பத்துப்பாட்டு – நெடுநல்வாடை

நெடுநல்வாடை  –  Nedunalvādai

Translation by Vaidehi

 ©  All Rights Reserved

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 188

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

மழை பொழிதல்

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென; (1 – 2)

Rains Poured

Unfailing clouds climbed to the right,
circling and chilling the earth and came
down as fresh rains.

Notes:  வலன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப் பக்கம்.  மழையும் காற்றும் வலஞ் சூழுமாயின் அவை மிகும் என்ப.  மதுரைக்காஞ்சி – வல மாதிரத்தான் வளி கொட்க.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

Meanings:   வையகம் பனிப்ப – causing the earth to get cold, வலன் ஏர்பு – climbed on the right, climbed with strength, வளைஇ – circled (சொல்லிசை அளபெடை), girdled, பொய்யா வானம் – unfailing clouds (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), புதுப்பெயல் பொழிந்தென – since new rains fell

இடையர் நிலை

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்,
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்   5
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப், பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க;  (3 – 8)

Situation of Cattle Herders

Agonized cattle herders wielding rods
with curved ends, hated the floods and
moved with their cattle to new lands
in confusion and sorrow, and water
droplets from their garlands with
long-petaled glory lily blossoms,
dripped on their bodies.

Together, they warmed their hands
in the fires they lit, and hit their cheeks
with them as they trembled in the freezing
cold, chattering their teeth.

Notes:  கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு  74, அகநானூறு 195  – வளைந்த கோல்,  அகநானூறு 17 – கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை – முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல்.  கொடுங்கோல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம்.  கோவலர் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல்.  கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (8) – நச்சினார்க்கினியர் உரை –  கையை நெருப்பிலே காய்த்து அதிற்கொண்ட வெம்மையை கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியர் என்றார், கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையவராய் பற்பறை கொட்டி நடுங்கி நிற்ப.  கவுள் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல், ஆகுபெயர்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   ஆர்கலி – floods (மிக்க ஓசையுடையது, வெள்ளம், வினைத்தொகை அன்மொழி), முனைஇய – hating (செய்யுளிசை அளபெடை), கொடுங்கோல் கோவலர் – cattle herders with rods that are curved on one end, cattle herders with harsh sticks, ஏறுடை – with bulls, இன நிரை – cattle herds, வேறு புலம் பரப்பி – moved away to other lands, புலம் பெயர் – move away from the land, புலம்பொடு – in loneliness, கலங்கி – distressed, confused, கோடல் – malabar glory lilies, நீடு இதழ் – long petals, கண்ணி – garland, நீரலைக் கலாவ – upset as water droplets dripped (on them), மெய்க்கொள் – on their bodies, பெரும் பனி நலிய – sad because of the great cold, பலருடன் – with many others, கைக்கொள் கொள்ளியர் – they warmed their hands in lit fires, கவுள் புடையூஉ நடுங்க – they applied the heat hitting by on their cheeks and trembled, their teeth clattered and they trembled (புடையூஉ – இசைநிறை அளபெடை)

கூதிர்க்காலத்தின் தன்மை

மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழக், கறவை   10
கன்று கோள் ஒழியக் கடிய வீசிக்,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்; (9 – 12)

Cold Season

Animals forgot grazing, female monkeys
struggled greatly, birds fell off their tree
perches and cows kicked and chased away
their suckling young calves in anger.
Such was the night’s cold that could freeze
a mountain.

Notes:  மந்தி கூர (9) – நச்சினார்க்கினியர் உரை – குரங்கு குளிர்ச்சி மிக.  குரங்கு குன்னாக்க (குனிய) என்பாரும் உளர்.  கலித்தொகை 31 – மெய் கூர்ந்த பனியொடு.  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:   மா – animals, மேயல் மறப்ப – forgot to graze, மந்தி கூர – female monkeys face the extreme cold, பறவை படிவன வீழ – birds fell off their perches, கறவை – cows that had young calves, கன்று கோள் ஒழிய – pushed away calves that were drinking milk, கடிய – in anger, harshly, வீசி – kicked, குன்று குளிர்ப்பன்ன – like chilling mountains, கூதிர்ப் பானாள் – cold season’s midnight

மழைக்காலச் செழிப்பு

புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்,
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்,
பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி,   15
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்,
கயல் அறல் எதிரக், கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   20
அங்கண் அகல்வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை,
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு,   25
தெண்ணீர்ப் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க;  (13 – 28)

Flourishing Rainy Season

Bushes were covered with delicate
bindweed vines bearing thick white
flowers and sponge gourd vines with
golden yellow flowers.

Opportunistic flocks of green-legged
storks with delicate wings and painted
storks with red stripes, waited on the
wide fine black sand streaked with wet
white sand, and seized carp fish that
swam against the rapids, as the water
flow slowed down, wherever they could.

Billowing white clouds rose to the huge,
wide sky that was clear after the rains,
and learned to rain showering tiny drops
of water.

Due to the heavy rains, in the wide fields,
paddy grasses flourished with abundant
leaves, their heavy spears filled with
mature grains, bent.

Betel palms with thick trunks and
sapphire-colored necks from which thick
fronds branch, were loaded with many
clusters of mature nuts, swollen and bulged
on their sides, with sweet, thick water inside.

In the huge groves on the dense summits,
various flowers blossomed, and water
droplets with color hung from tree branches.

Notes:  துவலை கற்ப (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப் பெய்து விட்டுப் பின்னர் பின்னர் நீர் வறண்ட வெண்மேகமாகி இன்னும் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவோம் எனக் கருதி அங்ஙனம் பெய்ததற்குப் பயிலுமாறுப் போலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார்.  ஐங்குறுநூறு 461 – வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே.  மதுரைக்காஞ்சி 400 – தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய்.  நாரை, according to the University of Madras Lexicon is either the Tantalus leucocephalus (old name for painted stork – not used any longer) or the Grus cineren (Common crane).  The painted stork (Mycteria leucocephala – current name) has red markings on its wings.   குரூஉ (28) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (உரியியல் 5, தொல்காப்பியம்).  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் (உரியியல் 27, தொல்காப்பியம்).  அறல் (18) – சோமசுந்தரனார் உரை – அற்று அற்று ஓடும் நீர்

Meanings:   புன் கொடி – thin vines, delicate vines, முசுண்டை – Leather-berried bindweed, Rivea ornata, பொறிப்புற – thick sides (பொறிப்புற என்றும் சில உரைகளில் உள்ளது), வான் பூ – white flowers, பொன் போல் பீரமொடு – with gold colored ridge gourd/sponge gourd flowers (பீரம் – அம் சாரியை), புதல் புதல் – on all the bushes, மலர – they blossom, பைங்கால் கொக்கின் – green/yellow legged storks’, மென் பறை – delicate wings, தொழுதி – flocks, இருங்களி – black mud, பரந்த – spread, ஈர வெண்மணல் – wet white sand, செவ்வரி நாரையொடு – with painted storks with red stripes, Mycteria leucocephala, with cranes with red stripes, எவ்வாயும் கவர – to seize from everywhere (வாய் – இடம்), கயல் அறல் எதிர – carp fish swimming opposite the stream flow, Cyprinus fimbriatus, கடும் புனல் – rapidly flowing waters, சாஅய் – slowed down (இசை நிறை அளபெடை), பெயல் உலந்து – rain ended, rain ruined, எழுந்த – rose, பொங்கல் வெண்மழை – abundant white clouds, அகல் இரு விசும்பில் – in the wide huge/dark skies, துவலை – water spray, rain droplets, கற்ப – learned, அங்கண் – there, அகல்வயல் – wide fields, large fields, ஆர் பெயல் – heavy rains, கலித்து – flourished, வண் தோட்டு – with abundant leaves, நெல்லின் – of paddy grass, வருகதிர் வணங்க – mature grain spikes bent down due to the weight, முழு முதற் கமுகின் – of betel nut trees with thick trunks, மணி உறழ் எருத்தின் – on the sapphire-like necks (உறழ் – உவம உருபு), கொழு மடல் – thick fronds, thick leaves, அவிழ்ந்த – opened, குழூஉக் கொள் – thick, rounded (குழூஉ – இசைநிறை அளபெடை), பெருங்குலை – huge bunches, நுண் நீர் – abundant water, tender water, தெவிள வீங்கி – big and swollen, புடை திரண்டு – rounded on the sides, bulging on the sides, தெண் நீர் – clear water, பசுங்காய் – green betel nuts, சேறு கொள முற்ற – have become sweet and mature, நளி கொள்- dense, cold, சிமைய – in the mountain summits, விரவு மலர் – various kinds of flowers, வியன் கா- wide grove, huge grove, குளிர் கொள் சினைய – on the cool tree branches, குரூஉத் துளி – colored water droplets (குரூஉ – இசைநிறை அளபெடை), தூங்க – were hanging

தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,   30
படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணிதோள்,
முடலை யாக்கை முழு வலி மாக்கள்,
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து,
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர;  (29 – 35)

People on the Streets

In this rich, ancient town with tall
mansions, where the wide and long
streets appeared like rivers,
tight-bodied valiant men with beautiful,
strong, broad shoulders, wearing leaf
and flower garlands,
drank bee-swarming alcohol in bliss.

They were oblivious of the rains that
fell on them as day gave way to night,
and milled around the streets much to
their hearts’ desire, wearing long shirts
that hung on both sides.

Notes:  இரு கோட்டு அறுவையர் (35) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னும் பின்னும் தொங்கலாக நாலவிட்ட துகிலினை உடையராய்.  இரண்டு விளிம்பிலும் கரையமைந்த ஆடை எனினுமாம்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

Meanings:   மாடம் ஓங்கிய – with tall buildings, மல்லல் – prosperous, மூதூர் – ancient town, ஆறு கிடந்தன்ன – like rivers, அகல் நெடுந்தெருவில் – in the  wide and long streets, படலை – leaves and flowers, கண்ணி – garland, பரு ஏர் எறுழ் – fat beautiful strong, திணி தோள் – strong shoulders, firm shoulders, முடலை யாக்கை – tight bodies, முழு வலி மாக்கள் – strong-bodied men, வண்டு மூசு தேறல் – bees swarming alcohol, மாந்தி – they drank, மகிழ் சிறந்து – with great happiness, துவலைத் தண் துளி – cold water sprays (from the rain), பேணார் – they did not care, பகல் இறந்து – after daytime passed, இரு கோட்டு அறுவையர் – those wearing long shirts hanging on both sides, wearing garments with borders on both edges, வேண்டு – desired, வயின் – side, இடம் திரிதர – roamed around the place

மாலையில் தெய்வத்தை வழிபடும் பெண்கள்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து   40
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர; (36 – 44)

Women who Worship in the Evening Hours

Tender, naive women with bamboo-like
arms, delicate looks, teeth resembling
pearls, white conch-shell bangles on their
tight forearms, and moist, pretty eyes that
matched their beautiful earrings, carried
long, green-stemmed jasmine buds in trays.
The flower buds opened their pretty petals
and blossomed, their spreading fragrance
announcing the arrival of evening time.

They lit the oil-dipped wicks of iron lamps,
pressed their palms together and worshipped,
tossing offerings of rice paddy and flowers, and
celebrated evenings in the prosperous market.

Notes:   நெல்லும் மலரும்:  நெடுநல்வாடை 43 – நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, புறநானூறு 280 – நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும்.  முத்தைப் போன்ற பற்கள்:  அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  விளக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விளக்கு என்றது தகளியை (தகளி, தகழி – விளக்கின் வட்டில்).  பூங்குழைக்கு அமர்ந்த (38) – பொவே. சோமசுந்தரனார் உரை, ஜெகநாதாச்சாரியார் உரை – பூங்குழையின் பொலிவுடைய அழகிற்குப் பொருந்திய.

Meanings:   வெள்ளி – white, வள்ளி – bangles made from conch shells, வீங்கு – tight, இறை – forearm, wrist, பணைத்தோள் – bamboo-like arms, மெத்தென் சாயல் – very delicate (மெத்தென் சாயல் – ஒருபொருட் பன்மொழி, மெத்து – மென்மை, மிகுதி), முத்து உறழ் முறுவல் – pearl-like teeth, smiles with pearl-like teeth (உறழ் – உவம உருபு), பூங்குழைக்கு அமர்ந்த – fitting the beauty of the splendid earrings, ஏந்து – lifted, எழில் – pretty, மழைக்கண் – moist eyes, cool eyes, மடவரல் – naive, innocent, மகளிர் – women, பிடகை – flower tray, பெய்த – placed, செவ்வி அரும்பின் – with mature buds, with perfect buds, பைங்கால் பித்திகத்து – of green- stemmed jasmine flowers, அவ்விதழ் – pretty petals, அவிழ்பதம் – opening stage, கமழ – fragrance spread, பொழுது அறிந்து – knowing the right time, இரும்பு செய் விளக்கின் – in the lamps made from iron, ஈந்திரி – wet wicks with oil, கொளீஇ – they lit (கொளீஇ – சொல்லிசை அளபெடை), நெல்லும் மலரும் தூஉய் – they threw paddy and rice offerings (தூஉய் – இசைநிறை அளபெடை), கைதொழுது – they worshipped with their palms pressed together, மல்லல் – prosperous, ஆவணம் – market place, street with shops, மாலை – evening time, அயர – celebrated

கூதிர்க்கால நிகழ்வுகள்

மனை வாழ் புறாவின் நிலை

மனை உறை புறவின் செங்கால் சேவல்,  45
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்,
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந்தொழுவர்,
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக ,  50
வடவர் தந்த வான் கேழ் வட்டம்,
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக், (45 – 52)

Events in the Cold Season

House-Residing Pigeons

The house-residing, red-legged male pigeon
and his pleasurable mate did not go to the
town’s common grounds in search of food.

Unable to distinguish night and day,
the confused, helpless pair rested on a plank
under the eaves, lifting one tired leg at a time.

Servants performing small tasks in protected
large houses, ground many aromatic substances
together on millet-colored, fragrant stones.

Sandal wood from the south lay around
abandoned, not ground on the white, circular
stones that came from the northerners.

Notes:  ஒப்புமை – அகநானூறு 340 – வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து.  மதலைப் பள்ளி மாறுவன இருப்ப (47) – நச்சினார்க்கினியர் உரை – கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்த கால் ஆறும்படி மாறி மாறி இருக்க.  (கொடுங்கை = வீட்டின் வெளிப்புறத்தில் கூரைக்கு அடியில் உள்ள நீண்ட உறுப்புகள், projections from the sides and front of houses that are under the eaves).  நறுங்கல் பலகூட்டு மறுக (50) – ச. வே. சுப்பிரமணியன் உரை – கருங்காணம் போன்ற மணமுடைய கல்லில்  கத்தூரி முதலிய கூட்டை அரைத்தனர்.  இக்கூட்டு குளிரைப் போக்கும். மதலைப் பள்ளி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொடுங்கையைத் தங்குதலையுடைய பலகை, இருபெயரொட்டு.  வியல் – வியல் என் கிளவி அகலப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 68).

Meanings:    மனை உறை – house-residing, புறவின் – pigeon’s, செங்கால் சேவல் – red-legged male, இன்புறு பெடையொடு – with its pleasurable female, மன்று – common place, தேர்ந்து உண்ணாது – instead of choosing their food and eating, இரவும் பகலும் மயங்கி – it was confused about day and night, கையற்று – feeling helpless, மதலைப் பள்ளி – supporting wooden board (under the eaves of the house), மாறுவன இருப்ப – switched their legs standing there, கடியுடை – with protection, வியல் நகர் – wide houses, huge houses, சிறு குறுந்தொழுவர்- young servants who do small tasks for the home owners, கொள் உறழ் – millet like (உறழ் – உவம உருபு), நறுங்கல் – fragrant stones, பல் கூட்டு மறுக – they crushed a few aromatic things together, வடவர் தந்த – northerners gave, வான் கேழ் வட்டம் – white round sandal stone, தென் புல மருங்கில் – in the south, சாந்தொடு துறப்ப – sandalwood lay forgotten, sandalwood lay unused

மகளிர் நிலை

கூந்தல் மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து  55
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக்,  (53-56)

About the Women

Women do not decorate their hair with
fresh flower strands.

To wear a few flowers on their thick, dark
hair, they started fires with cool, fragrant
thakaram twigs and burned dense, black
akil wood along with candied sugar.

Meanings:   கூந்தல் – hair, மகளிர் – women, கோதை – flower strands, புனையார் – they did not wear, பல் இருங் கூந்தல் – thick black hair, சில் மலர் – few flowers, பெய்ம்மார் – to wear, to adorn, தண் – cool, நறும் – fragrant, தகர முளரி – fragrant pieces of cool thakaram wood (மயிர்ச் சந்தன மர விறகு), நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana, நெருப்பு அமைத்து – lit a fire, இருங்காழ் அகிலொடு – with black dense akil wood, வெள் அயிர் புகைப்ப – burnt candied sugar, கண்ட சருக்கரை

விசிறியும் தாழிட்ட சாளரமும்

கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த,
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்,   60
வேனில் பள்ளித் தென் வளி தரூஉம்,
நேர்வாய்க் கட்டளை திரியாது திண் நிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக், (57 – 63)

Folding Fan and Closed Windows

A round, red folding fan created by a
hand-skilled artist hung folded on
a curved peg, and a spider’s web woven
with white strands had surrounded it.

In the sky-high, tall mansion’s upper floor,
perfectly fitting, strong fitting doors were
closed and latched, blocking breezes that
would flow straight into the summer
season’s bedroom windows.

Notes:  நற்றிணை 132 – தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ.

Meanings:    கை வல் – hand skilled, கம்மியன் – a craftsman, கவின் பெற – made beautifully, புனைந்த – created, செங்கேழ் வட்டம் – red colored round fan, ஆலவட்டம், சுருக்கி – folded, கொடும் தறி – curved wooden peg, சிலம்பி – spider, வான் நூல் – white threads, வலந்தன – surrounded, தூங்க – hanging, வான் உற – touching the sky, நிவந்த – tall, மேனிலை மருங்கின் – in the upper level, வேனில் – summer’s, பள்ளி – bedroom, தென் வளி – southern winds, தரூஉம் – brings (இசைநிறை அளபெடை), நேர்வாய்க் கட்டளை – straight windows, திரியாது – not flowing, திண் நிலைப் போர்வாய்க் கதவம் – strong doors that fit tightly, fitting double doors with a strong header, தாழொடு துறப்ப – were latched and closed

தண்ணீரை விரும்பாது நெருப்பை விரும்புதல்

கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்,  65
பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர, (64 – 66)

Hated Water and Desired Fire

Raindrops fell with loud noises.
Not wanting to drink cold water kept in
narrow-mouthed pots, everybody enjoyed
the warmth of the hot, red flames from
split-mouthed coal bowls.

Meanings:    கல்லென் – with the sound ‘kal’, loud sounds, துவலை தூவலின் – since there were raindrops, யாவரும் – everybody, தொகுவாய் – narrow mouth, கன்னல் – waterpots, kudam, தண்ணீர் – cold water, உண்ணார் – they did not drink, பகுவாய் – split-mouth, wide-mouth, தடவில் – in coal bowls, in flame bowls, செந்நெருப்பு – red flames, ஆர – they enjoyed

ஆடல் மகளிரின் செயல்

ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇக்,
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப, (67 – 70)

Dancers Tuning their Lutes

Female dancers ready to sing, tuned
their sweet lute strings in a fitting
manner, since their instruments had
lost their tune in the cold weather.

They warmed the strings, rubbing them
on their warm, big breasts and tuned
the black-stemmed, small lutes to precision.

Meanings:   ஆடல் மகளிர் – female dancers, பாடல் கொள – getting ready to sing, புணர்மார் – to tune, தண்மையின் திரிந்த – out of tune because of the cold weather, இன் குரல் – sweet sounds, தீந்தொடை – sweet strings (ஆகுபெயர் நரம்பிற்கு), கொம்மை வருமுலை – rounded/large rising breasts, வெம்மையில் – in the warmth, தடைஇ – rubbed (சொல்லிசை அளபெடை), கருங்கோட்டு சீறியாழ் – black-stemmed small lutes, பண்ணு முறை நிறுப்ப – tuned them according to proper methods, tuned them according to the tunes

பிரிந்தோரை வாட்டும் கூதிர்

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து,
கூதிர் நின்றன்றால் போதே. (71-72)

Painful Cold Winds

Those separated from their partners
struggled with loneliness and pain;
heavy rains poured incessantly and
and the cold season stayed.

Meanings:    காதலர் பிரிந்தோர் – those separated from their partners, புலம்ப – they were sad, பெயல் கனைந்து – rain increased, கூதிர் நின்றன்றால் – the cold season stayed, the cold season did not end (ஆல் – அசைநிலை, an expletive), போதே – at that time

மன்னனின் அரண்மனையை உருவாக்கிய முறை

……………..மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்,
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து, (72- 78)

Palace Construction

At mid-day when the bright,
ray-spreading sun climbed on toward
the west side and was high in the vast
sky, learned men, who had read books
on construction, noted the cardinal
directions, decided where to construct,
planted two sticks on the ground at
noon time when they did not see the
sun’s shadow fall on land, tied threads
with precision, prayed to the gods, and
built the palace with many rooms,
suitable for the well renowned king.

Notes:  வியல் – வியல் என் கிளவி அகலப் பொருட்டே – (தொல்காப்பியம், உரியியல் 68).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சித்திரைத் திங்கள் பத்தாம் நாள் தொடங்கி, இருபது நாள் முடிய நிகழும் நாட்களில் யாதாமொரு நாள் பகல் பதினைந்து நாழியளவில் ஞாயிற்று மண்டிலம் நிலத்தின் நடுவண் இயக்கும்.

Meanings:    மாதிரம் – directions, விரி கதிர் பரப்பிய – rays spread, வியல்வாய் – wide space, மண்டிலம் – sun, இரு கோல் – two sticks, குறி நிலை வழுக்காது – not faulting and pointing to any direction, குடக்கு ஏர்பு – climbed to the west, ஒரு திறம் சாரா – not slanting on any one direction, அரை நாள் அமயத்து – at midday time, நூல் அறி புலவர் – learned men who have read books, நுண்ணிதின் –  with precision, கயிறு இட்டு – placed threads, தேஎம் கொண்டு – noted the directions to construct, noted the places to construct (தேஎம் – செய்யுளிசை அளபெடை), தெய்வம் நோக்கி – prayed to gods, பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப – suitable for a very famous king, மனை வகுத்து – created a residence with different rooms

அரண்மனை வாயில்

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇத்,   80
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்துத்
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்,
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து,   85
ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை,
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புகக்,
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில். (79 – 88)

Palace Entry Gates and Double Doors

High walls were erected around
the entire palace.  At the entry,
a perfect double door was created
by a carpenter with skilled hands,
with a cross beam, made from fine
wood, which has the same name as
the star uthiram.

The door was fixed with iron nails,
polished with red wax and new handles
in the shape of newly opened waterlily
buds were attached to them.
There were no spaces between the
perfectly fitting double doors.  On the
tall header above the door, white
mustard paste and ghee were smeared.

The tall palace entry was fit for elephants
with victory flags.  Going through it
was like entering a mountain tunnel.

Notes:  நாளொடு (82) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு உத்தரம் என்னும் விண்மீன்.  அமை விழு மரத்து (82) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ஆச்சா, கருங்காலி முதலிய மரங்கள்.  கோள் (82) – கொள்ளுதல் பொருந்திய.

Meanings:    ஒருங்கு உடன் வளைஇ – fully circling all parts of the palace (வளைஇ – சொல்லிசை அளபெடை), ஓங்கு நிலை வரைப்பின் – within tall walls, பரு இரும்பு பிணித்து – attached with thick nails (இரும்பு – ஆகுபெயர் ஆணிக்கு), செவ்வரக்கு உரீஇ – rubbed red wax (உரீஇ – சொல்லிசை அளபெடை), துணை மாண் கதவம் பொருத்தி – attached perfect double doors, இணை மாண்டு – attached perfectly, நாளொடு பெயரிய – a fine wood with the name of the star uthiram), கோள் – fitting, அமை விழுமரத்து – on the excellent cross bar (உத்திரக்கற்கவி என்ற குறுக்குக்கட்டை), போது அவிழ் – buds opening, குவளை – blue waterlilies, புதுப்பிடி கால் அமைத்து – fixed new handles, தாழொடு குயின்ற – latches were attached, போர் அமை புணர்ப்பில் – with the two doors attached well, கை வல் கம்மியன் – hand-skilled worker, a carpenter, முடுக்கலின் – since it was fitted tightly, புரை தீர்ந்து – without space, ஐயவி அப்பிய – rubbed with white mustard – as a form of worship, நெய்யணி – rubbed with ghee, rubbed with oil, நெடுநிலை – tall entry way, வென்று எழு கொடியொடு – with raised victory flags, வேழம் சென்று புக – that elephants could enter, குன்று குயின்றன்ன – like a mountain that was dug into, ஓங்கு நிலை வாயில் – tall entrance (ஓங்கு நிலை – கோயில், கோவின் இல்லம், அன்மொழித்தொகை)

முற்றம், முன்வாயில்

திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து,   90
நெடுமயிர் எகினத் தூ நிற ஏற்றை,
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடைப்,  (89 – 92)

In the Palace Front Yard

Perfect new sand was brought
and spread in the front yard of the
wealthy palace, fitting the faultless
splendor of Thirumakal.

Strong, long-haired, pure-colored
male yaks pranced around with
short-legged geese.

Notes:  எகினத் தூ நிற ஏற்றை (91) – நச்சினார்க்கினியர் உரை – நெடிய மயிரையுடைய கவரிமாவில் தூய நிறத்தையுடையாய் ஆண்.  எகினம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கவரிமா, அன்னத்திற்கும் எகினம் என்னும் பொருண்மையான் நெடுமயிர் எகினம் என்றார்.

Meanings:  திரு நிலைபெற்ற – where Thirumakal flourishes, where wealth flourishes, தீது தீர் சிறப்பின் – splendid without fault, தருமணல் – brought sand, ஞெமிரிய – spread, திரு நகர் – wealthy mansion, முற்றத்து – in the front yard, நெடு மயிர் – long haired, எகின – கவரிமாவின், of the yak, தூ – pure, நிற – colored, ஏற்றை – male, குறுங்கால் அன்னமொடு – with short-legged geese, with short-legged ducks, உகளும் – they play, முன்கடை – front yard

அரண்மனையில் எழும் ஓசைகள்

பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி,
புல் உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு,
நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்,   95
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,
ஒலி நெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில். (93- 100)

Sounds from the Palace

A horse with thick mane, hating to
stand alone in the stable, neighed
loudly in sad tones, as it chewed grass.

In the long, bright palace yard which
benefited from the moon, water from
a faucet shaped like the gaping mouth
of a shark, poured down with sounds
of a full, turbid waterfall.

Nearby, a proud, delicate peacock with
swaying, long plumes, called sweetly in
in tones, sounding like toots from a
vayir horn.

There were sweet sounds from the palace,
sounds like those on the dense mountains.

Notes: ஒப்புமை – அகநானூறு 254-12 – பணை நிலை முனஇய வினை நவில் புரவி.  மதுரைக்காஞ்சி 660 – பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட.   நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 24).  புலம்பு – புலம்பே தனிமை – (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   பணை நிலை – being in the stable, முனைஇய – hating (செய்யுளிசை அளபெடை), பல் உளை  – thick tuft, புரவி – horse, புல் உணாத் தெவிட்டும் – chewed its food which is grass (உணா – உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), புலம்புவிடு குரலொடு – crying alone with sounds, நிலவுப் பயன் கொள்ளும் – getting the benefits of the moon, நெடுவெண் முற்றத்து – in the long moon lit yard, கிம்புரி – shark mouth, பகுவாய் – split-mouth, அம்பணம் – water faucet, நிறைய – full, கலிழ்ந்து – turbid, cloudy (கலுழ்ந்து என்பதன் திரிபு), வீழ் அருவி –  falling waterfall, பாடு விறந்து – intense sounds, loud sounds, அயல – nearby, ஒலி நெடும்  பீலி – luxuriant and long feathers, ஒல்க – moving, மெல்லியல் – delicate nature, கலி மயில் அகவும் – a proud peacock calls, வயிர் மருள் – like that of a vayir horn (மருள் – உவம உருபு), இன் இசை – sweet sounds, நளி மலை சிலம்பின் – like the dense mountains, like the huge mountains (சிலம்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிலம்பும் கோயில் – noisy palace

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினை மாண் பாவை,
கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி,
அறு அறு காலைதொறும் அமைவரப் பண்ணிப்,
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்கப்,   105
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின். (101 – 107)

The Queen’s Chambers

Skillfully crafted by Yavanars,
fabulous female figurine lamps, their
hands holding amazing oil wells, were
were lit with upward- tilting thick wicks
topped by golden flames.

Oil was poured into the wells whenever
the levels went down, and the wicks were
adjusted.

Pitch darkness vanished from the various
rooms of the queen’s chambers of the
well-guarded palace, where no other male
could enter except the proud, splendid
and eminent king.

Notes – நெய் என்ற சொல் பசுவின் நெய்க்கும், எண்ணெய்க்கும் உபயோகிக்கப்பட்டது.  நற்றிணை 175-4 –  மீன் நெய், நற்றிணை 215-5  – மீன் நிணம் தொகுத்த ஊன் நெய்.  முல்லைப்பாட்டு 48-49 – நெய் உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட.  (102) – ஐ வியப்பாகும் (தொல்காப்பியம், உரியியல் 89).  குரூஉ (103) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:   யவனர் இயற்றிய வினை மாண் பாவை – fine female statue created by Ionian Greeks (even though the word stems from Ionians, some scholars have indicated that the word could have been used for others like the Romans, Turks, Egyptians and others), கை ஏந்து – holding in its hands, ஐ – amazing, beautiful, அகல் – oil well, நிறைய நெய் சொரிந்து – poured a lot of oil, பரூஉத்திரி – thick wicks (பரூஉ – இசைநிறை அளபெடை), கொளீஇய – lit (செய்யுளிசை அளபெடை), குரூஉத்தலை – colored top part (குரூஉ – இசைநிறை அளபெடை), நிமிர் – lifted, எரி – burning, அறு அறு காலைதொறும் – whenever the oil level goes down, அமைவரப் பண்ணி – fixed it, பல் வேறு பள்ளிதொறும் – in all the many places (of the palace), பாய் இருள் நீங்க – for darkness that has spread to vanish, பீடு கெழு சிறப்பின் – with pride filled splendor, பெருந்தகை அல்லது – other than the great king, ஆடவர் குறுகா – no other men could approach, அருங்கடி – strict protection (since it is the private quarters of the queen), வரைப்பின் – within the limits

கருவறை

வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,   110
மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்ச்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல். (108 – 114)

Inner Chamber

The queen’s quarters appeared
as huge as a mountain, its swaying
flags like rainbows on mountains,
plastered interior like silver,
thick pillars dark like sapphire,
tall walls like crafted with copper,
with paintings of many beautiful
flowers on vines with no comparison.

The queen’s famed, private, inner
sanctuary in this fine house was
sweet to behold.

Notes:  கருவொடு பெயரிய நல் இல் (114) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருவொடு பெயரிய நல் இல் என்றது கருப்பக்கிருகம் என்றவாறு.  ஒப்புமை – புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

Meanings:   வரை கண்டன்ன தோன்றல – appearing like a mountain, வரை சேர்பு  வில் கிடந்தன்ன – like rainbows on the mountains, கொடிய – with flags, பல் வயின் – in many places, வெள்ளியன்ன – like silver, சுதை – plaster, உரீஇ – applied (உரீஇ – சொல்லிசை அளபெடை), மணி கண்டு அன்ன – like seeing sapphire, மாத்திரள் திண் காழ் – dark thick pillars, huge rounded columns, செம்பு இயன்றன்ன – like made with copper, செய்வுறு – created, நெடும் சுவர் – tall walls, உருவப் பல் பூ – many beautiful flowers, ஒரு – ஒப்பில்லாத,, without a comparison, கொடி வளைஇ – vine twining around (வளைஇ – சொல்லிசை அளபெடை), கருவொடு பெயரிய – famed inner chamber, boudoir, where the fetus is, protected, கருவறை, காண்பு இன் – sweet to behold, நல் இல் – fine house

தலைவி படுத்திருக்கும் பாண்டில் எனும் வட்டக் கட்டில்

தச நான்கு எய்திய, பணை மருள் நோன் தாள், 115
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்,
பொருது ஒழி நாகம், ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்,
கூர் உளிக் குயின்ற ஈரிலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப்,   120
புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு,
உள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்.  (115 – 123)

The Queen’s Bed

The queen’s famous round bed was
decorated with two ivory leaves
perfectly sculpted by a skilled craftsman
with a sharp-tipped chisel, from tusks
removed from a battle-famed elephant,
a forty-year old animal that had died in
battle, that had drum-like, strong legs,
forehead with lines and great beauty.

The legs on the huge bed had carvings
in the shape of garlic.
Pot-shaped, sculpted pieces appearing
like swollen breasts of pregnant women,
were set between the bed and the legs.

Meanings:   தச நான்கு – four ten years, forty years, எய்திய – attained, பணை மருள் – like large panai drums (மருள் – உவம உருபு), நோன் தாள் – strong legs, இகல் மீக்கூறும் – praised in battle, ஏந்து எழில் – superior beauty, வரி நுதல் – lines on the forehead, பொருது – fought in battle, ஒழி – died, நாகம் – elephant, ஒழி எயிறு – fallen tusks, அருகு எறிந்து – carved them on the sides, சீரும் செம்மையும் ஒப்ப – beautifully and perfectly made, வல்லோன் – a skilled man, தச்சன் – a carpenter, கூர் உளிக் குயின்ற – carved a lot with a sharp chisel, ஈர் இலை – two leaves, big leaves, இடை இடுபு – placed between (இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), தூங்கு இயல் – slow moving (due to pregnancy), மகளிர் – women, வீங்கு முலை கடுப்ப – like their swollen breasts (கடுப்ப – உவம உருபு), புடை – sides, திரண்டு இருந்த – were rounded, bulged, குடத்த – with pots, இடை திரண்டு – big in the space between the bed and the legs, உள்ளி நோன் முதல் – like the strong base of garlic – word used for both garlic and onion, according to the University of Madras lexicon, பொருத்தி – fit it perfectly, அடி அமைத்து – fixed the base, fixed the legs, பேரளவு – large, எய்திய – created, பெரும் பெயர் – very famous, பாண்டில் – round bed

கட்டிலில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து,   125
புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து,
ஊட்டுறு பல் மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, 130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்,
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை. (124 – 135)

Decorations on the Bed

Fine pearls strung on delicate threads
with clasps were hung on the bed frame
in lattice patterns, and the metal canopy
had elaborate flower patterns, etched
with the bright colors of tiger stripes.

There were metal panels etched with
lion hunt scenes, placed above hair
dyed perfectly with many colors.
A delicate bed spread with patterns
of jasmine blossoms mixed with other
flowers of the huge forests, was spread
on the bed.

The mattress was stuffed with pure
white feathers of geese that mated with
love, and it was of two sections.  Pillows
were placed on it.

Washed and starched, clean, folded sheets
with flower petals, were spread on the bed.

Notes:  வயமான் வேட்டம் பொறித்து (128-129) – நச்சினார்க்கினியர் உரை – சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களை பொறித்த தகடுகளை வைத்து.

Meanings:   மடை – clasp, joints, மாண் – esteemed, fine, நுண் இழை – fine thread, பொலிய – to shine, to be beautiful, தொடை – strung, மாண்டு – fine, முத்துடை – with pearls, சாலேகம் நாற்றி – hung in lattice patterns, குத்துறுத்து – etched, புலிப்பொறி கொண்ட – with colors of a tiger’s stripes, with the spots of a leopard, பூங்கேழ்த் தட்டத்து – in pretty colored plates, தகடு – metal plate, கண் புதைய – hiding the place, கொளீஇ – stringed (கொளீஇ – சொல்லிசை அளபெடை), துகள் தீர்ந்து – without fault, ஊட்டுறு பன் மயிர் விரைஇ – mixed with different colors (dyed colors) of hair (விரைஇ – சொல்லிசை அளபெடை), வயமான் வேட்டம் பொறித்து – etching with a lion hunting scene, carving with a lion hunting scene, வியன் கண் – wide space, கானத்து – in the forest, முல்லைப் பல் போது உறழ – jasmine mixed with many other flowers, பூ நிரைத்து – rows of flowers were placed, lots of flowers were placed, மெல்லிதின் விரிந்த – delicately spread, சேக்கை – bedspread, மேம்பட – above, splendid, துணை புணர் – united with its partner, அன்னத் தூ நிறத் தூவி – pure white feathers of geese, இணை அணை – mattress with two parts, மேம்பட – above, splendid, பாய் – spread, அணையிட்டு – placed the pillows, காடி கொண்ட – washed with starch, கழுவுறு கலிங்கத்து – in the washed fabric, தோடு அமை – with flower petals, தூ மடி – pure and folded, cleaned and folded, விரித்த – spread, சேக்கை – bed

படுக்கையில் இருந்த தலைவியின் நிலை

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத், துணை துறந்து
நன்னுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார், குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்,   140
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்,
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்,   145
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,
புனையா ஓவியம் கடுப்ப …….(136 – 147)

The Queen Lying on her Bed

The queen, separated from her
husband because of his war duties,
lay in bed in deep distress.

A chain hung low on her large breasts,
covered with tight cloth, that used to bear
a pearl strand.  Her fine forehead was
bordered by very soft, dry hair.

Removing her bright, long pair of earrings,
she wore small ones on the tiny holes of
her slightly hanging ear lobes.

Instead of her usual gold bangles that
scarred her forearms with fine hair,
she wore those made from right-twisted
conch shells.

On her red finger, she wore a red colored,
curved ring that looked like the split
mouth of a vālai fish.

Protective threads were tied on her arms,
and her lifted, long loins were covered with
clothing with beautiful dirt, made with bright
cotton thread, instead of silk clothing with
flower designs.

Lying on her bed without any makeup,
she was like a sketch on which colors had not
been painted.

Notes:  பின் அமை நெடு வீழ் தாழ (137) – நச்சினார்க்கினியர் உரை – குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் வீழ்ந்து கிடத்தல், பின்னுதல் அமைந்த நெடிய மயிர் தொங்க என்பாரும் உளர்.  அம்மாசு (137) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய அழுக்கு, இங்ஙனம் அழுக்கினும் அழகுடைமை காட்டவல்லார் நல்லிசைப்புலவர்.  நெடு நீர் (139) – நீண்ட தன்மை.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  புனையா ஓவியம் (147) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வடிவம் மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்பெறாத நிலையில் உள்ள ஓவியம்.  தாலி: அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்.

Meanings:   ஆரம் தாங்கிய – bearing a pearl strand, அலர் முலை – big breasts, ஆகத்து – on her chest, பின் அமை – now, நெடு வீழ் தாழ – long and hanging low, துணை துறந்து – separated from her husband, நன்னுதல் – fine forehead, உலறிய – dry, without luster, சில் மெல் ஓதி – fine soft hair, நெடு நீர் வார் குழை – very bright long earrings, களைந்தென – removed them, குறுங்கண் – small space, small holes, வாயுறை – small earrings, அழுத்திய – pressed, வறிது வீழ் காதின் – with ears on which hang down a little, பொலந்தொடி – gold bangles, தின்ற – scarred, மயிர் வார் முன் கை – forearms with fine hair, வலம்புரி வளையொடு – with bangles made from right-twisted conch shells, கடிகை நூல் யாத்து – had protection threads tied, வாளை பகுவாய் – like the split/gaping mouth of a vālai fish, scabbard fish, trichiurus haumela, கடுப்ப – like (உவம உருபு), வணக்குறுத்து – bent, curved, செவ்விரல் – red fingers, கொளீஇய – wearing (செய்யுளிசை அளபெடை), செங்கேழ் – red colored, ruby ring, விளக்கத்து – with a ring, பூந்துகில் மரீஇய – wearing fine (silk) clothes with flower designs (மரீஇய – செய்யுளிசை அளபெடை), ஏந்து கோட்டு அல்குல் – loins with lifted sides, அம் – beautiful, மாசு ஊர்ந்த – soiled, அவிர் நூல் – bright cotton thread, கலிங்கமொடு – with clothes, புனையா ஓவியம் –sketch without colors, கடுப்ப – like (உவம உருபு)

தலைவியின் அடியை வருடும் தோழியர்

………………………………………. புனைவு இல்

தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம்பணைத் தடைஇய மென்தோள், முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின்,   150
மெல்லியல் மகளிர் நல்அடி வருட; ( 147 – 151)

The Queen with her ladies-in-waiting

The queen who was without any
decoration was tenderly cared by
her ladies-in-waiting.

These delicate ladies with tiny waists,
who massaged the queen’s fine feet,
were beautiful like tender shoots.
Sallow spots spread on their bodies.

They had pretty, bamboo-like,
rounded, delicate arms, and their
breasts resembling lotus buds were
covered tightly with kachai cloth.

Notes:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   புனைவு இல் – without decoration, தளிர் ஏர் மேனி – tender leaf like body, தாய – spread, சுணங்கின் – with yellow spots, with sallow spots, அம் பணை – beautiful bamboo, தடைஇய – rounded (தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, செய்யுளிசை அளபெடை), மென் தோள் – delicate arms, முகிழ் முலை – lotus bud like breasts, வம்பு – piece of fabric, breast cloth, kachai, விசித்து யாத்த – tightly tied, வாங்கு – curved, சாய் – moving, tired, delicate, நுசுப்பின் – with waists, மெல்லியல் மகளிர் – delicate natured women, நல் அடி வருட – massaged her fine feet

தேற்றும் செவிலியர்

நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
“இன்னே வருகுவர் இன் துணையோர்” என   155
உகத்தவை மொழியவும், (152- 156)

Consoling Foster Mothers

Foster mothers with red faces
and fragrant, delicate hair that
had white streaks,
surrounded the queen who was
suffering very greatly,
and desiring to make her happy,
consoled her aptly with less and
more words as needed, uttering,
“Your sweet husband will come
back soon.”

Meanings:   நரை விராவுற்ற – white hair mixed, நறு மென் கூந்தல் – fragrant delicate hair, செம்முகச் செவிலியர் – foster mothers with red faces, கைம்மிக – her sorrow had increased beyond control, she was very inconsolable (கை – ஒழுக்கம்), குழீஇ – joined together (சொல்லிசை அளபெடை), குறியவும் – short, நெடியவும் – long, பல – few advice, உரை பயிற்றி – uttered words, இன்னே வருகுவர் – he will come soon, இன் துணையோர் – sweet husband, என- thus, உகத்தவை – to make her happy, மொழியவும் – they said

தேறாத் தலைவி

…………………..ஒல்லாள், மிகக் கலுழ்ந்து,
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால் திருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக   160
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப்,   165
புலம்பொடு வதியும். (156- 166)

The Inconsolable Queen

Their consolation did not afford
any relief to the queen who cried
a lot,
as she sat on a well-carved,
finely-stained, waxed bed with
strong, thick legs that had carved
wooden pieces that were attached
perfectly, shaped like pots.

There were curtains that hung
from the canopy of the waxed bed,
with designs of the skies, with the
stable Rohini star that moves
together with the splendid moon
that differs from the sun that roams
rapidly in the sky, along with many
other constellations starting with
the goat constellation,
shown with a ram with strong horns.

She looked at Rohini with its partner,
and sighed a lot.  Delicate tears fell from her
big eyes.  She wiped and flicked few drops
with her red fingers, and sat alone in pain.

Notes:  ஊறா வறுமுலை (158) – நச்சினார்க்கினியர் உரை – குடத்திற்கு வெளிப்படை, முலைபோறலின் முலை என்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்றார்.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தெறியா – தெறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஒல்லாள் – she refused to be consoled, she was not agreeable, மிகக் கலுழ்ந்து – cried a lot, நுண் சேறு வழித்த – fine paste rubbed, நோன் நிலை – strong, திரள் கால் – rounded legs, thick legs, ஊறா வறுமுலை – breasts that have not secreted, pot-shaped rounded wooden pieces (பால் ஊராத முலைபோன்ற குடம், குடத்திற்கு வெளிப்படை), கொளீஇய கால் திருத்தி – attached well to the legs (கொளீஇய – செய்யுளிசை அளபெடை), புதுவது இயன்ற – newly created, மெழுகு செய் – wax rubbed, படமிசை – above, திண் நிலை மருப்பின் – with strong horns, ஆடு – goat, தலையாக – as the first, விண் ஊர்பு – moving in the sky, திரிதரும் – roaming, வீங்கு செலல் – moving rapidly (செலல் – இடைக்குறை), மண்டிலத்து – with the sun’s, முரண் மிகு – greatly varying, சிறப்பின் – with splendor, செல்வனொடு – with the moon, நிலைஇய – stable Rohini who is supposed to be with her husband at all times (நிலைஇய – செய்யுளிசை அளபெடை), உரோகிணி நினைவனள் – she thought of Rohini, நோக்கி – looked at the star – according to the University of Madras lexicon it is the 4th star in Hyades, part of Taurus, நெடிது உயிரா – let out long sighs (உயிரா – உயிர்த்து), மா – big, dark, இதழ் ஏந்திய – lifted eyelids, மலிந்து வீழ் – falling a lot, அரி பனி – delicate tears (ஐதாகிய கண்ணீர்த் துளி – பொ. வே. சோமசுந்தரனார்), செவ்விரல் கடைக்கண் சேர்த்தி – placed her red fingers on the sides of her eyes, wiped the sides of her eyes with her red fingers, சில தெறியா – scattered few drops (தெறியா – தெறித்து), புலம்பொடு வதியும் – she lives alone, she lives with sorrow

தலைவியின் துயர் தீர கொற்றவையை வேண்டல்

…….. நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர, விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம. (166 – 168)

Praying to Kotravai

The ladies-in-waiting prayed
to goddess Kotravai, asking for
the sweet queen’s great agony
to end, and for their king to
achieve victory and return soon.

Notes:  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம். சொல்லதிகாரம் 278).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது வெற்றிப் பொருட்டுக் கொற்றவையைப் பரவுவாள் (பாராட்டுவாள்) ஒருத்தியின் கூற்றாகக் கூறப்பட்டது.

Meanings:   நலங்கிளர் – with kindness, அரிவைக்கு – to the young woman, இன்னா – sorrow, அரும் படர் தீர – to remove her great pain, விறல் தந்து – to obtain victory, இன்னே – to come right away, முடிக – let this be done (they prayed to the victory goddess Kotravai), தில் – அசை நிலை, an expletive, வேண்டுகோள் பொருண்மைக்கண் வந்த வியங்கோள், அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’

அரசனின் நிலை

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள,  170
களிறு களம்படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல,   175
வேம்பு தலையாத்த நோன் காழ் எஃகமொடு,
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர்; (168- 177)

The King in the Battle Camp

The king stepped out of his quarters
to see his brave warriors, wounded
by bright swords, men who killed
battle-trained elephants donning
shining face ornaments, chopping off
their long, thick, big trunks
that dropped and rolled on the ground.

Whenever the cold northerly winds blow,
the thick flames in the fine pāndil lamps
tilted toward the south.

The king walked behind a warrior
carrying a strong-stemmed spear with neem
leaves tied to its blade, who showed him
everything in the camp in an orderly manner.

Notes:  பாண்டில் விளக்கில் (175) – நச்சினார்க்கினியர் உரை – பல் கால் விளக்கில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகல் விளக்கில். புறநானூறு 19 – யானைத் தூம்பு உடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சில் ஒப்ப நில மிசைப் புரள.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   மின் அவிர் – very bright, ஒடையொடு – with face ornaments, பொலிந்த – splendid, வினை நவில் யானை – elephants trained in warfare, நீள் திரள் தடக்கை – long thick big trunks, நில மிசைப் புரள – fell and rolled on the earth, களிறு களம்படுத்த – killed the elephants in the battlefield, பெருஞ்செயல் ஆடவர் – brave warriors who did great deeds, ஒளிறு வாள் – bright swords, விழுப்புண் காணிய – to see their deep battle wounds, புறத்தே போந்து – stepped out (of the camp), வடந்தைத் தண் வளி – cold northerly winds, எறிதொறும் – whenever it blew, நுடங்கி – swayed, தெற்கு ஏர்பு – rising on the south side, இறைஞ்சிய – bent, tilted, தலைய – with tops, நன் பல – few fine, பாண்டில் விளக்கில் – in the lamps with many legs, in the round lamps, பரூஉச்சுடர் – thick flame (பரூஉ – இசைநிறை அளபெடை), அழல – burning flames, வேம்பு தலையாத்த – neem leaves are tied on the top, நோன் காழ் – strong stems, எஃகமொடு – with spears, முன்னோன் – a warrior who walked in the front, முறை முறை காட்ட – showed that everything was in order, பின்னர் – after that

மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு,
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா,
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்பப்,   180
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப,   185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.  (178 – 188)

Proud, leaping, fast trotting horses
with bells on their backs, their
reins and saddles not removed,
stood on the street with black mud.
They shook off the raindrops that
fell on their bodies.

The king,
draped in a beautiful shawl
that hung on his left side, placed
his right hand on the shoulders
of a strong warrior bearing a sword,
and looked at his wounded men
with soothing countenance.

His white royal umbrella
strung with pearls on threads,
swayed with sounds, and protected
him from the raindrops that fell.

He did not sleep even in the pitch
darkness of the night, the king who
walked around with few of his warriors
in the battle camp,
set up to fight many enemy kings.

Notes:   மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு (178) – நச்சினார்க்கினியர் உரை – பின்னாக மணிகளைத் தன்னிடத்தே இட்ட பெருமையுடைய தாளினையுடைய குசையோட (கடிவாளம், குதிரையின் வாய்க் கருவியில் கோத்து முடியுங் கயிறு, பொ.வே.சோமசுந்தரனார் உரை – பின்னாக மணிகளைத் தம் மேலே இடப்பட்ட பெரிய கால்களையுடைய யானைகளோடே, பிடி என்பதற்கு ஈண்டுப் பெண் யானையைக் குறிக்காமல் பொதுவில் யானை என்னும் பொருட்டாய் நின்றது என்க, C. ஜெகந்நாதாசாரியர் உரை – மணிகளைத் தன்னிடத்தே இட்ட பெருமையையுடைய தாளினையுடைய குசையோடே.  தாள் என்றது வாய்க்கருவியிற் கோத்து முடியும் தலையை.  தொழிலே (188) – ஏகாரம் அசை நிலை, an expletive.

Meanings:   மணிப் புறத்து இட்ட – bells placed on the back, மாத் தாள் பிடியொடு – along with the reins with big ends, பருமம் களையா – saddles not removed, பாய் பரிக் கலிமா – leaping and trotting proud horses, இருஞ்சேற்று – with black mud, தெருவின் – on the street, எறி துளி – rain drops which fall on them, விதிர்ப்ப – scattering the water droplets, shirking them off their bodies, புடை – side, வீழ் – fell down, அம் துகில் – beautiful clothing, இடவயின் தழீஇ – hugging his left side (தழீஇ – சொல்லிசை அளபெடை), வாள் தோள் கோத்த – with a sword on his arm, வன்கண் காளை – a strong warrior, a strong young man, சுவல் மிசை – on his shoulder, அமைத்த கையன் – a man who placed his hands, முகன் அமர்ந்து – with his calm face (முகன் – முகம் என்பதன் போலி), நூல் கால் யாத்த – tied with threads to the base, மாலை – pearl strands, வெண்குடை – white royal umbrella, தவ்வென்று – with sounds (ஓசைக்குறிப்பு), அசைஇ – moved (அசைஇ – சொல்லிசை அளபெடை), தா துளி மறைப்ப – blocking the spreading raindrops, நள்ளென் யாமத்தும் – even in the pitch darkness of the night, பள்ளி கொள்ளான் – he does not sleep, சிலரொடு – with some warriors, திரிதரும் வேந்தன் – roaming king, பலரொடு முரணிய – had fought with many, had enmity toward many, (with many kings – possibly Thalaiyālankanam war, in which the Pandiyan king won fighting against many enemies), பாசறைத் தொழிலே – war business

5 Responses to “பத்துப்பாட்டு – நெடுநல்வாடை”

 1. Vengatesh Waran September 30, 2011 at 10:36 am #

  அருமையான படைப்பு !!!!!

 2. M Kamalakannan December 4, 2011 at 5:32 am #

  Very Lucid “urai”. Thanks to Rukmani and Vaidehi.

  M Kamalakannan

 3. l.palanimuthu March 18, 2012 at 2:56 pm #

  தமிழ் போல் வாழ்க நீங்கள். தமிழை வாழ வைப்பதற்கு நன்றி .

 4. R.Lakshmanan September 20, 2012 at 7:41 am #

  இந்த வலை தளத்தை படைத்தவர்களுக்கு நன்றி

 5. A. Abdoul kader November 9, 2012 at 10:04 pm #

  அருமையான விளக்க உரை. குளிர் கால வருணனை எனது தமிழ் ஆசிரியர் திரு பட்டாபிராமன் அவர்களை நினைவு கூர செய்து விட்டது. பாராட்டுக்கள்.

Comments are closed.

%d bloggers like this: