எட்டுத்தொகை – குறுந்தொகை 201-400

குறுந்தொகை  

Translated by Vaidehi Herbert 

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
குறுந்தொகை – உ. வே. சாமிநாத அய்யர் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
குறுந்தொகை – பொ. வே. சோமசுந்தரனார்- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

Please treat ……. as spaces

குறுந்தொகை 201, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி,
பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லியம்புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும்,  5
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை, வரும் என்றாளே.

Kurunthokai 201, Anonymous Poet, Kurinji Thinai – What the heroine said to her friend
May she feast on nectar,
the next-door lady who said he’ll come,
my lover from the mountain country,
where bats with soft, black wings and
sharp claws feed on sour gooseberries
and sweet mangoes that taste like milk,
and hang on the tall, beautiful,
thornless bamboos in nearby groves.

Notes:  The heroine’s friend visited the marital house of the couple.  She asked the heroine, ‘How were you able to bear your situation when you were waiting for marriage’, and the heroine responded with these words.  தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, ‘வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்’ என்று கூற, ‘நான் ஆற்றியிருக்கும் வண்ணம் அயல் இல் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள். அவள் வாழ்க’ என்று தலைவி சொன்னது.  குறுந்தொகை 63 – அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை……..ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே.  உ. வே. சாமிநாதையர் உரை – தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபாட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்லாத மூங்கிலில் தூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பம் துய்த்த தலைவன் அவ்வின்பத்திற்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின் வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினான் என்பது.

Meanings:  அமிழ்தம் உண்க – may she eat nectar, அயல் இல் – nearby house, ஆட்டி – woman, பால் கலப்பு அன்ன – like milk mixed, தேக் கொக்கு – sweet mango fruits, அருந்துபு – eat, நீல மென்சிறை – blue/black delicate wings, வள் உகிர் – strong clawed, பறவை – bats, நெல்லியம் புளி – sour gooseberries (அம் – சாரியை), மாந்தி – ate, அயலது – nearby, முள் இல் – without thorns, அம் பணை – beautiful thick, மூங்கில் – bamboo, தூங்கும் – they hang, கழை – bamboo, Bambusa arundinacea, நிவந்து ஓங்கிய – grew tall (ஒருபொருட் பன்மொழி), சோலை – grove, மலை கெழு நாடனை – the man from country with mountains, வரும் என்றாள் – she told me that he will come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 202, அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே.  5

Kurunthokai 202, Allūr Nanmullaiyār, Marutham Thinai – What the heroine said to her friend
My heart aches!  My heart aches!
Like the new flowers of the densely
growing, tiny-leaved nerunji plants
of the arid land, that appear sweet
to the eyes but yield thorns later,
my lover who used to be sweet has
become cruel now.  My heart aches!

Notes:  The heroine’s friend refused entry to the hero who returned from his concubine.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

Meanings:  நோம் – hurts, aches, என்- my, நெஞ்சு – heart, ஏ – அசைநிலை, an expletive, நோம் – hurts, aches, என்- my, நெஞ்சு – heart, ஏ – அசைநிலை, an expletive, புன்புலத்து – in the dry land, in the mullai land, அமன்ற – closely grown, சிறியிலைநெருஞ்சி – nerunji with small leaves, Caltrop, Cow’s Thorn, Tribulus Terrestris Linn (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம்), கட்கு இன் புது மலர் – new flowers that appeared sweet to the eyes, முள் பயந்தாஅங்கு – like how they yielded horns (பயந்தாஅங்கு – இசை நிறை அளபெடை), இனிய செய்த நம் காதலர் – my lover who was sweet in the past, இன்னா செய்தல் – causing pain, நோம் – hurts, aches, என் – my, நெஞ்சு – heart, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 203, நெடும்பல்லியத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மலை இடை இட்ட நாட்டரும் அல்லர்,
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்,
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇ ஒழுகும் என் ஐக்குப்  5
பரியலென் மன் யான், பண்டு ஒரு காலே.

Kurunthokai 203, Nedumpalliyathanār, Marutham Thinai – What the heroine said to her friend
He’s not from a country blocked
by mountains; he is not from a
town that is far that its trees
cannot be seen.

Even though he is nearby, he avoids
me like ascetics who seek God, who
avoid the world.  I was fond of him
in the past, my lover who does not
have me in his mind.

Notes:  The heroine said this to her friend, who came as a messenger of the hero who wanted to come back from his concubine’s house.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி ‘அவர்பால் முன்பு பரிவுடையேன்.  இப்பொழுது அது நீங்கியது’ என்று தலைவி மறுத்துக் கூறியது.  மரந்தலை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மரங்கள் (தலை = அசை), தமிழண்ணல் உரை, இரா. இராகவையங்கார் உரை – மரங்களின் தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரங்கள்.  கடவுள் நண்ணிய பாலோர் போல (4) – தமிழண்ணல் உரை – கடவுள் மாட்டு அன்பு பூண்டு துறவுக் கோலத்தை அடைந்தவர்கள் உலகை விட்டு மேன் மேலும் நீங்கிப் போவதைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடவுளை உளத்தாலே அணுகிய துறவிப் பகுதியினர் போன்று, உ. வே. சாமிநாதையர் உரை – முனிவரைக் கண்டால் தன் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகும் தன்மையைப் போல, இரா. இராகவையங்கார் உரை – தேவ குலத்தோர் இழிகுலத்தோரை வழியிற் கண்டு ஒரீஇ ஒழுகுதல் போல.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் – he is not from a country that is past the mountains, மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் – he’s not from a town where trees do not appear (தலை – அசைநிலை), கண்ணின் காண – to be able to see with the eyes, நண்ணுவழி இருந்தும் – although he is nearby, கடவுள் நண்ணிய பாலோர் போல – like ascetics who seek God who avoid others, like those who live near the ascetics who seek god, ஒரீஇ ஒழுகும் என் ஐக்கு – for my lover who is away from me in his mind, பரியலென் – I had soft feelings, I was fond of him, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, யான் – me, பண்டு ஒரு கால் – once upon a time in the past, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 204, மிளைப்பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை – தலைவனிடம் தோழன் சொன்னது
“காமம், காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூது ஆ தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே.  5

Kurunthokai 204, Milaiperunkanthanār, Kurinji Thinai – What the hero’s friend said to the hero
O friend with wide shoulders!
‘Love, love’, they talk about it,
but it is not a terrible thing
or a disease!

It is a feast if you think about it,
like that tasted by an old cow
when it licks flourishing, tender,
new grass on an old, hilly mound.

Notes:  The hero’s friend chided the hero on seeing him struggle with love affliction.  காம நோயால் வேறுபட்டு மெலிந்த தலைவனைத் தோழன் இடித்துரைத்தது.  குறுந்தொகை 136 – மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது, காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று அதனை அறியார் இகழ்ந்து கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவும் வெறுப்பும் தோன்றக் கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமநோய் காமநோய் என அதன் இயல்பு அறியார் அதற்கு அஞ்சி மெலிவர், இரா. இராகவையங்கார் உரை – தாழ்த்துச் சொல்ல வேண்டியது ஒன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர்.  அணங்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், தமிழண்ணல் – தெய்வம் வருத்துவது போல் தாக்கி மனத்துயரை உண்டாக்குவது.  பெருந்தோளோயே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்தோளோய் என்றது அவன் ஆண்மையை நினைவூட்டி, நின் ஆண்மைக்கு தக மனவடக்கம் உடையை அல்ல என்று இகழ்ந்தவாறு என்க.  உ. வே. சாமிநாதையர் உரை – அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்தி இடித்துரைத்தான்.

Meanings:   “காமம் காமம்” என்ப – they say “love love” in a disrespectful manner, they say “love love” in a respectful manner, காமம் அணங்கும் பிணியும் அன்றே – that love is not a fearful or sick thing, love is not like an attacking deity or a sick matter, நினைப்பின் – when thinking, முதைச் சுவல் – ancient hilly mound/plateau, கலித்த – flourishing, முற்றா இளம் புல் – not mature/tender delicate grass, மூது ஆ – old cow, தைவந்தாங்கு – like how it licked with its tongue, விருந்தே காமம் – love is like a feast, பெருந்தோளோய் – one with broad shoulders, one with wide arms, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 205, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மின்னுச் செய் கருவிய பெயன் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப்
பொலம் படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன்,  5
யாங்கு அறிந்தன்று கொல் தோழி, என்
தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

Kurunthokai 205, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend
The lord of the shores,
where waves pile up sand, has gone,
mounted on his gold-decorated,
silver chariot whose wheels are
wet with spray from the churning
ocean waves, looking like a goose
flapping its wings and flying in the
sky with clouds that cause heavy rain
and lightning.
How did the pallor that has spread on
my honey-fragrant, beautiful forehead
know about it, my friend?

Notes:  The heroine said this to her friend who worried about her well being, when the hero was away to earn wealth.  வரைவிற்கு பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்ததால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.  கருவிய (1) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  படை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டு, பக்கத்தில் அமைத்த பலகைகளுமாம்.

Meanings:  மின்னுச் செய் – causing lightning, கருவிய – with lightning and thunder, பெயன் மழை –  clouds that come down as rain, தூங்க – hanging, floating, விசும்பு – sky, ஆடு – flying, அன்னம் – goose, பறை நிவந்தாங்கு –  like it’s raising its wings and flying, பொலம் படை – golden ornaments, golden decorations, gold seat, பொலிந்த – splendid, beautiful, bright, வெண்தேர் –  white chariot, silver chariot, ஏறி – climbing, riding, கலங்கு கடல் – churned ocean water, துவலை – water spray, ஆழி – wheels, நனைப்ப – getting them wet, இனிச் சென்றனன் – he went away, ஏ – அசைநிலை, an expletive, இடு மணல் – the sand brought to the shore by waves, சேர்ப்பன் – the lord of the seashore, யாங்கு அறிந்தன்று கொல் – how did it know (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – O friend, என் – my, தேங்கமழ் – honey-fragrant, with sweet fragrance, திரு நுதல் – beautiful forehead, ஊர்தரும் பசப்பு – the spreading paleness, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 206, ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன,
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்,
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே.  5

Kurunthokai 206, Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the hero said to his friend
Her beautiful, sweet words
are like nectar.  The traits
of this sweet young woman,
cause me intolerable pain.

Since it is difficult to live with
love, O friend, protect yourself
and do not go near love.

Notes:  The hero said this to his friend who chided him about his love affliction.  ‘காம நோயால் நீ வருந்துவது அழகன்று’ என்று இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.  பாங்கனைப் பன்மையால் கூறினான்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவுடையீர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

Meanings:  அமிழ்தத்து அன்ன – like nectar, like amirtham (அமிழ்தத்து – அமிழ்தம், அத்து சாரியை), அம் தீம் கிளவி – beautiful sweet words, அன்ன –  like, இனியோள் குணனும் – the traits of the sweet young woman (குணன் குணம் என்றதன் போலி, குணனும் – உம்மை உயர்வு சிறப்பு), இன்ன – like this, இன்னா அரும் படர் செய்யும் ஆயின் – if it will cause intolerable great pain, உடன் உறைவு – living with it, அரிது – it is difficult, ஏ – தேற்றம், certainty, காமம் குறுகல் ஓம்புமின் – protect yourself from going near love (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), அறிவுடையீரே – O intelligent friend

குறுந்தொகை 207, உறையனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி,
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்,
கல் வரை அயலது தொல் வழங்கு சிறுநெறி  5
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

Kurunthokai 207, Uraiyanār, Pālai Thinai – What the heroine said to her friend
He left suddenly,
thinking that if he told me,
it would be difficult to leave.

I heard from many friends
that he left briskly, leaving
impressions with his fine feet,
on the ancient, small path
on the rocky mountain,
where a kite, away from its flock,
sits alone on an ōmai tree
branch and cries loudly,
the only companion to those who
travel across the dry wasteland.

Notes:  The heroine who heard from her friend that the hero had left to earn wealth, said this.  தலைவன் பிரிந்து செல்வான் என்பதை குறிப்பால் அறிந்த தோழி அதை தலைவிக்கு அறிவுறுத்த, அவளைத் தலைவி புலந்து கூறியது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  செப்பினம் – if I tell her, தன்மைப் பன்மை, first person plural, செலின் – that I am leaving, ஏ – அசைநிலை, an expletive, செலவு அரிது ஆகும் என்று – that it will be difficult, அத்த – in the wasteland, ஓமை அம் கவட்டு – ōmai tree’s beautiful branch, Sandpaper tree, Dillenia indica, இருந்த – was there, இனம் தீர் – away from its flock, பருந்தின் புலம்பு கொள் – a kite’s lonely, தெள் விளி – clear calls, clear screechings, சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் –  will be a good companion for the people who go through the wasteland, கல் வரை – rocky mountains, அயலது – nearby, தொல் வழங்கு – ancient path where people walk, சிறுநெறி – small path, narrow path, நல் அடி – fine feet, பொறிப்ப – causing marks, making footprints, தாஅய்ச் சென்றென – that he went jumping (தாஅய் – இசைநிறை அளபெடை, சென்றென – சென்றார் என), கேட்ட – they heard, நம் – our, ஆர்வலர் – friends, caring people, பலர் – a few, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 208, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒன்றேன் அல்லேன், ஒன்றுவென் குன்றத்துப்
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார்
நின்று கொய மலரும் நாடனொடு,
ஒன்றேன் தோழி, ஒன்றனானே.  5

Kurunthokai 208, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
I am not of a different mind.
I am of the same mind as the man
from the mountains,
where vēngai flowers blossom on
low branches of trees whose trunks
are trampled and crushed by warring
bull elephants, enabling daughters
of mountain dwellers to stand and
and pluck them to decorate their hair.

However, there is one reason for my
disagreement.

Notes:  The heroine said this to her friend who consoled her when the hero was away to earn wealth for their marriage.  வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழியிடம் தலைவி கூறியது.  பொரு களிறு (2)உ. வே. சாமிநாதையர் உரை – ஒன்றோடொன்று பொருதும் களிறுகள், தமிழண்ணல் உரை – புலியொடு போரிடும் களிறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முள் போர் செய்த களிற்று யானைகள்.  உ. வே. சாமிநாதையர் உரை – பெருங்களிறு என்றமையால், தலைமகள் தமர் தலைவன் வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகின்றது.  பொருகளிறு மிதித்த வேங்கை என்றதால் வரைவு உடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலரும் என்றதால் முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள் பட்டது.  இதனால் பண்டு நமக்கு அறியனான தலைமகன் எளியனாகி அருள் செய்கின்றான் பொருள்படக் கிடந்தவாறு காண்க.  மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறை உயிரோடு மலர்ந்தாற்போல் யானும் உளனேன் ஆயினேன் என்றாள் தலைமகள்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்று கொய மலருமாறு போல, கூடுங் கருத்தின்றிக் கூடிய தலைமகனால் நிலைப்பட்ட யான் எளிதில் எல்லாரும் தூற்றுமாறு உள்ளேனாயினேன் என்பதாம்.

Meanings:  ஒன்றேன் அல்லேன் – I am not one who differs from him, ஒன்றுவென் – I am of the same mind, குன்றத்துப் பொரு களிறு மிதித்த – mountain’s battling elephants trampled, நெரி – crushed, தாள் வேங்கை – trees with trunks, Indian kino trees, Pterocarpus marsupium, குறவர் மகளிர் – the daughters of mountain dwellers, கூந்தல் பெய்ம்மார் – to wear on their hair, நின்று கொய –for them to stand there to pluck (கொய – கொய்ய என்பதன் இடைக்குறை), மலரும் – they blossom, நாடனொடு ஒன்றேன் – I am not of the same mind with the man from such country, தோழி – my friend, ஒன்றனான் – due to one reason (due to the delay in marrying me or due to strangers asking for my hand in marriage), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 209, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது, தலைவி கேட்கும்படியாக
அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே
குறுநடை பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்  5
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங்கூந்தல் மடந்தை நட்பே.

Kurunthokai 209, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine’s friend, as the heroine listened nearby
O you who walks with short steps!
As I was coming past mountains that
are harsh to cross, where beautiful
fresh gooseberries, a boon to those
who travel, drop down and disperse,
in a place where strong tiger cubs seize,
I did not think about many things.

On the path, I thought about my
friendship with the young woman with
dark, thick hair, fragrant like the newly
unfurling buds of vetchi bushes with
curved branches that flourish in the
forest.

Notes:  The hero who returned after earning wealth said this to the heroine’s friend, knowing that the heroine was nearby.  பொருள் முற்றி மீளும் தலைவன் தோழிக்கு உரைப்பானாய்த் தலைவிக்கு தன் அன்பின் நிலைமையை உணர்த்தியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்கனி நீர் வேட்கை தணிக்கும் இயல்புடையது.  ஆதலின், பாலை நிலத்தே ஆறு செல்வோர் தம் நீர் வேட்கை தணிக்கும் நெல்லியினது காய் என்பான் ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’ என்றான்.  குறுநடை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குறுக அடியிட்டு நடக்கும் தோழி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிய நடையினுடைய தோழி கேள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – குறுநடையை உடைய தலைவி, இரா. இராகவையங்கார் உரை – குறுநடை கொண்டு வழி நெடிதாதல் கண்டவன் மீளும்போது நட்பே நினைந்து பெருநடைக் கொண்டு வழி குறிதாதல் தேர்ந்து கூறியவாறாம்.  கறங்கும் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – உதிர்ந்து உருளுகின்ற, கீழே உதிர்ந்து ஒலிக்கும் என்பதுமாம்.

Meanings:  அறம் – charity, தலைப்பட்ட – tops, best (in charity), நெல்லியம் பசுங்காய் –beautiful fresh gooseberries, Phyllanthus emblica, மறப் புலி – strong tiger, குருளை – cubs, கோள் இடம் – seizing place, கறங்கும் – drop and disperse, drop and disperse with sounds, இறப்பு – to pass, அருங்குன்றம் – harsh mountains, difficult to cross mountains, இறந்த – crossed, யாம் – me, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive, குறுநடை – O woman who walks with small steps (அன்மொழித்தொகை), walking with short steps, பல உள்ளலம் – I did not think about much, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive, தன்மைப் பன்மை, நெறி முதல் – on the path, கடற்றில் – in the forest, கலித்த – flourishing, முடச் சினை வெட்சி – curved branches of vetchi bushes, Scarlet Ixora, Ixora Coccinea, தளை அவிழ் – loosening ties, பல் போது – a few buds, கமழும் – with fragrance, மை இருங்கூந்தல் – dark black hair, மடந்தை – young woman, நட்பே – friendship, love (பிரிநிலை ஏகாரம், exclusion)

குறுந்தொகை 210, காக்கை பாடினியார் நச்செள்ளையார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு,  5
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

Kurunthokai 210, Kākkai Pādiniyār Nachellaiyār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero
Even if we had offered seven
pots full of cooked hot, white rice,
got from all the paddy grown in
Thondi city, mixed with ghee
from the milk of many cows of
the cattle herders in the forest
of Nalli with sturdy chariots,
it would have just been a small
reward for the crow that called
out the good omen that brought
you and ended the distress that made
my friend’s thick arms become thin.

Notes:  The hero who returned from his trip praised the heroine’s friend for taking care of the heroine in his absence.  She responded with these words.  தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், ‘நான் பிரிந்த காலத்தில் தலைவியை நன்கு ஆற்றுவித்திருந்தாய்’ என்று தோழியைப் புகழ, ‘என் செயல் ஒன்றுமின்று. காக்கை கரைந்த நல்ல நிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்’ என்று அவள் கூறியது.  நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஐங்குறுநூறு 391 – மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை! அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே.  பலி (6) – உ. வே. சாமிநாதையர் உரை – காக்கைக்கு இடும் உணவைப் பலி என்றல் மரபு.  வரலாறு:  தொண்டி.

Meanings:  திண் தேர் நள்ளி – Nalli with his sturdy chariot, கானத்து அண்டர் – forest cattle herders, பல் ஆ – many cows, பயந்த – gave, yielded, நெய்யின் – with the ghee, நெய்யோடு (வேற்றுமை மயக்கம்), தொண்டி – Thondi city, முழுதுடன் – fully, விளைந்த – grown, mature, வெண்ணெல் – white rice, வெஞ்சோறு – hot rice, cooked rice,  ஏழு கலத்து ஏந்தினும் – even if given in seven bowls with lifted hands, சிறிது – it is little, என் தோழி – my friend, பெருந்தோள் – thick arms, நெகிழ்த்த – caused them to become thin, செல்லற்கு – for it  to go away, விருந்து வர – for guests to come, கரைந்த காக்கையது – for the cawing crow, Corvus splendens, பலி – food offerings, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 211, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம் சில் ஓதி! ஆய் வளை நெகிழ
நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம், வாழி தோழி, எஞ்சாத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி  5
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

Kurunthokai 211, Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long,
O friend with fine, soft hair!
We do not fear our heartless man
who left us making your beautiful
bangles slip,

and went on the wasteland path,
a place without water in summer,
where honeybees and thumpi bees
swarm on a single flower cluster on
a tall branch of a reduced, parched
kadampam tree and return hungry.

Notes:  The heroine’s friend comforted the heroine when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் சுரத்திடை துணையைப் பிரிந்த விலங்குகளும் பறவைகளும் வருந்துவது கண்டு தானும் வருந்துவானா என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவன் அங்ஙனம் மீள்வான் அல்லன்’ என்று தோழி கூறியது.  எஞ்சா – எஞ்சிய என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  அம் சில் ஓதி – O woman with beautiful delicate hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), ஆய் வளை நெகிழ – beautiful bangles slipping down, நேர்ந்து – agreeing, நம் அருளார் நீத்தோர்க்கு – for our heartless man who left without graces, அஞ்சல் எஞ்சினம் – we removed our fear, we do not fear him, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, எஞ்சாத் தீய்ந்த மராஅத்து – of reduced parched kadampam trees, of stunted burned kadampam trees, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba, ஓங்கல் – tall, வெஞ்சினை – dried branch, வேனில் – summer, ஓர் இணர் – one cluster (of flowers), தேனோடு ஊதி – swarming with honey bees, ஆராது – not eating, not drinking, பெயரும் தும்பி – thumpi bees that move away, நீர் இல் வைப்பின் – in a place without water, சுரன் இறந்தோரே – the man who went on the wasteland path (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 212, நெய்தல் கார்க்கியர், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடைகரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற நோகோ யானே.  5

Kurunthokai 212, Neythal Kārkkiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The lord of the seashore
rides his tall chariot with an
ornamental, lotus-bud shaped
handle and clear loud bells,
along the sandy shores lapped
by the ocean’s clear waters.

We see him when he comes.
It is a shame that he leaves.

This love is pitiful!  It will be
ruined, for sure.  I will be sad.

Notes:  The heroine’s friend requested the heroine to accept the hero who desired union with her.  தலைவியை கூட்டுவித்தற் பொருட்டுத் தோழியிடம் தலைவன் வேண்ட, அதற்கு இணங்கிய தோழி அவனை ஏற்றுக்கொள்ளும்படி தலைவியிடம் கூறியது.  குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம்.  கொடுஞ்சி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர் முன் நடப்படுவது.  தேரூரும் தலைவர் இதைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  கொண்கன் – the lord of the seashore, ஊர்ந்த – rode, கொடுஞ்சி – lotus-shaped chariot decoration, நெடுந்தேர் – tall chariot, தெண் கடல் – ocean with clear water, அடைகரை – shore filled (with sand), தெளி மணி – clear bells, ஒலிப்ப – rang, காண வந்து – comes to see, நாணப் பெயரும் – shame that he leaves, அளிது – pitiable, ஏ – அசைநிலை, an expletive, தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, காமம் – love, விளிவது – getting destroyed, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நோகு – I am saddened, தன்மை ஒருமை வினைமுற்று, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity, யான்  – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 213, கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை நன்கு உடையர் தோழி, ஞெரேரெனக்
கவைத்தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉம் பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி  5
நின்று வெயில் கழிக்கும் என்ப, நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

Kurunthokai 213, Kachipēttu Kānji Kotranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He loves you greatly, O friend,
your lover who hated sweet
sleep with you and left on a path,
where adult stags with forked
antlers kick swiftly with their legs
and peel the thick, big barks of
trees to ease the hunger pangs of
their frolicking fawns, eating only
what is left, and standing as shade,
protecting them from harsh sun.

Notes:  The heroine’s friend comforted the heroine when the hero was away on business.  வினைவயிற் பிரிந்து சென்ற தலைவர், நம் நிலை உணர்வாராயின் மேற்கொண்ட வினையின்கண் செல்லாது இடையில் மீண்டு விடுவாரோ என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவர் அங்ஙனம் மீளார்’ என்று தோழி உரைத்தது.  தமிழண்ணல் உரை – மான்களின் வாழ்க்கை பற்றிய இது இறைச்சி எனப்படும்.  ‘இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக்கு அச்சமாகும்’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இத்தகைய பாடல்கள் தக்க சான்றாவன.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – உடல் நிழல் குட்டிக்கு ஆகும்படி வெயிலை மறைத்து நின்றது என்பது தான் வருந்தியும் தன் கடமை வழுவாது செய்வர் என்று உணர்த்தியவாறு.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  நசை நன்கு உடையர் தோழி – he has a lot of love for you O friend, ஞெரேரென – rapidly, கவைத் தலை – heads with forked antlers (கவை – ஆகுபெயர்), முது கலை – adult male deer, காலின் ஒற்றி – kicked with legs, பசிப் பிணிக்கு – to ease hunger pain, இறைஞ்சிய – bending, வளைத்த, பரூஉம் பெருந்ததரல் – thick big barks, ஒழியின் உண்டு – eating only the leftovers, வழு இல் நெஞ்சின் – with faultless hearts, தெறித்து நடை மரபின் – with the nature to leap and walk, தன் மறிக்கு நிழலாகி நின்று – they stood as shade to their young ones, வெயில் கழிக்கும் – they remove direct sunlight, என்ப – they say, நம் இன் துயில் முனிநர் – the man who hated sweet sleep with you, the man who rejected sweet sleep with you, சென்ற – went, ஆறு – path, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 214, கூடலூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெரும் தழை உதவிச்
செயலை முழு முதல் ஒழிய, அயலது  5
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 214, Koodalūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to the foster mother
This noisy town is fully confused.
It adorns Murukan with arali
garlands, totally ignoring the ruined
asoka tree that gives broad leaves
for the clothing that covers her waist
with perfect jewels, the young woman
with soft hair, perfect jewels and swaying
walk, who protects the huge clusters
of millet in the field that was plowed
and seeded by a mountain dweller after
clearing the forest trees.

Notes:  The heroine’s friend said this to the foster mother, to let her know about the love affair.  வெறியாட்டு எடுத்துக் கொண்டவிடத்து தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  தோழி தானே செவிலி மகளே (தொல். களவியல் 35).  The hero has given the heroine clothing made from the leaves of asoka trees.  However, the town, not aware of her love affliction, arranges for veriyāttam when arali garlands are worn.  The heroine indicates to the foster mother that the heroine is in love, her lover has given her asoka clothing and that veriyāttam is not the solution.  உ. வே. சாமிநாதையர் உரை – ஊரென்றது தாய் முதலியோரை.  அசை இயல் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அசை இயல் – மெலிந்த சாயல், இரா. இராகவையங்கார் உரை –  கட்புலனாகிவியங்கும் சாயல், தமிழண்ணல் – அசையும் இயல்பு.  அயலது (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியோடு அயன்மையுடைய மற்றொரு மரம்,  உ. வே. சாமிநாதையர் உரை – செயலை மரத்தோடு தொடர்பு இன்றி அயலதாய் நின்ற, இவளுக்கு யாதோர் இயைபுமில்லாத அயன்மையுடையதாகிய வெறியாட்டம்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  மரம் கொல் கானவன் – a forest dweller who cuts and removes trees, புனம் துளர்ந்து வித்திய – plowed the land and seeded, dug up the land and seeded, பிறங்கு குரல் இறடி – flourishing clusters of millet, Sorghum vulgare, காக்கும் – protects, புறம் தாழ் – hanging on the backside, அம் சில் ஓதி – beautiful delicate hair, அசை இயல் – swaying walk, delicate walk, கொடிச்சி – the woman from the mountain, திருந்திழை – perfect jewels, அல்குற்கு –  on her waist, on her loins, பெரும் தழை உதவி – offered big leaves (உ. வே. சா – தலைவன் அசோகந்தழையைத் தந்தான்), செயலை – asoka tree,  Saraca indica, முழு முதல் ஒழிய – ruining the thick tree trunk, அயலது அரலை – nearby arali flowers, Nerium Oleander, மாலை சூட்டி – adorns with garlands, ஏம் உற்றன்று – it is confused, இ – this, அழுங்கல் – uproarious, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 215, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படரும் பைபயப் பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி! நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்  5
கொடுவரி இரும்புலி காக்கும்,
நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே.

Kurunthokai 215, Alakkar Gnālar Makanār Mallanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
Your sorrow will go away
little by little.
The blazing sun will hide
behind the lofty mountains.

He will come today, the man
who left for the wasteland
near the tall mountains,
where a bright-tusked male
elephant searches for water in
a dried up, waterless pond
and protects his loving mate
near small boulders,
from a striped, huge tiger.

Notes:  The heroine’s friend comforted her, when the hero was away, on seeing her sorrow.  தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாமை எய்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரில் வறுங் கயத்தைத் துழவிய களிற்று யானை குறும்பொறை மருங்கில் பிடியைப் புலி தாக்காமல் காக்கும் என்றது பொருள் நிமித்தம் வறிய பாலை நிலத்தே சென்ற நம் தலைவர் விரைவில் மீண்டு வந்து நின்னைப் பிரிவுத் துன்பம் வருத்தாமல் அருளுவர் என்னும் குறிப்பிற்று.  இரா. இராகவையங்கார் உரை – முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்த நிலன் ஆதலால் குறும்பொறை மருங்கும் நெடுவரை மருங்கும் கூறினாள்.  தமிழண்ணல் உரை – விலங்குகள் மக்களின் உரிப் பொருளைச் சிறப்பிக்க வருவதே இறைச்சி.  யானை தன் பிடியைக் காப்பதைப் பார்க்கும் தலைவர் அன்பு தூண்டப் பெற்று நிச்சயம் திரும்புவர் என்பது குறிப்பு.  இதுவே இறைச்சிப் பொருள்.  ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’ (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு இது தக்க சான்றாகும்.

Meanings:   படரும் பைபயப் பெயரும் – sorrow will go away little by little (பைபய – பையப்பைய பைபய என மருவியது), சுடரும் என்றூழ் மா மலை மறையும் – bright sun will hide behind the mountains, இன்று அவர் வருவர் – he will come today, கொல் – அசைநிலை, an expletive, வாழி தோழி – may you live long oh friend, நீர் இல் வறுங்கயம் – dried pond without water, துழைஇய – searching, stirring (துழைஇய – செய்யுளிசை அளபெடை), இலங்கு மருப்பு யானை – elephant with splendid tusks, குறும்பொறை மருங்கின் – near a small boulder, அமர் துணை தழீஇ – hugs its loving mate (தழீஇ – சொல்லிசை அளபெடை), கொடுவரி இரும்புலி காக்கும் – protects her from a big tiger with curved stripes, நெடுவரை மருங்கின் – near the tall mountains, சுரன் இறந்தோரே – the man who went on the wasteland path (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 216, கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரே கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங்காடு இறந்தோரே;
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே;
அன்னள் அளியள் என்னாது மா மழை  5
இன்னும் பெய்ய முழங்கி,
மின்னும் தோழி, என் இன் உயிர் குறித்தே.

Kurunthokai 216, Kachipēttu Kānji Kotranār, Pālai Thinai – What the heroine said to her friend
He
has gone through the forest
with valli yam vines
whose green leaves never fade,
to earn faultless, fine wealth.

I
am yearning for him,
suffering in pain
and lying on a well-made bed,
my stacked, beautiful, bright
bangles slipping down.

Black clouds rumble with
lightning, without consideration
for my pitiful situation.
They are after my sweet life,
my friend.

Notes:  The heroine said this to her friend who worried about her.  பருவ வரவின்கண் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழியிடம் தலைவி கூறியது.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  வாடா வள்ளியங்காடு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய இலைகளையுடைய வாடாத வள்ளிக் கொடி படர்ந்த காடு, உ. வே. சாமிநாதையர் உரை – பச்சையிலைகளையுடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காடு, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பாசிலை வாடா வள்ளிக் கூத்தினையுடைய காடு.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  அவர் – he, ஏ – அசைநிலை, an expletive, கேடு இல் விழுப் பொருள் – faultless superior wealth, தருமார் – in order to bring, பாசிலை வாடா – green leaves that are fresh, வள்ளியங்காடு இறந்தோரே – one who went through the valli yam forest (வள்ளியம் – அம் சாரியை), வள்ளிக் கொடி, valli yam vines, Dioscorea pentaphilla (அம் – சாரியை, அழகிய காடுமாம்), யான் – I, ஏ – அசைநிலை, an expletive, தோடு ஆர் எல் வளை – stacked beautiful bright bangles (எல் – ஒளி), ஞெகிழ – slipping down, loosening, ஏங்கி – yearning, பாடு அமை சேக்கையில் – on an arranged bed, படர் கூர்ந்திசின் – I am distressed greatly (சின் – தன்மை அசை, an expletive of the first person), ஏ – அசைநிலை, an expletive, அன்னள் அளியள் என்னாது – without considering that she’s pitiable, மா மழை இன்னும் – still, பெய்ய முழங்கி மின்னும் – black clouds fall as rain with loud thunder and lightning, தோழி – my friend, என் இன் உயிர் குறித்து – targeting my sweet life, ஏ – ஈற்றசை, an expletive that is at the end

குறுந்தொகை 217, தங்கால் முடக்கொல்லனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
‘தினை கிளி கடிக எனின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என,
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற,  5
ஐதே காமம், யானே,
‘கழி முதுக்குறைமையும் பழியும்’ என்றிசினே.

Kurunthokai 217, Thangāl Mudakkollanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
I said to him, “If mother tells
us to go and chase parrots in
the millet field during the day,
a meeting will be possible.
Since you come at night,
we worry about the difficulties
on the path.
What can be done about this
suffering caused by love?”

The man from the country with
lofty mountains, thought about
something and sighed in reply.

Love is delicate.  I said to him,
“Your thinking is truly wise,
but it will come with blame.”

Notes:  The heroine’s friend indicated to her that she should elope with the hero, since she is facing hurdles like confinement, and is unable to meet the hero.  இற்செறிப்பு முதலிய காவல் மிகுதியால், தலைவனுடன் நீ உடன்போக்கில் செல்லக்கடவை என்று தோழி குறிப்பால் தலைவியிடம் கூறியது.  கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  தினை கிளி கடிக எனின் – if we are told ‘go and chase the parrots that come to eat millet in the field’, Italian millet, Setaria italicum (said mother), பகலும் ஒல்லும் – it is possible if it is daytime, இரவு நீ வருதலின் – since you come at night, ஊறும் அஞ்சுவல் – I am worried about your difficulties on the path (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), யாங்குச் செய்வாம் – what can we do, எம் இடும்பை நோய்க்கு – for this love affliction, என – thus, ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு – after what I said there, பிறிது செத்து – thinking about something different, ஓங்கு மலை நாடன் – the lord of the tall mountains, உயிர்த்தோன் – he sighed, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, ஐது – delicate, astonishing, beautiful, ஏ – அசைநிலை, an expletive, காமம் – love affliction, யான் – me, ஏ – அசைநிலை, an expletive, கழி முதுக்குறைமையும் – it is very intelligent to do what you think (உம்மை – அசைநிலை), பழியும் – and reason for blame (உம்மை – அசைநிலை), என்றிசின் – I said (சின் – தன்மை அசைநிலை, an expletive of the first person), an expletive, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 218, கொற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி,
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம்மின்று  5
இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.

Kurunthokai 218, Kotranār, Pālai Thinai – What the heroine said to her friend
O friend!  He is the life of my
life.  I cannot be away from
him even for a wink of time.

If he is able to forget me
and capable of staying away,
I will not make offerings
to the victorious Kotravai
in the mountain ranges with
clefts and caves, nor tie ritual
thread on my wrist, nor listen
to omens, nor think about him,
nor wait for good words from
soothsayers.

Notes:  The heroine said this to her friend who worried about her.  தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.  விரிச்சி:  நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப.  சூலிக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – கொற்றவைக்கு, இரா. இராகவையங்கார் உரை  – கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – துர்க்கைக்கு.

Meanings:  விடர் முகை – mountain clefts, mountain caves, அடுக்கத்து – on the mountain ranges, விறல் கெழு சூலிக்கு – to the victorious goddess Kotravai, to the mighty goddess Kotravai, கடனும் பூணாம் – I will not make offerings, கைந்நூல் யாவாம் – I will not tie threads on my hands, புள்ளும் ஓராம் – I will not listen to omens, விரிச்சியும் நில்லாம் – I will not stand and wait for omens, உள்ளலும் உள்ளாம் – I will not think about him, அன்று, ஏ – அசைநிலைகள், expletives, தோழி – O friend, உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் – since he’s the life of my life, தம்மின்று – without him, இமைப்பு வரை – even without a wink’s time, அமையா – suffering due to separation, நம்வயின் – regarding us, உருபு மயக்கம், மறந்து – forgetting, ஆண்டு – there (where he went), அமைதல் – staying, வல்லியோர் – the man who is capable, மாட்டு – for him, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 219, வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பயப்பு என் மேனியதுவே, நயப்பவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே,
செறிவும் சேண் இகந்தன்றே, அறிவே
ஆங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் முள் இலைத்  5
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு
இடம் மன் தோழி, என் நீரிரோ எனினே.

Kurunthokai 219, Vellūr Kizhār Makanār Vennpoothiyār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
Pallor is on my body, and my
love is in his heart with no
compassion.

My restraint has left me and
gone far away, but my thinking
that tells me to go, stays here,
saying it is impossible to leave.

If the lord of the seashore,
where thāzhai trees grow with
thick trunks and thorny leaves,
can ask me about my situation,
that would be the perfect thing.

Notes:  The heroine expressed her sorrow to her friend, being aware that the hero was nearby.  தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்பதை அறிந்த தலைவி, தன் துன்ப மிகுதியை அவன் உணரும் வண்ணம் தோழிக்குக் கூறுவாளாகய்க் கூறியது.  நார் இல் நெஞ்சம் (2) –  தமிழண்ணல் உரை, உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ஆகியவற்றில் – தலைவரின் அன்பற்ற நெஞ்சம், இரா. இராகவையங்கார் உரை – என் நாரில் நெஞ்சம், நற்றிணை 269ஆம் பாடலில் உள்ள ‘அதனினுங் கொடிதே…..வாரா என் நாரில் நெஞ்சம்’ என்னும் வரிகளை எடுத்துக்காட்டாக காட்டுகின்றார்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  பயப்பு – pallor, என் – my, மேனியது – on it, ஏ – அசைநிலை, an expletive, நயப்பு – love, அவர் நார் இல் நெஞ்சத்து – in his heart with no compassion, ஆர் இடை – difficult place, அது – that, ஏ – அசைநிலை, an expletive, செறிவும் – my restraint, my patience, சேண் – distance,  இகந்தன்று – it has gone, ஏ – அசைநிலை, an expletive, அறிவு – my intelligence, my thinking, ஏ – அசைநிலை, an expletive, ஆங்கண் செல்கம் எழுகென – it tells me to rise up and go there,  ஈங்கே வல்லா கூறி இருக்கும் – telling me impossible things and staying here, முள் இலை – thorny leaves, தடவு நிலை – thick trunks, bent trunks, தாழை – thāzhai trees, Pandanus odoratissimus, சேர்ப்பர்க்கு இடம் – place of the lord of the seashore, மன் – அசைநிலை, an expletive, தோழி – my friend, என் நீரிரோ எனின் – if he asks what state I am in, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 220, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்  5
வண்டு சூழ் மாலையும் வாரார்,
கண்டிசின் தோழி, பொருள் பிரிந்தோரே.

Kurunthokai 220, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
Look my friend!
Past rains have produced new millet in
the field, stags have grazed the grains
and trimmed the stalks leaving millet
stubble with tips, and delicate jasmine
flowers have blossomed from tight buds
in the forest, appearing like the teeth of
laughing wildcats.

My man has not returned from his
wealth-seeking trip even at this evening
time when bees swarm the jasmine
flowers.

Notes:  The heroine said this to her friend on seeing the changes in the season.  பருவ வரவின்கண் தலைவி தோழிக்கு உரைத்தது.  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு: அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  பாவை இருவி (2-3) – உ. வே. சாமிநாதையர் உரை – நுனியை உடைய கதிர் அரிந்த தாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  பழ மழை – old rain, கலித்த – flourishing, புதுப்புன வரகின் – of millet in the new field, Common millet, Paspalum scrobiculatum, இரலை மேய்ந்த – male deer grazed, குறைத்தலைப் பாவை இருவி – millet stubble got reduced (பாவை – stubble), சேர் மருங்கில் – joined nearby, பூத்த முல்லை – bloomed jasmine, Jasminum sambac, வெருகு சிரித்தன்ன – like wildcat laughter, பசு வீ – fresh flowers, மென் பிணி – delicately held, குறு முகை அவிழ்ந்த – small buds opened, நறு மலர் – fragrant flowers, புறவின் – in the mullai land, in the forest, வண்டு சூழ் மாலையும் – even at this evening time when flowers are swarmed by bees, வாரார் – he does not come, கண்டிசின் தோழி – look my friend – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), பொருள் – wealth, பிரிந்தோர் – one who has separated, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 221, உறையூர் முதுகொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறி உடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்,
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.  5

Kurunthokai 221, Uraiyūr Muthukotranār, Mullai Thinai – What the heroine said to her friend
He has not come back,
but jasmine has blossomed.

Leaving others who carry palm
fronds as rain guards to care
for their herd with young,
a goat herder comes with milk
and leaves with milk-rice, and
all he has in his hair are tiny,
fresh jasmine buds.

Notes:  The heroine said this to her friend who requested her to be patient.  பருவ வரவின்கண் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  பறி (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இடையர்கள் மழைக்காகத் தலையில் கவிழ்த்துக் கொள்ளும் ஒரு வகைக் கருவி.  இது பனை ஓலையால் செய்யப்பட்டது.  கூழொடு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாற்சோரோடே, உ. வே. சாமிநாதையர் உரை – பாற்சோற்றைப் பெற்று,  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – உணவு, இழிந்தாருண்ணும் கூழுமாம்.  இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே (4-5) – இரா. இராகவையங்கார் உரை – தான் சூடலாகாமை குறித்ததாம்.  தமிழண்ணல் உரை – பாலைத் தந்து உணவைப் பெறுவது பண்டமாற்று.  உ. வே. சாமிநாதையர் உரை – மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில் தங்க இடையன் இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான்.  பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவிற்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றான் எனலும் உண்டு.  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.  அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும்.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  அவர் – he, ஓ – அசைநிலை, an expletive, இரங்கற் குறிப்புமாம், வாரார் – he has not come, முல்லையும் – the mullai flowers, Jasminum sambac, உம்மை சிறப்பு, பூத்தன – they have blossomed, பறி உடைக் கையர் – those carrying palm leaf mats used as umbrellas in their hands, மறி இனத்து ஒழிய – leaving behind the goat herd with young, பாலொடு வந்து – he comes with milk, கூழொடு பெயரும் – he leaves with rice gruel, ஆடுடை இடைமகன் – a herder with goats, சென்னி சூடிய எல்லாம் – all that he wore on his head, சிறு பசு முகையே – tender fresh buds (ஏ – பிரிநிலை, exclusion)

குறுந்தொகை 222, சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும்,
கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும்,
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும், மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்  5
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

Kurunthokai 222, Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to his heart
If her friend holds on to the front
of the raft, she will do that.
If her friend holds on to the back
of the raft, she will do that.
If her friend lets go of the raft and
goes with the current, it appears
that she will do the same,
the young woman who is delicate
like a new sprout sprinkled with
rain drops, her big, cool eyes like the
water-dripping buds of rainy season’s
pichi flowers with red sides.

Notes:  The hero who saw the friendship between the heroine and her friend when they were playing in the water, said to his heart that the heroine’s friend is the best path for him to attain the heroine.  தலைவியும் தோழியும் ஆயமகளிருடன் நீராடும்பொழுது, அத் தோழியின்பால் தலைவிக்கு உளதாகிய ஒற்றுமையை அறிந்து, ‘இவளே தலைவியை நாம் பெறுதற்குரிய வாயில்’ என தலைவன் நினைந்தது.  பித்திகம் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பிச்சி மலர்.  ஒன்றித் தோன்றுந் தோழி (தொல்காப்பியம் அகத்திணை 39).  இரா. இராகவையங்கார் உரை – பித்திகத்துக்கு மாரிப் பருவமும் தளிர்க்குத் துளியும் போல இத் தோழி தலைவிக்கு இன்றியமையாமையும் நினைத்தானாம்.  தலைப் புணை, கடைப் புணை –  உ. வே. சாமிநாதையர் உரை – புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி நின்றன. புணையென்பது வாழைமரத்துண்டு, மிதக்கும் மரத்துண்டுகள் போன்றவை.

Meanings:  தலைப் புணை – head of the raft, கொளின் – if she takes, ஏ – அசைநிலை, an expletive, தலைப் புணை – head of the raft, கொள்ளும் – she will take, கடைப் புணை – end of the raft, கொளின் – if she takes, ஏ – அசைநிலை, an expletive, கடைப் புணைக் கொள்ளும் – she will take the rear, புணை கைவிட்டு – if she lets go of the raft, புனலோடு ஒழுகின் – if she goes with the water, ஆண்டும் வருகுவள் போலும் – it appears that she’ll do that, மாண்ட – esteemed, fine, மாரிப் பித்திகத்து – of rainy season jasmine flowers, பிச்சிப்பூ, Jasminum grandiflorum, நீர் வார் – water dripping, கொழு முகை – big buds, செவ்வெரிந் – red sides, உறழும் – like, கொழுங்கடை – big on the sides, மழைக்கண் – big watery eyes, big moist eyes, துளி தலைத் தலைஇய – raindrop fallen on it (தலைஇய – செய்யுளிசை அளபெடை), தளிர் அன்னோள் – she’s delicate like a sprout, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 223, மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை  தலைவி தோழியிடம் சொன்னது
‘பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்’ என்றி, அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து, ‘இவை
ஒத்தன நினக்கு’ எனப் பொய்த்தன கூறி,  5
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான், யாம் இன்னமால் இனியே.

Kurunthokai 223, Mathurai Kadaiyathār Makanār Vennākanār, Kurinji Thinai – What the heroine said to her friend
You said again and again,
“Let’s go, let’s go,” to the
uproarious carnival celebrated
in the big city, on the day when
the wise people here spoke of
many omens.

He gave me a noise-producing
gadget and a rattle to chase
birds along with tender leaves,
saying they were perfect for me.
He uttered lies and took my fine
virtue that mother had protected.

Now I have become like this!

Notes:  The heroine said this to her friend who urged her to be patient when the hero was away to earn wealth for their marriage.  வரைபொருள் நிமித்தம் தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிரு’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  செல்வாம் செல்வாம் என்றி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இடையறாது வற்புறுத்துகின்றனை என்பாள்  ‘செல்வாம் செல்வாம் என்றி’ என அடுக்கிக் கூறினாள்.  நல்ல (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நல்ல நிமித்தமாகிய வாய்ச்சொல்லை.  இதனைப் புள் என்றும் விரிச்சி என்றும் கூறுவர்.  தழல் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – கையால் சுற்றிய காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி. குறிஞ்சிப்பாட்டு 43 – தழலும் தட்டையும் குளிறும் பிறவும்.  தட்டை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை குறிஞ்சிப்பாட்டில் – மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  பேரூர் கொண்ட – in the big city, ஆர்கலி விழவில் – to the uproarious festival, செல்வாம் செல்வாம் என்றி – you said many times, ‘let us go, let us go’ (என்றி – முன்னிலை ஒருமை), அன்று இவண் நல்லோர் – wise people on that day, நல்ல பலவால் – good few desired words (பலவால் – ஆல் அசைநிலை, an expletive), தில்ல – தில் காலத்தின்கண் வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies time or ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies suggestion, தழலும் – and a slingshot (கழக அகராதி), and a handheld noise-making whirling device (உ. வே. சா மற்றும் பொ. வே. சோ உரைகள்), தட்டையும் – and bamboo noise-making gadget, முறியும் தந்து – he also gave tender leaves (women rubbed leaf pastes on their breasts – Natrinai 9, Ainkurunūru 341), he also gave a garment with tender leaves, இவை ஒத்தன நினக்கு – that these are suitable for you, என – thus, பொய்த்தன கூறி – he uttered lies, அன்னை ஓம்பிய ஆய் நலம் – the fine virtue that mother protected, என் ஐ  கொண்டான் – my lover took it, யாம் – me (தன்மைப் பன்மை, first person plural), இன்னமால் – I am like this (இன்னம் + ஆல், ஆல் – அசைநிலை), இனி, now, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 224, கூவன் மைந்தனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே, கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்  5
துயர் பொறுக்கல்லேன் தோழி, நோய்க்கே.

Kurunthokai 224, Koovan Mainthanār, Pālai Thinai – What the heroine said
My distress for my friend,
who is suffering on my
behalf,
is like that of a dumb man
who witnessed the suffering
of a tawny cow that fell into
a well at night.

It is worse than the pain that
has made me sleepless,
thinking of the cruelty of my
lover who went on distressing,
long wasteland paths, with
forks on the paths with yā trees.

Notes:  The heroine said this to her friend who worried about her when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் ‘இவள் இறந்து படுவாளோ’ என்று கவலையுற்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது.  இது முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்கு அறிவுறுத்தியது.  உயர்திணை ஊமன் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள்.  இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்.

Meanings:  கவலை – forked paths, யாத்த – with yā trees, ஆச்சா மரம், Hardwickia binata, அவல நீள் இடை – distressing long paths, சென்றோர் – the man who went, my lover who went, கொடுமை எற்றி – thinking about his cruelty, துஞ்சா நோயினும் – more than painful sleeplessness, நோய் ஆகின்று – it is a painful disease, ஏ – அசைநிலை, an expletive, கூவல் – well, குரால் ஆன் – tawny colored cow, படு துயர் – suffering, இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல – like a dumb person who heard the cry at night, துயர் பொறுக்கல்லேன் – I am unable to bear the distress, தோழி – friend, நோய்க்கு – துன்பத்தை, the love distress (வேற்றுமை மயக்கம்), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 225, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட!
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்  5
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.

Kurunthokai 225, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the huge mountains
where an elephant eats millet in
the front yard of a house as her
calf suckles at her yielding breast!

If you are not like a proud king, who
forgot gratitude to those who helped
him in bad times making him happy,
but stay constant in not forgetting the
favors you got from her, her thick, soft
hair like a delicate, lovely, clamoring
peacock’s plume, will be yours alone.

Notes:  The heroine’s friend said this to the hero who was leaving to learn wealth for the marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியும் தலைவனிடம் தோழி கூறியது.  கெட்டிடம் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – கெட்ட இடம் என்பது கெட்டிடம் என ஆயிற்று.

Meanings:  கன்று தன் பய முலை மாந்த – a calf suckles at her yielding breast, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), தினை பிடி உண்ணும் – a female elephant is eating millet, Italian millet, Setaria italicum, பெருங்கல் நாட – O lord of the huge   mountains, கெட்ட இடத்து – in bad times, in times of poverty, உவந்த உதவி – help that gives joy, கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல – like a king seated proudly on his throne who forgot, like a king with royal rights who forgot, நன்றி மறந்து அமையாய் ஆயின் – if you don’t forget gratitude, மென் சீர்க் கலி மயில் – delicate lovely clamoring peacock, delicate lovely proud peacock, கலாவத்து அன்ன – like the feathers, like a plume (கலாவத்து – கலாவம், அத்து சாரியை), இவள் ஒலி மென் கூந்தல் – her thick, soft hair, உரியவால் – will rightfully belong (ஆல் அசைநிலை, an expletive), நினக்கு – to you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 226, மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும், பிறை என
மதி மயக்குறூஉ நுதலும் நன்றும்
நல்ல மன், வாழி தோழி, அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண்பூக்  5
குருகு என மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு, நகாஅ ஊங்கே.

Kurunthokai 226, Mathurai Ezhuthālan Sēnthampoothanār, Neythal Thinai – What the heroine said to her friend
Before I laughed with the lord
of the wide ocean with vast shores,
where, every night glittering waves
batter thāzhai trees whose blossoms
look like white herons,

my flower-like eyes, bamboo-like pretty
arms, and forehead that was mistaken
for the crescent moon, were very fine,
O friend.

Notes:  The heroine said this to her friend who worried about her when the hero was away to earn wealth for marriage.  தலைவன் வரை பொருள் ஈட்டப் பிரிந்த காலத்தே, தலைவி ஆற்றாள் என வருத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  இரா. இராகவையங்கார் உரை – தாழை வெண்பூ குருகென மலரும் பெருந்துறை என்றதனால் தாழை உண்மையில் பூத்துள்ளது.  குருகென்று மயங்கிக் கொள்ளப்பட்டு ஒருவரும் எடுக்க முயலாமையால் சூடாது கழிந்தாற்போல் தலைவன் தன்னிலை உண்மையின் உணராமையானும் வரைய முயலாமையானும் தான் அவனாற் துய்க்கப்படாது  கழிவலோ என்பது தலைவி குறித்ததாகும்.  விரிநீர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல், அன்மொழித்தொகை.  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  பூவொடு புரையும் கண்ணும் – eyes that are like flowers, வேய் என – bamboo-like, விறல் வனப்பு எய்திய தோளும் – and the victorious beautiful arms, பிறையென மதி மயக்குறூஉ நுதலும் – and forehead like that gets mistaken for the moon (மயக்குறூஉ – இன்னிசை அளபெடை), நன்றும் நல்ல – very good, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, அல்கலும் – during nights, தயங்கு திரை பொருத – bright waves hitting, swaying waves hitting, தாழை வெண்பூக் குருகு என மலரும் – thāzhai trees (Pandanus odoratissimus) put out blossoms that are like white herons/egrets/storks, பெருந்துறை – big shore, விரி நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the wide ocean shore, நகாஅ – laughing (இசைநிறை அளபெடை), ஊங்கு – before, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 227, ஓதஞானியார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பூண் வனைந்தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப, வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்
தேரோன் போகிய கானலானே.

Kurunthokai 227, Ōthagnāniyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Chopped by the sword-sharp,
golden rims of his chariot
wheels,
waterlilies were ruined and
their petals shredded, as he
went through the seashore.

Notes:  The heroine’s friend said this to her, aware that the hero who missed their tryst the previous day was nearby.  அல்லகுறிப்பட்டு மறுநாள் வந்த தலைவன் மறைவில் இருப்ப, அவன் முதல் நாள் வந்ததை தோழி தலைவிக்கு உணர்த்தியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் முதல் நாள் இரவு தலைவியைக் காணாது மீண்டதற்கு அவன் குறி வாய்ப்பச் செய்யாமையே காரணம் ஆவதன்றித் தலைவியின் தவறு அன்று. அவள் ஊக்கத்துடன் எதிர்நோக்கியே இருந்து வருந்தினாள் என்று அவனுக்கு குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று.  இரா. இராகவையங்கார் உரை – வருதேர் நேமியால் நெய்தல் குறைதல் கூறாது போகிய போது வறியதனால் அவன் மனஞ் சோர்ந்து ஊர்ந்தது குறித்தாளாம்.  இங்கனம் கொள்ளாக்கால் தலைவிக்குத் தழையும் பூவும் நல்க இருக்கும் நெய்தலைச் சிதைய ஊர்ந்தான் எனப்பட்டு அருள் இலனும் அன்பு இலனும் ஆவன் தலைவன் என்க.

Meanings:  பூண் வனைந்தன்ன – with rims that are set, பொலம் சூட்டு நேமி – gold-rimmed wheel, வாள் முகம் துமிப்ப – sword-like edges cut, வள் இதழ் குறைந்த – reduced dense/splendid petals, கூழை – chopped, reduced, நெய்தலும் உடைத்து – has waterlily flowers, blue waterlily, Nymphaea odorata, or white waterlily, Nymphaea lotus alba, இவண் – here, தேரோன் – one riding the chariot, போகிய – went, கானலான் – on the seashore, in the grove, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 228, செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப, நம் துறந்து
நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்,  5
நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே.

Kurunthokai 228, Seythi Valluvar Perunchāthanār, Neythal Thinai – What the heroine said to her friend
Although he left me to be in a very
distant country, he was still close
to my heart.

In our small village near a seashore
grove,
…………..where thāzhai trees send
…………..down cascading roots, and
…………..their mature, plump buds
…………..open, looking like wings
…………..of herons spread for preening,
waves from the cool seas of his land
come up to our front yards and leave.

Notes:  The heroine, now married to the hero, said this to her friend who told her that she was very patient during the couple’s love phase.  தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியை நோக்கி ‘நீ வரைவு நிகழும்வரையிலும் நன்கு ஆற்றியிருந்தனை’ என்று தோழி கூறிய பொழுது அதற்குத் தலைவி தான் ஆற்றியிருந்ததற்குக் காரணம் கூறியது.

Meanings:  வீழ் தாழ் தாழை – hanging roots of thāzhai trees, Pandanus odoratissimus, ஊழுறு கொழு முகை – mature thick buds, குருகு உளர் – heron/egret/stork preening, இறகின் விரிபு – like wings opened (இறகின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தோடு அவிழும் – petals have opened, கானல் நண்ணிய – near the seaside grove, சிறுகுடி – small settlement, small village, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), திரை வந்து பெயரும் – waves come and go, என்ப – அசைநிலை, an expletive, நம் துறந்து – leaving me, abandoning me, நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் – even though he is in a very distant country, நெஞ்சிற்கு அணியர் – he is close to my heart, தண் கடல் நாட்டு – country with a cool ocean, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 229, மோதாசானார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும், தவிராது
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்றம்ம பாலே, மெல்லியல் 5
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

Kurunthokai 229, Mōthāsanār, Pālai Thinai – What the bystanders said
He used to pull her five-part braid.
She used to twist and pull his dry hair
and run away swiftly.

Their doting foster mothers intervened,
but could not stop their little battles.

Fate!  You are good indeed!  You made
them happy in union like two delicate
flowers woven in a garland.

Notes:  People who knew the hero and heroine said this when they saw them in the wasteland.  தலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது.  அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை  – வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற் பொருட்டு.  மன்றம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது.  விகாரம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  இவன் இவள் ஐம்பால் பற்றவும் – he pulled her five part plait, இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் – she used to twist his dry/thin/dirty hair, and pull it, பரியவும் – running away swiftly, காதல் செவிலியர் தவிர்ப்பவும் – even when their loving foster mothers intervened, தவிராது – without stopping, ஏதில் சிறு செரு உறுப – they fought unfriendly little battles with each other, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, ஓ – அசைநிலை, நல்லை மன்ற – you are certainly good, (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), அம்ம – வியப்பு இடைச்சொல், a particle signifying surprise, you listen, பாலே – O fate, மெல்லியல் – delicate natured, துணை மலர்ப் பிணையல் அன்ன – like two flower garlands that are entwined, two flowers that are woven in a garland (துணை மலர் – பிணைத்த மலர்கள்), இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய் – you made them be happy in marriage, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 230, பாண்டியன் அறிவுடைநம்பி, நெய்தற் திணை – தோழி சொன்னது
அம்ம வாழி தோழி, கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன், யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச்சுறா வழங்கு நீர் அத்தம்  5
சின்னாள் அன்ன வரவு அறியானே.

Kurunthokai 230, Pāndiyan Arivudainampi, Neythal Thinai – What the heroine’s friend said
May you live long, my friend!
Listen!  In my naivete, did I take
liberties and do something to hurt
the lord of the shores?

He who does not have the will to
stay away from you, has not come
the past few days, like he used to,
braving waters with mighty sharks
on the path.

Notes:  The heroine’s friend urged the heroine to accept the hero who appealed to her for help.  குறை நயப்பித்தது.  தன்பாற் குறை இரந்த தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி தோழி கூறியது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, may you live long, தோழி – my friend, கொண்கன் – the lord of the shores, தான் அது துணிகுவன் அல்லன் – he does not have the courage, he is not strong to do that, யான் – me, என் பேதைமையால் – because of my naive nature, because of my ignorance, பெருந்தகை கெழுமி – having taken great liberties, நோதகச் செய்தது ஒன்று – a matter that hurt him, உடையேன் கொல் – did I do it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, வயச்சுறா – strong sharks, வழங்கு நீர் – water where they frequent, அத்தம் – path, சின்னாள் அன்ன – like he used to come for a few days, வரவு அறியான் – he has not come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 231, பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓரூர் வாழினும் சேரி வாரார்,
சேரி வரினும் ஆர முயங்கார்,
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே, நாண் அட்டு
நல் அறிவு இழந்த விழுந்த காமம்,  5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

Kurunthokai 231, Pālai Pādiya Perunkadunkō, Marutham Thinai – What the heroine said to her friend
He lives in the same town,
but does not come to our street.
Even if he comes to our street,
he does not embrace me with love.

Even when he sees me, he passes
by, as though he has seen a
cremation ground of strangers.

Love that has killed shame and
ruined reason has gone far away,
like an arrow shot from a bow.

Notes:  The heroine refused to listen to her friend who came as the hero’s messenger.  தலைவனின் தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.  சேரி (1,2) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.  ஆர (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்றாக, மன நிறைவு உண்டாகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெஞ்சு பொருந்த, வேட்கைத் தீர.  காணா (4) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  ஓரூர் வாழினும் – even though he lives in the same town, சேரி வாரார் – he does not come to our street, சேரி வரினும் – even when he comes to our street, ஆர முயங்கார் – he does not embrace me well, he does not embrace me with love, ஏதிலாளர் – strangers, சுடலை போல – like a cremation ground, காணாக் கழிப – even though he sees me he passes by (ignoring me), மன், ஏ – அசைநிலைகள், நாண் அட்டு – killing modesty, killing shame, நல் அறிவு இழந்த – good reasoning/intelligence has been lost, காமம் – love, வில் உமிழ் கணையின் – like an arrow shot from a bow (கணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சென்று சேண்  பட – it goes far away and falls, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 232, ஊண் பித்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ,
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்,  5
மா இருஞ்சோலை மலை இறந்தோரே?

Kurunthokai 232, Oon Pithaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Does he think about you, O friend?

Even if he thinks, will he be able to
come back until he’s finished with
what he has set out to do, the man
who crossed the mountain with huge
groves,
where a stag with a large neck, after
eating hemp plants, sleeps in the
meager shade of the remains of a yā
tree, after an elephant with feet that
look like large stone mortars, broke
and ate its branches?

Yes.  He will return on time!

Notes:  The heroine’s friend urged her to bear separation patiently, when the hero was away on business.  தலைவன் வினைவயின் பிரிந்த காலத்தில் ஆற்றாளாய தலைவிக்கு ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்பதுபடத் தோழி கூறியது.   குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  உ. வே. சாமிநாதையர் உரை – தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலை யாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்கு வேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னொடு இன்புறுவர் என்பது குறிப்பு.  உள்ளார் கொல்லோ (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உள்ளார் கொல் என்ற வினா உள்ளுவர் என்னும் பொருள்பட நின்றது.  வாய்ப்பு உணர்வு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினைமுற்றும் இடமறிதல், வினை முற்றாது மீள்வது அவர்க்குத் தகவு அன்று என்பாள் ‘உள்ளியும் வாரார்’ என்றாள்.

Meanings:  உள்ளார் கொல் – does he think (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, தோழி – O friend, உள்ளியும் – if he thinks, வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல் – will he not come since he has not finished his work (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive மரல் புகா அருந்திய – ate the hemp plants, bowstring hemp, Sansevieria trifasciata, மா எருத்து இரலை – a stag with big neck, உரல் கால் யானை – an elephant with legs like the mortar/pounding stone, ஒடித்து உண்டு எஞ்சிய – broke and ate and left over, யாஅ வரி நிழல் துஞ்சும் – sleeps in the dappled shade of the yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅ – இசை நிறை அளபெடை), மா இருஞ்சோலை – dark, very big groves, மலை இறந்தோர் – one who went on the mountains, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 233, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய்ச் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன,
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்,  5
வரை கோள் அறியாச் சொன்றி
நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே!

Kurunthokai 233, Pēyanār, Mullai Thinai – What the hero said to the charioteer
My beloved, the young woman with
thick stacked, small bangles, comes
from a woodland town,
where small pits with wide openings
are dug to pull out kavalai yams,
and bright, yellow kondrai blossoms
drop into them, looking like the
treasure chests of rich people, filled
with gold, their lids open.
Her father gives alms with water to the
wise, and donates leftover rice to all.

Notes:  The hero said this to his charioteer on his way home.  வரையாது சென்று வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கொள்ளாதே வினைமேற் சென்ற தலைவன் வினைமுற்றி மீண்டு வரும்பொழுது தலைவியின் ஊரைப் பாகற்குக் காட்டிக் கூறியது.  இச் செய்யுளைக் கற்பின்கண் பிரிவாகக் கருதுவாரும் உளர்.

Meanings:  கவலை – kavalai yam, a kind of yam, கெண்டிய – dug up, அகல்வாய் – big-mouthed, wide-mouthed, சிறு குழி – small pits, small holes in the ground, கொன்றை – (the flowers are golden yellow), சரக் கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, ஒள் – bright, வீ – flowers, தாஅய் – dropped (இசைநிறை அளபெடை), செல்வர் – rich people, பொன் பெய் பேழை – boxes with gold placed in them, மூய் திறந்தன்ன – like lid is opened, கார் – rainy season, எதிர் – accepted, புறவினது – in the woodlands, ஏ – அசைநிலை, an expletive, உயர்ந்தோர்க்கு – to the wise (உ. வே. சா. – பெரியவர்களுக்கு, பொ. வே. சோமசுந்தரனார் – அந்தணர்களுக்கு),  நீரொடு சொரிந்த – pours with water, gives with water, மிச்சில் – remainder, யாவர்க்கும் – to everybody, வரை கோள் அறியா – not knowing to hinder, not knowing to have limits, சொன்றி – cooked rice,  நிரை  – rows of, stacked, கோல் – rounded, thick, குறுந்தொடி – a woman wearing small bangles (அன்மொழித்தொகை), தந்தை ஊர் – her father’s town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 234, மிளைப்பெருங்கந்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் செல் வானம் சேப்பப் படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே,
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை,  5
பகலும் மாலை, துணை இலோர்க்கே.

Kurunthokai 234, Milaiperunkanthanār, Mullai Thinai – What the heroine said to her friend
They are confused, those who say
that evening time is when suffering
increases as the sun goes away,
the sky turns red, and mullai flowers
bloom as light fades.

The break of dawn when crested
roosters crow in the big town,
and broad daylight hours are also
like painful evenings, to those who
are separated from loved ones.

Notes:  The heroine’s friend said this on season the changes in the season.  பருவ வரவின்கண் தோழிக்குத் தலைவி உரைத்தது.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  சுடர் செல் – the sun goes away, வானம் சேப்ப – the sky becomes red, படர் கூர்ந்து – sorrow increases, எல் அறு பொழுதின் – at the time when light goes away (எல் – ஒளி), முல்லை மலரும் மாலை – evenings when jasmine blossoms, Jasminum sambac, என்மனார் – they say so, மயங்கியோர் – those who are confused, ஏ – அசைநிலை, an expletive, குடுமிக் கோழி – cocks/roosters with combs, நெடு நகர் – tall house, big town, இயம்பும் – they crow in the big town, they crow in the big house (பொ. வே. சோமசுந்தரனார் உரை- நெடிய நகரத்தின்கண், நெடிய வீடுமாம்), பெரும் புலர் விடியலும் மாலை – early mornings are also like evenings, பகலும் மாலை – day times are also evenings, துணை – partners, இலோர்க்கு – to those who do not have, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 235, மாயெண்டனார், பாலைத் திணை – தலைவன் வாடைக் காற்றிடம் சொன்னது
ஓம்புமதி, வாழியோ வாடை, பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.  5

Kurunthokai 235, Māyendanār, Pālai Thinai- What the hero said to the northerly winds
May you live long,
O cold northerly wind!

My fine woman’s town
where marai deer herds
eat gooseberries from the
trees in front yards of huts
woven with grass, is near
the mountain
where pure, white waterfalls
drape down the summits
like hanging snake skins.

Please protect her.

Notes:  The hero said this to the northerly wind, for the charioteer to hear, while returning home after finishing work.  களவுக் காலத்தில் வினைமேற் பிரிந்து சென்ற தலைவன் மீளும் பொழுது பாகன் கேட்ப வாடைக் காற்றிடம் கூறுதல்.  அகநானூறு 327 – செவ் வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்.  இரா. இராகவையங்கார் உரை – இன மரை உண்ணும் முற்றம் என்றது இவை கண்டு தான் தலைவனொடு கூடி வாழாமை கருதி நெஞ்சு நொந்து தலைவன் வரவு நோக்கி இருப்பாள் என்ற குறிப்பிற்று.  மழைக் காலத்துக்குப் பிந்தியது வாடையாதலான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் தோல் கடுக்கும் என்றான்.  இதனால் ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் காட்டி வரைய இருக்கும் தன்னைத் தலைவி வேறாகக் கருதி வருந்துவாள் என்பது குறித்தான்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  மரை (4) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.  மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும்.  அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி.

Meanings:  ஓம்புமதி – protect her (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), வாழி – may you live long, ஓ – அசைநிலை, an expletive, வாடை – O cold northern wind, பாம்பின் – of snakes, தூங்கு தோல் – hanging skins, கடுக்கும் – like, தூ வெள் அருவி – pure white waterfalls, கல் உயர் – mountain top, நண்ணியது – it is nearby, it is there, ஏ – அசைநிலை, an expletive, நெல்லி – gooseberries, மரை இனம் – marai deer herd, ஆரும் – they eat, முன்றில் – front of the house, front yard (முன்றில் – இல்முன்), புல் – grass, வேய் – woven, குரம்பை – huts, நல்லோள் – the good woman’s, the beautiful woman’s, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 236, நரிவெரூ உத்தலையார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, தலைவி கூறுவதைப் போல்
விட்டென விடுக்கு நாள் வருக, அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ,
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்  5
தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே.

Kurunthokai 236, Nariverū Uthalaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, as the voice of the heroine
O lord of the cool shores
where a newly arrived stork
roosts on a ground-touching,
low branch of a punnai tree on
sand dunes as tall as mountains!

If you abandon me, you need to return
my virtue that you took, before you leave.

Notes:  The heroine’s friend said this to the hero who planned to leave for wealth, when he urged her to take good care of the heroine.  She spoke to him in the voice of the heroine.  வரைவிடை வைத்துத் தலைவியை பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தோழியை நோக்கி ‘இவளை வருந்தாது பாதுகாப்பாயாக’ என்று கூற, அவள் ‘நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக’ என்று கூறியது.  நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு.  தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள் – தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா ”எம்” என வரூஉம் கிழமைத் தோற்றம் அல்ல ஆயினும் புல்லுவ உளவே. (தொல்காப்பியம், பொருளியல் 27).   தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நலன் தந்து சேறல் நினக்கியலாதாற் போன்று நின் பிரிவின்கண் அவளை ஆற்றுவித்தலும் எனக்கியலாதாம் என்பது குறிப்பு.  நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி.  தலைவனிடம் நலம் தா எனத் தோழி கூறும் மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 124, நற்றிணை 191, கலித்தொகை 18, குறுந்தொகை 236, ஐங்குறுநூறு 45.

Meanings:  விட்டென விடுக்கு நாள் வருக – if the day comes that you abandon and leave,  அது நீ நேர்ந்தனை ஆயின் – if you are agreeable, if you make it happen, தந்தனை சென்மோ – return and then leave (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), குன்றத்து அன்ன குவவு மணல் – sand dunes that are like hills (குன்றத்து – குன்றம், அத்து சாரியை), அடைகரை நின்ற புன்னை – laurel tree that stood on the sand- filled shores, Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நிலம் தோய் படுசினை – land touching low branches, வம்ப நாரை சேக்கும் – newly arrived white stork resides, Ciconia ciconia, தண் கடல் சேர்ப்ப – O lord of the cool ocean (சேர்ப்ப – அண்மை விளி), நீ உண்ட என் நலன் – my virtue that you took (she means ‘her virtue that you took’), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 237, அள்ளூர் நன்முல்லையார், பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே,
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு  5
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே.

Kurunthokai 237, Allūr Nanmullaiyār, Pālai Thinai – What the hero said to his charioteer
Not knowing fear, my heart
has gone, desiring to embrace
my beloved.

But what good is that, without
these arms that are left behind,
unable to hold her tight?

The distance between us is vast,
and hindrances are many.  How can
I count the numbers of the woods,
where murderous tigers
that roar like dark ocean waves,
rise up with strength and roam?

Notes:  The hero who was returning home after earning wealth, said this to his charioteer.  பொருள் முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது.   ‘விரைந்து செலுத்துக’ எனக் குறிப்பால் உரைத்தது.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

Meanings:  அஞ்சுவது அறியாது – not knowing fear, அமர் துணை தழீஇய – desiring to embrace my loving partner (தழீஇய – செய்யுளிசை அளபெடை), நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும் – even if my heart separated from us, எஞ்சிய கை பிணி நெகிழின் – if the remaining arms loosen their tightness, if the remaining arms do not hold her tight, அஃது எவன் – what is the use of that, ஓ – அசைநிலை, an expletive, நன்றும் சேய – very big distance is there, அம்ம – அசைநிலை, an expletive, இருவாம் – the two of us, இடை – between, ஏ – அசைநிலை, an expletive,  மாக்கடல் – dark ocean, huge ocean, திரையின் முழங்கி – roaring like the waves (திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வலன் ஏர்பு – rising up with strength, கோள் புலி வழங்கும் சோலை – groves where killer tigers roam, எனைத்து என்று எண்ணுகு – how can I count their numbers, ஓ – அசைநிலை, an expletive, முயக்கிடை – for us to unite, for us to embrace, மலைவு – the hindrances, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 238, குன்றியனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி
ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ, மகிழ்ந நின் சூளே.  5

Kurunthokai 238, Kundriyanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
My womanly virtue that you took
is lovely like Thondi,
where young women wearing bright
bangles play with little sand houses
on the banks of beautiful paddy
fields, leaving behind their pestles,
made with black, dense wood, that
they use to pound fresh rice.

Lord, return my virtue that you
took, and leave!  And also, take
your promises with you!

Notes:  The heroine’s friend refused entry to the hero when he wanted to return home to appease the sulking heroine.  She speaks these words on behalf of the heroine.  பரத்தையிடமிருந்து மீண்டு வந்த தலைவன் தலைவியின் ஊடலை நீக்கும் பொருட்டு, தோழியின்பால் சூள் கூறித் தெளிவிக்க புகுகையில், தோழி அவனுக்கு வாயில் மறுத்தது.  நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு.  மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் (தொல்காப்பியம், கற்பியல் 9).  நெல் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வயலுக்கு ஆகுபெயர்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் குறுந்தொகை 236ஆம் பாடலின் தமிழண்ணல் உரைஇது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி.  தலைவனிடம் நலம் தா எனத் தோழி கூறும் மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.

Meanings:  பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை – pounding rods made with black dense wood that are used for poundingc fresh rice, black pounding rods that pound rice that has not been fried (பாசவல் – நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்), ஆய் – beautiful, கதிர் நெல்லின் – of the paddy fields with paddy spears (நெல் – வயலுக்கு ஆகுபெயர்), வரம்பு அணை – on the ridges, banks, துயிற்றி – placed down, ஒள் தொடி மகளிர் – women with bright bangles, வண்டல் அயரும் – playing games, playing with little sand houses, தொண்டி அன்ன – like Thondi town, என் நலம் – my virtue, my beauty (the heroine’s virtue/beauty), தந்து – return, கொண்டனை – you take, சென்மோ – you leave (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), மகிழ்ந – O lord, நின் – your, சூள் – promises, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 239, ஆசிரியர் பெருங்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே,
விடும் நாண் உண்டோ தோழி, விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறும் தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்  5
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே?

Kurunthokai 239, Āsiriyar Perunkannanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My bangles have slipped.  My arms
have become thin.

Is there any more modesty to lose,
O friend,
for the lord of the mountains with
spiny bamboo fences, where bees with
short wings, that buzz on the pollen of
swaying glory lily flower clusters whose
fragrance spreads into crevices and caves,
appear like gems spit by snakes?

Notes:  Requesting marriage.  வரைவு கடாயது.  உ. வே. சாமிநாதையர் உரை – காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போல, என் நலன் நுகர்ந்து அலர் எங்கும் பரவச் செய்தான்.  காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் வெருவரும் தோற்றத்தைத் தந்ததுப் போல எம் இருவர் நட்பும் அஞ்சுதற்குரியதாயிற்று எனவும் குறிப்புக்கள் தோன்றின.  இரா. இராகவையங்கார் உரை – முந்தூழ் மலை வேலி என்று முள்ளுடை மூங்கில் வேலி கூறியதனால் தலைவன் புகற்கரிய காவலுடைமை குறித்தாளாம்.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  There was this belief that snakes spit gems.  Purananuru 294, Akananuru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.

Meanings:  தொடி நெகிழ்ந்தன – bangles have slipped, தோள் சாயின – arms have become slender, விடும் நாண் உண்டோ தோழி – is there any more shyness to let go, is there any more modesty to lose (ஓகாரம் – எதிர்மறை), விடர் முகைச் சிலம்புடன் – in the crevices and caves of the mountains, கமழும் – spreading fragrance, அலங்கு குலைக் காந்தள் நறும் தாது ஊதும் – they swarm on the fragrant pollen on swaying clusters of malabar glory lilies, Gloriosa superba, குறுஞ்சிறைத் தும்பி – bees with short wings, பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – they appear like the gems that snakes spit (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), முந்தூழ் வேலிய – with spiny bamboo fences, மலை கிழவோற்கு – for the lord of the mountain, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 240, கொல்லன் அழிசியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும், நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி, தெண் திரைக்  5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும், அவர் மணி நெடுங்குன்றே.

Kurunthokai 240, Kollan Azhisiyār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Look at this!
The northerly winds have arrived,
and on the winter bushes green vines
of avarai beans have spread,
their bright flowers that resemble
the beaks of parrots sway and flourish
along with mullai blossoms that are
like the teeth of wild cats.
On top of that, to add to my distress,
his tall mountain that yields gems is
disappearing from my view in the
evening hours, like an ocean-plying
ship disappearing into the clear waves.

Notes:  The heroine said this to her friend who worried about her sorrow when the hero was away to earn wealth for the wedding.  வரைப்பொருள் ஈட்டத் தலைவன் பிரிந்த பொழுது தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு – குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  பனிப் புதல் – cold season bushes, wet bushes, இவர்ந்த – spread, பைங்கொடி அவரை – green avarai creeper, Field beans, dolichos lablab, கிளிவாய் ஒப்பின் – like the beaks of parrots, ஒளி விடு பன் மலர் – bright many flowers, வெருக்குப்பல் உருவின் முல்லையொடு – with jasmine that are shaped like teeth of wild cats, Jasminum sambac, கஞலி – to be dense, to flourish, வாடை வந்ததன் தலையும் – when northerly winds blow, நோய் பொர – sorrow attacking, கண்டிசின் – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, தெண் திரை – clear waves, கடல் ஆழ் கலத்தின் தோன்றி – appearing like a plying ship in the ocean, like a ship sinking into the deep ocean (கலத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), மாலை – evening, மறையும் – it hides, அவர் மணி நெடுங்குன்று – his tall mountain with gems or his sapphire-colored tall mountain, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 241, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யாமே காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின அழுதன தோழி,
கன்று ஆற்றுப்படுத்த புன்தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏமப் பூசல்  5
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட, எம் கண்ணே.

Kurunthokai 241, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Despite me bearing the pain
of love, but my eyes weep,
because of their intimacy
with man from the mountains,
where,

children with parched heads
who herded calves, saw the
pretty blossoms of the vēngai
trees in the village square,
and without climbing on the
trees, raised delightful cries that
echo back from the caves and
gorges, and reach up to the sky.

Notes:  The heroine said this to her friend who worried about her sorrow since the hero was away.  பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடன் என்றது தமக்குரிய காரியமாக விளையாடல்களை முடித்த ஆயம் இவள் வேறுபாடு நோக்கி, இவள் உயர்வு கருதி, இவள் விளையாடாமலேயே உண்டாக்கிய அலர் தாயரும் தன் ஐயரும் அறியச் செய்து இவன் செவியினும் புகாநிற்பவும் வரைய முயலாது வாளாவிருப்பவன் என்றது குறித்ததாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மன்ற மரத்தில் தெய்வம் உறைதலின் ஏறாயாயினர் என்க.  கெழுதகைமையின அழுதன (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என் கண்களே முதன்முதலாக தலைவனைக் கண்டனவாதலின் தமக்கு உண்டான சிறப்புரிமையானே தாமே அழுகின்றன என்றவாறு.

Meanings:  யாம் – I (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive, காமம் தாங்கவும் –  despite me bearing my love pain, தாம் தம் கெழுதகைமையின – because of the intimacy they feel, அழுதன – they cried, தோழி – O friend, கன்று ஆற்றுப்படுத்த – herded the calves on the path, புன்தலை – parched heads, dirty heads, heads with scanty hair, small heads, சிறாஅர் – children (இசைநிறை அளபெடை), மன்ற வேங்கை – Indian kino trees in the public  grounds, Pterocarpus marsupium, மலர் பதம் நோக்கி – on seeing its flowers blossom beautifully, ஏறாது இட்ட ஏமப் பூசல் – without climbing they shouted happily, விண் தோய் – sky high, விடர் அகத்து இயம்பும் – sounds roar inside the caves, குன்ற நாடன் – the man from the mountain country, கண்ட எம் கண் – my eyes that saw him (எம் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 242, குழற்றத்தனார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
கானங்கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை, வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,  5
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.

Kurunthokai 242, Kulatrathanār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother
Our innocent daughter lives in a
small village in the woodland with
fragrances of flowers, where cold
water droplets dripping from bushes,
spray on the neck of a jungle fowl
that calls his female with his sweet,
desirable calls.

The noble man who had to travel
on the king’s business, will not stay
away for long.
His chariot will come back soon.

Notes:  The foster mother who visited the couple in their marital home said this to the heroine’ mother on arrival.  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதல் கானங்கோழியின் எருத்தில் தண் சிதர் உறைக்கும் என்றது, தன் பால் அடைக்கலம் புக்க தலைவியின் பால் தலைவன் பெரிதும் தண்ணளியுடையவன் என்னும் குறிப்பிற்று.  கவர் குரல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கவர்கின்ற இனிய குரல், உ. வே. சாமிநாதையர் உரை – கவர்த்த குரல்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 66).

Meanings:  கானங்கோழி – forest fowl (அம் – சாரியை), கவர் குரல் சேவல் – a rooster that calls out in a desirable voice, a rooster that calls with split sounds, ஒண் பொறி எருத்தில் – on the brightly spotted neck, தண் சிதர் உறைப்ப – cold water sprays, புதல் நீர் வாரும் – water drips from the bushes, பூ நாறு புறவில் – in the woodlands with flower fragrance, சீறூரோள் – the woman from a small town, ஏ – அசைநிலை, an expletive, மடந்தை – the naive young woman, வேறு ஊர் – to another town, வேந்து விடு தொழிலொடு செலினும் – even if he went on the king-sent business (செலினும் – உம்மை சிறப்பின்கண் வந்தது), சேந்துவரல் அறியாது – won’t know to stay there and come, செம்மல் – the esteemed man’s, தேர் – chariot, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 243, நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்,
புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி, படீஇயர் என் கண்ணே.  5

Kurunthokai 243, Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine said to her friend
I will not think about him,
O friend,
the lord of the vast ocean
shores where birds screech,
and bright-bangled girls
play with little sand houses,
plucking flowers, as bright
as the bells strung around the
necks of horses, of adumpu
creepers whose double-lobed
leaves are like deer hooves.

May my eyes go to sleep!

Notes:  The heroine said this to her friend who urged her to be patient when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு ‘நீ ஆற்றி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – தம் விளையாட்டு ஒன்றையே கருதி, மகளிர் பூவை அலைக்கும் சேர்ப்பன் என்றது, தன் வினை ஒன்றையே கருதிப் பிரிந்து என்னை வருந்தச் செய்வான் என்னும் குறிப்பினது.  இரா. இராகவையங்கார் உரை – மகளிர் தார்மணி போன்ற நல்ல அரும்பின் மலரைக் கொழுதி வண்டற் பாவைக்குச் சூட்டி மகிழும் சேர்ப்பனாகியும் தான் என்னைச் சூட்டாது மடிந்திருப்பான் என்று குறித்தாள்.

Meanings:  மான் அடி அன்ன – like deer hooves/hoofs, கவட்டு இலை அடும்பின் – adumpu vine’s forked/split leaves – Ipomoea pes-caprae, தார் மணி அன்ன – bells on the chain on horses like, ஒண் பூ – bright flowers, கொழுதி – plucking, ஒண் தொடி மகளிர் – woman with bright bangles, வண்டல் அயரும் – playing with little sand houses, புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை – the lord of the vast ocean seashore where birds screech, உள்ளேன் தோழி – I will not think about him my friend, படீஇயர் என் கண் – may my eyes go to sleep (படீஇயர் – சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, வேண்டல் பொருளில் வந்தது, verb ending with a command, used as a request), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 244, கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து,
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்,
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம்  5
உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே.

Kurunthokai 244, Kannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
You came at night
when everyone was sleeping,
like a mighty bull elephant,
and tried to open our night door.

It’s not that we did not hear it.
We heard it, lord!

We were like fine peacocks
that were caught in a net
with their head-crests crushed
and tail feathers ruined, since our
mother without justice embraced
us whenever we were distressed.

Notes:  The heroine’s friend said to the hero who came for a night tryst that the heroine is under strict guard, and urged him to come and marry her.  தலைவன் இரவுக்குறி வந்து ஒழுகிய காலத்தில் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது.  நள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – நளி ‘நள்’ என்பதன் திரிபு.  உ. வே. சாமிநாதையர் உரை – ஓரி – ஆண் தலைமயிர்.  இங்கே ஆண் மயிலின் கொன்றைக்காயிற்று.  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.

Meanings:  பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து – at pitch dark midnight time when everyone was sleeping, உரவுக் களிறு போல் வந்து – you came like a strong elephant, இரவுக் கதவு முயறல் – you tried to open the night door, கேளேம் அல்லேம் – it is not that we did not hear, கேட்டனெம் – we heard it, பெரும – O lord, ஓரி முருங்க – head crest crushed, பீலி சாய – feathers ruined, நன் மயில் வலைப்பட்டாங்கு – like a fine peacock that got caught in the net, யாம் உயங்குதொறும் – whenever we moved in distress, முயங்கும் – she embraced us, she held us closely, அறன் இல் – without fairness (அறன்-  அறம் என்பதன் போலி), without justice, யாய் – mother, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 245, மாலைமாறனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே,
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை,  5
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

Kurunthokai 245, Mālaimāranār, Neythal Thinai – What the heroine said to her friend
If his cruelty were known to
many, the lord of the delicate
shores,
where thick thāzhai trees with
leaves having sword-like sharp
edges are fences,
it would be much worse than
the loss of my beauty that was
praised by my friends,
in the beautiful seashore grove.

Notes:  The heroine said this to her friend who worried about her separation sorrow when the hero went to earn wealth for their marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – செயற்கையானன்றி இயல்பாகவே உள்ள தாழை வேலி ஆவது போல, நீ கூற வேண்டாமே இயல்பாகவே தலைவன் கொடுமையை நான் மறைத்து ஆற்றுவேன் என்பது குறிப்பு.  இரா. இராகவையங்கார் உரை – வாள் போல வாய கொழுமடல் தாழை என்றது தாழை கொழுமடலுடையது, வாள் போல் வாயுடைய தோடும் உடையதாயினாற் போல, இக்களவு இன்பமுடையதாயும் துன்பமுடையதாயும் இருத்தல் இயல்பென்று குறித்தாள்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கடல் அம் கானல் – beautiful seashore grove, seashore grove (அம் – சாரியையுமாம்), ஆயம் ஆய்ந்த என் நலம் – my virtue/beauty that they praised, இழந்ததனினும் – more than the loss, நனி இன்னாதே – gives lot of pain, வாள் போல் வாய – sword like edges, கொழு மடல் – thick fronds, தாழை – thāzhai trees, Pandanus odoratissimus, மாலை வேல் நாட்டு – like rows of spears stuck, வேலி ஆகும் – is a fence, மெல்லம்புலம்பன் – the lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), கொடுமை – cruelty, பல்லோர் அறிய – for many to know, பரந்து வெளிப்படின் – if it comes out widely, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 246, கபிலர், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப்
பனிக் கழி துழவும் பானாள், தனித்தோர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப, அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை, பிறரும்  5
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பாலோரே.

Kurunthokai 246, Kapilar, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
They say a single chariot
came and went away in the
middle of the night
on the vast ocean shores,
where a small white gull looks
for food in the cold backwaters,
disturbing the green leaves
that look like elephant ears.

Mother has been harassing me
since then.  There are many young
naive women with hanging braids
and gleaming jewels, who have the
good destiny to have mothers who
do not bother them.

Notes:  The heroine said this to her friend, aware that the hero was nearby.  She urged him to come and marry her.  தோழிக்கு கூறுவாளாய்த் காவல் மிகுதியைக் கூறி வரைவு கடாயது.  பானாள் (3) –  உ. வே. சாமிநாதையர் உரை – பாதி இரவு, இரா. இராகவையங்கார் உரை – பாதியாகிய பகல். பின்னு விடு (6) –  உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் நாலவிடப்பட்ட (தொங்கவிடப்பட்ட), பின்னுதல் செய்யப்பட்ட கூந்தல் எனினுமாம்.  பின்னு விடு – அகநானூறு 158 – வேங்கடசாமி நாட்டார் உரை – பின்னல் நெகிழ்ந்தமையின், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் அவிழ்ந்தமையாலே, நற்றிணை 51 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய, ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற.

Meanings:  பெருங்கடல் கரையது – on the seashore of the big ocean, சிறுவெண்காக்கை – a small sea-gull, Indian black-headed sea gull, Larus ichthyactus, களிற்றுச் செவியன்ன – like the ears of male elephants, பாசடை – green leaves, மயக்கி – disturbing, பனிக் கழி – cold salty backwaters, துழவும் – searches for food, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), தனித்து ஓர்  தேர் வந்து பெயர்ந்தது – a single chariot came alone and went, என்ப – they say, அதற் கொண்டு – since then, ஓரும் – அசைநிலை, an expletive, அலைக்கும் அன்னை – harassing mother, பிறரும் – others, பின்னு விடு கதுப்பின் – with hair with braids, with hanging hair, மின் இழை மகளிர் – girls wearing flashy jewels, இளையரும் மடவரும் – young and naive woman, உளர் – are there, ஏ – அசைநிலை, an expletive, அலையாத் தாயரொடு – with mothers who do not bother them, நற்பாலோர் – those with good destiny, ஏ – அசைநிலை, an expletive, தேற்றம், certainty

குறுந்தொகை 247, சேந்தம் பூதனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
எழின் மிக உடைய ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய் வினை அறவதாகும்,
கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென
ஆங்கு அறிந்திசினே தோழி, வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை  5
ஆர் துயில் இயம்பு நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

Kurunthokai 247, Sēnthampoothanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
This is what I understand,
O friend!
A beautiful thing will happen
here very soon!

For women with relatives,
this is good support.
Wise elders are working on it,
and it is the right thing to do.

He has held his faultless love
in his chest,
your man from the country where
an elephant takes a rare nap, and
snores loudly under a vēngai tree
with unspoiled, delicate branches
that shed flower blossoms.

Notes:  The heroine’s friend told the heroine that the hero will come soon and marry her.  தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கை மலர் தன் மேல் உதிரப் புறத்தே செவிப்படும் ஒளியோடு யானை தூங்கும் நாடன் என்றது தலைவன் இருவகைச் சுற்றத்தாரும் பாராட்ட அவரிடையே தலைவியை மணந்துக் கொண்டு வெளிப்படையாகத் தலைவியின் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பினது.  திறவோர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரணஞ் செய்யும் முறைகளைத் திறம்பட கற்றோர் என்பாள், ‘திறவோர்’ என்றாள்.  மென் சினை வீ உக (4-5) – உ. வே. சாமிநாதையர் உரை – மெல்லிய கிளைகளில் இருந்து மலர்கள் உதிர, அங்ஙனம் உதிரும் இடத்திலே, தமிழண்ணல் உரை – மெல்லிய கிளை பூக்களை உதிர்க்குமாறு அதன் கீழ்ப் படுத்திருக்கும் யானை பெருமூச்சு விடும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  எழின் மிக உடைய – it is very beautiful, ஈங்கு அணிப்படூஉம் – will happen here soon (அணிப்படூஉம் – இன்னிசை அளபெடை), திறவோர் செய் வினை – wise people are doing it, those who know wedding rituals are doing it, அறவது ஆகும் – it is the just thing, கிளை உடை மாந்தர்க்கு – for those with relatives, புணையுமாம் – becomes support, இவ்வென ஆங்கு – thus, there, அறிந்திசின் – I understand (இசின் – தன்மை அசைநிலை, an expletive of the first person), ஏ – அசைநிலை, an expletive, தோழி – my friend, வேங்கை – Indian kino trees,  Pterocarpus marsupium, வீயா மென் சினை – unspoilt delicate branches, வீ உக – flowers drop, யானை ஆர் துயில் இயம்பு – elephants take rare sleep with sounds/snores/snorts, நாடன் – the man from such country, மார்பு உரித்து ஆகிய – holding in his chest, மறு இல் நட்பு – faultless friendship, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 248, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அது வரல் அன்மையோ அரிதே, அவன் மார்
உறுக வென்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி, கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனைக்  5
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.

Kurunthokai 248, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Mother knows about him
from great words, my friend,
the lord of the seashore
where tall palmyra trees appear
short in the seashore groves,
their swaying trunks half-buried
in the sand dunes brought by the
westerly winds on which adumpu
creepers have spread.

It would be rare if the wedding
does not happen soon.  They will
ask you to be in his embraces.
You need not be depressed.

Notes:  The heroine’s friend assured the heroine that the wedding will happen, on seeing her worried.  வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘வரைவு நிகழ்தற்குரிய ஏதுக்கள் உளவாதலை உணர்த்தித் தோழி ஆற்றுப்படுத்தியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய பனையின் அடியைக் கோடைக் காற்றுப் புதைத்துக் குறியதாக்கும் என்றது, வரைவுக்கு நெடிதாயிருந்த காலத்தை ஊழ் அணித்தே கொண்டு வந்தது என்னும் குறிப்பிற்று.  யாய் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுச் செவிலி.  பெரிய கூறி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி கற்புக்கடம் பூண்டமையை யான் கூறுதலானே, உ. வே. சாமிநாதையர் உரை – முருகனென்று சொல்லி வெறியெடுத்து.

Meanings:  அது வரல் – for the wedding to happen (அது – நெஞ்சறி சுட்டு, வரைவு நாளைச் சுட்டியது), ஓ – அசைநிலை, an expletive, அன்மை அரிது – it will be rare if it isn’t, ஏ – தேற்றம், certainty, அவன் மார்பு – his chest, உறுக – அடைக, may you embrace, என்ற நாளே குறுகி – getting closer to that day that was set, ஈங்கு ஆகின்றே – it is happening here, தோழி – my friend, கானல் – seashore grove, ஆடு – swaying, அரை புதைய – trunks buried (in the shifting sands), கோடை இட்ட – summer winds brought, அடும்பு இவர் – adumpu creepers spreading, Ipomoea pes-caprae., மணல் கோடு – sand dunes, ஊர – moving, shifting, நெடும் பனை – the tall palmyra palms, குறிய ஆகும் – they become short, துறைவனை – the lord of the seashore, பெரிய கூறி – telling the family about your love affair, from the veriyāttam ritual, யாய் அறிந்தனள் – mother knows about it, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 249, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி,
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே?  5

Kurunthokai 249, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Look at my forehead, O friend!
Has my brow become lovely like
it used to be in the past,
since I looked at his mountain
where heavy rain pours down,
peacocks cry in tree-filled forests
and white-faced, black monkeys
tremble with their young in the
cold on the slopes?

Notes:  The heroine said this to her friend who asked her if she was able to handle separation from the hero who had gone to earn wealth.  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ‘ நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?’ என்ற தோழியிடம் தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை –  தலைவி “இப்பொழுது என் நுதலைப் பார்.  பழைய விளக்கம் அதன்பால் உண்டாயிற்றன்றே.  இங்ஙனமே தலைவர் குன்றத்தைப் பார்த்துப் பார்த்து ஆற்றுவேன்” என்று கூறினாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  இன மயில் அகவும் – flocks of peacock cry, மரம் பயில் கானத்து – in the forests filled with trees, in the forest dense with trees (பயில் – நெருங்கிய, அடர்ந்த), நரை முக ஊகம் – black monkeys with white faces, பார்ப்பொடு – with their young, பனிப்ப – causing trembling, causing chillness, படுமழை பொழிந்த – heavy rains fall, rain fell low, சாரல் – mountain slopes, அவர் நாட்டுக் குன்ற நோக்கினென் – I saw his country’s mountain, தோழி – my friend, பண்டை அற்றோ – is it like in the past, கண்டிசின் – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), நுதல் – my brow, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 250, நாமலார் மகனார் இளங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவைக் கால் இயல்
கடு மாக் கடவுமதி பாக, நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்  5
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

Kurunthokai 250, Nāmalār Makanār Ilankannanār, Pālai Thini – What the hero said to his charioteer
Urge your swift steeds and ride fast,
O charioteer!  Go like the wind!

Let’s go before evening, when fine
stags drink the stagnant water from
ditches with pebbles, and romp
around with their mates on our path,

so that we can remove the sorrow
of the woman of chosen, sweet words,
whose kohl-lined eyes are like warring
carp fish that are in deep waters.

Notes:  The hero who was returning after a successful trip said this to his charioteer, goaded by his desire to see the heroine soon.  வினை முற்றி மீண்டுவரும் தலைவன் தலைவியை விரைந்து காணும் அவாவினால் பாகனுக்குக் கூறியது.  உண்கண் (5) – இரா. இராகவையங்கார் உரை – மையிட்ட கண்கள், என் நெஞ்சத்தை உண்ட கண்கள்  என்பதுமாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  பரல் அவல் படுநீர் – stagnant water in ditches with small pebbles, மாந்தி – drinking, துணையோடு இரலை – a stag with his female, நன் மான் – fine deer, நெறி முதல் உகளும் – they romp around on the path, மாலை வாரா அளவை – before evening time, கால் இயல் – fast like the wind, கடு மாக் கடவுமதி பாக – ride rapidly your fast horse O charioteer  (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), நெடு நீர் – deep water, பொரு கயல் – fighting carp fish, cyprinus fimbriatus, முரணிய – differing, hostile, உண்கண் – kohl rimmed eyes, தெரி தீம் கிளவி – a woman of chosen sweet words (அன்மொழித்தொகை), தெருமரல் உய – to escape from sorrow (உய – உய்ய என்பதன் இடைக்குறை), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 251, இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ வாழி மஞ்ஞை மா இனம்,
கால மாரி பெய்தென அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்  5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

Kurunthokai 251, Idaikkādanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
May your sorrow end, O friend!
This is not the rainy season.

In order to drink new water from
the ocean, the clouds that held
left-over water from last year’s rainy
season, are shedding their waters as
rains with roaring thunder.
On hearing that, in ignorance, huge
peacock flocks dance and wild
jasmine flowers have blossomed.

Notes:  The heroine who worried on seeing signs of the rainy season, is comforted by her friend who assured her that the rainy season has not arrived.  தலைவன் கூறிச்சென்ற கார்காலம் வந்தபொழுது தலைவி வருந்த, ‘இது கார்ப்பருவ மழையன்று.  வம்ப மழை’ எனக்கூறி, தோழி அவளை ஆற்றுவித்தது.  குறுந்தொகை – 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, நற்றிணை 99 –  பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.   இரா. இராகவையங்கார் உரை – ஐயறிவுடைய மயில் காலமென ஆலின ஆதலின், ஓரறிவு உயிராகிய பிடவும் பூத்தன.  இவை எல்லாம் நம் போல் ஆறறிவு உடைய அல்லாதலின் ‘மடவ’ என்று கூறி பருவம் ஆயின் அவர் வரவு தப்பாது என்று தேற்றியவாறாம்.

Meanings:  மடவ – they are ignorant, வாழி – அசைநிலை, an expletive, மஞ்ஞை – peacock, மா இனம் – big flocks, dark colored flocks, கால மாரி பெய்தென – thinking it is the season’s rain, அதன் எதிர் – accepting it, reacting to it, ஆலலும் ஆலின – they danced and danced, பிடவும் பூத்தன – the pidavam flowers bloomed, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, கார் அன்று – it is not rainy season, இகுளை – my friend, தீர்க – may it end, நின் – your, படர் – sorrow, ஏ – அசைநிலை, an expletive, கழிந்த மாரிக்கு – from last season’s rain, ஒழிந்த பழ நீர் – old rain that did not fall, leftover old water, புது நீர் கொளீஇய – in order to get new water (கொளீஇய – செய்யுளிசை அளபெடை), உகுத்தரும் – dropping, shedding, நொதுமல் வானத்து – of unseasonal clouds, முழங்கு குரல் கேட்டு – on hearing the thundering sounds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 252, கிடங்கில் குலபதி நக்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியனாகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலையின் இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு,  5
துனியல் வாழி தோழி, சான்றோர்
புகழும் முன்னர் நாணுப,
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.

Kurunthokai 252, Kidangil Kulapathi Nakkannanār, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Do not be upset!  You ask me
why I am a very naive woman
with the virtue of a goddess,
hospitable to the cruel man
from the mountain country
whenever he comes, without
turning away my sweet face.

The wise will feel ashamed
in front of praise.  How can he
tolerate if I blame him for what
he has done?

Notes: குறிஞ்சியுள் மருதம்.  Marutham in Kurinji. The heroine said this to her friend who questioned her for accepting the hero who returned from his concubine’s house. பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள, ‘இங்ஙனம் ஏற்றுக் கொள்ளல் அறிவோ?’ என்று வினவிய தோழியிடம் தலைவி கூறியது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வாழி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.  சான்றோர் புகழும் முன்னர் நாணுப (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கண் முன்னர்ப் பிறர் தம்மைப் புகழும் புகழையும் நல்லோர் நாணுப என்றவாறு, உ. வே. சாமிநாதையர் உரை – சான்றோர் இயல்பு இதுவென உலகின் மேல் வைத்துக் கூறினும் தலைவி கருதியது தலைவனையே என்க.

Meanings:  நெடிய திரண்ட தோள் – long rounded arms, long thick arms, வளை ஞெகிழ்த்த – caused the bangles to slip down (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கொடியனாகிய குன்று கெழு நாடன் – the cruel man from the country with mountains, வருவதோர் காலையின் – when he comes, இன் முகம் – sweet face,  திரியாது – not differing, கடவுள் கற்பின் – with virtue like that of a goddess (கற்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அவன் எதிர் பேணி – welcoming him with hospitality, மடவை மன்ற நீ – you are a naive woman for sure (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), என – thus, கடவுபு – asking, துனியல் –  do not be angry, do not be sad, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, சான்றோர் – the wise people, புகழும் முன்னர் நாணுப – they will be ashamed in front of praise, they will feel embarrassed, பழி – blame, யாங்கு ஒல்ப – how will he tolerate, ஓ – அசைநிலை, an expletive, காணுங்கால் – when he faces it, if analyzed, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 253, பூங்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கேளார் ஆகுவர் தோழி, கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும், நெகிழ் நூல்
பூச்சேர் அணையின் பெருங்கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப்பின் நீடலர் மாதோ,
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்  5
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு சென் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

Kurunthokai 253, Poonkannanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He cannot hear you, my friend,
your lover who went past bright
mountains with towering peaks,
where tall bamboo stalks create
sounds banging against each
other on lofty mountain peaks,
and flesh-reeking rock caves
where tigers save their kills are
shelters for those who travel.

If he can hear you, he will give
up his quest to earn wealth.
He will return on time to abate
your torment that has ruined your
exquisite beauty, as you lie on
a bed woven with flowers, whose
threads have loosened.

Notes:  The heroine’s friend comforted the heroine when she was unable to bear the pain of separation.  தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – கேட்பின் நீடலர் என்ற குறிப்பு நான் தூது விட்டு நின் துயர் நிலையை அறிவித்து மீளச் செய்வேன் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றது.  இது கற்பு காலத்தது.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  கேளார் ஆகுவர் – he is unable to hear, தோழி – my friend, கேட்பின் – if he hears, விழுமிது கழிவது ஆயினும் – even if he loses fine wealth, நெகிழ் நூல் – threads are loose, பூச்சேர் அணையின் – in a bed with flowers (garlands), பெருங்கவின் தொலைந்த – ruined great beauty, நின் நாள் துயர் – your sorrow, கெட – to be ruined – பின் நீடலர் – he will not delay after that, மாது – அசைநிலை, an expletive, ஓ – அசைநிலை, an expletive, ஒலி கழை – loud/flourishing bamboo, Bambusa arundinacea, நிவந்த – tall, ஓங்கு மலைச் சாரல் – lofty mountain slopes, புலி புகா உறுத்த – tigers kept their food, புலவு நாறு கல் அளை- meat stinking rock cave, ஆறு சென் மாக்கள் – people who go on the path, சேக்கும் – stay, கோடு உயர் பிறங்கல் மலை – bright mountains with tall peaks, இறந்தோர் – the man who went past, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 254, பார்காப்பானார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன, வாரா தோழி,
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்,
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்,  5
செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால் வரூஉம் தூதே.

Kurunthokai 254, Pārkāppanār, Pālai Thinai – What the heroine said to her friend
They have arrived,
the new flowers that have
opened from delicate,
breast-shaped buds, on the
leafless, beautiful branches
of kōngam trees, that are
swarmed by bees.

He has not come,
my lover who went with
a desire to earth wealth,
who has forgotten sweet
sleep at nights on my
thick, fragrant hair.

There are no messengers
yet to announce his arrival.

Notes:  The heroine said this to her friend who urged her to be patient when she was sad on seeing the season change. பருவங்கண்டு வருந்தும் தலைவியிடம் ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  முலை ஏர் மென் முகை (2) –  உ. வே. சாமிநாதையர் உரை – நகிலை ஒத்த அரும்புகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – முலையினது அழகைக் கொண்ட மெல்லிய அரும்புகள்.

Meanings:  இலை இல் – without leaves, அம் சினை – beautiful branches, இன வண்டு ஆர்ப்ப – swarms of bees buzz, முலை ஏர் மென் முகை – breast-like delicate buds (ஏர் – உவம உருபு, a comparison word), அவிழ்ந்த கோங்கின் – open kōngam flowers, Cochlospermum gossypium, a gum producing tree, தலை அலர் வந்தன – flowers that blossom first have come, வாரா – have not come (messages), தோழி – O friend, துயில் இன் கங்குல் – night with sweet sleep, துயில் அவர் மறந்தனர் – he forgot sleep, பயில் நறும் கதுப்பின் – on the thick fragrant hair, பாயலும் – about sleeping (உம்மை உயர்வு சிறப்பு), உள்ளார் – he does not think, செய்பொருள் தரல் – to bring back wealth, நசைஇச் சென்றோர் – the one who went with desire (நசைஇ – சொல்லிசை அளபெடை), எய்தினர் – he will be back, ஆல் – அசைநிலை, an expletive, என – thus, வரூஉம் தூதே – messages that come (வரூஉம் – இன்னிசை அளபெடை, தூதே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 255, கடுகு பெருந்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழு முதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச்
சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி,  5
தம் கடன் இறீஇய எண்ணி இடந்தொறும்
காமர் பொருள் பிணிப் போகிய
நாம் வெங்காதலர் சென்ற ஆறே.

Kurunthokai 255, Kaduku Perunthēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your lover goes everywhere,
thinking about his duty to earn
desired wealth.

In the harsh path that he took,
he must have seen a male elephant
thrusting his big tusks into thick,
dense yā tree trunks with no holes
and rough barks, and bending their
branches down,
to feel his small-eyed, hungry herd
walking in a row with painful steps.

Notes:  The heroine’s friend said this to the heroine who thought that the hero who had gone on a quest for wealth might return early.  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநின்று மீள்வர் என்று எண்ணிய தலைவியிடம் தோழி சொன்னது.  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.   தமிழண்ணல் உரை – யானைக் குடும்ப வாழ்க்கை தலைவனுக்குப் பொருளைத் தேடிச் சென்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் விழைவைத் தூண்டும்.  இதுவே இறைச்சி எனப்படும்.  யானை தன் குடும்பப் பசியைத் தீர்த்ததைக் காணும் அவர், பொருளைத்தேடியே திரும்புவர் என்ற குறிப்பை உணர்த்துகிறது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). fஉறு வளி

Meanings:  பொத்து இல் – without holes, without hollow parts, அத்த – on the harsh path, in the wasteland, காழ –  having hard cores (வைரம் பாய்ந்த), யாஅத்து – of yā trees, ஆச்சா மரம், Hardwickia binate (இசை நிறை அளபெடை), பொரி அரை – cracked barks, rough barks, முழு முதல் – thick trunk, உருவ – to be able to pull out, குத்தி – thrusting, stabbing, மறம் கெழு – with strength, தடக் கையின் – with big trunks, with curved trunks, வாங்கி – bending, pulling, உயங்கு நடை – sad walk, சிறுகண் – small eyes, பெரு நிரை – big herd in a row, உறு பசி தீர்க்கும் – end excessive hunger, தட மருப்பு யானை – an elephant with big/curved tusks, கண்டனர் தோழி – he must have seen them my friend, தம் கடன் இறீஇய எண்ணி – thinking about performing his duty (இறீஇய – செய்யுளிசை அளபெடை), இடந்தொறும் – everywhere, காமர் பொருள் பிணிப் போகிய – went to earn desirable wealth, நாம் வெங்காதலர் – our desirable lover, சென்ற – went, ஆறு – the path, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 256, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் சொன்னது
‘மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை
பிணி கால் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ வருதும் அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய்?’ எனச்  5
சொல்லா முன்னர், நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.

Kurunthokai 256, Unknown Poet, Pālai Thinai – What the hero said
I tried to tell her,
“O young woman wearing
flower-like earrings!
I shall go into the forests
……….where a stag prances
……….with his mate after eating
……….arukam grass with long,
……….sapphire-hued stems,
……….removing its matted roots,
and return after my work is done.
Will you endure until then?”

Even before I finished speaking,
she cried unceasingly, and her eyes,
filled with tears that hid the pupils,
halted my chariot in its tracks.

Notes:  The hero who had considered to leave to earn wealth, decided not to leave.  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் செலவு அழுங்கியது.  நீர் விலங்கு அழுதல் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – நீரால் மாறுபடுதலை உடைய அழுகை, நீர் கண்ணில் உள்ள பாவையை மறைக்கின்ற அழுகை என்பதும் ஆம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர்த் துளிகள் புறப்பட்டு ஒழுகுதல், இரா. இராகவையங்கார் உரை – நீர்த்துளிகள் நில்லாவாய்க் குறுக்கிடும் அழுகை.  அகநானூறு 5 – பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   மணி வார்ந்தன்ன – like long sapphire strands, மாக்கொடி – dark creeper, அறுகை – arukam grass, பதவு, Cynodon grass, பிணி கால் – ties removed, roots removed, மென் கொம்பு – delicate stems, பிணையொடும் – with its female, ஆர்ந்த – eating, மான் ஏறு உகளும் – male deer romps around, male deer leaps around, கானம் – forest, பிற்பட – making it go behind, going past it, வினை நலம் படீஇ வருதும் – I will come after my work is finished in a good manner (படீஇ – சொல்லிசை அளபெடை), அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ – will you be able to tolerate until then, பூங்குழையோய் – O one wearing flower-like earrings, O one wearing pretty earrings, எனச் சொல்லா முன்னர் – even before I said that, நில்லா ஆகி – not stopping, நீர் விலங்கு அழுதல் ஆனா – she cried not stopping her tears, she cried not stopping and her tears hid the pupils in her eye, தேர் விலங்கினவால் – they blocked my chariot (விலங்கினவால் – ஆல் அசைநிலை, an expletive), தெரிவை – the young woman, கண் – eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 257, உறையூர்ச் சிறுகந்தனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்,
அகலினும் அகலாது ஆகி  5
இகலும் தோழி, நம் காமத்துப் பகையே.

Kurunthokai 257, Uraiyūr Sirukanthanār, Kurinji Thinai – What the heroine said to her friend
Whenever he comes,
it comes too and teases me,
but does not leave when he
leaves, my enemy, this love
that I have for the lord of the
mountains with very loud noises,

where roots, trunks and branches,
are next to each other on trees on
on which clusters of ripe jackfruits
hang low.

Notes:  The heroine said this to her friend who informed her that wedding arrangements were being made.  வரைவு உணர்த்திய தோழியிடம் தலைவி சொன்னது.  வீழ் கோள் பலவின் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தணிந்த குலைகளையுடைய பலா மரத்தினை உடைய, தமிழண்ணல் உரை – விழுவதுபோலத் தோன்றும் பழக்குலைகள்.  பொ. வே. சோமசுந்தரனார் – உரைகளவிற் போன்று புணர்தலும் பிரிதலுமின்றி யாண்டும் ஒருபடியாய் இனித் தலைவன் நம்மோடு உடனுறைந்து இன்பம் செய்வன் என்பாள், ‘வேரும் முதலும் கோடும் ஒராங்குத் தொடரிய கோட்பலாவுடைய வெற்பன்’ என்றாள்.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  வேரும் முதலும் கோடும் – roots trunk and branches, ஒராங்குத் தொடுத்த போல – like they are all linked together, தூங்குபு தொடரி கீழ் தாழ்வு அன்ன – like hanging down continuously and low, வீழ் கோள் பலவின் – with jackfruit trees with jackfruit clusters that hang low, with jackfruit trees with desirable clusters, ஆர்கலி வெற்பன்- the lord of the very loud mountains, வருதொறும் – whenever he comes, வரூஉம் – it will come (இன்னிசை அளபெடை), அகலினும் – even when he leaves, அகலாது ஆகி – it will not leave, இகலும் – it teases me, it differs from me, தோழி – O friend, நம் காமத்து – my love (நம் – தன்மைப் பன்மை, first person plural, அத்து – வேண்டாவழிச் சாரியை), பகை – an enemy, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 258, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாரல் எம் சேரி, தாரல் நின் தாரே,
அலர் ஆகின்றால் பெரும, காவிரிப்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவின் அம் தோட்டு வேட்டை  5
நிரைய ஒள் வாள் இளைஞர் பெரு மகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைதல் கண்டே.

Kurunthokai 258, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero
Do not come to our street!
Do not give us your garland!

Gossip has risen, O lord,
since it has been lost,
her blemishless beauty,

like that of Ārcot town of Alisi,
father to Sēnthan who ties
his elephants with lifted tusks
on marutham trees on the
banks of River Kāviri
where many go to bathe,
a leader to young warriors who
feast on alcohol as food,
hunting herds of wild animals
and carrying bright, hellish spears.

Notes:  The heroine’s friend refused entry to the hero.  It could also be that she allowed entry.  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல்.  வாயில் உடன்பட்டது என்பதும் பொருந்தும்.  நற்றிணை 190 – சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  சேரி – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 231 – தெரு.  இரா. இராகவையங்கார் உரை – சேந்தன் பலராடு பெருந்துறை மருதிடத்து யானையைப் பிணித்த என்றது பலருமாறியப் பாணன் தலைவனைப் பரத்தையிடத்துப் பிணித்ததாகவும், அரியலம் புகவின் அம் தோடு வேட்டை என்றது அப் பரத்தையருடன் மகிழ்தற்குத் தன் செல்வம் இழப்பவன் ஆகவும் குறித்துக் கொள்ளலாம்.  வரலாறு:  சேந்தன், அழிசி, ஆர்க்காடு, காவிரி.

Meanings:  வாரல் எம் சேரி – do not come to our settlement, do not come to our street (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), தாரல் நின் தார் – do not give your garland, அலர் ஆகின்று ஆல் – since gossip has risen (ஆல் = அசைச் சொல், an expletive), ஏ – அசைநிலை, an expletive, பெரும – O lord, காவிரிப் பலர் ஆடு பெருந்துறை – big port in the Kāviri river where many play, மருதொடு பிணித்த – tied to the marutham trees, arjuna tree, Terminalia arjuna, ஏந்து கோட்டு யானை – elephant with lifted tusks, சேந்தன் தந்தை – father of Sēnthan, அரியலம் புகவின் – liquor as food (அம் – சாரியை, augment), அம் தோட்டு வேட்டை – hunting beautiful herds of animals, நிரைய – hellish (நிரயம் = hell), fierce, ஒள் வாள் – bright swords, இளைஞர் பெருமகன் – a leader to young warriors, அழிசி ஆர்க்காடு அன்ன – like Alisi of Ārcot, இவள் பழி தீர் மாண் நலம் – her blemishless fine virtue/beauty, தொலைதல் – losing, கண்டு – seeing it, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 259, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறுங்காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறுநுதல்
பல்லிதழ் மழைக் கண் மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,  5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போற்
பொய் மொழி கூறல் அஃது எவனோ,
நெஞ்சம் நன்றே நின் வயினானே?

Kurunthokai 259, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
O my dark friend with a brow
intensely fragrant as the cool,
aroma-filled glory lily
buds that open near the waterfalls
that flow from the mountains
as rainclouds rise up and shower,
and eyes like cool lotus blossoms
with many petals!

You can tolerate my mistakes
or kill me.  You are an esteemed
person and an intelligent judge.
What is the use of telling lies?
His good heart is with you.

Notes:  The heroine’s friend who had informed the family about the love affair without the approval of the heroine said this.  காவல் மிகுந்ததால் தலைவியின் உடன்பாடின்றத் தானே அறத்தொடு நின்ற தோழி கூறியது.  அருவி ஆர்ந்த தண் நறுங்காந்தள் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அருவி நீரைப் பருகிய தண்ணிய நறிய காந்தள், உ. வே. சாமிநாதையர் உரை – அருவிக்கு அருகில் பொருந்திய தண் நறு காந்தள், தமிழண்ணல் உரை – அருவிநீர் படிந்த தண்ணிய நறிய காந்தள், இரா. இராகவையங்கார் உரை – அருவியோர்த்து நிறைந்த காந்தள்.  கொல்வை ஆயினும் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – சினந்து கொல்வாய் ஆயினும், இரா. இராகவையங்கார் உரை – அவனுடன் போவதற்கு உன் நாணினைக் கொல்வையாயினும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப் பருவத்தே மலையினது அருவியைப் பருகிக் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் என்றது, ‘யான் அறத்தொடு நின்றமையால் செவிலி உட்கொண்டு நற்றாய் முதலியோர்க்கு உணர்த்துவள்; அதனால் தமர் வரைவு மலிந்து திருமணம் நிகழும்’ என்று குறிப்பால் உணர்த்தியவாறு.

Meanings:  மழை சேர்ந்து – clouds joined together, எழுதரு – they rise up, மாரிக் குன்றத்து – on the mountains with rain, அருவி ஆர்ந்த – near the waterfalls, drinking water from the waterfalls, absorbing water from the waterfalls, listening to the waterfalls (ஆர்ந்த – பொருந்திய, பருகிய, படிந்த, ஓர்த்த), தண் நறுங்காந்தள் – cool fragrant glory lilies, Gloriosa superba, முகை அவிழ்ந்து – buds opened, ஆனா – continuous, endless, நாறும் – fragrant, நறுநுதல் – fragrant forehead, பல்லிதழ் – many petaled flowers/lotus blossoms (பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), மழைக் கண் – cool eyes, moist eyes, மாஅயோயே – O dark woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் விளி), ஒல்வை ஆயினும் – if you tolerate my mistakes, கொல்வை ஆயினும் – if you kill me, நீ அளந்து அறிவை – you are intelligent to judge, நின் புரைமை – your esteem, வாய் போல் – like truth, பொய் மொழி – lies, கூறல் – to tell, அஃது எவன் – what is the use, ஓ – அசைநிலை, an expletive, நெஞ்ச நன்று – his heart is good, ஏ – தேற்றம், certainty, நின் வயினான் – for you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 260, கல்லாடனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குருகும் இரு விசும்பு இவரும், புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே,
சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்,
வருவர் கொல் வாழி தோழி, பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை  5
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

Kurunthokai 260, Kallādanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Herons are flying high in the
wide sky,
striped bees swarm on bushes
causing flower buds to open,
and your fine arms with bangles
made from spiraled conch shells
will thicken since he is returning.
May you live long, my friend!

He went past the wilderness,
where a single cow without calf,
rests in the shade of an ōmai tree
with withered trunk whose shade
prevents it from leaving, in the
mountains dense with surapunnai
trees belonging to the Thondai kings
whose fine chariots are drawn by
noble elephants that eat the soil
of enemy lands.

Notes:  The heroine’s friend comforted her saying that there are good omens which indicate that the hero will return soon.  தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி ‘நல்ல நிமித்தங்கள் உண்டாகின்றன.  ஆதலின் தலைவர் விரைவில் வந்து விடுவார்’ என்று தோழி கூறியது. அகநானூறு 213-1 – வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்.  புன் தாள் (8) – உ. வே. சாமிநாதையர் உரை – சிவந்த தாளெனலும் பொருந்தும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாரை வானத்தில் உயர்ந்து பறத்தல் நன்நிமித்தம் என்னும் கொள்கை உண்டு போலும்.  வண்டு ஊதா நிற்பப் புதல் மலர்தல் தலைவர் வருகையை அறிவிக்கும் தூது பெறுவாம் என்னும் குறிப்புடைத்து.  தோள்வளை இறுகுதல் நன்னிமித்தம்.  கன்றில்லா மலட்டு ஆவே தங்கும் என்றமையாலே, நின்பாற் பேரன்புடைய தலைவர் நின்னை நினைந்து மீள்வர் என்பது குறிப்பு.  வரலாறு:  தொண்டையர்.

Meanings:  குருகும் – herons/egrets/storks, இரு விசும்பு – dark sky, vast sky, இவரும் – they fly high, புதலும் – bushes (buds on bushes, புதலும் – ஆகுபெயர்), வரி வண்டு ஊத – since bees with stripes swarm, வாய் நெகிழ்ந்தனவே – they have loosened their ties, they have blossomed, சுரி வளை – whorled conch-shell bangles (வினைத்தொகை), பொலிந்த தோளும் – on the beautiful arms, on the splendid arms, செற்றும் – bangles will become tight on them, arms will become thick, வருவர் – he will come, கொல் – அசைநிலை, an expletive, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – noble elephants that eat the benefits of the lands of enemies, noble elephants that eat help to seize the lands of enemies, வண் தேர்த் தொண்டையர் – Thondaiyar with their fine chariots (Thondai Nadu is an ancient part of the Thamizh land, which included the districts of Arcot, Chingleput and Nellore, with Kancheepuram as its capital), வழை அமல் அடுக்கத்து – in the surapunnai dense slopes, Ochrocarpus Longiflius (அமல் – செறிந்த), (தொண்டையர் மலை – வேங்கட மலை), கன்று இல் ஓர் ஆ – one cow without a calf, விலங்கிய – blocking from leaving its shade, புன் தாள் ஓமைய சுரன் – the wasteland with ōmai trees with dried trunks, Sandpaper tree, Dillenia indica (சுரன் – சுரம் என்பதன் போலி), இறந்தோர் – the man who went past, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 261, கழார்க்கீரன் எயிற்றியார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்,
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்  5
துஞ்சா வாழி தோழி, காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

Kurunthokai 261, Kazhārkeeran Eyitriyanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, my friend!
Old rains have fallen making
sesame pods lose perfection and
become mushy, toward the last
days of the rainy season with
few showers.

Hating to stand in the mud,
a red-eyed female buffalo bawls
in the middle of the night.

Even at that fearful time, because
of the torment of my wounded
heart, my eyes are unable to sleep,
like the guards who calculate time
with caution.

Notes:  Requesting marriage.  வரைவு கடாயது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு ஒவ்வாத மழை பெய்தமையாலே உருகிச் சிதடாய்ப் போன எள்ளையுடைய காலம் என்றது, தனக்கு ஒல்லாத் துன்பங்களாலே நெஞ்சுருகி யான் அழியாநின்றேன் என்னும் குறிப்பிற்று என்க.  இற்செறிக்கப்பட்ட தன் நிலைக்கு உள்ளுறை உவமமாகச் சேற்று நிலை முனையஇய செங்கட் காரான் கரைதலைக் கூறினாள்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  பழ மழை பொழிந்தென – since the old rains fell, பதன் அழிந்து – perfection got ruined, உருகிய சிதட்டுக்காய் – mushy pods with empty insides (sesame pods), எண்ணின் – with sesame plants, having sesame plants, சில் பெயல் கடை நாள் – small showers toward the end of the season, சேற்று நிலை – to stand in the mud, முனைஇய – hating (செய்யுளிசை அளபெடை), செங்கண் காரான் – a red-eyed female buffalo, நள்ளென் யாமத்து – in the pitch dark night, ஐ எனக் கரையும் – shouts loudly, அஞ்சுவரு பொழுதினானும் – even at that fearful time, என் கண் துஞ்சா – my eyes do not sleep, வாழி தோழி – may you live long my friend, காவலர் கணக்கு ஆய் வகையின் – like the guards who calculate time in an analytical manner, வருந்தி – saddened, என் நெஞ்சு – my heart, புண் உற்ற – got hurt, விழுமத்தான் – because of the sorrow, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 262, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை, யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசின், அவரொடு சேய்நாட்டு  5
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

Kurunthokai 262, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Gossip will rise in town; there will
be uproar in our street; and your
unfair mother who hurts you constantly
will be left alone in the house.

I think about you being with him in a
faraway land in the foothills of a sky-high
blocking mountain, drinking water from
puddles created by the feet of large bull
elephants, that appear like the water in the
plots where sugarcane is planted,
and eating gooseberries that will make
your sharp teeth shine.

Notes:  The heroine’s friend urged her to eloped.  தோழி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது.  அறன் இல் யாய் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் நிலையை ஊகத்தால் அறிந்து அவள் விரும்பிய தலைவர்க்கு அவளை மணஞ் செய்வித்தற்கு முயறல் போக்கி, இற்செறித்தல் முதலியவற்றானே அலைத்துக் கொடுமை செய்தலின், அறனில் அன்னை என்றாள்.  ஈண்டு அறன் என்பது தலைவியைத் தலைவனோடே கூட்டுவிக்கும் செயலை.  அறன் இல்லாரோடு உடனுறைதலும் தகாது என்பாள் ‘தானே இருக்க தன் மனை’ என வெறுத்தோதினாள். குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்காயின் துவராலே பல் மாசுபடுதலின் அது தீரவும் நெல்லிக்காயைத் தின்ற பின்னர் நீர் பருகின்  அஃது இனிதாதலினாலும் ‘முள் எயிறு தயங்க நீருணல்’ என்றாள்.  தலைவனோடே இருந்து உண்ணப்படுவது வறிய நீரே ஆயினும் அமிழ்தினும் இனிதென்பதுபட ‘அவரொடு உணல்’ என்றாள்.  இது தான் நீ இப்பொழுது செய்யக்கிடந்த அறம் என்பாள் ‘ஆய்ந்திசின்’ என்றாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  ஊஉர் அலர் எழ – slander arose in town (ஊஉர் – இன்னிசை அளபெடை), சேரி கல்லென – loud noises in our streets,  loud noise in our neighborhood, ஆனாது அலைக்கும் – hurting constantly, அறன் இல் அன்னை – mother without fairness (அறன்-  அறம் என்பதன் போலி), தானே – she (ஏ – பிரிநிலை, exclusion), இருக்க – staying there, தன் மனை – in her house, யான் – me, ஏ – அசைநிலை, an expletive, நெல்லி தின்ற – gooseberry eating, முள் எயிறு – sharp teeth, தயங்க – to shine, உணல் – eating, ஆய்ந்திசின் – I have analyzed this, I have thought about this (சின் – தன்மை அசை, an expletive of the first person), அவரொடு – with him, சேய் நாட்டு – in a distant country, விண் தொட நிவந்த – sky touching high, விலங்கு மலை – blocking mountain, கவாஅன் – adjoining mountains, mountain slopes (இசை நிறை அளபெடை), கரும்பு நடு பாத்தி அன்ன – like plots where sugarcane is planted, பெரும் களிற்று – of a big male elephant, அடிவழி – footprints, depressions caused by the feet, நிலைஇய – stayed (செய்யுளிசை அளபெடை), நீர் – water, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 263, பெருஞ்சாத்தனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மறிக் குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
‘பேஎய்க் கொளீஇயள் இவள்’ எனப்படுதல்  5
நோதக்கன்றே தோழி, மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே.

Kurunthokai 263, Perunchāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
A young goat’s neck is slit,
offering of millet is given,
and many instruments are played
in the river islet, with prayers to
many big gods.

These are nothing but appearances,
which will not heal your affliction.
To hear them say that you are
possessed by a spirit hurts me,
O friend.

There is no fault in our conduct
with the lord of the mountains,
where clouds play on tall peaks.

Notes:  The heroine’s friend told her that her mother is thinking about performing a veriyāttam ritual, knowing that the hero is nearby.  அன்னை வெறியாட்டெடுக்க கருதியதை தலைவிக்குக் கூறுவாளாகித் தலைவனுக்கு உரைத்தது.   கவலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றிடைக் குறை.  ஆற்றிடைக் குறையில் தெய்வம் உறையும் என்பதை ‘கவின்பெறு துருத்தியும்’ (திருமுருகாற்றுப்படை 223) என்றும் ‘நல்யாற்று நடுவும்’ (பரிபாடல் 4-67) என்றும் பிறர் கூறுமாற்றானும் உணர்க.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  மறிக் குரல் அறுத்து – cutting a young goat’s neck (குரல் – கழுத்திற்கு ஆகுபெயர்), தினைப் பிரப்பு – millet offerings, Italian millet, Setaria italicum, இரீஇ – placing, giving (சொல்லிசை அளபெடை), செல் ஆற்று கவலை – island in the moving river, path with people movement, பல் இயம் கறங்க – many instruments sound, தோற்றம் அல்லது – the velan’s veriyāttam is nothing but an appearance, நோய்க்கு மருந்து ஆகா – is not the cure for your disease, வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி – praying to many different big gods, பேஎய்க் கொளீஇயள் இவள் – she is seized by a spirit, she is seized by a ghoul (பேஎய் – இன்னிசை அளபெடை, கொளீஇயள் – சொல்லிசை அளபெடை), எனப்படுதல் – to be spoken of like that,  நோதக்கன்று – it hurts, it is painful, ஏ – அசைநிலை, an expletive, தோழி – my friend, மால் வரை – tall mountains, மழை விளையாடும் – clouds play, நாடனை – because of the man from such country, பிழையேம் ஆகிய நாம் – for no fault of us, இதன்பட – for this, to be in love, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 264, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை,
பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே.  5

Kurunthokai 264, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
My pallor has nothing to do
with the loving friendship
that he has with me, the man
from the country,

where, on the low banks of a
forest river swollen by loud
rains, peacocks that sway their
luxuriant, long plumes while
walking and dancing, screech.

Notes:  The heroine who was saddened by separation told her friend that she would be patient.   தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி ‘நான் ஆற்றியிருப்பேன்’ என்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழையின் ஆரவாரத்தையுடைய காட்டாற்றின் கரைக்கண் உள்ள மயில், இனி முகில் மழை பொழிதல் உறுதியென எண்ணிக் களித்து ஆடுதலே அன்றி அகவினாற் போன்று என் உள்ளம் அவனது கேண்மையை நினையுந்தோறும் களித்து மகிழாநின்றது என்பது குறிப்பு.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  இகுகரை (1) – தமிழண்ணல் – உடைகரை, உ.வே. சாமிநாதையர் – தாழ்ந்த கரை.

Meanings:  கலி மழை கெழீஇய – with the loud rains that fell (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), கான் யாற்று – of a forest river, இகு கரை – low banks, eroding banks, ஒலி நெடும் பீலி – thick long plumes, துயல்வர – swaying, இயலி – walking, ஆடு மயில் அகவும் – dancing peacocks screech, நாடன் – the man from such country, நம்மொடு – with me, நயந்தனன் கொண்ட கேண்மை – the friendship he has (with me) with love, பயந்தக் காலும் – even when I have pallor, பயப்பு ஒல்லாது – it is not agreeable with the pallor, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 265, கருவூர்க்கதப் பிள்ளை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன்விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்,  5
நன்னர் நெஞ்சத்தன் தோழி, நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆகத்
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

Kurunthokai 265, Karuvūr Kathapillai, Kurinji Thinai – What the heroine’s friend said to her
He felt ashamed when I told
him about your situation,
realizing that it cannot go on
like this.

He has a good heart, the lord
of the lofty mountains, where
pretty, plump glory lily buds
give way and unfold their petals
when bees pry them open, like
dutiful men, who, when they see
great wise elders they know from
past, know their responsibilities.

Notes:  The heroine’s friend consoles the heroine, stating that the hero left to earn wealth for their wedding.  பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுது, ‘அவர் பிரிந்தது வரைவு கோடல் காரணமாக’ என்று கூறி தோழி தலைவியை ஆற்றுவித்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் என்றது களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்து கொள்ளும் எண்ணம் உடையான் தலைவன் என்ற குறிப்பினது.  வண்டு மலரை மலரச் செய்தல் – அகநானூறு 183 – அலரி வண்டு வாய் திறக்கும், நற்றிணை 238 – வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், குறுந்தொகை 265 – காந்தள் அம் கொழு முகை  காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும், குறுந்தொகை 370 – ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும்.

Meanings:  காந்தள் – glory lilies, Gloriosa superba, அம் – beautiful, கொழு முகை – fat buds, காவல் செல்லாது – not waiting for them to bloom, வண்டு வாய் திறக்கும் பொழுதில் – when bees open them and cause them to bloom (by swarming), பண்டும் தாம் அறி – who we knew in the past, செம்மைச் சான்றோர்க் கண்ட – those who saw wise elders, கடன் அறி மாக்கள் போல – like people who know responsibilities, இடன்விட்டு – allowing, இதழ் தளை அவிழ்ந்த – petals release their ties (and blossom), ஏகல் வெற்பன் – the lord of the lofty mountains, நன்னர் நெஞ்சத்தன் தோழி – he has a good heart O friend (நன்னர் – நல்ல), நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக – when I told him about your situation, தான் நாணினன் – he was embarrassed, he was shy, இஃது – this, ஆகாவாறு – not to happen (any more), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 266, நக்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ,
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?

Kurunthokai 266, Nakkeeranār, Pālai Thinai – What the heroine said to her friend
Even if he does not send
a message to me, the man
who was able to leave me,
I can understand that.

How can he not send a bird
message to the vēngai tree
in our grove, a sweet friend
to him during painful nights?

Notes:  The heroine said this to her friend when the hero separated without marrying her.  தலைவன் வரையாது பிரிந்தவிடத்து தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கைக்குத் தூது மறந்தனர் கொல் என்றது, இரவுக் குறியின் இடத்து வந்து அளவளாவிய செய்திகளை மறந்தனரோ என்னும் கருத்தினது.

Meanings:  நமக்கு ஒன்று உரையார் ஆயினும் – even if he doesn’t say something for my sake, தமக்கு – to him, ஒன்று இன்னா இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு – to the vēngai tree in the grove which was a sweet friend during painful nights, வேங்கை – Kino Tree, Pterocarpus marsupium, மறந்தனர் கொல் – did he forget (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, துறத்தல் வல்லியோர் – the man who was able to leave me, புள்வாய்த் தூது – message through the birds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 267, காலெறி கடிகையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க்
கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய,  5
ஆள் வினை மருங்கில் பிரியார், நாளும்
உறன் முறை மரபிற் கூற்றத்து
அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே.

Kurunthokai 267, Kāleri Kadikaiyār, Pālai Thinai – What the hero said to his heart
Those who know well the
ancient tradition of Kootruvan
who kills every day without
any compassion, will not part
from the young woman,
……….with small, thick bangles, her
……….white teeth secreting faultless
……….sweet liquid as sweet as the
……….pieces of sugarcane cut from
……….the bases of the canes,
despite all the great riches that this
wide world yields, which they can
earn through their own efforts.

Notes:  The hero avoided going on a trip.  தலைவன் செலவு தவிர்த்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பின் அடிப்பகுதியை மிகவும் இனிதாதல் பற்றிக் ‘கரும்பின் கால் எறி கடிகை’ என்றான்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  இருங்கண் ஞாலத்து – of the wide spaced earth, ஈண்டு பயப் பெரு வளம் – all the abundant riches that it yields, ஒருங்குடன் இயைவது ஆயினும் – even if they are all put together, கரும்பின் கால் – sugarcane stalks, எறி கடிகை கண் – the cut pieces, அயின்றன்ன – like eating them, வால் எயிறு – white teeth, ஊறிய – secreted, வசை இல் தீ நீர் – faultless sweet liquid, கோல் அமை – being thick, being rounded, குறுந்தொடிக் குறுமகள் – young girl with small bangles, ஒழிய – parting, ஆள் வினை – manly effort, earning wealth, மருங்கில் – because of that, due to that, பிரியார் – they will not part, நாளும் – daily, உறல் முறை மரபிற் கூற்றத்து – of the god of death with an ancient tradition, Kootruvan (உறல் – பொருந்திய), அறன் இல் – without compassion, without fairness (அறன்-  அறம் என்பதன் போலி), கோள் – seizing, murder, நற்கு – well (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), அறிந்திசினோர் – those who understand (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 268, கருவூர்ச் சேரமான் சாத்தனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘சேறிரோ’ எனச் செப்பலும் ஆற்றாம்,
‘வருவிரோ’ என வினவலும் வினவாம்,
யாங்குச் செய்வாம் கொல் தோழி, பாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து  5
நெடுமென் பணைத்தோள் அடைந்திசினோரே?

Kurunthokai 268, Karuvūr Chēramān Sathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
We are unable to ask him
whether he is going to leave,
or when he will be back,
……….the man who comes
……….without thinking in the
……….middle of the night when
……….thunder chops large heads
……….of snakes with hoods,
to embrace your long, delicate,
arms that are like bamboo.

What can we do, my friend?

Notes:  The heroine’s friend who was aware that the hero was nearby talked about the dangers of coming at night, as a way of requesting him to come and marry the heroine.  தலைவன் சிறப்புறத்தே இருப்ப, இரவுக்குறிக்கண் உண்டாகும் ஏதத்திற்கு அஞ்சுதலையும் தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம் – we are unable to ask him whether he is going to leave, வருவிரோ என வினவலும் வினவாம் – we cannot ask him when he will come back, யாங்குச் செய்வாம் – what can we do, கொல் – அசைநிலை, an expletive, தோழி – O friend, பாம்பின் பையுடை – of snakes with hoods, இருந்தலை – big heads, துமிக்கும் – chopping, ஏற்றொடு – with thunder, நடுநாள் என்னார் வந்து – not thinking he comes in the middle of the night, நெடுமென் பணைத்தோள் – long delicate bamboo-like arms, அடைந்திசினோர் – the man who embraced (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 269, கல்லாடனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சேயாறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய  5
உப்பு விளை கழனிச் சென்றனள், அதனால்,
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள், என்னும் தூதே.

Kurunthokai 269, Kallādanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
It would be nice if someone
can go on the long path, walking
swiftly without getting tired, to give
him the message,
that the wound father got catching
a powerful shark has healed and
he has gone back to the blue-colored,
vast ocean, mother has gone to the
salt pans to sell salt and buy white
rice,
and that it would be easy for the lord
of the cold, wide shore to come and
see me now.  This is my desire!

Notes:  The heroine said this to her friend, aware that the hero was nearby.  தோழிக்குக் கூறுவாள் போல் தலைவனிடம் கூறியது.  அகநானூறு 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, அகநானூறு 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, குறுந்தொகை 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய.  குறுந்தொகை 52, மற்றில்ல – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, மன் – மிக, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 392 – மன் தில்ல என்னும் இடைச்சொற்கள் மற்றில எனப் புணர்ந்தன.  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.   துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  துனை பரி அசாவாது – உ. வே. சாமிநாதையர் உரை – விரையும் நடையினால் வருந்தாது, விரைந்து நடந்து போதலுக்கு சோர்வுறாது, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – விரைகின்ற புரவிகள் தளராமையிலே.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  உசாவுநர் (2) – தமிழண்ணல் உரை – விவரம் கூறுவோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினவுவார்.

Meanings:  சேய் ஆறு சென்று – going afar on a path, துனை பரி – walking fast,  அசாவாது – without getting tired, உசாவுநர் – somebody who give him the information, someone who can ask him, பெறின் – if I can get somebody, ஏ – அசைநிலை, an expletive, நன்று – it would be very good, மற்றில்ல – nothing else or மன் – மிக, much, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, வயச்சுறா – powerful shark, big shark, எறிந்த – cut, attacked, புண் தணிந்து – wound has healed, எந்தையும் – also my father, நீல் நிறப் பெருங்கடல் – blue big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), புக்கனன் – he has entered, யாயும் – my mother, உப்பை மாறி – selling salt, வெண்ணெல் தரீஇய – to bring white rice, to get white rice (தரீஇய – செய்யுளிசை அளபெடை), உப்பு விளை கழனி – salt pans where salt crystals grow, சென்றனள் – she went, அதனால் – so, பனி – cold,  இரும்  – vast, பரப்பின் சேர்ப்பற்கு – to the lord of the vast seashore, இனி வரின் – if he comes now, எளியள் – it would be easy to see her, என்னும் – that it would be, thus, தூது – message, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 270, பாண்டியன் பன்னாடு தந்தான், முல்லைத் திணை – தலைவன் முகிலிடம்  சொன்னது
தாழ் இருள் துமிய, மின்னித் தண் என
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே,
செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு,  5
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

Kurunthokai 270, Pāndiyan Pannādu Thanthān, Mullai Thinai – What the hero said to the clouds
May you live long, O huge clouds
showering sweetly cool droplets of
water along with lightning bolts that
ruin deep darkness, and according
to tradition, roaring again and again
with rumbling thunder that sounds
like drums struck continuously with
sticks!

Now that I have finished my tasks
that I set to do, and have a fulfilled
heart with great love for her, I am lying
on her soft hair with the fragrance of
fresh blue waterlilies with short stems.

Notes:  The hero said this after returning from his business.  வினை முற்றி மீண்ட தலைவன் சொன்னது.  செம்மல் உள்ளமோடு (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நிறைவை உடைய உள்ளதோடு,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமைத் தன்மையுடைய உள்ளத்தோடு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலவரின் பெயர் பாண்டியன் பன்னாடு தந்தான் எனப்படுத்தலின், இவரே நாடு தரற்பொருட்டுத் தன் தலைவியைப் பிரிந்து சென்று வினை முற்றி மீண்டு தலைவியோடு இருந்த பொழுது பெய்த மழையாலே உவகையுற்றுச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது அகப்பொருட்துறையில் இப்பாடலை யாத்தனர் என்று கருதுவது மிகையாகாது.

Meanings:  தாழ் இருள் துமிய – ruining staying darkness, மின்னி – flashing lightning streaks, தண் என – causing coldness, வீழ் உறை – falling raindrops, இனிய சிதறி – scattering your sweet (water), ஊழின் – according to tradition, கடிப்பு – small sticks, drum sticks, இகு – beaten, முரசின் முழங்கி – roaring like drums (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இடித்து இடித்து – thundering again and again, பெய்து – falling, இனி – now, வாழி – may you live long, ஓ – அசைநிலை, an expletive, பெரு வான் – huge clouds, யாம் – myself (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive, செய் வினை முடித்த – since I finished my task, செம்மல் உள்ளமோடு – with a noble heart, with a fulfilled heart, இவளின் மேவினம் ஆகி – me being with the desire to be with her (மேவினம் – தன்மைப் பன்மை, first person plural), குவளை – blue waterlilies,  Blue nelumbo, Nymphaea odorata, குறும் தாள் நாள் மலர் – short-stemmed fresh flowers, நாறும் – spreads fragrance, நறு மென் கூந்தல் – fragrant soft hair, மெல் – delicate, அணையேம் – I am lying (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 271, அழிசி நச்சாத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி
உற்றது மன்னும் ஒரு நாள், மற்றது
தவப் பன் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே.  5

Kurunthokai 271, Azhisi Nachāthanār, Marutham Thinai – What the heroine said to her friend
I united with him for just one day,
trusting him,
the man from the country, where
overflowing rivers scatter heavy
droplets, like the waterfalls.

Now I am suffering for many days,
my beauty ruined and my arms thin.
This is the nature of this disease.

Notes:  The heroine said this to her friend who came as a messenger of her husband.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனின் தூதாக வந்த தோழியிடம் தலைவி கூறுவது.  உ. வே. சாமிநாதையர் உரை – யாறு தன் துளிகளை அருவிப் போலச் சிதறிப் புறத்தே உள்ள பொருள்களுக்கு பயன்பட்டது போல, தலைவன் புறத்துள்ள பரத்தையர்க்குப் பயன்படுவான் என்பது குறிப்பு.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அருவி அன்ன – like waterfalls, பரு உறை சிதறி – scattering heavy drops of water, ஆறு நிறை – full rivers, பகரும் – they yield, நாடனை தேறி – trusting the man from such country, உற்றது – was with him, united with him, மன் – அசைநிலை, an expletive, உம் – அசைநிலை, an expletive, ஒரு நாள் – for only one day, மற்று – அசைநிலை, an expletive, அது – that, தவப் பன் நாள் – for very many days, தோள் மயங்கி – involved with the arms, வௌவும் பண்பின் – with the nature of seizing my beauty, நோய் – disease, ஆகின்று – it is, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 272, ஒரு சிறைப் பெரியனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது
தீண்டலும் இயைவது கொல்லோ, மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந்தலைக் கானத்து இனம் தலைப் பிரிந்த
புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்  5
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங்கூந்தல் கொடிச்சி தோளே?

Kurunthokai 272, Oru Sirai Periyanār, Kurinji Thinai – What the hero said to his friend
Will I ever embrace the shoulders of the
young woman with fragrant, dark hair
and kohl-lined, darting eyes with red lines
that resemble a thick, bloody arrow pulled
off the chest of fast stag with sweet grunts,
that was hunted by her brothers bearing
fine bows, who whistled, threw stones,
and created a racket separating it from its
herd, as its distressed doe looked in pain,
in the vast forest?

Notes:  The hero said this to his friend who chastised him.  இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறுவது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  பறித்த பகழி அன்ன – நற்றிணை 13 – மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண், நற்றிணை 75 – கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல சேயரி பரந்த மா இதழ் மழைக் கண், குறுந்தொகை 272 – சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்.  சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்தி (5) – தமிழண்ணல் உரை – இனிதாக ஒலிக்கும் மிக்க வேகத்தையுடைய கலை மானின் மருமத்தில் அழுந்தும்படி எய்து, சிலை – மானின் குரல் ஓசை.

Meanings:  தீண்டலும் – to embrace (உம் – சிறப்பு), இயைவது கொல் – will I be able (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, இரங்கல் குறிப்புமாம், மாண்ட வில் உடை வீளையர் – whistlers who carry fine bows, கல் இடுபு எடுத்த – threw stones and raised (இடுபு – வீசி, செய்பு என்னெச்சம்), நனந்தலைக் கானத்து – in the wide forest, இனம் தலைப் பிரிந்த புன்கண் மடமான் – a naive deer with sad eyes that is separated from its herd, நேர்பட – being in front, தன் ஐயர் – her brothers, சிலை மாண் – sweet grunts, loud grunts, கடு விசைக் கலை – very fast stag, நிறத்து அழுத்தி – embedded in its chest, pierced into its chest, குருதியொடு பறித்த – pulled with blood, செங்கோல் வாளி – arrow with red shafts, thick red arrow, மாறு கொண்டன்ன – like they differ, உண்கண் – kohl-rimmed eyes, நாறு இருங்கூந்தல் – fragrant dark hair, கொடிச்சி – the young woman from the mountain, தோள் – arms, shoulders, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 273, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங்காட்டு உளரும் அசை வளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனை ஆயின், கண்டது மொழிவல்,
பெருந்தேன் கண்படு வரையின் முது மால்பு  5
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இவ் உலகம்,
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

Kurunthokai 273, Siraikkudi Ānthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
You are worried!  Let me tell you
what I see, O friend with a bright
forehead which bears the fragrance
of the breeze which blows through
the huge forest at night,
where buds with pollen gleam!
This world is confused, like the
ignorant man who climbs on an
old bamboo ladder to reach large
honeycombs on a mountain top.

For us to live, he will not leave us
Know this clearly!

Notes:  The heroine’s friend said this to the heroine who worried that the hero was thinking about leaving.  தலைவன் பிரித்துச் செல்வான் என்று வருந்திய தலைவியிடம் தோழி கூறுவது.  உ. வே. சாமிநாதையர் உரை – முதுமால்பு அறியாது ஏறிய மடவோன் சிறிது ஏறிப் பின் அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி மீண்டும் இறங்குவன்.  அதுப் போல சேய் நாடு சென்று வினை முற்றுகை கருதிய தலைவன் தலைவியைப் பிரிதலை எண்ணி அப்பிரிவு தலைவியின் உயிர் அழிவையும் அதனால் தனக்கு இன்னாமையும் தருதலை அறிந்து செலவு தவிர்த்தான்.  வரை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரை என்றது மலை உச்சியை.  Kurunthokai 273, Kalithokai 39 and Puranānūru 105 have references to bamboo ladders used in the mountains.  They were used to collect honey.

Meanings:  அல்குறு பொழுதில் – at night time, தாது – pollen, முகை – buds, தயங்க – splendid, bright, shining, பெருங்காட்டு உளரும் – blowing through the huge forest, touching the huge forest, அசை வளி போல – like the blowing winds, தண்ணிய கமழும் – with cool fragrance, ஒள் நுதலோய் – O one with bright brow, ஏ – அசைநிலை, an expletive, நொந்தனை ஆயின் – if you are worried, கண்டது மொழிவல் – let me tell you what I see (மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று), பெருந்தேன் – large honey combs, கண்படு வரையின் – on the mountain top, முது மால்பு – old bamboo ladder (கண்ணேணி), அறியாது ஏறிய மடவோன் போல – like a stupid man who climbed without knowing, ஏமாந்தன்று இவ் உலகம் – this world is confused, நாம் உளேம் ஆக – for us to live, பிரியலன் – he will not leave, தெளிமே – you should know this clearly (மே – முன்னிலை அசை, an expletive of the second person)

குறுந்தொகை 274, உருத்திரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புறவுப் புறத்து அன்ன புன் கால் உகாஅய்க்
காசினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்  5
இன்னாக் கானமும் இனிய, பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் உள்கினம் செலினே.

Kurunthokai 274, Uruthiranār, Pālai Thinai – What the hero said to his heart
The wasteland is a harsh place
where ukā trees with dried trunks,
the color of a pigeon’s back, shower
down dense, gem-like berries when
cruel bandits climb on their branches
with their arrows that are shot, along
with bows, to look for those who travel,
and to peel their barks and chew them
to quench their desire for water.

However, it will be a sweet place if we
go there thinking of her chest with fine
breasts, the young woman whose loins
are adorned with jewels made of gems
mixed with gold.

Notes:  The hero who was considering to leave to earn wealth, said this.  பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் கூறியது.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  புறவுப் புறத்து அன்ன – like the backsides of a pigeon/dove (புறத்து – புறம், அத்து சாரியை), புன் கால் உகாஅய் – ukāy trees with dried trunks, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – இசை நிறை அளபெடை), காசினை அன்ன நளி கனி உதிர – dropping many coin-like fruits, dropping dense gem-like fruits (ஐகாரம் அசைநிலை), விடு கணை வில்லொடு பற்றி – holding arrows that are shot along with bows, கோடு இவர்பு – they climb on branches, வருநர்ப் பார்க்கும் – looking for those who come, வன்கண் ஆடவர் – harsh men (the bandits), நீர் நசை வேட்கையின் – goaded by desire for water, நார் மென்று தணியும் – they chew the barks and satisfy their thirst (தணியும் – தணித்துக்கொள்ளும்), இன்னாக் கானமும் – even the harsh forest, இனிய – it will be  sweet, பொன்னொடு மணி மிடை அல்குல் – jewels made with gems mixed with gold are on her loins/waist, மடந்தை – young woman, அணி முலை – pretty breasts, ஆகம் – chest, உள்கினம் செலின் – if we think and go, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 275, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக்
கண்டனம் வருகம், சென்மோ தோழி,
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணி கொல்லோ?
செய் வினை முடித்த செம்மல் உள்ளமொடு  5
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி கொல், ஆண்டு இயம்பிய உளவே?

Kurunthokai 275, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine’s friend said to her
My friend!  Let’s climb on the
boulders covered with jasmine
vines to see whether he’s returning.

I hear the sounds of bells!

Are they tied on the cows returning
to the town in the evening after
grazing with their herds with bulls?

Or, are the sounds from his
chariot bells as he rides on wet sand
on the path, protected by his young
warriors with strong bows, his heart
satisfied upon completion of his task?

Notes:  The heroine’s friend told the heroine on seeing good omens in the new season.  பருவ வரவின்கண் நல்ல நிமித்தம் தோன்றத் தோழி கூறியது.  செம்மல் உள்ளமொடு (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நிறைவுடைய உள்ளத்தோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமை பொருந்திய நெஞ்சத்தோட.  ஈர் மணல் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈர் மணல் என்றது, கார்ப்பருவத் தொடக்கம் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று.  நற்றிணை 182 – நன் மார்பு அடைய முயங்கி மென்மெல கண்டனம் வருகம் சென்மோ தோழி, நற்றிணை 335 – குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி கண்டனம் வருகம் சென்மோ தோழி.

Meanings:  முல்லை ஊர்ந்த – jasmine vines have spread, jasmine covered, Jasminum sambac, கல் உயர் ஏறி – climbing on the rocks, கண்டனம் வருகம் – let us find out and come (கண்டனம் – முற்றெச்சம், finite verb), சென்மோ – let us go (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), தோழி – my friend, எல் – evening, ஊர் சேர்தரும் – reaching the town, ஏறுடை இனத்து – of the cattle herds with bulls, புல் ஆர் நல் ஆன் – good cows that eat grass, பூண் மணி கொல் – are they from the bells that are tied (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, செய் வினை முடித்த – finished his tasks he set out to do, செம்மல் உள்ளமொடு – with a satisfied heart, with a great heart, வல் வில் இளையர் – young warriors with strong bows, பக்கம் போற்ற – nearby to protect, ஈர் மணல் – wet sand, காட்டாறு – forest stream, வரூஉம் – coming (இன்னிசை அளபெடை), தேர் மணி – chariot bells, ஆண்டு – there, இயம்பிய – sounding, உள – are there, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 276, கோழிக் கொற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில், காப்போர் அறிதலும் அறியார்,
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து  5
யான் தன் கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற,
அளிதோ தானே, இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 276, Kōzhi Kotranār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend
Those who protect her do not
know that I made a doll for the
young woman with arms like
bamboo, scouring the wetlands
for reeds, and painted bright
thoyyil designs on her beautiful
breasts that have risen up.

What will happen if I ask her
about it in a just king’s court?
This uproarious town is ignorant
and pitiful, for sure!

Notes:  The hero said this to the heroine’s friend as a way of making her accept his request to see the heroine.  தோழியின்பால் தலைவியைக் காணும்பொருட்டு குறை இரந்த தலைவன், அவள் அதை மறுக்காது ஏற்றுக்கொள்ளும் வகை சூழ்ந்து சொல்லியது.  கலித்தொகை 76 – செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ.  அழுங்கல் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரம், உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம்.  ஊர் (8) – உ. வே. சாமிநாதையர் உரை, தமிழண்ணல் உரை – ஊர் தோழியைக் குறிக்கும்.  உ. வே. சாமிநாதையர் உரை – இனி மடல் ஏறிச் சான்றோர் அறிய வழுக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன் என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது.  Thoyyil is the custom of painting on the arms and breasts of women.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  உருத்து எழு (3) இரா. இராகவையங்கார் உரை – சினந்து எழுகின்ற, உ. வே. சாமிநாதையர் உரை – தோற்றம் செய்து,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சினந்து எழுந்த, தமிழண்ணல் உரை – திமிரி எழுந்த.  அகநானூறு 150 – கண் உருத்து எழுதரு முலையும்.

Meanings:  பணைத்தோள் – bamboo-like arms, thick arms, குறுமகள் – young girl, பாவை – doll, தைஇயும் – created (தைஇ – சொல்லிசை அளபெடை), பஞ்சாய் – with reed, with panchāy grass, பைஞ்சாய், கோரைப்புல், Cyperus rotundus tuberosus, பள்ளம்  சூழ்ந்து – growing around the pits, மற்று – அசைநிலை, an expletive, இவள் – her, உருத்து எழு – enraged and risen up, rose up with form, வன முலை – splendid breasts, ஒளிபெற – brighten, எழுதிய – drawn, தொய்யில் – thoyyil designs, காப்போர் – those who protect her, அறிதலும் அறியார் – they do not know, முறையுடை அரசன் – a just king, செங்கோல் அவையத்து – in his court with a just scepter, யான் தன் கடவின் – if I question her, if I urge her to tell, யாங்கு ஆவது – what will happen, கொல் – அசைநிலை, an expletive, பெரிதும் பேதை – very ignorant, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அளிது – it is pitiable, ஓ – அசைநிலை, an expletive, தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, இ அழுங்கல் – this uproarious, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 277, ஓரில் பிச்சையார், பாலைத் திணை – தோழி சொன்னது
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ! நீயே  5
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை
எக்கால் வருவது என்றி,
அக்கால் வருவர் எம் காதலோரே.

Kurunthokai 277, Ōril Pichaiyār, Pālai Thinai- What the heroine’s friend said to a wise man
O you who go to a single house
on our blemishless street and
beg, standing in a large courtyard
with no dogs!

May you receive perfect rice balls
with pure white ghee to eat until
you are full!
May you receive warm water
desirable in this early dew season,
to store in your water pot!

Telll me when the north wind will
come, making my friend whose waist
is like a flash of lightning to tremble?
That is when her lover will come!

Notes:  The heroine’s friend said this to a wise man.  தோழி அறிவரிடம் கேட்டது.  அறிவர் – உ. வே. சாமிநாதையர் உரை – துறவு உள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலுடைய பெரியோர் ஆவர், தமிழண்ணல் உரை – இவர்கள் பிச்சை ஏற்று வாழும் துறவிகள்.  பிற்காலச் சித்தர்கள் இவர்தம் கால் வழியினர் போலத் தெரிகிறது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்டைக் காலத்தே தமிழ்நாட்டின்கண் உலகத்தை நீத்து இறைவன் ஆகிய பொருள் ஒன்றனையே பற்றி நின்று வீடுபெறும் சான்றோர் என்பதுணர்க.  மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் (தொல்காப்பியம், புறத்திணையியல் 20)

Meanings:  ஆசு இல் தெருவில் – in the street without blemish, நாய் இல் – without dogs, வியன் கடை – large entry area, large gate, செந்நெல் அமலை – red rice palls, perfect rice balls, வெண்மை வெள் இழுது – white ghee, ஓர் இல் பிச்சை – food given in one house, ஆர மாந்தி – eating  to the full, அற்சிர வெய்ய – desirable for the early dew season, வெப்பத் தண்ணீர் – warm water, சேமச் செப்பில் – in the water-saving pot, பெறீஇயர் – may you get (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, verb ending with a command, used to praise, சொல்லிசை அளபெடை), ஓ – அசைநிலை, an expletive, நீயே – you, மின் இடை – lightning-like waist, நடுங்கும் – trembling, கடைப் பெயல் வாடை – cold season when last rains fall, எக்கால் வருவது என்றி – when you say it will come (என்றி – முன்னிலை ஒருமை), அக்கால் வருவர் – he will come at that time, எம் – her, காதலோர் – lover, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 278, பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும் உள்ளார்,
கொடியர் வாழி தோழி, கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து  5
ஏற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

Kurunthokai 278, Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
He does not think about my new
little doll with delicate, small feet
that look like the lovely, tender
leaves of sprouted mango trees
that shake in strong winds, nor
does he think about me.

He is cruel, the man who crossed
the mountains,
where a male monkey shakes off
ripe sweet fruits from a tree, and
a female monkey stands below with
her young and catches them again
and again and eats.

Notes:  The heroine said this to her friend who asked her to bear her sorrow when the hero was away.  தலைவன் பிரிந்த வேளையில், நீ ஆற்றுதல் வேண்டும் என்று கூறும் தோழியிடம் தலைவி கூறியது.  தமிழண்ணல் உரை – இதிலுள்ள குரங்கின் வாழ்க்கை ‘இறைச்சி’ எனப்படும்.  ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு தகுந்த காட்டாகும் பாட்டு இது.  பார்ப்பு – மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பாலான (தொல்காப்பியம், மரபியல் 14).  கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுப (தொல்காப்பியம், மரபியல் 13).

Meanings:  உறு வளி உளரிய – strong wind shakes them, strong winds passes through them, அம் – beautiful,  தளிர் – sprouts, மாஅத்து – of mango trees (அத்து சாரியை), முறி கண்டன்ன – like seeing the tender leaves, மெல்லென் சீறடி – delicate small feet, சிறு பசும் பாவையும் – and the small fresh doll, and the small new doll, எம்மும் உள்ளார் – he does not think about me as well (எம் – தன்மைப் பன்மை, first person plural), கொடியர் – he is a cruel man, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்ப – as a male monkey shakes off ripe fruits, கீழிருந்து ஏற்பன ஏற்பன – receives it again and again from down, உண்ணும் – eats, பார்ப்புடை மந்திய – with a female monkey with young ones, மலை – mountains, இறந்தோர் – the man who went past, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 279, மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி
புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும்
இது பொழுதாகவும் வாரார் கொல்லோ,
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல்  5
துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகித்
திருந்து இறைப் பணைத்தோள் உள்ளாதோரே.

Kurunthokai 279, Mathurai Maruthan Ilanākanār, Mullai Thinai – What the heroine said to her friend
The clear bells with gaping mouths,
tied on the thick neck of a buffalo
with twisted horns, its body as dark
as night, ring clearly whenever it
moves during the lonely nights,
when he should have returned.

He did not give any thought to my
bamboo-like arms and elegant wrists,
my lover who crossed many tall
mountains, where boulders that are
not washed by rains,
appear bright like elephants with dust.

Notes:  The heroine said this to her friend who asked her to bear her sorrow when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் நீ ஆற்றுதல் வேண்டும் என்றுரைக்கும் தோழியிடம் தலைவி கூறியது.   இருள் நிறம் மை ஆன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  இருள் போன்ற நிறத்தினையும் உடைய கார் எருமையாகிய ஆன், ஆன் எருமை பசு இரண்டிற்கும் பொதுவாய்ப் பெண்பாலை உணர்த்துவது ஆதலின் ‘எருமைக் கார் ஆன்’ என்றாள்.  எருமையாகிய கரிய ஆன் என்க. அகநானூறு 41 – வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  இயங்குதொறு – குறுந்தொகை 190 – உரவுரும் உரறும் அரை இருள் நடுநாள், நல் ஏறு இயங்குதொறு இயம்பும் பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  திரி மருப்பு எருமை – a buffalo with twisted horns, இருள் நிறம் மை ஆன் – a buffalo with the color of darkness, வருமிடறு – growing neck, யாத்த – tied, பகுவாய்த் தெண் மணி – wide-mouthed clear bells, clear bells with split ends, புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும் – sounds in the lonely nights whenever it moves, sounds in the sad nights whenever it moves, இது பொழுதாகவும் – at this time, வாரார் – he has not come, கொல் – அசைநிலை, an expletive, ஓ – அசைநிலை, an expletive, மழை கழூஉ மறந்த – forgotten to be washed by rains (கழூஉ – இன்னிசை அளபெடை), மா இரும் துறுகல் – huge black boulders, துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் – they appear bright/splendid like elephants with dust on their bodies (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இரும் பல் குன்றம் போகி – crossed few huge mountains, திருந்து இறை – perfectly curved forearms, பணைத்தோள் உள்ளாதோர் – man who does not think about my bamboo-like arms, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 280, நக்கீரர், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
கேளிர் வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம்,
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.  5

Kurunthokai 280, Nakeerar, Kurinji Thinai – What the hero said to his friend
May you live long O friend!
If I could unite with love,
with the woman with beautiful,
soft hair, small delicate body
and thick arms, who has seized
my heart, for just a day, I will not
desire to live even for half a day
more.

Notes:  The hero said this to his friend who chastised him.  இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.  கேளிர் வாழியோ கேளிர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேளிர் அண்மை விளி.  தக்கது மொழிந்திலை என்னும் செறலானே இருமுறை விளித்தான், கேளிர் – கேண்மை உடையீர்.

Meanings:  கேளிர் – O friend, வாழி – my you live long, ஓ – அசைநிலை, an expletive,  கேளிர் – O friend, நாளும் – always, என் நெஞ்சு பிணிக் கொண்ட – one has seized my heart, அம் சில் ஓதி – beautiful delicate hair, பெரும் தோள் குறுமகள் – young girl with thick arms, சிறு மெல் ஆகம் – tiny delicate chest, ஒரு நாள் புணரப் புணரின் – if I can unite with her for just a day with complete love, அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யான் – I do not need even half a day of life (உம்மை – இழிவு சிறப்பு), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 281, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வெண்மணல் பொதுளிய பைங்கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக்,
குன்றுதலை மணந்த கானம்  5
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே?

Kurunthokai 281, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine said to her friend
O friend wearing beautiful gold
jewels!  Has our man gone to the
mountains with forests, wearing
splendidly, on his curly locks,
clusters of white flowers of the
desert neem tree, braided with a
tender white frond from the top
of a palmyra tree, its trunk round,
its fronds green and saw-edged,
thriving on the white sand?

Notes:  The heroine said this to her friend who asked her to bear her sorrow when the hero was away.  தலைவன் பிரிந்தவிடத்து நீ ஆற்றுதல் வேண்டும் என்றுரைக்கும் தோழியிடம் தலைவி கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – போந்தை சேரர்க்குரியது.  வேம்பு பாண்டியர்க்குரியது.  ஆர் சோழர்க்குரியது.  ஒன்றே சூடிப் பகை தெரிதல் வேண்டியாகுமென்று இது தன்னுறு தொழிலின் நட்பாதல் தெரிய மூன்றுஞ் சூடிச் சேரல் கூறினாள்.  உளைத்தலை (4) – தமிழண்ணல் உரை – தலை உச்சி, உ. வே. சாமிநாதையர் உரை – மயிரையுடைய தலை.  அகநானூறு (83) – சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி, உளைத்தலை – அகநானூறு உரைகள் – வேங்கடசாமி நாட்டார் உரை – உளை போன்ற மயிரினையுடைய தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை தலையாட்டம் போன்று அசையும்படி தலை மயிரின் மேல்.  அத்த வேம்பின் அமலை வான் பூ (3) – உ. வே. சாமிநாதையர் உரை- வேம்பு பாலை நிலத்திற்குரியது.  வேம்பின் பூவினைக் கூறினமையின் தலைவன் பிரிந்த பருவம் இளவேனில் என்று பெறப்படும்.

Meanings:  வெண்மணல் பொதுளிய – thriving on the white sand, பைங்கால் – green bases, கருக்கின் – with saw-edged fronds, sharp edged leaves, கொம்மை – round, thick, போந்தைக் குடுமி – palmyra tree top, Borassus flabellifer, வெண்தோட்டு – with white fronds, அத்த வேம்பின் – of the neem trees of the wasteland, Neem tree, Azadirachta indica,  அமலை வான் பூ – abundant white flowers, dense white flowers, சுரி ஆர் – with curls, உளைத்தலை பொலியச் சூடி – wearing them beautifully on the hair on this head (தலை – உ. வே. சாமிநாதையர் உரை, அசைநிலை, இடமுமாம்), wearing them splendidly on the hair on his head, குன்றுதலை மணந்த கானம் – the mountains with forests, the mountains with adjoining forests (தலை – அசைநிலை, இடமுமாம்), சென்றனர் கொல் – did he go (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, சேயிழை – O one wearing beautiful jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), O one wearing perfect jewels, நமர் – our man, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 282, நாகம் போத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
செவ்வி கொள் வரகின் செஞ்சுவல் கலித்த
கௌவை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த  5
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போலச்
சோர்குவ அல்ல என்பர் கொல் நமரே?

Kurunthokai 282, Nākam Pōthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
When your lover looks at the cool
fields drenched by rains,
where the wind sways the plants
creating noise, and watches a young
deer grazing during the day,
on perfectly mature millet plants
growing luxuriantly on a red mound,
and chewing a deep black leaf of a
single stalk, just enough to satisfy
its hunger,
will he think that the bangles on your
arms do not get loose and drop down,
like the hollow, pretty, white koothalam
flowers that bloom all at once on the
mountain slopes with abundant rain
water?

Notes:  The heroine’s friend said this to her when the hero was away on business.  தலைவன் வினைவயிற் பிரிந்த பொழுது தோழி கூறியது.  தமிழண்ணல் உரை – ‘கார் எதிர் தண் புனம்’ என்றது தலைவி தன்னை எதிர்நோக்கி இருப்பதை நினைவூட்டும் என்னும் குறிப்புடையது.  வெண் மலர்கள் உதிரும் போது, சங்கு வளையல்கள் கழல்வது கண்ணெதிரே தோன்றாமலா போய் விடும் என்பது தோழியின் கருத்து.  உ. வே. சாமிநாதையர் உரை – மான்மறி தன் இளமையினால் ஓரிலையைக் கவ்வுதலோடு அமைந்தது.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  செவ்வி கொள் வரகின் – of millet at a perfect stage, Common millet,  Paspalum scrobiculatum, செஞ்சுவல் – red mound, கலித்த கௌவை நாற்றின் – of the flourishing noisy millet grass (due to the winds, கௌவை – ஒலி), கார் இருள் – pitch black, ஓர் இலை – one leaf, நவ்வி – deer, நாள் – day, மறி கவ்வி – a fawn chews, கடன் கழிக்கும் – it performs its duty, it satisfies its hunger, கார் எதிர் தண் புனம் – cool fields that have accepted rain, காணின் – if he sees, கை வளை – bangles on the arm, நீர் திகழ் சிலம்பின் – on the mountains with abundant waters, ஓராங்கு – all at the same time (ஓராங்கு – ஒருசேர), அவிழ்ந்த – bloomed, வெண்கூதாளத்து – with koothālam flowers, Convolvulus, Ipomea, அம் தூம்பு – beautiful and hollow, புது மலர் – new flowers, ஆர் கழல்பு உகுவ போல – like loosening and dropping off the stems, சோர்குவ அல்ல – will not loosen and slip down, என்பர் கொல் – will he think (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), நமர் – நம் தலைவர், our man, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 283, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்,
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு’ எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர், வாழி தோழி, என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்  5
ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படு முடை பருந்து பார்த்திருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே.

Kurunthokai 283, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine said to her friend
May he live long, O friend!

After telling me, “Those who
waste away what they have are
not wealthy people.
Those who live off inheritance
are worse than beggars,”
he went with determination to earn
wealth, across the vast ancient land
with no water, where wayside bandits
with spears, expert murderers, kill
like Kootruvan, those who go on the
paths where kites wait for flesh.

Notes:  The heroine said this to her friend when the hero had gone to earn wealth.  தலைவன் பொருள்வயின் பிரிந்த பொழுது தலைவி சொன்னது.

Meanings:  உள்ளது சிதைப்போர் – those who ruin wealth, those who waste away wealth, உளர் எனப்படாஅர் – they are not called wealthy people (எனப்படாஅர் – இசை நிறை அளபெடை), இல்லோர் வாழ்க்கை – those who don’t have wealth (but live off the wealth of their ancestors), இரவினும் இளிவு – it is lower than begging, என – thus, சொல்லிய வன்மை – said with strength, தெளியக் காட்டி – showed clearly, சென்றனர் – he went, வாழி – may he live long, தோழி – my friend, என்றும் – always, கூற்றத்து அன்ன – like the god of death, like Kootruvan (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), கொலை வேல் மறவர் – wayside bandits with murderous spears, ஆற்றிருந்து அல்கி – staying on the path, வழங்குநர் – those who went on (on the path), செகுத்த – destroyed, killed, படு முடை – flesh of those killed (முடை – தசை, ஆகுபெயர்), பருந்து – kites, பார்த்திருக்கும் – they expect and wait, நெடு – long, large, மூது -ancient, இடைய – with spaces, நீர் இல் ஆறு – waterless paths, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 284, மிளைவேள் தித்தனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங்காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ, தம் இலர் கொல்லோ,  5
வரையில் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் இலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே?

Kurunthokai 284, Milaivēl Thithanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Will they blame us, for your
love for the man from the country,
……….where bright, red glory lilies
……….have blossomed and spread
……….in abundance on boulders
……….in the town’s common land,
……….appearing like spots on
……….the faces of battle elephants,
whether he is honest or not,

the people in the small village,
where pure white waterfalls flow
down the mountain side, near the
huts made of fierce leaves?

Do they not have any intelligence of
their own?

Notes:  The heroine’s friend said this to the heroine when the hero had gone to earn wealth for the marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தோழி உரைத்தது.  கொன் இலைக் குரம்பையின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீணே இலை வேய்ந்த குடிலின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – அச்சத்தைத் தரும் இலையால் வேய்ந்த குடிலின்.  இரா. இராகவையங்கார் உரை – சேய்மைக்கண் யானைப் புகர் முகம் போலக் காணப்பட்டு அணுகிய நிலையில் துருகற்காந்தள் ஆயினாற் போல, நாடன் நெருங்காத நிலையில் அறவன் அல்லன் போல நினையப்பட்டு நெருங்கிய நிலையில் அறவனாகத் தெரியப்படுவான் என்று கருதினாளாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – துறுகல் மிசைச் செங்காந்தள் மலர்ந்திருத்தல், பொருது புண்பட்ட யானை முகத்திற்கு உவமை.  பொருதல் தொழில் இல்லாத துறுகல்லைப் புண்ணுடைய முகம் போலச் செங்காந்தள் தோன்றச் செய்தது போலப் பழியற்ற நம்மைப் பழியுடையராகக் கூறுவர் என்பது குறிப்பாகக் கொள்க.  மலையிடத்தே வீழும் வெள்ளருவி பயன்மிக்க பொழிலிடத்தே வீழாது கொன்னே இலைக்குரம்பையின் வீழ்ந்தாங்கு இவர்களும் பயனில்லாது நம்பழி தூற்றாநின்றனர் என்பது குறிப்பு.  கொன் – அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).

Meanings:  பொருத யானை – battling elephants, புகர் முகம் கடுப்ப – like their spotted faces (கடுப்ப – உவம உருபு, a comparison word), மன்றத் துறுகல் – boulders in the town’s common grounds, மீமிசை – on top, above, ஒருபொருட் பன்மொழி, பல உடன் – with many together, ஒண் செங்காந்தள் – bright red glory lilies, Gloriosa superba, அவிழும் – they have blossomed, நாடன் – man from such country, அறவன் ஆயினும் – if he is honest, அல்லன் ஆயினும் – or if he is not honest, நம் ஏசுவரோ – will they blame us, தம் இலர் கொல்லோ – do they not have intelligence of their own (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), வரையில் – on the mountains, தாழ்ந்த வால் வெள்ளருவி – flowing down low pure white waterfalls (வால் வெள் – ஒருபொருட் பன்மொழி), கொன் இலைக் குரம்பையின் – near huts made with leaves that cause fear, near huts made with abundant leaves, இழிதரும் – they flow down (near it), இன்னாது இருந்த – causing suffering, இச் சிறுகுடியோர் – those in this small settlement

குறுந்தொகை 285, பூதத் தேவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வைகல் வைகல் வைகவும் வாரார்,
எல்லா எல்லை எல்லையும் தோன்றார்,
யாண்டு உளர் கொல்லோ தோழி? ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே, பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி இன் புறவு  5
இமைக்கண் ஏது ஆகின்றோ, ஞெமைத்தலை
ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கும்,
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

Kurunthokai 285, Pootha Thēvanār, Pālai Thinai – What the heroine said to her friend
He does not come when dawn turns
to day.  He does not appear when the
day ends.  I wonder where he is, my
friend!
This is the season that he said he
would be back.

A male pigeon calls out over and over
to his mate with a tawny colored back.
In an instant they find pleasure!

He crossed tall, bright mountains
that reach up to the skies where a lone
kite, desiring flesh, awaits on top of a
gnemai tree.

Notes:  The heroine said this to her friend who urged her to bear her distress.  வேறுபட்ட தலைவியை நோக்கித் தோழி வற்புறுத்தியபோது அவளிடம் தலைவி வருந்திக் கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் புறா, பெண் புறாவின் அருகிருந்து அழைத்து இன்புறுதலைத் தலைவரும் கண்டிருதல் கூடும் என்பதும் அக்காலத்து தன்னை நினைத்து மீண்டிலரே என்பதும் தலைவியின் எண்ணம்.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  வைகல் வைகல் வைகவும் வாரார் – he does not come on the days when dawn turns to day time, எல்லா எல்லை எல்லையும் தோன்றார் – he does not appear on all the days when days reach their end (nights), யாண்டு உளர் கொல் – where is he (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – O friend, ஓ – அசைநிலை, an expletive, ஈண்டு இவர் சொல்லிய பருவம் – this is the season when he said that he will be back, ஓ – அசைநிலை, an expletive, இதுவே – it is this, பல் ஊழ் – many times, புன் புறப் பெடையொடு – with its female with a dull back, with its female with a small back, பயிரி – calls, இன் புறவு – sweet pigeon/dove, இமைக்கண் ஏது ஆகின்று – in an instant there is such pleasure (ஏது – எத்தகையது), ஓ – அசைநிலை, an expletive, ஞெமைத்தலை – on top of the gnemai tree, a wasteland tree, Anogeissus latifolia, ஊன் நசைஇ – desiring flesh (நசைஇ – சொல்லிசை அளபெடை), ஒரு பருந்து இருக்கும் – a kite is there, வான் உயர் – sky high, பிறங்கல் – bright, மலை இறந்தோர் – the man who crossed the mountains, ஓ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 286, எயிற்றியனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
உள்ளிக் காண்பென் போல்வல், முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் அஞ்செவ்வாய்க், கமழ் அகில்
ஆர நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக் கண் கொடிச்சி,
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.  5

Kurunthokai 286, Eyitriyanār, Kurinji Thinai – What the hero said
When I think of my young woman
from the mountains, I can see her
nectar-filled mouth, sharp teeth, flowing
hair as fine as sand with the fragrances
of akil and sandal woods, proud looks,
large, alluring, moist eyes and delicate
smile.

Notes:  The hero said this either to his friend or to the heroine’s friend.  தலைவன் தோழியிடம் அல்லது தன் தோழனிடம் கூறியது.  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமிழ்தம் ஊறும் செவ்வாய் என்றதும் ஆர நாறும் அறல் போல் கூந்தல் என்றதும் அவையிற்றைத் தான் நுகர்ந்தமைக் குறிப்பால் உணர்த்திற்று.  இது முன்னுறு புணர்ச்சி முறையுற மொழிந்தமையாதல் காண்க.  பண்டு நுகர்ந்து கண்ட யான் இன்று நினைவு மாத்திரையானே காண்பவன் ஆகின்றேன் என்பான், ‘உள்ளிக் காண்பென் போல்வன்’ என்றான்.  பேர் அமர் மழைக் கண் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்கள்.

Meanings:   உள்ளிக் காண்பென் போல்வல் – when I think about her I seem to see, முள் எயிற்று – with sharp teeth, அமிழ்தம் ஊறும் – nectar secreting, அம் செவ்வாய் – beautiful red mouth, கமழ் அகில் – aromatic akilwood, Eaglewood, ஆர – sandalwood, sandal, Santalum album, நாறும் – with the fragrance, அறல் போல் கூந்தல் – fine back sand like hair, பேர் அமர் மழைக் கண் – large calm/loving wet eyes, கொடிச்சி – mountain girl, மூரல் முறுவலொடு – with a delicate smile, மதைஇய நோக்கு – proud looks, elegant looks (மதைஇய – செய்யுளிசை அளபெடை, நோக்கே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 287, கச்சிப்பேட்டு நன்னாகையார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, காதலர்
இன்னே கண்டுந்துறக்குவர் கொல்லோ,
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல, நீர் கொண்டு  5
விசும்பி இவர்கல்லாது தாங்குபு புணரிச்
செழும் பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே?

Kurunthokai 287, Kachipēttu Nannākaiyār, Mullai Thinai What the heroine’s friend said to her
May you live long, O friend!
Listen!

Will your lover come back now
on seeing the rainclouds carry water
and rise up together with uproar
over the lush mountains and not the
sky,
like women in their first pregnancy
who carry their babies for twelve
months, who are unable to walk,
tired, and pining for green tamarind?

Yes!  He will come back on time!

Notes:  The heroine’s friend told her that the hero would return at the indicated season.  கூறிய பருவத்தில் தலைவன் வருவான் என்றது.   துறக்குவர் கொல்லோ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – எதிர்மறைப் பொருளது.    ஐங்குறுநூறு 51 – புளிங்காய் வேட்கைத்தன்று நின் மலர்ந்த மார்பு, இவள் வயாஅ நோய்க்கே.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேகங்கள் விசும்பில் இவர மாட்டாது குன்றம் நோக்கிச் சென்றன என்க.  தலைவன் நெடிது நாள் நின்னைப் பிரிந்து உறைதலானே தன் உளத்தே முதிர்ந்த காமத்தின் பொறையாலே ஆண்டு உறைதல் ஆற்றாது நின்னை நோக்கி விரைந்து வருவன் என்னும் குறிப்பும் கொள்க.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, காதலர் – your lover, இன்னே – now, கண்டு – on seeing it, துறக்குவர் கொல்லோ – will he abandon, will he stay away, he will come back (கொல் – அசைநிலை, an expletive, ஓ – வினா, a question), முந்நால் திங்கள் – three times four months, a year, நிறை – full, பொறுத்து – bearing, அசைஇ – tired (சொல்லிசை அளபெடை), ஒதுங்கல் செல்லா – unable to walk, பசும் புளி வேட்கை – desire for green tamarind, Tamarindus indica, கடுஞ்சூல் மகளிர் போல – like women in their first pregnancy, நீர் கொண்டு – carrying water, விசும்பி இவர்கல்லாது – not going toward the sky, தாங்குபு – they carry, புணரி – they get together, செழும் பல் குன்றம் நோக்கி – toward the lush mountains, toward the rich mountains, பெருங்கலி வானம் – uproarious clouds, ஏர்தரும் – rising up, பொழுது – at that time, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 288, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கி இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன் ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ,
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?  5

Kurunthokai 288, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
The man from the tall mountain
country, where pepper vine grows,
and troops of monkeys eat their
tender leaves, is a sweet person.

Is it sweeter, the affliction that
loved ones bring, than the so-called
celestial world?  Yes, it is sweeter!

Notes:  The heroine praised the hero to her friend who said that he was an unkind man.  தலைவனின் வரவை உணர்ந்து, ‘அவன் அன்பிலன்’ என்று கூறிய தோழியிடம் ‘அவன் செய்வன இனியவை’ என்று உரைத்தது.  இனிதோ (4) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் எதிர்மறைப் பொருளது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தளிர் அருந்தும் குரங்கு மிளகுத் தளிரையும் தின்னுதலும் அத்தளிர் உறைப்புச் சுவை உடையதாயினும் ஏனைத் தளிரினும் உடலாக்கம் தருவதும் போல, யாமும் தலைவன் செயல்களில் சில துன்பம் தருவதாயினும் அதுவே ஆக்கம் தருவதாம் என்று அமைதல் வேண்டும் என்பாள், ‘என்றாள்.

Meanings:  கறி வளர் – black pepper growing, மிளகு, Piper nigrum, அடுக்கத்து – in the mountain ranges, in the mountain slopes, ஆங்கண் – there, முறி – tender leaves, அருந்து – eating (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), குரங்கு ஒருங்கி இருக்கும் – monkeys are together, பெருங்கல் நாடன் – the man from the country with tall mountains, இனியன் – he is a sweet man, ஆகலின் – hence, இனத்தின் இயன்ற – loved ones create, இன்னாமையினும் – even more than the pain, இனிதோ – is it sweeter, yes it is sweet, இனிது எனப்படூஉம்- the one that’s called sweet, the one that is considered to be sweet (எனப்படூஉம் – இன்னிசை அளபெடை), புத்தேள் நாடு – celestial world, heaven, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 289, பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே,  5
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 289, Perunkannanār, Mullai Thinai – What the heroine said to her friend
Like the waxing moon,
it increases more and more,
this disease I am afflicted with,
as I am ruined, like a crushed
sprout.  It has caused the bangles
on my forearms to slip down.
Since he is not near me, I am
distressed.

Not only that, the rain, mistaking
the season, is confused, and has
started to fall.
Even before it did that, the folks in
in our town worried about me, more
than I worry about him.

Notes:  The heroine said this to her friend who worried that the hero had not  returned at the indicated time.  தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை என்று வருந்திய தோழியிடம் கூறியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது வருத்தங் கண்டு கவல்கின்ற தோழியையே ஈண்டு அழுங்கள் ஊர் என்றாள்.  ஊர் என்பது ஊரில் உள்ளார்க்கு ஆகுபெயராய் நின்று குறிப்பாலே தோழியை உணர்த்தியது.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  வளர்பிறை போல – like the waxing moon, வழிவழிப் பெருகி – increasingly more and more, இறை வளை நெகிழ்த்த – it has made the bangles on my forearms to slip, எவ்வ நோயொடு – with this painful disease, குழை பிசைந்தனையேம் ஆகி – I have become like a sprout that is crushed (பிசைந்தனையேம் – தன்மைப் பன்மை, first person plural), சாஅய் – became thin (இசை நிறை அளபெடை), உழையர் அன்மையின் – since he is not near me, உழப்பது அன்றியும் – not only am I sad, மழையும் – also this clouds/rain, தோழி – my friend, மான்று – in a confusing manner, பட்டன்று – it rained, ஏ – அசைநிலை, an expletive, பட்ட மாரி – rain which fell, படாஅக் கண்ணும் – even before it fell (படாஅ – இசை நிறை அளபெடை), அவர் திறத்து இரங்கும் – worrying because of him, நம்மினும் – more than I do, நம் திறத்து இரங்கும் – worrying more for me, இ அழுங்கல் – this uproarious, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 290, கல்பொரு சிறுநுரையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காமம் தாங்குமதி என்போர், தாம் அஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,  5
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.

Kurunthokai 290, Kalporu Sirunuraiyār, Neythal Thinai – What the heroine said to her friend
Those who tell me to bear
the pain of love, do they not
know it, or are they that
strong?

If I cannot see my lover, deep
pain spreads in my heart.
Like a wisp of foam that crashes
against rocks in a heavy flood,
I become nothing, little by little.

Notes:  The heroine said this to her friend who urged her to be patient when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் கூறியது.   உ. வே. சாமிநாதையர் உரை – இது படர்கையிற் கூறினும் தோழியைக் கருதியதே ஆதலின் முன்னிலைப் புறமொழி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:  காமம் தாங்குமதி என்போர் – those who tell me to bear the pain of love (மதி – முன்னிலையசை, an expletive of the second person), தாம் – அசைநிலை, an expletive, அஃது அறியலர் கொல் – do they not know it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, அனை மதுகையர் கொல் – are they that strong (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), யாம் எம் காதலர்க் காணேம் ஆயின் – if I do not see my lover, செறி துனி பெருகிய நெஞ்சமொடு – with a heart filled with great sorrow, பெருநீர் – heavy flood, கல் பொரு – crashing against the rocks, hitting on the rocks, சிறு நுரை போல – like a little piece of foam, மெல்ல மெல்ல – little by little, இல் ஆகுதும் – I become nothing (ஆகுதும் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 291, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் பாங்கனிடம் சொன்னது
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே,
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள் விளியென, எழல் ஒல்லாவே,
அது புலந்து அழுத கண்ணே சாரல்  5
குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல்லிதழ் கலைஇத்
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றனவே.

Kurunthokai 291, Kapilar, Kurinji Thinai – What the hero said to his friend
The parrots that came to attack
her flourishing millet field in the
burned and cleared land, thought
that her bird-chasing bamboo
gadget’s plucking sounds, along
with her voice, were sweet and
rhythmic, and refused to fly away.

Upset about it, she cried, her eyes
resembled blue waterlily flowers,
blossoming in the deep fresh springs,
their many petals swarmed by bees,
in disarray from cold water droplets.

Notes:  The hero told his friend about the condition of the heroine.  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன் தோழனிடம் தலைவியின் நிலைமை கூறியது.  குறுந்தொகை 382 – தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை.  அகநானூறு 26 – தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய் மண்.  குளிர் – தினைப் புனத்தில் கிளிகளை ஓட்டுபவர்கள் மூங்கிலை வீணை போல் கட்டித் தெறிக்கும் கருவி.  பயில் (7) – இரா. இராகவையங்கார் உரை – செறிதல், உ. வே. சாமிநாதையர் உரை – பழகுதல்.  கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 – ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  இசையா – இசைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  சுடு புன மருங்கில் – in the burned and cleared field, கலித்த ஏனல் – flourishing millet crops, செந்தினை, red/black millet, Panicum indicum or Setaria italica, படுகிளி – parrots that come to seize millet, parrots that dive down to eat millet, கடியும் கொடிச்சி – the young woman in the mountain who chases, கை – hands, குளிர் – bird chasing bamboo gadget, ஏ – அசைநிலை, an expletive, இசையின் இசையா – played the bamboo musical gadget as she sang, இன்பாணித்தே – with sweet tempo, கிளி அவள் விளியென – the parrots thought that it was her singing, எழல் – rising up and flying, ஒல்லா – not agreeable, ஏ – அசைநிலை, an expletive, அது புலந்து அழுத கண் – she was upset and her eyes dropped tears, ஏ – அசைநிலை, an expletive, சாரல் – mountain slopes, குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை – blue waterlilies that have bloomed in a deep fresh spring, Blue nelumbo, Nymphaea odorata, வண்டு பயில் – bees swarm, பல்லிதழ் கலைஇ – causing disarray to many petals (கலைஇ – சொல்லிசை அளபெடை, பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), தண் துளிக்கு ஏற்ற – accepted cold droplets (துளிக்கு – துளியை, உருபு மயக்கம்), மலர் போன்றன – they were like flowers, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 292, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு,
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல,  5
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை,
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.

Kurunthokai 292, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Mother who does not sleep,
like a town near a battlefield,
since he came one day as a guest
with a smiling face, is like Nannan,
who killed a bright-browed young
woman, who went to bathe in the
river, for eating a mango the river
brought from his tree, refusing an
offer of eighty-one elephants and
a gold statue equal to her weight.

May she suffer in eternal hell!

Notes:  The heroine’s friend who was aware that the hero was nearby, let him know that the heroine has been confined to her home and that he should come and marry her.  தலைவி தமரால் பாதுகாக்கப்படுகின்றாள் என்பதையும் வரைந்து கொள்ளுதலே நன்று என்பதையும் புலப்படுத்துகின்றாள்.  புறநானூறு 151 – நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற்கு ஒத்தனை.  There is a temple (மாசாணி அம்மன் கோவில்) for this young woman in Ānaiamalai, Coimbatore district, where she is worshipped to this day.  நன்னன் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் ஒரு குறுநில மன்னன்.  மலைபடுகடாம் கொண்ட நன்னன் அல்லன்.  மலைபடுகடாம் கொண்ட நன்னன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான். ஈண்டு பெண் கொலை செய்த நன்னன் கொண்கானவேள் நன்னன் எனப்படுவான்.

Meanings:  மண்ணிய சென்ற – went to bathe, ஒண் நுதல் அரிவை – bright fore-headed young woman, புனல்தரு பசுங்காய் – fresh fruit that the river brought, a mango, தின்ற தன் தப்பற்கு – for her mistake of eating it, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு – along with nine times nine (81) male elephants, அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் – even when offered a gold statue of her in full size, கொள்ளான் – he did not accept, he refused, பெண் கொலை புரிந்த நன்னன் போல – like Nannan who murdered a young woman, வரையா நிரையத்து – to hell with no limits, செலீஇயர் – may she go (சொல்லிசை அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), ஓ – அசைநிலை, an expletive, அன்னை – my mother, ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தென – when he came as a guest with a smiling face, பகைமுக ஊரின் – like a town that is near the battlefield (ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), துஞ்சல் – sleeping, ஓ – அசைநிலை, an expletive, இலள் – she does not, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 293, கள்ளில் ஆத்திரையனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கள்ளில் கேளிர் ஆத்திரை உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சி அம் குறுங்காய்
ஓங்கி இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை  5
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சேயிழை அந்தில்
கொழுநன் காணிய, அளியேன் யானே.

Kurunthokai 293, Kallil Āthiraiyanār, Marutham Thinai – What the heroine said to her friend
Like Āthi Aruman’s town,
where drinkers
beat a path to the liquor shop,
and when they cannot get liquor,
return with fibrous, small palmyra
fruits with soft flesh,
grown on the spathes of the tall,
dark palmyra that grows in the town,

his mistress, decked in lovely jewels,
her beautiful garment woven with white
waterlilies from a pond and varying
leaves, swaying back and forth, brushing
against her thighs with pallor spots,
is coming here to see my lord.

I am a pathetic woman, for sure.

Notes:  The heroine said this to her friend who came with a message from the hero.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியிடம் கூறியது.  நற்றிணை 96 – நெய்தல் அம் பகை நெறித் தழை, ஐங்குறுநூறு 187 – நெய்தல் அம் பகைத்தழை.  உ. வே. சாமிநாதையர் உரை – பனை மரத்தில் உள்ள கள்ளை உண்ணச் சென்றோர், அதனை உண்ணுதலோடு அமையாது நுங்கைக் கைக்கொண்டு அப்பனைக்கு ஊறு புரிந்தாற்போலத் தலைவனைக் காண வருபவள் அவனைக் கைக்கொண்டு தலைவி இழிவுபடுத்திச் செல்வாள் என்பது உவமையால் பெறப்படும் கருத்து.  வரலாறு:  ஆதி அருமன்.  கள்ளில் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கள் விற்கும் கடை, இரா. இராகவையங்கார் உரை – கள் மனை.

Meanings:  கள் இல் கேளிர் – those who are going to drink liquor, those who are going to a liquor shop, ஆத்திரை – travel, உள்ளூர்ப் பாளை தந்த – given by the town’s palm tree spathes, பஞ்சி அம் குறுங்காய் – little fruit soft and beautiful like cotton/fibrous, ஓங்கி இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – leaves with soft palmyra seeds (nungu) from the tall dark female palmyra tree, Borassus flabellifer, ஆதி அருமன் மூதூர் அன்ன – like the ancient town of Āthi Aruman, அய வெள் ஆம்பல் – pond’s white waterlilies, அம் – beautiful, பகை நெறித் தழை – garment woven well from leaves that differ from each other, U. Ve. Sa – மாறுபட்ட முழு நெறியை உடைய தழை உடை, தித்தி – pallor spots, குறங்கின் – on her thighs, ஊழ் – in a regular manner, மாறு அலைப்ப – swaying back and forth, வருமே – will come, சேயிழை – woman with perfect jewels, woman with lovely jewels (அன்மொழித்தொகை), அந்தில் – in that place, கொழுநன் காணிய – to see my husband, அளியேன் – I am pitiable, I am pitiful, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 294, அஞ்சில் ஆந்தையார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழுவணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று மன்னே,
தித்தி பரந்த பைத்து அகல் அல்குல்  5
திருந்திழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத்
தழையினும், உழையின் போகான்
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

Kurunthokai 294, Anjil Ānthaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
He came swiftly like a stranger,
embraced you and ran away
when we were bathing in the sea,
resting in the seashore grove,
and performing kuravai dances,
hand in hand with our friends
wearing garlands.  There was gossip.

He has been at your side, even closer
than your swaying skirt made of tender
green leaves, tied around your wide
loins resembling the spotted hoods
of snakes, decorated with perfect jewels.

Because of what he has done, mother
keeps a close guard over you.

Notes:  The heroine’s friend said this to the hero who came for a day tryst.  பகற்குறிக்கண் தலைவன் வந்த இடத்து தோழி கூறியது.  தித்தி பரந்த பைத்து அகல் அல்குல் (5) – இரா. இராகவையங்கார் உரை – பாம்பின் பொறிப் படத்தின் தன்மைத்தாய் அகன்ற அல்குல், உ. வே. சாமிநாதையர் உரை – தேமல் படர்ந்த விரிந்த அகன்ற அல்குல்.  பாம்பின் பொறி:  பொருநராற்றுப்படை  69 – பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொ. வே. சோமசுந்தரனார் உரை – படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப.

Meanings:  கடல் உடன் ஆடியும் – played together in the ocean, கானல் அல்கியும் – stayed in the seashore grove, தொடலை ஆயமொடு – with garland wearing friends, தழுவணி அயர்ந்தும் – performed kuravai dances, நொதுமலர் போல – like a stranger, கதுமென வந்து முயங்கினன்– since he came rapidly and hugged (கதுமென – விரைவுக்குறிப்பு), செலின் – went, ஏ – அசைநிலை, an expletive, அலர்ந்தன்று – gossip has risen, மன், ஏ – அசைநிலைகள், தித்தி பரந்த – pallor spread, spots spread, பைத்து – wide, like that of a snake’s hood, அகல் அல்குல் – wide loins, wide hips, திருந்திழை – perfect jewels, துயல்வு – swaying, கோட்டு – on the sides, அசைத்த – tied, பசுங்குழைத் தழையினும் – even more than the moving skirt made with tender green leaves, உழையின் போகான் – he is not going away from you, தான் தந்தனன் – he gave, யாய் – mother, காத்து – protecting, ஓம்பல் –  nurturing, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 295, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணிப் பொலிந்த ஆயமொடு, துவன்றி
விழவொடு வருதி நீயே, இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,  5
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே.

Kurunthokai 295, Thoongalēriyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
You bring them here with festivities,
your beautiful mistresses wearing strung
garlands, ornaments, hair decorations
and garments made with leaves.

This town has begun to say that once this
man lived off a single cow with no wealth.
Now his life has become a festival after the
greatly virtuous young woman came.

Notes:  The heroine’s friend said this to the hero who wanted to return home.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் வேண்டியபொழுது தோழி கூறியது.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  உடுத்தும் – wearing as clothes, தொடுத்தும் – stringing and wearing as garlands, பூண்டும் – wearing as ornaments, செரீஇயும் – thrusting on the hair, placing on the hair (செரீஇ – சொல்லிசை அளபெடை), தழை அணி – garments made with leaves, பொலிந்த – beautiful, splendid, ஆயமொடு – with many women, with many mistresses, துவன்றி – together, closely, விழவொடு வருதி – you come with festivities, நீயே – you, இஃது – here, ஓ – அசைநிலை, an expletive, ஓர் ஆன் – one cow, வல்சி – earnings that provide food, livelihood, சீர் இல் வாழ்க்கை – life without wealth, பெரு நல – very virtuous, very beautiful, குறுமகள் வந்தென – since the young woman came, இனி – after, விழவு ஆயிற்று – it has become a festival, என்னும் – what it says, இ – this, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 296, பெரும்பாக்கனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, புன்னை
அலங்கு சினை இருந்த அஞ்சிறை நாரை
உறு கழிச் சிறு மீன் முனையின் செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந்துறைவன் காணின், முன்னின்று  5
கடிய கழறல் ஓம்புமதி, ‘தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ’ என்றனை துணிந்தே.

Kurunthokai 296, Perumpākkanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, my friend!  Listen!
If you see the lord of the cool shore,
……….where a stork with beautiful wings
……….sitting on a swaying branch of a
……….punnai tree, hates the tiny fish in
……….the vast salt marshes, and goes to
……….the paddy fields to enjoy clusters
……….of rice and waterlily blossoms with
……….honey scent,
do not go and stand in front of him and
tell him boldly, “Look at what happened
to the young woman with bangles, since
you left her.  Is this a fitting thing for you
to do?”

Use restraint with your words and remove
harshness.

Notes:  The heroine who was aware that the hero was nearby, revealed her situation to him by way of talking to her friend.  ‘நீ தலைவனைக் கழறுதலை ஒழி’ என்று கூறும் வாயிலாக தன் நிலைமையைப் புலப்படுத்துகின்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புன்னை அலங்கு சினை இருந்த நாரை, கழிச் சிறு மீனை வெறுத்துழிச் செறுவில் நெய்தல் கதிரொடு நயக்கும் எய்தும் இன்பத்தினும் துன்பமே பெரிதாகலின் இது வெறுக்கத்தக்கதாயிற்று.  இனி, நாம் வரைந்து கொண்டு மனையிலிருந்து இன்புறுதலே தருவதாம் என்னும் உள்ளுறை தோற்றி நின்றது காண்க.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  என்றனை (8) – உ. வே. சாமிநாதையர் உரை – என்று, இரா. இராகவையங்கார் உரை – என்று கருதினையாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்னோரன்ன.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, may you live long, தோழி – my friend, புன்னை அலங்கு சினை – laurel tree’s moving branches,  நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  இருந்த அம் சிறை நாரை – stork with beautiful wings that was on (the laurel tree), white stork, Ciconia ciconia, உறு கழிச் சிறு மீன் – small fish in the large brackish waters, முனையின் – hating, செறுவில் – in the field, கள் நாறு நெய்தல் – with waterlilies with honey fragrance, கதிரொடு – with paddy spears, நயக்கும் – desires, தண்ணந்துறைவன் – lord of the cool beautiful seashore, காணின் – if I see him (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), முன்னின்று – standing in front of him, கடிய – harshness, கழறல் – chiding, ஓம்புமதி – protect your words (மதி – முன்னிலையசை, an expletive of the second person), தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் – separating from her and making the young woman with bangles such, நும்மின் தகுமோ – is this fitting for you, என்றனை – in this manner, like these, you thinking like this, துணிந்து – boldly, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 297, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
அவ்விளிம்பு உரீஇய கொடுஞ்சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று இறந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்,
கல் உயர் நனந்தலை நல்ல கூறிப்  5
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற, அவர் உணராவூங்கே.

Kurunthokai 297, Kāviripoompattinathu Kārikkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
I certainly realized before he did,
that the right thing for him to do is
to say kind words to you,
and take you with him to the vast
land with tall mountains,

where, what appears like villages
are the leaf-covered burial mounds
of wayfarers, killed by bandits, unable
to protect themselves from the victorious
onslaught of long, sharp arrows from
deadly bows with pulled, tight strings.

Notes:  The heroine’s friend urged that the couple elope to get married.  தோழி ‘இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது’ என்று தலைவிக்குக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாளி விறல் பகை பேணார் ஆறு செல் வம்பலர் பதுக்கை ஊர்போல் தோன்றும் வழியில் போதல் பொருள் என ன் உணர்ந்தேன் என்றது, அம்மறவர் செய்யும் கொடுமையினும்காட்டில் நம் தமர் செய்யும் கொடுமை பெரிது எனத் தலைவிக்கு குறிப்பால் உணர்த்தியவாறு.  அவ்விளிம்பு (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அகரச்சுட்டு, மேல் விளிம்பைக் குறித்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்பு, அகநானூறு 175-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, தோளின் விளிம்பினை உரசிய, அகநானூறு 371-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய,  வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  அவ்விளிம்பு உரீஇய – rubbing the edges on the top, pulling the strings on the top (உரீஇய – செய்யுளிசை அளபெடை), கொடும் சிலை – harsh bows,  curved bows, மறவர் – wayside bandits, வை – sharp,  வார் – long, வாளி – arrows, விறல் – victorious, பகை – enmity, பேணார் – unable to protect themselves, மாறு  நின்று இறந்த – stood across and died, ஆறு செல் வம்பலர் – the path-going wayfarers, உவல் இடு பதுக்கை – heaped leaf covered burial places, ஊரின் தோன்றும் – appearing like villages (ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கல் உயர் நனந்தலை – the vast land with mountains, நல்ல கூறி – saying good words, புணர்ந்து உடன் போதல் – going together with him, பொருள் என – the thing to do, உணர்ந்தேன் மன்ற – I realized for sure, (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), அவர் – him, உணரா – realizing, ஊங்கு – before, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 298, பரணர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
சேரி சேர மெல்ல வந்து வந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி,
இன் கடும் கள்ளின் அகுதை பின்றை  5
வெள் கடைச் சிறு கோல் அகவன் மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும்புற நிலையே.

Kurunthokai 298, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Think about his sad looks, my friend!
He comes to our village every day,
utters precious sweet words,
and just stands there, looking pale.

Like the innocent female elephants
won by diviner women with small
silver-tipped canes who stand behind
Akuthai, whose liquor is sweet and
strong, his polite behavior that we see,
is hiding something quite different.

Notes:  The heroine’s friend let her know that the hero is getting ready to climb on a madal horse.  தலைவன் மடல் ஏறத் துணிந்ததை உணர்த்தியது.  சேரி (1) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தெரு.  அகவன் மகளிர் மடப் பிடிப் பரிசில் மான – உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாடல் மகளிர் பெறா நின்ற மடப்பமுடைய பிடி யானையாகிய பரிசிலைப் போல, உ. வே. சாமிநாதையர் உரை – அகவன் மகளிர் பெறும் மடப்பம் பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல, தமிழண்ணல் உரை – அகவன் மகளிர் வாய்விட்டுச் சொல்லாமல் பெற விரும்பும் பெண் யானைப் பரிசிலைப் போன்று.

Meanings:  சேரி சேர – to reach our settlement, to reach our neighborhood, மெல்ல வந்து வந்து – he came gently, அரிது வாய்விட்டு இனிய கூறி – uttered precious sweet words, வைகல் தோறும் – every day, நிறம் பெயர்ந்து – color changed, becoming pale, உறையும் – staying, living, அவன் பைதல் நோக்கம் – his sad looks, நினையாய் தோழி – think about it O friend, இன் கடும் கள்ளின் அகுதை பின்றை – behind Akuthai with sweet strong liquor, வெள் கடை – white tipped, silver tipped, சிறு கோல் அகவன் மகளிர் – female diviners with small rods, female soothsayers with small rods, மடப் பிடிப் பரிசில் – innocent female elephants, gentle female elephants, மான – like (உவம உருபு, a comparison word), பிறிது ஒன்று குறித்தது – indicates something else (that he is ready to climb a madal horse), அவன் நெடும்புற நிலை – his long stay here behind me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 299, வெண்மணிப்பூதியார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இது மற்று எவனோ தோழி, முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றைக் கொண்கன்
கண்டன மன் எம் கண்ணே, அவன் சொல்  5
கேட்டன மன் எம் செவியே, மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென்தோளே.

Kurunthokai 299, Venmanipoothiyār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
On the shady sand dunes in the
seashore grove lapped by ancient
ocean’s waves, where birds sing,
my desires came true when I
united with him under a punnai
tree bearing clusters of flowers.

My eyes saw my lover and my ears
heard his words.

I attain great beauty when he is with
me.  My thick, delicate arms become
thin when he is away.

How strange is this, my friend!

Notes:  The heroine, aware that the hero was nearby, said this to her friend.  She urged him to come and marry her.  தலைவன் அருகில் நிற்பதை அறிந்த தலைவி, தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டும் என்பதை அவனுக்குப் புலப்படுத்தியது.  இது (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது.  முதுநீர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்மொழித்தொகை, முதிய நீரையுடைய கடல் என்க.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

Meanings:  இது – this, மற்று – அசைநிலை, an expletive,  எவன் – how strange, ஓ – அசைநிலை, an expletive, தோழி – O friend, முதுநீர்ப் புணரி திளைக்கும் – ancient ocean waters lap (முதுநீர் – அன்மொழித்தொகை, முதிய நீரையுடைய கடல்), புள் இமிழ் கானல் – seashore groves with bird sounds, seashore with bird sounds, இணர் அவிழ் புன்னை – clustered flowers of laurel trees, நாகம்,  Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  எக்கர் – sand dunes,  நீழல் – shade (நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), புணர் குறி வாய்த்த ஞான்றை – when my dreams of uniting with him came true, கொண்கன் கண்டன மன் எம் கண்ணே – I have seen the lord (எம் – தன்மைப் பன்மை, first person plural), அவன் சொல் கேட்டன மன் எம் செவியே – my ears have heard his words (எம் – தன்மைப் பன்மை, first person plural), மற்று – அசைநிலை, an expletive, அவன் மணப்பின் – when he unites with me, மாண் நலம் எய்தி – attaining great beauty, தணப்பின் – when he separates, ஞெகிழ்ப – they become thin (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), எம் – my, தன்மைப் பன்மை, first person plural, தட – curved, large, மென்தோள் – delicate arms, delicate shoulders, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 300, சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை  – தலைவன் தலைவியிடம் சொன்னது
குவளை நாறும் குவை இருங்கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்க்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பஃறித்தி மாஅயோயே!
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே,  5
யானே குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் நான் நின்னுடை நட்பே.

Kurunthokai 300, Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to the heroine
Do not fear, O dark young
woman with thick, black hair
with the scent of blue waterlily
blossoms, honey-filled red mouth
with the fragrance of white
waterlilies, and tiny beauty spots
that look like the pollen of lotus
flowers growing in deep ponds!

Do not be afraid, when I ask you
not to fear.

Even if I were to gain this earth
encircled by water, on whose shores
short-legged geese live among sand
dunes, I will not think of abandoning
your love.

Notes:  The hero said this to the heroine after their first union.  இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியிடம் கூறியது.  குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் என்றது, அன்னப்பறவை தனக்குத் தகுந்த வெண்மணற் குன்றை விரும்பி ஆண்டே உறைந்தாற் போன்று யானும் நின்னிடத்தேயே உறைவேன் என்னும் குறிப்பிற்று.

Meanings:  குவளை நாறும் – with blue waterlily fragrance, Blue nelumbo, Nymphaea odorata, குவை இருங்கூந்தல் – thick dark hair, ஆம்பல் நாறும் – white waterlily fragrance, தேம் பொதி துவர் வாய் – honey filled red mouth, honey filled coral-like red mouth (தேம் தேன் என்றதன் திரிபு), குண்டு நீர்த் தாமரை – lotus flowers in deep ponds, கொங்கின் அன்ன – like pollen (கொங்கின் – இன் சாரியை), நுண் – tiny, பல் தித்தி – many pallor spots (பல் தித்தி பஃறித்தி என லகரம் ஆய்தமாய்த்  திரிந்தது), மாஅயோயே – O dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் விளி), நீயே அஞ்சல் என்ற என் சொல் – my words asking you not to fear,  அஞ்சலையே – do not fear (அஞ்சல், ஐ சாரியை, ஏ – அசைநிலை, an expletive), யான் – me, ஏ – அசைநிலை, an expletive,  குறுங்கால் அன்னம் – short legged geese, குவவு மணல் – heaped sand, sand dunes, சேக்கும் – they stay, they reside, கடல் சூழ் மண்டிலம் – earth surrounded by oceans, பெறினும் – even if I get, விடல் – to let go, சூழலன் நான் – I will not think, நின்னுடை – your, நட்பு – friendship, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 301, குன்றியனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இன மணி நெடுந்தேர்  5
வாராதாயினும், வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு,
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.

Kurunthokai 301, Kundriyanār, Neythal Thinai – What the heroine said to her friend
My eyes have abandoned sleep,
O friend!

Even through my lover’s tall chariot
with many bells does not come
with its wheels cutting into the earth
of the town’s square,
I hear the sounds as though he is
coming, in the middle of the night,
when a black-legged ibis, in her first
desirable pregnancy, ill, cries for her
mate from her twig nest on the thick
fronds of a bent palmyra tree with
a drum-like trunk.

Notes:  The heroine said this to her friend when the hero was away to learn wealth for their marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி கூறியது.  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  முழவு முதல் அரைய – with a drum-like trunk, தடவு – curved, large, நிலை – position, பெண்ணை – female palmyra tree, Borassus flabellifer, கொழு மடல் – thick frond/stem, இழைத்த – made, created, சிறு கோல் – small sticks, twigs, குடம்பை – nest, கருங்கால் அன்றில் – black-footed ibis, could be black ibis also called red-naped ibis – Pseudibis papillosa or the glossy ibis Plegadis falcinellus, காமர் – desirable, கடுஞ்சூல் – first pregnancy, வயவுப் பெடை – craving female, female with pregnancy sickness (வயா என்பது வயவு ஆயிற்று), அகவும் – calls, cries, பானாள் கங்குல் – middle of the night (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), மன்றம் போழும் – cutting the earth in the public place, இனமணி – many bells, நெடுந்தேர் – tall chariot, வாராதாயினும் – even if he doesn’t come, வருவது போல – as though he is coming, செவி முதல் – in my ears, இசைக்கும் – sounding, அரவமொடு – with noises, துயில் துறந்தனவால் – they have abandoned sleep (துறந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive), தோழி – O friend, என் – my, கண் – eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 302, மாங்குடி கிழார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
உரைத்திசின் தோழி, அது புரைத்தோ அன்றே,
அரு துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்தலைப்
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ, இன்னும் நன் மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்  5
அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

Kurunthokai 302, Māngudi Kizhār, Kurinji Thinai – what the heroine said to her friend
Tell me, my friend!  Is this worthy
of him?
Alas!  I fear death more than this.

Is my man from the fine mountain
country afraid of rumors
that we are inseparable lovers now?

He comes to me in my thoughts
in the middle of the night when
everyone in this town is asleep,
but does not come in person.

Notes:  The heroine said this to her worried friend when the hero was away to learn wealth for their marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தோழியிடம் தலைவி கூறியது.  அன்று (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆகாது, இரா. இராகவையங்கார் உரை – அசைநிலை.  அன்னோ (4) – இரா. இராகவையங்கார் உரை – ஐயோ என்றது உயிர் கலந்து ஒன்றிய நட்பால் தலைவனும் இறந்துபடுவன் என்று அஞ்சியதால்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  உரைத்திசின் தோழி – tell me O friend (இசின் – முன்னிலை அசைநிலை, an expletive of the second person), அது புரைத்தோ – is this a respectable thing to do (ஓ – வினா), அன்று – அசைநிலை, an expletive, it is not, ஏ – அசைநிலை, an expletive, அரு துயர் உழத்தலும் ஆற்றாம் – I am unable to bear this terrible pain, அதன்தலை – more than that, பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – I am more afraid of death than this, அன்னோ – alas, an expression word, இன்னும் – still, நன் மலை நாடன் – man from the fine mountains, பிரியா நண்பினர் இருவரும் என்னும் – these two have inseparable friendship now, அலர் அதற்கு அஞ்சினன் கொல் – is he afraid of gossip (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, பலர் – many, உடன் – together, துஞ்சு ஊர் – sleeping town, யாமத்தானும் – even in the middle of the night, என் நெஞ்சத்து – he comes in my heart as thoughts, அல்லது – other than that, வரவு – coming, அறியானே – he does not know, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 303, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கழி தேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு
அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொன் நிலை நெகிழ்ந்த வளையள் ஈங்குப்
பசந்தனள் மன் என் தோழி, என்னொடும்  5
இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

Kurunthokai 303, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the seashore,
where black-legged, white herons
search for prey in brackish waters
and rest with their flocks on the
thāzhai trees of the sandy
shoreline, dozing to the sounds
of the vast ocean’s breaking waves!

The day that my friend’s bangles
slipped down and pallor came
upon her, was the day we were
chasing crabs with golden stripes,
in the beautiful,
dappled shade of a punnai tree
with pretty clusters of flowers.

Notes:  The heroine’s friend urged marriage informing the hero that the heroine might be confined to her house by her mother.  தாய் தலைவியை இற்செறித்தற்குக் கருதியிருத்தலைத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்தி வரைந்து கொள்ளத் தூண்டியது.  உ. வே. சாமிநாதையர் உரை – குருகு கழி தேர்ந்து வயிறு நிரம்ப உண்டு பின் தாழை மடலில் துஞ்சும் என்றது, இதுகாறும் களவு ஒழுக்கத்தில் நின் உள்ளத்தில் நிறைவு உண்டாம் வண்ணம் அளவளாவினை ஆதலின் இனி வரைந்து கொண்டு நின் இல்லின்கண் உறைந்து இல்லறம் நடத்துவாயாக என்ற கருத்தை உணர்த்தியது.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  கழி தேர்ந்து – searching in the brackish waters, அசைஇய – resting (செய்யுளிசை அளபெடை), கருங்கால் வெண்குருகு – white herons/egrets/storks with black legs, அடைகரைத் தாழைக் குழீஇ – gathering on the thāzhai trees on the sandy shore, Pandanus odoratissimus (குழீஇ – சொல்லிசை அளபெடை), பெருங்கடல் உடை திரை ஒலியின் துஞ்சும் – and sleeping to the sounds of the huge ocean’s waves (ஒலியின் – ஒலியில்), துறைவ – O lord of the seashore (அண்மை விளி), தொன் நிலை – former state (when they were tight), நெகிழ்ந்த வளையள் – woman with slipping bangles, woman with loosened bangles, ஈங்குப் பசந்தனள் – she has become pale here, மன் – greatly, அசைநிலை, an expletive, என் தோழி – my friend, என்னொடும் – with me, இன் இணர் – clusters of flowers that are sweet to the eyes, fine clusters of flowers, புன்னை – laurel tree, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, அம் புகர் நிழல் – beautiful dappled shade, பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்று – on the day when we chased gold striped crabs, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 304, கணக்காயர் தத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கொல் வினைப் பொலிந்த கூர்வாய் எறி உளி
முகம் படம் மடுத்த முளி வெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச்சுரத்து எறிந்து வாங்கு விசைக்
கொடுந்திமில் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து  5
வெண்தோடு இரியும் வீ ததை கானல்
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு,
செய்தனெம் மன்ற ஓர் பகைதரு நட்பே.

Kurunthokai 304, Kanakkāyar Thathanār, Neythal Thinai – What the heroine said to her friend
It has brought enmity, for sure,
the love that I have for the lord
of the beautiful cool shores,

where thāzhai trees grow on
the shoreline and short-legged,
white geese flocks move away,
startled by uproars of fishermen
hunting for swordfish, when they
hurl powerful harpoons of dry
bamboo tipped with sharp metal
barbs, and pull them back holding
the ropes tied to them, riding fast
curved boats through rough water.

Notes:  The heroine said this to her friend who worried about her when the hero was away.  தலைவன் வரையாதுத் தலைவியைப் பிரிந்த வேளையில் வருந்தும் தலைவியைக் கண்டு வருந்திய தோழியிடம் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரதவர் மீன் எறியக் கரையிருந்த அன்னக்குழாம் இரியும் என்றது, யாம் தலைவனோடே நட்புச் செய்ய நம் பெண்மை நலம் முழுவதும் இரிந்தது என்னும் உள்ளுறை தோற்றி நின்றது.  தமிழண்ணல் உரை – பகைதரு நட்பு என்பது, காதலித்ததால் ஏற்பட்ட துன்பத்தைக் குறிக்கின்றது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  கொல் வினைப் பொலிந்த – great at killing, கூர்வாய் – sharp ends, pointed ends, எறி உளி – throwing sharp metal barbs, throwing sharp spears, முகம் படம் மடுத்த – placed fitting on the front, முளி வெதிர் – dried bamboo, நோன் காழ் – strong bamboo pieces, தாங்கு அரு – difficult to bear, நீர்ச் சுரத்து – in the path with water, எறிந்து – throw it, வாங்கு – pull, draw (holding the ropes tied to them), விசை – fast, கொடும் திமில் – curved boats, பரதவர் – fishermen, கோட்டு மீன் எறிய – hunting for swordfish, hunting for sawfish, hunting for shark, நெடும் கரை இருந்த – in the long shoreline, குறுங்கால் – short-legged, அன்னத்து வெண்தோடு – flocks of white geese, இரியும் – they fly away (in fear), வீ ததை – dense with flowers, கானல் – seashore grove, கைதை – தாழை, thāzhai trees, pandanas odoratissimus, அம் தண் புனல் சேர்ப்பனொடு – with the lord of the beautiful cool seashores, செய்தனெம் – I did, I caused (தன்மைப் பன்மை, first person plural), மன்ற –  தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, ஓர் – a, பகைதரு – giving enmity, நட்பு – friendship, love, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 305, குப்பைக்கோழியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும் அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே,
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்,  5
குப்பைக் கோழித் தனிப்போர் போல,
விளி வாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யாம் உற்ற நோயே.

Kurunthokai 305, Kuppaikkōzhiyār, Marutham Thinai – What the heroine said to her friend
The bright flame of passion that
my eyes gave to me,
torments me to my very bone.
It is not possible to see him and
embrace him.  He is not capable
of coming and removing my distress.

There is nobody who can direct him
toward me.

My love affliction is like two chickens
fighting alone on a rubbish pile with
nobody to separate them.  It has to
cease by itself, since there is nobody
to help me get rid of it!

Notes: மருதத்துள் குறிஞ்சி.  The heroine who is confined to her house suggests to her friend that it is time for her to let the family know about the love matter.  இற்செறிக்கப்பட்ட தலைவி வருந்தி அறத்தொடு நிற்றல் வேண்டும் என்று தோழிக்குப் புலப்படுத்தியது.  இரா. இராகவையங்கார் உரை – குப்பைக் கோழி தனிப் போரில் வெற்றி தோல்விகளால் தமக்கு மகிழ்ச்சியும் வ்ருத்தமுமின்றி அயன்மையுடன் காண்பார் போல, யானும் நோயும் பொரும் போரில் நீ அயன்மையான் உள்ளனை என்று தோழிக்குக் குறித்தாளாம்.

Meanings:  கண் தர வந்த – came by looking at him with my eyes, காம – with love, ஒள் எரி – bright flame, என்பு உற நலியினும் – even if it hurts me to the bones, அவரொடு பேணிச் சென்று – going to him with love, நாம் முயங்கற்கு அருங்காட்சியம் – it is very hard for me to see and embrace him (அருங்காட்சியம் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive, வந்து அஞர் களைதலை – coming and removing my distress, அவர் – he, ஆற்றலர் – he will not remove, ஏ – அசைநிலை, an expletive, உய்த்தனர் விடாஅர் – there is nobody to direct him to me (விடாஅர் – இசைநிறை அளபெடை), பிரித்து இடை களையார் – nobody to go between and remove, குப்பைக் கோழித் தனிப் போர் போல – like the fight between chickens, விளி வாங்கு விளியின் – to be ruined by its ruin, அல்லது – other than that, களைவோர் இலை – nobody to help remove it (இலை – இல்லை என்பதன் விகாரம்), யாம் – தன்மைப் பன்மை, first person plural, உற்ற – attained, நோய் – affliction, disease, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 306, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
மெல்லிய இனிய மேவரு தகுந
இவை மொழியாம் எனச் சொல்லினும், அவை நீ
மறத்தியோ, வாழி என் நெஞ்சே, பலவுடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்  5
தண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

Kurunthokai 306, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her heart
May you live long, my heart!
Even after I told you we will not
speak soft, sweet desirable words
to him, did you forget that on seeing
the lord of the cool ocean shores,
where bees swarm pollen-laden flowers
of beautiful mango trees in the groves?

Notes:  The heroine said this to her heart when she was confined to her home.  காவல் மிகுதியால் வருந்தும் தலைவி வரையாது ஒழுகும் தலைவனை நினைத்துத் தன் நெஞ்சிடம் சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மா அத்துத் தாது அமர் பூவில் வண்டு வீழ்ந்து ஆண்டுப்படும் கள்ளுண்டு மயங்கினாற் போன்று நீயும் தலைவனைக் கண்டுழி மயங்கா நின்றனை என்பது குறிப்பாகக் கொள்க.

Meanings:  மெல்லிய – softly, இனிய – sweetly, மேவரு தகுந – desirable (விரும்பத்தக்கன), இவை மொழியாம் எனச் சொல்லினும் – even after I told you that we will not talk, அவை நீ மறத்தியோ – did you forget that, வாழி – அசைநிலை, an expletive, may you live long, என் நெஞ்சே – O my heart, பலவுடன் காமர் மாஅத்து – of many desired mango trees, of many beautiful mango trees (அத்து சாரியை), தாது அமர் பூவின் – on the flowers with pollen, வண்டு வீழ்பு அயரும் கானல் – groves where bees jump and swarm, தண் – cool, கடல் சேர்ப்பனை – the lord of the seashore, கண்ட பின் – on seeing him, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 307, கடம்பனூர்ச் சாண்டிலியனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வளை உடைத்து அனையது ஆகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே, அன்னோ,
மறந்தனர் கொல்லோ தாமே, களிறு தன்
உயங்கு நடை மடப் பிடி வருத்தம் நோனாது  5
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
தழுங்க நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை, அழப் பிரிந்தோரே?

Kurunthokai 307, Kadampanūr Sāndiliyanār, Pālai Thinai – What the heroine said to her friend
The crescent moon, appeared rapidly
in the red sky, like a broken conch
shell piece, for many to worship.

Could he have forgotten me,
the man who separated, making me
cry, as he went on the long wasteland
path,
where a male elephant, on seeing his
naive female’s painful walk, is unable to
bear the pain of her distress, breaks and
stabs a tall yā tree with his tusks, strips
its white bark, tastes his trunk, raises his
head and bellows in pain from his heart?

Notes:  The heroine said this to her friend when the hero was away.  தலைவனது பிரிவின்கண் கடுஞ்சொல் சொல்லிய தோழியிடம் தலைவி சொன்னது.  மதுரைக்காஞ்சி 193 – தொன்று தொழு பிறை.  தமிழண்ணல் உரை – இங்கு யா மரப்பட்டையிலும் நீர்ப்பசை இன்மையால். ‘கையைச் சுவைத்து’ வேட்கை தீர வேண்டியதாயிற்று.  பிரிந்து போனவர், இவ்வாறு களிறு தன் பிடியின் வேட்கையைத் தீர்க்க முயல்வதைக் கண்டேனும் நம் நினைவு வரப் பெறாரா எனும் குறிப்பும் இதில் உள்ளது.  இஃது இறைச்சியின் பாற்படும்.  ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’ (தொல்காப்பியம், பொருளியல் 35).

Meanings:  வளை உடைத்து அனையது ஆகி – became like the broken conch shell, பலர் தொழ – for many to worship, செவ்வாய் வானத்து – in red colored sky, ஐயெனத் தோன்றி – appeared suddenly, இன்னம் பிறந்தன்று – it appeared, பிறை – the crescent moon,  ஏ – அசைநிலை, an expletive, அன்னோ – alas, pitiable, மறந்தனர் கொல் – did he forget (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, தாம் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, களிறு – male elephant, தன் உயங்கு நடை – pitiful walk, மடப் பிடி – naive female elephant, வருத்தம் நோனாது – unable to bear the pain, நிலை உயர் – tall, யாஅம் – yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (இசைநிறை அளபெடை), தொலைய – to be ruined, குத்தி – stabbed with tusks, வெண் நார் கொண்டு – removed white bark, கை சுவைத்து – tastes his trunk, அண்ணாந்து – looked above, தழுங்க நெஞ்சமொடு முழங்கும் – screams with a sad heart, அத்த நீள் இடை – in the long wasteland path, அழ – making me cry, பிரிந்தோர் – the man who left making me cry, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 308, பெருந்தோட் குறுஞ்சாத்தனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
சோலை வாழைச் சுரி நுகும்பு இனைய,
அணங்கு உடை அருந்தலை நீவலின் மதன் அழிந்து,
மயங்கு துயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப்பிடி உலை புறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்,  5
மா மலை நாடன் கேண்மை,
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

Kurunthokai 308, Perunthōt Kurunchāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
His love for you dwells only in acts
of passion, your lover from the country
with huge mountains,
where streams tumble down slopes,
and a bull elephant takes curled tender
banana leaves, hurting them,
from a tree in a grove, and rubs them on
his precious head with god, and when his
strength is ruined he struggles in distress
and confusion and falls asleep,
as his naïve mate sighs in anxiety and
strokes his hurting back with her trunk.

Notes:  The heroine’s friend consoled her when the hero was away to earn wealth for their marriage.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழைச் சாற்றை யானை மத்தகத்தில் தேய்த்தால், அதன் மதங் கெட்டு மயங்கும்.  இப்போதும் மதவெறியால் கட்டுக்கடங்காது திரியும் யானைக்கு யானைப் பாகர் வாழைத் தண்டை உணவாக இடுதலும், வாழையின் சாற்றை மத்தகத்தில் தேய்த்தலும் உண்டு.  தமிழண்ணல் உரை – பிடி தடவிக் கொடுக்க வேழம் கண்ணுறங்கும் என்ற குடும்ப வாழ்வுக் குறிப்பு, தலைவனும் அது போன்ற குணமுடையவன் என்று உணர்த்துகிறது.  இஃது இறைச்சியின்பாற் படும்.

Meanings:   சோலை வாழை – banana tree in the grove, சுரி நுகும்பு – curled young leaves, இனைய – to feel sad, அணங்கு உடை – having god, with divinity, அருந்தலை – precious head, head which is difficult for others to stay, நீவலின் – due to rubbing, மதன் அழிந்து – strength ruined, மயங்கு துயர் உற்ற – became sad with confusion, மையல் வேழம் – confused male elephant, உயங்கு உயிர் – bellowing sadly, sighing sadly, மடப்பிடி – a naive female elephant, உலை புறம் தைவர – rubbing the back that is hurting (உலை – வருந்தும்), ஆம் இழி சிலம்பின் – on the water flowing down mountain slopes, அரிது கண்படுக்கும் – falls into precious sleep, falls into rare sleep, மா மலை நாடன் – the man from the country with huge mountains, கேண்மை – friendship, காமம் – desire, love, தருவது – giving, ஓர் கை – an action, தாழ்ந்தன்று – stayed, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 309, உறையூர்ச் சல்லியன் குமாரனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்,
கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது,
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்  5
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும,
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.

Kurunthokai 309, Uraiyūr Challiyan Kumāranār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Lord!  Since we don’t have the strength
to live without you despite your cruelty,
we are like the waterlilies that blossom
in your town’s fields for bees to drink honey,
that field workers weed out and leave to wilt
on the long embankments as they lose their
scents.

Yet those flowers do not say,
“These are cruel folks.  Let us leave this land
and go somewhere else to live.”
They remain there, to blossom again in the
fields from which they were uprooted.

Notes:  The heroine’s friend allows the hero to return to the marital house.  பரத்தையிற் பிரிந்துவந்து வாயில் வேண்டிய தலைவனை, தோழி ஏற்றுக்கொண்டது.  நற்றிணை 275 – செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக் காணார் முதலொடு போந்தென பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெல தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்.  கைவினை மாக்கள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தொழில் புரியும் உழவர், தமிழண்ணல் உரை – பயில் வளரக் களைகளைக் கையால் பறிக்கும் உழவர்கள்.

Meanings:  கைவினை மாக்கள் – those who work with their hands, those who weed, தம் செய் வினை முடிமார் – when they finish their work, சுரும்பு உண – for bees to drink (உண உண்ண என்பதன் விகாரம்), மலர்ந்த – blossomed, வாசம் கீழ்ப்பட – with their fragrances going down, நீடின வரம்பின் வாடிய விடினும் – even if allowed to wilt on the long banks, கொடியர் – cruel people, ஓ அசைநிலை, இரங்கற் குறிப்புமாம், நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது – not considering moving to another land to live, பெயர்த்தும் கடிந்த – even when removed, செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் – like the waterlilies that bloom in your town’s fields, பெரும – O lord, நீ எமக்கு – to us, இன்னாதன பல செய்யினும் – despite the many cruel things that you have done to us, நின் இன்று அமைதல் வல்லாமாறு – since we are not capable of being without you, since we don’t have the strength to be without you (மாறு – ஏதுப் பொருள் (காரணப் பொருள்) உணர்த்தும் ஓர் இடைச்சொல், a particle signifying reason), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 310, பெருங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புள்ளும் புலம்பின, பூவும் கூம்பின,
கானலும் புலம்பு நனி உடைத்தே, வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழியப் புல்லென்றன்றே,
இன்னும் உளெனே தோழி, இந்நிலை  5
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணந்துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறினே.

Kurunthokai 310, Perunkannanār, Neythal Thinai – What the heroine said to her friend
Birds are alone in their nests,
flowers have closed their petals,
and the seashore grove is very
lonely.
The sky is confused like me,
having lost its glory since daylight
has faded.

I might still live, O friend,
if someone would carry a message
to the lord of the cool, lovely shore,
fragrant with cool cassia flowers!

Notes:  The heroine said this in anger to her friend who urged her to be patient when the hero was away to earn wealth.  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் வற்புறுத்திய தோழியின்பாற் சினமுற்று கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் நிலையை அறிந்து ஆவன செய்யாது, தோழி வாளா இடித்துரைப்பாளாதல் பயனின்று என்பாள்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  புள்ளும் புலம்பின – the birds are alone in their nests, பூவும் கூம்பின – flowers have closed their petals, கானலும் புலம்பு நனி உடைத்தே – the seashore grove is very lonely, வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி – the sky has become confused like me (நம் – தன்மைப் பன்மை, first person plural), எல்லை கழியப் புல்லென்றன்று – became dull as the day ended (எல்லை – பகற்பொழுது, ஞாயிறுமாம்), ஏ – அசைநிலை, an expletive, இன்னும் உளென் – I am still alive, ஏ – அசைநிலை, an expletive, தோழி – O friend, இந்நிலை – this situation, தண்ணிய கமழும் ஞாழல் – cool fragrant cassia trees, cassia sophera, புலிநகக்கொன்றை, tigerclaw tree, தண்ணந்துறைவர்க்கு – to the lord of the cool and beautiful seashore, உரைக்குநர் – someone who could take a message to him, பெறின் – if I can get, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 311, சேந்தன் கீரனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அலர் யாங்கு ஒழிவ தோழி, பெருங்கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான் கண்டனனோ இலனோ, பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்  5
தாது சேர் நிகர் மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?

Kurunthokai 311, Chēnthan Keeranār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
On the fish-reeking shores
of the huge sea,
his chariot came with sounds,
unable to stop even when the
charioteer tried to rein it in.

Whether I saw it or not,
they saw it,
our friends picking the bright,
pollen-filled blossoms
of the low hanging punnai trees
on the tall white sand dunes
in the middle of the night.

How can gossip end, O friend?

Notes:  Knowing that he is nearby, the heroine lets the hero know that her friends are aware of the his visit, by telling her close friend about it.  தலைவன் வந்து செல்வதை ஆயத்தார் யாவரும் அறிந்தனர் என்பதை தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.  பானாள் (4) –  பால் நாள் – உ. வே. சாமிநாதையர் உரை – நடு இரவின்கண், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நடு இரவின்கண், இரா. இராகவையங்கார் உரை – ஈண்டு நாட்பாதியாகிய பகற்கு ஆயிற்று.

Meanings:   அலர் யாங்கு ஒழிவ – how can gossip end, தோழி – my friend, பெருங்கடல் – huge sea, புலவு நாறு அகன் துறை – flesh/fish stinking wide shores, வலவன் தாங்கவும் நில்லாது – did not stop even when the charioteer pulled the reins/tried to stop, கழிந்த – kept moving, கல்லென் கடுந்தேர் – fast chariot that came with a loud sound, யான் கண்டனனோ இலனோ – whether I saw it or not, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), ஓங்கல் வெண்மணல் – tall white sand mounds, white sand dunes, தாழ்ந்த புன்னை – laurel trees that grow low, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தாது சேர் – with pollen, நிகர் – bright, மலர் கொய்யும் – plucking flowers, ஆயம் எல்லாம் – all our friends, உடன் கண்டன்று – they saw together, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 312, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் சொன்னது
இரண்டறி கள்வி நம் காதலோளே,
முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோர் அன்னள்,
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச்  5
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தளாகித்
தமரோர் அன்னள், வைகறையானே.

Kurunthokai 312, Kapilar, Kurinji Thinai – What the hero said about the heroine
My lover is a two-sided thief.
In the thick of night,
she comes like the fragrance of
Mullūr forest
of the mighty, hostile, red-speared,
battle-victorious King Malaiyan,
to be one with me.

At break of dawn,
she shakes off the many flowers
that adorn her hair,
smears scents and oils, and puts
on a different face,
to be one with her family.

Notes:  The hero who leaves after a night tryst said this.  இரவுக்குறிக்கண் தலைவியை எதிர்ப்பட்டு நீங்கும் தலைவன் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தல் வேய்ந்த நறுமலர் என்றது கூட்டாக் காலத்தே தன்னால் வேயப்பட்ட மலர் என்க.   வரலாறு:  மலையன், முள்ளூர்.

Meanings:  இரண்டறி – two-faced, knows to behave in two different ways, கள்வி – she is a thief,  நம் – my, தன்மைப் பன்மை, first person plural, காதலோள் – lover, ஏ – அசைநிலை, an expletive, முரண்கொள் – with hostility, துப்பின் – with strength, செவ்வேல் – red spear,  மலையன் – small-region king Malaiyan, முள்ளூர்க் கான – Mullūr forest’s, நாற வந்து – comes with the fragrance, நள்ளென் – with pitch darkness, கங்குல் – night, நம் ஓரன்னாள் – she is agreeable with me (நம் – தன்மைப் பன்மை, first person plural), she is one with me, கூந்தல் – hair, வேய்ந்த – worn, விரவு – mixed, மலர் உதிர்த்து – dropping flowers, shedding flowers, சாந்து உளர் – rubs aromatic pastes, நறும் – fragrant, கதுப்பு – hair, எண்ணெய் நீவி – she applies oil, அமரா முகத்தள் ஆகி –  she becomes of different face, தமர் ஓரன்னாள்– she is one with her family, வைகறையான் – at dawn, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 313, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு,
பூக்கமழ் பொதும்பில் சேக்கும் துறைவனொடு,
யாத்தேம், யாத்தன்று நட்பே,
அவிழ்த்தற்கு அரிது, முடிந்து அமைந்தன்றே.  5

Kurunthokai 313, Unknown Poet, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
I am bound to the lord
of the wide ocean shores,
where a small white gull
hunts for prey
in the vast, flooded backwaters,
and eats and rests in the groves
with fragrances of flowers.

Our friendship is tightly tied.
It will be difficult to untie it.

Notes:  The heroine said this to her friend who criticized the hero, knowing that he was nearby.  இரவில் தலைவன் வந்ததை அறிந்த தோழி அவனைக் குறைக் கூற, தலைவி அது பொறாளாய்த் தலைவனைப் புகழ்ந்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – கடற்கரையின்கண் இரை தேர்ந்துண்ட காகம் பூக்கமழ் பொதும்பில் தங்கும் துறைவன் என்றது, களவொழுக்கத்தின்கண் வந்து ஒழுகும் தலைவன் வரைந்து கொண்டு தான் மனையிலிருந்து இல்லறம் நடத்துவான் என்னும் குறிப்புணர்த்தியது.

Meanings:  பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை – a small white gull on the shores of the large ocean, Indian black-headed sea gull, Larus ichthyactus, நீத்து நீர் – flooding waters, இருங்கழி இரை தேர்ந்து உண்டு – it chooses and eats food from the dark/vast brackish waters, பூக்கமழ் பொதும்பில் சேக்கும் – it rests in the flower-fragrant grove, துறைவனொடு – with the lord of the shores, யாத்தேம் – I tied myself to him, தன்மைப் பன்மை, first person plural, யாத்தன்று – it is tied well, நட்பு – friendship, அவிழ்த்தற்கு அரிது – it is difficult to untie, முடிந்து  அமைந்தன்று – it is tied very well, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 314, பேரிசாத்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்பப்
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்
வாரார் வாழி தோழி, வரூஉம்
இன் உறழ் இள முலை ஞெமுங்க  5
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

Kurunthokai 314, Pērisāthanār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!

Even on this lonely evening
when the rumbling clouds,
full with water, pour down with
glittering flashes of lightning from
the very high sky, he has not come
to embrace me, crushing my very
sweet young breasts, my lover who
went through the harsh wilderness.

Notes:  The sad heroine said this to her friend who urged her to await the hero’s arrival with patience.  தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்துவிடத்து நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்கு தலைவி வருந்திக் கூறியது.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 59).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  சேய் உயர் விசும்பின் – in the very high sky (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), நீர் உறு கமஞ்சூல் – full of water  (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), தண் குரல் எழிலி – cool loud clouds, ஒண் சுடர் இமைப்ப – with bright  glittering lightning, பெயல் தாழ்பு இருளிய – got dark after the rainfall, புலம்பு கொள் மாலையும் – even during the lonely evening times, even during the sad evening times (உம்மை – சிறப்பு உம்மை), வாரார் – he does not come, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, வரூஉம் – rising, growing (இன்னிசை அளபெடை), இன் உறழ் இள முலை ஞெமுங்க – to press the very sweet young breasts (உறழ் – மிக்க), இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – the man who went through the difficult wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 315, மதுரை வேளாதத்தனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு,
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி,
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.

Kurunthokai 315, Mathurai Vēlathathanār, Kurinji Thinai – What the heroine said to her friend
He is like the sun, O friend,
my lover from the lofty
mountains, where waterfalls
appear like the reflections
of the rising moon in the ocean,
and I, with my arms like large
bamboo, am like a nerunji flower.

Notes:  The heroine said this to her friend when the hero had gone to earn wealth for their marriage.  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியுங்காலத்தில் தலைவி சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருஞ்சி மலர் ஞாயிற்றின் ஒளியில் ஈடுபட்டு அதன் இயக்கத்தோடு ஒத்துத் திரும்புதல் போன்று, யானும் தளவைவானது அன்பில் ஈடுபட்டு அவன் செயலோடு ஒத்து இயக்குவேன் ஆகலின் ஆற்றியிருப்பேன் என்றவாறு.  நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல் – அகநானூறு 336 – சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, புறநானூறு 155 – நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு.  உ. வே. சாமிநாதையர் உரை – அருவிக்குப் பிறையும் கடலுக்கு மலையும் உவமைகள்.

Meanings:   எழுதரு மதியம் – the rising moon, கடல் கண்டாஅங்கு (கண்டாஅங்கு – ) – like the reflections seen in the ocean, ஒழுகு வெள் அருவி – flowing white waterfalls, ஓங்கு மலை – lofty mountain, நாடன் – man from such country, ஞாயிறு அனையன் தோழி – he’s like the sun, my friend, நெருஞ்சி அனைய – like nerunji, Cow’s Thorn, Calatrop Tribulus terrestris, yellow vine, என் பெரும் – my large, பணைத்தோள் – bamboo-like arms, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 316, தும்பிசேர் கீரனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி தோழி, விளியாது
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட  5
வாய்ந்த அலவன் துன்புறு துனை பரி
ஓங்குவரல் விரி திரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?

Kurunthokai 316, Thumpisēr Keernanār, Neythal Thinai – What the heroine said to her friend
His words have changed, my lover
from the shore,
where the powerful ocean pounds
ceaselessly on the shore with spread
sand, and young girls playing orai
games on the bank chase a crab that
runs rapidly in distress, its agony
ended by a tall, wide wave.

My pretty bangles have slipped down
and my body is exhausted.

If mother knows about my painful love
affliction, will I survive, O friend?

Notes:  The sad heroine said this to her friend when the hero had gone to earn wealth for their marriage.  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தபொழுது தலைவி, ‘நான் எங்ஙனம் ஆற்றுவேன்?’ எனத் தோழியிடம் கூறியது.   துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓரை மகளிர் நண்டினை அலைக்க அது துன்புற்று ஓடுங்கால் கடல் அலை பெருகி அதனை எடுத்து அதன் செலவு தவிர்த்து உய்ய கொண்டாற்போல, ஈண்டு யாயின் கொடுமையை அஞ்சுவேனைத் தலைவன் விரைவில் வந்து வரைந்து உய்யக் கொள்ளினன் அல்லால் எனக்கு உய்தி இல்லை என்பது குறிப்பு.  உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – வலியையுடைய கடலால் அலைக்கப்பட்ட மணல் விராவிய அடைகரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய கடலால் மோதப்பட்ட மணல் விரவிய அடைகரை, தமிழண்ணல் உரை – வலிய கடல் அலை மோதுவதால் பரவும் மணலையுடைய கடலோரக் கரை.

Meanings:  ஆய் வளை ஞெகிழவும் – and beautiful bangles to slip down, and chosen and worn bangles to slip down, அயர்வு மெய் நிறுப்பவும் – and making the body tired, நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – if mother knows about my very painful affliction disease, உளெனோ – will I still live (ஓ எதிர்மறைப் பொருளில் வந்தது), வாழி – அசைநிலை, an expletive, தோழி – O friend, விளியாது – without ruining, உரவுக் கடல் பொருத – attacked by the powerful waves, விரவு மணல் – spread sand, அடைகரை – sand filled shores, water filled shores, ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட – girls playing orai together and chase and harass (ஓராங்கு – ஒருசேர), வாய்ந்த அலவன் துன்புறு – a distressed crab that is there, துனை பரி – running fast, ஓங்குவரல் – coming tall, விரி திரை – wide wave, களையும் – removes, ends, துறைவன் – the lord of such shores, சொல்லோ பிற ஆயின – his words became different, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 317, மதுரைக் கண்டரதத்தனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து
ஓங்கு மலைப் பைஞ்சுனை பருகு நாடன்,
நம்மை விட்டு அமையுமோ, மற்றே கைம்மிக  5
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

Kurunthokai 317, Mathurai Kandarathathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Will your lover be content
to stay away from you
on this cold blustery day, when
clouds are chased to the south
by the chilly northerly winds,

the man from the lofty mountains,
where a proud, black marai stag,
who loves his delicate mate,
grazes on sweetly sour gooseberries
and drinks water from fresh springs,
as its hot breath makes the surface,
nectar-laden flowers to tremble?

He will not stay away from you.

Notes:  The heroine’s friend said this to her, to console her, when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியிடம் தோழி கூறியது.  கைம்மிக (5) – இரா. இராகவையங்கார் உரை – சிறுமை மிக, உ. வே. சாமிநாதையர் உரை – மிகும்படி, கை – அசைநிலை.   உள்ளுறை – புரி மட மரையான் கரு நரை நல் ஏறு தீம் புளி நெல்லி மாந்தி அயலது தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து ஓங்கு மலைப் பைஞ்சுனை பருகு நாடன் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – என்றது, நின்னை விட்டுப் பிரியாது விரும்பியவற்றை நுகருமாறு வரைந்து கொள்வான் என்பதாம்.  மரை (1) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.

Meanings:  புரி மட மரையான் – desirable marai doe, desirable female marai deer, கரு – black, நரை – proud, நல் ஏறு – fine male, தீம் புளி – sweet and sour, நெல்லி – gooseberries, மாந்தி – ate, அயலது – nearby, தேம் பாய் – honey flowing (தேம் தேன் என்றதன் திரிபு), மாமலர் – big flowers, நடுங்க – to tremble, வெய்து உயிர்த்து – breathing deeply hot breaths, sighing with hot breaths, ஓங்கு மலை – lofty mountains, பைஞ்சுனை – fresh spring, பருகு – drinks, நாடன் – the man from such country, நம்மை விட்டு – leaving us, leaving you, அமையுமோ – will he be able to be normal, மற்று – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, கைம்மிக – increased (கை – அசைநிலை, an expletive), வடபுல வாடைக்கு – for the cold northern winds that blow from the north, அழி மழை – ruined clouds (ruined by being pushed south), தென்புலம் – southern direction, படரும் – they go, தண் பனி – cold dew, நாள் – days, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 318, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ யானே, எய்த்த இப்  5
பணை எழில் மென்தோள் அணைஇய அந்நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும், கடவனும், புணைவனும் தானே.

Kurunthokai 318, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My man is from the shore with shimmering
waters where attacking sharks abound, and
fragrant gnāzhal and punnai blossoms are
spread on the sand, resembling a veriyāttam
ritual ground.

I have wasted away thinking about him. On the
day when he hugged my delicate arms that are
like bamboo, he uttered perfect promises.

I do not know whether he considers me or not.
How can I tell him if he doesn’t already know?
That thief has an obligation to me.  He is my life
raft.

Notes:  The heroine who desired marriage, said this to her friend, being aware that the hero was nearby.  தோழிக்கு கூறுவாளாய், தலைவன் விரைவில் வரைய வேண்டும் என்னும் குறிப்பை தலைவி உணர்த்தியது.  எறி சுறா (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லுகின்ற சுறா மீன்கள், உ. வே. சாமிநாதையர் உரை – அடைந்தாரை எறிகின்ற சுறா மீன்கள், வலைஞரால் எறியப்படுகின்ற என்பதும் பொருந்தும், இரா. இராகவையங்கார் உரை – சுறா எறியும் என்பது ‘வயச்சுறா எறிந்த புண் (குறுந்தொகை 269) என்பதனால் உணர்க.  கள்வனும் கடவனும் புணைவனும் தானே (8) – தமிழண்ணல் உரை – கள்வன், கடவன், புணைவன் முறையே குற்றவாளி, விசாரிப்பவன் (நீதிபதி) அல்லது வழக்குத் தொடுப்பவன், சான்று (புணை) கூறுபவன் மூவரும் ஒருவனேயாதலால், அவன் வழங்கினால் அன்றி, நீதி கிடைக்காது என்பது குறிப்பு.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.

Meanings:  எறி சுறா – murderous sharks, attacking sharks, கலித்த – in abundance, இலங்கு நீர்ப் பரப்பின் – in the land near the bright ocean, நறு வீ ஞாழலொடு – along with the fragrant flowers of the gnāzhal trees, புலிநகக் கொன்றை, tigerclaw tree – Cassia Sophera and, புன்னை – laurel trees, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தாஅய் – dropped, spread (இசைநிறை அளபெடை), வெறி அயர் களத்தினின் – like a  veriyāttam ground of Murukan (களத்தினின் – களத்தின் + இன், களத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது, களத்தின் + இன், இன் சாரியை), தோன்றும் – it appears, துறைவன் – lord of the seashore, குறியானாயினும் – whether he does not consider, குறிப்பினும் – whether he considers, பிறிதொன்று – a different matter (strangers will seek her hand, marriage which is different from secret love), அறியாற்கு உரைப்பலோ – can I tell him who does not know, யானே – me, எய்த்த – wasted, thinned, இ – these, பணை – bamboo-like, எழில் – beautiful, மென்தோள் – delicate arms, அணைஇய அந்நாள் – on the day when he hugged me (அணைஇய – செய்யுளிசை அளபெடை), பிழையா வஞ்சினம் செய்த – made faultless promises (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), கள்வனும் – and a thief, கடவனும் – and one who has an obligation, புணைவனுந் தானே – and one who is a raft to me, and one who is of support to me

குறுந்தொகை 319, தாயங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மான் ஏறு மடப்பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கை உடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று மாரி மா மழை  5
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே.

Kurunthokai 319, Thāyankannanār, Mullai Thinai – What the heroine said to her friend
It is evening time, and the
season’s heavy rains are here.

Confused stags embrace their does
and plunge into the forest bushes;
noble elephants with trunks, join
their mates and go to the mountains
with dark clouds.

My friend!  What will happen to my
sweet life if my lover who ruined my
golden body does not come back?

Notes:  The sad heroine who saw the indicated monsoon season arrive, said this to her friend.  தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தது கண்டு வருந்திய தலைவி கூறியது.

Meanings:  மான் ஏறு – stags, மடப்பிணை தழீஇ – hugging their does (தழீஇ – சொல்லிசை அளபெடை), மருள் கூர்ந்து – confused greatly, கானம் நண்ணிய புதல் – bushes in the forest, மறைந்து ஒடுங்கவும் – they hide and stay, கை உடை நன்மா – elephants with trunks, பிடியொடு – with their females, பொருந்தி – unite, are together, மை அணி மருங்கின் மலையகம் சேரவும் – reach the mountains with dark clouds, மாலை வந்தன்று – evening has come, மாரி மா மழை – season’s heavy rains, பொன் ஏர் மேனி – gold-like body (ஏர் – உவம உருபு, a comparison word), நன் நலம் சிதைத்தோர் – the man who ruined its fine beauty, இன்னும் – still, வாரார் ஆயின் – if he does not come back, என் ஆம் தோழி – what will happen my friend (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது,), நம் இன் உயிர் – my sweet life (நம் – தன்மைப் பன்மை, first person plural), நிலை – situation, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 320, தும்பிசேர் கீரனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்கடல் பரதவர் கொள் மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்கும் துறைவனொடு, ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே, போது அவிழ்  5
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி இவ் ஊர்,
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே.

Kurunthokai 320, Thumpisēr Keeranār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
I have not laughed and enjoyed
with him for a single day,
the man from the seashore,
where reeking sand dunes are as
white as the moon, and fishermen
dry fish caught in the vast ocean,
along with shrimp caught from the
treacherous backwaters.

Yet they spread useless rumors,
the cruel people in this village,
where beautiful streets are lined
with punnai trees, with newly opened
golden clusters of flowers, on whose
branches birds chirp.

Notes:  The heroine said this to her friend, knowing that the hero was nearby, urging him to come and marry her soon.  விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்பதை தலைவி புலப்படுத்தியது.  சேரி (7) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு.  கொன் – அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).

Meanings:  பெருங்கடல் பரதவர் கொள் மீன் உணங்கல் – dried fish that fishermen bring from the vast ocean (உணங்கல் – வற்றல்), அருங்கழிக் கொண்ட – caught from the difficult backwaters, இறவின் வாடலொடு – with dried shrimp (இறா – இறவு என ஆக்குறுகி உகரம் ஏற்றது), நிலவு நிற வெண்மணல் – the moon colored white sand, புலவ – stinking with flesh smells, பலவுடன் – with many, எக்கர்தொறும் – in the sand dunes, பரக்கும் – spreads, துறைவனொடு – with the lord of the shores,  ஒரு நாள் – one day, நக்கது – laughing, enjoying, ஓர் பழியும் இலமே – I am not to be blamed (பழியும் – உம்மை இழிவு சிறப்பு), போது அவிழ் – petals opening, பொன் இணர் மரீஇய – with golden clusters (மரீஇய – பொருந்திய, செய்யுளிசை அளபெடை), புள் இமிழ் – birds chirping, பொங்கர்ப் புன்னை அம் சேரி – (on the) laurel branches in the beautiful streets (அம் – சாரியை), நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இவ் ஊர் கொன் அலர் தூற்றும் – the people in this town will spread gossip unnecessarily (கொன் – வீணே, ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளோர்க்கு), தன் கொடுமையான் – due to their cruelty, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 321, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங்குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடுநாள் வந்து நம் மனைப் பெயரும்,
மடவரல் அரிவை, நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டுச்  5
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே,
திறப்பல் வாழி வேண்டன்னை நம் கதவே.

Kurunthokai 321, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to her
O naïve young woman!  Wearing a pearl
strand and sandal paste from the trees in the
mountains on his chest, and a bee-swarming,
blue waterlily strand with flowers from the
mountain springs on his head, he comes to
our house in the thick of night and leaves,
your sweet partner who embraced you.

In the village common grounds, a harsh, huge
tiger kills a marai stag, as his female takes flight
in fear.

Listen to me with desire!  This is not the time to
hide your secret love.  I’m going to open the door
and reveal it.  May you flourish!

Notes:  The heroine’s friend said to her that she will let the family know about the love affair, since others are coming for her hand.  நொதுமலர் வரையப் புக்க காலத்தில் ‘நான் அறத்தொடு நிற்பேன்’ என்று தலைவிக்குத் தோழி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – வாழி – அசைநிலை, நீ வாழ்வாயாக என்பதும் ஆம்.  திறப்பல் நம் கதவே – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிப்பு மொழி.  அஃதாவது நமது மறைச் செய்தியை வெளிப்படுத்துவன் என்றவாறு.  மறை வெளிப்படுத்தல் வரைவிற்கு வழிசெய்தலே ஆகலின், கதவு திறப்பல் என்றது நன்கு சிறத்தலறிக.  மரை (5) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.

Meanings:  மலைச் செஞ்சாந்தின் – with mountain’s red/fine sandal paste, Santalum album, ஆர மார்பினன் – a man wearing a pearl necklace, சுனைப் பூங்குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன் – a man wearing on his head a strand woven from the bee-swarming blue waterlilies from the springs, Blue nelumbo, Nymphaea odorata,  நடுநாள் வந்து நம் மனைப் பெயரும் – he comes at midnight and leaves, மடவரல் அரிவை – O naive young woman, நின் மார்பு அமர் இன் துணை – the desirable sweet partner who is in your chest, the desirable sweet partner who embraced your chest, மன்ற மரையா இரிய – as the female marai deer from the common ground runs away, ஏறு அட்டுச் செங்கண் இரும்புலி – a huge red-eyed tiger kills the male, குழுமும் – roars, அதனால் – so, மறைத்தற் காலையோ – the time to hide the affair, ஓ – அசைநிலை, an expletive, அன்று – this is not, ஏ – அசைநிலை, an expletive, திறப்பல் – I will expose, I will open up, வாழி – அசைநிலை, an expletive, may you flourish, வேண்டு அன்னை – listen to me with desire O friend, நம் – our, கதவு – door, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 322, ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அமர்க்கண் ஆமான் அஞ்செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,  5
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம் தோழி, ஒல்வாங்கு நடந்தே.

Kurunthokai 322, Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
Is there anything sweeter
than being close?

It is like a wild cow’s calf
with calm eyes and pretty ears,
separated from its herd that
was attacked by hunters,
caught in a village near the
forest where youngsters took
good care and it, that got used
to home life and loved life there.

Let us go to him, my friend,
walking as much as we can!

Notes:  The heroine, aware that the hero was nearby, said this to her friend who blamed the hero since he delayed marrying her.  தலைவனின் வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்தவிடத்து தலைவன் வர, அஃது உணர்ந்த தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – ஆமானின் குழவி தன் இயல்புக்கு ஒவ்வாத குடியிற்பட்டாலும் அவர்களோடு மருவி அவரது வாழ்க்கையிலே வன்மைப் பெற்றது போல் தலைவர் நம் இயல்புக்கு ஒவ்வார் எனினும் அவரோடு பழகி அவருடைய இயல்புகளைப் பெற்று வாழ வேண்டுமென உவமையை விரித்துக் கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டில் வாழும் இயல்புடைய ஆமானின் கன்று, அக்காட்டில் வாழ்வாரானே அலைப்புண்டு, தன் இனத்திற் பிரிந்து சிறுகுடியிற்பட்டு, ஆண்டுறையும் மகளிரோடு பழகி அவ்வின்பத்தே பழகினாற்போன்று, நம் ஊராரானே அலர் தூற்றி அலைக்கப்பட்ட யாமும் நம் தமரின் நீங்கித் தலைவன்பால் வலிந்து சென்று உய்வேம் என உவமையை விரித்துக் கொள்க.  இவ்வுமையானே தலைவி தனக்குற்ற இன்னா நிலையினைத் தலைவற்கு குறிப்பால் உணர்த்தி வரைவு கடாவினள் ஆதலும் உணர்க.  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  அமர்க்கண் ஆமான் – calm-eyed wild cow, அம் செவிக் குழவி – a calf with beautiful ears, கானவர் எடுப்ப வெரீஇ – disturbed by the uproars of forest hunters (வெரீஇ – சொல்லிசை அளபெடை), இனம் தீர்ந்து – moved away from its herd, கான நண்ணிய – near the forest, சிறுகுடிப் பட்டென – since it got caught in a small community, since it got caught in a small village, இளையர் ஓம்ப – the youngsters took care of it, மரீஇ – got used, was together (சொல்லிசை அளபெடை), அவண் – there, நயந்து – with desire, மனை உறை வாழ்க்கை – home life, domestic life, வல்லியாங்கு – like how it got the ability to adapt, மருவின் – more than being close, இனியவும் உளவோ – is there anything that is sweeter, செல்வாம் தோழி – let us go O friend, ஒல்வாங்கு – as much as we can, நடந்து – walking, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 323, பதடி வைகலார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
எல்லாம் எவனோ, பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து எழும் சுவர் நல் இசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறுநுதல்  5
அரிவை தோள் இணைத் துஞ்சிக்
கழிந்த நாள், இவண் வாழும் நாளே?

Kurunthokai 323, Pathadi Vaikalār, Mullai Thinai – What the hero said to his charioteer
The days that I am truly alive are
the days that I have spent sleeping
in her embraces, the woman whose
forehead fragrance is like that of
pollen in fresh mullai buds in the
forest after heavy rains that come
down with sounds like those of a
bard’s notes that rise to the sky in
padumalai tune.

What is the use of the other days?
They are like empty husks.

Notes:  The hero urges his charioteer to ride fast so that he can reach his beloved soon.  தலைவியைப் பிரிந்திருக்கும் நாள் பயனற்றது ஆதலால், அவளை அடையும்படி விரைவில் தேர் விடுக என்பது படச் சொல்லியது.  பதடி (1) – இரா. இராகவையங்கார் உரை – பதர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உள்ளீடற்ற பதர், உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளீடு இல்லாத கருக்காய், ச. வே. சுப்பிரமணியன் உரை – உள்ளீடு இல்லாத பதர்.  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

Meanings:  எல்லாம் – all the other days, எவன் – what is the use of them, ஓ – அசைநிலை, an expletive, பதடி வைகல் – days that are husk, days that are useless, பாணர் படுமலை பண்ணிய – the bards played padumalai tune, எழாலின் – of music, வானத்து எழும் – rising to the skies, சுவர் நல் இசை வீழ – like loud sounds of music that rose up (வீழ = உண்டாக, சுவல் என்பது சுவரென வந்தது, சுவல் – மேலிடம்), பெய்த புலத்துப் பூத்த முல்லை – mullai flowers that blossomed after the rains fell on the land, Jasminum sambac, பசுமுகை – fresh buds, தாது நாறும் – has the fragrance of pollen, நறுநுதல் – fragrant forehead, அரிவை – the young woman, தோள் இணைத் துஞ்சி – hugging her shoulders and sleeping, கழிந்த நாள் – the spent days, இவண் வாழும் நாள் – are the only days lived here, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 324, கவை மகனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறை,
இன மீன் இருங்கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி, இவள் தன்
மடன் உடைமையின் உயங்கும் யானது  5
கவை மக நஞ்சு உண்டாஅங்கு
அஞ்சுவல் பெரும, என் நெஞ்சத்தானே.

Kurunthokai 324, Kavai Makanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
You
come here because
of your love for her,

braving murderous male
crocodiles with crooked
legs, that cut off traffic,
and swimming through
vast backwaters with shoals
of fish, near the vast seashore
with groves.

She
in her naive way is distressed.

And I
am terrified in my heart, like
a mother whose twins ate poison.

Notes:  The heroine’s friend urges the hero to come and marry the heroine.  வரையாமல் வரும் தலைவனிடம் தோழி வரைவு கடாயது.  Kurunthokai 324, Natrinai 292 and Kurinjippāttu have descriptions of the hero swimming through water with crocodiles.

Meanings:  கொடுங்கால் முதலை – crocodiles with curved legs, கோள் வல் ஏற்றை – murderous strong males, males that are capable of killing, வழி வழக்கு அறுக்கும் – they block the path so that people cannot swim and go, கானல் அம் பெருந்துறை – vast seashore with seashore groves (அம் – சாரியை), இன மீன் – schools of fish, இருங்கழி – dark backwaters, huge backwaters, நீந்தி நீ – you swimming, நின் நயன் உடைமையின் வருதி – you coming with your love, இவள் – she, தன் – her, மடன் உடைமையின் – having innocence (மடன் – மடம் என்பதன் போலி), உயங்கும் – suffering, யானது – and I, கவை மக – twin children, நஞ்சு உண்டாஅங்கு – like they ate poison (உண்டாஅங்கு – இசைநிறை அளபெடை), அஞ்சுவல் – I fear (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), பெரும – O lord, என் நெஞ்சத்தான் – in my heart, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 325, நன்னாகையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘சேறும், சேறும்’ என்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து ‘மருங்கு அற்று
மன்னிக் கழிக’ என்றேனே, அன்னோ,
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
கருங்கால் வெண்குருகு மேயும்  5
பெருங்குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே.

Kurunthokai 325, Nannākaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
“I am going, I am going” he said.
I thought that it was a lie and said,
“Leave me and go away.”

Aiyo!  Where is he now, the man
who was of great support to me?

The space between my breasts has
become a pond, big enough for
black-legged, white herons to feed.

Notes:  The heroine said this with sorrow to her friend who was worried since they hero was away.  தலைவன் பிரிந்தகாலத்து கவலையுற்ற தோழியிடம் தலைவி வருந்திக் கூறியது.  நற்றிணை 229 – சேறும் சேறும் என்றலின் பல புலந்து சென்மின் என்றல் யான் அஞ்சுவலே.  இடை முலை (6) – உ. வே. சாமிநாதையர் உரை – முலை இடை என்றது இடை முலையென மாறி நின்றது.  ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ – குறுந்தொகை 176-5, 325-4, புறநானூறு 235, 307.

Meanings:  சேறும் சேறும் – ‘I’ll go, I’ll go’, தன்மைப் பன்மை, first person plural, என்றலின் – since he said, பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து – thinking that it was like the past when it was a lie that he was going, மருங்கு அற்று – move away from near me, மன்னி – being firm, being stable, கழிக – leave me and go, என்றேன் – I said, ஏ – அசைநிலை, an expletive, அன்னோ – aiyo, alas, ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ – where is the man who was of great support to me (கொல்லோ – இரங்கற் பொருட்டு, எந்தை என்பது புலனெறி வழக்கில் வரும் ஒரு விளி), கருங்கால் – black footed, வெண்குருகு – white herons/egrets, மேயும் – eating, பெருங்குளம் – big pond (of tears), ஆயிற்று – it has become, என் இடை முலை – the space between my breasts, நிறைந்து – filled, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 326, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர்
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி,
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பன்னாள் வரூஉம் இன்னாமைத்தே.  5

Kurunthokai 326, Unknown poet, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
If the lord of the shores leaves
me even for a day,
the love born uniting with
him in the seashore groves,
……….where young girls with
……….big, bamboo-like arms,
……….who wear woven garlands,
……….bathe in the ocean and
……….build little sand houses,
brings me many days of distress.

Notes:  The heroine said this to her friend, aware that the hero was nearby, urging him to come and marry her.  வரைதலே தக்கதென்பதைத் தலைவி புலப்படுத்தியது.

Meanings:  துணைத்த கோதை – tied garlands, woven garlands, பணைப் பெரும் தோளினர் – those with bamboo-like big arms, கடலாடு மகளிர் – girls bathing in the ocean, கானல் இழைத்த சிறு மனை – little house built in the seashore grove, புணர்ந்த – united, நட்பு – friendship, love, ஏ – அசைநிலை, an expletive, தோழி – O friend, ஒரு நாள் துறைவன் துறப்பின் – if he abandons me even for a day, if he leaves me even for one day, பன்னாள் வரூஉம் – it will come for many days (வரூஉம் – இன்னிசை அளபெடை), இன்னாமைத்து – it is distressing, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 327, அம்மூவனார், குறிஞ்சித் திணை  – தலைவி ஆற்றிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்,
நின் நிலை கொடிதால், தீய கலுழி,
நம் மனை மடமகள் இன்ன மென்மைச்  5
சாயலள் அளியள் என்னாய்,
வாழை தந்தனையால் சிலம்பு புல் எனவே.

Kurunthokai 327, Ammoovanār, Kurinji Thinai – What the heroine said to the river, as the hero listened nearby
O wicked river!  You have no pity!
Without thinking, ‘This tree is
delicate like the naive young woman
who lives in the house downstream,’
you brought down the banana tree,
marring the mountain’s beauty.

You are harsher than the man from
the mountains,
who thinks they are right, those who
do not show kindness to people who
depend on the graces of others to live.

Notes:  The heroine said this to a river, aware that the hero who was delaying marriage was nearby.  தலைவன் நெடுநாள் வரையாது ஒழுகினான்.  அவனுக்கு உரைப்பாளாய் ஆற்றிற்கு உரைத்தது.

Meanings:  நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் நயன் இலர் ஆகுதல் – those who show no kindness to the poor who suffer and live on charity, நன்று என உணர்ந்த – feeling that it is good, குன்ற நாடன் தன்னினும் – more than the nature of the man from the mountains (நாடன் – நாடனது நிலை, ஆகுபெயர்), நின் நிலை நன்றும் கொடிது – your nature is very harsh, ஆல் – அசைச் சொல், an expletive, தீய கலுழி – you are a wicked muddied river (கலுழி – ஆற்றிற்கு ஆகுபெயர்), நம் மனை மடமகள் இன்ன மென்மைச் சாயலள் அளியள் என்னாய் – without considering that she is a delicate young woman in our home and she is pitiable, வாழை – banana tree, தந்தனை – you gave,  ஆல் – அசைச் சொல், an expletive, சிலம்பு புல் என – for the mountain slopes to lose luster, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 328, பரணர், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இயங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே, அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்  5
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

Kurunthokai 328, Paranar, Neythal Thinai – What the heroine’s friend said to her
Your lover from the seashore,
where waves crash on the shore,
breaking the little cave houses
that crabs have built in the roots
of cassia trees with small flowers,
sounding like drums beat with
sticks,
showered his love on you just for
a few days,
but the slander that has risen is
louder than the uproars at
Kurumpūr, when Vichiyar’s king
fought enemy kings and bards
gave him looks of fierce tigers.

Notes:  The heroine’s friend says this to her, when the hero had left to earn wealth. வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியிடம் சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – விச்சிக்கோ வேந்தரொடு பொருதுங்கால் ‘யார் வெல்வர், யார் தோற்பர்’ என்ற ஐயத்தால் பகைவர் இருவர் தரத்தும் நோக்கலின்  ‘பாணர் புலி நோக்கு உறழ் நிலை’ எனப்பட்டது.  உ. வே. சாமிநாதையர் உரை – போர்க்காலத்தில் களவழிப்பா, பரணி முதலியன பாடுதல் மரபு.  புலி நோக்கு (7)   பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலிப்பார்வை ஒத்த பார்வை.   உ. வே. சாமிநாதையர் உரை – புலி என்றது இங்கு சிங்கத்தை.  Indologist Dr. S. Palaniappan – The gossip was louder than the roar of the noisy village in the arid tract, that saw the stance of the Pāṇar that resembled the look of the tiger, when the chief of Vicciyar of army abounding in archers fought against the kings.  Pānan rulers are mentioned in the following five Akanānūru poems – 113 – எழாஅப் பாணன், 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, and 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, and in an inscription at Paraiyanpattu in Thamizh Nadu, which mentions Pāṇāṭu, the territory of Pānan – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.   கலித்தொகை 4 – வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் சுற்று அமை வில்லர் (நச்சினார்க்கினியர் உரை – புலி போலும் பார்வை).   வரலாறு:  விச்சியர் பெருமகன், குறும்பூர்.  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:   சிறு வீ ஞாழல் – gnāzhal tree with small flowers, புலிநகக்கொன்றை, tigerclaw tree, cassia sophera, வேர் அளைப் பள்ளி – spaces amidst roots, அலவன் – crab, சிறு மனை – little house, சிதைய – to break,  புணரி – waves, குணில்வாய் முரசின் இயங்கும் – like drums that are beat with sticks (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது), துறைவன் – the lord of the shores, நல்கிய நாள் தவச் சிலவே – showered his graces on you for very few days, அலரே – the slander, வில் கெழு தானை – warriors with bows, விச்சியர் பெருமகன் – king of the Vichiyars, வேந்தரொடு பொருத ஞான்றை – when he was fighting with the kings, பாணர் – war bards, Pāṇar rulers, புலி நோக்கு உறழ் நிலை கண்ட – on seeing the looks like that of tigers (உறழ் – உவம உருபு, a comparison word), கலிகெழு குறும்பூர் – the loud town Kurumpoor, ஆர்ப்பினும் – more than the uproar, பெரிது – it is louder, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 329, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானம் இருப்பை வேனல் வெண்பூ
வளி பொரு நெடுஞ்சினை உகுத்தலின் ஆர் கழல்பு
களிறு வழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்கு மலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித்  5
தெள் நீர் நிகர் மலர் புரையும்
நன் மலர் மழைக் கணிற்கு எளியவால் பனியே.

Kurunthokai 329, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
In the dense darkness at
midnight, I am unable to sleep,
thinking about the man who
went through the harsh wasteland
with shining mountains,

where in summer,
attacked by fierce winds, white
flowers on tall branches of forest
iruppai trees have dropped off
their stems and blanketed the
narrow paths where elephants walk,
hiding them completely.

Tears come easily to my fine, large
moist eyes resembling the bright
flowers of clear waters.

Notes:  The heroine said to her friend that she will bear the pain of separation.  தலைவன் பிரிந்த காலத்தில் தோழி வற்புறுத்தியதால் ‘நான் ஒருவாறு ஆற்றுவேன்’ என்றது.

Meanings:   கானம் இருப்பை – iruppai trees in the forest, பாலை நிலம், South Indian mahua, Bassia longifolia, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree, வேனல் வெண்பூ – summer season’s white flowers, வளி பொரு – get attacked by the wind, நெடுஞ்சினை உகுத்தலின் – since they dropped from the tall branches, ஆர் கழல்பு – detached from their stems, களிறு வழங்கு சிறுநெறி – small paths frequented by male elephants, புதைய – to be hidden, தாஅம் – have spread (இசைநிறை அளபெடை), பிறங்கு மலை – bright mountains, splendid mountains, அருஞ்சுரம் – harsh wasteland,  இறந்தவர்ப் படர்ந்து – thinking about the man who went, பயில் இருள் நடுநாள் – pitch dark middle of the night, துயில் அரிதாகி – sleep has become rare, தெள் நீர் – clear water, நிகர் மலர் புரையும் – like bright flowers, நன் மலர் மழைக் கணிற்கு – for the fine large moist eyes (கணிற்கு – கண்ணிற்கு என்பதன் தொகுத்தல் விகாரம்), எளியவால் – it is easy (ஆல் அசைநிலை, an expletive), பனி – tears, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 330, கழார்க்கீரன் எயிற்றியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடை போக்கித் தண் கயத்து இட்ட
நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங்கள்ளின் மணமில கமழும்  5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே?

Kurunthokai 330, Kazhārkeeran Eyitriyanār, Marutham Thinai – What the heroine said to her friend
The white flowers opening from buds
of large-leafed pakandrai are wrinkled
like the thick garments twisted to wring
out water, after being soaked in starch
and beaten and dipped in a cool pond by
a beautiful and esteemed washerwoman.
Like sweet and strong liquor, the flowers
do not have fragrance at this evening time.

Tell me, my friend!  In the land where
he has gone, are there not lonely evenings
that bring sadness?

Notes:  The heroine said this to her friend who was worried since the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழிக்குக் கூறியது.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  நலத்தகை – beauty and esteem, virtue and esteem, virtue and beauty, புலைத்தி – a washerwoman who washes clothes, பசை தோய்த்து எடுத்து – dipped in starch and removed, தலைப் புடை போக்கி – beating the clothes first, தண் – cool, கயத்து இட்ட – tossed into a pond, நீரில் – in the water, பிரியா – tight, not loose, பரூஉ – thick (இன்னிசை அளபெடை), திரி – twisted, கடுக்கும் – like, பேர் இலை – with big leaves, பகன்றை – சிவதை, pakandrai flower, Indian jalap, Ipomaea Turpethum, பொதி அவிழ் – buds opening from tightness, வான் பூ – white flowers, இன் – sweet, கடுங்கள்ளின் – like strong liquor (இன் உருபு ஒப்புப் பொருளது), மணம் இல – without smell (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கமழும் – fragrance spreading, புன்கண் – sorrowful, மாலையும் – evening, புலம்பும் – with loneliness, with sorrow, இன்று கொல் தோழி – is it not my friend (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), அவர் – he, சென்ற – went, நாட்டு – in the country, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 331, வாடாப் பிரபந்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடும் கண் யானைக் கானம் நீந்தி
இறப்பர் கொல், வாழி தோழி, நறு வடிப்  5
பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே?

Kurunthokai 331, Vādā Prapanthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He left to earn precious wealth
which is better to him than us,
letting your beautiful body,
……….delicate, like the beautiful
……….sprouts of green-trunked
……….mango trees with fragrant,
……….tiny green fruits,
to become pale.

Will he go through the forests
ruled by harsh-eyed elephants,
where tall bamboo is parched in
places with no water and those
who travel on the paths are attacked
by bandit clans with harsh bows?

He will not leave you and go!

Notes:  The heroine’s friend said this to the heroine who was sad knowing that the hero was about to embark on a trip to earn wealth.  பொருள்வயின் பிரிய எண்ணியதை அறிந்து வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  நீந்தி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – கடத்தற்கரிய பரப்பினதாதலின் நீந்தி என்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இறப்பர் கொல் என்னும் வினா இறவார் என்பதனை வற்புறுத்தி நின்றது.  அகநானூறு 53 – நம்மினும் பொருளே காதலர் காதல்.

Meanings:  நெடும் கழை திரங்கிய – where tall bamboo is parched, Bambusa arundinacea, நீர் இல் ஆரிடை – between dry wasteland paths, ஆறு செல் வம்பலர் தொலைய – for the travelers who go on the path to get ruined, மாறு நின்று – standing across, கொடும் சிலை மறவர் – bandits with harsh bows,  bandits with curved bows, கடறு – forest, கூட்டுண்ணும் – exploiting, கடும் கண் யானை – harsh-eyed elephant, கானம் நீந்தி இறப்பர் கொல் – will he pass through such forests (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, நறு வடி – fragrant tender mangoes, tiny green mangoes, மாவடு, பைங்கால் மாஅத்து – of mango trees with healthy green trunks (அத்து சாரியை), அம் தளிர் அன்ன – like the beautiful sprouts, நன் மா மேனி பசப்ப – for your dark body to become pale, for your beautiful body to become pale, நம்மினும் சிறந்த – better than us, அரும் பொருள் – precious wealth, தரற்கு – to bring back

குறுந்தொகை 332, மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வந்த வாடைச் சில் பெயல் கடை நாள்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ தோழி, நாறு உயிர்
மடப்பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றச் சிறுகுடி இழிதரு  5
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே?

Kurunthokai 332, Mathurai Maruthankizhar Makanār Ilampōthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
For this painful love disease that
gives you great distress at nights,
when the northern winds blows
with drizzles,

what harm would it do, if you
speak lovingly to the lord of the
mountains, where a male elephant
with a huge trunk embraces his
mate with odor in her breath and
comes down to a small village
meeting place?

Notes:  The heroine’s friend said to her when the hero was delaying marrige, aware that he was nearby.  தலைவன் வரையாமல் வந்தொழிய காலத்தில் அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாறு உயிர் பிடி தழீஇ யானை ஊர் மன்றத்தே வரும் என்றது, தலைவியைப்  பலர் அறிய மணஞ்செய்துக் கொண்டு நீ நின் இல்லத்தில் புகுதல் வேண்டும் என்னும் உள்ளுறை பயந்து நின்றது.  தமிழண்ணல் உரை – களிறு பிடியைத் தழுவி மன்றத்தின் வழி இறங்கிவரும் குன்ற நாடன், அதைக் காண்பான் ஆதலின், தலைவனுக்குத் தலைவியை மணக்கும் எண்ணம் தோன்றும்.  இது இறைச்சியின் பாற்படும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  வந்த வாடை – blowing northern wind,  சில் பெயல் கடை நாள் – light rain at the last phase of night, நோய் நீந்து – swimming in love affliction, அரும் படர் தீர – for your sorrow to end, நீ நயந்து கூறின் – if you say in a loving manner, எவன் – what harm would it be, ஓ – அசைநிலை, an expletive, தோழி – my friend, நாறு உயிர் மடப்பிடி தழீஇ – hugging his pregnant female with smelling breath (தழீஇ – சொல்லிசை அளபெடை), தடக் கை யானை – an elephant with large trunk, குன்றச் சிறுகுடி – small village near the mountains, small community near the mountains, இழிதரு – comes down, மன்றம் நண்ணிய – to the common grounds, to the town meeting place, மலை கிழவோற்கு – to the lord of the mountains, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 333, உழுந்தினைம் புலவனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
குறும் படைப் பகழிக் கொடு வில் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங்கண் யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன்,
பணிக் குறை வருத்தம் வீடத்  5
துணியின் எவனோ தோழி, நம் மறையே?

Kurunthokai 333, Uzhunthinaim Pulavanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
I wonder what will happen
if we become bold and share
our secret about your lover
from the mountain country,
where, in a millet field,
a marauding green-eyed elephant
eating millet is chased away by
a hunter carrying a curved bow
and few arrows, and
along with parrots that are chased
away by women wearing fragrant
leaf garments,
it looks to the safety of the small
mountain above?

It might end your sorrow about
this unfinished business!

Notes:  The heroine’s friend said to her that she would inform the family about the love matter and make the family accept the marriage proposal of the hero.  தலைவியின் நோய் மிகுதியைக் கண்ட தோழி, ‘நான் அறத்தொடு நின்று தலைவனது வரைவை நமர் ஏற்றுக் கொள்ளச் செய்வேன் என்றது’.   குறும்படை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – குறிய படையாகிய அம்பு, இரா. இராகவையங்கார் உரை – சிறு சேக்கை, காவல் இதணத்துப் புலித்தோலால் அமைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – எவனோ என்னும் வினா நன்றாம் என்பதுபட நின்றது.  உள்ளுறை  – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காணவனாற் கடியப்பட்ட யானை மகளிராற் கடியப்பட்ட கிள்ளையோடே குறும்பொறையில் ஏற அணவும் என்றது, காவலர் முதலியோராற் கடியப்பட்ட தலைவன், தாய் முதலியோராற் கடியப்பட்ட நின்னோடே கூடி, இல்லறஞ் செயற்கு விரும்புகின்றான் என்னும் உள்ளுறை தோற்றி, ஆதலால் நான் அறத்தோடு நிற்பேன் என்பதற்கு ஏதுவாயிற்று என்க.

Meanings:   குறும்படை – short weapons, short bed, பகழி – arrows, கொடு வில் – curved bow, கானவன் – a forest-dweller, புனம் – millet field, உண்டு – ate, கடிந்த – chased away, பைங்கண் – green eyed, யானை – elephant, நறும் தழை – fragrant leaves, fragrant leaf garments, மகளிர் – women, ஓப்பும் – chase away, கிள்ளையொடு – along with parrots, குறும்பொறைக்கு – to the small mountain, அணவும் – looks above, குன்ற நாடன் – the man from the country with mountains, பணிக் குறை – unfinished work, வருத்தம் – sorrow, வீட – to remove, துணியின் – if we get bold (and tell mother), எவன் – what happens, ஓ – அசைநிலை, an expletive, தோழி – O friend, நம் – our, மறை – secret, secret love, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 334, இளம்பூதனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சிறுவெண்காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புற நனைப்பப்
பனி புலந்து உறையும் பல் பூங்கானல்
விரி நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று  5
எவனோ தோழி, நாம் இழப்பதுவே?

Kurunthokai 334, Ilampoothanār, Neythal Thinai – What the heroine said to her friend
If he leaves, the lord of the
vast ocean shores,
……….where huge flocks
……….of small white gulls
……….with red beaks, hate cold
……….water sprays brought by
……….crashing waves, and
……….roost in the seaside grove
……….dense with many flowers,
what else do I have other than
my sweet life, to lose?

Notes:  The heroine said this to her friend who asked her whether she was able to handle separation.  ‘தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தால் நீ ஆற்றும் வன்மை உடையையோ’ என்று வினவிய தோழிக்கு, தலைவி கூறியது.

Meanings:  சிறுவெண்காக்கைச் செவ்வாய் – small white gulls with red beaks, Indian black-headed sea gulls, Larus ichthyactus, பெரும் தோடு – large flocks, எறி திரைத் திவலை ஈர்ம் புற நனைப்ப – as the water spray from the crashing waves wet their backs, as the water spray from the waves wet their back sides, பனி புலந்து – hating the cold, உறையும் பல் பூங்கானல் – they roost in the seashore grove with many flowers, விரி நீர்ச் சேர்ப்பன் – the lord of the vast ocean, நீப்பின் – should he leave, ஒரு நம் இன் உயிர் அல்லது – other than my sweet life, பிறிது ஒன்று எவனோ தோழி – what else is there O friend (நம் – தன்மைப் பன்மை, first person plural), நாம் – we (தன்மைப் பன்மை, first person plural), இழப்பது – what we have to lose, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 335, இருந்தையூர்க் கொற்றன் புலவனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பிச்
சுனை பாய் சோர்விடை நோக்கிச் சினை இழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்,
வெற்பு இடை நண்ணியதுவே வார் கோல்  5
வல் வில் கானவர் தங்கைப்
பெருந்தோள் கொடிச்சி இருந்த ஊரே.

Kurunthokai 335, Irunthaiyūr Kotran Pulavanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
The young woman with wide arms,
younger sister of hunters with strong
bows and perfectly fitted long arrows,
lives in a town in the mountains,

where women wearing rows of bangles
on their forearms spread red millet on
dark, wide boulders and dive into a spring,
and green-eyed female monkeys with
babies jump off tree branches at
opportune moments and steal drying millet.

Notes:  The heroine’s friend informed the hero that the heroine has been confined to the house and that it will not be possible for him to meet her at night.  தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, இரவுக்குறி பெறுதல் அரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.  வரைவு கடாயது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  வார் கோல் வல் வில் கானவர் தங்கை என்றமையான் இரவுக்குறிக்கண் தலைவியை எய்தலாகாமையைக் குறிப்பால் உணர்த்தினாள்.  மகளிர் சோர்விடை நோக்கி மந்தி தினை கவரும் என்றது,’கானவர் சோர்வாலே நீ தலைவியை எய்தினாய்’ என்பது.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  நிரை வளை முன்கை – forearms with rows of bangles, forearms with stacked bangles, நேர் இழை – fine jewels, மகளிர் – women, இருங்கல் – dark mountains, வியல் அறை – wide boulders, wide rocks, செந்தினை – red millet, Italian millet, Setaria italicum, பரப்பி – spread, சுனை பாய் – jumping into the spring, சோர்வு இடை – when tired, நோக்கி – looking, சினை – tree branches, இழிந்து – coming down, பைங்கண் மந்தி – green-eyed female monkeys, பார்ப்பொடு – with their babies, கவரும் – they seize, they eat, வெற்பு இடை – in the mountains, நண்ணியது – it is there, it is nearby, ஏ – அசைநிலை, an expletive, வார் கோல் – long arrows, வல்வில் – strong bows, கானவர் தங்கை – sister of a forest dweller, பெருந்தோள் – wide shoulders, large arms, கொடிச்சி – the young woman from the mountain, இருந்த – living, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 336, குன்றியனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
செறுவர்க்கு உவகை ஆகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ?
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல  5
வருந்தினள் அளியள், நீ பிரிந்திசினோளே.

Kurunthokai 336, Kundriyanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the seashore
where honey fragrance flows!

Will the wise come here at night
to give happiness to enemies
and bring sorrow to friends?

Since you left her, she suffers
like waterlilies in black marshes
crushed by the wheels of a tall
chariot, decorated with bright
bells with small clappers sounding
like vilari tunes, and pulled by
speeding horses.

She deserves your pity!

Notes:  The heroine’s friend refuses night trysts.  She urged the hero to come and marry the heroine.  இரவுக்குறி நயந்தானைத் தோழி மறுத்தது.  வரைவு கடாயது.  செறுவர்க்கு உவகை ஆக (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரவுக் குறி வருங்கால் தலைவனுக்கு ஆற்றிடைப் புலி முதலியவற்றானே இடையூறு உண்டாயவழி அவன் பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாகலின் ‘செறுவர்க்கு உவகை ஆக’ என்றாள்.

Meanings:  செறுவர்க்கு உவகை ஆக – as happiness to enemies, தெறுவர – causing distress to friends, ஈங்கனம் வருபவோ – will the wise come here (at night), தேம் பாய் துறைவ – O lord of the seashore where honey flows, O lord of the seashore with flowers with honey (தேம் தேன் என்றதன் திரிபு, துறைவ – அண்மை விளி), சிறு நா ஒண் மணி – small tongued (clappers) shiny bells, விளரி ஆர்ப்ப – like vilari tune (it is a sad tune), கடு மா – fast horses, நெடுந்தேர் – tall chariot, நேமி – wheels, போகிய – went, இருங்கழி – dark/large backwaters, நெய்தல் போல – like the waterlilies, வருந்தினள் – she is sad, அளியள் – she is pitiable, நீ பிரிந்திசினோள் – the young woman you left (இசின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், an expletive of the third person), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 337, பொதுக்கயத்துக் கீரந்தையார், குறிஞ்சித் திணை  – தலைவன் சொன்னது
முலையே முகிழ் முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந்தனவே,
செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின,
சுணங்கும் சில தோன்றினவே, அணங்கு
என யான் தன் அறிவல் தான் அறியலளே  5
யாங்கு ஆகுவள் கொல் தானே,
பெருமுது செல்வர் ஒரு மட மகளே?

Kurunthokai 337, Pothukkayathu Keeranthaiyār, Kurinji Thinai – What the hero said
Her breasts have grown like
blossoms; her thick soft hair
has draped down; her white
teeth in closely-set rows have
grown fully; and a few pallor
spots have appeared.

I understand her power, but
she’s unaware of it.  What will
she become, this delicate
daughter of a man with great,
ancient wealth?

Notes:  The hero said this when he pleaded with the heroine’s friend to help him attain the heroine.  இரந்து பின்னின்ற தலைவன் தனது குறையறியக் கூறியது.  பல்லும், சுணங்கும்:  உம் – இறந்தது தழீஇயது.  அகநானூறு 7 – முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின தலை முடி சான்று.  பறிமுறை (3) –  உ. வே. சாமிநாதையர் உரை – விழுந்து எழுந்தமை முறைமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழுந்தெழும் முறை, பறிதல் – முளைத்தல், தோன்றுதல்.  கலித்தொகை 22 – செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் பறிமுறை பாராட்டினையோ ஐய,

Meanings:  முலை – breasts, ஏ – அசைநிலை, an expletive, முகிழ் முகிழ்த்தன – they have blossomed, they have grown, ஏ – அசைநிலை, an expletive, தலை – head, ஏ – அசைநிலை, an expletive, கிளைஇய – spreading, rising (செய்யுளிசை அளபெடை), மென்குரல் – delicate hair clusters, கிழக்கு வீழ்ந்தன – they have fallen down low, ஏ – அசைநிலை, an expletive, செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின – closely set adult white teeth are fully grown, சுணங்கும் – pallor spots, சில – few, தோன்றின – appeared, ஏ – அசைநிலை, an expletive, அணங்கு என யான் தன் அறிவல் – I understand her power, I know the pain she causes, தான் – she, அறியலள் – does not know that, ஏ – அசைநிலை, an expletive, யாங்கு ஆகுவள் கொல் – what will her nature become, கொல் – அசைநிலை, an expletive, தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, பெருமுது செல்வர் ஒரு மட மகள் – the delicate/young/naive daughter of a man with great ancient wealth

குறுந்தொகை 338, பெருங்குன்றூர்கிழார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செலச்
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின்பனிக் கடை நாள் தண் பனி அற்சிரம்  5
வந்தன்று, பெருவிறல் தேரே, பணைத்தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலங்கேழ்
அரிவை புலம்பு அசாவிடவே.

Kurunthokai 338, Perunkundrūr Kizhār, Pālai Thinai – What the heroine’s friend said to her
At this painful evening time
of the cold season,
a noble stag with twisted antlers
along with its delicate, naive
female, rests in the shade of the
wide thickets dotted with flowers,
sleeps for a while, and then goes
to nibble on green lentil pods,
when the sun goes down.

His greatly victorious chariot has
arrived in the early dew season to
end your loneliness, O virtuous
woman with bamboo-like arms,
who lives in a flourishing house!

Notes:  The heroine’s friend informed her of the hero’s arrival.  This was when they were married.  கற்புக்காலத்தில் தலைவனது பிரிவால் வருந்திய தலைவியிடம் ‘தலைவன் வந்தான்’ எனக்கூறித் தோழி ஆற்றுவித்தது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரலை ஏறு பிணையோடே அசைஇத் துஞ்சிக் கறிக்கும் அச்சிரம் என்றது, அக்காலத்தே தலைவன் நின்னோடே உறைந்து இன்பஞ்செய்வான் என்னும் குறிப்புடையது என்க.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – a noble stag with twisted antlers, அரி மடப் பிணையோடு – along with its delicate naïve female, அல்கு நிழல் அசைஇ – rested in the shade (அசைஇ – சொல்லிசை அளபெடை), வீ ததை – dense with flowers, flower filled, வியல் அரில் – wide thick bushes, துஞ்சி – slept, பொழுது செல – as day ended (செல – இடைக்குறை), செழும் பயறு கறிக்கும் – it eats the mature green gram lentils, eat the lushly grown green gram lentils, பாசிப் பருப்பு, பயத்தம் பருப்பு, Green gram dhal, phaseolous aureus (old name), Vigna radiate,  புன்கண் மாலை – painful evening, பின்பனி– the last days of the cold season with late dew, கடை நாள் – late night, தண் பனி அற்சிரம் – cold early dew season, வந்தன்று – it has arrived, பெருவிறல் – greatly victorious man (அன்மொழித்தொகை), தேர் – the chariot, ஏ – அசைநிலை, an expletive, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, விளங்கு நகர் – bright house, flourishing house, அடங்கிய கற்பின் – with modesty, with virtue, நலம் கேழ் – beauty filled, அரிவை – O young woman, புலம்பு – loneliness, sorrow, அசாவிட – to be removed, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 339, பேயார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகிச் சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்,
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிது மன் வாழி தோழி, மா இதழ்க்  5
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.

Kurunthokai 339, Pēyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
It was very sweet to you,
when he embraced your fine
chest adorned with a garland
with many flowers,
your lover from the land where
thick, bright, fragrant akil smoke
rolls down the mountain slopes
like clouds that do not rain,
and settles in the villages of the
mountain dwellers.

Now sickly pallor has come upon
you, bringing tears to your eyes,
dark like the petals of blue waterlily
flowers.  May you live long, O friend!

Notes:  The heroine’s friend said this to the heroine, urging her not to worry, when the hero went to earn wealth for their married life.  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தே வருந்திய தலைவியை நீ வருந்துதல் தகவு இல்லை என்று இடித்துரைத்துத் தோழி கூறியது.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  நறை அகில் – fragrant akil wood, eaglewood, வயங்கிய – bright, flourishing, நளி – thick, dense, புன நறும் புகை – forest’s fragrant smoke, உறை அறு – waterless, done with raining, not raining, மையின் போகி – went like the clouds (மையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சாரல் – mountain slopes, குறவர் பாக்கத்து – in the village of the mountain dwellers, இழிதரும் – comes down, நாடன் – man from such country, மயங்கு மலர்க் கோதை – flower garland with mixed flowers, நல் மார்பு – fine chest, முயங்கல் – to embrace, இனிது – it is sweet, மன் – very much, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, மா இதழ்க் குவளை – dark/big leaved blue waterlilies, Blue nelumbo, Nymphaea odorata,  உண்கண் – kohl-rimmed eyes, கலுழ – to cry, பசலை – pallor, ஆகா – not becoming, ஊங்கலங்கடை – situation before it came (ஊங்குக் கடை என்க, அல்லும் அம்மும் வேண்டாவழிச் சாரியை), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 340, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி,
ஒரு பால் படுதல் செல்லாது, ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்  5
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும் தோழி, அவர் இருந்த என் நெஞ்சே.

Kurunthokai 340, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend
When love increases, it goes
to him.

When I suffer alone without
him, it stays with me.

It does not know what to do,
caught between the two,
this heart of mine where my
lover resides.

It suffers like a flowering kandal
tree on the backwater’s shore,
that is swayed back and forth
by the flood water.

Notes:  The heroine said this to her friend who lets her know of her night tryst with the hero.  இரவுக் குறி உணர்த்திய தோழிக்குத் தலைவி, தலைவனின் ஏதம் கருதி அதனை மறுத்தது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  காமம் கடையின் – when love increases, காதலர்ப் படர்ந்து – it goes to my lover, நாம் அவர்ப் புலம்பின் – if I am sad without him, if I am lonely without him, நம்மோடு ஆகி – it is one with me, ஒரு பால் படுதல் செல்லாது – not staying on one side, ஆயிடை – between the two, அழுவம் நின்ற – standing on the seashore, அலர் வேய்க் கண்டல் – kandal tree with flowers (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), கழி பெயர் மருங்கின் ஒல்கி – swaying on the side of the backwaters, ஓதம் – flood, பெயர்தரப் பெயர்தந்தாங்கு – like moving when the flowing water moves, வருந்தும் – it suffers, தோழி – O friend, அவர் இருந்த – where he is, என் – my, நெஞ்சே – heart, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 341, மிளைகிழார் நல்வேட்டனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பல் வீ படரிய பசு நனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று என  5
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழி, என் வன்கணானே.

Kurunthokai 341, Milaikizhār Nalvēttanār, Neythal Thinai – What the heroine said to her friend
The flower-laden kuravam trees
with fresh buds and the punku
trees with flowers like puffed rice,
decorate the beautiful groves.

Even in this season, when tree
branches are delightful,
my lover does not care for me.

I think to myself, “Wise ones are
apt to fail in their manly duties”.

My painful heart will grow strong.
I will live, O friend, through my
own fortitude!

Notes:  தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தும் அவன் வராமைகண்ட தோழி ‘தலைவி பெரிதும் வருந்துவாளே’ என்று கவன்றத் தோழிக்குத் தலைவி கூறியது.  There are other versions of line 1 being, பல் வீ பட்ட பசு நனைக் குரவம், பல்லி படீஇய பசு நனைக் குரவம், and பல்லி பயந்த பசு நனைக் குரவம்.   நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  பல் வீ – many flowers, படரிய – spread, பசு நனைக் குரவம் – kuravam trees with fresh buds, bottle flower tree, Webera Corymbosa (குரவம் – குரா என்பது அம் என்னும் சாரியை பெற்று குரவம் ஆனது), பொரிப் பூம் புன்கொடு – with punku trees that have flowers that appear like puffed rice, Pongamia Glabra or Pongamia Pinnata, பொழில் அணிக் கொளாஅ – when the grove looks pretty (கொளாஅ – இசை நிறை அளபெடை), சினை இனிது ஆகிய காலையும் – even when the branches look sweet (காலையும் – உம்மை உயர்வு சிறப்பு), காதலர் பேணார் ஆயினும் – even if my lover does not care for me, பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என – even if the wise ones fail in their considered manly duties, வலியா – not strong, நெஞ்சம் வலிப்ப – becoming strong, வாழ்வேன் தோழி – I will live my friend, என் – my, வன்கணான் – through strength, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 342, காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார், குறிஞ்சித் திணை  தோழி தலைவனிடம் சொன்னது
கலை கை தொட்ட கமழ் சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட, தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,  5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந் தலைப்படாஅப் பண்பினை எனினே?

Kurunthokai 342, Kāviripoompattinathu Kantharathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the mountain country
where male monkeys tear apart
fragrant, large jackfruits with
many segments!
The forest dweller who forgot to
guard them first, later sets net traps
around every tree.

My friend wearing a garment made
with cool leaves and blue waterlilies
from the lush pond, is sad.

Does it suit you not to remove the
pain and fear of the one who loves you?

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தும் தலைவன் களவொழுக்கத்தை விரும்பினனாக, ‘நீ வரைதலே தக்கது’ என்று தோழி கூறியது.  வரைவு கடாயது.  உ. வே. சாமிநாதையர் உரை – கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலை மாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில் நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நின்னால் அணுகுதற்கு அரியவள் ஆவாள் என்பது குறிப்பு.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – கலைதொட்டமையைக் கமழ்தலானே அறிந்த கானவன், மீண்டும் தொடாதவாறு படுமலை மாட்டும் என்றது, நினது களவொழுக்கத்தை அலரால் அறிந்த தமர், தலைவியை நீ மீட்டும் எய்தவொண்ணாதபடி இற்செறித்து விட்டனர். ஆகலான், அவளை நீ இனி இக்களவொழுக்கதானே எய்தவொண்ணாது காண் என்னும் உள்ளுறை தோற்றி நின்றது.  கலையும் பெரும்பழமும்:   குறுந்தொகை 342-1 – கலை கை தொட்ட கமழ் சுளைப் பெரும்பழம், மலைபடுகடாம் – 292 – கலை தொடு பெரும்பழம்.

Meanings:  கலை கை தொட்ட – torn by the male monkey’s hands, கமழ் சுளைப் பெரும்பழம் – big fruit/jackfruit with fragrant segments, Artocarpus heterophyllus,  காவல் மறந்த கானவன் – the forest dweller who forgot to protect, ஞாங்கர் – in that place, there, கடியுடை மரந்தொறும் – on all the protected trees, படுவலை மாட்டும் – hangs catching nets, குன்ற நாட – O man from the mountains, தகுமோ – does it befit (you), பைஞ்சுனை – lush pond, lush spring, குவளைத் தண் தழை – wearing a garment with cool leaves and blue waterlilies,  Blue nelumbo, Nymphaea odorata, இவள் ஈண்டு வருந்த – as she is sad here, நயந்தோர் புன்கண் தீர்க்கும் – removing the sorrow of the one who loves you, பயம் – benefit, தலைப்படாஅ – not attaining (தலைப்படாஅ – இசை நிறை அளபெடை), பண்பினை எனின் – you being of such nature, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 343, ஈழத்துப் பூதன்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நினையாய் வாழி தோழி, நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென,
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம் மறுக் கொளீஇய விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை  5
வாடு பூஞ்சினையின் கிடக்கும்,
உயர்வரை நாடனொடு பெயருமாறே.

Kurunthokai 343, Eelathu Poothanthēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend!  May you live long!

You need to think about going with
your lover from the country with lofty
mountains,

where a powerful, huge male tiger with
a gaping mouth leapt on the beautiful
face of a noble elephant with wet cheeks,
leaving red stains on its white tusks,
and then fell down appearing like a branch
of a big-trunked vēngai tree with wilted
flowers, that was dropped by the westerly
winds at the mouth of a mountain cave.

Notes:  ‘நீ தலைவனுடன் செல்வதை விரும்பி மேற்கொள்வாயாக’ என்றது.  கலித்தொகை 38 – உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை, கலித்தொகை 46 – வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்,  குறுந்தொகை 343 – கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும்.  வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும் (5-6) –  உ. வே. சாமிநாதையர் உரை –  கன் முழையிலுள்ள, மேல் காற்று வீழ்த்திய, கரிய அடியையுடைய வேங்கை மரத்தினது வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும், இரா. இராகவையங்கார் உரை – புலி ஏற்றை யானை முகம் பாய்ந்ததால் செம்மறுக் கொளீஇச் சினையின் விடர் முகைக் கிடக்கும் என்றியைக்க.  உ. வே. சாமிநாதையர் உரை – ‘அவனது நாட்டில் உள்ள யானை தன்னை எதிர்த்த மிகுவலியுடைய புலியைத் தான் எதிர்க்காமலே கொம்பினால் வீழச் செய்தது’ என்பதால், அந்நாட்டுக்குரியனாகிய தலைவனும் இடையூறுகளை எளிதில் வெல்லும் ஆற்றல் உடையவன் என்பதை உய்த்துணர வைத்தாள்.

Meanings:  நினையாய் – you think about it, வாழி – may you live long, தோழி – O friend, நனை கவுள் அண்ணல் யானை – a noble elephant with wet cheeks, a noble elephant with musth on his cheeks, elephant in rut, அணி முகம் பாய்ந்தென – since it leapt on its beautiful face, மிகு வலி இரு புலிப் பகுவாய் – a very strong big tiger with a gaping mouth, ஏற்றை – a male, வெண்கோடு செம் மறுக் கொளீஇய – causing the white tusks to become red with blood stains (கொளீஇய – செய்யுளிசை அளபெடை), விடர் – a crack in the mountain, முகை – cave, கோடை ஒற்றிய – westerly winds attacked and dropped, கருங்கால் வேங்கை – Indian kino tree with a big/sturdy/dark-colored trunk, Pterocarpus marsupium, வாடு பூஞ்சினையின் – like a tree branch with wilted flowers (பூஞ்சினையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கிடக்கும் – it is lying down, it is lying dead, உயர் வரை நாடனொடு – with the lord of the tall mountains, பெயருமாறு – to leave (உ. வே. சா, தமிழண்ணல்), பெயரும் ஆறு, manner of leaving (பொ. வே. சோமசுந்தரனார்), ஏ – பிரிநிலை, exclusion

குறுந்தொகை 344, குறுங்குடி மருதனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நோற்றோர் மன்ற தோழி, தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந்திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து  5
ஊர் வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட்பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர காண்போரே.

Kurunthokai 344, Kurungudi Maruthanār, Mullai Thinai – What the heroine said to her friend
The month is chilly and bitter,
when cold rain drizzles
on a painful evening like this,
when cows with their dewlaps
hanging down, are with their
noble bulls that ate grass,
their udders full and swollen,
think about their calves,
break away from their herd,
and walk toward the village,
their teats dripping milk.

Those women who see the
return of their lovers, long absent
in their quest for riches so hard to
earn, must have done penances
for sure, my friend.

Notes:  பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  நோற்றோர் – those who did penances, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, தோழி – my friend,  தண்ணெனத் தூற்றும் துவலை – drizzling cool drops, பனிக் கடுந்திங்கள் – winter’s harsh month, புலம் பயிர் அருந்த –  grazed grass in the pasture (அருந்த – அருந்திய என்னும் எச்சத்தின் திரிபு), அண்ணல் ஏற்றொடு – with the noble bulls, நிலம் தூங்கு அணல – dewlap hanging down to the land, loose skin hanging down to the land, வீங்கு முலை செருத்தல் – udders of cows are swollen (செருத்தல் – ஆகுபெயர் பசுக்களுக்கு), பால் வார்பு – milk dripping, குழவி உள்ளி – thinking about their calves, நிரை – herd, இறந்து – leave, ஊர் வயின் பெயரும் – going toward town, புன்கண் மாலை – sad evening time, அரும் பெறல் பொருள் பிணி – desire for wealth that is hard to obtain, போகிப் பிரிந்து – separated and went, உறை – residing, காதலர் வர – lovers returning, காண்போர் – those who see that, women who see that, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 345, அண்டர் மகன் குறுவழுதியார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந்தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்து நின்று அசைஇத்
தங்கினிர் ஆயின் தவறோ தெய்ய,
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலத்
தாழை தைஇய தயங்கு திரைக் கொடுங்கழி  5
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

Kurunthokai 345, Andar Makan Kuruvaluthiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
If you park your tall chariot
with ornaments and lotus-bud
shaped handle, near the hill-like,
tall sand dunes and curved
backwaters fringed with thāzhai
trees where bright waves break,
and rest in our small fine town,
surrounded by the ocean as
its fence, to remove the sorrow
of my friend wearing a leaf garment
around her loins, is that so wrong?

Notes:  பகலில் வந்து ஒழுகுவானைத் தோழி இரவில் வா என்றது.   இரா. இராகவையங்கார் உரை – இழுமென ஒலிக்கும் என்பதால் பகல் வருதல்பற்றி அலர் தொடங்கிற்றென்று குறித்தாளாம்.  தாழை தைஇய……அங்கண் என்பதனால் இரவிற் சேர்தற்குக் குறியிடம் உணர்த்தினாளாம்.  தாழை தைஇய என்பதனால் மறைவும், கொடுங்கழி என்பதனாற் பிறர் புகாமையும், ஒலிக்கும் என்பதனால் நீவிர் உரையாடினும் அரவங் கேளாமையும் கருதி உரைத்தாள் ஆவள்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  இழை அணிந்து – adorned with decorations, இயல்வரும் – moving, கொடுஞ்சி – decorative handle in the shape of a lotus bud, நெடுந்தேர் – tall chariot, வரை மருள் – like hills (மருள் – உவம உருபு, a comparison word), நெடு மணல் – tall heaps of sand, தவிர்த்து – stopped, நின்று அசைஇ – staying and resting (அசைஇ – சொல்லிசை அளபெடை), தங்கினிர் ஆயின் தவறோ – what is wrong if you stay, தெய்ய – அசை நிலை, an expletive, தழை – leaves, தாழ் – hanging, அல்குல் – waist, loins, இவள் புலம்பு – her loneliness, her sorrow, அகல – to be removed, தாழை – thāzhai trees, Pandanus odoratissimus, தைஇய – with, having (செய்யுளிசை அளபெடை), தயங்கு திரை – bright waves, moving waves, கொடுங்கழி – curved backwaters, இழுமென ஒலிக்கும் – breaks with loud noises (இழுமென – ஒலிக்குறிப்பு), ஆங்கண் – there, பெருநீர் – ocean, வேலி – fence, எம் – our, சிறுநல் – small nice, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 346, வாயிலிளங்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
நாகு பிடி நயந்த முளைக் கோட்டு இளங்களிறு
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன் தோழி,
சுனைப் பூங்குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,  5
காலை வந்து மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.

Kurunthokai 346, Vāyililankannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
O friend!  He comes in the
daytime bringing you garlands
made with blue waterlilies from
the springs, and helps you chase
marauding parrots in the millet
field.

When evening comes, he suffers
and longs for you in his fine chest,
but is unable to say anything,
the man from the country
where a young bull elephant
with tusks like bamboo sprouts,
that desires a young female
elephant, is startled by the shouts
of mountain dwellers, and
rampages the village meeting place.

Notes:  தலைவன் இரவுக்குறி விரும்புதலைத் தோழி தலைவிக்குக் கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – பிடியை நயந்த களிறு குன்றம் நண்ணும் என்றது, நின்னை நயந்த தலைவன் ஊரார் அலருக்கு அஞ்சி மனையகத்தே இரவில் வருவான் என்ற குறிப்பை உணர்த்தியது.  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  நாகு பிடி – young female elephant, நயந்த – desired, முளைக் கோட்டு இளங்களிறு – young male elephant with bamboo-sprout-like tusks, குன்றம் நண்ணி – in the mountains, குறவர் ஆர்ப்ப – mountain dwellers raised noises, மன்றம் போழும் – he tears the village common grounds, he rampages through the village common grounds, நாடன் – the man from such country, தோழி – my friend, சுனைப் பூங்குவளை – blue waterlilies from the spring, Blue nelumbo, Nymphaea odorata, தொடலை தந்தும் – even when he gave the garlands, தினைப் புன மருங்கில் – in the millet field, Italian millet, Setaria italicum, படுகிளி ஓப்பியும் – chasing marauding parrots, காலை வந்து – came during the day, மாலைப் பொழுதில் நல் அகம் நயந்து – in the evening he desires in his fine chest, தான் உயங்கி – feeling sad, சொல்லவும் ஆகாது – unable to say anything, அஃகியோன் – he suffers with a need, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 347, காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார், பாலைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல்
குமரி வாகைக் கோல் உடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,  5
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே.

Kurunthokai 347, Kāviripoompattinathu Chēntham Kannanār, Pālai Thinai – What the hero said to his heart
My heart!  If she will join me
go on the long forest path in
the wasteland,
……….where springs that were
……….once brimming with water
……….are dried up, and a struggling,
……….young vākai trees’ fragrant
……….flowers with long stalks
……….appear like the head crests
……….of delicate, dark peacocks,
what you have desired to acquire
fearlessly, will be good!

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய தான் நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.

Meanings:  மல்கு சுனை உலர்ந்த – once full springs are not dry, once full ponds are now dry, நல்கூர் சுர முதல் குமரி வாகை – struggling young vākai trees in the wasteland, Sirissa trees, Albyzzia lebbeck, கோல் உடை – with branches, நறு வீ – fragrant flowers, மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் – appears like the head crest of an innocent dark peacock (குடுமியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கான நீள் இடை – in the long forest path, தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் – if she tries to come and unite with me, நன்றே – it is good (ஏ – தேற்றம், certainty), நெஞ்சம் – O heart, நயந்த – desired (wealth), நின் துணிவு – your fearlessness, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 348, மாவளத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தாமே செல்ப ஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்
இதழ் அழிந்து ஊறும் கண் பனி மதர் எழில்
பூண் அக வன முலை நனைத்தலும்  5
காணார் கொல்லோ, மாணிழை, நமரே?

Kurunthokai 348, Māvalathanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
O friend wearing splendid jewels!
If our man decides to leave, will he
not see the tears streaming down,
ruining your eyelids and drenching
your jeweled breasts, looking like the
branches of small jasmine vines with
flowers caught between an elephant’s
tusks, as it forages in the forest?

Notes:  The heroine’s friend comforted the fearing heroine stating that the hero will not leave her to go on a wealth-seeking trip.  தலைவன் பிரிவான் என்று அஞ்சி வருந்திய தலைவிக்குத் தோழி ‘அவன் பிரியான்’ எனக் கூறி ஆற்றுவித்தது.  உ. வே. சாமிநாதையர் உரை –  யானைக் கோட்டிடைக் கொண்ட முல்லை எந்தக் கணத்தில் அதன் வாயுள் புகுமோ என அறியா நிலை இருத்தலைப் போல இவள் எப்பொழுது உயிர் நீப்பாள் என்ற நிலையில் இருப்பாள் என்று உவமையை விரித்துக் கொள்க.  யானைக் கொம்பினிடத்தே உதிர்ந்து வீழும் சிறிய பூக்களையுடைய முல்லைக் கொம்பைப் பொலவென்று பொருள் செய்து, யானைக் கொம்பை நகிலுக்கும் முல்லை மலரைக் கண்ணீர்த் துளிக்கும் உவமையாக்குதலும் ஒன்று,  கொம்பு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆகுபெயராய்ப் பூவைக் குறித்தது, இனி முல்லைக் கொடியின் சிறுவீயிற்றாஅய் என மாறி உரைப்பினுமாம்.

Meanings:  தாமே – he himself, he alone (ஏ – பிரிநிலை இடைச்சொல், a particle signifying exclusion), செல்ப ஆயின் – if he will leave us and go, கானத்துப் புலம் – forest land, தேர் – choosing, searching, யானைக் கோட்டிடை – between the elephant’s tusks, ஒழிந்த – ruined and caught, சிறு வீ முல்லை கொம்பின் – like the branches of small jasmine vines/flowers, Jasminum sambac (கொம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தாஅய் – spreading (இசைநிறை அளபெடை), இதழ் அழிந்து ஊறும் – ruining the eyelids and oozing, கண்பனி – tears, மதர் எழில் – proud beauty, luscious beauty, great beauty, பூண் அக – on the jewel wearing chest, வன முலை நனைத்தலும் – big breasts getting wet, காணார் கொல்லோ – does he not see (கொல்லோ – இரங்கற் பொருளில் வந்தது), மாண் இழை – O friend wearing esteemed jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நமர் – our man, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 349, சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந்துறைவன் தொடுத்து, நம் நலம்
கொள்வாம் என்றி தோழி, கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய  5
கொடுத்து அவை தா என் சொல்லினும்,
இன்னாதோ  நம் இன் உயிர் இழப்பே?

Kurunthokai 349, Sāthanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My friend!  You tell me that
we should control the lord
of the cool, beautiful shores,
……….where a fish-eating stork
……….with curved legs rests on
……….a sand dune after trampling
……….and crushing the newly
……….opened beautiful flowers
……….of adumpu vines,
and redeem my womanly virtue!

Let us say we can do it.
Is losing our sweet lives more
painful, than when those who gave
help to others in need demand the
return of what they gave fearing
their own poverty?  It is not!

Notes:  நெய்தலுள் மருதம்.  The heroine who was aware that her husband who returned from his concubine was nearby, said this to her friend.  பரத்தை மாட்டுப் பிரிந்து வந்த தலைவன் கேட்கும் அண்மையானாகத் தோழிக்குத் தலைவி கூறியது.  நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு.  இடுக்கண் அஞ்சி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடுக்கண் அஞ்சி என்பதனை இரந்தோர் வேண்டிய கொடுத்து இடுக்கண் அஞ்சி அவை தா என் சொல் எனப் பிரித்துக் கூட்டி இடுக்கண் அஞ்சுதலைக் கொடுத்தோர்க்கு ஏற்றுக. மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் (தொல்காப்பியம், கற்பியல் 9).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24),

Meanings:  அடும்பு – அடும்புக் கொடி, Ipomoea pes-caprae vine, அவிழ் அணி மலர் – opening beautiful flowers, சிதைஇய – crushing (செய்யுளிசை அளபெடை), மீன் அருந்தும் தடந்தாள் நாரை – fish-eating white stork with big feet, Ciconia ciconia, இருக்கும் எக்கர் – resting on a sand dune, தண்ணந்துறைவன் தொடுத்து – control the lord of the cool beautiful shores (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), நம் நலம் கொள்வாம் – let us get back your lost beauty/virtue, என்றி தோழி – you say so my friend (என்றி – முன்னிலை ஒருமை), கொள்வாம் – let’s accept it as that, இடுக்கண் அஞ்சி – afraid of their own poverty, இரந்தோர் வேண்டிய கொடுத்து – giving to those who desire and request, ‘அவை தா’ என் சொல்லினும் – more than the words ‘return what were given to you’, இன்னாதோ – is it more painful, நம் இன் உயிர் – our sweet lives, இழப்பு – losing, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 350, ஆலத்தூர் கிழார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, முன் நின்று
‘பனிக் கடுங்குரையம், செல்லாதீம்’ எனச்
சொல்லினம் ஆயின் செல்வர் கொல்லோ, ஆற்று
அயல் இருந்த இருந்தோட்டு அஞ்சிறை
நெடுங்கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ  5
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே.

Kurunthokai 350, Ālathūr Kizhār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Listen! If we had stood in front of
him and said, “We are suffering in
the cold weather.  Please do not go,”
would he have left with the desire
to earn wealth that does not endure,
crossing wilderness with mountains,
where, by the wayside, large flocks of
kananthul birds with long legs and
beautiful wings alert armed groups
of people that bandits are coming,
making them move to safety?

Notes:  தலைவன் பிரிந்தபின் வேறுபட்ட தலைவியை நோக்கித் தோழி சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையுடைக் கானம் என்றது, குறிஞ்சி திரிந்த பாலை என்பதுபட நின்றது.  பாலை நிலத்தே வழிப்போவாரும் ஆறலைக் கள்வர்க்கு அஞ்சி படையோடு போதலால் வம்பலர் படை என்றாள்.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கணந்துள் ஆள் அறிவுறீஇ வம்பலர் படை பெயர்க்கும் என்றதும், யாம் நம் ஆற்றாமை அறிவுறீஇ அவர் பிரிவை தடுக்கற்பாலேம்; அஃது செய்திலேம் என்று உள்ளுறையாகுமாறும் உய்த்துணர்க.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, முன் நின்று – standing in front of him, பனிக் கடுங்குரையம் – we are suffering greatly from the cold (கடுங்குரையம் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), செல்லாதீம் – please do not go (செல்லாதீம் – முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று), எனச் சொல்லினம் ஆயின் – if we had told him so, செல்வர் கொல் – would he have gone (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, ஆற்று அயல் இருந்த – ones near the path, இருந்தோட்டு – with big flocks, அம் சிறை – beautiful wings, நெடுங்கால் கணந்துள் – red wattled lapwing with tall legs, ஆள் அறிவுறீஇ – announcing that the bandits are coming (அறிவுறீஇ – சொல்லிசை அளபெடை), ஆறு செல் வம்பலர் – those who travel on the paths, படை தலைபெயர்க்கும் – make the armed groups move from the place, மலையுடைக் கானம் நீந்தி – passing the forest with mountains, நிலையாப் பொருட்பிணி – desire for unstable wealth, பிரிந்திசினோர் – the man who went (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 351, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வளையோய்! உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணன் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே, விரி அலர்ப்  5
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ்வழுங்கல் ஊரே?

Kurunthokai 351, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
My friend wearing bangles!
I am happy for you!  Our family
has agreed to give you in
marriage to the lord of the shores,
where loud waves break with
thundering sounds, and wash away
the lines on wet sand where water
flows, scored by the sharp claws of
crabs that live in holes and scuttle
rapidly with bent legs.

Will this loud town, with its sweet,
smiling women, lush punnai trees
with flowers, and streets reeking
of fish, still gossip?

Notes:  The hero has come with a marriage proposal.  The heroine is worried about whether her parents will agree to his request.  Her friend lets her know that her family has agreed.  தலைவன் வரைவொடு வந்தவழி “வரைவுக்கு நமர் நேரார் கொல்லோ?” என்று அஞ்சிய தலைவிக்குத் தோழி வரைவு மலிந்தது.  தமிழண்ணல் உரை – நண்டு கீறிய கோடு போன்ற சிறுநெறியை அலை வீசி கணப் பொழுதில் அழித்தது போல, மணம் கைகூடியதும் ஊரார் கூறிய அலர் ஒழியும் என்பது உள்ளுறை.  இரா. இராகவையங்கார் உரை – புன்னை மலரின் மணமும் புலாலின் நாற்றமும் ஒருங்கு வீசும் சேரி என்றது தலைவன் வரைவுக்கு உடன்படும் தமரும் வறிதே அலர் கூறும் ஆயமும் உடையதென்று நினைவிற்று.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  வளையோய் – O friend wearing bangles, உவந்திசின் – I am happy knowing that (இசின் – தன்மை அசை, an expletive of the first person), விரைவு உறு – fast moving (உறு – உடைய), கொடும் தாள் – curved legs, அளை வாழ் அலவன் – hole-dwelling crabs, கூர் உகிர் – sharp claws, வரித்த – scratched, scribbled, drew, ஈர் மணல் மலிர் நெறி சிதைய – for the wet sand paths with water to be ruined, இழுமென – with loud noises (ஒலிக்குறிப்பு), உரும் இசை – thunder sounds, புணரி உடைதரும் – waves break, துறைவற்கு – to the lord of the seashore, உரிமை செப்பினர் நமர் – our relatives agreed to marriage, ஏ – அசைநிலை, an expletive, விரி அலர் – open blossoms, புன்னை ஓங்கிய – where laurel trees have grown tall, are lush, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, புலாலம் சேரி – village/street/settlement with flesh stink (அம் – சாரியை), இன் நகை ஆயத்தாரோடு – with sweet smiling friends, இன்னும் அற்றோ – will it still do it, is it of that nature (to gossip loudly), இ – this, அழுங்கல் – uproarious, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 352, கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்து அன்ன
கொடு மென் சிறைய கூருர் உகிர்ப் பறவை,
அகல் இலைப் பலவின் சாரல் முன்னிப்
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன்மாலை உண்மை  5
அறிவேன் தோழி, அவர்க் காணா ஊங்கே.

Kurunthokai 352, Kadiyalūr Uruthirankannanār, Pālai Thinai – What the heroine said to her friend
O friend!  I know the truth that they
are painful, the evenings when I
don’t see him, when bats with curved
wings that look like the backsides of
the leaves of white waterlilies that
grow in deep water,
leave the old trees on which they stay
during the day, letting them suffer in
loneliness, to eat the fruits of the
wide-leaved jackfruit trees growing on
the mountain slopes.

Notes:  The heroine says this to her friend when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் தோழியிடம் தலைவி கூறியது.  அகநானூறு 244 – பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முதுமரம் புலம்பப் போகி.  சிறு புன்மாலை (5) – உ. வே. சாமிநாதையர் உரை – சிறிய புல்லிய மாலைக்காலம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறிய புல்லிய மாலைக்காலம்.  முல்லைப்பாட்டு 6 – சிறு புன்மாலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறுபொழுதாகிய மாலை, நச்சினார்க்கினியர் உரை – சிறுபொழுதாகிய வருத்தஞ்செய்கின்ற மாலைக் காலம்,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – சிறுபொழுதாகிய பிரிந்தோர்க்கு வருத்தஞ்செய்கின்ற மாலை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  நெடு நீர் – deep water, ஆம்பல் – white waterlily, அடை – leaves, புறத்து அன்ன – like the back sides (புறத்து – புறம், அத்து சாரியை), கொடு – curved, மென் சிறைய – with soft/delicate wings, கூர் – sharp, உகிர் – clawed, பறவை – bats, அகல் இலை – wide leaves, பலவின் – of jackfruit trees, சாரல் – mountain slopes, முன்னி – thinking, considering, பகல் – daytime, உறை – residing, முது மரம் – old trees, புலம்ப – to be lonely, to be sad, போகும் – they go, சிறு புன்மாலை – painful evening for those who are separated, உண்மை – the truth, the reality, அறிவேன் தோழி – I understand my friend, அவர்க் காணா ஊங்கு – when I do not see him

குறுந்தொகை 353, உறையூர் முதுகூற்றனார், குறிஞ்சித் திணை  – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக்
கோடு உயர் நெடு வரைக் கவாஅன் பகலே
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே,
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு இரவில்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல் இல்  5
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

Kurunthokai 353, Uraiyūr Muthukootranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
It’s sweet during the day to play in
the sweet-sounding waterfalls of the
mountain slopes with soaring peaks,
holding the chest of the lord
of the loud mountains as your float.

It is painful at night to sleep with
mother hugging your back with braids,
in your fine home where a lamp with
red flame is lit using a white cotton
wick, as you lie in bed unable to close
your eyelids.

Notes:  The heroine’s friend who is aware that the hero is nearby , utters this, refusing day trysts and night trysts.  She is requesting marriage.  பகற்குறியையும் இரவுக்குறியையும் மறுத்து வரைவு கடாயது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  ஆர்கலி வெற்பன் – the lord of the uproarious mountains, மார்பு – chest, புணையாக – as a float, கோடு – peaks, உயர் – lofty, நெடு வரை – tall mountains, கவாஅன் – adjoining mountains, mountain slopes (இசை நிறை அளபெடை), பகல் – daytime, ஏ – அசைநிலை, an expletive, பாடு இன் அருவி – sweet sounding waterfalls, ஆடுதல் – to play, இனிது – is sweet, ஏ – அசைநிலை, an expletive, நிரை- row, இதழ் பொருந்தாக் கண்ணோடு – with eyes with lids not closing, இரவில் – at night, பஞ்சி வெண்திரி – white wick made from cotton, செஞ்சுடர் – red flame, நல் இல் – fine home, பின்னு – braids, வீழ் – hanging, சிறுபுறம் – small back, nape, தழீஇ – hugging (சொல்லிசை அளபெடை), அன்னை முயங்க – mother embracing, துயில் – sleep, இன்னாது – it is painful, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 354, கயத்தூர் கிழார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்,
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்,
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்துக் கொடுமோ,
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்  5
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே.

Kurunthokai 354, Kayathūr Kizhār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
If one plays too long in water,
one’s eyes will become red;
if one eats too much honey,
it will taste sour.

If you want to leave her, please
bring her back to our father’s town,
filled with beautiful, cool ponds,
and hand her over at our house on the
street where fierce snakes roam, where
you once dispelled her great distress.

Notes:  The heroine’s friend refuses the hero entry into the house when he came back from his concubine.  பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைவனுக்கு வாயில் மறுத்தது.

Meanings:  நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – one’s eyes will become red if one plays in the water for too long, ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் – even honey will becomes sour if one eats too much of it, தணந்தனை ஆயின் – if you want to leave her, எம் இல் உய்த்துக் கொடுமோ – bring her back to our house (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), அம் தண் பொய்கை – beautiful cool ponds, எந்தை – our father, எம் ஊர் – our town, கடும் பாம்பு வழங்கும் தெருவில் – on a street where fierce/fast/poisonous snakes roam, நடுங்கு அஞர் – trembling sorrow, எவ்வம் – sorrow, களைந்த – removed, எம் – our, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 355, கபிலர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
பெயல் கண் மறைத்தலின் விசும்பு காணலையே,
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலையே,
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பால் நாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப?  5
வேங்கை கமழும் என் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ?  நோகோ யானே.

Kurunthokai 355, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Lord of the lofty mountains!
How did you get here
in the middle of the night,
when the rain hides everything
and the sky cannot be seen,
water flows and spreads all over,
and the earth cannot be seen,
the sun has gone down,
and there is great darkness,
and everyone is fast asleep?

And how did you know our village,
filled with scents of vēngai blossoms?
It grieves me to see you!

Notes:  The heroine’s friend who worries about the difficulties the hero has to endure to come for the night trysts says this to him.  இரவுக்குறி வந்த தலைவனிடம் நொந்து கூறியது.  தமிழண்ணல் உரை – கடுமழை பெய்யும் நடு இரவு, படம் பிடித்தது போல் கூறப்பட்டுள்ளது.  வேங்கை மணம் கமழும் என்றதால், அந்த மணத்தின் வழி வந்தனையோ என்ற குறிப்பும் உள்ளது.

Meanings:  பெயல் கண் மறைத்தலின் – since rain hides it from sight, since clouds hide it from sight, விசும்பு – sky, காணலை – unable to see, ஏ – அசைநிலை, an expletive, நீர் பரந்து ஒழுகலின் – since flowing water has spread, நிலம் காணலை – it is unable to see the land, ஏ – அசைநிலை, an expletive, எல்லை சேறலின் – since the sun has gone down, இருள் பெரிது பட்டன்று – pitch darkness has happened, பல்லோர் துஞ்சும் – when many are sleeping, பால் நாள் கங்குல் – at midnight, யாங்கு வந்தனை – how did you come, ஓ – அசைநிலை, an expletive,  ஓங்கல் வெற்ப – O lord of the tall mountains, வேங்கை – kino flowers, Indian kino Tree, Pterocarpus marsupium, கமழும் – fragrant, என் சிறுகுடி – our small settlement, our small village, யாங்கு அறிந்தனை – how did you know, ஓ – அசைநிலை, an expletive, நோகு – I am hurting, செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 356, கயமனார், பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள் கொல் தானே, ஏந்திய  5
செம்பொன் புனைகலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந்தொடித் தளிர் அன்னோளே?

Kurunthokai 356, Kayamanār, Pālai Thinai – What the foster mother said about the heroine
She refused to eat puffed rice mixed
with milk offered in a red gold bowl
saying that it was too much,
the young woman like a tender sprout,
who wears thick, small bangles.

How did she become so strong to walk
rapidly on the harsh, waterless,
shadeless path, protected by her young
man wearing warrior anklets, and to
drink with slurping sounds, the hot,
muddy water near the dried-up springs?

Notes:  The foster mother says this after the heroine eloped with the hero.  மகட் போக்கிய செவிலித்தாய் உரைத்தது.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  நிழல் ஆன்று அவிந்த – without any shade, shade reduced and lost (ஆன்று – அடங்கி, அவிந்த – அற்றுப்போன, இல்லாது ஆகிய), நீர் இல் – waterless, ஆர் இடை – difficult path, கழலோன் காப்ப – with the protection of the man with warrior anklets, கடுகுபு போகி – went rapidly, அறு சுனை மருங்கின் – near the dried springs, near the dried ponds, மறுகுபு வெந்த – dried and hot, வெ வெ – very hot (அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), கலுழி – muddied water, தவ்வெனக் குடிக்கிய – drinking with sounds (தவ்வென – ஒலிக்குறிப்பு), யாங்கு வல்லுநள் – how did she become so strong to do that, கொல் – அசைநிலை, an expletive, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, ஏந்திய – holding, lifting, செம்பொன் புனை கலத்து – in a bowl made with red gold (புனைகலம் – வினைத்தொகை), அம் – fine, பொரிக்கலந்த பாலும் – puffed rice mixed with milk, பல என – that it is too much, உண்ணாள் – she did not eat, கோல் அமை – thickly made, well rounded குறுந்தொடி – small bangles, தளிர் அன்னோள் – the young woman who is like a tender leaf/sprout, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 357, கபிலர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள்
மெல்லிய ஆகலின், மேவரத் திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னிய
ஏனல் அம் சிறு தினை காக்கும் சேணோன்  5
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை,
மீன்படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

Kurunthokai 357, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Saddened by hateful anger,
your sleepless, kohl-lined eyes are
filled with tears that drop, and your
pretty, bamboo-like desirable arms
have grown thin.

They used to be admired as rounded
and fine before he united with you,
the lord of the sky-touching mountains,
where a tall, fine elephant moves away
in fear, on seeing torches lit by
a guard protecting a field with beautiful,
small-eared millet, and is startled by
the sudden brilliance of a shooting star.

Notes:  The heroine’s friend who is aware that the hero is nearby, utters this since the hero has been delaying marriage.  She is requesting marriage.  வரையாது ஒழுகும் தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி தலைவியிடம் கூறியது.  கால் போழ்ந்து (2) – உ. வே. சாமிநாதையர் உரை – குறுக்கே சென்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கால் பிளக்கப்பட்டு, கால் கொண்டு ஒழுகுதல்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞெகிழிக்கு அஞ்சிய யானை மீன்படு சுடரை வெரூஉம் என்றது களவின்கண்ணே நந்தமர்க்கு அஞ்சிய தலைவன் அவர்பால் விரைவுடன் சேறற்கும் அஞ்சி வரைவு நீட்டிப்பான் ஆயினன் என்னும் உள்ளுறைத் தோற்றி நின்றது உணர்க.  மணவா – பொருந்துவதற்கு (கூடுவதற்கு, கலத்தற்கு) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  அகநானூறு 290 – தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும், நற்றிணை 31 – உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே, குறுந்தொகை 357 – வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

Meanings:  முனி படர் – hateful anger, உழந்த – saddened, பாடு இல் உண்கண் – sleepless eyes with kohl, பனி – tears, கால் போழ்ந்து – went across, பணை எழில் ஞெகிழ் தோள் – bamboo-like  pretty thin arms (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), மெல்லிய ஆகலின் – since they have become thin, மேவர – desirable, திரண்டு – rounded, thick, நல்ல என்னும் சொல்லை – the words that they were good, மன்னிய – stable, achieved, ஏனல் – millet, millet field, செந்தினை, red/black millet, Panicum indicum or Setaria italica, அம் சிறு தினை காக்கும் – protects beautiful tiny millet, Italian millet, Setaria italicum, சேணோன் – mountain dweller who is on a tall platform, a guard who is on a tall platform, ஞெகிழியின் – because of the flame from the torches, பெயர்ந்த – moved away, நெடு நல் யானை – a tall fine elephant, மீன்படு சுடர் ஒளி – bright light from a falling star, bright light from a shooting star, வெரூஉம் – it fears (இன்னிசை அளபெடை), வான் தோய் வெற்பன் – the lord of the sky-touching mountains, மணவா ஊங்கு – before he united with you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 358, கொற்றனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வீங்கு இழை நெகிழ விம்மி, ஈங்கே
எறி கண் பேதுறல் ஆய் கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க,
“வருவேம்” என்ற பருவம் உதுக்காண்,
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்  5
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன முல்லை வெண்முகையே.

Kurunthokai 358, Kotranār, Mullai Thinai – What the heroine’s friend said to her
Your tight bangles have become
loose, your eyes are shedding
tears, and you are confused.
You are drawing lines on the
wall, gripped with sorrow,
counting the days for his arrival.

He will come back to banish your
pain.  Look there!
The white buds on the garlands
worn by the cattle herders, who
herd many cows at this cold
evening time that is painful to
those separated, tell us the season.

Notes:  The heroine’s friend consoles her when the hero is away.  தலைவன் பிரிவிடைத் தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  சுவரில் கோடிட்டு நாட்கணக்கு பார்த்தல் –  குறுந்தொகை 358 – ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும், அகநானூறு 61 – நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து, அகநானூறு 289 – நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி, பதிற்றுப்பத்து 68 – ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த.

Meanings:  வீங்கு இழை நெகிழ – tight jewels becoming loose, விம்மி – crying,  ஈங்கே – here, எறி கண் – eyes that drop tears, பேதுறல் – getting confused, ஆய் கோடு இட்டு – drawing lines to analyze, drawing lines to count,  சுவர்வாய் பற்றும் – holding on to the wall, நின் படர் – your sorrow, சேண் நீங்க – to go far away, வருவேம் என்ற பருவம் – the season he said that he will come back, உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), தனியோர் இரங்கும் – when those who are alone are sad, பனி கூர் மாலை – cold evenings, பல் ஆன் கோவலர் – the cattle herders with many cows, கண்ணிச் சொல்லுப அன்ன – like their garlands stating, like their garlands indicating, முல்லை வெண்முகை – the white jasmine buds, Jasminum sambac, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 359, பேயனார், மருதத் திணை – தோழி பாணரிடம் சொன்னது
கண்டிசின் பாண, பண்பு உடைத்து அம்ம,
மாலை விரிந்த பசு வெண்ணிலவின்
குறுங்கால் கட்டில் நறும் பூஞ்சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ
புதல்வற் தழீஇயினன், விறலவன்  5
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.

Kurunthokai 359, Pēyanār, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger bard
Look at this, O bard!
This is a beautiful sight!

When the cool white moon
has spread its light on the
short-legged cot covered with
fragrant flowers, our victorious
man embraces his son with love,
sighs like a sleeping elephant,
and the boy’s mother comes up
from behind and puts her arms
around her husband.

Notes:  The heroine’s friend says this to the messenger bard when the hero returned home from his concubine and is happy with his son and wife who accepts him.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் வேண்டிப் பெறாது தானே புக்குக் கூடியது கண்டு தோழி உரைத்தது.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  ஐங்குறுநூறு 409 – புதல்வன் கவைஇயினன் தந்தை, மென் மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள், இனிது மன்ற அவர் கிடக்கை, நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே.

Meanings:  கண்டிசின் பாண – look at this bard (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), பண்பு உடைத்து – this is good, it is beautiful, அம்ம – வியப்புக் குறிப்பு, an exclamation of surprise, மாலை விரிந்த – spread in the evening, பசு வெண் நிலவின் – under the cool white moon, under the young white moon, குறுங்கால் கட்டில் – a cot with short legs, நறும் பூஞ்சேக்கை – fragrant flower bed, fragrant beautiful bed, பள்ளி யானையின் உயிர்த்தனன் – he sighed like a sleeping elephant (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நசைஇ – with desire (சொல்லிசை அளபெடை), புதல்வற் தழீஇயினன் – he hugged his son (தழீஇயினன் – சொல்லிசை அளபெடை), விறலவன் –  the victorious man, the handsome man, புதல்வன் தாய் – the boy’s mother, அவன் புறம் – his back side, கவைஇயினள் – she embraced, she hugged, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 360, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல், அன்னை காணிய
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்க தில்ல தோழி, சாரல்
பிடிக் கை அன்ன பெருங்குரல் ஏனல் 5
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.

Kurunthokai 360, Mathurai Eelathu Poothanthevanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
The diviner who thinks
that I’m afflicted by Murukan does
not have a cure for my illness.
I want mother to believe that I am
not sick.  My decision might bring
great pain.

I do not want him to come and see
me during the nights, my lover from
the bright mountains,
where clusters of millet spears grow
as big as trunks of female elephants,
and young women in the mountains
chase parrots that eat their grain,
using their hand-held rattles,
creating reverberating anklet sounds
in the mountain groves.

Notes:  The heroine who is aware that the hero is nearby, says this to her friend who worries about the veriyāttam ritual.  வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு அன்னை என்றது செவிலித்தாயை.  தலைவியுற்ற நோய்க்கு வெறியாடல் மருந்தாம் என்று தனது மடமையாலே கருதிய வேலன் என்றவாறு.  கொடிச்சி கைக்குளிரினின்றும் எழும் ஒலி சிலம்பினின்று எழும் ஒலி போலத் தோன்றும் நாடன் என்றது, தனது மார்பு தர வந்த நோய் தெய்வம் தர வந்தது என பிறர் கருதுவதற்குக் காரணமான தலைவன் என்னும் உள்ளுறை தோற்றிற்று. கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  பிடிக் கை அன்ன பெருங்குரல் ஏனல் – மலைபடுகடாம் 107-108 – பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப கொய் பதம் உற்றன குலவுக் குரல் ஏனல்.   சிலம்பின் சிலம்பும் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – சிலம்பைப்போல ஒலிக்கின்ற,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பக்கமலைகளிலே எதிரொலி செய்யும்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

Meanings:  வெறி என உணர்ந்த வேலன் – the vēlan thinks that this is Murukan’s affliction, நோய் மருந்து – medicine for my illness, அறியான் ஆகுதல் – since he does not know, அன்னை காணிய – for mother to see, அரும் படர் எவ்வம் – great pain, இன்று நாம் உழப்பினும் – even if I struggle with it today, வாரற்க – may he not come, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, தோழி – my friend, சாரல் – mountain slopes, பிடிக் கை அன்ன – like a female elephants trunk, பெருங்குரல் – huge clusters, ஏனல் – millet, செந்தினை, red/black millet, Panicum indicum or Setaria italica, உண் கிளி கடியும் – chasing eating parrots, கொடிச்சி – young woman who lives in the mountain, கைக் குளிர் – hand-held rattle (parrot chasing device), சிலம்பின் சிலம்பும் சோலை – groves with sounds like those of anklets (சிலம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), mountain groves with echoing sounds, இலங்கு மலை நாடன் – the lord of the flourishing mountain, இரவினான் – during the nights, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 361, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால், அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழு முதல்
மெல் இலை குழைய முயங்கலும்  5
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே.

Kurunthokai 361, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Listen!  Higher world is not
important to my mother,
who does not stop me
from hugging and planting
the glory lily plants with
thick stems and delicate
leaves that come down the
fragrant streams of his
mountains in the mornings,
after the heavy evening rains.

Notes:  The marriage has been arranged.  The heroine says this to her friend who appreciated her patience during the love phase.  வரைவு மலிந்தவழித் தோழி ‘நன்கு ஆற்றினாய்’ என்றாட்குத் தலைவி சொன்னது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, may you live long, தோழி – my friend, அன்னைக்கு – to my mother, உயர்நிலை உலகமும் சிறிது ஆல் – the higher world appears to be small (ஆல் – அசைநிலை), அவர் மலை – his mountain (அவர் – நெஞ்சறி சுட்டு), மாலைப் பெய்த – the evening rain, மணம் கமழ் – fragrance filled, உந்தியொடு – with the streams, காலை வந்த காந்தள் – the glory lilies that came in the morning, Gloriosa superba, முழு முதல் – thick stems, மெல் இலை – tender leaves, குழைய – to get crushed, முயங்கலும் – hugging, இல் உய்த்து நடுதலும் – bringing and planting them in our yard, கடியாதோள் – she does not prevent me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 362, வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார், குறிஞ்சித் திணை – தோழி வேலனிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படியாக
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்,
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று, இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய  5
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?

Kurunthokai 362, Vēmpatrūr Kannan Koothanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the Murukan priest, as the foster mother listened
O wise diviner!
I have a question for you.
Please control your temper
before answering!

If you offer boiled rice and
many other things along with
a killed, small young goat,
rub blessings on my friend’s
fragrant forehead, and pray
and give offerings to Murukan,

will the chest of her lover from
the sky-touching, huge mountain,
adorned with a bright flower
garland, that caused her affliction,
eat these offerings?

Notes:  The heroine’s friend lets the foster mother know about the love affair of the hero and heroine.  She requests marriage.  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் (தொல்காப்பியம் பொருளியல் 12).  இங்கு உசாவுதல் (கேட்டல்) பொருந்தும்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தலைவி நோய்க்குக் காரணம் தலைவனேயாம். தெய்வமன்று என்பதைச் செவிலிக்குக் குறிப்பால் உணர்த்தப்பட்டமை உணர்க.  உ. வே. சாமிநாதையர் உரை – சிறு மறி என்றது இரங்கத்தக்க இளமையுடையது என்னும் நினைவிற்று.  இரா. இராகவையங்கார் உரை – இதனைப் பேராசிரியர் தலைவி கூற்றாகவே கொண்டார் தனது தொல்காப்பிய உரையில் (தொல்காப்பியம், செய்யுளியல் 197).   மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  முருகு அயர்ந்து வந்த – one who worships Murukan, முதுவாய் வேல – O priest of wisdom, சினவல் ஓம்புமதி – please control your anger (மதி – முன்னிலையசை, an expletive of thd the second person), வினவுவது உடையேன் – I am going to ask you , பல் வேறு உருவில் – in many forms, சில்அவிழ் மடையொடு – some boiled rice with offerings, சிறு மறி கொன்று – killing a small young goat, இவள் நறுநுதல் நீவி – rubbing on her fragrant forehead, வணங்கினை கொடுத்தி ஆயின் – if you pray and offer (to Murukan), அணங்கிய – caused distress, விண் தோய் – sky touching, மா மலைச் சிலம்பன் – the man from the huge mountains, lord of the huge mountains, ஒண் தார் – glowing garlands, அகலமும் – chest, உண்ணுமோ – will it eat, பலி – offerings, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 363, செல்லூர்க் கொற்றனார், பாலைத் திணை – தோழி சொன்னது
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செங்கால் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி வெய்துற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்,  5
இனிதோ பெரும, இன் துணைப் பிரிந்தே?

Kurunthokai 363, Selloor Kotranār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Lord, will it be sweet to separate
from your lovely companion, and
go into the painful, harsh wasteland
where a noble, fine wild marai stag
with a flower strand on his horns,
takes shelter in the dappled shade
of an ukāy tree with parched trunk,
and sighs as it eyes a gentle-eyed, doe
grazing on long spears of arukam grass?

Notes:  The heroine’s friend says this to the hero who informed her of his trip.  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனிடம் கூறியது.  கண்ணி (1) உ. வே. சாமிநாதையர் உரை – ஒரு வகை மாலை, கண்ணி மருப்பு – மாலையை அணிந்த மருப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ஏற்றின் வளைந்த கொம்பிற்கு உவமை.  குறவர்கள் விலங்குபடுக்கும் ஒருவகைக் கருவி.  மாலை சூட்டிவிடப்பட்ட நல்ல காளை. எனினுமாம்.  மலை எருது என்பாருமுளர்.  மரை (3) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  கண்ணி மருப்பின் – with a flower strand on its horns, அண்ணல் நல் ஏறு – noble, fine stag, செங்கால் பதவின் – of arukam grass with red stems, Cynodon grass, வார் குரல் – long spears, கறிக்கும் – it chews, மடக் கண் மரையா நோக்கி – looking at the innocent-eyed wild female marai deer, வெய்துற்று – it sighs, புல் அரை உகாஅய் – ukāy tree with parched trunk, ukāy tree with dull trunk, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – இசை நிறை அளபெடை), வரி நிழல் வதியும் – it rests in its striped shade, இன்னா அருஞ்சுரம் – painful harsh path, இறத்தல் – to pass, இனிதோ பெரும – is it sweet O lord, இன் துணை – sweet partner, பிரிந்து – separated, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 364, ஔவையார், மருதத் திணை – இற்பரத்தை சொன்னது
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி,
என் புறங்கூறும் என்ப, தெற்றென
வணங்கு இறைப் பணைத்தோள் எல் வளை மகளிர்  5
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர மற்று அதன் கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

Kurunthokai 364, Avvaiyār, Marutham Thinai – What one concubine said about another concubine
They say that she talks behind my
back, the woman with thick, shiny
gold bracelets, worthy of the love
of the lord of the land where otters
with lines like those on tangled
rattan vines, eat vālai fish for their
daily food.

The day to perform thunangai dances
has come, and women with curved
forearms and bamboo-like arms, who
wear bright bangles, will dance.

The warriors will be there after the fight,
their eyes warring, to choose a partner to
embrace.

Notes:  One concubine of the hero complains about another concubine.  வேறொரு பரத்தை தன்னை புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தையின் பாங்காயினர் கேட்பக் கூறியது.  குறுந்தொகை 91 – அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி.  அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பிணக்கையுடைய கொடிப் பிரம்புகளைப் போன்ற கோடுகள் பொருந்திய புறத்தையுடைய நீர் நாய், பிரம்பின் தூற்றிலுள்ள நீர்நாய் என்றலும் பொருந்தும்.  இரா. இராகவையங்கார் உரை – கொடிப் பிரம்புகளின் வரியுள்ள புறத்துக் கிடைக்கும் நீர்நாய், வரிப்புறம் பிரம்பினுடையது.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  அரில் பவர்ப் பிரம்பின் – like tangled rattan vines, in the tangled rattan, Calamus rotang (பிரம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வரிப்புற நீர்நாய் – otters with lines on their backs, otters with lines on their sides, வாளை – vālai fish, scabbard fish, Trichiurus haumela, நாளிரை – daily food, பெறூஉம் – it gets, it eats (பெறூஉம் – இன்னிசை அளபெடை), ஊரன் – man from such town, பொற் கோல் – gold and thick, gold and rounded, அவிர் தொடி – shining bracelets, தற்கெழு தகுவி – the worthy one, என் புறங்கூறும் – talks with disrespect about me, talks behind my back, என்ப – they say, தெற்றென – clearly, வணங்கு இறை – curved forearms, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, எல் வளை மகளிர் – women with bright bangles (எல் – ஒளி), துணங்கை நாளும் வந்தன – the day to dance thunangai has come, அவ்வரை – at that time, கண் பொர – with warring eyes, மற்று – அசைநிலை, an expletive, அதன் கண் – from that, அவர் – they, மணம் கொளற்கு – to embrace, to unite, இவரும் மள்ளர் – the warriors will come, போர் – fight, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 365, மதுரை நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே,
துன் அரு நெடு வரைத் ததும்பிய அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்  5
பெருங்கல் நாட, நீ நயந்தோள் கண்ணே.

Kurunthokai 365, Mathurai Nalvelliyār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the tall mountains
where waterfalls tumble down
from unreachable heights,
rushing past nearby jackfruit trees,
with the roaring sounds of drums!

The eyes of the young woman you
love are filled with tears, and they
do not close even for a day.  Her bright
bangles made from cutting conch shells
have become loose on her arms.

Notes:  The heroine’s friend says this to the hero who asks her whether the heroine will be patient during separation.  யான் வரையும் அளவும் தலைவி ஆற்றுவாளோ என்று கேட்ட தலைவனிடம் ‘இவள் ஆற்றாள்’ என்று தோழி கூறியது.

Meanings:  கோடு – conch shells, ஈர் – cutting, இலங்கு – bright, splendid, வளை நெகிழ – bangles have become loose, நாளும் – every day, பாடு இல – without sleep (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கலிழ்ந்து – muddied, பனி ஆனா – are not without tears, are with tears, ஏ – அசைநிலை, an expletive, துன் அரு – difficult to get close, நெடு வரை – tall mountains, ததும்பிய அருவி – the overflowing waterfalls, the roaring waterfalls, தண்ணென் – cool-natured,  முழவின் இமிழ் – like loud drums (முழவின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இசை காட்டும் – reveals music, creates music, மருங்கில் கொண்ட பலவின் – with jackfruit trees that are nearby, பெருங்கல் நாட – O man from the lofty mountains, நீ நயந்தோள் கண் – the eyes of the young woman you loved, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 366, பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை  – தோழி செவிலியிடம் சொன்னது
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர் வயின்
சால்பு அளந்து அறிவதற்கு யாம் யாரோ?
வேறு யான் கூறவும் அமையாள், அதன்தலைப்
பைங்கண் மாச்சுனைப் பல் பிணி அவிழ்த்த
வள் இதழ் நீலம் நோக்கி உள்ளகை  5
பழுத கண்ணளாகிப்
பழுதன்று அம்ம இவ் ஆய் இழை துணிவே.

Kurunthokai 366, Pērisathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the foster mother
My friend who is adorned
with beautiful jewels is not
satisfied with what I said.

She looks at the lovely waterlily
flowers with large petals, opened
from tight buds on the green patches
of dark springs, and keeps her pain to
herself.  Her eyes are wet with tears.

Who are we to measure his worth?
All this is the design of destiny.

Notes:  The heroine’s friend lets the foster mother know about the love affair of the hero and heroine.  She requests marriage.  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  நீலம் நோக்கி (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நீலம் நோக்கி அழுதனள் என்றது அத்தகையதொரு நீலப்பூவைத் தனக்குத் தந்த தலைவனை நினைத்ததைக் குறித்தபடி.

Meanings:  பால் வரைந்து அமைத்தல் அல்லது – other than that this is destiny’s plan, அவர் வயின் – about him, சால்பு அளந்து அறிவதற்கு – to measure and know his worth/esteem, யாம் யார் – who are we, ஓ – அசைநிலை, an expletive, வேறு யான் கூறவும் அமையாள் – she is not satisfied even after what I said, அதன்தலை – and also, பைங்கண் – lush patches, மாச் சுனை – dark/large springs, பல் பிணி அவிழ்த்த – opened their few tightness (petals), வள் இதழ் நீலம் நோக்கி – looked at the blue kuvalai flowers with large petals, blue waterlilies, உள்ளகை – inside her heart, பழுத கண்ணளாகி – she becomes of crying eyes, பழுது அன்று – faultless, அம்ம – அசைநிலை, an expletive, இ – this, ஆய் இழை – young woman wearing beautiful ornaments, young woman wearing chosen jewels (அன்மொழித்தொகை), துணிவு – strength, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 367, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடியோர் நல்கார் ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண் தோழி, அவ் வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவியின்  5
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந்துறுகல் ஓங்கிய மலையே.

Kurunthokai 367, Mathurai Maruthan Ilanakanār, Marutham Thinai – What the heroine’s friend said to her
My friend!  Even if your cruel
lover does not shower graces,
since heavy rains have started,
his lofty mountain with cool
fragrant boulders, appears like
cleaned sapphire due to the
waterfalls that cascade down,
where uproarious women bathe
with desire.  Come and look at that!

This will bring back beauty to your
arms adorned with bright bangles.

Notes:  The heroine’s friend who is aware that the hero will marry the heroine soon said this to the heroine.  Or, the heroine said this to her friend who was sad that the hero had not come to marry her.  தலைவன் வரைந்துக் கொள்வான் என்ற செய்தியைத் தலைவிக்கு உணர்த்திய தோழி, தலைவி பேருவகை கொள்ளாமைப் பொருட்டுத் தோழி கூறியது.  வரைவு  நீட்டித்தவிடத்து தலைவியைத் தோழி ஆற்றுவித்தலும் ஆகும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  கொடியோர் – the cruel man, நல்கார் ஆயினும் – even if he does not shower his graces, யாழ – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person, நின் – your, தொடி – bangles, விளங்கு – bright, இறைய தோள் – curved arms, கவின் – beauty, பெறீஇயர் – for them to attain, உவக்காண் தோழி – look there O friend, அ – there, வந்திசினே – you come (சின் – முன்னிலை அசை, an expletive of the second person, ஏ – அசைநிலை, an expletive), தொய்யல் – languishing, wetting the land, மா மழை – heavy rain, தொடங்கலின் – since it has started, அவர் நாட்டு – his country, பூசல் ஆயம் – women who create noises, uproarious group of women, புகன்று – with desire (to bathe in the waterfalls), இழி அருவியின் – because of the flowing waterfalls, மண்ணுறு மணியின் – like washed sapphire (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்றும் – appearing, தண் நறுந்துறுகல் – cool fragrant boulders, ஓங்கிய மலை – lofty mountain, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 368, நக்கீரர், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே  5
நாள் இடைப்படாஅ நளி நீர் நீத்தத்து
திண் கரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.

Kurunthokai 368, Nakkeerar, Marutham Thinai – What the heroine said to her friend
O delicate friend!  O delicate
friend!  I was unable to talk
about the loss of my dark beauty
on that auspicious day.  I tolerated
my pain due to my strength.

But now, O delicate friend,
I am like a huge tree on a firm
river bank attacked by ravaging
floods that lash without a day’s
break.

I am free of blame,
and our embraces will be many
in our town,
where the young and old dwell.

Notes:  The heroine who is aware that wedding arrangements are being made says this to her friend.  வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்வதைத் தோழியால் உணர்ந்த தலைவி கூறியது.  சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே (5) – பொ. வே. சோமசுந்தரனார் – ‘சிற்றினமாக்களும் சான்றோரும்’, இரா. இராகவையங்கார் – ‘காம இன்பம் அறியாத இளைஞரும் அஃது ஒழிந்த பெரியவரும்’, உ. வே. சாமிநாதையர் – ‘சிறியோரும் பெரியோரும்’.  திண் கரை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரை நொய்தாயின் மரத்திற்கு அழிவுண்டாமாதலின் ‘திண் கரை’ என்றாள்.  இது தலைவனின் திண்ணிய நட்பைக் கருதி கூறியது என்க.  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  மெல்லியலோயே – O delicate young woman, மெல்லியலோயே – O delicate young woman, நல் நாள் – good day, நீத்த – removed, பழி தீர் மாமை – faultless dark beauty, வன்பின் – with strength, ஆற்றுதல் – tolerating, அல்லது – or else, செப்பின் – if spoken, சொல்லகிற்றாம் – I was unable to state (சொல்லுதற்கு ஆற்றல் இல்லேம்), மெல்லியலோயே – O delicate young woman, சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கு – in the town where mean and noble people live, ஏ – அசைநிலை, an expletive, நாள் இடைப்படாஅ – without a day’s break (இடைப்படாஅ – இசை நிறை அளபெடை), நளி நீர் – full waters, floods, நீத்தத்து – of the flood water, திண் கரைப் பெரு மரம் போல – like a large tree on a firm shore, தீது இல் – faultless, நிலைமை – situation, முயங்குகம் – let me embrace him, பல – many times, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 369, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி, நல்கினர் நமரே.

Kurunthokai 369, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine’s friend said to the heroine
Go with him my friend!
He has agreed to take you
through wasteland paths
where dry vākai pods
rattle like anklets with pebbles
when the westerly winds blow.

Notes:  The heroine’s friend encourages her to elope.  தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது.  இரா. இராகவையங்கார் உரை  – சிலம்பு கழி நோன்பு தலைவன் அகத்து நிகழ்வது குறித்துக் கூறினாள்.  செல்வாம் (4) – இரா. இராகவையங்கார் உரை – செல்வாம் எனத் தோழி தன்னை உளப்படுத்தித் தன்மைப் பன்மையாற் கூறினாள் என்பது தோழியும் உடன்போதல் வழக்கு இன்மையால் இயையாமை காண்க.  வாகை நெற்று ஒலித்தல்:  குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.

Meanings:  அத்த வாகை – wasteland’s vākai tree, உழிஞ்சில், Sirissa Tree, Albizia lebbeck, அமலை – loud sounds, வால் – white, நெற்று – seed pods, அரி ஆர் சிலம்பின் – like the anklets with pebbles (சிலம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அரிசி – seeds, ஆர்ப்ப – make noises, கோடை தூக்கும் – westerly winds blowing, summer winds swaying, கானம் – forest, செல்வாம் தோழி – let us go my friend, may you go friend, நல்கினர் – he has allowed graciously, நமர் – our man, your lover, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 370, வில்லகவிரலினார், மருதத் திணை – பரத்தை தலைவனைப்பற்றி கூறினது
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே, கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தியவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே.  5

Kurunthokai 370, Villakaviralinār, Marutham Thinai – What the concubine said about the hero
When I am with the man
from the town with cool
shores,
where plump, beautifully
colored white waterlily buds
are opened by bees in ponds,
we are two bodies.

When we unite, we are close
like fingers wrapped tightly
around a bow.  When he goes
away I am of one body.

Notes:  The hero’s concubine who heard that the heroine spoke ill of her, says this, aware that the heroine’s friends are nearby.  தலைவி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் பரத்தை தலைவியின் தோழியர் கேட்பக் கூறியது.  வண்டு மலரை மலரச் செய்தல் – அகநானூறு 183 – அலரி வண்டு வாய் திறக்கும், நற்றிணை 238 – வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், குறுந்தொகை 265 – காந்தள் அம் கொழு முகை  காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும், குறுந்தொகை 370 – ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும்.

Meanings:  பொய்கை – pond, ஆம்பல் – white waterlilies, அணி நிற – beautifully colored, கொழு முகை – plump buds, வண்டு வாய் திறக்கும் – bees open them, தண் துறை ஊரனொடு – with the man from the town with cool shores, இருப்பின் – stay, இரு மருங்கினம் – we are two bodies, ஏ – அசைநிலை, an expletive, கிடப்பின் – when lying with him, வில்லக விரலின் – like fingers on a bow (விரலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பொருந்தி – placed together, அவன் நல் அகம் சேரின் – when he goes away to his fine house, ஒரு மருங்கினம் – I am of one body, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 371, உறையூர் முதுகூற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கை வளை நெகிழ்தலும், மெய் பசப்பு ஊர்தலும்,
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி, அது காமமோ பெரிதே.

Kurunthokai 371, Uraiyūr Muthukootranār, Kurinji Thinai – What the heroine said to her friend
My lover from the country
where clouds touch mountains,
and seeded, wild-rice crops
are nurtured by waterfalls,
is not the one who caused my
bangles to slip down and
sickly pallor to spread on my body.

Great love caused it, my friend!

Notes:  வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.

Meanings:  கை வளை நெகிழ்தலும் – and bangles slipping down the arms, மெய் பசப்பு ஊர்தலும் – and pallor spreading, மைபடு – with clouds, சிலம்பின் – on the mountains, ஐவனம் – wild rice, Wild rice, Oryza mutica, வித்தி – seeded, planted, அருவியின் – due to the waterfalls, விளைக்கும் – (plants) growing, நாடனொடு – with the man from such country, மருவேன் – I did not get it, தோழி – my friend, அது – that, காமம் – love, ஓ – அசைநிலை, an expletive, பெரிது – is big, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 372, விற்றூற்று மூதெயினனார், நெய்தற் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பனைத் தலைக்கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய
கடு வளி தொகுத்த நெடு வெண்குப்பைக்
கணம் கொள் சிமைய அணங்கும் கானல்
ஆழிதலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை  5
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 372, Vitrūtru Mūtheyinanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
On the distressing seashore
where fierce winds blowing from the
ocean pile white sand into tall dunes
with many peaks, burying the tops
of palmyra trees with their saw-edged,
long stems with tender fronds,
rumors are spreading in our noisy town,
even before the heaps of black mud the
ocean brought out, used by women to
wash their hair, have dried out.

Notes:  இரவுக்குறி வந்து வரையாது ஒழுகிய தலைவன் கேட்கும்படி தலைவிக்கு கூறுவாளாய், தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.  ஆழிதலை வீசிய (4) – உ. வே. சாமிநாதையர் உரை – கடல் வீசிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல் எறிந்த, தமிழண்ணல் உரை – கடல் அலை வீசிய, இரா. இராகவையங்கார் உரை – தேர் உருள் அவ்விடத்து எறிந்த.  கூழை பெய் எக்கர் (5) – இரா. இராகவையங்கார் உரை – இவள் கானலில் உள்ள போது இவள் கூழையில் ஊதை தூற்றிய மணல் இங்கு மனைக்கண் வந்த பின்னரும் அக்கூழையினின்று உதிர்தல் கருதிற்று.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  பனைத் தலை – top of the palmyra palm trees, கருக்கு உடை – with saw-edged/ serrated, நெடு மடல் – long stems, குருத்தொடு மாய – disappear with its tender leaves, கடு வளி தொகுத்த – fierce wind collected, நெடு வெண்குப்பை – tall white sand dunes, கணம் கொள் சிமைய – with many peaks, அணங்கும் கானல் – seashore that causes sorrow, seashore grove that causes distress, ஆழி தலை வீசிய – blown from the ocean, thrown by the chariot wheel rims, அயிர்ச் சேற்று – with black sandy mud, அருவி – flowing, கூழை பெய் – mud that is used to wash hair, எக்கர்க் குழீஇய பதுக்கை – heaped sand dunes (குழீஇய – செய்யுளிசை அளபெடை), புலர் பதம் கொள்ளா அளவை – even before it dries, அலர் எழுந்தன்று – gossip has risen, இ – this, அழுங்கல் – loud, uproarious, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 373, மதுரைக் கொல்லம் புல்லனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
நிலம் புடை பெயரினும், நீர் தீ பிறழினும்,
இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ தோழி, நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை  5
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக் கனி
காந்தள் அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

Kurunthokai 373, Mathurai Kollam Pullanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Even if land collapses and moves,
water and fire changed their nature,
the edge of the vast, glittering ocean
appeared, and fear from the gossips
of harsh-tongued women rose,

how can rumors harm our friendship
with the man from the tall mountain
country,
where a long-haired, sharp-toothed,
black male monkey digs into a ripe,
flower-fragrant jackfruit with his black
fingers, and the scent spreads to
the small, beautiful village with glory lilies?

Notes:  அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியிடம் தோழி உரைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரங்கு தோண்டிய பலாக்கனி சிறுகுடியின்கண் சென்று கமழும் என்றதன்கண், தலைவனோடே கொண்ட நட்பு ஊரவர் அறிய வெளிப்படுதல் வரைதற்கு ஏதுவாய்ச் சிறக்கும் என உள்ளுறை காண்க.  நிலம் புடை பெயரினும் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – உலகம் இடம் மாறினாலும், இரா. இராகவையங்கார் உரை – பூகம்பம் எய்தினாலும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெய்தல் மருதமாய் மருதம் குறிஞ்சியாய் இவ்வாறு தத்தம் நிலை மாறுதல்.

Meanings:  நிலம் புடை பெயரினும் – even if the land shifted and moved, நீர் தீ பிறழினும் – even if water and fire changed their nature, இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும் – even if the edge appeared for the bright/glittering ocean, வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சி – afraid of the gossip of cruel-mouthed women, கேடு எவன் உடைத்து, what harm does it have, how can it harm, ஓ – அசை நிலை, an expletive, தோழி – O friend, நீடு மயிர் – long haired, கடும் பல் – sharp teeth, ஊக – a black monkey, கறை விரல் – black fingers, ஏற்றை – male, புடைத் தொடுபு – dug up on the side (தொடுபு – எச்சத்திரிபு, தொட என்னும் பொருட்டு), உடையூ – breaking, உடைந்து, பூ நாறு பலவுக்கனி – flower fragrant jackfruit, Artocarpus heterophyllus,  காந்தள் அம் சிறுகுடி – beautiful village with glory lilies, Gloriosa superba, கமழும் – with fragrance, spreading fragrance, ஓங்கு மலை நாடனொடு – with the man from the tall mountain country, அமைந்த – have, நம் – our, தொடர்பு – the relationship, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 374, உறையூர்ப் பல்காயனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின், ஒன்றாகின்றே,
முடங்கல் இறைய தூங்கணங்குரீஇ  5
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.

Kurunthokai 374, Uraiyūr Palkāyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
I explained to father and mother clearly,
for them to understand the news that we
had hid.

Once it was exposed,
the lord of the mountain country came
himself and asked them for your hand,
and they have agreed,
having the principle to do the right thing.

Because of this, the ignorant people in
this town, who used to be more confused
than the curved-winged, weaver bird nests
that hang on tall, dark palmyra palms, are
finally one with us.

Notes:  தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக்கொண்டாராக, ‘யான் அறத்தொடு நிற்றதால் இது நிகழ்ந்தது’ என்று தோழி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தூக்கணாங்குருவியின் கூடு ஒருவழிப்படாது பல்லாற்றானும் பின்னப்பட்டிருத்தலானே பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊர்க்கு உவமை ஆயிற்று.  முடங்கல் இறைய (5) – உ. வே. சாமிநாதையர் உரை – வளைவையுடைய சிறகினையுடையவாகிய,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைவினையுடைய சிறகுடையனவாகிய, இரா. இராகவையங்கார் உரை – பனையின் தூங்கல் ஓலையில் (தொங்கும் ஓலை) இருக்கும்.  நிமிர்ந்த ஓலையில் கூடு காட்டாது முடங்கிய ஓலையின் நுனியில் கட்டுதல் காணலாம்.   கூடினும் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூட்டினும் எனற்பாலது எதுகை நோக்கிக் கூடினும் என நின்றது.  மையல் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாமை.  செய்தி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளித்த செய்தியாவது தலைவனோடு கற்புக்கடன் பூண்ட களவொழுக்கம்.

Meanings:  எந்தையும் யாயும் உணரக் காட்டி – making father and mother understand well, ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின் – after the hidden news got exposed since I spoke, after the hidden act (secret love) got exposed since I spoke to her, மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – the lord from the mountainous land came and asked them, நன்று புரி கொள்கையின் – with the principle of doing what is right, ஒன்றாகின்றே – it (the town) agrees with us, முடங்கல் இறைய – curved wings, hanging palm fronds, bent palm fronds, தூங்கணங்குரீஇ – weaver birds, தூக்கணாம் குருவி, Ploceus baya (தூங்கணங்குரீஇ – சொல்லிசை அளபெடை), நீடு இரும் பெண்ணை – tall dark/big female palmyra palms, Borassus flabellifer, தொடுத்த கூடினும் மயங்கிய – confused more than the constructed nests of weaver birds, மையல் – confused, ஊர் – the people in this town (ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 375, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே, சாரல்
சிறு தினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்  5
யாமம் காவலர் அவியாமாறே.

Kurunthokai 375, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, my friend!
Listen!  It would be good if he
does not come today.

The small thondakam drums
are struck even in the middle
of the night since the guards are
not sleeping,
reverberating like the drum beats
of night reapers who harvest
tiny-eared millet in the huge fields
on the mountain slopes.

Notes:  தலைவன் கேட்குமாறு ‘காவலருடைய காவல் மிக்கது’ என்று தலைவிக்குக் கூறும் வாயிலாக, வரைதல் வேண்டும் என்பதை அவனுக்கு தோழி உணர்த்தியது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, வாழி – அசை நிலை, may you live long, தோழி – my friend, இன்று அவர் வாரார் ஆயினோ – if he does not come, (அவர் – நெஞ்சறி சுட்டு), ஆயினோ – ஓ அசை நிலை, an expletive), நன்றே – it would be good, சாரல் சிறு தினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – in the huge field where tiny millet is raised on the slopes, Italian millet, Setaria italicum, இரவு அரிவாரின் – of those who reap at night, தொண்டகச் சிறு பறை – small thondakam drums, பானாள் யாமத்தும் கறங்கும் – when they sound in the middle of the night (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), யாமம் காவலர் அவியாமாறு – since the night guards do not sleep (மாறு – ஏதுப் பொருளில் (காரணப் பொருள்) வரும் ஓர் இடைச் சொல், a particle signifying reason), ஏ – ஈற்றசை

குறுந்தொகை 376, படுமரத்து மோசிகொற்றனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது
மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள், பனியே
வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்கு வெயில் பொதிந்த தாமரை  5
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே.

Kurunthokai 376, Padumarathu Mōsikotranār, Neythal Thinai – What the hero said about the heroine
In summer she is cool like the
wood of sandal trees that grow
on the harsh Pothiyil mountain
range, where fierce gods reside
unknown to stable lives on earth.

In winter she is warm, like the
heart of lotus flowers that collect
and keep within the beautifully
moving warmth of the sun and
close when the rays of the sun
leave.

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கித் தலைவியின் நல்லியல்பு கூறித் தலைவன் செலவு தவிர்ந்து.  வரலாறு:  பொதியில்.  சூர் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – முருகனும் வரையர மகளிரும்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம்.   தொகுப்ப (3) – உ. வே. சாமிநாதையர் உரை – மறைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்பாற் சேர்த்துக் கொண்டமையானே.

Meanings:   மன் உயிர் அறியா – stable lives on earth do not know, துன் அரும் பொதியில் – Pothiyil Mountain that is difficult to approach, Pothiyil mountain that is difficult to scale by people, சூருடை அடுக்கத்து – in the mountain range with fierce gods, in the mountain with Murukan, ஆரம் கடுப்ப – like sandalwood,  Santalum album (கடுப்ப – உவம உருபு, a comparison word), வேனிலானே தண்ணியள் – she is cool when it is hot, she is cool when it is summer, பனி – in the cold season, ஏ – அசைநிலை, an expletive, வாங்கு கதிர் – contained rays, curved rays, தொகுப்ப – getting collected, hiding, கூம்பி – pointing, ஐயென – beautifully/delicately, அலங்கு – moving, வெயில் – sunlight, warmth (வெயில் வெம்மைக்கு ஆகுபெயர்), பொதிந்த – contained, placed, தாமரை உள் அகத்து அன்ன – like the inside of the lotus flower (அகத்து – அகம், அத்து சாரியை), சிறு வெம்மையள் – she is with a little warmth, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 377, மோசி கொற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி, ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.  5

Kurunthokai 377, Mōsi Kotranār, Kurinji Thinai – What the heroine said to her friend
You are inconsolable, my friend!
Even though my flower-like,
kohl-rimmed eyes have lost their
fine beauty, and my delicate arms
with bangles have become thin,
this new love that I have with him
is beyond understanding.
It is the medicine for my illness!

Notes:  வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்தமையால் தலைவி ஆற்றுகின்றிலள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.  மாற்று (3) – உ. வே. சாமிநாதையர் உரை – பரிகாரம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மருந்து.

Meanings:  மலர் ஏர் – flower-like (ஏர் – உவம உருபு, a comparison word), உண்கண் – kohl-rimmed eyes, மாண் நலம் தொலைய – to lose the splendid beauty, வளை ஏர் மென்தோள் – beautiful delicate arms with bangles, ஞெகிழ்ந்ததன் தலையும் – even though they have become slim (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, தலையும் – இழிவுசிறப்பு), மாற்று ஆகின்று – it is the medicine for me, ஏ – அசை நிலை, an expletive, தோழி – O friend, ஆற்றலை – you are not consolable, ஏ – அசை நிலை, an expletive, அறிதற்கு அமையா – beyond understanding, நாடனொடு செய்து கொண்டது – formed with the man from such country, ஓர் சிறு நல் – a little good, நட்பு – friendship, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 378, கயமனார், பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது
ஞாயிறு காயாது மர நிழல் பட்டு,
மலை முதல் சிறுநெறி மணல் மிகத் தாஅய்த்
தண் மழை தலைய ஆகுக, நம் நீத்துச்
சுடர்வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே.  5

Kurunthokai 378, Kayamanār, Pālai Thinai – What the foster mother said
May the sun not get hot,
let there be tree shade,
and let there be cool rain
and abundant sand on the
narrow path on the mountain
in the wasteland,
where she went with her young
man with a bright, long spear,
our naive, dark colored young
woman who abandoned us.

Notes:  மகட் போக்கிய செவிலித்தாய் கடவுளிடம் வேண்டியது.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  ஞாயிறு காயாது – the sun not burning hot, மர நிழல் பட்டு- with tree shade, மலை முதல் – on the mountain, சிறுநெறி – small path, narrow path, மணல் – sand, மிகத் தாஅய் – well spread, abundant (தாஅய் – இசைநிறை அளபெடை), தண் மழை தலைய ஆகுக – may cool rains fall, நம் நீத்து – abandoning us, சுடர்வாய் – with brightess (ஒளி பொருந்திய), நெடு வேல் காளையொடு – with the young man with a long spear, மட மா அரிவை – innocent dark colored young woman, போகிய – where she went, சுரனே – the wasteland (சுரன் சுரம் என்பதன் போலி, ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 379, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, செவிலித்தாய் கேட்கும்படியாக
இன்று யாண்டையனோ தோழி, குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண் அகன் தூமணி பெறூஉம் நாடன்,
அறிவு காழ்க் கொள்ளும் அளவை செறிதொடி
எம் இல் வருகுவை நீ எனப்  5
பொம்மல் ஓதி நீவியோனே?

Kurunthokai 379, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the foster mother listened
I wonder where he is today,
my friend,
the man who stroked your
thick hair and said to you,
“When you with tight bangles
are mature enough to know,
you will come to my house,”
the lord of the mountains,
where mountain dwellers
who dig up old pits to remove
yams, find huge flawless gems?

Notes:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு உசாவுதல் (கேட்டல்) பொருந்தும்.

Meanings:  இன்று யாண்டையனோ தோழி – I wonder where is he today O friend, குன்றத்து – in the mountains, பழங்குழி அகழ்ந்த கானவன் – the mountain dweller who digs up old pits, கிழங்கினொடு – along with the tubers, கண் அகன் தூமணி – large flawless gems (கண் அகன் – இடம் அகன்ற), பெறூஉம் – they get (பெறூஉம் – இன்னிசை அளபெடை), நாடன் – the man from such country, அறிவு காழ்க்கொள்ளும் அளவை – when you are mature enough to understand, செறிதொடி – O one with tight/stacked bangles (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), எம் இல் வருகுவை நீ – you will come to my house, என – thus, பொம்மல் ஓதி – thick hair, overflowing hair, நீவியோன் – the man who stroked, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 380, கருவூர்க் கதப்பிள்ளை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விசும்பு கண் புதையப் பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கிப்
பெயல் ஆனாதே வானம், காதலர்
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே
யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஈங்கைய  5
வண்ணத் துய் மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே.

Kurunthokai 380, Karuvūr Kathapillai, Pālai Thinai – What the heroine’s friend said to her
Roaring like victory drums
of kings, clouds have spread,
hiding the sky, and raining
ceaselessly.

Your lover in a very distant land
does not think about us.
What can we do, my friend, on a
bitter cold day like this, as cold
season arrives, when colorful,
fuzzy eengai blossoms drop?

Notes:  தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தோழி கூறியது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   விசும்பு கண் புதைய – causing the sky to be hidden, பாஅய் – spread (இசை நிறை அளபெடை), வேந்தர் வென்று எறி முரசின் நன் பல முழங்கி – roaring many times in a good manner like the victory drums of the kings (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பெயல் ஆனாதே வானம் – the clouds drop rain without stopping, காதலர் நனி சேய் நாட்டர் – you lover who is in a very far away land, நம் உன்னலரே – he does not think about us, யாங்குச் செய்வாம் – what can we do, கொல் – அசைநிலை, an expletive, தோழி – O friend, ஈங்கைய – of the eengai plants, Mimosa Pudica, touch-me-not, தொட்டால் சுருங்கி, வண்ண துய் மலர் உதிர – the fuzzy flowers with color drop, முன்னர் தோன்றும் – appearing ahead, பனி – cold, dewy, கடு – harsh, நாள் – days, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 381, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தொல்கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது
பசலை ஆகி விளிவது கொல்லோ,
வெண்குருகு நரலும் தண் கமழ் கானல்
பூ மலி பொதும்பர் நாள் மலர் மயக்கி  5
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

Kurunthokai 381, Unknown Poet, Neythal Thinai – What the heroine’s friend said to her
Is getting ruined the end
result of you with sparkling
teeth, laughing with the man
from the shore,

where white herons screech,
and cool fragrant seaside
flowering groves have newly
opened blossoms that are
disturbed by the crashing waves?

You have lost your former beauty
and turned pale, your heart is sad,
your arms have lost their beauty,
and you are unable to sleep at night!

Notes:  வரைவிடை ஆற்றாளாகிய தலைவியிடம் தோழி தலைவனை இயற்பழித்தது.

Meanings:  தொல் கவின் தொலைந்து – losing previous beauty, தோள் நலம் சாஅய் – arms losing their beauty, arms becoming slim (சாஅய் – இசை நிறை அளபெடை), அல்லல் நெஞ்சமோடு – with a sad heart, அல்கலும் துஞ்சாது – not sleeping even at night, பசலை ஆகி – becoming pale, விளிவது கொல் – will you be ruined (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, வெண்குருகு நரலும் – white herons/egrets/storks screech, தண் கமழ் கானல் – cool fragrant seaside grove, பூ மலி பொதும்பர் – flower-filled grove, நாள் மலர் மயக்கி – disturbing the fresh blossoms, விலங்கு திரை உடைதரும் துறைவனொடு – with the man from the seashore where blocking waves break, இலங்கு எயிறு தோன்ற – bright teeth revealing, நக்கதன் – due to laughing, பயன் – the benefit, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 382, குறுங்கீரனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தண்துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசைப்
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,  5
வாராரோ நம் காதலோரே?

Kurunthokai 382, Kurunkeeranār, Mullai Thinai – What the heroine’s friend said to her
The green jasmine vines
are drenched in cool raindrops,
their flowering fragrances rising
along with the honey scents of
golden jasmine blooming on
the bushes.

The clouds are now shedding
unseasonal rains.  If it is not
unseasonal, and truly the rainy
season, wouldn’t your lover be
back?

Notes:  தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்து அவன் வாராமையால் வருந்திய தலைவியிடம், ‘இது கார்ப்பருவம் அன்று.  இது வம்ப மழை’ என்று தோழி வற்புறுத்தியது.  அகநானூறு 26 – தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய் மண்.  குறுந்தொகை 291 – தண் துளிக்கு ஏற்ற மலர்.  வம்பு (4) – தமிழண்ணல் உரை – காலம் மாறிப் பெய்யும் மழை.  இன்று தடுமாறி நடக்கும் சச்சரவுகள் ‘வம்பு’ எண்ணப்பட்டு பொருள் வளர்ச்சி பெற்றுள்ளது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதுமை, மழை பெய்யாத பருவங்களிலே ஞெரேலென முகில்கள் தோன்றிப் பெய்யும் மழையை வம்ப மழை என்ப.

Meanings:  தண் துளிக்கு – the cool raindrops (துளிக்கு – துளியை, உருபு மயக்கம்), ஏற்ற – accepted, பைங்கொடி முல்லை – green vines of jasmine, Jasminum sambac, முகை தலை திறந்த நாற்றம் – fragrance when the flowers open their petals, புதல் மிசை – on the bushes, பூ அமல் தளவமொடு – along with abundant golden jasmine flowers, செம்முல்லை (அமல் – செறிந்த), தேம் கமழ்பு – with honey fragrance, with sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), கஞல – closely, in abundance, வம்புப் பெய்யுமால் மழையே – the clouds are shedding new rain (பெய்யுமால் – பெய்யும் + ஆல், ஆல் அசைநிலை, an expletive), வம்பு அன்று – that this is not the unseasonal rain, கார் இது பருவம் ஆயின் – if this is the rainy season, வாராரோ – will he come, நம் – our, காதலோர் – beloved man, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 383, படுமரத்து மோசிகீரனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீ உடம்படுதலின் யான் தர வந்து
குறி நின்றனனே குன்ற நாடன்,
‘இன்றை அளவை சென்றைக்க’ என்றி,
கையும் காலும் ஓய்வன அழுங்கத்
தீயுறு தளிரின் நடுங்கி,  5
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே.

Kurunthokai 383, Padumarathu Mōsikeeranār – What the heroine’s friend said to her
I had the lord of the mountain
come and wait for you,
since you agreed.
“Let today pass,” you say now.
My hands and legs have gone
weak, and I’m saddened.

I tremble like a tender sprout
that has been thrown into fire.
There is nothing I can do now.

Notes:  தலைவனுடன் போக முன்பு உடன்பட்டு அவன் வந்த பின் நாணத்தால் உடன்போக ஒருப்படாது நின்ற தலைவி நாணத்தை நீக்கி உடன்போகும் பொருட்டு தோழி கடிந்து உரைத்தது.

Meanings:  நீ உடம்படுதலின் – since you agreed, யான் தர – since I said, வந்து – came, குறி – indicated place, நின்றனன் – he came and stood, ஏ – அசை நிலை, an expletive, குன்ற நாடன் – the lord of the mountain country, இன்றை அளவை சென்றைக்க என்றி – ‘let today pass’ you say (என்றி – முன்னிலை ஒருமை), கையும் காலும் ஓய்வன – hands and legs tired, அழுங்க – saddened, தீயுறு தளிரின் நடுங்கி – I tremble like a tender sprout that has fallen in fire (தளிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), யாவதும் இலை – there is nothing else (இலை – இல்லை என்பதன் விகாரம்), யான் செயற்கு – for me to do, உரியது – fitting, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 384, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உழுந்து உடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்
நலன் உண்டு துறத்தியாயின்,
மிக நன்று அம்ம, மகிழ்ந நின் சூளே.

Kurunthokai 384, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Lord, after enjoying their beauty,
you made promises to those
women with small bangles, thick
long hair and paintings of sugarcanes
on their shoulders as smooth
as the pestles that crack ulunthu!

Great!  You are abandoning them now!

Notes:  பரத்தையரிடமிருந்து வந்த தலைவனை நோக்கி ‘நின் சூள் பொய்யுடையது’ என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.  கரும்புடைப் பணைத்தோள் (1) – கரும்பு போல் எழுதப்பட்ட தொய்யில் உடைய பருத்த தோள்.

Meanings:   உழுந்து உடை – breaking ulunthu, black gram, Phaseolus mungoglaer (old name), Vigna mungo, கழுந்தின் – like pestles, ulakkai (இன் உருபு ஒப்புப் பொருளது), கரும்புடைப் பணைத்தோள் – sugarcane patterns painted (thoyyil) on thick arms, sugarcane patterns on bamboo-like arms, நெடும்பல் கூந்தல் – long thick hair, குறுந்தொடி மகளிர் – women with small bangles, நலன் உண்டு – enjoy their beauty, enjoy their virtue, துறத்தியாயின் – if you abandon, மிக நன்று – it is great, it is good, அம்ம – அம்ம – வியப்புக் குறிப்பு, an exclamation of surprise, மகிழ்ந – O lord, நின் – your, சூள் – promises, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 385, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை
சிலை வில் கானவன் செந் தொடை வெரீஇச்
செரு உறு குதிரையின் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெருவரை அடுக்கத்துக் கிழவோன், என்றும்  5
அன்றை அன்ன நட்பினன்,
புதுவோர்த்து அம்ம, இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 385, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Newcomers to this town
gossip, even though the love
he has for me is as strong
as it was on the first day,
the lord of the tall mountains,

where a troop of large male
monkeys eating fruits on
jackfruit trees fear the perfect
arrows shot from the silai tree
bows of the mountain dwellers,
and leap like horses charging
into battle, swaying the tall
bamboo stalks on the slopes.

Notes:  நொதுமலர் வரைவொடு புகுந்தமை அறிந்த தலைவி தோழியை அறத்தொடு நின்று அவ்வரைவை மாற்றச் சொல்லியது.  சிலை வில் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – சிலை மரத்தால் செய்த வில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரிக்கின்ற வில்.   நச்சினார்க்கினியர் உரை (கலித்தொகை 1) அம் சிலை வல் வில் – சிலை மரத்தாற் செய்த வலிய வில்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை (ஐங்குறுநூறு 363) – சிலை வில் –  சிலை மரத்தால் செய்யப்பட்ட வில்.  அன்றை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கைப்புணர்ச்சி எய்திய நாள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தலை நாள்.  இரா. இராகவையங்கார் உரை – பலவின் பழம் அருந்த இருக்கும் கலைகள் கணவன் செந்தொடை ஒலி கேட்ட அளவில் புறத்தோடி ஒளித்தல் போலத் தலைவியை மணக்கவிருக்கும் அயலார்குழு தலைவன் நேரே வரைவொடு வரும் மண முரசொலி கேட்ட அளவில் ஓடி ஒளிக்கும் என்று குறித்தாள்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  பலவில் சேர்ந்த பழம் – fruits on the jackfruit trees, Artocarpus heterophyllus (பலா –  பலவு என ஆக் குறுகி உகரம் ஏற்றது),  ஆர் – big, இனக் கலை – male monkey troop, சிலை வில் கானவன் – mountain dweller with his bow made from silai tree, Albyzzia stipulata, mountain dweller with an uproarious bow, செந் தொடை – fine arrows, arrows that don’t miss their mark, வெரீஇ – afraid (சொல்லிசை அளபெடை), செரு உறு குதிரையின் பொங்கி – jump like horses charging into a battlefield (உறு – அடைந்த, குதிரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சாரல் – mountain slopes, இரு வெதிர் – big bamboo, நீடு அமை – long bamboo stalks,  தயங்கப் பாயும் – they jump swaying on them, பெரு வரை அடுக்கத்து கிழவோன் – the lord of the tall mountain ranges, என்றும் – always, அன்றை அன்ன நட்பினன் – the man who has friendship with me like he had on the day we united, the man who has friendship with me like it was on the first day, புதுவோர்த்து – belongs to the new people, அம்ம – அசை நிலை, an expletive, வியப்பின்கண் வந்தது, இ – this, அழுங்கல் – uproarious, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 386, வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வெண்மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந்துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே, மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு  5
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

Kurunthokai 386, Velliveethiyār, Neythal Thinai – What the heroine said to her friend
When I was with the lord
of the cool seashore,
with groves of white sand
filled with flowers,
I was aware of festive evenings
when young women wearing
pure jewels put up decorations.

Now I am alone in the evenings,
with distress as wide as the land,
which I was not aware in the past.

Notes:  தலைவன் பிரிந்த காலத்தில் பெரிதும் வருந்திய தலைவியை ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் தலைவி கூறியது.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  வெண்மணல் விரிந்த – white sand spread, வீ – flowers, ததை – dense, filled, கானல் – seashore grove, seashore, தண்ணந்துறைவன் – man from the cool seashore (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), தணவா – not separated, ஊங்கே – in the past, வால் இழை மகளிர் – young women wearing pure ornaments, விழவு அணி கூட்டும் – make festival decorations, they collect decorations for festivals, மாலை – evenings, ஓ – பிரிநிலை, exclusion, அறிவேன் – I was aware, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, மாலை – evenings, நிலம் பரந்தன்ன – like the wide land, புன்கணொடு – with much sadness, புலம்பு உடைத்து ஆகுதல் – to be alone, அறியேன் – I did not know, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 387, கங்குல் வெள்ளத்தார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
இர வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன் கொல்? வாழி தோழி,
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.  5

Kurunthokai 387, Kangul Vellathār, Mullai Thinai – What the heroine said to her friend
What is the use, my friend,
to wait for the day to end,
when jasmine flowers bloom
in the helpless evenings
when the sun’s rage goes down?

If we cross that boundary,
the onslaught of night is larger
than the ocean.

Notes:  தலைவன் பிரிந்த காலத்தில் பெரிதும் வருந்திய தலைவியை ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் தலைவி கூறியது.

Meanings:   எல்லை கழிய – as the day ends, முல்லை மலர – when jasmine blooms, Jasminum sambac, கதிர் சினம் தணிந்த கையறு மாலை – helpless evenings when the sun’s rage/heat goes down, இர வரம்பாக – night as a limit (to tolerate pain), நீந்தினம் ஆயின் – if we cross that, எவன் – what is the use, கொல் – அசை நிலை, an expletive, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – my friend, கங்குல் வெள்ளம் – the onslaught of night, கடலினும் – more than the ocean, பெரிது – ஏ – அசை நிலை, an expletive, தேற்றம், certainty

குறுந்தொகை 388, ஔவையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்,
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன,
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்  5
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.

Kurunthokai 388, Avvaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Their stems rooted in water,
blue waterlilies with rows of
petals do not fade, even
when the summer winds blow.

If she goes with you, the
wilderness will be sweet to her,
where weak elephants unable to
break with their folded trunks,
struggle to bend dry tree branches
that are in rows like the convoys
of salt merchants’ carts pulled
by oxen saddened by the stress
of the yokes that look like slings.

Notes:  தலைவி தன்னுடன் வர உடன்பட்டாள் என அறிந்த தலைவன், அவள் கொடிய பாலை நிலத்தில் நடக்க வல்லுநள் அல்லள் எனக் கருதிப் போதற்கு ஒருப்படானாக, ‘நும்முடன் வரின் தலைவிக்குப் பாலை இனியதாக’ என்று தோழி கூறிச் செலவு உடம்படச் செய்தது.

Meanings:   நீர் கால் யாத்த – stems rooted in water, நிரை இதழ்க் குவளை – blue waterlilies with rows of petals, Blue nelumbo, Nymphaea odorata, கோடை ஒற்றினும் வாடாதாகும் – they do not fade even in the attacking westerly/hot winds, summer winds, கவணை அன்ன – like slingshots, பூட்டுப் பொருது – yokes are attached, அசாஅ – with sorrow (இசை நிறை அளபெடை), உமண் எருத்து ஒழுகை – salt merchants’ bullock carts, தோடு நிரைத்தன்ன – like the crowded rows, முளி சினை பிளக்கும் – to break the dry branches, முன்பு இன்மையின் – without strength, யானை கை மடித்து – elephants fold their trunks, உயவும் – they feel sad, கானமும் இனிய ஆம் – even the forest will be sweet (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கானமும் – உம்மை இழிவு சிறப்பு), நும்மொடு – with you, வரின் – if she comes, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 389, வேட்டகண்ணனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
நெய் கனி குறும்பூழ் காயமாக
ஆர் பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென, அவனெதிர்
‘நன்றோ மகனே’ என்றனென்,
‘நன்றே போலும்’ என்று உரைத்தோனே.  5

Kurunthokai 389, Vēttakannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
My friend!
The lord of the big mountains
is arranging your wedding.
I asked his servant,
“Is everything well my son?”
He replied, “Everything is well.”
May he receive a meal with
quail gravy filled with ghee!

Notes:  தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனை அவனுடைய குற்றேவல் மகனால் அறிந்த தோழி, அக்குற்றேவல் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியை தலைவிக்கு உரைத்தது.

Meanings:  நெய் கனி குறும்பூழ் – oil/ghee filled quail or partridge, காயமாக – as a spicy dish, ஆர்பதம் – food to eat, பெறுக – may he receive, தோழி – my friend, அத்தை – அசை நிலை, an expletive, பெருங்கல் நாடன் – the lord of the big mountains, வரைந்தென – since he is making arrangements for the wedding, அவனெதிர் – to him, in front of him, நன்றோ மகனே என்றனென் – “is everything well, my son”, I asked, நன்றே போலும் – “Yes, everything is good” ( நன்றே – ஏ தேற்றம், certainty, போலும் – அசை நிலை, an expletive) என்று உரைத்தோன் – he said, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 390, உறையூர் முதுகொற்றனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
எல்லும் எல்லின்று, பாடுங்கேளாய்!
செல்லாதீமோ சிறு பிடி துணையே!
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்தென,
வளையணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.  5

Kurunthokai 390, Uraiyūr Muthukotranār, Pālai Thinai – What bystanders in the wasteland path said to the hero
Daylight has faded and it is dark!
Listen to those sounds!
Don’t go there with your lover
who is like a young female elephant!
It is like a fierce enemy battlefield!

Since the merchant caravans have
arrived, wasteland bandits with
long spears with rings are
getting ready to attack, beating
thannumai drums in the protected forest
and the drumbeat sounds come and go.

Notes:  தலைவியை உடன் அழைத்துக் கொண்டு பாலை நிலத்தில் போகும் தலைவனை எதிரே கண்டோர் ‘பகல் போயிற்று.  ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்’ என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.  எல்லும் எல்லின்று (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூரியனும் விளக்கம் இலனானான், இரா. இராகவையங்கார் உரை – பகற்பொழுதும் இருண்டு சென்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞாயிறும் விளக்கமிலதாயிற்று.  அகநானூறு 110, அகநானூறு 370 பாடல்களில் ‘எல்லும் எல்லின்று’ என்பதற்கு – வேங்கடசாமி நாட்டார் உரை – பகலும் ஒளி இழந்தது, பகலும் ஒளி குறைந்தது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகற்பொழுது ஒளி இல்லையாய் இருந்தது, பகற்பொழுதும் ஒளி குன்றிற்று.  வளையணி நெடுவேல் ஏந்தி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – வளையை அணிந்து நெடிய வேலை ஏந்தி, தமிழண்ணல் உரை – தோள்வளை அணிந்த கையில் நெடிய வேலை ஏந்தி, இரா. இராகவையங்கார் உரை – வளையம் அணிந்த நெடிய வேலைத் தாங்கி.  செல்லாதீமோ (2) – செல்லாதீம் முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று, second person plural command verb ending.

Meanings:  எல்லும் எல்லின்று – the sun has set, daylight has turned to darkness, பாடும் கேளாய் – listen to the sounds, செல்லாதீமோ – please do not go (செல்லாதீம் – முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று, ஓ – அசை நிலை, an expletive), சிறு பிடி துணையே – O partner/lover of a woman who is tender like a small female elephant, வேற்று முனை – enemy battlefield, வெம்மையின் – like the enmity (இன் உருபு ஒப்புப் பொருளது), சாத்து – the merchants, வந்து இறுத்தென – since they came and stayed, வளையணி நெடு வேல் – long spears with rings attached, ஏந்தி – holding, lifting, மிளை வந்து – coming to the protected forests (which are around forts), பெயரும் – they leave, தண்ணுமை – thannumai drum, குரல் – sounds, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 391, பொன்மணியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே,
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்  5
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ் கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்பக்
கூஉம் தோழி, பெரும் பேதையவே.

Kurunthokai 391, Ponmaniyār, Mullai Thinai – What the heroine said to her friend
In the parched woodland where
bulls were lying around hating
plowing, and spotted deer were
resting in the heat,
there were rapid thunder strikes
ruining the hoods of snakes,
accompanied by sweet, heavy rain.

Sorrowful evening has arrived,
bringing distress to those who are
away from their embracing lovers.

And now, my friend, split-eyed
peacocks sitting on flowering tree
branches, have started to screech,
making the vast land with flowing
water to feel lonely.  They are stupid!

Notes:  பருவங்கண்டு வருந்திய தோழிக்குத் தலைவி கூறியது.  புகரி (2) – உ. வே. சாமிநாதையர் உரை – புகர் புள்ளி, அதனையுடையது புகரி.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   உவரி – hating, ஒருத்தல் – bull, உழாஅது – without plowing (இசை நிறை அளபெடை), மடிய – lying down, புகரி – spotted animal, the deer, புழுங்கிய – lying in the heat, புயல் நீங்கு புறவில் – in the woodland where there is no rain, கடிது இடி உருமின் – when rapid thunder struck, பாம்பு பை அவிய – snake hoods to be ruined, இடியொடு – with thunder, மயங்கி – mixed, இனிது – sweetly, வீழ்ந்தன்று – it fell, ஏ – அசை நிலை, an expletive, வீழ்ந்த மா மழை – heavy rain that falls, தழீஇப் பிரிந்தோர் – those who embraced and separated (தழீஇ – சொல்லிசை அளபெடை), கையற  – to become helpless, வந்த – came, பையுள் மாலை – painful evenings, பூஞ்சினை இருந்த – from the flowering branches, போழ் கண் மஞ்ஞை – split-eyed peacocks, தாஅம் நீர் – spreading water, flowing water (தாஅம் – இசைநிறை அளபெடை), நனந்தலை – wide space, புலம்ப – to become lonely, கூஉம் – they screech (இன்னிசை அளபெடை), தோழி – my friend, பெரும் – very, greatly, பேதைய – they are stupid, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 392, தும்பிசேர் கீரனார், குறிஞ்சித் திணை  – தோழி தும்பியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழியோ, அணிச் சிறைத் தும்பி!
நன்மொழிக்கு அச்சமில்லை! அவர் நாட்டு
அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்,
கடமை மிடைந்த துடவை அம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை  5
தமரின் தீராள் என்மோ, அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசந்தூங்கு மலை கிழவோற்கே.

Kurunthokai 392, Thumpisēr Keeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the dragonfly, as the hero listened nearby
O dragonfly with beautiful wings!
May you live long!  Listen!  There is
no need to fear utterance of good words.

If you reach her lover’s country with
lofty mountains, where bee hives hang
in rows like the fine moving shields of
kings, tell him that the younger sister
of those who weed amidst pretty,
tiny millet plants in the fields, raising
fine dust with their hoes, where deer
gather, is unable to leave her relatives.

Notes:  வரைவு நீட்டித்த தலைவன் சிறைப்புறத்தில் நிற்பதை அறிந்த தோழி, வண்டினை நோக்கி கூறுவாளாய் அவனுக்குக் கூறியது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – அசைநிலை, an expletive, listen to me, வாழி, ஓ – அசைநிலைகள், expletives, may you live long, அணி – beautiful, சிறை – wings, தும்பி – dragonfly, நன்மொழிக்கு அச்சமில்லை – there’s no fear in telling good words, அவர் நாட்டு – his country’s, அண்ணல் – lofty, நெடுவரை – tall mountains, சேறி ஆயின் – if you reach, கடமை – with kadamai deer, மிடைந்த  – being close to each other, துடவை – fields, அம் – beautiful, சிறு தினை – small millet, Italian millet, Setaria italicum, துளர் – weed removing hoe (களைக்கொட்டு), எறி – attacking, நுண் துகள் – fine dust, களைஞர் – those who remove weeds in the fields, தங்கை – younger sister, தமரின் – from her relatives, தீராள் – she is unable to leave, என்மோ – tell him this (மோ – முன்னிலையசை, an expletive of the second person), அரசர் – kings, நிரை செலல் – moving in rows (செலல் – இடைக்குறை), நுண் தோல் போல – like the fine shields, பிரசம் தூங்கு – honeycombs hanging, மலை கிழவோற்கு – to the lord of the mountains, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 393, பரணர், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே, அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை  5
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.

Kurunthokai 393, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
It was just for a few days
that your lover embraced you,
crushing your garlands
with many kinds of blossoms.

But gossip has risen!

It is louder than the roars of the
Kongu people with bright swords,
when Athikan, the able general of
the Pāndiyan king with fine jewels
fell along with his elephant in the
field at Vākai, where owls screech.

Notes:  தலைவன் சிறைப்புறம் இருப்பதை அறிந்த தோழி, தலைவிக்கு கூறுவாளாய் அலர் மலி உரைத்து வரைவு கடாயது.  பசும்பூண் பாண்டியன் (4) – உ. வே. சாமிநாதையர் மற்றும் பொ. வே. சோமசுந்தரனார் ஆகிய அறிஞர்களின் உரை – ‘பசிய பூணை அணிந்த பாண்டியன்’.  அகநானூறு 162-21 – பசும்பூண் பாண்டியன் – பொ. வே. சோமசுந்தரனார் – பசும்பூண் பாண்டியன் என்பது ஒரு பாண்டிய மன்னனின் பெயர், அகநானூறு 231-12 – பசிய அணிகலன்களையுடைய பாண்டியன், அகநானூறு 253 – 5 – பசும்பூண் பாண்டியன் என்ற மதுரை மன்னன், அகநானூறு 338-5 – பசும்பூண் பாண்டியன் என்னும் அரசன்.  வரலாறு:  பாண்டியன், அதிகன், வாகை.  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   மயங்கு மலர்க் கோதை குழைய – crushing (your) flower garlands with mixed flowers, மகிழ்நன் முயங்கிய நாள் – the days your lover embraced you, தவ – very, சில – few, ஏ – அசை நிலை, an expletive அலர் – gossip, ஏ – அசை நிலை, an expletive, கூகைக் கோழி – owl (இருபெயரொட்டு), வாகைப் பறந்தலை – battlefield at Vakai, பசும்பூண் பாண்டியன் – Pāndiyan king with new/fine jewels, king Pasumpoon Pāndiyan, வினை வல் – able at his task, அதிகன் களிறொடு பட்ட ஞான்றை – the day Athikan was killed along with his elephant, ஒளிறு வாள் – bright swords, கொங்கர் ஆர்ப்பினும் – more than he uproars caused by Kongars, பெரிது – large, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 394, குறியிரையார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி
முன் நாள் இனியது ஆகிப் பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்குப்  5
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.

Kurunthokai 394, Kuriyiraiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
In a small village with abundant
liquor, a black female elephant’s calf
with a tender head and sturdy legs,
ran around in circles, and played with
boys with tiny arms, borne by a
mountain woman.

It was sweet then, but later when it
grew up, it grazed on their millet crops
and that lead to enmity.

Your lover’s laughter and games have
become like that.

Notes:  வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியிடம், தோழி தலைவனைப் பழித்துக் கூறியது.  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள் கய என் கிளவி மென்மையும் செய்யும்.  (தொல்காப்பியம், உரியியல் 26).

Meanings:   முழந்தாள் – legs (முழந்தாள் = முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு, part of the leg between the knee and the ankle), இரும் பிடி – huge female elephant, dark colored female elephant, கயந்தலைக் குழவி – tender-headed calf, நறவு மலி பாக்கத்து – in an alcohol-rich nearby small village (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), குறமகள் ஈன்ற – borne by a mountain woman, குறி இறைப் புதல்வரொடு – with the young sons with tiny arm joints, மறுவந்து ஓடி – ran around in circles, முன் நாள் இனியது ஆகி – what was sweet in the past, பின் நாள் – at a later date, அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு – like how it grazed their millet crops, Italian millet, Setaria italicum, பகை ஆகின்ற – it becomes an enemy, அவர் நகை – his laughter, விளையாட்டு – games, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 395, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெஞ்சே நிறை ஒல்லாதே, அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்,
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், ‘கண் இனிது படீஇயர்,  5
அஞ்சல்’ என்மரும் இல்லை, அந்தில்
அளிதோ தானே நாணே,
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே.

Kurunthokai 395, Unknown Poet, Pālai Thinai – What the heroine said to her friend
I have no control over my heart,
since my lover does not love me
nor does he consider love as wealth.

Those who are strong and forceful
are sleeping sweetly, like those who
saw the moon devoured by a serpent
but are unable to do anything.

There is nobody here to console me.
This is pitiful for my modesty,
if I have to leave and go where he is.

Notes:  தலைவன் வரையாது பிரிந்து காலம் நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைவி, ‘அவன் இருக்கும் இடத்திற்கு நாம் போகலாம்’ என்று தோழிக்கு உரைத்தது.  குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம்.  குறுந்தொகை 243 – படீஇயர் என் கண்ணே.  அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).

Meanings:  நெஞ்சு – my heart, ஏ – அசைநிலை, an expletive, நிறை ஒல்லாது – unable to stop, ஏ – அசைநிலை, an expletive, அவர் – he, ஏ – அசைநிலை, an expletive, அன்பு இன்மையின் – since he does not love me, அருள் பொருள் என்னார் – he does not consider grace as wealth, வன்கண் கொண்டு – with strength, வலித்து வல்லுநர் – those able to put pressure, ஏ – அசைநிலை, an expletive, அரவு நுங்கு மதியினுக்கு – for the moon that is being devoured by a serpent, during lunar eclipse, இவணோர் போல – like those here, களையார் ஆயினும் – even though they don’t remove, கண் இனிது படீஇயர் – they are sleeping sweetly (படீஇயர் – சொல்லிசை அளபெடை), அஞ்சல் என்மரும் இல்லை – there is nobody to tell me not to fear, அந்தில் – அசைநிலை, an expletive, அளிது – it is pitiable, ஓ – அசைநிலை, an expletive, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, நாண் – shame, modesty, ஏ – அசைநிலை, an expletive, ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படின் – if I have to leave and go to where he is, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 396, கயமனார், பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள், இனியே
எளிது என உணர்ந்தனள் கொல்லோ, முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்,  5
மழை முழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?

Kurunthokai 396, Kayamanār, Pālai Thinai – What the foster mother said
How did she, who refused to
drink milk, did not desire her
ball, but played with her friends
all the time,
feel it was easy to go with him
on the harsh path through dried
bamboo patch,
where a male elephant pokes
his lifted tusks into the trunk
of an ōmai tree with dry branches,
and stops to listen to the loud,
roaring thunder sounds that
reverberate across the foothills of
mountains scorched by summer’s
heat?

Notes:  மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – செவிலித்தாய் கூற்று, இதனை நற்றாய் கூற்றாகவும் கொள்ளுதலும் பொருந்தும்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  பாலும் உண்ணாள் – she did not drink milk (பாலும் – உம்மை உயர்வு சிறப்பு), பந்துடன் மேவாள் – she did not desire her ball (பந்துடன் – பந்தை), விளையாடு ஆயமொடு அயர்வோள் – she used to play with her friends, இனி – now, ஏ – அசைநிலை, an expletive, எளிது என உணர்ந்தனள் கொல்லோ- did she feel it was easy (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – இரங்கற் குறிப்பு), முளி சினை ஓமை – ōmai tree with dried branches, Sandpaper tree,  Dillenia indica, குத்திய – poked, thrust, உயர் கோட்டு – with raised tusks, ஒருத்தல் – a male elephant, வேனில் குன்றத்து – in the summer’s mountain, வெவ்வரை கவாஅன் – hot base of the mountain, hot mountain slopes (கவாஅன் – இசை நிறை அளபெடை), மழை முழங்கு – roaring clouds, கடுங்குரல் – loud sounds, ஓர்க்கும் – it listens, கழை – bamboo, Bambusa arundinacea, திரங்கு – dried, ஆர் இடை – on the difficult path, அவனொடு – with him, செலவு – going, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 397, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நனை முதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்தல் போல,
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
‘அன்னா’ என்னுங் குழவி போல,  5
இன்னா செயினும், இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி,
தன் உறு விழுமங் களைஞரோ இலளே.

Kurunthokai 397, Ammoovanār, Neythal Thinai – what the heroine’s friend said to the hero
O lord of the seashore with strong
waves, where cold winds scatter,
egg-like, round gnāzhal flowers
that have blossomed from mature
buds, on the dark colored waterlily
blossoms, like rain!

She is like a baby that cries out for
its mother, even when the angry mother
hurts.  Even if you are mean or sweet
and gracious to her, you are the only
one who can remove her pain.

Notes:  வரைவிடை வைத்து நீங்கும் தலைவனிடம் தோழி உரைத்தது.  விரைவில் வந்து இவளின் துன்பத்தை நீ களைய வேண்டும் என்கின்றாள்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  நனை – buds, முதிர் – mature, ஞாழல் – gnāzhal flowers, புலிநகக்கொன்றை, tigerclaw tree, cassia sophera, சினை – egg, மருள் – like (உவம உருபு, a comparison word), திரள் வீ – round flowers, நெய்தல் மாமலர் – large blue waterlilies, dark blue waterlilies, பெய்தல் போல – like rain falling down, ஊதை – cold winds, தூற்றும் – they scatter, உரவு நீர் – powerful waves, swaying water, சேர்ப்ப – O lord of the seashore (அண்மை விளி), தாய் உடன்று அலைக்கும் காலையும் – even when the mother hurts in anger, வாய்விட்டு – opening its mouth, அன்னா என்னுங்குழவி போல – like a child who cries for its mother, இன்னா செயினும் – even if you harm, இனிது தலையளிப்பினும் – even if you are sweet and gracious, நின் வரைப்பினள் – she’s limited by you, என் தோழி – my friend, தன் உறு விழுமம் – the great pain she suffers (உறு – மிக்க), களைஞர் – those who can remove, ஓ – அசைநிலை, an expletive, இலள் – she does not have, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 398, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தேற்றாம் அன்றே தோழி, தண் எனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலைக்
கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர்
கை புணை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை  5
அரும்பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு
மெய்ம்மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே.

Kurunthokai 398, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine said to her friend
In this distressing evening time of the
painful season when cold rains drizzle,
women with kohl-rimmed, carp-shaped
eyes and heavy earrings pour out oil and
light lamps, using their hands as spoons.

There is nobody to wipe away the tears that
fall from my muddied eyes or to tell me that
my precious lover has come back,
and that there will be joyous celebrations
which will make my body ecstatic.

Notes:  தலைவன் பிரிந்து சென்றதை தலைவிக்கு உணர்த்திய தோழி ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறினாள். தலைவி அத்தோழியைக் கடிந்து கூறியது.

Meanings:  தேற்றாம் – I do not know (தன்மைப்பன்மை), அன்று, ஏ – அசை நிலைகள், தோழி – O friend, தண் எனத் தூற்றும் திவலை – rain drizzling making it cool, துயர் கூர் காலை – painful time, கயல் ஏர் உண்கண் – carp fish like kohl-rimmed eyes, Cyprinus fimbriatus (ஏர் – உவம உருபு, a comparison word), கனங்குழை மகளிர் – women wearing heavy earrings, கை புணை ஆக – using the hands as a tool (புணை – கருவி, tool), நெய் பெய்து மாட்டிய சுடர் – lamps lit pouring oil, lamps lit pouring ghee, துயர் எடுப்பும் புன்கண் மாலை – sorrow-causing painful evening, அரும் பெறற் காதலர் வந்தென – that my precious lover has come back, விருந்து அயர்பு – celebrating, மெய்ம் மலி உவகையின் – with great happiness to the body, எழுதரு – risen, கண் கலிழ் – eyes muddied, உகு பனி – falling tears, அரக்குவோர் – those who can wipe, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 399, பரணர், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசியற்றே பசலை, காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

Kurunthokai 399, Paranar, Marutham Thinai – What the heroine said to her friend
Since my pallor vanishes
whenever my lover touches
me, and spreads whenever
he leaves me,
it is like the moss floating on
the town’s drinking water well.

Notes:  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி தோழிக்குச் சொல்லியது.  கலித்தொகை 130 – விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.  உ. வே. சாமிநாதையர் உரை – தொடுதல் இடக்கரடக்கு.  விடுவுழி விடுவுழி எனப் பன்மை கூறியது வரையாது ஒழுகும் களவொழுக்கத்தில் அடுத்தடுத்துப் பிரிவு நேர்வது குறித்தது.  கலித்தொகை 130 – அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

Meanings:  ஊர் உண் கேணி – town’s drinking-water well, town’s drinking water reservoir, உண் துறை – drinking water shore, தொக்க – collected, பாசி அற்று – it is like the algae, it is like the moss, (அற்று – உவம உருபு, a comparison word) ஏ – அசை நிலை, an expletive, பசலை – pallor, காதலர் – lover, தொடுவுழித் தொடுவுழி – whenever he touches me, அடுக்குத்தொடர், repetition of a word for emphasis (தொடுவுழி = தொடு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு, a word ending implying when), நீங்கி – it leaves, விடுவுழி விடுவுழி – whenever he leaves, அடுக்குத்தொடர், repetition of a word for emphasis (விடுவுழி = விடு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு, a word ending implying when), பரத்தலான் – since it spreads, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 400, பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
சேயாறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களைகலம் காமம் பெருந்தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி கரம்பைப்
புது வழிப்படுத்த மதியுடை வலவோய்!  5
இன்று தந்தனை தேரோ,
நோய் உழந்து உறைவியை நல்கலானே?

Kurunthokai 400, Pēyanār, Mullai Thinai – What the hero said to his charioteer
O wise charioteer!
Desiring what is good, you thought
in your mind if we took the long
route, I will not be able to remove
the love distress of my wife with
wide arms, and so you blazed new
paths, breaking the raised grounds
with pebbles.

You have saved the life of the woman
who has suffered.  Is it just a
chariot ride that you gave me today?

Notes:  வினை முற்றி வந்த தலைவன் தேர்ப்பாகனைப் பாராட்டியது.

Meanings:  சேயாறு செல்வாம் ஆயின் – if we took the long route, இடர் இன்று – without sorrow, களைகலம் காமம் – I will be unable to remove her love affliction, பெருந்தோட்கு – of the woman with wide shoulders, of the woman with wide arms (அன்மொழித்தொகை), என்று – thus, நன்று புரிந்து – desiring goodness, எண்ணிய மனத்தை ஆகி – you of thinking mind, முரம்பு கண் உடைய ஏகி – breaking the raised grounds with pebbles and going, கரம்பைப் புது வழிப்படுத்த – created new paths in the dry land, மதியுடை வலவோய் – O charioteer with wisdom, இன்று தந்தனை – you gave today, தேரோ – just the chariot ride, நோய் உழந்து உறைவியை – my wife who is struggling with the painful (separation) disease, நல்கலான் – due to your giving, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 401, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று,  5
ஐதேகம்ம மெய் தோய் நட்பே.

Kurunthokai 401, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend
One day I joked and played
with the lord of the shores,
where crabs run to the ocean,
afraid of girls playing ōrai
games on the seashore,
wearing long garlands made
of pretty adumpu flowers and
waterlily blossoms,
water dripping from their hair.

It is surprising that despite our
close friendship, we are separated.

Notes:   உடல் வேறுபாடு கண்டு தமர் தலைவியை புறம்போகாது இற்செறித்தனர் தமர்.  அவள் தனக்குள்ளே கூறியது.   – ஐ வியப்பாகும் (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  அடும்பின் ஆய் மலர் – Beautiful adumpu flowers, Ipomoea pes-caprae vine, விரைஇ நெய்தல் – mixed with waterlily blossoms (விரைஇ – சொல்லிசை அளபெடை), நெடுந் தொடை – long garlands, வேய்ந்த – wearing , நீர் வார் கூந்தல் – water-dripping hair, ஓரை மகளிர் – girls playing ōrai games, அஞ்சி – afraid, ஈர் ஞெண்டு – wet crabs (ஞெண்டு – நண்டு என்பதன் போலி), கடலில் பரிக்கும் – they run to the ocean, துறைவனொடு – with the man from the shores, ஒரு நாள் – one day, நக்கு விளையாடலும் – laughed and played (உம்மை இழிவு சிறப்பு ), கடிந்தன்று – it is removed, ஐது – surprising, ஏகு – அசை நிலை, an expletive, அம்ம – வியப்பு இடைச்சொல், a particle that implies surprise, மெய் தோய் நட்பு – embracing/body hugging friendship, ஏ – அசை நிலை, an expletive

%d bloggers like this: