எட்டுத்தொகை – கலித்தொகை 101-117 முல்லை

கலித்தொகை, Kalithokai

Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

கலித்தொகை உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
கலித்தொகை – புலியூர் கேசிகன்

முல்லைக் கலி – Mullaikkali-101 – 117

சோழன் நல்லுருத்திரன்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – Patient Waiting

கலித்தொகை 101
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தோழி சொன்னது

தலைவியிடம்:

தளி பெறு தண் புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்,
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்,
மணி புரை உருவின காயாவும் பிறவும், 5
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு.

அவ்வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப, 10
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி,
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத்,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறை உளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ.

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்!
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம். 20

சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்,
குடர் சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம் காண்!
படர் அணி அந்திப் பசுங்கண் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டுக் 25
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்.

செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்!
ஆர் இருள் என்னான் அருங்கங்குல் வந்து தன் 30
தாளின் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்.

என ஆங்கு,
அணி மாலைக் கேள்வன் தரூஉமார் ஆயர்
மணி மாலை ஊதும் குழல். 35

தலைவனிடம்:

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின், படாஅகை
ஈன்றன ஆயமகள் தோள்.

தலைவியிடம்:

பகலிடக் கண்ணியன், பைதல் குழலன்,
சுவல் மிசைக் கோல் அசைத்த கையன், அயலது 40
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்.

கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆன் உள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை; அவன் கண்டு 45
வேளாண்மை செய்தன கண்.

ஆங்கு ஏறும் வருந்தின! ஆயரும் புண் கூர்ந்தார்!
நாறு இருங்கூந்தல் பொது மகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார், பொதுவரொடு
எல்லாம் புணர் குறி கொண்டு. 50

Kalithokai 101
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine’s friend said

To the heroine:
Young herder men, ready to assert
their strength, wait for the competition,
wearing beautifully,
strands of flowers that have blossomed from
buds on the dry stems in the cool land
after it received its first rains,
pidavam flowers with thorny backs, kōdal
blossoms with petals that sway like one who is
drunk and appearing like kindled flame,
kaya flowers that resemble sapphire, and
other blossoms.
They enter the arena together to seize bulls
with horns sharpened like the axe
of the enraged, mighty Sivan.

The field roars with sounds like that of rain and
thunder. Fragrances spread and dust rises up.
Young women are standing in a row. The young
herder men pray to the gods on the shores,
banyan trees and those on the sturdy kadampam
trees in a fitting manner and jump into the arena
according to tradition.

A young herder leaps at a bull’s horns without
fearing the looks on its dull eyes, the color of caddis
flies. Look! It gores and kills him, and lifts his mangled
body on its horns, appearing like the vengeful attack
of Veemasēnan on Thuchāthanan’s chest that was
ripped open among foes when he stretched his hand
to seize Draupathi’s lovely, flowing hair.

Look at the young herder wearing a beautiful garland
made with flowers from mountain caves, who is attacked
and stabbed by a black bull with a wide flame-like swirl
pattern on its forehead, his intestines hanging out of
his mutilated body, the scene resembling Sivan of green
hue distressing and cleaving the chest of Kootruvan at the
end of time, and throwing away his intestines to ghouls
as food.

Look at the young herder who jumps, not fearing the
white bull with tiny bright spots behind its ear, that
gores him with its sharp-tipped horns and mangles
him, resembling Asuwathaman who killed Sikandi,
the murderer of his father Dhronar, by wrenching his
head with his arms.

The herders are playing music with their flutes
decorated with gems. This is a good sign. It will bring
your lover wearing a pretty garland.

To the hero:

If you seize the bull that is mightier than a rutting
elephant, you will receive the arms of the young
woman with victory flags.

To the heroine:

He is nearby, the man who wears a garland with day
flowers, who plays a melancholy melody on his flute,
who carries a swaying rod that he rests on his
shoulders. Our relatives declare, “We will give our
daughter with thick dark hair to man who subdues
a bull.”

Your young herder man stands in the midst of our
cows and says with determination that there is none
equal to him in seizing bulls. It is not unlikely that he
will become your husband. Your eyes indicate good
omen.

The bulls are fatigued and the herders are wounded.
Women with fragrant dark hair enter the lovely cool
groves with mullai flowers, along with their young men,
on seeing the signs to unite.

Notes:  சாக் குத்தி (16) – சாவக் குத்தி என்பது சாவு என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சாக் குத்தி என வந்தது. (சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 209).  வேளாண்மை செய்தன கண் (46) – நச்சினார்க்கினியர் உரை – இடக்கண் துடித்தல். வலக்கண் துடிக்கலாதிருந்தலும் நன்னிமித்தம் ஆதலிற் செய்தவென பன்மையாற் கூறினாள்.  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  தளி பெறு தண் புலத்து – in the cool land that receives rain, தலைப்பெயற்கு – for the first rain, அரும்பு ஈன்று – put out new buds, முளி முதல் பொதுளிய – flourishing on stems that were dry before, முள் புற பிடவமும் – pidavam flowers with thorny backs, காட்டு மல்லிகை, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, களி பட்டான் நிலையே போல் – like one who is joyous drinking, தடவுபு – swaying, துடுப்பு ஈன்று – put out long petals, put out ladle-like petals, ஞெலிபு உடன் – like kindled flame, நிரைத்த – in rows, ஞெகிழ் இதழ் கோடலும் – kōdal flowers with opened petals (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), மணி புரை உருவின காயாவும் – kāyā flowers that have the color of sapphire gems, Ironwood tree,  Memecylon edule (புரை – உவம உருபு, a comparison word), பிறவும் – and others, அணி கொள மலைந்த கண்ணியர் – men wearing them as head strands, தொகுபு உடன் – together, மாறு எதிர்கொண்ட – ready for the competition, accepted the challenge, தம் மைந்துடன் நிறுமார் – in order to assert their strength, சீறு – rage, அரு – harsh, முன்பினோன் கணிச்சி போல் – like the axe of the mighty god – Sivan, கோடு சீஇ ஏறு – bulls with horns that have been sharpened (சீஇ – சொல்லிசை அளபெடை), தொழூஉப் புகுத்தனர் – they let them into the rodeo arena (தொழூஉ – இன்னிசை அளபெடை), இயைபு உடன் ஒருங்கு – together,

அவ்வழி – there, முழக்கு என – like the sounds of rain, இடி என – loud sounds like thunder, முன் சமத்து ஆர்ப்ப – roaring in the field,  வழக்கு – movement, மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – came there together accepting the challenge, நறையொடு – along with fragrances, துகள் எழ – as dust was raised, நல்லவர் அணி நிற்ப – the young women were standing in a row, துறையும் – and shores, ஆலமும் – and banyan trees, தொல் வலி – ancient strength, மராஅமும் – kadampam trees, kadampa oak (இசைநிறை அளபெடை), முறையுளி – according to tradition, பராஅய் – praising gods, பாய்ந்தனர் தொழூஉ – they leaped into the arena (தொழூஉ – இன்னிசை அளபெடை),

மேல் பாட்டு – on the tall horn, உலண்டின் நிறன் ஒக்கும் – like the color of the case worms, caddis worms (நிறன் – நிறம் என்பதன் போலி), புன் குரு – dull colored, கண் நோக்கு – the looks from its eyes, அஞ்சான் பாய்ந்த பொதுவனை – the young herder who leaped without fear, சாக் குத்திக் கோட்டு இடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் – the appearance of the bull stabbing him and killing him and lifting him with his horns and mangling him, காண் – look, அம் சீர் அசை இயல் கூந்தல் – pretty swaying hair, கை நீட்டியான் நெஞ்சம் பிளந்து – splitting the chest of the one who extended his hands – Thuchāthanan, இட்டு நேரார் நடுவண் – among foes, தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் – appearing like Veemasēnan who took revenge (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

சுடர் விரிந்தன்ன – like spreading flame, like wide flame, சுரி நெற்றிக் காரி – black bull with a swirl pattern on his forehead, விடரி – mountain crevices, அம் கண்ணி – beautiful garland, பொதுவனைச் சாடிக் குடர் சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம் – the appearance of seeing the stabbed mangled herder with his intestines pouring out (குடர் – குடல் என்பதன் போலி), காண் – see, படர் அணி அந்தி – at the end of time when it is painful, பசுங்கண் கடவுள் – Sivan whose one side is green because of Umai who is green, she is his other half, இடரிய – causing distress, ஏற்று எருமை – one on a buffalo, Kootruvan (எருமை – ஆகுபெயர் கூற்றுவனுக்கு), நெஞ்சு இடந்து இட்டு – split his chest, குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – appearing like the one who is feeding intestines to ghouls/evil spirits (குடர் – குடல் என்பதன் போலி, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

செவி மறை – behind the ears, நேர் – pretty, மின்னும் – that are bright, நுண் பொறி – fine spots, வெள்ளைக் கதன் அஞ்சான் – not fearing the rage of the white bull, பாய்ந்த பொதுவனை – the young herder who jumped, சாடி நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் – the appearance of him attacked by the sharp ends of its horns and mangled, காண் – look, ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து – came at night without thinking that it is pitch dark, தன் தாளின் – due to his effort, கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானை – he (அசுவத்தாம்) attacked and killed the one who killed (சிகண்டி) his father (துரோணாசாரியன்), தோளின் திருகுவான் போன்ம் – like twisting his head with his arms (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), அணி மாலைக் கேள்வன் – your lover with a pretty garland, தரூஉமார் – to bring, ஆயர் மணி மாலை ஊதும் குழல் – the music played by herders with flutes decorated with gems (is an omen),

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின் – if you seize the fierce bull that is more fierce than a rutting elephant not letting it go (கடாஅ – இசை நிறை அளபெடை, விடாஅது – இசைநிறை அளபெடை), படாஅகை ஈன்றன – will yield victory flags (படாஅகை – இசை நிறை அளபெடை), ஆயமகள் தோள் – the arms of the young herder woman,

பகலிடக் கண்ணியன் – man with a garland on his head with flowers that bloomed during the day (பகலிட – பகலில் மலர்ந்த), பைதல் குழலன் – one who plays melancholy music on the flute, சுவல் மிசைக் கோல் அசைத்த கையன் – one who sways the rod placed on his shoulder with his hands, அயலது –  nearby, கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்கூந்தல் அணை கொடுப்பேம் யாம் – we will give our daughter with thick dark hair to the man who controls a murderous bull (பல் இருங்கூந்தல் – அன்மொழித்தொகை),

கோளாளர் என் ஒப்பார் இல் என – that there is nobody equal to me to seize, நம் ஆன் உள் – among our cattle, தாளாண்மை கூறும் – says with enthusiasm, says with determination, பொதுவன் – the young herder, நமக்கு ஒரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை – it is not that he will not be your husband, அவன் கண்டு – on seeing him, வேளாண்மை செய்தன கண் – your eyes reveal your love for him, your left eyes twitch indicating good omen (see notes),

ஆங்கு – there, ஏறும் வருந்தின – the bulls are fatigued, ஆயரும் புண் கூர்ந்தார் – and the herders were bruised greatly, நாறு இருங்கூந்தல் பொது மகளிர் எல்லாரும் – all the women with fragrant dark hair, முல்லை – jasmine flowers, அம் தண் பொழில் – lovely cool grove, புக்கார் – they entered, பொதுவரொடு எல்லாம் – all of them with along their herder men, புணர் குறி கொண்டு – understanding the signs to unite

கலித்தொகை 102
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும், தோழனும், பிறரும் சொன்னது

தலைவன்:

கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற
தண் நறு பிடவமும், தவழ் கொடித் தளவமும்
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்
அன்னவை பிறவும், பல் மலர் துதையத்
தழையும் கோதையும் இழையும் என்று இவை 5
தைஇயினர், மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார், உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று?

தோழன்:

ஓஒ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா, 10
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்.

தலைவன்:

சொல்லுக……………………………………………………………..

சுற்றத்தார்:

…………………”பாணியேம்” என்றார்; “அறைக” என்றார்; பாரித்தார்
மாண் இழை ஆறு ஆகச் சாறு.
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் 15
மிடை பெறின், நேராத் தகைத்து,

தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து, உடன்
எதிர் எதிர் சென்றார் பலர்.
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல். 20
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு,
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்.

அவருள் மலர் மலி புகல் எழ, அலர் மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ 25
எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான் மன்ற அவ் ஏறு,
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன் கொலோ,
ஏறு உடை நல்லார் பகை?

மடவரே நல் ஆயர் மக்கள்; நெருநை 30
அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்;
ஆங்கு, இனித்
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக,
பண் அமை இன் சீர் குரவையுள், தெள் கண்ணித், 35
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென்தோள் பாராட்டிச் சிறுகுடி
மன்றம் பரந்தது உரை!

Kalithokai 102
Chōlan Nalluruthiran, Mullai, What the hero, his friend and others said

Hero:

Who is this young woman who has
entered my life with her body, happily
playing with her friends of delicate words
wearing thick garments, garlands and
ornaments woven with many flowers, cool
fragrant pidavam flowers, thalavam flowers
from spreading creepers, and colorful large
thōndri blossoms that have grown after the
rapid rains from the wide dark skies?

Hero’s Friend:

O! O! She is the one for whom it has been
announced constantly with drums and words for
everyone to hear, that other than the man who
captures the warring, handsome bull, none can
touch her dark, pretty body.

Hero:

Tell them I will capture the bull.

Relatives of the Heroine:

“We will not delay” they say. “For someone to
attain the young woman with splendid jewels,
let drums roar in the festival,” they say. It would
be worthy for young women with peafowl nature
to be able to see in all directions with bright eyes
from the raised platforms.

Young herder men advance together to jump on
the bulls, facing them. On seeing them, the bulls
rise up with great rage like that of murderous
bows, bend their heads and run charging the
young men with lifted chests. Dust flies. Some
panic.

Among them a young man with desire, wearing
a flower strand on his shoulders that are the color
of sapphire, climbs on the hump of a bull which is
next to the neck, and causes distress to the bull.
On seeing its pain, the fine people who own the bull
rise up in anger ready to fight. Why is it so?

They are stupid people, these fine herders who bore
attacks yesterday, who are here today to seize the
bulls. Let the beats of the thannumai drums roar
without tiring! In the small town’s common
grounds, kuravai dances are performed to melodies
with perfect beat. The young woman of lovely smiles
is praised along with the young man of dark complexion
with lovely red clothing, bright flower garlands, firm
shoulders, and martial prowess.

Notes:  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  தலைவன்:  தலைவன் கண் அகல் இரு விசும்பில் – in the wide dark sky, கதழ் பெயல் – rapid rain, heavy rain, கலந்து – mixed, ஏற்ற – accepting, தண் நறு பிடவமும் – cool fragrant pidavam flowers, காட்டு மல்லிகை, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, தவழ் கொடித் தளவமும் – thalavam flowers on spreading vines, golden jasmine, செம்முல்லை, வண்ண வண் தோன்றியும் – colorful large thōndri, kānthal, malabar glory lily, Gloriosa superba, வயங்கு இணர்க் கொன்றையும் – bright clusters of kondrai flowers, Laburnum flowers, Golden Shower Tree, Cassia sophera, அன்னவை பிறவும் – those and others, பல் மலர் – many flowers, துதைய – dense, clusters, தழையும் – leaf garments, கோதையும் – and garlands, இழையும் – ornaments, என்று இவை தைஇயினர் – those who tied all these (தைஇயினர் – சொல்லிசை அளபெடை), மகிழ்ந்து – happily, திளைஇ – closely, happily, விளையாடும் மட மொழி ஆயத்தவருள் – playing among the friends of delicate words, இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள் இன்று – who is she who has entered my life in her body,

தோழன்:  ஓஒ – வியப்புக்குறி, இவள் – she, பொரு புகல் நல் ஏறு கொள்பவர் – those who capture a fine bull that desires fighting, அல்லால் – other than, திரு மா மெய் தீண்டலர் – they cannot touch her beautiful dark body, என்று கருமமா – for this matter (இது காரியமாக), எல்லாரும் கேட்ப – for everyone to listen, அறைந்து எப்பொழுதும் – drums beat and announced constantly, சொல்லால் தரப்பட்டவள் – she was brought and announced with words,

தலைவன்:  சொல்லுக – tell them (that I will capture the bull),

தலைவியின் குடும்பத்தார்:  பாணியேம் என்றார் – “we will not delay” they said, அறைக என்றார் – “beat the drums” they said, பாரித்தார் – they announced, மாண் இழை ஆறு ஆக – to attain the young woman with splendid jewels (மாண் இழை – அன்மொழித்தொகை), சாறு – festival, சாற்றுள் – in the festival, பெடை அன்னார் – women with female bird/peafowl like nature, கண் பூத்து நோக்கும்வாய் எல்லாம் – in all the directions that they see with their bright eyes, மிடை பெறின் நேராத் தகைத்து – it would be very great if they are on the tall platforms,

தகை வகை – perfect, மிசை மிசை – above, பாயியர் – to jump, ஆர்த்து – with uproars, உடன் எதிர் எதிர் சென்றார் – they went together on the opposite side, பலர் – many, கொலை மலி சிலை – murderous bow, செறி செயிர் – great rage, அயர் சினம் சிறந்து உருத்து – with confusion and great rage, எழுந்து ஓடின்று – they rose up and ran, மேல் எழுந்தது துகள் – dust rose up, ஏற்றனர் மார்பு – men lifted their chests, கவிழ்ந்தன மருப்பு – the horns of bulls bent, கலங்கினர் பலர் – many panicked,

அவருள் – among them, மலர் மலி – abundant flowers, புகல் எழ – with arrogance, with desire, அலர் மலி – with abundant flowers, மணி புரை – like sapphire, நிமிர்தோள் – lifted shoulders, பிணைஇ எருத்தோடு இமில் இடை தோன்றினன் – one man appeared holding the hump which is with the neck, நச்சினார்க்கினியர் உரை – கழுத்தோட கூடக் கிடக்கின்ற குட்டேற்றிடத்தே (இமிலிடத்தே) தோன்றினான்  (பிணைஇ – சொல்லிசை அளபெடை), தோன்றி வருத்தினான் – he appeared and caused it distress, மன்ற – for sure, அவ் ஏறு ஏறு எவ்வம் காணா எழுந்தார் – they rose up unable to see the pain of their bull, எவன் – why is it so, கொலோ – கொல், ஓ – அசைநிலைகள், ஏறு உடை நல்லார் பகை – the anger of the fine people who owned the bull,

மடவரே – they are ignorant people (ஏகாரம் அசை நிலை, an expletive), நல் ஆயர் மக்கள் – the fine herder folks, நெருநை – yesterday, அடல் ஏற்று – of the attacking bulls, எருத்து இறுத்தார்க் கண்டும் – on seeing those hurt by hanging on to the necks of the bulls, மற்று இன்றும் உடல் ஏறு கோள் சாற்றுவார் – they are here today announcing that they want to seize the bulls, ஆங்கு – there, இனித் தண்ணுமைப் பாணி தளராது எழூஉக – now let the beats of thannumai rise up without tiring now (எழூஉக – இன்னிசை அளபெடை), பண் அமை – perfect tunes, இன் சீர் குரவையுள் – in kuravai dances with sweet beat, தெள் கண்ணி – bright garlands, திண் தோள் – firm shoulders/arms, திறல் ஒளி  மாயப் போர் – prowess in confusing battles, மா மேனி – dark body, அம் துவர் ஆடைப் பொதுவனோடு – along with the herder man with pretty red clothing, ஆய்ந்த முறுவலாள் – the young woman with analyzed smiles, the young woman with pretty smiles, மென்தோள் பாராட்டி – praising her delicate arms, சிறுகுடி – small town, small village, மன்றம் – common grounds, பரந்தது – spread, உரை – words

கலித்தொகை 103
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தோழி தலைவியிடம் சொன்னது
மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்,
கல்லவும், கடத்தவும், கமழ் கண்ணி மலைந்தனர்;
பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார், 5
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார் மிடை,

அவர் மிடை கொள, 10
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண்கால் காரியும்,
மீன் பூத்து அவிர்வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் 15
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து,
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்
பெரு மலை விடர் அகத்து ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரை அகம் போலும், 20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ.

தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு.
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 25
உருவ மாலை போலக்
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன.

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்;
செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை 30
முந்நூலாக் கொள்வானும் போன்ம்.

இகுளை! இஃது ஒன்று கண்டை! இஃது ஒத்தன்
கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே, மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு
தார் போல் தழீஇயவன்? 35

இகுளை! இஃது ஒன்று கண்டை! இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர் மகன் அன்றே, ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன்?

தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை 40
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை!
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டுச்
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன் கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு. 45

இகுளை! இஃது ஒன்று கண்டை! இஃது ஒத்தன்
புல்லினத்து ஆயர் மகன் அன்றே, புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்?

ஓவா வேகமோடு உருத்துத் தன் மேல் சென்ற 50
சேஎச் செவி முதல் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம் பூங்கண்ணிப் பொதுவன் தகை கண்ட,
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு. 55

ஆங்கு இரும்புலித் தொழுதியும் பெருங்களிற்று இனமும்
மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர், விட்டாங்கே,
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழப்
பயில் இதழ் மலர் உண்கண் 60
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ.

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, 65
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய, உயிர் துறந்து,
நைவாரா ஆயமகள் தோள்.
வளியா அறியா உயிர் காவல் கொண்டு
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ ஆயமகள் தோள்? 70
விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர்,
கொலை ஏற்றுக் கோட்டு இடைத் தாம் வீழ்வார் மார்பின்
முலை இடைப் போலப் புகின்,
ஆங்கு,
குரவை தழீஇ, யாம் மரபுளி பாடி, 75
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்,
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எங்கோ வாழியர், இம் மலர்தலை உலகே!

Kalithokai 103
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine’s friend said to her
Herder men owning many cows who subdue
rapid bulls wear fragrant garlands woven with
flowers from the mountains and forests,
delicate clusters of kondrai, tender kāyā,
small-leaved vetchi, kuruntham, kōdal and
pāngar.
Women of delicate words with huge moist eyes,
adorned with bright heavy earrings, their teeth
like mullai buds and tips of peacock feathers,
are on the raised platforms.

As they are on the platforms, a black bull with
white legs with limitless beauty like the waterfalls
of the sapphire-colored mountains, a red bull the
color of the twilight sky with star-cluster like bright
white spots, a red one with large, curved horns
resembling the crescent moon on the head of Sivan,
the god of destruction, and other bulls fight with
great strength. The arena with fragrant incense
smoke appears like lions, horses, elephants and
crocodiles huddled together in a huge mountain’s
cave surrounded by rainclouds.

The bulls choose and choose the herder
men who enter the arena with great desire,
stab them, tear out their intestines and wind
them around their bloody horns that resemble
the red garland adorning the crescent moon on the
head of Sivan with a fiery, glowing axe.

Look at the pride of that man who moves and stands in
front of a bull and retrieves his intestine from the bull’s
horns with pride, resembling a man holding a red thread
spool with two hands and another man twisting it into
a three-strand string.

Look here my friend! Look at this man! Being the son of
buffalo herders, he leaps and holds on without letting go
the rough neck of a bull that battles with desire, like he
is its garland.

Look here my friend! Look at this man! Being the son
of cow herders, he sits on a bull with spots, and rides,
appearing like a boat that moves in shallow water. My
heart trembles on seeing him appear like enraged Sivan
who attacked with the edge of his feet and split the chest
of Kootruvan riding a buffalo, and took his precious life.

Look here my friend! Look at this man! Being the son
of goat herders, he holds on firmly to the beautiful white
side of a strong bull with many tiny spots, appearing like
a dark spot on the moon.

My heart trembles on seeing a herder wearing a kāyā
garland who attacks a red bull that stampedes him with
unceasing strength, holding on to its ears, appearing like
Thirumāl who split the mouth of a maned horse sent by
his enemies.

Like huge tigers and a herd of huge elephants that fought
with each other, the herder men who fought with the bulls
come out of the arena, and after they leave, the place has
kāyā flower droppings scattered on its ground appearing
in peacock neck and sapphire hues.  Pretty, young women
with eyes like flowers with many petals, decorated with kohl,
and young men, embrace, and dance with desire.

Young herder women will not embrace the man who fears
the killer horns of bulls, even in their next birth. Other
than men who seize murderous bulls without fear, it is rare
for those who have fear in their hearts to attain them.
It is not possible to unite with the herder women for men
who fear the horns of bulls and not consider their lives as
wind. Our herder women do not ask for a bride price from
those who jump without fear into the horns of bulls, like
they would rest their heads between the breasts of their
beloved women.

Let us embrace and perform kuravai dances according to
Tradition! Let us sing the fine praises of the God with fame!
Let us praise our king who rules rightfully this ancient land
surrounded by the white ocean! May he live long!

Notes:  Akanānūru 90, Puranānūru 343, 344, 345, 352 and Ainkurunūru 147 have references to bride price.  அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 -மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும். கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.   முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27).

Meanings:  மெல் இணர்க் கொன்றையும் – and delicate clusters of kondrai, Laburnum flowers, Golden Shower Tree, Cassia sophera, மென் மலர்க் காயாவும் – and delicate kāyā flowers, Ironwood tree,  Memecylon edule, புல் இலை வெட்சியும் – and vetchi flowers with small leaves, Scarlet Ixora, Ixora Coccinea, பிடவும் – and pidavam flowers, தளவும் – and thalavam flowers, golden jasmine, செம்முல்லை, குல்லையும் – and kullai flowers,  குருந்தும் – and kuruntham flowers, wild citrus, citrus indica, கோடலும் – and kōdal flowers, white malabar glory lily, பாங்கரும் – and pāngar flowers, toothbrush tree flowers, கல்லவும் – and those in the mountains, கடத்தவும் – and those in the forests, கமழ் கண்ணி மலைந்தனர் – they wore fragrant garlands,  பல ஆன் பொதுவர் – herders with many cows, கதழ் விடை கோள் –   seizing rapid bulls, seizing enraged bulls, காண்மார் – to watch, முல்லை முகையும் – mullai flower buds, jasmine, முருந்தும் நிரைத்தன்ன பல்லர் – those with rows of teeth like tips of peacock feathers, பெரு மழைக் கண்ணர் – women with huge moist eyes, மடம் சேர்ந்த சொல்லர் – women with delicate words, சுடரும் கனங்குழைக் காதினர் – women with bright heavy earrings, நல்லவர் கொண்டார் மிடை  – women were on the platforms,

அவர் மிடை கொள – as they were on the platforms, மணி வரை மருங்கின் அருவி போல – like the waterfalls in the sapphire-like mountains, அணி வரம்பு அறுத்த – with limitless beauty (வரம்பு அறுத்த – எல்லையைப் போக்கிய), வெண்கால் காரியும் – and a black bull with white legs, மீன் பூத்து அவிர்வரும் – star clusters that are bright, அந்தி வான் விசும்பு போல் – red like the twilight sky, வான் பொறி – white spots, white markings, பரந்த புள்ளி வெள்ளையும்  – and the bull with spread white spots, கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் – like the crescent moon worn by the god who was capable of killing – Sivan, வளையுபு மலிந்த கோடு அணி சேயும் – and the red bull with curved huge horns (சே – காளை), பொரு முரண் முன்பின் – fighting with enmity and strength, புகல் ஏறு பல பெய்து – letting in a few arrogant fighting bulls, அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் – and lions and horses and elephants and crocodiles, பெருமலை விடர் அகத்து – inside a huge mountain cave, ஒருங்கு உடன் குழீஇ – be close together (குழீஇ – சொல்லிசை அளபெடை), படுமழை ஆடும் வரை அகம் போலும் – like a mountain covered with rainclouds, கொடி நறை சூழ்ந்த தொழூஉ  – the arena surrounded by spreading incense (தொழூஉ – இன்னிசை அளபெடை),

தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரை – the herders who entered with great desire into the arena, தெரிபு தெரிபு – knowing and knowing, chose and chose, குத்தின ஏறு – the bulls stabbed , ஏற்றின் அரி பரிபு அறுப்பன – what was torn and cut by the bulls, Sivan, சுற்றி – had it around, எரி திகழ் கணிச்சியோன் – the one with a fiery bright axe, சூடிய – worn, பிறைக்கண் உருவ மாலை போல – like the pretty garland on the crescent moon, குருதிக் கோட்டொடு குடர் வலந்தன – on the bloody horns intestines were coiled around (குடர் – குடல் என்பதன் போலி),

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடி நின்று – moving and standing in front of the bull with intestines wound around its horns (குடர் – குடல் என்பதன் போலி), அக்குடர் வாங்குவான் பீடு காண் – look at the pride of that man who pulls his intestines (குடர் – குடல் என்பதன் போலி), செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற – one man holding a spool of red thread, அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம் – it is like one who is making that into three-stranded string (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

இகுளை – O friend, இஃது ஒன்று கண்டை – look at this one (கண்டை – முன்னிலை வினைமுற்று), இஃது ஒத்தன் – here is a man, கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே – since he is the son of herders who own horned buffaloes, மீட்டு ஒரான் – he does not let it go, போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன் – he is leaping and embracing the battling desiring/arrogant bull’s rough neck like a garland (தழீஇயவன் – சொல்லிசை அளபெடை),

இகுளை இஃது ஒன்று கண்டை – my friend! you look at this one (கண்டை – முன்னிலை வினைமுற்று), இஃது ஒத்தன் – here is a man, கோ இனத்து ஆயர் மகன் அன்றே – being the son of herders who own cows, ஓவான் – he does not stop, மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி – moving seated on a spotted bull, துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் – he appears like riding a boat near the shore,

தொழீஇஇ – O one who has a job (சொல்லிசை அளபெடை), காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை – the black young bull that came rapidly like the wind, ஊற்றுக் களத்தே – in the area where many gather, அடங்கக் கொண்டு அட்டு அதன் மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை – the nature of the herder who distressed and controlled it and stood up on it, கண்டை – you look (கண்டை – முன்னிலை வினைமுற்று), ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு- with the edge of his feet he dug into the chest of Kootruvan seated on a buffalo (எருமை – ஆகுபெயர் கூற்றுவனுக்கு), சீற்றமொடு – with rage, ஆர் உயிர் கொண்ட ஞான்று – on the day when he took his precious life, இன்னன் கொல் கூற்று என – that he is like god who killed Kootruvan, உட்கிற்று என் நெஞ்சு – my heart trembles,

இகுளை – O friend, இஃது ஒன்று கண்டை – you look at this one (கண்டை – முன்னிலை வினைமுற்று), இஃது ஒத்தன் – here’s this man, புல்லினத்து ஆயர் மகன் அன்றே – being the son of herders with goats, புள்ளி வெறுத்த – with abundant spots, வய வெள் ஏற்று – of a strong white bull, அம்புடை – அம் புடை, அழகிய பக்கம், beautiful side, திங்கள் மறுப் போல் – like a dark spot on the moon, பொருந்தியவன் – the man who is holding on,

ஓவா வேகமோடு – with unceasing speed, உருத்துத் தன் மேல் சென்ற – went above him with rage, சேஎச் செவி முதல் கொண்டு – holding on to the ears of a red bull (சேஎ – இன்னிசை அளபெடை, சே – காளை), பெயர்த்து – ruining, ஒற்றும் – attacking, காயாம் பூங்கண்ணிப் பொதுவன் – a herder with a kāyā  flower garland, Ironwood tree,  Memecylon edule, தகை கண்ட – those who saw that, மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று இன்னன் கொல் மாயோன் என்று – that it is like when Thirumāl beat and killed the horse with a mane sent by enemies splitting its mouth, உட்கிற்று என் நெஞ்சு – my heart trembles,

ஆங்கு – there, இரும்புலித் தொழுதியும் – many huge tigers, பெரும் களிற்று இனமும் – huge herd of male elephants, மாறு மாறு உழக்கியாங்கு – like they fought with each other, உழக்கிப் பொதுவரும் – the fighting herders, ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் – those who won subduing the bull came out of the arena together (தொழூஉ – இன்னிசை அளபெடை), விட்டாங்கே – after they left, மயில் எருத்து – peacock necks, உறழ் – like, அணி மணி – pretty sapphire – kāyā flowers, நிலத்துப் பிறழ – rolling on the ground, பயில் இதழ் – many petals, மலர் உண்கண் மாதர் மகளிரும் – pretty women with flower-like, kohl-lined eyes, மைந்தரும் – young men, மைந்து உற்று – with desire, with strength, தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – they embrace and dance in the common ground with flower droppings (தழூஉ – இன்னிசை அளபெடை),

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை – the man who fears the horns of killer bulls, மறுமையும் புல்லாளே ஆயமகள் – young herder women will not embrace even in their next births, அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் – those who seize murderous bulls without fear, அல்லதை – other than them (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), நெஞ்சு இலார் – those without fear in the heart, தோய்தற்கு – to unite, அரிய – difficult, rare, உயிர் துறந்து – abandoning life, நைவாரா – not being sad, ஆயமகள் – herder women, தோள் – arms, வளியா அறியா – not considering it as wind, உயிர் காவல் கொண்டு – protecting their lives, நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் – those with hearts that fear the horns that are dense, those with hearts that fear the horns which are near each other, தோய்தற்கு எளியவோ – are they easy to unite with, ஆயமகள் தோள் விலை வேண்டார் – the young herder women do not ask for bride prices, எம் இனத்து ஆயர் மகளிர் – our young women herder, கொலை ஏற்று – accepting death, கோட்டு இடைத் தாம் வீழ்வார் – those who fall between the horns, மார்பின் முலை இடை – between their breasts on the chests, போலப் புகின் – if they consider that as same and enter,

ஆங்கு – there, குரவை – kuravai, தழீஇ – embracing (சொல்லிசை அளபெடை), யாம் மரபுளி பாடி – let us sing according to tradition, தேயா – that which is not reduced, விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும் – let us praise the god with great fame, மாசு இல் – without fault, வான் – white, முந்நீர்ப் பரந்த – with the ocean, தொல் நிலம் ஆளும் – rules the ancient land, கிழமையொடு புணர்ந்த – rules with rights, எம் கோ – our king, வாழியர் இம் மலர்தலை உலகே – may he live long in this vast world (உலகே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 104
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தோழியும் தலைவியும் சொன்னது

தோழி:

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 5
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்,
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், 10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொருவரும் பண்பினவ்வையும், பிறவும் 15
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப்
புரிபு புரிபு புகுத்தனர் தொழூஉ.

அவ்வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்,
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் 20
காரி கதன் அஞ்சான் கொள்பவன், ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான், வரிக் குழை
வேய் உறழ் மென்தோள் துயில் பெறும் வெந்துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு, 25
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசைப்
பேணி நிறுத்தார் அணி.

அவ்வழி பறை எழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக்,
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த 30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு.
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேல் சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை 35
நோனாது குத்தும் இளங்காரித் தோற்றம் காண்,
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்.

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தித், தன் 40
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று,
வெருவரு தூமம் எடுப்ப வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்.

தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று, 45
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது
மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண், மண்டு அமருள்,
வாள் அகப்பட்டானை ஒவ்வான் எனப் பெயரும்
மீளி மறவனும் போன்ம். 50

ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சாரத்,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்பப்,
பாடு ஏற்றுக் கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் 55
கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு,
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட,
பொரு களம் போலும் தொழூஉ.

தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புகத் தண்டாச் சீர் 60
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர் தழூஉ.

பாடுகம் வம்மின்! பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு.

தலைவி:

நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில், 65
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள் ஆயர்மகள்

தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல், 70
குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்மகன்?

தோழி:

நேர் இழாய்! கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார், அலர் எடுத்த 75
ஊராரை உச்சி மிதித்து,
ஆங்கு,
தொல் கதிர் திகிரியான் பரவுதும், ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க இவ் உலகு உடன் எனவே. 80

Kalithokai 104
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine’s friend and the heroine said

Friend:

Since the ocean’s abundant waves roared in and
seized his land, without slacking, the Pāndiyan
king of unfading fame went on a military
campaign and took the lands from the Chēra and
Chōla countries, made them submit to him,
removed their tiger and bow symbols and placed his
fish symbol. The herder clan arose out of an ancient
clan of great fame. All the herders join together,
and with great joy, send their bulls into the arena,
a faultless white one like milk-hued Balathēvan with
a flag with a sky-touching, bright palmyra icon,
an able, black bull like dark Thirumāl with Thirumakal
on his chest, successful in battles, who has a gold
discus,
a hostile tawny colored one, resembling the
three-eyed Sivan with a crescent moon on his radiant
hair, and
a red one with rage the color of Murukan with martial
prowess who stirred the vast ocean and killed Sooran in
mango tree form.
Some of them are militant and others are not. They
are of many kinds and shapes. They appear like
many clouds that are together.

There,
the man who lies on the neck of the white bull will get
the pretty young woman with sharp teeth,
the man who seizes the sharp-horned, black bull without
fearing its rage will receive sleep with the pretty young
woman with combed hair, wearing bright jewels,
the man who subdues the murderous bull with colored
eyes will get the young woman with pretty eyes and looks
of a bewildered deer, and the man who captures the very
strong red bull with fierce rage will receive sleep on the
delicate, bamboo-like arms of the young woman wearing
earrings with stripes.

They announce according to the traditions of herders,
Women are seated on a high platform, and they appear
like the moon surrounded by stars.

There,
parai drums are beat, uproars from many are heard,
and men with strengths are ready to take on the bulls.
The bulls attack even before the fragrant smoke goes
around. A young man leaves the loft, comes down,
leaps and climbs on a milk-colored, white bull not
fearing its victorious sharp horns that are like tips of
spears.
Look at the young black bull that stabs that man
horribly, resembling the blue-colored Kannan who
released the milky white moon from the snake Kēthu.

Loud sounds are heard causing many to run away.
Bones are broken and broken, and intestines ooze and
ooze out, as the bulls attack. Look at the energetic,
enraged, handsome bull gore that man who reduced
its horns, swaying him, causing distress. It looks like
a murderous, angry bull elephant that roams hating
the medicinal smoke created to heal its rage.

Rising with strength and bravery a young man goes
without avoiding with a desire to save his reputation.
He reaches the bull leaning his body, but slips and
falls. Look at that tawny colored bull that moves away
without trampling him. It is like a warrior with the
strength of Kootruvan, who did not kill an enemy warrior
he captured with his sword in a vicious battle, since he
did not consider him his equal in strength.

There,
some take the attacks of the bulls on their chests, some
jump on the bull and ride them, some place themselves
between the horns, some boast that they can seize the
bulls, and musical instruments roar like thunder in the
arena. Some try to stop the young men from seizing the
bulls, but they refuse and face the bulls. Men are ruined
and distressed and torn flesh pieces are strewn all over
the place which looks like the battlefield where the five
Pāndavars annihilated the hundred Kauravas with their
beautifully made strong bows.

All the bulls from the stable enter the meadow to graze.
Herder women of great beauty and unreduced splendor
embrace their young men and dance.

Let us sing! Come! Let us go around the man whose
chest has been wounded by the horns of a bull.

Heroine:

I will not stay away from embracing the wide chest of
the man who destroyed the might of a bull with a red
forehead, because of those with hostility. Let those with
cattle raise gossip. This herder girl does not care much.

My friend! Let us perform kuravai dances together!
Isn’t that son of herders proud that he seized a murderous
bull with colored eyes?  He gave us adoring looks and caused
love affliction.

Friend:

One with exquisite jewels! Our parents have agreed to give
you to the man who jumped not fearing the rage of the killer
young black bull, slighting those in town who slandered.
Let us worship Thirumāl holding a discus of primal rays!
May the Pāndiyan king owning drums that roar like thunder
bring the world under his command!

Notes:  அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – since the ocean with abundant waves came in and took his land, மெலிவு இன்றி – without weakness, மேல் சென்று மேவார் நாடு இடம்பட – went and seized the lands of enemies (Chēra and Chōla lands), புலியொடு வில் நீக்கி – removed the tiger and bow symbols, புகழ் பொறித்த கிளர் கெண்டை வலியினான் – established the famed bright carp fish symbol with strength, cyprinus fimbriatus, வணக்கிய – caused others to submit, வாடாச் சீர் தென்னவன் – Pāndiyan king with unfading fame, தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய – arose from clans with ancient fame, நல் இனத்து ஆயர் – herders with fine herds or herders from a fine clan, ஒருங்கு தொக்கு எல்லாரும் – all of them together, வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடி – flag of a bright palmyra tree that is tall up to the sky, பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – and a white bull like the one with faultless milk white complexion – Balathēvan, பொரு முரண் மேம்பட்ட- successful in wars with enemies, பொலம் புனை புகழ் நேமி – one with a gold discus, திரு மறு மார்பன் போல் – like the one with Thirumakal on his chest – Thirumāl, திறல் சான்ற காரியும் – and a black bull with great ability, மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை – crescent moon on his very bright hanging hair, நுதல் – forehead, முக்கண்ணான் உருவே போல் – like the form of the one with three eyes (உருவே – ஏகாரம் அசைநிலை, an expletive), முரண் மிகு குராலும் – and a hostile tawny colored bull, மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர் வேல் வல்லான் நிறனே போல் – like the color of Murukan with martial prowess who disturbed/muddied the huge/dark ocean and killed Sooran in mango form (நிறனே – ஏகாரம் அசைநிலை, an expletive), வெரு வந்த சேயும் – red bull with rage, fierce red bull (சே – காளை), ஆங்கு அப் பொருவரும் பண்பினவ்வையும் பிறவும் உருவ – the fighting ones and the fine ones of many shapes, பல் கொண்மூக் குழீஇயவை போல – like many clouds gathered together (குழீஇயவை – சொல்லிசை அளபெடை), புரிபு புரிபு – with great desire, புகுத்தனர் தொழூஉ  – they let them into the arena (தொழூஉ – இன்னிசை அளபெடை),

அவ்வழி – there, முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் – will get the pretty young woman with sharp teeth (ஏஎர் – இன்னிசை அளபெடை), இது ஓர் வெள் ஏற்று எருத்து அடங்குவான் – the man who lies on the neck of a white bull (ஏற்று எருத்து அடங்குவான்  – நச்சினார்க்கினியர் உரை – ஏற்றின் கழுத்திலே கிடக்குமவன்),

ஒள் இழை வாருறு கூந்தல் துயில் பெறும் – he will receive sleep on the combed/long hair of the young woman with bright jewels (ஒள் இழை – அன்மொழித்தொகை), வை மருப்பின் காரி – black bull with sharp horns, கதன் அஞ்சான் – he does not fear its rage, கொள்பவன் – the man who seizes, ஈர் அரி வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் – he will receive the young woman with two pretty eyes with female deer-like bewildered looks (வெரூஉ – இன்னிசை அளபெடை, பெறூஉம் – இன்னிசை அளபெடை), இக் குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான் – the man who seizes the murderous bull with colored eyes (குரூஉ – இன்னிசை அளபெடை),

வரிக்குழை – woman wearing pretty earrings, woman wearing earrings with stripes, woman wearing earring with designs (அன்மொழித்தொகை), வேய் உறழ் மென்தோள் துயில் பெறும் – will receive sleep on the delicate arms/shoulders like bamboo, வெந்துப்பின் சேஎய் சினன் அஞ்சான் – the man who does not fear the enraged red bull with great strength (சேஎய் – இன்னிசை அளபெடை, சே – காளை, சினன் சினம் என்பதன் போலி), சார்பவன் – the man who embraces it, the man who controls it,

என்று ஆங்கு அறைவனர் – those who announce there, நல்லாரை – the women, ஆயர் முறையினால் – according to herder traditions, நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல் – like the moon surrounded by the stars, மிடை மிசைப் பேணி நிறுத்தார் அணி – they placed themselves with desire on the high platform (மிடை – பரண்),

அவ்வழி – there, பறை எழுந்து இசைப்ப – parai drums were beat, பல்லவர் ஆர்ப்ப – many raised uproars, குறையா மைந்தர் – men without reduced strengths, கோள் எதிர் எடுத்த – ready to seize, ready to attack, நறை வலம் செய விடா – not letting fragrant smoke go around, இறுத்தன ஏறு –the bulls attacked, அவ் ஏற்றின் மேல் நிலை மிகல் இகலின் – with great enmity toward that bull, மிடை – high platform, கழிபு இழிபு – left and came down, மேல் சென்று – climbed above, வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் – he does not fear the sharp tips of the victorious horns which are like the ends of spears, பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை – the man who leaped on the neck of a milky white bull, நோனாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண் –  see the young black bull that stabs unbearably, பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல் நிற வண்ணனும் போன்ம் – like the blue colored one (Kannan) who released the milky white moon from the snake Kēthu that had seized it (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

இரிபு – leaving, எழுபு – rising, அதிர்பு அதிர்பு இகந்து – with loud sounds, உடன் பலர் நீங்க – as many run away, அரிபு அரிபு – broken and broken – bones, இறுபு இறுபு – loosened and loosened, குடர் சோரக் குத்தி – stabbed as the intestines came out (குடர் – குடல் என்பதன் போலி), தன் கோடு அழியக் கொண்டானை – the man who seized and caused its horns to be ruined, ஆட்டி – shaking, திரிபு உழக்கும் – causes distress, வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை – see this not tired enraged handsome bull (கண்டை – முன்னிலை வினைமுற்று), இஃது ஒன்று – this one, வெருவரு தூமம் எடுப்ப – causing medicinal smoke that it fears, வெகுண்டு திரிதரும் கொல் களிறும் போன்ம் – it is like a murderous bull elephant that roams with rage (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

தாள் எழு – rising with strength, துணி – with bravery, பிணி – seizing, இசை – reputation,  தவிர்பு இன்றித் தலைச் சென்று – went without avoiding, தோள் வலி – strength, துணி பிணி – strength and desire to seize, துறந்து – abandoned, இறந்து – left, எய்தி – reached, மெய் சாய்ந்து – body leaned, கோள் வழுக்கி – grasp slipping, தன் முன்னர் வீழ்ந்தான் – the man who fell down in front of it, மேல் செல்லாது – not climbing on him, மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் – look at the appearance of the tawny colored or spotted bull that returns, மண்டு அமருள் – in a ferocious battle, வாள் அகப்பட்டானை ஒவ்வான் எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம் – it is like a warrior resembling Kootrvan who did not kill a warrior he captured with his sword since he was not his equal in strength, (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

ஆங்க – there, செறுத்து – with anger, அறுத்து – chopping, உழக்கி – attacking, ஏற்று எதிர் நிற்ப – the bulls facing them, மறுத்து மறுத்து மைந்தர் சார – young men refused and refused and advanced to hold, தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – flesh pieces were torn and torn and they fell and spread everywhere, இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப – musical instruments roar like thunder (இசையின் – இன் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பாடு ஏற்றுக் கொள்பவர் – some who take the attacks, பாய்ந்து மேல் ஊர்பவர் – some jump on the bull and ride it, கோடு இடை நுழைபவர் – some enter between the horns, கோள் சாற்றுபவரொடு – along with those who claim that they can seize, புரிபு மேல் சென்ற – went with desire, நூற்றுவர் மடங்க – the one hundred Kauravas were killed, வரி புனை வல் வில் ஐவர் அட்ட பொரு களம் போலும் தொழூஉ – the arena was like the battle field fought by the five Pāndavars who killed with their beautifully made strong bows (தொழூஉ – இன்னிசை அளபெடை),

தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக – all the bulls from the stable enter the forest/meadow, தண்டாச் சீர் – not reduced splendor, வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் – pretty young women and young men, மல்லல் ஊர் ஆங்கண் – there in the prosperous town, அயர்வர் தழூஉ – they embrace and dance (தழூஉ – இன்னிசை அளபெடை),

பாடுகம் வம்மின் – let us sing (பாடுகம் – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று), come, பொதுவன் கொலை ஏற்றுக் கோடு குறி செய்த மார்பு – chest of the cattle herder that was marked by the murderous bull’s horns,

நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – the big chest of the man who destroyed the might of a bull with red forehead, செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – I will not stay away from embracing because of those with hostile looks, பெற்றத்தார் கவ்வை எடுப்ப – let those with cattle raise gossips, அது பெரிது உற்றீயாள் ஆயர் மகள் – this herder girl does not care about it,

தொழீஇஇ – O one who has the looking job (சொல்லிசை அளபெடை), ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் – let us perform kuravai dances together, நம்மை அருக்கினான் போல் நோக்கி – looking at us with adoring looks, looking at us like we are precious, அல்லல் நோய் செய்தல் – caused this love disease with pain, குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ – is he proud that he seized a murderous bull with colored eyes (குரூஉ – இன்னிசை அளபெடை), ஆயர் மகன் – that son of herders,

நேர் இழாய் – O one with lovely jewels, கோள் அரிது ஆக – it is difficult to seize, நிறுத்த – established, கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே – to the herder man who jumped not fearing the rate of the killer young black bull, ஆர்வுற்று – with desire, எமர் கொடை நேர்ந்தார் – our people have agreed to give, அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து – stepped on the heads of those in town who talked ill, disrespected those in town who talked ill, ஆங்கு தொல் கதிர் திகிரியான் பரவுதும் – let us praise Thirumāl who has the discus of ancient rays, ஒல்கா உரும் உறழ் முரசின் தென்னவற்கு ஒரு மொழி கொள்க இவ் உலகு உடன் எனவே – let Pāndiyan with an uncontrolled thunder-like drum seize this world to be under his command

கலித்தொகை 105
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:

அரைசு படக் கடந்து அட்டு ஆற்றின் தந்த,
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச்,
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடித், 5
தீது இன்று பொலிக என தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங்குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றக் காரியும், 10
ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் 15
கணம் கொள் பல் பொறிக் கடும் சினப் புகரும்,
வேல்வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண்கால் சேயுஉம்,
கால முன்பின் பிறவும் சால
மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும், 20
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ,
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க, 25
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்பச்,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து

மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும், 30
எருத்து இடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக்,
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு.

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய் சாக் குத்திக் 35
கொள்வார் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா,
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்.

பாடு ஏற்றவரைப் படக் குத்திச் செங்காரிக்
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா 40
நகை சால் அவிழ்பதம் நோக்கி நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்.

இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா,
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டுப் 45
போதரும் பால் மதியும் போன்ம்.

ஆங்க ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொரு களம் போலும் தொழூஉ,
வெல் புகழ் உயர்நிலைத் தொல் இயல் துதை புதை துளங்கு இமில் 50
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கிப்
பாடு இல ஆயமகள் கண்.

நறு நுதால்! என் கொல் ஐங்கூந்தல் உளரச்,
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி,
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட 55
கொல் ஏறு போலும் கதம்?

நெட்டிரும் கூந்தலாய்! கண்டை, இஃது ஓர் சொல்
கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
தம் கண் பொடிவது எவன்? 60

தலைவி:

ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண் உடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
அலர் செய்துவிட்டது இவ் ஊர்? 65

ஒன்றிப் புகர் இனத்து ஆயமகற்கு, ஒள் இழாய்!
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது, அன்று அவன்
மிக்குத் தன் மேல் சென்ற செங்காரிக் கோட்டு இடைப்
புக்கக்கால் புக்கது என் நெஞ்சு?

தோழி:

என, 70
பாடு இமிழ் பரப்பு அகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியான் பரவுதும், நாடு கொண்டு
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமைவரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பர் உம் விளங்குக, எனவே. 75

Kalithokai 105
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said

Friend:

A large herder clan has gathered together with great
joy and faultless minds, the descendants of a glorious
clan, to pray for the Pāndiyan king’s divine protection,
a splendid, wealthy king of ancient heritage who won
battles over many kings, killed them and seized their
royal drums in a rightful manner, a monarch endowed
with a large realm where pearls grow in the roaring
ocean. “May you flourish without any evil!” they say,
praising their king.

There is black bull with a bright swirl pattern on his
forehead that is as white as the conch shell blown by
Thirumāl carrying a mighty discus.
There is a white bull with red markings that appear like
the lovely, bright garland on the chest of Balarāman.
There is a tawny colored bull with a raised hump and a
rugged neck like the sapphire-colored neck of Sivan
wielding a battle axe.
There is a bull with myriads of spots that resembles
Inthiran with a thousand eyes.
There is a red bull with bright white legs like the white,
low-hanging garments worn by Murukan with great rage
who carries a spear.
There are these and other bulls that enter the arena that
are like the fire that burns at the end, Yaman with an axe
and Kootruvan coming to take lives.
Musical instruments resound like the continuously
roaring thunderbolts of the monsoon season. Incense
smoke rises up like billowing clouds.
Young herder women, adorned with fragrant garlands
with flowers with rows of petals, are standing in rows.
Young herder men jump in eagerly with uproar and
rage, and fine dust rises up to the sky filling the place.

The men are holding on to the horns of the bulls,
clasping them with their chests, holding firmly their
necks, embracing their humps, ruining them, pressing
them against their shoulders and moving close to subdue
them. Not allowing the men to hold them, the bulls
attack those who go close to them with their long horns.

Look at that red colored bull which gores again and again,
those who try to nab it and nab it, killing them. It appears
like Kootruvan who takes away life in rage when weak.

Look at the many bells on the horns of that reddish bull
which attacks and gores a man, lifts him on his horns
and runs around. It appears like bees swarming on pretty,
new naravam blossoms at the appropriate time of opening.

Look at that white bull that leaps on the platform along
with the man who is hanging on to its neck. It appears like
the milky white, moving moon in the bright sky seized by
the snake Kēthu.

Bulls and herders attack each other and the field appears
like a battlefield where two great kings fought with rage.
The eyes of the young herder woman do not wink, as she
watches the face of the young man who has seized a bull
by its moving hump that hides its neck.

O one with a fragrant forehead! Why was your family
confused and angry like the murderous bull seized by
your lover, when they found the fragrance of tiny mullai
flowers on your hair with five strands when they put
their fingers through it?

My friend with long, dark hair! Look! Listen to my words!
Our family has accepted your affair with the son of
buffalo herders. Why are others who cannot tolerate
scolding you?

Heroine:

My friend with a lustrous forehead! Other than some joy,
what is in it? Since mother hurt me with a stick, this town
has created gossip.

My friend with gleaming forehead! What is this with my
folks agreeing to give me to him? The moment I saw him
seize the reddish black bull with his head between its horns,
my heart went to him.

Friend:

Let us go and pray to victorious Thirumāl who reclines on
a bed of snakes in the loud ocean, for the fame of our king,
who annexed lands, who owns sweet drums, to shine beyond
the Himalayas where full waterfalls roar as they come
down.

Notes:  சாக் குத்தி (35) – சாவக் குத்தி என்பது சாவு என்பதன் இறுதி வகரம் கெட்டுச் சாக் குத்தி என வந்தது. (சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 209).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  அரைசு படக் கடந்து – winning over many kings, அட்டு ஆற்றின் தந்த முரைசு – killed them and brought their drums in a proper manner, கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச்சீர் மிகு சிறப்பினோன் – splendid wealthy man from a great ancient clan who differs greatly, தொல் குடிக்கு உரித்து என – that it is the right of his ancient clan, பார் வளர் முத்தமொடு – with pearls growing in his kingdom, படு கடல் பயந்த – yielded by the roaring ocean, ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – those who were happy joined together, தீது இன்று பொலிக என – may you flourish without any evil, தெய்வக் கடி அயர்மார் – to pray for God’s protection, வீவு இல் குடி – clan that is not ruined, பின் – after, இருங்குடி ஆயரும் – large clan of herders, தா இல் உள்ளமொடு – without minds without fault, துவன்றி – together, ஆய்பு உடன் – analyzed,

வள் உருள் நேமியான் – one with a mighty discus, one like Thirumāl with a big discus, வாய் வைத்த வளை போல – like the conch shell that he is blowing,  தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றக் காரியும் – and a black bull with a bright forehead swirl in white that appears clearly, ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிகப் பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும் – and a white bull with red spots that appear like the bright garland of no equal on the chest of Balathēvan with one earring, பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல – like the sapphire-colored neck of the greatly famed one with an axe – Sivan, இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – and a tawny colored bull with a huge coarse neck and lifted hump, அணங்கு உடை வச்சிரத்தோன் – fierce Inthiran, ஆயிரம் கண் ஏய்க்கும் கணம் கொள் பல் பொறி – bull with many spots that are like his thousand eyes, கடும் சினப் புகரும் வேல்வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகில் ஏய்ப்ப – like the bright white garments that hang low on Murukan with great rage who carries a spear, வாலிது கிளர்ந்த வெண்கால் – one with very bright white legs, சேயுஉம் – and a red bull (இன்னிசை அளபெடை, சே – காளை), கால முன்பின் பிறவும் – and ones that are like the end of time, சால மடங்கலும் – and fire that burns at the end, கணிச்சியும் – and axe, காலனும் – and Yaman, கூற்றும் – and Kootruvan, தொடர்ந்து செல் – continuously proceeding, அமையத்து – at that time, துவன்று உயிர் உணீஇய உடங்கு கொட்பன போல் – like they all roamed together to take lives (உணீஇய – செய்யுளிசை அளபெடை), புகுத்தனர் தொழூஉ – they let them into the arena (தொழூஉ – இன்னிசை அளபெடை), அவ்வழி – there, கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – musical instruments roared loudly like the roars of heavy thunder in the monsoon season (உருமின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – overflowing fragrant smoke rose up like the moving rising clouds (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), நேர் இதழ் நிரை நிரை நெறி வெறிக் கோதையர் – women wearing fragrant garlands  woven with flowers with pretty rows of petals, அணி நிற்ப – stood in rows, சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின் சினப் பொதுவர் – the are young herder men with great rage and loud noises, தூர்பு – filled, எழு – rose, துதை – close, புதை – body, துகள் விசும்பு உற எய்த – as dust particles rose up to the sky together, ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – they jumped inside with uproar,

மருப்பில் கொண்டும் – holding the horns, மார்பு உற தழீஇயும் – embracing with their chest, எருத்து இடை அடங்கியும் – controlled the necks, held the necks, இமில் இறப் புல்லியும் – embraced ruining their humps, தோள் இடைப் புகுதந்தும் – holding between the shoulders, துதைந்து – being close together, பாடு ஏற்றும் – those who faced danger, நிரைபு – are together, மேல் சென்றாரை – those who went close, நீள் மருப்பு உறச் சாடி – attacked with their long horns, கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு – the bulls didn’t give room to hold them and stopped the men,

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய் சாக் குத்தி – stabs and kills with its horn ends those who try to seize it and seize it, கொள்வார் – those who seize, பெறாஅ – unable to seize (இசை நிறை அளபெடை), குரூஉச் செகில் காணிகா – look at that red colored bull (குரூஉ – இன்னிசை அளபெடை, காணிகா – இக இகா என நீண்டது, முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), செயிரின் – with rage, குறை நாளால் பின் சென்று சாடி உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் – it is like Death that attacks and eats human lives in their fading days (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

பாடு ஏற்றவரைப் படக் குத்தி செங்காரி – a reddish black bull that attacks and gores a man, கோடு எழுந்து ஆடும் – moves around holding him on its horns, கண மணி காணிகா – look at its many bells/gems (காணிகா – இக இகா என நீண்டது, முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), நகை சால் – beautiful, bright, அவிழ்பதம் நோக்கி – watching for the time they open, நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம் – like bees that surround naravam flower buds for honey (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு – along with the man who leaped between and seized its neck, எய்தி மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா – look at the white bull that leaps on the platform (இகா முன்னிலையசை, அது கா எனத் திரிந்தது), வாள் பொரு வானத்து – in the bright sky, அரவின் வாய் கோட்பட்டுப் போதரும் பால் மதியும் போன்ம் – appears like the moving milk-white moon caught in the mouth of the snake Kēthu (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது),

ஆங்க – there, ஏறும் பொதுவரும் மாறுற்று – the bulls and the herders fighting, மாறா – not backing off, இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற பொரு களம் போலும் தொழூஉ – the arena was like seeing a battlefield where two great kings attacked with rage (தொழூஉ – இன்னிசை அளபெடை), வெல் புகழ் – winning fame, உயர்நிலைத் – high status, தொல் இயல் – ancient, துதை – close, புதை – hiding, துளங்கு – moving, இமில் நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி – on seeing the face of the herder who seized a fine bull by its hump (முகன் – முகம் என்பதன் போலி), பாடு இல ஆயமகள் கண் – the eyes of the young herder woman do not wink (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்),

நறு நுதால் – O one with a fragrant forehead, என் கொல் ஐங்கூந்தல் உளரச் சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் – why was your family confused and not agreeable when you had fragrance of tiny jasmine flowers on your five-part braid, அவன் கொண்ட – the bull he seized, கொல் ஏறு போலும் கதம் – rage like that of a murderous bull,

நெட்டு இருங்கூந்தலாய் – O one with long dark hair, கண்டை இஃது – look at this (கண்டை – முன்னிலை வினைமுற்று), ஓர் சொல் – a word, கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு – for you being involved with the son of a horned buffalo herder, எம் கண் எமரோ பொறுப்பர் – our relatives tolerate it, பொறாதார் தம் கண் பொடிவது எவன் – why are others who cannot tolerate scolding you?

ஒள் நுதால் – O one with a bright forehead, இன்ன உவகை பிறிது யாது – what other than some joy, யாய் என்னைக் கண் உடைக் கோலள் அலைத்ததற்கு – for mother hurting me with a stick, என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி – thinking about me and the herder wearing a flower garland, அலர் செய்துவிட்டது இவ் ஊர் – this town has created gossip,

ஒன்றி – together, புகர் இனத்து ஆயமகற்கு – to the son of herders with cows of tawny color, to the son of herders with cows with spots, ஒள் இழாய் – O one with gleaming jewels, இன்று எவன் என்னை எமர் கொடுப்பது – why won’t they give me to him, அன்று – then, அவன் – him, மிக்கு – greatly, தன் மேல் சென்ற – which jumped on him, செங்காரிக் கோட்டு இடைப் புக்கக்கால் – when he seized and put his head between the horns of the reddish black bull (புக்கக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), புக்கது என் நெஞ்சு – my heart went,

என பாடு இமிழ் பரப்பு அகத்து – in the wide ocean with sounds, அரவணை அசைஇய – lying on a snake bed (அசைஇய – செய்யுளிசை அளபெடை), ஆடு கொள் – victorious, நேமியான் பரவுதும் – let us go and pray to Thirumāl, நாடு கொண்டு – who seizes lands, இன் இசை முரசின் பொருப்பன் மன்னி – fitting the king with sweet drums, அமைவரல் அருவி ஆர்க்கும் இமையத்து உம்பர் உம் விளங்குக எனவே – for it to shine beyond the Himalayas where perfectly flowing waterfalls roar, for it to shine beyond the Himalayas where fully flowing waterfalls roar (எனவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 106
சோழன் நல்லுருத்திரன், முல்லை, ஆயர் மகளிர் குரவை ஆடுவது
கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் கண்,
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி,
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர், தம் தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார். 5

அவ்வழி,
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்த்,
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன 10

தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும்
வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன.

அவ் ஏற்றை, 15
பிரிவு கொண்டு இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,
இரு திறனா நீக்கும் பொதுவர்,
உரு கெழு மா நிலம் இயற்றுவான்,
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர்.

அவரைக் கழல உழக்கி எதிர் சென்று சாடி, 20
அழல்வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு.
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரித்,
தங்கார் பொதுவர், கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு. 25

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை.

ஆங்கு, 30
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ.

முயங்கிப் பொதிவேம், முயங்கிப் பொதிவேம்,
முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம், 35

கொலை ஏறு சாடிய புண்ணை, எம் கேளே!
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ, எம் கேளே!

ஆங்கு, போர் ஏற்று அருந்தலை அஞ்சலும், ஆய்ச்சியர் 40
காரிகை தோள் காமுறுதலும், இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ, எம் கேளே!
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே! 45

ஆங்க,
அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச்
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;
ஏற்றவர் புலங்கெடத் திறை கொண்டு
மாற்றாரைக் கடக்க, எம் மறங்கெழு கோவே. 50

Kalithokai 106
Chōlan Nalluruthiran, Mullai, Young herder women perform Kuravai dances
Rain had poured and wet the fields.
Carrying sticks and branding irons in their
leather drawstring bags, and milking bowls on
hoops, cattle herders of inelegant words play
sweet music with perfect rhythm with long
kondrai seed flutes, and lead their herds to
graze.

On their path, some bulls raise dust, some
scratch the ground, some bellow and fight, and
some attack others. These handsome bulls with
moving humps appear like warriors who enter the
battlefield.

They attack each other constantly with their
decorated, sharp horns. Some move further and
then attack again. With blood dripping down their
bodies, they look like rows of raining morning clouds.

The herders separate the bulls into two groups with
spaces between them like how they take them to graze.
They appear like the creator Brahman who pushed
aside the ocean with wide waves to expose the wide
earth.
The bulls attack the running herders. They also
attack others who stand across them with their
flame-like horns, gore and pierce them, having them
resemble the vertical wooden pillars with holes,
that are at the entrance of stables. The men
wring their hands, rub sand on their bleeding wounds,
climb on the bulls and ride them like fishermen who
ride their boats on the ocean. Bulls dig out
the intestines of men with their decorated horns.
Eagles fly high carrying the intestines which slip from
their beaks and fall down on tree branches, appearing like
flower garlands placed on banyan and kadampam trees
as offerings.

The herders take their bulls to the meadow. The young
herder women embrace their men with joy and
perform dances.

Kuravai song:

Let us embrace and cover their wounds!
O friend! Let’s embrace with our warm breasts and
cover the wounds of our lovers, caused by murderous bulls!
O friend! Won’t our arms be adorned with buttermilk drops
that splatter when churning butter, mixed with blood on
embracing our wounded men who seized murderous
bulls?
O friend! Herder men fearing the heads of fighting
bulls and desiring the pretty arms of young herder women
– do both these go together?
O friend! Will our lovers give us the wealth that we earn
through selling buttermilk and hearing the words, “Her
man seized a killer bull?”

Let us sing and pray to Thirumāl of the forest where bees
sing, to protect our harsh bulls and our lovers!
Let us praise our king who ruined the lands of enemies
and brought tributes!

Notes:  கொன்றை விதைக் குழல்: அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர்.  உழலை (21) – நச்சினார்க்கினியர் உரை – மாட்டுத் தொழுவம் முதலியவற்றுள் மாடுகள் புகாமற் தடுப்பதற்கு வாயிலின் இரு பக்கத்தும் உழலையை (கழிகளை) இழுத்துப் போடும்படி துளையிட்டு நிறுத்தியுள்ள மரம். கேளா – கேட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  கழுவொடு – along with sticks/rods that control cattle, சுடுபடை – branding irons, சுருக்கிய தோல் கண் – in their draw-string hide bags, இமிழ் இசை – sweet music, மண்டை – bowls, உறியொடு – with hoops, தூக்கி – hanging/carrying, ஒழுகிய கொன்றைத் தீம் குழல் – played sweet music with flutes made with long kondrai seeds, Laburnum flowers, Golden Shower Tree, Cassia sophera, முரற்சியர் – those who play with music with beat, வழூஉ சொல் கோவலர் – cattle herders who do not use appropriate words (வழூஉ – இன்னிசை அளபெடை), தம் தம் இன நிரை பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – they went with their herds to the wide meadow wet from the rains,

அவ்வழி – there, நீறு எடுப்பவை – those raising dust, நிலம் சாடுபவை – those gouging the land, those scratching the land, மாறு ஏற்றுச் சிலைப்பவை – bulls bellow fighting, மண்டிப் பாய்பவையாய் – they were going fast attacking, துளங்கு இமில் நல் ஏற்று இனம் – handsome herd of bulls with bright humps, handsome herd of bulls with moving humps பல களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன – they resembled the beauty of warriors who enter battle fields,

தாக்குபு தம் உள் – they attacked among themselves, பெயர்த்து ஒற்றி – they moved and then attacked, எவ்வாயும் – everywhere, வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின் – since they attacked continuously with their sharp-tipped horns, மெய் வார் குருதிய ஏறு எல்லாம் – all the bulls with blood dripping on their bodies, பெய் காலைக் கொண்டல் நிரை ஒத்தன – they resembled rows of raining morning clouds,

அவ் ஏற்றை பிரிவு கொண்டு – separating those bulls, இடைப் போக்கி – leaving space, இனத்தோடு புனத்து ஏற்றி – taking the herds to the meadows, இரு திறனா நீக்கும் பொதுவர் – the herders who split them into two groups, உரு கெழு – large, மா நிலம் – huge land, இயற்றுவான் – the creator, Brahman, விரி திரை நீக்குவான் – he who pushed aside the ocean with wide waves, வியன் – wide, குறிப்பு – thought,  ஒத்தனர் – they resembled, அவரைக் கழல உழக்கி – attacked them running behind, எதிர் சென்று – went across, சாடி – attacked, அழல்வாய் மருப்பினால் – with their flame-like horns, குத்தி – pierced, உழலை மரத்தைப் போல் தொட்டன – they pierced holes like those in vertical wooden columns that are planted on both sides of the entrance to stables, ஏறு தொட்ட தம் புண் வார் குருதியால் – with their wounds with flowing blood caused by the piercing of the bulls, கை பிசைந்து – wringing their hands, மெய் திமிரி – rubbing their bodies, தங்கார் பொதுவர் – the herders did not just stay, கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு – like how fishermen rode on boats in the ocean, ஊர்ந்தார் – they climbed, ஏறு – bulls, ஏறு தம் கோலம் செய் மருப்பினால் – the bulls with their decorated horns, தோண்டிய வரிக் குடர் – dug out the intestines with lines (குடர் – குடல் என்பதன் போலி), ஞாலம் கொண்டு – covered with earth/sand, எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – slipped from the beak of a rising eagle (எழூஉம் – இன்னிசை அளபெடை, வழீஇ – சொல்லிசை அளபெடை), ஆலும் கடம்பும் – in the banyan and kadampam trees, அணிமார் – to wear, விலங்கிட்ட – left blocking, மாலை போல் தூங்கும் சினை – hanging on the branches like garlands,

ஆங்கு – there, தம் புல ஏறு பரத்தர – as they took their bulls to the meadow உய்த்த, தம் அன்பு உறு காதலர் கை பிணைந்து – holding the hands of their beloved lovers (உறு – மிக்க), ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் – herder women dance with joy, தழூஉ முயங்கி – they perform dances embracing (தழூஉ – இன்னிசை அளபெடை), பொதிவேம் முயங்கிப் பொதிவேம் – let us hide embracing, முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம் – let us hide with our breasts embracing,  கொலை ஏறு சாடிய புண்ணை – the wounds caused by the murderous bulls, எம் கேளே – O friend, பல் ஊழ் – very mature, well set, தயிர் கடைய – churning the curds, தாஅய – spread (இசை நிறை அளபெடை), புள்ளி – spots, மேல் – over that, கொல் ஏறு கொண்டான் – the man who seized a murderous bull, குருதி – blood, மயக்குற – to get mixed, புல்லல் – embracing, எம் தோளிற்கு அணியோ – is it beautiful on my arms, எம் கேளே – O friend, ஆங்கு போர் ஏற்று அருந்தலை அஞ்சலும் – fearing the fierce heads of fighting bulls, ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் – loving the pretty arms of the herder young women, இவ் இரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ – they don’t go together (ஓராங்கு – ஒருசேர), எம் கேளே – O friend, கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று – that her lover seized a killer bull, ஊரார் சொல்லும் சொல் கேளா – hearing the words of those in town, அளை மாறி யாம் வரும் செல்வம் – the riches that come through our selling buttermilk, எம் கேள்வன் தருமோ – will our lovers give that wealth, எம் கேளே – O friend,

ஆங்க – அசைநிலை, an expletive, அருந்தலை ஏற்றொடு – with bulls with fierce heads, காதலர்ப் பேணி – desiring our lovers, desiring protection for our lovers, சுரும்பு இமிர் கானம் – in the forest where bees sing, நாம் பாடினம் பரவுதும் – let us sing and pray to Thirumāl, ஏற்றவர் புலம் கெட – ruining the land of enemies, திறை கொண்டு – seize tributes, மாற்றாரைக் கடக்க – to win over enemies, எம் மறம் கெழு கோவே – our brave king (ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 107
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

“எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல் இனத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், எம்
கொல் ஏறு கோடல் குறை எனக் கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ.
தொழுவத்து, 5
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும்புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்.
அதனைக் கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது, 10
கேட்டனள் என்பவோ யாய்?”

இஃதொன்று கூறு;

தோழி:

“கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ? மற்றிகா
அவன் கண்ணி அன்றோ அது?”

தலைவி:

“பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 15
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல் ஆகுமோ மற்று ?”

இஃதொன்று கூறு;

தோழி:

“எல்லாத் தவறும் அறும்;”

தலைவி:

“ஓஒ அஃது அறும் ஆறுமாறு?

தோழி:

“ஆயர் மகன் ஆயின், ஆயமகள் நீ ஆயின்,  20
நின் வெய்யன் ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
அன்னை நோதக்கதோ இல்லை மன்”; …………………..

தலைவி:

………………………………………………………….“நின் நெஞ்சம்
அன்னை நெஞ்சு ஆகப் பெறின்”,

தோழி:

“அன்னையோ!
ஆயர் மகனையும் காதலை கைம்மிக,  25
ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிது அரோ,
நீ உற்ற நோய்க்கு மருந்து”,

தலைவி:

“மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின், எல்லா!
வருந்துவேன் அல்லனோ யான்?”

தோழி:

“வருந்தாதி!  30
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்,
கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் ‘திண்ணிதாத்
தெய்வ மால் காட்டிற்று இவட்கு’ என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு கொடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு”.  35

Kalithokai 107
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said

Heroine:

Hey my friend! Our herders have let out
their murderous bulls into the rodeo
arena, declaring to the goat herders roaming
in their village, and to the cow herders who
point out information about their milking cows,
stating that they are ready for capturing.

When a young man seized a mean, tawny bull
with markings on its ears, the curved strand with
pointed mullai flowers that decorated his head
was thrown off when the stupid bull removed it
with its horns and leaped. The strand landed on
my hair. Excited like those who got back what
they lost, I tied it to my hair. Will others ask
whether my mother asked me about it?
Tell me how to handle this!

Friend:

If she asks, what are you to do? Besides, isn’t it a
flower strand that belonged to him?

Heroine:

Is there anything I can do if mother asks me why I
have a garland belonging to a stranger in my hair
which did not have flowers?

Friend:

All difficulties will end.

Heroine:

O! O! How will it end?

Friend:

If he is a herder’s son, you are a herder’s daughter.
If he desires you, you desire him. There should not
be anything for your mother to worry about.

Heroine:

I wish my mother had a heart like yours!

Friend:

Are you of that nature? You love the herder’s son
greatly. You also fear your mother. If so, it would
be difficult to find a cure for your disease.

Heroine:

If there is no medicine for my disease, won’t I be
distressed, my friend?

Friend:

Do not feel sad! On hearing that a bull had given you
a garland for your washed, perfect hair, your father
and brothers thought it was a firm sign from Thirumāl,
and have consented to give you in marriage to the
herder.

Meanings:  தலைவி:  எல்லா – hey you, இஃது ஒன்று கூறு – saying in this manner, குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் – and goat herders who roam in their village, குடம் சுட்டவர்க்கும் – and cow herders who point out information about their milking cows, எம் கொல் ஏறு கோடல் குறை என – our murderous bulls are ready for capturing, கோவினத்தார் – cow herders, பல் ஏறு பெய்தார் தொழூஉ – they let many bulls into the arena (தொழூஉ – இன்னிசை அளபெடை), தொழுவத்து – in the stable, சில்லைச் செவி மறைக் கொண்டவன் – the man who took on a mean bull holding its ears with markings/dots (மறை – கறை, புள்ளி), சென்னி – head, குவி முல்லை – pointed jasmine flowers, கோட்டம் காழ் – curved garland, கோட்டின் – with the horns, எடுத்துக் கொண்டு ஆட்டிய – took and shook, ஏழை இரும்புகர் பொங்க – as the stupid big tawny colored bull leaped, as the stupid bull with big/black spots leaped (இரும்புகர் – ஆகுபெயர்), அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று – that flower garland came and fell on my hair, மன் – அசைநிலை, an expletive, அதனைக் கெடுத்தது பெற்றார் போல் – excited like those who lost something and got it back, கொண்டு யான் முடித்தது – me tying it on my hair கேட்டனள் என்பவோ யாய் – will others ask whether my mother asked me about it, இஃதொன்று கூறு – tell me how to handle this

தோழி:  கேட்டால் – if she asks, எவன் செய்ய வேண்டுமோ – what are you to do (வேண்டுமோ – ஓகாரம் அசை நிலை, an expletive), மற்றிகா அவன் கண்ணி அன்றோ அது – also isn’t it a garland that belonged to him (மற்று + இகா, இகா – ஓர் அசைச் சொல்),

தலைவி: பெய் போது அறியாத் தன் கூழையுள் – in my hair which did not have flowers, ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் செய்வது இல் ஆகுமோ – if mother asks why I have tied a strand that belonged to a stranger what can I do,

தோழி:  மற்று எல்லாத் தவறும் அறும் – all difficulties will end,

தலைவி:  ஓஒ – வியப்புக்குறி, அஃது அறும் மாறு – O! O! how will it end,

தோழி:  ஆயர் மகன் ஆயின் ஆயமகள் நீ ஆயின் – if he is a herder’s son, you are a herder’s daughter, நின் வெய்யன் ஆயின் – if he desires you, அவன் வெய்யை நீ ஆயின் – if you desire him, அன்னை நோதக்கதோ இல்லை மன் – mother should not be upset about anything (மன் – அசை நிலை, an expletive),

தலைவி:  நின் நெஞ்சம் அன்னை நெஞ்சு ஆகப் பெறின் – I wish mother had a heart like yours,

தோழி:  அன்னையோ – are you of that nature, ஆயர் மகனையும் காதலை கைம்மிக – you love the herder’s son greatly, ஞாயையும் அஞ்சுதி – you are also afraid of mother, ஆயின் – if so, அரிது அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து – it is hard to get a medicine for the disease that you have, (அரோ – அசைநிலை, an expletive),

தலைவி:  மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் – if there is no medicine for my affliction, எல்லா வருந்துவேன் அல்லனோ யான் – won’t I be just distressed my friend,

தோழி:  வருந்தாதி – do not fear (முன்னிலை வினைமுற்று), மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டு – on hearing that the bull gave his garland on your hair that is washed perfectly, திண்ணிதாத் தெய்வ மால் காட்டிற்று இவட்கு என – thinking that divine Thirumāl showed firmly this sign for you, நின்னை – you, அப் பொய் இல் பொதுவற்கு கொடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு – your father and brothers together have considered and agreed to give you to that honest herder

கலித்தொகை 108
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும் தலைவியும் சொன்னது

தலைவன்:

“இகல் வேந்தன் சேனை இறுத்தவாய் போல,
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி,
நுதல் அடி நுசுப்பு என மூவழி சிறுகிக்,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், 5
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி, நின்னை எவன் பிழைத்தேன், எல்லா யான்?,”

தலைவி:

“அஃது அவலம் அன்று மன,
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்
காயாம் பூம் கண்ணிக் கருந்துவர் ஆடையை 10
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை பிறவோ, அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?”

தலைவன்:

“அதனால் வாய்வாளேன்,
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன 15
பல்லும், பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும்,
நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய
சொல்லாட்டி, நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?”

தலைவி:

“சொல்லாதி”

தலைவன்:

“நின்னை தகைத்தனென்” …………………………………..

தலைவி:
……………………………………….“அல்லல் காண் மன், 20
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா யான்?”

தலைவன்:

“கொண்டது, 25

அளை மாறிப் பெயர்தருவாய், அறிதியோ? அஞ்ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ?”

தலைவி:

“நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்? 30
புனத்து உளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ?
இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ?
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?”,

தலைவன்:

“அனைத்து ஆக,
வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி, 35
அண்ணணித்து ஊர் ஆயின், நன்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி, உது காண்!

பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் 40
தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடிப்,
பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத்
தனிக் காயாம் தண் பொழில் எம்மொடு வைகிப்,
பனிப் படச் செல்வாய் நும் ஊர்க்கு.”

தலைவி:

“இனிச் செல்வேம் யாம், 45

மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை,
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய் ஓர் கண் குத்தி கள்வனை,
நீ எவன் செய்தி பிறர்க்கு? 50
யாம் எவன் செய்தும் நினக்கு?”

தலைவன்:

“கொலை உண்கண், கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி,
இனை வனப்பின் மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி, நீ வருதி,
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் 55
தலையினால் தொட்டு உற்றேன் சூள்”.

தலைவி:

“ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்,
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத், 60
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பல் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக்
காஞ்சிக் கீழ் செய்தேம் குறி”.

Kalithokai 108
Chōlan Nalluruthiran, Mullai, What the hero and heroine said

Hero:

Your loins, shoulders and eyes – these three
are wide. Your forehead, feet and waist – these
three are tiny. With beauty that makes confused
Kāman dart his arrows, when you go far, tired,
selling buttermilk, you smile at me and attack my
life like a king attacking an enemy king’s army.
One who hates me! What wrong did I do?

Heroine:

There is no great distress in moving around selling.
My relatives are herders. We are herder women.
You with a kāyā flower garland, dark red garment,
and a staff pressed on the ground in front of your
grazing herd, are you a herder? Or are you
one of the celestials, the son of the sun god in heaven?

Hero:

This is why I am unable to speak. O woman of words
with teeth that appear like rows of mullai buds and
peacock feather tips, arms like bamboo, and large calm,
kohl-decorated eyes, who believes that I am a nice man!
Who can banter with you?

Heroine:

Do not tell me anymore!

Hero:

I have held you up!

Heroine:

Look at the sorrow that I am in! You utter childish
babbles that are not desirable. You are like a creditor,
who asks cunningly what things a debtor has, so that he
could seize them. Hey you! What do I owe you?

Hero:

You owe what you took! Do you not know that in the
past, on a day when you were returning after selling
buttermilk, near a small stream in a forest filled with
thalavam flowers, with your eyes that are like split
tender mangoes, you seized my heart and kept it under
your control. Are you not a thief?

Heroine:

How can it be easy for me to rule your heart? Will
your heart take food to my brother who is in the field?
Will it carry milking pots to my father who is with our
herd?  Will it tend the calf mother let inside the
harvested millet field with stubble and allow it to graze?

Hero:

All that will be done!  My town is within
churning-rod-noise distance.  It is very close.  It is not far.
O dark woman of beautiful feminine nature with the color
of a peacock’s neck, whose beauty makes the eyes of those
who see you to be unable to see ohers! It is noon
time and the sun is hot. Where are you going at this time?

Look there! On top of that boulder is a little spring
that looks like the chopped eyes of nungu. Let us play
in it and pluck thalavam flowers with dew and mullai
blossoms. Stay with me in the grove with kāyā flowers
and leave for your town when it gets cold.

Heroine:

I will leave right now. Utter these words to young herder
women with moist eyes who are awed by your enticing
words.
You will lust after ten women a day like a bull that does
not hate cows. You are an opportunistic thief. What can
you do for others? What can I do for you?

Hero:

O dark woman with killer eyes decorated with kohl,
sharp teeth and a body like plucked tender sprouts!
There is nobody who is better than you in this world.
Understand clearly. I swear by the feet of Thirumāl
with a mountain-like chest! Please come!

Heroine:

Even though you lie, some accept it. Come to the
uproarious celebrations for our victorious king in our
small town of cattle herders. Come unseen by your
women. Come unheard by your women performing
kuravai dances in the common grounds with cow dung
dust that is like the pollen from kānji trees. Play and play
āmpal melodies on your flute, and meet me under the
kānji tree in our grove.

Notes:  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள் – அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண். அரும்பைப் போன்ற பற்கள் – அகநானூறு 21 – மௌவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், அகநானூறு 162 – முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல், கலித்தொகை 14 -மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், கலித்தொகை 22 – நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின், கலித்தொகை 31 – முகை வெண் பல், கலித்தொகை 103 – முல்லை முகையும். கலித்தொகை 108 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும்.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  மழ, குழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

Meanings:  தலைவன்:  இகல் வேந்தன் சேனை இறுத்தவாய் போல – like the army of an enemy king that stays (இறுத்தவாய் – தங்கிய இடம், நச்சினார்க்கினியர் உரை – இகல்வாயிருத்த வேந்தன் சேனை போல என மாற்றுக), அகல் அல்குல் – wide loins, தோள் – arms/shoulders, கண் – eyes, என மூவழிப் பெருகி –  these three are luxuriant, these three are abundant, நுதல் அடி நுசுப்பு  – forehead and feet and waist, என மூவழி சிறுகி  – these three are small, கவலையால் – in sorrow, காமனும் படை விடு – Kāman darts his arrows, வனப்பினோடு – with beauty, அகல் – far, ஆங்கண் அளை மாறி – selling buttermilk there, அலமந்து பெயருங்கால் – when moving around tired/confused (பெயருங்கால்  – கால் ஈற்று வினையெச்சம்), நகை வல்லேன் யான் என்று – that I am fit for smiles, என் உயிரோடு – with my life, படை தொட்ட – touched weapons, இகலாட்டி – woman who hates, நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – what wrong did I do to you (எல்லா – ஏடி),

தலைவி: அஃது அவலம் அன்று மன – there is no great distress in that (மன- மிகவும்), ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் – our folks are herders and we are herder women, மிகக் காயாம் பூம் கண்ணி – with a kāyā flower garland, Ironwood tree,  Memecylon edule, கருந்துவர் ஆடையை – with dark red clothing, மேயும் நிரை முன்னர் – in front of your grazing herd, கோல் ஊன்றி நின்றாய் – you are standing here with a stick, ஓர் ஆயனை அல்லை – ஆயன் அல்லை, you are not a herder (ஆயனை – ஐ சாரியை), பிறவோ – are you somebody else, அமரர் உள் – among celestials, ஞாயிற்றுப் புத்தேள் மகன்  – the son of the sun in the heaven,

தலைவன்: அதனால் வாய்வாளேன் – that is why I am not able to speak, முல்லை முகையும் – and jasmine buds, முருந்தும் – and peacock feather tips, நிரைத்தன்ன – like placed in a row, பல்லும் – teeth, பணைத் தோளும் – bamboo-like arms, பேர் அமர் உண்கண்ணும் – huge calm kohl-rimmed eyes, நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி – woman who talks and believes that I am a nice person, நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – who can talk to you,

தலைவி:  சொல்லாதி – do not tell me anymore,

தலைவன்:  நின்னை தகைத்தனென் – I held you up,

தலைவி:  அல்லல் காண்மன் – look at the sorrow I am in, மண்டாத கூறி – uttering undesirable words, மழ குழக்கு ஆகின்றே – it is like the babbles of a child, கண்ட பொழுதே – on seeing me, கடவரைப் போல – like one who gave loans, நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய – you are like one who asks cunningly about what things they have so that you can seize them (தொடீஇய – செய்யுளிசை அளபெடை), நின் கொண்டது எவன் எல்லா யான் – hey you! what do I owe to you,

தலைவன்: கொண்டது – what you took (what you owe since you took), அளை மாறி – after selling the buttermilk/curds, பெயர்தருவாய் – when you returned, அறிதியோ – do you know, அஞ்ஞான்று – on that day, தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல் – near a small stream in a forest filled with thalavam flowers, golden jasmine, செம்முல்லை, இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் – with eyes that are like tender mangoes that are split, என் நெஞ்சம் களமாக் கொண்டு ஆண்டாய் – you ruled my heart as your land, ஓர் கள்வியை அல்லையோ – are you not a thief,

தலைவி: நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – how can it be easy for me to rule your heart as my land, புனத்து உளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ – can it take food to my brother who is in the field, இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ – can it take the milking pots to my father who is with our herd, தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ – can it let the calf graze that mother let into the harvested millet field with stubble,

தலைவன்:  அனைத்து ஆக – will do all that, வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் – since the place is close that butter churning noises can be heard, சேய்த்து அன்றி – not far away, அண் அணித்து ஊர் ஆயின் – since the town is very close (அண் அணித்து – ஒருபொருட் பன்மொழி), நன்பகல் போழ்து ஆயின் – when it is noon time,  கண் நோக்கு ஒழிக்கும் – ruins those who see, eyes will not be able to see others, கவின் பெறு பெண் நீர்மை – beautiful feminine nature, மயில் எருத்து வண்ணத்து – color of peacock neck, மாயோய் – O dark woman, மற்று இன்ன வெயிலொடு எவன் விரைந்து சேறி – where are you going in this heat, உது காண் – look there,

பிடி துஞ்சு அன்ன அறை மேல – on top of a boulder that looks like a sleeping female elephant, நுங்கின் தடி கண் புரையும் – like the eyes of the cut nungu fruit, குறுஞ் சுனை ஆடிப் – play in the small pond/spring, பனிப் பூம் தளவொடு முல்லை பறித்து – pluck thalavam flowers (golden jasmine, செம்முல்லை) with dew along with mullai flowers, தனிக் காயாம் தண் பொழில் எம்மொடு வைகி – stay with me in the cool groves with kāyā flowers, Ironwood tree, Memecylon edule, பனிப் படச் செல்வாய் நும் ஊர்க்கு – you leave for your town when it gets cold,

தலைவி:  இனிச் செல்வேம் யாம் – I will leave now, மா மருண்டன்ன மழைக் கண்  – moist eyes like a bewildered deer, சிற்றாய்த்தியர் – young herder women, நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை – tell it to those who are awed by your enticing words, அவை ஆ முனியா ஏறு போல் – like a bull that does not dislike cows, வைகல் – every day, பதின்மரைக் காமுற்றுச் செல்வாய் – you will lust and go after ten women, ஓர் கண் குத்தி கள்வனை – you are an opportunistic thief, நீ எவன் செய்தி பிறர்க்கு – what can you do for others, யாம் எவன் செய்தும் நினக்கு – what can I do for you,

தலைவன்:  கொலை உண்கண் – killer eyes decorated with kohl, கூர் எயிற்று – with sharp teeth, கொய் தளிர் மேனி – body like plucked sprouts, இனை – like these, வனப்பின் மாயோய் – oh beautiful dark woman, நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை – there is nobody who is better than you in this world, தெளி – you understand, நீ வருதி – you come, மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள் – I am making a promise touching the feet of Thirumāl with a mountain-like chest,

தலைவி:  ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்  – if you utter lies those who don’t understand will accept it, தேம் கொள் பொருப்பன் – our victorious king, சிறுகுடி – small town, எம் ஆயர் – our herders, வேந்து ஊட்டு அரவத்து – in the loud offering celebrations for the king, நின் பெண்டிர் காணாமை – without your women seeing you, காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்து – in the common grounds with cow dung dust that is like the pollen dropped by Portia trees, பூவரச மரம், portia Tree, thespesia populnea, தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை – your women performing kuravai dances not hearing you coming, ஆம்பல் குழலால் பயிர் பயிர் – call and call with āmpal tunes on your flute (பயிர் பயிர்- அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), எம் படப்பைக் காஞ்சிக் கீழ் செய்தேம் குறி – the sign I give is to meet me under the Portia tree, பூவரச மரம், portia Tree, thespesia populnea

கலித்தொகை 109
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவன் சொன்னது
கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்து உள்ளும்,
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இள பாண்டில்
தேர் ஊரச் செம்மாந்தது போல் மதைஇனள், 5
பேரூரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை, யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு.

பண்ணித் தமர் தந்து ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல், 10
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும்
கண்ணளோ? ஆயமகள்
இவள் தான் திருத்தாச் சுமட்டினள் ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
ஆடல் தகையள், கழுத்தினும் வாலிது, 15
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தம் தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ?
படை இடுவான் மன் கண்டீர், காமன் மடை அடும்
பாலொடு கோட்டம் புகின். 20
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள்
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று, ஊர்ப் பெண்டிர்
மாங்காய் நறுங்காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தம் தம்
கொழுநரைப் போகாமல் காத்து முழு நாளும், 25
வாயில் அடைப்பவரும்.

Kalithokai 109
Chōlan Nalluruthiran, Mullai, What the hero said 
Like a belligerent calf that is proud when the
chariot to which he is hitched moves,
……….borne by a bull that fights without sating,
……….belonging to a herd with cows that yield
……….pots of milk, that eats large amounts of
……….arukam grass nearby not moving away, and
……….rests in the shade with water in the fragrant
……….vast land where heavy rains have poured,
the pretty young woman with buttermilk as though
she would cause uproars in big and small towns.
Look at her! Her beauty is such that it has no equal.

Her lifted, wide loins with lines are unable to carry the
flower strand her relatives made for her. Even those
without passion are afflicted by her. Does she have eyes
all over her body, this herder woman? She carries a load
pad that she has not fixed well, sways one arm, and holds
a basket with lovely paddy in her other arm, the young
woman with lovely earrings, and jewels on her neck.
Her waist is and small and unable to be seen. Did the
celestial women Ūrvasi and Thilōthamai give her their
beauty?

If she had entered the temple of Kāman with an offering
of milk, he would have dropped his bow on seeing her.
She causes distress to others, but is not medicine that will
heal. The women in this town who realize that she is
terror to everybody say, “Let us make fragrant mango
pickles. Let her leave with her relatives.” She comes
making the women keep their men at home all day
and guarding the entry doors of their homes.

Notes:  The women want to use mango pickles with their meals instead of buying buttermilk from the pretty young woman, as a way to prevent their husbands from seeing her.  கண்டீர் – கண்டீர் என்றா, கொண்டீர் என்றா, சென்றது என்றா, போயிற்று என்றா, அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி, நின்ற வழி அசைக்கும் கிளவி’ என்ப (தொல்காப்பியம், எச்சவியல் 29).

Meanings:  கார் ஆரப் பெய்த – rain paid abundantly, கடி கொள் வியன் புலத்து – in the fragrant wide land,  பேராது – not leaving, சென்று பெரும் பதவப் புல் மாந்தி – went and ate huge amounts of arukam grass, cynodon, நீர் ஆர் நிழல – in the shade filled with water, குடம் சுட்டு இனத்து உள்ளும் – among the herd that yield pots of milk, போர் ஆரா ஏற்றின் – of a bull which fights without sating, பொரு நாகு – belligerent/fighting young calf, இள பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் – proud/arrogant like a calf tied to a chariot that rides, மதைஇனள்  – the very pretty young woman (மதைஇனள் – சொல்லிசை அளபெடை),

பேரூரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரோடு வந்தாள் – she came with buttermilk as if raising gossips/uproars in large and small towns, தகை கண்டை – see her beauty, see her esteem (கண்டை – முன்னிலை வினைமுற்று), யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு  – her beauty was such that it was talked about that she had no equal among others,

பண்ணித் தமர் தந்து ஒரு புறம் தைஇய கண்ணி எடுக்கல்லா – unable to bear the weight of the flower strands/garlands that her relatives gave her (தைஇய – செய்யுளிசை அளபெடை), கோடு – lines, ஏந்து அகல் அல்குல் – lifted wide loins, புண் இல்லார் புண் ஆக – even those without passion are afflicted, நோக்கும் – sees, முழு மெய்யும் கண்ணளோ – is she with eyes all over her body, ஆயமகள் இவள் – the herder girl, தான் திருத்தாச் சுமட்டினள் – one with load pad that she didn’t fix properly, ஏனைத் தோள் வீசி  – swaying her arms, வரிக் கூழ – with beautiful paddy, வட்டி தழீஇ –  embracing a basket (தழீஇ – சொல்லிசை அளபெடை), அரிக் குழை ஆடல் தகையள் – she is a beautiful young woman with pretty/jingling earrings, கழுத்தினும் வாலிது – beautiful on the neck, நுண்ணிதாத் தோன்றும் – appears to be small, நுசுப்பு waist,  இடை தெரியா – unable to see (தெரியா – நச்சினார்க்கினியர் உரை – செய்து என எச்சம்), ஏஎர் இருவரும் – the two who are beautiful – Ūrvasi and Thilōthamai (ஏஎர் – இன்னிசை அளபெடை), தம் தம் உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ – did they give all their beauty to her, படை இடுவான் மன் கண்டீர் – he would drop his weapon – bow (கண்டீர் – நச்சினார்க்கினியர் உரை – வினாவோடு சிவணி நின்ற அசை), காமன் மடை அடும் பாலொடு கோட்டம் புகின் – if she had entered the temple of Kāman with warm milk as offering, இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – if she causes distress disease to others and leaves and she is not medicine, யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று – that she is a terror to everybody, ஊர்ப் பெண்டிர் – the women in town, மாங்காய் நறும் காடி கூட்டுவேம் – let us make fragrant mango pickles (instead of buying buttermilk), யாங்கும் எழு நின் கிளையொடு போக என்று – so that she will go away with her kin, தம் தம் கொழுநரைப் போகாமல் காத்து – protect their husbands not letting them out, முழு நாளும் – all day, வாயில் அடைப்ப – to close their entry doors, வரும் – she comes

கலித்தொகை 110
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

கடி கொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி! எல்லா!
இடு தேள் மருந்தோ நின் வேட்கை? தொடுதரத்
துன்னித் தந்தாங்கே நகை குறித்து எம்மைத்
திளைத்தற்கு எளியமாக் கண்டை; அளைக்கு எளியாள் 5
வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய்.……………

தலைவன்:
……………………………………………………….ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல்லியல் ஆய்மகள்!
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் 10
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.

விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது,
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு. 15

எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக்,
கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது அளித்து என் உயிர்.

தலைவி:

அன்னையோ! மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை 20
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்;
நின்றாய் நீ சென்றீ! எமர் காண்பர்! நாளையும்
கன்றொடு சேறும் புலத்து.

Kalithokai 110
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and the hero said

Heroine:

You go to all the goat herders’ settlements with
great protection, seeking girls. Is your desire like
a scorpion sting that needs medicine in haste?
For letting you touch me a little and smiling at
you, you feel I am easy for union. You think, ‘She
is easy for buttermilk. She must be the same for
butter’.

Hero:

One with a bright forehead! If you say so, so be it!
O delicate young woman! Fearing, confused
every day, and not staying with me, my heart whirls
around your beauty like a rope moving around
a churning rod.

On seeing you, my heart trembles in fear daily like a
young cow who gave birth to her calf and does not
leave the curved stable in the house, to graze at
daybreak.

My distress has increased and my life is pitiful and
useless like milk from which butter has been removed.
Reduced to just touching, I do not know how to
proceed further.

Heroine:

Are you of this nature? When you see the daughters
of noble parents, you say to them that you cannot live
without them. If you stand here, my family will see you.
Leave!  I’ll be in the field tomorrow with the calves!

Meanings:  கடி கொள் இருங்காப்பில் – in places with great protection, புல்லினத்து – with goat herds, ஆயர் குடிதொறும் – in all the settlements, in all the villages, நல்லாரை வேண்டுதி – you go and request women, எல்லா  – hey you, இடு தேள் மருந்தோ நின் வேட்கை – does your desire need medicine like it is a scorpion sting, தொடுதரத் துன்னித் தந்தாங்கே – for letting you get close and touch a little bit, நகை குறித்து – seeing smiles, எம்மைத் திளைத்தற்கு எளியமா – you think I am easy to enjoy, you think I am easy to unite with(எம்மை – தன்மைப் பன்மை, first person plural), (எளிய + மா, மா – அசைநிலை), கண்டை – you saw, அளைக்கு எளியாள் – she is easy for buttermilk, வெண்ணெய்க்கும் அன்னள் – that she is also for butter, எனக் கொண்டாய் – you took it such,

ஒள் நுதால் – O one with bright forehead, ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக – if you say so let it be so,  நீங்குக – let it leave, அச்சத்தான் மாறி – changed due to fear, அசைவினான் – due to it being tired, போத்தந்து – it moves away without staying, நிச்சம் தடுமாறும் – it is confused every day, மெல்லியல் ஆய் மகள் – O young herder woman of delicate nature, மத்தம் பிணித்த கயிறு போல் – like a rope wound on a churning rod, நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு – my heart whirls around your beauty,

விடிந்த பொழுதினும் – even at the time of daybreak, இல் வயின் போகாது – not leaving the house, கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் – surrounds its calf in the curved stable, கடுஞ்சூல் ஆ நாகு போல் – like a young cow after its first child birth, நின் கண்டு – on seeing you, நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – my heart trembles in fear daily,

எவ்வம் மிகுதர – with sorrow increased, எம் திறத்து எஞ்ஞான்றும் நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – I have become useless all the time like milk from which butter has been churned and removed, கை தோயல் மாத்திரை அல்லது – reduced to just touching with hands, செய்தி அறியாது – not knowing what to do, அளித்து என் உயிர் – my life is pitiable,

அன்னையோ – are you of this nature, மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – you say “ I cannot live without you when you see the daughters of noble parents in the common ground”, நின்றாய் நீ – if you stand here, சென்றீ – you go away (முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்), எமர் காண்பர் – my family will see you, நாளையும் கன்றொடு – tomorrow with the calves, சேறும் – I will go, தன்மைப் பன்மை, first person plural, புலத்து – to the field

கலித்தொகை 111
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவி தோழியிடம் சொன்னது
தீம் பால் கறந்த கலம் மாற்றிக், கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ, யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி, நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5
ஒருங்கு விளையாட, அவ்வழி வந்த
குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் மற்று என்னை,
“முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது?” என்றான்; “எல்லா! நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய், 10
கற்றது இலை மன்ற காண்” என்றேன்; “முற்று இழாய்!
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு?” என்றான்; “எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப்
பேதையை மன்ற பெரிது” என்றேன்; “மாதராய்! 15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று?” என்றான்; “யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது
மையலை மாதோ விடுக” என்றேன்; தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப, 20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான், அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற
நோயும் களைகுவை மன்.

Kalithokai 111
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine said to her friend
My friend!
I set aside the pots of sweet milk, tied
all the calves with ropes, left them in the house,
and wearing the blue garment with a flower border
that mother gave, I went swaying to the place with
pāngar trees and mullai vines, to play with our
goat herder girls. A young man who came that way
wearing a kuruntham garland asked me, “Pretty
young woman with perfect jewels and delicate nature!
Can I build a little sand house for you?”
I said, “Hey you! Look! Without building one for
yourself, you want to build one for others. You are
untutored.”
He said, “One with perfect jewels! Can I place a
strand of flowers on your hair with flower pollen?”
I said, “Hey you! You are a very naïve one to take
flowers from others.”
He said, “Pretty one! Can I draw thoyyil designs on your
tender, pretty breasts with delicate, spread pallor spots?”
I said, “Phew! And I will just watch others draw on me!
You are totally confused! Just leave me!”

O my beautiful friend! He parted in anguish since I
retorted again and again whenever he said something
to me.
Go and tell him the nature of herder women. Also, if you
will explain clearly to my father and mother, you will
help rid this affliction of mine.

Notes:  தோழியை அறத்தொடு நிற்க வேண்டும் என்றது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  தீம் பால் கறந்த கலம் மாற்றி– I placed the bowls of sweet milk, கன்று எல்லாம் தாம்பின் பிணித்து – tied all the calves with ropes, மனை நிறீஇ – left them in the house (நிறீஇ – சொல்லிசை அளபெடை), யாய் தந்த – what mother gave, பூங்கரை நீலம் – blue colored garment with flower border (பூங்கரை – ஆகுபெயர் ஆடைக்கு), புடை தாழ – hanging low, மெய் அசைஇ – swaying my body (அசைஇ – சொல்லிசை அளபெடை), பாங்கரும் முல்லையும் தாய – where toothbrush trees and jasmine vines have spread around, பாட்டங்கால் – to the garden, தோழி – my friend, நம் புல்லினத்து ஆயர் மகளிரோடு – with our goat herder girls, எல்லாம் ஒருங்கு விளையாட – we all played together, அவ்வழி வந்த குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் – a young cattle herder wearing kuruntham flower garlands who came that way, wild citrus, citrus indica, மற்று என்னை முற்று இழை ஏஎர் மட நல்லாய் – looked at me and said ‘O beautiful naïve young woman with perfect jewels’ (ஏஎர் – இன்னிசை அளபெடை), நீ ஆடும் சிற்றில் புனைகோ சிறிது என்றான் – he said, ‘can I build a little sand house for you?’ (புனைகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, + ஓ – அசைநிலை, a poetic expletive), எல்லா – hey you, நீ பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – without staying in yours you want to stay in the houses of others, கற்றது இலை – you have not learned (இலை – இல்லை என்பதன் விகாரம்), மன்ற – for sure, அசைநிலை, காண் என்றேன் – look, I said, முற்று இழாய் – O one with perfect jewels, தாது சூழ் கூந்தல் தகைபெற – for your hair with pollen to become beautiful, தைஇய கோதை புனைகோ நினக்கு – can I wear a strung flower strand on it (தைஇய – செய்யுளிசை அளபெடை, புனைகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), என்றான் –he said, எல்லா – hey you, நீ ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப் பேதையை – you are a very naïve one to take the flowers that others give (ஒருபொருட் பன்மொழி), மன்ற – for sure (தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), பெரிது – greatly, என்றேன் – I said, மாதராய் – O pretty woman, ஐய பிதிர்ந்த சுணங்கு – with delicate scattered pallor spots, அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – can I draw thoyyil patterns on your pretty delicate breasts (எழுதுகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, + ஓ – அசைநிலை, an expletive), யாம் பிறர் செய் புறம் நோக்கி இருத்துமோ – will I just watch others do it, நீ பெரிது மையலை மாதோ விடுக என்றேன் – I said, ‘you are totally confused.  Leave me’ (மாதோ – மாது, ஓ – அசைநிலைகள்), தையலாய் – O young woman, சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப – for what I said to him again and again retorting (மாறு மாறு – அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் – he parted in as though in anguish, அவனை நீ ஆயர் மகளிர் இயல்பு உரைத்து – tell him about the nature of herder women, எந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் – if you tell father and mother about it, யான் உற்ற நோயும் களைகுவை – you will rid the disease that I have, மன் – ஒழியிசை, suggesting implied meaning

கலித்தொகை 112
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

யார் இவன் என்னை விலக்குவான்? நீர் உளர்
பூம் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை நீ மாறு நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார் எமர்.

தலைவன்:

எல்லா! கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் 5
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்
விடாஅல் ஓம்பு என்றார் எமர்.

தலைவி:

கடாஅயார் நல்லாரைக் காணின் விலக்கி நயந்து அவர்
பல்லிதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட
நல்லது கற்பித்தார் மன்ற நுமர், பெரிதும் 10
வல்லர் எமர் கண் செயல்.

தலைவன்:

ஓஒ வழங்காப் பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை
இகழ்ந்தாரே அன்றோ எமர்?

தலைவி:

ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு; 15

தலைவன்:

விடேன் யான்; என் நீ குறித்தது இருங்கூந்தால்
நின்னை என் முன் நின்று
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ, மெல்ல
முயங்கு நின் முள் எயிறு உண்கும், …………..

தலைவி (தன் நெஞ்சிடம்):

……………………………………. எவன் கொலோ, 20
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின், தலைப்பட்டாம் பொய் ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்பத் தட மென்தோள்
சாயினும் ஏஎர் உடைத்து. 25

Kalithokai 112
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and the hero said

Heroine:
Who is he, the one blocking me? My relatives
told me to stay away from the uneducated young
man who gave me pretty blossoms of lotus growing
in water, who wears a garland with many flowers,
and not to talk to him.

Hero:

Hey you! My relatives told me if I saw the young
woman with fine arms filled with sugarcane designs,
to hold on to her and not let her go.

Heroine:

Your relatives have taught you well! To
block fine women and sing the praises of their arms
and eyes like flowers with many petals! If they are
so smart, they should show their actions to my
family.

Hero:

If my relatives know you are going at this time when
there is no movement out here on the pretense that
you are letting your calves graze, and if they don’t tell
me about it, won’t it be that they are putting me down?

Heroine:

That is fitting! I understand! Leave me alone!

Hero:

I will not leave you! O young woman with dark hair!
Why did you think I lied to you? I did not lie to you!
Your relatives told you not to talk to me, but did they
tell you not to embrace me? Embrace gently.
Let me kiss you of sharp teeth.

Heroine to her heart:

What will I do now? If the deceiving young man uttered
truths, I am bound to him forever. If he lied, O my
heart, my kohl-rimmed eyes that are like pretty flower
petals will pale, the flower garland on my sweet chest
will be ruined, and my curved, delicate arms will become
thin.  That will still be beautiful!

Notes:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நடாஅக் கரும்பு (6) – மண்ணில் நடாத கரும்பாகிய தோளில் வரையப்பட்ட  கரும்பு, வெளிப்படை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  யார் இவன் என்னை விலக்குவான் – who is he blocking me, நீர் உளர் பூம் தாமரைப் போது தந்த – one who gave lotus flowers that grow in the water, விரவுத் தார்க் கல்லாப் பொதுவனை நீ மாறு நின்னொடு சொல்லல் ஓம்பு – to stay away from the uneducated young man wearing a garland made with mixed flowers and not to talk to him, என்றார் எமர்- my relatives told me,

எல்லா – hey you, கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – who causes distressing affliction with her passionate eyes (கடாஅய – இசை நிறை அளபெடை, கலைஇய – செய்யுளிசை அளபெடை), நடாஅக் கரும்பு அமன்ற தோளாரை – one with fine arms filled with sugarcane designs – those that are not planted (நடாஅ – இசை நிறை அளபெடை), காணின் விடாஅல் ஓம்பு – if you see her hold on without letting her go (விடாஅல் – எதிர்மறை வியங்கோள், இசைநிறை அளபெடை), என்றார் எமர் – my relatives told me,

கடாஅயார் நல்லாரைக் காணின் விலக்கி – blocking women with passion when you see (கடாஅயார் – இசை நிறை அளபெடை), நயந்து – lovingly, அவர் பல்லிதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட – to sing the praises of their eyes like flowers with many petals and their arms (பல்லிதழ் – பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), நல்லது கற்பித்தார் – they have taught you nice things, மன்ற – for sure, certainly,  நுமர் பெரிதும் வல்லர் – your folks are very able, எமர்கண் செயல் – they should show the action to my family,

ஓஒ – வியப்புக்குறி, வழங்காப் பொழுது – when there is no people movement, நீ கன்று மேய்ப்பாய் போல் வழங்கல் அறிவார் – those who know that you are going around like you are letting the calves graze, உரையாரேல் – if they don’t talk, எம்மை இகழ்ந்தாரே அன்றோ எமர் – won’t it be like my relatives putting me down (எம்மை – தன்மைப் பன்மை, first person plural),

ஒக்கும் – that is fitting, அறிவல் யான் – I understand, எல்லா விடு – leave me,

விடேன் யான் – I will not let go, என் நீ குறித்தது – why did you consider that I lied, I did not tell a lie, நச்சினார்க்கினியர் உரை – நீ பொய்யாகக் குறித்ததென்? யான் பொய் கூறிற்றிலேன்),  இருங்கூந்தால் – O woman with dark/thick hair, நின்னை – to you, என் முன் நின்று சொல்லல் ஓம்பு என்றமை அன்றி – other than avoiding talking in front of me, அவனை நீ புல்லல் ஓம்பு – do not embrace him, என்றது உடையரோ – did they tell you, மெல்ல முயங்கு – embrace me gently, நின் முள் எயிறு உண்கும் – let me kiss you with sharp teeth,

எவன் கொலோ – what will I do, மாயப் பொதுவன் உரைத்த உரை – the words uttered by the deceiving young man, எல்லாம் வாய் ஆவது ஆயின் – if all those are truths, தலைப்பட்டாம் – I will be bound to him (in matrimony), பொய் ஆயின் – if they are lies, சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த – crushed the fragrant flower garland on his handsome sweet chest – நின் ஆய் இதழ் உண்கண் பசப்ப – eyes with kohl that are pretty like flower petals will become pale, தட – curved, large, மென்தோள் சாயினும் – even if the delicate arms become thin, ஏஎர் உடைத்து – they are beautiful (ஏஎர் – இன்னிசை அளபெடை)

கலித்தொகை 113
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும் தலைவியும் சொன்னது

தலைவன்:

நலம் மிக நந்திய நயவரு தட மென்தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்.

தலைவி:

பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
யார்? எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி? 5

தலைவன்:

தளிர் இயால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்.

தலைவி:

ஒக்கும் மன்.
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர் எமர். 10

தலைவன்:

எல்லா!
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன்.

தலைவி:

ஏதம் அன்று எல்லை வருவான் விடு.

தலைவன்:

விடேன்.
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு, 15
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு யானோ விடுவேன், மற்று என் மொழி கொண்டு

என் நெஞ்சம் ஏவல் செயின்?

தலைவி:

நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு, எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் 20
பொய்ம் மொழி தேறுவது என்?

தலைவன்:

தெளிந்தேன், தெரி இழாய் யான்!
பல்கால் யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை 25
இரவு உற்றது இன்னும் கழிப்பி, அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன,
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.

Kalithokai 113
Chōlan Nalluruthiran, Mullai, What the hero and heroine said

Hero:
O pretty young woman with lovely, desirable, wide,
delicate arms and kohl-rimmed, whirling, calm
eyes!  Tell me the cure for this painful affliction that
you have given me.

Heroine:

Who are you, standing in front of me like a crazy
man, blocking me? Hey you! I don’t know who
you are.

Hero:

One like tender leaves! If you want to know about
me, I am the son of a goat herders’ family that does
not fear enemies.

Heroine:

You are from a goat herding family and I am from a
family of herders who milk cows that yield milk in
pots.

Hero:

Hey you! There is no harm in talking to you.

Heroine:

Yes, no harm! I’ll come tomorrow. Let me go now.

Hero:

I will not let you go! Even though I understand
that the words of one who consents and then wants
to leave are not to be trusted, O delicate young
woman, will I let you go on hearing your words,
when my heart does not listen to me?

Heroine:

You stand here stating that your heart does not
listen to you. Love confuses you. Why are you
taking the words of others as lies?

Hero:

One with chosen jewels! I understand clearly now!

In the past, we played many times with friends in
a grove, on huge boulders on the bright sand of
the forest stream, wearing mullai and kuruntham
flowers on our hair. Day has turned into night.
You are delaying me further. Like fighting bulls
that sound like snake-attacking thunder, that
unite with their cows, let us unite.

Notes:  There is a convention that thunder ruins and kills snakes. Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 144, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  நலம் மிக நந்திய – filled with virtue/beauty, நயவரு – desirable, தட – curved, large, மென்தோள் – delicate arms, delicate shoulders, அலமரல் அமர் – whirling and calm/warring, உண்கண் அம் நல்லாய் – O pretty woman with kohl-lined eyes, நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் – tell me the way to heal myself of this painful affliction that you caused (உறீஇ – சொல்லிசை அளபெடை),

பேர் ஏமுற்றார் போல – like those who are crazy, like a man who is crazy, முன் நின்று விலக்குவாய் யார் – who are you who is blocking me, standing in front of me, எல்லா – hey, you, நின்னை அறிந்ததூஉம் இல்வழி – when I don’t know you (அறிந்ததூஉம் – இன்னிசை அளபெடை),

தளிர் இயால் – O woman who is like tender leaves, என் அறிதல் வேண்டின் – if you desire to know about me, பகை அஞ்சாப் புல்லினத்து ஆயர் மகனேன் மற்று யான் – I am the son of a goat herder’s family that does not fear enemies,
ஒக்கும் – it is suitable, மன் – அசை நிலை, an expletive, புல்லினத்து ஆயனை நீ ஆயின் – if you are one from goat herders’ family (ஆயனை – ஆயன், ஐ – சாரியை), குடம் சுட்டு நல் இனத்து ஆயர் எமர் – my relatives are those who milk the milk of cows in pots,

எல்லா – hey you, நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை – there is no harm in talking to you, மன் – அசை நிலை, an expletive,
ஏதம் அன்று – no harm, எல்லை வருவான் – I’ll come tomorrow, விடு – let me go,

விடேன் – I will not let you go, உடம்பட்டு நீப்பார் கிளவி – the words of one who agrees and then leaves, மடம் பட்டு – with naiveness, மெல்லிய ஆதல் – have become tender, அறியினும் – even though I understand, மெல்லியால் – O one of delicate nature, நின் மொழி கொண்டு – with your words, யானோ விடுவேன் – will I let you go, மற்று என் மொழி கொண்டு என் நெஞ்சம் ஏவல் செயின் – since my heart does not listen to my words,

நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு – you stand here stating that your heart does not listen to your words, எஞ்சிய காதல் கொள் காமம் கலக்குற – as abundant love confuses you, ஏதிலார் பொய்ம் மொழி தேறுவது என் – why are you taking the words of others as lies,

தெளிந்தேன் தெரி இழாய் யான் – O one with chosen jewels! I understand clearly now,
பல்கால் – many times, யாம் – we, கான் யாற்று – of a forest stream, அவிர் மணல் – bright sand, தண் பொழில் அல்கல் – staying in the cool groves, அகல் அறை – wide boulders, ஆயமொடு ஆடி- played with friends, முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து – wearing strands with jasmine and kuruntham flowers in our hair, wild citrus, citrus indica, எல்லை இரவு உற்றது – it has become dark at night, இன்னும் கழிப்பி – delaying further, அரவு உற்று உருமின் அதிரும் குரல் போல் – loud roars of thunder when there are snakes, பொரு முரண் நல் ஏறு – handsome bulls that fight with enmity, நாகு உடன் நின்றன – they stand with their cows, பல் ஆன் இன நிரை – many cattle herds, நாம் உடன் செலற்கே – let us go together

கலித்தொகை 114
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ,
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரை கண்டு? “மதி அறியா
ஏழையை” என்று அகல நக்கு வந்தீயாய் நீ 5
தோழி அவன் உழைச் சென்று.

தோழி:

சென்று யான் அறிவேன்; கூறுக மற்று இனி.

தலைவி:

சொல் அறியாப் பேதை! “மடவை! மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய்”, அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு.
தருமணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ, அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

Kalithokai 114
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said

Heroine:

Do his parents say that their son with properly
combed, low hanging hair on his large back
is crying? Go and laugh at him and return
after telling him, O friend,
that he is ignorant and does not understand what
is going on even after seeing my family string fresh
flower garlands to perform my wedding.

Friend:

I will go and explain. Tell me what else to do!

Heroine:

O naïve friend! Go and tell him that he is ignorant
and does not know to request my family for my hand.
Also explain to him that if he does not come now,
the wedding will slip away from him. My relatives
have spread new sand in our yard, painted the house
with red earth and have placed the horns of female
buffaloes for worship, to perform a grand wedding
which will happen without him.
Why is he letting me suffer, after uniting with me,
away from my friends with pretty foreheads who were
playing on the shore with rippled sand making little
sand houses, since he knows that there is only one
marriage for herder women with virtue who would
refuse another marriage even if the world surrounded
by water were given to them? Could I live without
distress?

Notes:  தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  வாரி நெறிப்பட்டு – combed and proper, இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ – do they say that their son with low-hanging hair on his large back is crying (தாஅழ்ந்த – இசை நிறை அளபெடை, ஓரி – ஆண் மயிர்), புதுவ மலர் தைஇ – stringing fresh flowers (தைஇ – சொல்லிசை அளபெடை), எமர் – my relatives, என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு – on seeing them arrange a marriage for me (பெயரால் – உருபு மயக்கம்), மதி அறியா ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ தோழி – laugh at him and tell him that he is ignorant and come back my friend (வந்தீயாய் – நீ வருவாயாக), அவன் உழைச் சென்று – go to him,

சென்று யான் அறிவேன் – I will go and explain, கூறுக மற்று இனி –  tell me what else to do,

மடவை – O naïve woman, சொல் அறியா – he does not know to speak to my family about the wedding, பேதை – an ignorant person, மற்று எல்லா நினக்கு ஒரூஉம் – the wedding will slip away from you (ஒரூஉம் – இயற்கை அளபெடை), மற்று என்று அகல் அகலும் – it will slip away from you,  நீடு இன்று – it will happen without delay, it will slip away from you, நினக்கு வருவதாக் காண்பாய் – you will see that, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் – all the words that have been uttered, வியம் கொளக் கூறு – explain forcefully, தருமணல் – brought sand, தாழப் பெய்து – poured below, poured on the ground, இல் பூவல் ஊட்டி – painted with red sand, எருமைப் பெடையோடு – with horns of female buffaloes, எமர் ஈங்கு அயரும் பெரு மணம் – the big wedding that my family is performing here, எல்லாம் தனித்தே ஒழிய – will be without him, வரி மணல் – rippled sand, beautiful sand, sand with kolam drawings, முன்துறைச் சிற்றில் புனைந்த – created small houses on the shores (முன்துறை – துறைமுன்), திரு நுதல் ஆயத்தார் – friends with pretty foreheads, தம்முள் புணர்ந்த – when we united, ஒரு மணம் தான் – only one marriage, அறியும் ஆயின் – since he knows that, எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – could I  abandon my distress even for a little bit, can I be at peace without worrying even for a little bit (இருக்கோ – இருக்கவோ), அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – even if the huge world surrounded by vast waters is obtained, even if the huge world surrounded by wide waves is obtained, அரு நெறி ஆயர் மகளிர்க்கு – to herder woman with good conduct, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – it is not in their nature to have two marriages

கலித்தொகை 115
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

தோழி! நாம் காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய், நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன் மன் தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடை போயினாள்; யானும் என்
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர்பு ஒல்கிப்,
பாங்கரும் கானத்து ஒளித்தேன்; …………………………………

தோழி:
……………………………………………………….. அதற்கு எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய், ஆயின் நமரும்
அவன்கண் அடை சூழ்ந்தார் நின்னை; அகல் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம் 20
அல்கலும் சூழ்ந்த வினை.

Kalithokai 115
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said

Heroine:
My friend! Like one who drinks liquor in
hiding, gets intoxicated greatly, and then goes
without shame and talks about it to others,
trembling,
my secret love affair has been exposed and
I have been caught red-handed.
My delicate friend! The son of goat herders
came wearing a jasmine strand and a flower
garland. I took them from him and tied them on
my hair. Foster-mother rubbed butter on my
spreading hair, when mother and father were both
at home. Flowers from my hair fell in front of my
mother, embarrassing her.
She did not ask about it nor was she angry about it.
Like one who touched fire with her hand, she
trembled in anxiety, left the house and went to our
yard. And I, with my un-braided hair with fragrant
pastes, and my hanging garment with a flower
border touching the ground, walked slowly and hid
myself in the nearby harsh forest.

Friend:

Why do you fear that? Do not fear! Since you wore
his garland, our relatives have agreed to give you to
him, and are making arrangements for a wedding
with curtains and fresh sand in the wide yard.
That is what they were considering at night.

Notes:  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  தோழி – my friend, நாம் – we, காணாமை உண்ட கடும் கள்ளை – liquor drunk without others seeing, மெய் – body, கூர – becoming abundant,  நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு – like going without embarrassment and uttering it trembling, கரந்ததூஉம் – hiding (கரந்ததூஉம்  – இன்னிசை அளபெடை), கையொடு கோட்பட்டாம் கண்டாய் – you can see that we have been caught red-handed, நம் புல்லினத்து ஆயர் மகன் – the son of our herders who herd goats, சூடி வந்தது – came wearing, ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும் –  with a jasmine strand (காழும் – மலர்ச்சரமும், கண்ணி – ஆண்கள் தலையில் அணியும் மலர் மாலையும்), மெல்லியால் – O my delicate friend, கூந்தலுள் பெய்து முடித்தேன் – I tied it in my hair, மன் – அசைநிலை, an expletive, தோழி – my friend, யாய் வெண்ணெய் உரைஇ – foster mother rubbed butter (உரைஇ – சொல்லிசை அளபெடை), விரித்த கதுப்போடே – with spread hair, அன்னையும் அத்தனும் இல்லரா – mother and father were in the house (இல்லரா – இல்லர் ஆக), யாய் நாண – for mother to be embarrassed, அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ – that flower fell in front of mother, அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள் – she did not ask about it or be angry about it, நெருப்புக் கை தொட்டவர் போல – like one who touched fire with his hand, விதிர்த்திட்டு – trembling, shaking the hands, with anxiety, நீங்கிப் புறங்கடை போயினாள் – she left and went to the house yard, யானும் – and I, என் சாந்து உளர் கூழை முடியா – not tying my hair smeared with fragrant pastes, நிலம் தாழ்ந்த – flowing to the ground, பூங்கரை நீலம் – garment with blue flower border, garment with lovely blue border (பூங்கரை – ஆடைக்கு ஆகுபெயர்), தழீஇ – touching (சொல்லிசை அளபெடை), தளர்பு ஒல்கி – walked with unsteady steps, went slowly, பாங்கரும் கானத்து ஒளித்தேன் – I hid in the nearby harsh forest (பாங்கரும், பாங்கு – இடம், அரும் – அரிய, கடினம்),

அதற்கு எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது – why are you afraid about that, அஞ்சல் – do not fear, அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் – since you wore his garland, நமரும் அவன்கண் அடை சூழ்ந்தார் நின்னை – our relatives have considered and agreed to give you to him, அகல் கண் வரைப்பில் – within the limits of the wide space, மணல் தாழப் பெய்து – poured sand low, poured sand on the ground, திரைப்பில் – with curtains, வதுவையும் ஈங்கே அயர்ப – they are going to perform a wedding, அதுவேயாம் – that is what (யாம் – ஆம், ஆகும்), அல்கலும் – all night, சூழ்ந்த வினை – considered action

கலித்தொகை 116
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய்! விடு!

தலைவன்:

விடேஎன்! தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் 5
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று.

தலைவி:

நீ நீங்கு! கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு.

தலைவன்:

யாய் வருக ஒன்றோ பிறர் வருக, மற்று நின் 10
கோ வரினும் இங்கே வருக, தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின்.

தலைவி:

நின்னை யான் சொல்லினவும் பேணாய்; நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய்! 15
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்
வருவையால் நாண் இலி நீ!

Kalithokai 116
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and hero said

Heroine:

I am on my way to the garden near my home,
difficult to access, with my calf, and you hold
on to the end of my rope, standing in front
of me and blocking me like you did once before.
Hey you! You are insane! Let me go!

Hero:

I will not let you go! You can be angry with me
when you leave the stable, like a harsh young cow
of strength that attacks and runs away from those
who touch her.

Heroine:

You go away. Like a cow that gave birth recently
is enraged when someone goes near her calf, my
harsh mother will come. Protect yourself when
she comes.

Hero:

Let your mother come. Let others come. Even if
your father comes, I would not be discouraged, if
you shower your graces on me.

Heroine:

You are insensitive even after I have told you
everything, bending your head like a bull in heavy
downpour.
You have an answer for whatever I say. You have no
shame. You are going to follow me to the field when
I go there with the milk pots. Let’s meet there!

Notes:  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  பாங்கு – near, அரும் – difficult, பாட்டங்கால் – to the garden, கன்றொடு செல்வேம் – I am going with my calf, எம் தாம்பின் ஒரு தலை பற்றினை – you are holding one end of my rope, ஈங்கு எம்மை முன்னை நின்று ஆங்கே விலக்கிய – you block me standing in front of me like you did once before (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), எல்லா – hey you, நீ – you, என்னை ஏமுற்றாய் – you are insane, விடு – leave me alone,

விடேஎன்  – I will not let you go, தொடீஇய செல்வார்த் துமித்து எதிர் மண்டும் – leaps and runs away from those who go to touch it (தொடீஇய – செய்யுளிசை அளபெடை), கடு  வய நாகு போல் – like a harsh strong young cow, like a strong young female buffalo, நோக்கி – looking, தொழு வாயில் நீங்கி – leaving the stable, சினவுவாய் மற்று – you can be angry,

நீ நீங்கு – you go away, கன்று சேர்ந்தார்கண் கத – with rage against those who get near her calf, ஈற்று ஆ – a cow that recently given birth, சென்றாங்கு – like how it went, வன்கண்ணள் – mother with harshness,  ஆய்வரல் ஓம்பு – protect yourself when she comes,

யாய் வருக – let your mother come, ஒன்றோ – எண் இடைச்சொல், பிறர் வருக – let others come, மற்று நின் கோ வரினும் – even if your father comes, இங்கே வருக – let him come, தளரேன் யான் – I would not tire, I would not be discouraged, நீ அருளி நல்க பெறின் – if I get your graces,

நின்னை யான் சொல்லினவும் பேணாய் – you don’t care even after I have told you, நினைஇ – thinking (சொல்லிசை அளபெடை), கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து – you bend your head like a bull that puts his head down in heavy rain (ஏற்றின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு),, எனையதூஉம் மாறு எதிர் கூறி – talking back a few words, (எனையதூஉம் – இன்னிசை அளபெடை), மயக்குப்படுகுவாய் – you are infatuated with me, கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையால் – since you going to follow me when I go to the field with my milk pot (யாம் – தன்மைப் பன்மை, first person plural, செல்வுழி –  உழி ஏழாம் வேற்றுமை உருபு, உழி = இடம்), நாண் இலி நீ – you have no shame

கலித்தொகை 117
சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும் தலைவியும் சொன்னது

தலைவன்:

மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று நின்
கையது எவன்? மற்று உரை! 5

தலைவி:

கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர்
போழில் புனைந்த வரிப் புட்டில் …………………………….

தலைவன்:
……………………………………………………..புட்டில் உள் என்? உள
காண்தக்காய் என் காட்டிக் காண்.

தலைவி:

காண்! இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு 10
காட்டுச் சார் கொய்த சிறு முல்லை மற்று இவை.

தலைவன்:

முல்லை இவை ஆயின், முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
செல் என்று நின்னை விடுவேன் யான்; மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு. 15

Kalithokai 117

Chōlan Nalluruthiran, Mullai, What the hero and heroine said

Hero:

O one with a body like sapphire set in fine
melted gold and polished well! One with
pretty breasts, like the tender buds of kōngam
flowers with thoyyil patterns drawn on them!
What do you have in your hand? Tell me!

Heroine:

I am the daughter of the leader of this village.
What I have in my hand is a striped basket
made from a single palmyra frond by a beautiful
female basket maker who sold it.

Hero:

O beautiful one! What is in the basket? Let me
see it.

Heroine:

Look now. They are small mullai flowers that
I plucked in the forest with my friends wearing
flowers with stacks of petals.

Hero:

Since they are mullai flowers, and since I have
seen you here, one with a long hair, I will let you
go. But my intelligence is frail to let you go.

Notes:  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.

Meanings:  மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ பேணித் துடைத்தன்ன மேனியாய் – O one with a body like sapphire set in melted fine gold that is polished and cared (உறீஇ – சொல்லிசை அளபெடை), கோங்கின் முதிரா இள முகை ஒப்ப – like the tender buds of kōngam flowers, Cochlospermum gossypium, எதிரிய – appearing (தோன்றிய), தொய்யில் பொறித்த வன முலையாய் – O one with pretty breasts with thoyyil drawing, மற்று நின் கையது எவன் – what do you have in your hand, மற்று உரை – tell me,

கையதை – in my hand (ஐ – சாரியை), சேரிக் கிழவன் மகளேன் யான் – I am the daughter of a leader of this settlement, மற்று இஃது – and this, ஓர் மாதர்ப் புலைத்தி – a loving female basket worker, a beautiful female basket worker, விலை ஆக – to sell, செய்தது ஓர் போழில் புனைந்த – made with a palmyra leaf, வரிப் புட்டில் – basket with strips/patterns,

புட்டில் உள் என் உள – what is in the basket, காண்தக்காய் – one who is lovely to see, என் காட்டிக் காண் – show it to me to see,

காண் இனி – look now, தோட்டார் (தோடு + ஆர்) – filled with petals, கதுப்பின் – on the hair, என் தோழி அவரொடு காட்டுச் சார் கொய்த சிறு முல்லை – small jasmines that I plucked with my friends in the forest,

மற்று இவை முல்லை இவை ஆயின் – since they are jasmine blossoms, முற்றிய கூழையாய் – O one with long hair, O one with thick hair, எல்லிற்றுப் போழ்து ஆயின் – since it is night time now, ஈதோளிக் கண்டேனால் – since I have seen you here (ஈதோளி – இதோளி ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது), செல் என்று நின்னை விடுவேன் யான் – I will let you go, மற்று எனக்கு மெல்லியது – but mine is frail, ஓராது – not considering, அறிவு – intelligence

%d bloggers like this: