நற்றிணை 1-200

நற்றிணை          

Natrinai is traditionally accepted as being the earliest of the eight Tamil anthologies.  The word means ‘good thinai’ or ‘good land’ -  நல்ல திணை.  It is in Akam thinai, and it has 400 poems from nine to 12 lines, by 192 poets.  The poems range from 9 to 12 lines.  However, poem 238 has 8 lines and 7 poems (64, 110, 221, 241, 372, 379, and 393) have 13 lines. It is missing poem 234.  In addition, it has an invocatory poem by பெரும்தேவனார், which was added in the 8th century, many centuries after the poems,  by the compiler. It has poems in all the five akam thinais – marutham, mullai, kurinji, neydal and pālai.  The compiler remains anonymous, but the anthology was completed under the patronage of the Tamil king  பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, who composed poems 97 and 301 in the collection.  The compiler is unknown. “Linguistically speaking, there is hardly a single Sanskrit loan word in the entire collection”, writes Dr. Martha Ann Selby.

நற்றிணை - 1, 3, 4, 6, 9, 11, 12, 17, 22, 27, 28,  30, 33, 38, 45, 52, 54, 60, 61, 64, 70, 79, 86, 90, 95, 97, 98, 100, 102, 105, 110, 111, 118, 119, 124, 136, 147, 149, 150, 152, 162, 169, 172, 175, 176, 180, 182, 184, 191, 195, 199, 200

நற்றிணை 1,  கபிலர், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

He is truthful in speech, eternal in sweet friendship,
and inseparable in our love and embrace.
My friendship with my esteemed man
is like a bee collecting cool pollen from the lotus
flower, carrying it to the tall sandal trees,
and making sweet honey.
Just as the world cannot live without water,
I cannot exist without him.
He loves me, is gracious, and fears that
separation will bring pallor to my forehead.
Will he even consider doing that silly act?
He does not know to do that!               Translated by Vaidehi

கருத்துரை – சொல்லிய சொல்லிலிருந்து  மாறுபடாதவர். இனிமையாகப் பழகும் தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர்.  (வண்டு)தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டுபோய் சேர்த்து வைத்த இனிய தேனைப்போல(தாமரைத்தாது-தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன் – இருவரின் அன்பு) நிச்சயமாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு.  நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது. அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.  அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர். அப்படியிருக்க,  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும்  பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!

சொற்பொருள் விளக்கம் – நின்ற சொல்லர் – மாறுபடாத சொல்லினை உடையர்,   நீடு -  நிலைத்த,  தோன்று இனியர் – இனிய தன்மையுடையர்,   என்றும் என் தோள் – என்றும் என் தோள்களை,  பிரிபு அறியலரே – பிரிவதற்கு அறியாதவர்,  தாமரைத் தண் தாது -தாமரை மலரின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினை,  ஊதி – துளைத்து,  மீ – மேலிடம்,  மிசை – மேலே,  சாந்தில் தொடுத்த – சந்தனமரத்தில் சேர்த்துவைத்த,  தீம் தேன் போல – இனிய தேன் போல,  புரைய –உயர்வு,  மன்ற -  நிச்சயமாக,  புரையோர் – உயர்ந்தோர்,  கேண்மை -நட்பு,   நீர் இன்று – நீர் இல்லாது,  அமையா– சிறப்பாகாத,  உலகம் போல – உலகத்தைப் போல,  தம் இன்று – அவர் இல்லாது,  அமையா – சிறப்படையா,  நம் –  நம்மை,  நயந்து அருளி – விரும்பி கருணையோடு,  நறு நுதல் – மணம் வீசும் நெற்றி,   பசத்தல் அஞ்சி – பசலை படரும் என்பதற்கு அஞ்சி,   சிறுமை உறுபவோ- சிறுமையான  செயலைச் செய்தற்கு நினைப்பாரோ,  செய்பு அறியலரே- செய்தற்கு அறியாதவரே

நற்றிணை 3,  இளங்கீரனார்,  பாலை திணை -  தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.

A hen-eagle broods, sick
in the great branches
lifted to the sky,
in a neem tree
with cracked trunk and dotted shade

where unschooled children
scratch their squares
on a rock
flat as a touchstone
and play marbles with gooseberries

in that wilderness
with fierce little settlements
of marauders,
the bow their only plow,

and as evening comes creeping in,
sapping my strength, what can I do
but think of her,
who is sweet as a deed
long wished for and done,
standing there
in this hour of memories
in front of a house lamp
blazing.     Translated by A.K. Ramanujan

ஈன் பருந்து – female eagle one who has given birth,  உயவும் – grieve,  வான் – sky,  பொரு – lifted,  நெடுஞ் சினைப் – big branches, பொரி – cracked, dry, அரை – tree trunk,  வேம்பின் புள்ளி நீழல் – neem tree’s dotted shade, கட்டளை – touchstone,  அன்ன – like (rock),   இட்டு – write,  அரங்கு – square, இழைத்து – scratch,  கல்லாச் சிறாஅர் – unschooled kids,  நெல்லி வட்டு ஆடும் – play marbles with gooseberries,  வில் – bow,  ஏர் – plow,  உழவர்உழவர்,  வெம் முனைச் சீறூர்ச் – fierce little settlements,  சுரன்முதல் வந்த – from wasteland first,  உரன் – strengths,  மாய் மாலை – dark evening, உள்ளினென் – I’m thinking,  அல்லெனோ – what can I do, உள்ளிய - thought,  வினை முடித்தன்ன – deed wished done,  இனியோள் – sweet girl, மனை – house,  மாண் – big,  சுடரொடு – with blazing flame,   படர் – spread, பொழுது எனவே – at that time

நற்றிணை 4, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்
கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே.

If we tell the lord of the shores
…..where the fishermen from the small village
…..near the seaside grove
…..rest under the thick shade of the blue
…..punnai trees drying their nets,
…..and waiting for the right time to go to the sea,
that our life here will become difficult
if mother knows about the affair,
will he take us, my friend, to his town
where salt merchants cry out the price
of white salt,
and flocks of black-legged, white herons
fly away in fear
to the large, brackish-water ponds
on hearing the sounds of their wagon
wheels grinding the sand on the long path?                     Translated by Vaidehi

கானல் – seashore grove, அம் சிறுகுடி – beautiful village, கடல் மேம் பரதவர் – fishermen who go on the seas, நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ – rested on the blue colored punnai tree shade – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – look for the perfect time, அம் கண் அரில் வலை – beautiful nets with fine meshes, உணக்கும் – dries, துறைவனொடு – with the lord of the seaport, அலரே அன்னை அறியின் – if mother hears the rumor, இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு – the life led here will become difficult for us, எனக் கூறின் கொண்டும் – if we say that, செல்வர் கொல் தோழி – will be take us along my friend, உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – salt merchants call out the price for white salt, கண நிரை கிளர்க்கும் – big flocks move away, நெடு நெறி – long path, சகடம் – wagon, மணல் மடுத்து உரறும் ஓசை – sound of rubbing on the sand, கழனி – field, கருங் கால் வெண் குருகு – white herons/egrets/storks with black legs, வெரூஉம் – fear, இருங் கழிச் சேர்ப்பின் – to the vast/black backwaters, தம் உறைவின் ஊர்க்கே – in the town that he resides

நற்றிணை 6, பரணர், குறிஞ்சி திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது
நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே.

Her delicate beauty is like the fiber-removed
stem of a white water lily,
her moist eyes are like purple water-lilies that rise up,
and the waist of this dark beauty has yellow beauty spots.
If there is a messenger to talk to this pretty young girl
with rounded shoulders,
she without malice will not ask, “who is he?”
In the strong-bowed king Ori’s fragrant forests,
frolicking deer eat ripe curved-nose kumizham fruits
that grow along the forest paths.
The girl with thick black hair
will be happy,  if she knows that I have come.       Translated by Vaidehi

நீர் வளர் ஆம்பல் - white water-lily growing in the water,  தூம்புடை திரள் கால் – stem with hollow,  நார் உரித்தன்ன – like the fiber removed,  மதன் இல் மாமை – beautiful dark color,  குவளை அன்ன – like the purple water-lily, ஏந்து – lifted,  எழில் – beautiful,  மழைக் கண் – moist eyes,  திதலை அல்குல் – yellow beauty spots under her waist,  பெருந் தோள் – large shoulders, குறுமகட்கு – young girl,  எய்தச் சென்று – to give a message,  செப்புநர்ப் பெறினே – if somebody would talk to her,  இவர் யார் என்குவள் அல்லள் – she’ll not ask, ‘who is he’,  முனாஅது – without hatred,  அத்தக் – forest path, குமிழின்kumizham tree’s,  கொடு மூக்கு – curved nose,  விளை கனி – ripe fruit, எறி மட மாற்கு – for the playful innocent deer,  வல்சி ஆகும் – will become food,  வல் வில் ஓரி – king Ori with a strong bow,  கானம் – forest,  நாறி – fragrance,   இரும் – black,   பல் ஒலி வரும் கூந்தல் – thick flowing hair, பெரும் பேதுறுவள் – will be very happy,  யாம் வந்தனம் எனவே – if she knows that I have come

நற்றிணை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை  திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம் ஆகலின்
பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி
நிழல் காண்தோறும் நெடிய வைகி
மணல் காண்தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே.

On our path,
cuckoos will prick mango buds and
sing happily in the fragrant cool groves;
faultless and curious travellers
will think that you are a goddess.
My pain and distress will end if I
embrace your fine, bamboo-like shoulders.

There are a few towns on our way.
Whenever there is heavy shade,
we can rest for a long time;
whenever we see sand,
you can make sand dolls.
There are punku trees with
parched-rice-like flowers
and glowing, bright tender sprouts.

My lover with sparkling white teeth,
and beautiful breasts with yellow spots!
Do not worry! let us go soon.        Translated by Vaidehi

அழிவிலர் முயலும் – those who do faultless things,  ஆர்வ மாக்கள் – anxious people,  வழிபடு தெய்வம் – god that is worshipped,  கண் கண்டாஅங்கு – like they saw with their eyes,  அலமரல் வருத்தம் – distress and sorrow,  தீர – to end,  யாழ – an expletive,  நின் – your,  நல மென் – fine delicate, பணைத் தோள் – bamboo-like shoulders, could also be wide shoulders,  எய்தினம் ஆகலின் – if I attain,  பொரிப் பூம் புன்கின்punku tree with parched rice-like flowers,  அழல் – glowing,  தகை – beautiful,  ஒண் – bright, முறி – tender sprouts, சுணங்கு – yellow spots,  அணி – beautiful,  வன முலை – full breasts, அணங்கு கொளத் – fascinates others, shocks others, திமிரி – spread,  நிழல் காண்தோறும் – whenever shade was seen,  நெடிய வைகி – stayed for long,  மணல் காண்தோறும் – whenever sand was seen,  வண்டல் தைஇ – made sand dolls, வருந்தாது – do not feel sad,  ஏகுமதி – lets go soon, வால் எயிற்றோயே – one with white teeth,  மா நனை – mango tree buds,  கொழுதி மகிழ் குயில் – happy kuyils prick,  ஆலும் – sing,   நறுந் தண் – fragrant and cool,  பொழில கானம் – groves,  குறும் பல் ஊர – small few towns,  யாம் செல்லும் ஆறே – (on the) way we go

நற்றிணை 11, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது – She tries to comfort the heroine when she is distressed
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே.

Your body is distressed like an unworn wilted garland,
since you missed the tryst that he suggested.
You are hurt by the slanderers who talk ill about you
and you sulk thinking that your lover will not come.
Destroy such thoughts from your heart.

When the moonlight spreads on the seashore grove
he will come in his chariot,
riding beside the waves on the shore
that is filled with flowers and sand,
as his charioteer handles his bridle with caution
protecting the crabs on the ground.               Translated by Vaidehi

பெய்யாது – not worn,  வைகிய – lying around,  கோதை போல – like a garland, மெய் – body,  சாயினை – you are distressed,  அவர் செய் குறி – the secret meeting (tryst) that he indicated,  பிழைப்ப – misssed,  உள்ளி – thinking, நொதுமலர் – slanderers,  நேர்பு – long (too much),   உரை -  words (gossip), தெள்ளிதின் – clearly,  வாரார் – he will not come,  என்னும் – and so,  புலவி – sulk,  உட்கொளல் – do not do that,   ஒழிக மாள – destroy (such thoughts), நின் நெஞ்சத்தானே – your heart,  புணரி பொருத – wave filled,  பூ – flowers, மணல் – sand,  அடைகரை – seashore,  ஆழி மருங்கின் – near the seashore, அலவன் – crabs,  ஓம்பி – protecting,  வலவன் – charioteer,  வள்பு – bridle,  ஆய்ந்து ஊர – carefully ride,   நிலவு விரிந்தன்றால் கானலானே – the moonlight spread on the seashore grove

நற்றிணை 12, கயமனார், பாலை  திணை – தோழி தலைவனிடம் சொன்னது
wood apples were placed in pots to remove stale buttermilk odors
விளம் பழம் கமழும் கமம் சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண் தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

Wood apple fragrance
in the buttermilk pots
rounded like full pregnancy,
their noisy, churning rods
tied to posts,
and reduced by the circling ropes,
are the first sounds as dawn arrives.

She hides her body well
and removes from her feet
beautiful, jingling anklets,
and places them along with her
well-decorated ball.
“Whenever they see these, they’ll be sad”,
she thinks about her pitable friends,
and tears come to her eyes
even though she desires to leave with you.    Translated by Vaidehi

விளம்பழம் கமழும் – wood apple fragrance spreads, கமம் சூல் குழிசிப் – fully pregnant (women’s stomach-like) round pot, பாசம் தின்ற – ropes reduced, தேய் கால் மத்தம் – churning rod has thinned, நெய் தெரி இயக்கம் – churning to make butter, வெளில் – the post to which the rope is wound, முதல் முழங்கும் – first sounds, வைகு புலர் விடியல் – early morning hours, மெய் கரந்து – hiding her body, தன் கால் – her feet,  அரி அமை சிலம்பு – beautiful jingling anklets, கழீஇ – removes it, பல் மாண் – many splendor, வரி புனை பந்தொடு – with the decorated ball, வைஇய – placed it, செல்வோள் – when she went (to do that), இவை காண் தோறும் நோவர் மாதோ – they’ll be pained,  அளியரோ – will be sad, அளியர் – pitiable ones, என் ஆயத்தோர் – my friends, என – so, நும்மொடு வரவு – going with you, தான் அயரவும் – feel sad, தன் வரைத்து அன்றியும் – even though she wants to leave, கலுழ்ந்தன கண்ணே – there are tears in her eyes

நற்றிணை 17, நொச்சிநியமங்கிழார், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னை
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

Early morning rains that fell
on his fine, lofty mountains
flowed down like dark ocean waves.
The waterfalls in the wide big forest
is where we used to meet,
and it hurt me to see that beautiful spot.

Unable to tolerate my pain,
tears flowed down from my beautiful
wet eyes.
“Why are you crying?”, mother asked,
“Let me kiss you, my daughter with splendid
teeth”, she said with tender words.

I almost forgot to guard my more
precious-than-life shyness and started
to tell her that the reason for my sorrow
was that I missed the chest of
the man from the mountain country
where bees that swarm kānthal flowers
sing like sweet yāzh strings.
However,  I caught myself before I said anything
and stopped,  my friend.       Translated by Vaidehi

நாள் மழை தலைஇய – early morning rains fell, நல் நெடுங்குன்றத்து – fine tall mountains, மால் கடல் திரையின் – dark ocean waves, இழிதரும் அருவி – falling waterfalls, அகல் இருங் கானத்து – wide big forest, அல்கு – nearby, அணி – beautiful, நோக்கி – looked, தாங்கவும் தகைவரை நில்லா – unable to tolerate, நீர் சுழல்பு – water poured, ஏந்து எழில் மழைக் கண் – lifted beautiful wet eyes, கலுழ்தலின் – since it cried, அன்னை – mother, எவன் செய்தனையோ – what did you do, நின் இலங்கு எயிறு – your splendid teeth, உண்கு என – I’ll kiss,  மெல்லிய இனிய கூறலின் – uttered tender sweet words, வல் விரைந்து – went fast, உயிரினும் சிறந்த – better than life, நாணும் – shyness, நனி – lot, மறந்து – forgot, உரைத்தல் – said, உய்ந்தனனே – avoided it, தோழி – my friend, சாரல் – mountain slopes, காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி – the bees that swarm kānthal flowers (purple water lilies), தீம் தொடை நரம்பின் இமிரும் – like the music of the sweet stringed yāzh,  வான் தோய் – sky high, வெற்பன் – man from the mountain country, மார்பு – chest, அணங்கு எனவே – reason for sorrow

நற்றிணை 22, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

He has come back,
the man from the country
where in the mountain range’s millet field
that is guarded by a mountain girl,
a female monkey, along with her crude mate
climbs the fine mountain,
steals huge clusters of mature millet spikes,
crushes it with her palms,
collects the grain and stuffs her cheeks
curving them along with her jaws,
and as rain pours down,
their wet bodies
appear like austere ritualists
who eat food with their hands.

His arrival in the middle of the night
is like seeing rain in a mature paddy field,
in a world whose ponds have dried up.
May you live long, my friend! Translated by Vaidehi

கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந் தினை – the fresh millet that the mountain girl protects in the ranges, முந்து விளை பெரும் குரல் – mature huge clusters, கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு – the female that took it, along with its crude male, நல் வரை ஏறி – climbed on the fine mountain, அங்கை நிறைய – full in its palm, ஞெமிடி கொண்டு – crushed, தன் திரை – gathered it together, அணல் – upper jaw, கொடும் கவுள் நிறைய – filled its curved cheeks, முக்கி – stuffed, வான் பெயல் நனைந்த புறத்த – their backs got wet when it rained, நோன்பியர் – those who do penances (wet after dipping in the streams and ponds), கை ஊண் இருக்கையின் தோன்றும் – appears like they were eating with their hands, நாடன் – man from such country, வந்தனன் – came, வாழி தோழி – may you live long, my friend, உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலை – when the world’s ponds have lost their wetness/waters, பீளடு திரங்கிய நெல்லிற்கு – in the rice field with mature grains, நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே – like the rain that came in the middle of the night

நற்றிணை 27, குடவாயிற் கீரத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
நீயும் யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை கயம் தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறா தோளே.

Yesterday you and I played
in the seaside grove surrounded
by backwaters,
in the sand bars brought to the
shores by the dashing waves,
chasing bees that swarm
on the tiny pollen of flowers.

Other than playing,
we did not do anything in secrecy.
If we had, everyone would have
known about it.
It’s good nothing happened.

What does mother think,
the one who does not
ask us to go and pluck
blue waterlily flowers
with thick long stems,
blooming like eyes,
among many small leaves in ponds
where heron flock feed
on shrimp and cry near
shark-infested backwaters? Translated by Vaidehi

நீயும் யானும் நெருநல் – yesterday you and I, பூவின் நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி – chased bees that swarm flower pollen, ஒழி திரை வரித்த வெண் மணல் – white sand that the dashing waves brought, அடைகரை – sand bars, கழி சூழ் கானல் – seashore grove surrounded by backwaters, ஆடியது அன்றி – other than playing, கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை – did not do anything in secrecy/hiding, உண்டு எனின் பரந்து பிறர் அறிந்தன்றும் – if there was anything, everybody would have known about it, இலரே நன்றும் – good there is nothing, எவன் குறித்தனள் கொல் அன்னை – what does she think, கயம் தோறு – in all the ponds, இற – prawns, ஆர் இனக் குருகு ஒலிப்ப – feeding herds of herons/storks/cranes sound, சுறவம் கழி சேர் மருங்கின் – in the brackishwaters where there are sharks, கணைக் கால் நீடி – extending their thick stems, கண் போல் பூத்தமை கண்டு – on seeing the flowers that bloom like eyes, நுண் பல சிறு பாசடைய நெய்தல் – waterlilies with many small leaves, குறுமோ சென்று எனக் கூறா தோளே – one who does not ask us to go and pluck

நற்றிணை 28,  முதுகூற்றனார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே

Even though he takes my hands
and presses them to his eyes;
takes up his own hands,
strokes my good forehead
and speaks sweet words like a mother,
he’s a thief, a cruel man,
that lord of the mountains
where the hills have tall peaks
and on the summits
the tall, swaying stems
of the bamboo with green nodes
cleave passing clouds
on the ranging mountain slopes
spread with golden kino flowers
where waterfall drop
like a stream of sapphires.     Translated by Martha Ann Selby

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்  – even though he takes my hand and presses them to his eyes, தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும் – takes his own hands and strokes my good forehead, அன்னை போல இனிய கூறியும் – speaks sweet words like a mother,  கள்வர் போலக் கொடியன் மாதோ – he’s a cruel man like a thief, மணி என இழிதரும் அருவி – sapphire colored flowing waterfalls,  பொன் என வேங்கை தாய – gold like vengai flowers spread, ஓங்கு மலை அடுக்கத்து – on the tall mountain range, ஆடு – swaying, கழை – bamboo,  நிவந்த – tall, பைங் – green, கண் – bamboo node, மூங்கில் – bamboo, ஓடு மழை – passing clouds,  கிழிக்கும் சென்னி – sloping summit, கோடு – mountain,  உயர் – tall,  பிறங்கல் – mountain, மலைகிழவோனே – lord of the mountains

நற்றிணை 30, கொற்றனார், மருதம் திணை- தோழி பரத்தையரிடம் செல்லும் தலைவனிடம் சொன்னது
கண்டனென் மகிழ்ந! கண்டு எவன் செய்கோ!
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர் தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல் மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.

Lord!  I saw you!
But what can I do about it?
When you walked on the beautiful street
where bees hum like the music
from the bard’s small lute,
women wearing elegant jewels were
waiting for you.
They who had hugged your chest before,
wanted you back again.
They shed tears and pulled you toward them
like a bunch of ship-wrecked people
fighting for a single wooden board
to save their lives.
What a pitiable situation?         Translated by Vaidehi

கண்டனென் மகிழ்ந – உன்னைக் கண்டேன் தலைவனே, கண்டு எவன்செய்கோ – கண்டு என்ன செய்வது,  பாணன் கையது பண்புடைச் சீறியாழ் – பாணனின் கையில் நல்ல சிறு யாழ், யாணர் வண்டின் இம்மென இமிரும் – வழமையான வண்டுப்போல் இம்மென ஒலிக்கும்,  ஏர்தரு தெருவின் – அழகான தெருவில், எதிர்ச்சி நோக்கி நின் – நீ வருவதை எதிர்ப்பார்த்து, மார்பு தலைக்கொண்ட – மார்பை தழுவிக்கொண்ட, மாணிழை மகளிர் – ஆபரணங்கள் அணிந்த பெண்கள், கவல் ஏமுற்ற வெய்து – கவலையால் மிகவும் வருந்தி, வீழ் அரிப் பனி – கண்ணீர் விட்டு, கால் – காற்று, ஏமுற்ற பைதரு காலை – அதிகமாக அடித்த பொழுது, கடல்மரம் – மரக்கலம், கவிழ்ந்தெனக் – கவிழ, கலங்கி உடன் வீழ்பு – கலக்கத்துடன் யாவரும் (கடலில்) விழ,  பலர் கொள் பலகை போல – பலரும் பற்றும் பலகையைப்போல், வாங்கவாங்க நின்று – உன்னை பிடித்து இழுத்து, ஊங்கு அஞர் நிலையே – பரிதாபமான நிலைமையே

நற்றிணை 33, இளவேட்டனார், பாலை திணை -  தோழி சொன்னது
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறு குடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம் கொல்லோ மெல் இயல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

My friend looks at my face and utters,
“I’m a weak person, and I don’t
have the strength to deny him the trip”.
She sobs between words and tears stream down
her flower-like beautiful eyes,
and fall on her breasts.
She fears that when the hot rays fold
into the widely split tall mountains
and the long evening hours speed,
he’ll sit alone in a hut on a rough land
in the parched wasteland, and
eat his left over grain meal after sunset
and drink water from dirty puddles.
The marauders wear red dyed clothes
on their strong bodies,
and eye the fierce paths at night.     Translated by Vaidehi

படு சுடர் அடைந்த – hot rays ended, பகு வாய் – widely split , நெடு வரை – tall mountains, முரம்பு சேர் சிறு குடி – gravel land hut, பரந்த மாலை – spreading evening time (after sunset), புலம்பு – alone, sad, கூட்டுண்ணும் – eat many, புல்லென் – grains, மன்றத்து – common place, கல்லுடை படுவில் – rock puddles ,கலுழி தந்து – give muddied water, நிறை பெயல் அறியாக் – does not know rains (parched land), குறை – leftover , ஊண் – food, அல்லில் – be in contact, துவர் செய் ஆடை – red dyed clothing, செந் தொடை – strong body,  மறவர் – robbers, அதர் பார்த்து அல்கும் – look at the path at night ,அஞ்சுவரு நெறியிடை – among the fearful paths, இறப்ப எண்ணுவர் – desires to cross ,அவர் எனின் மறுத்தல் -to deny him, வல்லுவம்கொல்லோ – I don’t have the strength, மெல்லியல் நாம் என – I’m a weak person, விம்முறு – sobbing, கிளவியள் – she utters (words) ,என் முகம் நோக்கி – looks at my face, நல் அக வன, முலைக் கரை சேர்பு – tears falling on her breasts, மல்கு புனல் – full stream, பரந்த – spread, மலர் – flower, ஏர் – beautiful, கண்ணே – eye

நற்றிணை 38, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது  – she says this when she sees the heroine in pain due to separation from her lover
வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே.

Unfailing abundance in their nets,
unfailing rains from the skies,
our flourishing fishermen sell fish,
drink toddy from the palmyra trees
and enjoy their lives.

Such is the happiness
in our grove-filled, loud Kāndavāyil town
that is surrounded by brackish waters.
It becomes sad if your man with
a fine chariot does not come,
and this slanderous town with its
palm fronds and thorn-fenced yards
with white sands and palm trees,
causes you grief.                      Translated by Vaidehi

வேட்டம் – fishing, பொய்யாது – unfailing, வலை வளம் சிறப்ப – abundance in the nets, பாட்டம் – clouds, பொய்யாது – do not fail பரதவர் – fishermen, பகர – sell,   இரும் – dark, பனந் தீம் பிழி – palmyra liquor, உண்போர் மகிழும் – drink and be happy, ஆர் – abundant, கலி – bountiful, யாணர்த்து – new income, ஆயினும் – yet, தேர் கெழு – chariot owning, மெல்லம் புலம்பன் – seashore lord, neythal land thalaivan, பிரியின் – if he separates, புல்லென – becomes sad,  புலம்பு ஆகின்றே -  gives grief, தோழி – friend, கலங்கு நீர் – brackish waters, கழி – salty land, சூழ் – surrounding, படப்பை – groves, காண்டவாயில் – town called Kāndavāyil, ஒலி – noisy, கா – grove, ஓலை – palm fronds (leaves), முள் மிடை வேலி – thorny fence, பெண்ணை – female palm tree, இவரும் – grows, ஆங்கண் – there, வெள் மணல் – white sand, படப்பை – grove, எம் அழுங்கல் ஊரே – our slanderous town

நற்றிணை 45,  பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை -  தோழி தலைவனிடம் சொன்னது
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே.

This girl
lives in a village
near the shore,
a daughter of fishermen
who pierce and stir up the water
of the big blue sea
as they kill fish.

And you?
You’re from that old market town
where long banners shiver
in the breeze,
a beloved son
of a rich man
with fast chariots.

What is your beauty to us,
who want the dried meat
we slice from fat sharks
as we sit and scare off
flocks of birds?

We reek of fish,
so get ready to leave.

The good little lives
that we make for ourselves
from the fruits of the sea
are not like yours
and among us, too,
there are fine men to be had.     Translated by Martha Ann Selby

இவளே – This girl,  கானல் – seashore,  நண்ணிய – nearby,  காமர் – desirable, சிறுகுடி – village,  நீல் நிறப் பெருங் கடல் – blue colored big ocean,  கலங்க – கலங்க,  உள் – interior, புக்கு – splash, மீன் – மீன், எறி – cut into pieces, kill , பரதவர் மகளே – daughter of the fishermen,  நீயே – நீயே,  நீயே  – you, on the other hand,   நெடுங் கொடி – long/tall banner, நுடங்கும் – shiver, நியம – market,  மூதூர்க் – old town,  கடுந் தேர்ச் – fast chariot, செல்வன் – rich man,  காதல் மகனே – loving son, நிணச் சுறா – fat shark, அறுத்த – sliced, உணக்கல் – dried food, வேண்டி – request, இனப் புள் – flock of birds,  ஒப்பும் – chase, எ மக்கு நலன் எவனோ – what is your beaty to us? (நலன் – beauty)
புலவு நாறுதும் – reek fish,  செல நின்றீமோ – get ready to leave,  பெரு நீர் – sea விளையுள் – yields, எம் சிறு நல் வாழ்க்கை – the good little lives,  நும்மொடு புரைவதோ அன்றே  – are not great like yours, எம்மனோரில் – among us, செம்மலும் உடைத்தே – have fine men

நற்றிணை 52, பாலத்தனார், பாலை திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது
மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள் வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.

My heart!  You want to earn wealth.
You don’t understand the life of separation
from my beautiful girl who adorns her hair
with vine-grown, dark, wild jasmines and gold-sheet
like pāthiri flowers that are woven
together, spreading their full fragrances.

I will not leave the sweet embraces of
that girl with yellow beauty spots on her breasts.
Even if I earn wealth like that of the generous
great victorious charitable warrior king Ori,
that is not more than her love.    Translated by Vaidehi

மாக் கொடி – dark vine, அதிரல் பூவொடு – with wild jasmine, பாதிரித் – pāthiri flower, தூத் தகட்டு – pure gold sheet, எதிர் மலர் – place flowers opposite, வேய்ந்த கூந்தல் – woven for the hair, மணம் கமழ் – very fragrant, நாற்றம் மரீஇ யாம் – fragrance mixed, இவள் – she,  சுணங்கு – yellow beauty marks, அணி -beauty, ஆகம் – breasts, அடைய முயங்கி – embrace, வீங்கு – increased, உவர்க் கவவின் – sweet embrace , நீங்கல் செல்லேம் – will not leave and go, நீயே – you, ஆள்வினை சிறப்ப எண்ணி – you want to achieve wealth, நாளும் – daily,  பிரிந்து உறை வாழ்க்கை – a life with separation, புரிந்து அமையலையே – don’t understand, அன்பு இலை , வாழி என் நெஞ்சே – greetings, my heart,  வெம் போர் – fierce battle, மழவர் – warriors, பெரு மகன் – leader, மா – big, வள் ஓரி – brave king Ori, கை வளம் – charitable hands, இயைவது ஆயினும் – if I get, ஐது ஏகு அம்ம – it is not more, இயைந்து செய் பொருளே – that earned wealth

நற்றிணை 54, சேந்தங் கண்ணனார், நெய்தல் திணை -   தலைவி சொன்னது
வளை நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ
வாப் பறை விரும்பினைஆயினும் தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை
அது நீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே.

O White heron with pure feathers
and black legs!
You love to dive into the ocean
with your relatives
and eat abundant fish.

Please listen to me!
This evening time brings me
great sorrow.
If you understand the reason,
you’ll be kind to me
and let him know how I feel,
the man from the port where
cold waves spray on the trunks
of  young gnazhal trees,
and fences of screwpines with leaves
are easy to pluck for making clothes, abound.       Translated by Vaidehi

வளை நீர் – surrounded water (ocean), மேய்ந்து – eat, கிளை முதல் – with relatives, செலீஇ – go, வாப்பறை – fly and dive, விரும்பினை ஆயினும் – even if you desire, தூச் சிறை – pure feathers, இரும் புலா – lots of meat – fish, அருந்தும் நின் கிளையடு – eat with your relatives, சிறிது இருந்து – stay a little bit, கருங் கால் – blacked legged, வெண் குருகு – white heron, எனவ கேண்மதி – and so hear me, பெரும் புலம்பின்றே ,சிறு புன் மாலை – hours of the painful evening, அது நீ அறியின் – if you understand, அன்புமார் உடையை – you will show kindness, நொதுமல் நெஞ்சம்  கொள்ளாது -  without any reservations, என் குறை – my complaint, இற்றாங்கு உணர உரைமதி – understand it and tell him, தழையோர் – those who wear leaf clothing, கொய் – plucking, குழை – leaves, அரும்பிய – growing, குமரி – young, ஞாழல் – gnālal tree – a small tree growing in the seashore – neythal land, tigerclaw tree, cassia sophera,  தெண் திரை – cold waves, மணிப் புறம் – on the base, தைவரும் – hit against, கண்டல் வேலி – thāzhai, fragrant screw-pine fence, நும் துறை கிழவோற்கே – man of our port

நற்றிணை 60, தூங்கலோரியார், மருதம் திணை -  தோழி சொன்னது
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ
கண் படை பெறாஅது தண் புலர் விடியல்
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர் வையடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மின்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

Farmer who has many buffaloes
and many tall, mountain-like rice bins!
You wake up at the crack of dawn
without much sleep
and eat big shining pieces of cooked
black-eyed varāl fish
with big balls of fine rice.
When you go to plant paddy
grass in the water-filled fields,
please protect the drooping
waterlies.
The young girl with thick dark hair
wears them as beautiful bangles.        Translated by Vaidehi

மலை கண்டன்ன – like mountains, நிலை புணர் – put together, நிவப்பின் – tall,  பெரு நெல் பல் கூட்டு – many big rice bins, எருமை உழவ – farmer/plouhman owning buffaloes,   கண்படை பெறாஅது – not sleeping, தண் – cold, புலர் – dawn, விடியல் – early morning,  கருங் கண் வராஅல் – black eyed varāl fish, பெருந் தடி – big pieces, மிளிர்வையடு – shining as it is cooked,  புகர்வை – food, அரிசி – rice, பொம்மல் – splendid, பெருஞ் சோறு – big rice balls,  கவர் படு – enjoy and eat, கையை -  with your hands,கழும – lots, மாந்தி – eat,  நீர் உறு செறுவின் – water filled fields, நாறு முடி அழுத்த – plant paddy grass, நின் – your,  நடுநரொடு – those who plant, சேறி – go, ஆயின் அவண் – and there, சாயும் நெய்தலும் – bending neythal plants - purple waterlilies, ஓம்புமதி – protect, எம்மின் – our,  மா இருங் கூந்தல் – dark thick hair, மடந்தை – young girl,  ஆய் வளை – beautiful bangles, கூட்டும் – weaves, அணியுமார் அவையே – and wears them

நற்றிணை 61, சிறுமோலிகனார், குறிஞ்சி திணை – தோழி தலைவி கூறுவதைப்போல் சொல்லுவது -  The friend utters these words knowing that the hero listening to her. Indirectly she   is urging him to come and marry her friend, by being the voice of the heroine.

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினெனாக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே.

Listen my friend!
Last night I was distressed with desire
for my lover and was in deep pain like
a female deer pierced by an arrow.

I sighed deeply and mother asked me
“are  you not sleeping my little girl?”,
like she understood my sadness.
Words didn’t come out of my mouth,
but quietly I said to my heart,
“how could I close my eyes when I am
separated from my man from the country
with splendid forests, heavy rains
and kingfisher-mouth like jasmine
that grow near rocks on gravel beds.       Translated by Vaidehi

கேளாய் எல்ல தோழி – listen my friend, அல்கல் – yesterday night,  வேணவா – increasing desire, நலிய – distressed, வெய்ய – hot, உயிரா – deep breath, sighed,  ஏ – arrow, மான் பிணையின் – like a female deer ,வருந்தினெனாக – when I was sad,  துயர் மருங்கு அறிந்தனள் போல -  like she understood my sadness, அன்னை – mother,  துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் – aren’t you not sleeping my little daughter she asked,  சொல் வெளிப்படாமை – words didn’t come out, மெல்ல என் நெஞ்சில் – slowly in my heart,  படு மழை பொழிந்த – heavy rains had fallen ,பாறை மருங்கில் – near the rocks,  சிரல் வாய் உற்ற – like the kingfisher’s mouth, தளவின் – jasmine vine, பரல் அவல் – tiny gravel,  கான் கெழு – splendid forest, நாடற் – country man, படர்ந்தோர்க்குக் – those separated from him,  கண்ணும் படுமோ என்றிசின் யானே – could I close my eyes (an sleep), I said

நற்றிணை 64, உலோச்சனார், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது – when the friend
wants to send word (தூது) to the hero.
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே.

However special he is,
let thoughts of him end.
Don’t feel sad my friend.
Why do we need the friendship
of the one who abandoned us?
The mountain men who wear hemp fiber
clothes have peeled sandal tree barks
that have dried out and wilted.
Their oozing sap, is like my
intelligence and heart that go toward him
even when my body has no feelings.
He will not be a cure to my illness
even if he comes back.
Let him stay there, my friend.
I hope that my relatives don’t see
my deep sadness and heavy sorrow.   Translated by Vaidehi

என்னர் ஆயினும் – however he is, இனி நினைவு ஒழிக – let thoughts (of him) end, அன்னவாக – for that, இனையல் – don’t feel sad, தோழி – friend, யாம் – our, இன்னமாக நத் துறந்தோர் – gave sorrow and parted us, நட்பு – friendship, எவன் – why, மரல் நார் உடுக்கை – hemp fiber clothing, மலை உறை குறவர் – mountain residing kuravars, அறியாது – without knowing, அறுத்த – cut, சிறியிலை – small leaved, சாந்தம் – sandalwood tree,  வறனுற்று – dried – no feelings, and sap oozed, ஆர – fully, முருக்கி – destroyed, பையென – slowly, மரம் வறிதாகச் சோர்ந்து – tree dried and got sick looking,  உக்கு ஆங்கு  – wilted there, என் – my, அறிவும் உள்ளமும் – intelligence and heart, அவர் வயின் சென்றென – went toward him,  வறிதால் – dried out , இகுளை – friend, என் யாக்கை – my body, இனி அவர் – now his, வரினும் – if he comes, நோய் மருந்து அல்லர் – he won’t be medicine to my sickness, வாராது – not come, அவணர் ஆகுக – stay there, காதலர் – lover, இவண் நம் – here our, காமம் படர் – love affliction, அட வருந்திய  – heavy sadness, நோய் – disease, மலி வருத்தம் – lot of sorrow, காணன்மார் எமரே – (I hope) my relatives don’t see it

நற்றிணை 70, வெள்ளி வீதியார்,  மருதம் திணை – தலைவி சொன்னது (குருகு could be herons, egrets or storks)
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே.

O Small white heron! O Small white heron!
with bright white feathers looking
like shore-washed clothes,
Come to our town and search our ponds
for pregnant keliru fish,
and eat them until you are full.

Go to his town with fertile fields
and wide sweet waters
and kindly remember to tell my beloved man
that I am sad and afflicted with love,
and that my bangles are slipping away from my hand.    Translated by Vaidehi

சிறு வெள்ளாங்குருகே – small white heron, சிறு வெள்ளாங்குருகே – small white heron, துறை போகு – (taken to) water shores, அறுவை – garments, தூமடி – washed ,அன்ன – like, நிறம் – color, கிளர் – bright, தூவி – feathers ,சிறு வெள்ளாங்குருகே – small white pelican, எம் ஊர் வந்து – came to our town, எம் – our, உண்துறைத் – drinking water shores, துழைஇ – search, சினைக் கெளிற்று – get the pregnant keliru fish, ஆர்கையை – full, அவர் ஊர்ப் பெயர்தி – move to his town,  அனைய அன்பினையோ – with kindness ,பெரு மறவியையோ – without forgetting, ஆங்கண் – there, தீம் புனல் – sweet water, ஈங்கண் – here, பரக்கும் – spread, கழனி நல் ஊர் – good town with fields, மகிழ்நர்க்கு – my loved one, என் – my,  இழை நெகிழ் – jewel (bangle) slipping, பருவரல் – sadness, செப்பாதோயே – won’t you tell him

நற்றிணை 79, கண்ணகனார்,  பாலை திணை – தலைவி சொன்னது
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே.

May you live long, my friend!
He wants to go
on the confusing difficult paths,
where,
honey that fresh eengai
flowers drop on the rocks below
look like molucca beans on sand
in the yards of fine houses with
roofs,
with which girls with small bangles play.

Is there anything more harsh
than separation from a loved one?
I want to tell him how I feel.
If I don’t tell him, my life will
not be a good one.
How can I stop him from going away?   Translated by Vaidehi

சிறை – this side, nearby, நாள் ஈங்கை – day’s fresh eengai உறை – (honey) drops, நனி திரள் – filled, வீ – flowers, கூரை நல் மனைக்  – fine house with a roof, குறுந் தொடி மகளிர் – women with small bangles, மணல் ஆடு கழங்கின் – veriyattam kazhangu seeds, அறை – rocks, மிசை – on it, தாஅம் – spread, ஏர் – beautiful, தரலுற்ற – that yielded, இயக்கு – moving, அருங் கவலை – confusing curved paths, பிரிந்தோர் – those who are separated, வந்து நப்புணரப் புணர்ந்தோர் – embraced me with love, பிரிதல் சூழ்தலின் – if separation happens, அரியதும் உண்டோ – is there anything more harsh, என்று நாம் கூறி – if I say that, காமம் செப்புதும் – tell that with love, செப்பாது விடினே – if I don’t tell him, உயிரொடும் வந்தன்று – my life will not be good, அம்ம வாழி தோழி – greetings my friend, யாதனின் தவிர்க்குவம் – how can I stop, காதலர் செலவே – lover’s going away

நற்றிணை 86, நக்கீரர்,  பாலை திணை – தோழி சொன்னது
அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே.

My friend!
Your lover left in the very harsh
early dew season
when the round pakandrai flowers
that are as wide as spears of warriors
were in bloom, and you trembled.
If he thinks about you and comes back
in early summer
when the kongam flowers that look
like skilled artists-created
beautiful head ornaments bloom
and the elegant eengai sprouts sway,
he is a just man. May be live long!    Translated by Vaidehi

அறவர் வாழி – long live the just man, தோழி – friend, மறவர் – warriors, வேல் என விரிந்த – spread like a spear, கதுப்பின் தோல – covered skin, பாண்டில் – round, ஒப்பின் – like, பகன்றை மலரும் – pakandrai flowers, கடும் பனி – harsh dew season, அற்சிரம் – early dew season, நடுங்க – tremble, காண்தக -seen, கை வல் வினைவன் – talented hand-skilled man, தையுபு – created, சொரிந்த – made, சுரிதக – hair jewel, உருவின ஆகிப் – பெரிய – big, கோங்கம் – kongam, குவி முகை – closed buds, அவிழ – open, ஈங்கை – eengai, நல் தளிர் – fine sprouts, நயவர – elegantly, நுடங்கும் -  swaying, முற்றா வேனில் – early summer, முன்னி வந்தோரே – think of me and come

நற்றிணை 90,  அஞ்சில் அஞ்சியார், மருதம்  திணை – தோழி தலைவியிடம் சொன்னது, பாணன் கேட்கும்படியாக – The urai written by the Tamil scholar S. V. Subramanian and others state that the hero sends a message through the bard that he wants to return, and the friend refuses the offer – the implication is that due to his quarrel with his concubine (the dancer), he wants to return to his wife.
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா
நயன் இல் மாக்களோடு கெழீஇ
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே.

During the dance festival
in this loud ancient town,
the poor washer-woman washes for many,
soaks the clothes in thin rice gruel
and rinses them.
The dancing girl wears soft fine clothes
washed by her,
dons a fresh flower garland that sways
as she runs,
sits on a swing with thick ropes made
with dark palmyra fibers
which is pushed by her friends.
She cries and moves away,
this young girl with soft hair and few bangles,
the one who is in pain because of the quarrel.
She is in the midst of undesirable people,
and the king’s dancing hall remains unused.   Translated by Vaidehi

ஆடு இயல் விழவின் – dance festival, அழுங்கல் மூதூர் – loud ancient town, உடையோர் – having, பன்மையின் – many, பெருங்கை தூவா – non-stopping, வறன் இல் – without wealth, புலைத்தி – washerwoman, எல்லி – night, தோய்த்த – soaked, புகா – food, புகர்  – kanji, கொண்ட – with, புன் பூங் கலிங்கமொடு – some fresh clothes,   வாடா மாலை – fresh garland, துயல் வர – swaying, ஓடி – run, பெருங் கயிறு – big rope, நாலும் – twisted, இரும் பனம் – dark palmyra, பிணையல் – woven,   பூங் கண் – flower-like eyes, ஆயம் – friends, ஊக்க – push, ஊங்காள் – does not swing, அழுதனள் பெயரும் – cried and moved, அம் சில் ஓதி – beautiful delicate hair,   நல்கூர் – suffering, weary பெண்டின் – woman , சில் – delicate or few, வளைக் குறுமகள் – young girl with bangles, ஊசல் – swing, உறு தொழில் – inherent business, பூசல் கூட்டா – without quarrel, நயன் இல் மாக்களோடு கெழீஇ – mixed with undesirable people, பயன் இன்று – without use, அம்ம – an expletive, இவ் வேந்துடை அவையே – this king’s dance hall, assembly hall

நற்றிணை 95,  கோட்டம்பலவனார், குறிஞ்சி திணை – தலைவன் சொன்னது
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே குழு மிளைச் சீறூர்
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.

In the small well-guarded hamlet in the hills
where my girl with fragrant hair lives,
bamboo flutes and instruments create loud music
and kuravar children climb rapidly
on big boulders and clap to that beat,
as a sweet-fig colored soft-headed, red-faced,
strong young female monkey balances and sways
on the tightly twisted high rope,
that belonged to a dancing girl.
She holds my heart, and only she can release it.    Translated by Vaidehi

கழை – மூங்கில் (புல்லாங்குழல்), பாடு இரங்க – இசை ஒலிக்க,  பல் இயம் கறங்க – பல வகை வாத்தியங்களும் முழங்க,  ஆடு மகள் நடந்த – ஆடும் பெண்ண நடந்த, கொடும் புரி நோன் கயிற்று – பெரும் முறுக்குண்ட வலிமையான கயிற்றில்,  அதவத் தீம் கனி அன்ன – அத்தியின் இனிய பழத்தைப்போன்ற, செம் முகத் – சிகப்பு முகம்,  துய்த் தலை மந்தி – பஞ்சு (போன்ற) தலையை உடைய பெண் குரங்கின், வன் பறழ் தூங்க – வலுவான குட்டி ஆட, கழைக் கண் – மூங்கில் அருகில்,  இரும் பொறை ஏறி – பெரிய பாறையின் மீது ஏறி, விசைத்து எழுந்து – வேகமாக எழுந்து, குற குறுமாக்கள் – மலையில் வாழுபவர்களின் சிறுவர்கள், தாளம் கொட்டும் – தாளம் கொட்டுவார்கள், அக் குன்றகத்ததுவே – அந்தக்குன்றத்திலே,  குழு – வளமான, மிளை சீறூர் – காவலுடைய சிற்றூர், சீறூரோளே – சிற்றூரில் உள்ளவளே, நாறு மயிர்க் கொடிச்சி – நறு மனமுள்ள கூந்தலைவுடைய மலை நாட்டுப்பெண்,  கொடிச்சி – அந்தப்பெண், கையகத்ததுவே – கையாலே, பிறர் – பிறரால்,  விடுத்தற்கு ஆகாது – விடுவிக்க முடியாது, பிணித்த என் நெஞ்சே – பிணிக்கப்பட்டது என் நெஞ்சு

நற்றிணை 97, மாறன் வழுதி, முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியோடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

When the cuckoo
sings near me
in plaintiff notes,
the hurt is like a deep,
unhealed wound sore being
thrust with a lance.

Harsher than that is when the
river runs with abundant
clear water.

Much more harsher than that
is the farmer’s special,
delicate daughter who
calls out and sells
in her bee-swarming basket,
fresh kurukkathi flowers
with beautiful soft petals,
mixed with jasmine flowers
raised in the field. Translated by Vaidehi

அழுந்து படு விழுப் புண் – deep old sore, வழும்பு வாய் புலரா – scar that’s edges have not dried up, எவ்வ நெஞ்சத்து – painful heart, எஃகு எறிந்தாங்கு – like a spear was plunged, பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் – more than the cuckoo bird singing mournfully, தேறு நீர் கெழீஇய யாறு – river that runs with abundant clear water, நனி கொடிதே – is more harsher, அதனினும் கொடியள் தானே – the girl who is harsher than that, மதனின் துய்த் தலை இதழ – beautiful soft top petals, பைங் குருக்கத்தியோடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – mixed fresh kurukkathi and jasmine flowers, will you take, வண்டு சூழ் வட்டியள் – bee-swarming basket, திரிதரும் – going around, தண்டலை – field, உழவர் தனி மட மகளே – the farmer’s special delicate daughter

நற்றிணை 98,  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, குறிஞ்சி திணை – தலைவி சொன்னது
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.

O man from the country where
a small-eyed pig with porcupine-quill-like
coarse neck hair
walks toward the wide millet field
in the tall mountain
anxious to graze, unaware of the big trap,
but walks back to his cave to sleep,
when he hears a lizard call from a nearly
toothbrush tree!

You come into my father’s well-guarded big house
when the guards are tired.
Harsher than that is when
my tired eyes are unable to close
during the day, and my soft heart is lost.      Translated by Vaidehi

எய்ம் முள் அன்ன – porcupine hair like, பரூஉ மயிர் – coarse hair, எருத்தின் – in the neck, செய்ய்ம்ம் மேவல் – to eat, சிறு கட் பன்றி – small-eyed pig, ஓங்கு மலை – tall mountain, வியன் புனம் – wide field, படீஇயர் – to catch, வீங்கு – big, பொறி – trap, நூழை – small path, நுழையும் பொழுதில் – when entering, தாழாது – without delay,  பாங்கர்ப் – toothbrush tree,  பக்கத்துப் – nearby, பல்லி பட்டென – heard lizard calls, மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் – slowly went back to his,  கல் அளைப் – rock cave, பள்ளி – to sleep, வதியும் – lives, நாடன் – country man, எந்தை ஓம்பும் – my father fosters (my) virtue, கடி உடை – with protection, வியல் நகர்த் – big house, துஞ்சாக் காவலர் – sleepless guards, இகழ் பதம் நோக்கி – see when they are tired, இரவின் வரூஉம் – to come at night, அதனினும் கொடிதே – harsher than that, வைகலும் – every day, பொருந்தல் ஒல்லா – unable to close, கண்ணொடு – tired eyes, வாரா – doesn’t come back, என் நார் இல் நெஞ்சே – my soft heart

நற்றிணை 100, பரணர்,  மருதம் திணை -  பரத்தை விறலியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்
மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே.

Whenever I think about it,
I laugh my friend.
The man
from the cool port
where waterlilies grow
in ponds deep like bills of
rainy-season storks,
pulled my honey-fragrant,
five-part braid and plucked
my white, bright bangles
from my hand
when we had a quarrel,
and made me angry.

I told him
that I was going to tell his wife
about what happened.
The man who wants it good,
trembled with fear
like the roaring
mud-packed, beautiful
tight drums of the dancers
who came from another land
to dance for king Malaiyamān,
who donates fine chariots
to those who come
to him after winning cattle herds
from the other side of town.    Translated by Vaidehi

உள்ளுதொறும் – whenever I think about it, நகுவேன் தோழி – I laugh my friend, வள்உகிர் – sharp claws, மாரிக் கொக்கின் – rainy season stork, கூர் அலகு – sharp beak, அன்ன – like,  குண்டு – pond, நீர் – water, ஆம்பல் – white waterlily, தண் துறை – cool port, ஊரன் – man from such town, தேம் கமழ் – honey fragrant, ஐம்பால் – five-part braid, பற்றி – held, என் – my, வயின் – with me, வான் கோல் – white round, எல் வளை – bright bangles, வெளவிய – plucked, removed, பூசல் – quarrel, சினவிய முகத்து – angry face, சினவாது சென்று – go without anger, நின் – your,  மனையோட்கு உரைப்பல் – I’ll tell your wife, என்றலின் – I said that, முனை ஊர் – edge of town, பல் ஆ – many cows, நெடு நிரை – lots of cattle, வில்லின் – battle with arrows, ஒய்யும் – win,  தேர் வண் மலையன் – Malaiyaman who gives fine chariots, முந்தை – ancient, பேர் இசை – great fame, புலம் புரி வயிரியர் – dancers who came from another land, நலம் புரி முழவின் – beautiful tight drum’s, மண் ஆர் கண்ணின் – mud packed eyes, அதிரும் – sound, நன்னராளன் – one who wants it good, நடுங்கு – tremble, அஞர் நிலையே – distressed situation

நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சி திணை – தலைவி கிளியிடம் சொன்னது – She wants the bird to tell her lover that she’s alone in the millet field
கொடுங் குரல் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

O beautiful red-mouthed green parrot!
Do not fear me!
Eat as much as you want, and when satisfied,
take care of my desire.
I beg your favor with my clasped hands.
If you go to see your relatives in the nearby
mountains where jackfruit trees have many branches,
see the lord of the mountain
and tell him that the forest dweller’s innocent daughter
is waiting for him in the millet field.     Translated by Vaidehi

கொடுங் குரல் – curved millet stalks, குறைத்த – reduced (by eating), செவ்வாய்ப் பைங் கிளி – red mouthed green parrot, அஞ்சல் ஓம்பி – remove (your) fear, ஆர்பதம் கொண்டு – take food, நின் குறை முடித்த பின்றை – once your need is satisfied, என் குறை – my need, செய்தல்வேண்டுமால் – to take care, கை தொழுது இரப்பல் – I plead with my hands, பல் கோட் பலவின் – many branched jackfruit tree, சாரல் – mountain slopes, அவர் நாட்டு – his country, நின் கிளை – your relatives, மருங்கின் – nearby, சேறி ஆயின் – if  you reach, அம் மலை கிழவோற்கு – lord of that mountain, உரைமதி – tell him, இம் மலைக் – this mountain, கானக் குறவர் மட மகள் – forest kuravar’s innocent daughter, ஏனல் காவல் ஆயினள் எனவே – is in the millet field to protect

நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம்  சொன்னது
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

Greetings to you, my heart!
The hot wind is blowing and
silk-cotton trees with thorns in their trunks
and dry vine twined around them,
are trembling as their branches break;
an elephant walking with her calf is distressed
with no water or shade in sight;
you are trying to cross this difficult path.

Your bond with the girl with eyes like
the blue waterlilies of Cheran’s mountain springs,
and delicate hair
filled with the fragrance of white buds
swarmed by bees, is precious.      Translated by Vaidehi

முளி கொடி – dried creepers, வலந்த – surrounded, முள் – thorny, அரை – trunk, இலவத்து – silk-cotton tree’s, ஒளிர் சினை – branch, அதிர – tremble, வீசி – blow, விளி – sounds, பட – break,  வெவ் வளி – hot wind, வழங்கும் – happen, வேய் பயில் – bamboo filled, மருங்கில் – area, கடு நடை யானை – fast walking elephant, கன்றொடு வருந்த – sad with calf, நெடு நீர் அற்ற நிழல் இல் – no water or shade for a long distance, ஆங்கண் – there, அருஞ் சுரக் – difficult dry path, கவலைய  – cuved paths, என்னாய் – you do not think, நெடுஞ் சேண் – far away, பட்டனை – வாழிய நெஞ்சே – may you live long my heart, குட்டுவன் – Cheran king, குட வரை – western mountains, சுனைய – springs, மா இதழ்க் குவளை – dark leaf purple water-lilies, வண்டு படு – bees swarming, வான் போது கமழும் – white bud fragrance, அம் சில் ஓதி – beautiful delicate hair, அரும் படர் உறவே. – precious increasing bond

நற்றிணை 110, போதனார், பாலை திணை – தலைவியின் தாய் சொன்னது
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழு நன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.

Her slightly grey-haired, wise foster mothers
used to carry glowing gold bowls
with sweet milk mixed with honey and follow her.
They ran behind her to the pavilion,
with their soft-headed small sticks
and forced her to eat.

My playful daughter’s golden anklets
filled with pearls from clear waters,
jingled as she jumped and ran away,
refusing the food they brought.

Her husband’s family has grown poor now.
She doesn’t think about the rich rice her father used to give,
softer than the delicate sand under running water.
She eats what she can,
that little girl with such great strength.    Translated by Vaidehi

பிரசம் கலந்த – தேன் கலந்த, வெண் சுவைத் தீம்பால் – வெண்ணிற சுவையான இனிய பால், விரி கதிர்ப் – பெரிய படர்ந்த, பொற்கலத்து ஒரு கை ஏந்தி – ஒரு கையால் பொற்கலத்தை ஏந்தி,  புடைப்பின் சுற்றும் – இடத்தில் சுற்றும், பூந் தலை – மென்மையான தலை, சிறு கோல் – சின்ன கம்பு, உண் என்று ஓக்குபு – சாப்பிடு என்று அதட்டி, பிழைப்ப , தெண் நீர் – தெளிந்த நீர்,  முத்து அரிப் பொற்சிலம்பு – முத்து நிரம்பிய சலங்கை, ஒலிப்ப – ஒலிக்க, தத்துற்று – குதித்து, அரி நரைக் கூந்தற் – சிறிது நரைத்த கூந்தல், செம் முது செவிலியர் – வயதான செவிலித் தாய்மார், பரி மெலிந்து ஒழிய – பின்னால் ஓட இயலாது, பந்தர் ஓடி – பந்தல் அடியே ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – வேண்டியதை மறுத்து சிறுப் பிள்ளைத்தனமாக விளையாடி, அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல் – எப்படி அறிவும் ஒழுக்கமும் வந்தன, கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – கொண்ட கணவனின் குடும்பம் ஏழ்மை உற்றதா,  கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் – தந்தை கொடுத்த அனுப்பிய சோற்றை உண்ண மாட்டாள், ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – அசைந்து  ஓடும் நீர் அடியில் உள்ள நுண்ணிய மணல் போல, பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – மறுத்து அவன் வீட்டில் உள்ளதை உண்ணும் துணிவுடையவள்

நற்றிணை 111, பாடியர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை தோழி தலைவியிடம் சொன்னது – The word ‘maral’ has two meanings - ’hemp plant’ and ‘tree’. It means tree here.  I have used S. V. Subramanian’s urai for this translation. In other songs, it means hemp. The hemp fibers are used by the mountain people to make clothing. 
அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழி தரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே.

Brave fishermen kids
take their tightly woven nets
to catch many kinds of fish,
and prawns with heads as soft
as wasteland iruppai flowers.
They are like the strong youngsters who
climb on trees and raise their voices
to chase deer herds.

They climb on their boats
and brave the salty waves,
come back with a bountiful catch of fish
and sword-mouthed sharks,
and cut and place the flesh
on the spread sand.
Your lover will come in his chariot
with a loud noise from that seaside town.          Translated by Vaidehi

அத்த – பாலை நிலம், இருப்பைப் பூவின் அன்ன – இருப்பைப் பூவைப் போன்று, துய்த் தலை – மென்மையான தலை (உடைய),  இறவொடு – இறால் மீனொடு, தொகை மீன் பெறீஇயர் – பிற மீன்களையும் பிடிப்பதற்காக,  வரி வலை – கட்டிய வலை, பரதவர் கருவினைச் சிறாஅர் – வலிமையுடைய பரதவச் சிறுவர்கள்,  மரல் மேற்கொண்டு – மரம் மேல் ஏறி (maral has two meanings – jute plant and tree), மான் கணம் தகைமார் – மான் இனத்தை தடுக்க,  வெந் திறல் இளையவர் – வலிமைவுடைய சிறுவர்கள், வேட்டு எழுந்தாங்கு – ஒலியை எழுப்பினாற்போல்,  திமில் மேற்கொண்டு – படகில் ஏறி, திரைச் சுரம் நீந்தி – உப்பு நீர் அலைமேல் சென்று,  வாள் வாய்ச் சுறவொடு – வாளைப்போன்ற வாயைக் கொண்ட சுறாவோடு, வய மீன் கெண்டி – நிறைய மீனை அறுத்து,  நிணம் – ஊன் (flesh), பெய் தோணியர் – தோணியிலிருந்து கொண்டு வந்து, இகு மணல் இழிதரும் – பரவிய மணலில் பரப்பி,  பெருங் கழிப் பாக்கம் – பெரிய உவரிப்பாக்கம்,  கல்லென வருமே – ‘கல்’ என்ற ஒலியோடு வருமே தோழி – தோழி, கொண்கன் தேரே – கடற்கரை ஊரனுடைய தேரே

நற்றிணை, 118, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அடைகரை மாஅத்து அலங்கு சினை ஒலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன்தலையும் புணர் வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே.

A red-eyed, black female cuckoo
unites with her male
and sings lovingly with him
on the fresh, sprout-covered
dense branches of a mango tree
in the cool, fragrant grove
on the sandy shores.

He left us when the flowers
were in full bloom,
and I am very sad that he forgot us.
Also, my heart aches
when I see the new flower vendor
as she calls out and sells
on all the streets,
fresh, white petaled pāthiri flowers,
swarmed by bees,
their soft tops looking like the
paint-filled brushes of skilled painters. Translated by Vaidehi

Meanings: அடைகரை – on the sand-filled shore, மாஅத்து அலங்கு சினை – mango tree’s close branches, ஒலிய தளிர் – thriving sprouts, கவின் எய்திய – attained beauty, தண் நறும் பொதும்பில் – in the cool fragrant groves, சேவலொடு கெழீஇய – united/close with its male, செங் கண் இருங் குயில் – red-eyed black kuyil, lark, புகன்று எதிர் ஆலும் – sings back with desire, பூ மலி காலையும் அகன்றோர் – the one who left when flowers were in full bloom, மன்ற – for sure or an expletive, நம் மறந்திசினோர் என – that he forgot us, இணர் – close, உறுபு – lot or pālai tune, உடைவதன் தலையும் – on top of feeling very sad , புணர் வினை ஓவ மாக்கள் – painters with trade skill, ஒள் அரக்கு – red paint, ஊட்டிய துகிலிகை அன்ன – filled brush like, துய்த் தலைப் பாதிரி – soft topped pāthiri flowers, வால் இதழ் அலரி – white petaled flowers, வண்டு பட ஏந்தி – carrying (flowes) that bees swarm, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு – the new lady who calls out and sells new flowers in all the streets, நோம் என் நெஞ்சே – my heart aches

நற்றிணை 119, பெருங்குன்றூர்கிழார், குறிஞ்சி திணை – தோழி சொன்னது -as the hero listens surreptitiously
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர் கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையோடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவி அடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே.

Even if the man from the mountain
where a mountain dweller places a big rock
trap with a small device
to catch a boar that comes to eat his millet,
only to find a bright colored, strong tiger
get trapped,
has come back with love wearing a garland
woven with jasmine and koothalam flowers,
he will not get her embraces,
since her sulking is larger than his mountain
where sweet-faced monkeys graze on fine food
in the groves near the stream with many flowers,
black deer herds leap and romp around with
mountain goats in the vast mountain shade.           Translated by Vaidehi

தினை உண் கேழல் – pig that eat millet, இரிய – wander, புனவன் சிறு பொறி மாட்டிய – small trap device that the mountain dweller places, பெருங் கல் – big rock, boulder, அடாஅர் – trap, ஒண் கேழ் வயப் புலி படூஉம் – bright colored strong tiger gets trapped, நாடன் – man from such country, ஆர் தர வந்தனன் ஆயினும் – even if he came to give his love, படப்பை – grove, இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் – sweet faced big male monkey grazes well and get full, பல் மலர்க் கான் யாற்று – forest stream and many flowers, உம்பர் – above, கருங் கலை கடும்பு ஆட்டு – black deer herds, வருடையோடு தாவன உகளும் – with mountain goats they romp around, பெரு வரை நீழல் – in the huge mountain shade, வருகுவன் – when he comes, குளவி அடு கூதளம் – wild jasmine and koothalam woven together, ததைந்த கண்ணியன் – wearing esteemed man, யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் – he will not get all that embraces, புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – the sulking he has to deal is larger than his mountain

நற்றிணை 124, மோசி கண்ணத்தனார், நெய்தல் திணை – தோழி சொன்னது – the friend is being the voice of the heroine in this poem. She is repeating what the heroine told her, when the hero listens surreptitiously, to encourage him to come and marry her friend.
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

In the early morning hours
the black ibis cries sadly when
it is separated from its beloved.
I am living alone unable to bear
this misery.

Sir, greetings to you! If you don’t come
my desire is to die.
The eengai buds and jasmine flowers
are scattered on big sand dunes
where deers’ strong hooves press down
and create puddles of water.
The time has come for water bubbles to flow
from these pits, looking like melted silver
that is poured to make bowls. Translated by Vaidehi

ஒன்று இல் காலை – the morning when it was separated, அன்றில் போல – like the andril bird, புலம்பு கொண்டு உறையும் – living alone, புன்கண் வாழ்க்கை – miserable life, யானும் ஆற்றேன் – I am unable to bear, அதுதானும் வந்தன்று – if he doesn’t come, நீங்கல் வாழியர் – desire to die, ஐய – sir, ஈங்கை – eengai shrub, முகை – buds, வீ – flowers (of the), அதிரல் – wild jasmine, மோட்டு மணல் எக்கர் – big sand mound, நவ்வி – deer’s, நோன் குளம்பு – strong hoofs, அழுந்தென – pressed down, வெள்ளி – silver, உருக்குறு – melted, கொள்கலம் – bowl, கடுப்ப – like, விருப்புற – with desire,  தெண் நீர்க் குமிழி – clear water bubble, இழிதரும் – flow down, தண்ணீர் ததைஇ – water filled, நின்ற பொழுதே – when it stops

நற்றிணை 136, நற்றங் கொற்றனார்,  குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் அய் வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே

I cried that I wanted skillfully
made armlets, and my father
who was like a good physician
who gives the right medicine,
gave them to me.

May he live long!
He gave me faultless gold armlets
that didn’t slip off, fitting
tightly on my shoulders,
as if he knew that I was separated
from my mountain country lover
who has been praised by many.    Translated by Vaidehi

திருந்து கோல் – skillfully made ,எல் வளை – bright bangles, வேண்டி யான் அழவும் – cried that I wanted, அரும் பிணி – incurable disease, உறுநர்க்கு – affted one, வேட்டது – desired, கொடாஅது – not refusing that, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – like a good physician who checks and gives the right medicine, என் அய் – my father, வாழிய – long live,பலவே பன்னிய – many praise, மலை கெழு நாடனொடு – with the mountain country man, நம்மிடை – between us, சிறிய – small, தலைப்பிரிவு உண்மை – separation truth,அறிவான் போல – like he understood, நீப்ப – armlet, நீங்காது வரின் வரை அமைந்து – one that doesn’t slip, tight, தோள் – shoulder, பழி மறைக்கும் – without blame, உதவி – helped, போக்கு இல் – faultless, perfect ,பொலந் தொடி – gold armlets, செறீஇயோனே – he gave it to me

நற்றிணை 147, கொள்ளம்பக்கனார், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறுமகள்
தேம் படு சாரல் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே.

Your mother asked you angrily,
“my young daughter with a beautiful
forehead, when you went to the millet field
to chase red-mouthed, green parrots
from eating the tiny millets in the big spears,
where else happened?”, and you lied
without thinking,
“I with my bamboo-made rattle in my hand,
do not know the lord of the big mountains
with roaring waterfalls, I haven’t seen him,
or plucked flowers and played with him
in the springs”.
On hearing that, your mother bent her head in anger.
You destroyed your chances of going
to the millet field. You are pitiable.    Translated by Vaidehi

யாங்கு ஆகுவமோ – what happened, அணி நுதல் குறுமகள் – beautiful forehead girl, தேம் படு சாரல் – honeycomb filled mountain slopes, சிறு தினை – tiny millet, பெருங் குரல் – big spear, செவ் வாய்ப் பைங் கிளி – red-mouthed green parrots, கவர – to take it, நீ – you, மற்று – and, எவ் வாய்ச் சென்றனை அவண் – where did you go from there?, எனக் கூறி – thus she asked, அன்னை – mother, ஆனாள் கழற – asked angrily, முன் நின்று – standing before you, அருவி ஆர்க்கும் – waterfall roaring, பெரு வரை – big mountain, நாடனை – man from such country, அறியலும் அறியேன் – I don’t know, காண்டலும் இலனே – I haven’t seen, வெதிர் புனை – bamboo made, தட்டையேன் – I was holding the rattle, மலர் பூக் கொய்து – pluck flowers, சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என – didn’t jump and play in the spring,  நினைவிலை – without thinking, பொய்யல் அந்தோ – it is a lie, வாய்த்தனை – you uttered, அது கேட்டு – on hearing that, தலை – head, இறைஞ்சினளே – bent and angry, அன்னை – mother,
செலவு – going, ஒழிந்தனையால் – since it is destroyed, அளியை – pitiable, நீ – you, புனத்தே – to the millet field

நற்றிணை 149,  உலோச்சனார்,  நெய்தல் திணை – தோழி சொன்னது – the friend is being the voice of the heroine in this poem.  She utters this from where the hero can hear her, so that he can come and marry the heroine.
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே.

Greetings to you my friend!
Peering through the side of their eyes,
women in small and big groups look at me
raise their fingers on their noses
and spread gossip about me on our streets.
Hearing that, mother hit me with a swirling, small stick.
When my seashore lord comes at midnight
with his fast trotting colorful-maned strong horses
tied to his chariot
riding through the groves treading on fragant flowers,
I desire to leave with him.
Let this slanderous town get lost.    Translated by Vaidehi

சிலரும் – few, பலரும் – many, கடைக்கண் – side of their eyes, நோக்கி – looking, மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி – put their pointing fingers on their noses, மறுகில் – in the street, பெண்டிர் – women, அம்பல் – gossip, தூற்ற – spread, சிறு கோல் – small stick, வலந்தனள் – she hit, அன்னை – mother, அலைப்ப – swirled,
அலந்தனென் – hit with it, வாழி தோழி – greetings my friend, கானல் – seashore grove, புது மலர் – new flowers, தீண்டிய – touched, பூ நாறு – flower fragrance , குரூஉச் – colorful, சுவல் – manes, கடு மான் – strong horses, பரிய – trotting, கதழ் – fast, பரி – fast trotting, horse (2 meanings), கடைஇ – riding, நடு நாள் – midnight, வரூஉம் – will come, இயல் தேர்க் – by the moving chariot, கொண்கனொடு – with the lord of the seashore, செலவு – leaving, அயர்ந்திசினால் யானே – I desired, அலர் – gossip, slander, சுமந்து ஒழிக ,இவ் அழுங்கல் ஊரே – this slanderous town

நற்றிணை 150, கடுவன் இளமள்ளனார், மருதம் திணை -  பரத்தை சொன்னது  – Bards sometimes helped the hero get a concubine. They were  messengers between the concubine and the hero. They were also messengers between the hero and the heroine during his infidelity.
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே.

Bard, your lord is a big joke!
Pandiyan king Vazhuthi
with his elephant forces and armies
destroyed many strong forts.
The small-region kings who
praised him saved their forts
from his victorious armies.
“I don’t feel sorry for them” he said
as he rode his proud trotting horse
into our settlement,
gave me garlands and flower strands
and took my heart.
Will that blame go away?
You’ll fear my angry mother who’s holding
a small bamboo stick with no compassion.   Translated by Vaidehi

நகை நன்கு உடையன் -  he’s a joke, பாண – bard, நும் பெருமகன் – your lord, மிளை – fort, வலி – strong, சிதைய -  ruined, களிறு பல பரப்பி – spread few elephants,
அரண் பல கடந்த – victorious over many forts, முரண் கொள் தானை – victorious army, வழுதி – Pandiyan Vazhuthi, வாழிய பல எனத் தொழுது – praising that he’ll live long, ஈண்டு – here, மன் எயில் உடையோர் போல – like those who still have their forts, அஃது யாம் – for that, என்னதும் பரியலோ இலம் – we don’t feel sad, என – thus, தண் நடை – cool trotting, கலி மா – proud horse, கடைஇ வந்து எம் சேரி – rode on it and came to our settlement, தாரும் கண்ணியும் காட்டி – showed me garland and flower strands, ஒருமைய – independent, நெஞ்சம் கொண்டமை – took my heart, விடுமோ – will it leave, அஞ்ச – (for you) to fear, கண்ணுடைச் சிறு கோல் பற்றி – holding small stick with nodes (bamboo), கதம் பெரிது – great anger, உடையள் – she has, யாய் – mother, அழுங்கலோ இலளே – has no compassion, has no sadness

நற்றிணை 152, ஆலம்பேரி சாத்தனார்,  நெய்தல் திணை -  தலைவன் சொன்னது
மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன்தலையும் பையென
வடந்தை துவலை தூவ குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் அளியென் யானே.

Love for her gave me this palm horse,
and scandal gave me
the densely petaled erukkam flowers.
The sun’s rays have become dull
and darkness has spread in the skies.
All these declare sorrow in this world.

The northern winds spray cold mist
and the male black ibis cries loudly
for his mate.
Night has given me helplessness.
What’s going to happen now? I’m pitiable.   Translated by Vaidehi

மடலே காமம் தந்தது – love gave me this palm horse, அலரே – scandal, மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே -  gave densely formed erukkam flower blossoms, இலங்கு கதிர் மழுங்கி – the splendid sun’s rays has got dull, எல் விசும்பு படர – darkness spread in the sky, புலம்பு தந்தன்றே – gave sorrow, புகன்று செய் மண்டிலம் – the world annouces (to me), எல்லாம் தந்ததன்தலையும் – all these have given, பையென – slowly,  வடந்தை துவலை தூவ -northern winds spray old rain drops, குடம்பைப் – in the nest, பெடை புணர் அன்றில் – the andril bird  (black ibis – Pseudibis papillosa)without his female, உயங்கு குரல் அளைஇ – cries out in loud screeches, கங்குலும் கையறவு தந்தன்று – night gave me helplessness, யாங்கு ஆகுவென்கொல் – what is going to happen now, அளியென் யானே – I’m pitiable

நற்றிணை 162, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலை திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது – The hero says this to the heroine who wants to go with him on his trip
மனை உறை புறவின் செங் கால் பேடைக்
காமர் துணையடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாய் அடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே.

“I will come with you”, you say
when you see the male pigeon
that lives in your house
join his red-legged mate with love
in the painful evenings
when you are alone.
Unable to bear the pain,
your kohl-decorated wet
eyes shed tears.

You have never been separated
from your mother and famous father
who live in a mansion.
Innocent young lady!
Does it suit you to go with me
through difficult paths in summer,
when aerial roots of white fig trees
sway in the breezes
and gently touch
the female elephants sleeping under them.   Translated by Vaidehi

மனை உறை புறவின் – pigeon that resides in the house, செங் கால் பேடை – red-legged female, காமர் துணையடு சேவல் சேர – to joins his mate with love, புலம்பின்று எழுதரு புன் கண் மாலை – lonely, painful evening,  தனியே இருத்தல் – to be alone, ஆற்றேன் – unable to hear, என்று – thus, நின் – your, பனி வார் – wet, உண் கண் – eyes with kohl, பைதல கலுழ – crying with sorrow, நும்மொடு வருவல் என்றி – “I will come with you”, you said,  எம்மொடு – with me, பெரும் பெயர்த் தந்தை – very famous father, நீடு புகழ் நெடு நகர் – great big mansion, யாய் – mother, அடு – separated, நனி மிக மடவை – very innocent young lady, முனாஅது -  without hatred, வேனில் – summer, இற்றி – white fig tree, தோயா – without touching (the earth), நெடு வீழ் – straight hanging, வழி நார் – hanging roots, ஊசலின் – swing, sway, கோடை – when wind blows, தூக்குதொறும் – whenever it blows, துஞ்சு  – sleeping, பிடி – female elephant, வருடும் – will blow on it, அத்தம் – path, வல்லை ஆகுதல் – to go fast, ஒல்லுமோ நினக்கே – does this fit you

நற்றிணை 169, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லை திணை – தலைவன் சொன்னது (lizard calls - good omen)
முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீர
படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி
பரல் தலை போகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.

I will finish my work that I came to do
and return home soon,
and her sorrow will be removed.
Long live the lizard on our tall walls
which announces the good news to her.
The wasteland here is filled
with pebbles and cactus
that are covered with
fragrant jasmines that
appear like kingfisher birds.
A smart goat herder plucks
white palm fronds at night
and weaves a garland,
and when he walks
on our settlement streets
the evenings are filled
with fragrance.   Translated by Vaidehi

முன்னியது முடித்தனம் ஆயின் – when I finish what I came to do,  நன்னுதல் – good, வருவம் என்னும் – that I will return, பருவரல் தீர – remove (her) sorrow, படும் கொல் – will go away, வாழி – long live, நெடுஞ் சுவர்ப் பல்லி – lizard on tall walls, பரல் தலை போகிய – pebbles filled area, wasteland, சிரல் – kingfisher, தலைக் கள்ளி – cactus, மீமிசை – above, கலித்த – flourishing, வீ – flowers, நறு முல்லை – fragrant jasmine, ஆடு தலைத் துருவின் – shaking head goats, தோடு – herd, தலைப்பெயர்க்கும் – moving them (grazing), வன் கை – smart hands, இடையன் – cattle herder, எல்லி – at night, பரீஇ – plucks, வெண் போழ் – white palm fronds, தைஇய – created, அலங்கல் – garland, அம் – beautiful, தொடலை – garland, மறுகுடன் – in the streets, கமழும் மாலை – fragrant evenings, சிறுகுடிப் பாக்கத்து  – small town settlement in the seashore, எம் பெரு நகரானே – our big house

நற்றிணை 172,  பாடியர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை - தலைவி சொன்னது
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

when I was playing with my friends
on the seashore,
we pressed a mature punnai seed
on the white sand
and forgot all about it.
That seedling thrived.
Mother fed it with ghee and milk
and raised it with love.
“It is your sister,
and she’s better than you”, she said.

I’m shy to laugh and play with you under this tree.
Lord of the thriving seaport with vibrant waves
where white conch shells sound
like  the vilari tune of bards!
If you desire,
we can seek another shade tree.             Translated by Vaidehi

விளையாடு ஆயமொடு – விளையாட்டு  தோழிகளுடன், வெண் மணல் அழுத்தி – வெண் மணலில் அழுத்தி,  மறந்தனம் – மறந்து விட்டோம், துறந்த காழ் முளை – (நாங்கள்) துறந்த முளையுடைய விதை, அகைய – செழிக்க, நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நெய்யும் இனிய பாலும் ஊத்தி இனிதாக வளர்த்து, நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று – உன்னை விடச் சிறந்தது, இது உன் தங்கை என்று,  அன்னை கூறினள் – புன்னையது நலனே – புன்னை மரத்தின் சிறப்பு ஆகும், அம்ம நாணுதும் நும்மொடு நகையே – உன்னோடு சிரித்துப் பேச நாணமாக உள்ளது,  விருந்தின் – விருந்தில், பாணர் விளர் இசை கடுப்ப – பாணரின்  விளரிப்பண் போல்,  வலம்புரி வான் – வெள்ளை வலம்புரி, கோடு நரலும் – சங்கு ஒலிக்கும், இலங்கு நீர்த் – இலங்கும்கடல்,  துறைகெழு – செழிப்பான துறையுடைய, கொண்க – கடற்கரை தலைவா, நீ நல்கின் – நீ விரும்பினால், இறைபடு நீழல் -உயர்ந்த (மர) நிழல், பிறவுமார் உளவே – வேறு  உள்ளனவே

நற்றிணை 175, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை,  நெய்தல் திணை -  தோழி தலைவன் கேட்கும்படி தலைவியைப்போல் பேசியது – This is common in Sangam poems where the friend is the voice of the heroine – she’s urging the hero to come and marry her friend, and implies that she might be locked up at home by her mother
நெடுங் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

Fishermen catch fish in the wide ocean
and heap them on the shore with shifting sands.
At night they light small clay lamps
with fish oil and go to sleep.
Mother does not know about my affair
with the lord of the seashore.
She heard the village women talk ill of me,
and looked at my pallor-spreading
hot-milk-like body in the middle of the night
like she was scorching me.  Translated by Vaidehi

நெடுங் கடல் – big ocean, அலைத்த – caught, கொடும் – curved, திமில் – boat, பரதவர் – fishermen, கொழு மீன் – fat fish, கொள்ளை – (to) sell, அழி மணல் – moving sands, குவைஇ – put them in a heap, மீன் நெய் – fish oil, அட்டி – pour, கிளிஞ்சில் – small mud lamps, பொத்திய – lit, சிறு தீ – small flame, விளக்கில் – light, துஞ்சும் – they sleep,
நறு மலர் – fragrant flower, புன்னை – punnai tree, laurel tree, mastwood tree, ஓங்கிய – flourishing, துறைவனொடு – lord from such port, அன்னை – mother, தான் அறிந்தன்றோ இலளே – she does not know, பானாள் – midnight, சேரி – setllement, அம் பெண்டிர் – pretty women, சிறு சொல் – slanderous words, நம்பி  – believing,  சுடுவான் போல நோக்கும் – looked at me like she’d burn me, அடு பால் அன்ன – like hot milk, என் பசலை மெய்யே – pallor on my body

நற்றிணை 176,  பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சி திணை – பரத்தை விறலியிடம் சொன்னது
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

Tell me my friend,
Did I do the right thing?
I was being magnanimous and
sent the man who cares for me
to his wife who is nice to me.

Will the people in his town,
surrounded by mountains
bearing bright red lily
buds that open up like designs
on elephant faces,
where there are banana trees,
swarms of bees that create
sweet music like that of lutes,
and wateralls that roar down
with gentle sounds in
the mountain slopes,
know that I sent him there?   Translated by Vaidehi

எம் நயந்து உறைவி ஆயின் – his wife being nice to me, யாம் நயந்து – I being nice, நல்கினம் – being nice, விட்டது – allowed, என் நலத்தோன் – one who takes care of me, அவ் வயின் – there, சால்பின் அளித்தல் – give magnanimously, அறியாது – not knowing, அவட்கு – them, அவள் – her, காதலள் என்னுமோ – will his wife know, உரைத்திசின் தோழி – tell me, my friend, நிரைத்த – spread, யானை முகத்து வரி கடுப்ப – like the designs/lines on an elephant’s face, போது – bud ready to open, பொதி – full, உடைந்த – buds opened, ஒண் செங் காந்தள் – bright red malabar lily, வாழை – banana trees, அம் – beautiful, சிலம்பின் – mountain slopes, வம்பு பட – new, குவைஇ – crowded,spreading, யாழ் ஓர்த்தன்ன – like yāzh music, இன் குரல் – sweet voice, இன வண்டு – swarms of bees, அருவி முழவின் – roaring waterfalls, பாடொடு – with the sounds, ஒராங்கு – there, மென்மெல இசைக்கும் – delicate sounds, சாரல் – mountain slopes, குன்ற – mountain, வேலி – fenced, தம் உறைவின் ஊரே – town where he lives

நற்றிணை 180, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, மருதம் திணை – தோழி சொன்னது – these are the frustrated words of the heroine’s friend who tries to make peace between her sulking friend and the hero
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே.

The field pelican sucks red weaver ants
from their nests in the jackfruit tree
and they get scattered
along with their eggs in the fields,
looking like red rice mixed with white rice.

The man from that town with many desires
does not come to our house any more.
The dark, beautiful girl will not let him in.
I am caught in the middle of their enmity
like the punnai tree that got destroyed
in the battlefield in the war between
two great kings, Anni and Thithiyan.                Translated by Vaidehi

பழனப் பாகல் – field jackfruit tree, முயிறு – weaver ants, மூசு – swarms, crowds, குடம்பை – nest, கழனி நாரை – field pelican, உரைத்தலின் – sucks,  செந்நெல் – red paddy, விரவு – mixed, வெள்ளரிசியின் – white rice, தாஅம் – scattered, ஊரன் – man from such town,  பலர்ப் பெறல் – gets few of them, நசைஇ – desiring, நம் இல் வாரலனே – does not come to our house, மாயோள் – dark pretty girl, நலத்தை – welfare, நம்பி – trusting, விடல் ஒல்லாளே – will not let him in, அன்னியும் – a king called Anni, பெரியன் – King Thithiyan, அவனினும் விழுமிய – with their enmity,  இரு பெரு வேந்தர் – two great kings, பொரு களத்து – big battle field, ஒழித்த – destroyed, புன்னை – punnai tree, விழுமம் போல – like enmity,  என்னொடு கழியும் – end with me, இவ் இருவரது இகலே – the hatred of these two

நற்றிணை 182, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை,  குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே

The moon has vanished
and it has become dark.
She is sleeping, your rich
mother who protects you like
Kolli goddess with a painting-like temple.

Let’s go and see him quietly, my friend.
He has come like a dry-headed, big elephant
who came away from his guarded stable,
and this is like getting back lost jewels.
Get rid of your sorrow.            Translated by Vaidehi

நிலவும் மறைந்தன்று – the moon has gone, இருளும் பட்டன்று – it has become dark, ஓவத்து அன்ன – painting like, இடனுடை -in wide space, வரைப்பின் – temple,  பாவை அன்ன – Kolli Pāvai like, நிற் புறங்காக்கும் – standing and protecting, சிறந்த செல்வத்து – very rich, அன்னையும் துஞ்சினள் – mother slept, கெடுத்துப்படு – to lose, நன் கலம் – nice jewels, எடுத்துக் கொண்டாங்கு – to take it, நன் மார்பு – handsome chest, அடைய முயங்கி – to embrace him ,மென்மெல – quietly, கண்டனம் – let’s go and see, வருகம் – come, சென்மோ தோழி – let’s go my friend,  கீழும் மேலும் – elephant pole ,காப்போர் – one who protects, நீத்த – removed, வறுந் தலைப் – dry head,பெருங் களிறு போல – like a big elephant,  தமியன் வந்தோன் – he came here sad, பனியலை நீ – get rid of your sorrow

நற்றிணை 184,  பாடியர் பெயர் கிடைக்கவில்லை, பாலை திணை -  தலைவியின் தாய் சொன்னது
ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

I am a mother with just one daughter.
Yesterday she left
with a smart strong young man
with a sharp spear
to cross the harsh wastelands
with tall mountains.

Wise men!
You ask me how I handle my sorrow!
My heart aches when I think of her.
How can I tolerate this pain,
when I think of her beauty with
kohl-rimmed eyes and delicate walk,
and when I see our verandah
and the beautiful nochi tree near it,
where my little girl played. Translated by Vaidehi

ஒரு மகள் உடையேன் – ஒரு மகளையுடைய தாய் நான், மன்னே – கழிவுக்குறிப்பு, அவளும் – அவளும், செரு மிகு மொய்ம்பின் – ஆற்றலும் வலிமையையும் மிகுந்த, கூர்வேல் காளையடு – கூர்மையான வேலையுடைய இளைஞனோடு,  பெரு மலை – பெரிய மலை, அருஞ் சுரம் – கடுமையான பாலை நிலம், நெருநல் சென்றனள் – நேற்றுச் சென்றாள்,  இனியே தாங்கு நின் அவலம் என்றிர் – இனி எப்படி உன் துன்பத்தை தாங்குவாய் என்கின்றீர்கள், அது மற்று – அதை,
யாங்ஙனம் ஒல்லுமோ -  எவ்வாறு தாங்க முடியுமோ, அறிவுடையீரே – அறிவுடையீரே, உள்ளின் உள்ளம் வேமே – நினைத்தால் உள்ளம் நோகுமே, உண்கண் – மையிட்ட கண்,  மணி வாழ் பாவை – (கண்) மணியாக இருக்கும் பெண், நடை கற்றன்ன – நடை பயின்று நடந்ததுப்போன்று, என் – என், அணி இயற் – அழகானச் சாயலையுடைய, குறுமகள் ஆடிய – சிறு மகள் விளையாடிய, மணி ஏர் நொச்சியும் -  அழகிய நொச்சி மரத்தையும், தெற்றியும் கண்டே – திண்ணையையும் கண்டே

நற்றிணை 191,  உலோச்சனார்,  நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது – the friend is being the voice of the heroine in this poem.
She says this in such a way that the hero could hear. He’s on the other side of a wall.
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

The honey-filled, bright small gnalal flowers
drop delicately on the breasts of the sand dolls
made by the beautifully-jeweled young girls,
and they appear like women’s beauty spots.

Gossip has started
in this small town with beautiful screwpine fences,
since my lover came riding his chariot last night.

I was with a few friends when mother looked at me
with questioning eyes.
If I am not sent out to cut the sapphire-like
blue mundakam flowers, my beauty will be distressed.
If he comes to the flower-filled fragant seaside grove
and leaves with an empty chariot, that would be even more painful.      Translated by Vaidehi

சிறு – small, வீ – flower, ஞாழல் – gnālal tree, tigerclaw tree, cassia sophera,  தேன் தோய் – honey filled, ஒள் இணர் – bright bunch, நேர் இழை – perfect jewels, மகளிர் – women, வார் – long, மணல் – sand, இழைத்த -filled, வண்டற் பாவை – sand doll, வன – full, முலை – breasts, முற்றத்து – front yard, ஒண் – bright, பொறி – dotted, சுணங்கின் – yellow splts, ஐது – delicately, படத் தாஅம் – fall, கண்டல் – thazhai, screwpine, வேலி – fenced, காமர் – beautiful, சிறுகுடி – little town, எல்லி – night, வந்தன்றோ தேர் எனச் சொல்லி – that the chariot came,  அலர் – gossip, எழுந்தன்று – arose, இவ் ஊரே – in this town, பலருளும் – among many, என் நோக்கினளே – looked at me, அன்னை – mother, நாளை – tomorrow, மணி – sapphire (colored), பூ முண்டகம் – mundakam flowers, thorn-bush, கொய்யேன் ஆயின் – if I don’t pluck, அணி – beautiful, கவின் -  (my) beauty, உண்மையோ அரிதே – will really become rare, மணி – beautiful, கழி – brackish waters, நறும் பூங் கானல் – fragrant flower-filled grove, வந்து – come, அவர் -his,  வறுந் தேர் – empty chariot, போதல் – to leave, அதனினும் அரிதே – is more painful

நற்றிணை 195,  பாடியர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் - தோழி தலைவனிடம் சொன்னது
அருளாயாகலோ கொடிதே இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே.

Lord of the seashore
where young otters eat fat fish
and sleep in mangrove tree hollows,
and birds make loud noises
in the grove-filled Thondi city!
Hear what I have to say!

Farmers cut rice stalks with sharp knives
and many-petaled blue waterlilies
float on the moving waves.
The eyes of the woman you love
is filled with tears and she cries a lot.
Please show some pity, and marry her. Translated by Vaidehi

அருளாயாகலோ – அருள்வாயாக (மனம் புரிவாயாக), கொடிதே – இது கொடியதே, இருங் கழிக் – கருமையான உப்பு நீர் ஓடை,
குருளை நீர்நாய் – இள நீர்நாய், கொழு மீன் மாந்தி – கொழுத்த மீனை உண்டு,  தில்லை அம் பொதும்பில் – தில்லை மரத்தின் பொந்தில், பள்ளி கொள்ளும் – உறங்கும், மெல்லம் – முன்னிலையசை, புலம்ப – நெய்தல் நிலத்தலைவனே,  யான் கண்டிசினே – என்னைக் காண்பாயாக, கல்லென் புள்ளின் – கல் என்ற ஒலியோடு பறவைகள், கானல்அம் தொண்டி – கடற்கரை சோலை நிறைந்த தொண்டி, நெல் அரி தொழுவர் – நெல்லை அறுக்கும் விவசாகிகள், கூர் வாள் உற்றென – கூர்மையான வாளால்,  பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – பல இதழ்கள் (உடைய) மலர்ந்த நெய்தல்,  நீர் அலைத் தோற்றம் போல – அலையின் மீது மிதப்பது போல, ஈரிய – ஈரமான, கலுழும் – அழும்,  நீ நயந்தோள் கண்ணே – நீ விரும்பியவளின் கண்ணே

நற்றிணை 199,  பேரி சாத்தனார், நெய்தல் திணை -  தலைவி தோழியிடம் சொன்னது
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே.

May you live long, my friend!
A white heron sits in its nest
on the mature fronds
of a tall and dark palmyra tree
that stands in the sand dunes
draped in sand,
and cries for its mate
in the middle of the night,
breaking my heart,
that becomes mushy like mud.

Net-throwing fishermen
who catch fierce sharks
in the ocean that surrounds the land
throw their fishing rods to catch fish,
and when the wind blows,
the bright flames in their boats
look like the twinkling stars
in the blue-hued skies.
I don’t have the hugging embraces of my man
from this port town, and I’m still alive. Translated by Vaidehi

ஓங்கு மணல் – sand dunes, heaped sand, உடுத்த – covered, நெடு மாப் பெண்ணை – tall dark palmyra palm trees, வீங்கு மடல் – mature frond, குடம்பை – nest, பைதல் – sad, வெண் குருகு – white heron, நள்ளென் யாமத்து – in the middle of the night, உயவுதோறு – whenever it cries, உருகி – (I) melt, அள்ளல் அன்ன என் உள்ளமொடு – with my heart that is like mud – mushy, உள் உடைந்து – heart broken, உளெனே – I am like this, வாழி தோழி – greetings my friend, வளை நீர் -  (land) surrounded water, ocean, கடுஞ் சுறா – fierce shark, எறிந்த – throwing their nets, கொடும் – curved, திமில் – boat, பரதவர் – fishermen, வாங்கு – curved, விசைத் தூண்டில் – fishing rod with a gadget (mechanical), ஊங்கு ஊங்கு ஆகி – in between, வளி பொர – wind blowing, கற்றை – fullness, தாஅய் -spreading, நளி சுடர் – splendid flame, நீல் நிற விசும்பின் – blue colored skies, மீனொடு – with the stars, புரைய – like, பைபய இமைக்கும் – slowly twinkle, துறைவன் – man from such a port, மெய் – body, தோய் – hugging, attached, முயக்கம் – embracing, காணா – not having it, ஊங்கே – there

நற்றிணை 200, கூடலூர் பல் கண்ணனார், மருதம் திணை – தோழி குயவனிடம் சொன்னது – the bard is the hero’s messenger
to the heroine after his infidelity,  and he usually approachers the heroine’s  friend with the message
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முது வாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே.

O Potter with ancient wisdom!
Wearing nochi garland
with bud clusters of buds
that are bright like the sun’s rays,
and standing
on this wide and long street
that appears like a river,
announcing the festivities of our town,
please announce this message for me.

If you go to the town with fields
with white waterlilies,
tell the women with delicate wide waists
and sharp teeth,
that the trained bard who plays lovely
lute music has caused a lot of pain
with his cruel words filled with many lies,
and that they need to protect themselves.              Translated by Vaidehi

கண்ணி கட்டிய – buds tied, கதிர அன்ன – bright like the rays, ஒண் – bright, குரல் – flower bunch, நொச்சித் தெரியல் சூடி – wearing a nochi flower garland, யாறு கிடந்தன்ன – appearing like a river, அகல் நெடுந் தெருவில் – wide and long street, சாறு – festival, என நுவலும் – saying that, முதுவாய்க் குயவ -  potter with ancient wisdom, ஈதும் – these, ஆங்கண் – there, நுவன்றிசின் மாதோ – won’t you say this too, ஆம்பல் – water-lily flowers, அமன்ற – existing, தீம் பெரும் பழனத்துப் – sweet huge fields, பொய்கை – ponds, ஊர்க்குப் போவோய் ஆகி – go to that town, கை – hand, கவர் நரம்பின் – desirable yāzh, பனுவல் பாணன் – trained bard, செய்த அல்லல் – caused the pain, பல்குவ – many, வை – sharp, எயிற்று – teeth, ஐது  அகல் – delicately spread, அல்குல் – waist , மகளிர் – women, இவன் – he, பொய் – lies, பொதி – filled, கொடுஞ் சொல் – harsh words, ஓம்புமின் எனவே – so, protect yourself

2 Responses to “நற்றிணை 1-200”

  1. Ilakkuvanar Thiruvalluvan June 20, 2011 at 2:57 pm #

    அருமை. எஞ்சிய பாடல்களுக்கான விளக்கங்களும் மொழி பெயர்ப்பும் அமைந்து பணி நிறைவடையட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

  2. Ramesh Chakrapani December 22, 2011 at 5:09 pm #

    அருமை. இனிமை. நன்றியுடன் வணங்குகிறேன். வற்றாத செல்வமே, வாழ்க நீ வாழ்க!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 75 other followers

%d bloggers like this: