எட்டுத்தொகை – நற்றிணை 1-200

நற்றிணை – Natrinai

Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்
நற்றிணை – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
நற்றிணை – வித்துவான் H. வேங்கடராமன் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
நற்றிணை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

நற்றிணை 1, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நின்ற சொல்லர், நீடு தோன்று இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை,  5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே.

Natrinai 1, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Truthful in speech and eternal in sweet
friendship, he does not know parting
from my arms.
My friendship with my esteemed man
is great like sweet honey made in the tall            
sandal trees by bees that collect cool pollen              
from lotus flowers.                              

Just as the world cannot live without
water, I cannot exist without him.
He loves me, is gracious, and fears that
separation
will bring pallor to my fragrant forehead.
Will he consider doing something petty?
He does not know to do that!

Notes:  பிரிவு உணர்த்திய தலைவிக்குத் தோழி கூறியது.   ஒளவை துரைசாமி உரை –  ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் ஏற்றற்கண் நிகழும் தலைவி கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாமரைத்தாது தலைவன் உள்ளத்திற்கும் சந்தனத்தாது தலைவியின் உள்ளத்திற்கும் உவமையாக்கி இருவர் கருத்தும் ஒத்த வழி சாந்திலே தீந்தேனிறால் வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் எனப் பொருந்த உரைக்க.  ஒளவை துரைசாமி உரை – தாமரைத் தேனைச் சாந்தம் தன் மணத்தை ஊட்டிச் சிறப்பிப்பது போலத் தன்பால் வைத்த புல்லிய என் அன்பை உள்ளத்திற் கொண்டு கேண்மையாம் பெருமை உறுவித்தார் என்பாள், சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற என்றாள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  இன்று – ஒளவை துரைசாமி உரை – இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என வந்தது.  இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல், தொன்றியல் மருங்கின் செய்யுளில் உரித்தே  (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 237).

Meanings:  நின்ற சொல்லர்- he is truthful in words, நீடு – always, for long, தோன்று இனியர் – he appears to be sweet-natured, என்றும் – forever, always, என் தோள் – my arms, பிரிபு – separation (தொழிற்பெயர்), அறியலரே – he does not know (ஏ – அசைநிலை, an expletive), தாமரைத் தண் தாது – cool lotus pollen, ஊதி – buzzing, மீமிசை – high above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), சாந்தில் – in the sandalwood tree, Santalum album, தொடுத்த – placed, attached, தீம் தேன் போல – like sweet honey, புரைய – it is great, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, புரையோர் – one who is superior, கேண்மை – friendship, நீர் இன்று அமையா – without any water, உலகம் போல – like the world, தம் இன்று அமையா – existing without him, நம் நயந்து அருளி – desiring and being kind to us, நறுநுதல் பசத்தல் அஞ்சி – afraid of the pallor on my fragrant brow, சிறுமை உறுபவோ – will he be petty, செய்பு அறியலரே – he does not know to do that (செய்பு – தொழிற்பெயர், அறியலரே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 2, பெரும்பதுமனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை,  5
மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே.  10

Natrinai 2, Perumpathumanār, Pālai Thinai – What those who saw the couple said
More cruel than the heavy rains with winds
and thunder that cause rocks to roll down in the tall
mountains, is the heart of the young man who leaves
at night and allows the delicate young woman with
sharp teeth to walk ahead of him on the wasteland
paths, where, in the evenings, strong tiger cubs with
big heads, hiding behind hemp bushes surrounded by
indu vines spread on eengai vines, pounce on those
who travel, and end up with blood on their heads and
mouth, in the windy forest with flourishing date palms,
where lofty mountains are rooted deeply in the land.  

Notes:  தலைவனையும் தலைவியையும் பாலை நிலத்தில் கண்டவர்கள் சொன்னது. இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க.  ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்’ எனத் துவங்கும் நூற்பாவில்…………சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும், கண்டோர் மொழிதல் கண்டது என்ப’ (தொல்காப்பியம் அகத்திணையியல் 43) என்பதற்கு இதனைக்காட்டி இது செலவின்கண் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  மடந்தை முன் உற்று (7) –  ஒளவை துரைசாமி உரை –  காதலியின் மேனி நலமும் நடைவனப்பும் கண்டு மகிழ்வதோடு கண்முன் நிறுத்திக் காவல் செய்து போதரும் தலைவனது காப்பு மறம் புலப்பட மடந்தையை முன்னுய்த்துத் தான் பின்னே செல்கின்றான் என்பார்.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). வல்லியம் குருளை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலிக்குட்டிகள், ஒளவை துரைசாமி உரை – வலிய புலிகள் தம்முடைய குட்டிகளுடன். குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

Meanings:  அழுந்துபட வீழ்ந்த – rooted deeply, பெருந்தண் குன்றத்து – in the tall cool mountains, ஒலி வல் ஈந்தின் – with flourishing date palm trees, உலவை அம் காட்டு – in the forest with wind, (அம் சாரியையுமாம்), ஆறு செல் மாக்கள் – those who go on the wasteland path, சென்னி எறிந்த – attacking their heads, செம்மறுத் தலைய – with heads that are red (with blood), நெய்த்தோர் வாய – with mouths with blood, வல்லியப் பெருந்தலைக் குருளை – strong tiger cubs with big heads, மாலை – evening, மரல் நோக்கு – looking from behind the hemp bushes, bowstring hemp, இண்டு இவர் ஈங்கைய சுரனே – the wasteland where indu vines are spread on eengai – (இண்டு – Acacia intsia caesia; ஈங்கை – தொட்டாற்சுருங்கி, touch-me-not plant, Mimosa Pudica), வை எயிற்று ஐயள் – the delicate young woman with sharp teeth, மடந்தை முன் உற்று – letting the young woman go in front, எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – the young man who goes at night, காலொடு பட்ட – fell along with winds, மாரி – rain, மால் வரை மிளிர்க்கும் – makes the rocks in the mountains roll, உருமினும் – more than thunder, கொடிதே – it is cruel (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 3, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்,
வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்  5
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே, உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

Natrinai 3, Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
In the dark evening hour which saps strength,
did I not think of the young woman who is sweet
like deeds wished and done, who lights splendid
lamps in our house with sorrow,
when I was in the wasteland with harsh villages,
where bows are livelihood to bandits,
and untutored children draw squares the shape
of touchstones and play using gooseberries as dice
in the dotted shade of a neem tree with sky-high
branches on which a distressed kite is seated with   
her brood?

Get rid the thought of leaving again, oh heart!

Notes:  முன்னொரு காலத்தில் பொருள்வயின் பிரிந்த கணவன் பின்னும் பொருள்தேடும்படி கருதிய தன் நெஞ்சிடம் சொன்னது.  ஒளவை துரைசாமி உரை – ‘உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்’ என வருவதை ‘ஆங்கவை ஒருபாலாக’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 12) என்ற நூட்பாவில் கூறப்படும் இன்புறல் என்னும் மெய்ப்பாட்டுக்கும், முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகாது ஒழிந்ததற்கும் இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியர் ‘தலைவன் நினைந்து செலவு அழுங்குவதற்கு நிமித்தமாயவாறு காண்க’ என இதனைக் காட்டுவர்.  ‘பிறப்பே குடிமை’ (மெய்ப்பாட்டியல் 25) என்புழிக் குடிமைக்கு ‘உள்ளி …. படர்பொழுதெனவே’ என்பது காட்டி, ‘தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமேல் வைத்துச் சொல்லினமையின் குடிமையாயிற்று’ என்பர் பேராசிரியர்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழாநிற்பர் என்றது, யான் இவளைப் பிரிதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என் நெஞ்சே, நீ பொருள்மேற் சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பது.

Meanings:  ஈன் பருந்து – a female kite that has hatched her eggs, a female kite with young chicks, a female kite that has laid eggs, உயவும் – it grieves, வான் பொரு – hitting the sky, touching the sky, நெடுஞ்சினை – tall branches, பொரி – rough, cracked, parched, அரை – tree trunk, வேம்பின் புள்ளி நீழல் – neem tree’s dotted shade, Azadirachta indica (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), கட்டளை அன்ன – like touchstone, like gold rubbing stones of goldsmiths, இட்டு – drawing, அரங்கு – squares, இழைத்து – scratching and creating, கல்லாச் சிறாஅர் – untutored children (சிறாஅர் – இசைநிறை அளபெடை), நெல்லி வட்டு ஆடும் – play with gooseberries as dice, Phyllanthus emblica, வில் ஏர் உழவர் – those who use their bows for their livelihood, wayside bandits, வெம்முனைச் சீறூர் – harsh villages, சுரன் முதல் – in the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), வந்த – came, உரன் மாய் – strength ruining, மாலை – evening, உள்ளினென் – I thought, அல்லெனோ – did I not, யானே – me (ஏ – அசைநிலை, an expletive), உள்ளிய – intended, thought, வினை முடித்தன்ன – like deeds done, இனியோள் – the sweet young woman, மனை – house, மாண் – big, splendid, சுடரொடு – with lamps, படர் – sorrow, பொழுது எனவே – at that time (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 4, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கானலஞ்சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇத்,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை  5
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர் கொல் தோழி, உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்  10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே?

Natrinai 4, Ammovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
If we tell the lord of the shores,
……….where fishermen from a village
……….near the seashore rest under the thick
……….shade of blue punnai trees drying their
……….knotted nets with beautiful gaps, 
……….and waiting for the right time to go to sea,
that our life here will become difficult
if mother knows about your love affair,
will he take you, my friend, to his sweet town,
where salt merchants cry out prices
of white salt stirring their cattle, and flocks
of black-legged white herons in the fields
fly away in fear to large backwaters,
on hearing the loud sounds of wagon wheels
grinding the sand on the long path?

Notes:  அலர் ஏற்பட்டதைக் கூறி வரைவு கடாயது.  அம் கண் அரில் வலை (4) – ஒளவை துரைசாமி உரை – அழகிய கண்களோடு கூடித் தம்மிற் பின்னிச் சிக்குண்டு கிடக்கும் வலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறுக்குண்டு கிடந்த வலை.  உறைவின் ஊர்க்கு (12) – ஒளவை துரைசாமி உரை – உறைவு இன் ஊர்க்கு, உறைதற்கு இனிதாகிய ஊர்க்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – உறைவிடமாகிய ஊர்க்கு (இவர் அகநானூறு பாடல்கள் 132, 274, 284, 308, 340 ஆகிய பாடல்களின் உரையில் இனிய ஊர் என எழுதியுள்ளார்), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறைவிடமாகிய ஊருக்கு.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரதவர் புன்னையின் கீழிருந்து கடலிற் செல்லுதற்குப் பத நோக்கி அதுகாறும் வலையை உணக்கும் துறைவன் என்றது, தலைவன் சிறைப்புறத்திலிருந்து, தலைவியைக் கூடுவதற்கு யாருமில்லாத பதம் பார்த்து அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பது என்றதாம்.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சகடம் மணலில் மடுத்து முழங்கும் ஓசைக்குக் கழனி நாரை வெருவும் என்றது, தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங்கலன் தந்து வரைவரு மண முரசொலி கேட்பின் அலரெடுக்கும் ஏதிலாட்டியர் வாய் வெருவி ஒடுங்கா நிற்பர் என்றதாம்.

Meanings:  கானல் அம் சிறுகுடி –  small village on the seashore (அம் – சாரியை), beautiful village on the seashore, கடல் மேம் பரதவர் – fishermen who desire and go to the sea (மேம் பரதவர் – விரும்பும் பரதவர், ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் பரதவர் என வந்தது), நீல் நிற – blue colored (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), புன்னைக் கொழு நிழல் அசைஇ – resting in the punnai trees’ thick shade – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (அசைஇ – சொல்லிசை அளபெடை), தண் பெரும் பரப்பின் – into the cool ocean, ஒண் பதம் நோக்கி – looking for the perfect time, அம் கண் அரில் வலை – beautiful nets with fine mesh, tightly knotted nets, உணக்கும் – they dry, துறைவனொடு – with the lord of the seashore, அலரே அன்னை அறியின் – if mother hears the rumors, இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு – that life here will become difficult for us, எனக் கூறின் – if we say that, கொண்டும் செல்வர் கொல் தோழி – will be take you along my friend, உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – salt merchants call out the price for white salt, கண நிரை – cattle herd, கிளர்க்கும் – are roused, நெடு நெறி – long path, சகடம் – wagons, carts, மணல் மடுத்து உரறும் ஓசை – sounds of rubbing against the sand into which their wheels sink, கழனி – field, கருங்கால் வெண்குருகு – white herons/egrets/storks with black legs, வெரூஉம் – they fear (இன்னிசை அளபெடை), இருங்கழிச் சேர்ப்பின் – on the shores of the vast/black backwaters, தம் உறைவின்/உறைவு இன் ஊர்க்கே – to the town where he resides, to the sweet town where he lives (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 5, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நிலம் நீர் ஆரக், குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்பக்,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி  5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் இன்று செல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே.

Natrinai 5, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
The cold season with wind and rain sprinkles
has confused your crying eyes that have sent
a message, making your lover’s departure
difficult in this early dew season when cold
winds bring back friends who are leaving today,
when clouds that poured heavily rise up in the
south and roar, the earth gets filled with water,
hills flourish with foliage, crops near wide springs
have grown dense, and fragrant vines, mangled by
mountain dwellers, sprout and coil around dense,
fragrant sandal trees.

He will not leave.  Get rid of your sorrow!  

Notes:  வினைவயின் (பொருளீட்டும் பணியின் பொருட்டு) செல்லும் தலைவனின் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.  குழைப்ப (1) – ஒளவை துரைசாமி உரை – குழை இளந்தளிர், குழைப்ப என்றது பெயரடியாகப் பிறந்த வினை.  கால்யாப்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருங்கி வளர.  இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப என்புழி, நீ அவர் பிரிவார் என்ற கருத்தால் மெலிந்த மெலிவு அகன்று நின் காதலனை இனி ஆர முயங்கி உடல் பூரித்திடுக என்பது.  தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் (6) – ஒளவை துரைசாமி உரை – மேகம் தென்திசை நோக்கி எழுந்து சென்று முழங்கும் வாடைக்காலமும். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மேகமானது தென்திசையின்கண்ணே எழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக் காலத்தும்.  இன்று செல் இகுளையர் தரூஉம் வாடை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இன்று பிரிந்து செல்லும் தோழியரை, வாடைக் காற்று செல்லாது கூட்டுகிறது.  மயங்கு இதழ்  (9) – ஒளவை துரைசாமி உரை ஒன்றோடு ஒன்று கூடுதலையுடைய. பூவிதழ் போன்ற, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருந்திய இமைகளை உடைய,

Meanings:  நிலம் நீர் ஆர – the land filled with water, குன்றம் குழைப்ப – the mountains flourish, அகல்வாய்ப் பைஞ்சுனை – wide-mouthed fresh springs, பயிர் கால் யாப்ப – the plants have grown densely, the plant stems are entangled, குறவர் கொன்ற குறைக் கொடி – the vines that mountain dwellers have reduced/chopped, நறைப் பவர் – fragrant vines, நறுங்காழ் ஆரம் சுற்றுவன – surround the fragrant dense sandal trees, surround the fragrant hard-core sandal trees, Santalum album, அகைப்ப – flourishing, பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி – clouds that did the task of pouring heavy rains, தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் – early dew season is when those clouds that rise up in the south causing sorrow to those who are separated, in this early season when clouds that rise up in the south roar, அரிதே – difficult (ஏ – அசைநிலை, an expletive), காதலர்ப் பிரிதல் – for your lover to leave, இன்று செல் இகுளையர்த் தரூஉம் – bringing back friends who are leaving today (தரூஉம் – இன்னிசை அளபெடை), வாடையொடு – along with cold northern winds, மயங்கு இதழ் – sad eye lids, eye lids that resemble, மழைக் கண் பயந்த தூதே – the message sent by moist eyes, the message sent by crying eyes (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 6, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படி
நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதனின் மாமைக்,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந்தோள் குறுமகட்கு,
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,  5
‘இவர் யார்?’ என்குவள் அல்லள், முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்  10
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே.

Natrinai 6, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby
Her dark beauty is like the fiber-removed
stems of thick, white waterlilies and her
moist eyes are like blue waterlilies that rise
up.  The loins of this beauty have yellow
beauty spots.

If there is a messenger to talk to this pretty
young woman with thick arms,
she without malice will not ask, “who is he?”

The young woman with thick black hair
with the fragrances of forests
owned by Ōri owning mighty bows,
……….where frolicking, delicate deer
……….eat ripe kumilam fruits with curved
……….stems that grow along the forest paths,
will be giddy with joy, if she knows that I
have come.

Notes:  இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தலைவியிடம் சென்று கூறுவாரை நான் பெறவில்லையே என்று வருந்திக் கூறியது.  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  பெரும் பேதுறுவள் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – களிப்பினால் பெரிதும் மகிழ்வாள், ஒளவை துரைசாமி உரை – பெருங் கலக்கமுற்று வருந்துவள்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புணர்ச்சி விருப்பம் குறித்ததால் இப்பாட்டு குறிஞ்சியாயிற்று.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு = காம்பு.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  குமிழின் கனி மானுக்கு உணவாகும் என்றது யாம் வந்திருக்கின்றேம் என்று கூறும் அச் சொல்லானது நமது தலைவிக்கு மகிழ்வு அளிக்கும் என்றதாம்.  வரலாறு:  ஓரி.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Natrinai 6, 52, and 320 have references to Ōri.

Meanings:  நீர் வளர் ஆம்பல் – white waterlily flowers growing in the water, தூம்புடை திரள் கால் – thick stems with hollow cores, நார் உரித்தன்ன – like the fibers removed, மதனின் – with beauty, மாமை – dark color, குவளை அன்ன – like blue waterlilies, ஏந்து எழில் – with beauty, very beautiful, lifted and beautiful, மழைக் கண் – moist eyes, திதலை அல்குல் – yellow beauty spots on her loins, பெருந்தோள் – thick arms, rounded arms, குறுமகட்கு – to the young woman, எய்தச் சென்று – going to her, செப்புநர் – somebody who can tell her, பெறினே – if I can get (ஏ – அசைநிலை, an expletive), இவர் யார் என்குவள் அல்லள் – she will not ask, ‘who is he’, முனாஅது – without hatred (இசை நிறை அளபெடை), அத்த – of the wasteland, குமிழின் – kumilam tree’s, Gmelina arborea, கொடு மூக்கு – curved stems, விளை கனி – ripe fruits, எறி மட மாற்கு – for the leaping innocent deer, for the leaping young deer, for the leaping delicate deer, வல்சி ஆகும் – they will become food, வல் வில் ஓரி – king Ōri with a strong bow, கானம் – forest, நாறி – having the fragrances, இரும் – black, பல் ஒலிவரும் கூந்தல் – very thick flowing hair, பெரும் பேதுறுவள் – she will be greatly bewildered, யாம் வந்தனம் எனவே – if she knows that I have come (யாம் – தன்மைப் பன்மை, first person plural.  வந்தனம் – தன்மைப் பன்மை, first person plural.  ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 7, நல்வெள்ளியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்கப்,
பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக்,
கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பத்,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்  5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி,
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ்சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே.

Natrinai 7, Nalvelliyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
The springs in the vast land with gods
are brimming with water,
roaring waterfalls cascade down tall
mountains, and rapid, deep forest
streams with rolling stones, where bamboo
poles disappear attack the forests with
uproar.
The sky is pouring rain, loud thunder
roars with lightning strikes, oh friend,
and an elephant with lines on its face eats
white paddy and sleeps on cool, fragrant
mountain slopes, where small-leaved
sandalwood trees dry out in huge forests.

On seeing the change in the weather,
he will return soon and marry you!

Notes:  அறத்தொடு நின்ற பின்பு திருமணம் செய்து கொள்ளாமல் தலைவன் பொருள்தேடி நெடுந்தூரம் பிரிந்து போனான்.  அந்நிலை ஆற்றாத தலைவிக்குத் தோழி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – இவர் மதுரை நெல்வெள்ளியார் என்று கோடற்கும் இடமுண்டு. மூங்கில் நீரில் மறைதல் கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  இறைச்சிப் பொருள் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழை பெய்யத் தொடங்கும் என்றது, வருந்திய நின்மாட்டு அருள் செய்ய வேண்டி இன்னே வருவர் என்பதாம்.  இறைச்சிப் பொருள் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலும் என்றது, காதலானோடு இன்பம் நுகர்ந்த நீ கவற்சியின்றி சேக்கையிலே துயிலப் பெறுவாய் என்பது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  சூருடை நனந்தலை – wide space with gods, fierce wide space, சுனை நீர் மல்க – spring waters are full, பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – waterfalls roar in the huge mountain ranges, கல் அலைத்து இழிதரும் – rolling rocks and flowing down, கடுவரல் கான் யாற்று – in the rapidly flowing forest stream, கழை மாய் நீத்தம் – bamboo poles disappear  in the flood water, காடு அலை ஆர்ப்ப – flood waters attack the forest with noise, தழங்கு குரல் ஏறொடு முழங்கி – with the loud roaring sounds of thunder, வானம் இன்னே பெய்ய – the sky is pouring rain now, மின்னுமால் தோழி –  there is lightning my friend (மின்னுமால் – ஆல் அசைநிலை, an expletive), வெண்ணெல் அருந்திய – at bamboo seeds, ate white paddy, வரி நுதல் யானை – elephant with lines on its forehead, elephant with spots on its forehead, தண் நறுஞ்சிலம்பில் துஞ்சும் – sleeps on the cool fragrant mountain slopes, சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே – in the huge forest where small-leaved sandal trees dry (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம், பெருங்காட்டே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 8, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள் கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே; அகல்வயல்  5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே.  10

Natrinai 8, Poet is Unknown, Kurinji Thinai – What the hero said
Whose daughter is she, the delicate young woman
with a sapphire-like body, sorrow in her pretty,
moist eyes with red lines, wearing a skirt with
many flowers and leaves on her loins?  May her
father live long!  She has caused me great suffering!

May the mother who gave birth to her receive
equal worth of Thondi city of Poraiyan with sturdy
chariots, where fields are huge and waterlilies bloom
in haystacks looking like eyes, their elegant strong
stems smeared with mud, brought in the sheaves
that are stacked by those who receive them from
the grain reapers who weed them from the fields.

Notes:  இயற்கைப் புணர்ச்சியின் இறுதிக்கண் தலைவியை அவள் தோழியருடன் கண்ட தலைவன் இவள் எனக்கு எய்தற்கு அரியாளாம் என ஆற்றானாகி, அவள் பெற்றோரை வாழ்த்தியது.  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இச்சான்றோர் பெயர் அச்சுப்படிகளில் காணப்படவில்லை.  ஆயினும் புதுப்பட்டி ஏட்டிலும் தேவர் ஏட்டிலும் கண்ணகனார் என்ற குறிப்பு ஒன்று துரைக்கூற்றின் இறுதியில் காணப்படுகின்றது.  ஒளவை துரைசாமி உரை – ‘புணர்தல் பிரிதல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 16) என்ற நூற்பா உரையின்கண், இப்பாட்டைக் காட்டி இது ‘புணர்தல் நிமித்தம்’ எனவும், மெய்தொட்டுப் பயிறல் எனத் தொடங்கும் களவியல் நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இது நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறியது’ எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  நெய்தல் அரிவோரால் அரிந்து கொணரப்பட்டுக் கதிர்ப் போரினும் மலரும் என்றதனாலே, இவள் யாண்டுச் செல்லினும் ஆண்டுச் சிறப்பு எய்துக என்றவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அரிவனர் அரிந்து கொணர்ந்து தொகுக்கப்பட்ட நெற்போர்வின்கண் தான் படினும் நெய்தல் கண் போல் மலரும் என்றது, கூர்வேல் இளையர் பலர் சூழ்தரப் போந்து அவரிற் பிரிந்து தனிப்பட்ட யான், இவண் இவளை எய்தியது போலவே ஆயமகளிர் பலர் சூழ்வரப் போந்து அவரிற் பிரிந்து தனிமையுற்று இவண் எய்தினாளாயினும் தன் மலர்போன்ற கண்களை விழித்துப் பொதுவும் சிறப்புமாகிய இருநோக்கமும் எனக்கு அருளி மகிழ்வித்தாள் என்றது.  வரலாறு:  பொறையன், தொண்டி.  There are references to Thondi in Natrinai 8, 18 and 195.  Akanānūru 60 has a reference to Thondi city belonging to Poraiyan, a name for Chēra kings.  Ainkurunūru 178 has a reference to Thondi owed by Kuttuvan, which is another name for Chēra kings. 

Meanings:  அல்கு படர் உழந்த – attained great sorrow, அரி மதர் மழைக்கண் – proud moist eyes with red lines, luscious moist eyes with red lines, பல்பூம் பகைத் தழை – many different kinds of flowers and leaves, நுடங்கும் – swaying, அல்குல் – loins, திரு மணி புரையும் மேனி – beautiful sapphire-like body, மடவோள் யார் மகள் கொல் – whose daughter is this delicate woman, இவள் தந்தை வாழியர் – may her father live long, துயரம் உறீஇயினள் எம்மே – she caused me suffering (உறீஇயினள் – அடைவித்தவள், சொல்லிசை அளபெடை, எம் – தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive), அகல்வயல் அரிவனர் அரிந்தும் – in the wide fields even though the reapers reap, தருவனர்ப் பெற்றும் – those who give receive, தண் சேறு தாஅய் – cool mud smeared (தாஅய் – இசைநிறை அளபெடை), மதனுடை நோன் தாள் – pretty/elegant strong stems, கண் போல் நெய்தல் – waterlilies appear like eyes, போர்வில் பூக்கும் – blooming on hay stacks, திண் தேர்ப் பொறையன் தொண்டி – King Poraiyan of Thondi with his sturdy chariots, தன் திறம் பெறுக – may she attain greatness like that, இவள் ஈன்ற தாயே – the mother who gave birth to her (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 9, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி  5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே,
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்  10
நறுந்தண் பொழில கானம்
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

Natrinai 9, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine
On our path cuckoos will prick mango buds
and sing happily in the fragrant, cool groves of the
forest.  Faultless, curious travelers will think you
are a goddess.  My distressing sorrow will end if
I embrace your fine arms that resemble bamboo.

There are a few towns on our way.  Whenever
there is heavy shade, we can rest for a long time.
Whenever we see sand, you can make sand houses.
There are punku trees with flowers like puffed rice,
whose flame-like tender sprouts you can smear
on your pretty breasts and make them prettier.
My lover with sparkling white teeth!  Do not worry!
Let us go soon!

Notes:  உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கில் தலைவன் இடைச்சுரத்திற் கூறுதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், பொருள் 41) எனத் தொடங்கும் நூற்பா உரையில் ‘அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்’ என்றதனானே தலைவியிடத்துத் தலைவன் கூறின பலவுங் கொள்க, என்றுரைத்து, இப்பாட்டைக் காட்டி, ‘இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது என்பர் நச்சினார்க்கினியர்.  ‘இனி இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியலாணையிற் கிளத்தற்கும் உரியவன்’ (தொல்காப்பியம், பொருள் 195-6) என்பதன் உரையில் இப்பாட்டினைக் காட்டி, இதனுள் ‘வருந்தாது ஏகுமதி; எனவே வழிபடு தெய்வம் கட்கண்டால் விடுவார் இல்லாதது போல, நின்னை விடுதல் எனக்கு அறமன்று எனக் கூறி மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு காண்க’ என்பர் பேராசிரியர்.  அணங்கு கொள (6) – H. வேங்கடராமன் – அதன் அழகு மேன்மையுறுமாறு, ஒளவை துரைசாமி – தெய்வம் வீற்றிக்கிருக்குமாறு, பின்னத்தூர் – வீற்றிருக்கும் தெய்வம் சிறக்குமாறு, ச. வே. சுப்ரமணியன் – கண்டாரை வருத்தும்படி உள்ள.  In Natrinai 76, there is a similar situation.  The hero talks about resting on the path, to comfort the heroine.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  The heroine’s friend utters these words, indicating that the heroine will be ruined by the separation.  நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.  அலமரல் – தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  அழிவு இலர் முயலும் – those who do faultless things, ஆர்வ மாக்கள் – anxious people, வழிபடு தெய்வம் – goddess who is worshipped, கண் கண்டாஅங்கு – like they saw with their eyes (கண்டாஅங்கு – இசைநிறை அளபெடை), அலமரல் வருத்தம் – distressing sorrow, தீர – to end, யாழ – அசை, an expletive, நின் – your, நல மென் – fine delicate, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, எய்தினம் ஆகலின் – if I attain, பொரிப் பூம் புன்கின் – of beech trees with puffed rice-like flowers, புங்கம், புன்கம்,  புன்கு, Indian Beech, Pongamia Glabra or Pongamia Pinnata, அழல் – glowing, தகை – beautiful, ஒண் – bright, முறி – tender sprouts, சுணங்கு அணி – with pallor spots, with yellow spots,  வன முலை – beautiful breasts, அணங்கு கொள – to cause distress,  for god to be seated there, திமிரி – smeared, rubbed, நிழல் காண்தோறும் – whenever we see shade, நெடிய வைகி – stay for long, மணல் காண்தோறும் – whenever we see sand, வண்டல் தைஇ – make little sand houses, make sand dolls (தைஇ – சொல்லிசை அளபெடை), வருந்தாது – do not feel sad, ஏகுமதி – you go with me (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), வால் எயிற்றோயே – oh one with white teeth (ஏ – அசைநிலை, an expletive), மா நனை – mango tree buds, கொழுதி மகிழ் குயில் – happy cuckoos that prick, ஆலும் – sing, நறும் தண் – fragrant and cool, பொழில கானம் – forest with groves, குறும் பல் ஊர – with few small towns, யாம் செல்லும் ஆறே – on the path that we will take (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 10, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி, பூக்கேழ் ஊர!
இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்தேர்க்  5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன, நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

Natrinai 10, Poet Unknown, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the town laden with flowers!
Even if her lifted, beautiful breasts sag
and even if her sapphire-colored hair
draping on the back of her golden body
turns white, please do not abandon her!

She understands clearly your faultless
words that are like the unfailing spear
of Palaiyan of Pō ōr who owns elephants
with white tusks,
who helped the victorious Chōzhas owning
sweet, strong liquor and fine jewels,
to suppress the people of Kongu country.

Notes:  தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, தலைவியை தலைவன்பால் சேர்த்து, ‘இவளை நன்றாக பாதுகாப்பாயாக’ என்று தலைவனிடம் கூறியது.   ஒளவை துரைசாமி உரை – ‘இறப்பே நிகழ்வே எதிரதென்னும்’ (தொல்காப்பியம், பொருள் 503) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இப்பாட்டைக் காட்டி, ‘நிகழ்காலம் இளமைப்பருவம் என்பது தோன்ற வந்தது; இதனுள் நீத்தல் ஓம்புமதி என்பது எதிர்காலம் குறித்து நின்றது’ என்பர் இளம்பூரணர்.    ‘தானே சேறலும்’ (தொல்காப்பியம், பொருள் 27) என்று தொடங்கும் நூற்பா உரையில் ‘கொற்றச் சோழர்…….தேறிய இவட்கே’ என்பதைக் காட்டி, ‘இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது’ என்றும் ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருள் 39) என்ற நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இந்நற்றிணை தலைவியைப் பாதுகாக்க எனத் தோழி கையடுத்தது’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  வரலாறு:  போஒர், பழையன்.  Palaiyan and his town Pō ōr on the shores of Kaviri, are mentioned in Akanānūru 186.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  பூக்கேழ் ஊர (4) – ஒளவை துரைசாமி உரை – பூக்கேழ் ஊர எனப் பூக்களைக் காட்டிக் கூறியது, பூக்கள் தேனை உண்ணும் வண்டினத்தால் தேன் குன்றியதும் கைவிடப்படுதல் போல, நீயும் இவளது இளநலம் வாடியபோது இவளைக் கைவிடற்பாலையல்லை என்றதற்கு.  பூக்கேழ் ஊரனாகலின் நின்னூர்க்கண் பூவோரன்ன மகளிர்க்குக் குறையில்லை ஆகலின், நீ வண்டோரனையையாய் மாறுதல் கூடாது என்பது விளங்க நீங்கற்க என்னாமல் ஓம்புமதி என வற்புறுத்தினாள் என்றுமாம்.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – even if her lifted beautiful breasts sag, பொன் நேர் மேனி – gold like body, மணியின் தாழ்ந்த – sapphire-like and hanging, நல் நெடுங்கூந்தல் – fine long hair, நரையொடு முடிப்பினும் – even if the braids become white, நீத்தல் ஓம்புமதி – please do not abandon her (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), பூக்கேழ் ஊர – oh lord of the town filled with flowers (அண்மை விளி), இன் கடுங்கள்ளின் – with sweet strong liquor, இழை அணி – fine jewels, நெடுந்தேர்க் கொற்றச் சோழர் – the victorious Chōzhas with tall chariots, கொங்கர்ப் பணீஇயர் – in order to control the Kongu country people (பணீஇயர் – சொல்லிசை அளபெடை), வெண்கோட்டு யானை – white tusked elephants, போஒர் கிழவோன் பழையன் – Palaiyan, the lord of Pō ōr, வேல் வாய்த்தன்ன – like the unfailing spear (of Palaiyan), நின் பிழையா நல் மொழி தேறிய இவட்கே – your faultless words that she understands (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 11, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்,
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே,  5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

Natrinai 11, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend says to her, as the hero listened nearby
Your body is distressed
like an unworn wilted garland,
since you missed
the tryst that he suggested.
You are hurt by slanderers
who talk ill of you and you
sulk, thinking that your lover
will not come.  Destroy such
thoughts that are in your heart!

When the moonlight spreads
on the seashore grove,
he will come in his chariot,
riding beside the waves on the
shore filled with flowers and sand,
and his charioteer will handle
his bridle with caution,
protecting the crabs on the ground.

Notes:  காவல் மிகுதியால் தலைவனைக் கூடப் பெறாமையால் ஆற்றாது வருந்திய தலைவிக்குக் கூறுவாளாய், சிறைப்புறத்திருந்த தலைவன் வரைவொடு வருமாறு தோழி சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவும் ஒரு நெறி.  பூ மணல் (6) – ஒளவை துரைசாமி உரை – பூக்கள் விழுந்து கிடைக்கும் மணல், வெண்மை நிறமும் மென்மைப் பண்பும் உடைமைபற்றிப் பூமணல் எனப்பட்டதுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இளமணல்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அலவனுக்கு ஊறு ஏற்படாதவாறு தேர் செலுத்தப்படுமென்றது தலைவி பழிச்சொல்லால் வருந்தாத வண்ணம் வரைந்து கொள்வான் என்பதாம்.

Meanings:  பெய்யாது – not worn, வைகிய – lying around, கோதை போல – like a garland, மெய் – body, சாயினை – you are distressed, அவர் செய் குறி – the tryst that he had indicated, பிழைப்ப – missed, உள்ளி – thinking, நொதுமலர் – strangers, நேர்பு உரை – the gossip that has risen, தெள்ளிதின் – clearly, வாரார் என்னும் – that he will not come, புலவி உட்கொளல் – do not sulk,  ஒழிக – destroy (such thoughts), மாள – முன்னிலை அசை, an expletive of the second person, நின் நெஞ்சத்தானே – in your heart (ஏ – அசைநிலை, an expletive), புணரி பொருத – waves have attacked the shore and filled, பூ மணல் – beautiful sand, sand with flowers, soft sand, அடைகரை – seashore filled with sand, seashore filled with water, ஆழி – wheels, seashore, மருங்கின் – near, அலவன் – crabs, ஓம்பி – protecting, வலவன் – the charioteer, வள்பு – bridle, ஆய்ந்து ஊர – carefully riding, நிலவு விரிந்தன்றால் கானலானே – the moonlight spread on the seashore grove (விரிந்தன்றால் = விரிந்தன்று + ஆல் , ஆல் அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 12, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்  5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
‘இவை காண்தோறும் நோவர் மாதோ,
அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.  10

Natrinai 12, Kayamanār, Pālai Thinai – What her heroine’s friend said to the hero
Wood apple fragrances in pots that
are filled with curds, their noisy
churning rods tied to posts and reduced
by circling ropes, are the first sounds of
dawn when darkness leaves.

She hides her body well and removes
from her feet beautiful jingling anklets,
and along with her ball, so splendidly
decorated with lines, places them aside.
“Whenever they see these, they’ll be sad,”
she thinks about her pitiful friends
and tears come to her eyes beyond control,
even though she desires to leave with you!

Notes:  தலைவனோடு தலைவி செல்லத் தோழி உடம்படுத்தினாள்.  பின்பு தலைவியிடம் அவ்வுடன்போக்கு இப்போது வேண்டாம் என்று நிறுத்தினாள்.  தலைவனிடம் சென்று, ‘தலைவி உன்னுடன் வர உடன்பட்டாள்.  ஆனால் தோழியர் நோகுவர் என வருந்தினாள்’ என்று அச்செலவைத் தவிர்த்தாள்.  திருமணத்திற்கு முயல்க என அறிவுத்துகின்றாள்.  ஒளவை துரைசாமி உரை – ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருள் 39) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இதனைக் காட்டி, ‘இந் நற்றிணை போக்குத் தவிர்ந்ததாம்’ என்றும், ‘தாயத்தினடையா’ (தொல்காப்பியம், பொருள் 25) என்ற நூற்பா உரையில் ‘தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் ‘இவை காண்தோறும் நோவர் மாதோ’ என்ற இப்பகுதியைக் காட்டி, ‘என்பதும் இதன்கண் அடங்கும்’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர்.  இஃது உடன்போக்குத் தவித்தற்பொருட்டுக் கூறியதென்பர் இளம்பூரணர்.  பாசம் (2) – ஒளவை துரைசாமி உரை – பசிய நாரால் திரிக்கப்பட்டுப் பசுமை நிறம் படிந்திருப்பது தோன்றப் பாசம் என்றார்.  கயிறு என்பது வடமொழியில் பாசம் எனப்படுதல் பற்றிப் பாசம் என்றார் என்பாருமுளர். பாசம் தின்ற (2) – ஒளவை துரைசாமி உரை – அறைப்புண்டு தேய்ந்த.  கடைகயிறு மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் சுற்றியும் திரிதலால் மத்தின் காம்பு தேய்த்தமை தோன்றப் பாசம் தின்ற தேய்கால் மத்தம் எனப்பட்டது.   வெளில் முதல் முழங்கும் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தறியடியில் ஓசை முழங்குகின்ற, ஒளவை துரைசாமி உரை – மன்றுவெளி காறும் முழங்கும், நாட்காலையில் ஊர் ஆனிரைகள் வந்து தொகும் வெளியிடம், இனி இதை தூண் எனக் கோடலும் உண்டு.  வரிப் பந்து –நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  This poet has references to a ball in poem 324 and to anklets in 279.  An anklet-removal ceremony was celebrated right before the wedding.  Natrinai 12, 279, Ainkurunūru 399 and Akanānūru 315, 369, and 385 have references to the anklet-removal ceremony.  Akanānūru 321 has a similar description of a young girl removing her anklets before eloping.  In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, all written by Kayamanār, there are references to a ball played by the heroine.  கமம் – கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  நெய் தெரி இயக்கம்:  பெரும்பாணாற்றுப்படை  158-159 – உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ.

Meanings:  விளம்பழம் கமழும் – wood apple fragrance spreads, Limonia acidissima,  கமஞ்சூல் குழிசி – pots that are full (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), பாசம் தின்ற – ropes have been scarred, ropes have been reduced, தேய் கால் மத்தம் – churning rod bases have been reduced, நெய் தெரி இயக்கம் – churning to make butter, வெளில் முதல் முழங்கும் – sounds from the bases of the wooden poles to which the churning rods are tied, sounds from the town’s common places where cattle are kept together, வைகு புலர் விடியல் – early morning hours when darkness that stayed leaves, மெய் கரந்து – hiding her body, தன் கால் – her feet, அரி அமை சிலம்பு – beautiful anklets with pebbles, கழீஇ – she removes them (சொல்லிசை அளபெடை), பல் மாண் – very splendid, வரி புனை பந்தொடு – along with the ball with lines, along with the ball that has been made tightly with threads, வைஇய செல்வோள் – when she goes to place them (வைஇய – செய்யுளிசை அளபெடை), இவை காண்தோறும் நோவர் – they will be pained whenever they see these, மாதோ – மாது + ஓ – அசைநிலைகள், expletives, அளியரோ – they will be very sad, they are pathetic,  அளியர் – they are pitiable, என் ஆயத்தோர் – my friends, என – thus, நும்மொடு வரவு – going with you, தான் அயரவும் – she desires to do, தன் வரைத்து அன்றியும் – beyond her limits, கலுழ்ந்தன கண்ணே – there are tears in her eyes (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந்தோளோயே! கொல்லன்  5
எறி பொன் பிதிரின் சிறுபல காய
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ,
பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே.

Natrinai 13, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Oh friend with beautiful, thick arms
and moist eyes with red lines that
look like arrows plucked from bodies
of animals killed by the guards!  You
are not getting up and chasing birds!

Do not cry ruining your beauty,
in this place of strangers,
where vēngai trees with many seeds
drop small flowers looking like gold
sparks strewn from a blacksmith’s forge,
and green parrots steal the dense millet
spears, thinking that the peacocks  
nesting in the tall mountains are unaware.

Notes:  இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி, இந்த வேறுபாடு எதனால் ஆயிற்று என்று கேட்டதற்கு தலைவி மறைத்துக் கூறியதால், அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்ததைத் தோழி சொல்லியது.  பறித்த பகழி அன்ன – நற்றிணை 13 – மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண், நற்றிணை 75 – கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல சேயரி பரந்த மா இதழ் மழைக் கண், குறுந்தொகை 272 – சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்.   ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயும் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.   இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  வேங்கை மலர் உதிரப் பெற்ற கூட்டிலிருக்கும் மயில் தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டுபோவதனை அறிந்திருந்தும் ‘நாம் கொய்து கொண்டு போவதை அம்மயில்கள் அறியாவாகும்’ என்று கிளிகள் கருதிக் கவர்ந்தேகுதல் போல, அன்னை பலகாலுந்தூண்டியதனால் நின்னைக் காவல் செய்துறையும் யான் நின் களவொழுக்கத்தை அறிந்து வைத்தும் ‘யான் அறிந்திலேன்’ என நீ கருதி இதனை மறைத்தொழுகா நின்றாய் என்றதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பொற்பிதிர் போல ஒளி திகழும் வேங்கைப் பூ காய் தோன்றும் காலத்தில் அம்மரத்தினின்றும் உதிர்ந்து நீங்கும் என்றது, பிறந்த மனைக்குத் தம் பொற்பால் அழகு விளங்கத் தோன்றிய மகளிர், காமச் செவ்வி எய்துங் காலத்துத் தம் பெற்றோரின் நீங்கிப் பிறர்பால் உள்ளத்தை விடுதல் தவறன்று.  அது இயற்கை அறம் எனத் தோழி தலைவியின் செயலுக்கு அமைதி கூறுவாளாய் உள்ளுறைத்து உரைத்தாள். அழாஅதீமோ (2) – ஒளவை துரைசாமி உரை – அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது, H.வேங்கடராமன் உரை – அழாதீம்.

Meanings:  எழாஅ ஆகலின் – as you did not rise up (எழாஅ – இசை நிறை அளபெடை), எழில் நலம் தொலைய அழாஅதீமோ – do not cry losing your beauty (இசை நிறை அளபெடை, அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது, மோ – முன்னிலையசை, an expletive of the second person), நொதுமலர் தலையே – in the place of strangers (ஏ – அசைநிலை, an expletive), ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன – like how millet field guards killed animals and pulled out the arrows, சேயரி மழைக் கண் – moist eyes with red lines, நல்ல பெருந்தோளோயே – oh young woman with thick arms (ஏ – அசைநிலை, an expletive), கொல்லன் எறி பொன் பிதிரின் – like the scattered metal-smith’s sparks of iron when beaten (பிதிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சிறுபல காய – with many small seeds, வேங்கை வீ உகும் – small flowers from kino trees drop, Pterocarpus marsupium, ஓங்கு மலை – tall mountains, கட்சி மயில் – peacocks in their nests, peacocks in the forest, அறிபு அறியா – thinking they do not know, மன் – ஒளவை துரைசாமி உரை – ஒழியிசை, suggestion of implied meaning, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, ஓ – அசைநிலை, an expletive), பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே – the parrots with green backs come and take the dense millet spears (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 14, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தொல்கவின் தொலைய, தோள் நலம் சாஅய,
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்,
நட்டனர் வாழி தோழி, குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது  5
அலர் எழச் சென்றனர் ஆயினும், மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தள் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்  10
கடுமான் புல்லிய காடு இறந்தோரே.

Natrinai 14, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
Making me lose my original beauty
and letting my arms lose their beauty,
he left me not showering his graces.
However, he is kind, and loves me.
May he live long, oh friend!

My lover went to the mountains,
where bent kānthal flowers
are open with huge petals,
a strong male elephant belonging
to a herd has been caught by a python,
and his female cries out in great distress,
and the sound reverberates
in the tall mountain caves in the forests
of Pulli owning swift horses.  The gossip
that rose is higher than the flames that
burned on the day the Chōzha king ruined
Akappa fortress of the Chēra king in battle.

Notes:  தலைவனின் இயல்புகளைப் பழித்த தோழியிடம் அவனுடைய நல்ல இயல்புகளைத் தலைவி உரைத்தது.  குட்டுவன் (3) – ஒளவை துரைசாமி உரை – பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேரமான்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – களிறு பாந்தளின்வாய்ப் பட்டதாகப் பிடி பிளிறும் பூசல் சென்று விடரகத்து ஒலிக்குமென்றது, தலைவன் பிரிவால் யான் வருந்திய வருத்தம் நோக்கி ஊராரெடுத்த அலர் சேரிசென்று பரவினும் பரவுக என்றதாம்.  வரலாறு:  குட்டுவன், செம்பியன், புல்லி, அகப்பா.  Pulli was a small-region king in the Venkadam Hills.  There are references to him in Akanānūru 61, 83, 209, 295, 311, 359 and 393.  There is a reference to a Chēra Akappa fortress in Pathitruppathu 22.  

Meanings:  தொல் கவின் தொலைய – previous beauty to be lost (தொலைய – வினையெச்சம்), தோள் நலம் சாஅய – beauty of arms to be lost (சாஅய – வினையெச்சம், இசை நிறை அளபெடை), நல்கார் – one who does not give his graces (முற்றெச்சம்), நீத்தனர் ஆயினும் – even if he has left, நல்குவர் – he will give, he will shower his graces, நட்டனர் – he is kind, வாழி – அசைநிலை, an expletive, may he live long, தோழி – oh friend, குட்டுவன் அகப்பா அழிய நூறி செம்பியன் பகல் தீ வேட்ட – higher than the fires set during the day by Chōzhan after he destroyed Chēran’s fort, ஞாட்பினும் – in battle, மிகப் பெரிது அலர் எழச் சென்றனர் – gossip arose very high and he went, ஆயினும் – yet, மலர் கவிழ்ந்து – flowers bent, மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – lovely mountain slopes where glory lilies open their big petals, Gloriosa superba, இனம் சால் – with its herd, வயக் களிறு பாந்தள் பட்டென – since a python caught a strong male elephant, துஞ்சா – not able to sleep, துயரத்து – with distress, அஞ்சு பிடி – female elephant that was afraid, பூசல் – uproars, நெடு வரை விடர் அகத்து இயம்பும் – the sounds echo in the tall mountain cracks, கடுமான் – rapid horses (கடுமான் – பண்புத்தொகை), புல்லிய காடு – forest belonging to Pulli, இறந்தோரே – the one who went (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 15, பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே,  5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம், அலர்க இவ் ஊரே.  10

Natrinai 15, Pāndiyan King Arivudainampi, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh Lord of the shores where roaring
waves pile sand on the shores and
northerly winds blow, creating dunes
that look like swaying, fine fabric!  

You took her flower-like virtue and
she is not the same as when you
united with her first, this faultless
young woman who let go of her
modesty,
like a virtuous woman who let go of her
infant, when a ghoul snatched it from
her.

Let gossip spread in this town!

Notes:  வரைவு நீட்டித்தவழித் தோழி தலைவனிடம் சொல்லி வரைவு கடாயது.  நுணங்கு (2) – H. வேங்கடராமன் உரை – வருத்திய, ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய.  துணியைப் போன்ற மணல் – அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல்,  நற்றிணை 15 – தோழியிடம் முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள, கலித்தொகை 124 – நீல நீர் உடை போலத் தகைபெற்ற வெண்திரை.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடல் கொழித்து ஒதுக்கிய எக்கர் மணலிற் சிலவற்றைக் காற்று அள்ளித் தூற்றுதல் போல நின்னால் நீக்கப்பட்ட எம்மை ஊரார் அலர் தூற்றாநிற்பர் என்பது.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மடவோள் என்பது ஈண்டு மடந்தைப் பருவத்தினைக் குறிக்கவில்லை.  யாரிடம் குழந்தையைக் கொடுப்பது என்று தெரியாத அறிவின்மையைக் குறித்தது.  ஒளவை துரைசாமி உரை – புண்ணுற்று வீழ்ந்த தன் கணவன் பொருட்டுத் தன் குழவியைப் பேய் கைக்கொடுத்த கற்புடைய மகளிர்போல் நின்பால் உளதாகிய காதலின் பொருட்டு யாம் எம் நாணத்தையும் விட்டேம்.

Meanings:  முழங்கு திரை – roaring waves, கொழீஇய – brought and heaped (செய்யுளிசை அளபெடை), மூரி எக்கர் – tall dunes, sand bars with fine sand, நுணங்கு – fine, துகில் நுடக்கம் போல – like the movement of a waved cloth, like a cloth flag movement, கணம் கொள – to pile up, ஊதை தூற்றும் – the cold northerly wind scatters, உரவு நீர்ச் சேர்ப்ப – oh lord of the shores with powerful waves (சேர்ப்ப – அண்மை விளி), பூவின் அன்ன நலம் புதிது உண்டு நீ புணர்ந்த அனையேம் – she is not like she was when you united with her first and took her flower-like virtue/beauty (பூவின் – இன் சாரியை), அன்மையின் யாமே – we without you (ஏ – அசைநிலை, an expletive), நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி – her agreeable heart bears love just for you and bears the pain for it, மாசு இல் கற்பின் – with faultless fidelity, with faultless virtue, மடவோள் – the naive young woman, குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு – like how she abandoned when a ghoul took her baby (பேஎய் – இன்னிசை அளபெடை), சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் – we let go of our modesty which was with us for a long time, அலர்க இவ் ஊரே – let gossip spread in this town (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 16, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புணரின் புணராது பொருளே, பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே, ஆயிடைச்
செல்லினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்  5
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியல் அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து, இனிது நோக்கமொடு செகுத்தன  10
எனைய ஆகுக! வாழிய பொருளே!

Natrinai 16, Siraikkudi Ānthaiyār, Pālai Thinai – What the hero said to his heart
If I stay with her, I will not be able to
attain wealth.  If I want to earn wealth,
I will not be able to unite with her,
You know what is the right thing to do,
oh my heart!

Wealth will be lost like the path of fish
in the middle of a pond with fresh flowers.

Even if I get great wealth seven times the
measure of this huge world surrounded
by oceans, I don’t want it!

The calm, moist, eyes with red lines, that
differ from her heavy earrings,
have stopped me from leaving.  Let wealth
flourish with those who want it.  May you 
live long, my heart!

Notes:  தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருள் ஈட்ட விரும்பிய தன் நெஞ்சிடம் தலைவன் சொன்னது.  நற்றிணை 46 – எய் கணை நிழலின் கழியும்.  ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பூ தேன் ஒழிந்தவிடத்து மணம் இழந்து அழுகிக் கெடுவல்லது, நிலப்பூப் போல வாடுவதின்மையின், வாடாப் பூவின் பொய்கையை என்று சிறப்பித்தார்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கனவிய குழையை உடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியடைய கண்கள், ஒளவை துரைசாமி உரை – கனத்த குழையோடு பொருகின்ற சிவந்த அரி பரந்த குளிர்ந்த இவள் கண்கள்.

Meanings:  புணரின் புணராது பொருளே – if I stay with her I will not attain wealth (ஏ – அசைநிலை, an expletive), பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே – If I want wealth and separate I cannot unite with her, ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும் – whether you go to the wasteland or do not go, நல்லதற்கு உரியை – it is good for you to do the right thing, வாழி என் நெஞ்சே – may you live long my heart, பொருளே – wealth (ஏ – அசைநிலை, an expletive), வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடு மீன் வழியின் கெடுவ – it will get ruined like the path of a fish in the middle of the pond with fresh flowers (வழியின்- (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), யானே – me, விழுநீர் – huge oceans, வியல் அகம் தூணி ஆக – this wide earth as a measure (தூணி = மரக்கால், a grain measure), எழு மாண் அளக்கும் – measuring seven times, விழுநிதி பெறினும் – even if I get great wealth, கனங்குழைக்கு – to the young woman with heavy earrings (கனங்குழை – அன்மொழித்தொகை), to the heavy earrings, அமர்த்த – in strife, differing, சேயரி மழைக் கண் – moist eyes with red lines, cool eyes with red lines, அமர்ந்து இனிது நோக்கமொடு – with the sweet looks, செகுத்தன – they attacked, they ruined,  எனைய ஆகுக – I do not care about it, வாழிய பொருளே – may wealth live for long (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 17, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங்கானத்து அல்கு அணி நோக்கித்,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,  5
‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு’ என
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி! சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி  10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

Natrinai 17, Nochi Niyamankizhār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
Early morning rains that fell on his
fine, lofty mountains rushed down like
the dark ocean waves.
The waterfalls in the huge, wide forest
is where we used to meet
and it hurts me to see that beautiful spot.

I was unable to block my pain and stop
crying.  Tears filled up and flowed down
from my beautiful, lifted, moist eyes.
“Why are you crying?” mother asked me.
“Let me kiss you, my daughter with
bright teeth,” she said with tender words.

I almost forgot to guard my shyness that is
more precious than life, and began to tell her
that the reason for my sorrow was that I
missed the chest of the lord of the mountains,
where sapphire-colored bees swarming on
glory lily flowers sing like sweet lute strings.
However, I caught myself before I
said anything and stopped, my friend! 

Notes:  வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைவன் ஒரு பொழுது வாராதிருத்தலால் வருத்தமுற்ற தலைவி, பின் ஒரு நாள் அவன் அருகில் இருப்பதை அறிந்து, அவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தனற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘யான் அவனை எதிர்ப்பட்ட இடம் கண்டு அழுதேனாக, அதனைக் கண்டு நீ எவன் செய்தனை என வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேன் எனத் தாய் களவு அறிவுற்றவாறு கூறக் கருதி அவன்வயிற் பரத்தமை கூறிற்று’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காந்தளை ஊதிய தும்பி, இன்னும் தேனசையால் முரன்று இயங்கும் மலை நாடனாக இருந்தும், முன்பு என் நலம் உண்டு துறந்து அகன்றான்.  அவன் நாட்டு அஃறினைப் பொருள் இயல்பையேனும் நோக்கி அறிந்திலன் என இரங்கியதாம், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – காந்தளை ஊதிய தும்பி, மேலும் விருப்பம் கொண்டு ஊதும் என்றது, களவு ஒழுக்கத்தை நீட்டிக்க விரும்பும் தலைமகன் செயலை உணர்த்தியது.  ஒளவை துரைசாமி உரை – அன்னை ‘எவன் செய்தனை நின் இலங்கு எயிறு உண்கு’ என மெல்லிய இனிய கூறலின் என்றும், அன்னை சொல்லின் மென்மையும் இனிமையும் என் அறிவை மயக்கியமையின், உயிரினும் சிறந்த நாணத்தையும் மறக்கும் தன்மை எய்தினேன் என்பாள்.  காந்தளை ஊதிய தும்பி யாழ் நரம்பு போல இன்னிசை செய்யும் என்றது, காதலன் மார்பில் படிந்து இன்புற்ற உவகையால் என் நெஞ்சம் அவன் திறமே நினைந்து ஒழுகுகின்றது என்றவாறு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  நாள் மழை தலைஇய – early morning rains fell (தலைஇய – செய்யுளிசை அளபெடை), நல் நெடுங்குன்றத்து – on the fine tall mountains, மால் கடல் திரையின் – like the dark ocean waves (திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இழிதரும் அருவி – waterfalls that cascade down, அகல் இருங்கானத்து – in the wide big forest, அல்கு – nearby, அணி – beautiful, நோக்கி – looked, தாங்கவும் – when I tried to bear, தகைவரை நில்லா – unable to block and stop (நில்லா – நில்லாது என்ற வினையெச்சம் விகாரத்தால் ஈறு கெட்டது), நீர் சுழல்பு – tears increased, tears filled up (சுழல்பு – நிறைந்து, பெருக்கி, கலித்தொகை 142 – நோய் எரி ஆகச் சுடினும் சுழற்றி என் ஆய் இதழ் உள்ளே கரப்பன்), ஏந்து எழில் மழைக் கண் – lifted beautiful wet eyes, கலுழ்தலின் – since they shed tears, அன்னை – mother, எவன் செய்தனையோ – what did you do, நின் இலங்கு எயிறு – your bright teeth, உண்கு என – I will kiss, மெல்லிய இனிய கூறலின் – since she uttered tender sweet words, வல் விரைந்து – very fast, உயிரினும் சிறந்த – better than life, நாணும் – shyness (உம்மை சிறப்பு), நனி – a lot, மறந்து – forgot, உரைத்தல் உய்ந்தனனே – started to say but then I escaped not saying anything (ஏ – அசைநிலை, an expletive), தோழி – oh my friend, சாரல் – mountain slopes, காந்தள்  ஊதிய மணி நிறத் தும்பி – sapphire-colored bees that swarm glory lilies, Gloriosa superba, தீம் தொடை நரம்பின் இமிரும் – they hum like the music of the sweet stringed lute (நரம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வான் தோய் – sky high, வெற்பன் – the lord of the mountains, மார்பு – chest, அணங்கு எனவே – that it was the reason for the sorrow (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 18, பொய்கையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர், வாழி தோழி, மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந்தானைப் பொறையன் பாசறை  5
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.  10

Natrinai 18, Poykaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long!  He will come,
my friend, and remove the many
sorrows spread in your heart.

He has gone through mountain paths,
where a shimmering waterfall looks
like a large single tusk of an elephant
not in rut any longer and with no rage,
in the battle camp of Poraiyan, lord of
Thondi, with victorious spears and an
invincible army, who plucked the
strong and sharp teeth of Moovan, and
embedded them in his fortress door,
where warriors who were terrified
and unable to sleep, now sleep sweetly
like the calm ocean without waves.

Notes:  தலைவன் பிரிந்து வேற்று நாட்டுச் சென்றபொழுது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  இதனுட் பொதிந்த கதை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொறையனது பாசறைக்கண்ணே ஒற்றை மருப்பையுடைய களிறொன்று மதங்கொண்டு வீரர் துயிலாதவாறு வருத்தி அப்பால் மதம் அடங்கிற்று என்பதாம்.   மறவர் இனிது கண்படுப்பக் கதன் அடங்கிய யானை என்க.  அகநானூறு 211 – கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி.  வரலாறு:  பொறையன், மூவன்.   The king in this poem is Chēran Kanaikkāl Irumporai who wrote Puranānūru 74.  He wrote that Puranānūru poem after he was defeated by Chōzhan Chenkanān at Kazhumalam.  Legend says that ‘Kalavali Nārpathu’ was written for him after he lost the battle and was imprisoned.  His friend Poykaiyār supposedly wrote it to free him from the Chōzha king.  However, there is no mention of this in any of the Sangam poems.  Also, Kamil Zvelebil assigns the book ‘Kalavali Nārpathu’ to 850 A.D.  There are references to Thondi in Natrinai 8, 18 and 195.  Akanānūru 60 has a reference to Thondi city belonging to Poraiyan, a name for Chēra kings.  Ainkurunūru 178 has a reference to Thondi owned by Kuttuvan, which is another name for Chēra kings.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், இடையியல் 22).   

Meanings:  பருவரல் நெஞ்சமொடு – with a sad heart, பல் படர் அகல வருவர் – he will come to remove my many sorrows, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – with a door on which he embedded the very strong and sharp teeth of Moovan, கானல் அம் தொண்டிப் பொருநன் – the lord of beautiful Thondi with seashore groves, வென் வேல் – victorious spears, தெறல் அருந்தானைப் பொறையன் – Poraiyan with an army that cannot be defeated, பாசறை – battle camp, நெஞ்சம் நடுக்குறூஉம் – with fear in the hearts, துஞ்சா மறவர் – soldiers who do not sleep, திரை தபு கடலின் இனிது கண்படுப்ப – they sleep sweetly like the calm ocean without waves (கடலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கடாஅம் கழீஇய – musth ended, rutting ended (கடாஅம் – இசைநிறை அளபெடை, கழீஇய – செய்யுளிசை அளபெடை), கதன் அடங்கு யானை – elephant with rage controlled, தடாஅ நிலை ஒரு கோட்டன்ன – a large single tusk, a curved single tusk (தடாஅ – இசைநிறை அளபெடை), ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – the one who went to the mountains with a bright waterfall – like a single tusk (அருவிய – குறிப்புப் பெயரெச்சம், இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 19, நக்கண்ணையார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!  5
இன மணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள், ஆதல் நற்கு அறிந்தனை சென்மே.

Natrinai 19, Nakkannaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores with powerful waves,
where scaly trunks of thāzhai trees look like
backs of curved shrimp, their thorny leaves
like swords of sharks, their mature buds like
tusks of huge elephants, their appearance
varying like does slanting their heads,
their scents like that of festival grounds!

Should you leave now with your charioteer
driving your tall chariot with many bells,
she will not last for few days when you have
agreed to return.
Understand this well and do the right thing!

Notes:  புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்‘ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பாவிற் கூறிய ‘வேண்டாப் பிரிவினும்’ என்புழி நிகழும் தோழி கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி ‘இது தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்..  ஒளவை துரைசாமி உரை – தாழை நின்ற கழிக்கானற் குறியிடம் விழவுக் களம் போலும் எனத் தோழி புனைந்து கூறியது.  காணற்கண் உள்ள எமது மனையகம் விரைவில் மணமனையாதல் வேண்டுமெனத் தன் விழைவு குறித்தவாறு.  சுறவு, இறவு –  சுறா சுறவு எனவும், இறா இறவு எனவும் வந்தன.  ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

Meanings:  இறவுப் புறத்து அன்ன – like the back side of shrimp (இறவு – இறா என்பதன் ஆகாரம் குறுகி உகரம் ஏற்றது, புறத்து – புறம், அத்து சாரியை), பிணர்படு – with scales, with rough surface, தடவு முதல் – thick trunks, curved trunks, சுறவுக் கோட்டன்ன – like the shark’s sword/horn, like the swordfish sword (சுறவு – சுறா என்பதன் ஆகாரம் குறுகி உகரம் ஏற்றது), முள் இலைத் தாழை – thorny leaved thāzhai trees, Pandanus odoratissimus, பெருங்களிற்று மருப்பின் அன்ன – like the tusks of a huge male elephant (மருப்பின் – இன் சாரியை), அரும்பு முதிர்பு – mature buds, நன்மான் உழையின் – like female deer (does) slanting their heads (உழையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), வேறுபடத் தோன்றி – appearing different, விழவுக் களம் கமழும் – fragrance like that of festive grounds, உரவு நீர்ச் சேர்ப்ப – oh lord of the shores with powerful waves (சேர்ப்ப – அண்மை விளி), இன மணி நெடுந்தேர் பாகன் – the charioteer of the tall chariot with many bells, இயக்க – riding it, driving it, செலீஇய – to leave (செய்யுளிசை அளபெடை), சேறி ஆயின் – if you go away, இவளே – she (ஏ – அசைநிலை, an expletive), வருவை ஆகிய சில் நாள் வாழாள் –  she will not live if you return only after a few days, ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – and so understand well and do the right thing (நற்கு – நன்கு என்பதன் விகாரம், சென்மே – ஏகார ஈற்று முன்னிலை வினைச்சொல், மகர மெய்யூர்ந்து வந்தது, a verb of the second person)

நற்றிணை 20, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொனனது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
ஐய! குறுமகள் கண்டிகும்; வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர, கலிங்கம் துயல் வரச்
செறி தொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்  5
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள், வாழிய மடந்தை! நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்,
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழைப்,
பழம் பிணி வைகிய தோள் இணைக்  10
குழைந்த கோதை கொடி முயங்கலளே.

Natrinai 20, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine said to the hero, or what the heroine’s friend said to the hero
Lord!  I saw the young woman as she went
by, the one who slept on your chest.

She walked on our street, her eyes lined
with collyrium, her hair swaying with the
fragrances of new clusters of kadampam
flowers with honey, her clothes moving,
her hands swinging, and her stacked
bangles jingling.

May she live long!  She had many small
pallor spots and she wore gleaming jewels
on her breasts.  Her leaf strand was squeezed
by you holding her close to your chest. 
The garland draping down both her shoulders
with old love distress, was crushed,
and she was without your vine-like embraces.

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைவி கூறியது.  வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதுமாம். ஐய (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை –  ஐய என்பது மெல்லிய எனவும் பொருள்பட அமையுமெனில், அது வாயிலாக புக்க தோழி தலைவிக்குக் கூறியதாகும்.  கொடி முயங்கலளே (11) – ஒளவை துரைசாமி உரை – தொய்யிற்கொடி எழுதப் படாமையால் வருந்துவளாதலின் அவள் பாலே செல்க, H. வேங்கடராமன் உரை – கொடி போன்ற நின் முயக்கம் நீங்கினவளாகி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொடி போன்று நின் முயக்கம் நீங்கினவளாக.  இகும் – அவற்றுள் இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலையுடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 2)  

Meanings:  ஐய – oh sir, oh lord, குறுமகள் கண்டிகும் – I saw the young lady (கண்டிகும் தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, an expletive of the first person), வைகி – staying, மகிழ்நன் –  the lord of the marutham thinai, மார்பில் துஞ்சி – slept on your chest, அவிழ் இணர் – opening clusters, தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கு இயல் அசைவர – honey flowing kadampam flower fragrant bright hair that is swaying, Anthocephalus cadamba, Kadampa Oak (தேம் தேன் என்றதன் திரிபு, மராஅம் – இசைநிறை அளபெடை), கலிங்கம் துயல் வர – clothes swaying, செறி தொடி தெளிர்ப்ப வீசி – moved her hands as her stacked bangles jingled, மறுகில் – on the street, பூப்போல் உண்கண் – flower-like kohl-rimmed eyes, பெயர்ப்ப – moving, நோக்கி சென்றனள் – she looked and went, வாழிய மடந்தை – may the young lady live long, நுண் பல் சுணங்கு அணிவுற்ற – with many tiny pallor spots, விளங்கு பூணள் – woman wearing bright jewels, woman wearing splendid jewels, மார்புறு முயக்கிடை – embracing the chest, ஞெமிர்ந்த சோர் குழை – crushed and wilted leaves, பழம் பிணி – with old love distress, வைகிய – stayed, தோள் இணைக் குழைந்த கோதை – crushed garlands on both her shoulders, கொடி முயங்கலளே – she is without your vine-like embraces (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 21, மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே! உதுக்காண்!  5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன,
அரிக்குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10
நாள் இரை கவர மாட்டித் தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

Natrinai, 21, Maruthan Ilanākanār, Mullai Thinai – What the hero said to his charioteer
The young warriors who walked very fast
for a long distance have slowed down since
they are tired.  Untying their tight waist
wraps, they rest and walk slowly.

Ride fast, oh charioteer, using your unused,
sharp goad on the horses so that we can
reach soon!  Look there!

In the vast woodland where rains have
stopped and the soil is still wet, a pretty,
desirable male forest fowl with a neck with
spots appearing like drops of milk sprinkled
on fragrant, melted ghee, that screeches with
sharp tones, digs the sand, seizes a worm and
places it on his beak and looks at his female
to feed her. 

This is the great situation there!   

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.  அரிக்குரல் (7) – ஒளவை துரைசாமி உரை – அரித்தெழும் ஒலி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடைகின்ற குரல், ச. வே. சுப்பிரமணியன் – தேரையின் குரல், N. Kandasamy – frog tone.  காமரு தகைய (8) – ஒளவை துரைசாமி உரை – விரும்பத்தக்க அழகுப் பொருந்திய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விருப்பம் தரும் தகுதிப்பாட்டினையுடைய.  நாள் இரை (11) – ஒளவை துரைசாமி உரை – நாட் காலையில் பெற்ற இரையாகிய புழு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாட்காலை உணவாகிய நாங்கூழ்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கானவாரணம் புறவில் மணல் கெண்டிப் பெற்ற நாங்கூழாகிய நாள் இரையைத் தன் பெடையை ஊட்டி மகிழ்தற்கு அதனை விரும்பி நோக்கியிருந்தால் போன்று யாமும் வேற்று நாட்டின்கண் ஊக்கத்தோடு முயன்றீட்டிய நம் பொருளை மனையாளோடு இருந்து அறஞ்செய்து இன்புறுதற்கு அதற்கு இன்றியமையாத் துணையாகிய என் காதலியைக் காண்டற்குப் பெரிதும் கண் விதுப்புறா நின்றோம் என்பது உள்ளுறை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் – the young warriors who are tired since they walked very fast for a long distance (செலல் – இடைக்குறை), அரைச் செறி கச்சை – cloth tied tight around their waists, யாப்பு அழித்து – untied, அசைஇ – resting (அசைஇ – சொல்லிசை அளபெடை), வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – they walk little by little as desired by them, தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – use the unused goad on the horses so that we can go fast, ஏமதி வலவ தேரே – ride the chariot oh charioteer (ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலையசை, an expletive of the second person), உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன – like milk drops sprinkled on melted fragrant ghee, அரிக்குரல் – rubbing tones, intermittent tones, sharp tones, frog-tones, மிடற்ற – with throat, with neck, அம் நுண் பல் பொறி – pretty fine many spots, காமரு தகைய – with beauty that is desirable, being desirable and beautiful (காமரு – விகாரம், தகைய – அழகிய, தகுதியுடைய), கான வாரணம் – forest fowl, Gallus sonneratii, காட்டுக்கோழி, பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – in the vast long forest where rains have stopped, புலரா – not dry, ஈர் மணல் – wet sand, மலிரக் கெண்டி- digging up well, நாள் இரை – daily morning food,  கவர மாட்டி – seized and placed on its beak, தன் பேடை நோக்கிய – looks at his mate to feed her, பெருந்தகு நிலையே – this is a great situation (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 22, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை
முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி,  5
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன், வாழி தோழி, உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலைப்,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு,  10
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

Natrinai 22, Poet is Unknown, Kurinji Thinai – What the heroine’s friend said to her
He has come back, the man from
the country, in whose mountain,
in a millet field guarded by a woman,
a female monkey with a wrinkled chin,
along with her mate that does not
know anything other than leaping,
steals huge clusters of millet spikes
that matured first, crushes them with
her palms, collects the grains and stuffs
them in her curved cheeks, and, as rain
pours, drenched, they both appear like
wet austere ritualists who eat after their
Thai month ritualistic bathing.

His arrival in the middle of the night
is like seeing rain in a paddy field with
parched tender grains in a world where
ponds have dried up.  My you live long,
oh friend!

Notes:  வரைந்துகொள்ள வேண்டித் தலைவன் வரக்கண்ட தோழி மகிழ்ந்து கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’ என்ற பகுதிக்கு இதனைக்காட்டி, ‘இதனுள் தினைவினை காலம் வதுவைக் காலமாயினும் வம்பமாரி இடையிடுதலன்றி யான் கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனர் என்றாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பெருங்குரல் கவர்ந்த மந்தி கடுவனொடுநல்வரை ஏறி என்றாள்.  நீயும் மணவாழ்வு மேற்கொண்டு தலைவனுடன் அவன் மனையகம் அடைந்து அவன் தாளாற்றித் தந்த பொருளைப் பாத்துண்டு இனிது வாழ்வாய் என்பது. கண் அற்ற (9) – ஒளவை துரைசாமி உரை – ஈரமின்றிப் புலர்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை (அகநானூறு 189 உரை)  – சுனைகள் ஊற்றுக்கண் அற்றுப்போன.

Meanings:  கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை – the fresh millet that the mountain dwelling woman protects in the mountain ranges, முந்து – first, விளை பெருங்குரல் – mature huge spears, கொண்ட மந்தி – a female monkey that took it, கல்லாக் கடுவனொடு – along with its male monkey that does not know anything other than leaping, நல் வரை ஏறி – climbed on the fine mountain, அங்கை நிறைய – full in its palm, ஞெமிடி கொண்டு – crushing, தன் – its, திரை – wrinkled, அணல் – chin, கொடும் கவுள் நிறைய – filled its curved cheeks, முக்கி – stuffed, வான் பெயல் நனைந்த புறத்த – their backs got wet when it rained, நோன்பியர் தை ஊண் இருக்கையின் தோன்றும் – they appear like those eating after doing their ritual bathing in streams and ponds in the month of Thai (இருக்கையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாடன் – the man from such country, வந்தனன் – he came, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலை – when the world’s ponds have lost their wetness/waters, பீளொடு திரங்கிய நெல்லிற்கு – in the rice field with paddy plants with tender grains that are parched, in a rice field with paddy plants with wilted tender grains, நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே – like the rain that came in the pitch darkness of midnight (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 23, கணக்காயனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதையக்,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும், ஈண்டு நீர் 5
முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.

Natrinai 23, Kanakkāyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
The young woman with hair
combed and tied, conceals her
bangles not revealing her tired arms.
She gives the impression that playing
with her friends had caused her pain.

Her prior beauty, that her mother
protected so well, has been ruined,
and she cries whenever she sees it.
Her ruined eyes, resembling beautiful
waterlilies with small leaves, growing
in the clear, abundant water on the
shores of Korkai, where pearls grow in
the ocean, are unable to hide her love.  

Notes:  களவொழுக்கத்தை நீட்டித்து வரையாது ஒழுகும் தலைவனிடம் தோழி வரைவு கடாயது.  வடிக் கொள் கூழை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாரி முடித்த கூந்தல், ஒளவை துரைசாமி உரை – வடு வகிர்ந்து வாரி முடிக்கப்படும் கூந்தல்.  செப்பு ஊர் நெய்தல் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு அமைந்த நெய்தல், செப்பு – செப்பம், கடைக்குறை.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொற்கை நீரில் முத்து விளையும் என்றது நும் வதுவையால் தலைவி இல்லகத்தார் மகிழ்ச்சி அடைவார் என்றவாறு.  வரலாறு:  கொற்கை.

Meanings:  தொடி – bangles, பழி – blame, மறைத்தலின் – since she hid them, தோள் உய்ந்தனவே – her arms did not reveal their thinness (ஏ – அசைநிலை, an expletive), வடிக் கொள் கூழை – hair combed and tied/braided, combed short hair, ஆயமோடு ஆடலின் இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே – her body looked like it was tired due to playing with her friends, கடிக் கொள – to protect, அன்னை காக்கும் தொல் நலம் – the virtue that mother protected, the beauty that her mother protected, சிதைய – ruined, காண்தொறும் – whenever she sees it, கலுழ்தல் – she cries, அன்றியும் – not just that, ஈண்டு நீர் – abundant water, முத்துப்படு பரப்பின் – of the ocean with pearls growing, கொற்கை முன்துறை – on the shores of Korkai town (முன்துறை – துறைமுன்), சிறு பாசடைய – with small green leaves, with small fresh leaves, செப்பு ஊர் – beautiful, நெய்தல் தெண் நீர் மலரின் தொலைந்த கண்ணே – her eyes resembling waterlilies in the clear waters are ruined (மலரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கண்ணே – ஏ அசைநிலை, an expletive), காமம் கரப்பு அரியவ்வே – they are unable to hide her love (விரிக்கும் வழி விரித்தல், ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 24, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்து அன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 5
‘சேறும் நாம்’ எனச் சொல்ல சேயிழை,
‘நன்று’ எனப் புரிந்தோய், நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய் பொருட்கு
அகல்வர் ஆடவர், அது அதன் பண்பே.

Natrinai 24, Poet is Unknown, Pālai Thinai – What the heroine said to her friend
Oh friend wearing fine jewels!
You did the right thing when you agreed
with him, when he told you that he was
going to another country to earn wealth,
passing through wasteland paths,
where roots of wood apple trees split the
earth as they go down, their branches big,
their rough trunks appearing like the scales
of monitor lizards, their fruits, looking like
balls abandoned after playing, drop on the
green crops below which appear like carpets,
and are picked for food for those who travel.

He is of a mind to do good things. 
To leave to earn wealth is the nature of men!   

Notes:  தலைவனின் பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர்குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்று உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவிலுள்ள ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்துக்காட்டி, ‘இது நன்று செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு = காம்பு.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விளங்கனியே உணவாக இருந்தும் அவை எடுப்பார் மிக்கின்மையால் பயிரிற் பரவிக்கிடக்கும் என்றது, செல்லும் தேயத்து ஆண்டுள்ளாரும் பொருள் வேட்கையாராயினும், ஈட்டுவார் மிக்கின்மையின் நம் காதலர் அங்கே சென்றவுடன் விரைவில் ஈட்டுமாறு கிட்டுவதாகும் என்றதாம்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  பார் பக – splitting the ground, வீழ்ந்த – went down, வேருடை – with roots, விழுக் கோட்டு – with big branches, உடும்பு அடைந்தன்ன – like the scales of monitor lizards that are next to each other, நெடும் – tall, பொரி விளவின் – of wood apple trees with rough cracked trunks, Limonia acidissima, ஆட்டு ஒழி பந்தின் – like balls which are used for playing and then abandoned (பந்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கோட்டு மூக்கு இறுபு – snapping from stems, கம்பலத்து அன்ன பைம் பயிர்த் தாஅம் – spread on green bushes looking like carpets (தாஅம் – இசைநிறை அளபெடை, கம்பலத்து – கம்பலம், அத்து சாரியை), வெள்ளில் – wood apples, வல்சி – food, வேற்று நாட்டு ஆர் இடைச் சேறும் நாம் எனச் சொல்ல – when he said ‘I will go through the harsh path and reach another country’ (சேறும் – தன்மைப் பன்மை, first person plural, நாம் – தன்மைப் பன்மை, first person plural), சேயிழை – oh one with perfect jewels, oh one with red jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நன்று எனப் புரிந்தோய் – ‘that is good’ you said with desire, நன்று செய்தனையே – you did a good thing (ஏ – அசைநிலை, an expletive), செயல்படு மனத்தர் – he is one with the mind to do good things, செய் பொருட்கு அகல்வர் ஆடவர் – men will leave to earn wealth, அது அதன் பண்பே – it is their nature (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 25,  பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு  5
கிளை மலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇச்,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன், பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி,
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி  10
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே.

Natrinai 25, Pēri Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
The lord of the mountains,
………where pidavam flowers
………look like beautiful conch with
………vermilion painted on their backs,
………their petals with red lines,
………their scents spreading far,
………their pollen eaten by bees that
………have lovely colors like the fine
………hues of touchstones on which
………gold is rubbed,
joined us in chasing little parrots
that came to eat our tiny millet.

He left without uttering words.
His leaving is not what caused me pain,
oh beloved friend.  Despite seeing his
unspoiled calm nature, which was like
a bee with a desire for honey but unable
to analyze and choose the right flower,
I tightened my bangles that got loose. 
I think about my senseless deed.

Notes:  தலைவியைத் தோழி குறை நயப்பக் கூறியது.  தலைவனை தன்னுள்ளம் விரும்பினதுப் போலத் தலைவி அதனை ஆராய்ந்து ‘தன்னை விரும்பினன்’ எனக் கொள்ளும் வண்ணம் தோழி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் பல் வேறு நிலையினும்’ என்புழி வரும் பல்வேறு நிலையின்கண் இப்பாட்டைக் காட்டி இங்கே ஓதியவற்றின் வேறுபட வந்தது கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர்.   ஒளவை துரைசாமி உரை –  அவனது வண்டோரன்ன தண்டாக்காட்சி நிலைபேறின்றித் தடுமாறுவது கண்டு தனக்கும் அவன்பால் அன்பு உண்டாயிற்று என்பாளாய் கண்டும் கழல் தொடி வலித்த என் செய்தி என்றும், அதனால் தலைவியின் முகம் பொறாமையால் சிவத்தல் கண்டு, அஃது எனக்குப் பாடறிந்தொழுகாத செயல் என்பதை உணர்கின்றேன் என்பாள் என் பண்பு இல் செய்தி என்றும், அந்நிகழ்ச்சி என் நெஞ்சின்கண் மிக்கு நிற்றலின் நின்பால் உரைப்பேனாயினேன் என்பாள் நினைப்பாகின்றது என்றும் உரைத்தாள்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நறுமணம் இன்னது என்று ஆராயாமல் விழும் வண்டு என்றதனால், அவன் தகுதியற்ற வேறு யாரையேனும் விரும்புதல் கூடும் என்ற எச்சரிக்கையுமாம்.  

Meanings:  அவ்வளை – beautiful conch, வெரிநின் – on the backs, அரக்கு ஈர்த்தன்ன – like painted with vermilion that is red, செவ்வரி இதழ – with red-lined petals, சேண் நாறு – fragrance from a distance, பிடவின் – of pidavam flowers, Randia malabarica, wild jasmine, நறுந்தாது ஆடிய தும்பி – bees that swarmed the fragrant pollen, பசுங்கேழ் – lovely color, green color, பொன் உரை கல்லின் நல் நிறம் – like touchstones with fine colors that are used to rub gold (கல்லின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பெறூஉம் – they get (இன்னிசை அளபெடை), வளமலை நாடன் – the lord of the prosperous mountains, நெருநல் நம்மொடு – yesterday with us, கிளை மலி – branched heavily, சிறுதினைக் கிளி கடிந்து – chased parrots that came for our small millet, அசைஇ – resting (சொல்லிசை அளபெடை), சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் – he left after that without getting an opportunity to talk (பெறாஅன் – இசை நிறை அளபெடை), பெயர்ந்தது அல்லல் அன்று அது – his leaving is not what causes pain, காதல் அம் தோழி – oh my beloved friend, தாது உண் வேட்கையின் – with the desire to eat pollen, with the desire to drink honey, போது தெரிந்து – knowing the flowers, ஊதா வண்டு – a bee that does not buzz, a bee that does not hum, ஓரன்ன – like that, அவன் தண்டாக் காட்சி கண்டும் – even on seeing his appearance that was not ruined, even on seeing his calm appearance, கழல் தொடி வலித்த – tightening the loose bangles, என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே- I think about my senseless deed (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 26, சாத்தந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நோகோ யானே, நெகிழ்ந்தன வளையே,
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச்,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய்  5
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடுதுணை ஆகிய தவறோ, வை எயிற்றுப்
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ்சூழ் ஓதிப் பெருந்தோளாட்கே?

Natrinai 26, Sāthanthaiyār, Pālai Thinai – What the heroine friend said to the hero
My friend is sad!  I am hurting!
Her bangles have slipped down.

Are you leaving since she made the
mistake of going with you in the past
as your partner, the sharp-toothed
young woman with golden pallor
spots, thick dark hair and wide arms,
……….to the wasteland, where,    
……….attacked by the sun’s rays, huge
……….fruits of dwarfed, old jackfruit
……….trees have shriveled,
leaving her mother’s house that has  
firmly mounted, fully stocked grain
silos as tall as mountains, their bases
white with dots?  

Notes:  தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘களவின்கண் இவளுடைய தமர் வரைவு மறுத்த போது நீ உடன்போக்கினைத் துணிந்தாய்.  நின்பாற் கொண்ட பெருங்காதலால் நினக்கு துணையாய் என் தோழி வந்தாளன்றோ?’ என்று  பண்டு நிகழ்ந்த காதல் செயலை நினைப்பித்து செலவு அழுங்குவித்தாள் தோழி.  பிண்ட நெல்லின் தாய் மனை (4) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிண்ட நெல்லின் மனை என்றது, தாய் வீடு செல்வம் மிக்கதாய் இருந்தும் அதனை விட்டு உம்மோடு வந்தது நும்மொடு வாழும் பேற்றைக் கருதியன்றோ என்கின்றாள்.  கெடு துணை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உள்ளத்து எழுந்த அவாக் கெடுமாறு அருகுற்ற துணை, ஒளவை துரைசாமி உரை – கெட்டார்க்கு வேண்டுவன உதவி அக் கேட்டினின்றும் எடுக்கும் துணைவர்; கெடுங்காலை வேண்டுவன உதவும் துணை என்றுமாம்; கெடாதவாறு காக்கும் துணை கெடுதுணை எனப்பட்டது.  துணையாதல் தவறன்மை புலப்படுத்தலின் ஓகாரம் எதிர்மறை.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), நெகிழ்ந்தன வளையே – her bangles have loosened, her bangles have slipped down, செவ்வி சேர்ந்த – firmly set, firmly mounted, புள்ளி – dots, வெள் அரை – white base, plain base, விண்டுப் புரையும் – like a mountain, புணர் நிலை – being together, நெடுங்கூட்டு – in the tall grain silos, பிண்ட நெல்லின் – with abundant rice paddy,  தாய் மனை – her mother’s house, ஒழிய – leaving, சுடர் முழுது எறிப்ப – attacked by the very hot rays of the sun, ruined by the very hot rays of the sun, திரங்கி – withered, shriveled, செழுங்காய் – plump fruits, full fruits, முட முதிர் பலவின் – of dwarfed old jackfruit trees, Artocarpus heterophyllus, அத்தம் நும்மொடு – to the wasteland with you, கெடு துணை ஆகிய தவறோ – is it because she made the mistake of going with you as your partner helping you to ruin your loneliness, வை எயிற்று – with sharp teeth, பொன் பொதிந்தன்ன சுணங்கின் – with pallor spots like embedded gold, இருஞ்சூழ் ஓதி – thick dark hair, பெருந்தோளாட்கே – for the young woman with wide arms, for the young woman with wide shoulders (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 27, குடவாயிற் கீரத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நீயும் யானும், நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றிக்,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை, உண்டு எனின்  5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே, நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை, கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடிக்
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல  10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறாதோளே?

Natrinai 27, Kudavāyil Keerathanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Yesterday you and I played in the
seaside grove surrounded by
backwaters, on the sand bars brought
to the shores by the dashing waves,
chasing bees that swarmed on the fine
pollen of flowers, dropping them.

Other than playing, we did not do
anything in secrecy.  If we had done
something, it would have spread greatly
and everybody would have known about
it.     

What does mother think, the one who
does not ask us to go and pluck waterlily
with thick long stems, blooming like eyes,
among many small leaves in ponds,
where heron flocks feed on shrimp and 
screech near backwaters with sharks?

Notes:  பகற்குறி வந்து ஒழுகும் தலைவன் வந்து ஒரு புறமாக இருந்ததை அறிந்த தோழி, களவு ஒழுக்கம் நீட்டியாமல் வரைந்து கொள்ள வேண்டித் தம்மை அன்னை இற்செறித்ததாகக் கருத்துமாறு, தலைவியிடம் கூறுவது போல உரைத்தது.  உறைக்கும் வண்டினம் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாய்ந்து விழுகின்ற வண்டினம், H.வேங்கடராமன் உரை – திளைக்கும் வண்டினம்.  திரை வரித்த (3) – ஒளவை துரைசாமி உரை – அலைகளால் அழகுறுத்தப்பட்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திரை கொழித்த.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இறாமீனை உண்ணும் குருகினம் ஆரவாரிக்கச் சுறாமீன் கழியின்கண் உலவும் என்றது, நம் நலம் காணும் அயற்பெண்டிர் அலரெடுத்து உரைக்குமாறு தலைமகன் குறியிடம் நோக்கிப் போக்குவரவு புரிகின்றான் என்றவாறு. எனவே வரைவு நினைந்திலன் எனத் தோழி உரைத்தாள்.

Meanings:  நீயும் யானும் நெருநல் – yesterday you and I, பூவின் நுண் தாது – fine pollen of flowers, உறைக்கும் – dropping (உறைக்கும் – உதிர்க்கும்), வண்டினம் ஓப்பி – chased bees, ஒழி திரை வரித்த வெண்மணல் – white sand that the dashing waves brought and heaped, made beautiful by the dashing waves, அடைகரை – sand filled shore, water-filled shore, கழி சூழ் கானல் – seashore grove surrounded by backwaters, ஆடியது அன்றி – other than playing, கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை – we did not do anything in secrecy, உண்டு எனின் – if that is the case, if there was anything, நன்றும் பரந்து – spreading greatly, பிறர் அறிந்தன்றும் – everybody would have known about it, இலரே – they do not know (ஏ – அசைநிலை, an expletive), எவன் குறித்தனள் கொல் அன்னை – what does mother think, கயம் தோறு – in all the ponds, இற – prawns, ஆர் இனக் குருகு ஒலிப்ப – feeding herds of herons/storks/cranes making sounds, சுறவம் கழி சேர் மருங்கின் – in the  brackish waters where there are sharks, கணைக் கால் நீடி – extending their thick stems, கண் போல் பூத்தமை கண்டு – on seeing the flowers that bloom like eyes, நுண் பல சிறு பாசடைய நெய்தல் – blue/white waterlilies with many small green leaves (பாசடைய நெய்தல் – குறிப்புப் பெயரெச்சத் தொடர்), குறுமோ சென்று எனக் கூறாதோளே – she who does not tell us ‘you go and pluck’(மோ – முன்னிலையசை, an expletive of the second person, ஏ – அசைநிலை, an expletive)  

நற்றிணை 28, முதுகூற்றனார், பாலைத் திணை – தலைவிக்குத் தோழி சொன்னது
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ,
மணி என இழிதரும் அருவி பொன் என  5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிக்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே.

Natrinai 28, Muthukootranār, Pālai Thinai – What the heroine’s friend said to the heroine
He used to take my hands
and press them to his eyes,
take his hands and stroke my
fine forehead, and spoke
sweetly to me like a mother.

He is cruel like a thief,
the lord of the lofty mountains,
where sapphire colored
waterfalls flow down,
golden vēngai flowers blanket
the soaring mountain ranges,
and tall bamboos with green
nodes tear the swiftly moving
clouds on high summits! 

Notes:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.  குறை நயப்புமாம்.  ஔவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் வரும், ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒன்றித் தோன்றுந்தோழி மேன (தொல். அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  ஔவை துரைசாமி உரை – பிரிவுத் துன்பத்திற்கு இரையாகி உளம் மெலிந்து வன்மை குன்றியிருந்த தலைவிக்குப் பொறாமையும் மனவன்மையும் தோற்றுவித்ததற்குத் தோழி தலைவனைக் கொடுமைக் கூறிப் பழித்த சூழ்ச்சித் திறம்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கள்வர் போலக் கொடியவர் என்றது சிறுமை பற்றி வந்த நகை உவமம்.  அன்னை போல என்றது சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பண்பு உவமம்.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.

Meanings:  என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் – he takes my hand and presses them to his eyes, தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும் – takes his own hands and strokes my fine forehead, அன்னை போல இனிய கூறியும் – speaks sweet words like a mother, கள்வர் போலக் கொடியன் – he is a cruel man like a thief, மாதோ – மாது + ஓ – அசைநிலைகள், expletives, மணி என இழிதரும் அருவி – sapphire colored waterfalls that flow down, பொன் என வேங்கை தாய – gold-like vēngai flowers spread, Pterocarpus marsupium, Kino tree, ஓங்கு மலை அடுக்கத்து – on the tall mountain range, ஆடு – swaying, கழை – bamboo, நிவந்த – tall, பைங்கண் – green bamboo nodes, fresh nodes, மூங்கில் – bamboo, ஓடு மழை – passing clouds, running clouds, கிழிக்கும் – they tear, சென்னி – summits, கோடு – mountain peaks, உயர் – tall, பிறங்கல் மலை கிழவோனே – lord of the bright mountains (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 29, பூதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறுநெறி  5
யாங்கு வல்லுநள் கொல் தானே? யான் ‘தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ கொல்?’ என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,
வெய்ய உயிர்க்கும் சாயல்,  10
மை ஈர் ஓதி பெருமடத்தகையே.

Natrinai 29, Poothanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
Thinking that her young lifted
breasts with thoyyil paintings
might hurt, I relaxed my hands
when I hugged her.  Even that hurt
her, and her huge, calm, moist eyes
were filled with tears, and she
cried and sighed hot breaths, that
delicate, naive, noble young woman
with dark, oiled tresses.

How can she handle going through
the vast wilderness where summers
are long, kānthal blossoms have
dried up, there is no shade in sight,
and a male tiger hides under bushes
and grass, and stalks those who travel
on the small paths in the confusing
evenings, to feed his hungry mate that
has given birth recently in the forest?  

Notes:  மகட் போக்கிய தாய் சொன்னது.  ஒளவை துரைசாமி உரை – மான்ற என்றது மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்.  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பிணவின் பசியைப் போக்க புலி உணவுதேடி நெறியில் பார்க்கும் என்றது, தலைவியின் அயர்ச்சியைப் போக்க வேண்டித் தலைமகன் மாலைப் பொழுதிலே தங்குமிடம் தேடி ஆங்கு இருவரும் தங்குவர் என ஆற்றுவாள் என்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஈன்று கான் மடிந்த பிணவென்றது தலைமகள் இனி மக்களோடு மகிழ்ந்து மனை அறம் காக்கும் என்று ஆற்றுவாள் என்றவாறு.  Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth.  Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:  நின்ற வேனில் – long summer, உலந்த காந்தள் – faded glory lilies, dried glory lilies, Malabar Glory lily, Gloriosa superba (உலந்த – வாடிய, உலர்ந்த), அழல் அவிர் நீள் இடை – on the blazing long paths, நிழலிடம் பெறாஅது – without getting any shade (பெறாஅது – இசை நிறை அளபெடை), ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென – since the female who had given birth was struggling with great hunger in the forest, மான்ற மாலை – confusing evenings (மான்ற – மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்), வழங்குநர்ச் செகீஇய – to kill those who travel (செய்யுளிசை அளபெடை), புலி பார்த்து உறையும் – tiger stalks to kill, புல் அதர் – grass and bushes, சிறுநெறி – small path, narrow path, யாங்கு வல்லுநள் கொல் தானே – how can she handle it (தானே – தான், ஏ – அசைநிலைகள்), யான் – so, தன் வனைந்து – her painted (thoyyil painting), ஏந்து இள முலை நோவகொல் என நினைந்து – thinking that her lifted young breasts will hurt, கை நெகிழ்ந்த – I relaxed by hands, அனைத்தற்கு – for that her, தான் – her, தன் பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ – her huge calm moist eyes are filled with tears, வெய்ய உயிர்க்கும் – she sighed hot breath, சாயல் – delicate, மை ஈர் ஓதி பெருமடத்தகையே – the respected naive young woman with dark wet/oiled hair (நெடுநல்வாடை 44 – இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ), (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 30, கொற்றனார், மருதத் திணை- தோழி தலைவனிடம் சொன்னது
கண்டனென் மகிழ்ந! கண்டு எவன் செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்,  5
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல,
வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.  10

Natrinai 30, Kottranār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Lord, I saw you!
But what can I do about what I saw?
When you appeared on the street,
music from the noble small lute of
a bard sounded like the humming
bees and women wearing elegant
jewels were waiting for you.  

Those who had hugged your chest
in the past wanted you back again.  They
shed hot tears in distress and pulled you
again and again like confused people who     
panic and hang on to a single wooden board        
to save their lives, after their ship capsized
in a windstorm. 

You were caught in their midst and moved     
back and forth.  What a pathetic situation!

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்றாற்குத் தோழி சொல்லியது.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவியும் இந்நிலை அறிந்தவளே என்பதைக் ‘களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா நாணி நின்றோள்’ (அகநானூறு 16) பரத்தையின் நிலையால் அறியப்படும்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  ஊங்கு நிலை – ஒளவை துரைசாமி உரை – முன்னும் பின்னுமாக அசைந்தாடும் நிலை.

Meanings:  கண்டனென் மகிழ்ந – oh lord! I saw you, கண்டு எவன் செய்கு – what was the use of seeing (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, பாணன் கையது பண்புடைச் சீறியாழ் – noble small lute held by a bard, யாணர் வண்டின் இம்மென இமிரும் – it creates sounds like the humming sound of bees (இம்மென – ஒலிக்குறிப்பு, வண்டின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஏர்தரு – beautiful, rising up, தெருவின் – on the street, எதிர்ச்சி நோக்கி – expecting your arrival and looking for you, நின் மார்பு தலைக்கொண்ட – those who had hugged your chest, மாணிழை மகளிர் – women with esteemed jewels, கவல் ஏமுற்ற – distressed with confusion, வெய்து வீழ் அரிப் பனி – shedding hot tears, கால் ஏமுற்ற – when swirling winds blew, பைதரு காலை – when suffering, when distressed, கடல்மரம் கவிழ்ந்தென – since their ship capsized, கலங்கி உடன் வீழ்பு – falling together into the water with confusion/distress, பலர் கொள் பலகை போல – like a board that many hold on to, வாங்க வாங்க நின்று – they pulled you again and again and you were caught between them, ஊங்கு அஞர் நிலையே – it was a very pitiable situation moving back and forth (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 31, நக்கீரனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங்கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;  5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து,
யானும் இனையேன் ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ்சினை புன்னை கடுஞ்சூல் வெண்குருகு  10
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

Natrinai 31, Nakkeeranār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
Before I united with the lord
of the shores with powerful waves,
……….where the sand is like white moon,
……….punnai trees grow with tall branches,
……….many kinds of goods are brought by
……….the wind in ships from various
……….countries, and a white heron
……….pregnant with eggs moves away in
……….fear of the roaring ocean waves,
it was a pleasant sight to see gnāzhal trees
with small flowers on the shore of the cold
backwater, where a small white seagull
that searches the dark expanse and catches
shrimp, calls his tender-legged mate,
and shares his catch with her.  

Now, with a distressed heart, I have
become sad like this with many thoughts!

Notes:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் மீண்டும் சிறைப்புறமாக வருதலை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளும் வகையில் தலைவியிடம் ‘அவர் இப்போதே வருவார்.  நீ வருந்தாதே’ எனக் கூறியபொழுது தலைவி இவ்வாறு தோழியிடம் உரைத்தாள்.  நிலவு மணல்:  அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  புன்னையஞ் சினைக்கணுள்ள சூல் முதிர்ந்த குருகு கடலோசைக்கு வெருவுமென்றது,  பிறந்தகத்திருந்து காதலை மேற்கொண்ட யான் அன்னையின் கடுஞ்சொல் கேட்குந்தோறும் வெருவாநின்றேன் என்பதாம்.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – காதலர் பிரிவாற்றி யான் மனைக்கண் இருப்பினும் காதற் பெருமையால் என் மேனி எய்தும் வேறுபாடு கண்டு அயற்பெண்டிர் தூற்றும் அலர்க்கு அஞ்சுகின்றேன் என்ற கருத்து, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு உரவுத்திரை ஓதம் வெரூஉம் என்றதன்கண் உள்ளுறுத்தப்பட்டு உள்ளது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இறாமீனைப் பிடித்து வந்த காக்கை தன் பெடையை விளித்து அதன் வாயில் இரையைக் கொடுக்கும் துறையுடையவனாயிருந்தும், தலைவன் என்னை அழைத்து முயங்கி இன்பம் உய்த்தான் இலன்.  மணவா – பொருந்துவதற்கு (கூடுவதற்கு, கலத்தற்கு) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  அகநானூறு 290 – தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும், நற்றிணை 31 – உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே, குறுந்தொகை 357 – வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

Meanings:  மா இரும் பரப்பு – the wide dark expanse, அகம் துணிய நோக்கி – searching inside it clearly, சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை – a small white gull that caught red shrimp, Indian black-headed sea gull, Larus ichthyactus (சேயிறா – பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to the second), பாய் இரும் பனிக் கழி துழைஇ – searched in the spread dark cold backwaters (துழைஇ – சொல்லிசை அளபெடை), பைங்கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ – calls his beloved green-legged female (பயிரிடூஉ – இன்னிசை அளபெடை), சுரக்கும் – it gives, சிறு வீ ஞாழல் – tigerclaw trees, புலிநகக்கொன்றை, Cassia Sophera, Tigerclaw tree, துறையும் ஆர் இனிதே – the port was sweet (ஆர் – அசைச் சொல், an expletive, ஏ – அசைநிலை, an expletive), பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு – with a very sad heart, பல நினைந்து யானும் இனையேன் ஆயின் – with many thoughts I became like this, ஆனாது – restless, unsettled, வேறு பல் நாட்டில் – from various different countries, கால் தர வந்த – brought by the wind, பல உறு பண்ணியம் – many kinds of things, இழிதரு – brought down, நிலவு மணல் – white sand looking like the moon, நெடுஞ்சினை புன்னை – laurel trees with tall branches, Mast wood Tree, Calophyllum inophyllum, கடுஞ்சூல் – fully pregnant with eggs, வெண்குருகு – a white heron/egret, உலவுத் திரை ஓதம் வெரூஉம் – it becomes afraid of the sound of the moving waves (வெரூஉம் – இன்னிசை அளபெடை), உரவு நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the shores with powerful waves, மணவா ஊங்கே – before we united (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 32, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி,
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்,
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி  5
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுத்தரற்கு
அரிய, வாழி தோழி, பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே.

Natrinai 32, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
The lord of the beautiful mountains
……….whose slopes are like Thirumāl and
……….white waterfalls are like Balarāman,
is distressed because of his love for you.

You do not understand his suffering.
You should consider accepting him.  
You should talk it over with your friends.
He is hard to refuse, oh friend.
May you live long!  The wise will not make
friends without examining.  They will not
examine, once someone is a friend!

Notes:  தலைவிக்குக் குறை நயப்பக் கூறியது.   ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) எனத் தொடங்கும் நூற்பாவில் வரும், ‘ மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்’ என்னும் பகுதிக்கு இதனை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இப்பகுதிக்கே காட்டுவர்.  ஒளவை துரைசாமி உரை – அவனும் தகுதி உடையான் என்பாள் மலைகிழவோன் என்றாள்.  ஈன்று யான் கூறியதனை ஆராய்கின்றாய் போலும்.  இவ்வாராய்ச்சி இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னரே வேண்டும் என்றாள்.  There is a reference to Balaraman in Puranānūru 56.  

Meanings:  மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் – the lofty mountain slopes are like Thirumal (கவாஅன் – இசை நிறை அளபெடை), வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – waterfalls are white like Balarāman, அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன் – the lord of the beautiful mountains desires you and is always distressed, என்பது ஓர் வாய்ச் சொல் – those are the words, தேறாய் – you do not understand, you have not accepted, நீயும் கண்டு நுமரொடும் எண்ணி – you should look at it with your friends and analyze, அறிவு அறிந்து அளவல் வேண்டும் – you should see what is right and talk, மறுத்தரற்கு அரிய – he is hard to refuse, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – the wise will not make friends without examining and will not examine friends (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 33, இளவேட்டனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘படுசுடர் அடைந்த பகுவாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக்,
கல்லுடை படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில்,  5
துவர் செய் ஆடை செந்தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம் கொல்லோ, மெல்லியல் நாம்?’ என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி,  10
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

Natrinai 33, Ilavettanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
My friend looks at my face and utters,
“Oh delicate friend!  Do I have the strength
to deny him his desired trip to the wasteland,
where,
in a small village with gravel near the split,
tall mountains where the sun sets swiftly,
in a dull public place where those who are
lonely eat together, turbid water is brought  
from puddles with rocks in a land with
no heavy rainfall, and scanty food is eaten
by wayside bandits who wear red clothes,
bear fine arrows and eye the fierce paths
for those who travel? ”

She sobs between words and tears stream
down her flower-like beautiful eyes and fall
on her lovely breasts.

Notes:  பிரிவு உணர்த்தப்பட்ட தலைவியினது குறிப்பு உணர்ந்த தோழி தலைவனிடம் சொல்லியது.  பகுவாய் நெடு வரை (1) – ஒளவை துரைசாமி உரை – அகன்ற பிளப்பையுடைய நெடிய மலை.  புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து (3) – H.வேங்கடராமன் உரை – கள்வர் பிறர்க்கு அச்சம் தோன்ற ஒருங்கிருந்து உண்ணும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம் மிக்கிருக்கும் பொழிவழிந்த பொதியில் உணவையுடைய, ஒளவை துரைசாமி உரை – தனித்தோர் கூடியிருந்து உண்ணும் பொலிவில்லாத மன்றத்தின்கண்.  ஒளவை துரைசாமி உரை – பெருகி வழியும் கண்ணீர் என்றதற்கு மல்குபுனல் என்றும் அதனால், தொய்யில் எழுதி அழகுற வனையப்பட்ட மார்பகம் பொலிவு அழிந்தது என்பான், நல்லக வனமுலை நனைப்ப என்றும், இவ்வாற்றல் மலர் புரையும் கண்களும் அவ்வனப்பு இழந்து வாடின என்றற்கு மலர் ஏர் உண்கண் என்றும் கூறினாள்.   

Meanings:  படுசுடர் அடைந்த – the folding sun has reached, பகுவாய் – split, with cracks, நெடு வரை – tall mountains, முரம்பு சேர் சிறுகுடி – small village with gravel, பரந்த மாலை – spreading evening time (after sunset), புலம்பு – alone, sad, கூட்டுண்ணும் – they eat together, புல்லென் மன்றத்து – in the dull common grounds, கல்லுடை படுவில் – with rocks and puddles, கலுழி தந்து – bring muddied water, bring turbid water, நிறை பெயல் அறியா – does not know abundant rains (parched land), குறை ஊண் – little food, leftover food, அல்லில் – at night, துவர் செய் ஆடை – clothing that are dyed in red, செந்தொடை – those with fine arrows, those with arrows that don’t miss their mark,  மறவர் – the wasteland robbers, அதர் பார்த்து அல்கும் – they look at the path and approach, அஞ்சுவரு நெறியிடை – on the paths that cause fear, இறப்ப எண்ணுவர் அவர் எனின் – if he desires to pass, மறுத்தல் – to deny him, வல்லுவம் கொல்லோ – will I have the strength (வல்லுவம் – நாம் – தன்மைப் பன்மை, first person plural, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), மெல்லியல் – oh delicate friend (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நாம் என – that I could do it (நாம் – தன்மைப் பன்மை, first person plural), விம்முறு – sobbing, கிளவியள் – she who utters words, என் முகம் நோக்கி – looks at my face, நல் அக – on the fine chest, வன முலைக் கரை சேர்பு – tears end up on the ends of her lovely breasts, மல்கு புனல் – full stream, பரந்த – spread, மலர் ஏர் கண்ணே – flower-like eyes, flower-like beautiful eyes (ஏர் – உவம உருபு, a comparison word, கண்ணே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப்,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்,  5
மார்புதர வந்த படர் மலி அரு நோய்,
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்,
கடவுள் ஆயினும் ஆக  10
மடவை மன்ற, வாழிய முருகே!

Natrinai 34, Piramasāri, Kurinji Thinai – What the heroine’s friend said to Murukan, as the hero listened nearby
May you live long, oh Murukan!  You came
to the veriyāttam ritual and accepted the
offerings given by the diviner with lifted head,
who wore a rainy season’s fragrant kadampam
flower garland, even though you knew that
her distress was not caused by your anger.

You may be a god, but you are ignorant, and
you don’t know the truth.  Her affliction is due
to the embraces of the man from the country
where fresh blue waterlilies, that blossom
pushing aside leaves, not plucked by people,
from springs in the divine mountain, are
strung together with blood-red, bright glory lily
blossoms as lovely garlands worn by the goddess
there, who dances to the roars of the waterfalls
that sound like sweet musical instruments,
who makes the mountains beautiful.

Notes:  தோழி முருகனுக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.  களவு நீட்டித்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயதுமாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப’ (தொல்காப்பியம்,பொருளியல் 11) என்பதற்கு இப்பாட்டைக் குறித்து ‘இது வெறியாட்டு எடுத்தவழி அறத்தொடு நின்றது” என்றும், இது முருகற்கு கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  இளம்பூரணர், இது முருகனை முன்னிலையாகக் கூறியது என்றும், ஆடிய சென்றுழி அழிவு தலைவரின் நிகழும் கூற்று என்றும் கொள்வர்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சூரரமகள் மாலைசூடி அருவியை இனிய வாச்சியமாகக் கொண்டு ஆடுமென்றதனாலே தலைமகள் தலைவனை மணமாலை அணிந்து மணந்து என்னை எஞ்ஞான்றும் தனக்கு உசாத்துணையாக நீங்காது கொண்டு இல்லறம் நிகழ்த்தக் கருதியிருக்கும் என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – முருகன் தன்கண் மெய்யுற்று வந்திருப்பதாகச் சொல்லி, வேலன் கண்ணி சூடி வேலேந்தி ஆடுதலின் அவனை முருகனாகக் குறித்து ‘முருகே’ என அவனை முன்னிலைப்படுத்தி மொழிந்தாள்; ஆகவே, இதனால் எய்தும் வசை வேலற்கே; முருகவேட்கு அன்று எனக் கொள்க.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ‘முருகனே!  இதனை நீ அறியாமையின் உண்மையில் நீ அறிவுற்றவனே ஆவாய்’ என்கிறாள்.  அருவி இன் இயத்து (5) – ஒளவை துரைசாமி உரை – அருவியின் இனிய முழக்கத்திற்கு, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அருவியின் ஒலியே இனிய இசைக் கருவிகளாகக் கொண்டு.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  அண்ணாந்து (7) – ஒளவை துரைசாமி உரை – நீ அண்ணாந்து வந்தோய்.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

Meanings:  கடவுள் – gods, கற்சுனை – mountain springs, mountain ponds, அடை – leaves, இறந்து – pushing aside, avoiding, அவிழ்ந்த – blossomed, பறியாக் குவளை மலரொடு – with blue waterlilies that are not plucked by others since they are just for the gods, காந்தள் குருதி ஒண் பூ – bright glory lily flowers that are of blood color, உருகெழக் கட்டி – tied together very well into beautiful garlands, பெருவரை அடுக்கம் – tall mountain with side ranges, பொற்ப – to brighten, to become beautiful, சூர்மகள் – the mountain goddess, the mountain deity, அருவி இன் இயத்து ஆடும் நாடன் – the man from the country where she dances to the music of the waterfalls, மார்பு தர வந்த – came because of embracing the chest, படர் மலி அரு நோய் – great spreading sorrow, நின் அணங்கு அன்மை அறிந்தும் – even after knowing that it is not due to your anger, அண்ணாந்து – with lifted head, கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி – wearing rainy season’s kapamdam strands, Kadampa Oak, Anthocephalus cadamba, வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – the velan invited you with offerings and you came to the home where the veriyāttam ritual is performed, கடவுள் ஆயினும் ஆக – even if you are god, மடவை – you are ignorant, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, வாழிய – may you live long, முருகே – oh Murukan

நற்றிணை 35, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்  5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்,
பண்டும் இற்றே; கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ, மகிழ்ந்தோர்  10
கள் களி செருக்கத்து அன்ன
காமம் கொல் இவள் கண் பசந்ததுவே?

Natrinai 35, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Her beauty is like in the past,
like Maranthai city with ports,
where
on a stretched sandy shore
with rolling, crashing waves,
a fleshy, black nāval fruit with
delicate stem drops from a tree;
a bee swarms on it thinking
it is another bee;
a crab with many legs attacks
it knowing it is a fruit, and the
bee buzzes in distress sounding
like a lute;
a stork looking for food comes
there and the crab releases the
fruit on seeing the stork.

Look at her! 

If you release her from your embraces
or do not shower graces, she grieves.
Her eyes have turned pale.  Is it because
of her great beauty, or is intoxication of
love like the happiness of liquor?

Notes:  வரைந்தபின் மணமனை புக்கத் தோழி தலைவனிடம் ‘பிரிவு காலத்தில் நீ தலைவியை நன்கு ஆற்றுவித்தாய்’ என்ற தலைவனிடம் தோழி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – நாவற்கனி தலைவிக்கும், தும்பி தோழிக்கும், அலவன் செயல் பெற்றோர் செய்த இற்செறிப்புக்கும், நாரை தலைமகன் பொருட்டு மகட்கொடை வேண்டி வந்த சான்றோர்க்கும் உள்ளுறையாய்க் களவின்கண் நிகழ்ந்தது.  வரலாறு:  மரந்தை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). கொள்ளா (5) – H.வேங்கடராமன் உரை – கொள்ளப்படாதனவாய், ஒளவை துரைசாமி உரை – யாழொடு கொள்ளாத. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  பொங்கு திரை – overflowing full waves, பொருத – dashing, வார் மணல் அடைகரை – long shore with sand, புன் கால் நாவல் – nāval fruit with thin stem, Syzygium cumini, பொதிப் புற இருங்கனி – a black fruit with fleshy sides, கிளை செத்து மொய்த்த தும்பி – a bee thought that it was another bee and swarmed on it, பழம் செத்து பல் கால் அலவன் கொண்ட- a crab with many legs thought that it was a fruit and seized, கோட்கு – for seizing, அசாந்து – saddened, கொள்ளா – escaping seizing, not in harmony with lute music, நரம்பின் இமிரும் பூசல் – the loud uproar of the bee sounds like lute music (கூர்ந்து மிகுந்து, நரம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இரை தேர் நாரை – a stork searching for food, white stork, Ciconia ciconia,  or pelican, or crane, எய்தி – reached, விடுக்கும் – it releases, துறை கெழு மரந்தை அன்ன – like Maranthai city with ports, இவள் நலம் – her beauty, பண்டும் இற்றே – like it was in the past, கண்டிசின் – look at her (இசின் – முன்னிலை அசையில் வந்தது, an expletive used with the second person), தெய்ய – அசை, an expletive, உழையின் போகாது – not staying away, அளிப்பினும் – even though you showered graces, சிறிய ஞெகிழ்ந்த – released a little bit, loosened a little bit (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கவின் நலம் கொல்லோ – is it not her great beauty (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம் கொல் – is love like the intoxication of liquor to those who drink it, is love like the happiness of liquor to those who drink it (செருக்கத்து – செருக்கம், அத்து சாரியை), இவள் கண் பசந்ததுவே – her eyes became pale (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 36, சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கித்,
தாழ் நீர் நனந்தலை பெருங்களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து  5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனா கௌவைத்து ஆகத்
தான் என் இழந்தது, இல் அழுங்கல் ஊரே?

Natrinai 36, Seethalai Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
You lost your virtue, trusting the man from     
the mountains where a huge tiger with short   
front legs killed a large male elephant in the     
wide forest with deep waters, and his dark mate
with a beautiful forehead struggled in agony.

Women who gossip have uttered evil words with no
equal, there is non-stop slander, and you are unable
to sleep at night.  What has this noisy town lost?

Notes:  தலைவன் இரவுக்குறி வந்து ஓரிடத்தில் நிற்பதை அறிந்த தோழி, அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டி, தலைவியிடம் உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப’ (தொல்காப்பியம், மரபியல் 50) என்பதற்குக் ‘குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை’ என்ற இப்பாட்டின் முதலடியைக் காட்டுவர் பேராசிரியர்.  தாழ் நீர் (3) – ஒளவை துரைசாமி உரை – ஆழ்ந்த நீர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீர் அற்ற.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிடி புலம்புமாறு புலி களிற்றைத் தாக்கிக் கொல்லா நிற்கும் நாடன் என்றது, இரவுக்குறியில் நீ வரின் யாம் வருந்துமாறு எம்மைச் சார்ந்தோர் நினக்கு ஏதம் செய்வர் என்றும் குறிப்பிற்று.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  குறுங்கை இரும்புலி – big tiger with short front legs, கோள் வல் ஏற்றை – a murderous strong male, பூ நுதல் – beautiful forehead, இரும் பிடி – dark female elephant, புலம்ப – to be distressed, தாக்கி – attacked, தாழ் நீர் – shallow waters, deep waters, without water, நனந்தலை – vast space, பெருங்களிறு அடூஉம் – killed a huge male elephant (அடூஉம் – இன்னிசை அளபெடை), கல்லக வெற்பன் – lord of the mountains, சொல்லின் தேறி – trusting his words, யாம் எம் நலன் இழந்தனமே – you lost your virtue (ஏ – அசைநிலை, an expletive), யாமத்து – at nights (when you are unable to sleep), அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – mouthy women gossip together all the time, புரை இல் தீ மொழி – evil words without equal (புரை – உவம உருபு, a comparison word), பயிற்றிய – what they wanted to say, உரை எடுத்து – undertaking talking, ஆனா கௌவைத்து ஆக – non-stopping slander that is uttered, தான் என் இழந்தது – what has it lost, இல் அழுங்கல் ஊரே – this loud town, this uproarious town, the people in this loud town (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 37, பேரி சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழக்  5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந்தலை உடலி, வலன் ஏர்பு
ஆர்கலி நல் ஏறு திரிதரும்  10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.

Natrinai 37, Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
It will be good if you
go with her to the ancient,
blighted, vast forest where
tangled bushes are parched,
cattle herds graze on dry grass
and, a clear bell from a cow
tinkles very gently.

If you leave the sharp-toothed
girl without any kindness, her
eyes looking like dark waterlilies
surrounded by water, will
shed tears.  She will struggle like
a doe separated from its stag.
I will not be able to tolerate that!

It will be like sad evening time to her,
when clouds rise up with strength and
come down with roaring thunder that
chops distressing, fierce heads of snakes!

Notes: வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி தலைவனிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்’ என்ற பகுதியில் இப்பாட்டினை எடுத்தோதிக்காட்டி, ‘இது வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்து கொண்டிரு என்றதற்குத் தோழி கூறியது என்பர் நச்சினார்க்கினியர். ஒளவை துரைசாமி உரை – பாம்பின் தலையைத் துமித்து பெருமுழக்கத்தோடு திரியும் இடியேறு போல, ஏதிலாட்டியார் தலைமடங்க முரசு முழங்க நீ இவளை வரைந்துகொள்வான் வருதல் வேண்டும்; அதற்குரிய கார்காலம் அடுத்து வருதற்கு அமைந்தது என்பது குறிப்பு. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. அணங்குடை அருந்தலை – அகநானூறு 108, நற்றிணை 37, பரிபாடல் 1-1. There is a convention that thunder ruins and kills snakes. Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53). வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  பிணங்கு அரில் – tangled bushes,  வாடிய – dried, பழவிறல் – old fertility, robustness, நனந்தலை – wide space, உணங்கு ஊண் – grazing on dry bushes, ஆயத்து – of herds, ஓர் ஆன் தெள் மணி பைபய இசைக்கும் – clear bells ring very slowly from a single cow (பைபய – பையப்பைய பைபய என மருவியது), அத்தம் – wasteland, வை எயிற்று இவளொடும் செலினோ – if you go with this sharp-toothed young woman (ஓ – அசைநிலை, an expletive) நன்றே – it will be good (ஏ – அசைநிலை, an expletive), குவளை நீர் சூழ் மா மலர் அன்ன – like waterlilies surrounded by water, கண் அழ – eyes crying, கலை ஒழி பிணையின் கலங்கி – in distress like a doe that is separated from its stag (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, கலங்கி – கலங்க எனற்பாலது கலங்கி எனத் திரிந்தது), மாறி அன்பு இலிர் அகறிர் ஆயின் – if you leave her without kindness, என் பரம் ஆகுவது அன்று – I cannot handle that burden (பரம் – பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்), இவள் அவலம் – her distress, நாகத்து அணங்குடை அருந்தலை – distressing fierce heads of snakes, உடலி – enraged, வலன் ஏர்பு – rising on the right side, rising up with strength, ஆர்கலி நல் ஏறு – very loud fine thunder, திரிதரும் – moving, கார் செய் மாலை – evenings of the rainy season, வரூஉம் போழ்தே – when it arrives (வரூஉம் – இன்னிசை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 38, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந்தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர் கெழு
மெல்லம்புலம்பன் பிரியின், புல்லெனப்  5
புலம்பு ஆகின்றே தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்,
வெண்மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே.  10

Natrinai 38, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend
With unfailing prosperity in their nets
and unfailing rains from the skies,
our flourishing fishermen sell the fish
from the ocean, drink sweet toddy from
palmyra trees, and enjoy their lives.

Such is the happiness in our noisy
Kāndavāyil town with groves, surrounded
by muddied brackish water.  It becomes dull
if the lord of the delicate shores with a fine
chariot does not come, and this slanderous
town with fences made with thorn bushes and
flourishing, mature palm fronds, and white
sand with tall palmyra trees, causes me grief.    

Notes:  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியிடம், ‘நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகும்’ என்று தோழி கூற, ‘நம்மூர் இனிமையானதாயினும் தலைவன் பிரிந்ததால் நான் வருந்துகின்றேன்’ என்று தலைவி கூறுகின்றாள்.  வரலாறு:  காண்டவாயில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  கா ஓலை (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முற்றிய ஓலை, முற்றிக் காய்ந்த ஓலையுமாம், ச. வே. சுப்பிரமணியன் உரை – முற்றிய ஓலை.

Meanings:  வேட்டம் – fishing, பொய்யாது – not failing, வலை வளம் சிறப்ப – abundance in the nets, பாட்டம் – rain, clouds, பொய்யாது – not failing, பரதவர் – fishermen, பகர – they sell, இரும் – dark, பனந்தீம் பிழி – sweet palmyra liquor, toddy, உண்போர் மகிழும் – those who drink are happy, ஆர்கலி – loud sounds, யாணர்த்து – with new income, with prosperity, ஆயினும் – yet, தேர் கெழு – with a chariot, மெல்லம்புலம்பன் – lord of the delicate shores, (அம் – சாரியை), பிரியின் – if he separates, புல்லென – it becomes dull, it becomes sad, புலம்பு ஆகின்றே – becomes lonely (ஏ – அசைநிலை, an expletive), becomes sad, தோழி – oh friend, கலங்கு நீர் – muddied waters, கழிசூழ் – surrounded by brackish ponds, படப்பை – groves, காண்டவாயில் – town called Kāndavāyil, ஒலி –  flourishing, கா ஓலை – mature palm fronds, mature and dry palm fronds, முள் மிடை வேலி – fence made of thorn bushes, பெண்ணை – female palm tree, இவரும் – growing tall, spreading, ஆங்கண் – there (அசையுமாம்), வெண்மணல் – white sand, படப்பை – grove, எம் அழுங்கல் ஊரே – our town that slanders, our town that gossips, our uproarious town (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 39, மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய், யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங்கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்  5
தலை மருப்பு ஏய்ப்ப, கடைமணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல; நண்ணார்
அரண்தலை மதிலர் ஆகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்  10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

Natrinai 39, Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the hero said to the heroine
You don’t respond to my words when I
look at your beautiful face and plead;
you bend you head in shyness very quickly. 

If love becomes excessive, is it possible to
tolerate it?   
Even though you hide them, they cause me
distress, your eyes, the ends of which are red
like the tips of flesh-stinking tusks of an
elephant that gored playfully the back of a
trembling tiger with bright, curved stripes.
They are not the only ones that cause me
distress.  Your pretty arms with sugarcane
paintings, lovely like the very famous
Koodal city of the victorious Pāndiyan king
who defeated his enemies, took their
well-protected forts, and beat his victory
drums, also cause me sorrow.

Notes:  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் இடந்தலைப்பாடு உற்றுச் சென்று முந்துறக் கண்ட தலைவன் தலைவியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘முன்னிலையாக்கல் சொல்வழிப் படுத்தல்’ (தொல்காப்பியம், களவியல் 10) என்ற நூற்பாவில் ‘தன்னிலை உரைத்தல்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்துரைத்து இதனுள் வரும் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ……கடைமணி சிவந்த நின் கண்ணே கதவ அல்ல’ என்பதைக் காட்டித் ‘தன்னிலை உரைத்தவாறு காண்க’ என்பர் இளம்பூரணர்.  இனி ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவில் வரும் ‘இடையூறு கிளத்தல் நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்’ என்னும் பகுதிகட்கு இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக்கொண்டு கூறின் அதனை ஏற்றுக் கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல் கூறிக் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ’ என நீடு நினைந்திரங்கல் கூறிப், புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடுபோல என்னிடைத் தோய்ந்து சிவந்த கண் எனக் கொடுத்தாலும் கூறிற்று’ என்பர் நச்சினார்க்கினியர். இனி, பேராசிரியர் ‘காமப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 177) என்ற நூற்பா உரையில் இதனை எடுத்தோதி, இஃது இடந்தலைப்பாடு என்பர்.  சிவந்த நின் கண்ணே கதவ அல்ல (5-6) – ஒளவை துரைசாமி உரை – சிவந்து தோன்றும் நின் கண்கள் என்னை வருத்துமெனக் கருதி அவற்றை மறைத்தாயாயினும், என்னை வருத்தவன அவை மட்டும் இல்லை.  தலை மருப்பு ஏய்ப்ப (5-6) ஒளவை துரைசாமி உரை – மருப்பின் நுனி போல. பெரும் பெயர்க் கூடல் (10) – ஒளவை துரைசாமி உரை – தமிழால் புகழ் நிலைபெற்ற கூடல்.  என்றற்குப் பெரும் பெயர்க்கூடல் என்றார்.   கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே (11) – ஒளவை துரைசாமி உரை – கரும்பு எழுதப் பெற்ற நின் தோள்களும் என்னை வருத்துதலையுடைய யாதலை அறிவாயாக.  வரலாறு:  செழியன், கூடல்.

Meanings:  சொல்லின் – if I say, சொல் எதிர் கொள்ளாய் – you do not respond to my words, யாழ – அசைநிலை an expletive, நின் – your, திரு முகம் – beautiful face, இறைஞ்சி – bending, நாணுதி கதுமென – you get shy fast (கதுமென – விரைவுக்குறிப்பு), காமம் கைம்மிகின் – if love exceeds, தாங்குதல் எளிதோ – is it easy to tolerate it, கொடுங்கேழ் – curved bright (lines), இரும் புறம் – big backside, நடுங்க – shaking, fearing, trembling, குத்தி புலி விளையாடிய – stabbed the tiger playfully, புலவு நாறு – flesh smelling, வேழத்தின் – elephant’s, தலை மருப்பு – tips of tusks, ஏய்ப்ப – like (உவம உருபு, a comparison word), கடைமணி – sides of the eyes, சிவந்த நின் – your red, கண்ணே – eyes, கதவ அல்ல – they are not the only ones that distress me, நண்ணார் – enemies, அரண்தலை – with great protection, மதிலர் ஆகவும் – as one who went past the fort walls of enemies, முரசு கொண்டு – with drums, ஓம்பு அரண் கடந்த – seized their protected forts, அடு போர் செழியன் – Cheliyan (Pāndiyan king) of murderous battles, பெரும் பெயர்க் கூடல் – big and famous Madurai city, very famous Madurai city, அன்ன – like, நின் – your, கரும்புடைத் தோளும் – also your arms with sugarcane paintings (thoyyil), உடையவால் அணங்கே – they give me distress (உடையவால் – ஆல் அசைநிலை, an expletive), (அணங்கே – ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 40, கோண்மா நெடுங்கோட்டனார், மருதத் திணை – பரத்தை சொன்னது
நெடுநா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒரு சார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்  5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த,
நள்ளென் கங்குல் கள்வன் போல,  10
அகல் துறை ஊரனும் வந்தனன்,
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

Natrinai 40, Kōnmā Nedunkōttanār, Marutham Thinai – What the concubine said
Bright bells with long clappers ring
in a protected house,
where a pavilion with spread sand
and rustling frond thatch is set up.

On one side, women adorned with
perfect jewels stand waiting for a good
omen like bards who offer protection. 
The fragrance of newborn is there.
The baby sleeps with his foster mother
in a fragrant, soft bed.  The rich woman,
the baby’s mother, sleeps after white
mustard paste was rubbed on her delicate
body along with fresh oil, and given a bath.

Like a thief he comes in the thick of night,
the man from the town with wide ports, when his
son who bears his noble father’s name was born.

Notes:  தலைவியின் தோழியர் கேட்கும்படி பரத்தை சொன்னது.  ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்’ என்பதற்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும், ‘செய்பெருஞ் சிறப்போடு சேர்தற்கண்ணும்’ என்றதற்கு இதனை எடுத்துக்காட்டி, இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  இப்பாட்டு முன்பு வரும் காலத்தில் வராது மைந்தன் பிறந்ததால் வந்தான் எனத் தோழி கூறியதாக உரைப்பினும் அமையும்.  விரிச்சி:  நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப.  ஒளவை துரைசாமி உரை – மகன் முகத்தையும், மனைவி முகத்தையும் ஏனை மங்கல மகளிர் காண நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும், அதுவும் தன் தந்தை பெயரன் பிறந்தமையால் அவன் வந்தானே அன்றி என் நலம் உவர்த்தம்மை அன்று என்பாள், சிறந்தோன் பெயரன் பிறந்தமாரே என்றும் இயம்பினாள்.  பெரும்பாண் காவல் பூண்டென (3) – ஒளவை துரைசாமி உரை – அழுகுரலும் அமங்கலச் சொல்லும் நன்மக்கள் செவிப்படாதவாறு காவல் பூண்டாற்போலக் கடிமனை (திருமண இல்லம்) பந்தர்க்கண் பெரும்பாணர் இருந்து யாழும் குழலும் இசைத்தனர்.  ஐயவி (7) – ஒளவை துரைசாமி உரை – சிறுதெய்வங்களும் பேய் முதலியனவும் அணங்காமைப் பொருட்டு ஐயவி அணிவது பண்டையோர் மரபு.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம் உரியியல் 79.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  நெடுநா ஒள் மணி – long-tongued bright bells, கடி மனை இரட்ட – ringing in the protected house, குரை இலைப் போகிய – with rustling leaves/fronds, விரவு மணல் – spread sand, பந்தர் – pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), பெரும்பாண் – many bards, a leader of bards, காவல் பூண்டென – like the protection afforded, ஒரு சார் – on one side, திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப – women with fine jewels wait for an omen, வெறி உற விரிந்த அறுவை – fragrance filled cloth, மெல் அணை – soft pillow/bed, புனிறு – recently delivered, நாறு – fragrance, செவிலியொடு புதல்வன் துஞ்ச – as the son sleeps with the foster mother, ஐயவி அணிந்த நெய் ஆட்டு – applied oils with ground mustard and bathed (நெய் – எண்ணெய், ஆட்டு – நீராடுதல், குளித்தல்), ஈரணி – wet clothes, wet jewels, பசு நெய் – fresh ghee, fresh oil, கூர்ந்த மென்மை யாக்கை – very delicate body, சீர் கெழு மடந்தை – the woman with wealth, ஈர் இமை பொருந்த – her eyelids closed, நள்ளென் கங்குல் கள்வன் போல – like a thief in the pitch darkness of night, அகல் துறை ஊரனும் வந்தனன் – the man from the wide port came, சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே – since his son who bore his fine father’s name was born (பிறந்தமாறே – ஏ அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

நற்றிணை 41, இளந்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பைங்கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண்புறக் களரி விடு நீறு ஆடிச்
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ,  5
எல்லி வந்த நல் இசை விருந்திற்குக்
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிச்
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.  10

Natrinai 41, Ilanthēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Oh young woman with bright jewels!
When distinguished guests came home
for dinner at night, you cooked fatty
meat with ghee, fragrant smoke touched
your forehead, and small beads of sweat
formed, making you tired.

He who desired to unite with you of small
steps, has gone far away in sorrow to the
saline wasteland where green-eyed elephants 
kick the white dry ground with their fat legs
and spread dust that causes him distress,
and he quenches his thirst with water from
small pits near rocks.

Notes:  பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.  பாரம் = பருத்தி.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுரன் முதல் வருந்திய வருத்தம் கூவலில் தணியும் என்றதன்கண் இக்காலத்தே நம் பெருமான் பிரிவினால் நீ எய்தும் துன்பம் அவன் ஈட்டி வரும் பொருளாலே நீ இல்லிலிருந்து இயற்றும் அறத்தினாலே சிறந்த பயன் தரும் என்பது.

Meanings:  பைங்கண் யானை – green-eyed elephant, பரூஉ தாள் உதைத்த – kicked with fat legs (பரூஉ – இன்னிசை அளபெடை), வெண்புறக் களரி – white-surfaced wasteland, saline land, விடு நீறு ஆடி – released dust surrounding him, சுரன் முதல் வருந்திய வருத்தம் – the sorrow caused in the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), பைபய – little by little (பையபைய பைபய என மருவியது), பாஅர் – rocks (இசை நிறை அளபெடை), மலி – filled, சிறு கூவலின் தணியும் – it reduces its thirst by drinking from little pits (தணியும் – தணிக்கும்), நெடுஞ்சேண் சென்று வருந்துவர் – he will be sad having gone a very long distance, மாதோ – மாது + ஓ – அசைநிலைகள், expletives, எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – for the famous guests who came at night for dinner, கிளர் இழை அரிவை – oh young woman with bright jewels, நெய் துழந்து அட்ட – mixed with oil and cooked, mixed with ghee and cooked, விளர் ஊன் – meat with fat, அம் புகை – lovely smoke, fine smoke, எறிந்த நெற்றி – attacking your forehead, சிறு நுண் பல் வியர் பொறித்த – small beads of sweat formed, குறு நடைக் கூட்டம் – union with you of small steps, வேண்டுவோரே – the man who desires (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 42, கீரத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மறத்தற்கு அரிதால் பாக! பல் நாள்
வறத்தொடு பொருந்திய உலகு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல்; அதனால் 5
‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇச்,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ  10
அவிழ்பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

Natrinai 42, Keerathanār, Mullai Thinai – What the hero said to the charioteer, on his way home
It is hard to forget, oh charioteer!
Last time when I returned home, old
rain fell,
helping those on earth to do their work.                                 
New water had filled the pits,
many different croaking sounds were heard
and she did not hear the sounds of my chariot
bells, the bright-browed woman.
And so I sent word through the servants.

She had washed her hair which had not been  
decorated until then, and placed a few flowers
on it.  When she saw me, she embraced me so
tightly that it hurt her, her hair let down and
flowers falling, the naïve, dark young woman 
who was giddy with joy!

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும் ‘பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  இப்பகுதிக்கு இதனையே காட்டிய நச்சினார்க்கினியர், ‘இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.   அவிழ்பூ முடியினள் (11) – ஒளவை துரைசாமி உரை – முடி அவிழ்ந்து பூவுதிரவிழும் கூந்தலுடையவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவிழ்ந்து குலையும் முடியினள்.  வருத்துறாஅ – வருந்தி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).

Meanings:  மறத்தற்கு அரிது ஆல் – it is hard to forget (ஆல் – அசைநிலை, an expletive), பாக –  oh charioteer, பல் நாள் – many days, வறத்தொடு பொருந்திய – with sorrow due to dryness, உலகு தொழில் கொளீஇய – for those in the world do their business (கொளீஇய – செய்யுளிசை அளபெடை), பழ மழை பொழிந்த – old rain fell, புது நீர் அவல – in the pits with new water, நா நவில் பல் கிளை கறங்க – many kinds of frogs, toads etc. croaked with their kin, மாண் வினை – esteemed work, மணி ஒலி கேளாள் – she did not hear the sounds of the bells, வாள் நுதல் – the woman with a bright forehead (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), அதனால் ஏகுமின் என்ற – so I asked them to go and they did that (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), இளையர் வல்லே இல் புக்கு – the young men went to the house, அறியுநர் ஆக – they announced (அறியுநர் – அறிவிக்குநர் என்பதன் விவ் விகுதி தொக்கது), மெல்லென – slowly, gently, மண்ணா – not decorated, கூந்தல் மாசு அற கழீஇ – cleaned it without any imperfection (கழீஇ – சொல்லிசை அளபெடை), சில் போது கொண்டு – with some flowers, பல் குரல் அழுத்திய – placed flower clusters on her thick hair, அந்நிலை – at that time, புகுதலின் – since I went in, மெய் வருத்துறாஅ – her body hurting (வருத்துறாஅ – இசைநிறை அளபெடை, வருத்து –  அம் கெட்டு வருத்து என நின்றது, முதனிலைத் தொழிற்பெயருமாம், உறுதல் – வெளிப்படத் தோன்றல்), அவிழ்பூ முடியினள் – the woman who had let down her hair, the woman who loosened her hair from which flowers fell, கவைஇய – embraced (செய்யுளிசைஅளபெடை), bent, மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – the situation of the naïve dark young woman who was very happy (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 43, எயினந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்  5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
‘அஞ்சல்’ என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்  10
ஓர் எயில் மன்னன் போல,
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே.

Natrinai 43, Eyinanthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
To you,
it is pleasurable, going to a distant country,
passing harsh wastelands in summer when
the bright sun blazes like spread cloth,
where famished wild dogs kill sad marai deer,
sate themselves, and leave some leftover,
which will become food to those who travel.

To her,
it is distress on hearing that you are leaving,
like that caused to a king with a ruined fort that is                                 
attacked by an enemy with green-eyed elephants
after a friendly king said, “Fear not, I’ll help you,” 
and then abandoned him, when his help was needed, 
and there was nobody else to remove his sorrow.

Notes:  பிரிவு உணர்த்தப்பட்டு தோழி, தலைவனை செலவு அழுங்குவித்தது.  அகநானூறு 373 – முரவுவாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல, புறநானூறு 338 – ஓர் எயில் மன்னன்.  நற்றிணை 99 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செந்நாய் தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகும் என்றதனாலே, நீ உண்டு எஞ்சிய தலைவியினது நலனைப் பசலை உண்டு ஒழிக்கும் என்றதாம்.  மரை (3) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.

Meanings:  துகில் விரித்தன்ன – like cloth that is spread, வெயில் அவிர் உருப்பின் என்றூழ் – the bright sun with heat in summer, நீடிய குன்றத்துக் கவாஅன் – slopes near the tall mountains (கவாஅன் – இசை நிறை அளபெடை), ஓய்ப்பசி செந்நாய் – a very hungry wild dog, Wild dog – Cuon alpinus dukhunensis, உயங்கு மரை தொலைச்சி – killing sad marai deer, ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் – leftover after they ate to their full, சேய் நாட்டு அருஞ்சுரம் செல்வோர்க்கு – to those who go away to a far-away country’s harsh wasteland, வல்சி ஆகும் – it will become food, வெம்மை ஆர் இடை இறத்தல் – going on the hot paths, நுமக்கே மெய்ம்மலி உவகை ஆகின்று – your body is very happy (ஆகின்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), இவட்கே – for her (ஏ – அசைநிலை, an expletive), அஞ்சல் என்ற இறை கைவிட்டென – since the king who said ‘don’t be afraid’ and then abandoned, பைங்கண் யானை வேந்து – a king with green-eyed elephants, புறத்து இறுத்தலின் – since he came and stayed, களையுநர்க் காணாது கலங்கிய – distressed that there was nobody to help, உடை மதில் ஓர் எயில் மன்னன் போல – like a king with a ruined single fort, அழிவு வந்தன்றால் – great distress has come (வந்தன்றால் – ஆல் அசைநிலை, an expletive, வந்தன்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), ஒழிதல் கேட்டே – on hearing that you are leaving (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 44, பெருங்கௌசிகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனை வயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே, புனத்த  5
நீடு இலை விளை தினை கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்துச்,  10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே.

Natrinai 44, Perunkousikanār, Kurinji Thinai – What the hero said to his heart
My heart!  She is fit for you to know,
the young woman who played happily with
her beloved friends in the waterfalls until her
huge, calm, moist eyes turned red, who looked
at me gently and smiled near her house, 

the beloved daughter of a mountain dweller
from a fine mountain,
where mature clusters of millet spears grow on
plants with curved stems and long leaves in fields,
where their rich relatives who desire to harvest
millet meet in the front yards of their houses where
breadfruits grow like pots, and groves have trees
with fireflies on their tall branches, that light up
the sky to reveal the moving clouds.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்ட பின்பு குறியிடத்திற்கு வந்த தலைவன் உரைத்தது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறவர் மின்மினியை விளக்காகக் கொண்டு மழை இயக்கத்தை நோக்கியிருத்தல் போல நீயும் தோழி கூற்றால் தலைவியின் இயக்கத்தைக் காண முயலுகின்றனை போலும் என்றதாம்.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  குறவர் முன்றிலின்கண் நின்று இரவின்கண் வானிலே இயங்கும் முகிலின் இயக்கத்தைக் கண்டு நாளை மழை பெய்யும் அல்லது பெய்யாது என்று அறியும் நுண்ணறிவு உடையோர் ஆதலின் அங்ஙனமே நம்முடைய களவொழுக்கத்தையும் மறைவிலிருந்து ஒற்றியுணர்ந்து தலைவியை இற்செறித்தனர் போலும் என்று பரிவுற்று மெலிந்தான்.   

Meanings:  பொரு இல் – without equal, ஆயமோடு – with friends, அருவி ஆடி – played in the waterfalls, நீர் அலைச் சிவந்த – reddened because of the water hitting the eyes, பேர் அமர் மழைக் கண் – big calm moist eyes, குறியா நோக்கமொடு – looked gently, looked with an un-indicating glance, முறுவல் நல்கி – gave her smiles, மனை வயின் – near her house, பெயர்ந்த காலை நினைஇய – thinking about it after moving away (நினைஇய – செய்யுளிசை அளபெடை), நினக்கோ அறியுநள் – she is fit for you to know, நெஞ்சே – oh my heart, புனத்த – in the fields, நீடு இலை – long leaves, விளை தினை – mature millet, கொடுங்கால் – curved stems, நிமிர – lifted, straight up, கொழுங்குரல் – mature clusters, full clusters, கோடல் கண்ணி செழும் பல பல் கிளை – many rich relatives who desire to pluck, குறவர் – mountain men, அல்கு – stay, அயர் முன்றில் – front yard, குடக்காய் ஆசினி – round pot-like breadfruits, படப்பை – grove, நீடிய – long, பல் மர – of many trees, உயர் சினை – tall branches, மின்மினி – fireflies, விளக்கத்து – with the light, செல் மழை – moving clouds, இயக்கம் – movement, காணும் – seeing, நல் மலை நாடன் – the man from the fine mountain country, காதல் மகளே – the beloved daughter (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 45, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;  5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல! நின்றீமோ!
பெருநீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;  10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே.

Natrinai 45, Poet is Unknown, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
She is from a beautiful village
near the seashore grove,
the daughter of fishermen
who enter the big blue ocean,
stir it, and haul fish.

You are from an ancient town
with shops, where tall flags sway,
the beloved son of a wealthy man
owning fast chariots.

We chase the flocks of birds that
come desiring the fatty, shark meat
pieces we spread out to dry. 
Of what use is your virtue to us?
We reek of fish!  Go away from here!   

The good little lives that we
live here
from the yields of the big ocean
might not be as great as yours.
But among us too, there are fine men!

Notes:  குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘பெருமையிற் பெயர்ப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை ஓதிக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் அதற்கே இதனைக் காட்டினர்.  ‘ஏனோர் பாங்கினும்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 23) என்ற நூற்பா உரையுள் ‘கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!’ என்றது அருமை செய்து அயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர்.  எமக்கு நலன் எவனோ (9)  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எமக்கு நின் சிறந்த நலன்தான் யாது வேண்டிக்கிடந்தது?  ஒன்றும் வேண்டா, ஒளவை துரைசாமி உரை – எம்பால் அமைந்த நலம் யாது பயன் தருவதாம், H.வேங்கடராமன் உரை – எமக்கு நலன் என்பது யாதாகுமோ.  பெருநீர் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருநீர் என்பது அன்மொழித்தொகை.  கடல் என்பது பொருள்.

Meanings:  இவளே – this young woman, my friend, கானல் – seashore grove, நண்ணிய – nearby, காமர் – beautiful, desirable, சிறுகுடி – village, small settlement, நீல் நிறப் பெருங்கடல் – blue colored big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), கலங்க – stirring,  உள் புக்கு – going in, மீன் எறி – catching fish, பரதவர் மகளே – daughter of fishermen, நீயே – you, நெடுங்கொடி – tall flags, long flags, நுடங்கும் – swaying, நியம – with markets, மூதூர் – old town, கடுந்தேர் – fast chariots, செல்வன் – rich man, காதல் மகனே – beloved son, நிணச் சுறா – fatty shark, அறுத்த – sliced, cut up, உணக்கல் – drying, வேண்டி – desiring, இனப் புள் – flocks of birds, ஓப்பும் – chasing, எமக்கு நலன் எவனோ – of what use is your virtue to us, of what use is our virtue, புலவு நாறுதும் – we reek of fish, செல – go away, நின்றீமோ – do not stand here (முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல், இகரவீறு நீண்டு மோ என்னும் முன்னிலையசை பெற்றது, a verb with the second person singular ending), பெருநீர் – the ocean, the sea, விளையுள் – with the yields from the place, எம் சிறு நல் வாழ்க்கை – our good little life here, நும்மொடு புரைவதோ அன்றே – is not great compared to yours (ஏ – அசைநிலை, an expletive), எம்மனோரில் – among our people, செம்மலும் உடைத்தே – there are also fine men (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 46, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்துக்,
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்  5
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர,
வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து,
நன்வாய் அல்லா வாழ்க்கை  10
மன்னாப் பொருட்பிணிப் ‘பிரிதும் யாம்’ எனவே.

Natrinai 46, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Lord!  in this world, pleasure and youth
will be lost every day like the shadows
of arrows that are shot.
It will be rare if you cannot see that. 
please realize that and care for her!

It will distress my friend wearing jewels
on her chest, if you go desiring to earn
impermanent wealth which is of no use
for a good life, passing through harsh,
distressing, wasteland with many bamboo
clusters, where lovely, sweet kondrai fruits
that fall continuously on rocks, dropped by
swaying tree branches in the harsh winds,
create sounds resembling the drum beats of
bards, confusing those who listen to them.

Notes:  பிரிவு உணர்த்திய தலைவனிடம் தோழி சொன்னது.  நற்றிணை 16 – பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடு மீன் வழியின் கெடுவ.  அறை அறையா (7) – ஒளவை துரைசாமி உரை – பாறையின் மேல் அறைந்து, H.வேங்கடராமன் உரை – பாறையில் விழும்படி.  அறையா – அறைந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன (5,6) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பாணர் தம் பறையை முழக்கும் குறுந்தடிகளோ என ஐயுறுமாறு.

Meanings:  வைகல்தோறும் – every day, இன்பமும் இளமையும் – pleasure and youth, எய் கணை நிழலின் – like the shadow of an arrow that is shot (நிழலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கழியும் – they will be lost, இவ் உலகத்து – in this world, காணீர் என்றலோ – if you cannot see (ஓ – அசைநிலை, an expletive), அரிதே – it is rare (ஏ – அசைநிலை, an expletive), அது – that, நனி – greatly, பேணீர் ஆகுவிர் – may you care for her, may you protect her, ஐய  – sir, என் தோழி பூண் அணி ஆகம் புலம்ப – for my friend with jewels on her chest to be distressed, பாணர் – bards, அயிர்ப்புக் கொண்டன்ன – like attaining confusion, கொன்றை அம் தீம் கனி – lovely sweet laburnum fruits, Golden shower tree, Cassia fistula, பறை அறை கடிப்பின் – like the sounds of sticks that hit drums (கடிப்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அறை அறையாத் துயல்வர – falling on the rocks with sounds because of the swaying branches, வெவ்வளி வழங்கும் – where hot winds blow, where harsh winds blow, வேய் பயில் அழுவத்து – with bamboo-filled forest, எவ்வம் மிகூஉம் – with great sorrow (மிகூஉம் – இன்னிசை அளபெடை), அருஞ்சுரம் இறந்து – pass through the difficult wasteland, நன்வாய் அல்லா வாழ்க்கை – a life which is not good, மன்னாப் பொருட்பிணி – wealth that is not permanent, பிரிதும் யாம் எனவே – you say ‘I will leave’ (யாம் – தன்மைப் பன்மை, first person plural.  ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்  5
கானக நாடற்கு, ‘இது என’ யான் அது
கூறின் எவனோ தோழி, வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்  10
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

Natrinai 47, Nalvelliyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
What is wrong my friend, if I
tell him, the lord of the forests,
……….where a female elephant
……….hugs quickly her beautiful,
……….sad calf with ears like green
……….leaves of waterlilies, and
……….suffers in distress like those
……….with unhealable sores, since
……….a tiger killed her large mate,
that mother used kazhangu beans to
foretell thinking that Murukan is the
reason for your distress, and sacrificed
a young goat, believing wrongly,

since he has not helped to remove your
golden pallor?

Notes:  பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் சிறைப்பறத்தானாக இருப்பதை அறிந்த தோழி, தலைவிக்கு கூறுவாளாய் அவனிடம் கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – களிற்றைப் புலி கொன்றதனால் பிடியானை கன்றோடு வருந்தி நிற்கும் என்றது, நம் பெருந்தகைமையை அலர் கெடுத்தற்கு வருந்தி நான் உன்னுடன் சேர்ந்து வருந்துவேன் என்பதாம், ஒளவை துரைசாமி உரை – காதற் பெருங்களிற்றை உழுவை கொன்றதனால் பிடியானை வருத்தமொடு இயங்குதல் இன்றித் தன் கன்றைத் தழீஇக் கொண்டு வைகும் என்றது, தலைமகன் தொடர்பால் மேனி நலம் பசலையால் வேறுபட்டு அறியவே தலைவி அவனது காதல் அன்பு ஒன்றையே தழீஇக் கொண்டு வேறு செயலற்றி இருக்கின்றாள் என்றவாறு.  கோட்டம் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாறுபாடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாறுபாடு, ஒளவை துரைசாமி உரை – வெறியாடுதற்கு அமைந்த களம்.  குழவி (4) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  பெருங்களிறு உழுவை அட்டென – since the huge male elephant was killed by a tiger, இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு – the female elephant with great sorrow, இயங்கல் செல்லாது – unable to leave, unable to function, நெய்தல் – waterlilies,  பாசடை – green leaves, புரையும் – like, அம் செவி – beautiful ears, பைதல் அம் குழவி – distressed beautiful child, distressed child (அம் சரியையுமாம்), தழீஇ – embraced (சொல்லிசை அளபெடை), ஒய்யென – quickly (விரைவுக்குறிப்பு), அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – was in great distress like it had unhealable sores (உறுநரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கானக நாடற்கு – to the man from the forest land, இது என யான் அது கூறின் எவனோ – what is wrong if I tell him that this is what it is, தோழி – my friend, வேறு உணர்ந்து – think that it is different, அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – foretelling the change using molucca seeds/caesalpinia crista seeds, வெறி என உணர்ந்த உள்ளமொடு – thinking that you have incurred the wrath of Murukan, மறி அறுத்து – cut a young goat, அன்னை அயரும் முருகு – the veriyāttam ritual mother arranged for Murukan, நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறே – since it will not help to remove your gold-like pallor (உதவாமாறே – ஏ அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

நற்றிணை 48, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அன்றை அனைய ஆகி, இன்றும் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ,
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடைக்  5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது,
அமர் இடை உறுதர நீக்கி, நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே.

Natrinai 48, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
What happened on that day
revolves in our eyes even today!

In the forest path with flower
fragrances,
……….where umbrella-shaped kongam
………. flowers with delicate petals and
………. dull sepals blossomed and made
………. the woods beautiful,
……….appearing like the dawn stars,
you chased away without fear, bandits
wearing thick bracelets, skilled in
shooting with their sharp arrows, who
came with uproar to fight.

But when our relatives came looking
for us, you hid in the forest!

Notes:  கற்பு வாழ்வில் பிரிவு உணர்த்திய தலைவனிடம், தோழி களவில் நடந்ததை நினைவூட்டியது.   நற்றிணை 362 – அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே.  ஒளவை துரைசாமி உரை (நற்றிணை 318) – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார்.  இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருள் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – மறவர் காண்பவர்க்கு அச்சமுண்டாகுமாறு முழங்கிக் கொண்டு போந்தமை குறிப்பாள், கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் என்றாள்.  கோல் தொடி (6) – ஒளவை துரைசாமி உரை – திரண்ட வளையல்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வீர வளையல்கள்.  மறவர் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆறலைக்கள்வராகிய மறவர்கள், ஒளவை துரைசாமி உரை – தமர் (தலைவியின் உறவினர்) விடுத்த மறவர்கள்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோங்கம் பூ மலர்ந்து காடு அழகு கொண்டவென்றது, நீயிர் தலைவிபால் முகமலர்ந்து உறைதலால் இல்லறம் அழகாக நடைபெறுகின்றது என்பதாம்.    

Meanings:  அன்றை அனைய ஆகி – what happened on that day, இன்றும் – even today, எம் கண் உள போலச் சுழலும் – revolves like it is inside our eyes, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, புல் இதழ் – thin sepals, dull colored sepals, கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ – kongam flowers appear like umbrellas, Cochlospermum gossypium, வைகுறு மீனின் நினைய – to be considered as morning stars, தோன்றி – appearing, புறவு அணி கொண்ட – the forest is beautiful, பூ நாறு கடத்திடை – forest path with flower fragrance, கிடின் என இடிக்கும் – with loud noises (கிடின் – ஓசைக்குறிப்பு), கோல் தொடி – thick bracelets, மறவர் – wasteland bandits, வடி நவில் – created with sharpness,  அம்பின் வினையர் – those who are experts in the task of shooting arrows, அஞ்சாது – not being afraid, அமர் இடை உறுதர நீக்கி – you chased them away when they came to fight (உறுதர – வந்தபொழுது), நீர் எமர் இடை உறுதர – you saw our relatives come there (உறுதர – எதிரே வர), ஒளித்த – hid, காடே – forest (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 49, நெய்தல் தத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படுதிரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து  5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனச்
சென்று நாம் அறியின் எவனோ தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?  10

Natrinai 49, Neythal Thathanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The seashore has become lonely
since young women adorned with
bangles have stopped playing
on the milky sand brought
and heaped by dashing waves.

A day of chasing birds that came
for the curved shrimp caught in
knotted nets, has ended.
Our relatives have returned
happily to rest, after catching
sharks with horns.

Since we are confused, what will
happen if we go to the small fine town
of the lord of the clear ocean’s shore,
which has the fragrances of flowers from
the big branches of punnai trees in the  
common grounds and thāzhai blossoms 
in the front yards of houses? 

Notes:  தலைவி தலைவனைக் கூடுதற்கு இரவுக்குறி விரும்பும்படி தோழி கூறியது.  தலைவன் சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததுமாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி. ‘இதன்கண் என்றான் என ஒருசொல் வருவிக்க’ என்றார் இளம்பூரணர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னை மலர் தாழை மலரோடு சேர மணங்கமழா நிற்கும் என்றதனால், நீ தலைவனோடு முன்றிற் சோலையுட் கூடி இன்பந்துய்ப்பாயாக என்பதாம்.  பரவை (3) – ச. வே. சுப்பிரமணியன் உரை – பரவை (கடல்) என உள்ளது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை மற்றும் ஒளவை துரைசாமி உரையில் இச்சொல் பாவை என உள்ளது.  ஒளவை துரைசாமி உரை இச்சொல்லை முன்னிலைப் பெயரென்றும் ‘பாவை போலும் நீ ஓட்டும் செயலில் ஈடுபடுவதால்’ எனவும் பொருள் தந்துள்ளார்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ‘இறாமீன் பாவை போன்றது’ எனப் பொருள் தந்துள்ளார்.   மன்றப் புன்னை (8) – ஒளவை துரைசாமி உரை – ஊர் மன்றத்தின்கண் நிற்கும் புன்னை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மன்றம் போல் அமைந்த புன்னை.  தொடியோர் மடிந்தென (49) – ஒளவை துரைசாமி உரை – வளை அணிந்த இளமகளிர் மடிந்து அடங்கியமையின், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளையுடை கையராக பரத்தையர் யாவரும் தத்தம் மனையகத்து துயில்கின்றமையால்.  பொ. வே. சோமசுந்தரனார் தன் அகநானூறு பாடல் உரையில் (109-10) மடிந்து என்பதை ‘இல்லையாகிய’ என்று விளக்குகின்றார்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் தன் நற்றிணை பாடல் (257-8) உரையில் இவ்வாறே விளக்குகின்றார்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  படுதிரை கொழீஇய – the loud waves brought and heaped, the abundant waves brought and heaped (கொழீஇய – செய்யுளிசை அளபெடை), பால் நிற எக்கர் – milk colored sand, தொடியோர் மடிந்தென – since young women wearing bangles are not there, since young women wearing bangles are sleeping, துறை புலம்பின்றே – the seashore port has become lonely, முடி வலை முகந்த முடங்கு இறா – the curved shrimp that they seized in their nets made with knots, பரவை – spread, ocean, படுபுள் ஓப்பலின் – since they chased the birds coming to seize, பகல் மாய்ந்தன்றே – the day has ended, கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர் – my relatives returned happily and rested after fishing for sharks with horns/sword fish/horned fish, ஏமார்ந்தனம் என – since we are confused, சென்று நாம் அறியின் எவனோ தோழி – what will happen if we go and find out my friend, மன்றப் புன்னை – laurel trees in the common grounds, Mast wood Tree, Calophyllum inophyllum, மா சினை – huge branches, நறு வீ – fragrant flowers, முன்றில் – front yard, தாழையொடு கமழும் – with the fragrance of thāzhai trees, Pandanus odoratissimus, தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – to the small fine town of the lord of the clear ocean’s shore (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 50, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை – தோழி பாணற்கு வாயில் மறுத்துத் தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படி
அறியாமையின், அன்னை, அஞ்சிக்,
குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடும் இடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,  5
‘கேட்போர் உளர் கொல், இல்லை கொல்? போற்று’ என
‘யாணது பசலை’ என்றனன்; அதன் எதிர்,
‘நாண் இலை எலுவ’ என்று வந்திசினே,
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல் அரிவை! போற்றேன்,  10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

Natrinai 50, Marutham Pādiya Ilankadunkō, Marutham Thinai – What the heroine’s friend said to her, as she refused entry to the messenger bard, as the hero listened nearby
My dear friend with a fragrant
forehead!

He was going to the thunangai
festival to dance, wearing a flower
garland, earrings and small new
bracelets.  We were going there to
catch him dancing with other
women, with ignorance and in fear
of you.  On the curved entrance of
a long and high street, he appeared
rapidly like a stranger and shocked
me.  “Is there anybody to question
you or not?” I asked him.
He replied, “Sallow is beautiful.”
“You have no shame, my friend,”
I said to him and came back.  I will
not tell him that he is a noble man,
who even his enemies love.
I did not praise him due to my
great pettiness.

Notes:  தோழி பாணற்கு வாயில் மறுத்தது.  கூற்று விளக்கம் – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைமகன் பரத்தையிற் பிரிந்தான்.  பின்பு சிறைப்புறமாக வந்து நின்று வாயில் வேண்டிய பாணனைத்  தலைவியிடத்து விடுத்தான்.  தோழி அத் தலைமகன் கேட்கத் தலைவியை நோக்கித் “தலைவன் பரத்தையரோடு துணங்கை ஆடும்போது கையும் களவுமாய்ப் பிடிக்கச் சென்றோம்.  அவனோ வேறொரு வழி புகுந்து தப்ப முயன்று எம்மை எதிர்ப்பட்டனன்.  அறியாதான்போல் என்னிடத்து பசலை அழகாக உள்ளதே என வியந்தனன்.  நான் அவனை நீ நாணுடையை அல்லை என்று கூறி வந்தேன்”: என்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்னாய், நம் ஊர்க்கண் நிகழ்ந்த விழாவில் மகளிர் துணங்கைக் கூத்தாடினார்.  அதற்குத் தலைக்கை தருவான் சென்ற தலைமகன் குழையும் கோதையும் குறுந்தொடியும் கொண்டுச் சென்றான்.  கூத்து நிகழுங்கால் இப்பாணன் அதன் கொடுமிடையில் அகப்பட்ட என்னைக் கதுமெனக் கைப்பற்றி ஈர்த்தனன்.  அறியாமையின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை- தோழியின் அறியாமையாலே, ஒளவை துரைசாமி உரை – பாணனின் அறியாமையால்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  யாணு – யாணுக் கவின் ஆம் (தொல்காப்பியம், உரியியல் 83)

Meanings:  அறியாமையின் – due to ignorance, due to not knowing what to do, அன்னை – oh mother (friend), அஞ்சி – fearing, குழையன் – the man wearing earrings, கோதையன் – the man wearing a flower garland, குறும் பைந்தொடியன் – the man wearing small new bracelets, விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – we were going to catch him (while cheating with other women) who was proceeding to the thunangai dance festival (தழூஉகம் – இன்னிசை அளபெடை, யாம் கையகப்படுத்த), நெடு நிமிர் தெருவில் – on a long high street, கை புகு கொடும் இடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் – since he shocked me like a stranger appearing rapidly at the curved entrance (கதுமென – விரைவுக்குறிப்பு), கேட்போர் உளர் கொல் இல்லை கொல் – is there anybody to question you or not, போற்று என – understand this (I said), யாணது  பசலை என்றனன் அதன் எதிர் – he responded “your sallow is pretty”, நாண் இலை எலுவ என்று வந்திசினே – I told him, “Oh friend! you have no shame” and came away (இலை – இல்லை என்பதன் விகாரம், சின் – தன்மை அசைச்சொல், ஏ – அசைநிலை, an expletive), செறுநரும் விழையும் செம்மலோன் என – that he is a noble man who even enemies love, நறுநுதல் அரிவை – oh young lady with a fine forehead, போற்றேன் – I did not praise, சிறுமை பெருமையின் – due to the increased small-mindedness, காணாது – not seeing, துணிந்தே – boldly (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 51, பேராலவாயர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங்குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே வானம் பெயலொடு  5
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப்
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே,
பெருந்தண் குளவி குழைத்த பா அடி
இருஞ்சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த  10
வீ தா வேங்கைய மலை கிழவோற்கே?

Natrinai 51, Perālavāyar, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
What can we do, oh friend,
for the man from the lofty mountains,
where tall bamboos grow, rapid and loud
thunder roars and reverberates in caves as
fearing snakes run between boulders for 
cover and roll in fear, rain pours heavily
from the sky along with lightning strikes,
and the vēlan appears with his spear
as bright as lifted lightning streaks and  
gives flowers to put on your braided hair,
and a murderous bull elephant with dark
mud on his forehead crushes a large, cool
kulavi tree with his wide feet, and ruins
a breadfruit tree in a place where vēngai
trees are filled with flowers?

Notes:  தாய் வெறியாட்டு நிகழ்த்தக் கருதினாள்.  சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்கு உணர்த்தக் கருதிய தலைவி தோழியிடம் வருந்திக் கூறியது.  பின்னு விடு முச்சி (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய கொண்டையில், ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற கூந்தலில்.  வீ தா வேங்கைய (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலர் உதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின் கீழே தங்காநிற்கும், ஒளவை துரைசாமி உரை – பூக்கள் பரந்து தோன்றும் வேங்கை மரங்களுடைய.  உள்ளுறை (1) – பூத்த வேங்கையைக்கண்டு நெருங்காதொழியும் என்றது, தலைவியின் நலன் நுகர்ந்து தன் ஒழுக்கத்தால் அவள் மேனியில் வேறுபாடு பிறப்பித்து வெறியும் அலரும் விளைவித்து வருத்துதல் அல்லது வரைவு கருதாது ஒழுகுகின்றான் என்று தலைவி உள்ளுறுத்து உரைத்தவாறு.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குளவியைக் குழைத்த களிறு தலைவியை நலனுண்டு வாடவிட்ட தலைவனாகவும், அது சேற்றை நெற்றியிலணிந்து ஊரார் தூற்றும் பழிச்சொல்லைத் தலைவன் மேற்கொண்டதாகவும், அறியாமையால் ஆசினியை ஒசித்தது அவன் அறியாமையால் இதுகாறும் வரைந்தெய்து நெறியைக் கைவிட்டதாகவும், களிறு வேங்கையின் கீழ் தங்கியிருப்பது தலைவன் ஒருசிறைப் புறமாகவந்து தங்கியிருப்பதாகவும் கொள்க.  இது வினையுவமப் போலி.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484,  மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  யாங்குச் செய்வாம் (1) – ஒளவை துரைசாமி உரை – யாதனைச் செய்வோம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யாம் என்ன செய்ய மாட்டுவேம், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – யாம் என்ன செய்யக்கூடும், ச. வே. சுப்பிரமணியன் உரை – நாம் என்ன செய்ய முடியும்.

Meanings:  யாங்குச் செய்வாம் கொல் தோழி – what can do oh friend, what is it that we won’t do oh friend, (கொல் – அசைநிலை), ஓங்கு கழை – tall bamboo stalks, காம்புடை – bamboo filled, விடர் அகம் – mountain clefts, சிலம்ப – to sound, பாம்பு – snakes, உடன்று – in rage, ஓங்கு வரை – tall mountains, மிளிர ஆட்டி , மிளிர வாட்டி – causing them to roll down in terror, வீங்கு செலல் – going fast (செலல் – இடைக்குறை), கடுங்குரல் ஏறொடு – with heavy sound thunder, கனை துளி – lots of drops of water, தலைஇ – poured (தலைஇ – சொல்லிசை அளபெடை), பெயல் ஆனாதே – the rains did not stop (ஏ – அசைநிலை, an expletive), வானம் – clouds, பெயலொடு – with rain, மின்னு நிமிர்ந்தன்ன – like raised lightning, வேலன் வந்தென – the diviner has come, the Murukan priest has come, பின்னு விடு – braided hair, முச்சி – top, hair knot, அளிப்பு ஆனாதே – wearing was not eliminated, he gave flowers to wear, பெருந்தண் குளவி – big cool wild jasmmine, maramalli tree, malaimalli tree, cork tree, Millingtonia hortensis, குழைத்த பா அடி – crushed by its wide feet, இருஞ்சேறு – black mud, ஆடிய – played, நுதல – with a forehead, கொல் களிறு – a murderous male elephant, பேதை – ignorance, ஆசினி – breadfruit tree, ஒசித்த – breaks, வீ தா– flowers are spread, வேங்கைய – with vēngai trees, kino trees, Pterocarpus marsupium, மலை கிழவோற்கே – for the lord of the mountain (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 52, பாலத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்;  5
நீயே, ஆள் வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை, வாழி என் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்  10
ஐது, ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.

Natrinai 52, Pālathanar, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, oh heart!  You desire
to earn wealth, without any consideration!

You don’t understand the life of separation
from my pretty woman with fragrant hair
adorned with athiral flowers from dark vines,
tied together with pāthiri flowers with new,
pure petals.  You have no kindness.

I will not leave the sweet embraces of the
woman with pallor spots on her breasts,
even if I were to earn wealth equal to that
donated by the very charitable king Ōri,
victorious in harsh battles and a leader to
his warriors.

That wealth is not as great as her love. You
can leave by yourself if you crave for wealth.

Notes:  பொருள்வயின் பிரியும் தலைவன், உள்ளம் கலங்கித் தன் நெஞ்சிடம் உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – நீ என்பால் அன்புடை அல்லை என்பான், அன்பிலை என்றும், நெருங்கிக் கூறலின் வாழி என்றும் கூறினான்.  பாதிரித் தூத் தகட்டு எதிர்மலர் (1-2) – ஒளவை துரைசாமி உரை – பாதிரியினது தூய இதழுடைய புதுமலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தூய பொற்தகடு போன்ற பாதிரிமலர்.  ஐது (11) -மெல்லியது; அதாவது அத்துணை அருமையுடைத்தன்று என்பது.  வரலாறு:  ஓரி.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Kurunthokai poems 6, 52, 265 and 320 have references to Ōri.

Meanings:  மாக் கொடி – dark vines, அதிரல் பூவொடு – along with wild jasmine flowers, பாதிரி – trumpet flowers, Stereospermum chelonoides,தூத் தகட்டு – with pure outer petals, எதிர்மலர் – fresh flowers, similar flowers (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள்), வேய்ந்த – tied together, கூந்தல் – her hair, மணம் கமழ் – spreading fragrance, நாற்றம் மரீஇ – with the fragrance (மரீஇ – சொல்லிசை அளபெடை), யாம் – us, இவள் – she, சுணங்கு அணி – with pallor spots, with yellow spots, ஆகம் – chest, அடைய – to attain, முயங்கி – embracing, வீங்கு உவர்க் கவவின் – from the greatly sweet embraces, நீங்கல் செல்லேம் – I will not leave her and go, நீயே – you, ஆள் வினை சிறப்ப எண்ணி – you want to earn wealth, நாளும் – daily, பிரிந்து உறை வாழ்க்கை – a life with separation, புரிந்து – desiring wealth, அமையலையே – you do not rest, அன்பு இலை – you have no kindness (இலை – இல்லை என்பதன் விகாரம்), வாழி – அசைநிலை, an expletive, may you live long, என் நெஞ்சே – oh my heart, வெம்போர் – fierce battles, மழவர் – warriors, பெருமகன் – great leader, மா வள் ஓரி – greatly charitable king Ōri, கை வளம் – charitable hands, இயைவது ஆயினும் – even if I get, ஐது – delicate, ஏகு – you can leave, அம்ம –  அசைநிலை, an expletive, இயைந்து செய் பொருளே – the material wealth earned going together with you (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 53, நல்வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன் கொல் தோழி அன்னை கண்ணியது?
‘வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் 5
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்,
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப் பெறின் இவள் 10
பனியும் தீர்குவள், செல்க’ என்றோளே!

Natrinai 53, Nalvēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
I was afraid and hid it.
Did mother know about it?
Is she gracious because of it?
What was she thinking, oh friend?

She said to me, “In the middle
of night, heavy rains with roaring
thunder fell on the mountains that
rise up to the sky and flood waters
flowed in the forest stream with rocks,
carrying dried leaves and clusters of
flower buds.
The new sweet water will be a cure for
her trembling, if you both go and bathe
in the freshets without hatred, drink
the water and enjoy the scenery”.

Notes:  வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – பழந்தமிழர் வாழ்வில் புதுப்புனலாடல் சிறந்த நிகழ்ச்சியாகும்.  அக்காலை மன்னரென்றும் மக்களென்றும் வேறுபாடின்றி எல்லோரும் புனலாடல் மேவுவர்.

Meanings:  யான் அஃது அஞ்சினென் – I was afraid of that, கரப்பவும் – hid it, தான் அஃது அறிந்தனள் கொல்லோ – did she know about it (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), அருளினள் கொல்லோ – was she gracious because of it (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), எவன் – what is the reason, கொல் – அசைநிலை, an expletive, தோழி – my friend, அன்னை கண்ணியது – what mother thought, வான் உற நிவந்த – high up to the sky, touching the sky, பெருமலை – huge/tall mountains, கவாஅன் – nearby mountains, mountain slopes (இசை நிறை அளபெடை), ஆர்கலி வானம் – very loud skies, தலைஇ நடுநாள் கனை பெயல் பொழிந்தென – since it started to rain heavily in the middle of the night (தலைஇ – சொல்லிசை அளபெடை), கானக் கல் யாற்று – in the forest stream with rocks, முளி இலை கழித்தன – dried leaves that had dropped, முகிழ் இணரொடு – with clusters of buds, வரும் விருந்தின் – the arriving new flood water, தீம் நீர் மருந்தும் ஆகும் – sweet water will become medicine, தண்ணென உண்டு – drinking the cool water, கண்ணின் நோக்கி – enjoy with your eyes what you see, முனியாது ஆடப் பெறின் – if you bathe there without hatred, if you bathe there without anger, இவள் பனியும் தீர்குவள் – her trembling will end, her chillness will end, செல்க என்றோளே – ‘go’ she said (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 54, சேந்தங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி குருகிடம் சொன்னது
வளை நீர் மேய்ந்து, கிளைமுதல் செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து,
கருங்கால் வெண்குருகு, எனவ கேண்மதி,
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை,  5
அது நீ அறியின் அன்புமார் உடையை,
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி, தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்  10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே.

Natrinai 54, Chēnthankannanār, Neythal Thinai – What the heroine said to a heron
Oh white heron with pure feathers
and black legs!  You love to dive into
the ocean with your flock and eat
abundant fish!

But please listen to me!  This evening
time brings me great sorrow!
If you understand the reason for
my pain, and since you are very kind
to me, please let him know clearly of
my distress without treating me as being
of differing mind,
the man from the shores with kandal tree
fences, where sapphire-hued sides of clear
waves lap gently against young gnāzhal
trees with tender leaves that are ready to
be plucked by those who wear leaf  garments.    

Notes:  இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுப் பட்டு வாராது ஒழியக்கண்ட தலைவி, வரைதல் வேட்கையளாய், குருகிடம் இரந்து கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஞாழலின் கரிய புறத்தினைத் தெண் திரை தடவும் என்றது, ‘தலைவன் தன்னைத் தழுவி முதுகைத் தடவுதல் வேண்டும்’ என்ற தலைவியின் வேட்கையை உணர்த்தியது.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  Poem 83 is an address to an owl by the heroine’s friend.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  வளை நீர் – water surrounding the earth, the oceans (அன்மொழித்தொகை), மேய்ந்து – eating, கிளைமுதல் – with your flock, செலீஇ – going (சொல்லிசை அளபெடை), வாப் பறை – leaping and flying, விரும்பினை ஆயினும் – even though you desire, தூச் சிறை – pure feathers, இரும் புலா அருந்தும் – eating large amounts of flesh, நின் கிளையொடு சிறிது இருந்து – staying a little bit with your relatives, கருங்கால் வெண்குருகு – oh white heron/egret with black legs, எனவ கேண்மதி – listen to my words (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல், மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), பெரும் புலம்பின்றே – brings great pain, brings great loneliness, சிறு புன் மாலை – painful early evening, அது நீ அறியின் – if you know that, அன்பும் ஆர் உடையை – since you are very kind to me (ஆர் – அசைச் சொல், an expletive), நொதுமல் நெஞ்சம் கொள்ளாது – not considering me as a stranger, not considering me of having a differing mind, என் குறை இற்றாங்கு – that this is the nature of my sorrow, உணர – to understand, உரைமதி – please tell him (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), தழையோர் – those who wear leaf garments, கொய் குழை அரும்பிய – sprouted tender leaves that are ready to be plucked, குமரி ஞாழல் – young gnāzhal trees, young cassia trees, புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera, தெண் திரை – clear waves, மணிப் புறம் – sides with gem color, sides with dark blue color, தைவரும் – they touch, they hit against, கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – to the lord of the shores with kandal tree fences (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 55, பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கு மலை நாட! ஒழிக நின் வாய்மை!
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,  5
கண் கோள் ஆக நோக்கி, ‘பண்டும்
இனையையோ?’ என வினவினள் யாயே,
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து
என் முகம் நோக்கியோளே ‘அன்னாய்,
யாங்கு உணர்ந்து உய்குவள் கொல்’ என மடுத்த  10
சாந்த ஞெகிழி காட்டி,
‘ஈங்கு ஆயினவால்’ என்றிசின் யானே.

Natrinai 55, Peruvaluthi, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the lofty mountains!
May your truths be ruined!
You came at night not caring
about great dangers on the small
stony paths with bamboo,
and embraced her chest with bright
spots, after which six-legged bees
swarmed her shoulders endlessly. 

Mother looked at her with her
killer eyes and asked,
“Is this how it was in the past?”
Unable to reply, my friend looked
at my face in sorrow.
I realized that she could not explain
it away.  I showed mother a sandal
torch and said to her,
“oh Mother!  The bees are swarming
her since the sandalwood they
swarmed is being burned now.”

Notes:  மணம் புரியும் பொருட்டுப் பொருள் தேடிச் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தோழி உரைத்தது.  விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றாள்.  ஒளவை துரைசாமி உரை – களவு அலர் ஆயினும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘தோழியை வினவலும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘இது செவிலி வினாயினமையைத் தோழிகொண்டு கூறினாள்’ என்றும், இன்னும் இந்நூற்பாவில் உள்ள ‘அன்ன பிறவும்’ என்ற இலேசினால், ‘கண்கோளாக நோக்கிப் பண்டும் இனையையோ’ என்றலும் போல்வன பிறவும் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தலைவன், உதோ அணுமையிலேயே வரைந்து கொள்வல் வரைந்து கொள்வல் என்று பின்னரும் வரைந்து கோடலிற் கருத்தின்றிக் களவின்பமே காமுற்று வருதலின் நின் வாய்மை ஒழிக என்றாள்.  அறுகாற் பறவை (5) – ஒளவை துரைசாமி உரை – தேன்வண்டு வண்டுக்கும் கால் நான்கே ஆயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டினையும் கூட்டி, அறுகால் என்பது பண்டையோர் வழக்கு.  ‘அறுகால் யாழிசைப் பறவை இமிர’ (அகநானூறு 332) எனக் கபிலர் கூறுவது காண்க.  ஒளவை துரைசாமி உரை – நின் கூட்டத்தால் தலைவி மேனிக்கண் எழும் நாற்றம் அன்னையின் ஆராய்ச்சிக்கு உரியதாயிற்றென புலப்படுத்துகின்றாள்.  Ainkurunūru 212, 253, 254 andPuranānūru 108, 168 and 320 have descriptions of sandalwood being burned.   Some of these poems describe it as being used as fuel to cook food.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  ஓங்கு மலை நாட – oh man from the lofty mountains, ஒழிக நின் வாய்மை – may your truths be ruined, காம்பு தலைமணந்த – filled with bamboo, with entangled bamboo, கல் அதர்ச் சிறு நெறி – small path with rocks, narrow path with rocks, உறு பகை பேணாது – not caring about the great dangers (உறு – மிக்க), இரவின் வந்து – you came at night, இவள் பொறி கிளர் ஆகம் – her bright chest with spots, புல்ல தோள் சேர்பு – embraced her arms/shoulders, அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின் – since bees with six legs swarmed without limit (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கண் கோள் ஆக நோக்கி – looked with eyes that could kill, பண்டும் இனையையோ – was it like this in the past, என வினவினள் யாயே – mother questioned me, அதன் எதிர் சொல்லாளாகி – she being unable to reply, அல்லாந்து – saddened, என் முகம் நோக்கியோளே – she looked at my face, அன்னாய் – oh mother, யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என – I was afraid as to how she could escape, I was afraid as to how she would explain that, மடுத்த சாந்த ஞெகிழி காட்டி –  showed her the burning sandalwood that was lit, ஈங்கு – here. ஆயினவால் – they (the bees) have become like this (ஆயினவால் – ஆல் அசைநிலை, an expletive), என்றிசின் – I told her (இசின் – தன்மை அசை, an expletive of the first person), யானே – me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 56, பெருவழுதி, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டுதரு நாற்றம் வளி கலந்து ஈயக்,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா,  5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
‘ஏதிலாட்டி இவள்’ எனப்
போயின்று கொல்லோ நோய் தலைமணந்தே?  10

Natrinai 56, Peruvaluthi, Pālai Thinai – What the heroine said to her friend
Scents from tiny buds and fragrant flowers
of short-trunked kuravam trees, raised by
bees that swarm them, mix with the fragrant
breezes at this time, giving great joy to the
eyes.

But my sad heart went away to him, the man
who caused the bright bangles on my arms to
slip down.

Is my sad heart, that desired to be with him to
help the cruel man in his tasks, desiring
to return only with him?  Or did it come back, 
and on seeing my body that had lost its prior
beauty and had become the color of gold, said,
“She is now a stranger,” and left?

Notes:  வரைபொருள் ஈட்டத் தலைவன் சென்ற பொழுது, ஆற்றுப்படுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 1) என்ற நூற்பாவின்கண் இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று’ என்பர் இளம்பூரணர். இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் குறிக்கப்படும் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ என்றதற்கும், ‘நோயும் இன்பமும்’ என்பதன் உரையில் இப்பாட்டையே காட்டி, நெஞ்சினை உறுப்பும் உணர்வும் உடையது போல இளிவரல் பற்றிக் கூறுதற்கும் இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  குறு நிலைக் குரவின் – of short trunked kuravam trees, Bottle Flower Tree, Webera Corymbosa, சிறு நனை – small buds, நறு வீ – fragrant flowers, வண்டுதரு –  brought by bees, bringing bees, நாற்றம் வளி கலந்து – fragrance mixed with breezes, ஈய – yielding, கண் களி பெறூஉம் – eyes attain happiness (பெறூஉம் – இன்னிசை அளபெடை), கவின் பெறு காலை – at this beautiful time, எல் வளை – bright bangles, ஞெகிழ்த்தோர்க்கு – to the man who caused my bangles to slip down (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் – my heart which went with pain (உறீஇ – சொல்லிசை அளபெடை), செய் வினைக்கு அசாவா – not slackening, ஒருங்குவரல் – to come back together with him,  நசையொடு – with desire, வருந்தும் கொல்லோ – is it sad (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), அருளான் ஆதலின் – since he is cruel, since he does not shower graces, அழிந்து – ruined, இவண் வந்து – returning here, தொல் நலன் இழந்த – original beauty lost, என் பொன் நிறம் நோக்கி – looking at my golden color (due to the pallor, பசலை), ஏதில் ஆட்டி இவள் எனப் போயின்று கொல்லோ – did it go away thinking ‘she is a stranger’ (ஏதில் – வேறு, ஆட்டி – பெண், கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), நோய் தலைமணந்தே – with increased disease (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 57, பொதும்பில் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்,
துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால்  5
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை உடைத்தே,
செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும் காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே.  10

Natrinai 57, Pothumpil Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh Lord of the country with huge
mountains,
where lions and other wild animals
roam in herds, a wild cow with large
horns and her calf live under a vēngai
tree, and on seeing them asleep,
a monkey with fuzzy hair on her head
signs her troop to be quiet, and presses
the cow’s swollen udder for sweet milk,
which her baby drinks in handfuls!  

The red stalks with curved spikes of millet
are ready to be harvested in the vast field.
If she is not allowed to come to the field,
even her oiled, dark hair will lose its beauty.

She will be distressed!

Notes:  பகற்குறியில் வந்தொழுகும் தலைவனிடம், தோழி ‘தினை கொய்யும் காலம் நெருங்கியதால் இனி தலைவியைக் காண இயலாது’ எனக் கூறித் திருமணம் புரியத் தூண்டியது.  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – ஆமான் உறங்கும் செவ்வி கண்டு தன் சுற்றத்தைக் கைகவியா அடக்கித் தன் பறழ்க்கு மந்தி வீங்கு சுரை வாங்கித் தீம்பால் பிழிதல் போல, இவளைக் கொண்டுதலைக் கழியக் கருதுவாயின், மனையவர் உறங்கும் செவ்வி நோக்கிக் காவலையிகந்து இவளைக் கொணர்ந்து நின் கையடைப்படுத்துவேன் எனக் குறிப்பால் உணர்த்தியவாறு.  இது உவமப் பொருளால் வந்த உள்ளுறை..  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மந்தி கொடிய விலங்கிற்கு அஞ்சாது பதம் பெற்றுச் சென்று பாலைப் பிழிந்து ஊட்டிப் பறழைக் காக்குமாறு, நீயும் கொடிய சுரநெறியிற் சென்று பொருள் ஈட்டிக் கொணர்ந்து கொடுத்து இவளை மணந்து பாதுகாப்பாயாக என்றதாம்.  கவியா (4) – கவித்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கவியா – நற்றிணை 57 – கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, கலித்தொகை 42 –  தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா, அகநானூறு 9 – கை கவியாச் சென்று.  

Meanings:  தடங்கோட்டு – with curved horns, with large horns, ஆமான் – a wild cow, a female bison, மடங்கல் – lions, மா நிரை – large herds of animals, குன்ற – of the mountain, வேங்கை – under the kino Tree, Pterocarpus marsupium, கன்றொடு வதிந்தென – she lives with her calf, துஞ்சு பதம் பெற்ற – they are sleeping, துய்த்தலை மந்தி – a female monkey with a cotton-like fuzzy head hair, soft-headed female monkey, கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி – shows with her bending hand for her troop to be silent, வீங்கு சுரை – swollen udder, ஞெமுங்க – squeezing, வாங்கி – bending, pulling, தீம் பால் – sweet milk, கல்லா வன் பறழ் – an untrained strong young monkey, a young monkey that had not learned climbing and leaping etc., கைந்நிறை – handfuls, பிழியும் – she squeezes, மா மலை நாட – oh lord of the great mountain country, மருட்கை உடைத்தே – it causes bewilderment (ஏ – அசைநிலை, an expletive), செங்கோல் – red stalks, கொடுங்குரல் – curved grain spikes, சிறு தினை – small millet, வியன் புனம் – wide fields, கொய் பதம் – the perfect time to harvest, குறுகும் காலை – when it is getting near, எம் மை ஈர் ஓதி – my friend with dark wet hair, my friend with dark oiled hair (எம் – தன்மைப் பன்மை, first person plural, மை ஈர் ஓதி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), மாண் நலம் – great beauty, தொலைவே – will be lost (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 58, முதுகூற்றனார், நெய்தற் திணை – தோழி சொன்னது
பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன்  5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்  10
ஓடுதேர் நுண் நுகம் நுழைந்த மாவே.

Natrinai 58, Muthukootranār, Neythal Thinai – What the heroine’s friend said
May the horses hitched to the chariot                     
of the lord of the cold shores with tall              
waves, suffer beating,
like the sparrows painted on the eyes            
of sweet-toned drums hanging on the
shoulders of very wealthy children
wearing gold jewels,
that are hit with drumsticks!

They caused us to return with sad
hearts and exhausted bodies, at this
helpless evening time,
when delicate dew drops fall, drums
and white conch shells of Veerai’s king
Veliyan Thithan are sounded, and when
rows of lamps are lit.  

Notes:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தோழி மாவின் மேல் வைத்துச் சொல்லி வரைவு கடாயது.   வரலாறு:  வீரை, வேண்மான் வெளியன் தித்தன்.  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதனால், இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  வீரை வேண்மான் வெளியன் தித்தன் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறையூரின் கண் அரசாண்ட வீரை வேண்மான் வெளியன் என்னும் தித்தன், ஒளவை துரைசாமி உரை – வீரை நகர்க்குரியவனாகிய வேண்மானான வெளியன் என்பானுடைய மகன் தித்தன்.  Veliyan Thithan was a Chozha king.  According to K.N. Sivaraja Pillai, he ruled in Veerai around 50 B.C., and was the founder of the first Chōzha dynasty, and he seized Uranthai city from Azhisi, the father of Sēnthan.

Meanings:  பெருமுது செல்வர் – very rich people, பொன்னுடைப் புதல்வர் – gold jewels wearing sons, சிறு தோள் கோத்த – hung on their small shoulders, செவ்வரி – lovely sounds, பறையின் – of the drums, கண் அகத்து – on their eyes, எழுதிய – drawn, painted, குரீஇப் போல – like the sparrows (குரீஇ – இயற்கை அளபெடை), கோல் கொண்டு – with drum sticks, அலைப்ப – to be hit, படீஇயர் – let them suffer (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, வீரை வேண்மான் வெளியன் தித்தன் – Vēlir king Veliyan Thithan of Veerai, முரசு முதல் – with drums and others, கொளீஇய – lit (செய்யுளிசை அளபெடை), மாலை விளக்கின் – with the rows of lamps,  வெண்கோடு – white conch shells, இயம்ப – creating sounds, நுண் பனி அரும்ப – as delicate dew drops fall, கையற வந்த பொழுதொடு – at the helpless time, மெய் சோர்ந்து – with tired bodies, with exhausted bodies, அவல நெஞ்சினம் – we are of sad hearts, பெயர – to move, உயர் திரை – tall waves, நீடு நீர் – abundant water, பனித் துறைச் சேர்ப்பன் – the lord of the cold shores, ஓடு தேர் – fast chariot, நுண் நுகம் – fine yoke, நுழைந்த மாவே – the horses that entered the yoke, the horses that got tied to the yoke (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 59, கபிலர், முல்லைத் திணை – தலைவன் தேர் பாகனிடம் சொன்னது
உடும்பு கொரீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்  5
வன்புலக் காட்டு நாட்டதுவே; அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவுமார் இனியே.  10

Natrinai 59, Kapilar, Mullai Thinai – What the hero said to the charioteer
The town where she lives is in the
harsh forest, where delicate mullai
buds open as flowers, a hunter kills
monitor lizards, removes termites
from tall mounds, digs up frogs with
stripes, hunts hares during the
day, carries them on his shoulders,
drops everything at home, and
forgets it all and settles for sweet
liquor that causes great happiness.

She with a desiring heart is waiting
patiently for me.
If I delay further, she will feel sad!

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மாயோன் மேய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 4) என்ற நூற்பா உரையில், ‘நால்வகை ஒழுக்கத்திற்கும் நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க’ என்பார், இப்பாட்டின்கண் முல்லை ஒழுக்கத்துக்கு முல்லை நிலன் உரியதாதற்கு ‘வன்புலக் காட்டு நாட்டதுவே’ என்ற இப்பாட்டடியைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  உடும்பு முதலாயவற்றைக் கொண்டு வந்த வேட்டுவன் அவைகளை இல்லின்கண்ணே போட்டுக் கள்ளின் செருக்கினால் மயங்கிக் கிடக்குமென்றது, அயல்நாடு சென்று பலவகையாலே பொருளீட்டிவந்த யான் அவற்றை இல்லின்கண் இட்டு நமது காதலி நலனையுண்டு காமக்களியாலே செருக்கெய்தி மயங்கிக் கிடப்பேன் என்றதாம். 

Meanings:  உடும்பு கொரீஇ – stabbing monitor lizards (கொரீஇ – சொல்லிசை அளபெடை), வரி நுணல் அகழ்ந்து – digging up frogs with stripes, நெடுங்கோட்டுப் புற்றத்து – of tall termite mounds, ஈயல் – termites, கெண்டி – digging up, எல்லு – day, முயல் – hares, எறிந்த – hunt, வேட்டுவன் – a hunter, சுவல – carried on his shoulders, பல் வேறு பண்ட – with different kinds of things, தொடை – what was tied (on his shoulder), மறந்து – forgetting, இல்லத்து – at home, இரு மடைக் கள்ளின் – by drinking a lot of alcohol, இன் – sweet, களி – happiness, செருக்கும் – he gets intoxicated, வன்புலக் காட்டு நாட்டதுவே – it is in the harsh forest land (ஏ – அசைநிலை, an expletive), அன்பு கலந்து – love mixed, நம் வயின் – toward me (நம் – தன்மைப் பன்மை, first person plural), புரிந்த கொள்கையொடு – with a desiring principle, நெஞ்சத்து உள்ளினள் – she has been thinking in her heart, உறைவோள் ஊரே – the town where she resides (ஏ – அசைநிலை, an expletive), முல்லை நுண் முகை – delicate jasmine buds, அவிழ்ந்த – opened up, blossomed, புறவின் – in the forest, பொறை தலைமணந்தன்று – her mind has been patient (உள்ளம்), she has been patient, உயவுமார் –  it (உள்ளம்) will feel sad, she will feel sad (உயவும் + ஆர், ஆர் – அசைச் சொல், an expletive),  இனியே – if I delay more  (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 60, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெருநெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு  5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம் இல்
மா இருங்கூந்தல் மடந்தை  10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

Natrinai 60, Thoongalōriyār, Marutham Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Oh farmer who has many buffaloes
and many grain silos as tall as
mountains! 

You wake up at the crack of dawn
without much sleep, and eat with
your desiring hands large cooked
pieces of black-eyed varāl fish
with big balls of fine rice.  

When you go with others to plant
paddy grass in the water-filled field,
please protect the sedge grass and
waterlily plants.  The young woman
in our house, her hair thick and
dark, will wear the sedge grass as
pretty bangles and the waterlilies
as a garment.

Notes:  தலைவி இற்செறிக்கபட்டாள் என்பதனை தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.  வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற்செறிப்புண்டு மேனி மெலிந்திருக்கும் திறத்தைச் சொல்லி, வரைவு கடாவும் கருத்தினளாகலின், தோழி, மறுநாட் காலையில் நாற்று நடுவதற்கு நடுநரை நாடிச் செல்லும் உழவனை நோக்கிக் கூறுவாளாய், நெல் நாற்றின் மெல்லிய வேர்கள் இனிது பற்றுமாறு செறுவை எருமைகொண்டு ஆழ உழுது பயன்படுத்தி மென் சேற்றைப் பரம்பிட்டுச் செம்மை செய்து நீர் நோக்கி வந்தமை போன்ற எருமை உழவ என்றும், நடும்வினை முடியுங்காறும் பசியின்றி நடுநரொடு உடனிருக்க வேண்டிப் பெருஞ்சோறு உண்டு செல்கின்றனை என்பாள், பொம்மற் பெருஞ்சோறு கழும மாந்தி நடுநரோடு சேறி என்றும் கூறினாள்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66). உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  மலை கண்டன்ன – like seeing mountains, நிலை புணர் – put together, நிவப்பின் – with height, tall, பெருநெல் பல் கூட்டு – with many big grain silos, எருமை உழவ – oh farmer/plowman owning buffaloes, கண்படை பெறாஅது – not getting sleep, unable to sleep (பெறாஅது – இசை நிறை அளபெடை), தண் – cold, புலர் – dawn, விடியல் – early morning, கருங்கண் வராஅல் – black eyed varāl fish, murrel fish, Slacate nigra, Ophiocephalus punctatus, Ophiocephalus marulius (வராஅல் – இசை நிறை அளபெடை),பெருந்தடி  மிளிர்வையொடு – with large pieces cooked with sauce, புகர்வை அரிசி – mixed for food with rice, பொம்மல் – abundant, with fullness, பெருஞ்சோறு – big rice balls, கவர்படு – with great desire (to eat), கையை – you with hands (கையை – கையை உடையையாய்), கழும – lots, மாந்தி – eating, நீர் உறு செறுவின் – in the water filled fields (உறு – மிக்க), நாறு முடி அழுத்த – to plant paddy grass (நாறு – நாற்று), நின் – your, நடுநரொடு – with those who plant, சேறி ஆயின் – if you reach, அவண் – there, சாயும் நெய்தலும் – sedge and waterlilies (சாய் – கோரைப் புல்), ஓம்புமதி – please protect (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), எம் இல் – our house, மா இருங்கூந்தல் – dark thick hair, மடந்தை – young woman, ஆய் வளை – beautiful bangles, chosen bangles, கூட்டும் – she will wear, அணியுமார் – she will wear (அணியும் + ஆர், ஆர் – அசைச் சொல், an expletive), அவையே – them (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 61, சிறுமோலிகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படி
கேளாய் எல்ல தோழி! அல்கல்
வேண் அவா நலிய வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
‘துஞ்சாயோ என் குறுமகள்?’ என்றலின்,  5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
‘படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?’ என்றிசின் யானே.  10

Natrinai 61, Sirumōlikanār, Kurinji Thinai – What the heroine said to her friend, or what the heroine’s friend said to her, as the hero listened nearby
Listen, my friend!
Last night I was distressed with
desire for my lover and was in deep
pain like a doe pierced by an arrow.

I sighed deeply, and mother asked me,
“Are you not sleeping, my daughter?”
as though she knew my great sorrow.

Words didn’t come out of my mouth,
but quietly I said to my heart,
“How could I close my eyes when I am
thinking about my man from the country
with lovely forests, heavy rains, and
golden jasmine flowers that grow near rocks
on gravel pits, looking like beaks of kingfishers.”

Notes:   தலைவன் வரவு உணர்ந்து உரைத்தது.  தாயறிவு அறிவுறுத்தி வரைவு கடாவுவது.  களவின்கண் அன்னையென வருபவள் செவிலி.  ‘ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்’ (தொல்காப்பியம், களவு 34).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘மனைப்பட்டுக் கலங்கிக் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்த சான்றல் அருமறை உயிர்த்தலும் (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் துறைக்கு எடுத்துக் காட்டினர்.  தலைவி கூற்றெனலே நேரிதாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இதனுள் துஞ்சாயோ எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கு என மறை உயிர்த்தவாறும், கண்படாக் கொடுமை செய்தான் எனப் பரத்தமை கூறியவாறும் காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  பரல் அவல் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரல்கள் நிரம்பிய பள்ளம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரல் ஆகுபெயராக மேட்டு நிலத்தைக் குறித்து நின்றது.  எனவே மிசையும் அவலும் உடைய கான் என்பதாயிற்று.  ஐங்குறுநூறு 447-2 – தளவின் சிரல் வாய்ச் செம்முகை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  கேளாய் எல்ல தோழி – listen my friend (எல்ல – இருபாற் பொதுச் சொல்), அல்கல் – yesterday night, வேண் அவா – with increasing desire, நலிய – with distress, வெய்ய உயிரா – வெய்ய உயிர்த்து, sighed hot breaths, ஏ – arrow, மான் பிணையின் – like a female deer (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வருந்தினெனாக – when I was sad, துயர் மருங்கு அறிந்தனள் போல – like she understood my great sorrow, அன்னை – mother, துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் – since she asked ‘are you not sleeping my little daughter’, சொல் வெளிப்படாமை – words did not come out, மெல்ல என் நெஞ்சில் – slowly in my heart, படுமழை பொழிந்த – where heavy rains had fallen, பாறை மருங்கில் – near the rocks, சிரல் வாய் உற்ற – like the kingfisher’s mouth, தளவின் – with thalavam flowers, golden jasmine, செம்முல்லை, பரல் அவல் – tiny gravel pits, raised land and valley, கான் கெழு  நாடற்கு – for the lord of the land with forests, படர்ந்தோர்க்கு – to the one who is saddened, to the one is thinking about him, கண்ணும் படுமோ – could I close my eyes  and sleep, என்றிசின் – I told her (இசின் – தன்மை அசை, an expletive of the first person), யானே – me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 62, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே, ‘முள் எயிற்று  5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு ஓர் மதி நாட் திங்கள்,
உரறு குரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பர் அஃது’ எனவே?  10

Natrinai 62, Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
As I stood there and looked at the
moon crawling above the mountains,
in this bamboo-filled forest where
bamboos with knotted roots create
sighing sounds of sad elephants tied
to posts, when wind blows through
them in this long summer,

did I not think about my lovely day
moon with sharp teeth and a pottu on
her pretty, fragrant brow, who lives
on the bright, rock-filled mountains
where trees have dried and lost their
shade as the harsh, loud winds blow?

Notes:  முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன், பின்னும் பொருள் வேண்டிய நெஞ்சிடம் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 46) என்ற நூற்பா உரையின்கண், இப்பாட்டினை எடுத்தோதி, ‘தலைவிகண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவு அழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.

Meanings:  வேர் பிணி வெதிரத்து – in the bamboo with intertwined roots, கால் பொரு – winds blowing, நரல் இசை – music sound, கந்து பிணி – tied to a post, யானை அயர் உயிர்த்தன்ன – like the sad sighs of elephants, என்றூழ் நீடிய – long summer, வேய் பயில் அழுவத்து – in the forest filled with bamboos, குன்று ஊர் – crawling over the mountains, மதியம் நோக்கி – looking at the pretty moon, நின்று நினைந்து உள்ளினென் அல்லெனோ – I stood there and did I not think about it, யானே – me (ஏ – அசைநிலை, an expletive), முள் எயிற்று – with sharp teeth, திலகம் தைஇய – decorated with a pottu (தைஇய – செய்யுளிசை அளபெடை), தேம் கமழ் திரு நுதல் – beautiful forehead with sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), எமதும் உண்டு – I have (எமது – தன்மைப் பன்மை, first person plural), ஓர் மதி – a moon, நாட் திங்கள் – day moon, உரறு குரல் – loud sounds, வெவ்வளி எடுப்ப – harsh winds blowing, hot winds blowing, நிழல் தப – shade ruined, without any shade, உலவை ஆகிய மரத்த – with trees that just have branches without leaves (அகரம் பன்மை உருபு), கல் – rocks, பிறங்கு உயர் மலை உம்பர் – above the bright tall mountains, அஃது எனவே – that it is (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 63, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்  5
அறன் இல் அன்னை அருங்கடிப்படுப்ப
பசலை ஆகி விளிவது கொல்லோ,
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி
திரைதரு புணரியின் கழூஉம்  10
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

Natrinai 63, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
This town,
……….where fishermen with huge nets
……….struggle in the powerful ocean
……….and haul abundant fish that they
……….dry on fresh sand,
……….the uproarious streets reek of
……….flesh, and punnai trees put out
……….clusters of bright flowers that
……….spread fragrances of festivals,
has no sense of justice.

Her unfair mother guards her fiercely and
she has become pale.  Will our friendship
with the lord of the ocean with abundant
waves, who washes his horses tied to large
yokes in the water brought by waves,
after riding through brackish waters near mud
where birds have sat and dropped flowers,
ruin her?

Notes:  அலர் அச்சத்தால் தலைவி அன்னையால் இற்செறிக்கப்பட்டாள் என்பதை தோழி உணர்த்தியது.  திரைதரு புணரியின் கழூஉம்  (10) – ஒளவை துரைசாமி உரை – கடலலையால் கழியிடை வந்து கலக்கும் நீரால் கழுவிக் கொள்ளும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலை எழுந்து வரும் கடல் நீராலே கழுவப்படுகின்ற.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கழிச் சேற்றிலோடுங் குதிரைகளின் உடம்பிலே பட்ட சேறு கடல் நீரால் கழுவப்படுமென்றது, களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகள் மேலும் தலைமகன் மீதும் ஏறிய அலர் அவ்விருவரும் வரைந்து கொள்ளுதலால் நீக்கப்பட வேண்டும் என்றதாம்.  இறைச்சி –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணற் பரப்பிலே பரதவர் மீன் உணக்கலாகிய புலவு நாற்றத்தைப் புன்னை மலர் மணம் வீசுதலாற் போக்கிக் கமழாநிற்குமென்றது, சேரியிடத்தே தலைவிக்காக எமர் பெறக்கருதிய பொருளாசையைத் தலைவன் சான்றோரை முன்னிட்டுத் தரும் அருங்கலம் முதலியவற்றாலே போக்கி வரைவு மாட்சிமைப்பட முடிப்பானாக என்றதாம்.  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர் – fishermen with big nets who struggled in the powerful ocean, மிகு மீன் உணக்கிய புது மணல் – dried the abundant fish on the fresh sand, ஆங்கண் – there, கல்லென் – loud sounds, சேரி – streets, settlements, புலவல் – flesh stinking, புன்னை – laurel tree, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, விழவு நாறு – fragrance of festivals, விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – open their clusters of bright flowers which spread fragrance, அழுங்கல் ஊரோ – uproarious town (ஓ – அசைநிலை, an expletive), அறன் இன்று – it has no sense of justice since it gossips (அறன் – அறம் என்பதன் போலி), அதனால் – so, அறன் இல் அன்னை – mother with no justice (அறன் – அறம் என்பதன் போலி), அருங்கடிப்படுப்ப – has put her under strict guard, பசலை ஆகி – became pale, விளிவது கொல்லோ – will she be ruined (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), புள் உற ஒசிந்த – broken by birds sitting on them, பூ மயங்கு அள்ளல் – mud mixed with flowers, கழிச் சுரம் – brackish waters, நிவக்கும் – riding on top, இருஞ்சிறை – big yokes, இவுளி – horses, திரைதரு புணரியின் – in the ocean with rising waves, in the backwaters whose waters are brought by waves, கழூஉம் – washes (இன்னிசை அளபெடை), மலி திரைச் சேர்ப்பனொடு – with the lord of the ocean with abundant waves, அமைந்த நம் தொடர்பே – the friendship that we have formed, (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 64, உலோச்சனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல் தோழி! யாம்
இன்னமாக நத்துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்  5
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென,
வறிதால் இகுளை என் யாக்கை; இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர்; வாராது  10
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே.

Natrinai 64, Ulōchanār, Kurinji thinai – What the heroine said to her friend
However special he may be,
let thoughts of him end!
Don’t feel sad, my friend!
Why do we need the friendship
of the man who abandoned us?

The mountain dwellers who wear
hemp fiber clothes have peeled the
barks of sandal trees in ignorance,
wilting and ruining them.
Their oozing sap is like my
intelligence and heart that went to
him, and my body has become
empty.

He will not be a cure to my illness
even if he comes back.
Let him stay there, my friend.
I hope that my relatives don’t see
my deep sadness and heavy sorrow! 

Notes:  பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைத்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவில் வரும் ‘வழிபாடு மறுத்தல்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

Meanings:  என்னர் ஆயினும் – however he is, இனி நினைவு ஒழிக – let thoughts (of him) end, அன்னவாக – for that, இனையல் – don’t feel sad, தோழி – friend, யாம் – our, இன்னம் ஆக – even when we are in this situation, நத்துறந்தோர் – he who gave sorrow and parted from us (நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), நட்பு – friendship, எவன் – why, மரல் நார் உடுக்கை – hemp fiber clothing, மலை உறை குறவர் – the mountain dwellers, அறியாது – without knowing, in ignorance, அறுத்த – cut by them, சிறியிலை – small leaved (சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), சாந்தம் – sandalwood trees, வறனுற்று – dried,  ஆர – fully, முருக்கி – destroyed, பையென – slowly, மரம் வறிதாகச் சோர்ந்து – trees dried and got sick looking, உக்காங்கு – like it oozed, like how they fell, என் – my, அறிவும் உள்ளமும் – intelligence and heart, அவர் வயின் சென்றென – since they went toward him, வறிது ஆல் – dried out, (ஆல் – அசைநிலை, an expletive), இகுளை – friend, என் யாக்கை – my body, இனி அவர் வரினும் – now even if he comes, நோய் மருந்து அல்லர் – he will not be medicine to my sickness, வாராது – not coming, அவணர் ஆகுக – let him stay there, காதலர் – my lover, இவண் – here, நம் – my, தன்மைப் பன்மை, first person plural, காமம் படர் – love affliction, அட வருந்திய – heavy sadness, நோய் – disease, மலி வருத்தம் – lot of sorrow, காணன்மார் எமரே – may my relatives not see (காணன்மார் – மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு, எமரே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 65, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி!
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள்ளருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை  5
நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெருமலை நாடனை ‘வரூஉம்’ என்றோளே.

Natrinai 65, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May she drink nectar, our neighbor lady,
her words as sweet as Kidangil town!

She said that he will come,
the man from the lofty mountains,
where on the banks of a forest stream
where moss is tossed around by the waves
and bright white water cascades down,
an elephant is wounded, fighting with a tiger
that stalked it, and forest dwellers with no
kindness shoot their arrows desiring its tusks, 
as it trumpets in pain like roaring thunder.

Notes:  தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.  குறுந்தொகை 201 – அமுதம் உண்க நம் அயல் இலாட்டி.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலி பொருதலாலே புண் மிக்க யானை காமநோய் பொருதலால் வருத்தமுற்ற தலைவியையும், வேடர் யானையின் மருப்புப் போக அம்பு விடுவது ஏதிலாட்டியர் தலைவியின் உயிருக்கே ஏதம் உண்டாம்படி அலர் எடுத்ததாகவும், அம்பு பட்ட யானை பூசலிடுவது அலரைப் பொறாளாய தலைவி வருந்துவதாகவும், அப்பூசல் மலையிற்சென்று மோதுதலானது அவ்வருத்தச் செய்தி தலைவன் மாட்டுஞ்சென்று விட்டதாகவும், அத்தகைய மலைநாடனாதலின் இன்னே வருகுவன் எனவும் கொள்க.  வரலாறு:  கிடங்கில்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  அமுதம் உண்க – may she eat nectar, நம் அயல் இல் ஆட்டி – our neighbor lady (ஆட்டி – பெண்), கிடங்கில் அன்ன – like Kidangil town, இட்டுக் கரை – shore created by placed (by the waves) sand,  கான் யாற்று – in the forest stream, கலங்கும் –  mixed up, பாசி நீர் அலைக் கலாவ – the moss gets moved around by the waves, ஒளிறு வெள் அருவி – bright white waterfalls, ஒண் துறை – bright shore, மடுத்து – hid and leapt, stalked and attacked, புலியொடு பொருத புண் கூர் யானை – elephant that fought with a tiger and ended up with wounds, நற் கோடு நயந்த – desiring its fine tusks, அன்பு இல் கானவர் – mountain dwellers without any kindness, வில் சுழிப்பட்ட – curved the bows and shot arrows, நாமப் பூசல் – screaming in fear (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), உருமிடைக் கடி இடி கரையும் – it sounds loud like heavy thunder, பெருமலை நாடனை வரூஉம் என்றோளே – she said that the man from the tall mountains will come (வரூஉம் – இன்னிசை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 66, இனிசந்தநாகனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகிப்,
புன் புறா உயவும் வெந்துகள் இயவின்,  5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ,
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்  10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

Natrinai 66, Inisantha Nākanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
My lovely daughter left to be with her lover,
on a hot, dusty path, where a pigeon chases
away bees and eats small, ukā berries that
taste like pepper, feels confused and afraid,
sits on a tall tree branch and shakes its bright,
spotted neck in pain, regretting what it did.

Even though she’s with him,
her waist ornament with strands of gold
coins twisted, her garland losing its shape,
her small bangles slipping down, her great
beauty lost,
will her flower-like, beautiful eyes redden,
loose their luster, cry and become confused?

Notes:  உடன்போக்கில் தலைவனும் தலைவியும் போன பின் தலைவியின் தாய் (நற்றாய்) சொன்னது.  சிதர் சிதர்ந்து (2) –  ஒளவை துரைசாமி உரை – மொய்த்த வண்டுகளை விலக்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – வண்டுகள் நெருங்காதபடி போக்கி.  வெறிபட (4) – ஒளவை துரைசாமி உரை – மணம் உண்டாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வெறுப்பினால்.  மாயக் குறுமகள் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வஞ்சமுடைய சிறுமி, ஒளவை துரைசாமி உரை – மாமை நிறமுடைய என் இளமகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகிய இளம் புதல்வி.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புறா உகாய்க் காயைத் தின்று வருந்தியது போல தன்மகள் ஏதிலாளனின் மாய இன்பம் நல்லதெனக் கொண்டு சென்று வருந்துவாளோ என்று கருத்துப்பட நின்றது.

Meanings:  மிளகு பெய்தனைய – appearing like placed pepper, சுவைய – with taste,  புன் காய் – dry berries, small fruits, உலறு தலை உகாஅய் – ukā trees with dried tops, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – இசைநிறை அளபெடை), சிதர் – honeybees, சிதர்ந்து – chased away, உண்ட – ate, புலம்பு கொள் – with sorrow, நெடுஞ்சினை – tall branch, ஏறி – climbed, நினைந்து தன் – thinking about what it did, பொறி கிளர் எருத்தம் – spotted bright neck, வெறிபட – with fear, மறுகி – becoming confused, புன் புறா – sad pigeon/dove, dull colored pigeon/dove, உயவும் – become sad, வெந்துகள் இயவின் – on the hot dusty path, நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் – even if she has joined her desired lover, சிவந்து – reddened, ஒளி மழுங்கி – become dull, அமர்த்தன கொல்லோ – will they be confused (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), கோதை மயங்கினும் – if her garland is twisted, குறுந்தொடி நெகிழினும் – if her small bangles get loose, காழ் – strands, பெயல் – hanging, அல்குல் – waist/loins, காசு – gold coins, முறை திரியினும் – if it is twisted in form, if it is disarranged, மாண் நலம் கையற – if her esteemed beauty is lost, கலுழும் – they will cry, என் – my, மாயக் குறுமகள் – my beautiful daughter, my tricking young daughter, my dark daughter, மலர் ஏர் கண்ணே – beautiful flower-like eyes (ஏர் – உவம உருபு, a comparison word, கண்ணே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 67, பேரிசாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய், கரைய
கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே;  5
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்
தங்கின் எவனோ தெய்ய, பொங்கு பிசிர்  10
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

Natrinai 67, Pērisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
The sun, which climbed up to the distant
sky, hid behind the lofty mountains.
The seashore is lonely.  White herons
with black legs ate shrimp, spread
their strong wings, flew over salt mounds,
and are resting on the black branches
of punnai trees.

The backwater level has risen to hide
the thick-stemmed, dark, blue waterlilies
where sharks swim with their mates.

Carrying bright lights, our relatives have
entered the roaring cold ocean to fish.

Why not stay in our sweet town by the
grove on the seashore, where the ocean
waves rise and roar like loud drums?

Notes:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘புணர்ச்சி வேண்டினும்’ என்ற பகுதிக்கண் இப்பாட்டினை எடுத்தோதி ‘இஃது இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  உறைவின் ஊர்க்கு (12) – ஒளவை துரைசாமி உரை – தங்குதற்கு இனிய ஊர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறைதலையுடைய ஊர்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  சேய் – distant, விசும்பு இவர்ந்த – climbed to the sky, செழுங்கதிர் மண்டிலம் – the sun with full rays, the sun with bright rays, மால் வரை மறைய – it hid behind the tall mountains, துறை புலம்பின்றே – the port was lonely (ஏ – அசைநிலை, an expletive), இறவு அருந்தி எழுந்த – ate shrimp and rose up (இறவு – இறா இற என்றாகி உகரம் ஏற்றது), கருங்கால் வெண்குருகு – black-legged white herons/egrets/storks, வெண்கோட்டு – on the white mounds (salt mounds), அருஞ்சிறைத் தாஅய் – they spread their precious wings and fly (தாஅய் – இசைநிறை அளபெடை), கரைய – on the seashore, கருங்கோட்டுப் புன்னை – black-branched laurel trees, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இறை கொண்டனவே – they went and rested (ஏ – அசைநிலை, an expletive), கணைக் கால் மாமலர் – thick-stemmed dark flowers, kuvalai flowers, blue waterlilies, கரப்ப – to hide, மல்கு கழி – backwaters get filled, துணைச் சுறா வழங்கலும் வழங்கும் – sharks swim there with their partners, ஆயிடை – there, எல் – night, இமிழ் பனிக் கடல் – cold loud ocean, மல்கு சுடர்க் கொளீஇ – with their lights lit full (கொளீஇ – சொல்லிசை அளபெடை), எமரும் வேட்டம் புக்கனர் – our relatives have entered the ocean, அதனால் – so, தங்கின் எவனோ – why don’t you stay here, தெய்ய – அசைநிலை, an expletive, பொங்கு பிசிர் – spreading water sprays, overflowing water sprays, முழவு இசைப் புணரி எழுதரும் – drum-like loud waves rise, உடை – breaking waves, கடல் படப்பை – seashore grove, எம் உறைவின்/ உறைவு இன் ஊர்க்கே – in the town where we live, in the sweet town where we live (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 68, பிரான் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம்’ எனக்
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்  5
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே,
‘செல்க’ என விடுநள் மன் கொல்லோ? எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே.  10

Natrinai 68, Pirān Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
In his lofty mountain peaks
in the pitch darkness of midnight,
thunder roared, light spread as
lightning streaks appeared like moving
vines, and clouds came down as rain.

Unable to play ōrai games with
friends, we are confined to our
homes.
If someone can bow and tell with
strength to mother that restraining
young girls is not fair, and that it
will ruin their welfare, will she tell
us to go and play?

If she does that, we can play to our
heart’s desire in the new floods of the
river carrying small wisps of foam
and fragrant flowers.

Notes:  தலைவிக்கு உரைப்பாளாய், தலைவி இற்செறிக்கப்பட்டாள் எனத் தோழி அறிவுறுத்தியது.  வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இது வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின் எனக் கூறி வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்..  செல்க’ என விடுநள் மன் கொல்லோ (7) -பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை- நீவிர் செல்வீராக என விடுப்பாளோ, ஒளவை துரைசாமி உரை – நீவிர் சென்று வருக என விடுவாள் (கொல் என்னும் சொல்லை அசையாகக் கொள்கின்றார் ஒளவை துரைசாமி).  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கோடுயர் குன்றத்தில் மின்னி மழை பெய்தாற்போல அன்னையிடத்து உரைப்பாரைப் பெற்று மணவாழ்வின் ஒளி பெற வேண்டுமென்பது வற்புறுத்தப் பெற்றது.  Ōrai games are played by girls in Natrinai 68, 143, 155 and 398.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – without playing ōrai games with friends, இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் – if young people are stuck in the home, அறனும் அன்றே – it is not fair, ஆக்கமும் தேய்ம் என – that they will lose their strengths (தேய்ம் – தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டது), குறு நுரை சுமந்து – carrying small pieces of foam, நறு மலர் – fragrant flowers, உந்தி – தள்ளிக்கொண்டு, pushing, பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – we can play in the new waters that overflow in the stream to the satisfaction of our hearts (உண உண்ண என்பதன் விகாரம்), வல்லிதின் – with ability, with strength, வணங்கி – bowing, humbly, சொல்லுநர்ப் பெறினே – if there is someone who can go and tell (ஏ – அசைநிலை, an expletive), ‘செல்க’ என விடுநள் மன் கொல்லோ – I wonder whether she will let us go (மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), எல் உமிழ்ந்து – spreading light, emitting light, உரவு உரும் உரறும் – strong thunder roaring, அரை இருள் நடுநாள் – dark midnight, கொடி நுடங்கு – swaying like vines, இலங்கின மின்னி ஆடு மழை இறுத்தன்று – rain fell down after bright lightning, அவர் கோடு உயர் குன்றே – in his tall mountains with peaks (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 69, சேகம்பூதனார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச்,
சேய் உயர் பெருவரைச் சென்று அவண் மறையப்,
பறவை பார்ப்பு வயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்  5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள் வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்  10
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.

Natrinai 69, Sēkampoothanār, Mullai Thinai – What the heroine said
The sun with many rays ended
the day, climbing up the very high
mountains and hiding behind them.

Birds went to their young ones
in their nests,
big-necked stags embraced their
delicate does in the woodlands,
jasmine buds spread their petals,
glory lily flowers appearing like
lamps blossomed in many places,
and perfect bells hung on proud cows
chimed clearly, the sounds mixing with
the music from flutes of cattle herders
carrying hooks, and sounding delicately  
in this evening with no grace.

The man who went to earn wealth would
not have stayed away, if evenings appeared
like this in the country where he went!

Notes:  தலைவன் குறித்த பருவத்தில் வாராமையால் வருந்திய தலைவி சொன்னது. கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம்.

Meanings:  பல் கதிர் மண்டிலம் – the sun with many rays, பகல் செய்து ஆற்றி – gave light during the day and then ended it (ஆற்றி – முடித்து), சேய் உயர் பெருவரைச் சென்று – went up very high to the lofty mountains (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), அவண் மறைய – hiding there, பறவை பார்ப்புவயின் அடைய – birds went to their young, புறவில் மா எருத்து இரலை மடப் பிணை தழுவ – in the woodlands the stags with big necks embraced the does, முல்லை முகை வாய் திறப்ப – jasmine buds opened, பல் வயின் – in many places, தோன்றி தோன்றுபு – glory lilies appeared, Gloriosa superba, புதல் – in the bushes, விளக்கு உறாஅ – flourishing like lamps (உறாஅ – இசை நிறை அளபெடை, உடன்பாட்டெச்சம்), மதர்வை – proud, நல் ஆன் மாசு இல் தெண் மணி – faultless clear bells tied on fine cows, கொடுங்கோல் கோவலர் – cattle herders with their rods with hooks on the end, cattle herders with cruel rods, குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் – create delicate music with their flutes, அருள் இல் மாலை – evening time with no justice, kindness, ஆள் வினைக்கு அகன்றோர் – the one who went to earn wealth, சென்ற நாட்டும் – in the country he went to, இனைய ஆகித் தோன்றின் – if it appeared like this, வினை வலித்து அமைதல் ஆற்றலர் – he would not stay where he went on business, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, an expletive

நற்றிணை 70, வெள்ளிவீதியார், மருதத் திணை – தலைவி குருகிடம் சொன்னது
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;  5
அனைய அன்பினையோ, பெருமறவியையோ,
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

Natrinai 70, Velliveethiyār, Marutham Thinai – What the heroine said to a heron
Oh small white heron! Oh small
white heron with bright, white
feathers like shore-washed clothes!

Come to our town, search
our shores for pregnant keliru fish,
and eat them until you are sated.

After that, go to his fine town with
fields and a river with sweet water
that flows and spreads in our town,
and tell my beloved man that I am
afflicted with love, and that my jewels
are slipping down.

Will you be kind enough to do this
for me?  Or, will you be very forgetful,
you who have not told him?

Notes:  தலைவி வரைதல் வேட்கை கொண்டு குருகிடம் உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூட்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறு கிளவி என்பர் நச்சினார்க்கினியர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் கழனி என்றது அவர் ஊரிலுள்ள இனிய புனலே இங்கு வருவதால் அங்கும் இரையை பெறுதற்கு இயலும் என்றும் கழனியின் புனல் ஈண்டு வருவதால் ஊரும் அணித்தேயாம் ஆதலின் வருந்தாதேகுதற்கு இயலும் என்றுங் கூறியதாம்.  அனைய அன்பினையோ என்றது எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையயோ என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – அவர் ஊர் ஆங்கட் கழனி ஆதாரமானாற்போல, ஈங்கு உறையும் யான் உயிர் தாங்கி வாழ்வதற்கு ஆங்கு அவர் வரவு ஆதாரம் என்றாளாயிற்று.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  Poem 83 is an address to an owl by the heroine’s friend.

Meanings:  சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, துறை போகு – taken to the water shores, அறுவை – clothing, garments, தூ மடி – washed clothing, pure garments, அன்ன – like, நிறம் – color, கிளர் – bright, தூவி – feathers, wings, சிறு வெள்ளாங்குருகே – oh small white heron/egret, எம் ஊர் வந்து – you came to our town, எம் – our, உண் துறை – drinking water shores, drinking water port, துழைஇ – searching (சொல்லிசை அளபெடை), சினைக் கெளிற்று – pregnant keliru fish, Marones cavasius, ஆர்கையை – you eating to the full, அவர் ஊர்ப் பெயர்தி – you go to his town, அனைய அன்பினையோ – will you be kind for that, பெருமறவியையோ – will you be very forgetful, ஆங்கண் – there, தீம் புனல் – sweet flowing water, ஈங்கண் – here, பரக்கும் – spreading, கழனி நல் ஊர் – fine town with fields, மகிழ்நர்க்கு – to my lover, என் – my, இழை நெகிழ் – loose jewels are slipping down (bangles are slipping off my arms), பருவரல் – sadness, செப்பாதோயே – you who have not told him (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 71, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மன்னாப் பொருள் பிணி முன்னி, ‘இன்னதை
வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து’ எனப்
பல் மாண் இரத்திர் ஆயின், ‘சென்ம்’ என
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,  5
பிரிதல் வல்லிரோ ஐய, செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங்கால் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்  10
பொம்மல் ஓதி பெருவிதுப்புறவே?

Natrinai 71, Vannappura Kantharathanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
With the desire to earn wealth
that does not last forever,
you pleaded with me with many
fine words to tell my friend with
bangles on her forearms, that you
are leaving. 

Even if she says ‘go’, are you
capable of standing in front of her,
oh lord, stroking her eyes and brow
and telling her that you are leaving,

making my friend with luxuriant
hair to grieve greatly whenever she
hears a beautiful red-legged male
pigeon that lives under the eaves of
a wealthy home with many rooms,
cry helplessly with desire for his mate?

Notes:  தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.  சென்ம் (3) – ஒளவை துரைசாமி உரை – சென்மென செல்லும் என்னும் ஏவல் கண்ணிய முன்னிலை வினை.  ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெட்டது.

Meanings:  மன்னாப் பொருள் – wealth that does not last forever, பிணி – attachment, முன்னி – desiring that, இன்னதை – this matter that you are leaving to earn wealth, வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து – tell your friend who wears bangles on her forearms, எனப் பல் மாண் இரத்திர் ஆயின் – since you asked me with fine words, since you pleaded with fine words, சென்ம் – you may go, என – thus, விடுநள் ஆதலும் உரியள் விடினே – if she who has the right asks you to leave (ஏ – அசைநிலை, an expletive), கண்ணும் நுதலும் நீவி முன் நின்று பிரிதல் வல்லிரோ – are you capable of standing in front of her and stroking her brow and eyes, ஐய – sir, செல்வர் வகை அமர் நல் இல் – in the fine houses with many rooms where rich people live, அக இறை உறையும் – that lives under the eaves, வண்ணப் புறவின் செங்கால் சேவல் – red-legged beautiful male pigeon/dove, வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் – sounds of helpless crying for his loving mate, நும் இலள் – she being without you, புலம்பக் கேட்டொறும் – whenever she hears it cry in distress, whenever she hears it cry in loneliness, பொம்மல் ஓதி – the woman with luxuriant hair, the woman with abundant hair (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), பெருவிதுப்புறவே – it causes her to be greatly sad (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 72, இளம்போதியார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘பேணுப பேணார் பெரியோர்’ என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே, கொண்கன்,  5
‘யான் யாய் அஞ்சுவல்’ எனினும், தான் எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ‘ஆனாது
அலர் வந்தன்று கொல்’ என்னும்; அதனால்
‘புலர்வது கொல் அவன் நட்பு’ எனா  10
அஞ்சுவல் தோழி, என் நெஞ்சத்தானே.

Natrinai 72, Ilampōthiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Respected ones do not protect
what they cherish.  It is
embarrassing when you see that.

If I conceal from you, it would be a
very big mistake, since our friendship
is faultless and we are as one life.

How could I hide it from you?

In the past
when you said that you were afraid
of mother, and that he needs to leave,
the lord of the shores did not leave.

Now
he says that if our friends who play with
us in the grove know about it, gossip
will start, and that will not be good.

I think his friendship is vanishing!
I have fear in my heart, oh friend!!

Notes:  தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.  வரைவு கடாயது.  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் தமிழ்ச்சங்க ஏட்டிலும் இளம்போதியார் என்று காணப்படுகின்றது.  ஏனை ஏடுகளில் இளம்பூதி என்பதே உளது.  மேலும், பூதி என்னும் பெயர் சங்க காலத்திலும் அதனையடுத்துப் போந்த கல்வெட்டுக்கள் காலத்திலும் தமிழர்களிடையே மக்கட் பெயராகப் பயில வழங்கினமையின் பூதி என்ற பாடமே பொருத்தமாக உள்ளது. வெண்பூதியார், வெண்மணிப்பூதியார், அப்பூதியார் எனப் பலர் இருந்திருப்பதைத் தமிழ்ப் பயின்றோர் நன்கு அறிவர்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் தான் காட்டும் எண்வகை மெய்ப்பாட்டினுள் ‘அச்சத்தின் அகறல்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதுவர் இளம்பூரணர்.  ‘உயிராக்காலத்து உயிர்த்தல்’ வகையாக இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  அழிதக்கன்றால் (5) –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மானக் கேடாக உள்ளது, ஒளவை துரைசாமி உரை – வருத்தம் தருவது.

Meanings:  பேணுப – what they cherish, பேணார் – they do not protect, they do not take care, பெரியோர் – the respected people, the wise people, என்பது நாணு தக்கன்று அது காணுங்காலை – it is embarrassing when analyzing it, உயிர் ஓரன்ன – like one life, செயிர் தீர் நட்பின் – with faultless friendship, நினக்கு யான் மறைத்தல் – me to conceal it from you, யாவது – how is it possible, மிகப் பெரிது – it is very big, அழிதக்கன்று – it is shameful, it is sad, ஆல் – அசைநிலை, an expletive, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, கொண்கன் – the lord of the seashores, யான் யாய் அஞ்சுவல் எனினும் – even though I am afraid of mother (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), தான் எற் பிரிதல் சூழான் – he did not leave us, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, இனியே கானல் ஆயம் அறியினும் – now if our friends who play with us in the grove know about it, ஆனாது – without end, அலர் வந்தன்று கொல் – will gossip not start (ஐயம் பொருட்டு வந்தது, a particle which implies doubt), என்னும் அதனால் புலர்வது கொல் அவன் நட்பு எனா – so I think his friendship is vanishing, அஞ்சுவல் தோழி – I am afraid oh friend, என் நெஞ்சத்தானே – in my heart (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 73, மூலங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்  5
செல்ப என்ப தாமே, செவ்வரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்,  10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

Natrinai 73, Moolankeeranār, Pālai Thinai – What the heroine said to her friend
Even when I was with him
I used to fear the painful evenings
when a ghoul with a strong mouth
and ugly fingers that look like
the mature clusters of flowers
of summer’s murukkam trees,
ate the flower offerings left
for the gods in our flourishing
ancient town, and rose up high,
tearing the town’s common
ground. 

They say he will go alone, leaving me
here, causing my pretty forehead,
which is lovely like Chāykkadu town
with flower groves,
……….where geese sleep in beautiful
……….fields with long, thick, curved
……….ears of red paddy that are like
……….rows of red, delicate hair,
to become pale, its beauty ruined,
and slander and gossip to rise among
our neighbors.

Notes:  செலவு குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.  வேனில் முருக்கின் விளை துணர் அன்ன (1) – ஒளவை துரைசாமி உரை – வேனிற் காலத்தில் மலரும் முருக்கமரத்தின்கண் தோன்றும் பூங்கொத்துப் போன்ற, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்துப் பழுத்து முற்றிய நெற்றுப் போன்ற.  செவ்வரி மயிர் நிரைத்தன்ன (6-7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்று, ஒளவை துரைசாமி உரை – செவ்வரி நாரையின் மயிரை நிரல்பட வைத்தாற் போல, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சிவந்த மெல்லிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற.  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பேய் மலர்ப்பலி உண்ண வேண்டி மன்றத்தைப் புடைத்து எழுமென்றது, பசலையானது என் நலத்தை உண்ண வேண்டி நெஞ்சை புடைத்து நெற்றியில் எழுமென்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செறுவில் அன்னம் துஞ்சுமென்றது யானும் சேக்கையின்கண்ணே அவர் மார்பில் துஞ்சியிருந்தேன்.  இப்பொழுது அஃது இல்லை போலும் என்று இரங்கியதாம்.  வரலாறு:  சாய்க்காடு.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  வேனில் முருக்கின் – of summer’s coral trees, Erythrina variegate, விளை துணர் அன்ன – like the clusters of mature flowers, மாணா விரல – with fingers that are not good looking, with fingers that are ugly, வல்வாய்ப் பேஎய் – ghoul with strong mouth, an evil spirit with a strong mouth (பேஎய் – இன்னிசை அளபெடை), மல்லல் மூதூர் – prosperous ancient town, மலர்ப் பலி உணீஇய – to eat the flower offerings, to eat the spread offerings (உணீஇய – செய்யுளிசை அளபெடை), மன்றம் போழும் – split the common area, புன்கண் மாலை – painful evening, தம்மொடும் – even with him, அஞ்சும் – I was afraid, நம் இவண் ஒழிய – leaving me here (நம் – தன்மைப் பன்மை, first person plural), செல்ப என்ப தாமே – they say he will leave by himself (ஏ – பிரிநிலை, exclusion), செவ்வரி மயிர் நிரைத்தன்ன – like rows of red delicate hair, வார் கோல் – long and thick, வாங்கு கதிர்ச் செந்நெல் – curved ears of fine paddy, curved ears of red rice paddy, அம் செறுவின் அன்னம் துஞ்சும் – geese sleep in the beautiful field, பூக் கெழு படப்பை – flower filled groves, lovely groves, சாய்க்காடு அன்ன – like the town of Chāykkādu, என் நுதல் கவின் அழிக்கும் பசலையும் – the pallor which ruins my forehead’s beauty, அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே – giving rise to slander and gossip by neighbors (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 74, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை
இடிக் குரல் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை,  5
‘ஏதிலாளனும்’ என்ப; போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண்டல் வேலிய ஊர், அவன்  10
பெண்டு என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே.

Natrinai 74, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to the messenger bard
They say that the lord of the vast
ocean’s shores,
……….where gnāzhal trees with small
……….flowers grow, and fishermen
……….load their boats fully with large
……….nets made from strong, twisted
……….ropes using fine spindles, go into
……….the ocean with thundering waves
……….like elephant-keepers who control
……….their difficult elephants with goads,
has become a stranger to me now.

It knows that she has become his
woman, this town on the shores of the
clear ocean, where kandal trees are
fences, new sand covers the groves
where buds bloom, and punnai trees
drop their fine pollen whenever the
eastern winds blow, covering
densely the white backs of herons.

It is difficult to change their opinion!

Notes:   நெய்தத்துள் மருதம்.  தலைவன் பாணனைத் தலைவியின் ஊடலைத் தீர்க்க அனுப்புகிறான்.  தலைவன் உறவுகொண்ட பரத்தையைப் பற்றி இவ்வூர் அறிந்தது எனக் கூறி வாயில் மறுத்தது.  இறைச்சி – கீழ்க்காற்று மோதுதலாலே புன்னை நுண் தாது குருகின் மேல் உதிர்ந்து அதனை மறைக்குமென்றது, தலைவன் பிரிதலினாகிய காம நோயாலே பசலை தோன்றி என் மெய்ம் முழுது மூடி மறைத்து வேறுபடுத்தியது என்றதாம். 

Meanings:  வடிக் கதிர் – perfect spindles, திரித்த – twisted, வல் ஞாண் பெருவலை –  big nets made with strong twisted ropes, இடிக் குரல் புணரி – thunder-like loud waves, பௌவத்து இடுமார் நிறையப் பெய்த அம்பி – with boats filled in order to throw their nets in the ocean (இடுமார் –   ஒளவை துரைசாமி உரை – எறியும்பொருட்டு, மார் ஈற்று முற்றுவினை பெய்த என்றும் வினைகொண்டது), காழோர் சிறை அருங் களிற்றின் – like elephant keepers who control their difficult-to-control male elephants (களிற்றின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பரதவர் ஒய்யும் – fishermen ride, சிறு வீ ஞாழல் – tigerclaw trees with small flowers, புலிநகக் கொன்றை, Cassia Sophera, பெருங்கடல் சேர்ப்பனை – the lord of the vast ocean, ஏதிலாளனும் என்ப – ‘he is a stranger’ they say (உம்மை இசைநிறை), போது அவிழ் – buds opening, blossoming, புது மணல் கானல் – seashore groves with new sand, புன்னை – நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நுண் தாது – fine pollen, கொண்டல் அசை வளி தூக்குதொறும் – whenever the eastern winds blow and sway, குருகின் வெண்புறம் – the white sides of herons/egrets/storks, மொசிய – crowded, dense, வார்க்கும் – drops and falls, தெண் கடல் – clear ocean, கண்டல் வேலிய ஊர் – town with kandal trees as fences (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), அவன் பெண்டு என – that it is his woman, அறிந்தன்று – it knows, பெயர்த்தலோ – changing it (ஓ – அசைநிலை), அரிதே – it is difficult, it is not possible (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 75, மாமூலனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம்பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பைப்
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது, வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி, உடையும் என் உள்ளம், சாரல்  5
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.  10

Natrinai 75, Māmoolanār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend
Your laughing is without justice
and consideration of consequences. 
It resembles the flame-like venom
that is spit by terrorizing, wide-hooded
snakes with pretty spots.

My heart breaks!
May you live long, oh young woman!
Tell me without laughing, the way to
save my hurting heart that has been
neglected by the glances of the young
woman with dark, petal-like moist eyes
with red lines that appear like a thrust
arrow plucked from the flesh of a
boar that a mountain dweller killed
with a curved bow!

Notes:  தலைவி கிடைத்தற்கு அறியளாம் என அவளைச் சேட்படுத்திக் கூறியத் தோழியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘அன்புற்று நகினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  கோட்டுமா (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோட்டினையுடைய பன்றி, ஒளவை துரைசாமி உரை – கொம்புகளையுடைய யானை.  நற்றிணை 13 – ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண்.  உறாஅ நோக்கம் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செவ்வனே பாராது கடைக்கண்ணால் நோக்கும் நோக்கம், ஒளவை துரைசாமி உரை – பொது நோக்கம்.  Natrinai 82, 119, 336, and Akanānūru 248 have references of boars hunted by mountain dwellers.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  பறித்த பகழி அன்ன – நற்றிணை 13 – மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண், நற்றிணை 75 – கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல சேயரி பரந்த மா இதழ் மழைக் கண், குறுந்தொகை 272 – சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்.   

Meanings:  நயன் இன்மையின் – without justice, பயன் இது என்னாது – without considering the benefit, பூம்பொறிப் பொலிந்த – bright with beautiful spots, அழல் உமிழ் – injects/spits flame-like venom, அகன் பை பாம்பு உயிர் அணங்கியாங்கும் – like a snake with wide hood that terrorizes (அணங்கியாங்கும் – உம்மை ஆக்கப்பொருட்டு), ஈங்கு இது தகாஅது – this is not right here, வாழியோ – may you live long (ஓ – அசைநிலை, an expletive), குறுமகள் – oh young woman, நகாஅது உரைமதி – say without laughing (நகாஅது – இசைநிறை அளபெடை, உரைமதி – மதி முன்னிலையசை, an expletive of the second person), உடையும் என் உள்ளம் – my heart will break, சாரல் – mountain slopes, கொடு வில் கானவன் – a mountain dweller with harsh/curved bow, கோட்டுமா தொலைச்சி – killed a tusked animal, boar, elephant, பச்சூன் பெய்த பகழி போல – like the arrow that pierced into its flesh (பச்சூன் = பசுமை + ஊன்), சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் – moist dark/large flower-petal-like eyes with spread red lines, உறாஅ நோக்கம் உற்ற – looks that are not direct, general glances, என் பைதல் நெஞ்சம் உய்யுமாறே – for my sad heart to be saved (உய்யுமாறே – மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல், ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 76, அம்மூவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி, வால் இழைக் குறுமகள்!  5
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே.

Natrinai 76, Ammoovanār, Pālai Thinai – What the hero said to the heroine
Oh young woman wearing pure jewels!
You come from a town where gossip
is loud, and punnai flowers drip honey.

Your feet, used to walking on the
long stretches of sand in the groves
which stink of flesh, have become red
now, walking on this rocky path.

Let us rest and get rid of fatigue in
the shade of a banyan tree in this
beautiful forest.  Rains have stopped
in the bright colored sky and there are
no fine raindrops.

This path with hot winds might appear
to be dangerous.  However, do not fear!
Let us rest where you want,
so that you will not feel distressed!

Notes:  உடன்போக்கின் பொழுது தலைவன் தலைவியிடம் உரைத்தது.   வீ மலர் (17) – வினைத்தொகை, இருபெயரொட்டுமாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  வருமழை கரந்த – the arriving rain has stopped, வால் நிற விசும்பின் – in the bright colored sky, நுண் துளி – fine rain drops, மாறிய – changed, உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி – removing fatigue in the shade of the banyan tree of the beautiful forest with wind (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், அம் – சாரியையுமாம்), அஞ்சுவழி அஞ்சாது – even though the path appears to be fearful do not fear it, அசைவழி அசைஇ – rest where you want to (அசைஇ – சொல்லிசை அளபெடை), வருந்தாது – without being sad, ஏகுமதி – you go with me (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), வால் இழைக் குறுமகள் – O young lady with pure/bright jewels, இம்மென் பேர் அலர் – loud gossips (இம்மென் – ஒலிக்குறிப்பு), நும் ஊர் – your town, புன்னை வீ மலர் – laurel tree flowers from which stems have been removed,  Mast wood Tree, Calophyllum inophyllum, உதிர்ந்த தேன் – dropped honey, நாறு புலவின் – with the stink of flesh, கானல் வார் மணல் – long stretches of sand on the grove, மரீஇ கல் உற – walking on the rocks, pressing against the rocks (மரீஇ – சொல்லிசை அளபெடை), சிவந்த நின் மெல் அடி உயற்கே – for your delicate feet that has become red not to be distressed (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 77, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந்துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்று மன்னே, நெஞ்சே! செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின்  5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள்ளருவி ஒலியின் துஞ்சும்
ஊரலஞ்சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன் கை ஒண்ணுதல், 10
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

Natrinai 77, Kapilar, Kurinji Thinai – What the hero said to his heart
The bright-browed young woman with
pale spots on her loins is sleeping at night
in her house with jackfruit trees in the
front yard, their roots red, and fruits
on each branch, listening to the sounds
of white waterfalls, her forearms
stacked with round, bright bangles,
carved with saws by skilled craftsmen
in a village with streets in an area with
no big towns.

The joyful, delicate looks on her eyes
with kohl that appear like kuvalai flowers,
took me to her, like Malaiyan who rode
his horse into another country and
ruined its protected fort of as his drummer
beat a large, roaring thudi drum, and sighed
deeply after his victory over his enemy.

Notes:  தோழியை மதியுடம்படுக்கச் சென்ற தலைவன், அவளிடம் உரையாடுங்கால் ‘இத் தலைவன் குறையுடையவன்’ எனக் கருதிய தோழி அவனை ஆராய்ந்தாள்.  அதை பொறுத்துக் கொள்ளுமாறு, தலைவன் தன் நெஞ்சை வேண்டியது.  அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான்  வாள் அரம் துமித்த வளை.  வரலாறு:  மலையன்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Malaiyan is Malaiyamān Thirumudi Kāri, a small-region king who was one of the great seven donors.  Natrinai 100 has a reference to Malaiyan.  Natrinai poems 170 and 291 have references to him and his mountain Mullūr.  Natrinai 320 and Akanānūru 209 have references to his victory of Ōri, another small-region king who he killed.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21). சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194-கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை. மலையன் மா (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைய மா, ஒளவை துரைசாமி உரை – மலையன் மா.  கோள் நேர் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளைந்த அழகிய, ஒளவை துரைசாமி உரை – பொருந்திய நேரிய.

Meanings:  மலையன் மா ஊர்ந்து போகி – Malaiyan riding on his horse, புலையன் பெருந்துடி கறங்க – drummer hits a large thudi drum, பிற புலம் புக்கு – entered another country, அவர் அருங்குறும்பு எருக்கி – ruined their protected fort, அயா உயிர்த்தாஅங்கு – like how he then sighed since he was tired (உயிர்த்தாஅங்கு – இசை நிறை அளபெடை), உய்த்தன்று – sending me toward her, மன் – மிகுதி, greatly, ஏ அசைநிலை, நெஞ்சே – oh my heart, செவ்வேர் – red roots, சினைதொறும் தூங்கும் – hanging on each branch, பயங்கெழு – benefit yielding, பலவின் சுளையுடை – jackfruit trees with fruits with segments, Artocarpus heterophyllus, முன்றில் – in the front yard, மனையோள் கங்குல் ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – my wife is sleeping listening to the waterfalls, ஊர் அல்  – without big towns, அம் – beautiful, சேரிச் சீறூர் வல்லோன் – an expert from this small village with communities/streets, வாள் அரம் பொருத – cut with a rasp, கோள் நேர் எல் வளை – rounded fine bright bangles, அகன் தொடி செறித்த முன் கை – wide bangles filled forearm, ஒண்ணுதல் – bright forehead, திதலை அல்குல் – pallor spots on her loins, குறுமகள் – young lady, குவளை உண்கண் – eyes with kohl looking like blue waterlilies, மகிழ் மட நோக்கே – happy delicate looks (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 78, கீரங்கீரனார், நெய்தற் திணை, தோழி தலைவியிடம் சொன்னது
கோட் சுறா வழங்கும் வாள் கேழ் இருங்கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,  5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்,
கேட்டிசின், வாழி தோழி!  தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,  10
உரவு நீர்ச் சேர்ப்பன் தேர் மணிக் குரலே.

Natrinai 78, Keerankeeranār, Neythal Thinai – What the heroine’s friend said to her
May you live long my friend!

In the bright, vast backwaters
where killer sharks frequent,
punnai tree flowers shower their
fine golden pollen abundantly on
gem-colored, dark blue waterlilies.

In the grove, where fragrant
thāzhai trees spread their flowery
scents as the sun’s rays fade away
in this evening hour, we
are spared the pains of our disease
which brings spreading agony. 

Listen to the chariot bells of the
lord of the shores with strong waves,
as he rides his gold-decked proud
horses, as swift as rising birds
even without the charioteer’s whip,
his strong chariot wheel rims
sinking into the clear marsh waters.

Notes:  தலைவன் திருமணம் புரிந்து கொள்ள வருவதை அறிந்த தோழி தலைவியிடம் உரைத்தது.  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருங்கழியின் நெய்தல் மலர் நிறைய நுண்ணிய தாதைப் புன்னை பரப்பாநிற்குமென்றது, சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற்பொருட்டுக் கொடாநிற்கும் என்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாழம்பூவின் மணம் கானலெங்கும் கமழுமென்றது, நின் வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படும் என்றதாம்.  பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  கோட் சுறா வழங்கும் – where killer sharks move around, வாள் கேழ் இருங்கழி – bright colored vast backwaters, bright colored dark backwaters, மணி ஏர் நெய்தல் – blue waterlilies that are like sapphire (ஏர் – உவம உருபு, a comparison word), மாமலர் – dark flowers, large flowers, நிறைய பொன் நேர் நுண் தாது – lots of gold like fine pollen, புன்னை – laurel trees, Mast wood Tree, Calophyllum inophyllum, தூஉம் – they drop (இன்னிசை அளபெடை), வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல் – grove with fragrances of thāzhai trees with uplifted roots,  grove with fragrances of low hanging fragrant thāzhaitrees, Pandanus odoratissimus, படர் வந்து நலியும் – sorrow comes and distresses, சுடர் செல் மாலை – evening when the sun leaves, நோய் மலி பருவரல் – from sorrow disease being increased, நாம் இவண் உய்கம் – let us survive here, கேட்டிசின் – you listen (சின் – முன்னிலையசை, an expletive of the second person), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, தெண்கழி – clear salt water pond, clear backwaters, வள்வாய் – strong wheel rims, sharp wheel rims, ஆழி – wheels, உள்வாய் தோயினும் – even if they sink inside, புள்ளு நிமிர்ந்தன்ன – rising like birds, பொலம் படை – gold ornaments, gold saddles, கலி மா – proud horses, வலவன் கோல் உற அறியா – does not use the charioteer’s whip, உரவு நீர்ச் சேர்ப்பன் – the lord of the shores with strong waves, தேர் மணிக் குரலே – the sounds of the chariot bells (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 79, கண்ணகனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ,
கூரை நல் மனைக் குறுந்தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அருங்கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்  5
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?’
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று,
அம்ம வாழி தோழி!
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே?  10

Natrinai 79, Kannakanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, oh friend!
He wants to go on the harsh,
forked paths, where round
eengai flowers rich in honey
drop on rocks below,
appearing like kazhangu beans
which women wearing small
bangles use, to play on the sand in
the yards of fine houses with roofs.

I should ask him with love, “Is there
anything harsher than your thought
of leaving me after coming and  
uniting with me?”  If I don’t ask him,
it will be the end of my life!
How can we stop him from leaving? 

Notes:  தலைவனின் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவி தோழிக்குச் சொல்லியது.  மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம் (3) – ஒளவை துரைசாமி உரை – மணலைப் பெய்து கழங்காடுதற்கு இட்ட கற்பாறை மேல் உதிரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கற்பாறையின் மேல் உதிர்ந்து பரவி மணற்பரப்பில் விளையாடுவதற்கு இட்ட கழங்கு போல் விளங்கும்.  ஏர்தரல் உற்ற (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு பொருந்திய, ஒளவை துரைசாமி உரை – எழுச்சி பொருந்திய.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தேன் நிறைந்த மலர் கற்பாறை மிசை தாஅம் என்றது, வேட்கை நிறைந்த என் நெஞ்சம் அவர் வயிற் சென்று ஒழிந்தது என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – ஈங்கையின் திரள் வீ மகளிராடும் கழங்கு அறையின் மேல் உதிர்ந்து அதை மறைத்தாற்போலத் தலைமகனோடு கூடி உறையும் இன்ப வாழ்வில் பிரிவு நிகழ்ச்சிகள் போந்து இடையூறு செய்கின்றன என்பது குறிப்பு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  சிறை – this side, nearby, நாள் ஈங்கை – day’s fresh eengai,  Mimosa Pudica, Touch-me-not,  உறை – honey drops, நனி – abundant, திரள் – rounded, வீ – flowers, கூரை நல் மனை – fine houses with roofs, குறுந்தொடி மகளிர் – women with small bangles, மணல் ஆடு கழங்கின் – like molucca seeds used on the sand, caesalpinia crista seeds (கழங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அறை – rocks, மிசை – on, தாஅம் – spread (இசைநிறை அளபெடை), ஏர்தரல் உற்ற – with beauty,  with elevation, இயக்கு அருங்கவலை – harsh forked paths on which it is difficult to go, பிரிந்தோர் – the one who separated, வந்து – came, நம் புணர – to unite with me (நம் – தன்மைப் பன்மை, first person plural), புணர்ந்தோர் – the one who united with me, the one who embraced me, பிரிதல் சூழ்தலின் – since he is considering separation, அரியதும் உண்டோ – is there anything more harsh, என்று நாம் கூறி – I should say so (நாம் – தன்மைப் பன்மை, first person plural), காமம் செப்புதும் – tell that with love, செப்பாது விடினே – if I do not tell him, உயிரொடும் வந்தன்று – it will be the end of my life (உயிரொடு – உயிர்க்கு, வேற்றுமை மயக்கம்), அம்ம – listen to me, இடைச்சொல், a particle, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, யாதனின் தவிர்க்குவம் – how can we avoid, காதலர் செலவே – my lover going away (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 80, பூதன்தேவனார், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பால் பயங்கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன் இவன்’ என,  5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

Natrinai 80, Poothan Thēvanār, Marutham Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened
There is no other medicine for this
disease that distresses me, except
the young woman with thick arms,
who bathes in a cold pond in the month
of Thai, restrained by proper shyness,
with her friends wearing jewels,
uttering, “He comes with desire and
gives me leaves and garlands, at dawn,
when great darkness disappears and
children in town allow calves to stay
in the public square,
so that they can get the very sweet milk
from the big-headed female buffaloes,
and then climb and ride on them.” 

Notes:  தலைவன் தலைவியைச் சந்தித்தல் அரிதாயிற்று.  அதனால் வருந்திய தலைவியின் காதற் பெருமையை அறிந்த தோழி, தலைவன் விரைவில் திருமணம் புரிய வேண்டி, களவுப் புணர்ச்சியை மறுத்தாள்.  அதனால் வருந்திய தலைவன் உரைத்தது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறுமாக்கள் தலைவியாகவும் எருமையின் பால் மிகுதியாகக் கறக்க விரும்புதல் நோன்பின் பயனை மிக விரும்புவதாகவும், அவற்றை ஊர்ந்து செல்லுதல் தைத்திங்கள் விடியலில் நீராடச் செல்லுதலாகவும் அதற்கேற்றவாறு கொள்க.  ஒளவை துரைசாமி உரை – பாற்பயம் கொண்மார் கன்றைவிட்டுக் காரானைப் புறத்தே செலுத்தினாற் போலத் தலைவியை அருமை செய்து என்னைச் சேட்படுத்தி வரைவாகிய பயன்கொள்ளக் கருதுகின்றனை எனவும், கன்றை மனைக்கண் விட்டு ஊர்க்குறு மாக்களை மேற்கொண்டு கழியும் காரான் போலத் தலைவியை நின்னொடு விடுத்து வேட்கை நோயும் கலக்கமும் உள்ளத்திற் கொண்டு செல்கின்றேன் எனவும் தலைவன் தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தியவாறாகக் கொள்க.

Meanings:  மன்ற எருமை – buffaloes in the town’s common grounds, மலர் தலைக் காரான் – wide-headed buffaloes, இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு – they leave the calves so that they can get the very sweet milk (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), ஊர்க் குறுமாக்கள் – the young kids in town, மேற்கொண்டு – climbing on them, கழியும் – leaving, பெரும் புலர் விடியலின் – at the bright early morning time, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் தந்தனன் – he came and gave leaves and garlands with desire, இவன் என – that it is him, இழை அணி ஆயமொடு – with friends who wear jewels, தகு நாண் தடைஇ – restrained with proper shyness (தடைஇ – சொல்லிசை அளபெடை), தைஇத் திங்கள் தண் கயம் படியும் – bathe in the cold pond in Thai month (தைஇ – சொல்லிசை அளபெடை), பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – there is no medicine other than the young woman with thick arms (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 81, அகம்பன்மாலாதனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்க தில் பாக, நின் தேரே! பூண் தாழ்  5
ஆக வன முலைக் கரை வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்,
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே.  10

Natrinai 81, Akampanmālāthanār, Mullai Thinai – What the hero said to the charioteer, on his way home
The hostility of the king with a sword-bearing
army has ended.  Hitch the skilled horses
to the chariot, oh charioteer!
With their trimmed manes on their napes and
hanging bells that jingle, they cut into the vast
land pressing their feet hard and trotting without
being tired, running straight for long with their
strong legs, the horses respected by kings.

My beautiful, dark young woman who has been
crying tears dropping down on her pretty breasts
with jewels, will rejoice, and with a desire to
welcome me, start to cook a feast.  Let us see her
delicate smiles!

Notes:  வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற்கு உரைத்தது.  தில் (5) – ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, விழையுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விழைவின்கண் வந்தது, வலம் (6) – ஒளவை துரைசாமி உரை – ஏழனுருபு, sign of the locative. உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  இரு நிலம் குறைய – the wide land reduced (by digging into it while running), by the distance getting reduced, கொட்டிப் பரிந்தின்று – pressing firmly and trotting, ஆதி போகிய – running straight for a long distance, அசைவு இல் – without being tired, நோன் தாள் – strong legged, மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி – horses respected by the kings for their actions, கொய்ம் மயிர் எருத்தில் – on their necks with trimmed manes, பெய்ம் மணி ஆர்ப்ப – hanging bells jingle, பூண்க – may you yoke, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், an expletive signifying a desire, பாக – oh charioteer, நின் தேரே – your chariot, பூண் தாழ் ஆக வன முலை – lovely breasts with hanging jewels, கரை வலம் தெறிப்ப அழுதனள் – she cried as tears fell on the top side of her breasts (வலம் – ஏழாம் வேற்றுமை உருபின் பொருள்பட வந்த இடைச்சொல்), உறையும் – resides, அம் மா அரிவை – beautiful dark young woman, விருந்து அயர் விருப்பொடு – with a desire to provide a feast, வருந்தினள் அசைஇய – she who was sad and tired (அசைஇய – செய்யுளிசை அளபெடை), முறுவல் இன் நகை காண்கம் – let us see her delicate smile and laughter, உறு பகை தணித்தனன் – he has ended the great hostility,  he has subdued his enemies, உரவு வாள் வேந்தே – the king with strong swords (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 82, அம்மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல? நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே,  5
போகிய நாகப் போக்கு அருங்கவலை
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇக்
கோள் நாய் கொண்ட கொள்ளைக்  10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

Natrinai 82, Ammallanār, Kurinji Thinai – What the hero said to the heroine
Oh young woman of fine walk from
the mountains! 

In your small village,
……….where a small-eyed, harsh, large
……….boar with mud and dust on its
……….back got trapped and fell into an
……….empty pit on a harsh, forked forest
……….path with tall nākam trees, hunting
……….dogs killed it ruining the net straps
……….and started to tear its flesh, and
……….forest dwellers took it for themselves,
will you unite with me like Valli who united
with Murukan?  You with lovely arms like fine
bamboo alone can end my love affliction and
physical distress.  I am unable to see your
eye-dazzling form.  I feel helpless!

Notes:  தலைவியைக் கூடிய தலைவன் தன் நெஞ்சில் உள்ள எண்ணத்தைத் தலைவியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி தலைவியாகவும், வார் இனகப்படுதல் தலைவி காம நோய்ப்பட்டதாகவும், பன்றியின் தசையை நாய் பற்றுதல் தலைவியின் நலத்தைப் பசலை பற்றிக் கெடுத்ததாகவும், கானவர் பெயர்க்குதல் அப்பசலையை நீக்குவதாகவும் கொள்க.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – வெள்வசிப் படுவித்து மொய்த்த கோணாய் கொண்ட கொள்ளையாகிய பன்றி ஒருத்தலைக் கானவர் வள்பு அழீஇச் சிறுகுடிக்குப் பெயர்க்குவர் என்றது, நின் தோளிடைப் படுவித்து உருவாகிய வலையில் பிணித்துக் கொண்ட என் உள்ளத்தை, நின் சிறுகுடிக்கு கொண்டு போகா நின்றனை எனத் தலைமகன் தன் வேட்கை மிகுதியை உள்ளுறையாற் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – சிறுகுடிக்கு முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல என்னுடன் வருதியோ என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.  நல் நடைக் கொடிச்சி (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல நடையையுடைய, ச. வே. சுப்பிரமணியன் உரை – அழகிய நடையையுடைய கொடிச்சியே, ஒளவை துரைசாமி உரை – நல்ல ஒழுக்கத்தையுடைய கொடிச்சியே.

Meanings:  நோயும் நெகிழ்ச்சியும் – love affliction and physical distress, வீட – to end, சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே – you are with fine bamboo-like pretty arms, என்னுள் வருதியோ – will you unite with me, நல் நடைக் கொடிச்சி – oh young woman of fine walk who resides in the mountain, oh young woman of good behavior who resides in the mountain, முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல – like Valli who united with Murukan and went with him, நின் உருவு கண் எறிப்ப நோக்கல் – I am unable to see your eye-dazzling form, ஆற்றலெனே – I feel helpless, போகிய நாக – tall nākam trees, Gamboge, சுரபுன்னை, or புன்னை, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum according to the University of Madras Lexicon, போக்கு அருங்கவலை – forked path on which it is hard to go, சிறுகண் பன்றி – small-eyed pig, பெருஞ்சின ஒருத்தல் – a very angry male, a very angry boar, சேறு ஆடு – playing in the mud, இரும் புறம் நீறொடு – with dark dust on its back, சிவண – got rubbed on, got attached, வெள் வசி – cracked land that is empty, empty pit, படீஇயர் – to fall in, to get caught, மொய்த்த – swarmed, வள்பு – straps in the nets, அழீஇ – ruined (சொல்லிசை அளபெடை), கோள் நாய் – killer dogs, கொண்ட – what they seized (the flesh), கொள்ளை கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – the forest dwellers from a small village seize and remove the flesh (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 83, பெருந்தேவனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல், 5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே.

Natrinai 83, Perunthevanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Oh owl of great strength, an unworn curved beak,
clear eyes and sharp claws, who lives on a huge, old
tree where a god resides, near our town’s drinking
water tank!

With a principle of not ruining, please do not hoot
with your drum-like, harsh voice that causes fear,
when we are distressed and unable to sleep,
desiring our lover.

We’ll take good very care of you, and feed you goat
meat cooked with clear ghee and white rice, along
with roasted white rat meat, if you do not hoot!

Notes:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில் இப்பாட்டினை எடுத்தோதி, ‘இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  மரங்களில் கடவுள் உறைதல்:  அகநானூறு 270 – கடவுள் மரத்த, அகநானூறு 309 – தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில், நற்றிணை 83 – கடவுள் முது மரத்து.  தடைஇய (1) – ஒளவை துரைசாமி உரை – பெருமைப் பொருளதாகிய தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய கடவுள் முது மரத்து – on a huge old tree near the drinking water pond at our town’s entrance on which a god resides (தடைஇய – செய்யுளிசை அளபெடை), உடன் உறை பழகிய – used to staying there, used to living there, தேயா – sharp, not blunt, வளைவாய் – curved beak, தெண் கண் – sharp eyes, கூர் உகிர் – sharp claws, வாய்ப் பறை அசாஅம் – do not hoot with a drum like voice and cause me pain, do not hoot with your mouth and hurt (அசாஅம் – இசைநிறை அளபெடை), வலிமுந்து கூகை – oh owl with increased strength, மை ஊன் – goat meat, தெரிந்த நெய் வெண்புழுக்கல் – boiled white rice with clear ghee, எலி வான் சூட்டொடு – along with roasted white-rat meat, மலியப் பேணுதும் – we will take very good care, எஞ்சாக் கொள்கை – with a principle of not ruining, எம் காதலர் வரல் நசைஇ – desiring our lover to come (நசைஇ – சொல்லிசை அளபெடை), துஞ்சாது அலமரு பொழுதின் – when we are distressed and unable to sleep, அஞ்சு வரக் கடுங்குரல் – harsh voice that causes fear, பயிற்றாதீமே – do not hoot (பயிற்றாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 84, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்ணும், தோளும், தண் நறும் கதுப்பும்,
திதலை அல்குலும், பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,  5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே தம் வயின்  10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.

Natrinai 84, Poet is Unknown, Pālai Thinai – What the heroine said to her friend
Yesterday he praised greatly
my eyes, arms, cool fragrant
hair and loins with pale spots.

Today they say he will go alone on
the long, harsh, hot wasteland path
devoid of trees,
where the sun scorches and mirages
appear like large bodies of water
where deer go to drink with desire,
and caked salt deposits in the lovely
saline forest with ōmai trees appear
like unformed butter scattered by a
churning rod’s heat in a fired clay pot.

My lover does not have the skills
of married life, where householders
provide aid to those who come and
plead for material wealth for their
sustenance.

Notes:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கானல் நீரைக் குடிநீராகக் கொண்டு மான்கள் விரும்பி ஓடும் என்றது அருளில்லாத தலைவனிடம் அறமுடையான் என்று கருதித் தலைவி மயங்கினாள் என்பது குறித்து அமைந்தது.  இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே (11-12) – ஒளவை துரைசாமி உரை – தம்பாற் போந்து இரந்தவரது இன்மையைப் போக்க மாட்டாத இல்லின்கண் வறுமையுற்று வாழும் வாழ்க்கையை விரும்பாதார், H.வேங்கடராமன் உரை – யாசிப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது பொருளாசையைப் போக்குவதற்கு அரிய இல்லற வாழ்க்கையில் பயின்று அறியாத நம் தலைவர், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இரந்து நிற்பார்க்கு அவர் வேண்டும் பொருளைத் தந்து அவருடைய விருப்பத்தினை நிறைவேற்றுவதற்குரிய இல்லறத்தில் பயின்றறியாதவர் நம் தலைவர்.

Meanings:  கண்ணும் தோளும் – eyes and arms, தண் நறும் கதுப்பும் – and cool fragrant hair, திதலை அல்குலும் – loins with pallor spots, பல பாராட்டி – praised a lot, நெருநலும் இவணர் – he was here yesterday, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, இன்றே – today, பெருநீர் ஒப்பின் – like a big body of water, பேஎய் வெண்தேர் – silvery mirage (பேய்த்தேர்  = கானல் நீர், பேஎய் – இன்னிசை அளபெடை), மரன் இல் நீள் இடை – on the long path without trees (மரன் – மரம் என்பதன் போலி), மான்- deer, நசையுறூஉம் – desiring (இன்னிசை அளபெடை), சுடு மண் – fired clay, தசும்பின் – in the pot, மத்தம் – the churning rod, தின்ற – when mixed, பிறவா வெண்ணெய் – unformed butter, உருப்பு – heat, இடந்தன்ன – like scattered, உவர் எழு களரி – salty land, ஓமை அம் காட்டு – beautiful forest filled with omai trees, Toothbrush Tree, Dillenia indica, வெயில் வீற்றிருந்த – where the sun stays shining hard, வெம்பலை அருஞ்சுரம் – hot and harsh wasteland path (வெம்பலை = வெப்பத்தையுடைய, ஐ – சாரியை) ஏகுவர் என்ப தாமே – they say he will leave by himself (ஏ – பிரிநிலை, exclusion), தம் வயின் – to him, இரந்தோர் – those who begged மாற்றல் ஆற்றா – unable to change their situation, unable to give material wealth and help them, இல்லின் வாழ்க்கை – family life, வல்லாதோரே – he is not capable (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 85, நல்விளக்கனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும்புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,  5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி, சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும்  10
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே.

Natrinai 85, Nalvilakkanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
My friend!  Your flower-like,
moist eyes spill clear drops of
tears, the beautiful jewels worn
on your round, bamboo-like
arms have slipped down,
and this loud, ancient town gossips.

May he not come on the fearful
small paths in the pitch darkness
of night,
……….where an elephant is standing
……….guard over her calf with short
………. strides, to protect it from a big
………. tiger with short stripes,
your lover from the lofty mountains
where a mountain woman
with honey-fragrant hair shares
fatty porcupine meat that her husband
killed and brought home, along with
yams, with everybody in their
lovely, small village with glory lily flowers!

Notes:  தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.  வரைவு கடாயது. புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – நல்விளக்கனார் என அச்சுப் பிரதியிற் காணப்படும் இப்பெயர் ஏடுகளில் நல்விளக்குன்றனார் என்று இருக்கிறது.  பூங்குன்றன், முதுகுன்றன் என்றாற் போல விளக்குன்றன் என்பது மக்கட் பெயர்வகையுள் ஒன்றாகவும் இருக்கலாம். ஏடு எழுதினார் நல்விளக்கனார் எனப் பிழைத்திருக்கலாம்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கானவன் தலைவனாகவும், கொடிச்சி தலைவியாகவும், பன்றித்தசை தலைவன் வரைந்து கொண்டு பொருள் ஈட்டித் தலைவிபால் அளிப்பதாகவும், சிறுகுடிப் பகுத்தல் அப்பொருளைக் கொண்டு இல்லறம் நடத்தற்பாலாகவும் கொள்க.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியை அஞ்சி பிடியாணை தன் கன்றைக் காத்துத் தங்குமென்றது, பிரிவினாலே தலைவிக்கு வரும் ஏதத்தை அஞ்சி யான் அவளைக் காத்திருக்கின்றேன் என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – கன்றின் பொருட்டு உயிரைப் பொருள் எனக் கருதாது பிடி யானை நின்று காத்து அல்கும் என்றது, தலைவி தலைவனிடத்துக் கொண்ட காதலின் பொருட்டு மேனி வேறுபாடும் அலரும் ஆகியவற்றைப் பொருளாகக் கருதாது மனைக்கண் உறையுமாறு கூறியதாகக் கொள்க. 

Meanings:  ஆய் மலர் மழைக் கண் – moist eyes that are beautiful like flowers, moist eyes that are like chosen flowers, தெண் பனி உறைப்பவும் – drop clear drops of tears, வேய் மருள் பணைத்தோள் – bamboo-like thick arms (மருள் – உவம உருபு, a comparison word), விறல் இழை – victorious jewels, beautiful jewels, நெகிழவும் – to become loose and slip down, அம்பல் மூதூர் – gossiping ancient town, அரவம் ஆயினும் – even if it is loud, குறு வரி இரும்புலி – a big tiger with short stripes, அஞ்சி – fearing, குறு நடைக் கன்றுடை – with calf with short strides, வேழம் – elephant, நின்று காத்து அல்கும் – standing there and protecting, ஆர் இருள் – pitch darkness, கடுகிய – in abundance, அஞ்சுவரு சிறு நெறி வாரற்க – may he not come on that fearful small/narrow path, தில்ல – தில் ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல், a particle signifying suggestion or விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle signifying desire, ஈறு திரிந்தது வந்தது, தோழி – oh friend, சாரல் – mountain slopes, கானவன் எய்த முளவுமான் – the porcupine killed by the mountain dweller, கொழுங்குறை – fatty meat pieces, தேம் கமழ் கதுப்பின் – with hair with sweet fragrance, with hair with honey fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), கொடிச்சி – mountain woman, கிழங்கொடு – with yams/tubers, காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் – she shares with the lovely small village with glory lily plants, ஓங்கு மலை நாடன் – the man from the lofty mountains, நின் நசையினானே – because of his desire for you (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 86, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அறவர் வாழி தோழி, மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த  5
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே.

Natrinai 86, Nakkeerar, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend!  Your lover left in the
very harsh early dew season, when
plate-like, round pakandrai flowers,
as wide as spear blades of warriors,
with skin-like, hairy petals were in
bloom, and you trembled.

He has come back in early summer
when the kōngam flowers
that are as lovely as the head-jewels
created by skilled artists, blossom,
and the eye-pleasing eengai
with delicate sprouts sway.
He is a just man.   May be live long!

Notes:  குறித்த பருவத்தில் வினை முடித்து தலைவன் வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.  கலித்தொகை 78 – பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால், அகநானூறு 217 – பகன்றை நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர.

Meanings:  அறவர் வாழி – long live the just man, தோழி – oh friend, மறவர் – warriors, வேல் என விரிந்த – spread like a spear, கதுப்பின் – with hair, தோல – with skin, பாண்டில் – round shape, disc, bowl, ஒப்பின் – like, பகன்றை மலரும் – pakandrai flowers bloom, Operculina turpethum, Indian jalap, கடும் பனி – harsh dew, அற்சிரம் – early dew season, நடுங்க – trembled, காண்தக – splendidly, கை வல் வினைவன் – a talented hand-skilled man, தையுபு – created, சொரிந்த – poured (poured gems and created), சுரிதக – hair jewel, உருவின ஆகி – became in the shape, பெரிய – big, கோங்கம் – of  kongam trees, Cochlospermum gossypium, குவி முகை – closed buds, pointed buds, அவிழ – open, ஈங்கை – eengai, Mimosa Pudica, நல் தளிர் – fine sprouts, நயவர – in a pleasing manner, in a desirable manner, நுடங்கும் – swaying, முற்றா வேனில் – early summer, முன்னி வந்தோரே – the one who thought of you and came (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  5
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே.

Natrinai 87, Nakkannaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
When I was day dreaming about his
country’s seashore with huge, cool groves, 
and the joy of fishermen in small villages,
where large-trunked punnai trees with
opening, cool flower buds drop pollen on the
wet backs of grazing oysters, my dream ended,
oh friend, like the dreams of bats with sharp
teeth that hang on the tall branches of mango
trees in town and dream about tasting the
sour, lovely nelli fruits in the huge forest of
Chōzhan Azhisi who is victorious in battles. 

Notes:  வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இப்பியின் புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளும் என்றது, பசலை தலைவியின் மேனியை மறைக்குமாறு பரவும் என்பது.  வரலாறு:  சோழர், அழிசி.  Natrinai 190 describes Azhisi owing Ārkadu town.  According to K.N. Sivaraja Pillai, Veerai Veliyan Thithan was the founder of the first Chōzha empire and he usurped Azhisi’s country. 

Meanings:  உள்ளூர் – town’s, மாஅத்த – on mango trees (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), முள் எயிற்று வாவல் – bats with thorn-like teeth, bats with sharp teeth, ஓங்கல் அம்  சினை – on tall branches, தூங்கு – hanging, துயில் பொழுதின் – when sleeping, வெல் போர்ச் சோழர் – victorious in battle Chōzha king, அழிசி அம் பெருங்காட்டு – in the big forest of Azhisi, நெல்லி அம் புளிச் சுவை – tasting sour nelli fruits, Phyllanthus emblica, கனவியாஅங்கு – like how they dreamt, அது கழிந்தன்றே – it left like that (ஏ – அசைநிலை, an expletive), தோழி – my friend, அவர் நாட்டு – his country, பனி அரும்பு உடைந்த – opening cool buds, பெருந்தாட் புன்னை – large trunked laurel trees, Mast wood Tree, Calophyllum inophyllum, துறை – seashore, மேய் இப்பி – grazing oysters, ஈர்ம் புறத்து உறைக்கும் – drops (pollen) on the wet backs, சிறுகுடி – small village, small settlement, பரதவர் – fishermen, மகிழ்ச்சியும் – and happiness, பெருந்தண் கானலும் – and the huge cool seashore groves, நினைந்த அப் பகலே – that day time when I thought (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 88, நல்லந்துவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல், வாழி தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி! புணர் திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல், உதுக்காண்,  5
தம்மோன் கொடுமை நம் வயின் ஏற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி, அவர் பழமுதிர் குன்றே.

Natrinai 88, Nallanthuvanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, oh friend!
Why are you getting confused,
not analyzing our past actions?
Rise up!  Let’s go and talk to him!
I worry that you are melting and
getting ruined like heaps of salt,
the ambrosia of oceans, that melts
away when rain pours.

Look there! 
His mountain that drops fruits
weeps, its waterfalls flowing down
as tears, unable to bear his cruelty,
because of its pity and great
kindness for us.  

Notes:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது.  வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டை எடுத்தோதி ‘இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  அகநானூறு 208 – உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம், கலித்தொகை 138 – உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர்.   யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ இதன்பொருட்டு மயங்குகின்றனை?, ஒளவை துரைசாமி உரை – பண்டு நாம் செய்த பழவினை போந்து வருந்துதற்கு மயங்கி வருந்துவது என்ன பயனுடைத்தாம்.  ஏற்றி (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நினைத்து, ஒளவை துரைசாமி உரை – ஏற்று.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26). 

Meanings:  யாம் செய் தொல் வினைக்கு – for our past deeds, எவன் பேதுற்றனை – why are you confused, வருந்தல் – do not feel sad, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, யாம் சென்று உரைத்தனம் வருகம் – let us go and talk to him and come back, எழுமதி – rise up (மதி – முன்னிலையசை, an expletive of the second person), புணர் திரை – with waves, கடல் விளை அமுதம் – salt, nectar that grows in the ocean, பெயற்கு ஏற்றாஅங்கு – like it met the rain (ஏற்றாஅங்கு – இசைநிறை அளபெடை), உருகி உகுதல் – melting and getting ruined, அஞ்சுவல் – I fear (தன்மையொருமை வினைமுற்று), உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), தம்மோன் – your man (தலைவன்), கொடுமை நம் வயின் ஏற்றி – thinking about the cruelty done to us, accepting the cruelty done to us as done to it, நயம் பெரிது உடைமையின் – because of its great kindness, தாங்கல் செல்லாது – unable to bear, கண்ணீர் அருவியாக அழுமே – many waterfalls come down like tears, தோழி – my friend, அவர் பழம் உதிர் குன்றே – his mountain where fruits drop (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 89, இளம்புல்லூர்க் காவிதி, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொண்டல் ஆற்றி விண் தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ்சூல் மா மழை
அழிதுளி கழிப்பிய அழிபெயல் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்,  5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே தோழி, வாரா
வண்கணாளரோடு இயைந்த  10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே.

Natrinai 89, Ilampullūr Kāvithi, Mullai Thinai – What the heroine’s friend said to her
In the last day of the rains, the eastern
winds carried huge, full, dark clouds
that are in rows in the sky.  Climbing
over peaks, they appear like sprays of
waves, exhausted and without heavy
rain drops.

The unfavorable, cold northern winds,
that blow and sway the broad leaves of
ulunthu plants with hairy pods remain,
blowing every day like the sad sighs of
a caparisoned elephant.

It will still blow, my friend, with no
compassion, after sending distress and 
loneliness in the evenings, like that
caused by the harsh man who has not
returned.

Notes:  தலைவன் பொருள் முற்றி மீண்டான் என்பதை அறிந்த தோழி, தலைவியிடம் உரைத்தது.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  கொண்டல் ஆற்றி – the eastern winds carrying, the eastern winds blowing (ஆற்றி – செலுத்தி), விண் தலைச் செறீஇயர் – becoming crowded in the sky, becoming dense in the sky (செறீஇயர் – சொல்லிசை அளபெடை), திரைப் பிதிர் கடுப்ப – like the sprays of waves (கடுப்ப – உவம உருபு, a comparison word), முகடு உகந்து ஏறி – rising high over peaks, நிரைத்து நிறை கொண்ட – in rows and full, proper and full, கமஞ்சூல் மா மழை – huge full dark clouds (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), அழிதுளி கழிப்பிய – heavy rains have ended, அழிபெயல் கடை நாள் – in the last days of the rain, இரும் பனிப் பருவத்த – in this cold season which came after that, மயிர்க் காய் உழுந்தின் அகல் இலை – wide leaves of the black-gram plants with hairs on its beans, அகல வீசி – blowing and swaying them, அகலாது – without leaving, அல்கலும் அலைக்கும் – they cause pain every day, நல்கா வாடை – the northern winds that do not shower compassion, the harsh northern winds, பரும யானை அயா உயிர்த்தாஅங்கு – like how an elephant with a saddle sighed in sorrow (உயிர்த்தாஅங்கு – இசை நிறை அளபெடை), இன்னும் வருமே தோழி – it will still come my friend, வாரா வண்கணாளரோடு – with the harsh-hearted man who has not come, இயைந்த புன்கண் மாலையும் – associated distressing evening time, புலம்பும் – loneliness, sorrow, முந்துறுத்தே – sending in advance (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, பாணன் கேட்கும்படியாக
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடிப்  5
பெருங்கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்,
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா  10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே.

Natrinai 90, Anjil Anjiyār, Marutham Thinai – What the heroine’s friend said to her, as the messenger bard listened nearby
Listen!  In this ancient town with
festivities and dances,  
a washer-woman who washes perfectly
and does not know poverty, soaks at  
night clothes in thin rice starch and rinses
them, and the soft fine clothes washed
by her are worn by the young woman  
donning a gold garland that sways as
she runs, refusing to play on a swing,
with thick ropes made with dark palmyra
tree fibers, when pushed by her friends
with flower-like eyes.
She cries as she moves away, the young
woman with soft hair and few bangles,
the one who is in distress.
His friends are with those who do not
encourage her to swing again with uproar.
He is here because of her sulking.  May he
not come here! 

Notes:   தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ப் பாணனுக்கு வாயில் மறுத்தது.  பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான்.  அப்பாணன் கேட்குமாறு, தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள்.  அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன்.  அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்” எனக் கூறி வாயில் மறுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவின்கண் வரும், ‘வாயிலின் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பாங்கனைக் குறித்துக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; ‘இது பாணனைக் குறித்துக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பயன் இன்று வேந்துடை அவை (12) – ஒளவை துரைசாமி உரை – வேந்தனாகிய தலைவனது சுற்றம் பயன் தருவதன்று, பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது.  அம்ம (12) – ஒளவை துரைசாமி உரை- கேட்பாயாக (அம்ம கேட்பிக்கும் – (தொல்காப்பியம், இடையியல் 28)), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்ன வியப்பு.   புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.  வாடா மாலை (5) – வாடாத மாலையாகிய பொன்னால் செய்த மாலை, வெளிப்படை.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  ஆடு இயல் விழவின் – with festivals with dances, with festivals with artists, அழுங்கல் மூதூர் – loud ancient town, loud uproarious town, உடை ஓர் பான்மையின் – in the manner of analyzing and washing clothes (ஓர்தல் – ஆராய்தல், பான்மை – முறைமை), பெருங்கை தூவா – with non-stopping business (கை ஓயாத), வறன் இல் – without poverty, புலைத்தி – a washerwoman, எல்லி – night, தோய்த்த – soaked, dipped, புகா – food, rice, புகர் – rice gruel, rice starch, kanji, கொண்ட – with, புன் பூங்கலிங்கமொடு – with soft lovely clothes, with small lovely clothes, with soft clothes with flower designs, வாடா மாலை – a garland that is not faded, a gold garland, துயல்வர – swaying, ஓடி – run, பெருங்கயிறு – big rope, நாலும் – hanging, இரும் பனம் – dark palmyra, பிணையல் – tied swing, பூங்கண் – flower-like eyes, pretty eyes, ஆயம் – friends, ஊக்க – as they pushed (ஆட்டிவிட), ஊங்காள் – she does not swing, அழுதனள் பெயரும் – she cried and moved, அம் சில் ஓதி – beautiful delicate hair, நல்கூர் பெண்டின் – of a woman who is suffering as in poverty, சில் வளைக் குறுமகள் – a young woman with few bangles, ஊசல் உறு தொழில் – swinging greatly, பூசல் கூட்டா – not creating uproar, நயன் இல் மாக்களொடு கெழீஇ – together with undesirable people, together with people who are not kind (கெழீஇ – சொல்லிசை அளபெடை), பயன் இன்று – without use, அம்ம – அசைநிலை, an expletive, இவ் வேந்துடை அவையே – the bard and other friends of this man (the hero), this king’s dance hall, the king’s assembly hall (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 91, பிசிராந்தையார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீ உணர்ந்தனையே தோழி, வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்,  5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித்தார்க்  10
கடு மாப் பூண்ட நெடுந்தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

Natrinai 91, Pisirānthaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Did you know this my friend?
The lord of the vast ocean comes during
the day in his tall chariot, hitched to fast
horses wearing bell necklaces that sound
like the chirps of the birds in our thriving,
greatly charitable village,
where a big-footed male stork, along with
his mate, searches for food in the sweet
shade of punnai trees that drop flowers
on the high shores of the cold, loud ocean,
and brings tiny fish with delicate, small
eyes that are red on the sides, to its nest
on a tall tree branch for their young
chick that cries for its mother, and puts
the food in its mouth.
His visit has made our village beautiful!

Notes:  பொருள் தேடிப் பிரிந்த தலைவன் பொருள் முற்றி பகல் பொழுதில் பலரும் காணுமாறு வருவதைக் கண்ட தோழி, தலைவியிடம் உரைத்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நாரை கடலிற் சென்று இரை தேடித் தம் பிள்ளையை அருத்தும் என்றது, தலைவன் வேற்று நாட்டிற் சென்று பொருள் தேடித் தமரைப் பேணுதல் என்பதாம்.  ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் (5) – ஒளவை துரைசாமி உரை – மெல்லிய தோல் போர்த்தப்பட்ட சிறிய கண்ணையும் சிவந்த செதிலையுமுடைய சிறு மீன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மெல்லிய சிவந்த சிறிய கண் கடையையுடைய சிறிய மீன், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மெல்லிதான சிவந்த கடைக்கண் பகுதிகொண்ட சிறிய மீன்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25)

Meanings:  நீ உணர்ந்தனையே தோழி – did you know my friend, வீ உகப் புன்னை பூத்த இன் நிழல் – in the sweet shade of laurels tree which drop flowers, Calophyllum inophyllum, Mast wood Tree, உயர் கரை – high shores, tall banks, பாடு இமிழ் பனிக் கடல் – cold sea with loud sounds, துழைஇ – searches (சொல்லிசை அளபெடை), பெடையோடு உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை – big-footed stork that searches food together with its female, white stork – Ciconia ciconia, or pelican or crane, ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் – small fish with delicate/beautiful small red eyes on a side, மேக்கு உயர் சினையின் – on the branch high above, மீமிசை – above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), குடம்பை – nest, தாய்ப் பயிர் பிள்ளை – a young child that calls out for its mother, வாய்ப்படச் சொரியும் – puts it in its mouth, கானல் – seashore grove, அம் படப்பை – beautiful grove, ஆனா வண் மகிழ் – unlimited happy giving, பெருநல் ஈகை – great fine charity, நம் சிறுகுடிப் பொலிய – our small village to be splendid, புள் உயிர்க் கொட்பின் – with whirling sounds that are like chirps of birds, வள் உயிர் – loud sounds, மணித் தார்க் கடு மாப் பூண்ட நெடுந்தேர் – tall chariots that had fast horses with bell garlands, நெடு நீர்ச் சேர்ப்பன் – the lord of the vast ocean, பகல் இவண் வரவே – he comes here during the day (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 92, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்  5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன்தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே?

Natrinai 92, Poet is Unknown, Pālai Thinai – What the heroine’s friend said to her
Does he think about you, my friend,
your lover who went through the wasteland
where, in summer’s heat, a chameleon crawls
with its mate, with difficulty, both moving
like ground snakes and looking like withered
tender hemp leaves with stripes, and in a small  
village of hunters high on the mountain peak,
a killer bull elephant with his soft-headed, naive
female and their calf, removes the arched lid of
a clear-water trough kept full with water from a
wide well for cattle, and they drink and move away?  

Notes:  பிரிவிடை வருந்திய தலைவிக்குத் தோழி சொல்லியது.  வழலை (2) – ச. வே. சுப்பிரமணியன் உரை – கருவழலைப் பாம்பு, University of Madras Lexicon – ஒருவகைப் பாம்பு, Lycodontidae, ஒளவை துரைசாமி உரை – ஆண் ஓந்தி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓந்தியாகிய வழலை, வழலை ஒரு வகைப் பாம்பு.  பாடு நடை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருந்திய நடை, ஒளவை துரைசாமி உரை – ஓசையிட்டுச் செல்லும் நடை.

Meanings:  உள்ளார் கொல்லோ தோழி – does he think about you oh friend (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), துணையொடு – with its mate, வேனில் – in summer, ஓதி பாடு நடை – a chameleon walks with difficulty, a chameleon walks creating sounds (ஓதி  – ஓந்தி, இடைக்குறை), வழலை – a kind of snake, a ground snake, Lycodontidae, வரி மரல் – striped hemp, நுகும்பின் வாடி – withered like the tender leaves (நுகும்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அவண வறன் பொருந்து – parched there, குன்றத்து உச்சி – mountain peak, கவாஅன் – mountain slopes (இசை நிறை அளபெடை), வேட்டச் சீறூர் – small village with hunters, அகன் கண் கேணி – wide-mouthed well, பய நிரைக்கு – for their useful herds, எடுத்த – made, placed, மணி நீர்ப் பத்தர் – clear-water trough, புன்தலை மடப் பிடி – naive female elephant with soft head, naïve female elephant with a head with scanty hair, கன்றோடு – with calf, ஆர – to drink, வில் கடிந்து – removes the arched lid, ஊட்டின பெயரும் – they drink and move away, கொல் களிற்று ஒருத்தல் – a killer bull elephant, சுரன் இறந்தோரே – one who passed through the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 93, மலையனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள்ளருவி மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம் புலம் புக, நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட!  5
செல்கம், எழுமோ, சிறக்க நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள்,
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்,
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10
மயிர்க் கண் முரசின் ஓரும் முன்
உயிர்க் குறி எதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

Natrinai 93, Malaiyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the lofty mountains, where
honeycombs hang, waterfalls look like
garlands, jackfruits are in clusters, grains 
and legumes are always harvested in
abundance, there is prosperity in the
mountains, and those who have left
will feel sad!  We are leaving!  Rise up
and go!  May you live long and prosper! 

She with perfect jewels that hide her arms,
like bamboo, this delicate young woman
with a tiny waist, whose shyness has been
lost by her sorrow, is distressed and pallor
has spread on her breast with jewels.
If she does not hear the roaring sounds
of drums with hairs on their eyes, it
would be difficult to find signs of life in her.

Notes:  தோழி வரைவு கடாயது.  அம்ம (4) – ஒளவை துரைசாமி உரை – கேட்க, உரையசை, H.வேங்கடராமன் உரை – வியப்பு.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின்னைப் புகல்ப்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும் பிரிந்தோர் இரங்குமாறு இன்னும் வளனுடைத்தாயிரா நின்றது. இஃதென்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்க.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  பிரசம் தூங்க – honey combs hang, பெரும் பழம் துணர – jackfruits hang in clusters, Artocarpus heterophyllus, வரை வெள் அருவி – white waterfalls of the mountains, மாலையின் இழிதர – flowing down like garlands (மாலையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கூலம் எல்லாம் – all the grains and legumes, புலம் புக நாளும் மல்லற்று – heaped in abundance in the land (மல்லற்று – வளமையுடையது), அம்ம – வியப்பு இடைச்சொல், particle signifying surprise or கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, இம் மலை – this mountain, கெழு வெற்பு என – with many other mountains, பிரிந்தோர் இரங்கும் – those who parted will feel sad, பெருங்கல் நாட – oh man from the lofty mountains, செல்கம் – we are leaving, எழுமோ – you rise up (மோ – முன்னிலையசை, an expletive of the second person), சிறக்க நின் ஊழி – may you live long and prosper (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), மருங்கு மறைத்த திருந்திழை – fine jewels which are hiding her sides, பணைத்தோள் – bamboo-like arms,  thick arms, நல்கூர் நுசுப்பின் – with a tiny waist, மெல்லியல் குறுமகள் – the delicate young woman, பூண் தாழ் ஆகம் – chest with hanging jewels, நாண் அட வருந்திய – sadness that has removed her shyness, பழங்கண் மாமையும் உடைய – with distressing sallow, தழங்கு குரல் – roaring sound, மயிர்க் கண் முரசின் – of the sounds of drums with hair on its eyes (முரசின் என்புழி இன் உருபு ஏதுப்பொருட்டு), ஓரும் – listening, முன் உயிர்க் குறி எதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே – it would be difficult to find signs of life in her if you do not come (அருங்குரைத்தே – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை, an expletive)

நற்றிணை 94, இளந்திரையனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நோய் அலைக்கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்,
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்  5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன் கொல் தோழி, தன் வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே?

Natrinai 94, Ilanthiraiyanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listended nearby
What kind of man is he, oh friend,
the lord of the shores,
……….where punnai trees put out
……….clusters of flowers with pointed
……….petals when the ocean waves
……….spray flesh-reeking water on
……….them,
who does not understand the woman
who loves him, who is wasting away
in sorrow, desiring his chest?

When a woman struggles with the pain
of love, and her strength has been lost,
it is only fitting for the man to talk in a
loving manner.  I have well controlled
my feminine nature, and am like a new
pearl that has not been polished and made
pretty by the hands of a skilled craftsman.

Notes:  தலைவன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.  புன்னை அரும்பிய (6) – ஒளவை துரைசாமி உரை – பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம், அலராமற் குவிந்த பூங்கொத்துக்கள்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஏமம் சான்ற உவகைக்கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையால் தகைத்துக் கொள்ளும் படியாகத் தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகன் என்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள்; ஆர்வமுடையவராக வேண்டி மார்பு அணங்குறுநரை அறியாதோன் என்க; அலராமற் குவித்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்து அரும்பிய சேர்ப்பன் என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூ விரித்து கெடுக்குமாறு போல, வரைந்துகொண்டு வந்த குற்றம் வழிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை’ என்பர் நச்சினார்க்கினியர்.  கழாஅ – கழுவி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  நோய் அலைக்கலங்கிய – when this love affliction causes distress (அலைக்கலங்கிய – அலைத்தலால் கலங்கிய), மதன் அழி பொழுதில் – when strength is lost, காமம் செப்பல் – talking in a loving manner, ஆண்மகற்கு அமையும் – it is fitting for a man, யானே – me,  பெண்மை தட்ப – my feminine nature blocking,  நுண்ணிதின் தாங்கி – I tolerated in a controlled manner, I tolerated in a gentle manner, கை வல் கம்மியன் – hand-skilled craftsman, கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப – like a fresh/new pearl that has not been cleaned and polished to attain beauty (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), குவி இணர்ப் புன்னை அரும்பிய – pointed clusters of laurel flowers have blossomed, Calophyllum inophyllum, Mast wood Tree, புலவு நீர் – flesh-stinking water, சேர்ப்பன் – the lord of the shores, என்ன மகன் கொல் – what kind of man is he, தோழி – oh friend, தன் வயின் – for him, ஆர்வம் உடையர் – a man with the desire, ஆகி – becoming, மார்பு – chest, அணங்குறுநரை  – the one who is distressed, me who is distressed, அறியாதோனே – a man who does not understand (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 95, கோட்டம்பலவனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,  5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்று அகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.  10

Natrinai 95, Kōttampalavanār, Kurinji Thinai – What the hero said to his friend
In the small, well-guarded hamlet in the
mountain where my lover with fragrant hair lives,
bamboo flutes and many musical instruments
create loud music and children of mountain
dwellers climb rapidly on big boulders and clap
to beats, as a strong young monkey,
child of a female monkey with fuzzy hair on  
her head and a face as red as sweet, red fig fruits,
balances and sways on a tightly twisted, strong
high rope of a dancing girl.  

My lover holds my heart in her hands.  Others
cannot release it.  She alone can release it!

Notes:  தலைவன் பாங்கற்கு, இவ்விடத்து இத்தன்மையத்து என உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம் களவியல் 11) என்ற நூற்பாவின் கண் வரும் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கழைக்கூத்தி ஆடிய கயிற்றின் மேல் குரங்கின் குட்டி ஆடக்கண்டு குறச்சிறார் கைகொட்டி நகைப்பர் என்றது, உலகின் சிறந்த நெறிகளில் விலகாது நடந்தொழுகும் என் உள்ளத்தில் ஒரு கொடிச்சி வந்து உறைந்தனள் என்பதறிந்து நீ கைகொட்டி நகைத்தற்காயிற்று என்பது உணர்த்தவாம். 

Meanings:  கழை – bamboo flute, பாடு இரங்க – with sounds nearby, பல் இயம் கறங்க – many instruments sound, ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – on a strong twisted rope on which a dancing girl walked, அதவத் தீம் கனி அன்ன – like a sweet fig, செம் முகத் துய்த்தலை மந்தி – a red-faced female monkey with fuzzy head hair, வன் பறழ் தூங்க – strong child sways, கழைக் கண் – near the bamboo, இரும் பொறை ஏறி – climbing on large boulders, விசைத்து எழுந்து குறக் குறுமாக்கள் – young mountain dweller kids who rise up rapidly, தாளம் கொட்டும் – they clap and keep beats, அக் குன்று அகத்ததுவே – in that mountain, குழு – group, மிளை – protective forests, protection, சீறூர் – small town, சீறூரோளே – the girl in the small town, நாறு மயிர்க் கொடிச்சி – the mountain woman with fragrant hair, கையகத்ததுவே – are held by her hands, பிறர் விடுத்தற்கு ஆகாது – it is unable to be released by others, பிணித்த என் நெஞ்சே – my heart that has been tied (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 96, கோக்குளமுற்றனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,
புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப்,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மல்படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்  5
துவரினர் அருளிய துறையே அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇத்,
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,  10
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

Natrinai 96, Kōkulamutranār, Neythal Thinai – What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby
You say,
“This is where he embraced me first on
one side of the grove where gnāzhal and
punnai trees have dropped their huge, fragrant
flowers on the white sand.  This is where he
played with us in the overflowing dashing waves,
as he squeezed out water and sweetly dried my thick,
bright, black hair with five-part braid. That is where
he gave me a beautiful garment woven with different
leaves of waterlilies with flowers with tall stems,
from the curved, brackish water ponds,
and then he went alone to the seashore grove.”

Whenever you think of him again and again,
you melt with sorrow, and you suffer from pallor,
losing your luster little by little!

Notes:  வரைவு கடாயது.  நெய்தல்அம் பகை நெறித் தழை (7-8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழை உடை, ஒளவை துரைசாமி உரை – நெய்தலின் பூவோடு வேறு நிறங்களையுடைய பூவும் தளிரும் கொண்டு தொடுத்த தழை உடை.   ஐங்குறுநூறு 187 – நெய்தல் அம் பகைத்தழை, குறுந்தொகை 293 – வெள் ஆம்பல் அம் பகை நெறித் தழை.

Meanings:  இதுவே – this is, நறு வீ ஞாழல் – fragrant flowered gnāzhal, ஞாழல், புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera, மா மலர் – huge flowers, தாஅய் –  dropped, spread (இசைநிறை அளபெடை), புன்னை ததைந்த வெண்மணல் – white sand where punnai trees grow densely, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, ஒரு சிறை புதுவது புணர்ந்த பொழிலே – one side you embraced/united with him first in the grove (ஏ – அசைநிலை, an expletive), உதுவே – there, பொம்மல்படு திரை – overflowing waves, bright waves,  நம்மோடு ஆடி – played with us, புறம் தாழ்பு – hanging in the back, இருளிய பிறங்கு குரல் ஐம்பால் துவரினர் – he squeezed out the water and dried your flourishing dark/black thick five-part hair braid, அருளிய துறையே – he was kind in this shore (ஏ – அசைநிலை, an expletive), அதுவே – that is, கொடுங்கழி – curved backwaters, curved brackish ponds, நிவந்த – risen, நெடுங்கால் நெய்தல் – waterlilies with long stems, அம் – beautiful, பகை நெறித் தழை – garment made from different leaves, Avvai Duraisamy – வேறு நிறங்களுடைய பூவும் தளிரும் கொண்டு தொடுத்த தழையுடை, அணிபெறத் தைஇ – wore it beautifully (தைஇ – சொல்லிசை அளபெடை), தமியர் சென்ற கானல் என்று – that he went alone to that seashore grove, ஆங்கு – there, உள்ளுதோறு உள்ளுதோறு – whenever your think and think, உருகி – melting (with sorrow), பைஇப் பையப் பசந்தனை பசப்பே – you suffer with pallor losing your luster little by little (பைஇ – சொல்லிசை அளபெடை, பசப்பே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 97, மாறன் வழுதி, முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப்,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, ‘மதனில்  5
துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?’ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

Natrinai 97, Māran Valuthi, Mullai Thinai – What the heroine said to her friend
When a cuckoo sings near me in plaintive notes,
the hurt is like that of a lance plunged into an
unhealed, deeply wounded heart. 

Harsher than that is when the river runs with
abundant clear water.

Much harsher than that is the farmer’s special,
naive daughter from the grove, who calls out and sells
in her bee-swarming basket, fresh kurukkathi flowers
with beautiful soft petals, mixed with pichi blossoms.

Notes:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்கு உரைத்தது.  நற்றிணை –     நற்றிணை 118 – புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே, புறநானூறு 293 – பிறர் மனை புகுவள் கொல்லோ அளியள் தானே பூ விலைப் பெண்டே. பெரும்பாணாற்றுப்படை 355 – தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்.  பித்திகை (7) – ஒளவை துரைசாமி உரை – உலக வழக்கில் பிச்சி என்பர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குயிலோசை செவியளவே இன்பம் செய்ய, ஏனைப் புலன்கள் இன்பம் பெறாமையின் குயில் கொடிது என்றாள்.  யாற்று நீர் குளிர்ச்சி செய்தலின் அக்குளிருக்குத் தணிக்கிடை வருத்துவதே என யாறு கொடிது என்றாள்.  ஆடவனது மெய் தோயப்பெற்று அம்மெய்ம்மணம் நுகர்ந்தவழி நறுமலரின் மணம் சிறக்குமாகலின் அது காரணமாகப் பூவிலை மடந்தை கொடியவள் என்றாள்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  அழுந்துபடு விழுப்புண் – deep big wound sore, வழும்புவாய் புலரா – the edges on fatty flesh have not dried, எவ்வ நெஞ்சத்து – into the distressed heart, எஃகு எறிந்தாங்கு – like a spear was plunged, பிரிவில – without leaving me, புலம்பி நுவலும் குயிலினும் – more than the cuckoo bird singing mournfully, தேறு நீர் கெழீஇய யாறு – the river that runs with abundant clear water (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), நனி கொடிதே – it is much more harsher (ஏ – அசைநிலை, an expletive), அதனினும் கொடியள் – the young woman who is harsher than that, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, மதன் இல் – without strength, துய்த்தலை இதழ – with petals with soft tops, with petals with fuzzy tops, பைங்குருக்கத்தியொடு – along with fresh kurukkathi, மாதவிக்கொடி, Common delight of the woods, Hiptage madablota, பித்திகை விரவு மலர் – mixed with jasmine flowers, கொள்ளீரோ – will you take, என – thus, வண்டு சூழ் வட்டியள் – the young woman who has a bee-swarming basket, திரிதரும் – going around, தண்டலை – grove, உழவர் தனி மட மகளே – the farmer’s naïve daughter of no equal, the farmer’s special delicate daughter (ஏ – அசைநிலை, an expletive)  

நற்றிணை 98, உக்கிரப் பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,  5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே;  10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.

Natrinai 98, Ukkira Peruvaluthi, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the country,
where a small-eyed pig with neck
hair as coarse as porcupine quills,
walked toward the wide millet
field on the tall mountain, anxious
to graze, unaware of the big trap,
heard lizard clucks, took that as
an omen, and slowly walked back
to his mountain cave to sleep!

You come into our father’s protected,
big house at night when the guards are  
tired.  Every day I am sleepless.
Harsher than that is my cruel heart
that has not come back to me!

Notes:  இரவுக்குறி வந்தொழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.  இது தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பன்றி நூழையுட் புகுங்கால் பல்லியின் ஒலிகேட்டுத் திரும்பும் என்றது, காவல்மிக்க மாளிகையின் உள்ளே தலைவன் நுழைய முயலும் போது, காவலர் வரினும், நிலவு வெளிப்படினும் இது தக்க வேளை அன்று என்று தலைவன் தன் இடம் நோக்கிப் பெயர்தலை உணர்த்திற்று.  எய்ம் முள் (1) – ஒளவை துரைசாமி உரை – எய்யப்படும் முள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முள்ளம்பன்றியின் முள்.  நூழை (4) – ஒளவை துரைசாமி உரை – நுழைவோர் உடலைச் சுருக்கி அல்லது நுழையாவாறு அமைவது பற்றி நூழை எனப்பட்டது.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  எய்ம் முள் அன்ன – like the quills of a porcupine, like thorns that are thrown, பரூஉ மயிர் எருத்தின் – with a neck with coarse hair (பரூஉ – இன்னிசை அளபெடை), செய்ம்ம் – in a field, மேவல் – desiring, சிறுகண் பன்றி – a small-eyed pig, ஓங்கு மலை – tall mountain, வியன் புனம் – wide field, படீஇயர் – in order to graze, in order to eat (சொல்லிசை அளபெடை), வீங்கு – big, பொறி – trap, நூழை – small entrance, நுழையும் பொழுதில் – when entering, தாழாது – without staying, without delay, பாங்கர் – there, location, பக்கத்து – பக்கத்திலிருந்து, from nearby, பல்லி பட்டென – since there were lizard clucks, மெல்ல மெல்ல – slowly and slowly, பிறக்கே – behind (ஏ – அசைநிலை, an expletive), பெயர்ந்து – moved, தன் கல் அளை – rock cave, பள்ளி – place to lie down, வதியும் – it stays, it lives, நாடன் – oh man from such country, எந்தை ஓம்பும் – our father protects, கடி உடை – with protection, வியல் நகர் – big house, துஞ்சாக் காவலர் – the guards who do not sleep, இகழ்பதம் நோக்கி – see when they are tired, see whether their eyelids are close, இரவின் வரூஉம் – you coming at night (வரூஉம் – இன்னிசை அளபெடை), அதனினும் கொடிதே – it is harsher than that (ஏ – அசைநிலை, an expletive), வைகலும் – every day, பொருந்தல் ஒல்லா கண்ணொடு – with eyes that are unable to close, வாரா – has not come back, என் நார் இல் நெஞ்சே – my heart with no compassion for me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 99, இளந்திரையனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?’ என்றிசின் மடந்தை! மதி இன்று,  5
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல,
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.  10

Natrinai 99, Ilanthiraiyanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
You asked me whether this is the season
he is supposed to return, the man who
went on the long, waterless, endless, harsh
paths of the wasteland scorched by the
blazing sun’s rays that spread like white
cloth, causing fear and trembling.

Oh young woman!  Without using their
intelligence, forgetfully, the huge clouds
absorbed water from the ocean, and
poured it down as heavy rains, unable to
bear the weight.

The ignorant pidavam, kondrai and
kōdal flowers with forgetful hearts have
blossomed abundantly, thinking that this
is the rainy season.

Notes:  பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது.  நற்றிணை 43 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்.  குறுந்தொகை 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57). வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.

Meanings:  நீர் அற – without water, வறந்த – dried, நிரம்பா நீள் இடை – endless long path, long path without anybody, துகில் விரித்தன்ன – like fabric has been spread, வெயில் அவிர் உருப்பின் – due to the harsh blazing sun, அஞ்சுவரப் பனிக்கும் – fearful and causing trembling, வெஞ்சுரம் இறந்தோர் – one who went to the harsh wasteland, one who went to the hot wasteland, தாம் வரத் தெளித்த பருவம் – the season that he promised to come back, காண்வர இதுவோ என்றிசின் – you asked whether it is this (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), மடந்தை – O young woman, மதி இன்று – without intelligence, மறந்து – forgetting, கடல் முகந்த – absorbed from the ocean, கமஞ்சூல் – filled with water (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), மா மழை – dark clouds, பொறுத்தல் செல்லாது – unable to bear, இறுத்த வண் பெயல் – came down as heavy rains, கார் என்று – that it is the rainy season, அயர்ந்த உள்ளமொடு – with forgetful hearts, தேர்வு இல – not knowing, ignorantly (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), பிடவமும் – the pidavam, wild jasmine flowers, Randia malabarica, கொன்றையும் – kondrai – laburnum flowers, Golden Shower Tree, Cassia fistula,  கோடலும் – and kōdal flowers– white Malabar glory lily flowers, மடவ – are dumb, ஆகலின் –  hence, so, மலர்ந்தன பலவே – they have blossomed abundantly (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 100, பரணர், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்
மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்  5
சினவிய முகத்து, ‘சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் பிரி வயிரியர் நலம் புரி முழவின்  10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே.

Natrinai 100, Paranar, Marutham Thinai – What the concubine said to the virali
Whenever I think about it, I laugh,
oh friend. 

The man from the cool shores,
where white waterlilies in deep ponds
blossom resembling the sharp beaks
of rainy season storks with sharp claws,
pulled my honey-fragrant, five-part
braid and plucked my white, bright
bangles from my hand, upsetting me.
I told him with an angry face,
“I will go without anger and tell your
wife about what has happened”.

The man who wants it good, trembled
in fear like the eyes of the roaring,
mud-rubbed auspicious drums of the
skilled artists who came from another
country to perform at the court of king
Malaiyamān who seizes and brings huge
cattle herds from the other side of town,
and donates chariots to those who come
in need.

Notes:  பரத்தை, தலைவியின் தோழியர் கேட்ப, தன் தோழியாகிய விறலியிடம் கூறியது.  வரலாறு:  மலையன்.  Natrinai 77, 100, 291 and 320 have references to Malaiyamān. எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  உள்ளுதொறும் – whenever I think about it, நகுவேன் தோழி – I laugh my friend, வள் உகிர் – sharp claws, மாரிக் கொக்கின் – rainy season storks’, கூர் அலகு – sharp beaks, அன்ன – like, குண்டு – pond, நீர் – water, ஆம்பல் – white waterlily, தண் துறை ஊரன் – the man from the town with cool shores, தேம் கமழ் – honey fragrant, sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), ஐம்பால் – five-part braid, பற்றி – held, என் வயின் – with me, வான் – white, கோல் – well made, rounded, எல் வளை – bright bangles, வெளவிய – plucked, removed, பூசல் – quarrel, சினவிய முகத்து – with an angry face, சினவாது சென்று – going without anger, நின் மனையோட்கு உரைப்பல் – I will tell your wife, என்றலின் – since I said that, முனை ஊர் – edge of town, பல் ஆ – many cows, நெடு நிரை – huge herds of cattle, வில்லின் – with arrows, ஒய்யும் – seizes and brings, தேர் வண் மலையன் – Malaiyaman who gives  away fine chariots, முந்தை – in front, பேர் இசை – great fame, great music, புலம் பிரி வயிரியர் – drummers who came from another land, நலம் புரி முழவின் – of desirable drums, of auspicious drums, மண் ஆர் கண்ணின் – like the mud packed eyes (கண்ணின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அதிரும் – trembles, நன்னராளன் – the man who wants it good, நடுங்கு – trembling, அஞர் நிலையே – distressed situation (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 101, வெள்ளியந்தின்னனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படியாக
முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி  5
இனிது மன்; அளிதோ தானே, துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கம் காணா ஊங்கே.

Natrinai 101, Velliyanthinnanār, Neythal Thinai – What the hero said, as the heroine’s friend listened
Before I saw the naïve daughter
of fishermen, her loins wide,
waist delicate, and eyes calm like
those of a deer, they appeared sweet,
this small village and the wide shore,

where shrimp from backwaters,
with rough skin, resembling the sides
of immature turmeric roots, are heaped
and dried near the dense shade of
punnai trees.  They are pitiful now!

Notes:  தலைவியின் மேல் உள்ள காதலினால் அடைந்த பெரும் துன்பத்தைத் தோழி உணரும் வகையில் கூறுகின்றான் தலைவன்.  ஒளவை துரைசாமி உரை – ‘ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை ஆனா வகைய திணை நிலைப் பெயரே’ என்ற நூற்பா உரையின்கண் இதனைக்காட்டி, ‘இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இறா மீன்கள் காய்வதற்காகப் புன்னை மர நிழலில் பரப்பப் பெறும் என்பது, தலைவனும் தலைவியும் காம நோய் நீங்குமாறு பகற்குறி கருதலாம் என்ற இறைச்சி பயந்தது.  ‘மீனெறி பரதவர் மடமகள்’ – மீன் ஒத்த கண்ணினால் இவளும் எறிவள் என்பது பற்றியாம்.  ஒளவை துரைசாமி உரை – இறவின் குப்பையது உணங்கு திறன் நோக்கிப் பாக்கத்து உறையும் பரதவர் அதனைப் புன்னை மரநிழலில் முன்னுய்த்துப் பரப்புவர் என்றது, தலைமகளது மானமர் நோக்கத்தால் வருந்தி உணங்கும் தன் திறம் நோக்கித் தலைமகளைப் புன்னை நீழற்கண் கொண்டுய்த்தல் வேண்டும் எனத் தலைமகன் குறிப்பால் தோழியிடம் சொல்லியது.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே.(இடையியல் 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  முற்றா மஞ்சள் – immature turmeric roots, பசும்புறம் கடுப்ப – like the fresh sides (கடுப்ப – உவம உருபு, a comparison word), like the tender sides, சுற்றிய பிணர – surrounded by rough, சூழ் – wrapped around, கழி இறவின் கணம் – many shrimp from the backwaters, கொள் குப்பை – heaps with them, உணங்கு திறன் நோக்கி – on seeing them dried, புன்னை அம் கொழு நிழல் – dense beautiful shade of laurel trees, நாகம், Mast wood Tree, Calophyllum inophyllum, முன் உய்த்து – taking before that, பரப்பும் – spreading, துறை – port, நணி இருந்த பாக்கமும் – the nearby seaside village, உறை – staying, நனி இனிது – they were very sweet, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, அளிதோ – pitiable (ஓ – அசைநிலை, an expletive), தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, துனி தீர்ந்து –  without sorrow, அகன்ற அல்குல் – wide loins, ஐது அமை நுசுப்பின் – with a delicate waist, மீன் எறி பரதவர் மட மகள் – innocent daughter of fishermen who catch fish, மான் அமர் நோக்கம் – deer like calm looks, காணா ஊங்கே – before I saw her (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சித் திணை – தலைவி கிளியிடம் சொன்னது
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி!
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல் வேண்டுமால்! கைதொழுது இரப்பல்!
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு 5
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி, இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

Natrinai 102, Chempiyanār, Kurinji Thinai – What the heroine said to a parrot
Oh red-beaked, green parrot who eats
clusters of millet on bent stalks!
Without fearing,
eat as much as you want, and when you
are satisfied, take care of my desire.  I beg
your favor with my palms pressed together!

If you go to see your relatives in his country
with jackfruit trees with many clusters of fruits,
see the lord of the mountains and tell him that
the innocent daughter of the forest dweller from
this mountain is protecting her millet field!

Notes:  இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுபட்டு வராததால், தலைவி வரைதல் விரும்பி கிளியிடம் இரந்து கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பா உரையில் ‘அன்ன பிற’ என்றதனால் ‘இன்னும் கூற்றாக இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க’ என்று கூறி, இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கண் உள்ள பலா மரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃது என்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது அறிக.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  Poem 83 is an address to an owl by the heroine’s friend.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:  கொடுங்குரல் – curved clusters (millet), குறைத்த – reduced (by eating), செவ்வாய்ப் பைங்கிளி – oh red-beaked green parrot, அஞ்சல் ஓம்பி – remove your fear, ஆர்பதம் கொண்டு – take food, நின் குறை முடித்த பின்றை – once your need is satisfied, என் குறை – my need, செய்தல் வேண்டுமால் – you need to take care (வேண்டுமால் – ஆல் அசைநிலை, an expletive), கை தொழுது இரப்பல் – I plead to you with my palms pressed together, பல் கோள் பலவின் – with jackfruit trees with many fruit clusters, Artocarpus heterophyllus (கோள் = குலை), சாரல் – mountain slopes, அவர் நாட்டு – in his country, நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – if you reach your relatives, அம் மலை கிழவோற்கு – to the lord of that mountains, உரைமதி – please tell him (மதி – முன்னிலையசை, an expletive of the second person), இம் மலை – this mountain, கானக் குறவர் மட மகள் – the innocent daughter of the mountain dweller in the forest, ஏனல் காவல் ஆயினள் எனவே – she is in the millet field to protect it (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 103, மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே, புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப்,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்  5
பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே,
ஆள் வினைக்கு அகல்வாம் எனினும்,  10
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே.

Natrinai 103, Maruthan Ilanākanār, Pālai Thinai – What the hero said to his heart
I am sad to have come to this hot forest,
where a green-eyed, female wild dog is
hungry, her breasts skinny with no milk,       
her hunting mate with great pity thinking 
about her with sorrow as she lies flat,      
her stomach touching the ground wet with            
the urine of a strong male elephant in rut,            
that breaks the branches of neem trees with      
small leaves and parched trunks.    

Decide clearly and tell me, my heart,
whether we should go on to earn wealth
or return!

Choose one or the other and tell me what
you have decided!

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச் சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நீரல்லாத ஈரத்தில் செந்நாய்ப் பிணவு வருந்த, அதன் கணவனாகிய ஆண் நாய் சென்றவிடத்தில் தன் துணையைக்கருதி வருந்தும் என்பது, பிரிவின்கண் வருந்தும் தலைவனின் உள நிலையை உள்ளுறுத்திற்று.  ஒளவை துரைசாமி உரை – இக்கூற்றின்கண் ஆள்வினைக்கு அகல்வாம் என்ற கருத்தே முற்பட்டு நிற்றலின், பொருள்வயிற் பிரிந்த தலைவன் அதனை முடித்தல்லது மீளான் என அறிக.

Meanings:  ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே – decide clearly on one and tell me my heart (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – ruining big branches of neem trees with parched trunks and small leaves (சிறியிலை – சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), Azadirachta indica, கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின் களிறு – an arrogant enraged strong male elephant in rut with musth (கடாஅம் – இசைநிறை அளபெடை), நின்று இறந்த – stood and passed, நீரல் ஈரத்து – in the urine (நீர் அல் ஈரத்து, நீர் இல்லாத ஈரத்து, wetness without water, சிறுநீர்), பால் அவி தோல் முலை – skinny breasts with no milk, அகடு நிலம் சேர்த்தி – stomach placed flat on the land, பசி அட முடங்கிய – lying down in hunger distress, பைங்கண் செந்நாய் – wild dog with green eyes, cuon alpinus dukhunensis, மாயா – unspoilt, perfect, வேட்டம் போகிய கணவன் – husband that went hunting, பொய்யா மரபின் – in a truthful manner, in a manner of not failing, பிணவு நினைந்து இரங்கும் – he feels sorry thinking about his female, விருந்தின் – new to me, வெங்காட்டு – to the harsh forest, to the hot forest, வருந்துதும் – I am sad, யாமே – me (யாம் – தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive), ஆள் வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் – whether we have to go and earn wealth or go back, நீ துணிந்ததுவே – what is your resolution, tell me what you have decided (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 104, பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது  5
பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும்
ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும், உளர் கொல், பானாள்
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெருநீர்  10
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ்சிறு நெறி நினையுமோரே?

Natrinai 104, Pērisathanār, Kurinji Thinai – What the heroine said
I live desiring the chest of the man
from the uproarious mountains,
where a male tiger with a huge mouth
and pretty markings, fought with a bull
elephant on a honey-fragrant slope,
and children of mountain dwellers,
who have no fear of attaining sorrow,
climb on the top of boulders and beat
their small thondakam drums happily, 
their uproar chasing away parrots that
come to eat the red millet on green stalks.

Who but I will think about him, as he comes
on the difficult to see, narrow paths in the
middle of night, where snakes live in the
mountain crevices, lightning strikes and
thunder roars with rage breaking the peaks,
and flood waters flow on the blocking
mountains where there is no human traffic?

Notes:  தலைவி ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கிளிகள் தினையைக் கவரும் செயலைத் தொண்டகப் பறையொலி அலைக்கும்.  அது போல வேற்றவர் வரைவு நிகழினும் நிகழும் என உள்ளுறை பயின்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏற்றையும் களிறும் போர் செய்வதனைக் கண்ட குறுமாக்கள் எறிந்த பறை பாணி திணையிற் படியும் கிளியை ஓட்டும் என்றது, நம் பெருமானும் யாமும் ஒழுகும் களவொழுக்கம் புலப்பட்டுழி இவ்வூர் பெண்டிர் தூற்றும் அலரானே என்னாவி அகலும் என்பது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  பூம்பொறி உழுவை – a tiger with beautiful markings, a tiger with beautiful stripes, பேழ்வாய் ஏற்றை – a male with a gaping mouth, a male with a big mouth, தேம் கமழ் சிலம்பின் – on a honey fragrant mountain slope from honey in flowers, from honey combs (தேம் தேன் என்றதன் திரிபு), களிற்றொடு பொரினே – when it fought with a bull elephant (ஏ – அசைநிலை, an expletive), துறுகல் மீமிசை – on top of the boulders (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), உறுகண் அஞ்சாக் குறக் குறுமாக்கள் – arrogant mountain dwellers’ children who are brave and not afraid to attain sorrow, புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறு பறை – desiring and beating small thondakam drums, பாணி – sound, அயலது – nearby, பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் – chasing the parrots that come to eat the red millet/fine millet with green stalks, ஆர்கலி வெற்பன் – the man from the uproarious mountains, the lord of the mountains, மார்பு நயந்து உறையும் – desiring his chest and living, யானே அன்றியும் உளர் கொல் – who else but me, பானாள் – midnight, பாம்புடை விடர – with mountain crevices with snakes, ஓங்கு மலை – the lofty mountains, மிளிர – causing them to roll, உருமு சிவந்து எறியும் பொழுதொடு – at the time when lightning strikes shine red and thunder roars, பெருநீர் போக்கு அற – lot of flooding and no traffic, விலங்கிய சாரல் – blocking mountain slopes, நோக்கு அருஞ்சிறு நெறி – harsh small paths that are difficult to see, difficult narrow paths that are difficult to see, நினையுமோரே – those who think (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 105, முடத்திருமாறன், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ்வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த,
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்  5
அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேண்
பட்டனை, வாழிய நெஞ்சே, குட்டுவன்
குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டுபடு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.  10

Natrinai 105, Mudathirumāran, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!

You have come far crossing the
harsh, forked path where harsh winds
blow, and ilavam trees with thorns on
their trunks and dry vines encircling
them tremble, as their bright
branches break, and an elephant
walking with her calf in a forest
with bamboos is distressed, with no
water or shade in sight,

causing pain to the young woman
with delicate hair with the fragrances
of bee-swarming, large, dark petaled,
blue waterlily blossoms from
Kuttuvan’s western mountain springs!

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிடம் இகழ்ச்சிப்பட கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இலவ மரத்தின் கிளை முறியக் காற்று வீசும் என்பது நின் நினைவைக் கெடுக்கும்படியாகக் காமம் தலையெடுத்தது என்னும் பொருள் குறித்தற்காம். யானை கன்றோடு வருந்தும் நீரற்ற சுரம் என்பது தலைவன் தலைவியுடன் சேரும் நிலையைக் கருதி வருந்துதலை உரைத்தது.  வரலாறு:  குட்டுவன்.

Meanings:  முளி கொடி – dried creepers, வலந்த – surrounded, முள் – thorny, அரை – trunk, இலவத்து – silk-cotton tree’s, ஒளிர் சினை – bright branches, அதிர – to tremble, வீசி – blowing, விளிபட – breaking, வெவ்வளி – harsh winds, hot winds, வழங்கும் – blowing, moving, வேய் பயில் மருங்கில் – in a place with abundant bamboo, கடு நடை யானை – rapidly walking elephant, கன்றொடு வருந்த – sad with calf, நெடு நீர் அற்ற நிழல் இல் – no water or shade for a long distance, ஆங்கண் – there, அருஞ்சுரக் கவலைய – that it is the harsh wasteland’s forked paths, என்னாய் – you are not considering, நெடுஞ்சேண் பட்டனை – you have moved very far away, வாழிய நெஞ்சே – may you live long my heart, குட்டுவன் – the Chēra king, குடவரை – the western mountains, சுனைய – in the springs, மா இதழ்க் குவளை – dark leaf blue waterlilies, வண்டுபடு – bees swarming, வான் போது கமழும் – fragrance of bright flowers, fragrance of big flowers, அம் சில் ஓதி – woman with beautiful delicate hair (அன்மொழித்தொகை), அரும் படர் உறவே – to attain great pain (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 106, தொண்டைமான் இளந்திரையன், நெய்தற் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அறிதலும் அறிதியோ பாக, பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது,
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான் உள் நோய் உரைப்ப,  5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ் இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? 

Natrinai 106, Thondaimān Ilanthiraiyan, Neythal Thinai – What the hero said to his charioteer
Do you know, or do you not know,
oh charioteer,
about the confused mental state
of my beautiful woman in anguish?

When I went and told her about my
inner pain, she was unable to reply.
She plucked clusters of fragrant
flowers from a beautiful, low gnāzhal
tree branch along with tender sprouts,
and crushed and threw them down,
the peerless young woman who got
tired chasing striped crabs that play
in the fragrant heaps of sand brought
by the large ocean’s crashing waves.  

Notes:  வினைவயின் சென்ற தலைவன் அவ்வினையை முடித்துத் திரும்பும்பொழுது தேர்ப்பாகனிடம் உரைத்தது.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மலரையும் தளிரையும் உதிர்த்தவாறு தன் மனநிலையைக் காட்டினாள் தலைவி.  இம்மன்னன் எழுதிய பாடல் புறநானூறு 185.  பெரும்பாணாற்றுப்படை இவனுக்காக எழுதப்பட்டது, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவரால்.  அறிவு அஞர் உறுவி (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அறிவு மயக்கமுற்றவள்,  ஒளவை துரைசாமி உரை – என் அறிவுக்கு வருத்தத்தை உண்டுபண்ணினவள்.

Meanings:  அறிதலும் அறிதியோ பாக – do you know or do you not know oh charioteer, பெருங்கடல் எறி திரை – the large ocean’s crashing waves, கொழீஇய – brought and heaped (செய்யுளிசை அளபெடை), எக்கர் – sand dunes, வெறி கொள – being fragrant, ஆடு வரி அலவன் – playing crabs with lines/spots/patterns, ஓடு வயின் – wherever they run, ஆற்றாது – unable to keep up, unable to bear, அசைஇ உள் ஒழிந்த – tired and gave up (அசைஇ – சொல்லிசை அளபெடை), வசை தீர் குறுமகட்கு – to the faultless young woman, உயவினென் – I was sad, சென்று யான் உள் நோய் உரைப்ப – I went and told her about my inner affliction, மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் – she was not able to give a reply, நறு மலர் ஞாழல் – cassia sophera tree with fragrant flowers, புலிநகக்கொன்றை, tiger claw tree,  Cassia sophera,  அம் சினைத் தாழ் – beautiful low branch, இணர் – clusters, கொழுதி – plucked, முறி – sprouts, திமிர்ந்து உதிர்த்த கையள் – she crushed and threw with her hands, அறிவு – intelligence, thinking, அஞர் உறுவி – she is distressed and confused, ஆய் – beautiful, மட நிலையே – confused state (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 107, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்  5
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே, நல் வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி, நோய்ப்பாலேனே.  10

Natrinai 107, Unknown poet, Pālai Thinai – What the heroine said to her friend
I laugh whenever I think about it,
my friend!
Due to my past good actions,
my heart that worshipped my lover
has gone with him,
on a path where tigers roam,
pālai trees abound with clusters
of fruits that are like tongs, their white
branches fiberless since the barks are
torn by female elephants with big nails,
and passing winds shake the seed pods
of small-leaved ōmai trees, 
as they rattle with the loud sounds of
waterfalls that cascade down the mountains.

I remain here, lovesick and facing endless
slander, my friend!

Notes:  பிரிவிடை வருந்திய தலைவி தோழிக்குச் சொல்லியது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பிடி தலைவனாகவும், பாலை தலைவியாகவும், புலி அன்னை முதலியனோர் ஆகவும், அத்தம் தோழியாகவுங் கொண்டு, பிடி தோலைப் பொளித்துக்கொண்டது போலத் தலைவியின் நலத்தைத் தலைவன் பெற்றுண்டு போகலும் அந்தப் பாலையின் இலை தீர்ந்த நெற்று ஒலிப்பது போல நெஞ்சழிந்த தலைவி புலம்ப, அங்கிருந்த தோழி புலி வழங்குதல் போல அன்னை முதலானோர் இடையே இயங்கப் பெறுதலாலே தலைவியை தேற்றவும் இயலாதிருந்தனள் எனக் கொள்க.

Meanings:  உள்ளுதொறும் நகுவேன் தோழி – I laugh whenever I think about it oh my friend, வள் உகிர்ப் பிடி – female elephant with big nails, female elephant with thick nails, பிளந்து இட்ட – split and thrown, நார் இல் – no fiber, வெண்கோட்டு – white branches, கொடிறு போல் – like tongs, காய – unripe fruits, fruits, வால் இணர் – white bunches, பாலை – pālai tree, Ivorywood Tree, Wrightia tinctoria, செல் வளி தூக்கலின் – since the passing winds shake, இலை தீர் நெற்றம் – seed pods without leaves (நெற்றம் – அம் சாரியை), கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – roaring like the waterfalls that come down the mountain (அருவியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), புல் இலை ஓமைய – with ōmai trees with tiny leaves, with ōmai trees with dull leaves, Toothbrush Tree, Dillenia indica , புலி வழங்கு அத்தம் – tiger infested wasteland, சென்ற காதலர் வழி – the path of my lover, வழிப்பட்ட நெஞ்சே – the heart that adored him, the heart that followed him நல் வினைப் பாற்றே – enjoying the benefits of past good deeds, ஈண்டு ஒழிந்து – remaining here, ஆனாக் கௌவை மலைந்த யானே – me who is being slandered continuously (ஏ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, நோய்ப்பாலேனே – I am suffering from love affliction (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 108, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!  5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன்னகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்பத்
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே.

Natrinai 108, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the mountains
where people living in fine villages
shoot arrows, beat kinai drums, shoot
hand-made slingshots and make loud
noises, when a fierce male elephant
strays from its female and enters
their field to eat their dark colored millet! 

It hurts even if one is separated from
one’s enemies who were friends in the  
past.
How could you abandon contact with
the young woman with bud-like, bright
teeth and sweet smile, causing her
flame-like bright, beautiful forehead to
become pale?  I am sad!

Notes:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுகியதால் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாயது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஏனல் தலைவியாகவும், யானை தலைவனாகவுங் கொண்டு தினைப்புனத்துப் புகுந்து உண்ண வந்த யானையைக் கண்ட குறவர் அதனை ஒறுக்கும்படி படையினராய் ஆர்த்தல் போல, நீ களவொழுக்கத்துத் தலைவியை முயங்க வருவதைக் குறவர் அறிந்தால் நின்னை ஏதஞ் செய்யுமாறு படையினராய்ச் சூழ்ந்து கொள்வாராயின் வரைந்து எய்துக  என்பதாம்.

Meanings:  மலை அயல் – near the mountains, கலித்த – flourishing, மை ஆர் ஏனல் – dark colored millet, துணையின் தீர்ந்த – moved away from its partner, கடுங்கண் யானை – harsh elephant, அணையக் கண்ட – saw that it had come there, அம் குடி – beautiful settlement/village, குறவர் – mountain dwellers, கணையர் – men with arrows, கிணையர் – kinai drummers, கை புனை கவணர் – those who shoot hand-made slingshots, விளியர் – those who make loud noises, புறக்குடி – outside areas of the settlement/village, ஆர்க்கும் – they raise uproars, நாட – oh man from such country, பழகிய பகையும் பிரிவு இன்னாதே – even if one separates from those who were once friends and later enemies it is sad (ஏ – அசைநிலை, an expletive), முகை ஏர் இலங்கு எயிற்று – with bud-like bright teeth (ஏர் – உவம உருபு, a comparison word), இன் நகை மடந்தை – the young woman with a sweet smile, சுடர் புரை திரு நுதல் பசப்ப – flame-like beautiful forehead to become pale (புரை – உவம உருபு, a comparison word), தொடர்பு யாங்கு விட்டனை – how could you abandon contact with her, how could you let go of your relationship with her, நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 109, மீளிப் பெரும்பதுமனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
‘அன்னவோ இந்நன்னுதல் நிலை?’ என
வினவல் ஆனாப் புனை இழை! கேள் இனி!
உரைக்கல் ஆகா எவ்வம், இம்மென  5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர கழியும், இப் பகல் மடி பொழுதே.  10

Natrinai 109, Meeli Perumpathumanār, Pālai Thinai – What the heroine said to her friend
You ask me continuously why I
with a fine forehead, am worried
and confused since my lover with
whom I have an ancient friendship
left after telling me, “We are united
as one.  I will not part.”
Listen now!  Let me tell you why,
my friend wearing fine jewels!

When the loud northerly winds
blow as evening ends and darkness
sets in, I am alone and in despair,
like a cow tethered by the top of her
head, standing in a muddy stable   
where rainwater drips, not moved    
to be tied elsewhere.  

Notes:  பிரிவிடை ஆற்றாளாய தலைவியின் நிலைகண்ட தோழிக்குத் தலைவி சொல்லியது.  கூழை (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ச. வே. சுப்பிரமணியன் உரை – சேறு,  ஒளவை துரைசாமி உரை – குறிய, H.வேங்கடராமன் உரை – குறுமையான.

Meanings:  ஒன்றுதும் என்ற – that we are one, that we will not part, தொன்றுபடு நட்பின் காதலர் – my lover with whom I have an ancient relationship, அகன்றென – since he has left, கலங்கிப் பேதுற்று அன்னவோ – why am I worried and confused, இந்நன்னுதல் – this young woman with a lovely brow (நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), நிலை – situation, என – thus, வினவல் – questioning, ஆனா – endlessly, புனை இழை – oh one with fine jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கேள் இனி – listen now, உரைக்கல் ஆகா எவ்வம் – unable to state the limitless sorrow, இம்மென இரைக்கும் – comes with loud sounds (இம்மென – ஒலிக்குறிப்பு), வாடை இருள் கூர் பொழுதில் – when the northern winds blow when darkness comes, துளியுடைத் தொழுவின் – in the cow stable where rain drops fall, துணிதல் அற்றத்து – when it is not moved (துணிதல் அற்றம் – பெயர்த்து வேறு இடத்தில் கட்டும் காலம்), உச்சிக் கட்டிய – tied on its head or tied from the top, கூழை ஆவின் நிலை என – like a cow standing in mud, like the state of a short cow, ஒருவேன் ஆகி – I am left alone, உலமர – with distress, கழியும் இப் பகல் மடி பொழுதே – when this day time ends (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 110, போதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்  10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?

Natrinai 110, Pothanār, Pālai Thinai – What the heroine’s mother said
Her wise foster mothers with soft
white hair used to carry glowing, gold
bowls with sweet milk mixed with honey
and follow her.  They ran behind her to the
pavilion with raised, soft-topped, small
sticks, hit her, and urged her to drink.
My playful daughter’s golden anklets filled
with pearls from clear waters, jingled as she
jumped and ran away, refusing the milk
they brought.

Her husband’s family has grown poor now.
She does not think about the rich rice her
father gave.  Like fine sand in flowing water
that gets irregular water flow, my daughter
with some strength, eats every now and then.

How did she become so disciplined and
intelligent now?

Notes:  1.  நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி வருந்தி உரைத்தது.  2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரிய ஆகும் என்ப’ (தொல்காப்பியம், கற்பியல் 12) என்பதன் உரையில் ‘ஆகும்’ என்றதனாலே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவும் கொள்க என்று கூறி, இப்பாட்டைக்காட்டி ‘இது மனையறம் கண்டு மருண்டு உவந்து கூறியது’ என்றும், ‘சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையும் சிறப்பொடு வருமே’ (தொல்காப்பியம், பொருளியல் 49) என்பதன் உரையில் இதனைக்காட்டி, ‘இது குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (1) – நற்றிணை 110 – பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் – ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பால், H.வேங்கடராமன் உரை – தேனை கலந்தாற்போன்ற நல்ல சுவையை உடைய இனிய வெள்ளிய பால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பால்.  பூந்தலை (3) – ஒளவை துரைசாமி உரை – மென்மையான நுனி, H.வேங்கடராமன் உரை – பூக்களைத் தலையிலே கொண்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பூவொத்த மெல்லிய நுனி.  புறநானூறு 248 – பொழுது மறுத்து இன்னா வைகல் உண்ணும், புறநானூறு 399 – பொழுது மறுத்துண்ணும் உண்டியேன்.

Meanings:  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் – sweet white milk mixed with honey, sweet white milk that is like mixed with honey, விரி – wide, கதிர் – bright,  sparkling, பொற்கலத்து ஒரு கை ஏந்தி – carrying a gold bowl in one hand, புடைப்பின் – on the ends, சுற்றும் – tied around, பூந்தலை – delicate top, top with flowers, சிறு கோல் – small sticks, உண் என்று ஓக்குபு – raising and saying ‘eat’, புடைப்ப – hitting, தெண் நீர் – clear water, முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – pearl filled gold anklets jingling, தத்துற்று – jumping, அரி நரைக் கூந்தல் – intermittent white hair, soft white hair, செம்முது செவிலியர் – wise old foster mothers, பரி மெலிந்து ஒழிய – unable to run behind, becoming tired and unable to run, பந்தர் ஓடி – run to the pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – young girl who played a little refusing commands, அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல் – how did she become intelligent and disciplined, கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – since she became aware that her husband’s family became poor (உற்றென – அடைந்ததாக), கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் – she does not think about the rice her father gave, ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – like the fine sand under flowing water, பொழுது மறுத்து உண்ணும் – refuses and eats irregularly, சிறு மதுகையளே – the young woman with some strength (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 111, பாடியர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,
வரி வலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்,
மரன் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குத்,  5
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி, கொண்கன் தேரே.  10

Natrinai 111, Unknown Poet, Neythal Thinai – What the heroine’s friend said to her
Your lover will come in his chariot,
with uproar, to the seaside town near the
backwaters, where children of hard-working
fishermen take their tightly tied nets to catch
many kinds of fish and prawns with tender
heads that look like the iruppai flowers in the
wasteland.

They are like the strong youngsters who
climb on trees with the desire to block
deer herds.

They climb on their boats and brave the
salty waves, bring bountiful catches of  
fatty fish and sword-mouthed sharks, and
cut them and spread the flesh on the sand
brought to the shore by the waves.

Notes:  தலைவனின் பிரிவால் தலைவி வருந்தியதை அறிந்த தோழி, அவன் வருவதற்கு அறிகுறியாகிய நல்ல நிமித்தம் தோன்ற, தலைவியை ஆற்றியிருக்குமாறு கூறியது.  மான் கணம் தகைமார் (4) – ஒளவை துரைசாமி உரை, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தடுக்கும் பொருட்டு, H.வேங்கடராமன் உரை – பிடிக்கும் பொருட்டு.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சிறார் மீனினங்களைக் கொண்டு வந்து பரப்புவது போலத் தலைவன் வேற்று நாட்டில் பெற்ற பொருளையெல்லாம் கொண்டு வந்து இல்லத்தை நிறைப்பான் என்ற பொருள் தோன்ற நின்றது.

Meanings:  அத்த – of the wasteland, இருப்பைப் பூவின் அன்ன – like iruppai flowers, Indian Butter Tree, South Indian Mahua (பூவின் – இன் சாரியை), துய்த்தலை – delicate heads, fuzzy heads, இறவொடு – with shrimp, தொகை – together, மீன் பெறீஇயர் – to get other fish (பெறீஇயர் – சொல்லிசை அளபெடை), வரி வலை – tied nets, பரதவர் கருவினைச் சிறாஅர் – fishermen children with great effort (சிறாஅர் – இசைநிறை அளபெடை), மரன் மேற்கொண்டு – climbing on trees (மரன் – மரம் என்பதன் போலி), மான் கணம் தகைமார் – to block deer herds, to catch deer herds, வெந்திறல் இளையவர் – very strong youngsters, வேட்டு எழுந்தாங்கு – like how they rose up with desire, திமில் மேற்கொண்டு – climb on boats, திரைச் சுரம் நீந்தி – go on the ocean with waves, வாள்வாய்ச் சுறவொடு – along with sharks with sword-like mouths, வய மீன் கெண்டி – cutting up strong fish that they catch (கெண்டி – வெட்டி), நிணம் பெய் தோணியர் – they bring the fatty flesh in boats, இகு மணல் இழிதரும் – bring it down to the eroding sand, பெருங்கழிப் பாக்கம் – big seaside village near the backwaters, கல்லென வருமே – it will come with loud sounds, தோழி – my friend, கொண்கன் தேரே – the chariot of the lord of the seashores (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 112, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விருந்து எவன் செய்கோ தோழி, சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி,  5
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னிச்,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

Natrinai 112, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
What kind of reception can we
give the rain clouds, my friend?

Knowing that he is returning,
with desire, they absorb water
from the big ocean, come down
as heavy rain, sapphire-colored
waterfalls flow down, the vast
land is covered with flood water,
lightning is accompanied by roaring
thunder, making mountain peaks
appear like they are blinking.
In the mountain slopes all the
flower buds have opened, buzzing
bees swarm the blossoms of vēngai
trees with dark colored trunks, and  
bold lions that kill bull elephants
roam around causing distress.  

Notes:  பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கைகோள் (தலைவன் தலைவியின் கனவு கற்பு ஒழுக்கம்) இரண்டுக்கும் (களவு, கற்பு) பொது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவத்தே மீண்டு வருவேன் என்று கூறி பிரிதல் களவிற்கு ஏலாமையின் இதற்கு கைகோள் கற்பு என்றே கொள்க.  இரண்டற்கும் பொதுவெனல் பொருந்தாமை உணர்க.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மலை புலம்புமாறு களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் என்றது, உன் பசலை கெடுமாறு உனக்குண்டாகிய காம நோயைப் போக்கி உன்னைப் பலகாறும் தலைவன் தழுவுவான் என்றுக் காட்டி நின்றது.  ஒளவை துரைசாமி உரை – பெய்த நீர் பள்ளத்தே சென்று தங்குதல் இயல்பாகலின், தாழ் நீர் நனந்தலை அழுந்துபட என்றும் கூறினாள்.  பொருளின்மையால் தாழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் இரவலர் கூட்டத்துக்கும் ஈட்டி வரும் செல்வத்தை ஈந்து வாழ்விக்கும் தலைமகனது ஏற்றம் இதனால் சுட்டியவாறு.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  விருந்து எவன் செய்கு – what kind of celebration can we give (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, தோழி – oh friend, சாரல் – mountain slopes, அரும்பு அற மலர்ந்த – all the buds have opened, கருங்கால் வேங்கை – kino trees with sturdy/big/dark-colored trunks, Pterocarpus marsupium, சுரும்பு – honeybee, இமிர் – buzzes, அடுக்கம் – mountain range, புலம்ப – to be distressed, to fear, களிறு அட்டு – kills elephants, உரும்பு இல் உள்ளத்து – with minds without fear, அரிமா வழங்கும் – lions roam, பெருங்கல் நாடன் – the  lord of the country with huge mountains, வரவு அறிந்து விரும்பி – knowing his return and with desire, மாக் கடல் முகந்து – absorbing water from the huge/dark ocean, மணி நிறத்து அருவி – the sapphire colored waterfalls, தாழ் – flowing down, நீர் – water, நனந்தலை – huge land, அழுந்துபட – to be hidden by the flood, பாஅய் – it spread (இசை நிறை அளபெடை), மலை இமைப்பது போல் – as though the mountain is blinking, மின்னி – causing lightning, சிலை – noise, வல் ஏற்றொடு – with heavy thunder, செறிந்த – mixed, இம் மழைக்கே – to these rain clouds (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 113, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங்காடு இறந்தும், எய்த வந்தனவால்,
‘அருஞ்செயல் பொருட்பிணி முன்னி, யாமே  5
சேறும் மடந்தை!’ என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்,
பின் இருங்கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்  10
ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே.

Natrinai 113, Ilankeeranār, Pālai Thinai – What the hero said
I said to her, “Young woman,
I’m leaving desiring to earn
precious wealth.”  Her eyes 
resembling waterlilies became
distressed, and she hid her face
with her dark, spreading hair.
Her cries were like the music
of flutes playing āmpal tunes,
played loudly by musicians
in King Uthiyan’s battlefield.

The distressed looks of my pining
and confused lover have come here
to me, crossing small paths with
pebbles, where deer lift their
heads and eat fresh, fleshy jujube
fruits from the bent, tall branches
of trees with dull colored trunks.  

Notes:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றானாகி உரைத்தது.  புறநானூறு 143 – முலையகம் நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே.  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனத் தொடங்கும் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ தலைவன் நிகழ்த்தும் கூற்றுக்கு இதனைக் காட்டி, இஃது உருவு வெளிப்பட்டுழிக் கூறியது’, என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இலந்தை மானினத்தால் உண்ணப்பட்ட நிலையிலும் பாலை வழியில் கனிகள் பலவற்றை உதிர்க்கும் என்றது, தலைவி பசலையால் துன்புற்று நலன் உண்ணப்பட்டிருப்பினும் தலைவன் சென்ற அளவில் மிக்க இன்பம் தருவாளாய் விளங்குவாள் எனக் குறித்து.  வரலாறு:  உதியன். கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  உழை அணந்து உண்ட – deer looked up and ate, இறை – bent, வாங்கு உயர் சினை – curved tall branches, புல் அரை இரத்தி – malai ilanthai, jujube fruit trees with thin trunks, jujube fruit trees with dull colored trunks, jujube fruit trees with parched trunks, Ziziphus jujube,  பொதிப் புற – fleshy sides, பசுங்காய் – fresh fruits, கல் சேர் சிறு நெறி – small path with stones, narrow path with stones, மல்க – lot, தாஅம் – spread (இசைநிறை அளபெடை), பெருங்காடு இறந்தும் – passing through huge forests, எய்த வந்தனவால் – they have come to me (வந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive), அருஞ்செயல் – difficult task, பொருட்பிணி முன்னி – desiring and going to earn precious wealth, யாமே – I (யாம் – தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive), சேறும் – I am leaving, தன்மைப் பன்மை, first person plural, மடந்தை – oh young woman, என்றலின் – since I said that, தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூர – her waterlily blossom like eyes became very sad, பின் இருங்கூந்தலின் மறையினள் – she hid her face in her braided dark hair, பெரிது அழிந்து – ruined greatly, உதியன் – a Chēra king, மண்டிய – went, ஒலிதலை ஞாட்பின் – in the battlefield where loud sounds are heard, இம்மென் பெருங்களத்து – in the loud huge battle field (இம்மென் – ஒலிக்குறிப்பு), இயவர் ஊதும் ஆம்பல் – āmpal tunes that musicians play, அம் குழலின் – like the music of beautiful flutes (குழலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஏங்கி கலங்கு அஞர் உறுவோள் – she who was pining and confused and worried, புலம்பு கொள் நோக்கே – the painful looks (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 114, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவஞ் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
அளிதோ தானே தோழி, அல்கல்  5
வந்தோன் மன்ற குன்ற நாடன்,
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்,
ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி,  10
மையின் மடப் பிடி இனையக்
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

Natrinai 114, Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Thunder that ruins the beauty of snakes,
hits the mountains and kills a male elephant
that places his trunk on the ground as he
walks down, much to the sorrow of his dark-
colored naive female.

Our small village streets are reeking with
flesh as they remove his tusks and place
them on wide boulders and remove the huge
toe nails from the flesh, to bury them.
I was sad, listening to the sounds during the
night.

It is pathetic, my friend, that the lord of the
lofty mountains came during the night, when
it rained.  I am afraid of the flooding river
whose tall waves crash against its ancient banks
that have been eroded by the rains.

Notes:  தலைவி கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி உரைத்தது.  ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் உரைத்தது. வரைவு கடாயது.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஈர்ங்குரல் (9) – ஒளவை துரைசாமி உரை – குளிர்ந்த மலை ஒலி, H.வேங்கடராமன் உரை – ஈரிய ஒலி.

Meanings:  வெண்கோடு கொண்டு – taking the white tusks, வியல் அறை வைப்பவும் – placing them on wide boulders, பச்சூன் கெண்டி – cutting and removing the flesh (பச்சூன் = பசுமை + ஊன், கெண்டி – வெட்டி), வள் உகிர் – big/strong nails, முணக்கவும் – and burying, மறுகுதொறு – in all the streets, புலா அம் சிறுகுடி – flesh-reeking small village (அம் – சாரியை), அரவம் வைகி கேட்டுப் பையாந்திசினே – staying and listening to the sounds at night I was sad (சின் – தன்மை அசை, an expletive of the first person, ஏ – அசைநிலை, an expletive), அளிதோ – it is pitiable (ஓ – அசைநிலை, an expletive), தானே – தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, தோழி – oh friend, அல்கல் வந்தோன் – he came at night, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, குன்ற நாடன் – the man from the mountains, துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை – ancient shores that have marks from rains, பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் – I was afraid of the river whose tall waves crash against the banks (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), ஈர்ங்குரல் உருமின் – rain sounds roaring, splitting sounds roaring, ஆர்கலி நல் ஏறு – very loud roaring thunder, பாம்பு கவின் அழிக்கும் – that ruins the beauty of snakes, ஓங்கு வரை – the tall mountains, பொத்தி – crashed, வைகி – staying, மையின் மடப் பிடி – dark-hued naive female elephant, இனைய – to be sad, கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – killed the male elephant that places his trunk on the ground and comes down (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 115, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்
தடங்கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி  5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழக்,
கார் எதிர்ந்தன்றால் காலை; காதலர்
தவச் சேய் நாட்டர் ஆயினும், மிகப் பேர்
அன்பினர், வாழி தோழி, நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்,  10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

Natrinai 115, Unknown Poet, Mullai Thinai – What the heroine’s friend said to her
Our friends who grew tired of plucking
flowers from the huge pond, closed
their eyes and slept sweetly, since
my mother calmed down and sighed.

The season’s rains have arrived,
and our house nochi tree with leaves
like that of peacock legs, has put out
clusters of dark blossoms.  The jasmine
vines have also yielded flowers.

Even though he is in a very distant land,
your lover is a greatly kind man.
May you live long, my friend!
He will not stay there even if he achieves
endless great fame.

Did I not hear the rumblings of the
clouds in the sky?

Notes:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மனையில் நட்ட மௌவல் நொச்சிமேற் படர்ந்து மலர்வது கூறியது, இம்மனைக்கண் வளர்ந்த நீ தலைவனை மணந்து இன்புறுவாய் என்ற கருத்தை உள்ளுறுத்து நின்றது.  கார் எதிர்ந்தன்றால் காலை (7) – ஒளவை துரைசாமி உரை – காலை கார் எதிர்ந்தன்று, காலமும் கார்ப்பருவத்தைச் செய்யாநின்றது.  கேட்டிசின் (11) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கேட்டேன், ஒளவை துரைசாமி உரை – கேட்கின்றேன், H.வேங்கடராமன் உரை – கேட்பாயாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நான் கேளா நின்றேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  மனைநடு (6) –  ஒளவை துரைசாமி உரை – மனையிடத்து நட்டிய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இல்லின் நடுமுற்றத்தில். தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  மலர்ந்த பொய்கை – wide pond, huge pond, பூக் குற்று அழுங்க அயர்ந்த ஆயம் – friends who got very tired after plucking flowers, கண் இனிது படீஇயர் – to close their eyes sweetly and sleep, அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – and mother also calmed down a little and sighed, இன் நீர்த் தடங்கடல் வாயில் உண்டு – drinking the sweet water of the wide ocean, சில் நீர் என – made it to appear small, மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி – nochi tree with dark colored clusters of flowers and leaves that look like peacock feet, Vitex leucoxylon, Chaste tree, water peacock’s foot tree, மனை நடு மௌவலொடு – along with jasmine vines planted in the house, along with jasmine vines growing in the central courtyard of the house, wild jasmine, Jasminum angustifolium, ஊழ் முகை அவிழ கார் எதிர்ந்தன்றால் காலை – the rainy season came for the mature buds to accept the water and bloom at their usual time (எதிர்ந்தன்றால் – எதிர்ந்தன்று, ஆல் அசைநிலை, an expletive), காதலர் தவச் சேய் நாட்டர் ஆயினும் – even though your lover is in a very distant land, மிகப் பேர் அன்பினர் – he is a very kind man, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நன் புகழ் உலப்பு இன்று பெறினும் – even if he gets endless fine fame there (உலப்பு – ஒழிபு), தவிரலர் – he will not stay away, கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – did I not hear their sounds in the sky, I heard their sounds in the sky (கேட்டிசின் – சின் – தன்மை அசை, an expletive of the first person, தகவே – ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 116, கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ,
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்  5
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த  10
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே.

Natrinai 116, Kantharathanār, Kurinji Thinai – What the heroine said to her friend
The lord of the mountain country,
……….where a naive female elephant
……….ignorantly grazed on succulent,
……….spear-blade shaped sprouts of large
……….bamboo, causing the fetus in her
……….womb to slip out in late pregnancy,
has gone far away, and my friendship
with him is lost, like a ripe jackfruit that
abandoned a dark tree branch and fell
down into a mountain crevice and broke. 

Not knowing that, the women who live
in the mountain ranges with dark caves,
have not stopped their gossips about me.

The wise say, “One should understand and
know, even of those whose evil can be seen!”

Notes:  வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைவி, ‘பொறுத்திரு’ என்ற தோழியிடம் கூறியது.  ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘அருமை செய்து அயர்ப்பினும்’ என்பதற்கு இப்பாட்டைக்காட்டி, தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின், நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலும் என அவ்விரண்டும் கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சூல் முற்றிய பிடியானை மூங்கில் முளையைத் தின்றால் தனது சூல் கெட்டுப் போகும் என்பதை அறியாது அதனைத் தின்று சூல் கெட்டு வருந்தும் என்பது, நாண் முதலியவற்றால் மேம்பட்ட தலைவி அறியாமல் அவனுக்கு இசைந்ததால் அலர் எழுந்து அவளுடைய நலத்தைக் கெடுத்தது என்பதை உணர்த்திற்று.

Meanings:  தீமை கண்டோர் திறத்தும் – even when evil in people is seen, பெரியோர் தாம் அறிந்து உணர்க என்ப – elders say one should know and feel, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, வழுவ – to slip, பிண்டம் – fetus, நாப்பண் – in the middle, ஏமுற்று – ignorantly, confused, இரு வெதிர் ஈன்ற – tall bamboos yielded, வேல் தலைக் கொழு முளை – thick sprouts that are the shape of spear blades, சூல் முதிர் மடப் பிடி – advanced pregnancy naive elephant, நாள் மேயல் ஆரும் – grazes during the day (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு), மலை கெழு நாடன் கேண்மை – friendship with the lord of the mountain-filled country, பலவின் மாச் சினை துறந்த – abandoning a large/dark tree branch of a jackfruit tree, Artocarpus heterophyllus, கோள் முதிர் பெரும் பழம் – rounded/clustered large ripe fruit, விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு – like how it fell into a mountain crack and shattered (விடர் அளை – இருபெயரொட்டு , உக்காஅங்கு – இசைநிறை அளபெடை), தொடர்பு அறச் சேணும் சென்று – cut off relationship and went far away, உக்கன்றே – it dropped, it fell down, (ஏ – அசைநிலை, an expletive), அறியாது – not knowing, ஏ கல் அடுக்கத்து – huge/tall mountain ranges, இருள் முகை இருந்த – with dark caves, குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் – women from the mountains, women from the kurinji land, இன்னும் ஓவார் – they still have not eliminated, என் திறத்து அலரே – gossip that arises because of me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 117, குன்றியனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் முழங்க, கானல் மலர
இருங்கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்பப் புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரச்,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்  5
கல் சேர்பு நண்ணிப், படர் அடைபு நடுங்கப்,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென், வாழி தோழி, என் கண்
பிணி பிறிதாகக் கூறுவர்,  10
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.

Natrinai 117, Kundriyanār, Neythal Thinai – What the heroine said to her friend
May you live long, oh friend!
The huge ocean roars,
the grove is dense with flowers,
the backwater floods flow near
our house, flowing to the brim,
big-petaled waterlilies have
closed, birds have reached their
nests in flower-fragrant groves,
and the sun’s red, curved rays
have faded and it has reached the
hills causing sorrow and trembling
in this lonely, painful evening time.

I will not live for more than a few
days if he does not think about me.
They say that my sorrow is because
of something else.  Their accusation
is not right.  They are not fair!

Notes:  வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைவி, தேற்றிய தோழியிடம் கூறியது.  சிறைப்புறமுமாம்.  பிணி பிறிதாகக் கூறுவர் (10) – முருகு அணங்கியதால் வந்ததாகும் என்று ஊரிலுள்ளார் கூறுவர்.  பண்புமார் அன்றே (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அயலார் கூறுதல் பண்புடையது அன்று, ஒளவை துரைசாமி உரை – காதலன் பொருட்டு வேட்கை நோய் உண்டாவது நமக்குப் பண்பாகாது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  பெருங்கடல் முழங்க – the huge ocean roars, கானல் மலர – the grove is full of flowers, இருங்கழி ஓதம் – backwater flood water, இல் இறந்து – pass our house, மலிர – flowing full, வள் இதழ் நெய்தல் – blue or white waterlilies with big petals, கூம்ப – closing, புள் உடன் கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர – birds reach their nests in the flower-fragrant groves, செல் சுடர் – moving rays of the sun, மழுங்க – to fade, சிவந்து – reddened, வாங்கு – curved, மண்டிலம் – sun, கல் சேர்பு நண்ணி – reached the mountains, படர் அடைபு நடுங்க – attaining sorrow that has caused trembling, புலம்பொடு வந்த – came with loneliness, புன்கண் மாலை – painful evening,  அன்னர் உன்னார் – if he does not think about me, கழியின் – if they pass, பல் நாள் – many days, வாழலென் – I will not live, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, என் கண் பிணி பிறிதாகக் கூறுவர் – they say my sorrow is because of something else (afflicted by Murukan, முருகனின் அணங்கினால்), பழி பிறிது ஆகல் – their accusation is not proper, பண்புமார் – character, good culture (மார் – அசைநிலை, an expletive), அன்றே – it is not (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 118, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அடைகரை மாஅத்து அலங்கு சினை ஒலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என,  5
இணர் உறுபு உடைவதன் தலையும், புணர் வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திப்,
புது மலர் தெருவுதொறு நுவலும்  10
நொதுமலாட்டிக்கு, நோம் என் நெஞ்சே.

Natrinai 118, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine said to her friend
I am sad whenever I hear a red-eyed,
black cuckoo and her mate sing to
each other, in the cool, fragrant,
beautiful grove on the sandy shore
with mango trees with sprouts on the
dense branches.
He left us when there were abundant
flowers.  I am sad that he forgot me.

Also, my heart aches, when I see the new
flower vendor, as she calls out and sells
on all the streets, new, white-petaled
pāthiri flowers, swarmed by bees,
their red fuzzy tops looking like bright,
paint-filled brushes of skilled artists.

Notes:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி கூறியது.  குறுந்தொகை 147 – வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  அடைகரை – on the sand-filled shore, on the water-filled shore, மாஅத்து அலங்கு சினை – swaying branches of mango trees (மாஅத்து – அத்து சாரியை), ஒலிய தளிர் – thriving sprouts, கவின் எய்திய – attained beauty, தண் நறும் பொதும்பில் – in the cool fragrant groves, சேவலொடு கெழீஇய – united with its male, together with its male (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), செங்கண் இருங்குயில் – red-eyed black kuyil, cuckoo, புகன்று எதிர் ஆலும் – sing to each other with desire, பூ மலி காலையும் அகன்றோர் – the one who left when there were abundant flowers, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நம் மறந்திசினோர் என – that he forgot me (நம் – தன்மைப் பன்மை, first person plural), இணர் உறுபு – with abundant clusters, with falling clusters, உடைவதன் தலையும் – on top of feeling very sad, புணர் வினை ஓவ மாக்கள் – painters with trade skill, ஒள் அரக்கு – bright red colored vermilion paint, ஊட்டிய – தோய்த்து எடுத்த, dipped and filled with paint, துகிலிகை அன்ன – brush-like, துய்த் தலைப் பாதிரி – fuzzy-topped trumpet flowers, Stereospermum chelonoides, வால் இதழ் அலரி – large/white petaled flowers, pathiri, flowers, trumpet flowers, வண்டு பட ஏந்தி – carrying flowers on which bees swarm, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு – for the new lady who calls out and sells new flowers in all the streets, நோம் என் நெஞ்சே – my heart aches (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 119, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
இன் முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்  5
பல் மலர்க் கான்யாற்று உம்பர், கருங்கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்,  10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

Natrinai 119, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said about the heroine, as the hero listened nearby
The man from the mountain,
……….where a farmer places a big rock
……….trap with a small device to catch a boar
……….that comes to eat his millet, only to find
……….a bright colored, strong tiger get trapped,
has come back with love, wearing a garland on his
head, woven with kulavi and koothalam flowers,
but he will not receive her embraces, even
if his sulking is larger than his mountain, where
a sweet, big male langur monkey eats fine food
in a grove beyond a stream with many flowers,
and big stag herds leap and romp around with
mountain goats, in the towering mountain shade.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டமையும் வேற்று வரைவு நேர்ந்தமையும் அறிவுறுத்தி வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் காப்பும்’ (தொல்காப்பியம், பொருளியல் 15) எனத் தொடங்கும் நூற்பா உரையில், இதனைக் காட்டி, ‘இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.    விலங்கைப் பிடிக்கும் பொறி: மலைபடுகடாம் 193-194 – கேழல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய இருங்கல் அடாஅர், நற்றிணை 119 – தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர், புறநானூறு 19 – இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும்.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – படப்பைக்கண் முசுக்கலை நாண் மேயல் ஆர, கருங்கலை வருடையொடு தாவுவன உகளும் என்றதனால், தலைவியை வரைந்து கொண்டு தலைமகன் இன்புறக் கண்டு தாயாரும் தமரும் ஆயமும் பிறரும் மகிழ்ச்சி மலியக் கடவர் என்பது உணர்த்தி, அது நினையாது ஒழுகுதலால் முயங்கல் பெறுவனல்லனாயினான் எனத் தோழி கூறுவாளாயிற்று.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பன்றிக்கென வைத்த பொறியில் புலி அகப்படும் என்றது இத்தலைவன் மணம் புரியத் தாமதிப்பதால் இவனினும் சிறந்த ஒருவன் தலைவியை ‘நொதுமலர் வரைவாய்’ மணம் புரிய வேண்டி வந்தனன் என்பதைக் குறித்தது.

Meanings:  தினை உண் கேழல் – a pig that eats millet, இரிய – wanders, புனவன் சிறு பொறி மாட்டிய – small trap device that the mountain farmer places, பெருங்கல் – big rock, boulder, அடாஅர் – trap (இசை நிறை அளபெடை), ஒண் கேழ் வயப் புலி படூஉம் – bright colored strong tiger gets trapped (படூஉம் – இன்னிசை அளபெடை), நாடன் – man from such country, ஆர் தர வந்தனன் ஆயினும் – even if he came to give his love, படப்பை – grove, இன் முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும் – a sweet big male monkey eats well (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு), langur monkey, Semnopithecus priamus, பல் மலர்க் கான் யாற்று – of the forest stream with many flowers, உம்பர் – beyond, கருங்கலை – big stag (கருமை – பெருமை), கடும்பு – relatives, herd, ஆட்டு வருடையோடு தாவன உகளும் – romp around with mountain goats, பெருவரை நீழல் – in the huge mountain shade (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), வருகுவன் – when he comes, குளவியொடு கூதளம் – wild jasmine and koothalam woven together, Convolvulus ipome, a three-lobed nightshade vine, ததைந்த – tied together tightly, கண்ணியன் – man wearing a flower strand on his head, யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் – he will not get even a little bit of embraces, புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – even if his sulking is larger than his mountain let him sulk (கொளீஇயர் – சொல்லிசை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 120, மாங்குடி கிழார், மருதத் திணை – தலைவன் சொன்னது
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செவி பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ,  5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில்தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை,
எமக்கே வருகதில் விருந்தே, சிவப்பு ஆன்று  10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

Natrinai 120, Mānkudi Kizhār, Marutham Thinai – What the hero said
Buffalo calves with curved horns
and delicate walk, are tied to all the
pillars in our house, so fine to behold.

The naive woman with curved earrings
on her lovely ears and small rings on her
delicate fingers that become red cutting
vālai fish to pieces, cooks when I arrive,
as smoke from the stove attacks her upset
eyes, and small beads of sweat spread on
her pretty, crescent-moon forehead which
she wipes with her pretty sari end.

May guests come!  If they arrive, the
anger of the beautiful, dark woman will
subside.  We will see her delicate, smiling
face with small, sharp teeth.

Notes:  பரத்தையிற் பிரிந்த தலைவன் விருந்தினரோடு புகுந்தான்.  தலைவி ஊடலை மறைத்து விருந்து பேணினாள்.  அது கண்ட தலைவன் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும் ‘நன்னெறிப் படரும் தொல் நலப் பொருளின்’ கண் நிகழும் தலைவன் கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் ஊடற் குறிப்பினாளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று’ என்பர் இளம்பூரணர்.  இனி, நச்சினார்க்கினியர், ‘இது விருந்தோடு புக்கோன் கூற்று, செவிலி கூற்றுமாம்’ என்று சொல்லி, இந்நற்றிணை வாளை ஈர்ந்தடி வகைஇ என்றலின் வேளாண் வருணமாயிற்று’ என்பர்.  குழவி (1) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  அட்டிலோளே (9) – ஒளவை துரைசாமி உரை – செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று.

Meanings:  தட மருப்பு எருமை – big/curved horned buffalo, மட நடைக் குழவி – calves with delicate walk, தூண்தொறும் யாத்த – tied to all the pillars, காண்தகு நல் இல் – a lovely fine house,  கொடுங்குழை பெய்த செழுஞ்செவி பேதை – naive woman wearing curved earrings on her lovely ears, சிறு தாழ் செறித்த மெல் விரல் – delicate fingers wearing small ring, சேப்ப – to become red, வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ – capably chopped and portioned the big pieces of vālai fish to eatable size, Trichiurus haumela (வகைஇ – சொல்லிசை அளபெடை), புகை உண்டு அமர்த்த கண்ணள் – her differing eyes are hit by smoke, her upset eyes are hit by smoke, தகை பெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் – small beads of sweat are on her esteemed/beautiful crescent moon like forehead, அம் துகில்தலையில் துடையினள் – she wiped with her beautiful garment/sari end (முந்தானை), நம் புலந்து – sulking with me (நம் – தன்மைப் பன்மை, first person plural), அட்டிலோளே – she who cooks, அம் மா அரிவை – the beautiful dark young lady, எமக்கே – for me, வருக – may they come, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle which implies desire, விருந்தே சிவப்பு ஆன்று – if guests come her anger will subside, சிறு முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே – we will see her smiling face with small sharp teeth (காண்கம்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 121, ஒரு சிறைப் பெரியனார், முல்லைத் திணை – தேர்ப்பாகன் தலைவனிடம் சொன்னது
விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே;  5
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல், வாழ்க நின் கண்ணி! காண்வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயல்
கான் யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய,  10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத்தோள் துயில் அமர்வோயே.

Natrinai 121, Oru Sirai Periyanār, Mullai Thinai – What the charioteer said to the hero
In the fine forest town where your
beloved lives, farmers planted rows
of seeds in the dust-filled, cleared
old land.  Lovely female deer live
with their mates and eat
the forked millet spears growing
on plants with fresh grass blades.

You tell me that the king has
permitted you to leave last night.
Do not worry.  Long live your garland!

You desire to sleep peacefully on the
delicate, curved, bamboo-like arms
of your wife who is
preparing a special feast for you.

I’ll ride fast this chariot hitched with
fast-trotting proud horses with lovely
wide plumes and go past forest rivers
swollen by cool rains, whose banks are
eroded, so that you can go and see her.

Notes:  வினை முற்றி மீளும் தலைவனிடம் தேர்ப்பாகன் கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கவைக் கதிரைத் தின்ற பெண் மான், காட்டில் ஆண் மானுடன் தங்கும் என்றது, நின் செல்வத்தைத் துய்க்கும் தலைவி நின்னுடன் கூடி மனையிலே இன்புற்று வாழ்வாள் என்பதனைக் குறித்தது.  அரலை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மரல் விதை, ஒளவை துரைசாமி உரை – அரலி என்னும் கள்ளி, மரல் வித்துமாம், அகநானூறு 309 – இலவத்து அரலை (இலவ விதை), மலைபடுகடாம் 139 – புண் அரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி.  காண்வர (7) – ஒளவை துரைசாமி உரை – அழகிதாக, H.வேங்கடராமன் உரை – காட்சி வரும்படியாக. பிறக்கு (10) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைநிலை இடைச்சொல், ஒளவை துரைசாமி உரை – பின்னால். அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  விதையர் – those who dug holes and put seeds in them, கொன்ற – the trees they chopped and cleared the land, முதையல் – old land, பூழி – dust, இடு  முறை – perfectly, நிரப்பிய – filled with seeds, ஈர் இலை வரகின் – of millet with split fresh blades/leaves, கவைக் கதிர் – forked spears, கறித்த – ate, காமர் – beautiful, desirable, மடப் பிணை – female deer, அரலை அம் காட்டு – beautiful forest that has been seeded, beautiful forest with hemp seeds, beautiful forest with cacti, இரலையொடு வதியும் – it lives with its male, புறவிற்று – it is in this forest, அம்ம – அசைநிலை, an expletive, listen, நீ நயந்தோள் ஊரே – the town of your beloved young woman, எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு – you say that the king let you go at night (விட்டன்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), பரியல் – do not feel sad (வருந்தற்க என்பது பொருளாக வந்த அல்லீற்று வியங்கோள்), வாழ்க நின் கண்ணி – long live your garland, காண்வர – beautiful, on seeing, விரி உளைப் பொலிந்த – splendid with wide tufts, beautiful with wide tufts, வீங்கு செலல் – trotting fast (செலல் – இடைக்குறை), கலி மா – proud horses, வண் பரி தயங்க – strong horses trotting splendidly, எழீஇ – rising up (சொல்லிசை அளபெடை), தண் பெயல் – cool rains, கான் யாற்று – of the forest river, இகு மணல் கரை – eroded sandy banks, பிறக்கு ஒழிய – to go behind, எல் விருந்து அயரும் – preparing a special feast, மனைவி – wife, மெல் – delicate, இறை – forearms, joints, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, துயில் அமர்வோயே – you desire to sleep (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 122, செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கருங்கால் செந்தினை கடியுமுண்டென,
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின,
நரை உரும் உரறும் நாம நள் இருள்  5
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டு கொல் அன்று கொல் யாது கொல் மற்று? என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள், நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்,  10
பூவேய் கண்ணி, அது பொருந்துமாறே.

Natrinai 122, Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Oh friend with flower-like eyes!
The red millet plants with dark stems,
that my brothers raised in the mountain
slopes, have been harvested.

The valley near our flourishing village
surrounded by mountains and forests,
is filled with buds of wild jasmine.

Not revealing to others, but with a firm
mind, mother has been trying to find out
about the lord of the mountains who
comes here to see you in fierce darkness
when roaring thunder strikes. 
Wondering whether it is true, or whether
it is not true, or whether it is something
else, she has put up a stiff face.  

You need to think about this and act
accordingly!

Notes:  தலைவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ள வேண்டும் எனும் கருத்தில் தோழி கூறியது.  ஆடி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடி என்பது ஒற்றாடி, அஃதாவது ஒற்றறிய முயன்று என்றபடியாம்.  மறைந்தவை ஆடி (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மறைந்து அவை ஆடி, அயலார்க்கு தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு,  ஒளவை துரைசாமி உரை – மறைந்தவை நாடி, களவின்கண் நிகழ்ந்ததை ஆராய்ந்து அறிந்து.  அன்னை (9) – ஒளவை துரைசாமி உரை – அன்னையென்றது ஈண்டுச் செவிலியை. ‘ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலியாகும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவு 112).  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122-9 – அன்னையும் அமரா முகத்தினள்.

Meanings:  இருங்கல் – big mountain, அடுக்கத்து – in the mountain slopes, என் ஐயர் – my brothers, உழுத – plowed and planted, plowed and seeded, கருங்கால் – stems with dark color, செந்தினை – red millet, கடியும் உண்டென – have been plucked (கடிதல் – கொய்தல்), கல்லக – in the mountains, வரைப்பில் – within the boundaries, கான் கெழு – with forests, சிறுகுடி – small settlement, small village, மெல் அவல் மருங்கின் – near the valley, மௌவலும் அரும்பின – wild jasmine vines have put put buds, நரை – proud, உரும் உரறும் – loud thunder sounds, நாம நள் இருள் – fearsome pitch darkness (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), வரையக நாடன் – the lord of the mountains, வரூஉம் என்பது – that he comes (வரூஉம் – இன்னிசை அளபெடை), உண்டு கொல் – is it true, அன்று கொல் – is it not true, யாது கொல் – is it something else, மற்று – அசைநிலை, an expletive, என நின்று – about what was happening, மதிவல் உள்ளமொடு – with an intelligent strong mind, மறைந்து அவை ஆடி – hiding it from others and talking about it, hiding from others and trying to find about it, அன்னையும் அமரா முகத்தினள் – mother is with a stiff face, mother is with a harsh face, நின்னொடு – with your mind, நீயே சூழ்தல் வேண்டும் – you need to analyze this, பூ ஏய் கண்ணி – oh young woman with flower-like eyes, அது பொருந்துமாறே – பொருந்தும் ஆறு, பொருந்தும் வழி, that is fitting thing to do, that is the proper thing to do (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 123, காஞ்சிப் புலவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உரையாய், வாழி தோழி, இருங்கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்,
கானல் ஆயமொடு காலைக் குற்ற  5
கள் கமழ் அலர தண் நறுங்காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடிப்,
புலவுத் திரை உதைத்த கொடுந்தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்குஞ்  10
சிறு விளையாடலும் அழுங்கி,
நினக்கு பெருந்துயரம் ஆகிய நோயே.

Natrinai 123, Kānji Pulavanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, oh friend!
Tell me why you are not playing with
our friends at the grove in this early
morning hour, plucking honey-fragrant
red waterlilies, weaving them with
leaves and  wearing skirts beautifully,
building little sand houses and
decorating them with kolams, in the
white sandy ocean shore with tall
palmyra trees with curved nests on
fronds on which herons that fly in rows
and feed in the vast backwaters rest
in the pitch darkness of night.

You are not playing little games
watching crabs that live on the seashore,
their lovely, wet mud holes under kandal
trees with curved trunks lashed by the
stinking waves of the ocean.

You are afflicted with this disease which
has given you great sorrow!

Notes:  மாங்குடி கிழார், மாங்குடி மருதனார், மதுரை காஞ்சி புலவர் ஆகிய பெயர்கள் ஒரே புலவருக்கு உரியன என்று கருதப்படுகின்றது.   வரி புனை சிற்றில் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிடுதலையுற்ற சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட மணல் சிறுவீடு.  Natrinai 123, 283 and 378 have descriptions of kolams. துவன்று -துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  உரையாய் – tell me, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, இருங்கழி – dark backwaters, vast backwaters, இரை ஆர் குருகின் – of the herons/egrets/storks that feed, நிரை பறைத் தொழுதி – bird flocks that fly in a row, வாங்கு – curved, மடல் – palm leaves, குடம்பை – nest, தூங்கு இருள் துவன்றும் – they reach when it is pitch dark, பெண்ணை ஓங்கிய – tall palmyra trees, flourishing palmyra trees, வெண்மணல் – white sand, படப்பை – garden, கானல் – seashore grove, ஆயமொடு – with friends, காலைக் குற்ற – plucking in the morning, கள் – honey, nectar, கமழ் – fragrance, அலர – bloom, தண் நறுங்காவி – cool fragrant red colored waterlilies, blue colored waterlilies, அம் – beautiful, பகை நெறித் தழை – woven garment with leaves and flowers that differ in color, அணிபெறத் தைஇ – wearing beautifully (தைஇ – சொல்லிசை அளபெடை), வரி புனை சிற்றில் – small house with kolams, small houses with decorations, பரி சிறந்து ஓடி – running around and playing, புலவு – fish smelling, திரை உதைத்த – hit by the waves, கொடுந்தாள் கண்டல் – kandal with curved trunks (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), சேர்ப்பு – seashore, ஏர் – beautiful, ஈர் அளை – wet holes, அலவன் பார்க்கும் – watching the crabs, சிறு விளையாடலும் – playing little games, அழுங்கி – in distress, நினக்கு பெருந்துயரம் ஆகிய நோயே – the disease that gives great sorrow (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 124, மோசி கண்ணத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன், அது தானும் வந்தன்று,
நீங்கல் வாழியர் ஐய, ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்  5
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

Natrinai 124, Mōsi Kannathanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, as the voice of the heroine
I am struggling with pain like an
ibis that is separated from its mate. 
I am unable to bear this miserable
life.  This sorrow has come to me.

Please do not leave!  May you live long!
This is the season when eengai buds and
athiral flowers are scattered on the huge
sand mounds on which the strong hooves
of deer press and create puddles of cold
water, on which clear bubbles form and
flow down beautifully resembling melted 
silver poured from bowls.

Notes:  தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்டு தோழி அவனிடம் வருந்தி உரைத்தது.  இது தலைவி கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு உரைத்ததாம்.  கூதிர்ப் பருவம் வந்துற்றது என வருந்துவாள் தலைவி.  ஆகையால் இனிப் பிரியாதிருப்பாயாக என வருந்தி உரைத்தது.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் அகநானூறு 362, நற்றிணை 124, நற்றிணை 191, கலித்தொகை 18, குறுந்தொகை 236, ஐங்குறுநூறு 45  குறுந்தொகை 236 பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஒன்று இல் காலை – when it is not united with its mate, அன்றில் போல – like an ibis,  red-naped – Pseudibis papillosa  or glossy ibis – Plegadis falcinellus, புலம்பு கொண்டு உறையும் – living alone, living in sorrow, புன்கண் வாழ்க்கை – miserable life, யானும் ஆற்றேன் – I am also unable to bear, அது தானும் வந்தன்று – it has come (தானும் – உம்மை சிறப்பு), நீங்கல் – please do not leave (அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழியர் – may you live long, ஐய – sir, ஈங்கை – touch-me-not shrub, Mimosa Pudica,  முகை – buds, வீ – flowers, அதிரல் – wild jasmine, மோட்டு மணல் எக்கர் – big sand mound, நவ்வி – deer, நோன் குளம்பு – strong hooves, அழுந்தென – since they pressed down, வெள்ளி – silver, உருக்குறு கொள் கலம் – like silver melting bows from which liquid silver is poured out, கடுப்ப – like (உவம உருபு, a comparison word), விருப்புற – in a desirable manner, தெண் நீர்க் குமிழி – clear water bubbles, இழிதரும் – flows down, தண்ணீர் ததைஇ – cold water gets filled (ததைஇ – சொல்லிசை அளபெடை), நின்ற பொழுதே – it is the cold season (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 125, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘இரை தேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்’ என  5
வரைந்துவரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நன்னாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர் மன் தோழி, மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,  10
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங்கல் நாட்டே.

Natrinai 125, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to her
If we plead to him saying, “We are
afraid since you come at midnight,
when a male bear with a gaping mouth
that is searching for food rips a curved
termite mound, sucks the termites with
his snout by breathing like the bellows
of a blacksmith, and roars causing the
snake in the mound to tremble,”   
he will marry you on an auspicious
day, oh friend, and take you with him,
your lover from the huge mountains,
where farmers who wear vēngai flower
strands on their heads wake up their
elephants and thresh tender millet,
on boulders as large as the threshing
grounds of farmers in the agricultural
land who thresh using oxen, and create 
tall piles of millet hay.  

Notes:  தலைவன் திருமணம் புரியாமல் இரவுக்குறியின்கண் வருவதைக் கண்டு வருந்திய தலைவியிடம் தோழி உரைத்தது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கரடி புற்றிலே கிடந்த பாம்பு நடுங்கும்படி அகழ்ந்து உண்ணும் என்றது, தலைவர் கூடுகையில் தலைவியின் மேனியிடத்து அமைந்த பசலை நடுங்கி ஒழியமாறு கூடுவர் என்பதாம்.  மென் தினை நெடும் போர் புரிமார் (11) – ஒளவை துரைசாமி உரை – மெல்லிய தினைக் கதிரை போரிட்டு அடிக்கும் பொருட்டு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும்பொருட்டு.   துஞ்சு களிறு எடுப்பும் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் தினைக் கதிர்களைத் துவைத்தற்கு யானைகளைப் பிணித்துத் துவைப்பர் என அவர் திருவுடைமையைச் சிறப்பித்தபடியாம் என்க.  நம்மொடு செல்வர் மெல்ல (8) – ஒளவை துரைசாமி உரை – மெல்ல நம்மைத் தம்மோடு கொண்டு செல்வார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சின்னாள் அளவும் நின்னைப் பன்முறை முயங்கிய பின்பு செல்வார் என்பதாம்.  Natrinai 125, 325, 336 and Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have references to bears attacking termite mounds.  Millet harvesting time is when vēngai trees put out flowers.  This has been described in poems 125, 259, 313 and 389.

Meanings:  இரை தேர் – food searching, எண்கின் – bear’s, பகுவாய் ஏற்றை – wide-mouthed male, கொடு வரி – curved lines, புற்றம் வாய்ப்ப வாங்கி – seizing the termite mound (புற்றம் – புற்று புற்றம் என அம்முப் பெற்றது), நல்அரா – a cobra, நல்ல பாம்பு, நடுங்க – trembles, உரறி – screaming, roaring, கொல்லன் – metal smith, ஊது உலைக் குருகின் – like blowing into the furnace hole with bellows (குருகின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), உள் – inside, உயிர்த்து – breathing deeply and sucking the termites, அகழும் – it digs, நடுநாள் – midnight, வருதல் – his coming, அஞ்சுதும் யாம் என – that we are afraid, வரைந்துவரல் – to come and marry, இரக்குவம் ஆயின் – if we request, if we plead, நம் மலை – our mountain, நன்னாள் வதுவை கூடி – to unite in marriage on an auspicious day, நீடு இன்று – without delay, நம்மொடு செல்வர் – he will  go with you, மன் – அசைநிலை, an expletive, ஆக்கம் எனினுமாம், தோழி – my friend, மெல்ல – slowly, வேங்கைக் கண்ணியர் – mountain farmers wearing kino flower garlands/strands, Pterocarpus marsupium, எருது எறி களமர் – farmers who goad oxen, நிலம் கண்டன்ன – like the land, அகன் கண் பாசறை – wide green boulders, மென் தினை – delicate millet, நெடும் போர் புரிமார் – to thresh and create tall piles (புரிமார் – மார் ஈற்று முற்றுவினை), துஞ்சு களிறு – sleeping elephants, எடுப்பும் – they wake them up from sleep, தம் பெருங்கல் நாட்டே – in his big mountainous country (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 126, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பைங்காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கித்,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம்  5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால்,  10
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம், வாய்க்க நின் வினையே.

Natrinai 126, Unknown poet, Pālai Thinai – What the hero said to his heart
If the wealth that can be earned
by going through the wasteland,
……….full of date palm trees
……….bearing black, pulpy fruits
……….that had changed color from
……….green to red to black,
……….on saline white ground,
……….and a bull elephant that rolls in
……….dust and walks with rapid strides,
……….is ready to kill those who travel fast
……….passing through the wasteland in
……….the morning hours,
……….is filled with rage on not finding
……….them and crashes against palmyra
……….trees letting out its rage,
can give happiness, it does not give
the splendor that youth can give.

If youth goes away, one cannot enjoy
wealth that does not last forever. 

My heart that rushes rapidly toward
wealth!  May your actions succeed!! 

Notes:  பொருள் விரும்பிய நெஞ்சிடம் தலைவன் உரைத்துச் செலவு அழுங்கியது.  ஒரீஇய (1) – ஒளவை துரைசாமி உரை – நிறம் பெற்ற, H.வேங்கடராமன் உரை – நிறம் மாறிய, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நீங்கிய.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஈந்தின் பசுங்காய் செங்காயாகிப் பின் கனியாகும் என்றது யாக்கையும் இளமை போய் முதிர்ந்து தளரும் என்பதனைக் குறிப்பித்து இளமை நில்லாமை உணர்த்திற்று.  இறைச்சி (2) – ஒளவை துரைசாமி உரை – நச்சிய ஆள் பெறாமையால் களிற்று ஒருத்தல் வெஞ்சினம் கொள்ளும் என்றது, கருதிய அளவில் முற்றாவழிப் பொருள் இளிவரவு தோற்றுவிக்கும் எனவும் அவ்வொருத்தல் தன் சினம் தனியுமாறு இயைபு இல்லாத பனையைத் தாக்குதல் கூறியது, அப்பொருள் இல்லையாயின் இரவலரும் பரிசிலருமாகிய மக்கள் வருந்துவர் எனவும் கொள்ள நின்றன.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  பைங்காய் – green, unripe, நல் இடம் – fine stage, fine place, ஒரீஇய – changed, dropped (ஒரீஇய – செய்யுளிசை அளபெடை), செங்காய்க் கருங்களி ஈந்தின் – with red date fruits which have turned into black pulpy fruits, வெண்புறக் களரி – dry white land, white saline land, இடு நீறு ஆடிய – playing in the dust that has collected, கடு நடை ஒருத்தல் – male (elephant) with rapid walk, ஆள் பெறல் நசைஇ – desiring to kill people (நசைஇ – சொல்லிசை அளபெடை), நாள் சுரம் விலங்கி துனைதரும் வம்பலர்க் காணாது – not seeing those who travel rapidly passing through in the wasteland in the early morning times, அச் சினம் பனைக் கான்று ஆறும் – it reduces its rage by hitting on a palmyra palm tree, பாழ் நாட்டு அத்தம் இறந்து செய் பொருளும் – the wealth that is earned by going through the wasteland, இன்பம் தரும் எனின் – if it will give happiness, இளமையின் சிறந்த வளமையும் இல்லை – there is no prosperity better than youth, இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே – if youth goes away one cannot enjoy love even when wealthy (ஏ – அசைநிலை, an expletive), அதனால் நில்லாப் பொருட்பிணி சேறி – you are going for wealth which does not stay, வல்லே நெஞ்சம் – my heart that goes toward that fast, வாய்க்க நின் வினையே – may your actions succeed (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 127, சீத்தலைச் சாத்தனார், நெய்தற் திணை – தோழி பாணனிடம் சொன்னது
இருங்கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ பாண? பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்,  5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
மெல்லம்புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே.

Natrinai 127, Seethalai Sāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the messenger bard
What is the use, oh bard,
if he comes to our seaside village
which gets cooled by the sprays
that storks shake off their
wet backs, as they search for prey
in the vast backwaters?

Her uneducated, angry brothers
live in their wealthy house where
they eat fatty fish.

The naive young woman places her
doll on her head, the one she used
to play with her friends
in the past when they built sand
houses. “Let’s go and play in the
groves, even without the lord of
the delicate shores,” she says.

Notes:  நெய்தலுள் மருதம்.  தோழி பாணற்கு வாயில் மறுத்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழி துழைஇய நாரை தன் ஈர்ம்புறத்து இறகை எறிதலால் தெறிக்கும் திவலையால் எம் பாக்கம் குளிர்மிக்கு நடுங்கும் என்றதனால், பரத்தையர் சேரிக்கண் மகளிர் நலம் நயத்தொழுகும் எழும் அலர் ஊரெங்கும் பரந்து எம்மை நாணால் நடுங்கச் செய்தது என்பது.  ஈனாப் பாவை – வெளிப்படை, பெறாத குழந்தையாகிய விளையாட்டுப் பாவை.

Meanings:  இருங்கழி துழைஇய – searching in the dark/vast backwaters (துழைஇய – செய்யுளிசை அளபெடை), ஈர்ம் புற நாரை – storks with wet backs, storks with wet sides, white stork – Ciconia ciconia, or pelican or crane, இற எறி திவலையின் – due to the water sprays that they throw off their feathers, பனிக்கும் பாக்கத்து – to our seashore village which gets cold, to our seashore village which trembles, உவன் வரின் எவனோ – what is the use if he comes here (ஓ – அசைநிலை), பாண – oh bard, பேதை – the naive girl, கொழு மீன் ஆர்கை – eating fatty fish, செழு நகர் நிறைந்த – in the rich house, கல்லாக் கதவர் – those who are uneducated and angry, தன் ஐயர் ஆகவும் – who are her brothers, வண்டல் ஆயமொடு – with friends building little sand houses, பண்டு தான் ஆடிய – in the past she played, ஈனாப் பாவை – her doll which is a child she did not bear (பெறாத குழந்தையாகிய விளையாட்டுப் பாவை, வண்டற் பாவை, வெளிப்படை), தலையிட்டு – placed it on her head, ஓரும் – அசைநிலை, an expletive, மெல்லம்புலம்பன் – the lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), அன்றியும் செல்வாம் என்னும் கானலானே – let us go to play in the seashore groves even without him (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 128, நற்சேந்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
‘பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்,
எனக்கு நீ உரையாய்  ஆயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே’ என்று நனி  5
அழுதல் ஆன்றிசின் ஆயிழை, ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண் எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு  10
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

Natrinai 128, Narchēndanār, Kurinji Thinai – What the heroine said to her friend, or what the heroine’s friend said to her
Do not weep, my friend wearing lovely
ornaments!  You tell me that even though
we are friends, parts of the same life,
you had to find out for yourself about why
my body has become dull like a flame that
burns during the day, and my forehead has
lost its brightness like the moon when the
snake creeps up to it.

This affliction is because my heart keeps
thinking about him, ever since the man
wearing flower strands, warrior anklets
and garlands, embraced my back
in a cool manner, when I was protecting
the flourishing clusters of millet spears.

Notes:  குறை நேர்ந்த தோழி, தலைவி குறை நயப்பக் கூறியது.  தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் தானே கூறும் காலமும் உளவே’ (தொல்காப்பியம், களவியல் 22) என்பதன் உரையில் ‘உம்மையால் தோழி வினவியவிடத்துக் கூறலே வலியுடைத்து’ என்று கூறி இப்பாட்டைக் காட்டி ‘இது தோழி வினாவியவழித் தலைவி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரைதோழியின் கூற்று – தலைவிக்குத் தோழி ‘தலைவன் தன்னைத் தழுவியதால் ஏற்பட்ட காதல் நோய் என்று கூறுகின்றாள்.  தலைவன் தழுவ இவள் இசைந்தமையால் தலைவியின் காதலைப் பெறுவதற்கு தலைக்கீடாகத் தோழியைக் குறை நேர்ந்தான் என்பதும், அது கொண்டு தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி உணர்ந்தாள் என்பதும் பெறப்படும்.  தலைவன் புறத்தொழுக்கம் மேற்கொள்ளவும் நேரும் என்ற குறிப்பினைத் தலைவிக்கு உணர்த்தி அவள் நாணம் நீங்குமாறு குறை நயந்து நின்றாள்.  தலைவி மறைத்த நிகழ்ச்சியைத் தோழி தன் மேல் ஏற்றிக் கூறி உண்மை உரைத்ததும் ஆகும்.  தலைவியின் கூற்று – “தோழி! நிகழ்ந்ததை மறைத்தேன் என வருந்தாதே!  யான் தலைவன் செய்த செயலால் ஏற்பட்ட காதலால் வருந்துகின்றேன்” எனக் கூறித் தலைவி அறத்தொடு நின்றதாக அமையும்.  அகநானூறு 32 – சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  பகல் எரி சுடரின் மேனி சாயவும் – for the body to become lusterless like the daytime flame (சுடரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – and forehead to lose brightness like the moon hid by the snake, எனக்கு நீ உரையாய் ஆயினை – you did not tell me the truth, நினக்கு யான் – I am to you, உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின் – since we are special like life separated (1 life, 2 bodies), அது கண்டிசினால் – I found out about it (கண்டிசின் + ஆல், சின் – தன்மை அசை, an expletive of the first person, ஆல் – அசைநிலை, an expletive), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), என்று – thus, நனி அழுதல் ஆன்றிசின் – do not cry a lot (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), ஆயிழை – oh woman with beautiful jewels, oh woman with chosen jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), ஒலி குரல் ஏனல் காவலினிடை – when protecting the thick spears of millet, உற்று ஒருவன் – a man came, கண்ணியன் – a man wearing a head strand, கழலன் – a man wearing warrior anklets, தாரன் –  a man wearing a garland, தண் எனச் சிறுபுறம் கவையினனாக – he hugged my back in a cool manner, அதற்கொண்டு – since then, அஃதே – அதனையே, just about that event, நினைந்த நெஞ்சமொடு – with a heart that is thinking about him, இஃது ஆகின்று யான் உற்ற நோயே – this disease is that I have got (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 129, ஒளவையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெருநகை கேளாய் தோழி, காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே, சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை  5
வாழ்தும் என்ப நாமே, அதன்தலை,
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்பப்,
படுமழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே.

Natrinai 129, Avvaiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Listen to this big joke, oh friend
with luxuriant hair, who suffers
even if your lover leaves for a day!

They say that he will leave us to  
earn wealth,
and that we have to live in our
house, all alone, until he finishes
his work and returns,
listening in the middle of the night
to heavy rains and roaring thunder
that causes the heads of snakes with
hoods with bright spots to tremble.

Notes:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைவியிடம் உரைத்தது.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.   கேழ் கிளர் உத்தி அரவுத் தலை (7) – ஒளவை துரைசாமி உரை – நிறம் பொருந்திய படத்தின்கட் பொறிகளையுடைய பாம்பின் தலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நிறம் விளங்கிய படப்பொறிகளையுடைய அரவினது தலை.

Meanings:  பெருநகை கேளாய் – listen to this big joke, தோழி – my friend, காதலர் ஒரு நாள் கழியினும் – even if your lover is away from you for one day, உயிர் வேறுபடூஉம் – your life is different, your life changes (வேறுபடூஉம் – இன்னிசை அளபெடை), பொம்மல் ஓதி – oh one with luxuriant hair, one with thick hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நம் இவண் ஒழியச் செல்ப என்ப –they say that he will leave us here and go, தாமே – by himself, him alone (ஏ – பிரிநிலை இடைச்சொல், particle signifying exclusion), சென்று – leaving, தம் வினை முற்றி வரூஉம் வரை – until he finishes his job and comes back (வரூஉம் – இன்னிசை அளபெடை), நம் மனை வாழ்தும் என்ப – they say that we need to live in our house, நாமே – us, அதன்தலை – and also, கேழ் கிளர் உத்தி – bright colored spots, அரவுத் தலை பனிப்ப – making snake heads tremble, படுமழை உருமின் உரற்று குரல் நடுநாள் யாமத்தும் – when heavy rains fall and roaring thunder strikes in the middle of the night, தமியம் – we have to be alone, கேட்டே – listening (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 130, நெய்தல் தத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந்நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?  5
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது,
‘எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி’? என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே; விரி நீர் 10
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே.

Natrinai 130, Neythal Thathathanār, Neythal Thinai – What the heroine said to her friend
Is there anything sweeter than doing
his work in his great ancient town,
with perfection and a sense of public
service, appearing in the morning in his
horse chariot using a whip, as a big
thannumai drum with folded rim and
a clear eye roars?

Even though he loves me, he does not
think about me.  On seeing my agreeable
heart, thin arms, and faded pallor spots,
nobody comforts me even for a day saying,
“What is she doing, suffering greatly!”

My affliction has spread past the limits of
this earth with the oceans as it borders.
How will I handle my sorrow, without the
support of my lover?

Notes:  பிரிவிடை வருந்திய தலைவியை ஆற்றியிருக்கும்படி வற்புறுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  நினைவிலர் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தனக்குத் தும்மல், புரையேறுதல் முதலாயின தோன்றாமையாலே தன்னை அவள் கருதிலர் என்றாள்.

Meanings:  வடு இன்று – faultless, நிறைந்த மான் – perfect horses, தேர் – chariot, தெண் கண் – drum with clear eye, drum with a clear sound, மடிவாய்த் தண்ணுமை – thannumai drum with folded rim, நடுவண் – in between, in the middle, ஆர்ப்ப – as it roars, கோலின் எறிந்து – hitting with sticks, காலைத் தோன்றிய – appearing in the morning, செந்நீர் – perfect nature, பொது வினை  – public work , செம்மல் மூதூர் – great ancient town, தமது – one’s, செய் – work, வாழ்க்கையின் இனியது உண்டோ – is there anything sweeter in life, எனை விருப்புடையர் ஆயினும் – even though he loves me, நினைவிலர் – he does not think about me, நேர்ந்த நெஞ்சும் – agreeable heart, நெகிழ்ந்த தோளும் – and thinned shoulders/arms, வாடிய வரியும் – and the faded pallor spots, நோக்கி –  looking, நீடாது – without delay, எவன் செய்தனள் – what is she doing, இப் பேர் அஞர் உறுவி – this woman who is suffering greatly, என்று – thus, ஒரு நாள் கூறின்றும் இலரே – they did not say even for a single day (ஏ – அசைநிலை, an expletive), விரி நீர் –  wide bodies of water, oceans, வையக வரை அளவு – limits of the earth, இறந்த எவ்வ நோய் – surpassing distressing disease,  பிறிது உயவுத் துணை இன்றே – without my lover in this time of distress, without my lover to comfort me who is in distress (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 131, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, தலைவியும் தலைவனும் திருமணம் புரிந்த பின்
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும், உடையமோ, உயர் மணல் சேர்ப்ப,
திரை முதிர் அரைய தடந்தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய,  5
இறவு ஆர் இனக் குருகு இறை கொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே.

Natrinai 131, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, the day after the couple married
Oh lord of the tall sand dunes!
We played and rested in the
grove.  Did we quarrel with you
with sad hearts?  We did not!
So you did not forget us!

You did not cause her arms to get
thin, lovely like the liquor-fragrant,
Poraiyār town of Periyan who
happily enjoys liquor, and owns
fine chariots, where flocks of
herons that eat shrimp reside
on old, thick-trunked thāzhai trees,
and break their leaves with edges,
that are like the horns of sharks.

Notes:  மணமனையிற் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன் ‘தலைவியை முன்பு நீ நன்கு காத்தாய்.  நீ பெரியை’ என்று புகழ்ந்தபோது, அவனைப் புகழ்ந்து உரைத்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழிக்கண் இறாமீனை வயிறார உண்ட குருகுகள் தாழை மிசை இனஞ் சூழ இருக்கும் என்றது, என் தோழியாகிய தலைமகளின் நலன்களை நனி நுகர்ந்த நீ நின் சுற்றம் பரவ அவனது நெஞ்சின்கண் நிறைந்து வீற்றிருக்கின்றாய் எனத் தோழி இனிது கிளவியால் உள்ளுறுத்துப் பாராட்டியவாறு.  சுறவு, இறவு, நறவு – சுறா சுறவு எனவும், இறா இறவு எனவும், நறா நறவு எனவும் வந்தன.  ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  வரலாறு:  பெரியன், பொறையாறு. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  அரைய தடந்தாள் (4) –  ஒளவை துரைசாமி உரை – வேரை ஒட்டிய பகுதி தாள் எனவும், அதற்கு மேலுள்ள பகுதி அரை எனவும் வேறுபடுத்தி உணர்க.

Meanings:  ஆடிய தொழிலும் – playing, அல்கிய பொழிலும் – and staying in the groves, உள்ளல் ஆகா – without thinking, உயவு நெஞ்சமொடு – with a sad heart, ஊடலும் உடையமோ – did we quarrel with you, we did not quarrel with you, உயர் மணல் சேர்ப்ப – oh lord of the shores with tall sand dunes (சேர்ப்ப – அண்மை விளி), திரை – waves, முதிர் – old, mature, அரைய – with trunks, தடந்தாள் தாழை – thick/curved lower part of fragrant thāzhai trees, thāzhai trees with curved trunks, Pandanus odoratissimus, சுறவு மருப்பு அன்ன – like the horns of sharks/swordfish (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), முள் தோடு ஒசிய – for the leaves with thorny edges to break, இறவு ஆர் இனக் குருகு – flocks of herons/egrets/storks that eat shrimp (இறவு – இறா இற என்றாகி உகரம் ஏற்றது), இறை கொள இருக்கும் – they reside on them, நறவு மகிழ் இருக்கை – drinking and enjoying liquor (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நல் தேர்ப் பெரியன் – Periyan with fine chariots, கள் கமழ் பொறையாறு அன்ன – like liquor-fragrant Poraiyār, என் நல் தோள் – the heroine’s fine arms, நெகிழ – becoming thin, மறத்தல் – forgetting, நுமக்கே – for you (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 132, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரைதொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்  5
பயில் படை நிவந்த பல் பூஞ்சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலைக்
‘காப்புடை வாயில் போற்று ஓ’ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்;  10
இன்று கொல், அளியேன் பொன்றும் நாளே?

Natrinai 132, Unknown Poet, Neythal Thinai – What the heroine’s friend said to her
This huge town sleeps!  Nobody
is awake!

Sharks with perfect mouths spew
water with loud noises.  It falls as
rain on streets as cold wind blows,
and water gets in through the holes
in the double doors.  Dogs with
sharp teeth tremble.

The fine houses with thick beds with
many flowers, are well-guarded with
gates.  The night guards who shout
requesting everybody to close their
doors, ring their bright bells with
long clappers, the chimes of their
bells sounding like rhythmic beats.

Is today the day, for me who is pitiable,
to die.

Notes:  காப்பு மிகுதிக் கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி உரைத்தது.  இது தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் பெருங்கண்ணனார் என்று உள்ளது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இல் செறிக்கப்பட்ட தலைமகள் காவல் மிகுதியால் தலைவனை அடைய முடியாமையைக் கருதிய தோழி, தலைவி கூறியதுபோலக் கூறுவாளாய்த் தலைவியை நோக்கி, ‘ஊரும் துயிலாநின்றது. யாருமில்லை.  இக்காலத்து அவரை அடையப் பெறாதபடி இல் செறிப்புற்று அயலிலும் காவல் உடையாதாகியதன்றி ஊர் காவலர் மணியும் ஒலியாநிற்குமாதலின், யான் பொன்று நாள் இன்று தானோ’ என அழுங்கிக் கூறாநிற்பது.  ஒளவை துரைசாமி உரை – காப்பு மிகுதியால் இரவுக்குறிக்கண் கூட்டம் பெறாதொழிவது பற்றித் தலைவி எய்தக் கடவ ஆற்றாமையைத் தான் ஏறட்டுக் கொண்டு தோழி தலைமகளை ஆற்றவிக்கும் சூழ்ச்சியும், மதிநுட்பமும் வெளிப்பட விளங்குவது பெருங்கண்ணனாரது புலமையைப் பணிகொள்ளவும், இப்பாட்டுத் தோன்றுவதாயிற்று.

Meanings:  பேர் ஊர் துஞ்சும் – the huge town sleeps, the whole town sleeps, யாரும் இல்லை – nobody is here, திருந்து வாய்ச் சுறவம் – sharks with perfect mouths, நீர் கான்று – spit water, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), பெருந்தெரு – big streets, உதிர்தரு பெயலுறு – falls down as rain, தண் வளி – cold wind, போர் அமை கதவப் புரைதொறும் – in all the spaces between the double doors, in all the holes in the double doors, தூவ – sprinkle கூர் எயிற்று எகினம் நடுங்கும் – sharp-toothed dogs tremble, நல் நகர் – fine house, பயில் படை நிவந்த – raised by thick layers, பல் பூஞ்சேக்கை – bed with many flowers, அயலும் – nearby, மாண் சிறையதுவே – well-guarded, imprisoned (ஏ – அசைநிலை, an expletive), அதன்தலை – also, காப்புடை வாயில் – protected gate is there, போற்று ஓ என்னும் – ‘protect’ they shout, யாமம் கொள்பவர் – those who guard at midnight, நெடு நா ஒண் மணி – bright bells with long clappers, ஒன்று எறி பாணியின் – like perfectly hit rhythmic beats (பாணியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), இரட்டும் – sound intermittently, இன்று கொல் அளியேன் பொன்றும் நாளே – is today the day of death for pitiable me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 133, நற்றமனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘தோளே தொடி கொட்பு ஆனா, கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே,
நுதலும் பசலை பாயின்று, திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு’ என்று  5
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி, காதல் அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
தோய் மடல் சில் நீர் போல,  10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

Natrinai 133, Natramanār, Kurinji Thinai – What the heroine said to her friend
The harsh-mouthed women
who spread scandal say,
“The bangles on the arms
of the dark young woman
with sapphire-colored hair
adorned with five-part braid,
have not stopped slipping;
her eyes that are beautiful
like tender mangoes that are split
by a sword, have lost their luster,
pallor has spread on her forehead,
and her loins decorated with many
bright strands have pale spots.”

The sorrow that I am suffering
was not caused by him.
My loving friend!  Your sweet,
lovely words have comforted my
pain-filled heart, like water sprayed
on an iron-working blacksmith’s
hot furnace on which a palm frond
hand fan is used to reduce the heat.

Notes:  வரைவிடை வைத்து பிரிவாற்றாளாகிய தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்று தொடங்கும் நூற்பாவில் வரும் ‘கூறிய வாயில் கொள்ளாக் காலையும்’  என்பதற்கு இதனைக்காட்டி, இதனுள் ‘தோழிகூற்றை நன்கு மதியாது கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள் – அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண்.  Iron: Natrinai 133 and 249 have references to iron.  There are 29 references to iron in the Sangam poems.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  தோளே – arms (ஏ – அசைநிலை, an expletive), தொடி கொட்பு – the bangles are whirling, the bangles on the arms are slipping, ஆனா – without stopping, கண்ணே – eyes (ஏ – அசைநிலை, an expletive), வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – they have lost their beauty like that of a tiny mango that has been split by a sword (ஏ – அசைநிலை, an expletive), நுதலும் பசலை பாயின்று – pallor has spread on the forehead, திதலை – pale spots, சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் – wearing several bright strands on her loins with spots, மணி ஏர் ஐம்பால் – sapphire-like hair with five-part braid (ஏர் – உவம உருபு, a comparison word), மாயோட்கு – to the dark young woman, என்று – that, வெவ்வாய்ப் பெண்டிர் – harsh-mouthed women, கவ்வை தூற்ற – spread rumors, spread gossip, நாம் உறு துயரம் – the sorrow that I suffer (நாம் – தன்மைப் பன்மை, first person plural), செய்யலர் என்னும் – that he did not do this, காமுறு தோழி – my friend who loves me, காதல் அம் கிளவி – loving beautiful words, இரும்பு செய் கொல்லன் – blacksmith who works with iron, வெவ் உலைத் தெளித்த தோய் மடல் சில் நீர் போல – like little water dipped in palm fronds and sprayed on hot furnace, நோய் மலிநெஞ்சிற்கு – to my deeply afflicted heart, ஏமம் ஆம் சிறிதே – it is a little bit of protection (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, சிறிதே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 134, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘இனிதின் இனிது தலைப்படும்’ என்பது
இது கொல்? வாழி தோழி! காதலர்
வருகுறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ்வாய்ப் பாசினம் கடீஇயர், ‘கொடிச்சி!
அவ்வாய்த் தட்டையொடு அவணை ஆக’ என  5
ஏயள் மன் யாயும்; நுந்தை வாழியர்,
‘அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு’ என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே.  10

Natrinai 134, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Is this how it is, that sweet things
will come from sweetness?

May you live long, my friend!

As though to help us go where your
lover has arranged for a tryst,
mother commanded, “Oh young
woman!  Go and chase the red-beaked
parrot flocks from our field with tiny
millet, using this pretty bamboo rattle.”

Father said sweetly and tenderly,
“Oh pretty young woman, like a tender
mango sprout, wearing rows of bangles! 
You go to the millet field!  I will kiss you.”
I spoke like I was not in agreement.

Notes:  ‘இற்செறிப்பார்’ என ஆற்றாளாய தலைவியை, ‘அஃது இலர்’ என்பதுபடத் தோழி சொல்லியது.  நற்றிணை 206 – அவ்வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என எந்தை வந்து உரைத்தனனாக.  இனிதின் இனிது தலைப்படும் (1) –  ஒளவை துரைசாமி உரை – இனியதொன்று நுகரப்படுங்கால் இனிய ஒன்று மேலும் தொடர்ந்து தோன்றும், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இனியவை யாவற்றிலும் இனிதாய் அடையத்தக்கதாய் இருக்கிறது, H.வேங்கடராமன் உரை – இனிய ஒரு பொருளைக் காட்டிலும் இனிமையானது வந்துறும், ச. வே. சுப்பிரமணியன் உரை – இனிமையிலும் இனியதாக அமைகின்றது.  அம் மா மேனி (7) – H.வேங்கடராமன் உரை, ஒளவை துரைசாமி உரை – அழகிய மாந்தளிர் போன்ற மேனி. செல்லாயோ (8) – செய்யாய் + ஓ, செய்யா என்னும் முன்னிலை வினைமுற்று (தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 54), ஓ அசைநிலை. எயிறு உண்கு (8) – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு.

Meanings:  இனிதின் இனிது தலைப்படும் – what is sweet will come from sweetness, sweetness when enjoyed leads to more sweetness, sweetness that is more than sweetness, என்பது இது கொல் – is this how it is, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, காதலர் வருகுறி செய்த வரையக – your lover has arranged for the place to meet in the mountain, சிறு தினை – tiny millet, செவ்வாய்ப் பாசினம் – flocks of red-beaked green birds, flocks of red-beaked parrots, கடீஇயர் – inorder to chase them away (சொல்லிசை அளபெடை), கொடிச்சி – oh young woman of the mountains, அவ்வாய்த் தட்டையொடு அவணை ஆக – go there and use the beautiful bamboo rattle (அவ்வாய் – அழகு அமைந்த), என ஏயள் – she commanded, மன் – அசை, an expletive, யாயும் – mother, நுந்தை – your father, வாழியர் – அசைநிலை, an expletive, அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள் – oh dark young woman with beautiful body and rows of bangles, செல்லாயோ – you go (ஓகாரம் அசைநிலை, an expletive), நின் முள் எயிறு உண்கு என – I will kiss your sharp teeth, மெல்லிய இனிய கூறலின் – since he said it sweetly and delicately, யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவலே – I spoke like I did not agree to that (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 135, கதப்பிள்ளையார், நெய்தற் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணன் மலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன் அம்ம தானே, பனிபடு  5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்
வால் உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

Natrinai 135, Kathappillaiyar, Neythal Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Listen!  Before we laughed with
him, the man who comes riding
his chariot hitched to horses with
splendid white plumes, tired
after trotting and pulling the
chariot through cold wastelands
as it sinks and whirls in new sand
brought by huge, roaring waves,

It was sweet to us,
this lovely, small village with cool 
people who shower their guests
with hospitality and unlimited food,
where tall, thick-trunked palmyra
palms with hanging fronds, are 
buried in sand in the front yards.

Notes:  தலைவன் வரையாது நீட்டிப்பதால் ஊரார் பழி கூறுவார் எனத் தோழி வருந்தி உரைத்தது.  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  தூங்கல் ஓலை – hanging fronds, swaying fronds, ஓங்கு மடல் பெண்ணை – tall palmyra trees with long fronds, மா அரை – big/dark trunks, புதைத்த – buried, மணல் மலி முன்றில் – front yards filled with sand, வரையாத் தாரம் வருவிருந்து அயரும் – give unlimited food feasts to guests, தண் குடி வாழ்நர் – the cool people who live there, அம் குடிச் சீறூர் – small  village with beautiful communities, இனிது – it was sweet, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen, தானே – அதுவே, it (ஏ – பிரிநிலை, exclusion), பனிபடு – cold, பல் சுரம் உழந்த – passed through many wastelands, நல்கூர் – sorrow, tired, பரிய – moving, முழங்கு திரைப் புது மணல் – new sand brought by the huge waves, அழுந்தக் கொட்கும் – pressing hard and whirling around (since it is stuck in the sand unable to ride straight), வால் உளைப் பொலிந்த புரவித் தேரோர் – the man with a chariot with horses with beautiful/splendid white manes, நம்மொடு நகாஅ ஊங்கே – before he laughed with us (நகாஅ – இசைநிறை அளபெடை, ஊங்கே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 136, நற்றங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என் ஐ வாழிய, பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய  5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந்தொடி செறீஇயோனே.

Natrinai 136, Natrankotranār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
I cried that I wanted beautiful, bright,
round bangles, and my father,
like a good doctor who gives the right
medicines and not what his patients
suffering from harsh diseases desire,
gave them to me.  May he live long! 
He gave me fine, gold bangles that fit
perfectly on my arms, without slipping
even when pushed down,
as if he knew that I was separated
from the man from the country with
mountains for a little while, who has
been praised by many.  
The bangles he gave me saved me from
gossip!

Notes:  களவு ஒழுக்கத்தில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி, தன் மேனி வேறுபடுவதை உணர்ந்து, தலைவன் அவளை மணம் புரிய வேண்டும் என்று கருதினாள். அவன் அருகில் இருப்பதை அறிந்து இவ்வாறு உரைக்கின்றாள்.  தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவிக்கு அவளுடைய தந்தை இறுக்கமான வளையல்களைத் தந்தார்.  அது ஊராரின் அலரைத் தடுத்தது என்று தலைவி தோழியிடம் கூறியது. எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  திருந்து கோல் – perfect and rounded, beautiful and rounded, எல் வளை – bright bangles, வேண்டி யான் அழவும் – when I cried that I wanted, அரும் பிணி உறுநர்க்கு – to patients who have difficult-to-heal diseases, வேட்டது – what they desire, கொடாஅது – not giving (இசை நிறை அளபெடை), மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – like a good physician who checks and gives the right medicine, என் ஐ – my father, வாழிய – may he live long, பலவே பன்னிய – being praised by many, மலை கெழு நாடனொடு – with the man from the country with mountains, நம்மிடை – between us, சிறிய தலைப்பிரிவு உண்மை – truth about a little separation, அறிவான் போல – like he understood, நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – bangles that do not slip beyond their limit when trying to push, tight bangles, தோள் – arms, பழி மறைக்கும் – hiding blame, உதவி – helped, போக்கு இல் – faultless, perfect, பொலந்தொடி – gold bangles, செறீஇயோனே – he gave fitting ones to me (சொல்லிசை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 137, பெருங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தண்ணிய கமழும் தாழ் இருங்கூந்தல்,
தட மென் பணைத்தோள், மட நல்லோள் வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய நெஞ்சே, செவ்வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடைக்,  5
கயந்தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்
பெருங்களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்,
குன்ற வைப்பின் கானம்
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே.  10

Natrinai 137, Perunkannanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!
If you are thinking about
parting from her,
the naive woman with curved,
delicate arms that are like bamboo,
and cool, fragrant, flowing thick
hair,

to go on the waterless, long
path on the mountains where the
waterfalls have dried out,
……….where a huge male elephant
………. breaks the branches of an
………. ōmai tree with bent trunk
……….that provides shade to
……….those who travel during the day
……….in the forest near the mountains,
……….to remove the hunger of his
……….naive, tender-headed female,
you have something more precious
than her.
You are capable of moving far away!  

Notes:  வினைவயிற் பிரிந்து செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  செவ் வரை அருவி ஆன்ற (5) – ஒளவை துரைசாமி உரை – செவ்விய மலையினின்று அருவி வற்றினமையின், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H.வேங்கடராமன் உரை – செவ்விய மலையருவியின்கண்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிடி யானைக்காக களிறு முறித்து வீழ்த்திய ஓமை மரம் பாலை நில வழிச் செல்வார்க்குத் தங்கும் நிழலாகும் என்றது, பொருளின் பொருட்டு நின்னால் பிரியப் பெறும் தலைவி நலம் கெடப் பசலை பரந்து தங்குமாறு ஆகும்.  ஓமை வாடுவது போல வாடி நிற்கும் என்ற கருத்தினை உள்ளுறுத்தியும் மொழியப்பட்டது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  தண்ணிய கமழும் தாழ் இருங்கூந்தல் – cool fragrant hanging thick/dark hair, தட – large, curved, மென் – delicate, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, மட நல்லோள் வயின் பிரிய – to part from the naive nice young woman, சூழ்ந்தனை ஆயின் – if you think about it, அரியது ஒன்று எய்தினை – you achieved a rare/precious thing, வாழிய நெஞ்சே – may you live long my heart, செவ் வரை அருவி ஆன்ற – near the dried waterfalls in the fine mountains, near the waterfalls in the mountains, நீர் இல் நீள் இடை – waterless long paths, கயந்தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர் – inorder to remove the great hunger of the naive female elephant with a tender head (களைஇயர் – சொல்லிசை அளபெடை), பெருங்களிறு தொலைத்த – ruined by the big male elephant, முடத் தாள் ஓமை – bent trunk of a Toothbrush tree, Dillenia indica அருஞ்சுரம் செல்வோர்க்கு – to those who go on the wasteland path, அல்கு நிழல் ஆகும் – it will become shade during the day, குன்ற வைப்பின் கானம் – forest near the mountains, சென்று சேண் அகறல் வல்லிய நீயே – you are able to go far away (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 138, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்குருகு ஈனும்
தண்ணந்துறைவன், முன் நாள் நம்மொடு  5
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்,
கண் அறிவு உடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்  10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

Natrinai 138, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
This loud, ancient town with
roaring waves with the sweet
rhythm of festive dancers wearing
finely made jewels on their waists,
does not know anything, other than
that the lord of the cool shores,

……….whose salt merchants with
……….unstable lives who move
……….through the mountains selling
……….salt that grows in saline land
……….and heaped like hills,
……….throw away their broken cart
……….axle bars, and white herons
……….lay eggs in them,

strung garlands with us the other day
with waterlily flowers with thick stems,
that flourish between green leaves,
after removing their sepals.

Notes:  ‘அலர் ஆயிற்று’ என ஆற்றாளாகிய தலைவியிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.   மலரின் புறவிதழ் நீக்குதல் – புறநானூறு 116 – முழு நெறி, கலித்தொகை 143 – நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 – முழு நெறி, நற்றிணை 138 – பூவுடன் நெறிதரு.  முழங்கு திரை இன் சீர் தூங்கும் (10) – ஒளவை துரைசாமி உரை – கூத்தின் இனிய காலத்திற்கேற்ப முழங்குகின்ற கடலலைகள் ஒலிக்கும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துணங்கையாடும் மகளிரினுடைய இனிய தாள அறுதி முழங்குங் கடலோசை போலே பரவாநிற்கும்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உமணர் ஒழித்த பழம்பாரின் பண்ணழிவு கண்டு வெண்குருகு முட்டையிட்டு வாழும் என்றதால், தலைமகனால் வரைவு நீட்டிக்கப்பட்ட தலைவியது மேனி வேறுபாடு கண்டு, ஊரவர் அலர் கூறுகின்றனர் என்பது.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – மகளிர் ஆடும் துணங்கை இன்சீர்க்கேற்பக் கடலலை ஒலிக்கும் என்றது, வரைவு நிகழுந்துணையும் இவ்வூர் அலர் உரைக்கும் என்றவாறு.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  உவர் விளை – growing in the salty land, உப்பின் குன்று போல் குப்பை – mountain-like heaps of salt, மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை – unstable life of taking and selling going through mountains, கணம் கொள் உமணர் – group of salt merchants, உயங்குவயின் – due to burden, ஒழித்த – abandoned, பண் அழி பழம் பார் – ruined old axle bars (பண் = இயல்பு, பார் = வண்டியின் அடியிலுள்ள நெடுஞ்சட்டம்), வெண்குருகு ஈனும் – white herons/egrets/storks lay eggs, தண்ணந்துறைவன் – the lord of the cool seashore (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), முன் நாள் – in the past, the other day, நம்மொடு – with us, பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் – with the waterlilies with thick stems growing between the flourishing green leaves, நெறிதரு – removing the calyx/sepals, removing the outer petals, தொடலை தைஇ – strung garlands, tied garlands (தைஇ – சொல்லிசை அளபெடை), கண் அறிவு உடைமை – knowledge of having seen, அல்லது – other than that, நுண் வினை – fine workmanship, இழை அணி அல்குல் – waists with jewels, loins with jewels, விழவு – festivals with thunangai dances, ஆடு மகளிர் – female dancers, முழங்கு திரை – roaring waves, இன் சீர் தூங்கும் – spreads sounds with sweet rhythm, அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – this loud ancient town does not know, this uproarious ancient town does not know (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 139, பெருங்கௌசிகனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப்,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின்  5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி,
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே.  10

Natrinai 139, Perunkousikanār, Mullai Thinai – What the hero said to the raincloud
Oh huge, loud rainclouds!
You are linchpin to this world,
and many worship you.  May you
reach the peaks of all the mountains
in many lands and pour down with
sounds that are like padumalai tunes
from tightly strung fine lutes, and
roaring beats of drums with clay eyes.

Your rained at night with wind, and
many different flowers from our fine
town dropped, when I united sweetly
in the mountain slopes with my lover,
the dark woman with thick, curly hair. 

Notes:  தலைவன் வினை முற்றி வந்து பள்ளியிடத்தானாய் முகிலை வாழ்த்தியது.  ஆணி (1) – உலகாகிய தேர்க்கு அச்சாணியாய், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவ்வுலகத்தோர் ஆதாரமாக.  படுமலை (4) – ஒளவை துரைசாமி உரை – படுமலை பாலைப் பண் வகை ஏழனுள் ஒன்று.  அவை ஏழும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வரும்.

Meanings:  உலகிற்கு ஆணியாக – as linchpin of this world, as a protector of this world, பலர் தொழ – worshipped by many, பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு – peaks of  stable mountains in many places (நிலைஇய – செய்யுளிசை அளபெடை), ஏயினை உரைஇயரோ – may you spread well, may you sound well  (ஏயினை – நீ பொருந்தி, உரைஇயரோ – வியங்கோள் வினைமுற்று, சொல்லிசை அளபெடை, ஓகாரம் அசைநிலை, an expletive), பெருங்கலி எழிலி – O clouds roaring with loud sound, படுமலை – padumalai tune, நின்ற நல் யாழ் – in stable fine lutes, வடி நரம்பு – pulled tight strings, எழீஇ அன்ன – like raised (எழீஇ – சொல்லிசை அளபெடை), உறையினை – you pour loud rain, முழவின் மண் ஆர் கண்ணின் – like the covered eyes of drums (கண்ணின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இம்மென இமிரும் – you roar loudly (இம்மென – ஒலிக்குறிப்பு), வணர்ந்து ஒலி கூந்தல் மாயோளொடு – with the dark young woman with curly thick hair, புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் – united sweetly on the mountain slopes, நல் ஊர் – fine town, விரவு மலர் உதிர – different kinds of flowers drop, வீசி – blowing wind, இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே – you helped by falling at night (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 140, பூதங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது, தன் நெஞ்சிடம்
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந்தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரிப்,
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்ப, தந்தை  5
நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப்,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே, என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்  10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே.

Natrinai 140, Poothankannanār, Kurinji Thinai – What the hero said to his heart
She has no kindness or graces for me,
the young woman who plays with a ball,

……….in the front yard of her house
……….with sand, resembling the moon,
……….where her father’s chariot rides,

making her friends with huge eyes happy,
whose five-part braids drop their fragrant
powders made with aromatic material and
sandal paste made from tender branches of
cool trees with flower clusters, that flourish
in the rain from clouds that rise up to the east.

Do not hate her for that, my heart.  There is
is no other medicine for my great sorrow,
but her!

Notes:  குறை மறுக்கப்பட்ட தலைவன் ஆற்றாமையைத் தன் நெஞ்சிடம் உரைத்தது.  கொண்டல் (1) – ஒளவை துரைசாமி உரை – கீழ்காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கீழ்காற்று, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீரை முகந்து கொள்ளுதலையுடைய.  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  துகள்படு கூழை (4) – ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய துகள் படிந்து தோன்றும் கூந்தல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சாந்தம் பூசிய கூந்தல், H. வேங்கடராமன் உரை –  ஐந்து வகையாக வகுக்கப்பட்ட கூந்தல்.

Meanings:  கொண்டல் மா மழை – dark clouds brought by the eastern winds, dark clouds that took water, குடக்கு ஏர்பு – climbed to the west, குழைத்த சிறு கோல் – small branches with sprouts, இணர – with flower clusters, பெருந்தண் சாந்தம் – huge cool sandal trees, வகை சேர் ஐம்பால் – five-part braids made with many items (fragrant pastes), தகை பெற வாரி – combed elegantly, புலர்விடத்து உதிர்த்த – dropped after they got dry, துகள்படு கூழை – mixture with many kinds of powders rubbed on her hair, hair with a five-part braid, பெருங்கண் ஆயம் உவப்ப – friends with big eyes to be happy, தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து பந்தொடு பெயரும் – playing with a ball in her moon-like sand-covered front yard where her father’s chariot moves, பரிவு இல் ஆட்டி– she has no kindness toward me (ஆட்டி – பெண்), அருளினும் அருளாள் – she is not gracious to me, ஆயினும் பெரிது அழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே – do not hate her oh my big heart (மா – வியங்கோள் அசைச் சொல், an expletive signifying command), என்னதூஉம் – even a little bit (இன்னிசை அளபெடை), அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – there is no other medicine/cure for this disease with great sorrow (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 141, சல்லியங்குமரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கயவாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டிப்,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல, பல உடன்  5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம் எளிய மன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங்கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த  10
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

Natrinai 141, Salliyankumaranār, Pālai Thinai – What the hero said to his heart
My heart!  It is very easy for you to go.

But I will not leave the young woman
with flowing, thick hair,
……….pretty like the cool, rippled
……….sands of Arisil river surrounding
……….Ampar town with tall, new pretty
……….flags, belonging to king Killi who
……….desired fame, and fought battles
……….with chariots and elephants with
……….lifted tusks and rough, large trunks,
……….as bodies fell attracting kites,
and go through the wasteland
where rainy season’s dark, cloud-like
elephants with curved cheeks and big mouths 
play in black mud and rub against kondrai
trees with mature seed pods and make their
barks crack, and the many beautiful trees
on the hot, long path appear beautiful like
ascetics with long, braided hair, who live in the
mountains, and do not bathe.

Notes:  பொருள் தேடுதலில் விருப்புற்று நிற்கும் நெஞ்சிடம் தலைவன் இகழ்ச்சிபட உரைத்தது.  வரலாறு:  கிள்ளி, அம்பர், அரிசில்.  This is the only reference to Arisil River.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம் உரியியல் 65).  ஆடா மேனி (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசையாத மெய், ஒளவை துரைசாமி உரை – நீராடாத மேனி, H.வேங்கடராமன் உரை – நீராடாத உடல்.  அகநானூறு 123 – ஆடாப் படிவத்து ஆன்றோர் போல. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  இருஞ்சேறு ஆடிய – played in the dark mud, கொடுங்கவுள் – curved cheeks, கயவாய் – wide mouths, big mouths, மாரி யானையின் – of cloud-like elephants, மருங்குல் – sides, தீண்டி – rubbing, பொரி அரை – cracked trunks, ஞெமிர்ந்த – spread, புழல் காய் – fruits/pods with hollow, கொன்றை – laburnum trees, Golden shower trees, Cassia fistula, நீடிய சடையோடு – with long braided hair, ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல – hermits/ascetics who live in the mountains who do not bathe, like hermits/ascetics who live in the mountains who sit still, பல உடன் – with many, என்றூழ் நீள் இடை – long hot path, பொற்பத் தோன்றும் – appearing beautiful, அருஞ்சுரம் – harsh wasteland, எளிய மன் – it is very easy (மன் – மிகுதிக் குறிப்பு, signifying abundance), நினக்கே – for you (ஏ – அசைநிலை, an expletive), பருந்து பட – kites fall on bodies, பாண்டிலொடு பொருத – fight with chariots with wheels, பல் – many, பிணர் – rough surfaces, தடக் கை – big trunks, curved trunks, ஏந்து கோட்டு யானை – elephants with lifted tusks, இசை வெங்கிள்ளி – Chōzha King Killi/ Chōzha king who desires fame, வம்பு – new, அணி உயர் கொடி – decorated tall flags, அம்பர் சூழ்ந்த அரிசில் – Arisil River surrounding Ampar town, அம் தண் அறல் அன்ன – like the beautiful cool sand, இவள் விரி ஒலி கூந்தல் – her spread thick hair, விட்டு அமைகலனே – I will not abandon, I will not part from (அமைகலனே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 142, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலிகோல் கலப்பை அதள் அடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,  5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே, பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின்  10
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே.

Natrinai 142, Idaikkādanār, Mullai Thinai – What the hero said to his charioteer, about the heroine
Even if it is night time,
she’ll welcome guests happily,
the delicate young woman with
virtue suited to wear mullai
blossoms.

She lives in a town near the
forest with unfailing prosperity,
where,
on the last day of rainy season,
a shepherd who sells milk,
packs his soft rope hoop strung
with many ropes, kindling sticks,
and other tools in his draw-string
leather bag, and carries it on his
back along with a palm frond mat,
stands still, his legs resting
on his staff, whistles and calls
his small-headed sheep and goats,
which have moved away, confused.  

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வேற்றிடம் புகும் ஆட்டுக்கூட்டம் இடையன் விளித்த அளவில் மீண்டு சேர்ந்து தங்கும் என்றது, சோர்வுற்ற தன் நெஞ்சம் பாகன் விரைந்து தேரைச் செலுத்துவதால் சோர்வு நீங்கி நிற்கும் என்பதை உணர்த்திற்று.  Akanānūru 274, Natrinai 142 and Sirupānatruppadai 30 also have the phrase முல்லை சான்ற கற்பின் (10) -ஒளவை துரைசாமி உரைமுல்லை இருத்தல் என்னும் கற்பு நெறி, வேங்கடசாமி நாட்டார் உரை அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின் as ‘முல்லை மலர் அணிந்த கற்புபினையுடைய’, பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 274 – முல்லை மாலை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய.   முல்லை முறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை பரிபாடல் 15 – முல்லை மகளிரின் கற்பு.   மேற்கோள்:  அகநானூறு 274, இடைக்காடனாரின் பாடல் – தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  உறைவின் ஊரே (12) –   ஒளவை துரைசாமி உரை – உறைதலால் இனிமையை உடையதாகிய ஊர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறைகின்ற ஊர். 

Meanings:  வான் இகுபு சொரிந்த வயங்கு – sky pouring heavy rain, பெயல் கடை நாள் – last day of the rainy season, பாணி கொண்ட – in the hands, பல் கால் மெல் உறி – soft rope hoop (to hold pots on the head) made with many ropes, ஞெலிகோல் – kindling sticks, கலப்பை – bag with tools, அதள் அடு – made with leather, சுருக்கி – shrunk, closing, பறி – mat made with palm fronds, புறத்து இட்ட – hung on the back, பால் நொடை இடையன் – cattle herder who sells milk, நுண் பல் துவலை – many fine drops, ஒரு திறம் நனைப்ப – drench him on one side, தண்டு கால் வைத்த – placing his leg on his staff/rod, ஒடுங்கு நிலை – stood in a controlled manner, stood still, மடி விளி – whistled and called, சிறு தலைத் தொழுதி – small headed (goat, sheep) herd, ஏமார்த்து – confused, அல்கும் – he stays, புறவினதுவே – in the forest, பொய்யா யாணர் – unfailing prosperity, அல்லில் ஆயினும் – even if it is night time, விருந்து வரின் உவக்கும் – she will happily welcome guests when they come, முல்லை சான்ற கற்பின் – with virtue suited to wear mullai flowers, jasmine flowers, மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே – this is the sweet town where the delicate young woman lives, this is the town where the delicate woman lives (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 143, கண்ணகாரன் கொற்றனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஐதே காமம் யானே, ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம், இளையோள் 5
வழு இலள் அம்ம தானே, குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்,
‘நறிய நாறும் நின் கதுப்பு’ என்றேனே.  10

Natrinai 143, Kannakāran Kotranār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
Love is surprising!

Whenever I see her friends play
ōrai games, in the sand brought
and spread in our big mansion yard,
and the nochi tree growing there,
tears roll down my eyes.  More than
me, her parrot also cries, calling her
as though she is its relative.
My young daughter is faultless.
On days when I heard women in our
loud town gossip about her and spread
slander with harsh and sweet words,
I pretended that I did not understand
them.  I did not breathe.

I said to my daughter once,
“Your hair has a fragrant aroma.”

Notes:  தலைவி தலைவனோடு கூடி உடன்போனாள் என்பதை அறிந்த நற்றாய் உரைத்தது.  Ōrai games are played by girls in Natrinai 68, 143, 155 and 398.  இன்னா இன் உரை (8) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இன்னா இன்னுரை என்பது முரண் தொடர்.  அயலார் தலைவியின் களவொழுக்கத்தைப் பழித்தமையால் இன்னா உரை என்றும் களவும் ஓர் அறநெறியே ஆதலால் இனிய உரை என்றும் தாய் கருதினாள்.  நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே (10) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவன் வேற்றுப் புலத்தான்.  அவன் தந்த பூவும் தம் நிலத்திற்குரியது அன்று. எனவே பூ வேறுபாட்டினைத் தாய் உணர்ந்தாள்.  – ஐ வியப்பாகும் (தொல்காப்பியம், உரியியல் 87).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம் உரியியல் 65).

Meanings:  ஐதே காமம் – love is surprising/ beautiful/delicate, யானே – me, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), தருமணல் ஞெமிரிய – new sand brought and spread, திரு நகர் முற்றத்து – in the yard of the rich house, ஓரை ஆயமும் – the friends who play ōrai games and, நொச்சியும் – and the nochi tree, Vitex leucoxylon, Chaste tree, காண்தொறும் – whenever I see them, நீர் வார் கண்ணேன் – tears dripping from my eyes, கலுழும் என்னினும் – more than me who is crying, கிள்ளையும் – also our parrot, கிளை எனக் கூஉம் – keeps calling thinking she is its relative (கூஉம் – இன்னிசை அளபெடை), இளையோள் வழு இலள் – the young girl has not have a fault, அம்ம – இரக்கக் குறிப்பு, signifying pity, அசைநிலை,  an expletive, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, குழீஇ – together (சொல்லிசை அளபெடை), அம்பல் மூதூர் – loud/gossiping town, அலர்வாய்ப் பெண்டிர் – slander-spreading women, இன்னா இன் உரை கேட்ட – when I heard the harsh and kind words, சில் நாள் – few days, அறியேன் போல – I pretended like I don’t hear them, உயிரேன் – I did not breathe, நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – I told her (my daughter) that her hair smelled fragrant (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 144, கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண்கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி, பகுவாய்ப்  5
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங்கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்றுக்
கரை அருங்குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே.  10

Natrinai 144, Kachippēttu Perunthachanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My friend!  A black female elephant
trembles and trumpets in fear, sounding
like the roars of dark clouds,
since her huge male is attacked by a tiger.

It causes me fear.  My empty, naive heart
feels sad and my flower-like, kohl-rimmed
eyes shed tears.

A female tiger with gaping mouth roams
on the fearful, forked paths.
My lover swims across a rapid, bright,
deep forest river, its shores difficult
to see, bearing the river’s mixed flowers
on his shoulders.  I have been ignorant.
I have not told him not to come at night.

Notes: இரவுக்குறி வரும் தலைமகன் சிறைப்புறத்தானாய் இருக்க, அவன் கேட்டு திருமணம் புரிந்து கொள்ளும் வகையில் தலைவி கூறினாள். கருவி மா மழையின் (2) – H.வேங்கடராமன் உரை – மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகத்தைப் போன்று. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புலியால் களிறு கொல்லப்பட்டப் பிடி புலம்பும் என்றது, வழியில் ஏற்படும் தொல்லைகட்குத் தலைவன் ஆவானோ என்று தலைவி புலம்பி நிற்றலைக் குறித்தது. குட்டம் (8) – ஒளவை துரைசாமி உரை – ஆழமான மடு. கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  பெருங்களிறு உழுவை தாக்கலின் – since a tiger attacked a big male elephant, இரும் பிடி – black female, கருவி மா மழையின் – like those of the massive huge/dark clouds with thunder and lightning (மழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அரவம் – sounds, roars, அஞ்சுபு – fearing, போது ஏர் – flower-like (ஏர் – உவம உருபு, a comparison word), உண்கண் கலுழவும் – crying with kohl decorated eyes, ஏதில் பேதை நெஞ்சம் கவலை கவற்ற ஈங்கு ஆகின்று ஆல் – my empty naive heart is very sad here (ஆல் – அசைநிலை, an expletive), தோழி – my friend, பகுவாய்ப் பிணவுப் புலி வழங்கும் – a female tiger with a gaping mouth roams, அணங்கு அருங்கவலை – fearful forked path, அவிர் அறல் ஒழுகும் – bright water flowing, விரை செலல் – moving fast (செலல் – இடைக்குறை), கான் யாற்று – of a forest stream, கரை அருங்குட்டம் – difficult to see shores due to the deep water, தமியர் நீந்தி – he swims and comes alone, விரவு மலர் பொறித்த தோளர் – with different mixed flowers on his shoulders, இரவின் வருதல் – coming at night, அறியாதேற்கே – to me who is ignorant (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 145, நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங்கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும், நம்மொடு  5
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
‘தான் யாங்கு’ என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள், நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ,  10
அம்ம வாழி தோழி, அவர் தேர் மணிக் குரலே.

Natrinai 145, Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, oh friend!
Listen!  Our intense friendship
with the lovable lord of the shores,
……….where waves in the dark
……….backwaters crash and bring
……….white sand to the shores on
……….which adumpu vines grow
……….with large-petaled flowers
……….that women collect to create
……….flower strands for their hair,
is not like it used to be.  But our
unfair mother talks about him as
though he has united with you.  
She keeps asking about his
whereabouts.  

I understand the reason for the
changes to your beauty.
His chariot bells ring softly in the
pitch darkness of nights in our
village with punnai trees with fat
trunks.  What will happen now?

Notes:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக இருந்த பொழுது தலைவியிடம் கூறுவாளாய்த் தோழி வரைவு கடாயது.  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அடும்பின் மலர் மகளிர் கூந்தலுக்குரிய மாலையில் சேர்க்கப்படும் என்பது, நீ இவளைப் பலருமறிய மணந்து பூச்சூட்டிப் பெறுவாய் என்பது.  உள்ளுறை – கழிக்கரை வெண்மணற் பரப்பில் பூத்த அடும்பின் பூ மகளிர் கோதை தொடுத்தற்கு அமைந்தாற் போலக் கானற்கண் தலைமகனொடு நமக்கு உளதாகிய கேண்மை ஊரவர் உரைக்கும் அலர்க்கு பொருளாயிற்று என்பது. அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  இருங்கழி – vast/dark brackish waters/backwaters (கழி – ஆகுபெயர்), பொருத – hitting, attacking (waves), ஈர வெண்மணல் – wet white sand, மாக் கொடி அடும்பின் மா இதழ் – big adumpu vines with big flower petals, Ipomoea pes caprae, அலரி கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் – women collect flowers are for weaving flower strands for their hair, காமர் கொண்கன் – loving lord of the shores, நாம் – fierce, வெங்கேண்மை – desirable friendship, ஐது – tenderly, ஏய்ந்து இல்லா ஊங்கும் – even if it is not connected now (ஏய்ந்து – பொருந்தி), நம்மொடு புணர்ந்தனன் போல உணரக் கூறி – she talks like he has united with you, தான் யாங்கு என்னும் – where is he, அறன் இல் அன்னை – mother with no justice (அறன் – அறம் என்பதன் போலி), யான் எழில் அறிதலும் உரியள் நீயும் – I understand the reason for the changes to your beauty, நம் பராரைப் புன்னைச் சேரி – our village with thick-trunked punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), மெல்ல – delicately, நள்ளென் கங்குலும் வருமரோ – will be come at the pitch dark of night (வரும்+ அரோ, அரோ – அசைநிலை, an expletive), அம்ம – listen to me, இடைச்சொல், a particle, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, அவர் தேர் மணிக் குரலே – the sounds of his chariot bells (ஏ – அசைநிலை, an expletive)  

நற்றிணை 146, கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘வில்லாப் பூவின் கண்ணி சூடி,
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!
கடன் அறி மன்னர் குடை நிழல் போலப்
பெருந்தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து 5
இருந்தனை சென்மோ, வழங்குக சுடர் என’,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்,
‘நல்லேம்’ என்னும் கிளவி, வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய 10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே.

Natrinai 146, Kantharathanār, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby
Listen, my confused heart
that is distressed
by the dark, beautiful young
woman who is splendid like
the painting of a talented 
painter!

You desire to ride on a madal
horse created from the stems  
of a tall, dark palmyra tree,
wearing garlands strung with
flowers that cannot be sold,
and roam through many towns,
well confused.  
Before you leave, get down from
the horse and stay for a little while
in the large, cool shade of a tree
that is like the royal umbrella of
a king who rules with justice, until
the heat of the sun is reduced. 
Caring people who are kind will
gather around and say that we
are good.

Notes:  தலைவன் பன்னாள் தோழியை இரந்து தன் குறையை உணர்த்தினான்.  அவனுடைய வேண்டுதல் நிறைவேறாதலால் மடல் ஏறத்துணிந்த தன் நெஞ்சிடம் கூறுவான் போல் தோழி கேட்க உரைத்தான்.  ஒளவை துரைசாமி உரை – மடலூர்தல் என்பது தமிழகத்தில் எங்கும் எக்காலத்திலும் நடைபெறாத ஒரு கற்பனைச் செயல்.  வில்லாப் பூ (1) – ச. வே. சுப்பிரமணியன் உரை – விற்கப்படாத பூக்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விற்க இயலாத பூ, ஒளவை துரைசாமி உரை – வில்லாப்பூ பிற்காலத்தில் வில்லாப்பூ எனவும் வில்லா மரம் வில்வ மரம் என்றும் வழங்குவவாயின.  வில்லாப்பூவை விலைக்கு விற்கப்படாத பூ என்று பொருள் கொள்வாருமுண்டு, H.வேங்கடராமன் உரை – விலைப்படுத்தற்கு ஆகாத பயனற்ற பூவாகிய பூளை, உழிஞை, எருக்கம் ஆவிரம் முதலிய பூக்கள்.  நல்லேம் என்னும் (8) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நாம் நல்லேம் என நம்மைப் புகழ்வர், ஒளவை துரைசாமி உரை – உமக்கு யாம் நல்லம்.  எம் இல்லம் வருக என்றும் சொல்லுதலையுடையவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரம் தீட்ட வல்ல ஓவியன்.   கு. வெ. பாலசுப்ரமணியன் உரை:  ‘கடனறி மன்னர் குடைநிழல்’ என்றது மன்னர் எங்ஙனம் குடிகள் வருத்தம் நீங்குமாறு குடைநிழல் கொண்டு காப்பாரோ அங்ஙனம் தலைவியால் நேர்ந்த துயர் நீங்கத் தோழி கருதிட வேண்டும் எனவும் குறித்தது.  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  வில்லாப் பூவின் – with flowers that are not sold, with flowers that are unable to be sold, கண்ணி சூடி – wearing garlands, wearing flower strands, நல் ஏமுறுவல் – I am well confused, என – என்னும்படி, இடைச்சொல், பல் ஊர் திரிதரு – wandering through few towns, நெடு மாப் பெண்ணை மடல் மானோயே – you are with a madal horse made with tall dark palmyra (female palmyra tree) stems, Borassus flabellifer, கடன் அறி மன்னர் குடை நிழல் போல – like the umbrella shade of a king who knows his responsibilities, பெருந்தண்ணென்ற மர நிழல் – huge cool tree shade, சிறிது இழிந்து – getting down a little from the horse, இருந்தனை சென்மோ – you stay there and then go (மோ – முன்னிலை அசை, an expletive used with the second person), வழங்குக சுடர் – may the sun offer relief, என – thus, அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் – anxious people who gather graciously, நல்லேம் என்னும் – that we are good, கிளவி – words, வல்லோன் எழுதி அன்ன – like the paintings of a painter, like the written words of an expert, காண்தகு – suitable for looking, attractive, வனப்பின் – with splendor, ஐயள் – the delicate young woman, the beautiful young woman, மாயோள் – the dark woman, the woman with the complexion of tender mango leaves, அணங்கிய – caused distress, மையல் நெஞ்சம் – confused heart, என் மொழிக் கொளினே – if you listen to my words (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 147, கொள்ளம்பக்கனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்கு ஆகுவமோ ‘அணி நுதல் குறுமகள்!
தேம்படு சாரல் சிறு தினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர, நீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?’ எனக் கூறி
அன்னை ஆனாள் கழற, முன் நின்று,  5
‘அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன், காண்டலும் இலனே,
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்’ என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை, அது கேட்டுத்  10
தலை இறைஞ்சினளே அன்னை,
செலவு ஒழிந்தனையால், அளியை நீ புனத்தே?

Natrinai 147, Kollampakkanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Your mother stood before you
and asked repeatedly in anger,
“My young daughter with a lovely
forehead!  What else happened
when you went to our millet field
on the honey-filled mountain
slopes, to chase red-beaked, green
parrots from eating the tiny millet
with big spears?”  Not lying or
thinking, you revealed the truth by
saying, “I with my bamboo rattle in
my hand, do not know the lord of the
big mountains with roaring waterfalls,
nor have I seen him, or plucked flowers
and played in the springs with him.”

On hearing that, your mother bent her
head.  You have ruined your chances of
going to the millet field.
Aiyo!  You are pathetic!  What will happen
to us now?

Notes:  பகல்குறியில் வந்தொழுகும் தலைவன் திருமணம் புரியாமல் காலம் தாழ்த்தினான்.  அவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி கூறியது.  வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பா உரையில் , ‘களவு உற்றவழிக் கூறியது’ என இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.

Meanings:  யாங்கு ஆகுவமோ – what will happen to us, அணி நுதல் குறுமகள் – oh young woman with a beautiful forehead, தேம்படு சாரல் – mountain slopes with honey, mountain slopes with honey combs (தேம் தேன் என்றதன் திரிபு), சிறு தினை – tiny millet, பெருங்குரல் – big spears, செவ்வாய்ப் பைங்கிளி – red-beaked green parrots, கவர – to take them, நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவண் – and where did you go from there (மற்று – வினைமாற்று), எனக் கூறி – thus she asked, அன்னை – mother, ஆனாள் கழற – asked continuously in anger, முன் நின்று – standing before you, அருவி ஆர்க்கும் – waterfalls roaring, பெருவரை  நாடனை – the  lord of the country with lofty  mountains, அறியலும் அறியேன் – I do not know, காண்டலும் இலனே – I have not seen him (இலனே – ஏ அசைநிலை, an expletive), வெதிர் புனை – bamboo made, தட்டையேன் – I was holding my rattle (chasing birds), மலர் பூக் கொய்து – plucking flowers, சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என – I did not jump and play in the spring (with him), நினைவு இலை – without thinking (இலை – இல்லை என்பதன் விகாரம்), பொய்யல் – you did not tell a lie, அந்தோ – aiyo, alas, வாய்த்தனை – you uttered the truth, அது கேட்டு – on hearing that, தலை – head, இறைஞ்சினளே – she bent her head (ஏ – அசைநிலை, an expletive), அன்னை – mother, செலவு ஒழிந்தனையால் – you have lost the opportunity to go (ஒழிந்தனை + ஆல், ஆல் – அசைநிலை), since you ended, அளியை – you are pitiable, நீ – you, புனத்தே – to the millet field (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 148, கள்ளம்பாளனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வண்ணம் நோக்கியும், மென்மொழி கூறியும்,
‘நீ அவண் வருதல் ஆற்றாய்’ எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங்கயம் புலர்ந்த நீர் இல் நீள் இடை,
செங்கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி,  5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து
செங்கண் இரும்புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்  10
அருஞ்சுரம் இறப்ப என்ப,
வருந்தேன் தோழி, வாய்க்க அவர் செலவே.

Natrinai 148, Kallampālanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He looked at your tender complexion
and spoke gentle words, the man who
went on a business trip.  “You cannot
bear going there,” he said to you.

The long path he took has no water
and large ponds are dry.  Not fearing the
increased presence of wasteland warriors
with harsh bow leaning on the lovely
sides of the red-trunked kadampam trees,
an enraged, red-eyed, mighty, huge male
tiger attacked a bull elephant with lifted
tusks, leaping on his spotted face, to end
the hunger pangs of his female with thick,
strong claws, who had given birth to sweet
cubs in a cave recently.

They say that he will be crossing the harsh
wasteland.  I am not worried, my friend.
Let him go on his journey!

Notes:  பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  வண்ணம் (1) – ஒளவை துரைசாமி உரை – பண்பு,  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நிறத்தின் மென்மை.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பெண்புலியின் பசியும் நோயும் தீர்க்கும் பொருட்டு, வீரர்களைக் கண்டும் அஞ்சாத ஆண்புலி களிற்றின் மேல் பாயும் என்றது, நின்னொடு தடையில்லாமல் இல்லறம் பேணியொழுகக் கொடிய பாலைவழியும் அஞ்சாது பொருளீட்டி வரச் சென்றனன் தலைவன் என்றதாம்.  Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth.  Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:  வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் – looking at your delicate complexion and speaking gentle words, நீ அவண் வருதல் ஆற்றாய் – you cannot bear going there, என – thus, தாம் தொடங்கி – he started, ஆள்வினைப் பிரிந்தோர் – the man who went on man’s business, இன்றே – now, நெடுங்கயம் புலர்ந்த நீர் இல் நீள் இடை – the long path without water with large dried ponds, செங்கால் மராஅத்து – of red-trunked kadampam trees, கடம்பு, மரவம், வெண்கடம்பு, Kadampa Oak, Anthocephalus cadamba, அம் புடைப் பொருந்தி – placed on the beautiful sides, வாங்கு சிலை மறவர் – wasteland warriors with harsh bows, wasteland warriors with curved bows, வீங்கு நிலை அஞ்சாது – not afraid of the increased stand, not afraid of the increased numbers, கல் அளை செறிந்த – inside the rocky den, inside the cave, வள் உகிர் – strong claws, பிணவின் – female’s, இன் புனிற்று – giving birth to sweet cubs, sweet child birth, இடும்பை தீர – for its sorrow to end, for its hunger pangs to end, சினம் சிறந்து – with great rage, செங்கண் இரும்புலிக் கோள் வல் ஏற்றை – red-eyed dark/huge murderous male tiger, உயர் மருப்பு ஒருத்தல் – a male elephant with lifted tusks, புகர் முகம் பாயும் – jumps on its face with spots, அருஞ்சுரம் இறப்ப என்ப – they say he will be crossing the harsh wasteland, வருந்தேன் தோழி – I am not sorry my friend, வாய்க்க அவர் செலவே – let him go on his journey (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 149, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
அலந்தனென் வாழி தோழி, கானல்  5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மா பூண்ட நெடுந்தேர் கடைஇ,
நடுநாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே,
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே.  10

Natrinai 149, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
Peering through the sides of their eyes,
women in small and big groups look at you,
raise their fingers to the tips of their noses
and spread gossip about you on our streets.
On hearing that, mother hit you with
a small stick and hurt you.  I am sad!

When the lord of the shores comes
at midnight, riding his chariot with fast
horses with bright manes, through groves,
treading on fragrant flowers, I desire for
you to leave with him.  Let this slanderous
town get lost!

Notes:  தலைவியை உடன்போகுமாறு ஒருப்படுத்தக் கருதித் தோழி உரைத்தது.  தலைவன் சிறைப்புறமாக இருப்பதுமாம்.  ஒளவை துரைசாமி உரை –  ‘ஒரு தலை உரிமை வேண்டினும்’ (தொல்காப்பியம், பொருளியல் 29) எனத் தொடங்கும் நூற்பா உரையில், ‘போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, ‘இது போக்குக் குறித்தது’ என்பர் இளம்பூரணர்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  ஒளவை துரைசாமி உரை – தமர் வரைவு மறுத்தவிடத்தும் வேற்று வரைவு வருமிடத்தும் நிகழற்பாலதாய உடன்போக்கினைத் தோழி இப்போழ்து வற்புறுத்தற்கு ஏது ஊரவர் கூறும் அலர் மிகுதியும், தாயறிவும், அவை வாயிலாகப் பிறக்கும் இற்செறிப்பும் என்பது யாப்புறுத்தற்கு, அலர் சுமந்தொழிக இவ்வழுங்கல் ஊர் என்றாள்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:  சிலரும் – and a few, பலரும் – and many, கடைக்கண் – sides of their eyes, நோக்கி – looking, மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி – placed their pointing fingers on their noses, மறுகில் &#