the mountain with waterfalls that
crash down loudly sounding like the sweet
roars of the drums of king Thithiyan of
Pothiyil Mountains, who owns a golden
chariot, who won battles against enemies,
and carries a bow in his large hands.

Notes:  பருவங்கண்டு வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  இகழுநர் இகழா இள நாள் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழுகின்ற துறவோரும் அதனை இகழாமல் உள்ளத்தூடே விரும்புதற்குரிய இந்த இள வேனில், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பிரிவால் எய்தும் துயர்களைப் புறக்கணித்துப் பிரிவோரும் அங்ஙனம் இகழ்ந்து பிரியவொண்ணாத இளவேனில் காலம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  நெடுங்கரை – long shores, tall banks, கான்யாற்று – of a forest stream, கடும் புனல் – fierce flood, சாஅய் – has dried up (இசை நிறை அளபெடை), அவிர் அறல் கொண்ட விரவு மணல் – with bright fine sand and mixed sand, அகன் துறை – wide shore/port, தண் கயம் நண்ணிய பொழில்தொறும் – in all the groves near the cool pond, காஞ்சிப் பைந்தாது – fresh pollen from portia trees, பூவரச மரம், portia tree, Thespesia populnea, அணிந்த போது மலி எக்கர் – sand dunes adorned with lots of buds ready to bloom, வதுவை நாற்றம் – marriage fragrance, புதுவது கஞல – new fragrance has risen/spread abundantly, மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில் – sapphire colored dark cuckoo that pricks big mango buds, படு நா விளியால் நடு நின்று அல்கலும் – singing there daily, உரைப்ப போல – like it is telling, ஊழ் கொள்பு கூவ – call as is tradition, இனச் சிதர் – swarms of bees, உகுத்த – dropped, இலவத்து ஆங்கண் – on the ilavam trees, சினைப் பூங்கோங்கின் நுண் தாது – fine pollen from the branches with kōngam flowers, Cochlospermum gossypium, பகர்நர் – merchants, பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன – like gold poured into a coral box, இகழுநர் இகழா இள நாள் – even those who disrespect love are unable to be separated in this desirable early spring season, அமையம் செய்தோர் – the one who agreed on a time, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, குறி – indicated, என நீ – you, நின் பைதல் உண்கண் – your sad kohl-rimmed eyes, பனி வார்பு உறைப்ப – with tears dripping down, வாராமையின் – since he has not come back, புலந்த நெஞ்சமொடு – with a sad heart, with a hating heart, நோவல் குறுமகள் – do not be sad oh young woman, நோயியர் என் உயிர் – may my life suffer, என மெல்லிய இனிய கூறி வல்லே வருவர் – he will come quickly saying delicate sweet words, வாழி தோழி – may you live long my friend, பொருநர் செல் சமம் கடந்த – won battles against enemy warriors, வில் கெழு தடக் கை – big hands with a bow, பொதியில் செல்வன் – the lord of Pothiyil mountains, பொலந்தேர்த் திதியன் – king Thithiyan with a gold chariot, இன்னிசை இயத்தின் – like sweet instrument sounds of drums (இயத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கறங்கும் கல் மிசை அருவிய காடு இறந்தோரே – one who went to the forest with waterfalls that roar down from the mountains (அருவிய – குறிப்புப் பெயரெச்சம், இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 26, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற,
மீன் முள்ளன்ன, வெண்கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அவ் வயல் தண்ணிய வளங்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி? அல்கல்  5
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
“முயங்கல் விடாஅல் இவை” என மயங்கி,
யான் “ஓம்” என்னவும் ஒல்லார் தாம், மற்று  10
இவை பாராட்டிய பருவமும் உளவே, இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்,
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே,  15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே, ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
“நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர், இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்” என மெல்ல என்  20
மகன் வயின் பெயர்தந்தேனே, அதுகண்டு
“யாமும் காதலம் அவற்கு” எனச் சாஅய்
சிறுபுறம் கவையினனாக, உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே  25
நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே?  26

Akanānūru 26, Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi, Marutham Thinai – What the heroine said to her friend
My friend!  Is it possible for me
to quarrel with the man from the town
with lovely, prosperous, cool fields,
where young women playing poythal games
collect dark colored flowers with fish-bone-
like white stems, that have dropped from the
bent clusters of mulli plants with curved thorns,
to decorate and beautify their festivals?

In the past,
he would embrace me tightly,
refusing to let go even if I pushed
him away.  He praised my breasts,
telling me that their big eyes were lovely
like the iron rings on the tusks of elephants
that batter fortress gates daily.

Now,
even when I desire to embrace his
wide, bright, colored chest with fragrant sandal
paste, he is afraid to hug me because of the
sweet milk for my son from my delicate,
swollen breasts with pallor spots,
and his hands slip away.

I looked at my son of tender walk held by his
foster mother.  Then I said to my husband,
“You are desirable to your women,” and moving
closely to my son gently, I said, “I am one with
love for my son.”  He heard that and replied that
he has love for our son, and hugged my slim,
small back humbly.  I softened like fine soil
which had been rained on heavily and plowed
many times.  I understood then that my confused
heart abandoned me and went toward him.

Notes:   பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டினான்.  அவள் மறுத்தாள்.  அவன் தலைவியை அணுகி மாயப் பொய்மொழி கூறினான்.  ஊடல் தீர்ந்து அவனுடன் கூடினாள் தலைவி.  மறுநாள் அவள் தலைவனுடன் கூடியதுபற்றி தோழி வினவ, தலைவி அவளிடம் காரணம் கூறுகின்றாள்.  ஒப்புமை:  குறுந்தொகை 291 – தண் துளிக்கு ஏற்ற மலர்.  குறுந்தொகை 382 – தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை.  அறை போகிய (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கீழறுத்துப் போதல், வஞ்சித்துப்போதல்.  அறிவினேற்கே (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லறிவுடையேனுக்கு.   அல்கல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாள்தோறும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இரவில்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கூன் முள் முள்ளி – mulli plants with curved thorns, நீர் முள்ளிச் செடி, Asteracantha Longifolia, குவி குலை – pointed clusters, bent clusters, கழன்ற – dropped, மீன் முள் அன்ன – like fish bones, வெண்கால் – white-stemmed, மா மலர் – dark/large flowers – waterlilies, பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – young women who play poythal games collect flowers to make festivals beautiful, அவ் வயல் தண்ணிய வளம் கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ தோழி – is it possible my friend to quarrel with the man from the town with beautiful cool fields, அல்கல் – daily, at night, பெருங்கதவு – large gates, பொருத யானை – attacking elephants, மருப்பின் – on the tusks, இரும்பு செய் தொடியின் – like the rings made with iron (தொடியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஏர ஆகி – are beautiful, மாக்கண் – black eyes, black nipples, அடைய மார்பகம் பொருந்தி –  embraced the chest firmly, முயங்கல் விடாஅல் – did not let go of embraces (விடாஅல் – எதிர்மறை வியங்கோள், இசைநிறை அளபெடை), இவை – these, என – thus, மயங்கி – confused, யான் – I, ஓம் – go away (ஓவும் என்பதன் இடைக்குறை, செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது), என்னவும் – even when I said, ஒல்லார் – he would not agree, தாம் மற்று இவை பாராட்டிய பருவமும் உளவே – there were times when he praised these (உளவே – ஏகாரம் அசைநிலை, an expletive), இனியே – now (ஏகாரம் அசைநிலை, an expletive), புதல்வன் தடுத்த பாலொடு – with milk for the son whose mind is blocked from not wandering, தடைஇ – large, curved (சொல்லிசை அளபெடை), திதலை அணிந்த – with pallor spots, தேம் கொள் – sweet (தேம் தேன் என்றதன் திரிபு), மென் முலை – delicate breasts, நறுஞ்சாந்து அணிந்த – wearing fragrant sandal paste, கேழ் கிளர் அகலம் – bright colored chest, வீங்க – swollen, முயங்கல் – embrace, யாம் வேண்டினமே – even if I request (யாம் – தன்மைப் பன்மை, first person plural, வேண்டினமே – தன்மைப் பன்மை, first person plural, ஏகாரம் அசைநிலை, an expletive), தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே – he is afraid that sweet milk would touch him (அஞ்சினரே – ஏகாரம் அசைநிலை, an expletive), ஆயிடைக் கவவுக் கை நெகிழ்ந்தமை – his embracing hands slipped away, போற்றி –  praising, மதவு நடைச் செவிலி கை என் புதல்வனை நோக்கி – I looked at my son of delicate walk in the hands of his foster mother, நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் – you are desirable/agreeable to your fine women, இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம் – I am desirable/agreeable to my son here (யாம் – தன்மைப் பன்மை, first person plural), என மெல்ல என் மகன் வயின் பெயர்தந்தேனே – and I moved slowly gently to my son (பெயர்தந்தேனே – ஏகாரம் அசைநிலை, an expletive), அது கண்டு – on seeing that, யாமும் காதலம் அவற்கு – he said “I have love for our son” (யாம் – தன்மைப் பன்மை, first person plural), என – thus, சாஅய் – humbly (இசை நிறை அளபெடை), சிறுபுறம் கவையினனாக – he came and bent and embraced my small back, உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற – that accepted cold heavy drops of rain (துளிக்கு – துளியை, உருபு மயக்கம், உறு – மிக்க), பல உழு செஞ்செய் மண் போல் – like perfect soil that was plowed many times, நெகிழ்ந்து  – softened, அவன் கலுழ்ந்தே நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே – I understood that my confused heart abandoned me and went toward him (அறிவினேற்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 27, மதுரைக் கணக்காயனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப என்ப”, என்போய், நல்ல  5
மடவை மன்ற நீயே, வட வயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய்  10
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே, தேம்படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட,
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்  15
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?  17

Akanānūru 27, Mathurai Kanakkāyanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend!  You tell me, “They
say he will leave us desiring to earn
wealth, letting us cry, to the harsh
forest, where big bamboos sway
and bend in the westerly winds on
the tall mountains and reveal
lurking tigers with curved stripes”.

You are a fine, delicate woman!
His leaving will be blocked
by your smile with bright teeth
in your coral-colored mouth,
resembling pearls from the wide
shores of Korkai town that is
protected well by brave battling
Pandiyans who got white-tusked
elephants from the northern
Vēnkadam Hills.

How will they let him go?  Your
kohl-lined eyes, that have ruined
the beauty of blue waterlily flowers
with honey growing with thick stems
in clear water, with joyous looks and
red lines, appearing like the fine
spears with blood of a king who won
a battle in a battlefield where kites soar.

Notes:  தலைவனின் செலவு உணர்ந்து வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  பருந்து பட (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருந்துகள் வீழும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பருந்துகள் வந்து சூழ.  ஒப்புமை: முத்தைப் போன்ற பற்கள்அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர்வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அமர்த்த நோக்கே (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உவந்து நோக்கும் நோக்கம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மாறுபட்ட பார்வை.

Meanings:  கொடுவரி – curved stripes, இரும்புலி – big tigers, தயங்க – to appear, to be exposed, நெடுவரை – tall mountains, ஆடு கழை – swaying bamboos, இரு வெதிர் – big bamboos, கோடைக்கு – due to the westerly winds, due to the summer breezes, ஒல்கும் – they bend, கானம் – forest, கடிய என்னார் – he does not think that it is harsh, நாம் அழ – letting us cry, நின்றது இல் – without staying, பொருட்பிணிச் சென்று இவண் தருமார் செல்ப என்ப – they say that he will go with the desire to earn and bring back wealth, என்போய் – you who is saying this (விளி, an address), நல்ல மடவை மன்ற நீயே – you are certainly a good and delicate/naive woman (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), வட வயின் – in the north, வேங்கடம் பயந்த – Vēnkadam hills yielded, வெண்கோட்டு யானை – elephant with white tusks, மறப் போர்ப் பாண்டியர் – Pandiyars who fight brave wars, அறத்தின் காக்கும் கொற்கை – Korkai city that they protect with justice, அம் பெருந்துறை முத்தின் அன்ன – like the pearls from its wide shores teeth (முத்தின் – இன் சாரியை), நகைப் பொலிந்து – with splendid smiles, இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, தகைப்ப – blocking, தங்கலர் ஆயினும் – even if he does not stay, இகப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே – but how will they let him go (மற்றே – மற்று வினைமாற்றின்கண் வந்தது, ஏ அசைநிலைகள், expletives), தேம்பட – causing honey, causing nectar (தேம் தேன் என்றதன் திரிபு), தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – like the blue waterlilies with thick stems that accepted the clear water, Nymphaea caerulea, பெருந்தகை – greatness, great beauty, சிதைத்தும் – even if crushed, அமையா – not calming down, பருந்து பட – kites surround, kites dive down, வேத்து அமர்க் கடந்த வென்றி – victory after wars by kings (வேத்து – வேந்து வேத்து என விகாரமாயிற்று), நல் வேல் குருதியொடு – with blood caused by fine spears, துயல்வந்தன்ன – like moving, நின் – your, அரி – lines, வேய் – having, உண்கண் – kohl-rimmed eyes, அமர்த்த நோக்கே – joyful looks, differing looks (நோக்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 28, பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி கேட்கும்படியாக
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே  5
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி  10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே. 14

Akanānūru 28, Pandiyan king Arivudainampi, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
You don’t understand the situation
because of your passionate love.

My friend!  Let me tell you!
The water flow to the field has
been stopped.  Even before the
mature, long clusters of millet
have been plucked, stubble has
appeared among many green stalks.
You wait for your lover who wears a
honey- dripping flower garland with
many fragrances and crosses many
mountains with his fast dogs.

You should rise up regularly and make
loud noises to chase the parrots,
causing your flower garland to sway.
Otherwise, your mother will say,
“She does know to chase parrots,”
and will send someone else instead.
Then it will become difficult for you
to embrace the wide chest of your man.

Notes:   தலைவிக்கு கூறுவாளாய் அன்னை இற்செறிப்பாள் என்பதை தலைவனுக்கு அறிவுறுத்தி வரைவு கடாயது.  மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் (1-2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருவர் உடம்பினின்றும் ஒருவர் உடம்பு அகலாமைக்குக் காரணமாய் ஒரு காலைக் கொருகால் மேம்பட்டு வருகின்ற நின் காமப் பண்பினாலே நினக்கு உறுதியாவதனை அறிகின்றிலை, ச. வே. சுப்பிரமணியன் உரை –  மிகுதியாக வரும் அன்பினால் வரும் துன்பத்தை நீ அறியாய், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒருவர் மெய்யினின்றும் ஒருவர் மெய் நீங்காதவாறு பொருந்திய காமத்தால் நீ அறியாய்.  ஆன்ற (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகன்ற, இல்லையான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமைந்த, இல்லையான; ஆனா என்னும் எதிர்மறைச்சொல் உடன்பாட்டில் வருங்கால ஆன்ற என்று வரும்.  முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வேறுபட்ட பல மணங்களும் கமழும் தேன் ஒழுகும் கண்ணியையுடையனான, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் முருகன் அல்லன் என்று வேறுபாடு அறிதற்குக் காரணமான கடம்பின் கண்ணியல்லாத தேன்சொரியும் மலரால் இயன்ற மணமாலையைத் தலையில் சூடுகின்ற.  உறற்கு (14) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அடைதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முயங்கி மகிழ்வதற்கு.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  மெய்யின் – physically, with the bodies, தீரா – not leaving, மேவரு காமமொடு எய்யாய் – you don’t understand the situation because of your passionate love, ஆயினும் – even so, உரைப்பல் தோழி – let me tell you oh friend,  கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே – even before the long clusters of millet have been plucked (தினையே – ஏகாரம் அசைநிலை, an expletive), அருவி ஆன்ற –  without flowing water, பைங்கால் தோறும் – in all the green stems (பைங்கால் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), இருவி தோன்றின – stubble has appeared, stalks without grains have appeared, பலவே – many (ஏகாரம் அசைநிலை, an expletive), நீயே – you, முருகு முரண் கொள்ளும் – with many conflicting fragrances, differing from Murukan since he is not wearing a kadampam flower garland, தேம்பாய் கண்ணி – with honey flowing flower garlands (தேம் தேன் என்றதன் திரிபு), பரியல் நாயொடு – with dogs that run rapidly, பன்மலைப் படரும் – going through many mountains, வேட்டுவற் பெறலொடு அமைந்தனை – you desire to obtain your lover who hunts, யாழ –அசைநிலை, an expletive,  நின் பூக்கெழு தொடலை நுடங்க – as your garland with flowers sway, எழுந்து எழுந்து கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் – if you don’t get up often and shout clearly regularly to chase parrots,  அன்னை – mother, சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – that she does not know to protect from parrots,  பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின் – if she will bring somebody else instead and place them there, உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – it will be hard to embrace his wide chest (மார்பே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 29, வெள்ளாடியனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
“தொடங்கு வினை தவிரா அசைவில் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்,
செய் வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று  5
இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
வாழலென் யான்” எனத் தேற்றிப் பல் மாண்  10
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம், எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன்னகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை! கேள் இனி!
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,  15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங்கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு  20
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடங்கெழு நெஞ்சம் நின் உழையதுவே!  24

Akanānūru 29, Vellādiyanār, Pālai Thinai – What the hero said to her, after he returned with wealth
Oh woman with fine teeth in a coral
colored mouth!
You ask me, your smile ruined,
continuously, “Not abandoning what
you started, without any slack and
with great effort when you went
to do your work without a base mind,
……….superior to that of a tiger that
……….will not eat his prey elephant if
……….he falls on his left, even if his
……….life would be pathetic,
and told me that the days that you
spent without seeing my kohl-rimmed
eyes that bring happiness when seen,
……….beautiful like the two pieces of a
……….fragrant tiny mango cut with a knife,
were days that you have not lived.
You explained to me with esteem and
uttered many humble words.  It
seems that you forgot your fine words!”

Listen to me, oh young woman wearing
beautiful jewels!
I went to the wasteland which had been
ruined by excess heat, where an elephant
that became thin, not knowing where to
find water to drink, runs to a mirage only
to find no water and lies down with sorrow,
looking like a boat on land without water,
and difficult paths make people tremble
in distress.

With a desire to earn wealth, with bashfulness
as a restraint, and unable to bear disrespect,
my body left to perform esteemed
work, but my naive heart stayed here with you.

Notes:  வினை முற்றி மீண்ட தலைவன் எம்மை நினைத்தீரோ என்று வினவிய தலைவியிடம் சொன்னது.  ஒப்புமை:  மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள் – அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண்.   There is a convention that when a tiger’s prey falls on its left, the tiger will not eat it.  It will abandon it.  It will eat only if the prey falls on its right side. This is mentioned in poems Akanānūru 3, 29, 238, 252, 357 and 389, Natrinai 154 and Puranānūru 190.

Meanings:  தொடங்கு வினை தவிரா – not abandoning work that was started, அசைவு இல் – without becoming tired, நோன் தாள் – firm effort, கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் – even if life were sad with hunger, இடம்படின் வீழ் – if it falls on the left, களிறு மிசையாப் புலியினும் சிறந்த – better than the tiger than does not eat the elephant, தாழ்வு இல் உள்ளம் – a mind which is not weak, தலைத்தலைச் சிறப்பச் செய் வினைக்கு – to do the job in a better and better manner, அகன்ற காலை – when I went, எஃகு உற்று – using a knife, இரு வேறு ஆகிய – become two different pieces, தெரிதகு – analyzed suitably, வனப்பின் – with beauty, மாவின் நறுவடி போல – like the fragrant little green mangoes, மாவடு, காண்தொறும் – whenever I see, மேவல் – desire, தண்டா – not reduced, மகிழ் நோக்கு – happy look, உண்கண் – kohl-rimmed eyes, நினையாது – without thinking, கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென் – all the days spent (without you) have not been lived by me even a little bit (எனையதூஉம் – இன்னிசை அளபெடை), யான் எனத் தேற்றி – thus you explained clearly to me, பல் மாண் தாழக் கூறிய தகை சால் – with esteem you said many humble nice words, நன்மொழி மறந்தனிர் போறிர் எம் – it appears that you forgot the fine words that you said to me, என – thus, சிறந்த – fine, நின் எயிறு கெழு துவர் வாய் – your teeth-filled red mouth, your teeth-filled coral-like red mouth, இன் நகை அழுங்க – sweet smile ruined, வினவல் ஆனா – asking continuously, புனையிழை – oh woman wearing beautiful jewels (விளி, an address, அன்மொழித்தொகை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கேள் இனி – listen now, வெம்மை – heat, தண்டா – not reduced, எரி உகு பறந்தலை – burning battlefield, hot wasteland, கொம்மை வாடிய – became thin, lost its largeness, இயவுள் யானை – an elephant that is going on the path, நீர் மருங்கு அறியாது – not knowing where water is, தேர் மருங்கு ஓடி – runs to a mirage, அறு நீர் அம்பியின் – like a boat without water (அம்பியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நெறி முதல் உணங்கும் – is sad in the path, உள்ளுநர்ப் பனிக்கும் – causes those who think to tremble, ஊக்கு அருங்கடத்திடை – in the difficult wasteland path without enthusiasm, எள்ளல் – disrespecting, slandering, நோனா – unable to bear, பொருள்தரல் விருப்பொடு – with a desire to earn wealth, நாணுத் தளை ஆக – embarrassment as a control, bashfulness as a restraint, வைகி – stayed, endured, மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை – my body left for esteemed work, அல்லதை – other than that (அல்லது, ஈறு திரிந்தது), மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – my ignorant/naive heart has been with you (உழையதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 30, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் 5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்,  10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங்கானல் வந்து, நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே?  15

Akanānūru 30, Mudangi Kidantha Neduncheralāthan, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the shore where happy
fishermen who unite with their partners
catch loads of fish with pretty, closely woven
nets made with long ropes, join their
youngsters and elders on the beach,
pull the nets with uproar to the sandy shore,
gathering together like the strong bulls
of salt merchants that are yoked to wagons,
give generously like charitable farmers,
and fill the bowls of those in need with fish,
splitting the rest of their catch into sections,
calling out prices, and sleeping on the shore
with tall and firm sand dunes!

Will your pride be ruined if you come to the
fragrant seashore grove where punnai tree 
buds look like unwashed pearls and ask us
about our beauty and then leave?

Notes:  பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.  வண்ணம் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மேனியின் வண்ணம், வண்ணம் அழிவுப்படுவதை குறித்தற்கு.

Meanings:  நெடுங்கயிறு வலந்த – tied with long ropes, குறுங்கண் அவ்வலை – beautiful net with small holes/spaces, கடல் பாடு அழிய – pride of the ocean reduced, இன மீன் – shoals of fish, முகந்து – took, துணை புணர் உவகையர் – happy to be united with their partners, பரத மாக்கள் – fishermen, இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – youngsters and elders join together with their families, உப்பு ஒய் உமணர் – salt merchants who ride and sell salt, அருந்துறை போக்கும் ஒழுகை – carts going in the difficult shore, நோன் பகடு ஒப்ப – like strong bulls, குழீஇ – gathered (சொல்லிசை அளபெடை), அயிர் திணி அடைகரை – shores filled with fine sand, ஒலிப்ப – to sound, வாங்கி – pull in, பெரும் களம் தொகுத்த உழவர் போல – like farmers who collect from a big field, இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி – give abundantly filling the bowls of those who come in need with fish, பாடு பல அமைத்து – split it into sections/groups, கொள்ளை சாற்றி – announced the prices, கோடு உயர் திணி மணல் – tall and firm sand dunes, துஞ்சும் – they sleep, துறைவ – oh lord of the shores (அண்மை விளி), பெருமை என்பது கெடுமோ – will your pride be ruined, ஒரு நாள் – one day, மண்ணா முத்தம் – pearls that are not cleaned, அரும்பிய புன்னை – punnai buds, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தண் நறும் கானல் – cool fragrant seashore grove, வந்து – come, நும் வண்ணம் எவனோ – how is your beauty, how is your body color, என்றனிர் – if you ask, செலினே – and leave, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 31, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து  5
மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்  10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி, வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே.  15

Akanānūru 31, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
There is nobody to blame him for leaving,
oh friend!  I am being blamed for not being
able to bear the separation!

He crossed many mountains, in a land with
a different language, protected together by the
Chera, Chozha and Pandiya kings who nurture
Thamizh, who are manly in strength and victorious
with battle arrows that bring tributes from enemies,

and went past the forest where the bright sun is red
and hot as flame, fertile lands are ruined, the land
has lost its stability, rains failed and it appears like
the end of time when people die, and on the tall split
branch of a yā tree on the path are eagle chicks who
are fed by their parents the eyes of those lying around
wounded, who appear like corpses on the path dull in
color with stripes of fat, and the oozing blood from the
wounds caused by the arrows of bandits who live in the
rock-filled villages, makes the wounded appear as
though they are wearing red oleander garlands!

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்தபொழுது தலைவி வருந்தினாள்.  அவள் ஆற்றாளாயினாள் என்று பிறர் கூறக்கேட்டு வேறுபட்ட தலைவி தோழியிடம் உரைத்தது.  கல்லுடைக் குறும்பின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிஞ்சி திரிந்த பாலை ஆதலின் கல்லுடை குறும்பு என்றார்.  நிண வரிக் குறைந்த நிறத்த அதர் தொறும் கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் (8-10) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பொலிவுற்ற நிறத்தினுடைய வழிதோறும் செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாலொப்ப நிண ஒழுங்கும் புண் சொரியும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை  – தங்கள் நிணம் சிந்தி வரிவரியாய்த் தோன்றுமளவிற்கு உறைந்து கிடத்தலாலே வெண்ணிறமாகிய வழிகளில் எல்லாம் செவ்வலரி மலராற் றொடுத்த மாலையைக் கைவிட்டு போனாற்போன்று அவர் முதுகில் அம்பு பட்ட புண்கள் உமிழ்ந்த குருதி உறைந்து கிடப்பவையே தம்முடலைத் தாங்கா நிற்ப ஓடமாட்டாது இளைத்து வீழ்ந்து கிடப்பவருடைய.  புலியூர் கேசிகன் உரை – செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாற்போல் நிண ஒழுங்கும் புண்கள் சொரியும் குருதியும் சூழக் காயம்பட்டுக் கிடந்தோர்.  தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே (14-15) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமிழ் நாட்டினை ஆளும் மூவராலும் காக்கப்பெறும் வேற்று மொழியுள்ள தேயங்களில் உள்ள பல மலைகளையுங் கடந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்ப்பண்பு பொருந்திய சேர சோழ பாண்டியராகிய மூன்று முடி மன்னரும் செங்கோன்மையுடன் காவல் செய்கின்ற மொழி வேறுபட்ட வேற்று நாட்டின்கண் உள்ளனவாகிய பலவாகிய மலைகளையும் கடந்து.

Meanings:   நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – the bright hot sun which is red like fire, புலங்கடை மடங்க – farming lands ruined, தெறுதலின் ஞொள்கி – since it dried and ruined, நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று – has the earth lost its stability now, என – thus, மன் உயிர் மடிந்த – when stable lives on earth are dead, மழை மாறு அமையத்து – at the time when rain did not fall, இலை இல – without leaves  (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), ஓங்கிய நிலை உயர் யாஅத்து – on a tall yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅத்து – அத்து சாரியை), மேல் கவட்டு இருந்த – living in the upper forked branches, பார்ப்பு இனங்கட்கு – for the many baby chicks, கல்லுடைக் குறும்பின் – in a small village with rocks, in a village with hills, வயவர் வில் இட – wayside bandits shoot arrows, நிண – fat, வரி – stripes, குறைந்த நிறத்த – with reduced color (because of the pieces of human fat on the paths), அதர்தொறும் – in all the paths, கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன – like they have died wearing red oleander garlands, (இடூஉ- இன்னிசை அளபெடை), புண் உமிழ் குருதி – wounds from which blood oozes, பரிப்ப – bearing, surrounding, கிடந்தோர் – those lying, கண் உமிழ் கழுகின் – with eagles which take the eyes of people and spit them out (to feed their young), கானம் நீந்திச் சென்றார் – he went past that forest, என்பு இலர் – there is nobody to say that, there is nobody to blame him, தோழி – oh friend (விளி, an address), வென்றியொடு – with victory, வில் அலைத்து உண்ணும் – shoot arrows at enemies and distress them in battles and receive tributes, வல் ஆண் வாழ்க்கை – the life of strong men, தமிழ் கெழு மூவர் காக்கும் – the three kings (Chozha, Chera and Pandiya kings) who rule the Thamizh land protect, the three kings who nurture Thamizh, மொழிபெயர் தேஎத்த – to a country with a different language (தேஎத்த – இன்னிசை அளபெடை), பன் மலை இறந்தே – passing many mountains (இறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 32, நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றிச்,
“சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன் மாண்  5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய்? உண்கு” எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு,
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்  10
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என் வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே, அல்லாந்து  15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி, நாம் சென்மோ,
சாய் இறைப் பணைத்தோள் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்  20
அங்கணாளனை, நகுகம் யாமே.   21

Akanānūruu 32, Nalvelliyār, Kurinji Thinai – What the heroine said to her friend, or what the friend said to the heroine
Yesterday during the daytime,
a man wearing jewels with gleaming
gems came to our millet field.
He appeared like a king, but spoke
to us humble words like that of a
person who lives on charity.

He said,
“You who chase marauding parrots that
come to eat your tiny millet using kulir
and thattai gadgets, striking them without
strength, you stand there like a fierce
goddess.  Who are you?  You terrorize me.
Let me enjoy you,” and he embraced me,
hugging my back.

After that, my mind became soft like
mud after heavy rains.  Afraid that he
would know about it, I uttered harsh
words which were not from my mind
and pulled myself like a scared doe,
away from his tight embrace,
with strength.
Not having the strength to utter anything
after that, he was sad, and moved away like
a bull elephant separated from his herd.
He will not go without failing, my friend!

He does not know that he alone without
fault has the right to my curved, thick arms.
He will try to stand behind me with sorrow
Let us go and laugh at the man who came
near us?

Notes:  (1) பின்னின்ற தலைவனுக்கு குறை நேர்ந்த தோழி தலைவியிடம் கூறியது. (2) – தோழிக்குத் தலைவி சொல்லியதுமாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் கூற்று – மறைந்தவற் காண்டல் என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம் களவியல் 20)  மனைப்பட்டு கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் எனவரும் விதிகொள்க, தோழியின் கூற்று – இயற்கைப் புணர்ச்சியும், இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும் எய்திய தலைவன் தோழியை மதியுடம்படுத்துத் தலைவிபால் சென்று குறை நயப்பிக்க வேண்டித் தோழியை இரந்து பின்னிற்பானாக.  அவற்கு இரங்கி குறை நேர்ந்த தோழி தலைவியின்பால் சென்று குறை நயப்பிப்பாள் வழிநிலை பொய்யினால் கவர் பொருள் நாட்டத்தால் கூறியது என்றவாறு.  If the friend uttered the poem, she wanted the heroine to take pity on the hero, and respond to his love.  If the heroine uttered the poem, she let the friend know of her feelings.  அங்கணாளனை (21) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நம்முன் வந்துறும் அத்தலைவனை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவிலியை.  ஒப்புமை:  நற்றிணை 128 – சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃது ஆகின்று யான் உற்ற நோயே.  புடையா – புடைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  விடாஅ – விடுத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  யாரையோ (8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.

Meanings:   நெருநல் – yesterday, எல்லை – during the day, ஏனல் தோன்றி – appeared in the millet field, திரு மணி – beautiful gems, ஒளிர்வரும் – shining, பூணன் வந்து- man with jewels came, புரவலன் போலும் தோற்றம் – appearance like a rich man/king/donor, உறழ் கொள – differing, இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றி – spoke humble words like those who live on what others give (மாக்களின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறு தினைப் படுகிளி கடீஇயர் – to chase parrots that come to seize your tiny-millet, பன் மாண் – many excellent, குளிர் கொள் தட்டை – parrot-chasing kulir and thattai gadgets, மதன் இல புடையா – striking without strength (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), சூரர மகளிரின் நின்ற நீ – you who stood like fierce goddesses (மகளிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), மற்று -அசைநிலை, an expletive, யாரையோ – who are you, எம் அணங்கியோய் – you terrorize me, உண்கு என – I will enjoy you, சிறுபுறம் கவையினனாக – he hugged my back, அதற்கொண்டு இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் – after that my mind became soft like mud after a heavy rain (மண்ணின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), அவன் அறிதல் அஞ்சி – afraid that he will find out about it, உள் இல் கடிய கூறி – I uttered harsh words which were not inside me, கை பிணி விடாஅ – I let go of his hands around me (விடாஅ – இசைநிறை அளபெடை), வெரூஉம் மான் பிணையின் – like a female deer that is afraid (வெரூஉம் – இன்னிசை அளபெடை, பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஒரீஇ – removed (சொல்லிசை அளபெடை), நின்ற என் உரத் தகைமையின் – due to my strength, பெயர்த்து பிறிது என் வயின் சொல்ல வல்லிற்றும் இலனே – he controlled his feelings and after that he did not have any strength to tell me anything, அல்லாந்து – distressed, saddened, இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் – he looked up and moved like a male elephant away from his herd (களிற்றின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இன்றும் – today, தோலா ஆறு இல்லை – he will not go without failing, தோழி – oh friend (விளி, an address), நாம் சென்மோ – let us go (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), சாய் – delicate, curved, இறை – joints, பணைத்தோள் – thick arms, bamboo-like arms, கிழமை – the right, தனக்கே மாசு இன்றாதலும் அறியான் – he does not know that it is his right without fault (தனக்கே – ஏகாரம் அசைநிலை, an expletive), ஏசற்று – with sorrow, என் குறைப் புறனிலை முயலும் – he tries to stand behind me, அங்கணாளனை (கண் அண் ஆளனை) – the man who came near us, நகுகம் யாமே – let us laugh (யாமே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 33, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
மனை மாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்  5
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளி தேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவண்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய்  10
வெம்பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள்,  15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள் வயின்
பிரியாய் ஆயின் நன்று மன் தில்ல,
அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே?  20

Akanānūru 33, Mathurai Alakkar Gnāzhār Makanār Mallanār, Pālai Thinai – What the hero said to his heart
You pointed out to me firmly how good
it was to perform my task,
and I left my noble, bright-foreheaded,
virtuous wife alone at home.

Not thinking about the difficulties on the
harsh paths, you came with me to the
wasteland, where a male kite, capable of
killing, calls out sweetly to his female
from a very tall branch of a tree
that had lost its forked, tender leaves.

You are thinking about her with dark, pretty,
moist eyes that ruin the pride of flowers,
and getting confused.
We have crossed several mountains and paths
with chisel-sharp, harsh stones.

If you are thinking of leaving me alone here,
it would have been very good if you had not left
the woman with white teeth, pallor on her loins,
and curved arms like the delicate bamboos
on Kolli Mountain of Cheran who wins battles.

On the day we left, you understood me.
Today if we avoid what needs to be done,
will you not become the object of laughter?

Notes:  இடைச்சுரத்தில் தன் நெஞ்சிடம் சொல்லியது.  வெறுப்பக் காட்டி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எடுத்துக் கூறி வற்புறுத்தி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மிக எடுத்துரைத்து.  வரலாறு:  வானவன், கொல்லி.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  வினை நன்றாதல் – how good it is to perform the task (of earning wealth), வெறுப்பக் காட்டி – uttered emphasizing, pointed it out very well, மனை – at home, மாண் கற்பின் வாணுதல் (வாள் நுதல்) ஒழிய, – away from the bright-forehead virtuous woman (வாணுதல் – அன்மொழித்தொகை), கவை முறி இழந்த – lost its forked tender leaves, செந்நிலை – fine looking, யாஅத்து ஒன்று – a yā tree’s, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅத்து – அத்து சாரியை – an augment), ஓங்கு உயர் சினை இருந்த – was on a very tall branch (ஓங்கு உயர் – ஒருபொருட் பன்மொழி), வன் பறை – strong wings, வீளை – screeching, பருந்தின் – kite’s, கோள் வல் சேவல் – male that is capable of killing, வளைவாய்ப் பேடை – female with a curved beak, வருதிறம் பயிரும் – calls her indicating for her to come to him, இளி – musical sound, தேர் தீங்குரல் இசைக்கும் – makes sweet sounds like that, அத்தம் செலவு அருங்குரைய என்னாது – without considering that the wasteland paths would be difficult to go (அருங்குரைய – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), சென்று – went, அவண் – there, மலர் பாடு ஆன்ற – flowers losing pride, மை எழில் மழைக்கண் – dark and beautiful moist eyes, தெளியா நோக்கம் உள்ளினை – you thought about with confusion, உளிவாய் – sharp ends like those in chisels, வெம்பரல் அதர – with paths with harsh pebbles, with paths with sharp pebbles, குன்று பல நீந்தி – passed several mountains, யாமே எமியம் ஆக – for me to become alone (யாமே, எமியம் – தன்மைப் பன்மை, first person plural), நீயே ஒழியச் சூழ்ந்தனை ஆயின் – if you thinking of leaving me (நீயே, ஏகாரம் பிரிநிலை, implying exclusion), முனாஅது வெல் போர் வானவன் – Cheran who battles in battlefields, கொல்லி மீமிசை – on top of Kolli Mountain (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), நுணங்கு – thin, அமை புரையும் – like bamboo (புரை – உவம உருபு, a comparison word), வணங்கு – curved, இறை – joints, பணைத் தோள் – thick arms, வரி அணி அல்குல் – pretty loins with pallor spots, வால் எயிற்றோள் வயின் – from the woman with white teeth, பிரியாய் ஆயின் நன்று – it would have been good if you were not separated, மன் – மிகுதிக் குறிப்பு, implying abundance, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, அன்று நம் அறியாய் – you did not know my nature on that day, ஆயினும் – yet, இன்று – today, நம் செய் வினை ஆற்றுற விலங்கின் – if you avoid what we need to do going on the path, எய்துவை –  you will attain, அல்லையோ பிறர் நகு பொருளே – won’t you become the object of laughter of people (பொருளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 34, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
சிறு கரும் பிடவின் வெண்தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங்கோல் மென்குரல்  5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித்,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
செல்க தேரே நல் வலம் பெறுந!  10
பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி
“இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து” என  15
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.  18

Akanānūru 34, Mathurai Maruthan Ilanākanār, Mullai Thinai – What the hero said to his charioteer, as they return
In the cool, fragrant woodland,
small, black pidavam flowers have
bloomed on short bushes with white
tops, looking like flower garlands.

A noble stag with dark, twisted
antlers resembling a forked stick,
……….carried by a forest dweller
……….wearing leather slippers,
gives delicate arukam grass clusters
with red stems to his delicate doe that
plays with their fawns, and protects
them as they sleep on the long sandy
beach hugged by clear water,
his cheeks filled with food that he is
munching.

For the broken heart to feel happy,
and the shy young woman to attain
her beauty, ride fast, oh charioteer
with great ability!

A gander with pure feathers that
are white like the starch rinsed
off clothes by a delicate-fingered,
wide-shouldered washerwoman
at the long shore, plays and enjoys
with its mate in our protected house.
My wife who is holding a green parrot
with a red neck band on her forearm
asks the bird shyly with sweet words
in a child-like, soft voice so that
those in the house will not be able to
hear her, “Tell me.  Will he come
today, the one who left?”

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் கூறியது.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  சிறு கரும் பிடவின் – of small black pidavam flowers, wild jasmine, Bedaly-nut vine, வெண்தலை – white tops, குறும் புதல் – short bushes, கண்ணியின் மலரும் – they blossom like garlands (கண்ணியின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தண் நறும் புறவில் – in the cool fragrant forest, தொடுதோல் கானவன் – forest dweller wearing leather slippers, கவை பொறுத்தன்ன – like a forked stick that he is carrying, இரு திரி மருப்பின் – with dark/big curved antlers, அண்ணல் இரலை – noble stag, செறி இலை – dense with leaves, பதவின் – of arukam grass, செங்கோல் – red stems, மென் குரல் – delicate clusters, மறி ஆடு மருங்கின் – where the young ones play, மடப் பிணை – naive female, அருத்தி – making it eat, தெள் அறல் – clear water, தழீஇய – embracing (செய்யுளிசை அளபெடை), வார் மணல் அடைகரை – sand-filled long shore, water-filled shore long shore, மெல்கிடு கவுள – with munching cheeks, துஞ்சு புறம் காக்கும் பெருந்தகைக்கு – for the esteemed one who protects the place while sleeping, உடைந்த நெஞ்சம் – broken heart, ஏமுறச் செல்க தேரே – ride the chariot to make her happy, நல் வலம் பெறுந – oh charioteer who is victorious, பசை கொல் – removing starch, dissolving starch, மெல்விரல் – delicate fingers, பெருந்தோள் புலைத்தி – washerwoman with wide shoulders, washerwoman with thick arms, துறை விட்டன்ன – like rinsed in the shore, தூ மயிர் எகினம் – male goose/duck with pure feathers, துணையொடு திளைக்கும் – enjoys with its mate, காப்புடை வரைப்பில் – within the boundaries of the house with protection, செந்தார்ப் பைங்கிளி – green parrot with red garland, green parrot with red neck ring (செந்தார், பைங்கிளி – பண்புத்தொகைகள், compound words in which the first member stands in adjectival relation to the second), முன் கை ஏந்தி – holding in her forearm, இன்று வரல் – will he come today, உரைமோ – you tell me (மோ – முன்னிலையசை, an expletive of the second person), சென்றிசினோர் திறத்து – about the one who went (சென்றிசினோர் – சின் படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), என – thus, இல்லவர் அறிதல் அஞ்சி – afraid that those in the house will be aware, மெல்லென மழலை – delicate childish talk, இன் சொல் பயிற்றும் – who talks sweetly, நாணுடை அரிவை – the shy young woman, மாண் நலம் பெறவே – for her to attain fine beauty (பெறவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 35, அம்மூவனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை,
நுழை நுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த  5
வில் ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங்கவலைய புலவு நாறு அருஞ்சுரம்  10
துணிந்து, பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல,
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,  15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே.  18

Akanānūru 35, Ammoovanār, Pālai Thinai – What the heroine’s mother said, after her daughter eloped
She did not think about me, the mother
who gave birth to her and raised her.
Our fine house with sky-high walls is lonely.

Carrying sharp spears with stems and
handles and ringing bells with no equal,
a small band of karanthai warriors who
retrieved their cattle stolen by vetchi
warriors, are killed by the vetchi warriors.
These karanthai warriors are brave men
who use their fine arrows for their
livelihood. In the wasteland,
their shallow graves are worshipped,
memorial stones erected for them are
decorated with peacock feathers, rice wine
is poured, sheep are given as offering and
thudi drums are beat!

She went without fear on this flesh-reeking,
difficult wasteland with forked paths,
changed into a different person.
May he praise her with desire, enjoy her
fine beauty and hold her to his chest
and let her go to sleep!
May he be a partner to her in the paths of
unknown lands, my daughter with curly,
dark hair, resembling the fine sand on the
shores of the huge, beautiful Pennai River
at Kodunkāl town, belonging to King Kāri
of Kōvalūr owning tall chariots, where drums
don’t rest!

Notes:   மகட் போக்கிய நற்றாய் கடவுளிடம் வேண்டியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருகவேளை உள்ளத்து நினைந்து கூறுகின்றாள்.  வரலாறு: கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி, கொடுங்கால், பெண்ணை ஆறு.  The name of the poet of this poem is mentioned as குடவாயிற் கீரத்தனார் in some commentaries.   விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  ஈன்று புறந்தந்த – gave birth and protected, gave birth and raised, எம்மும் உள்ளாள் – she did not think about me (எம்மும் – தன்மைப் பன்மை, first person plural), வான் தோய் இஞ்சி – sky touching walls, நல் நகர் புலம்ப – for the house to be without luster, those in the fine house to be sad, தனி – without equal, மணி இரட்டும் – bells ring, தாள் – spear stem, உடை – having, கடிகை – spear hilt, spear handle, நுழை நுதி – sharp ends, நெடு வேல் – with tall spears, குறும்படை மழவர் – small bands of warriors, முனை ஆத் தந்து – brought cows/cattle from the battlefield, முரம்பின் வீழ்த்த – slayed them on the hilly mounds, வில் ஏர் வாழ்க்கை – life with spears as their plow, விழுத்தொடை மறவர் – warrior with fine arrows, வல் ஆண் – strong men, பதுக்கைக் கடவுள் பேண்மார் – to worship the gods in shallow graves, நடுகல் பீலி சூட்டி – adorned their memorial stones with peacock feathers, துடிப்படுத்து – beat thudi drums, தோப்பிக் கள்ளொடு – with rice wine, துரூஉப்பலி கொடுக்கும் – give offerings of sheep (துரூஉ – இன்னிசை அளபெடை), போக்கு அரும் – difficult to travel, கவலை – path with forks, புலவு நாறு அருஞ்சுரம் – flesh stinking harsh wasteland, துணிந்து – boldly, பிறள் ஆயினள் – she became a different person, ஆயினும் – yet, அணிந்து அணிந்து ஆர்வ நெஞ்சமொடு praising her again and again with a desiring heart, ஆய் நலன் – fine beauty, அளைஇ – enjoying, நுகர்ந்து, துய்த்து (சொல்லிசை அளபெடை), தன் மார்பு துணையாக – his chest as a support, துயிற்றுக – may he make her sleep (இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – துயில்விப்பானாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – துயிற்றுப் பேணுவானாக), தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle signifying desire, ஈறு திரிந்தது வந்தது, துஞ்சா முழவின் – with drums that do not rest, with non-stopping drums, கோவல் கோமான் – king of Kovalūr, நெடுந்தேர்க் காரி – Kāri with tall chariots, கொடுங்கால் – Kodunkāl town, முன்துறை – shore front (முன்துறை – துறைமுன்), பெண்ணையம் பேரியாற்று – of the beautiful big Pennai River, நுண் அறல் கடுக்கும் – like the fine black sand, நெறி இருங்கதுப்பின் – with curly black hair, with orderly black hair, என் பேதைக்கு – to my naive girl, அறியாத் தேஎத்து – in the unknown countries (தேஎத்து – இன்னிசை அளபெடை), ஆற்றிய துணையே – partner who took her along (துணையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 36, மதுரை நக்கீரர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
பகுவாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்  5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கதச் சேப் போல மத மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார் மணல் அகன் துறைத்
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்  10
நறும் பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்  15
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்  20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.  23

Akanānūru 36, Mathurai Nakkeerar, Marutham Thinai – What the heroine said to her unfaithful husband
Oh man from the town with ponds
dense with flowers, where a varāl fish
with a gaping mouth, a big male
with many stripes, bit the bait
on the iron hook of a fisherman’s
fishing rod and got caught,
jumped and rose up tearing the
delicate leaves of white
waterlilies and crushing many blue
waterlilies with pointed petals,
and disturbed the tangled, pretty
vallai vines, when the fishermen
pulled it in, refusing to come, like an
angry bull that is difficult to be roped!

They say that you married a young
woman with fragrant, thick hair and
small bangles
in the grove with open blossoms near the
flooding Vaiyai River’s long sandy shores
where tall, beautiful marutham trees
grow near the wide shore.

The gossip that has risen is greater than
the uproars of the victorious warriors
of the Pandiyan king with horses with
trimmed tufts and chariot with many flags
at the huge Ālankānam battlefield on the day
they battled and won killing enemy forces,
seized the white umbrellas and drums and
performed battlefield rituals after subduing
the powerful seven: Chera king, Chozha king,
Thithiyan with rage, battle-skilled Ezhini with
elephants and wearing ornaments, Erumaiyūr
king with fiber filtered liquor, Irungo Vēnmān
with sandal paste and fragrant garlands on his
chest and Porunan with fast chariot.

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி கூறியது.  தலையாலங்கானம் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  களவேள்வி – திருமுருகாற்றுப்படை 100 – கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – ஒளவை துரைசாமி உரை – இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம்.  புறநானூறு 26 – அடு போர் வேட்ட வடுபோர்ச் செழிய, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், அகநானூறு 36-22, கொன்று களம் வேட்ட ஞான்றை, மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம்.  கொடுவாய் இரும்பின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  கொடுவாய் இரும்பு என்றது தூண்டிலின் முள்ளினை.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடுவாய் இரும்பு பாணன் வஞ்சக மொழிக்கு உவமை.  கோள் இறை துற்றி என்றதை பரத்தையர் நலனைத் தலைவன் நுகர்ந்தற்கு உவமை. ஆம்பல் அடை கிழிய என்றது பரத்தையர் தாயார் நெஞ்சு வருந்தியதற்கு உவமை, கயம் உழக்குதல் தலைவன் ஊராரைக் கலக்கமுறச் செய்தற்கு உவமை.   வரலாறு:  வையை, தலையாலங்கானம், செழியன், சேரல், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான்.  There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.  மத (7) – மதவு, ஈறு கெட்டது, மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81).  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  இரும்பின் – பெரும்பாணாற்றுப்படை 284-287 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த, நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப் பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை.  ஆலங்கானம் – சோழ நாட்டின் ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களையும் இங்குப் போரில் தோல்வியுறச் செய்தான்.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  பகுவாய் வராஅல் – varāl fish with gaping mouth, Slacate nigra, murrel fish (வராஅல் – இசை நிறை அளபெடை), பல் வரி இரும் போத்து – big/dark male with many stripes, கொடுவாய் இரும்பின் – (fishing) rod’s curved end, கோள் இரை – bait, killing food, துற்றி – swallowed, seized with his mouth, ஆம்பல் – white waterlilies, மெல் அடை கிழிய – tearing delicate leaves, குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதைய – crushing many blue lilies that have opened from closed/pointed buds, Nymphaea caerulea, பாய்ந்து எழுந்து – jumped and rose, அரில் படு – woven, tangled, வள்ளை ஆய் கொடி மயக்கி – disturbing the beautiful vallai creeper,  Creeping bindweed, Ipomaea aquatic, தூண்டில் வேட்டுவன் – fisherman with rod, வாங்க வாராது – does not come when he pulls, கயிறு இடு கதச் சேப் போல – like an angry bull which is being controlled by a rope (சே – காளை), மத மிக்கு – with great arrogance, நாள் கயம் உழக்கும் – muddied the pond in the morning (உழக்கும் – கலக்கும்), பூக்கேழ் – dense with flowers, ஊர – oh man from such town (ஊர – அண்மை விளி), வருபுனல் வையை – Vaiyai/Vaikai river with flood (read as புனல்வரு வையை = வெள்ளம் வரும் வையை), வார் மணல் – long sandy shores, அகன் துறை – wide port, திரு மருது – beautiful marutham trees, மருதம், Terminalia arjuna, ஓங்கிய – tall, விரி மலர் – open flowers, காவில் – in the groves, நறும் பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு – with a woman with small bangles and fragrant thick hair, வதுவை அயர்ந்தனை – you conducted a wedding,  you united with a woman, என்ப – they say, அலரே – gossip (ஏகாரம் அசைநிலை, an expletive), கொய் சுவல் புரவி – horses with trimmed tufts, கொடித் தேர்ச் செழியன் – Pāndiyan king with flags on his chariot, ஆலங்கானத்து அகன்தலை சிவப்ப – huge Ālankānam battlefield to become red, சேரல் – Cheran, செம்பியன் – Chozhan, சினம் கெழு திதியன் – Thithiyan filled with rage, போர் வல் யானைப் பொலம்பூண் எழினி – Ezhini with elephants and battle talents, நார் அரி நறவின் எருமையூரன் – Erumaiyūr leader with fiber filtered alcohol (fiber – பன்னாடை, the cloth-like fibrous piece covering the base of coconut leaf stems), தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் – Vēnmān king Irungo with dried sandalpaste on his honey-fragrant (with flower garlands) chest (தேம் தேன் என்றதன் திரிபு), இயல் தேர்ப் பொருநன் – Porunan with his moving chariots, Porunan with his well-made chariots, என்று எழுவர் நல் வலம் அடங்க – for the great strength of the seven to be subdued, ஒரு பகல் – one day, முரைசொடு வெண்குடை அகப்படுத்து – seized their drums and white umbrellas, உரை செல – words about him to spread (செல – இடைக்குறை), கொன்று களம் வேட்ட ஞான்றை – on the day when he killed their warriors and did battlefield rituals, வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – louder than the uproar of the victorious warriors (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 37, விற்றூற்று மூதெயினனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப,
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித்,  5
தொழில் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப்,
புளிப்பதன் அமைத்த புதுக்குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்குடைக்,  10
கய மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல,  15
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில் மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே.  18

Akanānūru 37, Vitrootru Mootheyinanār, Pālai Thinai – What the heroine said to her friend, or What the heroine’s friend said to her
He will not stay there forever.
However, it would still be lovely to be with
partners in this desirable spring season,

when uproars from very happy farmers are
heard in the early morning darkness as paddy
is sifted and the fine dust in the air hides all
directions like dark clouds,
rice hay is separated and shook, and for their
work arrogance and sleepy feeling to end,
they drink juice that is  made with the
parrot-like clusters of mangoes on trees with
branches filled with lush sprouts that sway in the
lovely, splendid breezes, that has been poured into
new pots to become sour, the pots placed down,
the blazing sun hitting their back sides,
in fresh palm frond bowls, like male buffaloes
drinking at a pond; eat white gruel resembling
silver rod bits made by mixing horsegram, lentils
and milk to their full until their hands refuse to eat
any more;
and rest under the marutham trees with their
bulls around the beautiful, round rice heap when
the sun’s heat is gone.

Notes:  (1) – பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தலைவி வருந்தினாள்.  அவளை ஆற்றுவித்த தோழியிடம் அவள் கூறியது.  (2) –  தலைவன் வினைவயின் பிரிவான் என்பதை உணர்ந்த தோழி தலைவியிடம் கூறியது.  குறுந்தொகை 168 – மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து, புறநானூறு 352 – பசுங்குடையான் புதன் முல்லைப் பூப்பறிக்குந்து, அகநானூறு 121 – ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடை, கலித்தொகை 23 – வேணீர் உண்ட குடை ஓரன்னர்.   தொழில் செருக்கு அனந்தர் வீட (6) –  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தொழிற் செருக்கால் வந்த மயக்கம் ஒழிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழிலால் வந்த இளைப்பும் கள்ளுண்டமையால் வந்த மயக்கமும்.   பகட்டின் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமைக் கடாக்களைப் போன்று, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கடாக்களைப் போல.  காண்வர (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – போதுமளவு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகு பொருந்த.  ஓங்கிய பருதி அம் குப்பை  (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்த வட்ட வடிவிற்றாகக் குவித்து வைத்த அழகிய நெற்குவியல், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – உயர்ந்த ஞாயிறுபோன்ற அழகிய நெற்குவியல்.  காமர் வேனில் மன் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய இளவேனில் பருவங்காண், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய வேனிற்காலம் இதுவாகும், அது கழிந்தே.

Meanings:  மறந்து – forgetting, அவண் அமையார் ஆயினும் – even if he will not live there, கறங்கு இசை – loud sounds, கங்குல் ஓதை – night sounds, கலி மகிழ் உழவர் – very happy farmers, பொங்கழி – unsifted paddy (தூற்றாப்பொலி), முகந்த – taken in measuring bowls, தா இல் – without strength, without fault, perfect, நுண் துகள் – fine dust, மங்குல் வானின் – like dark clouds (வானின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மாதிரம் மறைப்ப – all directions are hid, வைகு புலர் விடியல் – early morning after the darkness that stayed at night (வைகு = இரவில் தங்கிய), வை பெயர்த்து – separating the hay, ஆட்டி – swaying, தொழில் செருக்கு – business arrogance, அனந்தர் வீட – for their hangover from drinking liquor to end, for their sleepy feeling to end, எழில் தகை வளியொடு – with beautiful special breeze, சினைஇய – branched (சினைஇய – செய்யுளிசை அளபெடை), வண் தளிர் மாஅத்து – of the mango trees with lush sprouts (அத்து சாரியை), கிளி போல் காய – with fruits like parrots, கிளைத் துணர் – bunches on the branches, வடித்து – filtered (the juice), புளிப் பதன் அமைத்த – made it sour, புதுக்குட – in new pots, மலிர் நிறை – the filled juice, வெயில் – in hot sun, வெரிந் நிறுத்த – placed for it (the sun) to heat the back, பயில் இதழ் – many palm fronds, பசுங்குடை – fresh palm frond bowls, கய மண்டு பகட்டின் பருகி – drinking like male buffaloes drinking from a pond, drinking like bulls drinking from a pond (பகட்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), காண்வரக் கொள்ளொடு – beautifully with enough horse gram, dolichos uniflorus, பயறு – lentils, பால் விரைஇ – mixed with milk (விரைஇ – சொல்லிசை அளபெடை), வெள்ளிக் கோல் வரைந்தன்ன – like cut up silver rod pieces, வால் அவிழ் மிதவை – white cooked gruel, வாங்கு கை – taking hand, தடுத்த பின்றை – until the hand blocks, ஓங்கிய – tall, lofty, பருதி – sun, round, அம் குப்பை – beautiful heap, சுற்றி – around, பகல் செல – the sun’s heat leaving, மருத மர நிழல் – in the shade of marutham trees, Terminalia arjuna, எருதொடு வதியும் – they stay with their bulls, they rest with their bulls, காமர் வேனில் – desirable spring season, மன் – அசை, an expletive, இது – this, மாண் நலம் – esteemed beauty, நுகரும் – enjoying, துணை உடையோர்க்கே – for those who are with their partners (உடையோர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 38, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
விரி இணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக வெஞ்செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன்,  5
வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்  10
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப் பொறை இறுத்த கோல்தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி, நெடிது நினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு,  15
“அம் வெள் அருவி சூடிய உயர்வரைக்
கூஉம் கண்ணஃது எம் ஊர்” என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே.  18

Akanānūru 38, Vadama Vannakkan Pēri Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
The lord of the sky-touching mountains
comes wearing a strand of bee-swarming
vēngai flowers on his head and
a garland with honey-flowing blue
waterlilies with chosen petals,
carrying on his left side a beautiful
bow and rapidly moving arrows of
whose strength he is aware.

It is true that he comes, thinking of her,
to the place of tryst.
If he comes back, he will see the rope
swing hung on the tall branches of
the asoka tree with beautiful sprouts,
a changed place without us,
the mountain spring with large-petaled,
pretty blue waterlilies blooming like eyes,
its waters clear since we did not dive
in and muddy it, and the millet field
with stick-like stubble tops,
its big spears bent with heavy weight,
impossible for naive parrots with strong
wings to carry, harvested and removed.

He will think about all this for a long while
and become sad, without moving away.

I forgot to tell him that our town is
within calling distance of the beautiful,
white waterfalls that cascades from the
tall mountains.
May my beauty be ruined!

Notes:  (1) – தலைவன் வரையாது ஒழுகுகின்றான்.  அவன் குறையை அவன் உணர்ந்து கொள்ளும் பொருட்டு அவன் கேட்பத் தோழி கூறியது.  (2) – தலைவிக் கூறுவாள் போன்று தலைவன் கேட்பக் கூறியது.  (3) – பகற்குறியிடத்து வந்த தலைவனிடம் ‘இரவுக்குறியில் வருக’ எனத் தோழி கூறியது.   நச்சினார்க்கினியர் கருத்தின்படி இச்செய்யுள் தலைவியின் கூற்றாகின்றது.  ஒப்புமை:  இறுத்த கோல்தலை இருவி – நற்றிணை 306.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24.

Meanings:  விரி – bloomed, இணர் வேங்கை – clusters of vēngai flowers, kino flowers, Pterocarpus marsupium, வண்டு படு கண்ணியன் – he’s wearing a head strand swarmed by bees, தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன் – he’s wearing a garland with honey flowing blue waterlilies selected for petals, Nymphaea caerulea (தேம் தேன் என்றதன் திரிபு), அம் சிலை இடவது ஆக – beautiful bow on his left side, வெஞ்செலல் கணை – rapidly moving arrows (செலல் – இடைக்குறை), வலம் தெரிந்து – knowing their strength, துணை படர்ந்து உள்ளி வருதல் வாய்வது – it is true that he comes thinking about a partner, வான்தோய் வெற்பன் – the lord of the sky-touching mountains, வந்தனன் ஆயின் – if he comes, அம் தளிர் – beautiful sprouts, செயலை – asoka tree, Saraca indica, தாழ்வு இல் – not low, ஓங்கு சினை – tall branches, தொடுத்த – tied, வீழ் கயிற்று ஊசல் – hanging swing on a rope, மாறிய மருங்கும் – changed place (without us), பாய்பு உடன் ஆடாமையின் – since we did not dive into the water and bathe/play, கலுழ்பு இல – not turbid, not muddied (இல – இல்லை என்பதன் விகாரம்), தேறி – was clear, நீடு இதழ் தலைஇய – with long petals (தலைஇய – செய்யுளிசை அளபெடை), கவின் பெறு – with beauty, நீலம் – blue lilies, Nymphaea caerulea, கண் என மலர்ந்த – bloomed like eyes, சுனையும் – springs, வண் பறை – beautiful wings, strong wings, மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் – big spears that are not possible for the innocent parrots to carry, குலவு – bent, பொறை – with weight, இறுத்த –  broken, கோல்தலை இருவி – millet stubble tops that are like sticks, கொய்து ஒழி – plucked and removed, புனமும் நோக்கி – looking at the millet field, நெடிது நினைந்து – he thought about it a lot, பைதலன் – a sad man, பெயரலன் கொல்லோ – did he not move away (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), ஐ தேய்கு – may my beauty be ruined (தேய்கு என்பதன் ஈற்று உயிர்மெய் செய்யுள் விகாரத்தால் கெட்டது), அம் வெள் – beautiful white, அருவி சூடிய உயர் வரை – lofty mountains adorned with waterfalls, கூஉம் கண்ணஃது – that’s in calling distance (கூஉம் – இன்னிசை அளபெடை, கண்ணஃது – விரித்தல் விகாரம், அது எனத் திரிந்தது), எம் ஊர் என – that it is our town, ஆங்கு – அசைநிலை, expletive, அதை அறிவுறல் மறந்திசின் – I forgot to tell that (சின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), யானே – me, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 39, மதுரை செங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
“ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம்?” என யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல நின்
ஆய் நலம் மறப்பேனோ மற்றே? சேண் இகந்து  5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு  10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர் ஓதி, நின் படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரெனப்  15
பரந்து படு பாயல் நவ்வி பட்டென
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு,
“இன்னகை! இனையம் ஆகவும் எம் வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?” என யாழ நின்  20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே.  25

Akanānūru 39, Mathurai Chenkannanār, Pālai Thinai – What the hero said to the heroine, when she sulked
With your red mouth and sharp teeth,
your smile ruined, you blame me, cause
me pain, and ask me “Ignoring the tradition
of protecting, you went with a heart
with blame.  Did you think about me?”

Do not utter untruths!  How could I forget
your fine beauty?  Far out there, loud bamboos
rubbed against each other and caused a friction
fire, the bright sparks fell covering dried leaves,
fire rose tall and on top of the parched grass,
a forest fire started, and the swirling winds
spread the fire which ran wild, ruining the
wasteland.

In the vast forest, merchants screamed
and ran away from the path, fearing the fire,
and a confused elephant herd that feared an
arrogant tiger ran together and joined them.

At that time when the sun went down in a
confusing manner, on the harsh wasteland path,
where it is hard to travel, I lay down and thought
about you, Oh woman with bee-swarming hair!
I saw you, with looks like that of a deer that
leaps, pushing up and tightening your bright
bangles that were slipping as you looked down
with sorrow scratching the earth with your toe.

Oh woman with a sweet smile!  I was
thinking about you while away.  “Where is the
need for sulking?”  I said so gingerly rubbing your
rounded forehead with lifted eyebrows and stroking
your fragrant, dark hair, when I realized at that time
that it was all an empty dream and accepted that.
Not understanding that, you are sulking!

Notes:  பொருள் முற்றிய தலைவன் தலைவியிடம் சொன்னது.  நோய் முந்துறுத்து (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நோயைத் தோற்றுவித்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்பத்தை நின் முகத்தினும் கண்ணினும் முற்படக் காட்டி.  சுழற்றுறாஅ (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுழற்றப்பட்டு, சுழற்றி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சுழற்ற எனத் திரிக்க.  கள் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டு, வண்டுக்கு தேன் என்னும் பெயருண்மையும் நினைக.  செறியா – செறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  சுழற்றுறாஅ – சுழற்றப்பட்டு என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  ஒழித்தது பழித்த நெஞ்சமொடு (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெண்களுக்குத் துயர் புரியலாகாது என்று முன்னோர் ஒழித்த கொள்கையைப் பழித்த உள்ளமோடு, இரவலர்க்கு இடுதற்குப் பொருளின்றி அவரை அகற்றியதனைப் பழித்தல் என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘வினையே ஆடவற்கு உயிர்’ என்ற ஆன்றோரின் அறிவுரைக்கிணங்கி முயலாமல் தவிர்ந்திருந்தமையை இகழ்ந்து பொருள் செய்க என ஊக்கியா நெஞ்சத்தோடே.

Meanings:  ஒழித்தது – separating, not trying, பழித்த நெஞ்சமொடு – with a heart with blame, வழிப் படர்ந்து – you went on the path, உள்ளியும் அறிதிரோ எம் – did you think about me (எம் – தன்மைப் பன்மை, first person plural), என – thus, யாழ -அசைநிலை, an expletive, நின் முள் எயிற்றுத் துவர் வாய் – your red mouth with sharp teeth, your coral-like red mouth with sharp teeth, முறுவல் அழுங்க – laughter ruined, நோய் – love pain, love disease, முந்துறுத்து – causing, நொதுமல் மொழியல் – do not say what is not true, நின் ஆய் நலம் மறப்பேனோ மற்றே – will I forget your fine beauty (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், expletives), சேண் இகந்து – going far away, ஒலி கழை – loud/flourishing bamboo, பிசைந்த – rubbing, ஞெலி சொரி – friction created and thrown, ஒண் பொறி – bright sparks, படு ஞெமல் புதைய பொத்தி – covering the dried leaves (ஞெமல் – சருகு), நெடுநிலை – tall paces, முளி புல் மீமிசை – on top of the dried grass – ookam grass according to Po. Ve. Somasundaranar and Pillai-Naattaar (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), வளி சுழற்றுறாஅ – since the winds swirled, காற்றினால் சுழற்றப்பட்டு (சுழற்றுறாஅ – சொல்லிசை அளபெடை), காடு கவர் பெருந்தீ – big fires surrounded that forest, ஓடுவயின் ஓடலின் – since they ran and spread, அதர் கெடுத்து – ruined the wasteland, அலறிய சாத்தொடு – with the merchants who screamed, ஒராங்கு – together, மதர் புலி வெரீஇய – fearing an arrogant tiger (வெரீஇய – செய்யுளிசை அளபெடை), மையல் வேழத்து இனம் – confused herd of elephants, தலைமயங்கிய – gathered together in a place, நனந்தலைப் பெருங்காட்டு – in the wide huge forest, ஞான்று – one day, தோன்று – appearing, அவிர் சுடர் மான்றால் பட்டென – since the bright sun went down in a confusing manner (மான்றால் – ஆல் அசைநிலை, an expletive), கள்படர் ஓதி – oh woman with bee swarming hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நின் படர்ந்து உள்ளி – thinking about you, அருஞ்செலவு ஆற்றா ஆர் இடை – in the harsh wasteland path where it is impossible to go, ஞெரேரெனப் பரந்து படு பாயல் – rapidly jumping and leaping, நவ்வி பட்டென – like seeing a deer, இலங்கு வளை – bright bangles, செறியா – tightening, இகுத்த நோக்கமொடு – looking down, நிலம் கிளை – scratching the earth, நினைவினை – you with sorrow, நின்ற நின் கண்டு – seeing you standing, இன் நகை – oh woman of sweet smiles (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), இனையம் ஆகவும் – when I am such, எம் வயின் ஊடல் யாங்கு வந்தன்று – why is there sulking on my accord, என – thus, யாழ –அசைநிலை, an expletive, நின் கோடு ஏந்து புருவமொடு – your brows with lifted lines, குவவு நுதல் நீவி – I rubbed your rounded forehead, நறும் கதுப்பு உளரிய – I stroked your fragrant hair, நன்னர் அமையத்து – at that good time (நன்னர் – நன்மையுடைய), வறுங்கை காட்டிய – showed that it was empty,  வாய் அல் கனவின் ஏற்று – accepted that untruthful dream, ஏக்கற்ற – pining, உலமரல் – mental distress, போற்றாய் ஆகலின் – since you do not understand, புலத்தியால் எம்மே – you are fighting with me (புலத்தியால் – புலத்தி முன்னிலை வினைமுற்று, ஆல் அசைநிலை, எம்மே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானுறு 40, குன்றியனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீல் நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்  5
தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்மை,  10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க தில்ல தோழி,  கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை  15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே.  17

Akanānūru 40, Kundriyanār, Neythal Thinai – What the heroine said to her friend
In the evening on the seashore
water-lilies close in salt ponds,
the blue, wide ocean roars,
heron flocks with delicate wings
eat fish and fly back to their nests
on the thick, huge punnai trees,
bees swarm in the eastern winds
that bring spreading grief
as thāzhai trees bend and sway.
My loving heart is crushed.

He has caused me grief by leaving.
Even if he stays away from me, my love
for him will remain the same.

In the fields thannumai drums are beat
behind those who cut white paddy,
causing fear to big-footed storks which
fly away to the nearby palm trees, raising
sounds like vayir horns with tight clasps.

May my heart that went to rest on the sweet
sleep providing chest of the lord of the shores,
not return to me, hating to be with him since
he does not offer his graces!

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்தபொழுது தலைவி தோழியிடம் கூறியது.  உள்ளுறை: பழைய உரையாசிரியர் – வெண்ணெல் அரிநர் தங்காரியஞ்செய்ய பறைகொட்டுவிக்க நாரை வேறு நிலத்தாகிய பெண்ணையிலே சென்று தங்கித் தான் வாழுமிடமாகிய மருத நிலத்தை மறந்தாற்போலத் தன்காரியஞ்செய்ய நம்மைப் பிரிவார் இல்லைப் (வீட்டைப்) பிரிந்தவழி நம்முடைய நெஞ்சு நம்மை விட்டுத் தனக்கு அந்நியமாகிய மார்பிலே சென்றது என்றவாறு.  காமர் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவா, அழகெனின் இகழ்ச்சிக்குறிப்பாகக் கொள்க.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24.

Meanings:  கானல் – seashore, seashore grove, மாலை – evening, கழிப்பூக் கூம்ப – waterlilies close in the brackish waters, நீல் நிறப் பெருங்கடல் – the blue colored big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), பாடு எழுந்து ஒலிப்ப – creating loud sounds, மீன் ஆர் – fish eating, குருகின் – heron’s/egret’s, மென்பறை – delicate-winged, தொழுதி – flocks, குவை – rounded, thick, இரும் – huge, புன்னை – punnai trees, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, குடம்பை சேர – went to their nests, அசை வண்டு – flying bees, ஆர்க்கும் – swarming, அல்குறு காலை – while staying, தாழை தளர – thāzhai trees bend, Pandanas odoratissimus, தூங்கி – moving, swaying, மாலை – evening, அழிதக – causing sorrow, வந்த – came, கொண்டலொடு – with the easterly winds, கழி படர் – great pain, காமர் நெஞ்சம் – loving heart, beautiful heart, கையறுபு இனைய – feeling helpless, துயரம் செய்து நம் அருளார் ஆயினும் – even if he caused pain by leaving, அறாஅலியரோ – may it not be ruined, may it not end (அறாஅலியர் – எதிர்மறை வியங்கோள், இசை நிறை அளபெடை, ஓகாரம்அசைநிலை, an expletive), அவருடைக் கேண்மை – his friendship, his love, அளி இன்மையின் – without love, without graces, அவண் – there, உறை – stays, முனைஇ – hating (சொல்லிசை அளபெடை), வாரற்க – may it not come, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle implying desire, தில் அசையுமாம், also an expletive, தோழி – my friend, கழனி – field, வெண்ணெல் அரிநர் – those who cut white paddy, பின்றைத் ததும்பும் – behind them sounding, தண்ணுமை – thannumai drums, வெரீஇய – fearing (செய்யுளிசை அளபெடை), தடந்தாள் நாரை – big-footed pelican/stork/crane, செறி மடை – tight clasp, வயிரின் – like the musical instruments named vayir (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பிளிற்றி – screeching, பெண்ணை – palmyra palm trees, Borassus flabellifer, அக மடல் – inner fronds,சேக்கும் – reaches, துறைவன் – lord of the seaport town, இன்துயில் – sweet sleep, மார்பில் – on his sweet chest, சென்ற என் நெஞ்சே – my heart that went (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 41, குன்றியனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
வைகு புலர் விடியல், மை புலம் பரப்பக்,
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,  5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலந்தொறும் பரப்பக்,
கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக்,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,  10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ,
மென்சிறை வண்டின் தண் கமழ் பூந்துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய,  15
நுண் பல் தித்தி மாஅயோளோ?

Akanānūru 41, Kundriyanār, Pālai Thinai – What the hero said, when he was away
Dark buffaloes are spread on the land as
dawn arrives, big buds on the branches
of murukkam trees open to flame-like
flowers which are swarmed by humming
bees, farmers with chosen bulls enter
the land with their plows where tall paddy
has been harvested and tied into bundles
left in the grove, then plow the land bearing
stubble turning the soil, their loud calls
spread on the land, and thick clusters of
flowers on trees decorate the beautiful forest.

Never knowing separation from me,
will the beauty of the sad dark young woman,
……….with many spreading, tiny pallor spots,
……….her body pretty like
……….tender sprouts with sweet nectar drops
……….and cool, fragrant pollen
……….dripping from cool clusters of flowers
……….swarmed by bees with delicate wings,
be ruined, her splendid arms thinned?

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்தவிடத்து தலைவியை நினைந்து கூறியது.  மை புலம் பரப்ப (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார் எருமைகள் புல் மேய்வதற்குக் கொல்லைகளிலே பரவிச் செல்லா நிற்பவும், எருமைகள் நண்பகலில் வெப்பம் பொறாவாகலின் வைகு புலர் விடியலிலே ஆயர்கள் அவர்களைக் கட்டவிழ்த்து விட்டமையின் மேய்தற்கு பரவிச் செல்வனவாயின என்க.  இனி, மை – எருமை என்பது பழைய உரை.  இதனை ஆகு பெயராகக் கொள்க.  மை செம்மறியாடுமாம்.  மை என்ற சொல் –  ஒளவை துரைசாமி உரை – புறநானூறு 33-21, 96-7, 113-1, 261-8, 364-4 – செம்மறியாடு, ஒளவை துரைசாமி –  நற்றிணை83-5, பதிற்றுப்பத்து 12-17, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மதுரைக்காஞ்சி 754 – ஆடு.  ஒப்புமை:  குறுந்தொகை 279 – திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன்.  மை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எருமை என்பது பழைய உரை.  இதனை ஆகுபெயராகக் கொள்க.  மை செம்மறி ஆடுமாம்.  கரு நனை (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெரிய அரும்புகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – விதையுடைய அரும்புகள்.  மிளிர (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிகழா நிற்பவும் (திகழவும்), இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மண் பிறழும்படி.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  வைகு புலர் விடியல் – early morning after the darkness that stayed at night (வைகு = இரவில் தங்கிய), மை புலம் பரப்ப – dark buffaloes spread in the land, dark sheep spread in the land, darkness spread in the land, கரு நனை அவிழ்ந்த – large buds opened, buds bearing seeds opened, dark buds opened, ஊழுறு முருக்கின் – blossomed on the murukkam trees, Coral tree, Erythrina variegate, எரி மருள் – flame like (மருள் – உவம உருபு, a comparison word), பூஞ்சினை – branches with flowers, இனச் சிதர் ஆர்ப்ப – swarms of bees hum, நெடுநெல் அடைச்சிய கழனி – fields where tall paddy is planted, ஏர் புகுத்து – pushing the plows, குடுமிக் கட்டிய படப்பையொடு – tied on the top and left in the groves, மிளிர – turning upside down, அரிகால் – grain stubble, போழ்ந்த – split the land, தெரி பகட்டு உழவர் – farmers with chosen bulls, ஓதைத் தெள் விளி – clear sounds, புலந்தொறும் பரப்ப – spreading on the land, கோழ் இணர் எதிரிய மரத்த – with trees with thick clusters of flowers (எதிரிய – தோன்றிய, அகரம் பன்மை உருபு), கவினி – attaining beauty, காடு அணி கொண்ட – the forest is decorated, காண்தகு பொழுதில் – at this splendid time, நாம் பிரி புலம்பின் – alone/sad due to my leaving, நலம் செல – beauty ruined (செல – இடைக்குறை), சாஅய் – thinned (இசை நிறை அளபெடை), நம் பிரிபு அறியா நலனொடு – with her beauty which never knew separation from me, சிறந்த நல் தோள் நெகிழ – her splendid fine arms to become thin, வருந்தினள் கொல்லோ – will she be sad (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), மென் சிறை வண்டின் – because of bees with delicate wings, தண் கமழ் பூந்துணர் தாது – pollen from cool fragrance spreading flower clusters, இன் துவலை – sweet drops, தளிர் வார்ந்தன்ன – like falling on sprouts, அம் கலுழ் மாமை – beauty-flowing dark color (கலுழ் – வழிகின்ற, ஒழுகின்ற) , கிளைஇய – spreading (செய்யுளிசை அளபெடை), நுண் – tiny, பல் தித்தி – many pallor spots, மாஅயோளோ – the dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 42, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்,
தளிர் ஏர் மேனி மாஅயோயே!
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சக்,  5
கோடை நீடிய பைது அறு காலைக்,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்,
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,  10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்று, சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்தமாறே.

Akanānūru 42, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Oh dark woman with a body like a tender
sprout, moist eyes with thick red lines
on its sides like those on the back of
monsoon’s lovely, fragrant jasmine buds,
so difficult to pluck, growing abundantly
in the heavy rainy season!

Since the lord of the soaring, sky-touching
mountains has come,
I am joyful with the happiness that many
others felt when heavy rains fell at dawn
filling the wide ponds
after a long, painful summer season when
the land was parched, plows were rested,
empty pond shores were as high as mountains,
and birds did not live there in the summer heat!

Notes:  தலைவன் வரைதற்கு வருகின்றான் எனத் தோழி தலைவிக்குச் சொல்லியது.  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  மலி பெயல் – heavy rainfall, கலித்த – growing abundantly, flourishing, மாரிப் பித்திகத்து – of rainy season jasmine flowers, கொயல் அரு நிலைஇய – difficult to pluck situation (கொயல் – கொய்யல் என்பதன் இடைக்குறை விகாரம், நிலைஇய – செய்யுளிசை அளபெடை), பெயல் – rain, ஏர் மண முகை – beautiful buds with rising fragrance (ஏர் – எழுச்சி), செவ்வெரிந் உறழும் – are like the red backsides (உறழும் – உவம உருபு, a comparison word), கொழுங்கடை – thick on the sides, மழைக்கண் – moist eyes, தளிர் ஏர் மேனி – sprout like skin (ஏர் – உவம உருபு, a comparison word), மாஅயோயே – oh dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் விளி), நாடு வறம் கூர – country was parched greatly, நாஞ்சில் துஞ்ச – plows are unused, கோடை நீடிய பைது அறு காலை – when summer extended in that painful time with no fresh vegetation, குன்று கண்டன்ன கோட்ட – with shore banks that are high like mountains, யாவையும் சென்று சேக்கல்லா புள்ள – with all the birds not going and residing there, உள் இல் – no water inside, என்றூழ் – summer heat, வியன் குளம் நிறைய – filling the wide ponds, வீசிப் பெரும் பெயல் பொழிந்த – heavy rains fell to help, ஏம வைகறை – happy morning, பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்று – like the happiness that many people felt poured within me, சேண் இடை ஓங்கித் தோன்றும் – appearing high far away, உயர் வரை வான் தோய் வெற்பன் வந்தமாறே – since the lord of the lofty sky-touching mountains came (வந்தமாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

அகநானூறு 43, மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கடல் முகந்துகொண்ட கமஞ்சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி,
என்றூழ் உழந்த புன்தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி  5
குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி, யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங்கானம் நாறும் நறுநுதல்,  10
பல் இருங்கூந்தல், மெல்லியல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர் தாமே, அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகித் தம்
இன்துணைப் பிரியும் மடமையோரே!  15

Akanānūru 43, Mathurai Āsiriyār Nallanthuvanār, Pālai Thinai – What the hero said to his heart
Absorbing water from the ocean,
the dark pregnant clouds rise
up to the sky and roar thunder,
with bright, flame-like lightning.

A cow elephant with scanty hair on
her head, parched by the sun’s heat,
plays with her mate in the flood,
their trunks hidden in the water.

Water covered the sky and land
which seemed like one.
There was fear since it was not possible
to tell the time using the sun’s rays,
except by those using water-bowl clocks.
Raindrops fell in this cool rainy season,
and fragrances of flourishing mullai
flowers that could be plucked, were spread
by the wind in the dark huge forest.

I am embracing the chest of the delicate
woman with a fragrant forehead and
thick, dark hair.

They are pitiable for all times, and without
graces, those who are stupid to part from
from their sweet partners, with a desire to
earn new wealth!

Notes:  தலைவனின் நெஞ்சம் பொருள் ஈட்டி வர வேண்டும் என்று வற்புறுத்தியதாக, அப்பொழுது கார்ப்பருவம் வந்தமையால் பிரிவதற்கு இயலாது என்று உலகியல் மேலிட்டுக் கூறுவானாய் அவன் செலவு அழுங்கியதனை அந்நெஞ்சிற்குக் கூறியது.  தளி மயங்கின்றே (8) – மழையொடு பொருந்தியது.  ஒப்புமை:  குறு நீர்க் கன்னல்:  முல்லைப்பாட்டு 55-58 – பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.    கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).

Meanings:  கடல் முகந்துகொண்ட – took from the ocean, கமஞ்சூல் – pregnant/full (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), மா மழை – big/dark clouds, சுடர் நிமிர் மின்னொடு – with lightning that is like tall flame, வலன் ஏர்பு – climbing up with strength, climbing on the right side, இரங்கி – roaring, என்றூழ் உழந்த – suffering in summer’s heat, suffering in the sun’s heat, புன்தலை – dull head, parched head, head with scanty hair, மடப் பிடி – a naive female elephant, கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – played with her male elephant as their trunks are hidden by the flood water (படீஇய – செய்யுளிசை அளபெடை), நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி – the land and sky were one with the water (நிலன் – நிலம் என்பதன் போலி), குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது – without those who count time with a small-bowl water clock, கதிர் மருங்கு அறியாது – not knowing the place of the sun’s rays, அஞ்சுவர – fearful, பாஅய் – spreading (இசை நிறை அளபெடை), தளி மயங்கின்றே – raindrops fell on the land, raindrops fell and filled the place (மயங்கின்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), தண் – cool, குரல் – sound, எழிலி – clouds, implying the rainy season (எழிலி – ஆகு பெயர் கார்ப்பருவத்திற்கு), யாமே – I (தன்மைப் பன்மை, first person plural), கொய் – plucking, அகை – flourishing, முல்லை காலொடு மயங்கி – jasmine fragrances mixed with the wind, மை – dark, இருங்கானம் – huge forest, நாறும் – fragrances, நறுநுதல் – fragrant forehead, பல் இருங்கூந்தல் – thick dark hair, மெல்லியல் மடந்தை – the delicate-natured young woman, நல் எழில் ஆகம் – fine beautiful chest, சேர்ந்தனம் – I joined (தன்மைப் பன்மை, first person plural), என்றும் அளியரோ அளியர் – they are pitiable for all times, தாமே – தாம், ஏ அசைநிலைகள், expletives, அளி இன்று – without graces, ஏதில் பொருட்பிணிப் போகி – going with the desire to earn strange/new wealth are pitiable, தம் இன் துணைப் பிரியும் மடமையோரே – those who are stupid to leave their partners and go (மடமையோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 44, குடவாயில் கீரத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே,
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே, நின் தேர்
முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது  5
ஊர்க பாக ஒரு வினை, கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அருங்கடுந்திறல் கங்கன், கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங்கட்டூர்,  10
பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித், திண்தேர்க்
கணையன் அகப்படக், கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட்சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,  15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசுமிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே.

Akanānūru 44, Kudavāyil Keerathanār, Mullai Thinai – What the hero told his charioteer
The king has finished the task he came
to perform, enemies have paid tributes
and joined us, both armies which were
in opposition have proclaimed with panai
drums that they are one now.

Ride your chariot fast, making sure that
your chariot that is ahead of others,
does not allow the chariots behind us to
go ahead of us, oh charioteer.

Let me receive sweet sleep on the chest
of my wife with character, who is lovely
like Kudavāyil town with verdant
protective forests, ponds where elephants
bathe, many communities with many
ancient paddy fields, and endless wealth
like that of Azhumpil town,
of Perumpoonchenni wearing a beautiful
garland, who seized Kazhumalam town
along with Kanaiyan owning sturdy chariots,
since he could not bear that the Chozha
commander Pazhaiyan died in battle,
after defeating the Chera supporters who
joined forces, Nannan, Ētrai, Athi wearing
fine jewels, fierce Kankan who was hard to
approach, Katti and Pundrurai with a strong
bow and gold ornaments, in a huge battlefield,
causing kites to circle above.

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.  பருந்து பட (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பருந்துகள் வீழ்ந்து ஊன் உண்ணும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பருந்து சுற்றும்படி.  வரலாறு:  நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, பழையன், கணையன், கழுமலம், சென்னி, அழும்பில், குடவாயில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வந்து வினை முடித்தனன் வேந்தனும் – the king has finished the work that we came to do, பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே – enemy kings have paid tributes and have joined us (ஆயினரே – ஏகாரம் அசைநிலை, an expletive), முரண் செறிந்திருந்த தானை இரண்டும் – both armies which were opposing greatly, ஒன்று என அறைந்தன பணையே – panai drums proclaimed that they are one now (பணையே – ஏகாரம் அசைநிலை, an expletive), நின் தேர் முன் இயங்கு – your chariot that goes ahead of others, ஊர்தி – chariots, பின்னிலை ஈயாது – without yielding to go back, ஊர்க பாக – ride on oh charioteer, ஒருவினை கழிய – as the battle work has ended and for us to pass (ஒரு வினை – போர்த்தொழில்), நன்னன் ஏற்றை –  Nannan and Ētrai, small region kings, நறும் பூண் அத்தி – Athi with fine jewels, a small region king, துன் அருங்கடுந்திறல் கங்கன் – Kankan with martial abilities that are harsh on enemies, a small region king, கட்டி – and Katti, a small region king, பொன் அணி – wearing gold, வல் வில் புன்றுறை – Pundrurai with a strong bow, a small region king, என்று ஆங்கு அன்று அவர் குழீஇய – thus they gathered (ஆங்கு -அசைநிலை, an expletive, குழீஇய – செய்யுளிசை அளபெடை), அளப்பு அருங்கட்டூர் – battle camp which is not possible to measure, பருந்து படப் பண்ணிப் பழையன் – Pazhaiyan who fought in battles where kites circled, Pazhaiyan who fought in battles where kites dived down to eat flesh, பட்டென – since he died, கண்டது நோனானாகி – unable to tolerate what he saw, திண் தேர்க் கணையன் – Kanaiyan with sturdy chariot, அகப்பட – including, கழுமலம் தந்த பிணையல் – (victory) garland that Kazhumalam town gave, அம் கண்ணி – beautiful strands, பெரும்பூண் சென்னி – Chenni with big ornaments, Chozha king, அழும்பில் அன்ன – like Azhumpil town, அறாஅ யாணர் – prosperity without end (அறாஅ – இசை நிறை அளபெடை), பழம் பல் நெல்லின் – with many ancient paddy fields, with many ancient silos with paddy, பல் குடிப் பரவை – spread with many settlements, பொங்கடி – elephants, படி கயம் – playing ponds, மண்டிய – close, பசுமிளை – verdant protective forests, தண் குடவாயில் அன்னோள் – the woman who is like cool Kudavāyil town, பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே – to receive sweet sleep on the chest of the woman with a fine character (பெறவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 45, வெள்ளிவீதியார்,  பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்,
கோடை நீடிய அகன் பெருங்குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்  5
காடு இறந்தனரே காதலர், மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும், அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணி,  10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே, யானே,
காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போலப் பேதுற்று,
அலந்தனென் உழல்வென் கொல்லோ, பொலந்தார்  15
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே!

Akanānūru 45, Velliveethiyār, Pālai Thinai – What the heroine said to her friend
He went past the forest to the wasteland
paths with no water, devoid of people,
in the wide, huge mountains,
where summers are long and the mature
pods of dried vākai trees rattle like parai
drums beat with rhythm in dance arenas,
and tigers that kill tall bull elephants prowl.

On my dark body, beautiful, tiny pallor spots
have spread, the color of peerkkai flowers,
and gossip has risen, louder than the horns
blown by musicians
on the day when Anni attacked Thithiyan and
fully chopped down his tutelary punnai tree.

I am struggling greatly with dreadful affliction.
Unable to see my lover, will I roam in confusion
like Āthimanthi?  I am like the broken ramparts of
a fort ruined by the battles of Cheran Vānavarampan
wearing a gold garland and owning fine spears,
who chased his enemies from an ocean island.

I am unable to sleep!

Notes:  வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  மாமை அரி நுண் பசலை பாஅய் பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் (6-8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – எனது மாமை நிறமானது ஐதாகிய நுண்ணிய பசலை பரத்ததால் பீர்க்கின் அழகிய மலரை ஒப்பாகும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னுடைய மாமை நிறமோ அவர் இன்மையால் ஐதாக பசப்பூரப் பெற்றுப் பீர்க்கின் அழகிய மலர் போல் தோன்றுதலை அவாவுறுகின்றது.  அவர்க்கு இன்பமான மாமை நிறமும் என்னை வெறுத்து வேறு நிறமாக மாறிற்று என்றவாறு.  மாமை பீர்க்கம்பூப் போலத் தோன்றுவதற்கு அவாவும் என்பது பட ‘வேண்டும்’ என ஒரு சொற்பெய்து வைத்தமையே.  இது ‘செய்யா மரபினவாகியவற்றைத் தொழிற்படுத்தி அடக்கியவாறு’.  காதலர் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இகழ்ச்சி, நம்மால் காதலிக்கப்படுபவர் நம்மைக் கைவிட்டுப் பொருளையே காதலிப்பவர் என்பது தோன்ற நிற்றலின்.  ஒப்புமை:  ஆடுகளப் பறை:  அகநானூறு 45 – ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 364 – ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க.  ஆதிமந்தி:  அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  வாகை நெற்று ஒலித்தல் – குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.  Natrinai 180 has a reference to Anni cutting down Thithiyan’s punnai tree.  Natrinai 180 and Akanānūru 126 and 145 have references to Anni cutting down Thithiyan’s punnai tree during the Kurukkai battle.  There are references to Anni Mignili in Akanānūru 196 and 262.  There are references to Anni in Natrinai 180 and Akanānūru 45, 126 and 145.  வரலாறு:  அன்னி, குறுக்கை, திதியன், ஆதிமந்தி.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).

Meanings:  வாடல் உழுஞ்சில் – dried vākai trees, Mimosa Flexuosa, Sirissa Tree, வாகை, விளை நெற்று அம் துணர் – mature seed pod clusters (அம் – சாரியை), ஆடுகள – dance floor, dance arena, பறையின் – like drums (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அரிப்பன – at intervals, ஒலிப்ப – sound, கோடை – summer, நீடிய – long, அகன் பெருங்குன்றத்து – in the wide huge mountain, நீர் இல் – without water, ஆர் ஆற்று – on difficult paths, நிவப்பன களிறு – tall male elephants, அட்டு – killing, ஆள் இல் அத்தத்து – in the wasteland without humans (அத்து – சாரியை), உழுவை உகளும் – tigers run around, tigers roam around, காடு இறந்தனரே – he went through the forest (ஏகாரம் அசைநிலை, an expletive), காதலர் – lover, மாமை – dark complexion, அரி – delicate, pretty, நுண் – beautiful, பசலை பாஅய் – pallor spots spreading (பாஅய் – இசை நிறை அளபெடை), பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் – appear like the beautiful flowers of peerkkai vines, desire to appear like the beautiful flowers of peerkkai vines, ridge gourd, Luffa acutangular (புரை – உவம உருபு, a comparison word), அலரே – the gossip (ஏகாரம் அசைநிலை, an expletive), அன்னி – Anni, a small-region king, குறுக்கைப் பறந்தலை – battlefield called Kurukkai Paranthalai, திதியன் தொல் நிலை முழு முதல் – Thithiyan’s ancient (tree) with thick trunk, துமியப் பண்ணி – cutting, chopping, புன்னை – punnai tree, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, குறைத்த ஞான்றை – when he cut it, வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே – it is more than the sounds created by the horn blowers (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), யானே – me (ஏகாரம் அசைநிலை, an expletive), காதலர்  கெடுத்த சிறுமையொடு – with distress due to the loss of my lover, நோய் கூர்ந்து – with great sorrow, ஆதிமந்தி போல – like Āthimanthi, பேதுற்று அலந்தனென் – I am confused and roaming, உழல்வென் கொல்லோ – will I suffer (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), பொலம் தார் – gold garland, கடல் கால் கிளர்ந்த – chased from the sea (island), வென்றி நல் வேல் – victorious fine spear, வானவரம்பன் – Cheran king, the king was Kadal Pirakottiya Chenguttuvan, அடல் முனை – battlefield, கலங்கிய – ruined, உடை மதில் ஓர் அரண் போல – like a fort with broken walls, அஞ்சுவரு நோயொடு – with this fearful love affliction, துஞ்சாதேனே – I am not able to sleep, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 46, அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது அல்லது தலைவனிடம் தலைவி சொன்னது
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கித், தாமரை  5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இருங்கூந்தல்,
பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்  10
கூறேம், வாழியர் எந்தை! செறுநர்
களிறு உடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க,  15
சென்றீ பெரும, நின் தகைக்குநர் யாரோ?

Akanānūru 46, Allūr Nanmullaiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the town,
where, hating to stand in the
mud, a red-eyed buffalo tied
to a strong rope broke loose,
lifted a sharp thorn fence,
jumped into a pond with
abundant water, caused the fish
to dart away and vallai vines
with beautiful hollow stems
to get tangled,
and ate the watery lotus flowers
on which bees were swarming!

Who are you to us to quarrel?
They say that you brought someone
with dark, hanging hair like flowing
water into our house and married her.
We did not say that.
May you live long oh lord!

If my bangles that are bright like Allūr,
rich in paddy, owned by victorious king
Chezhiyan who won difficult battles against
enemies with elephants and crushed them
with his bright swords, slip, let them slip.

Lord!  You can go where you want to go!
Who is there to stop you?

Notes:  வாயில் வேண்டி வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது அல்லது தலைவனிடம் தலைவி சொன்னது.  ஆசிரியர் நச்சினார்க்கினியர் தலைவி கூற்றாகக் கருதி ‘அவனறிவு’ என்னும் நூற்பாவில் (தொல்காப்பியம், கற்பியல் 6) ‘செல்லாக் காலை செல்க என விடுத்தலும்’ என வரும் துறைக்கு எடுத்துக் காட்டினார்.  இனி அவரே ‘உறுகண் ஓம்பல்’ என்னும் நூற்பாவின்கண் இதனைத் தோழி கூற்றாகவே கொண்டு அவள் அறிவுடைமைக்குச் சான்றாகவும் எடுத்துக் காட்டினார்.  யாரோ (16)  – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆசிரியம் ஓகாரத்தால் முடிந்தது.  ஒப்புமை:  புலவியஃது எவனோ அன்பு இலங்கடையே – குறுந்தொகை 93.   செங்கண் காரான் ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகநானூறு 46, கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து – ஐங்குறுநூறு 95.  பழனத்து (3) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நீர் மிக்க வயலில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் மிக்குள்ள பொது நிலத்தில்.  பிண்ட நெல்லின் உறந்தை – அகநானூறு 6.   வரலாறு:  செழியன், அள்ளூர்.  யாரையோ (7) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.   என் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க (15) – தோழி கூற்றாயின் தலைவிக்கும் தனக்கும் வேறுபாடு நோக்காமல் கூறியபடியாம்.

Meanings:  சேற்று நிலை முனைஇய – hating to stand in the mud (முனைஇய – செய்யுளிசை அளபெடை), செங்கண் காரான் – a red-eyed buffalo, ஊர் மடி கங்குலில் – at night time when the town slept, நோன் தளை பரிந்து – breaking the strong rope, கூர் முள் வேலி கோட்டின் நீக்கி – removed the sharp thorn fence with his horns, நீர் முதிர் பழனத்து – in a pond with lots of water,  in a field with lots of water, மீன் உடன் இரிய – fish darted around, அம் தூம்பு வள்ளை மயக்கி – vallai creepers with beautiful hollow stems got intertwined, Creeping bindweed, Ipomaea aquatic, தாமரை வண்டு ஊது – lotus flowers on which bees swarm, பனி மலர் ஆரும் – eats the watery flowers, ஊர – oh man from such town (அண்மை விளி), யாரையோ நிற் புலக்கேம் – who are you for me to quarrel with, வாருற்று உறை இறந்து – long drops of water/waterfall/rain, ஒளிரும் தாழ் இருங்கூந்தல் ஒருத்தியை – a woman with bright hanging dark hair, பிறரும் – others in town, நம் மனைத் தந்து வதுவை அயர்ந்தனை என்ப – they say that you brought her to our home and married her, they say that you brought her to her home and united with her, அஃது யாம் கூறேம் – this is not what we are saying, வாழியர் எந்தை – may you live long oh lord (எந்தை என்பது புலனெறி வழக்கில் வரும் ஒரு விளி), செறுநர் – enemies, களிறு உடை அருஞ்சமம் – difficult battles with male elephants, ததைய – crushing them, நூறும் ஒளிறு வாள் – killing bright swords, தானைக் கொற்றச் செழியன் – victorious king Chezhiyan with an army, பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன – like Allūr with heaps of paddy, என் ஒண்தொடி நெகிழினும் – even if my bright bangles get loose and slip, நெகிழ்க – let them slip, சென்றீ பெரும – Oh lord! go where you want to go (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத்திரி சொல், செல் என்பது திரிந்தது, பெரும – விளி, an address), நின் தகைக்குநர் யாரோ – who can stop you (யாரோ  – ஓகாரம்அசைநிலை, an expletive)

அகநானூறு 47, ஆலம்பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின், வல் விரைந்து
எழு இனி, வாழிய நெஞ்சே, ஒலிதலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடுவளி உருத்திய கொடிவிடு கூர் எரி  5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல் சேர்பு மறைய மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின்  10
குறுநடைப் புறவின் செங்கால் சேவல்
நெடுநிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர் கொல் எனக் கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன்  15
மழை விளையாடும் வளங்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே.

Akanānūru 47, Ālampēri Sāthanār, Pālai Thinai – What the hero said to his heart
With a mind that is not ruined,
encouraged more and more,
if we finish our task here,
we can return fast.
May you live long, my heart!

We passed the harsh wasteland
where swaying bamboos with thick
tops rub against each other with
sounds, and fire rises on the mountains
fanned by fierce winds, jumping to
the caves and crevices, cracking bamboo
nodes with loud sounds, chasing away
herds of stags.

When the sun reaches the mountains
and disappears, women with bright bangles
light white wicks, and a red-legged pigeon
that walks in small strides calls his mate
with love, in a huge house at this lonely,
greatly distressing evening time.

She cries thinking about where I am, the
woman with fine jewels, whose thick arms are
like the bamboo that grows in the cloud-hugging,
rich Sirumalai hills of the Pandiyan king
owning tall chariots and charitable hands,
where there are koothalam fragrances.
I will embrace her many times on my
return, for her spreading affliction to go away!

Notes:  பொருள் ஈட்டச் சென்ற தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிடம் சொன்னது.  விலங்கு எழுந்து (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பக்கங்களில் எழுந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விலகி உயரவெழுந்து.  வரலாறு:  செழியன், சிறுமலை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  கைம்மிக்கு (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கைம்மிக என்பதை புன்கண்மாலை என்பதன் பின் கூட்டுக, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கைம்மிக்கு கழிழ்வோள் எனக் கூட்டுக.

Meanings:   அழிவு இல் உள்ளம் – a mind without being ruined, வழிவழிச் சிறப்ப – encouraged more and more, வினை இவண் முடித்தனம் ஆயின் – if we finish the task here, வல் விரைந்து எழு இனி – rise up fast then, வாழிய நெஞ்சே – may you live long my heart, ஒலிதலை – thick top, அலங்கு கழை – swaying bamboo, நரலத் தாக்கி – attacks each other with sounds, rubs against each other with sounds, விலங்கு – moving, எழுந்து – rising, கடு வளி உருத்திய – fast winds spread heat, கொடிவிடு – flames spreading high (கொழுந்து விட்டு), கூர் – abundant, எரி விடர் முகை அடுக்கம் பாய்தலின் – due to fire jumping to the cracks and caves in the mountains, உடன் இயைந்து – together, அமைக் கண் விடு நொடி – loud sounds created by bamboo nodes cracking, கணக் கலை அகற்றும் – chases away herds of stags, வெம்முனை – harsh place where there are battles, அருஞ்சுரம் நீந்தி – passed that difficult wasteland, கைம்மிக்கு – beyond limits, அகன் சுடர் கல் சேர்பு மறைய – when the wide sun reaches the mountains and disappears, மனைவயின் – in their homes, ஒண்தொடி மகளிர் – women wearing bright bangles, வெண் திரிக் கொளாஅலின் – since they lit with white wicks, குறு நடைப் புறவின் செங்கால் சேவல் – red-legged male pigeon with small strides, நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும் – calls with desire its mate in a tall and wide house, புலம்பொடு வந்த புன்கண் மாலை – painful evening that comes with loneliness, யாண்டு உளர் கொல் எனக் கலிழ்வோள் – she cries thinking where is he (கலுழ்வோள் என்பதன் திரிபு), எய்தி – reaching, இழை அணி – wearing fine jewels, நெடுந்தேர்க் கைவண் செழியன் – Pāndiyan king with tall chariots and charitable hands, மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை சிலம்பின் – on the prosperous Sirumalai where clouds float, கூதளம் கமழும் வெற்பின் – koothalam fragrance in the mountains, Convolvulus ipome, a three-lobed nightshade vine, வேய் புரை பணைத்தோள் – bamboo-like thick arms (புரை – உவம உருபு, a comparison word), பாயும் நோய் அசா வீட – for the spreading affliction that ruins to be removed, முயங்குகம் பலவே – let us embrace her many times  (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 48, தங்கால் முடக்கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி, அதன் திறம்
யானும் தெற்றென உணரேன், மேல் நாள்
மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு  5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
“புலி புலி” என்னும் பூசல் தோன்ற,
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்  10
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு,
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவர் கண்டு
எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி,  15
நாணி நின்றனெமாகப் பேணி
“ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?” என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர் மறுத்து,  20
நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே,
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி, “மற்று இவன்
மகனே தோழி!” என்றனள்;  25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே.

Akanānūru 48, Thankāl Mudakotranār, Kurinji Thinai – What her heroine’s friend said to the foster mother
Mother, may you live long!
I am requesting you to listen!
Your daughter with sorrow
does not drink milk.
You asked me why she is pale.
I don’t understand the reason
clearly.

The other day, when we went with
our friends to pluck vēngai flowers
on tree branches with clusters,
in the slopes dense with flowers
we heard loud words, “tiger, tiger.”

A man came wearing a garland with
bright red waterlilies that resemble
the eyes of women, strung with a needle,
a strand of vetchi flowers on one side
of his head, and red sandal paste that
attracts young women to his chest,
holding a decorated bow and arrow
and appeared to be skilled.

“Did you see a tiger come this way?”
he asked.
On seeing him, we stood behind each other
hiding our bodies in shyness.
“O naïve young women with five-part braids,
pretty foreheads and dark, oiled hair!
Would your mouths utter lies?” he asked.

His eyes met your daughter’s kohl-lined
eyes as he looked at her many times after they
exchanged looks.  Then he left,
the lord of the mountain, who had stopped the
swift horses hitched to his chariot.  It was
twilight time when the sun went down, and
she looked at the direction that he disappeared,
and said, “He is a fine man, my friend.”

Only those who have intelligence
can understand the principle of this event!

Notes:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.   தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு ஏத்தல் (தலைவனை உயர்வாகக் கூறுதல்) பொருந்தும்.  வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலி புலி என்றுக் கூவி அச்சுறுத்தினால் ‘வேங்கை மரம் மலர்கொய்யத் தாழ்ந்து கொடுக்கும் என்னும் ஒரு பேதைத்தன்மை, அதுவும் மலையில் வாழ்வார்க்கு உள்ளதோர் பண்பு என்று விளக்கினார் பழையவுரையாசிரியர். குயம் மண்டு ஆகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் முலைகள் அழுந்துதற்கேற்ற விரிந்த மார்பு,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பு.  உண்கண் (21) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மையுண்ட கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் எழிலை உண்ணுகின்ற கண்கள், மையுண்ட கண் எனவும் அவன் அழகைப் பருகுகின்ற கண் எனவும் இரு பொருள் தோன்ற ‘உண்கண்’ என்றாள்.   ஒப்புமை:  நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.  குறிஞ்சிப்பாட்டு 1-7 – அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி.  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல் -அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.   அன்னை வருந்துதல்:  குறிஞ்சிப்பாட்டு 1-8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி.  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி! வேண்டு அன்னை!  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   அன்னாய் வாழி – mother! may you live long, வேண்டு அன்னை – I am requesting mother, நின் மகள் பாலும் உண்ணாள் – your daughter does not drink milk, பழங்கண் கொண்டு – with sorrow, நனி பசந்தனள் என வினவுதி – you ask why she is very pale (வினவுதி – முன்னிலை வினைமுற்று), அதன் திறம் யானும் தெற்றென உணரேன் – I don’t understand the reason clearly, மேல் நாள் – the other day, மலி பூஞ்சாரல் – slopes with abundant flowers, என் தோழிமாரோடு – with our friends, ஒலி சினை – flourishing branches (with flowers), வேங்கை கொய்குவம் சென்றுழி – when we went to pluck kino flowers, Pterocarpus marsupium (சென்றுழி = சென்ற + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு, உழி = பொழுது), புலி புலி என்னும் பூசல் தோன்ற – there were uproars, ‘tiger’ ‘tiger’, ஒண் செங்கழுநீர் – bright red waterlilies, Nymphaea caerulea, கண் போல் – like the eyes of women, ஆய் இதழ் – beautiful petals, ஊசி போகிய சூழ் செய் மாலையன் – a man with a garland strung with a needle, பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் – vetchi strand on the side of his head, வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea, குயம் மண்டு ஆகம் – chest that youth (young ladies) get close to,  a full chest, chest with a sickle, செஞ்சாந்து நீவி – rubbed red sandal paste, வரி புனை வில்லன் – a man with a bow made by tying, a man with a decorated bow, ஒரு கணை – an arrow, தெரிந்து கொண்டு – clearly knowing, யாதோ மற்று அம் மா திறம் படர் என வினவி நிற்றந்தோனே – ‘did that animal come this way’ he asked (மற்று -அசைநிலை, an expletive, நிற்றந்தோனே – தருதல் பகுதிப்பொருள் விகுதி, word with a poetic expletive suffix), அவர் கண்டு – on seeing him, எம்முள் எம்முள் மெய் மறைபு – hiding our bodies behind each other, ஒடுங்கி – hiding, restrained, நாணி நின்றனெமாக – we stood there shyly, பேணி ஐவகை வகுத்த கூந்தல் – five part braid well taken care of, ஆய் நுதல் – beautiful forehead, மை ஈர் ஓதி – dark wet hair, dark oiled hair, மடவீர் – oh naïve young women, நும் வாய்ப் பொய்யும் உளவோ என்றனன் – he said, “would your mouths utter lies”, பையெனப் பரி முடுகு தவிர்த்த – slowly stopped the horses from riding too fast, தேரன் – the man with chariot, எதிர் மறுத்து – opposing looks, looking at one another when the other one doesn’t look, நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கி சென்றோன் – he looked at your daughter’s kohl-lined eyes many times and left, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அக் குன்று கிழவோனே – lord of the mountains (ஏகாரம் அசைநிலை, an expletive), பகல் மாய் – day ends, அந்தி – twilight, படுசுடர் அமையத்து – at the time when the sun went down, அவன் மறை தேஎம் நோக்கி – looking in the direction that he disappeared (தேஎம் – இன்னிசை அளபெடை), மற்று -அசைநிலை, an expletive, இவன் மகனே தோழி என்றனள் – my friend said that he is a fine man, அதன் அளவு உண்டு கோள் – to understand the principle about the extent of it, மதி வல்லோர்க்கே – only for those who are intelligent (வல்லோர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 49, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்,
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்,
முன் நாள் போலாள், இறீஇயர் என் உயிர், என
கொடுந்தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி,  5
குறுக வந்து குவவு நுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள் மன்னே, அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,  10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மடமான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன் கழிதல் அறியின், தந்தை
அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,  15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே.

Akanānūru 49, Vannappura Kantharanthanār, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
She used to love parrots, balls
and kazhangu beans.
She had pity, kindness, tenderness
and fine tendencies.
She is not like how she used
to be.  May my life depart!

Like a cow that is tied to a tree that looks
at its calf rapidly, I used to look at her back.
I would go near her, rub her rounded
forehead and embrace her softly.
She embraced me many times, and the
breasts on her chest would sweat.

Had I known that that she would
leave to be with the brave young
man who praises her,
……….resting in the dry shade of the forest
……….which is parched since the skies are
……….dry and herds of sad deer without
……….strength chew on dry hemp grass,
I would have not left her side in her
father’s protected big house.
I would have followed her wherever
she went, like her body shadow, when
her anklets, heavy with bells jingled,
and when she played orai games with
her friends wearing flower garlands.

Notes:  உடன்போக்கில் தலைவி சென்றபின் செவிலித்தாய் வருந்தி உரைத்தது.  வான் புலந்து வருந்திய மடமான் அசா இனம் (வரிகள் 11-12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை வறந்தமையாலே உணவு பெறாமல் பசிப்பிணியால் வருத்தமுற்ற மடப்பமுடைய மானினது இளைப்புற்ற கூட்டம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மேகத்தை வெறுத்து வருந்திய தளர்ச்சியுற்ற மானின் கூட்டம்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:   கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் – she desired parrots and balls and molucca beans, அளியும் அன்பும் சாயலும் இயல்பும் – pity and kindness and tenderness and fine nature, முன் நாள் போலாள் – not like before, இறீஇயர் என் உயிர் என – may my life depart  (இறீஇயர் – சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), கொடும் தொடை குழவியொடு – with a calf with curved thighs, வயின் மரத்து யாத்த – tied to a tree, கடுங்கண் – rapid looks, கறவையின் – like a new mother cow (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சிறுபுறம் நோக்கி – looked at her nape/back, குறுக வந்து – came close,  குவவு – rounded, நுதல் நீவி – stroked/rubbed her forehead, மெல்லெனத் தழீஇயினேனாக – I embraced her delicately, என் மகள் – my daughter, நன்னர் – in a fine manner, (நன்னர் – நன்மையுடைய), ஆகத்து இடை முலை வியர்ப்ப – her breasts on her fine chest to sweat, பல் கால் முயங்கினள் – she embraced me many times, மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏ -அசைநிலை, அன்னோ – alas (இரக்கக்குறிப்பு), விறல் மிகு நெடுந்தகை – very brave fine man, பல பாராட்டி – praising often, வறன் நிழல் அசைஇ – rest in the dry shade (அசைஇ – சொல்லிசை அளபெடை), வான் புலந்து – skies dried, clouds dried, வருந்திய மடமான் – sad delicate deer, அசா இனம் – tired herd, herd without strength, திரங்கு மரல் சுவைக்கும் காடு – forest where they chew on dried hemp, Sansevieria trifasciata, உடன் கழிதல் – to go with him, அறியின் – if I knew that, தந்தை – her father, அல்கு – residing, பதம் மிகுத்த – with abundant food, கடியுடை – with protection, வியன் நகர் – big house, செல்வுழிச் செல்வுழி – wherever she goes (அடுக்குத்தொடர், repetition of a word for emphasis, செல்வுழி = செல் + உழி, உழி = இடம்), மெய்ந்நிழல் போல – like body shade, கோதை ஆயமொடு – with her friends wearing garlands, ஓரை தழீஇ – play ōrai games (தழீஇ – சொல்லிசை அளபெடை), தோடு அமை – set with densely arranged (bunch of bells), அரிச் சிலம்பு ஒலிப்ப – anklets with pebbles jingling, அவள் ஆடுவழி ஆடுவழி – wherever she played (அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), அகலேன் – I would not have left her, மன்னே – மன் கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 50, கருவூர் பூதஞ்சாத்தனார், நெய்தற் திணை – தோழி பாணனிடம் சொன்னது
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடு மீன் கலிப்பினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண் இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம் வயின் அகலான் ஆகிப்  5
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே மணப்பு அருங்காமம் தணப்ப நீந்தி,
“வாராதோர் நமக்கு யாஅர்” என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண? “எல்லி  10
மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்” எனக்
கண் நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்ணுதல் அரிவை, யான் என் செய்கோ எனவே?

Akanānūru 50, Karuvūr Poothanchāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the messenger bard
Even after the ocean sounds died and
boats were removed from the water,
even when fierce fish swam around
in the vast backwaters, and even when
women with harsh mouths gossiped,
he used to come to us often during the
day in his tall chariot with fine
ornaments and stand there for a long
time, the lord of the cool shores.

Now he does not come to reduce
her harsh love affliction.
Without saying, “Who is he to us?”,
she hides her eyes filled with tears,
the young woman with bright forehead
who says, “At night, the curved-beak
ibis on the palmyra palm in
our yard does not sleep when its
partner is not there.   Look at that.”

What can I do?  What if you can go
secretly and talk to the man from the
rich town, oh bard?

Notes:  தோழி பாணனுக்குச் சொல்லியது.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

Meanings:   கடல் பாடு அவிந்து – the sound of the ocean ended, தோணி நீங்கி – boats removed, நெடு நீர் இருங்கழி – vast/long backwaters, கடு மீன் கலிப்பினும் – even when fierce fish flourished, even when there were many harsh fish around, வெவ்வாய்ப் பெண்டிர் – women with harsh mouths, கௌவை தூற்றினும் – even if slandered, even if there was gossip, மாண் இழை நெடுந்தேர் – tall chariot with fine ornaments, பாணி நிற்ப – stood patiently for a long time, பகலும் நம் வயின் அகலான் ஆகி – he did not leave us during the day, பயின்று வரும் – he came again and again, he came often, மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏ -அசைநிலை, பனி நீர்ச் சேர்ப்பன் – the lord of the cool water shores, இனியே – now (ஏகாரம் அசைநிலை, an expletive), மணப்பு அருங்காமம் – difficult to unite while during secret love, தணப்ப – since it has left, நீந்தி வாராதோர் – the man who does not come, நமக்கு யாஅர் என்னாது – without saying who is he to us (யாஅர் – இசைநிறை அளபெடை), மல்லல் மூதூர் – rich ancient town, மறையினை சென்று – you go and tell secretly, சொல்லின் எவனோ பாண – what if you tell him oh bard, எல்லி – night, மனை சேர் – next to the house, பெண்ணை மடிவாய் அன்றில் – an ibis with curved beak on a palmyra palm tree  (Borassus flabellifer),  துணை ஒன்று பிரியினும் – if separated from its partner, துஞ்சா – it does not sleep, காண் – look, என – thus, கண் நிறை நீர்கொடு – with eyes filled with tears, கரக்கும் – she hides, ஒண்ணுதல் அரிவை – the young woman with a bright forehead, யான் என் செய்கோ – what can I do (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ -அசைநிலை, an expletive), எனவே – thus, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 51, பெருந்தேவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ் வளி முழங்கும் புல்லென் உயர்சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி  5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய் வினைப் பொருட்பிணி
பல்லிதழ் மழைக் கண் மாஅயோள் வயிற்
பிரியின் புணர்வது ஆயின், பிரியாது  10
ஏந்து முலை முற்றம் வீங்கப் பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம், நீங்குதல் மறந்தே.

Akanānūru 51, Perunthēvanār, Pālai Thinai – What the hero said to his heart
In the wasteland with no movement
of people, where the sun’s intense
heat has spread, the summers are
long and soaring bamboos grow in
the wide spaces, and a fierce vulture,
his feathers singed, his red ear lobes
appearing like stuck meat,
looks at the face of his mate who
desires meat, in their nest on a tall
dry branch of a yā tree with a tall
trunk as the splitting wind roars.

My esteemed heart!  We can earn
the wealth you desire, with difficulty,
going through the wasteland, if you
leave the dark, young woman with
eyes like flowers with many petals.

If we do not leave, we can be happy
at home with her doing good marital
deeds, embracing her again and again
causing her lifted breasts to swell and
her perfect jewels to jingle.

Notes:  பொருள் ஈட்ட வேண்டும் என்று தன்னை இடைவிடாது தோன்றுகின்ற தன் நெஞ்சை நோக்கி “நாம் இப்பொழுது சென்றால் தலைவி வருந்துவாள்” எனக் கூறி செலவு அழுங்குவித்தது.  வினையொடும் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விருந்தோம்பல் முதலிய அறச் செயல்கள்.  ஒப்புமை:  அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   ஆள் வழக்கு அற்ற – devoid of people movement (ஆள் – மாந்தர் என்னும் பொருளில் வந்தது), சுரத்திடைக் கதிர் தெற – in the wasteland which was heated by the rays, நீள் எரி பரந்த – great heat had spread, நெடுந்தாள் யாத்து – on a tall-trunked yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (யாத்து – அத்து சாரியை), போழ் வளி முழங்கும் – splitting wind roars, புல்லென் – being dull, being parched, உயர் சினை – upper branch, முடை நசை – desire for meat, இருக்கை – nest, abode, பெடை முகம் நோக்கி – looking at the female’s face, ஊன் பதித்தன்ன – like meat was embedded, வெருவரு – causing fear, செஞ்செவி எருவைச் சேவல் – a male vulture with red ear flaps, பிணம் தின்னும் கழுகு, Pondicherry vulture, red-headed vulture, Indian black vulture, கரிபு சிறை தீய – wings becoming burnt, வேனில் நீடிய – long summer, வேய் உயர் – tall bamboos, நனந்தலை – wide space, huge space, நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி – you working and earning desiring material wealth with great difficulty/distress (உழந்து – மிகவும் வருந்தி), பல்லிதழ் மழைக்கண் மாஅயோள் வயிற் பிரியின் – if we separate from the dark woman with eyes like many-petaled flowers (பல்லிதழ், பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது, மாஅயோள் – இசைநிறை அளபெடை), புணர்வது ஆயின் – if we will attain, பிரியாது – not separating, ஏந்து முலை முற்றம் வீங்க – her lifted breasts to swell, பல் ஊழ் – many times, சேயிழை தெளிர்ப்ப – perfect jewels to jingle, red jewels to jingle, கவைஇ – embracing (சொல்லிசை அளபெடை), நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப – being happy with my wife every day with deeds in the house, நினை மாண் நெஞ்சம் – think about it oh my esteemed heart, நீங்குதல் மறந்தே – forgetting leaving her (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 52, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்  5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம் கொல்? அறிவியேம் கொல்? என  10
இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால்
சேர்ந்தன்று வாழி தோழி, “யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய்” எனச் செப்பாதீமே.  15

Akanānūru 52, Nochi Niyamankizhār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, my friend!  I have
two different thoughts about this matter.

Should we tell mother about him who is
seated in my heart,
the man from the mountains where valli
vines twine on vēngai trees on tall slopes,
on whose high branches flowers have
blossomed in gold color,
and a mountain woman who desires the
flowers shouts loudly “vēngai, vēngai”
causing people in the rock-filled, small
village to be lonely, as men with bows in
their left hands rush thinking that a strong
tiger that kills cattle is lurking in the mountain
with dark  caves and tall boulders?

Or, should we not tell mother?  Both of our
considerations have merged as one.

Even if our bodies were to lose lives, don’t
tell mother “Your daughter’s beautiful,
flower-like, kohl-lined eyes have become
pale because of her love affliction.”

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அவள் வருத்தம் மிகுதியாயிற்று.  அறத்தொடு நிற்க முயலும் தோழியை அங்ஙனம் நிற்க வேண்டாம் என்று தடுப்பாள் போல், தான் அடைந்துள்ள வருத்தம் தலைவனால் ஏற்பட்டது என்று செவிலித்தாயிடம் கூற வேண்டாம் என்று, தலைவன் அருகில் இருப்பதை அறிந்து கூறியது.  வரைவு கடாயது.  வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கை (1-2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்து சுற்றிய கொடியுடைய செழித்தெழுந்த வேங்கை மரங்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வள்ளிக்கொடி படர்ந்து பின்னிக்கிடத்தற்கு இடனாகிய  மரங்கள் பலவும் உயர்ந்துள்ள மலைச்சாரலின்கண் உயர்ந்துள்ள வேங்கை மரங்கள்.  பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின் (3-4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் போன்ற புதிய மலரைக் கொய்துக் கொள்ள நினைத்த குறத்தி கேட்டோர்க்கு துன்பம் தருகின்ற ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தை இடையறாது உண்டாக்குதலாலே.  வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவி அம்மரத்தை அச்சுறுத்தினால் அது வளைந்து கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.  ஒப்புமை:  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல் –  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397- கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.  ஒரு பால் சேர்ந்தன்று (11-12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது அறிவிப்பேம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டது, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒரு முடிவிற்கு வந்துள்ளது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   வலந்த வள்ளி – twined valli creepers, sweet potatoes, Convolvulus batatas,  மரன் ஓங்கு சாரல் – slopes with tall trees (மரன் – மரம் என்பதன் போலி), கிளர்ந்த வேங்கை – tall vēngai trees, Pterocarpus marsupium, சேண் – distant, நெடும் பொங்கர் – tall branches, பொன் நேர் புது மலர் – new flowers equal to gold (நேர் – உவம உருபு, a comparison word), வேண்டிய குறமகள் – a mountain woman who desired, இன்னா – sorrow, இசைய பூசல் பயிற்றலின் – since she shouted loudly, ஏ கல் அடுக்கத்து – on the mountain sides with tall rocks, இருள் அளைச் சிலம்பின் – on the mountain with dark caves, ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது என – that it is tiger that kills cows/cattle, தம் மலை கெழு சீறூர் புலம்ப – their small town with mountains becomes lonely (சீறூர் – ஆகுபெயர் சிற்றூரில் உள்ளவர்களுக்கு), கல்லென – with loud sounds (ஒலிக்குறிப்பு மொழி), சிலையுடை இடத்தர் – men with bows on their left hands, போதரும் – going, நாடன் – the man from such country, நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என – that he is seated in our heart in our wide chest, அன்னைக்கு அறிவிப்பேம் கொல் – can we inform mother, அறிவியேம் கொல் – should we not announce, என – thus,  இரு பால் பட்ட சூழ்ச்சி – the two kinds of analysis, ஒரு பால் சேர்ந்தன்று – have joined to become one, வாழி தோழி – may you live long oh friend, யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும் – even if our body loses its sweet life, நின் மகள் – your daughter, ஆய் மலர் – beautiful flowers, உண்கண் – kohl-rimmed eyes, பசலை – paleness, காம நோய் எனச் செப்பாதீமே – do not tell her that the reason is love disease (செப்பாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

அகநானூறு 53, சீத்தலை சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அறியாய் வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,  5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்  10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்,
‘இல்லோர்க்கு இல்’ என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்,  15
அருளே காதலர் என்றி நீயே.

Akanānūru 53, Seethalai Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
I don’t think you know the
situation.

You tell me that he desires to
come soon and shower his graces,
my lover who has gone through the
harsh, forked wasteland paths,
where the sun that removes darkness
and shines in the sky has burned and
cracked the land,
white murungai flowers have dropped
into the many cracks in the dry long
path where a wild dog with sharp teeth
rests with his pitiful hungry female
in the shade of the memorial stones with
etched writing, erected for those killed
by enemy warriors with fine arrows
in the beautiful forest with kalli and vākai
trees with rough and cracked barks, where
dried snails with spiraled noses burrow.

At the constant urging of his heart
that does not have the strength to say no
to those in need and hide the wealth that
he could earn, he is leaving.  Material
wealth is more important to him than us.

Notes:  வற்புறுத்தும் தோழியிடம் தலைவி சொன்னது.  ஒப்புமை:  குறுந்தொகை 331 – நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  அறியாய் – you do not know, வாழி தோழி – may you live long my friend, இருள் அற – removing darkness, விசும்புடன் விளங்கும் – shining in the sky, விரை செலல் – moving fastly (செலல் – இடைக்குறை), திகிரிக் கடுங்கதிர் – harsh rays of the sun (திகிரி – வட்டம், ஆகுபெயர் ஞாயிற்று மண்டலம்), எறித்த – attacked, burned, விடுவாய் – cracked place, நிறைய – many, நெடுங்கான் – huge forest, முருங்கை வெண்பூத் தாஅய் – white flowers of the murungai trees have spread, murungai’s white flowers have dropped, Moringa Oleifera (தாஅய் – இசைநிறை அளபெடை), நீர் அற வறந்த – dried without water, நிரம்பா – endless, empty, நீள் இடை – long path, வள் எயிற்றுச் செந்நாய் – a wild dog with sharp teeth, Cuon alpinus dukhunensis, வருந்து பசிப் பிணவொடு – with his female that is hungry, கள்ளி அம் காட்ட கடத்திடை – in the wasteland path of the beautiful forest with kalli, Prickly pear cactus or Euphorbia Tirucalli (அம் சாரியை), உழிஞ்சில் – vākai trees, Mimosa Flexuosa, Sirissa Tree, உள் ஊன் வாடிய – inner flesh dried, சுரி மூக்கு நொள்ளை – snails with spiraled noses, snails with curled noses, பொரி அரை – rough and cracked trunk barks, புதைத்த – buried, புலம்பு கொள் இயவின் – on the lonely path, விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் – those who were killed by the fine arrows shot from bows (arrows that don’t miss their mark) of enemy warriors, எழுத்துடை நடுகல் – memorial stones with script – names (etched), இன் நிழல் வதியும் – it rests in the sweet shade with his female, அருஞ்சுரக் கவலை நீந்தி – passing the difficult forked paths, என்றும் – always, இல்லோர்க்கு – to those who do not have anything, இல் என்று – to say no, இயைவது – agreeable, கரத்தல் – to hide (the wealth that he could earn), வல்லா நெஞ்சம் – a heart that has no strength, வலிப்ப – to urge strongly, நம்மினும் பொருளே காதலர் காதல் – our lover loves material wealth more than he loves us, அருளே காதலர் என்றி நீயே – you said that he will come soon and shower his graces (என்றி – முன்னிலை ஒருமை, நீயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 54, மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன், தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருளக்  5
கடவுக, காண்குவம் பாக, மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்,
கனையலம் குரல கால் பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்  10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனை மனைப் படரும் நனை நகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்  15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவை ஆயின் தருகுவென் பால்” என
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்,  20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

Akanānūru 54, Matroor Kizhār Makanār Kotrankotranār, Mullai Thinai – What the hero said to his charioteer
The new kings have given precious
jewels as tributes and our king’s great rage
has ebbed.  Sweet rains fall with loud uproar
from the skies.
With pattuppoochis crawling, the land is red
like a painting.
Ride fast, charioteer for us to go and see how
my wife is doing!

Let the strong wheel rims press down as hard
as they roll!
Herds of cows walk toward home rapidly, their
neck bells ringing, their udders full, anxious,
with beautiful grunting sounds,
……….to feed their calves of proud walks
……….that are tied with ropes,
followed by cattle herders who play flutes
made with kondrai seed pods and carry rods
with curved hooks.

Buds open their petals in this evening time.
My young son prattles words, sweet like the
water drunk after eating fresh nelli with small
seeds that grow on trees with tiny leaves in the
groves of Sirukudi of Pannan, who lives not for
himself, but for others.

My wife, like a delicate vine, with calm eyes and
loins with pallor spots, says to the moon, “Oh bright,
young moon!  If you come near my son wearing a
gold chain, I will give you milk”,
summoning it again and again with her fingers, thus
tricking our son.

Notes:   வினை முற்றி மீளும் தலைவன் உரைத்தது.  விலங்கு அமர்க் கண்ணள் (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருக்கணித்து நோக்குகின்ற அமர்த்த கண்ணையுடையவளாய்.  ஒப்புமை:  தாலி – அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்.  கொன்றை விதைக் குழல் – அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர்.  இந்திரகோபம் – Pattupoochis (மூதாய், இந்திரகோபம் – trombidium grandissimum) are tiny red bugs that look like pieces of velvet.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs.  சிறுகுடி – The word Sirukudi is the name of a particular village indicated with the name of a leader in 6 poems – Akanānūru 54-14 (பண்ணன்), Akanānūru 117-18 (வாணன்), Akanānūru 204-12 (வாணன்), Akanānūru 269-22 (வாணன்), Natrinai 340-9 (வாணன்), Natrinai 367-6 (அருமன்).  Elsewhere, it means a small village or a small community.  புறநானூறு 70 – கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி, புறநானூறு 388 – சிறுகுடி கிழான் பண்ணன்.  வரலாறு:  பண்ணன், சிறுகுடி.

Meanings:   விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப – new kings heaped precious jewels as tributes, வேந்தனும் வெம்பகை தணிந்தனன் – the king’s intense rage went down, தீம் பெயல் காரும் – the clouds that pour sweet rains, ஆர்கலி – uproar, தலையின்று – fell as rain, தேரும் – the chariot, ஓவத்து அன்ன – like a painting (ஓவம், அத்து சாரியை), கோப – with red velvet bugs, pattuppoochi, trombidium grandissimum, செந்நிலம் – red land, வள்வாய் ஆழி – strong rimmed wheels, உள் உறுபு உருள – press hard as they roll, கடவுக – may you ride, காண்குவம் பாக – let us go and see her oh charioteer, மதவு நடை – proud walk, தாம்பு அசை குழவி – calves tied with ropes, வீங்கு சுரை மடிய – for their swollen udders to become small by feeding milk, கனையல் அம் குரல – with their beautiful grunting voices, with their grunting voices (அம் – அழகு, சாரியையுமாம்), கால் பரி பயிற்றி – walking rapidly, படுமணி மிடற்ற – with necks with bells ringing, பய நிரை ஆயம் – beneficial herds of cattle, கொடு மடி உடையர் – those with curved and folded sticks, கோல் கைக் கோவலர் – cattle herders with sticks, கொன்றை அம் குழலர் – flute players playing with laburnum pods, Golden Shower Tree, Cassia fistula,  பின்றைத் தூங்க – walking behind, மனை மனைப் படரும் – going toward the houses, நனை நகு மாலை – evening when buds open (நகு – மலருகின்ற), தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் – Pannan who lived not for himself but for others, சிறுகுடிப் படப்பை – grove in Sirukudi village (a village north of Kaviri River), நுண் இலை – tiny leaves, புன் காழ் – soft seeds, small seeds, நெல்லிப் பைங்காய் – fresh gooseberries, green gooseberries (பைங்காய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), தின்றவர் – those who eat, நீர் குடி சுவையின் – like the sweetness of drinking water (சுவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தீவிய மிழற்றி – talks sweetly, முகிழ் நிலா – growing moon, young moon, திகழ்தரும் – yielding brightness, மூவாத் திங்கள் – oh young moon (விளி, an address), பொன்னுடைத் தாலி என் மகன் – my son with a gold chain, ஒற்றி வருகுவை ஆயின் – if you come near, தருகுவென் – I will give, பால் – milk, என விலங்கு அமர்க் கண்ணள் – lady with calm eyes that look on one side, விரல் விளி பயிற்றி – called with her fingers again and again, திதலை அல்குல் – loins with pallor spots, எம் காதலி – my wife, my lover, புதல்வன் பொய்க்கும் – lied to our son, tricked our son, பூங்கொடி நிலையே – the situation of the lady who is like a delicate flowering vine (நிலையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 55, மாமூலனார், பாலைத் திணை – தலைவியின் தாய் அருகில் வாழ்பவர்களிடம் சொன்னது
காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்,
நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம்பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்  5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே, ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு,
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்  10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகியாங்குப் பிரிந்து இவண்  15
காதல் வேண்டி, என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே.

Akanānūru 55, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s mother said to her neighbors after her daughter eloped
I am not sorry for my daughter who went
with a young man with the strength of a bull
elephant,
to the wasteland where the raging sun burns
with heat, enough to crack mountains, and
passing herons on the wasteland path are sad.
The pebbles on the long path have sharp ends
like the tops of chisels and hurt the soles of
those who not aware of how their lives will
end.  The forest with bamboos is burning.

Separated from my daughter, I am sighing like
the bellows in a hot furnace.  My heart is sad
and I cannot sleep.  I see her in my mind.

I am upset that my life which desires to live
does not depart,
like the lives of the wise warriors who died
to attain the upper world that is hard to attain,
on hearing the harsh and sweet news that
king Cheralāthan, who lost to Karikāl Valavan
with an army with bright weapons in the Venni
battlefield, sat facing the north and starved to
death, embarrassed that he had received wounds
on his back.

Notes:   உடன்போக்கில் தலைவனுடன் தலைவி சென்றதால் அவளுடைய தாய் வருந்தினாள்.  ஆறுதல் கூறிய அயலாரிடம் அவள் உரைத்தது.  ஒப்புமை:  வடக்கிருத்தல் – வடதிசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாது உயிர் துறப்பது.  புறநானூறு 65 – புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன், புறநானூறு 66 – வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப் புண் நாணி வடக்கிருந்தோனே, அகநானூறு 55 – வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென.  விளி முறை அறியா (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெப்பத்தில் வீழ்ந்து துடிப்பவர் வீழ்ந்து சாதற்கு ஓரிடம் வேண்டுவர்.  அத்தகைய இடத்தை காணவொண்ணாத வெண்பாலை. இனி, தாம் எவ்வகையால் சாவோமோ என்று அறியவொண்ணாத எனினுமாம்.  சான்றோர் (13) – போரில் தலைமையுடைய வீரர்களைச் சான்றோர் என்று குறிப்பது வழக்கம் – புறநானூறு 63-5, பதிற்றுப்பத்து 14-12, 58-11, 67-18.  இன்னா இன் உரை (13) – பழைய உரை – மரிக்கின்றான் என்ற இன்னாமையும் புறப்புண் பட்ட பழி தீர உயிர் விடுகின்றான் என்கின்ற இனிமையும் உடைய உரை.  Chozha king Karikālan beat a Pandiyan king, Cheramān Peruncheralāthan and 11 Vēlirs at the Venni battlefield in the Chozha country.  There are references to this battle in Akanānūru 55, 246, Puranānūru 65, 66 and Porunarātruppadai 147.  Natrinai 390 has a reference to the town Venni belonging to Chozha king Killi.  வரலாறு:  வெண்ணி, கரிகால் வளவன், சேரலாதன்.  கனவ (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கனவுபோலக் கண்டிருக்குமாறு, கண்படை பெறேன் என்றமையே அது கனவன்று என்பதை அறிவுறுத்தல் அறிக, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – புலம்ப.

Meanings:   காய்ந்து செலல் கனலி – the sun that moves heating (செலல் – இடைக்குறை), கல் பக – splitting boulders/mountains, தெறுதலின் – since it burnt, நீந்து குருகு உருகும் – passing herons/egrets/storks to be sad, என்றூழ் நீள் இடை – hot long path, உளி முக – tops like chisel ends, வெம்பரல் – harsh stones, sharp stones, அடி வருத்துறாலின் – since they hurt the soles of the feet, விளிமுறை அறியா – without knowing where they will drop dead, unable to find a place to drop dead, வேய் கரி கானம் – bamboo burnt forest, வயக் களிற்று அன்ன காளையொடு – with a young man who is like a strong male elephant, என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே – I am not sorry for my daughter leaving (அழிந்தன்றோ – ஓகாரம் ஒழியிசை, suggestion of implied meaning, இலனே – ஏகாரம் அசைநிலை, an expletive), ஒழிந்து – separated, யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ வேவது போலும் – I am suffering and sighing deeply like the bellows of a metalsmith (குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, அசைஇ – சொல்லிசை அளபெடை), வெய்ய நெஞ்சமொடு – with a burning heart, with a sad heart, கண்படை பெறேன் – I am unable to sleep, கனவ – in my mind, in my thoughts, in distress, in loneliness, ஒண் படைக் கரிகால் வளவனொடு – with Karikāl Valavan with bright weapons, with Karikāl Valavan with bright warriors, வெண்ணிப் பறந்தலை – Venni battlefield, பொருது – fought, புண் நாணிய – embarrassed since he was wounded, சேரலாதன் – Chera king, அழி கள மருங்கின் – near the ruining battlefield, வாள் – sword, வடக்கிருந்தென – since he sat facing north and starved to death, இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – army commanders who heard that distressing and sweet news, wise men who heard that distressing and sweet news, அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – inorder to go with him to the rare to attain world (செலீஇயர் – சொல்லிசை அளபெடை), பெரும்பிறிது ஆகியாங்கு – like dying, பிரிந்து – separating, இவண் – here, காதல் வேண்டி – for the love for living, என் துறந்து போதல் செல்லா – my life does not leave me and go away, என் உயிரொடு புலந்தே – I am upset with my life (புலந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 56, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய  5
காஞ்சி நுண்தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்  10
புனிற்று ஆப் பாய்ந்தெனக் கலங்கி யாழ் இட்டு
எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர் சென்று
இம்மனை அன்று அஃது உம்மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி  15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

Akanānūru 56, Mathurai Aruvai Vānikan Ilavettanār, Marutham Thinai – What the heroine said to her friend , about the messenger bard
This is a laughing matter, my friend!
Yesterday, the genial bard,
who arranges women who are decorated
like brides, for our lord,
….……a man with a firm garland on his
……….chest, from the cool port,  where
……….a buffalo with black horns that look
……….like they are crafted with iron,
……….muddied the sapphire-like, clear water
……….of a pond, tore the delicate leaves
……….of white waterlilies, ate the blue
……….waterlilies that open from pointed buds,
……….and rested on the bank under a punnai
……….tree where pollen dropped on its wet back,
……….chewing food in its mouth as it enters
……….the stable,
threw his lute down and entered my house
in panic, after being chased on the street
by a cow which had given birth recently.

I was extremely happy on seeing that,
but hid my joyous feelings.
I stood across from him and said, “This is not
the house.  That is your house.”
He looked at me, the man with a baffled heart,
and joined his palms together and greeted me.

Notes:  பரத்தை மனைக்குச் செல்லும் பாணன் வந்தான் எனத் தோழிக்குத் தலைவி கூறியது.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:   நகை ஆகின்றே – it is funny (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), தோழி – oh friend, நெருநல் – yesterday, மணி கண்டன்ன – appearing like sapphire, துணி கயம் – clear pond, துளங்க – to get muddied, இரும்பு இயன்றன்ன – like made with iron, கருங்கோட்டு எருமை – buffalo with black horns, ஆம்பல் மெல் அடை கிழிய – tearing the delicate leaves of white waterlilies, குவளைக் கூம்புவிடு பன் மலர் மாந்தி – eating many flowers of the blue waterlilies which opened from closed/pointed buds, Nymphaea caerulea, கரைய – on the shore, காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப – for the fine pollen to drop on its wet back, பூவரச மரம், portia tree, Thespesia populnea, மெல்கிடு கவுள – chewing in its mouth, chewing with its cheeks, அல்கு நிலை புகுதரும் – enters its place (stable), தண்துறை ஊரன் – the man from the cool port town, திண் தார் அகலம் – chest with a firm garland, வதுவை நாள் அணி – decorations like that of marriage day, புதுவோர் – new persons, concubines, புணரிய – to unite, பரிவொடு வரூஉம் பாணன் – the bard who comes gingerly (வரூஉம் – இன்னிசை அளபெடை), தெருவில் – on the street, புனிற்று ஆ பாய்ந்தெனக் கலங்கி – panicking that a cow which had given birth jumped toward him, யாழ் இட்டு – throwing down his lute, எம் மனைப் புகுதந்தோனே – he entered my house (புகுதந்தோனே – ஏகாரம் அசைநிலை, an expletive), அது கண்டு – on seeing that, மெய்ம்மலி உவகை மறையினென் – I was ecstatic but hid the joy that rose up in my body, எதிர் சென்று – went and stood opposite to him, இம்மனை அன்று – this is not your house, அஃது உம்மனை – that is your house, என்ற – what I said, என்னும் தன்னும் நோக்கி – and he looked at me and himself, மம்மர் நெஞ்சினோன் – he was with a baffled/confused heart, தொழுது நின்றதுவே – he stood and greeted me (நின்றதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 57, நக்கீரர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சிறு பைந்தூவிச் செங்கால் பேடை
நெடுநீர் வானத்து வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்  5
குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
யாமே எமியம் ஆகத் தாமே  10
பசுநிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇச், சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்  15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள், ஆய் சிறு நுதலே.

Akanānūru 57, Nakkeerar, Pālai Thinai – What the hero said to his heart, when he was in the wasteland
A female bat with small delicate wings
and red legs, flies in the vast sky with
water, its body parched in the bright,
hot sun.  It fails to find fruits and
thinks about the times with abundant
food and feels sad.

A long aerial root on a short-trunked
fig tree with dried branches drapes down,
attacked by winds, it sways and touches
a big, rough boulder below, appearing
like an elephant lifting its huge trunk.

In this hot mountain with long paths
and villages, we are alone.
My lover suffers greatly, crying
day and night, distressed like those who
got deep wounds in the uproarious
battle when Pandiyan Nedunchezhiyan with
chariots with flags, and horses with
trimmed manes laid siege to Musiri town
near the ocean and killed enemy elephants.

I wonder whether her splendid, pretty,
small forehead which used to be like the
cool moon with many rays, has become
pale, the color of small peerkkai flowers!

Notes:  தொழில்வயின் பிரிந்த தலைவன் தலைவியை நினைந்து சொல்லியது.  ஒப்புமை:  அகநானூறு 149 – சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல்யானை அடு போர்ச் செழியன்.  வரலாறு:  செழியன், முசிறி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.

Meanings:   சிறு பைந்தூவி – small delicate wings, செங்கால் பேடை – female with red legs, நெடு நீர் வானத்து – in the vast sky with water, வாவுப் பறை – leaping and flying, நீந்தி – flies, வெயில் அவிர் உருப்பொடு – with the heat of the bright sun, வந்து கனி பெறாஅது – without getting fruits (பெறாஅது – இசை நிறை அளபெடை), பெறு நாள் யாணர் உள்ளி – thinks about the days it used to get in abundance, பையாந்து புகல் ஏக்கற்ற – it is sad and it pines when it comes, புல்லென் உலவை – dull branches, parched branches, குறுங்கால் இற்றி – fig tree with short trunk, புன்தலை – dried top, dull top, top without leaves, நெடு வீழ் – a long hanging root, இரும்பிணர்த் துறுகல் தீண்டி – touching the dark/big rough boulders, வளி பொர – attacked by the wind, பெருங்கை யானை – an elephant with huge trunk, நிவப்பின் தூங்கும் – swaying and lifting like, குன்ற வைப்பின் – with mountain villages, என்றூழ் நீள் இடை – hot long path, யாமே எமியம் ஆக – we are alone, தாமே – தான், ஏ அசைநிலைகள், expletives, பசுநிலா விரிந்த பல் கதிர் மதியின் – like the cool moon with many spread rays (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெரு நல் ஆய் கவின் – great fine beauty that is analyzed by others, ஒரீஇ – removed (சொல்லிசை அளபெடை), சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ – has it become like the color of the beautiful tiny peerkkai flowers, ridge gourd, Luffa acutangular (ஏர் – உவம உருபு, a comparison word, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), கொய் சுவல் – trimmed tuft, புரவி – horses, கொடித் தேர்ச் செழியன் – Pandiyan king with flags on his chariot, முதுநீர்- ocean, முன்றுறை – front port, முசிறி – Musiri town, முற்றி – surrounded, களிறு பட – ruined elephants, எருக்கிய – killed, கல்லென் ஞாட்பின் – in the uproarious battle (கல்லென் – ஒலிக்குறிப்பு மொழி), அரும் புண் உறுநரின் – like those who got deep wounds (உறுநரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வருந்தினள் பெரிது அழிந்து – she is sad like those ruined with deep wounds, பானாள் – midnight, கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் – of my beloved who cries continuously night and day, ஆய் சிறுநுதலே – her pretty small forehead (நுதலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 58, மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், குறிஞ்சித் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
இன்னிசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,  5
கூதிர் இல் செறியும் குன்ற நாட!
வனைந்துவரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன் கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்  10
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
மனை மரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும்புற நிலையே.

Akanānūru 58, Mathurai Panda Vānikan Ilanthēvanār, Kurinji Thinai – What the heroine said to the hero
Oh man from the mountains, where
raindrops fall abundantly with sweet,
roaring thunder sounds at night
when people have gone to sleep,
and the fathers of mountain girls
with chosen jewels and honey-fragrant
hair who leave to hunt, sleep on beds
made with skins of striped tigers,
since they are unable to find a place
to sleep in the forest in this cold season!

Whenever I think of you, the
unseasonal and unkind cold winds bring
me sorrow.

I have been pining for you for a long
time, leaning against the tree in our
house yard and breaking it, when
everybody else is fast asleep at night.
It is sweeter than embracing your
chest, hugging you with my forearms
with bright bangles, and pressing my
lifted young breasts against you.

Notes:  தலைவன் வரையாது களவொழுக்கத்தில் வந்தொழுகினான்.  அவன் இரவுக்குறிக்கண் வந்தபொழுது தலைவி அவனிடம் தன்னுடைய துன்பத்தை அவன் உணரும்படி குறிப்பால் உரைக்கின்றாள்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   இன்னிசை உருமொடு – with sweet sounding roars of thunder, கனை – abundantly துளி தலைஇ – raindrops fall (தலைஇ – சொல்லிசை அளபெடை), மன் உயிர் மடிந்த பானாள் – when human lives have gone to sleep at midnight, கங்குல் – night, காடு தேர் வேட்டத்து – to choose and hunt in the forest, விளிவு இடம் பெறாஅது – not finding spaces to sleep (பெறாஅது – இசை நிறை அளபெடை), வரி அதள் படுத்த சேக்கை – spread skin tiger skin bed (வரி – tiger, புலி, ஆகுபெயர்), தெரி இழை – chosen jewels, தேன் நாறு கதுப்பின் – with honey fragrant hair, கொடிச்சியர் தந்தை – fathers of mountain girls, கூதிர் இல் செறியும் – in the cold season inside homes, குன்ற நாட – oh man from the mountains (விளி, an address), வனைந்துவரல் இள முலை ஞெமுங்க – pressing my young breasts that rise up like they are made (வனைந்துவரல் = பண்ணினாற்போல் எழுந்த), பல் ஊழ் – many times, விளங்கு தொடி முன் கை வளைந்து – surrounding with fore-arms wearing bright bangles, புறம் – back, சுற்ற – surround, நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே – it is more sweet than embracing your chest (அடைதலின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), நிலையே – ஏகாரம் அசைநிலை, an expletive), நும் இல் புலம்பின் – in loneliness without you, நும் உள்ளுதொறும் – whenever I think about you, நலியும் தண்வரல் அசைஇய – swaying in the painful cold weather (அசைஇய – செய்யுளிசை அளபெடை), பண்பு இல் வாடை – cold northern winds without any kindness, பதம் பெறுகல்லாது – did not attain you in the right season, இடம் பார்த்து – looked at the time (இடம் – காலம்), நீடி – for long, மனை மரம் ஒசிய ஒற்றி – leaning on the tree in the house yard and breaking it, பலர் மடி கங்குல் – night when many are sleeping, நெடும்புற நிலையே – situation of waiting for a long time outside (நிலையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 59, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தண் கயத்து அமன்ற வண்டுபடு துணை மலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர் நீயே! வடாஅது
வண்புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்  5
மரம் செல மிதித்த மாஅல் போலப்,
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி,
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்,  10
சினம்மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை,
இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங்கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்,  15
வீங்கு இறைப் பணைத்தோள் நெகிழச் சேய்ந்நாட்டு
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

Akanānūru 59, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  You have
become sad, and the great beauty of
your eyes, which are like the flowers of
the cool ponds swarmed by bees, has
been lost.

He lives in a distant country where
he went with the desire to earn precious
wealth, making your curved, bamboo-like
arms to become thin.
On the path that he took, a male elephant
with musth flowing from his cheeks,
chases swarming bees, protects his tender
female with a soft head, and breaks a
branch of a tall yā tree with lovely sprouts
to eat, stepping on it, like how Thirumal
stepped on a kuruntham tree branch on
the long sandy shores of the ever flowing
northern Yamuna river to give cool leaf
garments to the daughters of cattle
herders.

He does not think about the time when he
praised the hair knot on your back, adorned
with lovely, bright, fragrant red waterlilies
from the very sweet springs of Parankundram
with tall hills dense with sandalwood trees,
the place sung by poet Anthuvan, the place
of Murukan with a spear with bight blade,
who killed Sooran and his clan with great rage.

Notes:  பொருள் ஈட்டச் சென்ற தலைவன் பிரிவால் வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.  மரம் செல மிதித்த மாஅல் போல (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – குருந்த மரம் வளைந்து மிதித்துத் தந்த கண்ணன் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரைக்கண் இருந்த குருந்த மரக்கிளை நீர் மருங்கே வளைந்து செல்லுமாறு திருவடியால் மிதித்து அருளிய மாயோனைப் போன்று, பழைய உரையாசிரியர் – ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக அவர்கள் இட்டு வைத்த துகில் எல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு குருந்த மரத்திலேறினாராக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் வந்தவராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதற்குள்ளே அடங்கி மறைவாராக. அவர் போகுமளவுந் தானையாக வுடுக்க தாழ்த்தார் என்பாருமுளர்.  இன் தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங்கழுநீர்ச் செண் (13-14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுனையில் பூத்த பேரழகாலே மிகவும் பொலிவுடைய தண்ணிய நறிய கழுநீர் மலரால் அணி செய்யப்பட்ட கொண்டை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப்பூவுடன் இயன்ற பெரிய ஒப்பனையால் பொலிவுற்ற கொண்டை.  இறைச்சி:  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – களிறு பிடி உண்ணுதற்கு யா மரத்தினை வளைத்துத் தருமென்றது அன்புறு தகுவந இறைச்சியுள் சுட்டியதாகும்.  அன்புறு தகுவன இறைச்சியிற் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே (தொல்காப்பியம், பொருளியல் 35).  வரலாறு:  அந்துவன் (நல்லந்துவனார்), பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்), தொழுநை (யமுனை ஆறு).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   தண் கயத்து அமன்ற – filled in the cool ponds, வண்டுபடு துணை மலர் – alike flowers swarmed by bees, பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை – your eyes are greatly faded since you lost your great beauty, வாழியர் நீயே – may you live long, வடாஅது வண் புனல் தொழுநை – in the Yamuna river in the north where water never goes down (வடாஅது – வடக்கின்கண், இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), வார் மணல் அகன் துறை – wide shores with long stretches of sand, அண்டர் மகளிர் – daughters of cattle herders, தண் தழை உடீஇயர் – so that they could wear cool leaf garments (உடீஇயர் – சொல்லிசை அளபெடை), மரம் செல மிதித்த மாஅல் போல – like Thirumal who stepped on a tree branch to lower it (செல – இடைக்குறை, மாஅல் – இசைநிறை அளபெடை), புன்தலை மடப்பிடி உணீஇயர் – for the delicate female with soft head to eat, for the delicate female with a head with scanty hair to eat (உணீஇயர் – சொல்லிசை அளபெடை), அம் குழை – beautiful sprouts, நெடுநிலை யாஅம் ஒற்றி – broke the tall yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅம் – இசைநிறை அளபெடை), நனை கவுள் படி ஞிமிறு – bees that dive into its wet musth flowing cheeks, கடியும் களிறே – a chasing male elephant (ஏகாரம் அசைநிலை, an expletive), தோழி – oh friend (விளி, an address), சூர் மருங்கு அறுத்த – ruined Sooran and his relatives/clan, சுடர் இலை நெடுவேல் – tall spear with bright blade, சினம் மிகு முருகன் – Murukan with great rage, தண் பரங்குன்றத்து – about cool Thirupparankundram (பரங்குன்றத்து – அத்து சாரியை), அந்துவன் பாடிய – poet Anthuvan sang, சந்து கெழு நெடு வரை – tall mountains filled with sandal trees, இன் தீம் பைஞ்சுனை – very sweet springs (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), ஈரணிப் பொலிந்த தண் நறும் கழுநீர் –  splendid/bright and beautiful and fragrant waterlilies (ஈரணி – பேரழகு, பெரிய ஒப்பனை), செண் இயற் சிறுபுறம் – your back/nape with a moving hair knot (செண் – கொண்டை), தாம் பாராட்டிய காலையும் உள்ளார் – he does not think about the times when he used to praise, வீங்கு – thick, rounded, இறை – joints,  பணைத்தோள் நெகிழ – for your bamboo-like arms to become thin, சேய்ந்நாட்டு அருஞ்செயற் பொருட்பிணி முன்னி நப்பிரிந்து – went to a distant country with the desire to earn precious wealth, சேண் உறைநர் – he who lives far away, சென்ற ஆறே – the path he went on (ஆறே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 60, குடவாயில் கீரத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெருங்கடல் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ் வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து,  5
கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண்தொடி ஞெமுக்காதீமோ தெய்ய,
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,  10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின் வென்வேல்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ்செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.  15

Akanānūru 60, Kudavāyil Keerathanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Please do not press her hard, the young woman
lovely like Thondi of the Chera king owning
sturdy chariots, wearing bright bangles, who brings
food, white rice she got from bartering salt,
mixed with a sauce of ayirai fish cooked
in sweet tamarind sauce, to her father,
who does harsh fishing work in the vast
ocean as red shrimp tremble, in his curved
boat with beautiful nets and red rods!

When she plays orai games and makes little sand
houses with her garland-wearing friends on the long
shores with sand blown and heaped by the northerly
winds, her mother gets red with rage and says,
“Your brightness will fade” for no reason.

If her mother without justice sees bangle marks on
her forearms, she will lock her up with tight guard,
which is more than the protection given to the tributes
kept in Kudanthai town, obtained from enemy nations
by the victorious Chozha kings.

Notes:  தலைமகற்கு தோழி இற்செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.  ஒண்தொடி (8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒள்ளிய வளையலைத் தழும்புறும்படி அழுத்தற்க, தலைவி என்று பொருள் கூறி அவளை வருத்தாதே என்று உரைத்தலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒள்ளிய வளையலுடையாளை வருத்தாதே.  Akanānūru 60, 220 and Natrinai 215 and 303 have references of red sticks attached to fishing nets.  These sticks might have been used as floats or could have been frames for the nets.  Natrinai 8 and Ainkurunūru 178 have references to Thondi city owned by Chera kings.  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.  ஒப்புமை:  வலையின் செங்கோல் –  அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு,  அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை,  நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.

Meanings:   பெருங்கடல் பரப்பில் – in the vast ocean, சேயிறா நடுங்க – as red shrimp tremble in fear (சேயிறா – பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to the second), கொடும் தொழில் – harsh business, முகந்த- taking, செங்கோல் – fine rod, red rod, அம் வலை – beautiful nets, நெடுந்திமில் – curved boat, தொழிலொடு வைகிய தந்தைக்கு – தொழிலில் தங்கிய தந்தைக்கு, for her father who went to work (தொழிலொடு – தொழிலில், வேற்றுமை மயக்கம்) , உப்பு நொடை நெல்லின்- of rice paddy obtained by bartering salt (Po. Ve. Somasundaranar), of rice paddy obtained by selling salt (Vekatasami Naattaar),  மூரல் வெண் சோறு – cooked white rice (மூரல், சோறு – இருபெயரொட்டு), அயிலை துழந்த – mixed with ayirai fish, Cobitis thermalis Loach, அம் புளிச் சொரிந்து – pouring lovely tamarind sauce (புளி – ஆகுபெயர் புளிக்கறிக்கு), கொழு மீன் தடியொடு – with thick fish pieces, குறுமகள் கொடுக்கும் – young daughter gives, அயிரை மீன், திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன – like Thondi town of Chera king with sturdy chariots, எம் ஒண்தொடி – our young woman with bright bangles (ஒண்தொடி – அன்மொழித்தொகை) or the bright bangles of our young woman, ஞெமுக்காதீமோ – you do not press hard, you do not crush her (தீ, மோ – முன்னிலையசைகள், expletives of the second person), தெய்ய –அசைநிலை, an expletive, ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – tall shores with sand blown by the northerly winds, கோதை ஆயமொடு – with friends wearing garlands, வண்டல் தைஇ – creating little sand houses (தைஇ – சொல்லிசை அளபெடை), ஓரை ஆடினும் – when playing orai games, உயங்கும் நின் ஒளி எனக் கொன்னும் சிவப்போள் – ‘your brightness will fade’ she will say in great anger for no reason, காணின் – if she sees, வென்வேல் கொற்றச் சோழர் – Chozha kings with victorious spears who is victorious in battles, குடந்தை – Kudanthai town, வைத்த – kept, நாடுதரு நிதியினும் – more than the tributes given by other countries, செறிய – more, அருங்கடிப் படுக்குவள் – she will put her under strict guard, அறன் இல் யாயே – mother without justice, mother without fairness (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 61, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர்’ எனத்
தாள் வலம்படுப்பச் சேண் புலம் படர்ந்தோர்,
நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல், வாழி தோழி! தாழாஅது,  5
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்  10
கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே, முனாஅது
முழவு உறழ் திணிதோள் நெடுவேள் ஆவி  15
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.

Akanānūru 61, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
Do not cry looking at the tall
wall with your daily markings,
thinking about your lover who
has gone to a distant land,
his brave efforts like that of those
who lost their lives, killed by others
in wars because of their penances,
rather than be taken by Kootruvan.

Even if he were given Vēnkadam hills
with festivities and great splendor,
belonging to the greatly charitable
Pulli who wears warrior anklets,
lord of the bandits,
who subdued the Mazhavars land,
……….his many warriors shooting
……….with enthusiasm, without stopping,
……….arrows with fine lines and new bases,
……….from strong bows with firm ropes,
……….pressed on their chests, who seize
……….white tusks of noble elephants and
……….barter liquor for rice and enjoy
……….their days,
it will be rare if he will stay away from
embracing your bright, beautiful breasts,
lovely like huge Pothini town with gold,
belonging to Neduvēl Āvi with drum-like
shoulders, fitting perfectly on your chest,
and decorated with fine ornaments.

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்தபொழுது வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.  அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் (9-10) –  வேங்கடசாமி நாட்டார் – தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளைக் கொண்டு அக் கோட்டுடன் கள்ளினை விற்றுக் கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும், பொ. வே. சோமசுந்தரனார் – தலைமைத் தன்மையுடைய களிற்றியானையின் வெள்ளிய மருப்புக்களையும் கைப்பற்றிக் கொணர்ந்து தேறல் விற்றுப் பெற்ற நெல்லினாலே நாட்காலத்தே களியாட்டு அயருகின்ற.  ஒப்புமை:  அகநானூறு 1, மாமூலனாரின் பாடல் – நெடுவேள் ஆவி அறு கோட்டு யானைப் பொதினி.  சுவரில் கோடிட்டு நாட்கணக்கு பார்த்தல் –  குறுந்தொகை 358 – ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும், அகநானூறு 61 – நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து, அகநானூறு 289 – நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி, பதிற்றுப்பத்து 68 – ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த.  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.  In Akanānūru 245, bartering elephant tusks for liquor is mentioned.  வரலாறு:  புல்லி, வேங்கடம், பொதினி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:   நோற்றோர் – those who did penances, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, தாமே – தாம், ஏ அசைநிலைகள், expletives, கூற்றம் கோள் உற விளியார் – not dying by the god of death Kootruvan taking them, பிறர் கொள விளிந்தோர் – killed by others (in wars), எனத் தாள் வலம்படுப்ப – to cause victory with effort, சேண் புலம் படர்ந்தோர் – the one who went to a distant land, நாள் இழை – drawing/writing (lines) daily, நெடுஞ்சுவர் நோக்கி – looking at the tall wall, நோய் உழந்து ஆழல் – do not cry suffering with this disease, do not sink into sorrow with this affliction (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி தோழி – may you live long my friend, தாழாஅது – without delay, without staying (இசைநிறை அளபெடை), உரும் என – like thunder, சிலைக்கும் – sounding, ஊக்கமொடு – with strength, பைங்கால் வரி மாண் – green base and fine lines (பைங்கால் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), நோன் ஞாண் – strong thread, வன் சிலைக் கொளீஇ அரு நிறத்து அழுத்திய – thrust on the chests with strong bows (கொளீஇ – சொல்லிசை அளபெடை), அம்பினர் பலருடன் – with a few men with arrows, அண்ணல் யானை வெண்கோடு கொண்டு – with the white tusks of elephants, seize the white tusks of elephants, நறவு நொடை நெல்லின் – with the rice paddy got by selling liquor, with the rice paddy got by bartering liquor, நாள் மகிழ் அயரும் – enjoys happy days, கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான் – lord of the bandits who wears perfectly made warrior anklets on his feet, மழ புலம் வணக்கிய – one who subdued the land of the Mazhavars, மா வண் – greatly generous, புல்லி – Pulli, விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் – even if he gets Vēnkadam hills with festivities and great splendor, பழகுவர் ஆதலோ அரிதே – it is rare that he will stay away (ஆதலோ  – ஓகாரம்அசைநிலை, an expletive, அரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), முனாஅது – in front of, முழவு உறழ் திணி தோள் – drum like strong shoulders (உறழ் – உவம உருபு, a comparison word), நெடுவேள் ஆவி – great Neduvēl Āvi, பொன்னுடை – with gold, with prosperity, நெடுநகர்ப் பொதினி அன்ன – lovely like huge Pothini town, நின் ஒண் கேழ் வன முலை – your bright fine breasts, பொலிந்த நுண் பூண் ஆகம் – chest donned with pretty/splendid/bright delicate ornaments, பொருந்துதல் மறந்தே – forgetting embracing (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 62, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅயோளொடு  5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல,  10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே, வென்வேல்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,  15
மடவது மாண்ட மாஅயோளே.

Akanānūru 62, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
My dark woman with bright teeth like
the tender tips of reeds growing in ponds,
coral-colored mouth, splendid smile,
budded breasts, arms like bamboo,
moist eyes like two blue waterlilies with
dark stems that are tied together,
embraced me yesterday to rid her trembling
fear, like a distressed person struggling
in the rough whirlpools of the huge, flooded
Kāviri River,
since gossip as loud as thudi drums were
heard about our secret love, which even
ghouls were not aware of, which has become
difficult to hide.

The dark, delicate woman is as pretty
as the Kolli Mountain goddess etched by
God in the adjoining mountain with bright
waterfalls, belonging to king Poraiyan with
bright spears and an army with elephants!

Notes:  அல்ல குறிப்பட்ட வேளையில் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  வரலாறு:  காவிரி, பொறையன், கொல்லி மலை.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

Meanings:   அயத்து வளர் – growing in ponds, பைஞ்சாய் முருந்தின் அன்ன – like tender reed tips (முருந்தின் – இன் சாரியை), பஞ்சாய், கோரைப்புல், Cyperus rotundus tuberosus, நகைப் பொலிந்து – splendid smile, இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, ஆகத்து அரும்பிய முலையள் – she has breasts that have budded on her chest, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, மாத் தாள் குவளை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக்கண் – moist eyes like blue waterlilies with dark stems that are tied together, Nymphaea caerulea, மாஅயோளொடு – with the dark young woman (இசைநிறை அளபெடை), பேயும் அறியா மறை அமை புணர்ச்சி – secret love union which even the ghouls don’t know about, பூசல் துடியின் – like loud thudi drums (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), புணர்பு பிரிந்து இசைப்ப – with gossips uttered by those who talk together and those who move away, கரந்த கரப்பொடு – with hidden secret, நாம் செலற்கு அருமையின் – since it is difficult for us to go through that, கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று – of the big river Kāviri with fierce floods, நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல – like one who is caught in the big eddies of the flood, நடுங்கு – trembling, அஞர் தீர முயங்கி – embraced me to remove her fear, நெருநல் ஆகம் அடைதந்தோளே – she reached my chest yesterday, she embraced me (அடைதந்தோளே – ஏகாரம் அசைநிலை, an expletive), வென்வேல் – victorious spears, களிறு கெழு தானைப் பொறையன் – Poraiyan/ Cheran with an army with elephants, கொல்லி – Kolli Mountain, ஒளிறு நீர் அடுக்கத்து – in the adjoining mountain with bright waters, வியல் அகம் – wide spaces, பொற்ப – making it beautiful, கடவுள் எழுதிய பாவையின் – like the Kolli goddess created/etched by god (பாவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மடவது மாண்ட – esteemed in her naïve nature, மாஅயோளே – the dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 63, கருவூர்க் கண்ணம்புல்லனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் தன் மகளான தோழியிடம் சொன்னது
கேளாய் வாழியோ மகளை! நின் தோழி
திரு நகர் வரைப்பு அகம் புலம்ப, அவனொடு
பெருமலை இறந்தது நோவேன், நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங்கெழு பூழி  5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்,
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்று காணாது, புன்கண்ண செவி சாய்த்து,  10
மன்று நிறை பைதல் கூரப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மட மயில் அன்ன என் நடைமெலி பேதை  15
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்? எனக் கலுழும் என் நெஞ்சே.

Akanānūru 63, Karuvūr Kannam Pullanār, Pālai Thinai – What the foster mother said to her daughter who is the heroine’s friend
May you live long, my daughter!  Listen!
Your friend left her beautiful house,
allowing it to suffer in loneliness,
and went with him over the mountains.
I am not pained by her leaving with him.

As darkness ends and morning arrives
it gets very hot.  A fierce elephant places
its trunk on its tusk and kicks the ground with
golden dust, and a red quail with a black
band around his neck pecks the dust along
with his female.  Does she have to pass
through this fierce forest?

The terrifying wasteland warriors have seized
enemy cows and kept them in the town square.
Unable to see their young, they cry pitifully,
their heads tilted, in the darkness of night.
My daughter with peacock-like beauty and
delicate walk is with him in a wise woman’s
hut with a tired base.  She is unable to sleep
even on his shoulders.  Will she hear the harsh,
tightly tied thannumai drums beaten by the fierce
warriors as they capture cattle? My heart cries in
pain!    I am distressed!

Notes:  செவிலி தன் மகளிடம் சொல்லியது.  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.   ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 –  கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  விசியுறு கடுங்கண் தண்ணுமை (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விசியுறு கடுங்கண் தண்ணுமை எனக் கூட்டுக. ஏற்றினை அச்சுறுத்திப் பற்றுதற் பொருட்டு அறையும் தண்ணுமை என்க.  அதன் ஒலி கேட்பதற்கு இன்னாது ஆகும் என்பது தோன்ற விசியுறும் கடுங்கண் தண்ணுமை என்றாள்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:   கேளாய் – listen, வாழியோ – may you live long  (ஓ -அசைநிலை, an expletive) மகளை – oh daughter (ஐ -அசைநிலை, an expletive), நின் தோழி – your friend, திருநகர் – beautiful house, wealthy house, வரைப்பு – space, place, அகம் – inside, புலம்ப – becoming lonely, அவனொடு – with him, பெருமலை – huge mountain, இறந்தது – went, நோவேன் – I am not sad, நோவல் – I’m pained, கடுங்கண் யானை – fierce elephant, நெடுங்கை – long trunk, சேர்த்தி – placed, முடங்கு தாள் – bent legs, உதைத்த – kicked, பொலங்கெழு பூழி – golden colored dust, பெரும் புலர் விடியல் விரிந்து – great darkness ended and morning arrived, வெயில் எறிப்ப – the hot sun attacks (burns), கருந்தார் மிடற்ற – with necks with black bands like garlands, செம்பூழ் – Coturnix chinensis, Blue breasted quail, சேவல் – male, சிறுபுன் பெடையொடு – with its small delicate female, குடையும் – it pecks, ஆங்கண் – there, அஞ்சுவரத் தகுந – reason for causing fear, fearful, கானம் – forest, நீந்தி – pass, கன்று காணாது – not able to see their calves, புன்கண்ண – with painful eyes, செவி சாய்த்து – tilted ears, மன்று நிறை – filled in the common grounds, பைதல் கூர – with great sorrow, பல உடன் – with a few, கறவை – female cows, தந்த – brought, seized, கடுங்கான் மறவர் – fierce wasteland warriors, கல்லென் – with the sound ‘kal’ (ஒலிக்குறிப்பு மொழி), சீறூர் – small town, எல்லியின் – at night, அசைஇ – staying (சொல்லிசை அளபெடை), முதுவாய்ப் பெண்டின் – like a wise woman’s (பெண்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), செது கால் – tired legs, tired base, sagging base, குரம்பை – hut, மடமயில் அன்ன – like a delicate peacock, என் நடைமெலி பேதை – my daughter with delicate walk, தோள் துணையாக – with his shoulders as support,  துயிற்ற – making her sleep, துஞ்சாள் – she cannot sleep, வேட்டக் கள்வர் – hunting robbers, விசியுறு – tied tightly, கடுங்கண் – fierce drum tops, சேக் கோள் – capturing bulls, seizing cattle (சே – காளை), அறையும் – they beat, தண்ணுமை – the thannummai drums, கேட்குநள் கொல் – does she hear that, will she hear that (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), எனக் கலுழும் என் நெஞ்சே – thus my heart cries ( நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 64, ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயல் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத்
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெருவழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்  5
வென்வேல் இளையர் வீங்கு பரி முடுகச்
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந்நில மருங்கின்
விடுநெறி ஈர் மணல் வாரணம் சிதரப்,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,  10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர் வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன்னிசை  15
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

Akanānūru 64, Ārkkādu Kizhār Makanār Vellai Kannathanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Oh Charioteer!  Let us leave!

Holding the bridles in the
manner they should be held,
ride like flying across the world,
……….your proud horses
……….with beautiful tufts,
……….as swift as birds
on the cool, wide paths where
wild jasmine buds have released
their tightness to bloom, and we
can go with the young workers
carrying victorious spears with
strong iron shafts and beautiful,
splendid wide blades that are
oiled, who also desire to go fast.

We can remove the sorrow of my
beloved who is distressed and feeling
helpless in this lonely evening time,
when noble bulls with mud on their
horns,
……….from piercing wet termite
……….mounds where snakes live, in
……….the red land rippled by heavy
……….rains where wild fowl scratch
……….the soil near the paths,
embrace with love their delicate females
that desire them, and the sweet, soft
clear bells adorning the cows can be heard,
as they walk toward town, enter the
stables and call for their calves together.

Notes:  வினை முற்றி வரும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொன்னது.  விடுநெறி ஈர் மணல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளிம்பாக விடுபட்ட நெறி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தேர்விடும் நெறி.  ஒப்புமை:  ஆ மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 –  கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:   களையும் இடனால் – leaving place (இடன் – இடம் என்பதன் போலி, இடனால் – ஆல் அசைநிலை, an expletive), பாக – oh charioteer, உளை அணி – tufts that make them beautiful, beautiful tufts, உலகு கடப்பு அன்ன – like passing through the world, புள் இயல் கலி மா – fast proud horses that ride fast like birds, வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – you know how to use the bridle in a perfect manner, தளவுப் பிணி அவிழ்ந்த – golden jasmine buds opened from their tightness, செம்முல்லை, தண் பத  பெருவழி – wide path that is cool, ஐது இலங்கு – beautiful and splendid, அகல் இலை – wide leaves/blades, நெய் கனி – with ghee/oil, நோன் காழ் – strong iron rods, வென்வேல் – victorious spears, இளையர் – young workers, young servants, வீங்கு – increased, பரி முடுக – to go fast, செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் – if we desire to go fast, பெயல கடு நீர் வரித்த செந்நில மருங்கின் – in the red colored land where heavy rains have fallen and the sand is rippled, விடுநெறி ஈர் மணல் – wet sand on the riding path, வாரணம் சிதர – forest fowl scratch and lift, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் – the wet side of termite mounds where snakes live (புற்றத்து – அத்து சாரியை), குத்தி – pierced, மண்ணுடை – with sand, கோட்ட – with horns, அண்ணல் ஏஎறு – esteemed bulls, noble bulls (ஏஎறு – இன்னிசை அளபெடை), உடன் நிலை வேட்கையின் – that desired to be with them,  மட நாகு தழீஇ – bulls embrace their delicate female (தழீஇ – சொல்லிசை அளபெடை), ஊர் வயின் பெயரும் பொழுதில் – when approaching town, சேர்பு உடன் கன்று பயிர் குரல – together they call their calves, மன்று நிறை புகுதரும் ஆ – cows entering the stables and filling up the place, பூண் – ornamental, தெண் மணி – clear bells, ஐது இயம்பு – ringing delicately/beautifully, இன்னிசை – sweet music, புலம்பு கொள் மாலை – lonely evening time, sad evening time, கேட்டொறும் – whenever she hears, கலங்கினள் உறைவோள் – she is living with distress, கையறு நிலையே – her helpless state (நிலையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 65, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்  5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால்வாய் கூர் எரி  10
மீன் கொள் பரதவர் கொடுந்திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசைக் கண்டாங்கு
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிக்  15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே.  20

Akanānūru 65, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  Let us
escape from the harsh words of your
mother who understands everything,
but hides what is in her mind.

Let us escape from the gossips and lies
of the women in our village.
Now you be happy like the musicians
who went singing to King Uthiyancheral
who expanded his country.

He desires to take you, my friend with
bountiful hair, to the mountains where
tall bamboos rub against each other and
burn in the heavy winds, looking like the
lamps lit by fishermen with curved boats
as they appear high on the tall waves
that touch the sky.

He will take you to the forest with
tall yā trees, where walking up and down
on rugged mountain paths with ruined
bamboo, is like walking on the back of an
elephant, where paths are guarded by noble
male elephants with lifted tusks, after saying
that going there would be harsh on women
with bamboo-like arms, fragrant five-part
braids, large rounded breasts with pallor spots,
and kohl-lined eyes like flowers with petals.

Notes:   இடையூறு காரணமாகத் தலைவி தலைவனைக் காணப்பெறாது வருந்தினாள்.  அது கண்ட தோழி அவளை ஆற்றுவித்தது.  ஒப்புமை:  அகநானூறு 128 – யானைக் கயிற்றுப் புறத்தன்ன கல் மிசைச் சிறு நெறி.  புல் சாய் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூங்கில்கள் கரிந்து சாய்ந்துள்ள, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மூங்கில்கள் சாய்ந்த.  அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 –  புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி.  வரலாறு:  உதியஞ்சேரல்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   உன்னம் கொள்கையொடு – thinking analytically, understanding what is in your mind, உளம் கரந்து உறையும் – hiding what is in her mind (உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை), அன்னை சொல்லும் உய்கம் – let us escape from the words of your mother, என்னதூஉம் – even without a little bit (இன்னிசை அளபெடை), ஈரம் – kindness, சேரா இயல்பின் – of unsuitable nature, பொய்ம் மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – let us escape from the gossips of the women in our village/community (அம் -அசைநிலை, an expletive), நாடு கண் அகற்றிய – widened his country, உதியஞ்சேரல் பாடிச் சென்ற பரிசிலர் போல – like the suppliants who when to king Uthiyancheral and sang, உவ இனி – be happy, வாழி தோழி – may you live long my friend, அவரே – he (ஏகாரம் அசைநிலை, an expletive), பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே – he desires and has agreed today that you with bountiful/abundant/thick hair can go with him (பொம்மல் ஓதி – அன்மொழித்தொகை, இன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive, அயர்ந்தனரால் – அயர்ந்தனர் + ஆல் , ஆல் அசைநிலை), மலைதொறும் – in all the mountains, மால் கழை பிசைந்த – tall bamboo rubbing against each other, கால்வாய் கூர் எரி – burning very hot in the winds, மீன் கொள் பரதவர் – fishermen who catch fish, கொடும் திமில் – curved boats, நளி சுடர் வான் தோய் புணரி மிசைக் கண்டாங்கு – like seeing the bright light from the sky-touching waves, மேவரத் தோன்றும் – appearing suitable, யாஅ உயர் – with tall yā trees, ஆச்சா மரம், Hardwickia binata, நனந்தலை – vast space, உயவல் – sad, யானை வெரிநுச் சென்றன்ன – like walking on the elephant’s back, கல் ஊர்பு இழிதரும் – walking up and down in the mountains, புல் சாய் – ruined bamboo, parched bamboo, burnt bamboo, சிறு நெறி – small path, காடு – forest, மீக்கூறும் – talked about with esteem, கோடு ஏந்து ஒருத்தல் – a male elephant with lifted tusks, ஆறு கடி கொள்ளும் – it guards the paths, அருஞ்சுரம் – difficult wasteland, பணைத்தோள் – bamboo-like arms, wide arms, நாறு ஐங்கூந்தல் – fragrant five-part braid, கொம்மை வரி முலை – rounded breasts with pallor spots, large breasts with pallor spots, நிரை இதழ் – stacked petals, rows of petals (நிரை இதழ் – ஆகுபெயர் நிரைத்த இதழுடைய மலருக்கு), உண்கண் மகளிர்க்கு அரியவால் – since it is difficult for women with kohl-lined eyes (அரியவால் – ஆல் அசைநிலை, an expletive), என – so, அழுங்கிய – avoided, செலவே – leaving,  ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 66, செல்லூர் கோசிகன் கண்ணனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்  5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி,
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து,  10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர்
தாங்குமதி வலவ” என்று இழிந்தனன், தாங்காது
மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக்  15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக்கிழவனும் போன்ம் என, மகனொடு
தானே புகுதந்தோனே, யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று  20
அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய,  25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.

Akanānūru 66, Selloor Kōsikan Kannanār, Marutham Thinai – What the heroine said to her friend about her unfaithful husband
My friend!  I have seen it all come true,
what many said about noble people who
have borne children, that they flourish
with fame in this world, and obtain the
next world without any blemish!

He wore many garlands and decorated
himself newly yesterday, to get married
to a woman.  When he passed our street
in his chariot tied to horses that do an
esteemed job, their bells jingling,
he spotted our son with flower-like
eyes, who toddled fast to see his father.

“Stop the chariot, oh charioteer!” he said,
and without waiting, stepped down
and held him close to his chest,
our son with coral-like red mouth.
“Lord, go into the house,” he chided.
Not agreeing, our son cried.
Embracing our son, he entered our house,
appearing like Kuperan.

I was embarrassed, thinking my husband
would assume I caused it.  Thinking that this
cruel, mischievous imp went to him and
caused disruption, I raised a rod to hit him.
Despite the sweet music of the drums that
came like it was inviting him, my husband
did not leave.

Did he not stop this wedding that would ruin
the graces that he showed us in the past, when
we played with our friends, with kazhangu beans?

Notes:  பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு வாயிலாக வந்த தோழியிடம் தலைவி வாயில் நேர்ந்ததையும் அவன் பண்டு செய்ததையும் கூறியது.  மாநிதிக்கிழவனும் போன்ம் என (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னைத் தடுத்த மகனையும் அவனை ஏந்தி வருகின்ற குபேரனையும் ஒக்கும் எனக் கண்டோர் கூறும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தடுத்த மகனோடு இவன் குபேரனும் ஆவான் எனக் கூறி.  ஒப்புமை:  The word இம்மை meaning ‘this life/this birth’ is used in Kurunthokai 49, Akanānūru 66, 101, 311, Kalithokai 14, Puranānūru 134, and 236.  The word மறுமை meaning ‘next life/next birth’ is used in Akanānūru 66, Kurunthokai 49, 199, Kalithokai 14, 103, and Puranānūru 134 and 141.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  ஆயத்து (246) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழியர் கூட்டத்தினின்றும் பிரிந்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆயத்தாரிடை.  அயர்ந்த (26) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரும்பிய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தொடங்கிய.

Meanings:  இம்மை உலகத்து இசையொடும் விளங்கி – flourishing with fame in this world, மறுமை உலகமும் மறு இன்று எய்துப – they will achieve the next world without blemish, செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி – even enemies will desire their faultless nature, சிறுவர்ப் பயந்த செம்மலோர் என – for the noble people who have borne children, பல்லோர் கூறிய பழமொழி – wise words that many have uttered, எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – we have seen that all of it is true my friend, நிரை தார் மார்பன் – the lord with rows of garlands, நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி – desiring yesterday to get married to a woman, yesterday to unite with a woman, புதுவதின் – newly, இயன்ற அணியன் – he decorated himself, இத்தெரு இறப்போன் – passing this street, மாண் தொழில் – esteemed in their business, மா மணி கறங்க – the bells tied to the horses were ringing, கடை கழிந்து – passed the gate, காண்டல் விருப்பொடு – desire to see, தளர்பு தளர்பு ஓடும் பூங்கண் புதல்வனை நோக்கி – looking at his son with unsteady walk and flower-like eyes who ran to him, நெடுந்தேர் தாங்குமதி வலவ – stop the tall chariot oh charioteer (மதி – முன்னிலையசை, an expletive of the second person), என்று இழிந்தனன் – he said and he got down, தாங்காது – without waiting, மணி புரை செவ்வாய் – coral-like red mouth (புரை – உவம உருபு, a comparison word, செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), மார்பகம் சிவண – holding him close to his chest, புல்லி – embracing him, பெரும – oh lord (விளி, an address), செல் இனி அகத்து – go inside the house now, என – thus, கொடுப்போற்கு – to his father who requested, ஒல்லான் – he (my son) did agree, கலுழ்தலின் தடுத்த – since he cried and blocked, மாநிதிக்கிழவனும் போன்ம் – like he was Kuperan, (மாநிதிக்கிழவனும் – உம்மை உயர்வு சிறப்பு, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), என மகனொடு தானே புகுதந்தோனே – he entered our house with our son (தானே – தான், ஏ அசைநிலைகள், expletives,  புகுதன்தோன் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின்), யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி – I was embarrassed that he would think that I had caused it, இடித்து இவன் கலக்கினன் போலும் இக்கொடியோன் – assuming that this harsh kid went to him and caused disruption, எனச்சென்று அலைக்கும் கோலொடு – so I went with a hitting stick, குறுக – took it near, தலைக்கொண்டு – embracing, இமிழ் கண் – roaring drum tops, முழவின் – of drums, இன் சீர் – sweet music, sweet rhythm, அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் – even when it came the other woman’s house came like it was calling him, தவிரான் – he did not leave, கழங்கு ஆடு ஆயத்து – with our friends who played with kazhangu beans/molucca beans, away from our friends who played with kazhangu beans/molucca beans, Caesalpinia crista seeds, அன்று நம் அருளிய – then he was gracious to us, பழம் கண்ணோட்டமும் – that old attitude, நலிய – to be ruined, அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – did he not stop his marriage, did he not stop the union that he desired (மணன் மணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 67, நோய் பாடியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யான் எவன் செய்கோ தோழி? பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,  5
நிரம்பா நோக்கின் நிரையங்கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்  10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
உருஇல் பேஎய் ஊராத் தேரோடு  15
நிலம் படு மின்மினி போலப் பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப, நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே.

Akanānūru 67, Nōy Pādiyār, Pālai Thinai – What the heroine said to her friend
What will I do, my friend?

Even when skylarks with spots and stripes sing,
the unyielding sky has abandoned rains, the
clouds are gone, and tall trees are parched in the
wide, high land with pebbles, their leaves ruined.

Among nelli trees, on the long paths that appear
like battlefields, there are flourishing memorial
stones with names and deeds etched, decorated
with peacock feathers, spears stuck before them
with shields, for noble warriors with squinting,
pointed looks, who retrieved stolen cattle in the
dark, carrying arrows with split tips cut with saws.

The shallow graves covered with leaves look like
rows of black shields with sticks tied with strings,
of armies of kings that go to other countries with
different languages, to seize land.
They say the land has formless mirages and pebbles
that glitter like fireflies, on the path that he took,
abandoning us.

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்தான்.  அப்பொழுது வருந்திய தலைவியை, “நீ ஆற்றியிருக்க வேண்டும்” எனக் கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.  ஒப்புமை:  கலித்தொகை 46 – துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், பட்டினப்பாலை 3 – தற்பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, ஐங்குறுநூறு 418 – வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய, புறநானூறு 198 – துளி நசைப் புள்ளின்.  பறைபு  (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேய்வு, இதனைப் பறத்தல் என்பாருமுளர்.  இலை கரிந்து தீய்தலின் மரம் வளர்தற்கு மாறாக தேய்ந்து புற்கெனத் தோன்றும் என்றலே நல்லுரையாம் என்க.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).   வாளி அம்பின் (5) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – நுனி கவர்த்த பிறைவாய் அம்பினை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பற்களையுடைய அம்பினையும்.

Meanings:   யான் எவன் செய்கோ தோழி – what will I do oh friend (செய்கோ – செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ -அசைநிலை, an expletive), பொறி வரி – spots and stripes, வானம் வாழ்த்தி பாடவும் – even with the skylarks sing, அருளாது – not giving, not being gracious, உறை துறந்து – abandoning raining, எழிலி நீங்கலின் – since the clouds have moved away, பறைபு உடன் – with their leaves ruined, மரம் புல்லென்ற – the trees have become dull, the trees have become parched, முரம்பு உயர் நனந்தலை – tall and wide space with pebbles, அரம் போழ் – split with a saw, நுதிய வாளி அம்பின் – with arrows with split tips, நிரம்பா நோக்கின் – with eyes that are not full, நிரையம் கொண்மார் – to seize cattle herds (நிரையம் – அம் சாரியை), நெல்லி நீளிடை – on the long path with gooseberry trees, எல்லி – night, மண்டி – going rapidly, நல் அமர் கடந்த – those who have won good battles, நாணுடை மறவர் – noble warriors who are modest, பெயரும் பீடும் எழுதி – the names of warriors and their proud acts are etched, அதர்தொறும் – in all the paths, பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – flourishing memorial stones decorated with peacock feathers, வேல் ஊன்று – spears planted on the ground, பலகை – shields, வேற்று முனை கடுக்கும் – appearing like battlefields where they fight with enemies, மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர் – kings who went to seize countries with different languages (தேஎம் – இன்னிசை அளபெடை), கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன – looking like the rows of black/stained shields with sticks tied with ropes, உவல் இடு பதுக்கை – burial covered with dried leaves, ஆள் உகு பறந்தலை – battlefields where people fell, உருஇல் பேஎய் ஊராத் தேரோடு நிலம் படு – land is with mirages that are without form (உருவமில்லாத ஊராத தேராகிய பேய்த் தேருடன், வெளிப்படை, பேய்த்தேர் = கானல் நீர், பேஎய் – இன்னிசை அளபெடை), மின்மினி போல – like fireflies, பல உடன் இலங்கு பரல் இமைக்கும் – many spread pebbles that glitter, என்ப – they say, நம் நலம் – our happiness, துறந்து – abandoning us, உறைநர் – the man who went to live, சென்ற ஆறே – the path he took (ஆறே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 68, ஊட்டியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ?” “வாழி வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை  5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே,
பின்னும் கேட்டியோ” எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள், அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்  10
வருவர் ஆயின் பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக
வந்தனர், வாழி தோழி, அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்  15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்,
கன்று கால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பல உடன்
வெண்கோட்டு யானை விளி படத் துழவும்
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்  20
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ்சுரனே.

Akanānūru 68, Ootiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
I asked her these questions,
“Oh mother, may you live long!  Please listen
to me.  In the cool pits in our grove, did you
hear a little bit of the sweet music of cascading
water hitting the koothalam vines?” and
“O mother, may you live long!  Please listen to
me!  Did you hear the thunder which fell on the
asoka tree with vermilion-like sprouts in our grove,
chopping the big trunk, thinking that the swing rope
tied to the tall branches of a tree is a snake?”

Unaware of these, mother slept deeply.

Oh friend!  This is the time for your lover to come.
Wake up!

He has come with a faultless heart, with thoughts
about you wearing glittering, bright bangles that have
slipped down, through the difficult path, which is
fearful even during the day, where heavy rains have
fallen from the skies, an elephant calf is dragged into
a whirlpool in the uncontrollable flood, a female with
a delicate head causes uproar, and bull elephants
with lifted white tusks gather together and trumpet
as they search for the calf in the water with their
trunks, and there are pythons with wide mouths under
the bushes.

Notes:  தலைவன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி,  அன்னை துயில்கின்றாளா என்பதை ஆராய்ந்து கொண்ட பின்னர் தலைவியை எழுப்பி அவன் வரவினைத் தலைவிக்குக் கூறியது.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  அயத்து (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளத்தில், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பள்ளத்தே.  வாழி தோழி (14) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தோழி என்னும் விளி துயில் எழுவாயாக என்பதுபட நின்றது, வாழி அசைச்சொல்.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:   அன்னாய் – oh mother, வாழி -அசைநிலை, an expletive, may you live long, வேண்டு அன்னை – oh mother! I am requesting you to listen, நம் படப்பைத் தண் அயத்து – in the cool pits in our grove, in the cool ponds in our grove, அமன்ற – filled, கூதளம் குழைய – causing koothalam vines to bend/to be crushed, a three-lobed night shade vine, Convolvulus, இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ – did you listen to the sweet music from the cascading water even a little bit (என்னதூஉம் – இன்னிசை அளபெடை), வாழி -அசைநிலை, an expletive, may you live long, வேண்டு அன்னை – I am requesting you to listen oh mother, நம் படப்பை – our grove, ஊட்டியன்ன – like red vermilion poured, ஒண் தளிர்ச் செயலை – asoka tree with bright sprouts, Saraca indica, ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் – the swing tied to the tall branches, பாம்பு என – that the ropes are snakes, முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே – thunder attacked and chopped the thick trunk (ஏகாரம் அசைநிலை, an expletive), பின்னும் கேட்டியோ – have you not heard again, எனவும் அஃது அறியாள் அன்னையும் – mother does not know that as well, கனை துயில் மடிந்தனள் – she slept well, அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே – also it is when all lives have gone to sleep (மடிந்தன்றால் – ஆல் அசைநிலை, பொழுதே – ஏகாரம் அசைநிலை, an expletive), காதலர் வருவர் ஆயின் பருவம் இது – this is the season for your lover to come, எனச் சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த – glittering bright bangles have become loose, bright bangles have slipped down, நம் வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்றாக வந்தனர் – he came to us without a faultless heart, வாழி – அசைச்சொல், an expletive, தோழி – oh friend, அந்தரத்து – in the sky, இமிழ் பெயல் தலைஇய – causing rain with sound (தலைஇய – செய்யுளிசை அளபெடை), இனப்பல் கொண்மூ – groups of clouds, தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – floods that could not be stopped spread everywhere, கன்று கால் ஒய்யும் – drags a young elephant by its legs, கடுஞ்சுழி நீத்தம் – eddies in the flood water, swirls in the flood water, புன்தலை மடப்பிடிப் பூசல் – female with delicate head raises uproar, female with a head with scanty hair raises uproar, பல – many, உடன் – also, வெண்கோட்டு யானை விளி படத் துழவும் – male elephants with white tusks gather together and call with uproar and search for the calf with their trunks, அகல்வாய்ப் பாந்தள் – pythons with big mouths, மலைப்பாம்பு, படாஅர் – bushes (இசை நிறை அளபெடை), பகலும் அஞ்சும் பனிக்கடுஞ்சுரனே – very cold wasteland that scares people even during the day (சுரனே – சுரன் சுரம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 69, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஆய் நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே, உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவரச்  5
செய் பொருள் திறவர் ஆகிப், புல் இலைப்
பராரை நெல்லியம் புளித் திரள் காய்
கான மடமரைக் கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுவரை இயல் தேர் மோரியர்  10
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
சிலை மாண் வல்வில் சுற்றிப் பல மாண்  15
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.  20

Akanānūru 69, Umattūr Kizhār Makanār Parankotranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  Your body has
lost its beauty!  Your dark, flower-like eyes
have lost their luster, and your pallor spots
have faded!  Even though he has parted from
you, he will not delay his return.  Do not cry!

He desires the pleasure of donating
generously and has gone to earn material
wealth.  He went through forest paths
where delicate marai deer herds attack the
rounded, lovely, sour gooseberries that grow
on small-leaved trees with thick trunks.  He
did not think about the hot paths when he left.

The Mauryas have carved into the
sky-touching mountains and created paths for
their chariots with iron wheels to roll smoothly.

He has left, forgetting sleep on your breasts
as fragrant as the fresh flowers in the forest
belonging to King Āy who wears sparkling gems
and heavy jewels, whose warriors with strong,
loud bows decorated with delicate peacock feathers
and darting arrows destroy a few forts and bring
their loots of precious jewels.

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்தபொழுது வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  Akanānūru 69, 251, 281 and Puranānūru 175 have references to Mauryan incursions into Tamil Nadu.  The Mauryas ruled from 321 to 185 B.C.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).   வண்ணம் வாடிய (3) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகு இழந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிறம் மழுங்கிப் போன.  மரை (8) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in south India.  மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும்.  அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி.  ஏமுற்று (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்பமாகக் கொண்டு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மயக்கமுற்று.  மோரியர் – அகநானூறு 69-10, 251-12, 281-8, புறநானூறு 175-6.

Meanings:   ஆய் நலம் – fine beauty, தொலைந்த மேனியும் – the body that lost it, மாமலர் – dark flowers, blue waterlilies, Nymphaea caerulea, தகை – of that nature, வனப்பு இழந்த கண்ணும் – eyes that have lost their luster, வகை இல – without details (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), வண்ணம் வாடிய – lost beauty, lost color, வரியும் – yellow spots, நோக்கி – seeing it, ஆழல் ஆன்றிசின் – do not cry, do not sink into sorrow (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), நீயே – you, உரிதினின் – rights to do it, ஈதல் இன்பம் – pleasure in giving, வெஃகி – desiring, மேவர செய்பொருள் – desiring to earn material wealth, திறவர் ஆகி – he became of that nature, புல் இலை – small leaf, பராரை – thick trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), நெல்லி அம் புளி – nelli with beautiful sour taste, gooseberry, திரள் காய் – rounded fruits, clusters of fruits, கான மட மரை – delicate marai deer of the forest, கண நிரை – many herds, கவரும் – they seize, they eat, வேனில் அத்தம் – hot path, என்னாது – not considering, ஏமுற்று – with desire, விண் பொரு – sky touching, நெடுவரை – tall mountain, இயல்தேர் – riding chariots, created chariots, மோரியர் – Mauryas, பொன் புனை திகிரி – wheels made with iron, திரிதர – to go, to pass, குறைத்த – reduced, cut, அறை – rocks, இறந்து – to pass, அகன்றனர் – he has moved away, ஆயினும் – yet, எனையதூஉம் – even a little bit (எனையதூஉம் – இன்னிசை அளபெடை), நீடலர் – he will not delay, வாழி தோழி – may you live long oh friend, ஆடு இயல் மட மயில் – dancing delicate-natured peacocks, ஒழித்த – shed, பீலி வார்ந்து – peeling and separating the feathers, தம் – their, சிலை மாண் – having loud sounds, வல் வில் – strong bows, சுற்றி – tying them around, பல மாண் – few esteemed, அம்புடைக் கையர் – warriors with arrows in their hands, அரண் பல நூறி – destroyed a few fortresses, நன்கலம் – fine jewels, தரூஉம் – he gives (தரூஉம் – இன்னிசை அளபெடை), வயவர் பெருமகன் – the lord of the warriors, சுடர் மணி – sparkling gems, பெரும்பூண் – big jewels, ஆஅய் – king Āy (ஆஅய் – இசைநிறை அளபெடை), கானத்து – forest’s, தலைநாள் – day’s fresh, அலரின் – like flowers (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நாறும் – are fragrant, நின் அலர் முலை ஆகத்து – on your wide breasts, இன் துயில் – sweet sleep, மறந்தே – forgetting, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 70, மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரு புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே  5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்,
கானல் அம் பெருந்துறைக் கழனி மா நீர்ப்  10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேல் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை,
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த  15
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே.

Akanānūru 70, Mathurai Thamizh Koothanār Kaduvan Mallanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Before,
our friendship with the lord
of the shores,
……….where fishermen from our
……….flesh-reeking village who catch fish
……….with curved boats, praise the benefits
……….of their beautiful nets with small holes,
……….and share their ayirai fish with eyes
……….with everybody,
caused women to gossip and blame us.
Also, many people knew about it.

Now,
the wedding has been arranged, and
gossip has died down in this loud town,
like the sounds of birds on banyan
trees with aerial roots, which died down
when Raman who wins wars was planning
strategies, in the ancient, roaring Kōdi
port town belonging to the Pāndiyan king,
where golden gnāzhal and punnai blossoms
decorate the groves near the lovely, big port,
and women collect waterlily flowers that
flourish in abundance with thick stems in
the dark colored water in the fields, to
decorate their leaf garments for festivals.

Notes:  தலைவன் வரைதற்கு வருகின்றமை அறிந்த தோழி தலைவியிடம் கூறியது.  உள்ளுறை:  பழைய உரைக்காரர் – பரதவர் தம் முயற்சியாலே வேட்டை வாய்த்ததாகிலும் குறுங்கண் வலையைப் பாராட்டி, அம் முயற்சியாலுண்டான அயிலைக் கடலினின்றும் நீக்கி எல்லார்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தாற்போல, தலைவரும் தம்முடைய முயற்சியானே வதுவை கூடிற்றாயினும் அதற்குத் துணையாக நின்ற என்னைக் கொண்டாடி நின்னைப் பெரிய இச்சுற்றத்தினின்றும் கொண்டுப் போய் தம்மூரின் கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம் ஊரையெல்லாம் மகிழ்விப்பார் என்றவாறு.  வரலாறு:  கவுரியர் (பாண்டியர்), கோடி (திருவணைக்கரை).  கோடி (13) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை  – திருவணைக்கரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோடிக்கரை.

Meanings:   கொடும் திமில் பரதவர் – fishermen with curved boats, வேட்டம் வாய்த்தென – since they caught fish, இரு புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்து – in a small village stinking very much with flesh, குறுங்கண் – small holes/eyes, அம் வலை – beautiful net, பயம் பாராட்டி – praised its benefits, கொழுங்கண் அயிலை பகுக்கும் – they share ayirai fish with big eyes, துறைவன் – man from this shore, நம்மொடு புணர்ந்த கேண்மை – his uniting love with us, முன்னே – then, அலர்வாய்ப் பெண்டிர் – women with gossiping mouths, அம்பல் தூற்ற – spreading blame, பலரும் ஆங்கு அறிந்தனர் – many there knew (பலரும் – அசை), மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏ -அசைநிலை, இனியே – now (ஏகாரம் அசைநிலை, an expletive), வதுவை கூடிய பின்றை – after the wedding has been arranged, புதுவது – new, fresh, பொன் வீ ஞாழலொடு – with golden gnāzhal flowers, Cassia sophera, Tigerclaw tree, புலிநகக்கொன்றை, புன்னை வரிக்கும் – punnai flowers that are strewn decorate the place, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, கானல் அம் பெருந்துறை – in the seashore grove on the beautiful big port, கழனி – fields, மா நீர் – dark colored water, பாசடை – green leaves, கலித்த கணைக்கால் – flourishing with thick stems, நெய்தல் – waterlilies, விழவு அணி மகளிர் – women who are decorated for festivals, தழை அணிக் கூட்டும் – they collect to beautify their leaf garments, வென்வேல் கவுரியர் – Pāndiyans with victorious spears, தொல் முது கோடி முழங்கு – ancient Kōdi’s (a town) roaring, இரும் பௌவம் இரங்கும் முன்துறை – on the loud ocean shore (முன்துறை – துறைமுன்), வெல் போர் இராமன் – Raman who wins wars, அரு மறைக்கு – for difficult consultations regarding war, for valuable war strategies, அவித்த – died down (the sounds of birds), பல் வீழ் ஆலம் போல – like the sounds on the banyan trees with many aerial roots, ஒலி அவிந்தன்று – sounds went down, இவ் அழுங்கல் ஊரே – in this loud town, in this uproarious town (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 71, அந்தி இளங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருளப் பையென  5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப்,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,  10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும், பெரிது அழிந்து,  15
இது கொல், வாழி தோழி, என் உயிர்
விலங்கு வெங்கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

Akanānūru 71, Anthi Ilankeeranār, Pālai Thinai – What the heroine said to her friend, or what the heroine’s friend said to her
Like an unkind heart that chooses
those who have wealth, abandoning
those who have little and are of
no use, swarms of bees abandoned
the flowers in the springs,
and went to those on tree branches.

Faultless deer herds are confused,
twilight has arrived looking like gold
which has been melted and cooled,
beautiful clouds have moved away
from the sky,
painful evening that brought distress
to lovers, has caused the sun to set,
and helpless sorrow that removes
surprising intelligence has come.
It has come to hurt us like a sharp
spear thrown at our precious chests.

Like the warm air blown on a perfectly
made round mirror that shrinks little by
little, my strength has gone down and
it will be greatly ruined.
May you live long, my friend!

Like confused birds on swaying trees
that leave when attacked by the harsh
winds, my life will leave at this time!

Notes:  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  இதனைத் தலைவி கூற்றாகவே கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.  ஈண்டு யாம்  பழைய உரை ஆசிரியர் கருதியதற்கிணங்க  தோழி கூற்றாகவே கொண்டு உரை கூறுவாம்.  தலைவியின் கூற்றெனக் கொள்ளின் ‘அவனறிவு’ என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், கற்பியல் 6) ‘ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்பதனால் அமைத்திடுக.  ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ என வரும் நூற்பாவின்கண் (தொல்காப்பியம், கற்பியல் 9) பிறவும் வகை பட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்பதனால் அமைத்திடுக.  பொ. வே. சோமசுந்தரனார், வேங்கடசாமி நாட்டார் ஆகிய பேரறிஞர்களின் உரைகளில் இப்பாடல் தோழியின் கூற்றாகவே உள்ளது.   பொன்னின் அந்தி பூப்ப  (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் போன்ற நிறமுடைய செவ்வந்தி அரும்புகள்,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பொன்னின் நிறம்போலச் செக்கர் வானம் பூத்தலைச் செய்யும்.  நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி (13-14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணாடி மண்டிலத்தின் அகத்தே வாயினால் ஊதப்பட்ட ஆவியைப்போல் மெல்ல மெல்லக் குறைந்து.  மதுகை மாய்தல் வேண்டும் (15) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – என் வலிமை மாய்தல் வேண்டியிரா நின்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவருடைய ஆற்றல் அழிதல் தேற்றம்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு – with a heart that chooses those who have wealth, குறைந்தோர் – those who have very little, பயன் இன்மையின் – since there is no use, பற்று விட்டு – abandoning attachment, ஒரூஉம் – abandoning, leaving (இயற்கை அளபெடை), நயன் இல் மாக்கள் போல – like people without any kindness, வண்டினம் – swarm of bees, சுனைப் பூ நீத்து – abandoned the flowers in the spring, சினைப் பூப் படர – went to the flowers on the branches, மை இல் மான் இனம் – deer herd without blemish, மருள – got baffled, got confused, பையென – slowly, வெந்து ஆறு பொன்னின் – like gold which is cooled after heating (பொன்னின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அந்தி பூப்ப – twilight has arrived, chevvanthi flowers have blossomed (அந்தி ஆகுபெயராக – செவ்வந்திப்பூவாம்), ஐ – surprising, அறிவு அகற்றும் கையறு படரோடு – with helpless sorrow that removes intelligence, அகல் இரு வானம் – wide dark sky, அம் மஞ்சு – beautiful clouds, ஈன – giving, yielding, பகல் ஆற்றுப்படுத்த – had the sun leave, had daytime leave, பழங்கண் மாலை – sad evening, காதலர்ப் பிரிந்த – separated from their lovers, புலம்பின் நோதக – in pain due to loneliness, ஆர் அஞர் உறுநர் – those who have attained great sorrow, அரு நிறம் சுட்டி – pointing to the precious  chest, கூர் எஃகு எறிஞரின் – like one who throws a sharp spear (எறிஞரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அலைத்தல் ஆனாது – with unending sorrow, எள் அற இயற்றிய – created without blemish, நிழல் காண் மண்டிலத்து – in a reflection-showing sphere/disc (mirror), உள் ஊது ஆவியின் – like the warm air that is blown with the mouth (ஆவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பைப்பய நுணுகி – shrinking little by little (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), மதுகை மாய்தல் – ruining strength, வேண்டும் – desiring, பெரிது அழிந்து – ruined greatly, இது கொல் – is this how it is, this is how it appears, வாழி தோழி – may you live long my friend, என் உயிர் – my life, விலங்கு வெங்கடு வளி எடுப்ப – very harsh winds attacking (விலங்கு வளி = சூறாவளி, சூறைக்காற்று), துளங்கு மரப் புள்ளின் – like the birds on swaying trees (புள்ளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), துறக்கும் பொழுதே – when abandoning, when leaving (பொழுதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 72, எருமை வெளியனார் மகனார் கடலானார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை,  5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய,
கழை மாய் நீத்தம்  கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து,  10
ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்  15
வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன், தந்த
நீ தவறு உடையையும் அல்லை நின்வயின்  20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறு உடையேனே.

Akanānūru 72, Erumai Veliyanār Makanār Kadalanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or What the heroine said to her friend, as the hero listened nearby
As though it tears the darkness, lightning
strikes flash in the sky, and clouds dense
with water come down as heavy rain
at midnight.

The paths are harsh.  Swarms of fireflies
around a broken termite mound appear
like sparks of fire from a metalsmith’s and
a male bear with big paws, digging and
taking the fungus combs, appears like a
metalsmith working with iron.

In the flooded rivers where bamboo barge
poles sink deep, loud water crashes against
the rocks, and fierce crocodiles roam,
making those who desire to travel tremble.

He is not afraid that he is alone on a path on
the fierce mountain,
where bamboos sway with sounds, a huge
tiger with great rage kills and drags a boar,
its blood dripping and drying, to remove
the hunger of his pregnant mate who pines
for food, in the light of a gem spit by a fierce
cobra that desired to search for food.

He who walked on harsh, small, forked paths,
with many stones as sharp as swords, that
cause fear in those who think, his spear as his
support, his heart gracious to us, is not a harsh
man.  You who brought him here is not the one
who erred.  I am the one who caused great
sorrow that is difficult to be removed, my friend!

Notes:  தலைவன் இரவுக்குறியின்கண் வந்ததை அறிந்த வேளையில் கூறியது.  வரைவு கடாயது.  ஒப்புமை:  மூங்கில் நீரில் மறைதல் – கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277-278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  There was this belief that snakes spit gems.  Puranānūru 294, Akanānūru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.   Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have descriptions of bears attacking termite mounds.  The word களிறு has been used for ‘boar’ here.  It must be a boar since a tiger cannot drag a huge male elephant.  The word has also been used for boars in Purananuru 41 and 325.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).

Meanings:   இருள் கிழிப்பது போல் மின்னி – lightning strikes like darkness being torn, வானம் துளி தலைக்கொண்ட – clouds carrying raindrops, நளி பெயல் – heavy rains, cold rains, நடுநாள் – midnight, மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் – a termite mound that is broken at the top and swarmed by fireflies (புற்றம் – அம் சாரியை), பொன் எறி பிதிரின் சுடர – bright like the sparks thrown out hitting iron (பிதிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வாங்கி – pulling out, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை – a male bear with big hands digs and takes the fungus combs of termite mounds (கெண்டும் – தோண்டும்), இரும்பு செய் கொல் எனத் தோன்றும் – appearing like a metalsmith working with iron, ஆங்கண் – there (அசையுமாம்), ஆறே – the paths (ஏகாரம் அசைநிலை, an expletive), அரு மரபினவே – they are of a very difficult nature to travel (ஏகாரம் அசைநிலை, an expletive), யாறே – rivers (ஏகாரம் அசைநிலை, an expletive), சுட்டுநர்ப் பனிக்கும் – makes those who consider to tremble, சூருடை முதலைய – they have fierce crocodiles, கழை மாய் நீத்தம் – bamboo poles lost in the depth of the floods, கல் பொருது – hitting against the rocks, இரங்க – roaring, அஞ்சுவம் தமியம் என்னாது – not considering that he will fear and that he is alone, மஞ்சு சுமந்து ஆடு கழை நரலும் – swaying bamboos that carry the clouds sound, அணங்குடை – with gods, fierce, கவாஅன் –  mountain slopes (இசை நிறை அளபெடை), ஈர் உயிர்ப் பிணவின் – pregnant female’s, வயவுப் பசி – craving hunger (வயா என்பது வயவு ஆயிற்று), களைஇய – to remove (செய்யுளிசை அளபெடை), இருங்களிறு – huge boar, அட்ட – killed, பெருஞ்சின உழுவை – big tiger with great rage, நாம நல் அரா – fierce cobra (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), கதிர்பட – emitting rays, sparkling, உமிழ்ந்த – in what was spit, மேய் மணி விளக்கில் – in the light of the gem that provides light to get food, புலர – dropping and drying blood, ஈர்க்கும் – drags, வாள் நடந்தன்ன – like walking on swords, வழக்கு அருங்கவலை – difficult walking path with forks where there are no people, உள்ளுநர் உட்கும் – those who think will fear, கல் அடர்ச் சிறு நெறி – small path that is dense with stones, அருள் புரி நெஞ்சமொடு – with a graceful heart, எஃகு துணையாக வந்தோன் – the one who came with a spear as a partner, the one who came with a spear as his support, கொடியனும் அல்லன் – he is not harsh, தந்த நீ தவறு உடையையும் அல்லை – you who brought him are not the one who did anything wrong, நின் வயின் – for you, ஆனா – not able to remove, அரும் படர் – great sorrow, செய்த யானே தோழி தவறு உடையேனே – I am the one who is at fault oh my friend (உடையேனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 73, எருமை வெளியனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ் குழல் அகப்படத் தைஇ,
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க,
அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,  5
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
“என் ஆகுவள் கொல் அளியள் தான்?” என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது  10
காணிய வம்மோ காதலம் தோழி!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறு தினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி  15
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

Akanānūru 73, Erumai Veliyanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My beloved friend!
In the country where he went,
rains poured long with
lightning, resembling sparks from
a torch held by a millet field guard,
as harsh as a tiger that stalks a dark
elephant among tangled vines and
bushes, waiting for it to get tired.

You with fierce virtue,
……….wearing a hair knot without
……….decorations, your oiled,
………. flowing hair tied together,
……….your breasts adorned with
………. a pearl strand with sparkling
………. rays like the eyes of a wild cat,
are not just a naive woman who
is distressed because of this affliction.

You are worried about what might
happen to me, who you pity.
I am not of a different mind.
Let us go together and see him and
end the sorrow from which we suffer.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  பின்னொடு முடித்த மண்ணா முச்சி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னுதல் மாத்திரையோடு பிறிது யாதும் ஒப்பனை செய்யாமல் முடித்த முச்சி என்றவாறு, நீராடுதல் இல்லாத முச்சி எனினுமாம்.

Meanings:   பின்னொடு முடித்த – tied with the braid, மண்ணா முச்சி – hair knot without decorations, hair know that has not been washed, நெய்கனி வீழ் குழல் – hanging locks/braids with oil, அகப்படத் தைஇ – tied together (தைஇ – சொல்லிசை அளபெடை), வெருகு இருள் நோக்கியன்ன – like a wild cat eyes looking in the dark, கதிர் விடுபு – emitting rays, sparkling, ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க – a bright pearl strand hanging between/on the breasts, அணங்குறு கற்பொடு – with fearful virtue, மடம் கொள – with a naïve nature, சாஅய் – saddened, thinned (இசை நிறை அளபெடை), நின் நோய்த் தலையையும் அல்லை – you are sad not just for your affliction, தெறுவர – causing distress, causing fear, என் ஆகுவள் கொல் அளியள் தான் – what might happen to this pitiable young woman (கொல் -அசைநிலை, an expletive), என – thus, என் அழிபு – for my sorrow, இரங்கும் நின்னொடு – with you who pities, யானும் – myself, ஆறு அன்று என்னா – considering that it is not the path, வேறு அல் காட்சி – with intelligence without difference, இருவேம் நம் படர் தீர வருவது காணிய – let us go and see him come to end the sorrow that we both suffer, வம்மோ – you come (மோ – முன்னிலையசை, an expletive of the second person), காதல் அம் தோழி – my beloved beautiful friend (அம்அசைநிலை, an expletive), கொடி பிணங்கு அரில – among the tangled vines and bushes, இருள் கொள் நாகம் – a dark colored elephant, மடி – getting tired, பதம் பார்க்கும் வயமான் – a strong animal (a tiger,  lion) that eyes the situation, துப்பின் – like the smartness, like the strength (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஏனல் அம் சிறு தினை – tiny millet in the millet field, சேணோன் – the field guard, கையதை – in his hands, கையது (ஐ – சாரியை), பிடிக்கை அமைந்த – set with a handle, கனல்வாய்க் கொள்ளி – torch with flame, விடு பொறி சுடரின் – like sparks emitted by the flame (சுடரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மின்னி – with lightning flashes, அவர் சென்ற தேஎத்து – in the country he went, in the direction he went (தேஎத்து – இன்னிசை அளபெடை), நின்றது ஆல் மழையே – rain poured and stayed (ஆல் -அசைநிலை, an expletive, மழையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 74, மதுரைக் கவுணியன் பூதத்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்தத்,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறு பல வரிப்பப்,  5
பைங்கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண்களர் அரி மணல் நன் பல் தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கருங்கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், நின் நினைந்து,  10
“திண் தேர் வலவ! கடவு” எனக் கடைஇ
இன்றே வருவர், ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென் மன்னோ, அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல்  15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறு குழல் வருத்தாக்காலே!

Akanānūru 74, Mathurai Kavuniyan Poothathanār, Mullai Thinai – What the heroine said to her friend
You tell me
“He will think about you
when he sees a naive female
deer with baffled looks,
loving mate of a black-antlered
stag, in the cool fragrant forest
where buds are opened by bees,
and delicate new mullai
blossoms from tender vines
are spread on the white saline
sand near the wide path where
there are rows of pattupoochis
looking like drops of blood,
and young warriors skilled in battle
return victoriously after doing their
duty, praising their own strength,
when the cool rains fall in the wet
morning.”

I will stay at peace since you assured
me with many fine, sweet words to
stop trembling with fear and that he
will tell his charioteer to ride his sturdy
chariot fast and come today.

I will be patient, if the music, of the
uneducated cattle herders carrying rods,
played on small flutes with strong tips
daily in the painful evenings, do not
cause me sorrow.

Notes:  தலைவன் பிரிவின்கண் வருந்திய தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் சொன்னது.  சிறு பல வரிப்ப (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பல சிறிய வரிகளாகப் பரப்ப, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறிய பற்பல ஓவியங்களைத் தோற்றுவியாநிற்ப.  ஒப்புமைமூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப.  Pattupoochis (மூதாய் – trombidium grandissimum) are tiny red bugs that look like pieces of velvet.  They surface during the rainy season, on sandy soils.  They are kept in boxes by young kids, and fed tender grass.  They are also known as indirakōpam.  They are not the silk producing worms or caterpillars.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces.  கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம்.

Meanings:   வினை வலம்படுத்த – doing their duty victoriously, வென்றியொடு மகிழ் சிறந்து – happy after victory, போர் வல் இளையர் – young warriors skilled in battle, தாள் வலம் வாழ்த்த – praising their strength, தண் பெயல் பொழிந்த – cool rain fell, பைதுறு காலை – wet morning, when it is fresh, குருதி உருவின் – like the color of blood (உருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒண் செம் மூதாய் – bright red pattuppoochi/red velvet bugs, trombidium grandissimum, பெருவழி மருங்கில் – near the wide path, சிறு பல வரிப்ப – are in few small rows/patterns, create a few little decorations, பைங்கொடி முல்லை – tender jasmine vine, green jasmine vine (பைங்கொடி – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), மென் பதப் புது வீ – delicate new flowers, வெண்களர் – white saline land, அரி மணல் – eroded sand, நன் பல் தாஅய் – spread well in many places (தாஅய் – இசைநிறை அளபெடை), வண்டு போது அவிழ்க்கும் – where buds/flowers are opened by bees, தண் கமழ் புறவில் – in the cool fragrant forest, கருங்கோட்டு இரலை – stag with black antlers, காமர் – beautiful, loving, மடப் பிணை மருண்ட மான் நோக்கம் காண்தொறும் – whenever he sees the naive doe with bewildered looks, நின் நினைந்து – will think about you, திண் தேர் வலவ கடவு எனக் கடைஇ இன்றே வருவர் – he will come today telling his charioteer, ‘ride the sturdy chariot oh charioteer’ (கடைஇய – செய்யுளிசை அளபெடை), ஆன்றிகம் பனி என – let us stop our trembling, let us calm down, வன்புறை – insistence, assurance, இன் சொல் நன் பல பயிற்றும் – uttering many good sweet words, நின் வலித்து அமைகுவென் – I will be patient because of your assurance, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, அல்கல் புன்கண் மாலையொடு பொருந்தி – daily in the painful evenings, கொடுங்கோல் – rods with curved ends, harsh rods, கல்லாக் கோவலர் – cattle herders without education, ஊதும் வல்வாய் சிறு குழல் – when they blow their small flutes with strong tips, வருத்தாக்காலே – if they do not play and make me sad (வருத்தாக்காலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 75, மதுரைப் போத்தனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அருள் அன்று ஆக ஆள் வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை,  5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர் ஆயின் நன்னுதல்,
செயிர் தீர் கொள்கை, சின்மொழி துவர் வாய்,  10
அவிர் தொடிய முன் கை ஆயிழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்  15
தருநரும் உளரோ இவ் உலகத்தான், என
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்,
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து அல்குல்
மெல்லியல் குறுமகள், புலந்து பல கூறி  20
ஆனா நோயை ஆக யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?

Akanānūru 75, Mathurai Pōthanār, Pālai Thinai – what the hero said to the heroine
Oh tender, young woman with a
pretty, dark body like the delicate
sprouts of the rainy season’s eengai
bush, tiny waist, and lifted loins covered
with strands of gold coins!

If very brave men, not relaxing, and
believing that true wealth is what they
earn through their own effort, with no
grace, go on a path where fires spread
with rage in the vast forest, and leaves
are burned and fallen off trees, strong
warriors who are like killer tigers, wearing
war anklets, sleep in the common grounds
of the ancient town in the shade of the
soaring mountains where the rocky path
is dry without water, they will think
about their exquisite beauty and pity
women with fine brows, faultless principles,
red mouths that utter few words, bright
bangles on their forearms, lovely jewels,
chests with garlands on their big breasts,
with endless love, who wear garlands that
have not been crushed.

You sulk and ask many times, “Is there
anyone in this world who will pity and
return that beauty?”  I am not thinking
of leaving you whose greatness is rare to
obtain, allowing you to suffer with an
affliction that is difficult to remove!

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிவான் என வருந்திய தலைவியிடம் தலைவன் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதனைத் தோழி கூற்றாகக் கருதுவாரும் உளர்.  அது பொருத்தமாகத் தோன்றவில்லை.  தலைவன் கூற்றாகக் கோடலே நேரிதாம்.  அடைமுதல் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இலை முதலியன, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – புகுமிடம்.   அடைமுதல் – இருங்கடற்று அடைமுதல் – அகநானூறு 75, வெங்கடற்று அடைமுதல் – அகநானூறு 389, வெங்கடற்று அடைமுதல் – நற்றிணை 164.

Meanings:   அருள் அன்று ஆக – being without grace, ஆள் வினை – earning wealth, ஆடவர் – men, பொருள் என – that it is material wealth, வலித்த – with strength, பொருள் அல் – without material wealth, காட்சியின் – with the intelligence, மைந்து மலி உள்ளமொடு – with a very brave heart, துஞ்சல் செல்லாது – without slackening, without relaxing, எரி சினம் தவழ்ந்த – fire with rage spreads (சினம் நெருப்புக்கு ஆகுபெயர்), இருங்கடற்று – in the vast/dark forest, அடைமுதல் – entering place, leaves, கரிகு உதிர் மரத்த – with trees from which leaves have burned and have fallen (கரிகு – கரிகுபு என்னும் எச்சம் கரிகு என விகாரப்பட்டது, கரிகுதிர் – கரிந்த குதிர் என்றுமாம், மரத்த – அகரம் பன்மை உருபு), கான வாழ்க்கை – forest life, அடு புலி – murderous/killer tigers, முன்பின் – with strength, தொடு கழல் மறவர் – warriors with war anklets tied (on their feet), தொன்று இயல் – ancient, சிறுகுடி மன்று – in the common grounds of small towns, நிழல் படுக்கும் – sleep in the shade, அண்ணல் நெடுவரை – lofty tall mountains, ஆம் அறப் புலர்ந்த – dried without water, கல் நெறிப் படர்குவர் ஆயின் – if I/he goes on that rock filled path, நன்னுதல் – fine foreheads, செயிர் தீர் கொள்கை – faultless principles, சின்மொழி துவர் வாய் – red mouth with few words, coral-like red mouth with few words, அவிர் தொடிய முன் கை – forearms with bright bangles, ஆய் இழை மகளிர் – women wearing pretty jewels, women wearing chosen jewels, ஆரம் தாங்கிய – bearing garlands, அலர் முலை ஆகத்து – on their chests with growing breasts, ஆராக் காதலொடு – with endless love, தாரிடைக் குழையாது – without crushing the garlands, சென்று படு விறல் கவின் உள்ளி – thinking about your great beauty, என்றும் இரங்குநர் – one who will always pity, அல்லது – other than that, பெயர்தந்து யாவரும் தருநரும் உளரோ – is there anybody who can give that beauty back (ஓகாரம் வினா), இவ் உலகத்தான் என – in this world, மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன – like the tender sprouts of the rainy season eengai, Mimosa Pudica, touch-me-not, தொட்டாச்சுருங்கி, அம் மா மேனி – beautiful dark body, ஐது அமை நுசுப்பின் – with a delicate waist, பல் காசு நிரைத்த – with a jewel with rows of many coins, கோடு ஏந்து அல்குல் – lifted loins with lines, tall lifted loins, மெல்லியல் குறுமகள் – the young woman with delicate nature, புலந்து பல கூறி – you said much with hatred, you said much sulking, ஆனா நோயை ஆக – you have this disease which cannot be removed, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ – will I think of leaving you (ஓகாரம் வினா), அரிது பெறு சிறப்பின் நின்வயினானே – from you who is with greatness that is rare to obtain (வயினானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 76, பரணர், மருதத் திணை – பரத்தை சொன்னது
மண்கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத்
தண்துறை ஊரன் எம் சேரி வந்தென,
இன் கடுங்கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது  5
கழறுப என்ப அவன் பெண்டிர், அந்தில்
“கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ?” என
ஆதிமந்தி பேதுற்று இனைய  10
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின் யானே.

Akanānūru 76, Paranar, Marutham Thinai – What the concubine said
Since the man from the cool shores
came to our settlement when we
danced happily with drums with thick
mud tops,
they say that his wife blames me loudly
without a break like the drums of the
happy drummers of the day court of king
Akuthai owning sweet, strong liquor,
who donated elephants and fine jewels.

She should understand that I have
considered dragging him by his hands,
like the east-flowing, cool, beautiful
Kāviri that hits and spreads on its shores,
that seized the handsome Āttanathi
with tight kachai clothing, war anklets,
chest with a honey-oozing, splendid,
perfect flower garland and curly hair,
leaving Āthimanthi to be confused and sad,
asking everyone, “Did you see my lord?”

Notes:   பரத்தை தலைவியின் தோழியர் கேட்குமாறு கூறியது.  பெண்டிர் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவன் பெண்டிர் கழறுப என்றது தலைவியைக் குறித்து கூறியவாறு. ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று.  கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் (7) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பொருநன் என்னும் பெயர்கொண்டு முடிந்தன.  ஒப்புமை:  அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய, குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.   வரலாறு:  அஃதை, ஆதிமந்தி, காவிரி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).

Meanings:   மண் கனை முழவொடு – with drums with thick clay on the top, மகிழ் மிக – very happily, தூங்க – danced, தண்துறை ஊரன் – the man from the cool shores, எம் சேரி வந்தென – since he came to our settlement/village/street, இன் கடுங்கள்ளின் அஃதை – king Akuthai with sweet strong liquor, களிற்றொடு நன்கலன் ஈயும் – he gives male elephants along with fine jewels, நாள் மகிழ் இருக்கை அவை – happy seat in his court, புகு – entering, பொருநர் பறையின் – like the drums of performers (பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), like the drums of battle drummers, ஆனாது – without interval, கழறுப – she complains, என்ப – they say, அவன் பெண்டிர் – his wife, அந்தில் –அசைநிலை, an expletive, கச்சினன் – he with cloth tied around his body, கழலினன் – he with war anklets, தேம் தார் மார்பினன் – he with his chest adorned with flower garlands with honey (தேம் தேன் என்றதன் திரிபு), வகை அமை – perfectly arranged, பொலிந்த – splendid, beautiful, bright, வனப்பு அமை தெரியல் – splendid garland, சுரியல் – curly hair, அம் – beautiful, handsome, பொருநனைக் காண்டிரோ – did you see my lover (ஓகாரம் வினா),  என – thus, ஆதிமந்தி பேதுற்று இனைய – like how Āthimanthi was confused and sad, சிறை – raised shores, river banks, பறைந்து – crashes against, ruined, உரைஇ- spreading (சொல்லிசை அளபெடை), செங்குணக்கு ஒழுகும் – flowing straight to the east, அம் தண் காவிரி போல – like the beautiful cool Kāviri, கொண்டு – to take, கை வலித்தல் – to pull with my hands, சூழ்ந்திசின் – I have considered (சின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), யானே – me, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 77, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நன்னுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர்
துன் அருங்கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சு வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்  5
குடி பதிப் பெயர்ந்த சுட்டுடை முது பாழ்
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்  10
செஞ்செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின் சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர்படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை  15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அருந்துயர் தரும் இவள் பனி வார் கண்ணே.

Akanānūru 77, Mathurai Ilanākanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!  If you
have thought about leaving her to
earn wealth through many efforts,
going through the difficult forest,
making her lovely forehead pale,
you have thought of causing pain.

Since the clouds that emit thunder
have moved away, people have blamed
the wasteland and migrated elsewhere.

Like the public officials who break
the seals of the rope-tied ballot pots
and remove frond ballots, vultures with
red ears remove the intestines of the
fierce-eyed warriors who died in good
wars.

If we go on the fierce, rock-filled,
forked paths, heavy winds
will blow in the dappled shade
of ithi trees with dull colored barks
in the small towns at evening times.

The long beads of tears from her eyes,
……….that are like the perfect spear blades
……….of the charitable Chera commander
……….Pittan with curved bow, happy with
……….alcohol, who fought battles with
……….enemy kings,
will give me great anguish.

Notes:  தலைவன் பிரியக்கருதிய நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்குவித்தது.  வரலாறு:  வானவன் மறவன் பிட்டன்.  This is a rare poem where voting and public officials are mentioned.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   நன்னுதல் பசப்பவும் – for her fine forehead to become pale, ஆள் வினை தரீஇயர் – to make wealth through effort (பொருள் தரீஇயர் என விரித்துரைக்க, (தரீஇயர் – சொல்லிசை அளபெடை), துன் அருங்கானம் துன்னுதல் – to go through the difficult forest that is harsh for those who go, நன்று எனப் பின்னின்று சூழ்ந்தனை ஆயின் – if you think that it is good along with me, நன்று – good, இன்னாச் சூழ்ந்திசின் – you have thought about sorrow (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), வாழிய நெஞ்சு – may you live long my heart, வெய்துற – becoming hot, இடி உமிழ் வானம் நீங்கி – since the clouds that put out thunder have moved (நீங்கி – நீங்கலால் எனத் திரிக்க), யாங்கணும் – everywhere, குடி பதிப் பெயர்ந்த – people have moved away from their villages/towns, சுட்டுடை – with blame by many who point out, முது பாழ் – old wasteland, கயிறு பிணிக் குழிசி – pots tied with ropes, ஓலை கொண்மார் – to take the frond ballots, பொறி கண்டு அழிக்கும் – breaking/ruining the seals after looking at them, ஆவணமாக்களின் – like public officials (மாக்களின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உயிர் திறம் பெயர – life totally gone away, நல் அமர்க் கடந்த – who won good  battles, தறுகணாளர் – fierce warriors, குடர் தரீஇ – to bring intestines (குடர் – குடல் என்பதன் போலி, தரீஇ – சொல்லிசை அளபெடை), தெறுவர – causing fear, செஞ்செவி எருவை – vultures with red ears, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture, அஞ்சுவர – fiercely, இகுக்கும் – they pull out the intestines, கல் அதர்க் கவலை – forked path with rocks, forked path on the mountain, போகின் – if we go, சீறூர் – small town, புல் அரை இத்தி – parch-trunked ithi trees, ithi trees with dull colored trunks, Ficus infectoria, White fig, புகர்படு நீழல் – spotted shade (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), எல் வளி அலைக்கும் – when heavy winds blow, இருள் கூர் மாலை – very dark evening, வானவன் மறவன் – Chera war commander, வணங்கு வில் – curved bow, தடக்கை – big hands, ஆனா – endless, நறவின் வண் மகிழ் பிட்டன் – Pittan who is very happy with alcohol, பொருந்தா மன்னர் அருஞ்சமத்து – in the difficult war with enemy kings, உயர்த்த – tall, திருந்து இலை எஃகம் போல – like a spear with a perfect blade, அருந்துயர் தரும் – they will bring great sorrow, இவள் பனி வார் கண்ணே – her eyes that drop tears (கண்ணே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 78, மதுரை நக்கீரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு கடாஅத்துப்,
பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,  5
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள்
நீடு இதழ் நெடுந்துடுப்பு ஒசியத் தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,  10
நம் இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என் ஆகுவர் கொல் அளியர் தாம், என
எம் விட்டு அகன்ற சின்னாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ, ஓங்கு மலை நாட,
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை  15
வாய்மொழிக் கபிலன் சூழச், சேய் நின்று
செழுஞ்செய்ந்நெல்லின் விளை கதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு வயிற் பிழையா,
தாள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,  20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கைவண் பாரி
தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும், இவள் நுதலே?

Akanānūru 78, Mathurai Nakkeeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the tall mountains!
Did you think even a little
bit and try to understand what
will happen to us to be alone
in our town, pitiable, if you left
us in the early dew season when
the cold winds blow, breaking
the long, petals of kānthal
blossoms, and dropping the pretty
flowers of bamboo in the front
yards of houses belonging to
mountain dwellers who squeeze
out honeycombs to make liquor
on the mountain slopes where a
splendid, strong male elephant
with spotted forehead and bee-
swarming musth entering his mouth,
who protects his herd from danger,
fears an āli and embraces his fully
pregnant, trembling female with his
dark, large, coarse trunk to protect her?

Her forehead is like the honey-fragrant
new flowers from the fresh springs of
generous Pāri who owned fast horses,
who did not deviate from desirable
principles for years, imported
thick-clustered, mature rice from distant
lands and had it cooked with white
waterlilies with thick stems, befriended
the honest poet Kapilar who was praised
by many around the world, and who was
victorious over enemy kings, who came
to battle with swords and elephants with
lifted tusks, chasing them away.

Notes:   களவுக் காலத்து பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி உரைத்தது.  ஒப்புமை:  பறம்பு மலையின் சுனை – அகநானூறு 78 –  கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை.  ஆளி – நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  There are references to Āli in Akanānūru 78, 252, 381, Kurinjippāttu 252, Natrinai 205, Puranānūru 207, Perumpānātruppadai 258 and Porunarātruppadai 139.  It is probably a lion.  வரலாறு:  பாரி, கபிலன்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  காந்தள் நீடு இதழ் நெடுந்துடுப்பு (8-9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர்களின் நெடிய தண்டு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – காந்தளது நீண்ட இதழையுடைய பெரிய மலர்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.

Meanings:   நனந்தலைக் கானத்து – in the vast forest, ஆளி அஞ்சி – afraid of the Āli, probably a lion, இனம் தலைத்தரூஉம் – brings the herd together (தலைத்தரூஉம் – இன்னிசை அளபெடை), எறுழ் கிளர் முன்பின் – appearing with great strength (எறுழ், முன்பு – ஒருபொருட் பன்மொழி, கிளர் எறுழ் முன்பின் என மாற்றுக), வரி ஞிமிறு ஆர்க்கும் – bees with stripes hum, வாய் புகு கடாஅத்து – with musth entering its mouth (கடாஅத்து – இசை நிறை அளபெடை, அத்து சாரியை), பொறி நுதல் – spotted forehead, பொலிந்த – bright, splendid, வயக் களிற்று – strong bull elephant’s, ஒருத்தல் – male, இரும் – dark, பிணர் – rough, தடக் கையின் – with large trunk, with curved trunk, ஏமுற – to protect, தழுவ – embraces, கடுஞ்சூல் – first pregnancy, full pregnancy, மடப்பிடி நடுங்கும் – naive female trembles, சாரல் – mountain slopes, தேம்பிழி நறவின் – with liquor made squeezing honeycombs (பொ, வே. சோமசுந்தரனார் – தேனில் பிழிந்து எடுத்த கள்ளினுடைய, வேங்கடசாமி நாட்டார் – இனிமையுடன் பிழிந்த கள்ளினுடைய), குறவர் – mountain dwellers, முன்றில் – in the front yard of houses (முன்றில் – இல்முன்), முந்தூழ் – bamboo, ஆய் மலர் உதிர – beautiful flowers drop, காந்தள் நீடு இதழ் – glory lilies with long petals, நெடுந்துடுப்பு ஒசிய – causing their long petals to break, causing their long stems to break, தண்ணென வாடை தூக்கும் வருபனி அற்சிரம் – early dew season when cold winds blow with chillness, நம் இல் – without me, புலம்பின் – due to loneliness, நம் ஊர்த் தமியர் – alone (in her sorrow) in town, என் ஆகுவர் கொல் – what will happen to her (கொல் -அசைநிலை, an expletive), அளியர் தாம் என – that they are pitiable (the heroine and her friend), எம் விட்டு அகன்ற சின்னாள் – in a few days after leaving, சிறிதும் உள்ளியும் அறிதிரோ – did you think a little bit and understand (ஓகாரம்அசைநிலை, an expletive), ஓங்கு மலை நாட – oh lord of the lofty mountains (விளி, an address), உலகுடன் திரிதரும் – those who roam around the world, பலர் புகழ் நல் இசை – fame and praise by many, வாய்மொழிக் கபிலன் – poet Kapilan of honest words, சூழ – surrounded, சேய் நின்று – from distant places, செழுஞ்செய்ந்நெல்லின் விளை கதிர் கொண்டு – brought thick clusters of well matured rice, தடம் தாள் ஆம்பல் மலரொடு – combined with white waterlilies with thick/curved stems, கூட்டி – together, யாண்டு பல கழிய – as many years pass, வேண்டுவயின் பிழையா – not deviating from desired principles (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), தாள் இடூஉக் கடந்து – entered battles with effort and won (இடூஉ- இன்னிசை அளபெடை), வாள் அமர் உழக்கி – fighting with swords, ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – chased kings owning elephants with lifted tusks, கடும் பரிப் புரவிக் கைவண் பாரி – generous king Pāri owning horses with rapid strides, தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த – bloomed in his sweet huge fresh springs, தேம் கமழ் – with honey fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), புது மலர் நாறும் – fragrant like the new flowers, இவள் நுதலே – her forehead (நுதலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 79, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தோள் பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து,
கல் உறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர்  5
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப,
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர  10
வருந்தினை வாழி என் நெஞ்சே, இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான் கண் பேடை,
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடும் துடிக்
கொடுவில் எயினர் கோள் சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,  15
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.

Akanānūru 79, Kudavāyil Keeranthanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!
You are sad now, but you did not
think firmly that she should go
with us to this wasteland where,

with food bundles hanging on
their shoulders, men with strong
hands break stones as sparks fly, cut
into the hard earth, dig wells filled
with brackish water where Kongars’
tawny cattle herds with jingling
bells and lifted heads come to drink,
raising dust from the red soil as it
appears against the wide, vast sky;
a female kite with curved beak
and big wings cries loudly for her mate;
and wasteland hunters with curved
bows who kill those who travel are
spread in the rugged land, and they
dance whenever their harsh thudi
drums with beautiful tops are beat.

You separated from her, going on the
endless, long path filled with rocks
in the wasteland, with the desire
to earn wealth that is not permanent!

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வரலாறு:  கொங்கர்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   தோள் பதன் அமைத்த – with food bundles hanging on their shoulders, கருங்கை ஆடவர் – men with strong hands, கனை பொறி பிறப்ப – as lots of sparks fly, நூறி – destroying, வினைப் படர்ந்து – do their work, கல் உறுத்து – breaking stones, இயற்றிய – created, வல் உவர்ப் படுவில் – from the well with very brackish water, பார் உடை மருங்கின் – near where the hard earth was broken, ஊறல் மண்டிய – desiring to drink the filled water, வன்புலம் துமிய – cutting into the hard land, போகி – went, கொங்கர் படுமணி ஆயம் – Kongar’s herds with jingling bells, நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேது ஆ – tawny colored (brownish red) cows that go for water with their lifted heads, perfect cows that spread and go toward water, எடுத்த செந்நிலக் குரூஉத் துகள் – raised colored dust from the red earth (குரூஉ – இன்னிசை அளபெடை), அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் – the dust appears greatly against the wide huge/dark skies, நனந்தலை அழுவம் – wide land, நம்மொடு துணைப்ப – as a partner with us, வல்லாங்கு வருதும் என்னாது – without thinking beforehand that we will go with a firm mind, அல்குவர வருந்தினை –  you are sad here, வாழி என் நெஞ்சே – may you live long my heart, இருஞ்சிறை – big/dark wings, வளைவாய்ப் பருந்தின் – of a kite with a curved beak, வான் கண் பேடை – female with white eyes, ஆடுதொறு கனையும் – sounds are created by thudi drums when dancing, அவ்வாய்க் கடும் துடி – harsh thudi drums with beautiful mouths, கொடு வில் எயினர் – hunters with curved/harsh bows, கோள் சுரம் படர – go to the wasteland where they kill, நெடு விளி பயிற்றும் – calls with long screeches, calls loudly, நிரம்பா நீள் இடை – endless long path, empty long path, கல் பிறங்கு அத்தம் – rock filled wasteland, mountainous wasteland, போகி – went, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த – who separated with the desire to earn wealth that does not stay, நீயே – you, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 80, மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற, தண்கடல் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்,
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை,
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,  10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே.

Akanānūru 80, Marunkūr Kizhār Perunkannanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the cool shores!
You come at night, crossing
harsh, narrow paths and vast
backwaters with fish with horns
and crocodiles with curved legs.

If you come to the beautiful seashore
grove where punnai trees with pretty
leaves and bright flower clusters drop
fragrant, golden pollen during the day,
……….riding on your tall chariot with
……….horses with many bells, its
……….wheels cutting the delicate, red
……….bright adumpu vines with double-
……….lobed leaves spread on the ancient
……….shores along with mundakam
……….plants dense with bright flowers,
we will be there drying abundant
fish that our father brings entering
the vast ocean with waves, and chasing
the marauding birds that come for the
dried fish.  How will that be difficult?

Notes:  இரவுக்குறி வந்த தலைவனிடம் தோழி சொல்லியது.  இரவுக்குறி மறுத்து பகற்குறி வருக என்றது.  பகற்குறி – அகநானூறு 80 – புன்னை அம் கானல் பகல் வந்தீமே, அகநானூறு 218 – தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே, நற்றிணை 156 – அதனால் பகல் வந்தீமோ.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:   கொடும் தாள் முதலையொடு – with crocodiles with curved legs, கோட்டு மீன் வழங்கும் இருங்கழி – huge/dark backwaters where fish with horns swim, இட்டுச் சுரம் நீந்தி – passing through narrow difficult paths, இரவின் வந்தோய் – you have been coming at night (வந்தோய் – ஆ ஓ ஆயிற்று செய்யுலாகலின்), மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, தண்கடல் சேர்ப்ப – oh lord of the cool ocean shores (சேர்ப்ப – அண்மை விளி), நினக்கு எவன் அரியமோ – how will we be difficult for you (ஓகாரம் வினா), யாமே – we (ஏகாரம் அசைநிலை, an expletive), எந்தை – our father (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), புணர் திரைப் பரப்பகம் – ocean with waves that roll together, துழைஇத் தந்த – searched and brought, stirred and brought (துழைஇ – சொல்லிசை அளபெடை), பல் மீன் உணங்கல் – many dried fish (உணங்கல் – வற்றல்), படுபுள் ஓப்புதும் – we will be chasing the birds that come to seize the fish, முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை – sand-filled/water-filled ancient shores dense with mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinose, ஒண் பன் மலர – with many bright flowers, கவட்டு இலை – leaves with two lobes, அடும்பின் – adumpu’s, ipomaea pes caprae, செங்கேழ் – red and bright, red colored, மென் கொடி – delicate vines, ஆழி – wheels, அறுப்ப – to cut, இன மணிப் புரவி – horses with many bells, நெடுந்தேர் கடைஇ – riding a tall chariot (கடைஇ – சொல்லிசை அளபெடை), மின் இலைப் பொலிந்த – bright and beautiful leaves, விளங்கு இணர் – bright clusters, அவிழ் – blossomed, பொன் தண் நறும் பைந்தாது உறைக்கும் புன்னை – punnai trees that drop golden cool fragrant fresh pollen,  Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, அம் கானல் – beautiful seashore grove, பகல் வந்தீமே – you come during the day (வந்தீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

அகநானூறு 81, ஆலம்பேரி சாத்தனார், பாலைத் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பைத் தீம் பழம் முனையின்
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து இரை தேரும்  5
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறிப், புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச், சிறந்த  10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ,
ஐய சேறிரோ, அகன்று செய் பொருட்கே?  15

Akanānūru 81, Ālampēri Sāthanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Lord!  Will you go to earn wealth
making her ink-dark eyes cry,
as pretty as Vilangil town, belonging
to the greatly charitable Kadalan
with bright spears and victories
in battlefields, who ruins enemy
elephants and wins wars,
since your noble heart goads you,

and cross the harsh wasteland, where
a bear with killing strength, that rises
up and roams daily, hates eating the sweet
fruits on the tall branches of iruppai trees,
breaks the tall side of a termite mound
with many small tunnels built by tireless
termites, thrusts and blows through its
snout which appears like an ironsmith’s
bellows blowing into a furnace hole,

the earth is cracked, the sun’s rays are
hot, making it difficult for eyes to bear and
on a dried, top forked branch of a kadampam
tree near the path, a lonely kite which
attacks prey to get its food sits and grieves?

Notes:   தலைவன் பொருள்வயின் பிரியக் கருதினான் அதை அறிந்த தலைவி வருந்தினாள்.  அது கண்ட தோழி, தலைவியின் நிலையைத் தலைவனிடம் கூறிச் செலவு அழுங்குவித்தது.  சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கரையான் நனைந்த வாயால் ஒருங்குக் கூடி வருந்திக் கட்டிய நெடிய உச்சியினை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிதலைகள் ஒருங்கு கூடிப் பெரிதும் முயற்சி செய்து கட்டிய நெடிய வாயையுடைய நெடிய உச்சிகளை.  ஒப்புமை:  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  வரலாறு:  கடலன் விளங்கில்.  Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307 and Natrinai 125, 325 and 336 have descriptions of bears attacking termite mounds.  The Indian sloth bears break open termite mounds, insert their snouts, blow away dust and dirt and then suck the termites from even 20 feet away.  They close their nostrils while sucking.  The loud sucking sounds can be heard from far.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   நாள் உலா எழுந்த – rises up and roams daily, கோள் வல் – capable of killing, உளியம் – bear, ஓங்கு சினை இருப்பைத் தீம் பழம் – sweet fruits of the iruppai tree on tall branches, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, முனையின் – hating it, புல் அளைப் புற்றின் – of a termite mound with small tunnels, பல் கிளை சிதலை – many groups of termites, ஒருங்கு முயன்று – together with effort, எடுத்த – built, created, நனை வாய் – wet mouth, wet place, நெடுங்கோடு – tall part of the termite mound, இரும்பு ஊது குருகின் – like the bellows blowing into a furnace hole (குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இடந்து இரை தேரும் – breaks and searches for food, மண் பக – land cracked, வறந்த – dried, ஆங்கண் – there, கண் பொர – attacking the eyes, unable for the eyes to bear, கதிர் தெற – sun’s rays heat, கவிழ்ந்த – bent, உலறுதலை – dried top, நோன் – strong, சினை – branch, நெறி அயல் – near the path, மராஅம் ஏறி – climbing on the kadampam trees, Anthocephalus cadamba, Kadampam oak (மராஅம் – இசைநிறை அளபெடை), புலம்பு கொள – in loneliness, எறி பருந்து உயவும் – kite that attacks and gets its food is sad, என்றூழ் நீள் இடை – hot long path, வெம்முனை – land with harsh battles, very hot land, அருஞ்சுரம் நீந்தி – passed the difficult wasteland, சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் – since your fine noble heart goads, கறுத்தோர் – those who are enraged, those who hate, enemies, ஒளிறு வேல் – bright spears, அழுவம் – battlefield, களிறு படக் கடக்கும் – ruined the elephants and won, மா வண் – greatly charitable, கடலன் விளங்கில் அன்ன – like Vilangil town of King Kadalan, எம் மை எழில் உண்கண் கலுழ – for our kohl-rimmed beautiful eyes to cry (ஆகுபெயர், தலைவியை உளப்படுத்தி எம் கண் கலுழ என்று உறைத்தாளுமாம்), ஐய – oh sir, oh lord (விளி, an address), சேறிரோ அகன்று செய் பொருட்கே – will you leave to earn wealth (பொருட்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 82, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசைத்
தோடு அமை முழவின் துதை குரல் ஆகக்,
கணக் கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு  5
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்,  10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்ப்
புலர் குரல் ஏனல் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில், வாழி தோழி, அவருள்  15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன் கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ்தோளேனே?

Akanānūru 82, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
The man from the country,
……….where beautiful summer breezes blow
……….through the holes of swaying bamboo
……….and create flute music, cold, sweet
……….waterfalls sound like drums that are hit,
……….male deer grunt like harsh thoompu,
……….honeybees in the flower-filled mountains
……….slopes create lute music,  and happy female
……….monkeys listen in awe in the bamboo-filled
……….slopes where dancing peacocks
……….are like female dancers in a dancing arena,
wore flower garlands with fresh blossoms,
came to our millet fields with mature grains
carrying his strong bow and chosen arrows,
and asked us about an elephant that he stalked,
and he was seen by many of us.

In this pitch-dark night, lying in bed, tears stream
down my eyes.  My arms have become thin. What
will happen to me who is suffering now?

Notes:  தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.  உருவ (11) –  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய, உருவ என்றதனை உரிச்சொல் ஈறு திரிந்ததெனக் கொண்டு உட்குப் பொருந்திய என்றலுமாம்.  In Kurinjipattu, there is a similar situation where the hero asks the heroine and her friend whether they saw the animal he was hunting, which escaped from him.  Malaipadukādam lines 1-13 and Puranānūru 152 have descriptions of orchestras with various instruments.  நனவு – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   ஆடு அமை – swaying bamboos, குயின்ற – செய்த, created (வண்டுகளால் துளைக்கப்பட்ட, holes that are created by bees), அவிர் – bright, துளை மருங்கின் – in the holes, கோடை அம் வளி – beautiful summer breezes, westerly winds, குழல் இசை ஆக – became the flute music, பாடு இன் அருவி – loud sweet waterfalls, பனி நீர் – cold water, இன்னிசை – sweet sounds, தோடு அமை – with a group, முழவின் துதை குரல் ஆக – like the close sounds of drums, கணக் கலை – many male deer, herd of male deer, இகுக்கும் – they grunt in low pitch, they create low-pitched sounds, கடுங்குரல் தூம்பொடு – with the tubular thoompu musical instruments with loud sounds, மலைப் பூஞ்சாரல் – flower filled mountain slopes, வண்டு யாழ் ஆக – humming of honeybees as lute music, இன் பல் இமிழ் இசை – many sweet such music, கேட்டுக் கலி சிறந்து – listening to these special sounds, மந்தி – female monkeys, நல் அவை – fine audience, fine gathering, மருள்வன நோக்க – as they looked in bewilderment, கழை – bamboo, வளர் –  growing, அடுக்கத்து – on the mountain slopes, இயலி ஆடு மயில் – moving dancing peacocks, நனவு – dancing arena, புகு விறலியின் தோன்றும் – they appear like dancers entering (விறலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நாடன் – the  man from such country, உருவ வல் வில் பற்றி – holding a beautiful strong bow, holding a fierce strong bow, அம்பு தெரிந்து – analyzing the arrows, choosing the arrows, செருச் செய் யானை – elephant that fought with him, an elephant that he attacked, செல் நெறி வினாஅய் – asking about the path it went, புலர் குரல் – clusters of mature grains, ஏனல் – millet field, புழையுடை – with entry, ஒரு சிறை – one side, மலர் தார் மார்பன் – man with garland on his chest, நின்றோன் கண்டோர் பலர் – the standing man was seen by many, தில் –அசைநிலை, an expletive, வாழி – may you live long, தோழி – oh friend, அவருள் – among them, ஆர் இருள் கங்குல் – pitch dark night, அணையொடு பொருந்தி – lying in bed, ஓர் யான் ஆகுவது எவன் – what will happen to me, கொல் – அசைநிலை, an expletive, நீர் வார் கண்ணொடு – with tear-flowing eyes, நெகிழ் தோளேனே – I am with thin arms (தோளேனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 83, கல்லாடனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறை அடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து,  5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,  10
சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்புவிடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக்கண் எம் காதலி குணனே.

Akanānūru 83, Kallādanār, Pālai Thinai – What the hero said to his heart
Not thinking ‘he’s far away’, the fine traits
of my lover with pretty, moist eyes, like bright
waterlilies, has come to us, as we cross the
Vēnkadam Hills of Pulli, great leader of
uneducated men, where adorning their curly
hair resembling manes of horses, with fragrant,
new, right-whorled flowers of kadampam trees
with sturdy trunks, arrogant young men capture
a young male elephant in the forest,
……….as his young mother with legs like
……….pounding mortar screams,
and tie him tightly causing leg scars,
……….near the front yard of a fine house
………. where liquor is sold, in an old town
………. with markets with tall flags,
with a thick rope made with white fibers
from the thick barks of kadampam trees
with sturdy trunks.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.  உளைத்தலை (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – உளை போன்ற மயிரினையுடைய தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையாட்டம் போன்று அசையும்படி தலை மயிரின் மேல், உளை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையாட்டம் என்னும்  ஒரு வகைக் குதிரை அணி.  ஒப்புமை:  குறுந்தொகை 281 – சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி.  ‘உளைத்தலை’ குறுந்தொகை உரைகள் – தமிழண்ணல் உரை – தலை உச்சி, உ. வே. சாமிநாதையர் உரை – மயிரையுடைய தலை.  வரலாறு:  புல்லி, வேங்கடம்.  கறையடி யானை – அகநானூறு 83-3,142-9, புறநானூறு 39-1, 135-12, 323-6, பெரும்பாணாற்றுப்படை 351.

Meanings:   வலம் சுரி – right-whorled,  மராஅத்து – of kadampam trees, Anthocephalus cadamba, Kadampam oak, சுரம் – wasteland (அத்து – சாரியை), கமழ் புது வீ – fragrant new flowers, சுரி – curled, ஆர் உளைத்தலை – head hair that is like the manes of horses, head hair that is like the head ornament of horses, பொலியச் சூடி – wearing beautifully, கறை அடி மடப்பிடி – a young female elephant with legs like pounding stones, கானத்து அலற – screaming in the forest, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் – happy youngsters who seized a young male elephant, கலி சிறந்து – with arrogance, with uproar, கருங்கால் மராஅத்து – of kadampam trees with sturdy trunks, of kadampam trees with dark colored trunks (அத்து – சாரியை), கொழுங்கொம்பு பிளந்து – splitting the thick branches, பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி – they tied tightly with a thick rope made from the white fibers from the thick barks splitting it and causing scars, நெடுங்கொடி நுடங்கும் – tall flags sway, நியம மூதூர் – old town with a market, நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – tie it near the front door of the fine house where liquor is sold, கல்லா இளையர் – uneducated young men, men who do not know anything but their work, பெருமகன் புல்லி – great leader Pulli, வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் – even if we pass his huge fine country’s Vēnkadam hills, சேயர் என்னாது – not considering that he is far away, அன்பு மிகக் கடைஇ எய்த வந்தனவால் தாமே – goaded by lots of love they came to me (கடைஇ – சொல்லிசை அளபெடை, வந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive, தாமே – தாம், ஏ அசைநிலைகள், expletives), நெய்தல் கூம்புவிடு நிகர் மலர் அன்ன – like bright waterlilies that have opened from closed/pointed buds, ஏந்து எழில் மழைக் கண் – lifted beautiful moist eyes, very beautiful moist eyes, எம் காதலி குணனே – my lover’s good traits (குணன் – குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 84, மதுரை எழுத்தாளன், முல்லைத் திணை – தலைவன் சொன்னது, பாசறையில் இருந்து
மலை மிசைக் குலைஇய உருகெழு திரு வில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித்,
தாழ் பெயல் பெருநீர் வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை  5
நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி,
அயிர்க் கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய,
நறுவீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்ணுதல், யாமே,  10
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள் ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,  15
வினை வயின் பெயர்க்குந்தானைப்,
புனை தார் வேந்தன் பாசறையேமே.

Akanānūru 84, Mathurai Ezhuthālan, Mullai Thinai – What the hero said to the messenger from the battle camp
My bright-browed woman in distress comes
from a small town in the harsh land with
difficult paths, where, on the mountains,
curved, colorful rainbows look lovely, and clouds
that absorbed waters from the ocean rise up
with strength and come down with heavy rains,
roaring like panai drums.  At this pleasurable time,
when the vast land looks beautiful, and when even
directions are not visible,
a pig with small eyes like flame rests on fine sand
near low bushes, and mullai vines drop fragrant,
fresh flowers, hiding its back.

I am in the battle camp of our enraged king wearing
a flower garland, owning an army, who has refused
tributes of precious wealth offered by this town with
a fort with swaying flags, surrounded by fields, where
reapers cut the flame-like flowers along with grains
and tie them into big bundles that sway on top, and
take them to the fields where workers drink alcohol.

Notes:  ஒப்புமை:  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  உருகெழு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிறம் பொருந்திய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அச்சம் பொருந்திய.  அலங்குதலை (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற தலையையுடைய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அசையும் பக்கங்களையுடைய.

Meanings:   மலை மிசை – on top of the mountains, குலைஇய – curved (செய்யுளிசை அளபெடை), உருகெழு – fierce, colorful, திரு வில் – beautiful rainbows, பணை முழங்கு எழிலி – clouds roar like panai drums, பௌவம் வாங்கி – take from the ocean, தாழ் – low, பெயல் பெரு நீர் – heavy rains fell, வலன் ஏர்பு – climbing with strength, climbing on the right, வளைஇ – surrounding (சொல்லிசை அளபெடை), மாதிரம் புதைப்பப் பொழிதலின் – since rains fell hiding all directions, காண்வர இரு நிலம் கவினிய ஏம் உறு காலை – at this pleasurable time when the vast land is beautiful to see, at this protective time when the vast land is beautiful to see (ஏம் – ஏமம் என்பதன் விகாரம்), நெருப்பின் அன்ன – like flame (நெருப்பின் – இன் சாரியை), சிறுகண் பன்றி – small-eyed pig, அயிர்க் கண் – on the fine sand, படாஅர் – low bushes (இசை நிறை அளபெடை), துஞ்சு – sleeping, resting, புறம் – back, புதைய – buried, நறு வீ முல்லை – fragrant jasmine flowers, நாள் மலர் உதிரும் – drops fresh flowers, புறவு அடைந்திருந்த – in the forest, அரு முனை – difficult land, இயவின் – on the path, சீறூரோளே – the young woman from a small town, ஒண்ணுதல் – the woman with a bright forehead (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), யாமே – us, எரி புரை பன் மலர் – many flowers that are like flame, red waterlilies, lotus flowers (புரை – உவம உருபு, a comparison word), பிறழ – upside down, வாங்கி அரிஞர் – those who cut, those who reap, யாத்த – tied, அலங்குதலை – moving on the sides, swaying on the tops, பெருஞ்சூடு – big bundles of sheaves, கள் ஆர் வினைஞர் – workers who drink alcohol, களந்தொறும் மறுகும் – take them to all the fields, தண்ணடை தழீஇய – surrounded by marutham land, surrounded by agricultural land (தழீஇ – செய்யுளிசை அளபெடை), கொடி நுடங்கு – swaying flags, ஆர் எயில் – strong fort, அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் – he did not accept precious tributes that were given, சினம் சிறந்து – with great rage, வினை வயின் பெயர்க்கும் தானை – army that he sends to do its work, புனை தார் வேந்தன் – king wearing a garland, பாசறையேமே – I am in the battle camp (தன்மைப் பன்மை, first person plural, ஏகாரம் அசைநிலை, an expletive)   

அகநானூறு 85, காட்டூர் கிழார் மகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்” எனப் பல புலந்து
ஆழல், வாழி தோழி, சாரல்  5
ஈன்று நாள் உலந்த மென் நடை மடப்பிடி,
கன்று பசி களைஇய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை,  10
நன்னாள் பூத்த நாகு இள வேங்கை
நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்
வருதும் யாம் எனத் தேற்றிய  15
பருவம் காண் அது பாயின்றால் மழையே.

Akanānūru 85, Kāttūr Kizhār Makanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  Do not cry!
Your fine forehead has paled.
Your thick arms have become thin.
You are unable to eat and have become
weak, like you are ready to quit life.  You
complain repeatedly that the one who left
you is an unjust man.

Look there!  The cool rains are arriving in this
lover-bringing season, when a bull elephant with
green eyes brings tender sprouts of bamboo to his
naïve female which just gave birth, in the Vēnkadam
Hills of Thiraiyan with victorious spears,
and a peacock with spots that plays in the fine,
fragrant flowers of very young vēngai
trees, calls its mate lovingly from a kuruntham
tree’s fragrant branch with honey.

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்தான்.  அவன் கூறிய பருவத்தில் வராததால் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  வரலாறு:  திரையன், வேங்கடம்.

Meanings:   நன்னுதல் பசப்பவும் – fine forehead has become pale, பெருந்தோள் நெகிழவும் – thick arms have become thin, உண்ணா உயக்கமொடு – with sorrow not eating, உயிர் செல – for life to leave (செல – இடைக்குறை), சாஅய் – have become weak, have become thin (இசை நிறை அளபெடை), இன்னம் ஆகவும் – even though we have become like this, இங்கு நம் துறந்தோர் – the one who left us here, அறவர் அல்லர் அவர் – he is not a just man, எனப் பல புலந்து – say many things and sulk, say many things with hatred, ஆழல் – do not cry, do not sink into sorrow (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி தோழி – may you live long my friend, சாரல் – mountain slopes, ஈன்று நாள் உலந்த – gave birth recently, a few days have passed (உலந்த – கழிந்த), மென் நடை மடப்பிடி – naive female elephant with short strides, கன்று பசி களைஇய – to remove the hunger of its calf (களைஇய – செய்யுளிசை அளபெடை), பைங்கண் யானை முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – elephant with green eyes brings and feeds the immature bamboo sprouts (பைங்கண்- பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), வென்வேல் திரையன் – Thiraiyan with victorious spears, வேங்கட நெடுவரை – tall Vēnkadam mountains, நன்னாள் – in the fine morning time, பூத்த – blossomed, நாகு இள வேங்கை நறு வீ – fragrant flowers of very young vēngai trees, Pterocarpus marsupium (நாகு இள – ஒருபொருட் பன்மொழி), ஆடிய பொறி வரி மஞ்ஞை – peacocks with spot designs that danced, நனைப் பசும் குருந்தின் – on a tender kuruntham tree with honey,wild orange tree, citrus indica,  நாறு சினை இருந்து – from a fragrant branch, துணைப் பயிர்ந்து அகவும் – it cries and calls its mate, துணைதரு தண் கார் – cool rainy season that brings partners, வருதும் யாம் – I will return (தன்மைப் பன்மை, first person plural), என – thus,  தேற்றிய – he uttered clearly, பருவம் –  season, காண் – look, அது பாயின்றால் மழையே – rain has spread, the clouds have spread (பாயின்றால் – ஆல் அசைநிலை, an expletive, மழையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 86, நல்லாவூர் கிழார், மருதத் திணை – தலைவன் வாயில் மறுத்த தோழியிடம் சொன்னது
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்,  5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்,  10
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
“கற்பினின் வழாஅ நற் பல உதவிப்,
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  15
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
“பேர் இற்கிழத்தி ஆக” எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  20
கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ, “நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என  25
இன்னகை இருக்கை பின் யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்,  30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

Akanānūru 86, Nallāvur Kizhār, Marutham Thinai – What the hero said to the heroine’s friend who refused him entry
On our wedding day, fresh riverbank
sand was spread on the front yard, a cool,
big pavilion was put up with rows of posts,
the house was lit, and garlands were hung.
Guests were fed huge balls of rice cooked
perfectly and softly with uzhunthu lentil.

It was an auspicious day when the curved,
white moon was away from the evil planets
and faultless Rohini was in the sky.

When darkness vanished and lovely dawn
arrived, wise, old women with pots on their
heads and new, wide bowls on their hands,
brought and gave again and again and
performed the wedding rites according to
tradition, with loud sounds.
Four bright-jeweled women with beautiful
yellow spots on their stomachs, who had borne
sons, blessed her, “Be virtuous, be of good help
and be a loving and nurturing partner to him”
they said, and sprinkled water with wet-petaled
flowers and rice on her thick, dark hair.

Relatives who came for the festivities, advised
her to be a good wife as they gave her to me.

That night when we were alone and ready for
our union, she sat with her back bent.
She, in her new clothing was shy as I embraced
her with desire and uncovered her covered face.
I said to her,
“Tell me without fear what is in your heart.”
She smiled sweetly as her bright earrings set with
red gems moved.  She was very happy at heart.
She pulled her face away from me, bent her head
rapidly, gave naïve looks of a deer, and appeared
proud, that dark woman with oiled, perfect hair!

Notes:  வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் சொல்லியது.  அகநானூறு 136 – அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் (உரோகிணி) மண்டிய துகள் தீர் கூட்டத்து.  பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் (9) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய பேரிளம் பெண்டிர்.  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம் உரியியல் 65).  விழு – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  செஞ்சூட்டு ஒண் குழை (27) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – செ சூடு ஒண்குழை, சிவந்த அணிகலனாகிய ஒள்ளிய குழைகள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை.

Meanings:   உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை – very perfectly and softly cooked rice with black-gram lentil, Vigna mungo (களி மிதவை – குழைந்த பொங்கல்), பெருஞ்சோற்று அமலை நிற்ப – served big rice balls with uproar, நிரை கால் – rows of posts, தண் பெரும் பந்தர் – cool big pavilion, panthal (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தருமணல் – sand that was brought, ஞெமிரி – spread, மனை விளக்கு உறுத்து – lit the lamps in the house, மாலை – flower garlands, தொடரி – hung (the strung garlands), கனை இருள் – pitch dark, அகன்ற – removed, கவின் பெறு காலை – beauty filled morning, கோள் கால் நீங்கிய – evil planets removed, கொடு – curved, வெண் திங்கள் – white moon, கேடு இல் – faultless, விழுப்புகழ் – good fame, நாள் தலைவந்தென – since Rohini star came, உச்சி குடத்தர் – those carrying pots on their heads, புத்தகன் மண்டையர் – those carrying new wide bowls, பொது செய் – to perform the wedding, கம்பலை – loud noise all around, முது செம் பெண்டிர் – old wise women, old auspicious women, முன்னவும் பின்னவும் – ahead and later, முறை முறை – in a proper manner, தரத்தர – gave, புதல்வற் பயந்த – those who bore sons, திதலை – yellow spots, அவ் வயிற்று – with beautiful stomachs, வால் இழை மகளிர் – women wearing pure jewels, நால்வர் கூடி – four joined together, கற்பினின் வழாஅ – without slipping from virtue (வழாஅ – இசைநிறை அளபெடை), நற்பல உதவி – be of very good help, பெற்றோன் – the man who got you as his wife, பெட்கும் பிணையை ஆக – be a desiring partner, be a nurturing partner, என – thus, நீரொடு – with water, சொரிந்த – poured, sprinkled, ஈர் இதழ் அலரி – wet-petaled flowers, பல் இருங்கதுப்பின் – in her thick dark hair, நெல்லொடு – with rice paddy, தயங்க – splendidly, வதுவை நன்மணம் – fine marriage ceremony, கழிந்த பின்றை – after it was over, கல்லென் – with noise (ஒலிக்குறிப்பு மொழி), சும்மையர் – noisy people, relatives, ஞெரேரெனப் புகுதந்து – came quickly, பேர் இல் கிழத்தி ஆக – may you become a good housewife, என – thus, தமர் தர – her relatives gave her to me, ஓர் இல் – in a room, கூடிய உடன் புணர் கங்குல் – night when we were together to unite, கொடும் புறம் வளஇ – curved back side, கோடிக் கலிங்கத்து – in the new clothing, ஒடுங்கினள் – she hid herself (முற்றெச்சம்), கிடந்த ஓர் புறம் தழீஇ – embracing her back (ஓர் -அசைநிலை, an expletive, தழீஇ – சொல்லிசை அளபெடை), முயங்கல் விருப்பொடு – embracing with desire, முகம் புதை திறப்ப – uncovered her covered face, removed her hands which covered her face, removed the clothing that covered her face, அஞ்சினள் – she was afraid (முற்றெச்சம்), உயிர்த்த காலை – when she took deep breaths, when she sighed, யாழ –அசைநிலை, an expletive, நின் – your, நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை – tell me the thought that is in your heart without fear, என – thus, இன்நகை – sweet smiles, இருக்கை – place, seat, பின்யான் வினவலின் – since I asked, செஞ்சூட்டு – with red gems, ஒண் குழை – bright earrings, வண் காது – beautiful ears, துயல்வர – moving, அகமலி உவகையள் ஆகி – she became very happy in her heart, முகன் இகுத்து – lowered her face, pulled her face away from me (முகன் – முகம் என்பதன் போலி), ஒய்யென இறைஞ்சியோளே – she bent her head rapidly (ஒய்யென – விரைவுக்குறிப்பு, இறைஞ்சியோளே – ஏகாரம் அசைநிலை, an expletive), மாவின் – deer’s, மடம் கொள் – innocent, மதைஇய நோக்கின் – with proud looks (மதைஇய – செய்யுளிசை அளபெடை), ஒடுங்கு – controlled, ஈர் ஓதி – wet hair, oiled hair, மாஅயோளே – the dark woman, (இசைநிறை அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 87, மதுரைப் பேராலவாயர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தீந்தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்  5
தலைக் குரல் விடியல் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கண் பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்,  10
நனி நீடு உழந்தனை மன்னே, அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே, மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டித்,
தாழ் இருங்கூந்தல் நம் காதலி  15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

Akanānūru 87, Mathurai Perālavāyar, Pālai Thinai – What the hero said to his heart
We spent our night in a small, poor village
with huts thatched with grass, where a churning
rod with a thick base with sweet buttermilk
was hung under a tree canopy in the front yard
for a calf to lick.  We left the village at the crack
of dawn when a rooster with a comb crowed from
a tall tree.

You were very sad for long on the wasteland path,
where drumbeats coming from the rocky forest
forts belonging to the harsh wasteland hunters,
are heard on the forked paths in the mountains.

Be happy now!  May you live long, my heart!
In our house that rises up to the sky, where lamps
are lit until dawn to remove night’s darkness, may
you be happy with the woman with dark, hanging
hair, praising her pretty breasts with pallor spots
and embracing her bamboo-like, lovely, long arms!

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   தீந்தயிர் – sweet curds, sweet yogurt, கடைந்த – churned, திரள் – thick, rounded, கால் – rod, base, மத்தம் – churning rod, கன்று –  calf, வாய் சுவைப்ப – to taste with its mouth, முன்றில் தூங்கும் – hangs in the front yard (முன்றில் – இல்முன்), படலைப் பந்தர் – wide space under the tree canopy (படலை = தழை, மரத்தின் தழை நிழல், பந்தர் – பந்தல் என்பதன் போலி)), புல் வேய் குரம்பை – huts made with grass, நல்கூர் சீறூர் – small village with poverty, எல்லித் தங்கி – stayed for the nights, குடுமி நெற்றி – comb on the forehead, comb on the top, நெடு மரச் சேவல் – a rooster on a tall tree, தலைக்குரல் விடியல் போகி – left at the first sound at dawn, முனாஅது – without delay, கடுங்கண் மறவர் – harsh wasteland warriors, wasteland hunters, கல் கெழு குறும்பின் – from their forts made with rocks, எழுந்த தண்ணுமை – thannumai drum sounds rose up, இடங்கண் பாணி – sounds from the wide drum tops, அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென – the hearts of those who go through the wasteland to tremble, குன்று சேர் கவலை – forked paths on the mountains, இசைக்கும் – roars, அத்தம் நனி நீடு உழந்தனை – you were very sad for a long time on the wasteland path, மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, ஏ -அசைநிலை, அதனால் – so, உவ இனி – be happy now, வாழிய நெஞ்சே – may you live long my heart, மை அற – for darkness to leave, வைகு சுடர் விளங்கும் – where lights shine until dawn, வான் தோய் வியன் நகர் – sky touching huge house, சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி – praise the beauty of her beautiful breasts with pallor, தாழ் இருங்கூந்தல் – dark hanging hair, நம் காதலி – our lover, நீள் அமை வனப்பின் தோளும் ஆர் அணைந்தே – embracing her lovely arms which are like long bamboo (ஆர் – அசைச் சொல், அணைந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 88, ஈழத்து பூதந்தேவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய  5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன் கொல்லோ தானே, குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்  10
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து,
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக்,
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?  15

Akanānūru 88, Eezhathu Poothanthēvanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Our good man removed our trembling
fear when he came for the night tryst,
passing the ancient highlands with
thriving red millet, looking at the light lit
on a tall platform, by a forest dweller
with strong hands, who looks in the direction
of a young pig that approaches the field to
eat the heavy clusters of millet after it had
heard a lizard with a gaping mouth cluck and
considered that to be a good omen.

Did he go on a mountain path,
where an elephant with a big trunk that was
killed by a strong tiger has sweet musth
oozing heavily from his cheeks,
swarms of bees buzz on it and an asunam
that hears the humming from his mountain
cave thinks that it is yāzh music,
in the bamboo-filled small forest where a bear
digs into a termite mound with its sharp claws
causing the resident snake to die?

Notes:  இரவுக்குறி வந்த தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி கூறியது.  பகுவாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும் புருவைப் பன்றி (3-4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பன்றி தினைக்கதிரைத் தின்ன வரும்பொழுது பல்லி சொல்வதை ஆராய்ந்து பார்த்து நன்னிமித்தமாயின் வரும் என்றது.  நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீண்ட ஒளியினையுடைய விளக்கினை அடையாளமாக வைத்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.  Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307 and Natrinai 125, 325 and 336 have descriptions of bears attacking termite mounds.

Meanings:   முதை சுவல் – ancient raised grounds, கலித்த – flourishing, மூரி செந்தினை – large red millet, ஓங்கு – tall, வணர் – bent (since it is heavy), பெருங்குரல் – big spears of grain, உணீஇய – to eat (செய்யுளிசை அளபெடை), பாங்கர் – all directions, பகுவாய்ப் பல்லி –  a lizard with gaping mouth, பாடு – sound, ஓர்த்து – listening, analyzing, குறுகும் – it comes near, புருவை பன்றி – young pig, வருதிறம் நோக்கி – looking at the manner in which it is coming, கடுங்கைக் கானவன் – a forest dweller with strong hands, கழுது மிசை – on the platform, கொளீஇய – lit (செய்யுளிசை அளபெடை), நெடுஞ்சுடர் விளக்கம் – tall flame torches, light of tall flames, நோக்கி – looking, வந்து – came, நம் – our, நடுங்கு துயர் – trembling fear, களைந்த – removed fear by coming to the night tryst, நன்னராளன் – our good man, சென்றனன் கொல்லோ – did he go (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt,  ஓ -அசைநிலை, an expletive), தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, குன்றத்து – mountain’s, இரும்புலி – big tiger, தொலைத்த – killed, பெருங்கை யானை – elephant with a big trunk, கவுள் – cheeks, மலிபு – abundantly, இழிதரும் – flowing down, காமர் கடாஅம் – lovely musk (கடாஅம் – இசைநிறை அளபெடை), இருஞ்சிறை – dark winged bees, தொழுதி ஆர்ப்ப – they swarm around and buzz, யாழ் செத்து – thinking that it is yāzh music, இருங்கல் – big mountain, விடர் அளை – mountain cave (விடர் அளை – இருபெயரொட்டு), அசுணம் – a creature that loves music, ஓர்க்கும் – it listens, காம்பு அமல் – dense with bamboo (அமல் – செறிந்த), இறும்பில் – in the small forest (இறும்பு – குறுங்காடு), பாம்பு பட – cause the snake to die, துவன்றி – gathered, கொடு விரல் – bent hands, curved hands, உளியம் – bear, கெண்டும் – it digs, வடு – scarred, ஆழ் – deep, புற்றின – with termite mounds, வழக்கு அரு – difficult to go, நெறியே – path, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 89, மதுரைக் காஞ்சிப் புலவர், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்
புல் சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்,  5
சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து
ஊழுறு விளை நெற்று உதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல் நெடுமருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்  10
மைபடு திண் தோள் மலிர வாட்டிப்,
பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,  15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே, தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,  20
இடு மணல் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள் மாஅயோளே?

Akanānūru 89, Mathurai Kānchipulavar, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
How can the dark woman with long,
delicate, bamboo-like arms, who would
not drink sweet milk with honey, even
when I hit her as she ran around the
pavilion, not consider that the forest
is huge, and hurt her red feet going
on the path where,

the hot sun with rays stands in the middle
of the sky and burns, water from heavy rain
has dried up, there are mirages, leaving
his abode in the mountain where grass has
withered, a male owl hoots with rage,
his intermittent pitiful hoots sounding like
tumbling rocks, crickets screech on
small-leaved vēlam trees which drop their
dry seed pods, washermen remove salty soil
from the barren land with rocks on the long
paths, wasteland bandits with dark, strong
shoulders carry tightly tied bows, eat fatty meat,
and chop the heads of strong merchants who
are warriors with perfect swords as they follow
their rows of donkeys carrying loads,
there is flesh stink in the battlefield, and the
victorious bandits who are desirous of
battles, beat thudi drums, and share their
precious jewel loot in their forts with bows?

Notes:   மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.  வீங்கு சிலை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – கட்டிய வில்லையுடைய மறவர்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விசைகொண்ட சிலையினரான மறவர்கள், அகநானூறு 377-4 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வில்லையுடைய எயின மறவர்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெருத்த வில்லையுடைய மறவர்கள்.  வயவர் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வயவர் என்றது வணிகரை, அவருள்ளும் வீரர் உள்ளர் ஆதலின் சாத்து என்னாது வயவர் என்றார்.  ஒப்புமை:  அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 –  புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  தெறு கதிர் ஞாயிறு – the sun with hot rays, நடு நின்று காய்தலின் – since it stood in the middle of the sky and burned, உறு பெயல் வறந்த – the water from heavy rains has dried up (உறு – மிக்க), ஓடு தேர் நனந்தலை – wide land with mirages, உருத்து எழு குரல குடிஞைச் சேவல் – male owl with a rising voice with rage, புல் சாய் – grass has dried, grass has bent, விடரகம் – mountain caves, புலம்ப – to be alone, வரைய கல்லெறி இசையின் – like the sounds of rocks falling down the mountains (இசையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இரட்டும் – hoots intermittently, ஆங்கண் – there, சிள்வீடு கறங்கும் – where crickets screech, சிறி இலை வேலத்து – on the vēlam trees with small leaves, panicled babool, Acacia leucophloea (வேலத்து – அத்து சாரியை, வேல் = கருவேல்), ஊழுறு விளை நெற்று உதிர – mature seed pods drop, காழியர் – washermen, கவ்வைப் பரப்பின் – in the uproarious land, வெவ்வுவர்ப்பு ஒழிய – remove very salty soil, களரி – salty land, barren land, பரந்த – spread, கல் நெடு மருங்கின் – on the long path with stones, விளர் ஊன் தின்ற – ate fatty meat (விளர் = வெண்மை, மென்மை), வீங்கு சிலை மறவர் – the wasteland bandits with tight bows, the wasteland bandits with rapid bows, bandits with large bows, மைபடு திண் தோள் – dark strong shoulders, மலிர – puffing, வாட்டி – distressing, பொறை மலி – carrying heavy load, கழுதை நெடு நிரை தழீஇய – follow their long rows of donkeys (தழீஇய – செய்யுளிசை அளபெடை), திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த – chop the precious heads of the warrior-like merchants with perfect swords, படு புலாக் கமழும் – flesh of the dead stinks, ஞாட்பில் – in the battlefield, துடி இகுத்து – beat thudi drums in low pitch (தாழ முழக்கி), அருங்கலம் தெறுத்த – collected and heaped precious jewels, பெரும் புகல் வலத்தர் – victorious men with desire for battles, வில் கெழு குறும்பில் – in the forts with abundant bows, கோள் முறை பகுக்கும் – split between themselves properly, கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – not considering that it is a vast forest with all this, மெல்லென் சேவடி மெலிய – delicate red feet to be ruined, perfect red feet to be ruined, ஏக வல்லுநள் கொல்லோ – how can she tolerate passing it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, தேம் பெய்து அளவுறு தீம் பால் – sweet milk into which honey is poured and mixed (தேம் தேன் என்றதன் திரிபு), அலைப்பவும் உண்ணாள் – she would not drink even when I hit her, இடு மணல் பந்தருள் இயலும் – running around under the canopy with brought sand, நெடு – long, மென் – delicate, பணைத்தோள் – wide arms, bamboo-like arms, மாஅயோளே – the dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 90, மதுரை மருதன் இளநாகனார், நெய்தற் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந்துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல் வயின் செறித்தமை அறியாய் பன்னாள்  5
வருமுலை வருத்தா அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறள் கடவுள் செல்லூர்க் குணாஅது,
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்  10
இரும்பு இடம்படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்,
உறும் எனக் கொள்குநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே.

Akanānūru 90, Mathurai Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
How can I ask you to leave?
Your heart is so sad, since you caused
pain to the woman with growing breasts
with your proud chest, for many days!

A few women heard about your union
with her in the seashore grove with
thāzhai trees where decorated sand houses
built by little girls get crushed by waves
with white tops, the color of the hair of
elders.  Gossip arose, and you are not aware
that she has been confined to her house.

Even if they were given the prosperous
Niyamam town, east of Selloor with gods
with rare abilities and the roaring
ocean belonging to the fearless Kōsars
with face scars caused by metal weapons,
her parents will not accept it as bride
price for the young lady with fragrant
brow and new jewels.

Notes:  பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று இற்செறிப்பு அறிவுறீயது.  Ainkurunūru 147, Puranānūru 343, 344, 345, 352 and Kalithokai 103 have references to bride price.  வரி மனை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணலால் வரிவரியாகக் கோலும் சிற்றில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வருத்தா – வருத்தும் என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:   மூத்தோர் அன்ன – like those of elders (like the color of their hair), வெண்தலைப் புணரி – waves with white tops, இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – they crush the rows of little sand houses that young girls play with, தளை அவிழ் தாழை – thāzhai tree fronds that open releasing ties, Pandanas odoratissimus, கானல் – seashore grove, அம் பெரும் துறை – beautiful huge shore, சில் செவித்து ஆகிய புணர்ச்சி – some ears heard about the union, அலர் எழ – gossip has risen, இல்வயின் செறித்தமை அறியாய் – you are not aware that her mother has confined her in the house, பன்னாள் – many days, வருமுலை வருத்தா – saddened the young woman with growing breasts (வருமுலை – அன்மொழித்தொகை), அம் பகட்டு மார்பின் – with your beautiful proud chest, தெருமரல் உள்ளமொடு – with a sad heart, வருந்தும் நின் வயின் – to you who is sad, நீங்குக என்று – you go away, யான் யாங்ஙனம் மொழிகோ – how can I tell you (மொழிகு – தன்மை ஒருமை, first person singular, + ஓ – அசைநிலை, an expletive), அருந்திறள் கடவுள் – gods with rare strengths, செல்லூர் – Selloor town, குணாஅது – on the eastern side (இசைநிறை அளபெடை), பெருங்கடல் முழக்கிற்று ஆகி – like the roar of the huge ocean, யாணர் – wealth, இரும்பு இடம்படுத்த – caused by iron implements (spears, swords), வடுவுடை முகத்தர் – those with faces with scars, கருங்கண் கோசர் – Kōsars with no fear, நியமம் ஆயினும் – even if Niyaman town is given, உறும் என – thinking it is suitable, thinking that is equal (அமையும் என, ஒக்கும் என), கொள்குநர் அல்லர் – they will not take it as bride price, நறுநுதல் அரிவை – the young lady with fragrant forehead, பாசிழை – new jewels, விலையே – the price, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 91, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விளங்கு பகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயங்காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை  5
ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி, இருங்கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக்  10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசி என அறியாப் பணை பயில் இருக்கைத்,
தட மருப்பு எருமை தாமரை முனையின்  15
முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்,
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே.

Akanānūru 91, Māmoolanār, Pālai Thinai, What the heroine’s friend said to her
Oh my friend!  He has great love
for you, even if he left, with the
desire to earn precious wealth,
to the vast land where the sun with
many rays, which helps days to be
bright, burns the prosperous tall
mountains and ruins them, waterfalls
dry up, and a male elephant
with green eyes searches for water
in a spring with gods, and
not seeing water, eats moss, and
lies down with his hungry female
on one side ,
in the land where the bright sun
cracks nodes of bamboos.

Dark colored stags rest on the tall stone
burials with pebbles in the wasteland,
where harsh warriors rise up for
robbery which is their livelihood.

Even if he were given Kudaku country,
where the land beyond Odunkādu with
breadfruit trees with tall trunks
is protected by Kuttuvan with tightly
tied drums, a bamboo-filled place which
does not know hunger pangs, where buffaloes
with curved horns sleep under dense shade
of jackfruit trees, hating to eat lotus
flowers, he will not forget your deer-like
looks and fine beauty and stay away.

Notes:  தலைவன் பொருளீட்டுவதற்குப் பிரிந்தான்.  வருந்திய தோழியை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திக் கூறியது.  வரலாறு:  ஒடுங்காடு, குட்டுவன், குடநாடு.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:   விளங்கு பகல் உதவிய – helped the day to be bright, பல் கதிர் ஞாயிறு – the sun with many rays, வளம் கெழு – prosperity filled, மா மலை – the tall mountains, பயம் – the yields, கெட – ruined, தெறுதலின் – since it scorched, அருவி ஆன்ற பெரு வரை – tall mountains with dried up waterfalls, மருங்கில் சூர்ச் சுனை துழைஇ – search in the nearby spring with gods, search in the nearby fierce springs (துழைஇ – சொல்லிசை அளபெடை), நீர்ப் பயம் காணாது – not seeing water, பாசி தின்ற பைங்கண் யானை – a green-eyed elephant that ate the moss (பைங்கண் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), ஓய் – tired, பசிப் பிடியொடு – with his hungry female, ஒரு திறன் ஒடுங்க           – staying on one side, வேய் கண் உடைந்த – breaking bamboo nodes, வெயில் அவிர் – bright sun, நனந்தலை – wide land, அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – even if he left with a desire to earn precious wealth, பெரும் பேர் அன்பினர் தோழி – he has very great love oh friend, இருங்கேழ் இரலை சேக்கும் – dark colored stags rest, பரல் உயர் பதுக்கை – tall burials with stones/pebbles, கடுங்கண் மழவர் – harsh wasteland warriors, களவு உழவு எழுந்த – rise up for robbery which is their farming/livelihood, நெடுங்கால் ஆசினி – breadfruit trees with tall trunks, Artocarpus incise, ஒடுங்காட்டு – name of a town, or a forest with karuvēlam trees, உம்பர் – beyond, விசி பிணி முழவின் குட்டுவன் – Kuttuvan with tightly tied drums, Chera king, காப்ப – protects, பசி என அறியாப் பணை பயில் இருக்கை – places with dense bamboos/filled with fields which do not know hunger pangs, தட மருப்பு எருமை – buffaloes with big horns, buffaloes with curved horns, தாமரை முனையின் – hating (to eat) lotus flowers, முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும் – they reside in the thick shade of old bent jackfruit trees, குட நாடு பெறினும் – even if he gets Coorg country, தவிரலர் – he will not stay away, மட மான் நோக்கி – you with naïve eyes like a deer, நின் மாண் நலம் மறந்தே – forgetting your esteemed beauty (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 92, மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாள் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய! நேர் இறை  5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே, நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை  10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை,
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

Akanānūru 92, Mathurai Pālāsiriyār Natrāmanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
May you live long, Sir!
Please do not come here
at midnight, when heavy rains
fall on the tall mountains
along with lightning that
ruins eyes, when huge, red-eyed
tigers with curved stripes that
attack and make elephants tremble,
roar on the mountain slopes.

My friend with tender wrists and
straight, long, delicate, bamboo-like
arms, and I have planned to protect
our millet field tomorrow.

If you come, to the place where many
cool waterfalls flow in the small forest
dense with trees, where bright glory lily
blossoms have opened, where even
female monkeys don’t know their way,
in the light of gems spit by snakes that
are attacked by thunder, you’ll get sweet
sleep with my friend with dark, soft hair.

Notes:  இரவுக்குறி சென்று தலைவியை கண்ணுற்று நீங்கும் தலைவனிடம் “இரவில் வராதே, பகலில் வருக” எனக் கூறியது.  தோழி வரைவு கடாயது.  ஒப்புமை:  அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.   There was this belief that snakes spit gems.  Puranānūru 294, Akanānūru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.

Meanings:   நெடுமலை அடுக்கம் – tall adjoining mountain, கண் கெட மின்னிப் படுமழை பொழிந்த – when heavy rains fall causing eyes to be ruined, பானாள் – midnight, கங்குல் – night, குஞ்சரம் நடுங்க – causing elephants to tremble, தாக்கி – attack, கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமும் – big tigers with curved stripes and red eyes roar, சாரல் – mountain slopes, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் – may you live long, ஐய – oh sir, நேர் இறை – tender wrists, straight forearms, நெடு – long, மென் – delicate, பணைத்தோள் – thick arms, bamboo-like arms, இவளும் யானும் – my friend and myself, காவல் கண்ணினம் தினையே நாளை – we were considering to protect the millet field tomorrow, மந்தியும் அறியா – even female monkeys do not know, மரம் பயில் இறும்பின் – in the small forest dense with trees, ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண் – where bright red glory lilies are blooming, தண் பல் அருவித் தாழ் நீர் – many cool waterfalls flow down, ஒரு சிறை – on one side, உருமுச் சிவந்து எறிந்த – attacked by thunder with rage, உரன் அழி பாம்பின் திரு மணி விளக்கின் – in the light of the beautiful gems spit by snakes whose strengths get ruined by angry lightning, பெறுகுவை – you will get, இருள் மென்கூந்தல் ஏம் உறு துயிலே – happy sleep on her dark soft hair (ஏம் – ஏமம் என்பதன் விகாரம, துயிலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 93, கணக்காயனார் மகனார் நக்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து,
ஆரங்கண்ணி அடு போர்ச் சோழர்
அறங்கெழு நல் அவை உறந்தை அன்ன  5
பெறல் அரு நன்கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின்,
அரண் பல கடந்த முரண் கொள் தானை,
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள் அங்காடி நாறும் நறுநுதல்  10
நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலங்கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,  15
முயங்குகம் சென்மோ நெஞ்சே, வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ்புதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை  20
திருமா வியன் நகர்க் கருவூர் முன்துறைத்,
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

Akanānūru 93, Mathurai Kanakkāyanār Makanār Nakkeeranār, Pālai Thinai – What the hero said to his heart
Desiring to earn precious, fine jewels that
are hard to attain, like the city of Uranthai
with a just court,
……….belonging to the Chozha kings wearing
……….āthi flower garlands and capable
……….of murderous battles,
and to support suffering relatives, feeding
them, and making others get close, we ended
the work of earning with great enthusiasm.

Let us go, my heart, to the dark woman with
long, thick hair and fine forehead with the
fragrance of the day markets in Koodal of
Pandiyan wearing fresh neem garlands, who
has won over many forts with his strong
armies.

Let us embrace her tightly, causing scars on my
chest with her jewels,
……….in the light shed by a lamp with a tall flame,
……….on a high, flower-sprinkled bed in the sky-high,
……….huge house which appears like a mountain
……….that was bored, on a delicate flower-spread
……….mattress that resembles abundant foam,
many times, many more than the sand on the
shores of cool Ānporunai river with tall banks
and clear water,
in the huge, prosperous Karuvūr town belonging
to Cheran owning tall chariots and fierce, arrogant
elephants with foreheads with lines, as strong as
Kootruvan, with musth flowing into their trumpeting
mouths, with fierce, huge trunks that throw men
to the ground, killing them without missing their
mark.

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வரலாறு:  சோழர், உறந்தை, வழுதி, கூடல், கோதை, கருவூர், ஆன்பொருநை (இன்றைய அமராவதி ஆறு).  எறியா – எறிந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  கிளைஞர் ஆரவும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுற்றத்தார்கள் பெருகவும், கிளையாயுள்ளார் உண்ணவும்.

Meanings:   கேள் கேடு ஊன்றவும் – to support relatives when they suffer (கேள் – கேளிர் என்னும் பொருட்டு), கிளைஞர் ஆரவும் – for relatives to eat well, for relatives to increase, கேள் அல் கேளிர் – those who are not relatives to become like relatives, கெழீஇயினர் ஒழுகவும் – to make them be close like relatives (கெழீஇயினர் – சொல்லிசை அளபெடை), ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு – with suitable enthusiasm to go and earn wealth (பொருந்திய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), புகல் சிறந்து – with great desire, ஆரங்கண்ணி – sandal garland or flower garland, அடு போர்ச் சோழர் – Chozha kings of murderous battles, அறம் கெழு – justice filled, நல் அவை – fine court, உறந்தை அன்ன – like Uranthai city, பெறல் அரு நன்கலம் எய்தி – attaining precious fine jewels that are hard to get, நாடும் செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின் – if we finish the desired difficult work, அரண் பல கடந்த – won many forts, முரண் கொள் தானை – strong army, வாடா வேம்பின் வழுதி – Pāndiyan king with fresh neem garlands, கூடல் நாள் அங்காடி – in Koodal’s day market, நாறும் நறுநுதல் – fragrant fine forehead, நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு – with the dark woman with long dark hair (மாஅயோளொடு – இசைநிறை அளபெடை), வரை குயின்றன்ன – like drilling into a mountain, வான்தோய் நெடுநகர் – sky touching huge house, நுரை முகந்தன்ன – like abundant foam that is placed, மென் பூஞ்சேக்கை – delicate flower bed, நிவந்த பள்ளி – tall bed, நெடுஞ்சுடர் விளக்கத்து – in the light of a lamp with a tall flame, நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப முயங்குகம் – let us embrace her hard for her to get scars on her fine chest, சென்மோ நெஞ்சே – let’s go my heart (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), வரி நுதல் – forehead with lines, வயம் திகழ்பு இமிழ்புதரும் – roaring with strength, வாய் புகு கடாஅத்து – with musth that enters the mouth (கடாஅத்து – இசை நிறை அளபெடை, அத்து சாரியை), மீளி மொய்ம்பொடு – with like that of Kootruvan,  நிலன் எறியா – dashing against the ground (நிலன் – நிலம் என்பதன் போலி), குறுகி ஆள் கோள் பிழையா – approaching and killing men without fail (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்),  அஞ்சுவரு – causing fear, தடக்கை – big trunks, கடும் பகட்டு யானை – fierce proud elephants,  நெடுந்தேர்க் கோதை – Cheran king with tall chariots, திரு மா – very wealthy, வியன் நகர்க் கருவூர் – wide town of Karuvūr, முன்துறை – துறை முன், shore front, தெண் நீர் – clear water,  உயர் கரைக் குவைஇய – heaped on the high shores (குவைஇய – செய்யுளிசை அளபெடை),  தண் ஆன்பொருநை மணலினும் பலவே – more than the sands of cool Ānporunai River – (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 94, நன்பலூர் சிறுமேதாவியார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது, அல்லது, தலைவன் நண்பனிடம் சொன்னது
தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்
மறித் துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ 5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி
சிறுகண் பன்றிப் பெரு நிரை கடிய
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்  10
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்திழை ஊரே.

Akanānūru 94, Nanpalūr Sirumēthāviyār, Mullai Thinai – What the hero said to his charioteer, or what the hero said to his friend
The town of the delicate woman with
perfect jewels, dark thick hair, kind
and eager nature, is in the forest,
near mountain peaks with honeycombs,
with musundai bushes with dense leaves
and flourishing white flowers that appear
like stars in the midnight sky, and
in the pitch darkness, a cattle herder with
a mat on his back collects his young sheep
together, wearing a bee-swarming, water
dripping garland, woven with cool, fragrant
mullai and thōndri flowers, and warms his
hands gently in the fire created by wood
sticks, and shouts loudly to chase foxes away.

A guard, who protects the mature field,
thinks and blows his long, black horn when big
groups of small-eyed pigs appear, to chase them
away, and both the sounds are heard together.

Notes:  (1) வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்லியது. (2) – களவுக் காலத்தில் தலைவன் தன் தோழனிடம் சொல்லியது.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:   தேம்படு சிமயப் பாங்கர் – near the mountain peaks with honeycombs, near the mountain peaks with honey (தேம் – தேன் என்றதன் திரிபு), பம்பிய குவை இலை – densely growing pointed leaves, முசுண்டை வெண்பூ – white flowers of musundai plant, Rivea ornata, Leather-berried bindweed, குழைய –  close together, வான் எனப் பூத்த – like the stars that appear in the sky, பானாள் கங்குல் – midnight, மறித் துரூஉத் தொகுத்த – has his young sheep together (துரூஉ – இன்னிசை அளபெடை), பறிப்புற – with a mat (used as a rain guard) on his back, இடையன் – a cattle herder, தண் கமழ் முல்லை – cool fragrant jasmine flowers (முல்லை – மலருக்கு ஆகுபெயர்), தோன்றியொடு – along with thōndri flowers, Gloriosa superba (தோன்றி – மலருக்கு ஆகுபெயர், விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன் – he was wearing a water-dripping flower strand on his head that was swarmed by bees, ஐது படு கொள்ளி அங்கை காய – gently heating his palms in near the fire created with wood, குறுநரி – small fox (பண்புத்தொகை), உளம்பும் – he shouts, கூர் இருள் – pitch darkness, நெடு விளி – loud sound, சிறுகண் பன்றிப் பெரு நிரை – big groups of small-eyed pigs, கடிய – to chase, முதைப் புனம் காவலர் – guards who protect mature fields, நினைத்திருந்து – thinking, ஊதும் – blows, கருங்கோட்டு ஓசையொடு – along with the sounds of the black horns that he blows, ஒருங்கு வந்து இசைக்கும் – sounds together, வன்புலக் காட்டு நாட்டதுவே – it is the forest country with trees and bushes (ஏகாரம் அசைநிலை, an expletive), வன்புலம் – குறிஞ்சியும் முல்லையுமாம் (இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை), அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல் – kindness with eagerness and delicate nature, இரும் பல் கூந்தல் திருந்திழை ஊரே – the town of the one with perfect jewels and dark thick hair (திருந்திழை – அன்மொழித்தொகை, ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 95, ஓரோடோகத்து கந்தரத்தனார், பாலைத் திணை, தலைவி தோழியிடம் சொன்னது
பைபயப் பசந்தன்று நுதலும், சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்,
உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ? வாழி தோழி! பொரி கால்  5
பொகுட்டு அரை இருப்பைக் குவி குலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்  10
கௌவை மேவலர் ஆகி, “இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு” எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே?  15

Akanānūru 95, Ōrōdakathu Kantharathanār, Pālai Thinai – What the heroine said to her friend
Paleness has spread little by little
and my forehead has become dull.
My sprout-like body has become frail,
and my great sorrow is known to many.
If we think about it, why would
these happen but to take away my life!
May you live long, my friend!

Causing fear in new travelers who
avoid going,
bears that have given birth, along with
their big clan, eat clusters of hollow
iruppai flowers that look like hailstones,
growing on trees with rough,
cracked trunks in the wasteland paths.

Not considering my sorrow since he
has gone past many wastelands,
gossip has increased, and hellish
women in this town say harsh things.

My mother who understands and knows
our principle, prayed and said, “That does
not suit my daughter.”  How can I be
involved in this love affair in front of her?

Notes:  தலைவனுடன் போக உடன்பட்ட தலைவி தோழியிடம் கூறியது.  ஒப்புமை:  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.

Meanings:   பைபயப் பசந்தன்று நுதலும் – and the forehead has become pale little by little (பைபய – பைய பைய என்ற அடுக்கு பைபய என மரூஉ ஆயிற்று), சாஅய் – thinned (இசை நிறை அளபெடை), ஐது ஆகின்று – has become delicate/thin, என் தளிர் புரை மேனியும் – and my body that is like a sprout (புரை – உவம உருபு, a comparison word), பலரும் அறிய – for many to know, திகழ்தரும் அவலமும் – and great sorrow that appears bright for others to see, உயிர்கொடு கழியின் – for life to go away, அல்லதை – else (அல்லது, ஈறு திரிந்தது), நினையின் – if thought about, எவனோ – what else, வாழி தோழி – may you live long my friend, பொரி கால் – rough and cracked trunks, பொகுட்டு – rough, uneven (முரடு), அரை இருப்பை – iruppai trees with trunks, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, குவி குலைக் கழன்ற – pointed clusters separated, ஆலி ஒப்பின் – like hailstones, like ice cubes, தூம்புடை – with hollow (in the middle), திரள் வீ – bunches of flowers, ஆறு செல் வம்பலர் – new people who go on the paths, நீள் இடை அழுங்க – avoid going on the long path, ஈனல் எண்கின் – of bears that have given birth to cubs (ஈனல் – குட்டி, ஆகுபெயர்), இருங்கிளை – big group of relatives, கவரும் – they take, they eat, சுரம் பல கடந்தோர்க்கு – for the man who passed many wastelands, இரங்குப – that they will be sad (தலைவியர்), என்னார் – they are without consideration, கௌவை மேவலர் ஆகி – they desired gossip, they desired slander, இவ் ஊர் நிரையப் பெண்டிர் – many hellish/evil women in this town, இன்னா கூறுவ – the distress-causing words that are uttered, புரைய அல்ல என் மகட்கு என – that they do not suit my daughter, that what they say is not good, பரைஇ – prayed (சொல்லிசை அளபெடை), நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை – mother who understands our principles, முன்னர் யாம் என் இதற்படலே – what will happen to her if she sees me like this, how can I be involved in this secret love affair in front of her, (இதற்படலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 96, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்துப்
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம் முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,  5
அசைவரல் வாடை தூக்கலின், ஊது உலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே,  10
செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,  15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே.

Akanānūru 96, Marutham Padiya Ilankadunkō, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the town with beautiful groves
and fields, where drinking the water with
liquor from washed bowls, shrimp become
arrogant and unstable, and leap like tight,
snapped strings of bows to the bases of the
grain silos on the sandy shores of a pond near
the fields, and long, beautiful vines of rattan
with saw-like edges and thorns surround
white waterlilies in the stream, and when the
swaying northern winds blow, the big waterlily
leaves get lifted and dropped, appearing like
rapidly blown bellows in a metalsmith’s forge!

They say that you united with a young woman
whose friends were wearing bright bangles.

The gossip that has risen from many mouths is
like the uproar that rose when the battle-victorious
Chozhan with noble elephants, father of Akuthai with
red gold anklets, close thighs, pretty, dark body,
defeated the two great kings in a battle in Paruvūr
with fields of white paddy, in a just battle with
his army with bright swords and seized their elephants.

Notes:  தோழி வாயில் மறுத்தது.  ஒப்புமை:  புறநானூறு 287 – கூட்டு முதல் புரளும்.  வரலாறு:  அஃதை தந்தை, சோழர், பருவூர்.  இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:   நறவு உண் மண்டை – bowls in which people drank liquor, நுடக்கலின் – due to washing, இறவுக் கலித்து – shrimp get unstable and arrogant (இறவு – இறா இற என்றாகி உகரம் ஏற்றது), பூட்டு அறு வில்லின் – like the tied strings of bows that are broken (வில்லின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கூட்டு முதல் தெறிக்கும் – they leap into the bases of grain silos, பழனப் பொய்கை அடைகரை – sandy shores of a pond near the field, பிரம்பின் – of rattan, Calamus rotang, அரவாய் அன்ன – like the saw edge, அம் முள் நெடுங்கொடி – long vines with beautiful thorns, அருவி ஆம்பல் – waterlilies from the stream, அகல் அடை – wide leaves, துடக்கி – surrounding, tying around, அசைவரல் வாடை – swaying northern wind blow, தூக்கலின் – since it moves, ஊது உலை விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் – they become inflated and shrunk like the rapidly blown bellows in a forge (தோலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கழனி – fields, அம் படப்பை – beautiful groves, காஞ்சி ஊர – oh man from the town with portia trees (அண்மை விளி), பூவரச மரம், Thespesia populnea, ஒண்தொடி ஆயத்துள்ளும் – among a group of women with bright bangles, நீ நயந்து கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே – they say that you desired and united with a young woman, செம்பொன் சிலம்பின் – with fine gold anklets, with red gold anklets, செறிந்த குறங்கின் – with close thighs, அம் கலுழ் – beauty flowing (கலுழ் – வழிகின்ற, ஒழுகின்ற), மாமை – dark color, அஃதை தந்தை – Akuthai’s father, அண்ணல் யானை – noble elephants, அடு போர்ச் சோழர் – Chozha king of murderous battles, வெண்ணெல் வைப்பின் – with fields with white paddy, பருவூர்ப் பறந்தலை – Paruvūr battlefield, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – attacking and ruining two great kings in battles, ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை – when they fought good battles with bright swords and won, களிறு கவர் கம்பலை போல – uproar like when the elephants were seized, அலர் ஆகின்றது – it has become gossip, பலர் வாய்ப்பட்டே – spoken by many (வாய்ப்பட்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 97, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“கள்ளியங் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி. நிரை பகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்  5
கொலை வில் ஆடவர் போலப், பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு  10
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி
நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர் முலை ஆகம் புலம்பப் பல நினைந்து
ஆழேல்” என்றி தோழி யாழ, என்  15
கண் பனி நிறுத்தல் எளிதோ, குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைத்
துறை அணி மருது தொகல் கொள ஓங்கிக்,
கலிழ் தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து  20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்ப்
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

Akanānūru 97, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
About the cruel man who left for the harsh
wasteland,
……….where, in the kalli forest with flesh
……….stench from a beautiful, spotted deer’s
……….body, its joints removed and abandoned by
……….a tiger that brought it down by force as its
……….pretty, parched antlers fell, and vultures
……….with big heads along with kites land, like
……….murderous men with bows who kill those in
……….the forest forts as they scream, steal their
……….cattle, divide them among themselves, and
……….eat meat in the small area with big boulders,
you tell me, “Do not cry, my friend!  Thinking
often and hurting every day your chest, with big
breasts, that is lovely like Viyalūr where vayalai
vines are hedges, and Nannan Vēnmān, happy
with alcohol in his court and adorned with warrior
anklets and bracelets, protects with kindness diviner
bards and their women with curved hands who carry
small sticks cut from chosen bamboo segments
from big bamboos in the small forest.”

Kuravam flowers have blossomed, early
dew season has ended, and early summer has
arrived.  On the long, sandy shores of the wide
river with fine bright sand decorated by
marutham trees, are many tall mango trees
with big branches full of tender leaves.
Through their branches with clusters of new
flowers, beautiful low clouds move like smoke.

Is it easy to stop my tears when I hear the calls
of cuckoos enjoying the flowers?

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தலைவி வருந்தினாள்.  அவளை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  வரலாறு:  நன்னன் வேண்மான், வியலூர்.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   கள்ளி அம் காட்ட – in the forest with cactus plants, Prickly pear cactus or Euphorbia Tirucalli (அம் சாரியை), புள்ளி அம் பொறிக் கலை – a beautiful spotted stag (அம் சாரியை), வறன் உறல் – got dried, அம் கோடு உதிர – making the beautiful antlers fall, வலம் கடந்து – caught and killed victoriously, புலவுப் புலி – meat eating tiger, துறந்த – abandoned, கலவுக் கழி – body joints removed, கடு முடை – stinking flesh (முடை – ஆகுபெயர் ஊனுக்கு), இரவுக் குறும்பு அலற – for those in the forest forts to scream at night, நூறி – killed, நிரை பகுத்து – divide the cattle, இருங்கல் – big boulders, முடுக்கர் – small path, small space, திற்றி கெண்டும் – cutting and eating the meat (கெண்டும் – வெட்டும்), கொலை வில் ஆடவர் போல – like men with murderous bows, பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும் – vultures with big heads and came with many and with kites and stayed (எருவை – பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture), அருஞ்சுரம் – harsh wasteland, இறந்த கொடியோர்க்கு – for the harsh man who went, அல்கலும் – daily, இருங்கழை இறும்பின் – in the small forest with large/dark bamboo, ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் – analyzed and cut finely the segments (of bamboo), சிறு கோல் – small sticks, வணங்கு இறை மகளிரொடு – along with women with curved hands, அகவுநர்ப் புரந்த அன்பின் – protects diviner bards with kindness, கழல் தொடி – warrior anklets and bracelets, நறவு மகிழ் இருக்கை – happy court with alcohol, happy place with alcohol (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நன்னன் வேண்மான் – Nannan Vēnmān, வயலை வேலி – vayalai vines as hedges, purslane vine, Portulaca quadrifida, வியலூர் அன்ன – lovely like Viyalūr, நின் அலர் முலை – your big/wide breasts, ஆகம் புலம்பப் பல நினைந்து – chest hurting and thinking about many things, ஆழேல் என்றி தோழி – you told me not to cry my friend (என்றி – முன்னிலை ஒருமை), யாழ – அசை, an expletive, என் கண் பனி நிறுத்தல் எளிதோ – is it easy to stop the tears dropping from my eyes (ஓகாரம் வினா), குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய – kuravam flowers have bloomed and early dew season has gone, Webera Corymbosa, Bottle Flower Tree, அரும் பத வேனில் – in harsh summer, அறல் – fine sand, அவிர் – bright, வார் மணல் – long stretches of sand, அகல் யாற்று அடைகரை – sand-filled shores of the wide river, துறை அணி மருது தொகல் கொள – shores are decorated with marutham trees, Terminalia arjuna (மருது – மருதொடு என மூன்றனுருபு விரித்துரைக்க), ஓங்கி  – tall, கலிழ் தளிர் அணிந்த – decorated with flourishing sprouts (கலிழ் – கலுழ் என்பதன் திரிபு), இருஞ்சினை மாஅத்து – of the mango trees with dark/large branches (அத்து சாரியை), இணர் – clusters, ததை – dense, close, புதுப் பூ நிரைத்த பொங்கர் – groves filled with flowers, tree branches filled with flowers, புகை புரை அம் மஞ்சு ஊர – beautiful low clouds move like smoke (புரை – உவம உருபு, a comparison word), நுகர் குயில் – cuckoos which enjoy that, அகவும் குரல் கேட்போர்க்கே – those who listen to their calls (கேட்போர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 98, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பனி வரை நிவந்த பயங்கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்  5
அறிந்தனள் அல்லள் அன்னை, வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
“முருகன் ஆர் அணங்கு” என்றலின், அது செத்து,  10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
“பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு” எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,  15
வெண்போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇக், கை பெயராச்
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்  20
என் ஆம் கொல்லோ தோழி? மயங்கிய
மையல் பெண்டிற்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின், இம்மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று 25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவனே எனின்,
“செறி தொடி உற்ற செல்லலும் பிறிது” எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே.  30

Akanānūru 98, Veri Pādiya Kāmakkaniyār, Kurinji Thinai – What the heroine said to her friend, or What the heroine’s friend said to her as the hero listened nearby
My friend!  My man from the lush slopes,
where gods live, used to give me pleasure
without hatred.  Now he gives me sorrow
which can go away only if I embrace him.

Not knowing this, my mother who saw
rows of rounded, tight bangles slip away
from my wasting hands, felt helpless, and
asked the female diviners, who
are adept liars, about curing my affliction.

After spreading rice and divining,
they said this was caused by Murukan,
and that the vēlan had to come and heal me
with rituals.  My mother who wanted me to
become my old self and for my beauty like
that of a doll and analyzed by many to be
regained in our well-constructed, painting-like,
lovely house, prayed to God.

If a huge and wide pavilion were erected
beautifully fit for dance, the vēlan adorns
himself with garlands made with palm fronds
and kadampam leaves, utters the praises of
famous Murukan and performs veriyāttam
dances to the rhythm of sweet music,
appearing like a puppet manipulated by an
expert puppeteer, what will happen my friend?

If women are not healed by these rituals,
people will blame them for their secret love.
If I am back to my normal self, due to the
graces of Murukan, my lover from the rich
mountain country will say that I, with tight
bangles, am not suffering from the pain of
separation.  If that happens, I will not live!

Notes:   வரையாது வந்தொழும் தலைவனுக்கு வெறியாட்டு அறிவுறுத்தி வரைவு கடாயது.  Veriyāttam ritual is performed when the Murukan temple priest vēlan is invited to heal love-sick young girls who appear sickly.  The mother invites him to divine the reason for her daughter’s affliction, not aware of her love affair.  The priest uses molucca beans (kazhangu) on freshly laid sand in the front yard of the house, and tells the mother that Murukan’s anger is the reason for her daughter’s affliction.  He wears garlands, prays to Murukan, kills a goat and performs rituals.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  அஃதான்று – இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   பனி வரை நிவந்த – cold high mountains, பயம் கெழு – with benefits, beneficial, கவாஅன் – mountain slopes (இசை நிறை அளபெடை), துனி இல் – without hatred, கொள்கையொடு – with the principle, அவர் நமக்கு உவந்த – that he gave us, இனிய உள்ளம் – sweet heart, இன்னா ஆக – due to sorrow, முனி தக – with anger, with hatred, நிறுத்த நல்கல் – given to us, எவ்வம் – sorrow, சூர் உறை – gods live, வெற்பன் – lord of the mountains, மார்பு உற தணிதல் – it will go down if I embrace his chest, அறிந்தனள் அல்லள் – she does not know, அன்னை – mother, வார் – long rows, கோல் – rounded, செறிந்து – close fitting, tight, இலங்கு – bright, எல் வளை – bright bangles, நெகிழ்ந்தமை நோக்கி – seeing them slip down, கையறு நெஞ்சினள் – she with a helpless heart, வினவலின் – since she asked, முதுவாய்– with ancient wisdom, with intelligence, பொய்வல் – capable of lying, பெண்டிர் – women, பிரப்பு உளர்பு இரீஇ – spreading rice and divining (இரீஇ – சொல்லிசை அளபெடை), முருகன் ஆர் அணங்கு – illness caused by Murukan, என்றலின் – since she said, அது செத்து – thinking that is right, ஓவத்து அன்ன – like a painting (ஓவம், அத்து சாரியை), வினை புனை நல் இல் – well constructed fine house, பாவை அன்ன – like a doll, பலர் ஆய் மாண் கவின் – great beauty that many analyzed, பண்டையின் – like in the past (பண்டையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சிறக்க – may it flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), என் மகட்கு – for my daughter, என – thus, பரைஇ – praised god (சொல்லிசை அளபெடை), கூடு கொள் இன் இயம் – combined sweet instruments, கறங்க – roared, களன் இழைத்து – formed the veriyāttam field, created the veriyāttam field (களன் – களம் என்பதன் போலி), ஆடு அணி அயர்ந்த – decorated beautifully fit for dancing, அகன் பெரும் பந்தர் – wide huge pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), வெண்போழ் – white palm frond (பனந்தோடுக்கு ஆகுபெயர்), கடம்பொடு சூடி – wore with kadampam flowers, Anthocephalus cadamba, Kadampa Oak (கடம்பு ஆகுபெயர் மலருக்கு), இன் சீர் ஐது அமை பாணி இரீஇ – music sweetly arranged and beautifully played with rhythm (இரீஇ – சொல்லிசை அளபெடை), கை பெயரா – lifting his hands, செல்வன் பெரும் பெயர் ஏத்தி – praising the great fame of Murukan who does not abandon, வேலன் வெறி அயர் வியன் களம் – the big ground where the vēlan performs the ritual, பொற்ப – to become beautiful, வல்லோன் பொறி அமை பாவையின் – like a puppet moved by an expert puppeteer who made it (பாவையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தூங்கல் வேண்டின் – if desiring to dance, என் ஆம் கொல்லோ – what will happen (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ -அசைநிலை, an expletive), தோழி – my friend, மயங்கிய மையல் பெண்டிற்கு – to women who are confused, நொவ்வல் ஆக – to be sad, ஆடிய பின்னும் வாடிய மேனி – faded body after dancing, பண்டையின் சிறவாது ஆயின் – if it does not become beautiful like in the past (பண்டையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இம்மறை – this secret love, அலர் ஆகாமையோ அரிதே – it would be rare if it does not become gossip, அஃதான்று – not only that (அஃதன்றி), அறிவர் உறுவிய அல்லல் கண்டு – those who see the sorrow that I have attained, அருளி – offering graces, வெறி கமழ் – strong fragrance, நெடுவேள் – Murukan, நல்குவனே எனின் – if he will shower, செறி தொடி – wearing tight bangles, wearing stacked bangles, உற்ற செல்லலும் – sorrow she attained, பிறிது – not because of us,  என – thus, கான் கெழு நாடன் கேட்பின் – if my lover from the country filled with forests hears and knows about it, யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே – it would be rare for me to live (அரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 99, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை  5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய்ப், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம,  10
கண்டிசின் வாழியோ குறுமகள், நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்,
குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்தே.

Akanānūru 99, Cheramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine who went with him to the wasteland
May you live long, oh young woman!  Look!
The forest is lovely and desirable, fragrant like
a temple with gods, with flowers of murukkam
trees with thorns, whose buds, swarmed
by bees, are like the killer claws of tigers
with sword-like stripes, their wilted flowers
spread, kōngam buds which resemble the
breasts of women wearing splendid jewels are
open, mixed with athiral blossoms and pretty,
cool pāthiri flowers that have dropped from
beautiful branches, along with kadampam flowers.

Look at the short and tall mountains, that appear
like male and female elephants, their tusk rings
broken attacking fortress gates of enemies, that
are seen in your father’s battlefield.

Notes:  உடன்போகிய தலைவியிடம் தலைவன் சொன்னது.  மணந்த பூவின் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணங்கமழுகின்ற பல்வேறு மலர்களுடைமையால், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கலந்து கிடைக்கும் பூக்களைப் போல்.  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  பராஅம் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:   வாள்வரி – sword like stripes, வயமான் – strong animal (tiger), கோள் உகிர் அன்ன செம் முகை – red buds that are like killing claws, அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் – of the blossomed flowers of murukkam trees with thorns, coral trees, Erythrina variegate, சிதர் ஆர் – bees drink, செம்மல் தாஅய் – wilted flowers spread (தாஅய் – இசைநிறை அளபெடை), மதர் எழில் – very beautiful, மாண் இழை மகளிர் – women with splendid jewels, பூணுடை முலையின் – like the breasts with jewels (முலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு – with kōngam buds which have opened, Cochlospermum gossypium, அசைஇ – were lying (சொல்லிசை அளபெடை), நனை – buds/flowers, அதிரல் – wild jasmine, பரந்த spread, அம் தண் பாதிரி – beautiful cool pāthiri flowers, Stereospermum chelonoides, Trumpet flower, உதிர் வீ – dropped flowers, அம் சினை – beautiful branches, தாஅய் – spread (இசைநிறை அளபெடை), எதிர் வீ – differing flowers, மராஅ மலரொடு – with kadampam tree flowers, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak (மராஅ – இசைநிறை அளபெடை), விராஅய் – mixed (இசைநிறை அளபெடை), பராஅம் – praising, worshipping (இசைநிறை அளபெடை), அணங்குடை நகரின் – those in temples with gods, மணந்த பூவின் – since there are fragrant flowers with mixed flowers, நன்றே கானம் – the forest is pretty, நயவரும் – it is desirable, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, கண்டிசின் – see this (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), வாழியோ – may you live long (ஓ -அசைநிலை, an expletive), குறுமகள் – oh young woman, நுந்தை அடு களம் – in your father’s battlefield (நுந்தை – நும் + தந்தை, மருஉ மொழி), பாய்ந்த – leaped and attacked, தொடி சிதை மருப்பின் – with metal tusk rings that got broken, பிடி மிடை களிற்றின் தோன்றும் – appears like the male elephants surrounded by females (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), குறு நெடுந்துணைய குன்றமும் உடைத்தே – are like mountains that are short and tall in sizes (துணைய – அளவில் உள்ள, உடைத்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 100, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே,
பெருந்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த  5
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்  10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன் விரி இணர்ப்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே.

Akanānūru 100, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
You with sandal paste rubbed chest
and a garland hanging high,
coming at night and leaving,
embracing her tightly causing scars
on her fine chest, is sweet to me.

However, gossip has risen in our town
……….with thāzhaitrees, surrounded
……….by groves with punnai
……….trees with clusters of flowers,
as loud as the cries of new stork flocks
on the shores of Puranthai town
of charitable Periyan with fine chariots
hitched to horses, a patron to singers,

where,
the huge ocean roars loudly,
wandering buffaloes eat
new waterlilies at the crack of dawn,
nights are cloudy, and lights on
boats lit by those
who catch huge fish in the dark
ocean are like the flame-like, bright
jewels adorning the beautiful faces
of brave battle elephants
in the camps of brave kings
who don’t run away in fear from battles.

Notes:  நெய்தலுள் குறிஞ்சி.  வரையாது களவொழுக்கத்தில் வந்து ஒழுகும் தலைவனிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.  எனக்குமார் (4) – மார் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை -அசைநிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆர் இசைநிறை.  ஒப்புமை:  நற்றிணை 229 – இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இரவில் வருவது தீதே எனக் கருட் பொருள் புறத்தே இறைச்சி தோற்றுவித்தமையும் நுண்ணிதின் உணர்க.  வரலாறு:  பெரியன், புறந்தை.

Meanings:   அரையுற்று அமைந்த ஆரம் நீவி – with ground sandal paste rubbed, புரையப் பூண்ட கோதை மார்பினை – you are with a chest with a garland hanging high, நல் அகம் – fine chest, வடுக் கொள – to get scars, முயங்கி – embracing, நீ வந்து எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே – you coming at night and leaving is sweet to me (எனக்குமார் – உம்மை எச்சப்பொருட்டு, மார் அசைநிலை, an expletive, இனிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), பெருந்திரை முழக்கமொடு – with the huge waves roaring, இயக்கு அவிந்திருந்த – without movement, resting, கொண்டல் இரவின் – during the nights with clouds, இருங்கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் – those who catch fat fish from the dark ocean lit, இருள் நீங்கு ஒண் சுடர் – bright flames that remove darkness, ஓடா – not running away, பூட்கை – strength, principle, வேந்தன் பாசறை – battle camp of kings, ஆடு இயல் யானை – elephant that is in battles, அணி முகத்து – on the beautiful faces, அசைத்த ஓடை – jewels worn, ஒண் சுடர் ஒப்ப – bright flame like, தோன்றும் – appears, பாடுநர்த் தொடுத்த – attached the singers to him, கைவண் கோமான் – charitable king, பரியுடை நல் தேர்ப் பெரியன் – king Periyan with fine chariots hitched to horses, விரி இணர்ப் புன்னை – punnai trees with clusters,  Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, அம் கானல் – beautiful grove, புறந்தை – Puranthai, முன்துறை – on the shores (முன்துறை – துறைமுன்), வம்ப நாரை இனன் ஒலித்தன்ன – like flocks of new stork/crane/pelican that cry (இனன் – இனம் என்பதன் போலி), அம்பல் வாய்த்த – gossip has risen (வாய்த்த – எழுந்தன), தெய்ய -அசைநிலை, an expletive, தண் புலர் வைகுறு விடியல் – cold early morning, போகிய எருமை – buffalo that goes, நெய்தல் அம் புது மலர் மாந்தும் – eats the beautiful new waterlilies, கைதை – thāzhai trees, Pandanas odoratissimus, அம் படப்பை – beautiful grove, எம் அழுங்கல் ஊரே – our loud town, our uproarious town (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 101, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! ‘இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்’ என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று கொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
சுவல் மாய் பித்தைச் செங்கண் மழவர்  5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்  10
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்,
புன்கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்  15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே.

Akanānūru 101, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend, or What the heroine’s friend said to her
May you live long, my friend!  Listen!
Has not the ancient adage that if one does
good in this birth, no evil will come, has
failed?

We did not do anything for him to hate,
and pass through many chilly mountains,
where
red-eyed wasteland warriors, with tightly
curled hair like that of ram horns that cover
their napes, chew sand to control coughs,
carry powerful, small kindling and bows,
and seize butter churning rods that reveal
foam, and capture herds of cattle with
calves from protected places, as their
leather slippers hide their steps and creak,
move the herds to their homes in the huge
forest with vast spaces, and like a boat
in the wide, huge sky, the hot sun with
its bright rays burns in summer, and the
swirling winds cause many mature flowers
of the dry-trunked, murungai trees to drop
like rainy season’s hail.

Notes:  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தான்.  பிரிவாற்றாத தலைவி தோழியிடம் கூறியது.  தோழி தலைவியிடம் கூறி வருத்தியதாம்.  The word இம்மை meaning ‘this life/this birth’ is used in Kurunthokai 49, Akanānūru 66, 101, 311, Kalithokai 14, Puranānūru 134, and 236.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, வாழி -அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி – the ancient proverb that if you do good in this birth here there will be no evil in the next one, இன்று பொய்த்தன்று கொல் – has it not failed today, has it not proved that it is not true today (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தகர் மருப்பு ஏய்ப்ப – like the horns of a ram (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), சுற்றுபு – twisted, சுரிந்த – curled, சுவல் – nape, மாய் – hiding, பித்தை – hair, செங்கண் மழவர் – wasteland warriors with red eyes, wasteland warriors with enraged eyes, வாய்ப்பகை கடியும் மண்ணொடு – with sand to eliminate coughing/sneezing, கடுந்திறல் தீப் படு – harsh fierce fire creating, சிறு கோல் – small arrows, வில்லொடு பற்றி – holding along with their bows, நுரை தெரி மத்தம் கொளீஇ – seize the butter-revealing rods (கொளீஇ – சொல்லிசை அளபெடை), seize the butter-churning rods, நிரைப் புறத்து – in the stables with cattle, அடி – steps, புதை – hiding, தொடுதோல் பறைய – with noises made by slippers, ஏகி – go, கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் – bandits who steal cattle with calves from protected places, இனம் தலைபெயர்க்கும் – they move herds from the place, நனந்தலைப் பெருங்காட்டு – in the vast forest, huge forest, அகல் இரு விசும்பிற்கு – in the wide huge/dark sky (விசும்பிற்கு – விசும்பின்கண், வேற்றுமை மயக்கம்), ஓடம் போல – like a boat, பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று – of the sun which heats during the day, உருப்பு அவிர்பு ஊரிய – heat of the bright sun’s spreading rays, சுழன்றுவரு – swirling as it comes, கோடை – summer, புன் கால் முருங்கை – murungai trees with parched trunks, murungai tree with thin trunks, Moringa Oleifera, ஊழ் கழி பன் மலர் – many mature flowers that fall, தண் கார் – cold monsoon season, ஆலியின் தாவன – they fall like hailstones (ஆலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உதிரும் – they drop, பனி படு – trembling cold, பன் மலை இறந்தோர்க்கு – to the man who passed many mountains, முனிதகு – fit to be hated, பண்பு – trait, actions (ஆகுபெயர் செயலுக்கு), யாம் செய்தன்றோ இலமே – we did not do (இலமே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 102, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உளைமான் துப்பின் ஓங்கு தினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசை வளி ஆற்றக் கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி  5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக்,
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங்கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்,
ஆர மார்பின் வரி ஞிமிறு ஆர்ப்பத்  10
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து,
இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் தோழி,  15
இன்று எவன் கொல்லோ? கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி,
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.

Akanānūru 102, Mathurai Ilampālāsiriyan Chēnthankoothanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
The man from the country,
……….where a mountain dweller with the
……….strength of a maned lion, is on a lookout
……….platform in a huge millet field with
……….mature millet, happily drunk with liquor,
……….and in the gently moving breeze, his wife
……….puts her fingers through and dries her
……….perfume-rubbed, thick, long hair, and sings
……….songs in kurinji tune in the lofty mountains,
……….and a brave young elephant, not eating the
……….clusters of millet, and not moving away, puts
……….his green, sleepless eyes to sleep quickly,
came with sandal paste on his chest, wearing
garlands and flower strands buzzing with striped
bees, bore a spear on his right hand, escaped the
security guards, paused and came slowly into our
house through an unbolted door, hugged my chest
and embraced my shoulders, for my sorrow to leave,
spoke mixed words that were sweet and left.

Since he does not shower his graces, my bright
forehead surrounded by dark hair, which gives joy,
has become pale, and this has caused gossip to rise.
How can I survive this, my friend?

Notes:   தலைவன் களவு ஒழுக்கத்திலேயே ஒழுகுகின்றான்.  இவ்வாறு வந்து மீளுகின்றவனை வரைவு கடாதற்பொருட்டு தோழிக்குச் சொல்லுவாள் போலத் தலைவன் கேட்பச் சொல்லியது.  இன்று எவன் கொல்லோ கண்டிகும் (16) –  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நாம் கண்டது என்னையோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் ஏனோ இந்தப் பசலையைக் காண்கின்றோமோ? இந்நிலை நீடிக்கும் எனின் யாம் எவ்வாறு உய்வேம், உவக்கும் பண்பின் (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகிழ்ச்சியை விளைவிக்கும் இயல்பினுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏதிலார் மகிழ்தற்கு காரணமாக.  பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   உளைமான் துப்பின் – with the strength of a lion with a mane, ஓங்கு தினை – tall millet (clusters), பெரும்புனத்து – of the big field, கழுதில் – on the lookout platform, கானவன் – mountain dweller, பிழி மகிழ்ந்து வதிந்தென – he was there happy with alcohol, உரைத்த – rubbed, சந்தின் – with perfume oils/sandal oils, ஊரல் இருங்கதுப்பு – spread dark hair, ஐதுவரல் – delicately, அசை வளி ஆற்ற – as the winds moved and dried, கை பெயரா ஒலியல் வார் மயிர் உளரினள் – put her fingers through her thick long hair, கொடிச்சி – his wife, பெரு வரை மருங்கில் – in the lofty mountains, குறிஞ்சி பாட – as she sang in kurinji tune, குரலும் கொள்ளாது – not eating the clusters (of millet), நிலையினும் பெயராது – and not moving away from the place, படாஅப் பைங்கண் பாடு பெற்று – getting his green eyes that don’t sleep to go to sleep (படாஅ – இசை நிறை அளபெடை, பைங்கண்- பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), ஒய்யென – quickly (விரைவுக்குறிப்பு), மறம் – bravery, புகல் – desire, மழ களிறு உறங்கும் – a young male elephant sleeps, நாடன் – the man from such country, ஆர மார்பின் வரி ஞிமிறு ஆர்ப்ப – striped bees humming on his sandal chest, தாரன் – a man wearing a garland, கண்ணியன் – a man wearing a head strand, எஃகுடை வலத்தன் – holding a spear on his right hand, காவலர் அறிதல் – the guards knowing, ஓம்பி – protecting himself, being cautious, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து – he stopped and then entered slowly through the unbolted (open) door, உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து – for my great sorrow to leave he embraced my chest and hugged my shoulders, இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் – he spoke mixed words that were sweet and then left (அளைஇ – விரவி, கலந்து, சொல்லிசை அளபெடை), தோழி – oh my friend, இன்று – today, எவன் கொல்லோ – why (கொல் – அசைநிலை, an expletive ஓ -அசைநிலை, an expletive), கண்டிகும் – we saw, மற்று – வினைமாற்றின்கண் வந்தது, அவன் நல்காமையின் – since he does not show graces, அம்பல் ஆகி – it has become gossip, ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – with the nature of giving happiness, இருஞ்சூழ் ஓதி – surrounded by dark hair, ஒண்ணுதல் பசப்பே – the pallor on the bright forehead (பசப்பே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 103, காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக்
காமர் சேவல் ஏமம் சேப்ப,
முளி அரில் புலம்பப் போகி முனாஅது  5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் நகர்
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்,
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம் வயின்  10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என,
நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?  15

Akanānūru 103, Kāviripoompattinathu Chenkannanār, Pālai Thinai – What the heroine said to her friend
Will he return my beauty that he took
with him, which used to tolerate my pallor
and be my partner in the sad, dark nights,
now that he has gone back again to earn
wealth, after gathering it and doing what he
intended, the man I love,
passing the harsh wasteland with battling
places with no shade,
where a pretty male partridge with beautiful,
fine spots that appear like sprinkles, small
red tongue and big head, marked by a male
falcon, wanting a safer place, moves away
from the tangled dry bushes to the front of
the gravel-filled, huge public grounds in
a small village with cattle,
……….where those who watch the people
……….who travel on the path live,
and sits alone and sighs in the shade of
the eaves, of a large house with a tall entry,
abandoned by those who lived there?

Notes:  பொருள் ஈட்டத் தலைவன் சென்றான்.  அவன் திரும்பி வரக் காலம் நீட்டித்ததால் தலைவி பெரிதும் வருந்தித் தோழிக்குச் சொல்லியது.  எழால் (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை –  புல்லூறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வல்லூறு (falcon).  கதிர்த்த (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெரிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியுடைய.  காமர் சேவல் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய குறும்பூழ்ச் சேவல்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   நிழல் அறு நனந்தலை – the vast land without shade, எழால் ஏறு குறித்த – marked by a falcon, marked by a crested hawk, கதிர்த்த சென்னி – big head, bright head, நுணங்கு செந்நாவின் – with a small red tongue, விதிர்த்த போலும் – like scattered, அம் நுண் பல் – pretty fine many, பொறிக் காமர் சேவல் – spotted beautiful male bird, marked beautiful male bird- could be a partridge, quail or a jungle fowl – commentators have interpreted it as partridge (Francolinus pondicerianus), ஏமம் சேப்ப – to go and stay in a safe place, முளி அரில் புலம்பப் போகி – moves away from the dried tangled bushes, முனாஅது – in front of, முரம்பு அடைந்திருந்த – வன்னிலம், land filled with gravel, மூரி மன்றத்து – in the huge public grounds, அதர் பார்த்து – looking at the path, அல்கும் – staying, ஆ கெழு சிறுகுடி – small village with cattle, small community with cattle, உறையுநர் – those who lived, போகிய – they abandoned, they left, ஓங்கு நிலை வியன் நகர் – large house with tall entry, இறை நிழல் – shade under the eaves, ஒரு சிறை – on one side, புலம்பு – lonely, அயா உயிர்க்கும் – sighing with sorrow, வெம்முனை – a place with harsh battles, அருஞ்சுரம் நீந்தி – passing the harsh wasteland, தம் வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் – since he has gone again to earn doing his manly job, மன் – அசை, an expletive, என – thus, நள்ளென் யாமத்து – in the darkness of night, உயவுத் துணை ஆக – with sorrow as a partner, நம்மொடு – with me, பசலை நோன்று – tolerating pallor, தம்மொடு தானே சென்ற நலனும் – my beauty which went away with him, நல்கார் கொல்லோ – will he return it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை), நாம் நயந்திசினோரே – the man I loved (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 104, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேந்து வினை முடித்த காலைத், தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா  5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடுந்தேர்,
வாங்கு சினை பொலிய ஏறிப் புதல
பூங்கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண்மறி,
மாழ்கியன்ன தாழ் பெருஞ்செவிய,  10
புன்தலை சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை, வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்  15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே.

Akanānūru 104, Mathurai Maruthan Ilanākanār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero
When you finished the king’s work,
making young warriors bearing victorious
spears happy, in the cool, fragrant forest
with swarms of bees buzzing on all the
directions, you climbed on your tall chariot
with decorations, and when your charioteer
pulled the bridle and used a sharp goad,
your four horses rode fast making it appear
that the earth surrounded by oceans does
not have enough space.

leavi