எட்டுத்தொகை – கலித்தொகை 118-150 நெய்தல்

கலித்தொகை – Kalithokai 

Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

கலித்தொகை உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
கலித்தொகை – புலியூர் கேசிகன்

நெய்தற் கலி – Neythakkali 118-150   

நல்லந்துவனார்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் – Anxious Waiting

கலித்தொகை 118
நல்லந்துவனார், நெய்தல், தலைவி சொன்னது
வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அறத் தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் 5
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்பக்,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை!

மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்; 10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினைப் பூ போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.

மாலை நீ! தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு,
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும், 15
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.

மாலை நீ! தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்பப்,
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய். 20
என ஆங்கு,
மாலையும் அலரும் நோனாது எம் வயின்
நெஞ்சமும் எஞ்சும் மன் தில்ல, எஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும் ,
உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே. 25

Kalithokai 118
Nallanthuvanār, Neythal, What the heroine said

O confusing and painful evening when the sun with
many rays joins the mountains after performing
its duty,
who is like the period between two kings when the
country struggles, the ended reign of one with victory
and fame, who was a benevolent ruler who protected his
subjects and went to heaven to enjoy the benefits of his
righteous rule, and the reign of a new ruler who is like
the moon that sweeps away hostile darkness!

O evening! Since I am thinking about the one who left
causing my beauty to be lost, you scorn my ruined beauty,
that resembles the closed flowers in the ponds. You do not
attack the beauty of women with grace like the flowers on
tree branches that are buzzed by bees with pretty wings,
who unite with their lovers.

O evening! You come and enjoy my pain when cattle
herders play loud music on their flutes, while you
protect the beauty of women whose tongues are like sevvali
yāl strings, who unite with their lovers.

O evening! You witness the distress in my heart, aching
at the sight of chirping birds arriving in their nests on lovely,
low tree branches. You protect women whose smiles are
like open jasmine blossoms, who unite with their lovers.

My heart that is joyous when thinking about my lover
without kindness who does not think about me, will leave me,
unable to bear the evenings and gossips.

Notes:  நற்றிணை 370 – முகை நாள் முறுவல்.  எஞ்சும் (23) – மா. இராசமாணிக்கனார் உரை – பிரியும், சு. ப. அண்ணாமலை உரை – நீங்கும்.

Meanings:  வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் – a victorious king due to his righteousness, நல் ஆற்றின் – on the right path, உயிர் காத்து – protecting lives, நடுக்கு அற – without any fear, without any hesitation, தான் செய்த தொல் வினைப் பயன் துய்ப்ப – to enjoy the benefits of his good deeds, துறக்கம் வேட்டு எழுந்தாற் போல் – like he desired and went to heaven, பல் கதிர் ஞாயிறு – the sun with many rays, பகல் ஆற்றி மலை சேர – shines during the day and ends the day and joins the mountains – in the evening (ஆற்றி – முடித்து), ஆனாது – without a break, கலுழ் கொண்ட உலகத்து – in the crying/confused world, மற்று அவன் ஏனையான் அளிப்பான் போல் – like what the next king offers, இகல் இருள் மதி சீப்ப – the moon sweeps away warring darkness, குடை நிழல் ஆண்டாற்கும் – the one who ruled providing umbrella shade, ஆளிய வருவாற்கும் – the ruler who came after, the ruler who succeeded, இடை நின்ற காலம் போல் – like the time that was in between both rulers, இறுத்தந்த மருள் மாலை – O confusing evening time that brought pain,

மாலை – O evening, நீ – you, தூ அறத் துறந்தாரை நினைத்தலின் – since I am thinking of the one who abandoned and caused my beauty to be lost, கயம் பூத்த போது போல் – like flowers blossoming in the ponds, குவிந்த – closed like the flowers meaning ruined, என் எழில் நலம் எள்ளுவாய் – you scorn my beauty, ஆய் சிறை வண்டு ஆர்ப்ப – bees with beautiful wings buzz, சினை பூ போல் தளை விட்ட – open like blossoms on tree branches that have released from tightness, காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் – you do not remove (you protect) the beauty of those who are with their lovers (கடிகல்லாய் – போக்க மாட்டாய்),

மாலை – O evening,  நீ – you, தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு – on hearing the loud music of cattle herders, பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – you come to enjoy the pain in the hearts of those who suffer, செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – praise those with words like the sevvali melody of yāzh, பொய் தீர்ந்த புணர்ச்சியுள் – not false union, real union (பொய் தீர்ந்த – பொய் அற்ற), புது நலம் கடிகல்லாய் – you do not remove (you protect) the beauty of those who are with their lovers (கடிகல்லாய் – போக்க மாட்டாய்),

மாலை – O evening, நீ – you, தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – birds reach their nests on the lovely low branches, பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – you come to enjoy the pain in the hearts of those in pain/anger, தகை மிக்க புணர்ச்சியார் – those with esteem who united, தாழ் கொடி நறு முல்லை முகை முகம் திறந்தன்ன முறுவலும் கடிகல்லாய் – you do not remove (you protect) the smiles of those who are with their lovers (கடிகல்லாய் – போக்க மாட்டாய்),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), மாலையும் அலரும் நோனாது – unable to tolerate evening and the gossips, எம் வயின் நெஞ்சமும்   – my heart that is with me, மன் – அசைநிலை, an expletive, தில்ல – அசைநிலை, an expletive, எஞ்சி – leaving, உள்ளாது அமைந்தோர் உள்ளும் – thinking about the one who does not think about me, உள் இல் உள்ளம் – a heart without kindness, உள் உள் உவந்தே – happy inside

கலித்தொகை 119
நல்லந்துவனார், நெய்தல், தலைவி சொன்னது
அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆகப்
பகல் நுங்கியது போலப் படுசுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக்,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத், 5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச்
சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப்,
பறவை தம் பார்ப்பு உள்ளக் கறவை தம் பதி வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, 10
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ் அழல் தொடங்க, வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார், 15
மாலை என்மனார் மயங்கியோரே.

Kalithokai 119
Nallanthuvanār, Neythal, What the heroine said
The sun that lights the wide world folds its
many rays and joins the mountains as if
it swallowed the day. Darkness spreads with the
complexion of battle-skilled Thirumāl bearing a
discus.  The beautiful moon rises up spreading light.
Lotus blossoms with thick stems close like the eyes
of those asleep. Trees slumber in bowing posture like
those embarrassed on hearing praises. Buds have
opened abundantly on bushes, resembling smiles.
Bees hum like music from tiny bamboo flutes.
Birds think about their noisy fledglings. Cows walk
toward town, desirous of seeing their calves in stalls.
Animals reach their homes. Brahmins greet twilight.
Lamps with red flames are lit by women.

Evening arrives radiantly to remove the lives of
women wearing pure jewels. Why do people call
this time ‘evening’ without knowing what it does?

Notes:  ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.

Meanings:  அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக பகல் நுங்கியது போல – like it swallowed day time when the sun with many rays lights up the wide world, படுசுடர் கல் சேர – the sun with reduced light joins the mountains, இகல் மிகு நேமியான் நிறம் போல – like the complexion of battle-skilled Thirumāl bearing a discus, இருள் இவர – darkness spreads, நிலவுக் காண்பது போல – like seeing light, அணி மதி ஏர்தர – the pretty moon rises up, கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப – lotus flowers with thick stems close like the eyes of those who sleep, தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – trees sleep in bowing posture like those who are shy when praised, முறுவல் கொள்பவை போல – like they are smiling, முகை அவிழ்பு – buds opening, புதல் நந்த – on the bushes abundantly, சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து – bees hum like music from tiny bamboo flutes, இம்மெனப் பறவை தம் பார்ப்பு உள்ள – birds think about their loud young ones (இம்மென – ஒலிக்குறிப்பு), கறவை தம் பதி வயின் – milk cows go to their towns/homes, கன்று அமர் விருப்பொடு – desire for their calves, மன்று நிறை புகுதர – entered and filled the stalls with desire, மா வதி சேர – animals reach their homes, மாலை வாள் கொள – evening carries a sword or evening comes with light, அந்தி அந்தணர் எதிர்கொள – Brahmins greet twilight, அயர்ந்து செந்தீச் செவ் அழல் தொடங்க – lamps with red flames are lit – by women, வந்ததை வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை – this time which removes the hidden (hidden in their bodies) lives of women with pure jewels, ஆவது அறியார் மாலை – they don’t know what evening does, என்மனார் – those who say, மயங்கியோரே – they are confused (ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 120
நல்லந்துவனார், நெய்தல், கண்டோரும் தலைவியும் சொன்னது

கண்டோர்:

அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய
இருள் தூர்பு புலம்பு ஊரக், கனை சுடர் கல் சேர,
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம் மாறிக், 5
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்பத்,
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக்,
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை!

தலைவி:

மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண், 10
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கிப்,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்.
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? 15
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?

கண்டோர்:

என ஆங்கு,
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை, 20
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர,
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்றக் கெட்டாங்கு,
இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே. 25

Kalithokai 120

Nallanthuvanār, Neythal, What the onlookers and the heroine said

Onlookers:

O evening!
Like the heart of the man without grace and sense
of justice, you instill fear in others and do not do
fair deeds. You spread darkness bringing sorrow.

The sun’s myriads of rays go behind the mountains.
Trees have become dull like a man whose strength is
ruined when he begs in poverty. The leaves have
closed like the heart of a miser who hides his wealth.

The evening sky is red, and fierce twilight hour has
arrived like Kootruvan who laughs at others, with the
crescent moon as its sharp teeth, causing terror in all
four directions like it is the end of time.

Heroine:

O evening! You have come when I struggle in loneliness
when my man is away from me. Have you come to torment
me like a cruel man who shoots his arrow on the chest of a
deer that is caught in a flood?

O evening! You have no compassion. Did you come to
torment me who is suffering in anguish? Looking at those
whose lovers have abandoned them, you scorn at them like
a victor who gloats at those who lost in battle.

O evening! When my wise lover is not here with me to
remove my sorrow, did you come to hurt me struggling with
love affliction, like one who thrusts his spear into a sore?

(The hero returns)

Onlookers:

Her lover returned rapidly ending her hatred and distress.
Evening disappeared into darkness and became nothing,
like an enemy who took over in weak times and is
overpowered by a king who protects and nurtures his
subjects.

Notes:  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  அருள் தீர்ந்த காட்சியான் – one who appears without grace, அறன் நோக்கான் – he does not consider justice (அறன் – அறம் என்பதன் போலி), நயம் செய்யான் – he does not do fair deeds, வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் – like the heart of one who causes fear in others, பைபய – very slowly (பைபய – பையப்பைய பைபய என மருவியது), இருள் தூர்பு புலம்பு ஊர – darkness fills and spreads bringing sorrow/loneliness, கனை சுடர் கல் சேர – sun’s abundant rays join the mountains, உரவுத் தகை மழுங்கி – his strength ruined, தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் – like the heart of a person who pleads to another man because of his sorrow, புல்லென்று புறம் மாறி – the trees have become dull, கரப்பவன் நெஞ்சம் போல் – like the heart of a miser who hides what he has, மரம் எல்லாம் இலை கூம்ப – leaves have closed on all the trees, தோற்றம் சால் செக்கருள் – in the red sky that appears great, பிறை நுதி எயிறு ஆக – crescent moon as sharp teeth, நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை – when fear struck in all the four directions like at the end of time, கூற்று நக்கது போலும் – like Kootruvan who laughs, உட்குவரு கடு மாலை – O fear causing harsh evening,

மாலை – O evening, நீ – you, உள்ளம் கொண்டு – taking the heart, அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண் – when the one who left has not returned to me who is his partner, வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – like a harsh man who shoots his arrows looking at the chest of a deer caught in floods, அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ – did you come to cause more pain to those suffering,

மாலை நீ ஈரம் இல் – O evening, you have no compassion, காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – looking at me those whose lovers have left without graces, போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல் – like you are scorning those who lost in a battle, ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – did you come to add to the agony of those who are distressed,

மாலை – O evening, நீ – you, கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் – when the wise man who is of support is not here and did not remove my sorrow, கண் வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் – like one who sticks a spear into an unhealed sore, காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ – did you come to hurt me struggling with intense love disease,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), இடன் இன்று – without a place (இடம் என்பதன் போலி), அலைத்தரும் இன்னா செய் மாலை – evening that causes great pain, துனி கொள் துயர் தீர காதலர் துனைதர – when the lover returned rapidly ending hatred and distress, மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை – great enmity which was there when weak, ஒல்லென நீக்கி – removing rapidly, ஒருவாது – staying stable, not moving away, காத்து ஓம்பும் நல் இறை தோன்றக் கெட்டாங்கு – ruined (enemy) like when a good ruler who protects and nurtures appears, இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே – hid itself inside darkness and became nothing (இல்லாகின்றால் – ஆல் அசை நிலை, an expletive, ஒளித்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 121
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,
தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப்,
புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,
வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங்கழி, 5
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

தாங்க அருங்காமத்தைத் தணந்து நீ புறம் மாறத்
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே,
உறையொடு வைகிய போது போல் ஒய்யென
நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு, 10

வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு,
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே,
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு,

இன் துணை நீ நீப்ப இரவின் உள் துணை ஆகித் 15
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே,
ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு,
என ஆங்கு,
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை 20
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.

Kalithokai 121
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the vast, cool ocean, where
the resplendent sun reaches the mountains, the
moon with cool beams pushes the waves aside and
rises from the clear ocean, spreading its bright light
over the earth, birds reach their nests after eating food,
sounds die down, and large petals of the
sapphire-colored waterlilies close, appearing like they
are sleeping!

For the young woman with eyes like flower buds that
hold rain drops, which shed profuse tears in no time,
the ocean waves roar in sympathy, since you are leaving,
abandoning precious love.

For the young woman distressed that you are leaving,
pitch darkness has become her partner along with the
swaying wind which causes her sorrow.

For the young woman with bangles slipping off her
wrists like the fragrant, cool pollen droppings from spent
kōdal flower clusters with wilted petals, a lonely, grieving
heron separated from its partner has become a friend
for the night.  It calls in sorrow.

For the distress of the young woman who has become
thin, whose beauty has become like the lusterless midday
moon when the sun is shining bright,
since you are leaving, to be removed, come to her
in your sturdy chariot hitched to leaping horses like the
returning waves that take back easily the beached fish
flung on the sweet shore by the crashing waves.

Notes:  எறி திரை தந்திட இழிந்த மீன் (20) – நச்சினார்க்கினியர் உரை – எறிகின்ற திரை ஏறக்கொண்டு வந்து போடுகையினால் எக்கரிலே கிடந்த மீன்.  அகநானூறு 110 – இழிந்த கொழு மீன்,  கலித்தொகை 131 – திரை உறப் பொன்றிய புலவு மீன்.   நீக்கா – நீக்கி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  உசாவுமே (16) – மா. இராசமாணிக்கனார் உரை – கூவும்.

Meanings:  ஒண் சுடர் கல் சேர – the bright sun reached the mountains, உலகு ஊரும் தகையது –  having the nature of spreading throughout the earth, தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம் – rising from the clear ocean pushing aside the waves (நீக்கா – நீக்கி, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, எழுதரூஉம் – இன்னிசை அளபெடை), தண் கதிர் மதியத்து – the moon with cool rays, அணி நிலா நிறைத்தர – provided splendid abundant moonlight, புள் இனம் இரை மாந்திப் புகல் சேர – birds  eat food and go to their nests, ஒலி ஆன்று – sounds die down, வள் இதழ் கூம்பிய – thick/large petals have closed, மணி மருள் – sapphire-like, இருங்கழி – vast backwaters, பள்ளி புக்கது போலும் – like gone to sleep, பரப்பு நீர்த் தண் சேர்ப்ப – O lord of the vast cool waters,

தாங்க அரும் காமத்தை – the love that is unable to bear, தணந்து – leaving, நீ புறம் மாற – you are going away, தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – the swaying ocean waves roar in support, உறையொடு வைகிய போது போல் – like buds holding water droplets, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – to the young woman with tears flowing down her eyes a lot without stopping, to the young woman whose eyes are swimming in tears that flow down without stopping (நச்சினார்க்கினியர் உரை – அமையாதே நீரிலே கிடந்து நீந்துகின்ற கண்ணையுடையவட்கு, இழிதரூஉம் – இன்னிசை அளபெடை),

வாராய் நீ – you do not come, புறம் மாற வருந்திய மேனியாட்கு – to the woman who is sad since you are leaving, ஆர் இருள் துணை ஆகி – pitch darkness has become a partner, அசை வளி அலைக்குமே – moving winds cause her sorrow (அலைக்குமே – ஏகாரம் அசைநிலை, an expletive),

கமழ் தண் தாது உதிர்ந்து – dropping fragrant cool pollen, உக ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் – spent kōdal flower petals that are faded, white Malabar glory lilies, குலை – clusters, போல – like, இறை நீவு வளையாட்கு – for the  young woman whose bangles are slipping off her forearms, இன் துணை – sweet partner, நீ நீப்ப – you leaving, இரவின் உள் துணை ஆகி – partner for the night, தன் துணை பிரிந்து – separated from its partner, அயாஅம் தனி குருகு உசாவுமே – a lonely sad heron/egret offers company, the heron calls in sorrow (அயாஅம் – இசைநிறை அளபெடை, உசாவுமே – ஏகாரம் அசை நிலை, an expletive),

ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் – due to the light of the bright sun, ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல் – like the midday moon that loses luster, நலம் சாய்ந்த அணியாட்கு – to the woman whose beauty is lost, என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), எறி திரை தந்திட – given by rapidly moving waves, இழிந்த மீன் – beached fish, இன் துறை – sweet shores, மறி திரை – returning waves, waves that go back and forth, வருந்தாமல் – without being sad, without much effort, கொண்டாங்கு – like how the waves took the fish back, நெறி தாழ்ந்து – because of your lowly behavior, சாயினள் வருந்தியாள் இடும்பை – the distress and pain of the woman who has become thin, பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே – it would be nice if you come and remove (her sorrow) arriving with your sturdy chariot hitched to rapidly leaping horses (களையினோ – ஓகாரம் அசைநிலை, an expletive, இடனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 122
நல்லந்துவனார், நெய்தல், தலைவி தோழியிடம் சொன்னது
கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்,
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்பக்,
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றிச்,
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை;
பலவு நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை; 5
அலவலை உடையை என்றி தோழீ!
கேள் இனி!
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் 10
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்.

இருள் உறழ் இருங்கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக்கால் என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல். 15

ஒள்ளிழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்
அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்.
அதனால், 20
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயில் கழீஇய நெஞ்சம்,
தான் அவர்பால் பட்டது ஆயின்
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே.

Kalithokai 122
Nallanthuvanār, Neythal, What the heroine said to her friend
My friend! You tell me, “You showed mild anger at
your lover without any reason. Now that he has left
causing pain, you list hundreds of complaints. Our
friends, wearing flower garlands, and mother are
aware. Your flower-like, pretty eyes have lost their
famed beauty. You are pining for him and crying in
anguish.”

Listen now! Even though I am aware that he is in the
company of very pretty women and does not want to
see me, I see my shameless heart soften for him when
he shows some kindness to me.

Even though I am aware that he is with women who have
darkness-like, thick hair and does not understand me,
I see my confused heart become happy when he shows some
grace.

Even though I am aware that he is with women with bright,
lovely jewels, and has no thoughts of me, when he hugs me
I see my distressed heart calm down.

My heart burning with passion for him, has gone off to him
in the middle of night when I was sleeping. Hence, my
staying alive itself is subject to great laughter!

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கோதை ஆயமும் அன்னையும் அறிவுற – friends wearing garlands and mother are aware, போது எழில் – flower-like beauty, உண்கண் – kohl-lined eyes, புகழ் நலன் இழப்ப – lost their famed beauty, காதல் செய்து – loving you, அருளாது – without graces, துறந்தார் மாட்டு – with the man who left you, ஏது இன்றி – without fault, சிறிய துனித்தனை – you were a little angry, துன்னா செய்து – unsuitable, அமர்ந்தனை – you are sunk in that thought, பலவு நூறு அடுக்கினை – you listed many hundreds, இனைபு ஏங்கி அழுதனை அலவலை உடையை என்றி தோழீ – you say that I am in sorrow – pining and crying and desperate (என்றி – முன்னிலை ஒருமை),

கேள் இனி – listen now, மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து – being with loving women with great beauty, அவன் காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் – I am aware that he does not want to see me, மன் – அசை நிலை, an expletive, அறியினும் – even though I am aware of it, பேணி அவன் சிறிது அளித்தக்கால் என் நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – I see my shameless heart soften for him when he is nice to me a little bit (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

இருள் உறழ் இருங்கூந்தல் மகளிரோடு அமைந்து – being with his women with darkness-like thick hair, அவன் தெருளும் பண்பு இலன் ஆதல் – that he does not have the nature of understanding me, அறிவேன் – I am aware, மன் – அசை நிலை, an expletive, அறியினும் அருளி அவன் சிறிது அளித்தக்கால் என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் – I see my confused heart be happy when he offers a little grace (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் – I am aware that he is with loving women with bright jewels and has no thought of me, மன் – அசை நிலை, an expletive, அறியினும் – even though I am aware, புல்லி அவன் சிறிது அளித்தக்கால் – when he united with me, when he embraced me (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), என் அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல் – I see my painful heart calm down,

அதனால் யாம நடுநாள் – so, at midnight, துயில் கொண்டு – while sleeping, ஒளித்த – hiding, காம நோயில் கழீஇய நெஞ்சம் தான் அவர் பால் பட்டது – my heart with great passion for him went to him (கழீஇய – செய்யுளிசை அளபெடை), ஆயின் நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – so my living is subject to great laughter (உடைத்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 123
நல்லந்துவனார், நெய்தல், தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
கருங்கோட்டு நறும்புன்னை மலர் சினை மிசைதொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இருந்தும்பி இயைபு ஊத,
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்,
பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் 5
காணாமை இருள் பரப்பிக், கையற்ற கங்குலான்
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே!

கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ 10
புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே!

வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான்
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே!
என ஆங்கு, 15
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இருங்கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை, அளிய என் மடம் கெழு நெஞ்சே.

Kalithokai 123
Nallanthuvanār, Neythal, What the heroine said to her heart
My heart! You went to see the man who gave me
this terrible affliction, at the helpless time when darkness
has spread in the bee-buzzing, fragrant seashore grove, and
since surumpu and thumpi bees hum on the fragrant flowers
on all the black branches of punnai trees with black trunks,
the huge ocean sleeps like Thirumāl of great tradition in a
reclining posture listening to yāzh music.
However, did you get to see him? Did you see him, my
naïve heart?

You went to see the man who gave me this distressing
disease, at the confusing evening time when male killer
sharks converge. However, did you get to embrace him?
Did you embrace him my naïve heart?

You went to see the man who caused my tight bangles to
loosen, when the bird flocks flew rapidly to their nests in
an orderly manner. However, did you get to understand him?
Did you get to understand him my naïve heart?

My pathetic naïve heart! Desiring to see the man who has
given me great grievance, you have abandoned sleep, day
and night. Like the waves of the vast backwaters you go
back and forth, stumbling and worrying.

Notes:  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  கேளா – கேட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  கருங்கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும் – on all the black punnai tree branches with flowers, நாகம், laurel tree, mast wood tree, calophyllum inophyllum, சுரும்பு ஆர்க்கும் குரலினோடு – along with the humming of honeybees, இருந்தும்பி இயைபு ஊத – dark/big thumpi bees buzzed together, ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் – due to the bees humming together (இம்மென – ஒலிக்குறிப்பு), பாடலோடு –with music, அரும் பொருள் மரபின் மால் – of Thirumāl  of great tradition, யாழ் கேளா கிடந்தான் போல் – like one who is lying down and listening to lute/yāl music, பெரும் கடல் துயில் கொள்ளும் – the huge ocean sleeps, வண்டு இமிர் நறு கானல் – fragrant seashore grove with bees humming, காணாமை – not seeing, இருள் பரப்பிக் கையற்ற கங்குலான் – in the helpless night when darkness has spread, மாணா நோய் செய்தான் கண் சென்றாய் – you went to see him who gave me this undignified disease, மற்று அவனை நீ காணவும் பெற்றாயோ – but did you get to see him, காணாயோ மட நெஞ்சே – did you see him my naïve heart,

கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை – in the confusing evening time when many killer male sharks gather together (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), அல்லல் நோய் செய்தான் கண் சென்றாய் – you went to the one who gave me this distressing disease, மற்று அவனை நீ புல்லவும் பெற்றாயோ – but did you get to embrace him, புல்லாயோ மட நெஞ்சே – did you embrace him my naïve heart,

வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான் – when bird flocks fly rapidly in rows (in an orderly manner) and reach their nests, செறி வளை நெகிழ்த்தான் கண் சென்றாய் – you went to the one who caused my tight bangles to become loose, மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ – but did you get to understand him, அறியாயோ மட நெஞ்சே – did you understand him my naïve heart,

என ஆங்கு எல்லையும் இரவும் துயில் துறந்து – abandoning sleep during days and nights (ஆங்கு – அசைநிலை, an expletive), பல் ஊழ் அரும் படர் அவல நோய் செய்தான் கண் – to the one who gave me this anguish for long time, பெறல் நசைஇ – desiring to obtain (நசைஇ – சொல்லிசை அளபெடை), இருங்கழி ஓதம் போல் – like the waves of the vast backwaters, தடுமாறி வருந்தினை – you stumble and worry, அளிய – you are pathetic, என் மடம் கெழு நெஞ்சே – O my naïve heart

கலித்தொகை 124
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீல நீர் உடை போலத், தகைபெற்ற வெண்திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப!

ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின், 5
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன்,
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே,
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்.

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன், 10
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி
அணி வனப்பு இழந்த தன் அணை மென்தோள் அல்லாக்கால்.

இன்று இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன்,
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி 15
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங்கண் அல்லாக்கால்.
அதனால்,
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப்,
புரி உளைக் கலி மான் தேர் கடவுபு, 20
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே!

Kalithokai 124
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the bright, cool ocean, where the
splendid white waves break on white
sand appearing like the blue garment worn
beautifully on the milky white body of Balarāman,
the younger brother of Thirumāl who measured the
earth in three steps!

But for her crescent-moon forehead that has paled
like peerkai flowers and her beauty that has been
lost as she cries,
I would not have known about her painful disease
that she hid from me, caused by you living without
thinking about her, as gossip rose in town.

But for her beauty that was best among others that she
lost and her lovely pillow-soft arms that have wasted
away,
I would not have known about her distressing affliction
that she hid from me, caused by you deserting without
consideration, as those in town joined together and
slandered her.

But for great beauty like the tip of a victorious spear
she lost and the continuous tears from her long, large
eyes,
I would not have known about her painful disease that
she hid from me, caused by you abandoning her, as
those in this town slander her today.

One with a wide chest with a cool flower garland! For
her lost beauty to be restored, the one who trusted you
when you promised before god that you would not leave,
please ride your chariot hitched to proud horses with
swaying manes and return in haste!

Notes:  துணியைப் போன்ற மணல் – அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல், நற்றிணை 15 – தோழியிடம் முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள, கலித்தொகை 124 – நீல நீர் உடை போலத் தகைபெற்ற வெண்திரை.

Meanings:  ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறை – elder to the one who measured the earth in three steps – Thirumāl, பால் அன்ன மேனியான் – complexion that is white like milk, body that is white like milk – Balarāman, அணிபெறத் தைஇய – worn beautifully (தைஇய – செய்யுளிசை அளபெடை), நீல நீர் உடை போல – like the blue garment, தகைபெற்ற வெண்திரை – splendid white ocean waves, வால் எக்கர்வாய் சூழும் – surrounds the white sand, வயங்கு நீர் தண் சேர்ப்ப – O lord of the bright cool ocean,

ஊர் அலர் எடுத்து அரற்ற – as the town raised gossips (ஊர் – ஆகுபெயர், ஊர் மக்களுக்கு), உள்ளாய் நீ துறத்தலின் – since you abandoned her not thinking about her, கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் – she hid her painful disease from me, மன் – அசை நிலை, an expletive, காரிகை பெற்ற தன் கவின் வாட – as her great beauty has ruined, கலுழ்பு – cries, ஆங்கே பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால் – when her crescent moon-like forehead has paled like ridge gourd flowers, Luffa acutangula,

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற – as this town slandered joining together, எய்யாய் நீ துறத்தலின் – since you abandoned her without understanding, புணை இல்லா – without support, எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் – she hid her affliction from me, மன் – அசைநிலை, an expletive, துணையாருள் தகைபெற்ற – best among her friends, தொல் நலம் இழந்து – losing her prior beauty, இனி அணி வனப்பு இழந்த தன் அணை மென்தோள் அல்லாக்கால் – when her pillow-soft arms/shoulders lost their beauty,

இன்று இவ் ஊர் அலர் தூற்ற – as this town slanders today, எய்யாய் நீ துறத்தலின் – since you abandoned her without understanding, நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் – she hid her sorrow disease from me, மன் – அசைநிலை, an expletive, வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் – victorious spear tip like great beauty, இழந்து – losing, இனி நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால் – when her crying long huge eyes drop tears continuously,

அதனால் – so, பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் – when you promised in front of god that you won’t separate (தெளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), அரிது என்னாள் துணிந்தவள் – she trusted it without suspecting, ஆய் நலம் பெயர்தர – for her to get her great beauty back, புரி உளைக் கலி மான் தேர் கடவுபு – ride your chariot with proud horses with swaying manes, விரி தண் தார் வியல் மார்ப – O one with a cool garland with open flowers on your wide chest, விரைக நின் செலவே – come in haste (செலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 125
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வயமான் செல்வ! 5
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய கேள்!

மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரை கொண்க! கொடியை காண் நீ!

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய்ப்
புலந்து அழப், புல்லாது விடுவாய்
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியை காண் நீ! 15

இன் மணிச் சிலம்பின் சின்மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட, வாராது விடுவாய்!
தண்ணந்துறைவ! தகாஅய் காண் நீ!
என ஆங்கு, 20
அனையள் என்று அளிமதி பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதல் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.

Kalithokai 125
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
The ignorant ones whose actions are not right,
who think that others in this world have not
seen what they do, who cover up their deeds
even when they know in their hearts their
actions are cruel, since there is none to witness.
O lord of sturdy, swift, trained horses! Even
though you know this well, due to my love for my
friend, I have come here to you without kindness.
Sir, listen to me!

O lord of the roaring waves! Look! You are a harsh
man, leaving my friend without kindness, whose
kohl-rimmed eyes shed tears, my friend of sweet
words, whose young breasts with thoyyil designs
you embraced when you united with her, causing
them to blossom!

O lord of the bright waves! Look! You are a harsh
man, leaving my friend without embracing her,
making her shed tears and lose her beauty, the young
woman with bright bangles who you decorated with
pretty leaf clothing, causing her to grow beautiful!

O lord of the cool shores! Look! You are not an
honorable man, leaving my friend, causing the lines
on her wide mound like the hood of a snake to fade,
the young woman of few words, with sweet jingling
anklets and a five-part braid, with whom you had a
relationship!

O lord!  Since she suffers in this manner, please shower
your graces on her, the one whose bangles are slipping
down in your absence, and marry her so that the pallor
on her bright forehead like a crescent moon can vanish!

Notes:  Natrinai 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், Kurinjippattu 102 – பை விரி அல்குல்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – those who are ignorant who think that others in the world haven’t seen, தங்காது – not staying in the right path, தகைவு இன்றி – without those who block, தாம் செய்யும் வினைகளுள் – among the actions that they do, நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் – even if they hide what they know in their hearts is harsh, அறிபவர் நெஞ்சத்து – in the hearts of those who know, குறுகிய கரி இல்லை ஆகலின் – since there is no witness nearby, வண் பரி நவின்ற வயமான் செல்வ – O lord who owns trained rapid horses, நன்கு அதை அறியினும் – even though you know it well, நயன் இல்லா – without being kind to you, நாட்டத்தால் – due to my love for her, அன்பு இலை என வந்து கழறுவல் – I am complaining that there is no kindness (இலை – இல்லை என்பதன் விகாரம்), ஐய – sir, கேள் – listen,

மகிழ் செய் – causing happiness, தேமொழி – the woman of sweet words (அன்மொழித்தொகை), தொய்யில் சூழ் இள முலை – young breasts with thoyyil drawings, முகிழ் செய – causing it to blossom, முள்கிய தொடர்பு – contact while pressed, united (நச்சினார்க்கினியர் உரை – முள்கிய – கூடிய), அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும் – as her kohl-rimmed eyes drop tears, நல்காது விடுவாய் – you are leaving her not being gracious, இமிழ் திரை கொண்க – O lord of the roaring waves, கொடியை – you are harsh, காண் நீ – you look,

இலங்கு ஏர் எல் வளை – woman wearing splendid pretty bright bangles (எல் வளை – அன்மொழித்தொகை), ஏர் தழை தைஇ – wearing pretty leaves on her (தைஇ – சொல்லிசை அளபெடை), நலம் செல – for her beauty to increase (செல – இடைக்குறை), நல்கிய தொடர்பு – contact that was gracious, அவள் சாஅய்ப் புலந்து அழ – for her to be wasted and distressed and to cry – (சாஅய் – இசை நிறை அளபெடை), புல்லாது விடுவாய் – you are leaving without embracing/uniting, இலங்கு நீர்ச் சேர்ப்ப – O lord of the bright waves, கொடியை – you are harsh, காண் நீ – you look,

இன் மணிச் சிலம்பின் – with sweet bell jingles of anklets, சின்மொழி – the young woman of few words (அன்மொழித்தொகை), ஐம்பால் பின்னொடு – with the five-part braided hair, கெழீஇய – being close (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), தட அரவு அல்குல் நுண் வரி வாட – even on seeing her lines on her wide mound like a snake’s hood to fade, வாராது விடுவாய் – you are leaving without returning, தண்ணம் துறைவ – O lord of the cool shores, தகாஅய் – not one who is honorable (இசை நிறை அளபெடை), காண் நீ – you look,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), அனையள் என்று அளிமதி – grant her your grace since she suffers like that (அளிமதி – மதி முன்னிலை அசை, an expletive used with the second person), பெரும – O lord, நின் இன்று இறை வரை நில்லா வளையள் – the woman whose bangles slip down without you, இவட்கு – to her, இனிப் பிறை ஏர் சுடர் நுதல் – crescent moon like bright forehead, பசலை மறையச் செல்லும் – will cause her pallor to vanish, நீ மணந்தனை விடினே – if you marry her, if you embrace her (விடினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 126
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
பொன் மலை சுடர் சேரப் புலம்பிய இடன் நோக்கித்,
தன் மலைந்து உலகு ஏத்தத் தகை மதி ஏர்தரச்,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால் நின் மார்பின் 10
தார் நாற்றம் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக், கழிப் பூத்த
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே

நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்தக்கால்
தோள் மேலாய் என நின்னை மதிக்கும் மன்; மதித்தாங்கே, 15
நனவு என புல்லுங்கால் காணாளாய்க், கண்டது
கனவு என உணர்ந்து பின் கையற்றுக் கலங்குமே
என ஆங்கு,
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி 20
மதி மருள் வாள் முகம் விளங்கப்,
புது நலம் ஏர்தரப் பூண்க நின் தேரே.

Kalithokai 126
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the bright, cool waters, where a
loud flock of storks sits on a sand dune looking
like Brahmin Vaishnava ascetics with three staves
meditating on wise words at a time when the sky
is red, the sun joins the golden mountains, and the
splendid moon rises up as the desolate earth praises
it in awe!

When flocks of herons with pretty feathers screech,
she’ll think they are the sounds of the bells from
your sturdy chariot. But seeing the sounds
come from within, she’ll realize that they are those
of grove birds, and become lonely and distraught.

When she smells the dense blossoms in the water,
she’ll think they are from your garlanded chest. But
when the moving breeze brings the fragrance from
the newly opened flowers in the backwaters, she’ll
realize, and become sad and distraught.

When she is sad in her large house, she thinks about
you and imagines that you are embracing her
shoulders.
When she tries to embrace you, she will realize that it
is just a dream, and become sad and distraught.

She thinks like this and despairs with a trembling
heart, my friend who suffers from affliction. May
you hitch the horses to your chariot, for her
moon-like, bright face to acquire new beauty!

Notes:  முக்கோல் is the முத்தண்டு (திரிதண்டம்) of Vaishnava ascetics. Three wooden rods are tied together and carried by ascetics. The three rods signify controlling ‘thoughts, words and deeds’. முக்கோல் பகவர் (திரிதண்டி) – ‘உள்ளம், மெய், நா’ அடக்கியவர்கள். Kalithokai 9 – உரை சான்ற முக்கோலும் நெறிப்பட சுவல் அசைஇ, Mullaippāttu 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசை நிலை.    அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  பொன் மலை சுடர் சேர – the sun joins the golden mountain,  புலம்பிய இடன் – desolate place, நோக்கி – seeing, தன் மலைந்து உலகு ஏத்த – for the desolate world to praise, தகை மதி ஏர்தர – the splendid moon rises, the beautiful moon rises, செக்கர் கொள் பொழுதினான் – at the time when it becomes red, ஒலி நீவி இன நாரை – loud flock of storks, முக்கோல் கொள் அந்தணர் – Brahmins holding three wooden staves tied together, Brahmins holding three wooden rods tied together, முது மொழி நினைவார் போல் – like those meditating on wise words, எக்கர் மேல் இறைகொள்ளும் – sits on the sand dunes, இலங்கு நீர்த் தண் சேர்ப்ப – O lord of the bright cool waters,

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால் – when the flocks of herons/egrets with pretty feathers screech (ஒலிக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும் – she guesses that it is the sound of the bells from your sturdy chariot, மன் – அசை நிலை, an expletive, மதித்தாங்கே – when she guesses so (ஏகாரம் அசை நிலை, an expletive), உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு – but on seeing that the sound comes from inside, அவை கானல் புள் என உணர்ந்து – realizing that they are those of the grove birds, பின் புலம்பு கொண்டு – then she will sad/lonely, இனையுமே –  she will be distressed,

நீர் நீவி – touched by the waters, கஞன்ற பூக் கமழுங்கால் – when the fragrances of the dense flowers are smelled (கமழுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நின் மார்பின் தார் நாற்றம் என – that it is the fragrance from your chest garlands,  இவள் மதிக்கும் – she will guess, மன் – அசைநிலை, an expletive, மதித்தாங்கே – when she guesses so (ஏகாரம் அசைநிலை, an expletive), அலர் பதத்து – blossoming stage, அசை வளி வந்து – moving breezes coming, ஒல்க – swaying, கழிப் பூத்த மலர் என உணர்ந்து – realizing that it is from the flowers in the backwaters, பின் மம்மர் கொண்டு இனையுமே – then she will be sad and distressed,

நீள் நகர் நிறை ஆற்றாள் – when she is sad in her huge house, நினையுநள் வதிந்தக்கால் – when she lives with her thoughts (வதிந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), தோள் மேலாய் என நின்னை மதிக்கும் – she thinks that you are embracing her shoulders/arms, மன் – அசை நிலை, an expletive, மதித்தாங்கே – when she guesses so (ஏகாரம் அசை நிலை, an expletive), நனவு என புல்லுங்கால் – thinking that she is embracing you in reality (புல்லுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), காணாளாய் – on not seeing you, கண்டது  கனவு என உணர்ந்து பின் – when she realizes that what she saw was a dream, கையற்றுக் கலங்குமே – then she will feel helpless and depressed (கலங்குமே  – ஏகாரம் அசை நிலை, an expletive),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), பல நினைந்து – thinking about many matters, இனையும் பைதல் நெஞ்சின் – she will be with a sad trembling heart, அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – my friend suffers with sorrow and affliction, மதி மருள் வாள் முகம் விளங்க – for her bright face like the moon to shine, புது நலம் ஏர்தர – for her to acquire new beauty, பூண்க நின் தேரே – hitch the horses to your chariot, get your chariot ready (தேரே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 127
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இருந்தும்பி இயைபு ஊதச்,
செரு மிகு நேமியான் தார் போலப், பெருங்கடல்
வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5

கொடுங்கழி வளைஇய குன்று போல் வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ,
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை?

குறி இன்றிப் பல்நாள் நின்கடுந்திண்தேர் வருபதம் கண்டு, 10
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ,
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்,
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை?

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ, 15
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,
வாணுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை?
அதனால்,
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
உரவுக் கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு, தன் 20
கரை அமல் அடும்பு அளித்தாங்கு
உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளிமே!

Kalithokai 127
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the bright, cool ocean, whose sandy
shores surrounded by the large ocean appear like
the garland on the chest of the greatly battle-skilled
Thirumāl with a discus, victorious in battles, where
gnālal trees with bright clusters of flowers, punnai
trees with honey fragrant flowers, thāzhai with blossoms
that have just blossomed, and cherunthi trees
swarmed by striped bees that buzzed and hummed
along with dark colored bees!

Did you abandon her, letting her struggle with
distress, tears flowing from her eyes resembling carp
fish in a cold stream, because she came on the tryst
you arranged and ended your passion affliction by
uniting with you on the hilly, white sand dunes
that surround the curved backwaters?

Did you abandon her letting her beauty to be ruined
and her bangles to become loose as she suffered in
distress, because she waited for your sturdy, fast
chariot in the seashore grove lapped by loud waves,
even when she had no sign from you?

Did you abandon her, letting her lose the beauty of her
bamboo-like arms, the one with pallor on her bright
forehead who is unable to bear the burden of her
jewels, because she came on a tryst at night to the cold
beach that is beautiful to behold, responding to a sign
from you?

So, O lord of the shores with strong waves! Please come
and shower your graces on my friend to end her painful
disease that caused her bangles to loosen, like the huge
waves that nurture the dense adumpu creepers on the shore,
thinking the scorching rays of the sun will hurt them.

Meanings:  தெரி இணர் ஞாழலும் – gnālal trees with bright clusters, Tigerclaw tree, Cassia sophera, தேம் கமழ் புன்னையும் – punnai flowers with honey fragrance, Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum (தேம் தேன் என்றதன் திரிபு), புரி அவிழ் – tightness loosening, பூவின கைதையும் – with fragrant thāzhai blossoms, Pandanus odoratissimus, செருந்தியும் – and cherunthi flowers , Ochna squarrosa, Panicled golden-blossomed pear tree, வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப – as striped bees hum and buzz, இருந்தும்பி இயைபு ஊத – dark colored bees buzz together, செரு மிகு நேமியான் தார் போல – like the garland of  the greatly battle-skilled Thirumāl with a discus, பெரும் கடல் வரி மணல்வாய் சூழும் – large ocean surrounds the striped sand, வயங்கு நீர்த் தண் சேர்ப்ப – O lord of the bright cold ocean,

கொடுங்கழி வளைஇய – surrounding the curved backwaters (வளைஇய – செய்யுளிசை அளபெடை), குன்று போல் வால் எக்கர் – white sand dunes that are like hills, நடுங்கு நோய் தீர – for your trembling passion to end, நின் குறி வாய்த்தாள் என்பதோ – is it because she came when you gave her the sign, கடும் பனி – very cold, அறல் இகு – flowing stream, கயல் ஏர் கண் பனி மல்க – tears filling her carp fish like eyes, Cyprinus fimbriatus, இடும்பையோடு – with sorrow, இனைபு ஏங்க – letting her to struggle in sorrow, இவளை நீ துறந்ததை – you abandoning her,

குறி இன்றிப் பல் நாள் – without a sign for many days, நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு – looking for the arrival of your rapid sturdy chariot, எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – is it because she waited for you on the loud seaside grove attacked by tossing waves, அறிவு அஞர் உழந்து ஏங்கி – struggling with great sorrow, ஆய் நலம் வறிது ஆக – her fine beauty ruined, செறி வளை தோள் ஊர – her stacked bangles to slip down on her arms, இவளை நீ துறந்ததை – you abandoning her,

காண்வர இயன்ற – beautiful to see, இக் கவின் பெறு பனித் துறை – this lovely cold shores,  யாமத்து வந்து – came at night, நின் குறி வாய்த்தாள் என்பதோ – is it because she came because of a signal from you, வேய் நலம் இழந்த தோள் – arms that lost their bamboo-like beauty, விளங்கு இழை பொறை ஆற்றாள் – the woman who is unable to bear the burden of her bright jewels, வாள் நுதல் பசப்பு ஊர – pallor spreading on her bright forehead, இவளை நீ துறந்ததை – you abandoning her,

அதனால் – so, இறை வளை நெகிழ்ந்த – that caused the bangles on her wrist to loosen, எவ்வ நோய் இவள் தீர – for her painful disease to end, உரவுக் கதிர் தெறும் என – thinking that the scorching sun’s rays will burn them, ஓங்கு திரை விரைபு தன் கரை அமல் அடும்பு அளித்தாங்கு – like the dense adumpu creepers on the shore that are given water rapidly by huge waves (அமல் – செறிந்த), Ipomoea pes caprae, உரவு நீர்ச் சேர்ப்ப – lord of the shores with powerful waves, அருளினை அளிமே  – please shower your graces (மே – முன்னிலையசை, an expletive of the second person)

கலித்தொகை 128
நல்லந்துவனார், நெய்தல், தலைவி தோழியிடம் சொன்னது
தோள் துறந்து அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இருங்கங்குல் நம் துயர் அறியாது,
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் 5
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப்,
புதுவது கவினினை என்றி ஆயின்
நனவின் வாரா நயன் இலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள் இனி!

அலந்தாங்கு அமையலென் என்றானைப் பற்றி என் 10
நலம் தாராயோ எனத் தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப்
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும்,
முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய் என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், 15
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது எனத்,
தலையுற முன் அடிப் பணிவான் போலவும்,
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
யாது என் பிழைப்பு என நடுங்கி, ஆங்கே 20
பேதையை பெரிது எனத் தெளிப்பான் போலவும்,
ஆங்கு,
கனவினால் கண்டேன் தோழி, காண்தகக்
கனவின் வந்த கானலம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என 25
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

Kalithokai 128
Nallanthuvanār, Neythal, What the heroine said to her friend
O my friend!  You ask me why I have attained
new beauty as though I have seen the lord of the
shore with lovely groves, where in the dead of
night a stork, seated on a thāzhai branch swaying
in the cold northern wind that blows ruthlessly
like the man who abandoned the arms of his lover,
screeches unceasingly, without kindness or
attachment.  Let me tell you what I did on seeing
him in my dreams, the one who does not come.

I held him, the one who said to me
that he will not live if he left me and urged him to
return my beauty, and united with him restoring
my beauty. He comforted me saying, “Do not
despair.”

I cried with a hurt heart since
he forgot sleep on my breasts, and he
prostrated with his head touching my feet and
said, “You are distressed greatly like a peacock
caught in a net.”

I beat the lord of the shores with the cold wind,
who stood in a humble manner,
using a garland as rod, and he asked me what
wrong he did to me. He then cleared up matters
stating, “You are very naive.”

Thus I saw the lord of the seashore in my lovely
dreams, my friend. My precious life is here waiting
for him, thinking that if he came in my dream, he will
come in person as well!

Meanings:  தோள் துறந்து அருளாதவர் போல் நின்று –  like the man who abandoned the arms of his beloved, வாடை தூக்க வணங்கிய தாழை – thāzhai tree that bent as the northern wind swayed it, Pandanus odoratissimus, ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை- a stork of small strides that was on a swaying stem,  நளி இருங்கங்குல் – pitch dark night, நம் துயர் அறியாது – not knowing my sorrow, அளி இன்று – without graces, பிணி இன்று – without attachment, விளியாது நரலும் – screeches without stopping, கானல் அம் சேர்ப்பனை – the lord of the shore with lovely groves, கண்டாய் போலப் புதுவது கவினினை என்றி ஆயின் – if you ask me why I have attained new beauty like I have seen him (என்றி – முன்னிலை ஒருமை), நனவின் வாரா – who does not come in reality, நயன் இலாளனை – the man without kindness, கனவில் கண்டு யான் செய்தது – what I did on seeing him in my dream, கேள் இனி – listen now,

அலந்தாங்கு அமையலென் என்றானை – the man who said ‘I will not live if I part from you’, பற்றி – holding him, என் நலம் தாராயோ எனத் தொடுப்பேன் போலவும் – like I  asked for him to return my beauty/virtue, கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – embrace/unite for my beauty to return, புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் – like he comforted me saying ‘do not feel sad’,

முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய் என – that you forgot sleep on/between my breasts, நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – like I cried with agony in my ruined heart,  வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – you are distressed greatly like a peacock caught in a net (மயிலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, உறு – அகப்பட்ட), தலையுற முன் அடிப் பணிவான் போலவும் – like he fell at my feet with his head touching my feet,

கோதை கோலா – the garland as a stick (கோலா – கோலாக, இறுதி கெட்டது), இறைஞ்சி – humbling himself, நின்ற ஊதை – cold wind that blows, அம் சேர்ப்பனை – the lord of the beautiful shores, அலைப்பேன் போலவும் – like I hit him, யாது என் பிழைப்பு என நடுங்கி – trembling asking what he did wrong, ஆங்கே பேதையை பெரிது எனத் தெளிப்பான் போலவும் – like he cleared up saying “you don’t understand”,

ஆங்கு – அசைநிலை, an expletive,  கனவினால் கண்டேன் தோழி – I saw in my dream my friend (கனவின் + ஆல், ஆல் அசைநிலை), காண்தகக் கனவின் வந்த கானலம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு என – that the lord of the seashore who came to the grove in my lovely dreams will come in person too, அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – my precious life is waiting for that (உயிரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 129
நல்லந்துவனார், நெய்தல், தோழி கடலிடமும், அன்றிலிடமும், குழலிடமும் தலைவனிடமும் சொன்னது
தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்,
பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா 5
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலைவர;
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை.

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்!
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் 10
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ?

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
நன்று அறை கொன்றனர் அவர் எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ நீ? 15

பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்!
இனி வரின் உயரும் மன் பழி எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ?
என ஆங்கு 20
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்படப்,
பெரும் பேதுறுதல் களைமதி பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. 25

Kalithokai 129
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the Ocean, Ibis, Flute and the hero
The hot rays of the sun fold and vanish like
all kinds of lives on earth going together to their
creator at the end of time. Ending the day, evening
has arrived with distress like an inept king without
virtue, who succeeds a righteous ruler who ruled the
world well.

O cold ocean with dashing waves that roar without
stopping! Do you sound sympathizing with those
who struggle having been abandoned totally by the
lord of the shores? Like her, do you have a partner
who loved you and then left?

O ibis perched on the dark palmyra fronds in the
courtyard! Did you screech knowing her sorrow from
her lover who quit uttering loving words? Like her,
do you have a sweet partner who separated?

O pretty little flute with sorrow in this chilly darkness!
Are you trembling on seeing those sad and alone who
are suffering and worried that blame will rise if their
loved ones return? Like her, do you have a loving
partner who separated?

She is ruined as others know her distress.  Remove her
agony, O lord!  Do not part, causing her pain!  Letting
the heart of one who loves you to be ruined is harsher
than a knowledgeable healer’s refusal to give medicines
that heal, after making promises!

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  தொல் ஊழி – the end of time, தடுமாறி – confused, தொகல் வேண்டும் பருவத்தால் –  at a time when they join together (வேற்றுமை மயக்கம், பருவத்தில் என்பது பருவத்தால் என வந்தது), பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல் – like god who creates and makes all lives reach him in the end, எல் உறு தெறு கதிர் மடங்கி – the bright sun’s hot rays folded (மடக்கி மயங்கி என வந்தது), தன் கதிர் மாய – the rays vanished, நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – after the king who ruled the world establishing fairness and in a righteous manner (நிறீஇ – சொல்லிசை அளபெடை), அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போல் – like the time when a weak king who was not able to establish a rule with justice came, மயங்கு இருள் தலைவர – confusing darkness came, எல்லைக்கு வரம்பு ஆய  – as the end of the day, இடும்பை கூர் மருள் மாலை – confusing evening time filled with sorrow

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் – ocean with wide/dashing waves that don’t stop roaring, பனிக் கடல் – cold ocean, தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ – do you roar pitying those who are suffering with affliction since the lord of the shores abandoned them, எம் போல – like her, காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ – do you have a partner who loved you and then left,

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – ibis that reaches the fronds of the dark/huge palmyra trees in the common grounds, நன்று அறை கொன்றனர் அவர் எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ – did you screech knowing her sorrow came from him who killed loving words, எம் போல – like her, இன் துணைப் பிரிந்தாரை உடையையோ நீ – do you have a sweet partner who separated from you,

பனி இருள் சூழ்தர – as chilly darkness surrounds, பைதல் – trembling/sad, அம் சிறு குழல் – beautiful little flute, இனி வரின் – if he comes, உயரும் – it will increase, மன் – அசை நிலை, an expletive, பழி – blame, எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இனைதியோ – are you tormented on seeing the distress of those who are sad and alone, எம் போல – like her, இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ – do you have one who was sweet and then left,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – ruined with great sorrow that others know about, பெரும் பேதுறுதல் களைமதி பெரும – remove her distress O lord, வருந்திய செல்லல் – do not go causing pain, தீர்த்த திறன் அறி ஒருவன் – one who knows perfectly to remove sorrow, one who knows perfectly to heal, மருந்து அறைகோடலின் – if he promises and does not give the medicine (அறைகோடலின் – வஞ்சினம் கூறி மனம் குன்றுவதால்), கொடிதே – it is harsher (ஏகாரம் அசை நிலை, an expletive), யாழ – அசை நிலை, an expletive, நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே – if you let the heart of the one who loves you to be ruined (விடினே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 130
நல்லந்துவனார், நெய்தல், கண்டோர் சொன்னது
நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய இவை, என இரங்கப்,
புரை தவ நாடிப், பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக், 5
கல்லாது முதிர்ந்தவன்கண் இல்லா நெஞ்சம் போல்,
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை.
இம் மாலை,
ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ என்
கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! 10
இம் மாலை ,
இருங்கழி மா மலர் கூம்ப, அரோ என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!

இம் மாலை,
கோவலர் தீம் குழல் இனைய, அரோ என் 15
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்!
என ஆங்கு
படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக்,
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் 20
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

Kalithokai 130
Nallanthuvanār, Neythal, What the onlookers said
Pitch darkness spreads in the painful evening
like that in the heart of an uneducated man
who does not have the wisdom of an old man.
Day time ends as the many rays of the sun fold,
like fine wealth that vanishes when a king, who is
admired for kindness and truth and fairness as
rising from him, who ruled without lies and faults,
dies.

At this evening time when Brahmins light bright
flames, my helpless heart burns like fire. At this
evening time when the dark flowers close in the huge
backwaters, my heart that is ruined with spreading
distress suffers. At this evening time when cattle
herders play music on their sweet flutes, my kohl-
lined eyes with flower-like beauty struggle in pain.

(the hero returns)

And there in this evening time when the sun vanished,
when he touched her, the pallor on her body left like an
invading army that withdrew when forced out by the
huge army of a king who rules with a just scepter, who
protects his citizens.

Notes:  கல்லாது முதிர்ந்தவன்கண் இல்லா நெஞ்சம் போல் (6) – நச்சினார்க்கினியர் உரை – ஒன்றையுங் கல்லாமல் மூத்தவனுடைய ஞானக்கண் இல்லாத நெஞ்சு போலே.  குறுந்தொகை 399 – பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  குறுந்தொகை 399 – ஊருண் கேணி உண் துறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

Meanings:  நயனும் வாய்மையும் – kindness and truth, நன்னர் நடுவும் –fine fairness (நன்னர் – நல்ல), இவனின் தோன்றிய இவை என – they appeared from him, இரங்க – to feel tender (இரங்க – உள்ளம் உருக), புரை தவ – ruined faults, நாடி – analyzed, பொய் தபுத்து – ruined lies, இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் – like the fine wealth that dies along with a king who ruled sweetly, நிரை கதிர்க் கனலி – the sun with rows of rays, பாடொடு – hiding, பகல் செல – as the day ends (செல – இடைக்குறை), கல்லாது முதிர்ந்தவன்கண் இல்லா நெஞ்சம் போல் புல் இருள் பரத்தரூஉம் – painful darkness spreads like the heart of an uneducated man who does not have wisdom of an older man (பரத்தரூஉம் – இன்னிசை அளபெடை), புலம்பு கொள் மருள் மாலை – painful confusing evening, lonely confusing evening,

இம் மாலை – in this evening time, ஐயர் அவிர் அழல் எடுப்ப – as Brahmins raise bright flames, அரோ – அசை நிலை, an expletive, என் கையறு நெஞ்சம் – my sad helpless heart, கனன்று தீ மடுக்கும் – burns like fire, இம் மாலை இருங்கழி மா மலர் கூம்ப – when the dark/large flowers in the huge backwaters close in the evening, அரோ – அசை நிலை, an expletive, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் – my heart with distress is ruined and it loses strength, இம் மாலை கோவலர் தீம் குழல் இனைய – when the cattle herders play their sweet flute causing sorrow, அரோ – அசை நிலை, an expletive, என் பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும் – my flower-like pretty kohl-rimmed eyes get distressed,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – the one who is suffering with distress in this evening time when the sun goes away, குடி புறங்காத்து ஓம்பும் – protects his citizens, செங்கோலான் – king with a just scepter, வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு – like how the huge army went and caused the enemy to retreat (விடுவழி விடுவழி – அடுக்குத்தொடர், Repetition of a word for emphasis), அவர் தொடுவழித் தொடுவழி – whenever he touched her (தொடுவழித் தொடுவழி – அடுக்குத்தொடர், Repetition of a word for emphasis), நீங்கின்றால் பசப்பே – her pallor went away (நீங்கின்றால் – ஆல் அசை நிலை, an expletive, பசப்பே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 131
நல்லந்துவனார், நெய்தல், தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:

பெருங்கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென்தோள் மணந்தவன் செய்த
அருந்துயர் நீக்குவேன் போல் மன், பொருந்துபு
பூக்கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்,
நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய்! தாக்கி 5
இனமீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்துக், கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத்,
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை 10
வீழ் ஊசல் தூங்க பெறின்.

மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய் தட மென்தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து.

தலைவி:

நாணின கொல் தோழி? நாணின கொல் தோழி? 15
இரவு எலாம் நல்தோழி நாணின, என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்,
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி, என்
மேனி சிதைத்தான் துறை. 20

தோழி:

மாரி வீழ் இருங்கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை.

தலைவி:

பார்த்து உற்றன தோழி! பார்த்து உற்றன தோழி! 25
இரவு எலாம் நல் தோழி! பார்த்து உற்றன என்பவை
தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்? என
இன் துணை அன்றில் இரவின் அகவாவே,
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
மென்தோள் ஞெகிழ்த்தான் துறை. 30

தோழி:

கரை கவர் கொடுங்கழிக் கண்கவர் புள் இனம்,
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசைவரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை.

தலைவி:

அருளின கொல் தோழி? அருளின கொல் தோழி? 35
இரவு எலாம் தோழி! அருளின என்பவை
கணம் கொள் இடு மணல் காவி வருந்தப்,
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்,
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை. 40

தோழி:

என நாம்,
பாட மறை நின்று கேட்டனன் நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து நீ நனி மருளத்,
தேன் இமிர் புன்னை பொருந்தித், 45
தான் ஊக்கினன் அவ் ஊசலை வந்தே.

Kalithokai 131
Nallanthuvanār, Neythal, What the heroine and her friend said

Friend:

My friend with famed, kohl-lined, pretty eyes
like matching flowers that cause terror to those who
look at them! It would be like removing the distress
caused by the man who embraced your delicate
arms with perfect jewels swearing on the great
ocean god looking at the water, if you sway on this
hanging swing made by linking the white horns of
fierce sharks that fought and won with many of their
kind, rope from twisted waterlily fibers and roots of
thāzhai with large flowers that drip honey as swarms
of bees hum like the music of a yāzh strummed by
hand.

One whose looks surpass those of a young, naïve doe!
As I lift and lower your swing, sing for long about the
one who abandoned your curved, delicate arms.

Heroine:

Were they embarrassed? Were they embarrassed?
My fine friend, they were embarrassed all night, the
crabs on the moon-like, bright sand that scuttle around
constantly and hide in their holes, on the shores of the
one who shattered my beauty that has become the hue
of fragrant gnālal flowers in the grove on his shores.

Friend:

My friend with smiles of pearls from the deep ocean,
proud looks and hair like the falling rain! Sing a lofty
song about him from songs that we sing, matching
the rhythm of this high swing.

Heroine:

They watched and became sad, my friend! They
watched and became sad, my friend! All night they
watched and did not sing on his shore, my friend, the
andril birds with sweet partners, for me who is aching
separated from my partner who drew sugarcane patterns
on my arms that have wasted away losing their beauty.

Friend:

Sing a song praising him, matching this high, swaying
swing from ones we sing, about the man from the shores
where flocks of attractive birds of the curved backwaters
which erode the shores do not kill and eat fish, but eat the
stinking fish killed and beached by the waves.

Heroine:

Did they shower kindness, my friend? Did they shower
kindness, my friend? The waves showered kindness
all night long, my friend, to the kāvi flowers covered by sand
on the shores, removing the tall sand mounds on the shores
of the man who humbles himself to women with fragrant
five-part braids to end their sulking.

Friend:

And as we sang there, the man who hid and listened, the lord
of the long stretches of bright, white water, came from behind
a punnai tree swarmed by bees and pushed your swing, awing
you.

Notes:  முத்தைப் போன்ற பற்கள்:  அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  திரை தந்த மீன்: கலித்தொகை 121 – எறி திரை தந்திட இழிந்த மீன், அகநானூறு 110 – இழிந்த கொழு மீன், கலித்தொகை 131- திரை உறப் பொன்றிய புலவு மீன்.  தாழை ஊஞ்சல்: அகநானூறு 20 – தாழை வீழ் கயிற்று ஊசல்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அழித்து ஒன்று பாடித்தை (34) – நச்சினார்க்கினியர் உரை – நீ இயற்பழித்ததனை அழித்து இயற்பட ஒன்று பாடுவாய், மா. இராசமாணிக்கனார் உரை – அவன் புகழைப் பாராட்டிப் பாடுவாயாக.

Meanings:  பெருங்கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து – looking at the water and swearing on the great ocean god, என் – my, திருந்திழை – perfect jewels, மென்தோள் மணந்தவன் – the man who embraced your delicate arms, செய்த அரும் துயர் – the great sorrow he caused, நீக்குவேன் – I will remove, போல் – like, மன் – அசைநிலை, an expletive, பொருந்துபு பூக் கவின் கொண்ட – having the beauty of matching flowers, புகழ் சால் – greatly famed, எழில் உண்கண் நோக்குங்கால் – when looking with your pretty eyes with kohl (நோக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் – O one whose looks cause terror, தாக்கி – attacked, இன மீன் இகல் மாற வென்ற – differed and won among its kind, சின மீன் எறி சுறா – angry attacking sharks, வான் மருப்பு கோத்து – joined their white horns, நெறி செய்த – twisted, நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து – tying with the long fibers of waterlilies, கை உளர்வின் யாழ் இசை கொண்ட – with the music of the yāzh strummed with hand, இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – as swarms of bees hum, தாழாது உறைக்கும் – drops immediately, தட மலர் – large flowers, curved flowers, தண் தாழை – cool fragrant thāzhai trees, Pandanus odoratissimus, வீழ் ஊசல் – swing rope made with aerial roots (நச்சினார்க்கினியர் உரை – தாழையினது விழுதால் திரித்து இட்ட ஊசல்), தூங்க பெறின் – if you get to sway,

மாழை மட மான் பிணை இயல் வென்றாய் – O one whose looks surpass those of young delicate female deer, you whose looks are victorious over that of a naïve female deer, நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப – as I lift up and lower your swing (கடைஇ – சொல்லிசை அளபெடை), நீடு ஊங்காய் – you sway for a long time, தட மென்தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து – sharing about the man who abandoned your large/curved delicate arms,

நாணின கொல் தோழி – were they embarrassed, my friend, நாணின கொல் தோழி – were they embarrassed my friend, இரவு எலாம் நல்தோழி நாணின என்பவை – they were embarrassed all night, my friend (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – on top of the bright sand resembling the bright moon, ஆனாப் பரிய அலவன் – crabs  that run around without a break, அளை புகூஉம்.- and enter their holes (புகூஉம் – இன்னிசை அளபெடை), கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப – like the fragrant gnālal flowers in the seashore grove, புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, தோழி என் மேனி சிதைத்தான் துறை – on the shores of the one who ruined my body my friend,

மாரி வீழ் இருங்கூந்தல் – dark/thick hair like that of falling rain,  மதைஇய நோக்கு – proud looks, pretty looks (மதைஇய – செய்யுளிசை அளபெடை), எழில் உண்கண் – pretty kohl-rimmed eyes, தாழ் நீர – deep sea, முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – one with smiles resembling pearls, தேயா நோய் செய்தான் திறம் – for the one who gave you this disease that cannot be reduced, கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – you sing a lofty song that we sing matching the rhythm of this very high swing (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி, பாடித்தை – முன்னிலை வினைத் திரிசொல்),

பார்த்து உற்றன தோழி – they looked and they were sad my friend, பார்த்து உற்றன தோழி – they looked and they were sad my friend, இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – they were sad all night my fine friend (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல் என இன் துணை அன்றில் இரவின் அகவாவே – the ibis with sweet partners did not sing/call all night thinking that I am sad without my partner, அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் மென்தோள் ஞெகிழ்த்தான் துறை – the shores of the one who caused by thin arms/shoulders to be wasted that he decorated with sugarcane thoyyil patterns (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி),

கரை கவர் – erodes the shore, கொடுங்கழி – curved backwaters, கண்கவர் புள் இனம் – attractive flocks of birds, திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை இரை உயிர் செகுத்து உண்ணா – do not eat killing fish except the stinking fish killed and brought by waves (அல்லதை – அல்லது, ஈறு திரிந்தது), துறைவனை – the lord of the shores, யாம் பாடும் – songs we sing, அசைவரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – you sing a song praising him matching the rhythm of the swaying swing (பாடித்தை – முன்னிலை வினைத் திரிசொல்),

அருளின கொல் தோழி – did they not shower kindness my friend, அருளின கொல் தோழி – did they not shower kindness my friend, இரவு எலாம் தோழி அருளின என்பவை – they showered kindness all night (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), கணம் கொள் இடு மணல் காவி வருந்த – as the thick layer of sand brought by the waves made kāvi flowers sad, red waterlilies, blue waterlilies, பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – the waves come and protect the waterlilies by ruining the tall sand mounds, மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை – the shore of the one who humbly vows and ends the sulking of those with fragrant five-part braid,

என நாம் பாட- as we sang,  மறை நின்று கேட்டனன் – one who listened hiding,  நீடிய  வால் நீர்க் கிடக்கை – place with long white stretches of water, வயங்கு நீர்ச் சேர்ப்பனை – the lord of the shores with bright waters, யான் என உணர்ந்து – knowing it is him, நீ நனி மருள –  as you are awed greatly, தேன் இமிர் புன்னை பொருந்தி – from behind the punnai tree swarmed by bees, நாகம், laurel tree, mast wood tree, calophyllum inophyllum, தான் ஊக்கினன் அவ் ஊசலை வந்தே – he came and pushed your swing

கலித்தொகை 132
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக,
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள் இனம் இறைகொள,
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல், 5
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்துத்
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்,
“நல்நுதால்! அஞ்சல் ஓம்பு!” என்றதன் பயன் அன்றோ,
பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள், 10
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?

பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்,
“சின்மொழி! தெளி!” எனத் தேற்றிய சிறப்பு அன்றோ,
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்,
நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்ததை? 15

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால்,
“கொடுங்குழாய்! தெளி!” எனக் கொண்டதன் கொளை அன்றோ,
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள்,
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?
என ஆங்கு, 20
வழிபட்ட தெய்வம் தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப்,
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி
அழிபடர் அலைப்ப, அகறலோ கொடிதே.

Kalithokai 132
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the clear, cold shores, where flocks of
birds relax and rest,
like herds of elephants that are tethered in well-
arranged places in the midst of the army of a king
owning three drums who has ruined his enemies,
after choosing and eating with their beloved
partners, on the sand dunes created by the powerful
ocean waves, surrounded by ships that return without
damage after achieving their splendid goals!

The woman who lost her beauty like tender mango
leaves since pallor spread on her leaving her dull
like a flame that burns during the day,
is it not because you said to her, “O one with a fine
forehead! Do not fear!” when you united with her in
the fragrant grove with punnai trees?

The woman whose bangles on her long, curved arms
have become loose, is it not because you consoled her
saying, “O one of few words! Understand that I will not
leave!” when you united with her in the fragrant grove
with many flowers?

The woman with a waist unable to carry the weight of
ornaments, appearing like a vine with ruined
flowers, struggling with this undignified disease
hiding it from others, did she not accept because of her
principle when you consoled her saying, “O one with
curved earrings! I will not leave!”
when you played and united with her in the beautiful
sand near spreading adumpu plants?

You leaving my friend, letting her suffer in great distress
as she is blamed and slandered, is like a worshipped god
giving terrible diseases to those who come for protection.

Meanings:  உரவு நீர்த் திரை பொர – raised by the powerful waves or attacked by the powerful waves, ஓங்கிய எக்கர் மேல் – on the heaped sand, on the sand dunes, விரவு – mixed, பல் உருவின – those of many shapes, வீழ் பெடை துணை ஆக – with their beloved females, இரை தேர்ந்து உண்டு – they choose and eat food, அசாவிடூஉம் புள் இனம் – bird flocks  that relax (விடூஉம் – இன்னிசை அளபெடை), இறை கொள – stay there, முரைசு மூன்று ஆள்பவர் – one who rules with three drums, முரணியோர் – enemies, முரண் தப – ruining strengths, நிரை களிறு இடைபட – for rows of bull elephants to stay, நெறி யாத்த இருக்கை –  tied in well-arranged places, போல் – like, சிதைவு இன்றி – without being ruined, சென்றுழி – when they went, where they went (சென்றுழி, உழி ஏழாம் வேற்றுமை உருபு), சிறப்பு எய்தி வினை வாய்த்து – returned achieving their special goals, துறைய கலம் வாய் சூழும் – shores are surrounded by ships, துணி கடல் தண் சேர்ப்ப – O lord of the clear/bright cool ocean,

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால் – when you united with her in the fragrant grove with punnai trees, நாகம், laurel tree, mast wood tree, calophyllum inophyllum, நல் நுதால் – O one with a fine forehead, அஞ்சல் ஓம்பு – avoid fearing, do not fear, என்றதன் பயன் அன்றோ – is it because of having said that, is it because of trusting you who said that, பாயின பசலையால் – due to the spreading pallor,  பகல் கொண்ட சுடர் போன்றாள் – she is bright like a flame in the day, மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – that she lost her esteemed beauty like the tender leaves of mango trees (இழந்ததை – ஐகாரம் அசை),

பல்மலர் நறும் பொழில் – fragrant grove with many flowers, பழி இன்றிப் புணர்ந்தக்கால் – when you united without a fault (புணர்ந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), சின்மொழி – O one of few words (அன்மொழித்தொகை, விளி, an address), தெளி எனத் தேற்றிய சிறப்பு அன்றோ – is it because of you said to her to understand clearly that you are not leaving (சிறப்பு – இகழ்ச்சிக்குறிப்பு), வாடுபு – wasted, வனப்பு ஓடி – her beauty ruined, வயக்கு உறா மணி போன்றாள் – one like unwashed sapphire, நீடு இறை long curved, நெடு மென்தோள் – long delicate arms, நிரை வளை நெகிழ்ந்ததை – her rows of bangles have become loose (நெகிழ்ந்ததை – ஐகாரம் அசை),

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால் – when you played and united with her in the pretty sand with spreading adumpu vines, Ipomoea pes caprae (மணந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), கொடும் குழாய் தெளி எனக் கொண்டதன் கொளை அன்றோ – is it not because of  her principle that she accepted when you said, ‘one with curved earrings! Be clear of my intent’, பொறை ஆற்றா நுசுப்பினால் – since her waist is unable to bear the weight of ornaments, பூ வீந்த கொடி போன்றாள் – she who is like a vine in which flowers are ruined, மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – struggling with this undignified disease hiding it without others knowing about it (உழந்ததை – ஐகாரம் அசை),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), வழிபட்ட தெய்வம் – a god who is worshipped, தான் வலி எனச் சார்ந்தார் கண் – to the one who came to that god for strength, கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – like giving this ruining disease that has become terror, பழி பரந்து – spreading blame, அலர் தூற்ற – slandered by others, என் தோழி அழிபடர் அலைப்ப – as my friend is struggling in great distress, அகறலோ கொடிதே – it is harsh for you to leave

கலித்தொகை 133
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போலப் புள் அல்கும் துறைவ! கேள்! 5

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்,
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை,
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்,
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை,
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல், 10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை,
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை,
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்,
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்,

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி 15
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க,
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ! பூண்க நின் தேரே!

Kalithokai 133
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the shores where thillai trees
and mundakam plants with dark flowers grow
together on tall sand dunes decorating the
seashore grove, and residing birds appear like
blossoms of crooked thāzhai trees
whose hanging fruits are like water-filled pots
brought by the great Sivan to the trunk of
a banyan tree! Listen!

Guidance is to help those who are suffering.
Caring is not to part from those united.
Courtesy is knowing norms and behaving well.
Kindness is not ruining relatives.
Wisdom is tolerating the words of the ignorant.

Kinship is not forgetting what one said.
Steadfast is to be confidential not letting others
know.
Justice is to seize the lives of the wrong, no matter
who they are.
Patience is to tolerate those who do not care.

If you understand these, lord, hitch the horses to
your chariot and come to remove the distress of my
friend with a beautiful forehead.
To abandon her after enjoying her beauty is like
discarding a pot after drinking its sweet milk!

Notes:  ஒழுகுதல், நோன்றல், பொறுத்தல் – தொழிற்பெயர்கள்.

Meanings:  மா மலர் முண்டகம் – mundakam plants with dark colored flowers, நீர் முள்ளி, Hygrophila spinose, தில்லையோடு – along with thillai trees, Blinding Tree, Exocoeria agallocha – Mangrove tree, ஒருங்கு உடன் – both together, கானல் அணிந்த – decorating the seashore grove, உயர் மணல் எக்கர் மேல் – above the tall sand dunes, சீர் மிகு சிறப்பினோன் – the great splendid one – Sivan, மர முதல் – tree trunk, கை சேர்த்த – brought there, நீர் மலி கரகம் போல் – like pots filled with water, பழம் தூங்கு – fruits hang, முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல – like blossomed flowers of bent thāzhai trees, Pandanus odoratissimus, புள் அல்கும் துறைவ – O lord of the shores where birds reside, கேள் – listen,

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – to console is to help those who are suffering, to guide is to help those suffering, போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – caring is not to separate from those united, பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – what is spoken of as courtesy is knowing norms and behaving with well, அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – what is spoken of as kindness is not ruining relatives, kindness is not being angry with relatives (செறாஅமை – இசை நிறை அளபெடை), அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – what is spoken of as wisdom is tolerating the words of those who are ignorant,

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – what is spoken of as closeness/kinship is not to forget what one said (மறாஅமை – இசை நிறை அளபெடை), நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – what is spoken of as steadfast is to keep things confidential not letting others know, முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – what is spoken of as justice is to take the lives of those who are wrong without having pity even if they are close to you, பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – what is spoken of as patience is to be patient even to those who don’t care, patience is to tolerate even to those who don’t care,

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் – if you understand these (ஆங்கு – அசைநிலை), என் தோழி நல் நுதல் நலன் உண்டு துறத்தல் – abandoning after enjoying my friend with a beautiful forehead, கொண்க – O lord of the shores, தீம் பால் உண்பவர் – those who drink sweet milk, கொள் கலம் வரைதல் – discarding the vessel that had the milk, நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ – go and remove her sorrow of the woman who is sad because of you (மோ – முன்னிலையசை, an expletive of the second person), பூண்க நின் தேரே – hitch the horses to your chariot, get your chariot ready (பூண்க – வியங்கோள் வினைமுற்று, தேரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 134
நல்லந்துவனார், நெய்தல், கண்டோரும் தலைவியும் சொன்னது

கண்டோர்:

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்,
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இருங்கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப், 5
பெருங்கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்,
பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப ,
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை. 10

தலைவி:

தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின்,
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தரக் கடல் நோக்கி,
அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன் கொலோ?

நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், 15
கடும் பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி,
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன் கொலோ?

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே 20
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி,
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொலோ?

கண்டோர்:

என ஆங்கு,
கரை காணாப் பௌவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தரப் புணை பெற்றுத், தீது இன்றி உய்ந்தாங்கு, 25
விரைவனர் காதலர் புகுதர,
நிரைதொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே.

Kalithokai 134
Nallanthuvanār, Neythal, What the onlookers and the heroine said

Onlookers:

After the sun folded its rays and vanished in the
mountains like a discus thrust on the pretty
forehead of a murderous elephant, thrown by
Kannan with a cool flower garland on his chest
who routed his enemies with rage,
and, like the Mallars sent by his uncle Kamsan,
the huge ocean’s tall waves rise and break on the
shores as though they saw night, bees leave making
the flowers in the backwaters close looking like
they are asleep on the dull shores,
and confusing evening arrives with distress,
appearing like the fearing and trembling vast land
that faces destruction at the end of time.

Heroine:

Due to thinking about not being able to see the one
who gave me this disease that cannot be healed, I have
sunk into deep distress with a sad heart in this cold
season. It appears that the ocean is in agony on
seeing me cry. Why is it so?

Due to thinking about the unkind one who gave me
this trembling disease that cannot be healed, my
eyes drop copious tears, I feel helpless and sad, and
my beauty is ruined. It appears that the sand
erodes on seeing me in anguish. Why is it so?

Due to thinking about the abandonment of the one
who enjoyed my beauty, I am in fear with a helpless
and confused heart. It appears that the trees see me
and close their leaves, feeling agonized. Why is it so?

Onlookers:

Her lover returned in haste, and the sorrow of the
woman with rows of bangles vanished like a man
who was saved perfectly by a raft brought by the
waves, after his ship broke and he was struggling in
the ocean, unable to see the shore.

Meanings:  மல்லரை மறம் சாய்த்த – one who defeated the Mallars who were sent by his uncle Kamsan, மலர் தண் தார் அகலத்தோன் – one with a cool flower garland on his chest – Kannan,  ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – since he attacked enemies with rage making them run away, கொல் யானை அணி நுதல் அழுத்திய – pressed by the beautiful forehead of killer elephants, ஆழி போல் –like the discus, கல் சேர்பு ஞாயிறு – sun that reaches the mountains, கதிர் வாங்கி மறைதலின் – as the rays fold and vanish, இருங்கடல் ஒலித்து – large/dark ocean roars, ஆங்கே இரவுக் காண்பது போல – like seeing night there, பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – the huge ocean’s tall waves rise and break on the shores, போஒய வண்டினால் – as the bees leave (போஒய – இசைநிறை அளபெடை), புல்லென்ற துறையவாய்ப் பாயல் கொள்பவை போல – like sleeping on the dull shores, கய மலர் வாய் கூம்ப – flowers in the backwaters close, ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற – causing the world to fear and tremble (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), இரு நிலம் பெயர்ப்பு அன்ன – like how the vast land is facing destruction at the end of time, எவ்வம் கூர் மருள் மாலை – confusing evening with distress,

தவல் இல் – does not get destroyed, does not go away, நோய் செய்தவர் – the one who gave this disease,  காணாமை – on not seeing, நினைத்தலின் – due to thinking about him, இகல் இடும் – causing difference, causing hatred, பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து – sunk in sorrow caused in this ruining cold season (தின தின்ன என்பதன் விகாரம்), ஆங்கே கவலை கொள் நெஞ்சினேன் – I am one with a distressed heart, கலுழ் தரக் கடல் நோக்கி – the ocean sees me crying, அவலம் மெய்க் கொண்டது போலும் – it appears like it took the sorrow into its body, அஃது எவன் கொலோ – why is that so,

நடுங்கு நோய் செய்தவர் – the man who caused me this trembling disease,  நல்காமை – not showering graces, நினைத்தலின் – due to thinking, கடும் பனி – intense tears, கைம்மிக – abundantly, கையாற்றுள் ஆழ்ந்து – feeling helpless, ஆங்கே நடுங்கு நோய் உழந்த – distressed with trembling disease there, என் நலன் அழிய – my beauty ruined, மணல் நோக்கி – sand sees me, இடும்பை நோய்க்கு – for the distress disease, இகுவன போலும் – like it flows down, like it erodes, அஃது எவன் கொலோ  – why is that so,

வையினர் – the man who stayed away,  நலன் உண்டார் – the man who enjoyed my beauty/virtue, வாராமை நினைத்தலின் – due to thinking about the one who has not returned, கையறு நெஞ்சினேன் – I am with a helpless heart, கலக்கத்துள் ஆழ்ந்து – sunk in distress, ஆங்கே – there, மையல் கொள் நெஞ்சொடு – with a confusing heart, மயக்கத்தால் – with confusion, மரன் நோக்கி – the trees see me (மரன் – மரம் என்பதன் போலி), எவ்வத்தால் இயன்ற போல் – like they are caught up in sorrow, இலை கூம்பல் – the leaves close, எவன் கொலோ – why is that,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), கரை காணாப் பௌவத்து – in the ocean not seeing the shore, கலம் சிதைந்து ஆழ்பவன் – a man who is struggling when his ship broke, திரை தரப் புணை பெற்று – got a raft brought by the waves, தீது இன்றி – without fault, உய்ந்தாங்கு – like how he escaped, விரைவனர் காதலர் புகுதர –as her lover came in haste, நிரைதொடி – the woman wearing rows of bangles (அன்மொழித்தொகை),, துயரம் நீங்கின்றால் விரைந்தே – distress vanished rapidly (நீங்கின்றால் – ஆல் அசைநிலை, an expletive, விரைந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 135
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா,
அயில் திணி நெடுங்கதவு அமைத்து அடைத்து, அணி கொண்ட
எயில் இடு களிறே, போல் இடு மணல் நெடு கோட்டைப்
பயில் திரை நடு நன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்! 5

கடி மலர்ப் புன்னைக் கீழ் காரிகை தோற்றாளைத்
தொடி நெகிழ்த்த தோளளாத் துறப்பாயால், மற்று நின்
குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?

ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளாத் துறப்பாயால், மற்று நின் 10
வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?

திகழ் மலர்ப் புன்னைக் கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால், மற்று நின்
புகழ்மைக்கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ?
என ஆங்கு, 15
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து,
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடுந்திண் தேர் கடவுமதி விரைந்தே. 20

Kalithokai 135
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O man from the shores where pure, white,
right-whorled conch that unite with their
mates and rise up resemble elephant
tusks, fierce winds are like elephant riders,
and the bashing, loud waves hitting the sand
dunes on the shore is like forts with tall doors
made with spears being attacked with force by
elephants at midday!  Hear me!

Under a punnai tree with fragrant flowers,
she lost her beauty to you, and her bangles
have slipped from her arms.
If you abandon her
now, will it not bring shame to your family?

Under a punnai tree with beautiful flowers,
she lost her beauty to you, the one who is
greatly afflicted with love for you.
If you abandon her now after your promises,
will it not be betrayal since you have not been
truthful?

Under the punnai tree with splendid flowers,
she lost her beauty, equal to that of Thirumakal,
to you.
If you abandon the woman with eyes that
surpassed flowers in beauty in the past, but lost
to them now,
will it not it be a blame to your fame?

If you have heard what I have to say, come in
haste, riding your tall, sturdy chariot, wearing
a swaying gem garland on your chest that is like
a beautiful, tall mountain. My friend is distressed,
sighing, and pining for your love.

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  இகழ் மலர்க் கண்ணளா (13) – நச்சினார்க்கினியர் உரை – முன்பு தோற்ற மலர்கள் தாம் இகழ்கின்ற கண்ணையுடையளாம்படி.

Meanings:  துணை புணர்ந்து எழுதரும் – unite with the mates and rise up, join their mates and rise up, தூ நிற வலம்புரி – pure white colored right-twisted conch shell, இணை திரள் – combined, மருப்பு ஆக – as horns, எறி வளி பாகனா – fierce wind as the elephant driver, அயில் திணி – made with spears, நெடுங்கதவு அமைத்து அடைத்து – tall doors that are well-built and closed, அணி கொண்ட – beautiful, எயில் இடு களிறே போல் – like a fort attacked by elephants, இடு மணல் – sand that is heaped, நெடு கோட்டைப் பயில் திரை – loud waves that hit the tall shore, நடு நன்னாள் – fine mid-day, பாய்ந்து உறூஉம் – attack with force (உறூஉம் – இன்னிசை அளபெடை), துறைவ – O man from such a shore, கேள் – listen,

கடி மலர்ப் புன்னை – fragrant flowered punnai tree, Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கீழ் – below, காரிகை தோற்றாளை – the woman who lost her beauty to you, தொடி – bangles, நெகிழ்த்த – caused them to become loose, cause them to slip, தோளளா – with arms, துறப்பாயால் – if you abandon her, மற்று நின் – and further (மற்று வினைமாற்றின்கண் வந்தது), you, குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ – isn’t this a big fault to your family?

ஆய் மலர்ப் புன்னை – beautiful flowered punnai tree, Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கீழ் – below, அணி நலம் தோற்றாளை – the woman who lost her beauty to you, நோய் மலி நிலையளாத் துறப்பாயால் – if you’ll abandon the greatly afflicted woman, மற்று நின் – and further (மற்று வினைமாற்றின்கண் வந்தது) வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ – will it not be great betrayal not being truthful?

திகழ் மலர்ப் புன்னை – splendid flowered punnai tree,  Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கீழ் – below, திரு நலம் தோற்றாளை – the woman who lost her beauty like that of Thirumakal to you,  இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால் – if you abandon the woman with eyes to which flowers lost in the past but now with eyes that have lost to the flowers that disrespect them, மற்று நின் – and then (மற்று வினைமாற்றின்கண் வந்தது), புகழ்மைக்கண் – for praises, பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – won’t it be a great blame to your fame?

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), சொல்லக் கேட்டனை ஆயின் – you heard what I had to say, வல்லே – rapidly, அணி கிளர் நெடுவரை – tall mountains with beauty, அலைக்கும் – moving, நின் அகலத்து  – your chest,  மணி கிளர் ஆரம் – gem filled garland, தாரொடு – with a garland, துயல்வர – moving, உயங்கினள் உயிர்க்கும் – she is distressed and sighing, என் தோழிக்கு – for my friend,  இயங்கு – going, ஒலி – sounding, நெடுந்திண் தேர் – tall strong chariot, கடவுமதி விரைந்தே – ride and come rapidly (கடவுமதி  – மதி முன்னிலை அசை, an expletive of the second person, விரைந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 136
நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரித்,
தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்,
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூங்கடல் சேர்ப்ப!

முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் 5
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்
அத் திறத்து நீ நீங்க அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால் வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் 10
கொடைத் தக்காய் நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி
உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ?

நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்
மறு வித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்
அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் 15
சிறு வித்தம் இட்டான் போல், செறி துயர் உழப்பவோ?
ஆங்கு,
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்,
தீண்டற்கு அருளித், திறன் அறிந்து, எழீஇப்
பாண்டியம் செய்வான் பொருளினும் 20
ஈண்டுக இவள் நலம், ஏறுக தேரே.

Kalithokai 136
Nallanthuvanār, Neythal, What the heroine’s friend said to the hero
O lord of the beautiful, bright ocean
where boats ply and crashing waves break
on shores, pushing crabs running around
their holes on sand heaps with oozing water,
that resemble dice that are rolled perfectly
again and again in the cool gambling arena!

When you united with her on the shore with
pearl-like sand, she was in bliss like a man who
got number ten rolling dice while gambling.
Did you leave for her to lose her beauty and
suffer in distress like a man who lost getting
small numbers in gambling?

When you united with her in the small space
near the thāzhai trees, she was happy like one who
got the desired small numbers while gambling.
You are a generous man!
Did you leave for her to struggle in great pain like a
man who lost his wagered gambling money rapidly,
not playing properly?

When you united with her sweetly under the
punnai tree with fragrant flowers, she was
joyful like a man who rolled the dice again
and won. Did you announce that you are leaving
for her to be miserable like a man who rolled the
dice and lost wealth?

You are not worried about gossip by others.
Marry her. Her beauty is more precious than the
wealth you’ll earn through your efforts. Climb on
your chariot knowing what to do!

Notes:  முத்தைப் போன்ற மணல்: புறநானூறு 53, முத்த வார் மணல், பெரும்பாணாற்றுப்படை 335 – முத்த வார் மணல், கலித்தொகை 136 – முத்து உறழ் மணல்.

Meanings:  இவர் திமில் – moving boats, எறி திரை – dashing waves, ஈண்டி வந்து – come together, அலைத்தக்கால் – when they pushed them around (கால் ஈற்று வினையெச்சம்), உவறு நீர் – oozing water, உயர் எக்கர் – heaped sand, அலவன் – crab, ஆடு அளை – playing in its holes, வரி – running, தவல் இல் – desire not ruined, தண் கழகத்து – in the cool gambling place, in a cool place where people meet, தவிராது வட்டிப்ப – rolling without stopping, rolling repeatedly, கவறு உற்ற வடு ஏய்க்கும் – resembles the form of the dice that is thrown, காமரு பூங்கடல் சேர்ப்ப – O lord of the beautiful bright ocean,

முத்து உறழ் மணல் எக்கர் – sand heaps that appear like pearls, அளித்தக்கால் – when you united with her (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல – like the mind of the one who got ten when he rolled the dice gambling (ஆயம் – சூதாடு தாயம்), நந்தியாள் அத் திறத்து – for the one who was happy, நீ நீங்க அணி வாடி – losing her beauty as you leave, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல் – like one who lost gambling with dice rolling small numbers, வெய் துயர் உழப்பவோ – is it to cause her great distress,

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால் – when you united with her on the small space near the crooked thāzhai trees, Pandanus odoratissimus (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல – like the one whose dice gave small numbers when he needed while gambling, நந்தியாள் – she was happy, கொடைத் தக்காய் நீ – you are fit for generosity, ஆயின் – if so, நெறி அல்லாக் கதி ஓடி உடைப் பொதி இழந்தான் போல் – like one who lost his wagered material/money rapidly gambling improperly, உறு துயர் உழப்பவோ – is it for her to struggle with great pain,

நறு வீ தாழ் புன்னைக் கீழ் – under the low punnai trees with fragrant flowers, Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நயந்து நீ அளித்தக்கால் – when you were sweet and united with her (அளித்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), மறு வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – she is joyful like a man who rolled the dice again and won, அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு  – because of you considering to move and  announcing that, அப் பொருள் சிறு வித்தம் இட்டான் போல் – like a man who rolled the dice and lost wealth, செறி துயர் உழப்பவோ – is it for her struggle with anguish,

ஆங்கு – அசைநிலை, கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – you are not worried about gossip/slander that is spread by many, தீண்டற்கு அருளி – be gracious to touch her (as a spouse), be kind to marry her, திறன் அறிந்து – knowing the right way, எழீஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் – is much more than the wealth obtained by a man through his efforts (எழீஇ – சொல்லிசை அளபெடை, பாண்டியம் – பெரிதும் உழைத்தல்), ஈண்டுக – may you earn, may you collect, இவள் நலம் – her virtue, her beauty, ஏறுக தேரே – climb on your chariot (ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 137
நல்லந்துவனார், நெய்தல், தலைவி தோழியிடம் சொன்னது
அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம் பையுளும் உடைய;
சிலவே நம்மோடு உசாவும் அன்றில்;
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து, 5
எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச் சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை 10
வில்லினான் எய்தலோ இலர் மன், ஆய் இழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்.

நகை முதல் ஆக நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப் 15
பகைமையின் நலிதலோ இலர் மன், ஆய் இழை!
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்.

நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்துத், தம்
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மைப்
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் 20
தீயினால் சுடுதலோ இலர் மன், ஆய் இழை!
தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்.
ஆங்கு,
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின், 25
யாங்கு ஆவது கொல்? தோழி! எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்க அரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே.

Kalithokai 137
Nallanthuvanār, Neythal, What the heroine said to her friend
It is difficult, my friend, the will to
contain my modesty! My love is large. My life
is very short. The nights are many and painful.
There are a few andril birds that suffer separation
pangs like me. My flame-bright, glittering jewels slip
and jingle. Since I united with him, I tremble like
a distressed peacock stripped of its feathers, and my
bed feels like flame.

He uttered promises that caused my delicate heart
to suffer greatly. My friend with lovely jewels!
He did not attack me with a harsh bow deftly made
by an expert. The affliction born from his words is
harsher than wounds caused by an arrow shot from
a bow.

The love that started with smiles has given me pain.
My friend with pretty jewels! He did not cause me
suffering because of ancient enmity with different
reasons. This disease that has risen due to his
esteem is more painful than that from enmity.

Telling me that he will not part from me, he caused
me distress with his esteem. My friend with beautiful
jewels! He burned me with tenderness, but
he did not burn me with a bright flame that removes
pitch darkness. The disease that he gave with his
tenderness is harsher than fire.

My lover being such, what will happen, my friend, since
he alone is the physician who can heal my sweet life?
I am not able to bear this pain. It is difficult to heal, this
disease that he gave me.

Notes:  Kurunthokai 18-5 – உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே.  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  அரிதே தோழி – it is difficult O friend, it is rare O friend (அரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – the will to contain my modesty, பெரிதே காமம் – my love is huge (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), என் உயிர் தவச் சிறிதே – my life is very short, பலவே யாமம் – the nights are many (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive), பையுளும் உடைய – they are painful, சிலவே நம்மோடு உசாவும் அன்றில் – there are few ibis birds that suffer in pain like me, there are a few ibis birds that call in sorrow, அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப – flame-bright jewels jingling, உலமந்து  – getting ruined, getting distressed, எழில் எஞ்சு – losing beauty, மயிலின் நடுங்கி – trembling like a peacock (மயிலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சேக்கையின் அழல் ஆகின்று – my bed is hot like flame, அவர் நக்கதன் பயனே – because I enjoyed with him (பயனே – ஏகாரம் அசைநிலை, an expletive),

மெல்லிய நெஞ்சு பையுள் கூர – as my delicate heart suffered greatly, தம் சொல்லினான் எய்தமை – because of the words he uttered, because of the promises he gave, அல்லது – are not, அவர் – he, நம்மை – to me, வல்லவன் தைஇய – created by an expert (தைஇய – செய்யுளிசை அளபெடை), வாக்கு அமை – perfect form (வாக்கு – திருத்தம்), கடு விசை வில்லினான் எய்தலோ இலர்- he did not shoot with his harsh bow, மன் – அசை நிலை, an expletive, ஆய் இழை – O one with beautiful jewels (அன்மொழித்தொகை), வில்லினும் கடிது – it is is harsher than an arrow from a bow (வில் – ஆகுபெயராய் அம்பைக் குறிக்கும்), அவர் சொல்லினுள் பிறந்த நோய் – the disease caused by his words,

நகை முதல் ஆக – starting with smiles, நட்பின் உள் எழுந்த – arose with friendship, தகைமையின் நலிதல் – he caused me pain with his esteem, அல்லது – not, அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப் பகைமையின் நலிதலோ இலர் – he is not causing me sorrow due to different reasons like that caused by ancient enmity, மன் – அசை நிலை, an expletive, ஆய் இழை – one with pretty jewels (அன்மொழித்தொகை), பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – the love disease that rose because of his esteem is harsher than that from enmity,

நீயலேன் என்று – saying that he will not leave me, என்னை அன்பினால் பிணித்து – binding me with love, தம் சாயலின் சுடுதல் அல்லது – other than burning me with tenderness, அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் தீயினால் சுடுதலோ இலர்- he did not burn me with a bright flame that totally removes pitch darkness and love sickness, மன் – அசை நிலை, an expletive, ஆய் இழை – O my friend with lovely jewels (அன்மொழித்தொகை), தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – the disease that his tenderness has given is harsher than fire,

ஆங்கு – அசைநிலை, an expletive, அன்னர் காதலர் ஆக – being how my lover is, அவர் நமக்கு இன் உயிர் போத்தரும் யாங்கு ஆவது கொல் தோழி மருத்துவர் ஆயின் – what will happen my friend if he is the physician who can return my sweet life to me after he made it go, எனையதூஉம் – however, தாங்குதல் வலித்தன்று ஆயின் – since I do not have the strength to bear this pain, நீங்க அரிது உற்ற அன்று அவர் உறீஇய நோயே – the disease that he caused is difficult to remove (உறீஇய – அடைவித்த, உறீஇய – செய்யுளிசை அளபெடை, நோயே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 138
நல்லந்துவனார், நெய்தல், தலைவன் தன் தோழனிடம் சொன்னது
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்தாங்கு,
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு,
வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும் நகுபு உடன்,
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி, 5
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவித்,
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ?
மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை
அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு பிணித்து, யாத்து
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும், இஃது ஒத்தன் 10
எல்லீரும் கேட்டீமின் என்று.

படரும், பனை ஈன்ற மாவும், சுடர் இழை
நல்கியாள்; நல்கியவை,
பொறை என் வரைத்து அன்றிப் பூ நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற 15
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்கு விடும் என் உயிர்.

பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ
உரிது என் வரைத்து அன்றி ஒள்ளிழை தந்த 20
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த
நெய்யுள் மெழுகின், நிலையாது பைபயத்
தேயும், அளித்து என் உயிர்.

இளையாரும் ஏதிலவரும் உளைய, யான்
உற்றது உசாவும் துணை 25
என்று யான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று,
அடங்கருந்தோற்றத்து அருந்தவம் முயன்றோர் தம் 30
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

Kalithokai 138
Nallanthuvanār, Neythal, What the hero said to his friend
My intelligence, modesty and shyness are
reduced, like the changed nature of a handsome
rutting elephant with beautiful tusks and flowing
musth that defied the goad placed on its head,
causing others to laugh at me. What is the way to
attain her, the one with a smile and movement like
that of a lightning flash, who revealed herself to me
like a dream, seized my heart and hid her virtue?
I went to the streets of this prosperous town on my
palm horse decorated with sapphire-colored
peacock feathers strung on threads and tied tightly
with pretty poolai, āvirai and erukkam flowers, and
cried out,
“Listen everybody to what I have to sing about her!”

The young woman with glittering jewels has given me
this palm horse. She with a lovely forehead has given
me limitless burden and this affliction
that I am swimming in, wasting away my life like a
salt doll created in a salt pan, that melts in rain.

The young woman with arms that excel bamboo in beauty,
has given me poolai and āvirai flowers. She with bright
jewels has given me this limitless gift of distress that
I am sinking into, and my life is being wasted little by
little like wax that melts in oil heated by a flame.
I am pitiable!

The youngsters and strangers who were nearby heard
me sing. The young woman of very loving words who
heard me sing came and showered her kindness.
She pitied me and was gracious to me. “Let the madal
horse that was partner to you in sorrow, be one of
happiness now,” she said. I was in bliss like those who
controlled their minds, performed rare penances, and
attained sweetly the upper world, abandoning their
bodies.

Notes:  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  எழில் மருப்பு – beautiful tusks, எழில் வேழம் – a handsome elephant, இகுதரு கடாத்தால் – due to the flowing musth liquid, தொழில் மாறி – changed its nature, தலை வைத்த தோட்டி – the goad placed on its head, கைநிமிர்ந்தாங்கு – like how it defied, அறிவும் – intelligence, நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் – our modesty/restraint analyzed by intelligence, நாணொடு – along with shyness, வறிது ஆக – reduced, பிறர் என்னை நகுபவும் – for others to laugh at me, நகுபு உடன் – with a smile, மின் அவிர் நுடக்கமும் – like the movement of bright lightning, கனவும் போல் – like a dream, மெய் காட்டி – revealing her body, என் நெஞ்சம் என்னோடு நில்லாமை – my heart not staying with me, நனி வௌவி – seized it well, தன் நலம் கரந்தாளை – the young woman who hid her virtue/beauty, தலைப்படும் ஆறு எவன் கொலோ – what is the way to attain her, மணிப் பீலி சூட்டிய நூலொடு – on a thread adorned with sapphire-colored peacock feathers, மற்றை – and also, அணிப் பூளை – pretty poolai, Aerva lanata, ஆவிரை – āvirai, Tanner’s senna, Cassia auriculata, எருக்கொடு – along with erukkam flowers, calotropis gigantea, பிணித்து யாத்து – tied tightly, மல்லல் ஊர் மறுகின் கண் – on the streets of this rich town, இவள் பாடும் இஃது ஒத்தன் எல்லீரும் கேட்டீமின் என்று – I said ‘listen to this everybody, what one has to say/sing about her’ (கேட்டீமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person),

படரும் பனை ஈன்ற மாவும் – horse yielded by the spreading palmyra trees, horse yielded by spread palmyra fronds – made with palymra leaves and stems, சுடர் இழை நல்கியாள் – the young woman with glittering jewels gave (சுடர் இழை – அன்மொழித்தொகை), நல்கியவை – what was given, பொறை என் வரைத்து அன்றி – the burden given beyond limits, பூ நுதல் ஈத்த – given by the one with a pretty forehead (பூ நுதல் – அன்மொழித்தொகை), நிறை – fullness, strength, அழி காம நோய் – ruining love disease, நீந்தி – swimming, அறை உற்ற – made in a salt pan, உப்பு இயல் பாவை உறை உற்றது போல – like a salt doll melting away in rain water, உக்கு விடும் என் உயிர் – my life will waste away,

பூளை – poolai flowers, Aerva lanata, பொல மலர் ஆவிரை – golden āvirai flowers, Tanner’s senna, Cassia auriculata, வேய் வென்ற தோளாள் – one with arms better than bamboo, எமக்கு ஈத்த பூ உரிது – the flowers she gave that are suitable for me (உரிது உரித்து என்பதன் விகாரம்), என் – me, வரைத்து அன்றி – beyond limits, ஒள் இழை தந்த பரிசு – the gift given by the young woman with bright jewels (ஒள் இழை – அன்மொழித்தொகை), அழி பைதல் நோய் மூழ்கி – sinking in the ruining painful disease, எரி பரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத் தேயும் அளித்து என் உயிர் – my life is wasted away little by little like wax that melts in oil heated by a flame and it is pitiable (அளித்து – இரங்கத்தக்கது, பைபய – பையப்பைய பைபய என மருவியது),

இளையாரும் ஏதிலவரும் – youngsters and strangers, உளைய – with sorrow, யான் உற்றது உசாவும் துணை என்று – asking me about my sorrow, யான் பாடக் கேட்டு – listening to me sing, அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – since the woman of very loving words came and offered her graces, துன்பத்தில் துணை ஆய மடல் – this palmyra stem horse (madal horse) that is a partner in sorrow, இனி இவள் பெற இன்பத்துள் இடம்படல் என்று – may it be part of attaining happiness now she said, இரங்கினள் அன்புற்று – she pitied me with kindness, அடங்க அரும் – difficult to control, தோற்றத்து – with the appearance, அரும் தவம் முயன்றோர் – those who perform difficult penances, தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே – like those who abandoned their bodies and achieved the upper world sweetly

கலித்தொகை 139
நல்லந்துவனார், நெய்தல், தலைவன் ஊர் பெரியோரிடம் சொன்னது
சான்றவிர்! வாழியோ சான்றவிர்! என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன், மான்ற
துளி இடை மின்னுப் போல் தோன்றி ஒருத்தி, 5
ஒளியோடு உரு என்னைக் காட்டி அளியள் என்
நெஞ்சு ஆறு கொண்டாள்; அதன் கொண்டும் துஞ்சேன்,
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் 10
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது,
பாடுவேன் பாய் மா நிறுத்து.

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப,
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன், 15
தேமொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு.

உய்யா அரு நோய்க்கு உயவாகும், மையல்
உறீஇயாள் ஈத்த இம் மா.

காணுநர் எள்ளக் கலங்கித் தலைவந்து என் 20
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்,
மாண் இழை மாதராள் ஏஎர் எனக் காமனது
ஆணையால் வந்த படை.

காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்,
எழில் நுதல் ஈத்த இம் மா 25

அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால் உள்ளம் சுடுதரும் மன்னோ,
முகை ஏர் இலங்கு எயிற்று இன்னகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு.

அழல் மன்ற, காம அரு நோய் நிழல் மன்ற 30
நேர் இழை ஈத்த இம் மா.
ஆங்கு அதை,
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்!
உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் 35
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்
துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே.

Kalithokai 139
Nallanthuvanār, Neythal, What the hero said to the wise men in town
O noble people! May you live long! O noble
people! If it is the duty of the noble people to
treat the adversity of others as their own and be
righteous, I am going to tell about a matter to
the noble ones who are here. Appearing with a
bright form like lightning streak that flashes amidst
confusing rain, a woman showed her form to me.
Ever since that I have not slept. I am on my horse,
made with the stems of tall palmyra trees,
adorned with a beautiful garland woven with pretty
swaying āvirai flowers along with erukkam blossoms
and jingling bells, as a relief for my distress that I am
unable to bear because of the pretty, young woman
with tight bangles. I will sing about everything now
keeping the palm horse in my mind.

Waves of pain distress me night and day,
and caught in passion, I am thinking of climbing on
a frond horse to swim the ocean of passion, using it
as a raft, since the young woman with sweet words
has not responded to my love. As a medicine for my
unescapable, unabating disease, this young woman
gave me this horse.

She with beauty, has come as a weapon from Kāman,
the young woman with splendid jewels, who has
ruined my handsome manliness and hurt me inside,
causing those who see me to tease. To me who has
passion as an enemy, the woman with a pretty brow
gave this horse as protection.

My precious life is being ruined, caught in the rising
flames of endless passion.  The young woman
with bud-like, sparkling teeth and sweet smiles has
caused pain in my heart.  The woman with pretty jewels
has given this horse as shade for my rare love disease.

O noble ones! If you understand all these, it is your
duty to end my sorrow, like the wise counsel who
guided their king to the upper world when he strayed
from penances that would lead to heaven!

Notes:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  சான்றவிர் – O noble people, O wise people, வாழியோ – may you live long, சான்றவிர் – O noble ones, என்றும் – always,  பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி – considering the pain of others as yours, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் – if it is the duty of the wise people who are righteous (அறன் – அறம் என்பதன் போலி), இவ் இருந்த சான்றீர் – O elders who are here, O wise men who are here, உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் – I will tell you a thing, மான்ற – confusing, துளி இடை – between rain, மின்னுப் போல் தோன்றி – appearing like lightning,  ஒருத்தி – a woman, ஒளியோடு உரு – form with brightness,  என்னைக் காட்டி – showed it to me, அளியள் – pitiful, என் நெஞ்சு ஆறு கொண்டாள் – she took my heart, அதன் கொண்டும் துஞ்சேன் – ever since that I don’t sleep, அணி அலங்கு ஆவிரைப் பூவோடு – along with pretty swaying āvirai flowers, Tanner’s senna, Cassia auriculata, எருக்கின் – with erukkam flowers, calotropis gigantean, பிணையல் – woven together,  அம் கண்ணி – pretty garland, மிலைந்து – wearing, மணி ஆர்ப்ப – bells ringing, ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து – riding on horse made with the stems of tall/dark palmyra trees (madal horse), என் எவ்வ நோய் தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக – as a relief for the distress that I am unable to bear, வீங்கு இழை மாதர் திறத்து – because of the pretty woman wearing tight bangles, ஒன்று நீங்காது பாடுவேன் – I will sing without omitting anything, I will sing about everything, பாய் மா – leaping horse, நிறுத்து – keeping in my mind, considering in my mind,

யாமத்தும் எல்லையும் – during the nights and days, எவ்வத் திரை அலைப்ப – pain waves cause distress, மா மேலேன் என்று – thinking that I will climb on a horse, மடல் புணையா நீந்துவேன் – I will swim using the palm stem horse as a raft, தேமொழி மாதர் உறாஅது – the young woman with sweet words who does not love me (உறாஅது – இசைநிறை அளபெடை), உறீஇய – what she caused (உறீஇய – அடைவித்த, செய்யுளிசை அளபெடை), காமக் கடல் அகப்பட்டு – caught in the ocean of love, உய்யா அரு நோய்க்கு உயவாகும் – as medicine for this rare disease from which I cannot escape, மையல் உறீஇயாள் ஈத்த இம் மா – this horse that was given by the woman who caused this affliction (உறீஇயாள் – அடைவித்தவள்,சொல்லிசை அளபெடை),

காணுநர் – those who see, எள்ள – disrespecting, கலங்கி – distressed, தலைவந்து என் ஆண் எழில் முற்றி உடைத்து – she came to me and surrounded and ruined my handsome manliness, உள் அழித்தரும் – ruining inside, மாண் இழை மாதராள் – the young woman with splendid jewels, ஏஎர் என – with beauty (ஏஎர் – இன்னிசை அளபெடை), காமனது ஆணையால் வந்த படை – this weapon/saddle that came from the command of Kāman, காமக் கடும் பகையின் தோன்றினேற்கு – to me to whom passion has become an enemy, ஏமம் – as protection, எழில் நுதல் – the woman with a beautiful forehead (எழில் நுதல் – அன்மொழித்தொகை), ஈத்த இம் மா – this horse,

அகை – burning, எரி ஆனாது – with endless flames, என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால் – my precious life is being ruined, உள்ளம் சுடுதரும் – heart burns, மன்னோ – அசை நிலை, முகை ஏர் இலங்கு எயிற்று – with bud-like bright teeth, இன் நகை மாதர் தகையால் – due to the graces of the woman with sweet smiles, தலைக்கொண்ட – பற்றிக் கொண்ட, caught, நெஞ்சு அழல் மன்ற – hurt burns for sure, காம அரு நோய் நிழல் மன்ற – certainly as shade for the rare love disease, நேர் இழை ஈத்த இம் மா – this horse was given by the one with perfect jewels,

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் – if you understand these (ஆங்கு – அசைநிலை), சான்றவிர் – O you noble men, தான் தவம் ஒரீஇ – moved away from penances (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), துறக்கத்தின் வழீஇ – slipped from the path to reach heaven, ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து அவர் உயர்நிலை உலகம் உறீஇயாங்கு – like how the wise had the king change and achieve the upper world (உறீஇயாங்கு – சொல்லிசை அளபெடை), என் துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே – it is your responsibility to end my sorrow (கடனே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 140
நல்லந்துவனார், நெய்தல், தலைவன் ஊர் மக்களிடம் சொன்னது
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே
பண்டு அறியாதீர் போல நோக்குவீர்! கொண்டது
மா என்று உணர்மின்! மடல் அன்று! மற்று இவை
பூ அல்ல; பூளை உழிஞையோடு யாத்த,
புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, 5
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி;
நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்
இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு 10
அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்;
அன்னேன் ஒருவனேன் யான்.
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன்; சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ,
என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக 15
நல் நுதல் ஈத்த இம் மா?

திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,
தம் காதல் காட்டுவர் சான்றவர், இன் சாயல்
ஒண்தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும் கண்ணோடாது இவ் ஊர். 20

தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப் படில் உய்யும் ஆம் பூங்கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம்
உணர்ந்தும் உணராது இவ் ஊர்.

வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் 25
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டு ஆம் அம் சீர்ச்
செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம்
அறிந்தும் அறியாது இவ் ஊர்.
ஆங்க,
என் கண் இடும்பை அறீஇயினென்; நும் கண் 30
தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன
மருளுறு நோயொடு மம்மர் அகல
இருளுறு கூந்தலாள் என்னை
அருளுறச் செயின், நுமக்கு அறனும் ஆர் அதுவே.

Kalithokai 140
Nallanthuvanār, Neythal, What the hero said to the people in town
All those who have come here in haste and seen
me, look at me like you have not known me from
before. Understand that I am riding on a horse.
Not on a palmyra stem. These are not just flowers.
This is a garland made with poolai and ulignai
flowers, feathers that peacock shed in the forests
in the mountains tied together with strings, gems,
and bright flame-like āvirai flowers that appear like
beaten gold. I have become a slave to a delicate woman
of no equal, with eyes like cut tender mangoes, and great
beauty appearing like it was given by Kāman, the son
of Thirumāl, who has ruined my heart. This is what
has become of me. Do not feel sorry for me. If asked
to sing, I can sing. If asked to dance a little here, I can
dance. Should I sing now about the woman with a fine
forehead who is the medicine for my inner affliction?

If the moon is seized by a snake, even if unable to
help the moon, the wise show their concern. Even
after seeing the distress in my heart caused by the
affliction-causing looks of the pretty woman with
bright bangles, those in this town have no pity for me!

If a snake comes into a court with unbearable rage,
showing its form, its life is spared. Even after
understanding about this love affliction caused by the
young woman with eyes like flowers and thick, wavy hair,
those in this town do not care about me!

If a man is caught in a whirlpool, if those standing
on the shore just say “Do not fear!” it might save his life.
Even after knowing about the love pain that the young
woman with pretty, perfect teeth has caused me, those
in this town do not care about me!

I have told you about my pain.  When you see clearly and
understand what is happening, for my distress disease
to go away, please have the young woman with dark hair
shower her graces on me. That would be the virtuous thing
for you to do!

Notes:  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  கண்டவிர் எல்லாம் – all those who have seen, கதுமென வந்து – who came rapidly (கதுமென – விரைவுக்குறிப்பு), ஆங்கே பண்டு அறியாதீர் போல நோக்குவீர் – you are looking at me there like you don’t know me before, கொண்டது மா என்று உணர்மின் – understand that I am riding a horse (உணர்மின் – முன்னிலை ஒருமை வினைமுற்று), மடல் அன்று – not a palmyra stem horse (madal horse), மற்று இவை பூ அல்ல – also these are not flowers, பூளை உழிஞையோடு யாத்த – tied with poolai flowers (fuzzy little flowers, Aerva lanata) and ulignai (balloon vine, Cardiospermum halicacabum), புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி – bright feathers of peacocks from the forests in the mountains, பிடி அமை நூலொடு – tied on threads, பெய்ம் மணி கட்டி – tied with hanging gems, அடர் பொன் – beaten gold, அவிர் ஏய்க்கும் – flame-like, ஆவிரம் கண்ணி – āviram garland, Tanner’s senna, Cassia auriculata, நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு – like how Kāman who is the son of Thirumāl gave, அனைய வடிய வடிந்த வனப்பின் – with great beauty flowing together, with eyes that are like cut tender mangoes, என் நெஞ்சம் – my heart, இடிய – to be broken, இடைக் கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – to a delicate woman who has seized me, to a delicate woman of no equal who has seized me, அடியுறை காட்டிய செல்வேன் – to show that I have become a slave, மடியன்மின் – please do not be sorry for me, அன்னேன் ஒருவனேன் யான் – this is how I have become, என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் – if I am asked to sing I have the ability sing, சிறிது ஆங்கே – there a little, ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் – I will also dance if asked to dance, பாடுகோ – should I sing (பாடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசைநிலை, an expletive), என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக – as medicine to heal my inner pain, நல் நுதல் ஈத்த இம் மா  – this horse given by the one with a fine forehead,

திங்கள் அரவு உறின் – if the moon is seized by a snake, if the snake hides the moon, தீர்க்கலார் ஆயினும் – even if they cannot end the problem, தம் காதல் காட்டுவர் சான்றவர் – those who are wise will show their kindness, இன் சாயல் ஒண்தொடி – sweet pretty woman with bright bangles (ஒண்தொடி – அன்மொழித்தொகை), நோய் நோக்கில் பட்ட – caught by her affliction-causing looks, என் நெஞ்ச நோய் கண்டும் – even after seeing the disease that ruined my heart, கண்ணோடாது இவ் ஊர் – the people in this town do not have pity for me (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு),

தாங்காச் சினத்தொடு – with uncontrollable rage, with rage that cannot be borne by others, காட்டி – showing itself, உயிர் செகுக்கும் பாம்பும் – snake that kills lives, அவைப் படில் – if it enters a court, உய்யும் ஆம் – gets saved (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), பூங்கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த – caused by the woman with flower-like eyes and curved thick five-part braid, இக் காமம் உணர்ந்தும் – knowing about this love, உணராது இவ் ஊர் – the people in this town do not understand (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு),

வெம் சுழிப் பட்ட மகற்கு – for a man caught up in a harsh whirlpool, கரை நின்றார் – those who stood on the shore, அஞ்சல் என்றாலும் – even if they say ‘do not fear’, உயிர்ப்பு உண்டு ஆம் – might be saved (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), அம் சீர்ச் செறிந்த – beautiful and perfect (செறிந்த – நெருங்கிய), ஏர் முறுவலாள் செய்த – caused by the young woman with pretty smiles, இக் காமம் அறிந்தும் – even after it knows about this love, அறியாது இவ் ஊர் – the people in this town do not seem to know (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு),

ஆங்க – அசைநிலை, an expletive, என் கண் இடும்பை அறீஇயினென் – I have shared my pain (அறீஇயினென் – சொல்லிசை அளபெடை), நும் கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால் – if you see clearly with your eyes and know, இன்ன மருளுறு நோயொடு – with this confusion causing love disease, மம்மர் அகல – for my distress to go away, for my confusion to go away, இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் – when you make the young woman with dark hair shower her graces, நுமக்கு அறனும்ஆர் அதுவே – that is the virtuous thing for you (அறன் – அறம் என்பதன் போலி, அதுவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 141

நல்லந்துவனார், நெய்தல், தலைவனும் கண்டோரும் சொன்னது

அரிதினில் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து ஆங்குக் காட்டி மற்று ஆங்கே
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு

ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி நிறை மதி
நீருள் நிழல்போல் கொளற்கு அரியள் போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல் மா மேல்
மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர்

பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர்

கரந்தாங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர்

என்று ஆங்கே
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாடத்
திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந்திறை
போலக் கொடுத்தார் தமர்.

Kalithokai 141

Nallanthuvanār, Neythal, What the hero and onlookers said

Hero:

The wise books state that those who did what they
desired in their rare human birth of the past, not
adhering to righteousness which is one among the
three principles of righteousness, wealth and pleasure,
will ride on a beautiful palmyra stem horse singing the
beauty of a woman.

May you live long, O wise people! The young woman
who was inside me at one time is hard to attain, like the
full moon’s reflection in water. She caused me, who
rides battle horses, to ride on a palm horse!

O wise people! The young woman, who I love,
has caused me, who has a mind to protect those on
earth, to suffer endlessly and to beg.
She is hard to attain, like the faultless sun that rises
in the east above the perfect earth!

May you live long, O wise people! Hiding from me, she
has caused this painful disease. Is this the nature
of the young woman with bamboo-like arms with pallor?
The woman who said she would seize lightning at night
in the dark sky with thunder, has caused me who speaks
in the assembly of learned men, to appear like an illiterate
man in front of others!

Onlookers:

In this manner, as he rode his madal horse on the streets,
listening to the suitable words he sang for the young woman
with perfect jewels, her relatives who were opposed at first,
have agreed to give her to him, like enemies who give
precious tributes to the Pāndiyan king with battle prowess.

Notes:  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  தலைவன்:  அரிதினில் தோன்றிய யாக்கை – this body that is rare, புரிபு தாம் வேட்டவை செய்து –  doing what one desires, ஆங்குக் காட்டி – doing in their previous birth, மற்று – மற்று வினைமாற்றின்கண் வந்தது, ஆங்கே அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் – with the three that are there – righteousness, wealth and pleasure, ஒன்றன் திறம் சேரார் – those who did not adhere to righteousness which is one of the three principles, செய்யும் தொழில்கள் அறைந்தன்று – they say (the wise books) that this is a task that they do, அணி நிலை – beautiful, பெண்ணை மடல் ஊர்ந்து – riding a palmyra palm stem horse (madal horse), ஒருத்தி அணி நலம் பாடி வரற்கு – to sing the great beauty of a woman,

ஓர் ஒருகால் – at one time, உள்வழியள் ஆகி – being inside me, நிறை மதி நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் – now she is difficult to obtain like the full moon’s reflection in water, போருள் அடல் மா மேல் ஆற்றுவேன் – who fights in battles riding on a battle horse, என்னை மடல் மா மேல் மன்றம் படர்வித்தவள் – the one who caused me to ride in public on a palm stem/frond horse, வாழி – may you live long, சான்றீர் – O wise people,

பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை மை அறு மண்டிலம் – the faultless sun that rises in the east above the faultless earth, வேட்டனள் – the woman who I desire, வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை – me with a mind to protect the world, இரவு ஊக்கும் இன்னா இடும்பை செய்தாள் – she caused me to be in agony and plead, அம்ம – அசைநிலை, சான்றீர் – O wise people,

கரந்தாங்கே – hiding away from me, இன்னா நோய் செய்யும் – she has caused my painful disease, மற்று இஃதோ பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு – is this the nature of this young woman with bamboo-like arms with pallor spots, இடி உமிழ் வானத்து – in the sky with thunder, இரவு இருள் போழும் கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் – like the young woman who said she would seize darkness-splitting lightning at dark night, வடி நாவின் வல்லார் முன் சொல் வல்லேன் – me who is capable of talking in the assembly of those with perfect tongues, என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள் – she has made me appear like an illiterate person in front of others, வாழி சான்றீர் – may you live long O wise people,

கண்டோர்என்று ஆங்கே வருந்த – since he was sad, மா ஊர்ந்து மறுகின் கண் – on the streets where he rode the horse, பாடத் திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு – listening to the suitable words that he sang for the young woman with perfect jewels (திருந்திழை – அன்மொழித்தொகை), ஆங்கே –  there, பொருந்தாதார் – those who didn’t agree, போர் வல் வழுதிக்கு அரும் திறை போலக் கொடுத்தார் தமர் – her relatives gave her like those who give precious tributes to Vazhuthi (Pāndiyan king) who is great battle victories

கலித்தொகை 142

கண்டோரும் தலைவியும் சொன்னது

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார் கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்ற அம்ம காமம் இவள் மன்னும்
ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கித் தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண்பல்
மீ உயர் தோன்ற நகாஅ நக்காங்கே
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்

ஓஒ அழிதகப் பாராதே அல்லல் குறுகினம்
காண்பாம் கனங்குழை பண்பு
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர் மன் கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர்மார்பு
புல்லிப் புணரப் பெறின்

எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை
செய்தான் இவன் என உற்றது இது என
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்
பைதல ஆகி பசக்குவ மன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்

கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றில் உள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும் கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்

தெள்ளியேம் என்று உரைத்துத் தேராது ஒரு நிலையே
வள்ளியை ஆக என நெஞ்சை வலி உறீஇ
உள்ளி வருகுவர் கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மன் கொலோ நள் இருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால்
தோன்றினன் ஆகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப்
பையெனக் காண்கு விழிப்ப யான் பற்றிய
கை உளே மாய்ந்தான் கரந்து

கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டித்
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ

மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை
கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய் என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு

சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ எம்மை
நயந்து நலம் சிதைத்தான்
மன்றப் பனை மேல் மலை மாந்தளிரே நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ
மென்தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன்
நன்று தீது என்று பிற

நோய் எரி ஆகச் சுடினும் சுழற்றி என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோய் உறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவது அளித்து இவ் உலகு

மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்று இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு

எனப் பாடி
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல
மணி உள் பரந்த நீர் போலத் துணிவாம்
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல் எழில் மார்பனைச் சார்ந்து

Kalithokai 142

What the onlookers and the heroine said

Onlookers:

In union with desire where embraces are not

enough, if one of them is removed, ruining love,

it is worse than not being able to enjoy the music

played by musicians when the tight strings of

their instruments break.  She used to smile with

her eyes and face, controlled, not showing the tips

of her sharp teeth, even when she played happily

with her friends with bright foreheads.

Now she has lost modesty and laughs loudly for

others to hear her cool voice, revealing her straight,

white teeth.  Her famed, kohl-lined eyes, like newly

opened flowers, are filled with tears.

Heroine:

Not considering that it will hurt, you have come here

to see what is happening to me wearing heavy earrings.

Are you laughing at me?  You will not laugh if I unite

with the one with a handsome, wide chest who gave me

this love affliction.

If you ask me, “What happened to you?” I could have

told you, “He ruined my beauty and this is what he

did.”  If I had the strength to explain, and my eyes like

waterlily blossoms would not have suffered in pain

with pallor.

I drew a little house on the sand and found a crescent

moon whose curved lines did not unite to reveal a good

omen.

I could cover it with my clothing and seize it, but

then I thought about Sivan with a kondrai garland and

wondered whether he would go around looking for the

crescent moon, not finding it on his head.

Uttering that I understood clearly, not choosing,

I said “Let me be the benevolent one” and strengthened

my heart.  I was thinking whether he would come, and

would I tease him when he comes.  He appeared in my

dream at night with pitch darkness, when guards go

around and protect, and I held on to him.  I woke up

slowly with the desire to see him,  but he vanished

in my hands.

O sun with rays that are not shared!  When you join the

mountains, think about him.  Hold him and bring him

to me so that the passion fire in my heart, with my life

as a wick, can be extinguished.

O faultless sun!  When you join the mountains, and

before you appear in the ocean waters to make day,

give me a few rays so that I can search for my lover

who ruined my thoyyil designs.

O sun that is high above the palm trees in the common

grounds, with the hue of mango sprouts on the mountains!

Have you heard or known anything like this in this ancient

world?  Other than the nature of the man who caused my

arms to waste away, I am not aware of any good or bad.

Even as this disease burns me, I hide my swirling heart
and keep my thoughts controlled under my pretty eyelids.
If my tears caused by my affliction drop past my control,
this world will get scorched. It is pitiable!

I have tolerated even as my arms wasted away.  O wise

ones!  Remove my distress!  My love disease and slander

are two burdens on my life like a shoulder kāvadi pole.

Onlookers:

She sang all these with great pain and distress, thinking

and sighing deeply.  She thought of the days and nights

that passed.  Her lover who came and showered his graces

on her at night has arrived.  As she embraced his handsome

chest, her beauty has returned slowly like muddy water in a

bowl that became clear by adding crushed illam seeds.  Like

sapphire and the water in it, we understood clearly.

Notes:  நிரை வெண்பல் மீ உயர் தோன்ற நகாஅ (9-10) – நச்சினார்க்கினியர் உரை – பல்லின் மேல் எயிறு தோன்றப் பெருகச் சிரித்து.  The heroine drew on sand looking for omens that might unite her with her lover.  The crescent moon was not a good sign, and hence her desire to erase it.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நகாஅ – நகைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21). மணி உள் பரந்த நீர் போல (63) – நச்சினார்க்கினியர் உரை – மணியும் அதனிற் பிறந்த நீரும் போலே.

Meanings:  கண்டோர்:  புரிவுண்ட புணர்ச்சியுள் – in union with desire, புல் ஆரா மாத்திரை – when embraces are not  enough, அருகுவித்து – making it rare, making it difficult, ஒருவரை அகற்றலின் – if one person is removed, தெரிவார் கண் செய நின்ற பண்ணினுள் – of the music played by musicians, செவி சுவை கொள்ளாது – not being able to listen and enjoy, நயம் நின்ற – desirable, பொருள் கெட – ruining the substance, புரி அறு நரம்பினும் பயன் இன்று – more useless than the twisted broken strings, மன்ற – for sure, அசை நிலை, an expletive, அம்ம – இடைச்சொல், an expletive, காமம் இவள் மன்னும் – with abundant love, ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும் – even when she was enjoying with her friends with bright foreheads (ஓராங்கு – ஒருசேர), முள் நுனை தோன்றாமை – not showing teeth tips, முறுவல் கொண்டு – with smiles, அடக்கி – controlling, தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் – she laughs with her eyes and face, பெண் இன்றி – without feminity, யாவரும் தண் குரல் கேட்ப – others hearing her cool voice, நிரை வெண்பல் மீ உயர் தோன்ற நகாஅ – she laughs revealing the upper parts of the rows of her straight white teeth (நகாஅ – இசைநிறை அளபெடை), நக்காங்கே – while laughing, பூ உயிர்த்தன்ன – like a flower that opened, புகழ் சால் எழில் உண்கண் – greatly famed pretty kohl-rimmed, ஆய் இதழ் – pretty eyelids, மல்க அழும் – she cries tears filled,

தலைவி:  ஓஒ – இரக்கக்குறிப்பு, அழிதகப் பாராதே – not considering that it will hurt, அல்லல் – sorrow, குறுகினம் காண்பாம் – let us go near and see, கனங்குழை பண்பு என்று – the nature of the one with heavy earrings (கனங்குழை -அன்மொழித்தொகை), எல்லீரும் – everyone, என் செய்தீர் – what did you do, என்னை நகுதிரோ –  are you laughing at me (ஓகாரம் வினா), நல்ல – good, நகாஅலிர் – you will not laugh (இசைநிறை அளபெடை), மன் – அசைநிலை, an expletive, கொலோ – will you, யான் உற்ற அல்லல் உறீஇயான் – the man who caused this affliction (உறீஇயான் – அடைவித்தவன், சொல்லிசை அளபெடை), மாய மலர்மார்பு புல்லி – embracing the handsome wide chest, புணரப் பெறின் – if I unite,

எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் – if you ask me what happened to me, என் சிதை செய்தான் இவன் என – that he is the one who ruined me, உற்றது இது என – what he did, எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின் – if I have the inner strength to tell all that, பைதல ஆகி பசக்குவ மன்னோ – would they suffer and get pallor, என் நெய்தல் மலர் அன்ன கண் – my eyes that are like waterlily blossoms,

கோடுவாய் கூடாப் பிறையை – a crescent moon where the curved lines don’t meet, பிறிது ஒன்று நாடுவேன் கண்டனென் – I saw when I analyzed for signs, சிற்றில் உள் கண்டு ஆங்கே – on seeing it inside the little sand house, ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் – I who can cover it with my clothing and seize it (மூஉய் – இன்னிசை அளபெடை), சூடிய – the worn one, காணான் – he is  unable to see it, திரிதரும் கொல்லோ – will he go around looking, மணி மிடற்று மாண் மலர் கொன்றையவன் – one with sapphire-colored neck wearing kondrai flowers – Sivan, Laburnum flowers, Golden Shower Tree, Cassia sophera,

தெள்ளியேம் என்று உரைத்து – I said that I understand clearly, தேராது – not choosing, ஒரு நிலையே வள்ளியை ஆக என – I said to myself, ‘let you be benevolent’, நெஞ்சை வலி உறீஇ – strengthened my heart (உறீஇ – சொல்லிசை அளபெடை), உள்ளி வருகுவர் கொல்லோ – will he think about me and come, வளைந்து – curving, யான் எள்ளி இருக்குவேன் மன் கொலோ – will I tease him (மன் – ஒழியிசை, an implied meaning), நள் இருள் – pitch darkness,  மாந்தர் கடி கொண்ட – when the guards protected, கங்குல் கனவினால் தோன்றினன் ஆக – he appeared in my night’s dream (கனவின் + ஆல், ஆல் அசைநிலை), தொடுத்தேன் மன் யான் – I held on to him (மன் – அசைநிலை, an expletive), தன்னைப் பையெனக் காண்கு விழிப்ப – I woke up slowly to see him, யான் பற்றிய கை உளே மாய்ந்தான் கரந்து – he vanished and hid in my hands with which I held,

கதிர் பகா ஞாயிறே – O sun with rays that are not split, O sun with rays you do not share with others, கல் சேர்தி ஆயின் – if you reach the mountains, அவரை நினைத்து – thinking about him, நிறுத்து என் கை நீட்டித் தருகுவை  ஆயின் – if you hold him and give him to me on my stretched hands,  தவிரும் – it will extinguish, என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ – the fire burning in my heart with my life as the wick,

மை இல் சுடரே – O faultless sun, மலை சேர்தி நீ ஆயின் – if you join the mountains, பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை – until you appear in the ocean waters to make day, கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய் – give me few rays as a hand lamp for me, என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு – I will search for the man who ruined my thoyyil patterns,

சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ – what could I do with the one who ruined, எம்மை நயந்து நலம் சிதைத்தான் – the one who loved me and ruined my beauty (எம்மை – தன்மைப் பன்மை, first person plural),  மன்ற – certainly, பனை மேல் – above the palmyra trees in the common grounds, மலை மாந்தளிரே – O sunlight who is the color of mango sprouts of the mountains, நீ தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ – are you aware of such news in this ancient world, மென்தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் – other than the one who caused my delicate arms to become thin (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), யான் காணேன் நன்று தீது என்று பிற – I do not see others as good and bad,

நோய் எரி ஆகச் சுடினும் – even when this disease burns me, சுழற்றி – swirling heart, swirling tears, என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் – I hide it under my beautiful eyelids, கரந்தாங்கே – as it is hidden, நோய் உறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவது அளித்து இவ் உலகு – this earth will get seared with the hot tears caused by this disease and it is pitiable (வெந்நீர் கண்ணீருக்கு ஆகுபெயர், அளித்து – இரங்கத்தக்கது),

மெலியப் பொறுத்தேன் – I tolerated even as I wasted away, களைந்தீமின் – remove my pain, சான்றீர் – O wise men, நலிதரும் – distressing, காமமும் கௌவையும் – love and slander, என்று இவ் வலிதின் உயிர் காவாத் தூங்கி – these distresses are hanging on both sides of the pole that I am carrying firmly which is my life, ஆங்கு என்னை நலியும் விழுமம் இரண்டு – both are afflictions that are crushing me,

கண்டோர்எனப் பாடி – singing in this manner, இனைந்து நொந்து அழுதனள் – she cried with pain and distress, நினைந்து நீடு உயிர்த்தனள் – she thought and sighed deeply, எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி – thinking so as days and nights have passed, எல் இரா நல்கிய கேள்வன் இவன் – he is her lover who came during bright night and showered his graces (இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), மன்ற – certainly, அசை நிலை, an expletive, மெல்ல – slowly,  மணி உள் பரந்த நீர் போலத்  துணிவாம் – we understood clearly like sapphire and the water in it, கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போல் தெளிந்து – becoming clear like muddied water that becomes clear with crushed illam seeds in a bowl, தேற்றா மரம், clearing nut tree, Strychnos potatorum, நலம் பெற்றாள் – she became beautiful, நல் எழில் மார்பனைச் சார்ந்து – uniting with her man with a handsome chest

கலித்தொகை 143

தலைவியும் கண்டோரும் சொன்னது

அகல் ஆங்கண் இருள் நீங்க அணி நிலாத் திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள் மின்னி
மணி பொரு பசும் பொன் கொல் மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும் கொல் என்றாங்கு அணி செல
மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி
என் செய்தாள் கொல் என்பீர் கேட்டீமின் பொன் செய்தேன்

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்
மென்தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேண் பட்டது என் நெஞ்சு

ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று

பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண்
கழியக் கதழ்வை எனக் கேட்டு நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று

அழிதக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம் மன்

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென்தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்

நினையும் என் உள்ளம் போல் நெடுங்கழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்றச்
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை
மாலையும் வந்தன்று இனி

இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றிப் பட்டாய்
அருள் இலை வாழி சுடர்
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின்
யாண்டும் உடையேன் இசை

ஊர் அலர் தூற்றும் இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போல பெரியப் பசந்தன
நீர் அலர் நீலம் என அவர்க்கு அஞ்ஞான்று
பேர் அஞர் செய்த என் கண்

தன் உயிர் போலத் தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது

கண்டோர்: 

என ஆங்கு
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேரத்
தென்னவன் தெளித்த தேஎம் போல
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே

Kalithokai 143

What the heroine and the onlookers said

Heroine:

You say,

“When her lover was with her, her face shined

brightly like the moon that removes darkness

at night.  Now her fine forehead without a pottu

has lost its brightness, appearing like the dull

afternoon moon. Pallor spots have spread hiding

her pretty body making one wonder whether they

are sapphire-like glittering new gold or kōngam

pollen spread on mango sprouts?

She is distressed, ponders, looks at the ground,

fears, cries and moans.  What has happened to this

woman?”

Let me tell you that I did the right thing.

He left me after uniting with me secretly, like one

not being kind to an asunam that listened to his

yāl music in hiding, who beat his drum and killed it.

I will be happy if you search in the nine countries

and bring him back, the one who caused my

tender arms to become thin.  My heart has gone far

away looking for him.

You follow me telling he’ll come and embrace me.

Do not ask me about him because I am distressed.

You are bewildered that I am confused.  Do not worry.

Has not my life shown that there will be no harm

to the one who is like life to me?

O sun who destroys evil!  I’ve come to you to worship

and plead, having learned that you get enraged at

those who have no proper behavior.  Do not leave me

distraught by hurting the one who abandoned me,

ruining my heart.

At this evening time when sunlight is of mango

sprout hue, the women in town adorn themselves with

pretty, tender leaves and sing about their beauty.  I will

flourish when my man who has gone on the path with

sprouting āchā trees returns.

He is an expert in removing the calyx of waterlilies

for me.  He is an expert in drawing sugarcane designs

on my long, delicate arms.  He is an expert in painting

thoyyil patterns on my young breasts.  He is an expert

like Kāman with his bow when desires are controlled,

He is the lord of my shoulders.

The flowers in the backwaters shrink like my mind in

despair.  The flutes of cattle herders are sad like the pain

in my heart.  The sevvali music heard is like my

staggering words.  Daytime has ended, its light lost

like the brightness that I lost.  Evening time has arrived

like the god of death to distress me.

As I suffer in the dark, you left without kindness, O sun!

May you live long!  If it is true that those who have

honorable minds will achieve the faultless heaven they

desire, I will get that fame since my lover is not with me

in this world with water.

This town spreads gossip.  With sorrow from which I

have no redemption, they have paled greatly like

peerkai flowers, my eyes that caused him affliction,

which were like blue waterlilies to him then.

Why would this king who embraces all lives as his, and

protects lives on earth, not bring my lover who is like

sweet life to me, and protect my life?

Onlookers:

The man who went past many mountains returned

and surrendered humbly at her feet, and the woman

with sweet smiles who was confused and angry, got

back her beauty like a country that came under the

reign of the Pāndiyan king where people are happy.

Notes:  There are references to the asunam in Natrinai 244, 304 and Akanānūru 88.  It is a creature that enjoys delicate music, but dies when attacked by loud sounds.  மலரின் புறவிதழ் நீக்குதல் – புறநானூறு 116 – முழு நெறி, கலித்தொகை 143 – நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 – முழு நெறி, நற்றிணை 138 – பூவுடன் நெறிதரு.  வெறியா, நினையா, நோக்கா, அஞ்சா, அழாஅ, அரற்றா – வெறித்து, நினைத்து, நோக்கி, அஞ்சி, அழுது, அரற்றி என முறையே பொருள் வரும்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  அகல் ஆங்கண் – in the wide space, இருள் நீங்கி – removing the darkness, அணி நிலாத் திகழ்ந்த – shined like the beautiful moon, பின் பகல் – late afternoon, ஆங்கண் – there,  பையென்ற மதியம் போல் – like the dull moon, நகல் இன்று – without brightness, நல் நுதல் – lovely forehead, நீத்த திலகத்தள் – the young woman who abandoned her pottu, மின்னி மணி பொரு – glittering like sapphire, பசும் பொன் கொல் – is it new gold, மா ஈன்ற தளிரின் மேல்  – on top of mango sprouts, கணிகாரம் கொட்கும் கொல் – is it kōngam flower pollen that spread, Cochlospermum gossypium, என்று ஆங்கு – என ஆங்கு, in this manner (ஆங்கு – அசைநிலை, an expletive), அணி செல – beauty leaving her (செல – இடைக்குறை), மேனி மறைத்த பசலையள் – pallor that hid her body, ஆனாது – continuously, நெஞ்சம் வெறியா – with confusion in her heart, with a sad heart, நினையா – thinking, நிலன் நோக்கா – looks at the ground (நிலன் – நிலம் என்பதன் போலி), அஞ்சா அழாஅ அரற்றா – she fears and cries and moans (அழாஅ – இசை நிறை அளபெடை), இஃது ஒத்தி என் செய்தாள் கொல் என்பீர் கேட்டீமின் – if you ask what she did (கேட்டீமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), பொன் செய்தேன் – I have done a right thing,

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – not being kind to the creature asunam (unidentified animal) that listened to his yāzh music in hiding, அறை – sound or betrayal, கொன்று – killed, மற்று – and then, அதன் ஆர் உயிர் எஞ்ச பறை அறைந்தாங்கு – like beating the drum and killing its precious life, ஒருவன் நீத்தான் –  the man who left, அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் நிறை உடையேன் ஆகுவேன் –  I will be satisfied if you bring him to me looking for him in the world that has been separated into nine countries (அறை நவ நாட்டில் – உலகின்கண் கூறுப்படுத்தின ஒன்பது நாடுகளில்), மன்ற – for sure, அசைநிலை, an expletive, மறையின் – in secret love, என் மென்தோள் நெகிழ்த்தானை – the one who caused my delicate arms to become thin, மேஎய் அவன் ஆங்கண் சென்று சேண் பட்டது என் நெஞ்சு – my heart has gone far away looking for him (மேஎய் – இன்னிசை அளபெடை),

ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் – you follow me telling me that he will come and embrace me, மற்று ஆங்கே உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் – do not ask me because I am in distress, மற்று அந்தோ மயங்கினாள் என்று மருடிர் – and you are bewildered that I’m confused, கலங்கன்மின் – you do not worry (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), இன் உயிர் அன்னார்க்கு – for the one who is sweet life to me, எனைத்து ஒன்றும் தீது இன்மை என் உயிர் காட்டாதோ மற்று – but has not my life showed to you that there is not even a little bit of harm to him,

பழி தபு ஞாயிறே – O sun that ruins evil, பாடு அறியாதார் கண் கழியக் கதழ்வை எனக் கேட்டு – on hearing that you get greatly enraged at those who do not know good behavior, நின்னை வழிபட்டு இரக்குவேன் வந்தேன் – I am to worship and plead with you, என் நெஞ்சம் அழிய – my heart ruined, துறந்தானை – the one who abandoned, சீறுங்கால் – when you are enraged, என்னை ஒழிய விடாதீமோ என்று – do not let me be ruined,

அழிதக – to be ruined, மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் – at this time when the sunlight appears in the color of mango sprouts, இவ் ஊரார் தாஅம் தளிர் சூடி – those in this town wear sprouts, தம் நலம் பாடுப – they sing about their beauty, ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் – he who went on the path where āchā trees have put out sprouts, shorea robusta, மீள்தரின் – if he returns, யாஅம் தளிர்க்குவேம் – I will be happy, I will flourish, மன் – an asai, an expletive,

நெய்தல் நெறிக்கவும் வல்லன் – he is an expert in removing the calyx of waterlilies, நெடு மென்தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – he is an expert in drawing sugarcane patterns on my long delicate arms, இள முலை மேல் தொய்யில் எழுதவும் வல்லன் – he is an expert in drawing thoyyil designs on my young breasts, தன் கையில் சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல பல வல்லன் – like the expert (Kāman) who holds a bow in his hands when desires are controlled (செறிவினான் – மன வேட்கையை அடங்கியிருக்குமிடத்து), தோள் ஆள்பவன் – he is the lord of my arms/shoulders,

நினையும் என் உள்ளம் போல் நெடுங்கழி மலர் கூம்ப – the flowers in the long backwaters shrink like my mind that thinks about him, இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – the music of flutes of cattle herders/protectors that appeared is painful like my heart, சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – the sevvali music is like my staggering words, போய என் ஒளியே போல் – like the light/brightness that left me, ஒரு நிலையே பகல் மாய – daytime ended totally, காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை மாலையும் வந்தன்று இனி – evening time has arrived like the god of death to distress me,

இருளொடு யான் ஈங்கு உழப்ப – as I struggle here in darkness, என் இன்றிப் பட்டாய் அருள் இலை – you have left without kindness towards me, வாழி சுடர் – may you live long O sun, ஈண்டு நீர் ஞாலத்துள் – in this world with water, எம் கேள்வர் இல் ஆயின் – since my lover is not here, மாண்ட மனம் பெற்றார் – those with superior minds, மாசு இல் துறக்கத்து – in the perfect heaven, வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் – that they will achieve what they desire, வாய் எனின் – if it is true,  யாண்டும் உடையேன் இசை – I will achieve that fame,

ஊர் அலர் தூற்றும் – the people town spread gossip, the people in town slander (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளோர்க்கு), இவ் உய்யா விழுமத்து – due to this sorrow with no redemption, due to this sorrow from which I cannot escape, பீர் அலர் போல பெரியப் பசந்தன – they paled a lot like peerkai flowers, ridge gourd flowers, Luffa acutangula, நீர் அலர் நீலம் என – like the blue waterlilies that blossom in water, அவர்க்கு அஞ்ஞான்று – which was to him then, பேர் அஞர் செய்த என் கண் – my eyes that caused suffering,

தன் உயிர் போலத் தழீஇ – embracing like they are his life (தழீஇ – சொல்லிசை அளபெடை), உலகத்து மன் உயிர் காக்கும் இம் மன்னனும் – this king who protects lives on earth, என் கொலோ  இன் உயிர் அன்னானைக் காட்டி எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது – why does he not protect my life even a little bit and bring my lover who is my sweet life to me,

என ஆங்கு மன்னிய நோயொடு – and so with her firm anger disease (ஆங்கு – அசைநிலை, an expletive), மருள் கொண்ட மனத்தவள் – the woman with a confused mind, பல் மலை இறந்தவன் – the man who went past many mountains, பணிந்து வந்து அடி சேர – came humbly to her feet, தென்னவன் தெளித்த தேஎம் போல – like the country that came rightfully under the rule of the Pāndiyan king where people are happy (தெளித்த— கவலை போக்கிய, தேஎம் – இன்னிசை அளபெடை), இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – the woman with sweet smiles attained her beauty (இன் நகை – அன்மொழித்தொகை, நலனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 144

கண்டோரும் தலைவியும் சொன்னது

நன்னுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா
என் உற்றாள் கொல்லோ இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணுக் கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையாக் கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லிக் கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ சென்று

எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார்
நின் உற்ற அல்லல் உரை என என்னை
வினவுவீர் தெற்றெனக் கேண்மின் ஒருவன்
குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று என் இன் உயிர் என்று
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு உழிப் பட்டது என் நெஞ்சு

எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்வழி.
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்கள் உள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின்

என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெள் மழை ஓடிப் புகுதி சிறிது என்னைக்
கண்ணோடினாய் போறி நீ

நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல் உள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில் தொறும்
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்,
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக்காண் எம்
கோதை புனைந்த வழி
உதுக்காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி
உதுக்காண் தொய்யில் பொறித்த வழி
உதுக்காண் தையால் தேறு எனத் தேற்றி அறன் இல்லான்
பைய முயங்கியுழி

அளிய என் உள்ளத்து உயவுத் தேர் ஊர்ந்து
விளியா நோய் செய்து இறந்த அன்பு இல் அவனைத்
தெளிய விசும்பினும் ஞாலத்து அகத்தும்
வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று
ஒளி உள்வழி எல்லாம் சென்று முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ
காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
கண்ணீர் அழலால் தெளித்து

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆகப்
புறம் காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு
துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று
பாடுவேன் என் நோய் உரைத்து
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன்
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்

ஓஒ கடலே தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப்
பற்றுவேன் என்று யான் விழிக்குங்கால் மற்றும் என்
நெஞ்சத்து உள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும் அறன் இல் அவன்

ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள்
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீர் உள் புகினும் சுடும்

ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இந்நோய்

உற்று அறியாதாரோ நகுக நயந்தாங்கே
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.

ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக்
கெடல் அருங்காதலர் துனைதரப் பிணி நீங்கி
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம்
நல் அவை உள் படக் கெட்டாங்கு
இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே

Kalithokai 144

What the onlookers and the heroine said

One Onlooker to another:

O woman with a fine forehead!  Look at this young

woman!

She thinks and sighs deeply.  What has happened

to her?  Abandoning modesty and causing many

to laugh, she wipes her tears, and bends and looks

at the ground with sorrow.  To those who ask, she

gives replies that are not suitable, and she talks

alternating between clarity, bewilderment and

confusion.  Hey you!  What caused you this distress?

Who did this to you?

Heroine:

You ask me to tell me to about my sorrow.  Listen

well!  A man said to me, “One with thick hair!  My

sweet life has stayed with me to tell you about my

affliction.”  He caused me to become involved with

him saying such things.  My infatuated heart has

gone to him.

I will search for him everywhere, and find him.

Heroine to the hare:

O little hare that appears on the moon!  You look at

the world with the vast raging ocean!  Won’t you

reveal where my lover lives?  If you don’t, I will

instigate fierce dogs to attack you and tell the hunters

about you.  If you do not end my distress that has

distorted my intelligence, I will have the snake swallow

you along with the moon.

As I tell you all this, you along with the moon hide among

the white clouds.  You are leaving with a little concern

for me.

I will run between the long-leaved thāzhai trees in the

seashore grove with red sand.  I will run and hide.  I will go

to all the groves and look for that hiding thief.  Look here!

This is where he made me a garland with pretty adumpu

flowers.  Look here!  This is where the man without honor

showed me delicate flowers and ran away with my play doll.

Look here!  This is where he drew thoyyil designs on me.

Look here!  This is where the one who is not righteous

consoled me saying “Young woman.  Rest assured,” and

embraced me gently.

Heroine to the wind:

For me to find the man without kindness who gave me

distress that hurts my mind, that cannot be healed, O

wind that blows in the sky, earth and everywhere, won’t you

go on all the paths where the many rays of the sun go, and

show the one who took my virtue and abandoned me?  If

you don’t, I will scorch the whole earth with my tears.

Heroine to the ocean:

O ocean with roaring waters!  If you do not show me the

place of the uncaring man who abandoned me, I will drain

your water with my feet and leave you as all sand.  If I make

an effort, righteousness will become my raft.  If you bring

back the one who abandoned me, I will sing a song for you

describing my distress.  I was oblivious to time when in union

with my lover.

I hated days, wanting them to be nights.  When it became

dark, I hated nights.  There is nobody to relieve me of this

agony.

O ocean!  He shows up inside my eyes clearly.  When I wake

up to nab him with my eyelids he runs and hides inside my

heart and gives me this sleepless disease, the man with no

justice.

O ocean!  When water is poured on a town gripped with fire,

fire’s fury will abate.  The passion fire lit by my unkind lover

will not get reduced even if it enters water.

O ocean!  Let those who don’t know about this disease

laugh at me thinking I have lost my mind.  I would not

have embraced him had I known he would abandon me,

causing me agony.

Onlookers:

As she was ranting to the ocean, her perfect lover arrived in

haste, ending her distress.  The pallor on her pretty forehead

vanished, like the evil words of the unrighteous ones uttered

about those who abide by justice, that vanishes in a fine

assembly.

Notes:  நினையா, உயிரா – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  போறி (26) – அ. தட்சிணாமூர்த்தி உரை – ஐங்குறுநூறு 58 (இவள் அணங்கு உற்றனை போறி) முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 163 (எனக்கே வந்தனை போறி) – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  நல் நுதாஅல் – O one with a fine forehead (நுதாஅல் – அன்மொழித்தொகை, இசை நிறை அளபெடை), காண்டை – you see (காண்டை – முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது), நினையா நெடிது உயிரா – she thinks and sighs deeply, என் உற்றாள் கொல்லோ – what sorrow has happened to her, இஃது ஒத்தி – this woman, பல் மாண் நகுதரும் – causing many to laugh often, தன் நாணுக் கைவிட்டு – abandoning her shame/shyness, இகுதரும் கண்ணீர் துடையா –  wiping the dropping tears, கவிழ்ந்து நிலன் நோக்கி  – bends and looks at the ground (நிலன் – நிலம் என்பதன் போலி), அன்ன இடும்பை பல செய்து – causing such pain to her, தன்னை வினவுவார்க்கு ஏதில சொல்லி – replying unsuitably to those who ask her, கனவு போல் – like a dream, தெருளும் மருளும் மயங்கி வருபவள் – she who comes with clarity and bewilderment and confusion, கூறுப கேளாமோ சென்று – can we go and listen to what she says, எல்லா – hey you, நீ என் அணங்கு உற்றனை – what are you afflicted with, யார் நின் இது செய்தார் – who did this to you

நின் உற்ற அல்லல் உரை என என்னை வினவுவீர் – you ask me to tell you about my sorrow, தெற்றெனக் கேண்மின் – listen clearly (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), ஒருவன் – a man, குரல் கூந்தால் – O one with thick hair (அன்மொழித்தொகை, விளி, an address), என் உற்ற எவ்வம் – the sorrow that I attained, நினக்கு யான் உரைப்பனை – until I let you know about it, தங்கிற்று என் இன் உயிர் – my sweet life stayed with me, என்று மருவு ஊட்டி மாறியதன் கொண்டு – since he caused me to become passionate, எனக்கு மருவு உழிப்பட்டது என் நெஞ்சு – my heart got confused and it went to him,

எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்வழி – I will search for him everywhere and find out where he is, பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – you look at the earth with its vast raging ocean, திங்கள் உள் தோன்றி இருந்த குறு முயால் – the little hare that appears inside the moon (முயால் – விளி, an address), எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ – won’t you reveal the place where my lover is (காட்டீமோ – மோ முன்னிலையசை, an expletive of the second person), காட்டீயாய் ஆயின் – if you don’t show, கத நாய் கொளுவுவேன் – I will instigate dogs with rage to attack you, வேட்டுவர் உள்வழிச் செப்புவேன் – I will go and tell hunters about the place, ஆட்டி – causing distress, மதியொடு பாம்பு மடுப்பேன் – I will have a snake swallow the moon with you, மதி திரிந்த – intelligence distorted, என் அல்லல் தீராய் எனின் – if you do not end my distress, if you do not remove my sorrow,

என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப – as I tell you about my inner agony, மதியொடு வெள் மழை ஓடிப் புகுதி – you hide between white clouds along with the moon (புகுதி – முன்னிலை வினைமுற்று), சிறிது என்னைக் கண்ணோடினாய் போறி நீ – it appears that you are leaving with a little concern for me,

நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல் உள் ஓடுவேன் – I will run between the thāzhai trees with long leaves in the red/dry sand in the seashore grove, Pandanus odoratissimus, ஓடி ஒளிப்பேன் – I will run and hide, பொழில்தொறும் நாடுவேன் – I will go to all the groves and search, கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல் – thinking that the thief is there hiding (பாலன் – தன்மையன்), ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு – with the pretty flowers of adumpu, Ipomoea pes caprae, உதுக்காண் – look here, எம் கோதை புனைந்தவழி – this is where he made me a garland, உதுக்காண் – look here, சாஅய் மலர் காட்டி – showing the delicate flowers (சாஅய் – இசை நிறை அளபெடை), சால்பு இலான் – one with no honor, யாம் ஆடும் பாவை கொண்டு ஓடியுழி – the place where he ran away with the doll I played with, உதுக்காண் – look here, தொய்யில் பொறித்தவழி – this is where he made thoyyil designs on me, உதுக்காண் – look here, தையால் தேறு எனத் தேற்றி – he said ‘O young woman! Be assured’ and consoled, அறன் இல்லான் – the man who is not righteous, பைய முயங்கியுழி – where he embraced me gently (அறன் – அறம் என்பதன் போலி),

அளிய என் உள்ளத்து – in my pitiful mind, உயவுத் தேர் ஊர்ந்து – distress spreading, விளியா நோய் செய்து – gave me this disease that cannot be healed, இறந்த – left, அன்பு இல் அவனை – the man without kindness, தெளிய – to see clearly, விசும்பினும் ஞாலத்து அகத்தும் வளியே – wind that blows in the sky and the earth and everywhere,  எதிர்போம் – spreading, பல கதிர் ஞாயிற்று ஒளி உள்வழி எல்லாம் சென்று – going on all the paths where the rays of the sun go, முனிபு – hating, எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ – won’t you show me the man who took my virtue/beauty and hid (எம்மை – தன்மைப் பன்மை, first person plural, காட்டீமோ – மோ முன்னிலையசை, an expletive of the second person), காட்டாயேல் – if you do not show, மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் கண்ணீர் அழலால் தெளித்து – I will burn the entire earth fully with my sprinkled tears,

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – if you do not show me the place of the man who abandoned me without caring, பிறங்கு இரு முந்நீர் – O large roaring ocean, O bright large ocean, வெறு மணல் ஆகப் புறம் காலின் போக இறைப்பேன் – I will drain all your water with my feet and make you be fully sand, முயலின் – if I make an effort, அறம் புணை ஆகலும் உண்டு – righteousness will become my raft, துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின் – if you approach and bring back the one who abandoned me, நினக்கு ஒன்று பாடுவேன் – I will sing a song for you, என் நோய் உரைத்து – describing my affliction, புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் – when I united with my lover I was not aware,  எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – I hated days wanting them to be nights, எல்லிய காலை இரா முனிவேன் – I hated nights when it became dark (இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), யான் உற்ற அல்லல் களைவார் இலேன் – now there is nobody to remove my anguish,

ஓஒ – வருத்தக்குறிப்பு, கடலே – O ocean, தெற்றெனக் கண் உள்ளே தோன்ற – appearing clearly inside my eyes, இமை எடுத்துப் பற்றுவேன் என்று யான் விழிக்குங்கால் – when I wake up trying to seize him opening my eyelids (விழிக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), மற்றும் என் நெஞ்சத்து உள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் செய்யும்– he then runs into my heart and hides and causes sleepless distress to me, அறன் இல் அவன் – the man without righteousness (அறன் – அறம் என்பதன் போலி),

ஓஒ – வருத்தக்குறிப்பு, கடலே – O ocean, ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள் நீர் பெய்த காலே – when water is poured on the hot fire that grips the town, சினம் தணியும் – its rage will get reduced, மற்று இஃதோ ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ நீர் உள் புகினும் சுடும் – the passion fire lit by my lover with no kindness will be hot even if it enters into water (உறீஇய – அடைவித்த, உறீஇய – செய்யுளிசை அளபெடை),

ஓஒ – வருத்தக்குறிப்பு, கடலே – O ocean, எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று –  that I am a woman with no strength and crazy (எற்றம் – மனவலிமை, இலாட்டி – இல் ஆட்டி, ஆட்டி – பெண்) இந்நோய் – this disease,

உற்று அறியாதாரோ நகுக – let those who don’t know about it laugh, நயந்து – desiring, ஆங்கே – there, இற்றா அறியின் – had I known this, முயங்கலேன் – I would not have embraced, மற்று என்னை அற்றத்து இட்டு – causing me ruin, ஆற்று அறுத்தான் மார்பு – the chest of the man who reduced my strength (ஆற்று – ஆற்றல் ஆற்று என விகாரமாயிற்று),

ஆங்கு கடலொடு புலம்புவோள் – one who cries to the ocean (ஆங்கு – அசை நிலை, an expletive), கலங்கு அஞர் தீர – for confusing sorrow to end, கெடல் அரும் காதலர் துனைதர – her perfect lover came in haste,  பிணி நீங்கி – sorrow left, அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – about those who are righteous who live by justice (அறன் – அறம் என்பதன் போலி), திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம் – all the evil words created and uttered by wicked people, நல் அவை உள்படக் கெட்டாங்கு – like they are ruined in a fine court, இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – the pallor on her pretty forehead vanished (பசப்பே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 145

கண்டோரும் தலைவியும் சொன்னது

துனையுநர் விழைதக்க சிறப்பு போல் கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி
உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள்
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வாரப்
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி அழூஉம் அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும்
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனைக் காண
நகான்மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்

தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என்
கண்ணீர்க் கடலால் கனை துளி வீசாயோ
கொண்மூ குழீஇ முகந்து

நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம்
கண் பாயல் கொண்டு உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே
எல்லா கதிரும் பரப்பிப் பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின்
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன்

ஒல்லை எம் காதலர்க் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன் மன்னோ பனியொடு
மாலைப் பகை தாங்கி யான்
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி
ஒள் வளை ஓடத் துறந்து துயர் செய்த
கள்வன் பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி
பெருங்கடல் புல்லெனக் கானல் புலம்ப
இருங்கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற
விரிந்து இலங்கு வெண்ணிலா வீசும் பொழுதினான்
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான்
தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல் துஞ்சாது
வானும் நிலனும் திசையும் துழாவும் என்
ஆனா படர் மிக்க நெஞ்சு

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என்
ஆர் உயிர் எஞ்சும் மன் அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய் தொடி கொட்ப
அளி புறம் மாறி அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர் மருந்து

வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே
ஏமராது ஏமரா ஆறு

கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ

எனப் பாடி
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு
ஆர்வுற்ற பூசற்கு அறம் போல எய் தந்தார்
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு
மாயவன் மார்பில் திருப் போல் அவள் சேர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை உற்ற துயர்

Kalithokai 145

What the heroine and the onlookers said

Heroine to the onlookers:

All of you say about me,

“Love is more unstable than dreams that

occur in pitch darkness, which do not help one in

reality.  It is like the desirable splendor some seek

in haste.

A young woman sighs with great sorrow without

stopping, she asks others about her lover, her

carp-like, kohl-rimmed eyes drop streams of tears,

and her bright face appears like the moon amidst

clouds.  The woman with thick hair has abandoned

all her modesty, thinks about her lover who left her,

cries, laughs loudly like she has forgotten him, bitter

with distress.”

Do not laugh at me saying these!  Let me tell you

briefly, O people!  The actions of men who leave after

uniting with their women, who then return in haste

to shower their love, are like night and day, causing

confusion to those who are in love.  It will happen

to everybody who is in this world.

Heroine to the clouds

O clouds!  The forest, where the one who caused my

bangles to loosen has gone, is parched with heat.

What are you doing?  Won’t you absorb my tears that

are like an ocean, and rain down with thunder so that

he will not suffer in the heat.

Heroine to the onlookers:

O people of this town!  How do you feel it yourselves?

The pain caused by my lover who has left, robbing

me of my sleep, and my constant disease is like the

scorching heat.

Heroine to the sun:

O hot sun!  I am pleading with you to stay with all

your rays and not leave at the end of the day.  If you

leave, it will be rare if this dull and confusing evening

time will not kill me.  I don’t have the ability to protect

my life.

Will I see my lover at dawn as you bring him in

haste, crawling on the ocean?  Handling the pain of this

evening time, I will wait for him thinking that he is a

sweet man.

O sun!  Will my heart that hid from me and gone to the

man who is a thief who abandoned me, causing my bright

bangles to run, stay with him?  Considering my pain,

the ocean is lonely, the seashore grove is dull, and the

waterlilies in the vast backwaters have closed tightly.

When the bright moon spreads its beams, my heart

that suffers endlessly is unable to sleep, since the one who

I desire has given me pain, and it searches for him in the

sky, land and in all directions.

Heroine to the moon:

O moon in the sky that emits light!  My precious life,

that has become a great joke for those in town, is being

ruined.  Will you go and tell him?  The man without graces

has caused my bangles to whirl.  Others do not know the

cure for this terrible disease caused by him.

Heroine to the onlookers:

O townspeople who have worked to remove my affliction!

Even if you ridicule me, my lover does not disrespect me.

He appears in my eyes when I think about him, but I am

without protection.

Heroine to the clouds:

O pitch dark clouds!  You should drink water from the ocean,

and pour unceasing rain on me suffering with passion

fire from joint to joint, lit by the one who caused my bangles

to whirl together.

Onlooker:

She sang and beat her afflicted heart.  She longed for him,

asking, “Have you see my lover?”  Like justice to one who

struggles, he arrived, the one who caused sorrow and made

her lose her sleep not thinking about her.  She embraced him,

appearing like Thirumakal on Thirumāl’s chest.  The sorrow

of the woman with pretty jewels vanished like darkness that

vanishes when the sun arrives.

Notes:  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  எறியா – எறிந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  துனையுநர் விழைதக்க சிறப்பு போல் – like the desirable splendor sought by some in haste, கண்டார்க்கு – to those who are seen, நனவினுள் உதவாது – not helping in reality, நள்ளிருள் – pitch darkness, வேறு ஆகும் – becomes different, கனவின் நிலையின்றால் – more unstable than dreams (நிலையின்றால் – நிலையின்று + ஆல், ஆல் – அசைநிலை), காமம் – passion, love, ஒருத்தி உயிர்க்கும் – a woman sighs, உசாஅம் – she asks, உலம்வரும் – with great sorrow (உசாஅம் – இசைநிறை அளபெடை), ஓவாள் – she does not stop, கயல் புரை உண்கண் – carp-fish-like kohl-lined eyes, Cyprinus fimbriatus, அரிப்ப அரி வாரப்பெயல் – tears stream down, சேர் மதி போல வாள் முகம் தோன்ற – her bright face appearing like the moon that reached (the clouds), பல ஒலி கூந்தலாள் – the woman with thick hair, பண்பு எல்லாம் – all good qualities,  துய்த்து – enjoying, துறந்தானை உள்ளி – thinking about the one who abandoned, அழூஉம் – she cries (இன்னிசை அளபெடை), அவனை மறந்தாள் போல் ஆலி நகூஉம் – she laughs loudly like she forgot him (நகூஉம் – இன்னிசை அளபெடை), மருளும் – she is confused, சிறந்த தன் நாணும் நலனும் நினையாது – not thinking about her great modesty or virtue, காமம் முனைஇயாள் அலந்தாள் என்று – that she is a woman who is bitter with love who is suffering (முனைஇயாள் – சொல்லிசை அளபெடை), எனைக் காண நகான்மின் – do not laugh on seeing me (எனை – என்னை, இடைக்குறை), நகான்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), கூறுவேன் மாக்காள் – let me tell you O people (மாக்காள் – விளி, an address), மிகாஅது – a little bit (இசை நிறை அளபெடை), மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – leave causing women who united with them to suffer greatly in agony, நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – those who went to the vast wasteland coming fast and being kind, ஊழ் செய்து – happens forever, இரவும் பகலும் போல் வேறு ஆகி – different like night and day, வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் – the confusion that appears in those who fall in love, ஞாலத்துள் வாழ்வார்கட்கு எல்லாம் வரும் – it will come to all those who live in this world,

தாழ்பு – lowered, submitted, துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் – the forest where the man who caused my bangles to loosen went, இறந்து – passing, எரி – fire, நையாமல் – not suffering, பாஅய் – spread (இசை நிறை அளபெடை), முழங்கி – roaring, வறந்து – parched, என்னை செய்தியோ – what are you doing, வானம் – cloud, சிறந்த என் கண்ணீர்க் கடலால் – with my abundant ocean of tears, கனை துளி வீசாயோ – won’t you drop heavy showers, கொண்மூ குழீஇ –  with your clouds together (குழீஇ – சொல்லிசை அளபெடை), முகந்து – absorbing,

நுமக்கு எவன் போலுமோ – how is it to you,  ஊரீர் –  O townspeople, எமக்கும் எம் கண் பாயல் கொண்டு – my eyes are unable to sleep, உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த – given by my lover who does not think about me, என் தொடர் நோய் – my constant disease, வேது கொள்வது போலும் – is like attaining heat,

கடும் பகல் – hot daytime, ஞாயிறே – O sun, எல்லா கதிரும் பரப்பி – spreading all your rays, பகலொடு செல்லாது நின்றீயல் வேண்டுவல் – I am pleading with you to stay and not go with the day, நீ செல்லின் – if you go, புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் கொல்லாது போதல் அரிதால் – since it will be rare if this dull and confusing evening time does not come and kill me, அதனொடு யான் செல்லாது நிற்றல் இலேன்  – I don’t have the ability to face it without going,

ஒல்லை எம் காதலர்க் கொண்டு – rapidly bringing my lover, கடல் ஊர்ந்து – crawling on the ocean, காலை நாள் போதரின் காண்குவேன் மன்னோ – I can see him if you bring him in the early morning (காலை நாள் – நாட்காலை, early morning, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives), பனியொடு மாலைப் பகை தாங்கி – bearing the anger of the cold evening, யான் – me,  இனியன் என்று – thinking that he is sweet, ஓம்படுப்பல் – I will protect myself, ஞாயிறு – O sun, இனி – now, ஒள் வளை ஓட – causing my bright bangles to run down, துறந்து துயர் செய்த கள்வன் பால் – to the thief who abandoned me and caused sorrow, பட்டன்று ஒளித்து – going and hiding, என்னை – me, உள்ளி – thinking about it, பெரும் கடல் புல்லென – the large ocean dull, கானல் புலம்ப – the seashore grove is lonely, இருங்கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற – the waterlilies in the huge/dark backwaters appeared to have closed tightly, விரிந்து இலங்கு வெண்ணிலா வீசும் பொழுதினான் – when the bright white moon spreads its light, யான் வேண்டு ஒருவன் – the man I desire, என் அல்லல் உறீஇயான் – the man who caused me distress (உறீஇயான் – அடைவித்தவன், சொல்லிசை அளபெடை), தான் வேண்டுபவரோடு – with the desired man, துஞ்சும் கொல் – will it sleep, துஞ்சாது – without sleeping, வானும் நிலனும் திசையும் துழாவும் – it searches in the sky and land and in all directions (நிலன் – நிலம் என்பதன் போலி), என் ஆனா படர் மிக்க நெஞ்சு – my heart which suffers endlessly,

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி – have become a great joke for those in town, என் ஆர் உயிர் எஞ்சும் – my precious life is being ruined, மன் – அசைநிலை, an expletive, அங்கு நீ சென்றீ – you must go there (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்), நிலவு உமிழ் வான் திங்காள் – O white moon in the sky that emits light, O moon in the sky that emits light, ஆய் தொடி கொட்ப – as my beautiful bangles whirl, அளி புறம் மாறி – changed from kindness, அருளான் துறந்த அக் காதலன் – my lover who has abandoned without grace, செய்த கலக்குறு நோய்க்கு – for the distressing disease that he has caused, ஏதிலார் எல்லாரும் – all the others, தேற்றர் மருந்து – they do not tell clearly about the medicine, they do not know about the cure,

வினைக் கொண்டு – with actions, என் காம நோய் நீக்கிய – removed my love disease, ஊரீர் – you townspeople, எனைத்தானும் எள்ளினும் – even if you ridicule me, even if you tease me, எள்ளலன் கேள்வன் – my lover does not disrespect me, நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் – even when I think about him he appears in my eyes, அனைத்தற்கே – for that, ஏமராது ஏமரா ஆறு – I am without protection,

கனை இருள் வானம் – pitch dark clouds, கடல் முகந்து – drink from the ocean, என் மேல் உறையொடு நின்றீயல் வேண்டும் – you should pour rain on me, ஒருங்கே நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் – because of the sorrow caused by the one who made my many bangles whirl together, இறை இறை பொத்திற்றுத் தீ  – the fire that has been lit from joint to joint,

எனப் பாடி – singing thus, நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி  – she suffered and beat her diseased heart, யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – the one who asked ‘have you all seen my lover’, ஆர்வுற்ற பூசற்கு அறம் போல – like justice for the one who is distressed, எய் தந்தார் பாயல் கொண்டு – the man who gave her sorrow and took away her sleep, உள்ளாதவரை – the man who did not think (ஐ – சாரியை), வரக் கண்டு – on seeing him arrive, மாயவன் மார்பில் திருப் போல் – like Thirumakal on Thirumāl’s chest, அவள் சேர – she joined him, ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை உற்ற துயர் – the sorrow of my woman with pretty jewels vanished like darkness that vanishes before the sun (ஆய் இழை – (அன்மொழித்தொகை)

கலித்தொகை 146

கண்டோரும் தலைவியும் சொன்னது

கண்டோர்:

உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர
அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்
துன்னி அகலத் துறந்த அணியளாய்
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு
பேர் அமர் உண்கண் நிறை மல்க அந்நீர் தன்
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர
தேர்வழி நின்று தெருமரும் ஆய் இழை
கூறுப கேளாமோ சென்று

தலைவி:

எல் இழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது
கேட்டீமின் எல்லீரும் வந்து
வறம் தெற மாற்றிய வானமும் போலும்
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து
என் மேல் நிலைஇய நோய்

நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
தக்கவிர் போலும் இழந்திலேன் மன்னோ
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்
அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன
உக்காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச்
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு யான்
நக்கது பல் மாண் நினைந்து

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்
புரை தவ கூறிக் கொடுமை நுவல்வீர்
வரைபவன் என்னின் அகலான் அவனைத்
திரைதரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்
உரை கேட்பு உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்
யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று

மருள் கூர் பிணை போல் மயங்க வெந்நோய் செய்யும்
மாலையும் வந்து மயங்கி எரி நுதி
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர்த் துயிற்றும்
யாமம் நீ துஞ்சலை மன்
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின்
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல்
ஓடிச் சுழல்வது மன்

பேர் ஊர் மறுகில் பெருந்துயில் சான்றீரே
நீரைச் செறுத்து நிறைவுற ஓம்புமின்
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
போலாது என் மெய் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே
வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்திப்
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச்
செல்வேன் விழுமம் உழந்து

கண்டோர்:

என ஆங்கு பாட அருள் உற்று
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு மற்றுத் தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்
அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே

Kalithokai 146

What the onlookers and the heroine said

Onlooker:

Love is more unkindly than an enraged king

who utters cruel words and causes his ministers

who lifted themselves to fame to tremble.

This young woman, with anguish, who

searches for her lover who gave her faultless

pleasures on a bed with soft goose feathers and

left her, has abandoned her ornaments, and

does not feel shame or fullness. Her arms have

thinned, and her eyes shed tears that stream down

her sharp teeth to her pointed breasts.  Let us go and

hear what she has to say!

Heroine:

You ask me with concern, “Woman of lustrous jewels!

Have you forgotten your shyness, having parted from

your lover who united with you?”

Come and listen to this everybody!  Like the clouds

that cause the earth to be parched, the fine man left

hurting me.  Like an overflowing flood, this passion

disease has increased greatly, ruining me.

You say, like those with wisdom, that I have lost my

beauty.  I have not lost it.  My shyness, beauty and mind

have gone to him.  I think of the many moments with him.

He said, “Look here!  Look at the red male crab with pretty

spots like chariot wheels that unites with its female,

their bodies appearing like the springs of life.

Think about me loving you”.

You speak ill of my lover who is not caught up in this

disease that does not have an end.  You utter harsh words

about him.  The man who united with me will not go away.

I have requested the sun with myriads of rays to look for

him all over the world surrounded by ocean with waves.

I will go and look for him wherever there is talk of him.

How can the man who lost his esteem hide from me?

Causing me to struggle with confusion, like a panicked doe,

evening that gives affliction came, and night that hurts me

like a flame tip has arrived.  I will go and tell other women

about my distress.  Night that makes people sleep will not

sleep if it hears of my anguish.  If I talk about my ripe

disease, the moon’s rays will become dull and it will run and

swirl like it is trembling, not letting those on earth sleep.

O wise people who sleep well in your houses on the streets of

a large town!  Fill me up with water!  Even heavy rains cannot

end the disease that heats up my body.  If he is here, my heart

worries that he’ll leave.  When he leaves, my body is distressed.

I am unable to bear my sorrow.

Pain is within me like a fort that cannot be destroyed, and I

move around in agony like a created mechanical doll.

Onlooker:

As she sang all these, like a cloud in the parched sky that

showers heavy rain to a thirsting skylark in great distress, he

came with kindness.  She embraced the chest of her handsome

man, and the sorrow of the young woman with lovely jewels ended.

Notes:  308 – நற்றிணை பொறி அழி பாவையின் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல சித்திரத் தொழிலமைந்த இயங்கும் இயந்திர மற்றழிந்த பாவை, விசைக் கயிறு அறுபட்ட நல்ல வேலைப்பாடமைந்த பாவை.   முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை – those who lifted themselves to very great fame, ministers who serve the king (செல – இடைக்குறை, உயர்ந்து ஓங்கி – ஒருபொருட் பன்மொழி), ஒரு நிலையே வரை நில்லா விழுமம் உறீஇ – causing limitless sorrow at one point (உறீஇ – சொல்லிசை அளபெடை), நடுக்கு உரைத்து – uttering words that cause trembling, தெறல் மாலை அரைசினும் – more than the king with angry nature, அன்பு இன்று ஆம், – having no kindness (இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), காமம் – love, புரை தீர – without fault, அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன் – one who gave endless pleasures on a delicate goose feather bed, துன்னி – close, near, அகல – as he left, துறந்த அணியளாய் – the young woman who abandoned her ornaments, நாணும் நிறையும் உணர்கல்லாள் – she does not feel embarrassment and fullness, தோள் ஞெகிழ்பு – arms slimmed (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), பேர் அமர் உண்கண் – huge calm/warring kohl-lined eyes, நிறை மல்க – tears filled, அந்நீர் தன் கூர் எயிறு ஆடி – tears falling on her sharp teeth, குவி முலை மேல் வார்தர – tears dropping on her pointed breasts, தேர் வழி நின்று – searching for him, standing on the chariot path, தெருமரும் ஆய் இழை கூறுப கேளாமோ சென்று – can we go and listen to what the distressed young woman with pretty/chosen jewels says (ஆய் இழை – அன்மொழித்தொகை),

எல் இழாய் – O one with lustrous jewels, எற்றி – boldly, வரைந்தானை நாணும் மறந்தாள் என்று  – whether I have forgotten shyness having parted from my lover I united with, உற்றனிர் போல வினவுதிர் – you ask like you are concerned, மற்று இது கேட்டீமின் எல்லீரும் வந்து – come and listen to this everybody, வறம் தெற மாற்றிய வானமும் போலும் – like the clouds that cause the earth to become parched, நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – like a flood that overflows and kills me, சிறந்தவன் தூ அற நீப்ப – as the fine man left, பிறங்கி – increasing, வந்து என் மேல் நிலைஇய நோய் – this disease has come upon me,

நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் தக்கவிர் போலும் – you say like those with wisdom that I have lost my beauty/virtue after uniting, இழந்திலேன் – I have not lost, மன்னோ  – an asai, an expletive, மிக்க என் நாணும் – my abundant shyness, நலனும் என் உள்ளமும் அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன –  my beauty and my mind have gone with him to his place, உக்காண் – look here, இஃதோ – this, உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – body as support for life, செக்கர் – red, அம் புள்ளி – pretty spots, திகிரி – chariot wheels, அலவனொடு – with crabs, யான் நக்கது – my laughter, பல் மாண் நினைந்து – thinking of many nice things,

கரை காணா நோயுள் அழுந்தாதவனை – the man who is not caught up in this disease without end, புரை – greatness, தவ – reducing, கூறிக் கொடுமை நுவல்வீர் – you who are uttering harsh words, வரைபவன் – the man who united with me, என்னின் அகலான் – he will not move away from me, அவனைத் திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் – I have requested the sun with myriads of rays to look for him all over the world surrounded with oceans with waves (வளாஅகம் – இசைநிறை அளபெடை), யானும் உரை கேட்பு உழி எல்லாம் செல்வேன் – I will go the places where I hear about him, புரை தீர்ந்தான் யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று – how can he who has lost his esteem hide from me (கொலோ – கொல், ஓ அசைநிலைகள்),

மருள் கூர் பிணை போல் – like a very panicked doe, மயங்க – confused, வெந்நோய் செய்யும் மாலையும் வந்து மயங்கி – evening that causes painful affliction came, எரி நுதி – flame tip, யாமம் தலைவந்தன்று – night came, ஆயின் அதற்கு என் நோய் பாடுவேன் – I will sing to it my disease, பல்லாருள் சென்று யான் உற்ற எவ்வம் உரைப்பின் – I will go to many people and talk about my sorrow, பலர்த் துயிற்றும் யாமம் – night that causes many to sleep, நீ துஞ்சலை – you are not sleeping, மன் – அசைநிலை, an expletive, எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது – the accepting world not getting enough sleep, ஆங்கண் – there, முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின் – if I talk about the ripe distress disease that I have, கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் ஓடிச் சுழல்வது – the moon’s rays becoming dull it will run and swirl like it is trembling, மன் – அசைநிலை, an expletive,

பேர் ஊர் மறுகில் – in the streets of the big town, பெரும் துயில் சான்றீரே – O wise ones who sleep well, நீரைச் செறுத்து நிறைவுற ஓம்புமின் – protect me filling me up with water (ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), கார் தலைக்கொண்டு பொழியினும் – even if the rain pours heavily on me, தீர்வது போலாது – it seems that it will not end, என் மெய் கனலும் நோய் – the disease that heats my body, இருப்பினும் – when he is here, நெஞ்சம் கனலும் – my heart burns, செலினே – if he goes, வருத்துறும் யாக்கை – my body attains sorrow, வருந்துதல் ஆற்றேன் – I am unable to bear my sorrow, அருப்பம் உடைத்து – it has a fort, என்னுள் எவ்வம் பொருத்தி – with sorry within me, பொறி செய் புனை பாவை போல – like a doll made with joints, like a mechanical doll that is made, வறிது உயங்கிச் செல்வேன் – I move around with distress, விழுமம் உழந்து – caught up in agony,

என ஆங்கு பாட – as she sang these, அருள் உற்று – with kindness, வறம் கூர் வானத்து – from the very dry sky, வள் உறைக்கு – for heavy rain, அலமரும் புள்ளிற்கு – to a struggling skylark, அது பொழிந்தாஅங்கு – like how a cloud rained, மற்றுத் தன் நல் எழில் மார்பன் முயங்கலின் – when she embraced the chest of her handsome man, அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே – the sorrow of the young woman with pretty jewels ended (ஆய் இழை – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound)

கலித்தொகை 147

கண்டோரும் தலைவியும் சொன்னது

கண்டோர்:

ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது கொலோ சீறடிச்
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள் மன்னோ இனி மன்னும்
புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன்
தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல் தெருவில் பட்டு
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்
ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ

தலைவி:

இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரே ஓஒ
அமையும் தவறு இலீர் மன் கொலோ நகையின்
மிக்க தன் காமமும் ஒன்று என்ப அம் மா
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார்
மதி மருள நீத்தக்கடை

என்னையே மூசிக் கதுமென நோக்கன்மின் வந்து
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர்
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை
விலை வளம் மாற அறியாது ஒருவன்
வலை அகப்பட்டது என் நெஞ்சு

வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
கொலைவனைக் காணேன் கொல் யான்
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே    எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல்
வானத்து எவன் செய்தி நீ

ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அவ்வழித்
தேரை தினப்படல் ஓம்பு

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப் பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே நீ

அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும்
பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான் கொல்லோ
உறாஅத் தகை செய்து இவ் ஊர் உள்ளான் கொல்லோ
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனைப்
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டிச்
சுறாஅக் கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலைக் கண் கொண்டீ
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று
அறாஅ தணிக இந்நோய்
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு

கையாறு செய்தானைக் காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன்
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல்
ஒய் எனப் பூசல் இடுவேன் மன் யான் அவனை
மெய் ஆகக் கள்வனோ என்று

வினவன்மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும்
மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு

கனவினான் காணிய கண்படா ஆயின்
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின்
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன்
கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு

கண்டோர்:

என ஆங்கு
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள்
அன்னையோ எல்லீரும் காண்மின் மடவரல்
மெல் நடை பேடை துனை தரத் தன் சேர்ந்த
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்ணுதல்
காதலன் மன்ற அவனை வரக் கண்டு ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி
தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக
நல் எழில் மார்பன் அகத்து

Kalithokai 147

What the onlookers said

Onlooker:

Hasn’t love become different, like the

giddiness of those who drink liquor, whose

words are unjust and acts are not righteous?

She walks with jingling anklets on her small

feet.  Great sorrow gripping her, she has lost

her beauty.  With looks that appear to be

touched by spear tips, she melts in the sun.

She goes on the street like she lost her lover who

enjoyed her arms.  She has forgone eating.

Without modesty that is dearer than her life,

she laughs a lot.  Losing her feminine nature,

she cries and cries.

My friend!  Let us go to the young woman with

a bright forehead and listen to her anguish!

Heroine to onlookers:

Who are they?  O!  O!  Those of you who

have seen one who has lost her mind!

Has nothing wrong ever happened to you?

They say that even love that is subject to

laughter is love.  Women get confused

and their great beauty gets ruined when

abandoned,

like flowers that are ruined after bees drink

their honey and fly away.

Do not swarm around and look at me.  My

heart got caught in the net of a man who does

not know the worth of my eyes, eyebrows, arms,

waist and cloud-like, low hanging hair.

May you live long, friends!  He convinced me with

his promises, embraced me holding my breasts,

and then abandoned me.  I will ot see that

murderous man again.  Even if I find him, you

will now know my happy state.

Heroine to the sun:

O sun!  With the help of your rays, won’t you

show where my lover is?  If you don’t, of what

use are you in the sky?  You appear in water like

the moon in the sky that dispels pitch darkness.

Protect yourself from the toads there that will

eat you as food!

O sun!  For me to catch the one who left without

kindness, do not fold your rays and end the day.

He held my wrist with fine hair and whirling bangles

that don’t slip down, and united with me.  Did he go

to the forest with buffaloes that are not milked?  Or,

did he do something and hid himself right here in

this town?  I will accept him without being upset.

If I don’t get him, I will be hurt.

Heroine to Death:

You are a just ruler who does not take sides.

You write in your palm book about Kāman with a

shark flag who brought my lover to me. Do not

punish him.  O unfailing king!  Your evening has

arrived.  Let this non-stopping disease be reduced!

Heroine to Kāman:

O Kāman!  Does your arrow cause the same pain to

all women?

Heroine to onlookers:

If I see the man who caused me distress, I will look

at him gently with teary eyes.  I will hold on to his

low-hanging clothing.  Doubting our relationship,

if he tries to leave, I will scream loudly.

O people of this town!  Do not ask me whether he is

the thief who stole my heart.  The relationship with

him has given sleeplessness to my eyes and I am

bound with him for life, giddy like one who drinks

liquor everyday from a large earthen pot.

Heroine to the sun:

If I don’t see him in my dream because my eyes don’t

sleep, O sun, and if you don’t show him in flesh, for

him to ride a palmyra stem to come to me, I will hold

on to the legs of Kāman and plead for his arrow.

Onlooker:

And there, the young woman who pined and shed

tears from her eyes, whose arms thinned and bangles

loosened, O everybody come and see this, the young

woman with a bright forehead who had forgotten

laughter and stood shy, her head bent down, forgot

all the anguish and embraced the chest of her

handsome lover, happy like the rapid union of a white

gander with its female of slow walk.

Notes:  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  பறாஅப் பருந்தின் (37) – பறக்காத பருந்தாகிய வளையல்களில், வெளிப்படை, on the bangles which have the same Thamizh word for eagle.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஆறு அல்ல மொழி – words that are not right, தோற்றி – create, அற வினை கலக்கிய – ruined just acts, தேறு கள் – clear liquor, நறவு உண்டார் மயக்கம் போல் – like the giddiness of those who drank liquor (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), காமம் வேறு ஒரு பாற்று ஆனது கொலோ –  hasn’t love has become different, சீறடிச் சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள் – she is one who walks as the anklets on her small feet jingle, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives,  இனி மன்னும் புலம்பு ஊர – with greatly spreading loneliness, with greatly spreading sorrow, புல்லென்ற வனப்பினாள் – she became dull and lost her beauty, விலங்கு ஆக – hindering, வேல் நுதி உற நோக்கி – with looks that appear to have been touched by a spear tip, வெயில் உற உருகும் – she melts in the sun, she is sad not caring whether there is sun, தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல் – like she lost her lover who enjoyed her beautiful arms, தெருவில் பட்டு – went on the street, ஊண் யாதும் இலள் ஆகி – she is without food, உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலள் ஆகி – without great modesty which is better than her life, நகுதலும் நகூஉம் – she laughs a lot (நகூஉம் – இன்னிசை அளபெடை), ஆங்கே பெண்மையும் இலள் ஆகி – without feminine nature, அழுதலும் அழூஉம் – she cries and cries (அழூஉம் – இன்னிசை அளபெடை), தோழி – my friend, ஓர் ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ – can we go close to the woman with a bright forehead and listen to what she has attained (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை),

இவர் யாவர் – who are they, ஏமுற்றார் கண்டீரே – O those of you who have seen the person who is crazy, ஓஒ – இரக்கக்குறிப்பு, அமையும் தவறு இலீர் மன் கொலோ – has nothing wrong happened to you, have you not made a mistake like this (மன் – அசைநிலை, an expletive), நகையின் மிக்க தன் காமமும் ஒன்று என்ப – they say that love that causes laughter is also one kind of love, அம் மா புது நலம் பூ வாடி அற்று – their lovely beauty faded like flowers that have been abandoned by bees that drink the honey and move away, தாம் வீழ்வார் – those who fall in love, மதி மருள – their intelligence confused, நீத்தக்கடை  – when abandoned,

என்னையே மூசி – swarming around me, கதுமென – rapidly (கதுமென – விரைவுக்குறிப்பு), நோக்கன்மின் வந்து – do not come and look at me, கலைஇய கண் – cloudy eyes (கலைஇய – செய்யுளிசை அளபெடை), புருவம் – eyebrows, தோள் – arms, நுசுப்பு – waist, ஏஎர் – beautiful (இன்னிசை அளபெடை), சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் –  dark hair that hangs low like few clouds, அவற்றை விலை வளம் மாற அறியாது – not knowing well to sell for the apt price, ஒருவன் வலை அகப்பட்டது என் நெஞ்சு – my heart got caught in the net of a man,

வாழிய கேளிர் – may you live long O friends, பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் – he convinced me with many promises, என்னை முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த கொலைவனைக் காணேன் கொல் – I will not see the murderous man who abandoned me after embracing me holding my breasts (கொல் – அசைநிலை), யான் காணினும் – even if I found him, என்னை அறிதிர் – you will not know about me (நச்சினார்க்கினியர் உரை – அறிதிர் என்பது அறியமாட்டீர், இகழ்ச்சிக் குறிப்பு), கதிர் பற்றி – with the help of your rays, ஆங்கு – there, எதிர் நோக்குவன் – I will look, (நச்சினார்க்கினியர் உரை – அவர் மறுமொழி கூறாமையின் ஞாயிற்றை நோக்கி), ஞாயிறே  – O sun,  எம் கேள்வன் யாங்கு உளன் ஆயினும் – wherever my lover is, காட்டீமோ – won’t you show him (மோ முன்னிலையசை, an expletive of the second person), காட்டாயேல் – if you do not show, வானத்து எவன் செய்தி நீ – what will you do in the sky, ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – like the moon that removes pitch darkness in the sky, நீர் உள்ளும் தோன்றுதி – you appear in the water, ஞாயிறே  – O sun, அவ்வழித் தேரை தினப்படல் ஓம்பு  – protect yourself from toads that will eat you there (தின தின்ன என்பதன் விகாரம்),

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – for me to seek and catch the one who left without showering kindness, பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப் பட்டீமோ – do not fold your many rays and end the day, செல் கதிர் ஞாயிறே – O sun that moves! நீ  – you,

அறாஅல் இன்று – without falling, without slipping down (அறா – நீங்காத,, அறாஅல் – நீங்குதல், இசை நிறை அளபெடை, இன்று – இல்லாத), அரி முன்கைக் கொட்கும்  – whirling on my wrists with fine hair (அரி – மென்மையான, கொட்கும் – சுழலும்), பறாஅப் பருந்தின்கண் – on the bangles, on the bangles which are not the eagles that fly (பறாஅ – இசைநிறை அளபெடை, பறாஅப் பருந்து – வெளிப்படை), பற்றிப் புணர்ந்தான் – he held and united with me, கறாஅ எருமைய காடு இறந்தான் கொல்லோ – did he go to the forest with buffaloes that have not been milked (கறாஅ – இசை நிறை அளபெடை), உறாஅத் தகை செய்து இவ் ஊர் உள்ளான் கொல்லோ – is he doing something not suitable in this town (உறாஅ – இசை நிறை அளபெடை), செறாஅது உளன் ஆயின் கொள்வேன் – I will accept without getting upset (செறாஅது – இசை நிறை அளபெடை), அவனைப் பெறாஅது யான் நோவேன் – if I don’t get him I will be hurt (பெறாஅது – இசை நிறை அளபெடை), அவனை என் காட்டி – showing him to me, சுறாஅக் கொடியான் கொடுமையை – the cruelty of Kāman with a shark flag, நீயும் உறாஅ அரைச – you are a ruler who does not take sides (உறாஅ – இசை நிறை அளபெடை), நின் ஓலைக் கண் கொண்டீ – you write your palm note (கொண்டீ – முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்), மறாஅ – unfailing (இசை நிறை அளபெடை), அரைச – O ruler (விளி, an address), நின் மாலையும் வந்தன்று – your evening has come, அறாஅ – non stopping (அறாஅ – இசை நிறை அளபெடை), தணிக – may it be reduced, இந்நோய் – this disease, தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ – is the sorrow caused in their hearts the same for all women because of one man, காம – O Kāman, நின் அம்பு – your arrow,

கையாறு செய்தானைக் காணின் கலுழ் கண்ணால் பையென நோக்குவேன் – if I see slowly the one who caused me problems I’ll look at him with my teary eyes, தாழ் தானை பற்றுவேன் – I will hold his low flowing garment, ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – if he tries to leave me with doubts, ஒய் எனப் பூசல் இடுவேன் – I will scream loudly, மன் – அசை நிலை, an expletive, யான் அவனை மெய் ஆகக் கள்வனோ என்று வினவன்மின் – do not ask me if he is really the thief who stole my heart (வினவன்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), ஊரவிர் – O townspeople (விளி, an address), என்னை – me, எஞ்ஞான்றும் – every day, மடாஅ நறவு உண்டார் போல – like one who drank liquor from a large earthen pot (மடாஅ – இசைநிறை அளபெடை, நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), மருள – confused, விடாஅது உயிரொடு கூடிற்று – without leaving mixed with my life (விடாஅது – இசைநிறை அளபெடை), என் உண்கண் படாஅமை செய்தான் தொடர்பு – the relationship with the one who caused my kohl-lines eyes unable to sleep (படாஅமை – இசை நிறை அளபெடை),

கனவினான் காணிய கண்படா ஆயின்- if I don’t see him in my dreams because my eyes don’t sleep,  நனவினான் –  in reality, ஞாயிறே – O sun (விளி, an address), காட்டாய் நீ ஆயின் – if you don’t show him, பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர – for him to come on a palmyra stem horse, காமன் கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு – I will hold Kāman’s feet and plead for his arrow,

என ஆங்கு  – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – the one who pined with tears in her eyes, தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – her arms became slim and her bangles became loose (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), அன்னையோ, O mother! (மகிழ்ச்சிக்குறிப்பு), எல்லீரும் காண்மின் –  everybody see this (காண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மடவரல் – naïve woman, delicate woman (அன்மொழித்தொகை), மெல் நடை பேடை துனை தரத் தன் சேர்ந்த அன்ன – like uniting with its female of delicate walk, வான் சேவல் – white gander, புணர்ச்சி போல் – like the union, ஒண்ணுதல் காதலன் மன்ற அவனை வரக் கண்டு ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் – the young woman with a bright forehead forgot all her sorrow on seeing her appearing lover (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, மன்ற – அசைச்சொல்), பேதை நகை ஒழிந்து – the naïve woman has abandoned laughter, நாணு மெய் நிற்ப – stood there shy, இறைஞ்சி – her head bent down, தகை ஆகத் தையலாள் – the esteemed young woman, the beautiful young woman, சேர்ந்தாள் நகை ஆக – she joined happily, நல் எழில் மார்பன் அகத்து – with the chest of her fine handsome man

கலித்தொகை 148

கண்டோரும் தலைவியும் சொன்னது

தலைவி:

தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு
வல்லவன் கூறிய வினை தலைவைத்தான் போல்
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெடப் பெயர
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர்த் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப
இல்லவர் ஒழுக்கம் போல் இருங்கழி மலர் கூம்ப
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை

மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய் மன்
அன்புற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ நினக்கு

மாலை நீ
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய் மன்
நலங்கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு

மாலை நீ
எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய் துணை அல்லை
பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்தவர்க்குப் புணை ஆகித்
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு

கண்டோர்:

என ஆங்கு
ஆய் இழை மடவரல் அவலம் அகல
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போலப்
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே

Kalithokai 148

What the heroine and the onlookers said

Heroine:

Performing its duty in this ancient world,

the sun, as though obeying the command of

Kāman, reached the mountains and folded its

rays, ruining the benefit of eyes.  Like the face

of one who ruins evil, the moon rose from the

ocean with huge waves and swept away

darkness.  Like householders,

the flowers in the vast backwaters have

closed.  My life will leave, as this confusing,

painful evening has arrived.

O evening!  You helped joyous lovers with desire.

Is it fitting for you to cause distress to those

suffering in sorrow, since their beloved ones

deserted them as they cried?

O evening!  You heated the passion of those who

united.  Is it fitting for you to be terror to those

who are writhing in pain, deserted by their

beloved who took away their virtue?

O evening!  You have not brought back my lover to

me.  You are not an ally to those separated to

whom you give distress.  You are a raft to those

united.  Other than these imperfect acts, do you

do anything?

Onlookers:

And there, for the anguish of the naïve woman with

pretty jewels to be removed, like the sun that removes

the spread darkness, her lover returned from afar,

seizing land and finishing his work.

Notes:  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி – performing its duty in this ancient world, ஞாயிறு – the sun, வல்லவன் கூறிய வினை தலைவைத்தான் போல் – as though bearing the command of Kāman, on his head, as though obeying the command of Kāman, கல் அடைபு கதிர் ஊன்றி – reached the mountains and folded its rays, கண் பயம் கெடப் பெயர – left ruining the benefit of eyes, அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல – like the face of the gracious one who ruins evil, மல்லல் நீர்த் திரை – huge ocean waves, ஊர்பு மால் இருள் மதி சீப்ப – the moon arose sweeping away darkness, இல்லவர் ஒழுக்கம் போல் – like the behavior of householders, like those who do not have much (‘like householders who don’t have much’, according to commentators – they have interpreted the word இல்லவர் twice with both possible meanings), இருங்கழி மலர் கூம்ப – as flowers in the backwaters close, செல்லும் என் உயிர் புறத்து – on the side of my life that will leave, இறுத்தந்த மருள் மாலை – pain causing confusing evening time,

மாலை – O evening, நீ இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய் – you helped lovers with desire, மன் – an asai, expletive, அன்புற்றார் அழ நீத்த – beloved ones leaving as they cry, அல்லலுள் கலங்கிய துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ நினக்கு – is it fitting for you to cause sorrow to those who are distressed and suffering,

மாலை – O evening, நீ கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய் – you heated the passion of those who united, மன் – அசைநிலை, an expletive, நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த – as their beloved ones left rapidly taking their virtue/beauty not showering graces, புலம்பின் கண் அலந்தவர்க்கு – to those who writhe in pain, to those who suffer in loneliness, அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – is it fitting for you to be terror,

மாலை – O evening, நீ எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய் – you have not brought my lover to me, துணை அல்லை பிரிந்தவர்க்கு – not an ally to those separated, நோய் ஆகி – giving disease, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி – a raft to those who united, திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – do you not have anything other than doing these imperfect things,

என ஆங்கு – and so there, ஆய் இழை மடவரல் அவலம் அகல – for the sorrow of the naïve young woman with pretty jewels to be removed (ஆய் இழை – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல – like the sun that removed spread darkness, போய் அவர் மண் வௌவி வந்தனர் – he returned seizing land, சேய் உறை காதலர் – lover who lived far away, செய் வினை முடித்தே – after finishing his work

கலித்தொகை 149

தோழி தலைவனிடம் சொன்னது

நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்
கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப கேள்

கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்

ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்துக் காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினைவரு பருவரல் போல
துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

Kalithokai 149

What the heroine’s friend said to the hero

O lord of the shores with mighty waves

that are like a king’s rising army,

where rows of boats appear like elephants,

the roars of the waves sound like parai drums,

and flocks of shore birds with pretty wings are

like the warriors!  Listen!

If one does not share his food with his teacher

whose heart hurts, like the wealth of one who

has not learned well, he will be ruined alone.

If a man does not help those who helped him in

his poverty, and acquires  bountiful wealth,

letting the hearts of his relatives suffer, getting

blame that will not go away even after his death,

like families without effort, he will be ruined

alone.

If a man makes promises and does not keep them

in his deeds, even if he bears a sharp sword,

the blame will not leave him.

As matters are such, O lord, think about the

situation.  She is suffering greatly like those who

are trapped in a fort surrounded by an enraged

king.

Notes:  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  நிரை திமில் களிறு ஆக – the rows of boats as male elephants, திரை ஒலி பறை ஆக – the sounds of waves as parai drums, கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக – the bird flocks on the shores with their beautiful wings as the army, அரைசு கால் கிளர்ந்தன்ன – like a king’s army that rose up, உரவு நீர் சேர்ப்ப – O lord of the shores with strong waves, கேள் – listen,

கற்பித்தான் நெஞ்சு அழுங்க – as the heart of one who taught hurts, பகர்ந்து உண்ணான் – does not share and eat, விச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் – like the wealth of a man who escaped education, தமியவே தேயுமால் – he will be ruined alone (தேயுமால் = தேயும் + ஆல், ஆல் – ஓர் அசைச்சொல், an expletive),

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் – a man who does not help those who helped him in his poverty, மற்று அவன் எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே – it will not go away even after his death (விடாதே – ஏகாரம் அசைநிலை, an expletive), காண் கேளிர்கள் நெஞ்சு அழுங்க – letting the heart of relatives to hurt, கெழுவுற்ற செல்வங்கள் – abundant wealth, தாள் இலான் குடியே போல் – like families without effort (குடியே – ஏகாரம் அசைநிலை, an expletive), தமியவே தேயுமால் – he will be ruined alone (தமியவே – ஏகாரம் அசைநிலை, an expletive, தேயுமால் – ஆல் அசைநிலை, an expletive),

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் – if the one who made promises fails, மற்று அவன் வாள் வாய் நன்று ஆயினும் – even if he bears a sharp sword, even if he has an unfailing sword, அஃது எறியாது விடாதே – blame will not leave him, காண் – look,

ஆங்கு – அசைநிலை, அனைத்து இனி – as things are, பெரும – O lord, அதன் நிலை நினைத்துக் காண் – think about the situation , சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த வினைவரு பருவரல் போல – like the sorrow of those in a fort caused by the actions of an enemy king with rage who has surrounded the fort (சினைஇய – செய்யுளிசை அளபெடை), துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – with a distressed heart she is suffering greatly (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 150

தோழி தலைவியிடம் சொன்னது

அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல எவ் வாயும்
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டென
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரும் வெஞ்சுரம்

இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
அறம் துறந்து ஆய் இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ

கரி காய்ந்த கவலைத்தாய்க் கல் காய்ந்த காட்டு அகம்
வெரு வந்த ஆறு என்னார் விழுப் பொருட்கு அகன்றவர்
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன நின்
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ

கொதித்து உராய்க் குன்று இவர்ந்து கொடிக் கொண்ட கோடையால்
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர்
புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ

ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே

Kalithokai 150

 What the heroine’s friend said to her

The sun’s thick rays throw up heat all

around, like that emitted by flames shot by

Sivan wearing a pretty, swaying garland made

with kondrai blossoms from trees flourishing

near water, when he burned the hanging forts.

Bamboo fires rise up fiercely and spread in the

mountains, roaring loudly and burning in the

harsh wasteland where paths are confusing due

to animals going on them, where flames rise high

and touch the skies in the hot scorching place.

He went there with a desire to attain what was in

his mind, abandoning virtue.  One with beautiful

jewels!  Will he abandon you, the one on a quest

for wealth, who caused you distress and your

complexion like the neck of Sivan, who hid the full

river in his hair, to be ruined?

The one who left on the confusing paths in the

burnt mountain with dried forests, to earn great

wealth, not considering that the paths are fearful,

will he think about you who is suffering, whose

lustrous beauty like that of Sivan who rides on a

beautiful bull, has been lost?

The one who went on the mountain path in summer

with heat from the sun spreading, not considering

that the paths have no resting places, who went for

bright wealth, will he see your parched hair that

hangs low like the gold jewels of Sivan wearing a

flower strand and the crescent moon on his head?

My friend of delicate talk with dark oiled hair!  Huge,

cool, champakam flowers, worn by Sivan who is

rare to attain, have blossomed beautifully.  Your

lover will come, since he does not lie.  We understand

this clearly!

Notes:  மயங்கு அதர் மறுகலின் (5) – நச்சினார்க்கினியர் உரை – விலங்குகள் பலகாலுந்திரிகையினாலே மயங்கின அதர்.  புறநானூறு 345 – மா மறுகலின் மயக்குற்றன வழி.

Meanings:  அயம் திகழ் – flourishing near water, நறும் கொன்றை – fragrant kondrai flowers, Indian laburnum, golden shower tree, Laburnum flowers, Cassia sophera, அலங்கல் – swaying, அம் தெரியலான் – the one with a lovely garland – Sivan, இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல – like the shot flame that burnt the three hanging forts, எவ் வாயும் – everywhere, கனை கதிர் தெறுதலின் – due to the scorching heat of the sun’s thick rays, கடுத்து எழுந்த காம்புத் தீ – bamboo fire that rose up with rage, மலை பரந்து – spread in the mountains, தலைக் கொண்டு முழங்கிய முழங்கு – spreading on the mountains and roars,  அழல் – flames, மயங்கு அதர் மறுகலின் – on the paths that are confusing due to constant animal movement, மலை தலைக்கொண்டென – burning in the mountain, விசும்பு உற – touching the sky, நிவந்து அழலும் – rising flames, விலங்கு – animals, அரும் வெஞ்சுரம் – harsh wasteland,

இறந்து – left, தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் – desiring to attain what one thinks, அறம் துறந்து – abandoning virtue, forgetting virtue, ஆய் இழாய் – O one with pretty jewels, ஆக்கத்தில் பிரிந்தவர் – one who went for wealth, பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன – like that of the one who hid the full river in his bright/flourishing hair, Sivan, நின் நிறம் – your complexion, பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – will he abandon you causing you to suffer and get pale,

கரி காய்ந்த – burnt, கவலைத்தாய்  – forked, confusing, கல் – mountain, காய்ந்த காட்டு அகம் – scorched forest, வெரு வந்த ஆறு என்னார் – he did not consider that the path is fearful, விழுப் பொருட்கு அகன்றவர் – one who left to earn great wealth, உருவ ஏற்று ஊர்தியான் – one who rides on a beautiful bull, Sivan, ஒள் அணி நக்கன்ன – lustrous like the bright beauty, lustrous like the beautiful jewels, நின் உரு இழந்து இனையையாய் – that you have lost your beauty and are in anguish, உள்ளலும் உள்ளுபவோ – will he think about it in his mind,

கொதித்து உராய்க் குன்று இவர்ந்து கொடிக் கொண்ட – heat that has spread high on the mountains from the sun, கோடையால் – due to summer, ஒதுக்கு அரிய நெறி என்னார் – he did not consider that there were no places to rest/hide on the paths, he does not consider that the paths are very difficult to travel, ஒண் பொருட்கு அகன்றவர் – one who went for fine wealth, புதுத் திங்கள் – crescent moon, கண்ணியான் – Sivan with a flower strand/garland, பொன் பூண் – gold ornaments, ஞான்று அன்ன – like hanging, நின் கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ – will he see your hair withered and beauty lost,

ஆங்கு – அசைநிலை, an expletive, அரும் பெறல் – difficult to attain, ஆதிரையான் – Sivan, அணிபெற மலர்ந்த – blossomed beautifully, பெரும் தண் சண்பகம் போல – like the huge cool champakam flower, ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் – since he totally does not lie, தெளிந்தனம் – we understand, மை – dark, ஈர் ஓதி – wet hair, oiled hair (Nedunalvādai 44 – இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ), மடமொழியோயே – O one of delicate talk (ஏகாரம் அசைநிலை, an expletive)

%d bloggers like this: